ta_tn/ACT/22/03.md

28 lines
3.7 KiB
Markdown

பவுல் தொடர்ந்து ஜனங்களோடு பேசுகிறார்.
# இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்திலே கற்பிக்கப்பட்டேன்
"இங்கு எருசலேமிலே போதகராகிய கமாலியேலின் மாணவன்"
# நம்முடைய முற்பிதாக்களுடைய நியாயப்பிரமாணத்தின் திட்டமான வழியின்படி நான் போதிக்கப்பட்டேன்
"நம்முடைய முற்பிதாக்களுடைய நியாயப்பிரமாணத்தின் திட்டமான வழியின்படி அவர்கள் எனக்குப் போதித்தார்கள்" அல்லது "நான் பெற்றுக்கொண்ட போதனைகள் நம்முடைய முற்பிதாக்களுடைய நியாயப்பிரமாணத்தின் விளக்கத்தின்படியே அமைந்ததாகும்"
# நான் தேவனுக்காக வைராக்கியமுள்ளவனாக இருக்கிறேன்
"தேவனுடைய சித்தமென்று நான் விசுவாசிக்கிறவைகளை செய்யும் கிரியையும் பலமான உணர்வும் என்னிடம் உண்டு" அல்லது "நான் என்னுடைய தேவஊழியத்தைக் குறித்து வாஞ்சையுள்ளவனாக இருக்கிறேன் "
# இன்றைக்கு நீங்களெல்லோரும் இருக்கிறதுபோலவே
"இன்றைக்கு நீங்களெல்லோரும் இருக்கிறவிதமாகவே" அல்லது "இன்றைக்கு உங்களைப்போல." பவுல் தன்னை கூட்டத்தாரோடு ஒப்பிடுகிறார்.
# இந்த மார்க்கம்
"இந்த மார்க்கம்" என்பது "பெந்தேகொஸ்தே"வைத்தொடர்ந்து எருசலேமிலுள்ள உள்ளூர் சபை விசுவாசிகளுக்குக் கொடுக்கப்பட்ட பெயராகும்.
# மரணம் வரையிலும்
அந்த மார்க்கத்தைப் பின்பற்றின மக்களைக் கொலைசெய்ய பவுல் விருப்பமாக இருந்தான்.
# சாட்சியாயிருங்கள்
"சாட்சி கொடுங்கள்" அல்லது "சாட்சியளி"
# நான் அவர்களுடமிருந்து நிருபங்களைப் பெற்றுக்கொண்டேன்
"பிரதான ஆசாரியர்கள் மற்றும் மூப்பர்களிடமிருந்து நான் நிருபங்களைப் பெற்றுக்கொண்டேன்"
# நான் கட்டித் திரும்பக் கொண்டுவரும்படி இருந்தேன்
"கட்டிக் கொண்டுவரும்படி அவர்கள் எனக்கு ஆணையிட்டார்கள் "