ta_tn/3JN/01/05.md

3.4 KiB

நீ உண்மையைச் செய்கிறாய்

"தேவனுக்கு உண்மையானது எதுவோ, அதை நீ செய்கிறாய் " அல்லது "நீ தேவனுக்கு உண்மையாய் இருக்கிறாய்"

சகோதரர்களுக்காகவும் அந்நியர்களுக்காகவும் பணிசெய்

"சக விசுவாசிகளுக்கும் நீ அறியாதவர்களுக்கும் உதவி செய்"

உன்னுடைய அன்பை சபைக்குமுன்பாகச் சாட்சியாக சொன்னவர்கள்

இது "நீ அவர்களை எப்படி நேசித்தாய் என்பதைப் பற்றி சபையிலே விசுவாசிகளுக்கு அவர்கள் சொன்னார்கள்" என்னும் புதிய வாக்கியமாக மொழிபெயர்க்கப்படலாம்.

தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களது பயணத்திற்கு நீ வழிவிட்டனுப்புவாய்

"தயவுகூர்ந்து, தேவனைக் கனப்படுத்தும் விதமாக அவர்களது பயணத்திற்கு வழிவிட்டனுப்பவும்"

ஏனெனில் நாமத்தினிமித்தம் அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்

இங்கு "நாமம்" என்பது இயேசுவைக் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "இயேசுவைப் பற்றி ஜனங்களுக்கு சொல்வதற்காக அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்."

புறஜாதியாரிடம் ஒன்றும் வாங்கவில்லை

இங்கே "புறஜாதியான்" என்பதற்கு யூதனல்லாதவன் என்று அர்த்தமில்லை. இயேசுவை விசுவாசிக்காதவன் என்று அர்த்தம். மாற்று மொழிபெயர்ப்பு: "அவர்கள் இயேசுவைப்பற்றி சொல்லப்படுகிறவர்களிடமிருந்து ஒன்றையும் வாங்கவில்லை"

ஆகையால் நாம்

இங்கு "நாம்" என்பது யோவானையும் எல்லா விசுவாசிகளையும் சேர்த்துக் குறிப்பிடுகிறது.

நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாக இருக்கும்படி

" தேவனுடைய சத்தியத்தை ஜனங்களுக்கு சொல்வதற்கு அவர்களுடைய வேலையில் நாம் அவர்களுக்கு உதவி செய்யும்படி"