Added several OT books

This commit is contained in:
Jesse Griffin 2017-08-16 16:41:40 -04:00
parent 0813ad0151
commit 3c3d3099bc
22 changed files with 22480 additions and 6 deletions

2511
01-GEN.usfm Normal file
View File

@ -0,0 +1,2511 @@
\id GEN
\ide UTF-8
\h ஆதியாகமம்
\toc1 ஆதியாகமம்
\toc2 ஆதியாகமம்
\toc3 gen
\mt1 ஆதியாகமம்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 உலகத்தின் ஆரம்பங்கள்
\p
\v 1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.
\v 2 பூமியானது ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
\s5
\v 3 தேவன் வெளிச்சம் உண்டாகட்டும் என்றார், வெளிச்சம் உண்டானது.
\v 4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
\v 5 தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது.
\s5
\v 6 பின்பு தேவன்; தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகட்டும் என்றும், அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும் என்றும் சொன்னார்.
\v 7 தேவன் ஆகாயவிரிவை உருவாக்கி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற தண்ணீருக்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற தண்ணீருக்கும் பிரிவை உண்டாக்கினார்; அது அப்படியே ஆனது.
\v 8 தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் முடிந்தது.
\s5
\v 9 பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக என்றார்; அது அப்படியே ஆனது.
\v 10 தேவன் வெட்டாந்தரைக்கு பூமி என்றும், சேர்ந்த தண்ணீருக்கு சமுத்திரம் என்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
\s5
\v 11 அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைத் தங்கள் தங்கள் வகையின்படியே கொடுக்கும் பழமரங்களையும் முளைப்பிக்கட்டும் என்றார்; அது அப்படியே ஆனது.
\v 12 பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் வகையின்படியே விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், தங்கள் தங்கள் வகைகளின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
\v 13 சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் முடிந்தது.
\s5
\v 14 பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகட்டும் என்றார். மேலும் அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் இருப்பதாக என்றார்.
\v 15 அவைகள் பூமியின்மேல் பிரகாசிப்பதற்காக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாக இருக்கட்டும் என்றார்; அது அப்படியே ஆனது.
\s5
\v 16 தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
\v 17 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
\v 18 பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
\v 19 சாயங்காலமும் விடியற்காலமுமாகி நான்காம் நாள் முடிந்தது.
\s5
\v 20 பின்பு தேவன்: நீந்தும் உயிரினங்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும் என்றார்.
\v 21 தேவன், மகா பெரிய கடலில் வாழும் உயிரினங்களையும், தண்ணீரில் தங்கள் தங்கள் வகையின்படியே திரளாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துவித நீரில்வாழும் உயிரினங்களையும், சிறகுள்ள வகைவகையான அனைத்துவிதப் பறவைகளையும் உருவாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
\s5
\v 22 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியிலே பெருகட்டும் என்றும் சொன்னார்.
\v 23 சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் முடிந்தது.
\s5
\v 24 பின்பு தேவன்: பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும் என்றார்; அது அப்படியே ஆனது.
\v 25 தேவன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
\s5
\v 26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும் என்றார்.
\v 27 தேவன் தம்முடைய சாயலாக மனிதனை உருவாக்கினார், அவனைத் தேவசாயலாகவே உருவாக்கினார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கினார்.
\s5
\v 28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
\v 29 பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக;
\s5
\v 30 பூமியிலுள்ள அனைத்து மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்து பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான அனைத்துவிதத் தாவரங்களையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆனது.
\v 31 அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாக இருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் முடிந்தது.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 ஓய்வுநாள்
\p
\v 1 இந்தவிதமாக வானமும் பூமியும், அவைகளின் அனைத்துவித உயிரினங்களும் உண்டாக்கப்பட்டு முடிந்தன.
\v 2 தேவன் தாம் செய்த தம்முடைய செயலை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
\v 3 தேவன் தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்ததினால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
\s1 ஆதாமும் ஏவாளும்
\p
\s5
\v 4 தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே.
\v 5 நிலத்தினுடைய அனைத்துவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய அனைத்துவிதத் தாவரங்களும் இன்னும் முளைக்கவில்லை; ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யச்செய்யவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இல்லை.
\v 6 அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
\s5
\v 7 தேவனாகிய கர்த்தர் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான்.
\v 8 தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார்.
\s5
\v 9 தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் சாப்பிடுவதற்கு ஏற்ற அனைத்துவித மரங்களையும், தோட்டத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியத்தக்க ஆற்றலைக் கொடுக்கும் மரத்தையும் பூமியிலிருந்து முளைக்கச்செய்தார்.
\v 10 தோட்டத்திற்குத் தண்ணீர் பாய ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நான்கு பெரிய ஆறுகளானது.
\s5
\v 11 முதலாம் ஆற்றுக்கு பைசோன் என்று பெயர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அந்த இடத்திலே பொன் விளையும்.
\v 12 அந்த தேசத்தின் பொன் நல்லது; அந்த இடத்திலே நறுமணப்பிசினும், கோமேதகக்கல்லும் உண்டு.
\s5
\v 13 இரண்டாம் ஆற்றுக்கு கீகோன் என்று பெயர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
\v 14 மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பெயர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நான்காம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பெயர்.
\s5
\v 15 தேவனாகிய கர்த்தர் மனிதனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
\v 16 தேவனாகிய கர்த்தர் மனிதனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம்.
\v 17 ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் பழத்தை சாப்பிடவேண்டாம்; அதை நீ சாப்பிடும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
\s5
\v 18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
\v 19 தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள அனைத்துவித மிருகங்களையும், ஆகாயத்தின் அனைத்துவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த உயிரினத்திற்கு ஆதாம் என்னென்ன பெயரிட்டானோ அதுவே அதற்குப் பெயரானது.
\v 20 அப்படியே ஆதாம் அனைத்துவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், அனைத்துவிதக் காட்டுமிருகங்களுக்கும் பெயரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
\s5
\v 21 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து உறங்கினான்; அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
\v 22 தேவனாகிய கர்த்தர் தாம் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனிதனிடத்தில் கொண்டுவந்தார்.
\v 23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாக இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டதால் மனுஷி எனப்படுவாள் என்றான்.
\s5
\v 24 இதன் காரணமாக மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாக இருப்பார்கள்.
\v 25 ஆதாமும் அவனுடைய மனைவியும் நிர்வாணிகளாக இருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 மனிதனின் வீழ்ச்சி
\p
\v 1 தேவனாகிய கர்த்தர் படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா என்றது.
\v 2 பெண், பாம்பைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள மரங்களின் பழங்களைச் சாப்பிடலாம்;
\v 3 ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாமலிருக்க அதை சாப்பிடவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.
\s5
\v 4 அப்பொழுது பாம்பு, பெண்ணை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
\v 5 நீங்கள் இதை சாப்பிடும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
\v 6 அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ஆசைப்படத்தக்க பழமுமாக இருக்கிறது என்று கண்டு, அந்தப் பழத்தைப் பறித்து, சாப்பிட்டு, தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான்.
\s5
\v 7 அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தி இலைகளைத் தைத்து, தங்களுடைய இடுப்புகளை மறைத்துக்கொண்டார்கள்.
\v 8 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவனுடைய மனைவியும் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக விலகி, தோட்டத்தின் மரங்களுக்குள்ளே ஒளிந்துகொண்டார்கள்.
\s5
\v 9 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
\v 10 அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாக இருப்பதால் பயந்து, ஒளிந்துகொண்டேன் என்றான்.
\v 11 அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டாயோ என்றார்.
\s5
\v 12 அதற்கு ஆதாம்: என்னுடன் இருப்பதற்காக தேவரீர் தந்த பெண்ணே, அந்த மரத்தின் பழத்தை எனக்குக் கொடுத்தாள், நான் சாப்பிட்டேன் என்றான்.
\v 13 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் பெண்ணை நோக்கி: நீ ஏன் இப்படிச் செய்தாய் என்றார். அந்தப் பெண்: பாம்பு என்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன் என்றாள்.
\s5
\v 14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் பாம்பைப் பார்த்து: நீ இதைச் செய்ததால் அனைத்து நாட்டுமிருகங்களிலும் அனைத்து காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
\v 15 உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவளுடைய வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
\s5
\v 16 அவர் பெண்ணை நோக்கி: நீ கர்ப்பவதியாக இருக்கும்போது உன் வேதனையை மிகவும் அதிகப்படுத்துவேன்; வேதனையோடு பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன்னுடைய கணவனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
\s5
\v 17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய்.
\v 18 அது உனக்கு முட்செடிகளை முளைப்பிக்கும்; நிலத்தின் பயிர்வகைகளைச் சாப்பிடுவாய்.
\v 19 நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால், நீ மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் உன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
\s5
\v 20 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவள் உயிருள்ள அனைவருக்கும் தாயானவள்.
\v 21 தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவனுடைய மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
\p
\s5
\v 22 பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனிதன் நன்மை தீமை அறியத்தக்கவனாகி நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி வாழ்வளிக்கும் மரத்தின் பழத்தையும் பறித்து சாப்பிட்டு, என்றைக்கும் உயிரோடு இல்லாதபடிச் செய்யவேண்டும் என்று,
\v 23 அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
\v 24 அவர் மனிதனைத் துரத்திவிட்டு, வாழ்வளிக்கும் மரத்திற்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 காயீனும் ஆபேலும்
\p
\v 1 ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தருடைய உதவியால் ஒரு மகனைப் பெற்றேன் என்றாள்.
\v 2 பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றெடுத்தாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.
\s5
\v 3 சிலநாட்கள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் பழங்களைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
\v 4 ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் கர்த்தர் ஏற்றுக்கொண்டார்.
\v 5 காயீனையும் அவனுடைய காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவனுடைய முகத்தோற்றம் வேறுபட்டது.
\s5
\v 6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டானது? உன் முகத்தோற்றம் ஏன் வேறுபட்டது?
\v 7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாமலிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அது உன்னை ஆளுகை செய்ய விரும்பும், ஆனால் நீ அதை ஆளுகை செய்யவேண்டும் என்றார்.
\s5
\v 8 காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலோடு பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும்போது, காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாக எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
\v 9 கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: எனக்குத் தெரியாது; என் சகோதரனுக்கு நான் காவலாளியா என்றான்.
\s5
\v 10 அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
\v 11 இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தம் உன்னால் பூமியில் சிந்தப்பட்டதால் இந்த பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
\v 12 நீ நிலத்தில் பயிரிடும்போது, அது தன்னுடைய பலனை இனி உனக்குக் கொடுக்காது; நீ பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பாய் என்றார்.
\s5
\v 13 அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது.
\v 14 இன்று என்னை இந்த தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்திற்கு விலகி மறைந்து, பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.
\v 15 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாமலிருக்க கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.
\p
\s5
\v 16 அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கே நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
\v 17 காயீன் தன்னுடைய மனைவியுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றெடுத்தாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்திற்குத் தன் மகனாகிய ஏனோக்குடைய பெயரை வைத்தான்.
\s5
\v 18 ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றெடுத்தான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றெடுத்தான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
\v 19 லாமேக்கு இரண்டு பெண்களைத் திருமணம் செய்தான்; ஒருவளுக்கு ஆதாள் என்று பெயர், மற்றொருவளுக்குச் சில்லாள் என்று பெயர்.
\s5
\v 20 ஆதாள் யாபாலைப் பெற்றெடுத்தாள்; அவன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.
\v 21 அவனுடைய சகோதரனுடைய பெயர் யூபால்; அவன் கின்னரக்காரர்கள், நாதசுரக்காரர்கள் அனைவருக்கும் தகப்பனானான்.
\v 22 சில்லாளும், தூபால் காயீனைப் பெற்றெடுத்தாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.
\s5
\v 23 லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, நான் சொல்வதை மிகவும் கவனமாகக் கேளுங்கள்; எனக்குக் காயமுண்டாக்கிய ஒரு மனிதனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக்கிய ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்;
\v 24 காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.
\s5
\v 25 பின்னும் ஆதாம் தன் மனைவியுடன் இணைந்தான்; அவள் ஒரு மகனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்கு பதிலாக, தேவன் எனக்கு வேறொரு மகனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள்.
\v 26 சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டான்; அப்பொழுது மக்கள் கர்த்தருடைய நாமத்தை வழிபட ஆரம்பித்தார்கள்.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 ஆதாமின் வம்சவரலாறு
\p
\v 1 ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார்.
\v 2 அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார்.
\s5
\v 3 ஆதாம் நூற்றுமுப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான்.
\v 4 ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
\v 5 ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் தொளாயிரத்துமுப்பது வருடங்கள்; அவன் இறந்தான்.
\p
\s5
\v 6 சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான்.
\v 7 சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
\v 8 சேத்துடைய நாட்களெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருடங்கள்; அவன் இறந்தான்.
\s5
\v 9 ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான்.
\v 10 ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, எண்ணூற்றுப் பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
\v 11 ஏனோசுடைய நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருடங்கள், அவன் இறந்தான்.
\s5
\v 12 கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான்.
\v 13 கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
\v 14 கேனானுடைய நாட்களெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருடங்கள்; அவன் இறந்தான்.
\s5
\v 15 மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான்.
\v 16 மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
\v 17 மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருடங்கள்; அவன் இறந்தான்.
\s5
\v 18 யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான்.
\v 19 யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
\v 20 யாரேதுடைய நாட்களெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருடங்கள்; அவன் இறந்தான்.
\s5
\v 21 ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான்.
\v 22 ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
\v 23 ஏனோக்குடைய நாட்களெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருடங்கள்.
\v 24 ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
\s5
\v 25 மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
\v 26 மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
\v 27 மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருடங்கள்; அவன் இறந்தான்.
\s5
\v 28 லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒருமகனைப் பெற்றெடுத்து,
\v 29 கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
\s5
\v 30 லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
\v 31 லாமேக்குடைய நாட்களெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருடங்கள்; அவன் இறந்தான்.
\p
\s5
\v 32 நோவா ஐந்நூறு வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\s1 பூமியில் இராட்சதர்கள்
\p
\v 1 மனிதர்கள் பூமியின்மேல் பெருகத்துவங்கி, அவர்களுக்கு மகள்கள் பிறந்தபோது:
\v 2 தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களை மிகுந்த அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
\v 3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனிதனோடு இருப்பதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் உயிரோடு இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருடங்கள் என்றார்.
\s5
\v 4 அந்நாட்களில் இராட்சதர்கள் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களோடு இணைகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் முற்காலத்தில் பிரசித்திபெற்ற மனிதர்களாகிய பலவான்களானார்கள்.
\s5
\v 5 மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,
\v 6 தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனவேதனை அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு வருத்தமாக இருந்தது.
\s5
\v 7 அப்பொழுது கர்த்தர்: நான் உருவாக்கிய மனிதனை பூமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை உண்டாயிருக்கிறவைகளை அழித்துப்போடுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனவேதனையாக இருக்கிறது என்றார்.
\v 8 நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
\s1 நோவாவின் வம்சவரலாறு
\p
\s5
\v 9 நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்தான்.
\v 10 நோவா சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்களைப் பெற்றெடுத்தான்.
\s5
\v 11 பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாக இருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
\v 12 தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாக இருந்தது; மனிதர்கள் அனைவரும் பூமியின்மேல் தங்களுடைய வழிகளைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
\s1 நோவாவின் கப்பல்
\p
\s5
\v 13 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மனிதர்களான எல்லோருடைய முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடு சேர்த்து அழித்துப்போடுவேன்.
\v 14 நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு கப்பலை உண்டாக்கு; அந்தக் கப்பலில் அறைகளை உண்டாக்கி, அதை உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு.
\v 15 நீ அதைச் செய்யவேண்டிய முறை என்னவென்றால், கப்பலின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாக இருக்கவேண்டும்.
\s5
\v 16 நீ கப்பலுக்கு ஒரு ஜன்னலை உண்டாக்கி, மேல்அடுக்குக்கு ஒரு முழம் இறக்கி அதைச் செய்துமுடித்து, கப்பலின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் அடுக்கின் அறைகளையும், மூன்றாம் அடுக்கின் அறைகளையும் உண்டாக்கவேண்டும்.
\v 17 வானத்தின்கீழே உயிருள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நான் பூமியின்மேல் மாபெரும் வெள்ளப்பெருக்கை வரச்செய்வேன்; பூமியிலுள்ள அனைத்தும் இறந்துபோகும்.
\s5
\v 18 ஆனாலும் உன்னோடு என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடுகூட உன்னுடைய மகன்களும், உன்னுடைய மனைவியும், உன்னுடைய மகன்களின் மனைவிகளும், கப்பலுக்குள் செல்லுங்கள்.
\v 19 அனைத்துவித உயிரினங்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உன்னுடன் உயிரோடு காக்கப்படுவதற்கு, கப்பலுக்குள்ளே சேர்த்துக்கொள்.
\s5
\v 20 வகைவகையான பறவைகளிலும், வகைவகையான மிருகங்களிலும், பூமியிலுள்ள அனைத்து வகைவகையான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உயிரோடு காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரவேண்டும்.
\v 21 உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகப் பலவித உணவுப்பொருட்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார்.
\v 22 நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 பெருவெள்ளம்
\p
\v 1 கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் கப்பலுக்குள் செல்லுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.
\v 2 பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடு காக்கும்பொருட்டு, நீ சுத்தமான அனைத்து மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக ஏழுஏழு ஜோடியும், சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடியும்,
\v 3 ஆகாயத்துப் பறவைகளிலும், ஆணும் பெண்ணுமாக ஏழுஏழு ஜோடியும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
\s5
\v 4 இன்னும் ஏழுநாட்கள் சென்றபின்பு, நாற்பது நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையைப் பெய்யச்செய்து, நான் உண்டாக்கின உயிரினங்கள் அனைத்தையும் பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன் என்றார்.
\v 5 நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.
\p
\s5
\v 6 வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதுள்ளவனாயிருந்தான்.
\v 7 வெள்ளப்பெருக்கிற்குத் தப்பும்படி நோவாவும் அவனோடு அவனுடைய மகன்களும், அவனுடைய மனைவியும், அவனுடைய மகன்களின் மனைவிகளும் கப்பலுக்குள் சென்றார்கள்.
\s5
\v 8 தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,
\v 9 ஆணும் பெண்ணும் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து, கப்பலுக்குள் சென்றன.
\v 10 ஏழுநாட்கள் சென்றபின்பு பூமியின்மேல் வெள்ளப்பெருக்கு உண்டானது.
\s5
\v 11 நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருடம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்த நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறந்தன.
\v 12 நாற்பதுநாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
\s5
\v 13 அன்றையத்தினமே நோவாவும், நோவாவின் மகன்களாகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவனுடைய மகன்களின் மூன்று மனைவிகளும், கப்பலுக்குள் சென்றார்கள்.
\v 14 அவர்களோடு வகைவகையான அனைத்துவிதக் காட்டுமிருகங்களும், வகைவகையான அனைத்துவித நாட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற வகைவகையான அனைத்துவித ஊரும் பிராணிகளும், வகைவகையான அனைத்துவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள அனைத்துவிதப் பறவைகளும் சென்றன.
\s5
\v 15 இப்படியே ஜீவசுவாசமுள்ள உயிரினங்களெல்லாம் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து கப்பலுக்குள் சென்றன.
\v 16 தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக அனைத்துவித உயிரினங்களும் உள்ளே சென்றன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்.
\s5
\v 17 வெள்ளப்பெருக்கு நாற்பது நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது.
\v 18 தண்ணீர் பெருவெள்ளமாகி பூமியின்மேல் மிகவும் பெருகியது; கப்பலானது தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது.
\s5
\v 19 தண்ணீர் பூமியின்மேல் மிகவும் அதிகமாகப் பெருகியதால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
\v 20 மூடப்பட்ட மலைகளுக்கு மேலாகப் பதினைந்துமுழ உயரத்திற்குத் தண்ணீர் பெருகியது.
\s5
\v 21 அப்பொழுது உயிரினங்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் அனைத்தும், எல்லா மனிதர்களும், பூமியின்மேல் வாழ்கிறவைகள் அனைத்தும் இறந்தன.
\v 22 நிலப்பரப்பு எல்லாவற்றிலும் இருந்த உயிருள்ள அனைத்தும் இறந்துபோயின.
\s5
\v 23 மனிதர்கள்முதல் மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை, பூமியின்மீது இருந்த உயிருள்ள அனைத்தும் அழிக்கப்பட்டு, அவைகள் பூமியில் இல்லாமல் ஒழிந்தன; நோவாவும் அவனோடு கப்பலிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.
\v 24 தண்ணீர் பூமியை நூற்றைம்பது நாட்கள் மூடிக்கொண்டிருந்தது.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\p
\v 1 தேவன் நோவாவையும், அவனுடன் கப்பலிலிருந்த அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து நாட்டுமிருகங்களையும் நினைவுகூர்ந்து, பூமியின்மேல் காற்றை வீசச்செய்தார். அப்பொழுது தண்ணீர் குறையத் தொடங்கியது.
\v 2 ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோனது.
\v 3 தண்ணீர் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாட்களுக்குப்பின்பு தண்ணீர் குறைந்தது.
\s5
\v 4 ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே கப்பல் அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கினது.
\v 5 பத்தாம் மாதம்வரைக்கும் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
\s5
\v 6 நாற்பது நாட்களுக்குப் பிறகு, நோவா தான் கப்பலில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
\v 7 ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டு பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாக இருந்தது.
\s5
\v 8 பின்பு பூமியின்மேல் தண்ணீர் குறைந்து போயிற்றோ என்று தெரிந்துகொள்ளும்படி, ஒரு புறாவை வெளியே விட்டான்.
\v 9 பூமியின்மேலெங்கும் தண்ணீர் இருந்ததினால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் கிடைக்காததால், திரும்பிக் கப்பலிலே அவனிடத்திற்கு வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகக் கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான்.
\s5
\v 10 பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் புறாவைக் கப்பலிலிருந்து வெளியே விட்டான்.
\v 11 அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்திற்கு வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதனால் நோவா பூமியின்மேல் தண்ணீர் குறைந்துபோயிற்று என்று தெரிந்து கொண்டான்.
\v 12 பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.
\s5
\v 13 அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல்அடுக்கை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது.
\v 14 இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.
\s1 நோவா பலிசெலுத்துதல்
\p
\s5
\v 15 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:
\v 16 நீயும், உன்னோடுகூட உன்னுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் கப்பலைவிட்டுப் புறப்படுங்கள்.
\v 17 உன்னிடத்தில் இருக்கிற அனைத்துவித உயிரினங்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற அனைத்து பிராணிகளையும் உன்னோடு வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாக ஈன்றெடுத்து, பூமியின்மேல் பலுகிப் பெருகட்டும் என்றார்.
\s5
\v 18 அப்பொழுது நோவாவும், அவனுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் வெளியே வந்தார்கள்.
\v 19 பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து மிருகங்களும், ஊருகிற அனைத்து பிராணிகளும், அனைத்து பறவைகளும் வகைவகையாகக் கப்பலிலிருந்து வெளியே வந்தன.
\s5
\v 20 அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சுத்தமான அனைத்து மிருகங்களிலும், சுத்தமான அனைத்து பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
\v 21 சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனிதனுக்காக பூமியை சபிப்பதில்லை; மனிதனுடைய இருதயத்தின் நினைவுகள் அவனுடைய சிறுவயது தொடங்கி பொல்லாததாக இருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி அனைத்து உயிரினங்களையும் அழிப்பதில்லை.
\v 22 பூமி இருக்கும்வரைக்கும் விதைப்பும் அறுப்பும், குளிர்ச்சியும் வெப்பமும், கோடைகாலமும் மழைக்காலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 நோவாவோடு தேவனுடைய உடன்படிக்கை
\p
\v 1 பின்பு தேவன் நோவாவையும், அவனுடைய மகன்களையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.
\v 2 உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள அனைத்து மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்துப் பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற அனைத்தும், சமுத்திரத்தின் மீன்வகைகள் அனைத்தும் உங்கள் கையில் கொடுக்கப்பட்டன.
\s5
\v 3 நடமாடுகிற உயிரினங்கள் அனைத்தும் உங்களுக்கு உணவாக இருக்கட்டும்; பசுமையான தாவரங்களை உங்களுக்குக் கொடுத்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுத்தேன்.
\v 4 இறைச்சியை அதின் உயிராகிய இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம்.
\s5
\v 5 உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; அனைத்து உயிரினங்களிடத்திலும் மனிதனிடத்திலும் பழிவாங்குவேன்; மனிதனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.
\v 6 மனிதன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டதால், மனிதனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனிதனாலே சிந்தப்படட்டும்.
\v 7 நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாகப் பெற்றெடுத்து பெருகுங்கள் என்றார்.
\p
\s5
\v 8 பின்னும் தேவன் நோவாவையும், அவனுடைய மகன்களையும் நோக்கி:
\v 9 நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,
\v 10 உங்களுடன் கப்பலிலிருந்து புறப்பட்ட அனைத்து உயிரினங்கள்முதல் இனிப் பூமியில் பிறக்கப்போகிற அனைத்து உயிரினங்கள்வரை பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள அனைத்து காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.
\s5
\v 11 இனி உயிருள்ளவைகளெல்லாம் வெள்ளப்பெருக்கினால் அழிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி வெள்ளப்பெருக்கு உண்டாவதில்லையென்றும், உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.
\v 12 மேலும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:
\v 13 நான் எனது வானவில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும்.
\s5
\v 14 நான் பூமிக்கு மேலாக மேகத்தை வரச்செய்யும்போது, அந்த வானவில் மேகத்தில் தோன்றும்.
\v 15 அப்பொழுது எல்லா உயிரினங்களையும் அழிக்க இனி தண்ணீரானது வெள்ளமாகப் பெருகாதபடி, எனக்கும் உங்களுக்கும் மாம்சமான அனைத்து உயிரினங்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
\s5
\v 16 அந்த வானவில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள அனைத்துவித உயிரினங்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதைப் பார்ப்பேன்.
\v 17 இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான அனைத்துக்கும் நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவிடம் சொன்னார்.
\s1 நோவாவின் மகன்கள்
\p
\s5
\v 18 கப்பலிலிருந்து புறப்பட்ட நோவாவின் மகன்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.
\v 19 இம்மூவரும் நோவாவின் மகன்கள்; இவர்களாலே பூமியெங்கும் மக்கள் பெருகினார்கள்.
\p
\s5
\v 20 நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான்.
\v 21 அவன் திராட்சரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் ஆடை விலகிப் படுத்திருந்தான்.
\s5
\v 22 அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம், தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர்கள் இருவருக்கும் சொன்னான்.
\v 23 அப்பொழுது சேமும், யாப்பேத்தும் ஒரு ஆடையை எடுத்துத் தங்களுடைய தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, பின்முகமாக வந்து, தங்களுடைய தகப்பனின் நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாகப் போகாததால், தங்களுடைய தகப்பனின் நிர்வாணத்தைப் பார்க்கவில்லை.
\s5
\v 24 நோவா திராட்சரசத்தின் போதைதெளிந்து விழித்தபோது, தன் இளையமகன் தனக்குச் செய்ததை அறிந்து:
\v 25 கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதாரர்களிடம் அடிமைகளுக்கு அடிமையாக இருப்பான் என்றான்.
\s5
\v 26 சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாக இருப்பான்.
\v 27 யாப்பேத்தை தேவன் பெருகச்செய்வார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாக இருப்பான் என்றான்.
\p
\s5
\v 28 வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு நோவா முந்நூற்று ஐம்பது வருடங்கள் உயிரோடிருந்தான்.
\v 29 நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருடங்கள்; அவன் இறந்தான்.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 தேசங்களின் அட்டவணை
\p
\v 1 நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: வெள்ளப்பெருக்குக்குப் பின்பு அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள்.
\s1 யாப்பேத்தின் வம்சம்
\p
\s5
\v 2 யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
\v 3 கோமரின் மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
\v 4 யாவானின் மகன்கள் எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
\v 5 இவர்களால் மக்களுடைய தீவுகள் அவனவன் மொழியினடிப்படையிலும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், சந்ததியின்படியேயும் வெவ்வேறு தேசங்களாகப் பிரிக்கப்பட்டன.
\s1 காமின் வம்சம்
\p
\s5
\v 6 காமுடைய மகன்கள் கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
\v 7 கூஷூடைய மகன்கள் சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள் சேபா, திதான் என்பவர்கள்.
\s5
\v 8 கூஷ் நிம்ரோதைப் பெற்றெடுத்தான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
\v 9 இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாக இருந்தான்; ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டானது.
\v 10 சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு முதன்மையான இடங்கள்.
\s5
\v 11 அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
\v 12 நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
\v 13 மிஸ்ராயீம் லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
\v 14 பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப்தொரீமையும் பெற்றெடுத்தான்.
\p
\s5
\v 15 கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
\v 16 எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,
\v 17 ஈவியர்களையும், அர்கீரியர்களையும், சீநியர்களையும்,
\v 18 அர்வாதியர்களையும், செமாரியர்களையும், காமாத்தியர்களையும் பெற்றெடுத்தான்; பின்பு கானானியர்களின் வம்சத்தார்கள் எங்கும் பரவினார்கள்.
\s5
\v 19 கானானியர்களின் எல்லை சீதோன்முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், அங்கிருந்து சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாக லாசாவரைக்கும் இருந்தது.
\v 20 இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் காமுடைய சந்ததியினர்.
\s1 சேமின் வம்சம்
\p
\s5
\v 21 சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியினர் எல்லோருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாக இருந்தான்.
\v 22 சேமுடைய மகன்கள் ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
\v 23 ஆராமுடைய மகன்கள் ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள்.
\s5
\v 24 அர்பக்சாத் சாலாவைப் பெற்றெடுத்தான்; சாலா ஏபேரைப் பெற்றெடுத்தான்.
\v 25 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுக்கு பேலேகு என்று பெயர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
\s5
\v 26 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
\v 27 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
\v 28 ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
\v 29 ஒப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றெடுத்தான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய மகன்கள்.
\s5
\v 30 இவர்களுடைய குடியிருப்பு மேசாதுவங்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிவரைக்கும் இருந்தது.
\v 31 இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் சேமுடைய சந்ததியினர்.
\s5
\v 32 தங்களுடைய மக்களிலுள்ள சந்ததிகளின்படியே நோவாவுடைய மகன்களின் வம்சங்கள் இவைகளே; வெள்ளப்பெருக்குக்குப் பிறகு இவர்களால் பூமியிலே மக்கள் பிரிந்தனர்.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\s1 பாபேல் கோபுரம்
\p
\v 1 பூமியெங்கும் ஒரே மொழியும், ஒரே விதமான பேச்சும் இருந்தது.
\v 2 மக்கள் கிழக்கேயிருந்து பயணம்செய்யும்போது, சிநெயார் தேசத்தில் சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
\s5
\v 3 அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
\v 4 பின்னும் அவர்கள்: நாம் பூமியெங்கும் சிதறிப்போகாதபடி, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தைத் தொடுமளவு ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பெயர் உண்டாகச் செய்வோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
\s5
\v 5 மனிதர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார்.
\v 6 அப்பொழுது கர்த்தர்: இதோ, மக்கள் ஒரே கூட்டமாக இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே மொழியும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று இருக்கிறார்கள்.
\v 7 நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் புரிந்துகொள்ளாதபடி, அங்கே அவர்கள் மொழியைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
\s5
\v 8 அப்படியே கர்த்தர் அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்; அப்பொழுது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள்.
\v 9 பூமியெங்கும் பேசப்பட்ட மொழியைக் கர்த்தர் அந்த இடத்தில் தாறுமாறாக்கியதால், அதின் பெயர் பாபேல் எனப்பட்டது; கர்த்தர் அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்.
\s1 சேமுடைய வம்சவரலாறு
\p
\s5
\v 10 சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான்.
\v 11 சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
\s5
\v 12 அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றெடுத்தான்.
\v 13 சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
\s5
\v 14 சாலா முப்பது வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான்.
\v 15 ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
\s5
\v 16 ஏபேர் முப்பத்துநான்கு வயதானபோது பேலேகைப் பெற்றெடுத்தான்.
\v 17 பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
\s5
\v 18 பேலேகு முப்பது வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான்.
\v 19 ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
\s5
\v 20 ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது செரூகைப் பெற்றெடுத்தான்.
\v 21 செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
\s5
\v 22 செரூகு முப்பது வயதானபோது நாகோரைப் பெற்றெடுத்தான்.
\v 23 நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
\s5
\v 24 நாகோர் இருபத்தொன்பது வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான்.
\v 25 தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
\v 26 தேராகு எழுபது வயதானபோது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.
\p
\s5
\v 27 தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்; ஆரான் லோத்தைப் பெற்றெடுத்தான்.
\v 28 ஆரான் தன் பிறந்த இடமாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு இறப்பதற்குமுன்னே இறந்தான்.
\s5
\v 29 ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள்; ஆபிராமுடைய மனைவிக்கு சாராய் என்று பெயர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பெயர்; இவள் ஆரானுடைய மகள்; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன்.
\v 30 சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாக இருந்தாள்.
\s5
\v 31 தேராகு தன் மகனாகிய ஆபிராமையும், ஆரானுடைய மகனும், தன்னுடைய பேரனுமாயிருந்த லோத்தையும், ஆபிராமுடைய மனைவியாகிய தன்னுடைய மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடன் ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்திற்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்வரைக்கும் வந்தபோது, அங்கே தங்கிவிட்டார்கள்.
\v 32 தேராகுடைய ஆயுசு நாட்கள் இருநூற்றைந்து வருடங்கள்; தேராகு ஆரானிலே இறந்தான்.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\s1 ஆபிராமின் அழைப்பு
\p
\v 1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ.
\v 2 நான் உன்னைப் பெரிய இனமாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாக இருப்பாய்.
\v 3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உன்மூலம் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
\s5
\v 4 கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும் அவனோடுகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாக இருந்தான்.
\v 5 ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய மகனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சொத்துக்கள் எல்லாவற்றையும், ஆரானிலே வாங்கியிருந்த மக்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்திற்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தைச் சென்றடைந்தார்கள்.
\s5
\v 6 ஆபிராம் அந்த தேசத்தில் சுற்றித்திரிந்து சீகேம் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள மோரே என்னும் சமபூமிவரைக்கும் வந்தான்; அந்தக் காலத்திலே கானானியர்கள் அந்த தேசத்தில் இருந்தார்கள்.
\v 7 கர்த்தர் ஆபிராமுக்குக் காட்சியளித்து: உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குக் காட்சியளித்த கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
\s5
\v 8 பின்பு அவன் அந்த இடத்தைவிட்டு பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
\v 9 அதற்குப் பிறகு ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பயணம் செய்தான்.
\s1 எகிப்தில் ஆபிராம்
\p
\s5
\v 10 அந்த தேசத்திலே பஞ்சம் உண்டானது; தேசத்திலே பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்குவதற்காக அந்த இடத்திற்குப் போனான்.
\v 11 அவன் எகிப்திற்கு அருகில் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்ப்பதற்கு அழகுள்ள பெண் என்று எனக்குத் தெரியும்.
\v 12 எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது, நீ என்னுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடு வைப்பார்கள்.
\v 13 ஆகையால், உன்னால் எனக்கு நன்மை உண்டாவதற்கும், உன்னாலே என் உயிர் பிழைப்பதற்கும், நீ உன்னை என்னுடைய சகோதரி என்று சொல் என்றான்.
\s5
\v 14 ஆபிராம் எகிப்திற்கு வந்தபோது, எகிப்தியர்கள் அந்தப் பெண்ணை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள்.
\v 15 பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக்கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்தப் பெண் பார்வோனுடைய அரண்மனைக்குக் கொண்டுபோகப்பட்டாள்.
\v 16 அவளால் அவன் ஆபிராமுக்குத் தயவு செய்தான்; அவனுக்கு ஆடுமாடுகளும், ஆண் கழுதைகளும், பெண் கழுதைகளும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், ஒட்டகங்களும் கிடைத்தன.
\s5
\v 17 ஆபிராமுடைய மனைவியாகிய சாராயிக்காகக் கர்த்தர் பார்வோனையும், அவனுடைய வீட்டார்களையும் கொடிய வாதைகளால் வாதித்தார்.
\v 18 அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன்னுடைய மனைவி என்று நீ எனக்குத் தெரிவிக்காமல் போனதென்ன?
\v 19 இவளை உன்னுடைய சகோதரி என்று நீ ஏன் சொல்லவேண்டும்? இவளை நான் எனக்கு மனைவியாக்கிக் கொண்டிருப்பேனே; இதோ உன்னுடைய மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.
\v 20 பார்வோன் அவனைக் குறித்துத் தன்னுடைய மனிதர்களுக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவனுடைய மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 ஆபிராமும் லோத்தும் பிரிந்து செல்லுதல்
\p
\v 1 ஆபிராமும், அவனுடைய மனைவியும், அவனுக்கு உண்டான அனைத்தும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு தென்திசைக்கு வந்தார்கள்.
\v 2 ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான சொத்துக்களையுடைய செல்வந்தனாக இருந்தான்.
\s5
\v 3 அவன் தன்னுடைய பயணங்களில் தெற்கேயிருந்து பெத்தேல்வரைக்கும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும்,
\v 4 தான் முதன்முதலில் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான இடம்வரைக்கும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
\s5
\v 5 ஆபிராமுடன் வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன.
\v 6 அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் அவர்களுக்குப் போதுமனதாக இல்லை; அவர்களுடைய சொத்துக்கள் அதிகமாக இருந்ததால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க வசதி இல்லாமற்போனது.
\v 7 ஆபிராமுடைய மேய்ப்பர்களுக்கும் லோத்துடைய மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்தக் காலத்தில் கானானியரும் பெரிசியரும் அந்த தேசத்தில் குடியிருந்தார்கள்.
\s5
\v 8 ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்கள்.
\v 9 இந்த தேசமெல்லாம் உனக்குமுன்பாக இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.
\s5
\v 10 அப்பொழுது லோத்து சுற்றிலும் பார்த்து: யோர்தான் நதிக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதும் நீர்வளம் உள்ளதாக இருப்பதைக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிவரைக்கும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.
\v 11 அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதையும் தேர்ந்தெடுத்து, கிழக்கே புறப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்.
\s5
\v 12 ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகிலிருக்கும் சமபூமியிலுள்ள பட்டணங்களில் குடியிருந்து, சோதோமுக்குச் செல்லும் வழியில் கூடாரம் போட்டான்.
\v 13 சோதோமின் மக்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாக இருந்தார்கள்.
\s5
\v 14 லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார்.
\v 15 நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படிக் கொடுத்து,
\s5
\v 16 உன் சந்ததியை பூமியின் தூளைப்போலப் பெருகச்செய்வேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணுவதற்கு முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணமுடியும்.
\v 17 நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எதுவரையோ, அதுவரை நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார்.
\v 18 அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமிக்குப் போய் குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
\s5
\c 14
\cl அத்தியாயம்– 14
\s1 ஆபிராம் லோத்துவைக் காப்பாற்றுதல்
\p
\v 1 சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லா கோமேரும், கோயிமின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;
\v 2 அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம் செய்தார்கள்.
\s5
\v 3 இவர்கள் எல்லோரும் உப்புக்கடலாகிய சித்தீம் பள்ளத்தாக்கிலே கூடினார்கள்.
\v 4 இவர்கள் பன்னிரண்டு வருடங்கள் கெதர்லாகோமேரைச் சேவித்து, பதின்மூன்றாம் வருடத்திலே கலகம் செய்தார்கள்.
\v 5 பதினான்காம் வருடத்திலே கெதர்லாகோமேரும், அவனோடு கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும், சாவேகீரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும்,
\v 6 சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்திரத்திற்கு அருகிலுள்ள எல்பாரான்வரை தோற்கடித்து,
\s5
\v 7 திரும்பிக் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியர்களுடைய நாடு முழுவதையும், அத்சாத்சோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும் கூட அழித்தார்கள்.
\v 8 அப்பொழுது சோதோமின் ராஜாவும், கொமோராவின் ராஜாவும், அத்மாவின் ராஜாவும், செபோயீமின் ராஜாவும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவும் புறப்பட்டு சித்தீம் பள்ளத்தாக்கிலே,
\v 9 ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், கோயிமின் ராஜாவாகிய திதியாலோடும், சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்செய்யப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நான்கு ராஜாக்களும் யுத்தம் செய்தார்கள்.
\s5
\v 10 அந்த சித்தீம் பள்ளத்தாக்கில் நிலக்கீல் உண்டாகும் கிணறுகள் இருந்தன. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் தோற்று ஓடி அங்கே விழுந்தார்கள்; மீதமுள்ளவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.
\v 11 அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கோமோராவிலுமுள்ள பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
\v 12 ஆபிராமின் சகோதரனுடைய மகனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்ததால், அவனையும், அவனுடைய பொருட்களையும் கொண்டுபோய்விட்டார்கள்.
\s5
\v 13 தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதைத் தெரிவித்தான்; ஆபிராம் தன்னுடன் உடன்படிக்கை செய்திருந்த மனிதர்களாகிய எஸ்கோலுக்கும், ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சமபூமியிலே அப்பொழுது குடியிருந்தான்.
\v 14 தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த யுத்தப்பயிற்சி பெற்றவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் அணிவித்து, தாண் என்னும் ஊர்வரை அவர்களைத் தொடர்ந்துபோய்,
\s5
\v 15 இரவுநேரத்திலே அவனும், அவனுடைய வேலைக்காரரும் பிரிந்து, குழுக்களாக அவர்கள்மேல் விழுந்து, அவர்களைத் தோற்கடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாவரைத் துரத்தி,
\v 16 அனைத்து பொருட்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருட்களையும், பெண்களையும், மக்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்.
\s5
\v 17 அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் தோற்கடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குவரை அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.
\v 18 அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
\s5
\v 19 அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.
\v 20 உன் எதிரிகளை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
\s5
\v 21 சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: மக்களை எனக்குத் தாரும், பொருட்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான்.
\v 22 அதற்கு ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து; ஆபிராமை செல்வந்தனாக்கினேன் என்று நீர் சொல்லாமலிருக்க நான் ஒரு நூலையாகிலும் காலணியின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் ஒன்றையாகிலும் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று,
\v 23 வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.
\v 24 வாலிபர்கள் சாப்பிட்டதுபோக, என்னுடன் வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே என்னும் மனிதர்களுடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள் தங்களுடைய பங்குகளை எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
\s5
\c 15
\cl அத்தியாயம்– 15
\s1 ஆபிராமோடு தேவன் உடன்படிக்கை செய்தல்
\p
\v 1 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாக இருக்கிறேன் என்றார்.
\v 2 அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் குழந்தையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரைச் சேர்ந்த இந்த எலியேசர் என் வீட்டைப் பராமரிக்கிறவனாக இருக்கிறானே என்றான்.
\v 3 பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்கு வாரிசு அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்கு வாரிசாக இருக்கிறான் என்றான்.
\s5
\v 4 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்கு வாரிசு அல்ல, உனக்குப் பிறப்பவனே உனக்கு வாரிசு ஆவான் என்று சொல்லி,
\v 5 அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை உன்னாலே எண்ணமுடியுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இந்தவிதமாக இருக்கும் என்றார்.
\s5
\v 6 அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாகக் கருதினார்.
\v 7 பின்னும் அவர் அவனை நோக்கி: இந்த தேசத்தை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பதற்காக, உன்னை ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார்.
\v 8 அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சொந்தமாக்கிக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.
\s5
\v 9 அதற்கு அவர்: மூன்றுவயது இளங்கன்றையும், மூன்றுவயது வெள்ளாட்டையும், மூன்றுவயது ஆட்டுக்கிடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார்.
\v 10 அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, இருபகுதிகளையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பறவைகளை அவன் துண்டிக்கவில்லை.
\v 11 பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான்.
\s5
\v 12 சூரியன் மறையும்போது, ஆபிராமுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது; பயமுண்டாக்கும் காரிருள் அவனை மூடிக்கொண்டது.
\v 13 அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியினர் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாக இருந்து, அந்த தேசத்தார்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருடங்கள் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாக அறியவேண்டும்.
\s5
\v 14 இவர்கள் அடிமையாக இருக்கும் தேசத்தை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருட்களுடனே புறப்பட்டு வருவார்கள்.
\v 15 நீ சமாதானத்தோடு உன் முன்னோர்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்செய்யப்படுவாய்.
\v 16 நான்காம் தலைமுறையிலே அவர்கள் இந்த இடத்திற்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியர்களுடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.
\s5
\v 17 சூரியன் மறைந்து காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டுகளின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜூவாலையும் தோன்றின.
\v 18 அந்த நாளிலே கர்த்தர் ஆபிராமோடு உடன்படிக்கைசெய்து, எகிப்தின் நதிதுவங்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிவரை உள்ளதும்,
\v 19 கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,
\v 20 ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,
\v 21 எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்த தேசத்தை உன்னுடைய சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.
\s5
\c 16
\cl அத்தியாயம்– 16
\s1 ஆகாரும் இஸ்மவேலும்
\p
\v 1 ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குக் குழந்தையில்லாமல் இருந்தது. எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஆகார் என்னும் பெயர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள்.
\v 2 சாராய் ஆபிராமை நோக்கி: நான் குழந்தைபெறாமலிருக்கக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடு சேரும், ஒருவேளை அவளால் என்னுடைய குடும்பம் கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தையின்படி ஆபிராம் செய்தான்.
\v 3 ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருடங்கள் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் கணவனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
\v 4 அவன் ஆகாருடன் இணைந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள், தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் எஜமானியை அற்பமாக நினைத்தாள்.
\s5
\v 5 அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உம்மேல் சுமரும்; என்னுடைய அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக நினைக்கிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநிலையாக நியாயந்தீர்ப்பாராக என்றாள்.
\v 6 அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் அதிகாரத்திற்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமாகத் தோன்றுகிறபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாக நடத்தியதால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.
\s5
\v 7 கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்திரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்று அருகில் கண்டு:
\v 8 சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் எஜமானியாகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.
\s5
\v 9 அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் எஜமானியிடத்திற்குத் திரும்பிப்போய், அவளுடைய அதிகாரத்திற்குள் அடங்கியிரு என்றார்.
\v 10 பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகச்செய்வேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாக இருக்கும் என்றார்.
\s5
\v 11 பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாக இருக்கிறாய், ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டதால், அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடுவாயாக.
\v 12 அவன் கொடூரமான மனிதனாக இருப்பான்; அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும், எல்லோருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
\s5
\v 13 அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இந்த இடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னுடன் பேசின கர்த்தருக்கு நீர் என்னைக்காண்கிற தேவன் என்று பெயரிட்டாள்.
\v 14 ஆகையால், அந்தக் கிணற்றின் பெயர் லகாய்ரோயீ எனப்பட்டது; அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.
\s5
\v 15 ஆகார் ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் மகனுக்கு இஸ்மவேல் என்று பெயரிட்டான்.
\v 16 ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றெடுத்தபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.
\s5
\c 17
\cl அத்தியாயம்– 17
\s1 விருத்தசேதனமாகிய உடன்படிக்கை
\p
\v 1 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குக் காட்சியளித்து: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாக இரு.
\v 2 நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாகப் பெருகச்செய்வேன் என்றார்.
\s5
\v 3 அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனுடன் பேசி:
\v 4 நான் உன்னுடன் செய்கிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான தேசங்களுக்குத் தகப்பனாவாய்.
\v 5 இனி உன் பெயர் ஆபிராம் எனப்படாமல், நான் உன்னைத் திரளான தேசங்களுக்குத் தகப்பனாக ஏற்படுத்தியதால், உன் பெயர் ஆபிரகாம் எனப்படும்.
\v 6 உன்னை மிகவும் அதிகமாகப் பலுகச்செய்து, உன்னிலே தேசங்களை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.
\s5
\v 7 உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பதற்காக எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன்.
\v 8 நீ பரதேசியாகத் தங்கிவருகிற கானான் தேசம் முழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் சொந்தமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன் என்றார்.
\s5
\v 9 பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.
\v 10 எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என்னுடைய உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் அனைத்து ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்;
\v 11 உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்யவேண்டும்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும்.
\s5
\v 12 உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் சந்ததியல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்கு வாங்கப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்.
\v 13 உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்கு வாங்கப்பட்டவனும், விருத்தசேதனம் செய்யப்படவேண்டியது அவசியம்; இப்படி என்னுடைய உடன்படிக்கை உங்கள் சரீரத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கவேண்டும்.
\v 14 நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையாக இருந்தால், அந்த ஆத்துமா என்னுடைய உடன்படிக்கையை மீறினதால், தன் மக்களுடன் இல்லாதபடி நீக்கப்பட்டுப்போவான் என்றார்.
\p
\s5
\v 15 பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழைக்காதே; சாராள் என்பது அவளுக்குப் பெயராக இருக்கும்.
\v 16 நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு மகனையும் தருவேன்; அவள் தேசங்களுக்குத் தாயாகவும், அவளாலே தேசங்களின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.
\s5
\v 17 அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்து: நூறுவயதானவனுக்குக் குழந்தை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் குழந்தை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,
\v 18 இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்செய்தான்.
\s5
\v 19 அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாக உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடுவாயாக; என்னுடைய உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவனுடைய சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன்.
\v 20 இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் செய்வேன்; அவன் பன்னிரண்டு கோத்திரத் தலைவர்களைப் பெறுவான்; அவனைப் பெரிய தேசமாக்குவேன்.
\v 21 வருகிற வருடத்தில் குறித்தக்காலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடு நான் என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார்.
\s5
\v 22 தேவன் ஆபிரகாமோடு பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டுப் போனார்.
\v 23 அப்பொழுது ஆபிரகாம் தன் மகனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டில் பிறந்த அனைவரையும், தான் பணத்திற்கு வாங்கிய அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லோரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்த நாளிலேயே விருத்தசேதனம் செய்தான்.
\s5
\v 24 ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாக இருந்தான்.
\v 25 அவனுடைய மகனாகிய இஸ்மவேலின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாக இருந்தான்.
\v 26 ஒரே நாளில் ஆபிரகாமும் அவனுடைய மகன் இஸ்மவேலும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
\v 27 வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்கு வாங்கப்பட்டவர்களுமாகிய அவனுடைய வீட்டு மனிதர்கள் அனைவரும் அவனோடு விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
\s5
\c 18
\cl அத்தியாயம்– 18
\s1 மூன்று விருந்தினர்கள்
\p
\v 1 பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குக் காட்சியளித்தார். அவன் பகலின் வெயில் நேரத்தில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,
\v 2 தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று மனிதர்கள் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைவரைக்கும் குனிந்து:
\s5
\v 3 ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நீர் உமது அடியேனைவிட்டுப் போகவேண்டாம்.
\v 4 கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறேன், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருங்கள்.
\v 5 நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; பிறகு நீங்கள் உங்கள் வழியிலே போகலாம்; இதற்காகவே அடியேனுடைய இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள்.
\s5
\v 6 அப்பொழுது ஆபிரகாம் விரைவாகக் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாக மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.
\v 7 ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான்.
\v 8 ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைக்கப்பட்ட கன்றையும் எடுத்து வந்து, அவர்களுக்கு முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் சாப்பிட்டார்கள்.
\s5
\v 9 அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள். அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
\v 10 அப்பொழுது அவர்: ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் நிச்சயமாக உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு மகன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாகக் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
\s5
\v 11 ஆபிரகாமும் சாராளும் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள்; பெண்களுக்குரிய மாதவழிபாடு சாராளுக்கு நின்றுபோனது.
\v 12 ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே சிரித்து: நான் கிழவியும், என்னுடைய கணவன் முதிர்ந்த வயதுள்ளவருமாக இருக்கும்போது, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.
\s5
\v 13 அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் சிரித்து, நான் கிழவியாக இருக்கும்போது குழந்தைபெற்றெடுப்பது சாத்தியமோ என்று சொல்வதென்ன?
\v 14 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? கர்ப்பகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான் என்றார்.
\v 15 சாராள் பயந்து, நான் சிரிக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ சிரித்தாய் என்றார்.
\s1 ஆபிரகாம் சோதோமுக்காக விண்ணப்பம் செய்தல்
\p
\s5
\v 16 பின்பு அந்த மனிதர்கள் எழுந்து அந்த இடத்தைவிட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடு போய் வழியனுப்பினான்.
\v 17 அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த தேசமாவதாலும், அவனுக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படுவதாலும்,
\v 18 நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?
\v 19 கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றுவதற்காக அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் கைக்கொண்டு நடக்கவேண்டுமென்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.
\s5
\v 20 பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவைக்குறித்து ஏற்படும் கூக்குரல் பெரிதாக இருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடியதாக இருப்பதினாலும்,
\v 21 நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார்.
\s5
\v 22 அப்பொழுது அந்த மனிதர்கள் அந்த இடத்தைவிட்டு சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்.
\v 23 அப்பொழுது ஆபிரகாம் அருகில் வந்து: துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பீரோ?
\s5
\v 24 பட்டணத்திற்குள் ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அங்கேயிருக்கும் அந்த ஐம்பது நீதிமான்களுக்காகக் காப்பாற்றாமல் அந்த இடத்தை அழிப்பீரோ?
\v 25 துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதல்ல; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாக நடத்துவது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாமல் இருப்பாரோ என்றான்.
\v 26 அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்களுக்காக அந்த இடம் முழுவதையும் காப்பாற்றுவேன் என்றார்.
\s5
\v 27 அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடு பேசத்துணிந்தேன்.
\v 28 ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேருக்காக பட்டணம் முழுவதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
\s5
\v 29 அவன் பின்னும் அவரோடு பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை என்றார்.
\v 30 அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
\v 31 அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடு பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை என்றார்.
\s5
\v 32 அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருமுறைமட்டும் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை என்றார்.
\v 33 கர்த்தர் ஆபிரகாமோடு பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்.
\s5
\c 19
\cl அத்தியாயம்– 19
\s1 சோதோம் கொமோரா அழிக்கப்படுதல்
\p
\v 1 அந்த இரண்டு தூதர்களும் சாயங்காலத்தில் சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலில் உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைவரைக்கும் குனிந்து:
\v 2 ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டிற்கு நீங்கள் வந்து, உங்கள் கால்களைக் கழுவி, இரவில்தங்கி, காலையில் எழுந்து புறப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, இரவில் வீதியிலே தங்குவோம் என்றார்கள்.
\v 3 அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவனுடைய வீட்டிற்குச் சென்றார்கள். அவன் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துசெய்தான், அவர்கள் சாப்பிட்டார்கள்.
\s5
\v 4 அவர்கள் படுக்கும்முன்னே, சோதோம் பட்டணத்து மனிதர்களாகிய வாலிபர்கள்முதல் முதியவர்கள்வரையுள்ள மக்கள் அனைவரும் நான்கு திசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,
\v 5 லோத்தைக் கூப்பிட்டு: இந்த இரவில் உன்னிடம் வந்த மனிதர்கள் எங்கே? நாங்கள் அவர்களுடன் உறவுகொள்ள அவர்களை எங்களிடம் வெளியே கொண்டுவா என்றார்கள்.
\s5
\v 6 அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடம் போய்:
\v 7 சகோதரர்களே, இந்த அக்கிரமத்தைச் செய்யவேண்டாம்.
\v 8 இதோ, கன்னிகைகளான இரண்டு மகள்கள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்களுடைய இஷ்டப்படி செய்யுங்கள்; இந்த மனிதர்கள் என்னுடைய கூரையின் நிழலிலே வந்ததால், இவர்களுக்கு மட்டும் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.
\s5
\v 9 அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாக வந்த இவனா நியாயம் பேசுவது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைவிட உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்க நெருங்கினார்கள்.
\s5
\v 10 அப்பொழுது அந்த மனிதர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் பக்கம் வீட்டிற்குள் இழுத்துக்கொண்டு, கதவைப்பூட்டி,
\v 11 தெருவாசலிலிருந்த சிறியோர்களும் பெரியோர்களுமாகிய மனிதர்களுக்குப் பார்வையற்றுப்போகச் செய்தார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.
\s5
\v 12 பின்பு அந்த மனிதர்கள் லோத்தை நோக்கி: இந்த இடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? உன்னுடைய மகன்களாவது, மகள்களாவது, மருமகன்களாவது பட்டணத்தில் உனக்குரியவர்கள் யாராவது இருந்தால், அவர்களை இந்த இடத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.
\v 13 நாங்கள் இந்த இடத்தை அழிக்கப்போகிறோம்; இவர்களுக்கு எதிரான கூக்குரல் கர்த்தருடைய சமூகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்.
\s5
\v 14 அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் மகள்களைத் திருமணம் செய்யப்போகிற தன் மருமகன்களோடு பேசி: நீங்கள் எழுந்து இந்த இடத்தைவிட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமகன்களின் பார்வைக்கு அவன் கேலிசெய்வதைப் போலிருந்தது.
\v 15 விடியற்காலமானபோது அந்தத் தூதர்கள் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாமலிருக்க எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனை அவசரப்படுத்தினார்கள்.
\s5
\v 16 அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்த மனிதர்கள் அவனுடைய கையையும், அவனுடைய மனைவியின் கையையும், அவனுடைய இரண்டு மகள்களின் கையையும் பிடித்து, அவர்களைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.
\v 17 அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: உன் உயிர் தப்ப ஓடிப்போ, திரும்பிப் பார்க்காதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாமலிருக்க மலைக்கு ஓடிப்போ என்றார்.
\s5
\v 18 அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே,
\v 19 உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என்னுடைய உயிரைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக தெரியச்செய்தீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் இறந்துபோவேன்.
\v 20 அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அங்கு ஓடிப்போக அது அருகில் இருக்கிறது, சிறியதாகவும் இருக்கிறது; என் உயிர்பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.
\s5
\v 21 அதற்கு அவர்: நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் அழித்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு தயவுசெய்தேன்.
\v 22 விரைவாக அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேரும்வரை நான் ஒன்றும் செய்யமுடியாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் எனப்பட்டது.
\s5
\v 23 லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது.
\v 24 அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் பொழியச்செய்து,
\v 25 அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் அனைத்து மக்களையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
\s5
\v 26 அவனுடைய மனைவியோ திரும்பிப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.
\v 27 விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,
\v 28 சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை, சூளையின் புகையைப்போல எழும்பினது.
\s5
\v 29 தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் அழித்துப்போடும்போது, லோத்தை அந்த அழிவிலிருந்து தப்பிச்செல்லும்படி அனுப்பிவிட்டார்.
\s1 லோத்துவும் அவனுடைய மகள்களும்
\p
\s5
\v 30 பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடுகூட அவனுடைய இரண்டு மகள்களும் மலையிலே தங்கினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு மகள்களும் ஒரு குகையிலே குடியிருந்தார்கள்.
\s5
\v 31 அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடு இணைய பூமியிலே ஒரு மனிதனும் இல்லை.
\v 32 நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடு உறவுகொள்வோம் வா என்றாள்.
\v 33 அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடு உறவுகொண்டாள்: அவள் உறவுகொண்டதையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
\s5
\v 34 மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடு உறவுகொண்டேன்; இன்று இரவும் மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீயும் போய் அவரோடு உறவுகொள் என்றாள்.
\v 35 அப்படியே அன்று இரவிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடு உறவுகொண்டாள்; அவள் உறவுகொண்டதையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
\s5
\v 36 இந்த விதமாக லோத்தின் மகள்கள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
\v 37 மூத்தவள் ஒரு மகனைப்பெற்று, அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள்; அவன் இந்த நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.
\v 38 இளையவளும் ஒரு மகனைப்பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பெயரிட்டாள்; அவன் இந்த நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் வம்சத்தாருக்குத் தகப்பன்.
\s5
\c 20
\cl அத்தியாயம்– 20
\s1 ஆபிரகாமும் அபிமெலேக்கும்
\p
\v 1 ஆபிரகாம் அந்த இடத்தைவிட்டு, தென்தேசத்திற்குப் பயணம் செய்து, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.
\v 2 அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதால், கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பி சாராளை வரவழைத்தான்.
\v 3 தேவன் இரவிலே அபிமெலேக்குக்குக் கனவிலே தோன்றி: நீ வரவழைத்த பெண்ணால் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாக இருக்கிறாளே என்றார்.
\s5
\v 4 அபிமெலேக்கு அவளுடன் இணையாதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள மக்களை அழிப்பீரோ?
\v 5 இவள் தன் சகோதரி என்று அவன் என்னிடம் சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.
\s5
\v 6 அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடு நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாமலிருக்க உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.
\v 7 அந்த மனிதனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைப்பதற்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சார்ந்த அனைவரும் சாகவே சாவீர்கள் என்று அறிந்துகொள் என்று கனவிலே அவனுக்குச் சொன்னார்.
\s5
\v 8 அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் வேலைக்காரரையெல்லாம் வரவழைத்து, இந்தச் செய்திகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனிதர் மிகவும் பயந்தார்கள்.
\v 9 அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை வரவழைத்து: நீ எங்களுக்கு என்ன காரியம் செய்தாய், நீ என்மேலும், என்னுடைய ராஜ்ஜியத்தின்மேலும் பெரும்பாவம் சுமரச் செய்வதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.
\s5
\v 10 பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: எதைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.
\v 11 அதற்கு ஆபிரகாம்: இந்த இடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியின்பொருட்டு என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.
\v 12 அவள் என்னுடைய சகோதரி என்பதும் உண்மைதான்; அவள் என் தகப்பனுக்கு மகள், என் தாய்க்கு மகளல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.
\s5
\v 13 என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் நாடோடியாகத் திரியச்செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான்.
\v 14 அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவனுடைய மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.
\s5
\v 15 பின்னும் அபிமெலேக்கு: இதோ, என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்கு விருப்பமான இடத்தில் குடியிரு என்று சொன்னான்.
\v 16 பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லோருக்கும் முன்பாகவும், மற்ற அனைவருக்கும் முன்பாகவும், இது உன் முகத்தின் முக்காட்டுக்காக என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள்.
\s5
\v 17 ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளுக்காக கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்ததால்,
\v 18 ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவனுடைய மனைவியையும், வேலைக்காரிகளையும் குணமாக்கி, குழந்தைபெறும்படி தயவு செய்தார்.
\s5
\c 21
\cl அத்தியாயம்– 21
\s1 ஈசாக்கின் பிறப்பு
\p
\v 1 கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராளைக் கண்ணோக்கினார்; கர்த்தர் தாம் வாக்களித்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
\v 2 ஆபிரகாம் முதிர்வயதாக இருக்கும்போது, சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்தில் அவனுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
\v 3 அப்பொழுது ஆபிரகாம் தனக்கு சாராள் பெற்ற மகனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான்.
\v 4 தன் மகனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளில், ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம் செய்தான்.
\s5
\v 5 தன் மகனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான்.
\v 6 அப்பொழுது சாராள்: தேவன் என்னை மகிழச்செய்தார்; இதைக்கேட்கிற அனைவரும் என்னோடுகூட மகிழ்வார்கள்.
\v 7 சாராள் குழந்தைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு யார் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு மகனைப் பெற்றேனே என்றாள்.
\s1 ஆகாரும் இஸ்மவேலும் வெளியேற்றப்படுதல்
\p
\s5
\v 8 குழந்தை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து செய்தான்.
\v 9 பின்பு எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகன் கேலி செய்கிறதை சாராள் கண்டு,
\s5
\v 10 ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவளுடைய மகனையும் துரத்திவிடும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் மகனாகிய ஈசாக்கோடு வாரிசாக இருப்பதில்லை என்றாள்.
\v 11 தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாக இருந்தது.
\s5
\v 12 அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தச் சிறுவனையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாக இருக்கவேண்டாம்; ஈசாக்கின் வழியாக உன் சந்ததி தோன்றும்; ஆகவே சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.
\v 13 அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாக இருப்பதால், அவனையும் ஒரு தேசமாக்குவேன் என்றார்.
\s5
\v 14 ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு தோல்பையில் தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்து, சிறுவனையும் ஒப்படைத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்திரத்திலே அலைந்து திரிந்தாள்.
\v 15 தோல்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின்பு, அவள் சிறுவனை ஒரு செடியின் கீழே விட்டு,
\v 16 சிறுவன் சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, அவனைவிட்டு அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
\s5
\v 17 தேவன் சிறுவனின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, சிறுவன் இருக்கும் இடத்தில் தேவன் அவனுடைய சத்தத்தைக் கேட்டார்.
\v 18 நீ எழுந்து சிறுவனை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டுபோ, அவனைப் பெரிய தேசமாக்குவேன் என்றார்.
\s5
\v 19 தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு கிணற்றைக் கண்டு, போய், தோல்பையில் தண்ணீரை நிரப்பி, சிறுவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
\v 20 தேவன் சிறுவனுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்திரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான்.
\v 21 அவன் பாரான் வனாந்திரத்திலே குடியிருக்கும்போது, அவனுடைய தாய் எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்துவைத்தாள்.
\s1 பெயர்செபாவில் ஒப்பந்தம்
\p
\s5
\v 22 அந்த காலத்தில் அபிமெலேக்கும் அவனுடைய படைத்தலைவனாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.
\v 23 ஆகையால், நீ எனக்காவது, என் மகனுக்காவது, பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.
\v 24 அதற்கு ஆபிரகாம்: நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன் என்றான்.
\s5
\v 25 ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர்கள் கைப்பற்றிக்கொண்ட கிணற்றிற்காக ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.
\v 26 அதற்கு அபிமெலேக்கு: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்குத் தெரிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதைத்தவிர, இதற்குமுன் அதை நான் கேள்விப்படவே இல்லை என்றான்.
\v 27 அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.
\s5
\v 28 ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான்.
\v 29 அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் எதற்கு? என்று கேட்டான்.
\v 30 அதற்கு அவன்: நான் இந்தக் கிணறு தோண்டியதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றான்.
\s5
\v 31 அவர்கள் இருவரும் அந்த இடத்தில் ஆணையிட்டுக்கொண்டதால், அந்த இடம் பெயெர்செபா எனப்பட்டது.
\v 32 அவர்கள் பெயெர்செபாவிலே உடன்படிக்கை செய்துகொண்டபின்பு அபிமெலேக்கும், அவனுடைய படைத்தலைவனாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
\s5
\v 33 ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அந்த இடத்தில் தொழுதுகொண்டான்.
\v 34 ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேகநாட்கள் தங்கியிருந்தான்.
\s5
\c 22
\cl அத்தியாயம்– 22
\s1 ஆபிரகாம் சோதிக்கப்படுதல்
\p
\v 1 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியென்றால், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.
\v 2 அப்பொழுது அவர்: உன் மகனும், உனது ஒரேமகனும், உனக்குப் பிரியமான மகனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்திற்குப் போய், அங்கே நான் உனக்குச் சொல்லும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
\v 3 ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரர்களில் இரண்டுபேரையும் தன் மகன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்கு விறகுகளையும் எடுத்துக்கொண்டு, தேவன் தனக்குக் குறித்திருந்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.
\s5
\v 4 மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.
\v 5 அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் கழுதையுடன் இங்கே காத்திருங்கள், நானும் சிறுவனும் அந்த இடத்திற்குப் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்திற்குத் திரும்பி வருவோம் என்றான்.
\v 6 ஆபிரகாம் தகனபலிக்கு விறகுகளை எடுத்து, தன் மகனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; அவர்கள் இருவரும் சேர்ந்துபோனார்கள்.
\s5
\v 7 அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் விறகும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்.
\v 8 அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியை அவரே கொடுப்பார் என்றான்; அப்புறம் இருவரும் சேர்ந்துபோய்,
\s5
\v 9 தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்திற்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, விறகுகளை அடுக்கி, தன் மகனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய விறகுகளின்மேல் அவனைப் படுக்கவைத்தான்.
\v 10 பின்பு ஆபிரகாம் தன் மகனை வெட்டுவதற்காக தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.
\s5
\v 11 அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
\v 12 அப்பொழுது அவர்: சிறுவன்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் மகன் என்றும், உனது ஒரேமகன் என்றும் பார்க்காமல் எனக்காக ஒப்புக்கொடுத்ததால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது தெரிந்துகொண்டேன் என்றார்.
\s5
\v 13 ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, தனக்குப் பின்புறமாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் மகனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.
\v 14 ஆபிரகாம் அந்த இடத்திற்கு யேகோவாயீரே என்று பெயரிட்டான்; அதனால் கர்த்தருடைய மலையில் பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்த நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
\s5
\v 15 கர்த்தருடைய தூதனானவர் இரண்டாவது முறை வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு:
\v 16 நீ உன் மகன் என்றும், உனது ஒரேமகன் என்றும் பார்க்காமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்ததால்;
\v 17 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகச்செய்வேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் எதிரிகளின் வாசல்களைச் சொந்தமாக்கிக் கொள்ளுவார்கள் என்றும்,
\s5
\v 18 நீ என்னுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்ததால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
\v 19 ஆபிரகாம் தன் வேலைக்காரர்களிடத்திற்குத் திரும்பிவந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஒன்றுசேர்ந்து பெயெர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயெர்செபாவிலே குடியிருந்தான்.
\s1 நாகோரின் மகன்கள்
\p
\s5
\v 20 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்;
\v 21 அவர்கள் யாரென்றால், முதற்பிறந்தவனான ஊத்ஸ், அவனுடைய தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல்,
\v 22 கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள்; பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றெடுத்தான் என்று அறிவித்தான்.
\s5
\v 23 அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றெடுத்தாள்.
\v 24 ரேயுமாள் என்று பெயர்கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.
\s5
\c 23
\cl அத்தியாயம்– 23
\s1 சாராளின் மரணம்
\p
\v 1 சாராள் நூற்று இருபத்தேழு வருடங்கள் உயிரோடிருந்தாள்; சாராளுடைய வயது இவ்வளவுதான்.
\v 2 கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் இறந்தாள்; அப்பொழுது ஆபிரகாம், சாராளுக்காகப் புலம்பி அழுதான்.
\s5
\v 3 பின்பு ஆபிரகாம், இறந்த உடல் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் வம்சத்தாருடன் பேசி:
\v 4 நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாக இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்த இறந்த உடலை நான் அடக்கம்செய்வதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைநிலத்தைத் தரவேண்டும் என்றான்.
\s5
\v 5 அதற்கு ஏத்தின் வம்சத்தார் ஆபிரகாமுக்கு மறுமொழியாக:
\v 6 எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்களுடைய கல்லறைகளில் முக்கியமானதில் உடலை அடக்கம்செய்யும்; நீர் உடலை அடக்கம்செய்ய எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை என்றார்கள்.
\s5
\v 7 அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் வம்சத்தாராகிய அந்தத் தேசத்தாருக்கு வணக்கம் சொல்லி,
\v 8 அவர்களோடு பேசி: என்னிடத்திலிருக்கிற உடலை அடக்கம் செய்ய உங்களுக்குச் சம்மதமானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய மகனாகிய எப்பெரோன்,
\v 9 தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா எனப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறை நிலமாகத் தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அதற்குரிய விலைக்கு அவர் அதைத் தரட்டும் என்றான்.
\p
\s5
\v 10 எப்பெரோன் ஏத்தின் வம்சத்தார் மத்தியில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனாகிய எப்பெரோன் தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின் வம்சத்தார் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்கு மறுமொழியாக:
\v 11 அப்படியல்ல, என் ஆண்டவனே, என் வார்த்தையைக் கேளும்; அந்த நிலத்தை உமக்குக் கொடுக்கிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குக் கொடுக்கிறேன், என் இனத்தாரின் முன்னிலையில் அதை உமக்குக் கொடுக்கிறேன், உம்மிடத்திலிருக்கிற உடலை அடக்கம்செய்யும் என்றான்.
\s5
\v 12 அப்பொழுது ஆபிரகாம் அந்தத் தேசத்தாருக்கு வணக்கம் சொல்லி,
\v 13 தேசத்து மக்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுப்பதற்கு உமக்கு மனதிருந்தால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற உடலை அந்த இடத்தில் அடக்கம்செய்வேன் என்றான்.
\s5
\v 14 அதற்கு எப்பெரோன் ஆபிரகாமுக்கு மறுமொழியாக:
\v 15 என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலத்தின் விலை நானூறு சேக்கல் நிறை வெள்ளி; எனக்கும் உமக்கும் அது சாதாரண காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற உடலை அடக்கம் செய்யும் என்றான்.
\v 16 அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் வம்சத்தாரின் முன்னிலையில் எப்பெரோன் சொன்னபடியே, வியாபாரிகளிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தான்.
\s5
\v 17 இந்த விதமாக மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்த இடமும், அதிலுள்ள குகையும், நிலத்திலுள்ள அனைத்து மரங்களும்,
\v 18 அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் வம்சத்தினர் அனைவரின் முன்னிலையிலும் ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது.
\s5
\v 19 அதற்குப்பின்பு ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான் தேசத்தில் எப்பெரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்செய்தான்.
\v 20 இப்படி ஏத்தின் வம்சத்தாரிடமிருந்து வாங்கப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறை நிலமாக உறுதிப்படுத்தப்பட்டது.
\s5
\c 24
\cl அத்தியாயம்– 24
\s1 ஈசாக்கும் ரெபெக்காளும்
\p
\v 1 ஆபிரகாம் வயது முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமை அனைத்துக் காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்.
\v 2 அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் வேலைக்காரனை நோக்கி:
\v 3 நான் குடியிருக்கிற கானானியர்களுடைய பெண்களில் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்காமல்;
\v 4 நீ என்னுடைய தேசத்திற்கும் என்னுடைய இனத்தாரிடத்திற்கும் போய், என் மகனாகிய ஈசாக்குக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பேன் என்று, வானத்திற்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தரை முன்னிட்டு எனக்கு ஆணையிட்டுக்கொடுக்க, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான்.
\s5
\v 5 அதற்கு அந்த வேலைக்காரன்: அந்த இடத்துப் பெண் என்னுடன் இந்தத் தேசத்திற்கு வர விருப்பமில்லாமல் இருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்கு உம்முடைய மகனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ? என்று கேட்டான்.
\v 6 அதற்கு ஆபிரகாம்: நீ என் மகனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாமலிருக்க எச்சரிக்கையாக இரு.
\v 7 என்னை என்னுடைய தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்துவந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்திற்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் மகனுக்கு ஒரு பெண்ணை அழைத்துவர, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.
\s5
\v 8 பெண் உன்னுடன் வர விருப்பமில்லாமல் இருந்தால், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு உட்படாதிருப்பாய்; அங்கே மாத்திரம் என் மகனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றான்.
\v 9 அப்பொழுது அந்த வேலைக்காரன் தன் கையைத் தன் எஜமானாகிய ஆபிரகாமுடைய தொடையின்கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக்குறித்து அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்.
\s5
\v 10 பின்பு அந்த வேலைக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னோடு கொண்டுபோனான்; தன் எஜமானுடைய அனைத்துவகையான விலையுயர்ந்த பொருட்களும் அவனுடைய கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊருக்கு வந்து,
\v 11 ஊருக்குப் வெளியே ஒரு கிணற்றினருகில், தண்ணீர் இறைக்க பெண்கள் வருகிற சாயங்கால நேரத்தில், ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
\s5
\v 12 என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் நிறைவேறச்செய்து, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.
\v 13 இதோ, நான் இந்தக் கிணற்றினருகில் நிற்கிறேன், இந்த ஊர்ப் பெண்கள் தண்ணீர் இறைக்க வருவார்களே.
\v 14 நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கக் கொடுப்பேன் என்றும் சொல்லும் பெண்ணானவளே, நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாக இருக்கவும், என் எஜமானுக்கு தயவுசெய்தீர் என்று நான் அதன்மூலம் தெரிந்துகொள்ளவும் உதவிசெய்யும் என்றான்.
\s5
\v 15 அவன் இப்படிச் சொல்லி முடிப்பதற்கு முன்பே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய மகனாகிய பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு வந்தாள்.
\v 16 அந்தப் பெண் மிகுந்த அழகுள்ளவளும், கன்னிகையுமாக இருந்தாள்; அவள் கிணற்றில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.
\s5
\v 17 அப்பொழுது அந்த வேலைக்காரன், அவளுக்கு நேராக ஓடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான்.
\v 18 அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாகக் குடத்தைத் தன் கையிலிருந்து இறக்கி, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
\s5
\v 19 கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்து முடியும்வரைக்கும் அவைகளுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன் என்றுசொல்லி;
\v 20 சீக்கிரமாகத் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் கொண்டுவர கிணற்றுக்கு ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் குடிக்க ஊற்றினாள்.
\s5
\v 21 அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பயணத்தை வாய்க்கச்செய்தாரோ இல்லையோ என்று தெரிந்துகொள்ள மவுனமாயிருந்தான்.
\v 22 ஒட்டகங்கள் குடித்து முடிந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள தங்கக் கம்மலையும், அவளுடைய கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களையும் கொடுத்து,
\v 23 நீ யாருடைய மகள் என்று எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இரவில் தங்க இடம் உண்டா என்றான்.
\s5
\v 24 அதற்கு அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமல்லாமல்,
\v 25 எங்களிடத்தில் வைக்கோலும் தீவனமும் போதிய அளவு இருக்கிறது; இரவில் தங்க இடமும் உண்டு என்றாள்.
\s5
\v 26 அப்பொழுது அந்த மனிதன் தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு,
\v 27 என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பயணம் செய்துவரும்போது, கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர்களுடைய வீட்டிற்கு என்னை அழைத்துக்கொண்டு வந்தார் என்றான்.
\s5
\v 28 அந்தப் பெண் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரிவித்தாள்.
\v 29 ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பெயர்; அந்த லாபான் வெளியே கிணற்றினருகில் இருந்த அந்த மனிதனிடம் ஓடினான்.
\v 30 அவன் தன் சகோதரி அணிந்திருந்த அந்தக் கம்மலையும், அவளுடைய கைகளில் போட்டிருந்த வளையல்களையும் பார்த்து, இவைகளையெல்லாம் அந்த மனிதன் என்னோடு பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டவுடனே, அந்த மனிதனிடத்திற்கு வந்தான்; அவன் கிணற்றினருகே ஒட்டகங்களுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தான்.
\s5
\v 31 அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பது என்ன? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம் செய்திருக்கிறேன் என்றான்.
\v 32 அப்பொழுது அந்த மனிதன், வீட்டிற்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடு வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.
\s5
\v 33 பின்பு, அவனுக்கு முன்பாக உணவு வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுவதற்கு முன்பாகச் சாப்பிடமாட்டேன் என்றான். அதற்கு அவன், சொல்லும் என்றான்.
\v 34 அப்பொழுது அவன்: நான் ஆபிரகாமுடைய வேலைக்காரன்.
\v 35 கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் செல்வந்தனாக இருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.
\s5
\v 36 என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அவர் தமக்கு உண்டான அனைத்தையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.
\v 37 என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய பெண்களில் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்காமல்,
\v 38 நீ என் தகப்பன் வீட்டிற்கும், என் இனத்தாரிடத்திற்கும் போய், என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கச் சொன்னார்.
\s5
\v 39 அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்னுடன் வராமல்போனாலோ என்று கேட்டதற்கு,
\v 40 அவர்: நான் ஆராதிக்கும் கர்த்தர் உன்னோடு தம்முடைய தூதனை அனுப்பி, உன் பயணத்தை வாய்க்கச் செய்வார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பாய்.
\v 41 நீ என் இனத்தாரிடத்திற்குப்போனால், என் ஆணைக்கு உட்படாதிருப்பாய்; அவர்கள் உன்னோடு பெண்ணை அனுப்பாமல்போனாலும், நீ என் ஆணைக்கு உட்படாதிருப்பாய் என்றார்.
\s5
\v 42 அப்படியே நான் இன்று கிணற்றினருகில் வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பயணத்தை நீர் இப்பொழுது வாய்க்கச்செய்வீரானால்,
\v 43 இதோ, நான் கிணற்றினருகில் நிற்கிறேன், தண்ணீர் இறைக்க வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்று கேட்கும்போது:
\v 44 நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய மகனுக்கு நியமித்த பெண்ணாகவேண்டும் என்றேன்.
\s5
\v 45 நான் இதை என் இருதயத்தில் சொல்லி முடிப்பதற்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, கிணற்றில் இறங்கிப்போய்த் தண்ணீர் எடுத்தாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்றேன்.
\v 46 அவள் சீக்கிரமாகத் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் கொடுப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் கொடுத்தாள்.
\s5
\v 47 அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற மகனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் கம்மல்களையும், அவளுடைய கைகளிலே வளையல்களையும் போட்டு;
\v 48 தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானனின் சகோதரனுடைய மகளை அவருடைய மகனுக்கு மனைவியாக்கிக்கொள்ள என்னை சரியானவழியில் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.
\s5
\v 49 இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாக நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப்போவேன் என்றான்.
\s5
\v 50 அப்பொழுது லாபானும் பெத்துவேலும் மறுமொழியாக: இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நன்மையோ தீமையோ ஒன்றும் சொல்லக்கூடாது.
\v 51 இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய மகனுக்கு மனைவியாக்கிக்கொள்ள, அவளை அழைத்துக்கொண்டுசெல்லும் என்றார்கள்.
\s5
\v 52 ஆபிரகாமின் வேலைக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரைவரைக்கும் குனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டான்.
\v 53 பின்பு அந்த வேலைக்காரன் வெள்ளிப் பொருட்களையும், தங்கத்தினால் செய்யப்பட்ட பொருட்களையும், ஆடைகளையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமல்லாமல், அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில விலையுயர்ந்த பொருட்களையும் கொடுத்தான்.
\s5
\v 54 பின்பு அவனும் அவனோடிருந்த மனிதர்களும் சாப்பிட்டுக் குடித்து, இரவில் தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: என் எஜமானிடத்திற்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்றான்.
\v 55 அப்பொழுது அவளுடைய சகோதரனும், தாயும், பத்து நாட்களாவது பெண் எங்களோடு இருக்கட்டும், அதற்குப்பின்பு போகலாம் என்றார்கள்.
\s5
\v 56 அதற்கு அவன்: கர்த்தர் என் பயணத்தை வாய்க்கச்செய்திருக்க, நீங்கள் என்னைத் தடுக்காதிருங்கள்; நான் என் எஜமானிடத்திற்குப்போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.
\v 57 அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவளது விருப்பத்தைக் கேட்போம் என்று சொல்லி,
\v 58 ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடுகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்.
\s5
\v 59 அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவளுடைய வேலைக்காரிகளையும், ஆபிரகாமின் வேலைக்காரனையும், அவனுடைய மனிதர்களையும் வழியனுப்பி,
\v 60 ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாகப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.
\s5
\v 61 அப்பொழுது ரெபெக்காளும் அவளுடைய வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள்மேல் ஏறி, அந்த மனிதனோடுகூடப் போனார்கள். வேலைக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான்.
\v 62 ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ எனப்பட்ட கிணற்றின் வழியாகப் புறப்பட்டு வந்தான்.
\s5
\v 63 ஈசாக்கு சாயங்காலநேரத்தில் தியானம்செய்ய வயல்வெளிக்குப் போயிருந்தபோது தூரத்தில் ஒட்டகங்கள் வருவதைக்கண்டான்.
\v 64 ரெபெக்காளும் தூரத்தில் ஈசாக்கைக் கண்டபோது,
\v 65 வேலைக்காரனை நோக்கி: அங்கே வயல்வெளியிலே நம்மைநோக்கி நடந்துவருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று வேலைக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்திலிருந்து இறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.
\s5
\v 66 வேலைக்காரன் தான் செய்த அனைத்து காரியங்களையும் ஈசாக்குக்கு விபரமாகச் சொன்னான்.
\v 67 அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.
\s5
\c 25
\cl அத்தியாயம்– 25
\s1 ஆபிரகாமின் மரணம்
\p
\v 1 ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பெயர்கொண்ட ஒரு பெண்ணையும் திருமணம் செய்திருந்தான்.
\v 2 அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்க்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றெடுத்தாள்.
\v 3 யக்க்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றெடுத்தான்; தேதானுடைய மகன்கள் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்.
\v 4 மீதியானுடைய மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் பிள்ளைகள்.
\s5
\v 5 ஆபிரகாம் தனக்கு உண்டான அனைத்தையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.
\v 6 ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் மகனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்திற்கு அனுப்பிவிட்டான்.
\s5
\v 7 ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருடங்கள்.
\v 8 அதற்குப் பின்பு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் இறந்து, தன் இனத்தாருடன் சேர்க்கப்பட்டான்.
\s5
\v 9 அவனுடைய மகன்களாகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் மகனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா எனப்பட்ட குகையிலே அவனை அடக்கம்செய்தார்கள்.
\v 10 அந்த நிலத்தை ஏத்தின் மகன்களின் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவனுடைய மனைவியாகிய சாராளும் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
\v 11 ஆபிரகாம் இறந்தபின்பு தேவன் அவனுடைய மகனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் கிணற்றுக்குச் சமீபமாக ஈசாக்கு குடியிருந்தான்.
\s1 இஸ்மவேலின் மகன்கள்
\p
\s5
\v 12 சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு:
\s5
\v 13 பற்பல சந்ததிகளாகப் பிரிந்த இஸ்மவேலின் மகன்களுடைய பெயர்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
\v 14 மிஷ்மா, தூமா, மாசா,
\v 15 ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.
\v 16 தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் மக்களுக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் மகன்கள் இவர்களே, இவர்களுடைய பெயர்களும் இவைகளே.
\s5
\v 17 இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் இறந்து, தன் இனத்தாரோடு சேர்க்கப்பட்டான்.
\v 18 அவர்கள் ஆவிலா துவங்கி எகிப்திற்கு நேராக அசீரியாவுக்கு போகிற வழியிலிருக்கும் சூர் வரைக்கும் குடியிருந்தார்கள். இது அவனுடைய சகோதரர்கள் எல்லோருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.
\s1 யாக்கோபும் ஏசாவும்
\p
\s5
\v 19 ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்தான்.
\v 20 ஈசாக்கு ரெபெக்காளை திருமணம் செய்கிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்கு மகளும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள்.
\s5
\v 21 மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவனுடைய வேண்டுதலைக் கேட்டருளினார்; அவனுடைய மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.
\v 22 அவளது கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியிருந்தால் எனக்கு எப்படியாகுமோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கப் போனாள்.
\s5
\v 23 அதற்குக் கர்த்தர்: இரண்டு இனத்தார்கள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித இனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு இனத்தார் மற்ற இனத்தாரைவிட பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான் என்றார்.
\s5
\v 24 பிரசவகாலம் பூரணமானபோது, அவளது கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருந்தன.
\v 25 மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாகவும் உடல்முழுவதும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் பிறந்தான்; அவனுக்கு ஏசா என்று பெயரிட்டார்கள்.
\v 26 பின்பு, அவனுடைய சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு பிறந்தான்; அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.
\s5
\v 27 இந்தக் குழந்தைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும், காட்டில் வாழ்கிறவனாகவும் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாக இருந்தான்.
\v 28 ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பற்றுதலாக இருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் அன்பாயிருந்தாள்.
\s5
\v 29 ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.
\v 30 அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, களைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பெயர் உண்டானது.
\s5
\v 31 அப்பொழுது யாக்கோபு: உன் பிறப்புரிமையை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.
\v 32 அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தப் பிறப்புரிமை எனக்கு எதற்கு என்றான்.
\v 33 அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் பிறப்புரிமையை அவனுக்கு விற்றுப்போட்டான்.
\v 34 அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் சாப்பிட்டுக் குடித்து எழுந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் பிறப்புரிமையை அலட்சியம் செய்தான்.
\s5
\c 26
\cl அத்தியாயம்– 26
\s1 ஈசாக்கும் அபிமெலேக்கும்
\p
\v 1 ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், மேலும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டானது; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கிடம் கேராருக்குப் போனான்.
\s5
\v 2 கர்த்தர் அவனுக்குக் காட்சியளித்து: நீ எகிப்திற்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்தில் குடியிரு.
\v 3 இந்தத் தேசத்தில் குடியிரு; நான் உன்னோடுகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் அனைத்தையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
\s5
\v 4 ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டதால்,
\v 5 நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்து, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் அனைத்தையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
\s5
\v 6 ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.
\v 7 அந்த இடத்து மனிதர்கள் அவனுடைய மனைவியைக் குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்ப்பதற்கு அழகுள்ளவளானதால், அந்த இடத்து மனிதர்கள் அவள்நிமித்தம் தன்னைக் கொன்றுபோடுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லுவதற்குப் பயந்தான்.
\v 8 அவன் அங்கே அநேகநாட்கள் குடியிருக்கும்போது, பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடு விளையாடிக்கொண்டிருக்கிறதைப் பார்த்தான்.
\s5
\v 9 அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்பு ஏன் அவளை உனது சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடி இப்படிச் சொன்னேன் என்றான்.
\v 10 அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? மக்களில் யாராவது உன் மனைவியோடு உறவுகொள்ளவும், எங்கள்மேல் பழி சுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.
\v 11 பின்பு, அபிமெலேக்கு: இந்த மனிதனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா மக்களுக்கும் அறிவித்தான்.
\s5
\v 12 ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததால் அந்த வருடத்தில் நூறுமடங்கு பலனை அடைந்தான்;
\v 13 அவன் செல்வந்தனாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.
\v 14 அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக வேலைக்காரரும் இருந்ததால் பெலிஸ்தர் அவன்மேல் பொறாமைகொண்டு,
\s5
\v 15 அவனுடைய தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர்கள் வெட்டின கிணறுகளையெல்லாம் மண்ணினால் மூடிப்போட்டார்கள்.
\v 16 அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைவிட மிகவும் பலத்தவனானாய் என்றான்.
\v 17 அப்பொழுது ஈசாக்கு அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து,
\s5
\v 18 தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டப்பட்டவைகளும், ஆபிரகாம் இறந்தபின் பெலிஸ்தர் மூடிப்போட்டவைகளுமான கிணறுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு வைத்திருந்த பெயர்களின்படியே அவைகளுக்குப் பெயரிட்டான்.
\s5
\v 19 ஈசாக்குடைய வேலைக்காரர்கள் பள்ளத்தாக்கிலே கிணறுவெட்டி, தண்ணீரைக் கண்டார்கள்.
\v 20 கேராரூர் மேய்ப்பர்கள் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பர்களுடனே வாக்குவாதம் செய்தார்கள்; அவர்கள் தன்னோடு வாக்குவாதம் செய்ததால், அந்தக் கிணற்றுக்கு ஏசேக்கு என்று பெயரிட்டான்.
\s5
\v 21 வேறொரு கிணற்றை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம் செய்தார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பெயரிட்டான்.
\v 22 பின்பு அந்த இடத்தைவிட்டுப் போய், வேறொரு கிணற்றை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் செய்யவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பெருகுவதற்காக, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடமுண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பெயரிட்டான்.
\s5
\v 23 அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான்.
\v 24 அன்று இரவிலே கர்த்தர் அவனுக்குக் காட்சியளித்து: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடுகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமின் பொருட்டு உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகச் செய்வேன் என்றார்.
\v 25 அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அந்த இடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர்கள் ஒரு கிணற்றை வெட்டினார்கள்.
\s5
\v 26 அபிமெலேக்கும் அவனுடைய நண்பனாகிய அகுசாத்தும், படைத்தலைவனாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள்.
\v 27 அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இருக்கவிடாமல் துரத்திவிட்டீர்களே என்றான்.
\s5
\v 28 அதற்கு அவர்கள்: நிச்சயமாக கர்த்தர் உம்மோடுகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஒப்பந்தம் உண்டாகவேண்டும் என்று நாங்கள் தீர்மானம் செய்தோம்.
\v 29 நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடு அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாமலிருக்க உம்மோடு ஒப்பந்தம் செய்துக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.
\s5
\v 30 அவன் அவர்களுக்கு விருந்துசெய்தான், அவர்கள் சாப்பிட்டுக் குடித்தார்கள்.
\v 31 அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடு போய்விட்டார்கள்.
\s5
\v 32 அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர்கள் வந்து, தாங்கள் கிணறு வெட்டின செய்தியை அவனுக்குத் தெரிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள்.
\v 33 அதற்கு சேபா என்று பெயரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பெயர் இந்த நாள்வரைக்கும் பெயெர்செபா எனப்படுகிறது.
\s5
\v 34 ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியர்களான பெயேரியினுடைய மகளாகிய யூதீத்தையும், ஏலோனுடைய மகளாகிய பஸ்மாத்தையும் திருமணம்செய்தான்.
\v 35 அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனஉளைச்சலைக் கொடுத்தார்கள்.
\s5
\c 27
\cl அத்தியாயம்– 27
\s1 ஈசாக்கிடமிருந்து யாக்கோபு ஆசீர்வாதத்தைப் பெறுதல்
\p
\v 1 ஈசாக்கு முதிர்வயதானதால் அவனுடைய கண்கள் பார்வையிழந்தபோது, அவன் தன் மூத்த மகனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ இருக்கிறேன் என்றான்.
\v 2 அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், எப்போது இறப்பேனென்று எனக்குத் தெரியாது.
\s5
\v 3 ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்புகளுள்ள பையையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குப்போய், எனக்காக வேட்டையாடி,
\v 4 அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள உணவுகளாகச் சமைத்து, நான் சாப்பிடவும், நான் இறப்பதற்குமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான்.
\s5
\v 5 ஈசாக்கு தன் மகனாகிய ஏசாவோடு பேசும்போது, ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா வேட்டையாடிக்கொண்டுவர காட்டுக்குப் போனான்.
\v 6 அப்பொழுது ரெபெக்காள் தன் மகனாகிய யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து:
\v 7 நான் சாப்பிட்டு, எனக்கு மரணம் வருமுன்னே, கர்த்தர் முன்னிலையில் உன்னை ஆசீர்வதிக்க, நீ எனக்காக வேட்டையாடி, அதை எனக்கு ருசியுள்ள உணவுகளாகச் சமைத்துக்கொண்டுவா என்று சொல்வதைக்கேட்டேன்.
\s5
\v 8 ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குச் சொல்கிறபடி செய்.
\v 9 நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள உணவுகளாகச் சமைப்பேன்.
\v 10 உன் தகப்பன் தாம் இறப்பதற்குமுன்னே உன்னை ஆசீர்வதிப்பதற்கு, அவர் சாப்பிடுவதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள்.
\s5
\v 11 அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா ரோமம் அதிகமுள்ளவன், நான் ரோமமில்லாதவன்.
\v 12 ஒருவேளை என் தகப்பன் என்னைத் தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு ஏமாற்றுகிறவனாகக் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தையே வரவழைத்துக்கொள்வேன் என்றான்.
\s5
\v 13 அதற்கு அவனுடைய தாய்: என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லைமாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.
\v 14 அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவனுடைய தகப்பனுக்குப் பிரியமான ருசியுள்ள உணவுகளைச் சமைத்தாள்.
\s5
\v 15 பின்பு ரெபெக்காள், வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல ஆடைகளை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,
\v 16 வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவனுடைய கைகளிலேயும் ரோமமில்லாத அவனுடைய கழுத்திலேயும் போட்டு;
\v 17 தான் சமைத்த ருசியுள்ள உணவுகளையும் அப்பங்களையும் தன் மகனாகிய யாக்கோபின் கையில் கொடுத்தாள்.
\s5
\v 18 அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.
\v 19 அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்க, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிடும் என்றான்.
\s5
\v 20 அப்பொழுது ஈசாக்கு தன் மகனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாக எப்படி கிடைத்தது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்குக் கிடைக்கச்செய்தார் என்றான்.
\v 21 அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் மகனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்க அருகில் வா என்றான்.
\s5
\v 22 யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கினருகில் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி,
\v 23 அவனுடைய கைகள் அவனுடைய சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாக இருந்ததால், யாரென்று தெரியாமல், அவனை ஆசீர்வதித்து,
\s5
\v 24 நீ என் மகனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான்.
\v 25 அப்பொழுது அவன்: என் மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் சாப்பிட்டு, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிப்பதற்கு அதை என்னருகில் கொண்டுவா என்றான்; அவன் அதை அருகில் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் சாப்பிட்டான்; பிறகு, திராட்சரசத்தை அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.
\s5
\v 26 அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ அருகில் வந்து என்னை முத்தம்செய் என்றான்.
\v 27 அவன் அருகில் போய், அவனை முத்தம்செய்தான்; அப்பொழுது அவனுடைய ஆடைகளின் வாசனையை முகர்ந்து: இதோ, என் மகனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது.
\s5
\v 28 தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.
\s5
\v 29 மக்கள் உன்னைச் சேவித்து தேசங்கள் உன்னை வணங்குவார்களாக; உன் சகோதரர்களுக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் மகன்கள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாக இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.
\s5
\v 30 ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவனுடைய சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.
\v 31 அவனும் ருசியுள்ள உணவுகளைச் சமைத்து, தன் தகப்பனிடம் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்க, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய மகனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிடும் என்றான்.
\s5
\v 32 அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான்.
\v 33 அப்பொழுது ஈசாக்கு மிகவும் அதிர்ச்சியடைந்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருவதற்குமுன்னே அவைகளையெல்லாம் நான் சாப்பிட்டு அவனை ஆசீர்வதித்தேனே, அவனே ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான்.
\s5
\v 34 ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடனே, மிகவும் மனமுடைந்து அதிக சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.
\v 35 அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாக வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்.
\s5
\v 36 அப்பொழுது அவன்: அவனுடைய பெயர் யாக்கோபு என்பது சரியல்லவா? இதோடு இரண்டுமுறை என்னை ஏமாற்றினான்; என் பிறப்புரிமையை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி, நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாவது வைத்திருக்கவில்லையா என்றான்.
\v 37 ஈசாக்கு ஏசாவுக்குப் மறுமொழியாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும் அவனுக்கு வேலைக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்னசெய்வேன் என்றான்.
\s5
\v 38 ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான்.
\s5
\v 39 அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்கு மறுமொழியாக: உன் குடியிருப்பு பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.
\v 40 உன் ஆயுதத்தால் நீ பிழைத்து, உன் சகோதரனுக்குப் பணிவிடை செய்வாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் மேலிருக்கிற அவனுடைய ஆளுகையை உடைத்துப்போடுவாய் என்றான்.
\s1 யாக்கோபு லாபானிடத்திற்கு ஓடிப்போகுதல்
\p
\s5
\v 41 யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததால் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாக வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான்.
\v 42 மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான்.
\s5
\v 43 ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்திற்கு ஓடிப்போய்,
\v 44 உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணியும்வரை சிலநாட்கள் அவனிடத்தில் இரு.
\v 45 உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின்பு, நான் ஆள் அனுப்பி, அந்த இடத்திலிருந்து உன்னை வரவழைப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள்.
\p
\s5
\v 46 பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் பெண்களால் என் வாழ்க்கை எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் பெண்களில் யாக்கோபு ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால் என் உயிர் இருந்து என்ன பயன் என்றாள்.
\s5
\c 28
\cl அத்தியாயம்– 28
\p
\v 1 ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியர்களுடைய பெண்களைத் திருமணம் செய்யாமல்,
\v 2 எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டிற்குப் போய், அந்த இடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் மகள்களுக்குள் ஒருவளை மனைவியாக்கிக்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான்.
\s5
\v 3 சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல மக்கள்கூட்டமாக உன்னைப் பலுகவும் பெருகவும்செய்து;
\v 4 தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாகத் தங்குகிறதுமான தேசத்தை நீ சொந்தமாக்கிக்கொள்ள ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி;
\s5
\v 5 ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய மகனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்திற்குப் போகப் புறப்பட்டான்.
\s5
\v 6 ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கும்போது: நீ கானானியர்களுடைய பெண்களைத் திருமணம் செய்யவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,
\v 7 யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதாலும்,
\s5
\v 8 கானானியர்களுடைய பெண்கள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததாலும்,
\v 9 ஏசா இஸ்மவேலிடத்திற்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய மகனாகிய இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் திருமணம் செய்தான்.
\s1 பெத்தேலில் யாக்கோபின் கனவு
\p
\s5
\v 10 யாக்கோபு பெயெர்செபாவை விட்டு ஆரானுக்குப் போகப் பயணம்செய்து,
\v 11 ஒரு இடத்திலே வந்து, சூரியன் மறைந்ததினால், அங்கே இரவில் தங்கி, அங்கேயிருந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தன் தலையின்கீழ் வைத்து, அங்கே படுத்துத் தூங்கினான்.
\s5
\v 12 அங்கே அவன் ஒரு கனவுகண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர்கள் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாக இருந்தார்கள்.
\v 13 அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
\s5
\v 14 உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரவுவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
\v 15 நான் உன்னோடு இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்திற்கு உன்னைத்திரும்பி வரச்செய்வேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யும்வரை உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
\s5
\v 16 யாக்கோபு தூக்கம் கலைந்து விழித்தபோது: உண்மையாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாமலிருந்தேன் என்றான்.
\v 17 அவன் பயந்து, இந்த இடம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.
\p
\s5
\v 18 அதிகாலையில் யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் ஊற்றி,
\v 19 அந்த இடத்திற்குப் பெத்தேல் என்று பெயரிட்டான்; அதற்கு முன்னே அந்த ஊருக்கு லூஸ் என்னும் பெயர் இருந்தது.
\s5
\v 20 அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடிருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண உணவும், உடுக்க உடையும் எனக்குத் தந்து,
\v 21 என்னை என் தகப்பன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவரச் செய்வாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;
\v 22 நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனை செய்துகொண்டான்.
\s5
\c 29
\cl அத்தியாயம்– 29
\s1 யாக்கோபு பதான் ஆராமிற்கு வந்துசேருதல்
\p
\v 1 யாக்கோபு பயணம்செய்து, கிழக்கு தேசத்தாரிடத்தில் போய்ச் சேர்ந்தான்.
\v 2 அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே சேர்க்கப்பட்டிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணறு ஒரு பெரிய கல்லினால் மூடப்பட்டிருந்தது.
\v 3 அந்த இடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றை மூடியிருக்கும் கல்லை மேய்ப்பர்கள் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்பிருந்தபடி கிணற்றை மூடிவைப்பார்கள்.
\s5
\v 4 யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரர்களே, நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரைச் சேர்ந்தவர்கள் என்றார்கள்.
\v 5 அப்பொழுது அவன்: நாகோரின் மகனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள்.
\v 6 அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவனுடைய மகளாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.
\s5
\v 7 அப்பொழுது அவன்: இன்னும் அதிக நேரமிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற நேரமல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான்.
\v 8 அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றை மூடியிருக்கிற கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.
\s5
\v 9 அவர்களோடு அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
\v 10 யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய மகளாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றை மூடியிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
\s5
\v 11 பின்பு யாக்கோபு ராகேலை முத்தம்செய்து, சத்தமிட்டு அழுது,
\v 12 தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் மகனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள்.
\s5
\v 13 லாபான் தன் சகோதரியின் மகனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தம்செய்து, தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாக லாபானுக்குச் சொன்னான்.
\s1 யாக்கோபு லேயாளையும் ராகேலையும் திருமணம் செய்தல்
\p
\v 14 அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.
\s5
\v 15 பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.
\v 16 லாபானுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள்; மூத்தவள் பெயர் லேயாள், இளையவள் பெயர் ராகேல்.
\v 17 லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்ப்பதற்கு அழகுள்ளவளாக இருந்தாள்.
\v 18 யாக்கோபு ராகேல் மீது பிரியப்பட்டு: உம்முடைய இளைய மகளாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருடங்கள் வேலை செய்கிறேன் என்றான்.
\s5
\v 19 அதற்கு லாபான்: நான் அவளை வேறொருவனுக்குக் கொடுக்கிறதைவிட, அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தங்கியிரு என்றான்.
\v 20 அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருடங்கள் வேலை செய்தான்; அவள் மேலிருந்த பிரியத்தினாலே அந்த வருடங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது.
\s5
\v 21 பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறிவிட்டதால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.
\v 22 அப்பொழுது லாபான் அந்த இடத்து மனிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து விருந்துசெய்தான்.
\s5
\v 23 அன்று இரவிலே அவன் தன் மகளாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான்.
\v 24 லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் மகளாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
\v 25 காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்பு ஏன் என்னை ஏமாற்றினீர் என்றான்.
\s5
\v 26 அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இந்த இடத்தின் வழக்கம் இல்லை.
\v 27 இவளுடைய ஏழு நாட்களை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருடங்கள் என்னிடத்திலே வேலைசெய் என்றான்.
\s5
\v 28 அந்தபடியே யாக்கோபு, இவளுடைய ஏழு நாட்களை நிறைவேற்றினான். அப்பொழுது தன் மகளாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
\v 29 மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் மகளாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
\v 30 யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைவிட ராகேலை அவன் அதிகமாக நேசித்து, பின்னும் ஏழு வருடங்கள் அவனிடத்தில் வேலை செய்தான்.
\s1 யாக்கோபின் பிள்ளைகள்
\p
\s5
\v 31 லேயாள் அற்பமாக எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.
\v 32 லேயாள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் கணவன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள்.
\s5
\v 33 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: நான் அற்பமாக எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு சிமியோன் என்று பெயரிட்டாள்.
\v 34 பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: என் கணவனுக்கு மூன்று மகன்களைப் பெற்றதால் அவர் இப்பொழுது என்னோடு சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள்.
\s5
\v 35 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள்; பின்பு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோனது.
\s5
\c 30
\cl அத்தியாயம்– 30
\p
\v 1 ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைப்பட்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.
\v 2 அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபமடைந்து: தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? என்றான்.
\s5
\v 3 அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; நான் வளர்க்க அவள் பிள்ளைகளைப் பெறவும், அவள் மூலமாவது என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி,
\v 4 அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான்.
\s5
\v 5 பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
\v 6 அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு மகனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பெயரிட்டாள்.
\s5
\v 7 மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
\v 8 அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாக என் சகோதரியோடு போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பெயரிட்டாள்.
\s5
\v 9 லேயாள் தனது பிள்ளைபேறு நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
\v 10 லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
\v 11 அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பெயரிட்டாள்.
\s5
\v 12 பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
\v 13 அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, பெண்கள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள்.
\s5
\v 14 கோதுமை அறுப்பு நாட்களில் ரூபன் வயல்வெளிக்குப் போய், தூதாயீம் பழங்களைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் மகனுடைய தூதாயீம் பழத்தில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.
\v 15 அதற்கு அவள்: நீ என் கணவனை எடுத்துக்கொண்டது சாதாரணகாரியமா? என் மகனுடைய தூதாயீம் பழங்களையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் மகனுடைய தூதாயீம் பழங்களுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடு உறவுகொள்ளட்டும் என்றாள்.
\s5
\v 16 மாலையில் யாக்கோபு வெளியிலிருந்து வரும்போது லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் மகனுடைய தூதாயீம் பழங்களால் உம்மை வாங்கினேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடு உறவுகொண்டான்.
\v 17 தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
\v 18 அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் கணவனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.
\s5
\v 19 மேலும் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
\v 20 அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல வெகுமதியைத் தந்தார்; என் கணவனுக்கு நான் ஆறு மகன்களைப் பெற்றதால், இப்பொழுது அவர் என்னுடனே தங்கியிருப்பார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பெயரிட்டாள்.
\v 21 பின்பு அவள் ஒரு மகளையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பெயரிட்டாள்.
\s5
\v 22 தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பமடையச் செய்தார்.
\v 23 அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,
\v 24 இன்னும் ஒரு மகனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பெயரிட்டாள்.
\s1 யாக்கோபின் மந்தை பெருகுதல்
\p
\s5
\v 25 ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் வீட்டிற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும்.
\v 26 நான் உமக்கு வேலைசெய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் வேலை செய்த விதத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான்.
\s5
\v 27 அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன்னால் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று அனுபவத்தில் அறிந்தேன்.
\v 28 உன் சம்பளம் எவ்வளவென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான்.
\s5
\v 29 அதற்கு அவன்: நான் உமக்கு வேலை செய்தவிதத்தையும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதத்தையும் அறிந்திருக்கிறீர்.
\v 30 நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாதிப்பது எப்பொழுது என்றான்.
\s5
\v 31 அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்ப்பேன்.
\v 32 நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்.
\s5
\v 33 அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என்னிடத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடப்பட்டவைகளாக எண்ணப்படட்டும் என்றான்.
\v 34 அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி,
\s5
\v 35 அந்த நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் அனைத்தையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் அனைத்தையும் பிரித்து, தன் மகன்களிடத்தில் ஒப்புவித்து,
\v 36 தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாட்கள் பயணதூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.
\s5
\v 37 பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கிளைகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்து,
\v 38 தான் உரித்த கிளைகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு முன்பாகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது சினையாவதுண்டு.
\s5
\v 39 ஆடுகள் அந்தக் கிளைகளுக்கு முன்பாகச் சினைப்பட்டதால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.
\v 40 அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்பு நிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் முன்பாக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையுடன் சேர்க்காமல், தனியாக வைத்துக்கொள்வான்.
\s5
\v 41 பலத்த ஆடுகள் சினையாகும்போது, அந்தக் கிளைகளுக்கு முன்பாக சினையாகும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.
\v 42 பலவீனமான ஆடுகள் சினைப்படும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.
\s5
\v 43 இந்த விதமாக அந்த மனிதன் மிகவும் விருத்தியடைந்து, ஏராளமான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.
\s5
\c 31
\cl அத்தியாயம்– 31
\s1 யாக்கோபு லாபானை விட்டு ஓடிப்போகுதல்
\p
\v 1 பின்பு, லாபானுடைய மகன்கள்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் அனைத்தையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருட்களினாலே இந்த செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்.
\v 2 லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தையநாள் இருந்ததுபோல இல்லாமல் வேறுபட்டிருந்ததைக் கண்டான்.
\v 3 கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப் போ; நான் உன்னோடுகூட இருப்பேன் என்றார்.
\s5
\v 4 அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையினிடத்திற்கு வரவழைத்து,
\v 5 அவர்களை நோக்கி உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தையநாள் இருந்ததுபோல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடுகூட இருக்கிறார்.
\v 6 என்னால் முடிந்தவரை நான் உங்களுடைய தகப்பனுக்கு வேலை செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
\s5
\v 7 உங்கள் தகப்பனோ, என்னை ஏமாற்றி, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடம்கொடுக்கவில்லை.
\v 8 புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளைப் போட்டது.
\v 9 இந்த விதமாகத் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார்.
\s5
\v 10 ஆடுகள் சினையாகும்போது, நான் கண்ட கனவில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடு இணையும் கடாக்கள் கலப்புநிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாயிருக்கக் கண்டேன்.
\v 11 அன்றியும் தேவதூதன் ஒருவர் கனவில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.
\s5
\v 12 அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடு இணையும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாக இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற அனைத்தையும் கண்டேன்.
\v 13 நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைச் செய்த பெத்தேலிலே உனக்குக் காட்சியளித்த தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்த தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தார் இருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.
\s5
\v 14 அதற்கு ராகேலும் லேயாளும்: எங்கள் தகப்பனுடைய வீட்டிலே இனி எங்களுக்குப் பங்கும் சொத்தும் உண்டோ?
\v 15 அவரால் நாங்கள் அந்நியராக கருதப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்களுடைய பணத்தையும் அபகரித்துக்கொண்டார்.
\v 16 ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள்.
\s5
\v 17 அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன்னுடைய பிள்ளைகளையும், மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றி,
\v 18 பதான் அராமிலே தான் சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள் அனைத்தையும் தன் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான் தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கிடம் போகப் புறப்பட்டான்.
\s5
\v 19 லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்த சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய வீட்டிலிருந்த சிலைகளைத் திருடிக்கொண்டாள்.
\v 20 யாக்கோபு தான் ஓடிப்போகிறதை சீரியனாகிய லாபானுக்குத் தெரிவிக்காமல், திருட்டுத்தனமாகப் போய்விட்டான்.
\v 21 இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான்.
\s1 லாபான் யாக்கோபைப் பின்தொடருதல்
\p
\s5
\v 22 யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு தெரிவிக்கப்பட்டது.
\v 23 அப்பொழுது அவன், தன் சகோதரர்களைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாட்கள் அவனைத் தொடர்ந்துபோய் பிரயாணம் செய்து, கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்.
\s5
\v 24 அன்று இரவு தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குக் கனவில் தோன்றி: நீ யாக்கோபோடு நன்மையைத் தவிர தீமை ஒன்றும் பேசாதபடி எச்சரிக்கையாக இரு என்றார்.
\v 25 லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான்; யாக்கோபு தன் கூடாரத்தை மலையிலே போட்டிருந்தான்; லாபானும் தன் சகோதரர்களோடுகூடக் கீலேயாத் மலையிலே கூடாரம் போட்டான்.
\s5
\v 26 அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டுத்தனமாகப் புறப்பட்டு, என் மகள்களை யுத்தத்தில் பிடித்த கைதிகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செயல்?
\v 27 நீ ஓடிப்போவதை எனக்குத் தெரிவிக்காமல், திருட்டுத்தனமாக என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னை சந்தோஷமாக சங்கீதம், மேளதாளம், கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே.
\v 28 என் பிள்ளைகளையும் என் மகள்களையும் நான் முத்தம் செய்யவிடாமல் போனதென்ன? இந்தச் செயலை நீ அறிவில்லாமல் செய்தாய்.
\s5
\v 29 உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடு நன்மையைத் தவிர தீமை ஒன்றும் பேசாதபடி எச்சரிக்கையாக இரு என்று நேற்று இரவில் என்னோடு சொன்னார்.
\v 30 இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள ஏக்கத்தால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய் என்று கேட்டான்.
\s5
\v 31 யாக்கோபு லாபானுக்கு மறுமொழியாக: உம்முடைய மகள்களைப் பலாத்காரமாகப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் பயப்பட்டதாலே இப்படி வந்துவிட்டேன்.
\v 32 ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடு விடவேண்டாம்; உம்முடைய பொருட்கள் ஏதாவது என்னிடத்தில் இருக்குமானால் நீர் அதை நம்முடைய சகோதரர்களுக்கு முன்பாகத் தேடிப்பார்த்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்தது யாக்கோபுக்குத் தெரியாது.
\s5
\v 33 அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் தேடிப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்திற்குப் போனான்.
\s5
\v 34 ராகேல் அந்தச் சிலைகளை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான், கூடாரம் முழுவதிலும் தேடிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை.
\v 35 அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திருக்காததைக்குறித்துக் கோபப்பட வேண்டாம்; பெண்களுக்குரிய வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள்; அப்படியே அவன் அந்தச் சிலைகளைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
\s5
\v 36 அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடு வாக்குவாதம்செய்து: நீர் என்னை இவ்வளவு தீவிரமாகத் தொடர்ந்துவர நான் செய்த தவறு என்ன? நான் செய்த துரோகம் என்ன?
\v 37 என் தட்டுமுட்டுகளையெல்லாம் தேடிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரர்களுக்கும் உம்முடைய சகோதரர்களுக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நியாயம் தீர்க்கட்டும்.
\s5
\v 38 இந்த இருபது வருடகாலமாக நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினை அழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் சாப்பிடவில்லை.
\v 39 காயப்பட்டதை நான் உம்மிடம் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்செய்தேன்; பகலில் திருடப்பட்டதையும், இரவில் திருடப்பட்டதையும் என் கையில் கேட்டு வாங்கினீர்.
\v 40 பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைத் தாக்கியது; தூக்கம் என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இந்த விதமாகப் பாடுபட்டேன்.
\s5
\v 41 இந்த இருபது வருடகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினான்கு வருடங்கள் உம்முடைய இரண்டு மகள்களுக்காகவும், ஆறு வருடங்கள் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.
\v 42 என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடு இல்லாவிட்டால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாக அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கடின உழைப்பையும் பார்த்து, நேற்று இரவு உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.
\s5
\v 43 அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் மறுமொழியாக: இந்த மகள்கள் என் மகள்கள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற அனைத்தும் என்னுடையவைகள்; என் மகள்களாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யமுடியும்?
\v 44 இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருப்பதற்காக, நீயும் நானும் உடன்படிக்கை செய்துகொள்ளலாம் என்றான்.
\s5
\v 45 அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான்.
\v 46 பின்னும் யாக்கோபு தன் சகோதரர்களைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் உணவருந்தினார்கள்.
\v 47 லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பெயரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பெயரிட்டான்.
\s5
\v 48 இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னதால், அதின் பெயர் கலயெத் எனப்பட்டது.
\v 49 அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரிந்தபின், நீ என் மகள்களைத் துன்பப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறு பெண்களைத் திருமணம்செய்தால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுவில் நின்று கண்காணிக்கக்கடவர்;
\v 50 நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னதால், அது மிஸ்பா என்னும் பெயர்பெற்றது.
\s5
\v 51 மேலும் லாபான் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவில் நான் நிறுத்தின தூணையும் பார்.
\v 52 தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்திற்கு வராமலிருக்கவும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்திற்கு வராமலிருக்கவும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.
\v 53 ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்கு நடுவில் நின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான்.
\s5
\v 54 பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, ஆகாரம் சாப்பிடத் தன் சகோதரர்களை அழைத்தான்; அப்படியே அவர்கள் சாப்பிட்டு மலையிலே இரவில் தங்கினார்கள்.
\v 55 லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் மகன்களையும் தன் மகள்களையும் முத்தம் செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பிப்போனான்.
\s5
\c 32
\cl அத்தியாயம்– 32
\s1 யாக்கோபு ஏசாவைச் சந்திக்க ஆயத்தமாகுதல்
\p
\v 1 யாக்கோபு பயணம் செய்யும்போது, தேவதூதர்கள் அவனை சந்தித்தார்கள்.
\v 2 யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய படை என்று சொல்லி, அந்த இடத்திற்கு மக்னாயீம் என்று பெயரிட்டான்.
\p
\s5
\v 3 பின்பு, யாக்கோபு ஏதோமின் எல்லையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடம் போவதற்காக ஆட்களை வரவழைத்து:
\v 4 நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடம் போய், நான் இதுவரை லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும்,
\v 5 எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான் என்று சொல்லுவதற்குக் கட்டளைகொடுத்துத் தனக்கு முன்பாக அவர்களை அனுப்பினான்.
\s5
\v 6 அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்திற்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடு உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.
\v 7 அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து, கலக்கமடைந்து, தன்னிடத்திலிருந்த மக்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் இரண்டு பகுதியாகப்பிரித்து:
\v 8 ஏசா ஒரு பகுதியைத் தாக்கி அதை அழித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள முடியும் என்றான்.
\s5
\v 9 பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாக இருக்கிறவரே: உன் தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடன் சொல்லியிருக்கிற கர்த்தாவே,
\v 10 அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா உண்மைக்கும் நான் எவ்வளவேனும் தகுதியுள்ளவன் அல்ல, நான் கோலும் கையுமாக இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.
\s5
\v 11 என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் தாக்குவான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்.
\v 12 தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகச் செய்வேன் என்று சொன்னீரே என்றான்.
\s5
\v 13 அன்று இரவு அவன் அங்கே தங்கி, தன்னிடம் உள்ளவைகளில் தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமதியாக,
\v 14 இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும்,
\v 15 பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது பசுக்களையும், பத்துக் காளைகளையும், இருபது பெண் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து,
\v 16 வேலைக்காரர்களிடம் ஒவ்வொரு மந்தையைத் தனித்தனியாக ஒப்படைத்து, நீங்கள் ஒவ்வொரு மந்தைக்கும் முன்னும் பின்னுமாக இடம்விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுசெல்லுங்கள் என்று தன் வேலைக்காரர்களுக்குச் சொல்லி,
\s5
\v 17 முதலில் போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,
\v 18 நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்களுக்குப் பின்னே வருகிறான் என்று சொல் என்றான்.
\s5
\v 19 இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தவிதமாகவே அவனிடம் சொல்லி,
\v 20 இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்களுக்குப் பின்னே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திவிட்டு, பின்பு அவனுடைய முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்மீது தயவாயிருப்பான் என்றான்.
\s1 யாக்கோபு தேவனோடு போராடுதல்
\p
\v 21 அந்தப்படியே வெகுமதிகள் அவனுக்குமுன் போனது; அவனோ அன்று இரவில் முகாமிலே தங்கி,
\s5
\v 22 இரவில் எழுந்திருந்து, தன்னுடைய இரண்டு மனைவிகளையும், இரண்டு மறுமனையாட்டிகளையும், பதினொரு மகன்களையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்ற ஆற்றை அதன் ஆழமில்லாத பகுதியில் கடந்தான்.
\v 23 அவர்களையும், தனக்கு உண்டான அனைத்தையும் ஆற்றைக்கடக்க செய்து, அக்கரைப்படுத்தினான்.
\s5
\v 24 யாக்கோபு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டான்; அப்பொழுது ஒரு மனிதன் பொழுது விடியும்வரை அவனுடன் போராடி,
\v 25 அவனை மேற்கொள்ள முடியாததைக்கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதனால் அவருடன் போராடும்போது யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.
\v 26 அவர்: என்னைப் போகவிடு, பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடமாட்டேன் என்றான்.
\s5
\v 27 அவர்: உன் பெயர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.
\v 28 அப்பொழுது அவர்: உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல் எனப்படும்; தேவனோடும் மனிதர்களோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.
\s5
\v 29 அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு தெரிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பதென்ன என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.
\v 30 அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாகக் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த இடத்திற்குப் பெனியேல் என்று பெயரிட்டான்.
\s5
\v 31 அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமானது; அவனுடைய தொடை சுளுக்கியதாலே நொண்டி நொண்டி நடந்தான்.
\v 32 அவர் யாக்கோபுடைய தொடைச்சந்து நரம்பைத் தொட்டதால், இஸ்ரவேல் வம்சத்தார் இந்த நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைச் சாப்பிடுகிறதில்லை.
\s5
\c 33
\cl அத்தியாயம்– 33
\s1 யாக்கோபு ஏசாவைச் சந்தித்தல்
\p
\v 1 யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடுகூட நானூறு மனிதர்களும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு மறுமனையாட்டிகளிடத்திலும் தனிக்குழுக்களாகப் பிரித்துவைத்து,
\v 2 மறுமனையாட்டிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவளுடைய பிள்ளைகளையும் மத்தியிலும், ராகேலையும் யோசேப்பையும் கடைசியிலும் நிறுத்தி:
\v 3 தான் அவர்களுக்கு முன்பாக நடந்து போய், ஏழுமுறை தரைவரைக்கும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் அருகில் போனான்.
\s5
\v 4 அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம்செய்தான்; இருவரும் அழுதார்கள்.
\v 5 அவன் தன் கண்களை ஏறெடுத்து, பெண்களையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான்.
\s5
\v 6 அப்பொழுது மறுமனையாட்டிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.
\v 7 லேயாளும் அவளுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.
\v 8 அப்பொழுது ஏசா: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் எதற்கு என்றான். அதற்கு யாக்கோபு: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவு கிடைப்பதற்காக என்றான்.
\s5
\v 9 அதற்கு ஏசா: என் சகோதரனே, எனக்குப் போதுமானது இருக்கிறது; உன்னுடையதை நீயே வைத்துக்கொள் என்றான்.
\v 10 அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.
\v 11 தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.
\s5
\v 12 பின்பு ஏசா: நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன்னே நடப்பேன் என்றான்.
\v 13 அதற்கு யாக்கோபு: பிள்ளைகள் இளவயதுள்ளவர்கள் என்றும், பால்கொடுக்கும் ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது வேகமாக ஓட்டினால், மந்தையெல்லாம் இறந்துபோகும்.
\v 14 என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்திற்கு வரும்வரைக்கும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் நடைக்கும் பிள்ளைகளின் நடைக்கும் ஏற்றபடி, மெதுவாக அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் என்றான்.
\s5
\v 15 அப்பொழுது ஏசா: என்னிடத்திலிருக்கிற மனிதர்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது எதற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான்.
\v 16 அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப்போனான்.
\v 17 யாக்கோபு சுக்கோத்திற்குப் பயணம்செய்து, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கூடாரங்களைப் போட்டான்; அதனால் அந்த இடத்திற்கு சுக்கோத் என்று பெயரிட்டான்.
\s5
\v 18 யாக்கோபு பதான்அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று கூடாரம்போட்டான்.
\v 19 தான் கூடாரம்போட்ட நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மகன்களிடம் நூறு வெள்ளிக்காசுக்கு வாங்கி,
\v 20 அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பெயரிட்டான்.
\s5
\c 34
\cl அத்தியாயம்– 34
\s1 தீனாளும் சீகேமும்
\p
\v 1 லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற மகளாகிய தீனாள், தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.
\v 2 அவளை ஏவியனான ஏமோரின் மகனும் அந்த தேசத்தின் இளவரசனுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடு உறவுகொண்டு, அவளைத் தீட்டுப்படுத்தினான்.
\v 3 அவனுடைய மனம், யாக்கோபின் மகளாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அவளுடைய மனதுக்கு இன்பமாகப் பேசினான்.
\s5
\v 4 சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று சொன்னான்.
\v 5 தன் மகளாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவனுடைய மகன்கள் அவனுடைய மந்தையினிடத்தில் வயல்வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வரும்வரைக்கும் யாக்கோபு பேசாமலிருந்தான்.
\s5
\v 6 அந்த நேரத்தில் சீகேமின் தகப்பனாகிய ஏமோர் புறப்பட்டு, யாக்கோபோடு பேசும்படி அவனிடத்திற்கு வந்தான்.
\v 7 யாக்கோபின் மகன்கள் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வயல்வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் மகளோடு உறவுகொண்டு, செய்யத்தகாத புத்திகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர்கள் மனம்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.
\s5
\v 8 ஏமோர் அவர்களோடு பேசி: என் மகனாகிய சீகேமின் மனது உங்கள் மகளின்மேல் பற்றுதலாயிருக்கிறது; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள்.
\v 9 நீங்கள் எங்களோடு சம்பந்தங்கலந்து, உங்கள் மகள்களை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் மகள்களை உங்களுக்குக் கொண்டு,
\v 10 எங்களோடு குடியிருங்கள்; தேசம் உங்களுக்கு முன்பாக இருக்கிறது; இதில் குடியிருந்து, வியாபாரம்செய்து, பொருள் சம்பாதித்து, அதைக் கையாண்டுகொண்டிருங்கள் என்றான்.
\s5
\v 11 சீகேமும், அவளுடைய தகப்பனையும், சகோதரர்களையும் நோக்கி: உங்களுடைய கண்களில் எனக்கு தயவு கிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்;
\v 12 பெண்ணுக்குக் கொடுக்கவேண்டியவைகளையும் வெகுமதிகளையும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணைமாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.
\v 13 அப்பொழுது யாக்கோபின் மகன்கள் தங்கள் சகோதரியாகிய தீனாளை சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினதால், அவனுக்கும் அவனுடைய தகப்பனாகிய ஏமோருக்கும் தந்திரமான மறுமொழியாக:
\s5
\v 14 விருத்தசேதனமில்லாத மனிதனுக்கு நாங்கள் எங்களுடைய சகோதரியைக் கொடுக்கமுடியாது; அது எங்களுக்கு அவமானமாயிருக்கும்.
\v 15 நீங்களும், உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம்செய்யப்பட்டு எங்களைப்போல் ஆவீர்களானால், நாங்கள் சம்மதித்து,
\v 16 உங்களுக்கு எங்கள் மகள்களைக் கொடுத்து, உங்கள் மகள்களை எங்களுக்குக் கொண்டு, உங்களோடு குடியிருந்து, ஒரே ஜனமாக இருப்போம்.
\v 17 விருத்தசேதனம் செய்துகொள்வதற்கு சம்மதிக்கவில்லை என்றால், நாங்கள் எங்களுடைய மகளை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள்.
\s5
\v 18 அவர்களுடைய வார்த்தைகள் ஏமோருக்கும் ஏமோரின் மகனாகிய சீகேமுக்கும் நன்றாகத் தோன்றியது.
\v 19 அந்த வாலிபன் யாக்கோபுடைய மகளின்மேல் பிரியம் வைத்திருந்ததால், அந்தக் காரியத்தைச் செய்ய அவன் தாமதம்செய்யவில்லை. அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாக இருந்தான்.
\s5
\v 20 ஏமோரும் அவனுடைய மகன் சீகேமும் தங்கள் பட்டணத்து வாசலில் வந்து, தங்கள் பட்டணத்து மனிதர்களுடன் பேசி:
\v 21 இந்த மனிதர் நம்முடன் சமாதானமாயிருக்கிறார்கள்; ஆகவே, அவர்கள் இந்தத் தேசத்தில் குடியிருந்து, இதிலே வியாபாரம் செய்யட்டும்; அவர்களும் குடியிருக்கிறதற்கு தேசம் விசாலமாக இருக்கிறது; அவர்களுடைய மகள்களை நமக்கு மனைவிகளாகக் கொண்டு, நம்முடைய மகள்களை அவர்களுக்குக் கொடுப்போம்.
\s5
\v 22 அந்த மனிதர் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாயிருக்கிறது போல, நம்மிலுள்ள ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டால், அவர்கள் ஏகஜனமாக நம்மோடு குடியிருக்கச் சம்மதிப்பார்கள்.
\v 23 அவர்களுடைய ஆடுமாடுகள், சொத்துக்கள், மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே குடியிருப்பார்கள் என்று சொன்னார்கள்.
\s5
\v 24 அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவனுடைய சொல்லையும், அவனுடைய மகனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
\v 25 மூன்றாம் நாளில் அவர்களுக்கு வலி அதிகமானபோது, யாக்கோபின் மகன்களும் தீனாளின் சகோதரர்களுமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டுபேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாகப் பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் அனைவரையும் கொன்றுபோட்டார்கள்.
\v 26 ஏமோரையும், அவனுடைய மகன் சீகேமையும் பட்டயத்தால் கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
\s5
\v 27 மேலும், யாக்கோபின் மற்ற மகன்கள் வெட்டப்பட்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு,
\v 28 அவர்களுடைய ஆடுமாடுகளையும், கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் அனைத்தையும்,
\v 29 அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் பெண்களையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.
\s5
\v 30 அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்த தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கச்செய்தீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாக ஒன்றுசேர்ந்து, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்.
\v 31 அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்.
\s5
\c 35
\cl அத்தியாயம்– 35
\s1 யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்பிவருதல்
\p
\v 1 தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குக் காட்சியளித்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.
\v 2 அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் அவனுடன் இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்செய்துகொண்டு, உங்கள் ஆடைகளை மாற்றுங்கள்.
\v 3 நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்திற்கு பதில் கொடுத்து, நான் நடந்த வழியிலே என்னுடன் இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.
\s5
\v 4 அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளை சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப்போட்டான்.
\v 5 பின்பு பயணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தார்களுக்கு தேவனாலே பயங்கரம் உண்டானதால், அவர்கள் யாக்கோபின் மகன்களைப் பின்தொடரவில்லை.
\s5
\v 6 யாக்கோபும் அவனுடன் இருந்த எல்லா மக்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூசுக்கு வந்தார்கள்.
\v 7 அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக்கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பினபோது, அங்கே தனக்கு தேவன் காட்சியளித்ததால், அந்த இடத்திற்கு ஏல்பெத்தேல் என்று பெயரிட்டான்.
\v 8 ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் இறந்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம் செய்யப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பெயர் உண்டானது.
\p
\s5
\v 9 யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் காட்சியளித்து, அவனை ஆசீர்வதித்து:
\v 10 இப்பொழுது உன் பெயர் யாக்கோபு, இனி உன் பெயர் யாக்கோபு எனப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பெயராகும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பெயரிட்டார்.
\s5
\v 11 பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு தேசமும் பற்பல தேசங்களின் மக்களும் உன்னிலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்.
\v 12 நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி,
\v 13 தேவன் அவனோடு பேசின இடத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார்.
\s5
\v 14 அப்பொழுது யாக்கோபு தன்னோடு அவர் பேசின இடத்திலே ஒரு கல்தூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணையையும் ஊற்றினான்.
\v 15 தேவன் தன்னோடு பேசின அந்த இடத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பெயரிட்டான்.
\s1 ராகேலின் மரணம்
\p
\s5
\v 16 பின்பு, பெத்தேலை விட்டுப் பயணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டானது.
\v 17 அப்போது மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் மகனைப் பெறுவாய் என்றாள்.
\v 18 மரணகாலத்தில் அவளுடைய உயிர் பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பெயரிட்டாள்; அவனுடைய தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பெயரிட்டான்.
\v 19 ராகேல் இறந்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம் செய்யப்பட்டாள்.
\v 20 அவளுடைய கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்த நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.
\s5
\v 21 இஸ்ரவேல் பயணம்செய்து, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.
\v 22 இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடு உறவுகொண்டான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.
\s5
\v 23 யாக்கோபின் மகன்கள் பன்னிரண்டுபேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற மகன்கள்.
\v 24 யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற மகன்கள்.
\v 25 தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற மகன்கள்.
\s5
\v 26 காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற மகன்கள்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த மகன்கள்.
\s1 ஈசாக்கின் மரணம்
\p
\v 27 பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.
\s5
\v 28 ஈசாக்கு வயது முதிர்ந்தவனும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற்று எண்பது வருடங்கள் உயிரோடிருந்து,
\v 29 உயிர்பிரிந்து இறந்து, தன் ஜனத்தாரோடு சேர்க்கப்பட்டான். அவனுடைய மகன்களாகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்செய்தார்கள்.
\s5
\c 36
\cl அத்தியாயம்– 36
\s1 ஏசாவின் சந்ததி
\p
\v 1 ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்சவரலாறு:
\v 2 ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் மகளாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமாகிய அகோலிபாமாளையும்,
\v 3 இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் திருமணம் செய்திருந்தான்.
\s5
\v 4 ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப் பெற்றெடுத்தாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றெடுத்தாள்.
\v 5 அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றெடுத்தாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த மகன்கள்.
\s5
\v 6 ஏசா தன்னுடைய மனைவிகளையும், மகன்களையும், மகள்களையும், வீட்டிலுள்ள அனைவரையும், ஆடுமாடுகளையும், மற்ற உயிரினங்கள் அனைத்தையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த சொத்து முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபைவிட்டுப் பிரிந்து வேறு தேசத்திற்குப் போனான்.
\v 7 அவர்களுடைய சம்பத்து அதிகமாக இருந்ததால்அவர்கள் ஒன்றாக இணைந்து குடியிருக்க முடியாமற்போனது; அவர்களுடைய மந்தையின் காரணமாக அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக்கூடாததாயிருந்தது.
\v 8 ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பெயர்.
\s5
\v 9 சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியர்களுடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும்,
\v 10 ஏசாவின் மகன்களுடைய பெயர்களாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகனுக்கு எலீப்பாஸ் என்று பெயர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய மகனுக்கு ரெகுவேல் என்று பெயர்.
\v 11 எலீப்பாசின் மகன்கள் தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள்.
\v 12 திம்னாள் ஏசாவின் மகனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகன்கள்.
\s5
\v 13 ரெகுவேலுடைய மகன்கள், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்கள்.
\v 14 சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் மகன்களையும் ஏசாவுக்குப் பெற்றெடுத்தாள்.
\s5
\v 15 ஏசாவின் மகன்களில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலீப்பாசுடைய மகன்களில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு,
\v 16 கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள்.
\s5
\v 17 ஏசாவின் மகனாகிய ரெகுவேலின் மகன்களில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள்.
\v 18 ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் மகன்கள் எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
\v 19 இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களிலிருந்த பிரபுக்கள்.
\p
\s5
\v 20 அந்த தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,
\v 21 திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் மகன்களுமாகிய ஓரியர்களுடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
\v 22 லோத்தானுடைய மகன்கள் ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
\s5
\v 23 சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்.
\v 24 சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்திரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கும்போது, கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான்.
\s5
\v 25 ஆனாகின் பிள்ளைகள் திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் மகள்.
\v 26 திஷோனுடைய மகன்கள் எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
\v 27 ஏத்சேருடைய மகன்கள் பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.
\v 28 திஷானுடைய மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
\s5
\v 29 ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள் லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு,
\v 30 திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள்.
\s1 ஏதோமின் ராஜாக்கள்
\p
\s5
\v 31 இஸ்ரவேல் வம்சத்தார்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களாவன:
\v 32 பேயோருடைய மகனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்திற்குத் தின்காபா என்று பெயர்.
\v 33 பேலா இறந்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய மகனாகிய யோபாப் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
\s5
\v 34 யோபாப் இறந்தபின், தேமானிய தேசத்தானாகிய உஷாம் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
\v 35 உஷாம் இறந்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியர்களை முறியடித்த பேதாதின் மகனாகிய ஆதாத் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்திற்கு ஆவீத் என்று பெயர்.
\v 36 ஆதாத் இறந்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
\s5
\v 37 சம்லா இறந்தபின், அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
\v 38 சவுல் இறந்தபின், அக்போருடைய மகனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
\v 39 அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அவனுடைய பட்டணத்திற்குப் பாகு என்று பெயர்; அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய மகளும் மேசகாவின் மகளுமாக இருந்தாள்.
\s5
\v 40 தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும், குடியிருப்புகளின்படியேயும், பெயர்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய பெயர்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத் பிரபு,
\v 41 அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
\v 42 கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
\v 43 மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.
\s5
\c 37
\cl அத்தியாயம்– 37
\s1 யோசேப்பு கண்ட கனவுகள்
\p
\v 1 யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.
\v 2 யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரர்களுடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் மகன்களோடு இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.
\s5
\v 3 இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் மகன்கள் எல்லோரையும்விட அவனை அதிகமாக நேசித்து, அவனுக்குப் பலவர்ண அங்கியைச் செய்வித்தான்.
\v 4 அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும்விட அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாக நேசிக்கிறதை அவனுடைய சகோதரர்கள் கண்டபோது, அவனோடு ஆதரவாகப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.
\s5
\v 5 யோசேப்பு ஒரு கனவு கண்டு, அதைத் தன் சகோதரர்களுக்குத் தெரிவித்தான்; அதனால் அவனை இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள்.
\v 6 அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட கனவைக் கேளுங்கள்:
\s5
\v 7 நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்களுடைய அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.
\v 8 அப்பொழுது அவனுடைய சகோதரர்கள் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் ஆளுகை செய்வாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவனுடைய கனவுகளினாலும், அவனுடைய வார்த்தைகளினாலும் இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள்.
\s5
\v 9 அவன் வேறொரு கனவு கண்டு, தன் சகோதரர்களை நோக்கி: நான் இன்னும் ஒரு கனவைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.
\v 10 இதை அவன் தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் சொன்னபோது, அவனுடைய தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தக் கனவு என்ன? நானும் உன்னுடைய தாயாரும், சகோதரர்களும் தரைவரைக்கும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ என்று அவனைக் கடிந்துகொண்டான்.
\v 11 அவனுடைய சகோதரர்கள் அவன்மேல் பொறாமைகொண்டார்கள்; அவனுடைய தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.
\s1 யோசேப்பு தன் சகோதரர்களால் விற்கப்படுதல்
\p
\s5
\v 12 பின்பு, அவனுடைய சகோதரர்கள் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள்.
\v 13 அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர்கள் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்திற்கு அனுப்பப் போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.
\v 14 அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.
\s5
\v 15 அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே அலைந்து திரிவதைக் கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான்.
\v 16 அதற்கு அவன்: என் சகோதரர்களைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.
\v 17 அந்த மனிதன்: அவர்கள் இந்த இடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்வதைக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.
\s5
\v 18 அவன் தூரத்தில் வருவதை அவர்கள் கண்டு, அவன் தங்களுக்கு அருகில் வருவதற்குமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைசெய்து,
\v 19 ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, கனவுகாண்கிறவன் வருகிறான்,
\v 20 நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு கொடியமிருகம் அவனைக் கொன்றது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய கனவுகள் எப்படி நிறைவேறுமென்று பார்ப்போம் என்றார்கள்.
\s5
\v 21 ரூபன் அதைக்கேட்டு, அவனை அவர்களுடைய கைக்குத் தப்புவித்து, அவனை அவனுடைய தகப்பனிடத்திற்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாகி,
\v 22 அவர்களை நோக்கி: அவனைக் கொல்லவேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தக்கூடாது; நீங்கள் அவன்மேல் கைகளை வைக்காமல், அவனை வனாந்திரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இந்த விதமாக ரூபன் அவனை அவர்களிடமிருந்து தப்புவித்தான்.
\s5
\v 23 யோசேப்பு தன் சகோதரர்களிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு அணிந்துகொண்டிருந்த பலவர்ண அங்கியை அவர்கள் கழற்றி,
\v 24 அவனைத் தூக்கி, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.
\s5
\v 25 பின்பு, அவர்கள் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்திற்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்.
\v 26 அப்பொழுது யூதா தன் சகோதரர்களை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவனுடைய இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?
\s5
\v 27 அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாமலிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய சரீரமாக இருக்கிறானே என்றான். அவனுடைய சகோதரர்கள் அவன் சொல்லுக்கு சம்மதித்தார்கள்.
\v 28 அந்த வியாபாரிகளான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.
\s5
\v 29 பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்திற்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,
\v 30 தன் சகோதரரிடத்திற்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.
\s5
\v 31 அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே நனைத்து,
\v 32 அதைத் தங்கள் தகப்பனிடத்திற்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய மகனின் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.
\v 33 யாக்கோபு அதைக் கண்டு, இது என் மகனுடைய அங்கிதான், ஒரு கொடியமிருகம் அவனைக் கொன்றுபோட்டது, யோசேப்பு கிழிக்கப்பட்டுப் போனான் என்று புலம்பி,
\s5
\v 34 தன் ஆடைகளைக் கிழித்து, தன் இடுப்பில் சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, அநேகநாட்கள் தன் மகனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
\v 35 அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.
\v 36 அந்த மீதியானியர்கள் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் அதிகாரியும் மெய்க்காப்பாளர்களுக்கு தலைவனுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.
\s5
\c 38
\cl அத்தியாயம்– 38
\s1 யூதாவும் தாமாரும்
\p
\v 1 அக்காலத்திலே யூதா தன் சகோதரர்களை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச் சேர்ந்தான்.
\v 2 அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய மகளைக் கண்டு, அவளைத் திருமணம்செய்து, அவளோடு உறவுகொண்டான்.
\s5
\v 3 அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அவனுக்கு ஏர் என்று பெயரிட்டான்.
\v 4 அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டாள்.
\v 5 அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு சேலா என்று பெயரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.
\s5
\v 6 யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்தான்.
\v 7 யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாக இருந்ததால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார்.
\s5
\v 8 அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் அண்ணன் மனைவியைச் சேர்ந்து, அவளுக்கு மைத்துனனுக்குரிய கடமையைச் செய்து, உன் அண்ணனுக்கு சந்ததியை உண்டாக்கு என்றான்.
\v 9 அந்த சந்ததி தன் சந்ததியாக இருக்காதென்று ஓனான் அறிந்ததால், அவன் தன் அண்ணனுடைய மனைவியைச் சேரும்போது, தன் அண்ணனுக்கு சந்ததி உண்டாகாதபடித் தன் விந்தைத் தரையிலே விழவிட்டான்.
\v 10 அவன் செய்தது கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாததாக இருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.
\s5
\v 11 அப்பொழுது யூதா, தன் மகனாகிய சேலாவும் அவனுடைய சகோதரர்கள் இறந்ததுபோல இறப்பான் என்று பயந்து, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் மகனாகிய சேலா பெரியவனாகும்வரைக்கும், நீ உன் தகப்பன் வீட்டில் விதவையாகத் தங்கியிரு என்று சொன்னான்; அதன்படியே தாமார் போய்த் தன் தகப்பனுடைய வீட்டிலே தங்கியிருந்தாள்.
\s5
\v 12 அநேகநாட்கள் சென்றபின், சூவாவின் மகளாகிய யூதாவின் மனைவி இறந்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க் கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.
\v 13 அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு தெரிவிக்கப்பட்டது.
\v 14 சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டதால், தன் விதவைக்குரிய ஆடைகளை மாற்றி, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.
\s5
\v 15 யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்ததால், அவள் ஒரு விலைமாது என்று நினைத்து,
\v 16 அந்த வழியாக அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேர வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேருவதற்கு, எனக்கு என்ன தருவீர் என்றாள்.
\s5
\v 17 அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்பும்வரைக்கும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.
\v 18 அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும், அதனுடைய கயிறும், உம்முடைய கைத்தடியையும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,
\s5
\v 19 எழுந்துபோய், தன் முக்காட்டை மாற்றி, தன் விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டாள்.
\v 20 யூதா அந்த பெண்ணிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டுவர அதுல்லாம் ஊரானாகிய தன் நண்பனிடம் ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல்,
\s5
\v 21 அந்த இடத்தின் மனிதர்களை நோக்கி: வழியிலே நீரூற்றுகள் அருகே இருந்த விலைமாது எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே விலைமாது இல்லை என்றார்கள்.
\v 22 அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணவில்லை, அங்கே விலைமாது இல்லையென்று அந்த இடத்து மனிதர்களும் சொல்லுகிறார்கள் என்றான்.
\v 23 அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு வெட்கம் உண்டாகாதபடி, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான்.
\s5
\v 24 ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்செய்தாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.
\v 25 அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்திற்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும், கயிறும், இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.
\v 26 யூதா அவைகளை அடையாளம்கண்டு: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் மகனாகிய சேலாவுக்குக் கொடுக்காமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை.
\s5
\v 27 அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவளுடைய கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன.
\v 28 அவள் பிரசவிக்கும்போது, ஒரு குழந்தை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.
\s5
\v 29 அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்தது என்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதனால் அவனுக்குப் பாரேஸ் என்று பெயரிடப்பட்டது.
\v 30 பின்பு கையில் சிவப்புநூல் கட்டப்பட்டிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பெயரிடப்பட்டது.
\s5
\c 39
\cl அத்தியாயம்– 39
\s1 யோசேப்பும் போத்திபாரின் மனைவியும்
\p
\v 1 யோசேப்பு எகிப்திற்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடைய அதிகாரியும் மெய்க்காப்பாளர்களுக்குத் தலைவனுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அந்த இடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான்.
\v 2 கர்த்தர் யோசேப்போடு இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.
\s5
\v 3 கர்த்தர் அவனோடு இருக்கிறார் என்றும், அவன் செய்கிற அனைத்தையும் கர்த்தர் வாய்க்கச்செய்கிறார் என்றும், அவனுடைய எஜமான் கண்டு;
\v 4 யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு வேலைக்காரனும் தன் வீட்டிற்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான அனைத்தையும் அவனுடைய கையில் ஒப்புவித்தான்.
\s5
\v 5 அவனைத் தன் வீட்டிற்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினது முதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பின்மூலம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது.
\v 6 ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் சாப்பிடுகிற உணவு தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரிக்காமல் இருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான்.
\s5
\v 7 சிலநாட்கள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் மோகம்கொண்டு, என்னோடு உறவுகொள் என்றாள்.
\v 8 அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்குச் சம்மதிக்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் ஒன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரிக்காமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என்னுடைய கையில் ஒப்படைத்திருக்கிறார்.
\v 9 இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாக இருப்பதால் உன்னைத்தவிர வேறோன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்கும்போது, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வது எப்படி என்றான்.
\s5
\v 10 அவள் தொடர்ந்து யோசேப்போடு இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே உறவுகொள்ளவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.
\v 11 இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டிற்குள் போனான்; வீட்டு மனிதர்களில் ஒருவரும் வீட்டில் இல்லை.
\v 12 அப்பொழுது அவள் அவனுடைய உடையைப் பற்றிப் பிடித்து, என்னோடு உறவுகொள் என்றாள். அவனோ தன் உடையை அவள் கையிலே விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான்.
\s5
\v 13 அவன் வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,
\v 14 அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரெய மனிதன் நம்மை பரியாசம்செய்ய, போத்திபார் அவனை நம்மிடத்தில் கொண்டுவந்தார், அவன் என்னோடு உறவுகொள்வதற்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன்.
\v 15 நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் உடையை என்னிடத்தில் விட்டுவிட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள்.
\s5
\v 16 அவனுடைய எஜமான் வீட்டிற்கு வரும்வரைக்கும் அவனுடைய உடையைத் தன்னிடத்தில் வைத்திருந்து,
\v 17 அவனை நோக்கி: நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் தவறான எண்ணத்துடன் என்னிடத்தில் வந்தான்.
\v 18 அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் உடையை என்னிடத்தில் விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள்.
\s5
\v 19 உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னிடம் சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவன் கோபமடைந்தான்.
\v 20 யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.
\s5
\v 21 கர்த்தரோ யோசேப்போடு இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கச்செய்தார்.
\v 22 சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட அனைவரையும் யோசேப்பின் பொறுப்பிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றிற்கும் யோசேப்பு பொறுப்பாயிருந்தான்.
\v 23 கர்த்தர் அவனோடு இருந்ததினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கச்செய்ததாலும், அவன் வசமாயிருந்த ஒன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.
\s5
\c 40
\cl அத்தியாயம்– 40
\s1 பானபாத்திரக்காரனும் அப்பம் சுடுகிறவனும்
\p
\v 1 இந்த சம்பவங்களுக்குப்பின்பு, எகிப்தின் ராஜாவுக்கு பானபாத்திரக்காரனும் அப்பம் சுடுகிறவனும் எகிப்தின் ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்கு விரோதமாகக் குற்றம் செய்தார்கள்.
\v 2 பார்வோன் தன் பானபாத்திரக்காரர்களின் தலைவனும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனுமாகிய இவ்விரண்டு அதிகாரிகள்மேல் கடும்கோபம்கொண்டு,
\v 3 அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் காவலாளிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவலில் வைத்தான்.
\s5
\v 4 காவலாளிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்துவந்தான்; அவர்கள் அநேகநாட்கள் காவலில் இருந்தார்கள்.
\v 5 எகிப்தின் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் அப்பம் சுடுகிறவனுமாகிய அந்த இரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே இரவில் வெவ்வேறு அர்த்தங்கொண்ட கனவு கண்டார்கள்.
\s5
\v 6 காலையில் யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள்.
\v 7 அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடு காவலில் வைக்கப்பட்டிருந்த பார்வோனுடைய அதிகாரிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான்.
\v 8 அதற்கு அவர்கள்: கனவு கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: கனவுக்கு அர்த்தம் சொல்லுவது தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
\s5
\v 9 அப்பொழுது பானபாத்திரக்காரர்களின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் கனவிலே ஒரு திராட்சச்செடி எனக்கு முன்பாக இருக்கக்கண்டேன்.
\v 10 அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது.
\v 11 பார்வோனுடைய பாத்திரம் என்னுடைய கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று தன் கனவைச் சொன்னான்.
\s5
\v 12 அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கொடிகளும் மூன்று நாட்களாம்.
\v 13 மூன்று நாட்களுக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்கு பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவருடைய கையிலே கொடுப்பாய்;
\s5
\v 14 இதுதான் அதனுடைய அர்த்தம் என்று சொன்னதுமல்லாமல் நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்குத் தெரிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும்.
\v 15 நான் எபிரெயர்களுடைய தேசத்திலிருந்து களவாகக் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல்கிடங்கில் வைக்கும்படிக்கு நான் இந்த இடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான்.
\s5
\v 16 அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று அப்பம் சுடுகிறவர்களின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் கனவில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்;
\v 17 மேற்கூடையிலே பார்வோனுக்காக சமைக்கப்பட்ட அனைத்துவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின் மேற்கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து சாப்பிட்டுவிட்டது என்றான்.
\s5
\v 18 அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாட்களாம்.
\v 19 இன்னும் மூன்று நாட்களுக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிலிடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதனுடைய அர்த்தம் என்று சொன்னான்.
\s5
\v 20 மூன்றாம் நாள் பார்வோனுடைய பிறந்த நாளாயிருந்தது; அவன் தன் வேலைக்காரர்கள் எல்லோருக்கும் விருந்துசெய்து, பானபாத்திரக்காரர்களுடைய தலைவனையும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே நிறுத்தி,
\v 21 பானபாத்திரக்காரர்களின் தலைவனைப் பானம் கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.
\v 22 அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையோ தூக்கிலிட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.
\v 23 ஆனாலும் பானபாத்திரக்காரனின் தலைவன் யோசேப்பை நினைக்காமல் அவனை மறந்துவிட்டான்.
\s5
\c 41
\cl அத்தியாயம்– 41
\s1 பார்வோன் கண்ட கனவுகள்
\p
\v 1 இரண்டு வருடங்கள் சென்றபின்பு, பார்வோன் ஒரு கனவு கண்டான்; அது என்னவென்றால், அவன் நதியருகே நின்றுகொண்டிருந்தான்.
\v 2 அப்பொழுது அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தன.
\v 3 அவைகளுக்குப்பின்பு அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்ற பசுக்களுடன் நின்றன.
\s5
\v 4 அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்களையும் விழுங்கிப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.
\v 5 மறுபடியும் அவன் தூங்கியபோது, இரண்டாம் முறை ஒரு கனவு கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே செடியிலிருந்து ஓங்கி வளர்ந்தது.
\v 6 பின்பு, மெலிந்ததும் கீழ்காற்றினால் வறண்டதுமான ஏழு கதிர்கள் முளைத்தது.
\s5
\v 7 மெலிந்த கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது கனவு என்று அறிந்தான்.
\v 8 காலையிலேயே பார்வோனுடைய மனம் கலக்கம் கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள அனைத்து மந்திரவாதிகளையும் அனைத்து அறிஞர்களையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் கனவைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்ல முடியாமல் போனது.
\s5
\v 9 அப்பொழுது பானபாத்திரக்காரர்களின் தலைவன் பார்வோனை நோக்கி: நான் செய்த குற்றம் இன்றுதான் என் ஞாபகத்தில் வந்தது.
\v 10 பார்வோன் தம்முடைய வேலைக்காரர்கள்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையும் காவலாளிகளின் அதிபதியின் வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில்,
\v 11 நானும் அவனும் ஒரே இரவிலே வெவ்வேறு அர்த்தம்கொண்ட கனவு கண்டோம்.
\s5
\v 12 அப்பொழுது காவலாளிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய வாலிபன் ஒருவன் அங்கே எங்களோடு இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட கனவுகளுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் கனவுகளின் அர்த்தத்தைச் சொன்னான்.
\v 13 அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கில் போட்டுவிட்டார் என்றான்.
\s5
\v 14 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனை அவசரமாகச் சிறைச்சாலையிலிருந்து அழைத்துவந்தார்கள். அவன் சவரம் செய்துகொண்டு, வேறு உடை அணிந்து, பார்வோனிடத்தில் வந்தான்.
\v 15 பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு கனவு கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு கனவைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான்.
\v 16 அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்கு மறுமொழியாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச்செய்வார் என்றான்.
\s5
\v 17 பார்வோன் யோசேப்பை நோக்கி: என் கனவிலே, நான் நதியின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன்.
\v 18 அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல்மேய்ந்தன.
\s5
\v 19 அவைகளுக்குப்பின்பு இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தன; இவைகளைப்போல அவலட்சணமான பசுக்களை எகிப்து தேசமெங்கும் நான் கண்டதில்லை.
\v 20 கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள், கொழுத்திருந்த முந்தின ஏழு பசுக்களையும் விழுங்கிப்போட்டன.
\v 21 அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போனபோதிலும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன்பு இருந்தது போலவே அவலட்சணமாக இருந்தன; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன்.
\s5
\v 22 பின்னும் நான் என் கனவிலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே செடியிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்.
\v 23 பின்பு மெலிந்தவைகளும் கீழ்காற்றினால் உலர்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தன.
\v 24 மெலிந்த கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டன. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் அர்த்தத்தை எனக்கு சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றான்.
\s5
\v 25 அப்பொழுது யோசேப்பு பார்வோனை நோக்கி: பார்வோனின் கனவு ஒன்று தான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு தெரிவித்திருக்கிறார்.
\v 26 அந்த ஏழு நல்ல பசுக்களும் ஏழு வருடங்களாம்; அந்த ஏழு நல்ல கதிர்களும் ஏழு வருடங்களாம்; கனவு ஒன்றே.
\s5
\v 27 அவைகளுக்குப்பின்பு ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருடங்களாம்; கீழ்காற்றினால் தீய்ந்து உலர்ந்ததுமான ஏழு கதிர்களும் ஏழு வருடங்களாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருடங்களாம்.
\v 28 பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார்.
\v 29 எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைச்சல் உண்டாயிருக்கும் ஏழு வருடங்கள் வரும்.
\s5
\v 30 அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருடங்கள் வரும்; அப்பொழுது எகிப்துதேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போகும்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.
\v 31 வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோகும்.
\v 32 இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிப்பதற்காக, இந்தக் கனவு பார்வோனுக்கு மீண்டும் வந்தது.
\s5
\v 33 ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனிதனைத் தேடி, அவனை எகிப்துதேசத்திற்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக.
\v 34 இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருடங்களில் எகிப்துதேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படிச் செய்வாராக.
\s5
\v 35 அவர்கள் வரப்போகிற நல்ல வருடங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருப்பதற்கு, பார்வோனுடைய அதிகாரத்திற்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி சேமித்துவைப்பார்களாக.
\v 36 தேசம் பஞ்சத்தினால் அழிந்துபோகாமலிருக்க, அந்தத் தானியம் இனி எகிப்துதேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருடங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக என்றான்.
\s5
\v 37 இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவனுடைய வேலைக்காரர்கள் எல்லோருடைய பார்வைக்கும் நன்றாகத் தோன்றியது.
\s1 யோசேப்பு எகிப்து தேசத்திற்கு அதிகாரியாக நியமிக்கப்படுதல்
\p
\v 38 அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனிதனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.
\s5
\v 39 பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறதினால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.
\v 40 நீ என் அரண்மனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாக இருப்பேன் என்றான்.
\v 41 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், முழுஎகிப்துதேசத்திற்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி,
\s5
\v 42 பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய ஆடைகளை அவனுக்கு அணிவித்து, தங்கச் சங்கிலியை அவனுடைய கழுத்திலே அணிவித்து,
\v 43 தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, குனிந்து பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, முழுஎகிப்துதேசத்திற்கும் அவனை அதிகாரியாக்கினான்;
\s5
\v 44 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது என்றான்.
\v 45 மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படிப் புறப்பட்டான்.
\s5
\v 46 யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான்.
\v 47 பரிபூரணமுள்ள ஏழு வருடங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது.
\s5
\v 48 அந்த ஏழு வருடங்களில் எகிப்துதேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேகரித்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் சேமித்துவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்து தானியங்களைச் சேமித்துவைத்தான்.
\v 49 இப்படி யோசேப்பு அளக்கமுடியாத அளவிற்குக் கடற்கரை மணலைப்போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.
\s5
\v 50 பஞ்சமுள்ள வருடங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றெடுத்தாள்.
\v 51 யோசேப்பு: என் வருத்தம் அனைத்தையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் செய்தார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பெயரிட்டான்.
\v 52 நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகச்செய்தார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பெயரிட்டான்.
\s5
\v 53 எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருடங்களும் முடிந்தபின்,
\v 54 யோசேப்பு சொல்லியிருந்தபடி ஏழுவருட பஞ்சம் தொடங்கினது; அனைத்துதேசங்களிலும் பஞ்சம் உண்டானது; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது.
\s5
\v 55 எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, மக்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி முறையிட்டார்கள்; அதற்கு பார்வோன்: நீங்கள் யோசேப்பிடம் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று எகிப்தியர்கள் எல்லோருக்கும் சொன்னான்.
\v 56 தேசமெங்கும் பஞ்சம் உண்டானதால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவர அதிகமானது.
\v 57 அனைத்து தேசங்களிலும் பஞ்சம் அதிகமாக இருந்ததால், அனைத்து தேசத்தார்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.
\s5
\c 42
\cl அத்தியாயம்– 42
\s1 யோசேப்பின் சகோதரர்கள் எகிப்திற்குச் செல்லுதல்
\p
\v 1 எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் மகன்களை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?
\v 2 எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்க நீங்கள் அங்கே போய், நமக்காகத் தானியத்தை வாங்குங்கள் என்றான்.
\v 3 யோசேப்பின் சகோதரர்கள் பத்துப்பேர் தானியம் வாங்க எகிப்திற்குப் போனார்கள்.
\v 4 யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ தீங்கு வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவனுடைய சகோதரர்களோடு அனுப்பவில்லை.
\s5
\v 5 கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்ததால், தானியம் வாங்கப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் மகன்களும் போனார்கள்.
\v 6 யோசேப்பு அந்த தேசத்திற்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் மக்கள் அனைவருக்கும் தானியத்தை விற்றான். யோசேப்பின் சகோதரர்கள் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்.
\s5
\v 7 யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர்கள் என்று தெரிந்துகொண்டான்; தெரிந்தும் தெரியாதவன்போலக் கடினமாக அவர்களோடு பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் வாங்கவந்தோம் என்றார்கள்.
\v 8 யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர்கள் என்று தெரிந்தும், அவர்களுக்கு அவனைத் தெரியவில்லை.
\s5
\v 9 யோசேப்பு அவர்களைக் குறித்துத் தான் கண்ட கனவுகளை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் உளவாளிகள், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான்.
\v 10 அதற்கு அவர்கள்: அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் வாங்க வந்தோம்.
\v 11 நாங்கள் எல்லோரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நேர்மையானவர்கள்; உமது அடியார் உளவாளிகள் அல்ல என்றார்கள்.
\s5
\v 12 அதற்கு அவன்: அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள் என்றான்.
\v 13 அப்பொழுது அவர்கள்: உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றார்கள்.
\s5
\v 14 யோசேப்பு அவர்களை நோக்கி: உங்களை உளவாளிகள் என்று நான் சொன்னது சரி.
\v 15 உங்களுடைய இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.
\v 16 இதனால் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்து வரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மை உண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படும்வரைக்கும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் உளவாளிகள்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
\v 17 அவர்கள் எல்லோரையும் மூன்றுநாட்கள் காவலிலே வைத்தான்.
\s5
\v 18 மூன்றாம் நாளிலே யோசேப்பு அவர்களை நோக்கி: நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்; நீங்கள் உயிரோடு இருக்க ஒன்று செய்யுங்கள்.
\v 19 நீங்கள் நேர்மையானவர்களானால், சகோதரர்களாகிய உங்களில் ஒருவன் காவலில் கட்டப்பட்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்திற்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து,
\v 20 உங்கள் இளைய சகோதரனை என்னிடத்திற்கு அழைத்துக்கொண்டுவாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் உண்மையென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச்செய்கிறதற்குச் சம்மதித்து:
\s5
\v 21 நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மனவேதனையை நாம் கண்டும், அவன் சொல்லைக் கேட்காமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.
\v 22 அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவம் செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேட்காமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவனுடைய இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான்.
\s5
\v 23 யோசேப்பு மொழிபெயர்ப்பாளரைக்கொண்டு அவர்களிடத்தில் பேசியதால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.
\v 24 அவன் அவர்களைவிட்டு அப்புறம் போய் அழுது, திரும்ப அவர்களிடத்திற்கு வந்து, அவர்களோடு பேசி, அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகக் கட்டிவைத்தான்.
\v 25 பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்களுடைய பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், பயணத்திற்குத் தேவையான ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.
\s5
\v 26 அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அந்த இடம்விட்டுப் புறப்பட்டுப்போனார்கள்.
\v 27 தங்குகிற இடத்திலே அவர்களில் ஒருவன் தன் கழுதைக்குத் தீவனம் போடத் தன் சாக்கைத் திறந்தபோது, சாக்கிலே தன் பணம் இருக்கிறதைக் கண்டு,
\v 28 தன் சகோதரர்களைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்.
\s5
\v 29 அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபிடம் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து:
\v 30 தேசத்திற்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை உளவுபார்க்க வந்தவர்கள் என்று நினைத்து எங்களோடு கடினமாகப் பேசினான்.
\v 31 நாங்களோ அவனை நோக்கி: நாங்கள் நேர்மையானவர்கள், உளவாளிகள் அல்ல.
\v 32 நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், ஒரு தகப்பனுடைய பிள்ளைகள், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம்.
\s5
\v 33 அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நேர்மையானவர்கள் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரர்களில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்திற்குத் தானியம் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுத்து,
\v 34 உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டுவாருங்கள்; அதனால் நீங்கள் உளவாளிகள் அல்ல, நேர்மையானவர்கள் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத் தேசத்திலே வியாபாரமும் செய்யலாம் என்றான் என்று சொன்னார்கள்.
\s5
\v 35 அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டும்போது, இதோ, அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்த பணமுடிப்புகளை அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள்.
\v 36 அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாக நேரிடுகிறது என்றான்.
\s5
\v 37 அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு மகன்களையும் கொன்றுபோடும் என்று சொன்னான்.
\v 38 அதற்கு அவன்: என் மகன் உங்களோடுகூடப் போவதில்லை; இவனுடைய அண்ணன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரைமயிரைச் சஞ்சலத்தோடு பாதாளத்தில் இறங்கச்செய்வீர்கள் என்றான்.
\s5
\c 43
\cl அத்தியாயம்– 43
\s1 யோசேப்பின் சகோதரர்கள் இரண்டாவது முறையாக எகிப்திற்குச் செல்லுதல்
\p
\v 1 தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது.
\v 2 எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்களுடைய தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான்.
\s5
\v 3 அதற்கு யூதா: உங்கள் சகோதரன் உங்களோடுகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குக் கண்டிப்பாகச் சொன்னான்.
\v 4 எங்கள் சகோதரனை நீர் எங்களோடுகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம்.
\v 5 அனுப்பாவிட்டால். நாங்கள் போகமாட்டோம்; உங்கள் சகோதரன் உங்களோடுகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களோடு சொல்லியிருக்கிறான் என்றான்.
\s5
\v 6 அதற்கு இஸ்ரவேல்: உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டென்று நீங்கள் அந்த மனிதனுக்குச் சொல்லி, ஏன் எனக்கு இந்தத் துன்பத்தை வருவித்தீர்கள் என்றான்.
\v 7 அதற்கு அவர்கள்: அந்த மனிதன், உங்கள் தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா? உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டா? என்று எங்களையும் எங்களுடைய வம்சத்தையும் குறித்து விபரமாக விசாரித்தான்; அந்தக் கேள்விகளுக்குத் தக்கதாக உள்ளபடி அவனுக்குச் சொன்னோம்; உங்கள் சகோதரனை உங்களோடுகூட இங்கே கொண்டுவாருங்கள் என்று அவன் சொல்லுவான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோமா என்றார்கள்.
\s5
\v 8 பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: நீரும் நாங்களும் எங்களுடைய குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்க, நாங்கள் புறப்பட்டுப்போகிறோம், இளைய மகனை என்னோடு அனுப்பும்.
\v 9 அவனுக்காக நான் உத்தரவாதம் செய்வேன்; அவனை என்னிடத்திலே கேளும், நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக.
\v 10 நாங்கள் தாமதிக்காமல் இருந்தோமானால், இதற்குள்ளே இரண்டுமுறை போய்த் திரும்பி வந்திருப்போமே என்றான்.
\s5
\v 11 அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்த தேசத்தின் விலையுயர்ந்த பொருட்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள்.
\v 12 பணத்தை இருமடங்கு உங்கள் கைகளில் கொண்டுபோங்கள், சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டுவந்த பணத்தையும் கொண்டுபோங்கள்; அது கைதவறி வந்திருக்கும்.
\s5
\v 13 உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்திற்கு மறுபடியும் போங்கள்.
\v 14 அந்த மனிதன், அங்கிருக்கிற உங்கள் மற்ற சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிட, சர்வவல்லமையுள்ள தேவன் அவனுடைய சமுகத்தில் உங்களுக்கு இரக்கம் கிடைக்கச் செய்வாராக; நானோ பிள்ளையில்லாதவனைப்போல் இருப்பேன் என்றான்.
\p
\v 15 அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இருமடங்கு பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பயணப்பட்டு, எகிப்திற்குப்போய், யோசேப்புக்கு முன்பாக வந்து நின்றார்கள்.
\s5
\v 16 பென்யமீன் அவர்களோடுகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதர்களை வீட்டிற்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்செய், மத்தியானத்திலே இந்த மனிதர்கள் என்னோடு சாப்பிடுவார்கள் என்றான்.
\v 17 அவன் தனக்கு யோசேப்பு சொன்னபடியே செய்து, அந்த மனிதர்களை யோசேப்பின் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனான்.
\s5
\v 18 தாங்கள் யோசேப்பின் வீட்டிற்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்திற்காக நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ள நம்மைக்கொண்டுபோகிறார்கள் என்று சொல்லி,
\v 19 யோசேப்பின் வீட்டு விசாரணைக்காரனிடம் வந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடு பேசி:
\v 20 ஆண்டவனே, நாங்கள் தானியம் வாங்க முன்னே வந்துபோனோமே;
\s5
\v 21 நாங்கள் தங்கும் இடத்தில் போய் எங்களுடைய சாக்குகளைத் திறந்தபோது, நாங்கள் நிறுத்துக்கொடுத்த நிறையின்படியே அவனவன் பணம் அவனவன் சாக்கிலே இருந்ததைக் கண்டோம்; அதை நாங்கள் திரும்பவும் கொண்டுவந்திருக்கிறோம்.
\v 22 மேலும், தானியம் வாங்க வேறே பணமும் கொண்டு வந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்களுடைய சாக்குகளில் போட்டது யாரென்று அறியோம் என்றார்கள்.
\v 23 அதற்கு அவன்: உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான்.
\s5
\v 24 மேலும், அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டிற்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்.
\v 25 தாங்கள் அங்கே சாப்பிடப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டதால், மத்தியானத்தில் யோசேப்பு வரும்வரை காணிக்கையை ஆயத்தமாக வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
\s5
\v 26 யோசேப்பு வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டிற்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைவரைக்கும் குனிந்து, அவனை வணங்கினார்கள்.
\v 27 அப்பொழுது அவன்: அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.
\s5
\v 28 அதற்கு அவர்கள்: எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார் என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள்.
\v 29 அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற மகனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபை செய்யக்கடவர் என்றான்.
\s5
\v 30 யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினதால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, வேகமாக அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்.
\v 31 பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, உணவு வையுங்கள் என்றான்.
\s5
\v 32 எகிப்தியர்கள் எபிரெயரோடு சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும்; ஆகையால், அவனுக்குத் தனியாகவும், அவர்களுக்குத் தனியாகவும், அவனோடு சாப்பிடுகிற எகிப்தியருக்குத் தனியாகவும் வைத்தார்கள்.
\v 33 அவனுக்கு முன்பாக, மூத்தவன்முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
\v 34 அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த உணவில் அவர்களுக்குப் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லோருடைய பங்குகளைவிட பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் குடித்து, அவனோடு சந்தோஷமாயிருந்தார்கள்.
\s5
\c 44
\cl அத்தியாயம்– 44
\s1 சாக்கிலே வெள்ளிப் பாத்திரம்
\p
\v 1 பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதர்களுடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாகத் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கிலே போட்டு,
\v 2 இளையவனுடைய சாக்கிலே வெள்ளிப் பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்திற்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு என்று கட்டளையிட்டான்; யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான்.
\s5
\v 3 அதிகாலையிலே அந்த மனிதர்கள் தங்கள் கழுதைகளை ஓட்டிக்கொண்டுபோகும்படி அனுப்பிவிடப்பட்டார்கள்.
\v 4 அவர்கள் பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப்போய், அந்த மனிதர்களைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?
\v 5 அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவிதம் ஞானபார்வையினால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களிடம் சொல் என்றான்.
\s5
\v 6 அவன் அவர்களைத் தொடர்ந்து பிடித்து, தன்னிடத்தில் சொல்லியிருந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான்.
\v 7 அதற்கு அவர்கள்: எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்திற்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம்.
\s5
\v 8 எங்களுடைய சாக்குகளிலே நாங்கள் கண்ட பணத்தைக் கானான்தேசத்திலிருந்து திரும்பவும் உம்மிடத்திற்குக் கொண்டுவந்தோமே; நாங்கள் உம்முடைய எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையாகிலும், பொன்னையாகிலும் திருடிக்கொண்டு போவோமா?
\v 9 உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலை செய்யப்படுவானாக; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள்.
\v 10 அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமில்லாதிருப்பீர்கள் என்றான்.
\s5
\v 11 அப்பொழுது அவர்கள் வேகமாக அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள்.
\v 12 மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குவரை அவன் சோதிக்கும்போது, அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது.
\v 13 அப்பொழுது அவர்கள் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு, அவனவன் கழுதையின்மேல் மூட்டையை ஏற்றிக்கொண்டு, பட்டணத்திற்குத் திரும்பினார்கள்.
\s5
\v 14 யூதாவும் அவனுடைய சகோதரர்களும் யோசேப்பின் வீட்டிற்குப் போனார்கள். யோசேப்பு அதுவரையும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.
\v 15 யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப் போன்ற மனிதனுக்கு ஞானப்பார்வையினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்.
\s5
\v 16 அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? எதைப் பேசுவோம்? எதினாலே எங்களுடைய நீதியை விளங்கச்செய்வோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கச்செய்தார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான்.
\v 17 அதற்கு அவன்: அப்படிப்பட்ட செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக; யாரிடத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடு உங்கள் தகப்பனிடத்திற்குப் போங்கள் என்றான்.
\p
\s5
\v 18 அப்பொழுது யூதா அவனருகில் வந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் வராதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்.
\v 19 உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர்.
\s5
\v 20 அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய அண்ணன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப்பெற்ற தாயாருக்கு இருப்பதால் தகப்பனார் அவன்மேல் பாசமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம்.
\v 21 அப்பொழுது நீர்: அவனை என்னிடத்திற்குக் கொண்டுவாருங்கள்; என் கண்களினால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.
\v 22 நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக்கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம்.
\s5
\v 23 அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.
\v 24 நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்திற்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்குத் தெரிவித்தோம்.
\v 25 எங்களுடைய தகப்பனார் எங்களை நோக்கி: நீங்கள் திரும்பப்போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்குங்கள் என்று சொன்னார்.
\v 26 அதற்கு: நாங்கள் போகக்கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடு வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடு வராவிட்டால், நாங்கள் அந்த மனிதனுடைய முகத்தைக்காணமுடியாது என்றோம்.
\s5
\v 27 அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்;
\v 28 அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் கிழிக்கப்பட்டுபோயிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
\v 29 நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார்.
\s5
\v 30 ஆகையால் இளையவனைவிட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்திற்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடு ஒன்றாக இணைந்திருப்பதால்,
\v 31 அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம்.
\v 32 இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; மேலும், நான் இவனை உம்மிடத்திற்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன்.
\s5
\v 33 இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரர்களோடுகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாக இருக்கிறேன்.
\v 34 இளையவனைவிட்டு, எப்படி என் தகப்பனிடத்திற்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.
\s5
\c 45
\cl அத்தியாயம்– 45
\s1 யோசேப்பு தன்னை வெளிப்படுத்துதல்
\p
\v 1 அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லா வேலைக்காரர்களுக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கமுடியாமல்: அனைவரையும் என்னைவிட்டு வெளியே போகச்செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தும்போது, ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.
\v 2 அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர்கள் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.
\v 3 யோசேப்பு தன் சகோதரர்களைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு முன்பாகக் கலக்கமடைந்திருந்ததினாலே, அவனுக்கு பதில் சொல்லமுடியாமல் இருந்தார்கள்.
\s5
\v 4 அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: என்னருகில் வாருங்கள் என்றான். அவர்கள் அருகில்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்திற்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.
\v 5 என்னை இந்த இடத்திற்கு வருவதற்காக விற்றுப்போட்டதினால், நீங்கள் வருத்தப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; உயிர்களைப் பாதுகாக்க தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
\v 6 தேசத்தில் இப்பொழுது இரண்டு வருடங்களாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருடங்கள் விதைப்பும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.
\s5
\v 7 பூமியிலே உங்கள் வம்சம் அழியாமலிருக்க உங்களை ஆதரிப்பதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடு காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
\v 8 ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இந்த இடத்திற்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவருடைய குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், முழுஎகிப்துதேசத்திற்கும் அதிபதியாகவும் வைத்தார்.
\s5
\v 9 நீங்கள் சீக்கிரமாக என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம்.
\v 10 நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற எல்லாவற்றோடும் கோசேன் நாட்டில் குடியிருந்து என் அருகில் இருக்கலாம்.
\v 11 உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற எல்லாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருடங்கள் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய மகனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.
\s5
\v 12 இதோ, உங்களோடு பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.
\v 13 எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற அனைத்து மகிமையையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாக இந்த இடத்திற்கு வரும்படிச் செய்யுங்கள் என்று சொல்லி;
\s5
\v 14 தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.
\v 15 பின்பு தன் சகோதரர்கள் அனைவரையும் முத்தம்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவனுடைய சகோதரர்கள் அவனோடு உரையாடினார்கள்.
\p
\s5
\v 16 யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள் என்ற செய்தி பார்வோன் அரண்மனையில் பரவியபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள்.
\v 17 பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பாரமேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்திற்குப் போய்,
\v 18 உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.
\s5
\v 19 நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டு வாருங்கள்.
\v 20 உங்கள் வீட்டு உபயோகப்பொருட்களைக் குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையாதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் கொடுத்த கட்டளையின்படியேச் செய் என்றான்.
\s5
\v 21 இஸ்ரவேலின் மகன்கள் அப்படியே செய்தார்கள், யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, பயணத்திற்கு ஆகாரத்தையும்,
\v 22 அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று உடைகளையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று உடைகளையும் கொடுத்தான்.
\v 23 அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் சிறப்பான பதார்த்தங்களும், பத்து கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக பயணத்திற்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்.
\s5
\v 24 மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டைசெய்துகொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரர்களுக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்.
\v 25 அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்திற்கு வந்து:
\v 26 யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்திற்கெல்லாம் அதிபதியாக இருக்கிறான் என்று அவனுக்குத் தெரிவித்தார்கள். அவனுடைய இருதயம் அதிர்ச்சி அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை.
\s5
\v 27 அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் எல்லாவற்றையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.
\v 28 அப்பொழுது இஸ்ரவேல்: என் மகனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.
\s5
\c 46
\cl அத்தியாயம்– 46
\s1 யாக்கோபு எகிப்திற்குச் செல்லுதல்
\p
\v 1 இஸ்ரவேல் தனக்கு உண்டான எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயெர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான்.
\v 2 அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குக் காட்சியளித்து: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.
\v 3 அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்திற்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய தேசமாக்குவேன்.
\v 4 நான் உன்னுடனே எகிப்திற்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரச்செய்வேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார்.
\s5
\v 5 அதற்குப்பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து புறப்பட்டான். இஸ்ரவேலின் மகன்கள் தங்களுடைய தகப்பனாகிய யாக்கோபையும், குழந்தைகளையும், மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு,
\v 6 தங்கள் ஆடுமாடுகளையும் தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவனுடைய சந்ததியினர் அனைவரும் எகிப்திற்குப் போனார்கள்.
\v 7 அவன் தன் மகன்களையும் தன் மகன்களின் மகன்களையும் தன் மகள்களையும் தன் மகன்களின் மகள்களையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்திற்குத் தன்னுடன் அழைத்துக்கொண்டுபோனான்.
\p
\s5
\v 8 எகிப்திற்கு வந்த இஸ்ரவேலரின் பெயர்களாவன: யாக்கோபும் அவனுடைய மகன்களும்; யாக்கோபுடைய மூத்தமகனான ரூபன்.
\v 9 ரூபனுடைய மகன்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
\v 10 சிமியோனுடைய மகன்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய பெண்ணின் மகனாகிய சவுல் என்பவர்கள்.
\v 11 லேவியினுடைய மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
\s5
\v 12 யூதாவினுடைய மகன்கள் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய மகன்கள் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
\v 13 இசக்காருடைய மகன்கள் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள்.
\v 14 செபுலோனுடைய மகன்கள் செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.
\v 15 இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு மகளையும் பதான் அராமிலே யாக்கோபுக்குப் பெற்றெடுத்தாள்; அவனுடைய மகன்களும், மகள்களுமாகிய எல்லோரும் முப்பத்துமூன்றுபேர்.
\s5
\v 16 காத்துடைய மகன்கள், சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள்.
\v 17 ஆசேருடைய மகன்கள் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்; பெரீயாவின் மகன்கள் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.
\v 18 இவர்கள் லாபான் தன் மகளாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றெடுத்தாள்.
\s5
\v 19 யாக்கோபின் மனைவியாகிய ராகேலுடைய மகன்கள் யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள்.
\v 20 யோசேப்புக்கு எகிப்துதேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றெடுத்தாள்.
\v 21 பென்யமீனுடைய மகன்கள் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள்.
\v 22 ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற மகன்களாகிய இவர்கள் எல்லோரும் பதினான்குபேர்.
\s5
\v 23 தாணுடைய மகன் உசீம் என்பவன்.
\v 24 நப்தலியின் மகன்கள் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள்.
\v 25 இவர்கள் லாபான் தன் மகளாகிய ராகேலுக்குக் கொடுத்த பில்காள் யாக்கோபுக்குப் பெற்றவர்கள்; இவர்கள் எல்லோரும் ஏழுபேர்.
\s5
\v 26 யாக்கோபுடைய மகன்களின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப்பிறப்பாயிருந்து அவன் மூலமாக எகிப்திற்கு வந்தவர்கள் எல்லோரும் அறுபத்தாறுபேர்.
\v 27 யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த மகன்கள் இரண்டுபேர்; ஆக எகிப்திற்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர்.
\p
\s5
\v 28 கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்திற்கு யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள்.
\v 29 யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவனுடைய கழுத்தை விடாமல் அழுதான்.
\v 30 அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான்.
\s5
\v 31 பின்பு, யோசேப்பு தன் சகோதரர்களையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்திற்குப் போய், கானான்தேசத்திலிருந்து என் சகோதரர்களும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்.
\v 32 அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்களுடைய தொழில்; அவர்கள் தங்களுடைய ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்.
\s5
\v 33 பார்வோன் உங்களை அழைத்து, உங்களுடைய தொழில் என்ன என்று கேட்டால்,
\v 34 நீங்கள், கோசேன் நாட்டிலே குடியிருக்க, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாக இருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லோரும் எகிப்தியருக்கு அருவருப்பாக இருக்கிறார்கள் என்றான்.
\s5
\c 47
\cl அத்தியாயம்– 47
\s1 யாக்கோபின் மகன்கள் கோசேனில் குடியமர்த்தப்படுதல்
\p
\v 1 யோசேப்பு பார்வோனிடம் சென்று: என்னுடைய தகப்பனும், சகோதரர்களும், தங்களுடைய ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடும்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லி;
\v 2 தன் சகோதரர்களில் ஐந்துபேரைப் பார்வோனுக்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான்.
\s5
\v 3 பார்வோன் அவனுடைய சகோதரர்களை நோக்கி: உங்களுடைய தொழில் என்ன என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி,
\v 4 கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாததால், இந்த தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்க தயவுசெய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
\s5
\v 5 அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி: உன்னுடைய தகப்பனும், சகோதரர்களும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே.
\v 6 எகிப்துதேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன்னுடைய தகப்பனையும், சகோதரர்களையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்திருந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக ஏற்படுத்தலாம் என்றான்.
\s5
\v 7 பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.
\v 8 பார்வோன் யாக்கோபை நோக்கி: உமக்கு வயது என்ன என்று கேட்டான்.
\v 9 அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாக வாழ்ந்த நாட்கள் நூற்றுமுப்பது வருடங்கள்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் வேதனை நிறைந்ததுமாக இருக்கிறது; அவைகள் பரதேசிகளாக வாழ்ந்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.
\v 10 பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போனான்.
\s5
\v 11 பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் எகிப்துதேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டைச் சொந்தமாகக் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான்.
\v 12 யோசேப்பு தன்னுடைய தகப்பனையும், சகோதரர்களையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாக ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.
\s1 பஞ்சத்தில் யோசேப்பின் நிர்வாகம்
\p
\s5
\v 13 பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடைக்காமல்போனது; எகிப்துதேசமும் கானான்தேசமும் பஞ்சத்தினாலே நலிந்துபோனது.
\v 14 யோசேப்பு எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் வாங்கியவர்களிடத்திலிருந்து பெற்று, அதைப் பார்வோன் அரண்மனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்.
\s5
\v 15 எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்தபோது, எகிப்தியர்கள் எல்லோரும் யோசேப்பினிடத்தில் வந்து: எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமக்கு முன்பாகச் சாகவேண்டுமோ என்றார்கள்.
\v 16 அதற்கு யோசேப்பு: உங்களிடத்தில் பணம் இல்லாமல்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன் என்றான்.
\v 17 அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு, அந்த வருடம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான்.
\s5
\v 18 அந்த வருடம் முடிந்தபின், அடுத்தவருடத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: பணமும் செலவழிந்துபோனது; எங்களுடைய ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்களுடைய சரீரமும், நிலமுமே அல்லாமல், எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல.
\v 19 நாங்களும் எங்களுடைய நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்களுடைய நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்களுடைய நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாகப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரும் என்றார்கள்.
\s5
\v 20 அப்படியே எகிப்தியர்கள் தங்களுக்குப் பஞ்சம் அதிகமானதால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் எல்லாவற்றையும் பார்வோனுக்காக வாங்கினான்; இந்த விதமாக அந்த பூமி பார்வோனுடையதாயிற்று.
\v 21 மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லைமுதல் மறு எல்லைவரைக்குமுள்ள மக்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகச்செய்தான்.
\v 22 ஆசாரியர்களுடைய நிலத்தை மாத்திரம் அவன் வாங்கவில்லை; அது பார்வோனாலே ஆசாரியருக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததாலும், பார்வோன் அவர்களுக்குக் கொடுத்த மானியத்தினாலே அவர்கள் வாழ்க்கை நடத்திவந்ததாலும், அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை.
\s5
\v 23 பின்னும் யோசேப்பு மக்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத் தானியம், இதை நிலத்தில் விதையுங்கள்.
\v 24 விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கைப் பார்வோனுக்குக் கொடுக்கவேண்டும்; மற்ற நான்கு பங்கும் வயலுக்கு விதையாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஆகாரமாகவும் உங்களுடையதாகவும் இருக்கட்டும் என்றான்.
\s5
\v 25 அப்பொழுது அவர்கள்: நீர் எங்களுடைய உயிரைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம் என்றார்கள்.
\v 26 ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு விதித்த கட்டளையின்படி எகிப்து தேசத்திலே இந்த நாள்வரைக்கும் நடந்துவருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமலிருந்தது.
\s5
\v 27 இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களை உரிமைபாராட்டி, மிகவும் பலுகிப் பெருகினார்கள்.
\p
\v 28 யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருடங்கள் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்றுநாற்பத்தேழு வருடங்கள்.
\s5
\v 29 இஸ்ரவேல் மரணமடையும் காலம் நெருங்கியது. அப்பொழுது அவன் தன் மகனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து எனக்கு நம்பிக்கையும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம் செய்யாதிருப்பாயாக.
\v 30 நான் என் பிதாக்களோடு படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்செய்திருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்செய் என்றான். அதற்கு அவன்: உமது சொற்படி செய்வேன் என்றான்.
\v 31 அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
\s5
\c 48
\cl அத்தியாயம்– 48
\s1 மனாசேயும் எப்பிராயீமும்
\p
\v 1 அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனார் வியாதியாயிருக்கிறார் என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு மகன்களாகிய மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னோடு அழைத்துப்போனான்.
\v 2 இதோ, உம்முடைய மகனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்கு தெரிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னை திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.
\s5
\v 3 யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குக் காட்சியளித்து, என்னை ஆசீர்வதித்து:
\v 4 நான் உன்னைப் பலுகவும் பெருகவும் செய்து, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்த தேசத்தை என்றென்றைக்கும் சொந்தமாகக் கொடுப்பேன் என்று என்னோடு சொன்னார்.
\s5
\v 5 நான் உன்னிடத்தில் எகிப்திற்கு வருவதற்குமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு மகன்களும் என்னுடைய மகன்கள்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.
\v 6 இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரர்களுடைய பெயரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சொத்தில் பங்குபெறுவார்கள்.
\v 7 நான் பதானை விட்டு வருகையில், கானான்தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னருகில் மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்செய்தேன் என்றான்.
\s5
\v 8 இஸ்ரவேல் யோசேப்பின் மகன்களைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டான்.
\v 9 யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இந்த இடத்தில் தேவன் எனக்கு அருளின மகன்கள் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்க அவர்களை என் அருகில் கொண்டுவா என்றான்.
\v 10 முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தால், அவன் நன்றாகப் பார்க்கமுடியாமலிருந்தது. அவர்களை அவனருகில் சேரச்செய்தான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தம்செய்து அணைத்துக்கொண்டான்.
\s5
\v 11 இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார் என்றான்.
\v 12 அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடச்செய்து, அவனுடைய முகத்திற்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான்.
\v 13 பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடது கையினாலே இஸ்ரவேலின் வலது கைக்கு நேராகவும் விட்டான்.
\s5
\v 14 அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலது கையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.
\v 15 அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்த நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,
\v 16 எல்லாத் தீமைக்கும் விலக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என் பெயரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பெயரும் இவர்களுக்கு வைக்கப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாகப் பெருகக்கடவர்கள் என்றான்.
\s5
\v 17 தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு கண்டு, அது தனக்குப் பிரியமில்லாததால், எப்பிராயீமுடைய தலையின்மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைப்பதற்காக எடுத்து:
\v 18 என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான்.
\s5
\v 19 அவனுடைய தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாகப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான மக்களாவார்கள் என்றான்.
\v 20 இந்த விதமாக அவன் அன்றையதினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு மேலாக வைத்தான்.
\s5
\v 21 பின்பு, இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; தேவன் உங்களோடு இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்திற்கு உங்களைத் திரும்பவும் போகச் செய்வார் என்றும்,
\v 22 உன் சகோதரர்களுக்குக் கொடுத்ததைவிட, நான் என் பட்டயத்தாலும், என் வில்லினாலும், எமோரியர்கள் கையிலிருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காகக் கொடுத்தேன் என்றும் சொன்னான்.
\s5
\c 49
\cl அத்தியாயம்– 49
\s1 யாக்கோபு தன் மகன்களை ஆசீர்வதித்தல்
\p
\v 1 யாக்கோபு தன் மகன்களை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்குச் சம்பவிக்கும் காரியங்களை அறிவிப்பேன்.
\v 2 யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.
\s5
\v 3 ரூபனே, நீ என் முதற்பிறந்தவன்; நீ என் திறமையும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
\v 4 தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய படுக்கையின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே.
\s5
\v 5 சிமியோனும், லேவியும் சகோதரர்கள்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.
\v 6 என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு மனிதனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை அழித்தார்களே.
\s5
\v 7 அவர்களுடைய கடுமையான கோபமும், கொடுமையான மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் செய்வேன்.
\s5
\v 8 யூதாவே, சகோதரர்களால் புகழப்படுபவன் நீயே; உன் கை உன் எதிரிகளுடைய கழுத்தின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய மகன்கள் உன்னைப் பணிவார்கள்.
\s5
\v 9 யூதா பாலசிங்கம், நீ இரையை விரும்பி ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப்படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்?
\s5
\v 10 சமாதானக் கர்த்தர் வரும்வரைக்கும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, ஆளுகை அவனுடைய பாதங்களைவிட்டு ஒழிவதும் இல்லை; மக்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
\s5
\v 11 அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சச்செடியிலும், தன் பெண்கழுதையின் குட்டியை உயர்தர திராட்சச்செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் ஆடையையும், திராட்சப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் வெளுப்பான்.
\v 12 அவனுடைய கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாகவும், அவனுடைய பற்கள் பாலினால் வெண்மையாகவும் இருக்கும்.
\s5
\v 13 செபுலோன் கடற்கரை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாக இருப்பான்; அவனுடைய எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும்.
\s5
\v 14 இசக்கார் இரண்டு சுமைகளின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.
\v 15 அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, கூலிவேலை செய்கிறவனானான்.
\s5
\v 16 தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.
\v 17 தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாக அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற பாம்பைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.
\v 18 கர்த்தாவே, உம்மாலே விடுவிக்கப்படக் காத்திருக்கிறேன்.
\s5
\v 19 காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.
\v 20 ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிகரமானவைகளை அவன் தருவான்.
\v 21 நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான்.
\s5
\v 22 யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீரூற்றின் அருகில் உள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.
\v 23 வில்வீரர்கள் அவனை மனவருத்தமாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.
\s5
\v 24 ஆனாலும், அவனுடைய வில் உறுதியாக நின்றது; அவனுடைய புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கைகளால் பலமடைந்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.
\s5
\v 25 உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், மார்பகங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
\s5
\v 26 உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுவரைக்கும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய தலையின் மேலும், தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.
\s5
\v 27 பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையை அழிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான்.
\s5
\v 28 இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.
\s1 யாக்கோபு மரணமடைதல்
\p
\v 29 பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடு சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களருகில் அடக்கம் செய்யுங்கள் என்று கட்டளையிட்டு;
\v 30 அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா எனப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைபூமியாக இருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்.
\s5
\v 31 அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்செய்தேன்.
\v 32 அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது என்றான்.
\v 33 யாக்கோபு தன் மகன்களுக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு உயிர்போய், தன் மக்களோடு சேர்க்கப்பட்டான்.
\s5
\c 50
\cl அத்தியாயம்– 50
\p
\v 1 அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தம்செய்தான்.
\v 2 பின்பு, தன் தகப்பனுடைய உடலைப் பதப்படுத்தும்படி யோசேப்பு தன் வேலைக்காரர்களாகிய வைத்தியர்களுக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர்கள் இஸ்ரவேலைப் பதப்படுத்தினார்கள்.
\v 3 பதப்படுத்த நாற்பதுநாட்கள் ஆகும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக எழுபது நாட்கள் துக்கம்அனுசரித்தார்கள்.
\p
\s5
\v 4 துக்கம்அனுசரிக்கும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி: உங்கள் கண்களில் எனக்கு தயவுகிடைத்ததானால், நீங்கள் பார்வோனுடைய காது கேட்க அவருக்கு தெரிவிக்கவேண்டியது என்னவென்றால்,
\v 5 என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம்செய்யவேண்டும் என்று என்னிடத்தில் சொல்லி, உறுதிமொழி வாங்கிக்கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்செய்து வருவதற்கு அனுமதிகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.
\v 6 அதற்குப் பார்வோன்: உன் தகப்பன் உன்னிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டபடியே, நீ போய், அவரை அடக்கம்செய்து வா என்றான்.
\s5
\v 7 அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்செய்யப் போனான். பார்வோனுடைய அரண்மனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய அனைத்து உயர்அதிகாரிகளும் எகிப்துதேசத்திலுள்ள அனைத்து பெரியோரும்,
\v 8 யோசேப்பின் வீட்டார் அனைவரும், அவனுடைய சகோதரர்களும், தகப்பன் வீட்டாரும் அவனோடுகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன் நாட்டிலே விட்டுப் போனார்கள்.
\v 9 இரதங்களும் குதிரைவீரரும் அவனோடு போனதினால், மக்கள்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது.
\s5
\v 10 அவர்கள் யோர்தானுக்கு மறுகரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்திற்கு வந்தபோது, அந்த இடத்திலே பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாட்கள் துக்கம்அனுசரித்தான்.
\v 11 ஆத்தாத்தின் களத்திலே துக்கம்அனுசரிக்கிறதை அந்த தேசத்தின் குடிமக்களாகிய கானானியர்கள் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கம்அனுசரித்தல் என்றார்கள். அதனால் யோர்தானுக்கு அப்பால் இருக்கிற அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பெயர் உண்டானது.
\s5
\v 12 யாக்கோபின் மகன்கள், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே,
\v 13 அவனைக் கானான் தேசத்திற்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறைபூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்செய்தார்கள்.
\s1 யோசேப்பின் ஆதரவான பேச்சு
\p
\v 14 யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்செய்தபின்பு, அவனும் அவனுடைய சகோதரர்களும், அவனுடைய தகப்பனை அடக்கம்செய்வதற்கு அவனோடுகூடப் போனவர்கள் அனைவரும் எகிப்திற்குத் திரும்பினார்கள்.
\s5
\v 15 தங்களுடைய தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர்கள் கண்டு: ஒரு வேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நம்மை பழிவாங்குவான் என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி,
\v 16 உம்முடைய சகோதரர்கள் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார்.
\v 17 ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான்.
\s5
\v 18 பின்பு, அவனுடைய சகோதரர்களும் போய், அவனுக்கு முன்பாகத் தாழவிழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்.
\v 19 யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா;
\v 20 நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, திரளான மக்களை உயிரோடு காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியச்செய்தார்.
\v 21 ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடு ஆதரவாகப் பேசினான்.
\s1 யோசேப்பின் மரணம்
\p
\s5
\v 22 யோசேப்பும் அவனுடைய தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருடங்கள் உயிரோடிருந்தான்.
\v 23 யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் மகனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.
\s5
\v 24 யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாகச் சந்தித்து, நீங்கள் இந்த தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்திற்குப் போகச்செய்வார் என்று சொன்னதுமல்லாமல்;
\v 25 தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் வம்சத்தாரிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டான்.
\v 26 யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாக இறந்தான். அவனுடைய உடலைப் பதப்படுத்தி, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.

2064
02-EXO.usfm Normal file
View File

@ -0,0 +1,2064 @@
\id EXO
\ide UTF-8
\h யாத்திராகமம்
\toc1 யாத்திராகமம்
\toc2 யாத்திராகமம்
\toc3 exo
\mt1 யாத்திராகமம்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 இஸ்ரவேலர்கள் துன்புறுத்தப்படுதல்
\p
\v 1 எகிப்திற்குப் போன இஸ்ரவேலர்களுடைய மகன்களின் பெயர்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா,
\v 2 இசக்கார், செபுலோன், பென்யமீன்,
\v 3 தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.
\v 4 இவர்கள் யாக்கோபுடனே தங்கள் தங்கள் குடும்பங்களோடு போனார்கள்.
\v 5 யோசேப்போ அதற்கு முன்பே எகிப்திற்கு போயிருந்தான். யாக்கோபின் சந்ததியார்கள் எல்லோரும் எழுபது பேர்.
\s5
\v 6 யோசேப்பும் அவனுடைய சகோதரர்கள் அனைவரும், அந்தத் தலைமுறையார் எல்லோரும் மரணமடைந்தார்கள்.
\v 7 இஸ்ரவேலர்கள் அதிகமாக பலுகி, ஏராளமாகப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.
\p
\s5
\v 8 யோசேப்பை அறியாத புதிய ராஜா ஒருவன் எகிப்தில் தோன்றினான்.
\v 9 அவன் தன்னுடைய மக்களை நோக்கி: இதோ, இஸ்ரவேலர்களுடைய மக்கள் நம்மைவிட ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாக இருக்கிறார்கள்.
\v 10 அவர்கள் பெருகாதபடியும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைவரோடு கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்செய்து, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடியும், நாம் அவர்களைக்குறித்து ஒரு தீர்மானம் செய்யவேண்டும் என்றான்.
\s5
\v 11 அப்படியே அவர்களைச் சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படி, அவர்கள்மேல் மேற்பார்வையாளர்களை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் சேமிப்புக் கிடங்கு பட்டணங்களைக் கட்டினார்கள்.
\v 12 ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாக அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேலர்களைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.
\s5
\v 13 எகிப்தியர்கள் இஸ்ரவேர்களைக் கொடுமையாக வேலைவாங்கினார்கள்.
\v 14 கலவையும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையாலும், வயலில் செய்யும் எல்லாவித வேலையாலும், அவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்த எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாக நடத்தினார்கள்.
\s5
\v 15 அதுமட்டுமில்லாமல், எகிப்தின் ராஜா சிப்பிராள், பூவாள் என்னும் பெயருடைய எபிரெய மருத்துவச்சிகளோடு பேசி:
\v 16 நீங்கள் எபிரெய பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது பார்த்து, ஆண்பிள்ளையாக இருந்தால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையாக இருந்தால் உயிரோடு இருக்கட்டும் என்றான்.
\v 17 மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடு காப்பாற்றினார்கள்.
\s5
\v 18 அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைத்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடு காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.
\v 19 அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய பெண்கள் எகிப்திய பெண்களைப்போல் இல்லை, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடம் போவதற்கு முன்பே அவர்கள் பிரசவித்துவிடுகிறார்கள் என்றார்கள்.
\s5
\v 20 இதினால் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். மக்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனார்கள்.
\v 21 மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததால், அவர்களுடைய குடும்பங்கள் செழிக்கும்படிச் செய்தார்.
\v 22 அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடு வைக்கவும் தன்னுடைய மக்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 மோசேயின் பிறப்பு
\p
\v 1 லேவியின் கோத்திரத்தாரில் ஒருவன் லேவியின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம்செய்தான்.
\v 2 அந்த பெண் கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தாள்.
\s5
\v 3 அதன்பின்பு அவள் பிள்ளையை ஒளித்துவைக்கமுடியாமல், ஒரு நாணல்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் தாரும் பூசி, அதிலே பிள்ளையை வைத்து, நதியோரமாக நாணலுக்குள்ளே வைத்தாள்.
\v 4 அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் சகோதரி தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள்.
\s5
\v 5 அப்பொழுது பார்வோனுடைய மகள் நதியில் குளிக்க வந்தாள்; அவளுடைய பணிப்பெண்கள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன்னுடைய பணிப்பெண்ணை அனுப்பி அதைக் கொண்டுவரும்படிச் செய்தாள்.
\v 6 அதைத் திறந்தபோது பிள்ளையைக்கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர்களின் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.
\s5
\v 7 அப்பொழுது அப்பிள்ளையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய பெண்களில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள்.
\v 8 அதற்குப் பார்வோனுடைய மகள்: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள்.
\s5
\v 9 பார்வோனுடைய மகள் அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்காக வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்தப் பெண், பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள்.
\v 10 பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடம் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் மகனானான். அவள்: அவனை தண்ணீரிலிருந்து எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.
\s1 மோசே மீதியானுக்குத் தப்பியோடுதல்
\p
\s5
\v 11 மோசே பெரியவனான காலத்தில், அவன் தன்னுடைய சகோதரர்களிடம் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன்னுடைய சகோதரர்களாகிய எபிரெயர்களில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு,
\v 12 அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான்.
\s5
\v 13 அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனிதர்கள் இருவர் சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி: நீ உன்னுடைய தோழனை அடிக்கிறது ஏன் என்று கேட்டான்.
\v 14 அதற்கு அவன்: எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.
\s5
\v 15 பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய முயற்சித்தான். மோசே பார்வோனிடத்திலிருந்து தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு கிணற்றின் அருகில் உட்கார்ந்திருந்தான்.
\v 16 மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு மகள்கள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படி அங்கே வந்து, தண்ணீர் எடுத்து, தொட்டிகளை நிரப்பினார்கள்.
\v 17 அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
\s5
\v 18 அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய ரெகுவேலிடம் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாக வந்தது ஏன் என்று கேட்டான்.
\v 19 அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பர்களின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள்.
\v 20 அப்பொழுது அவன் தன்னுடைய மகள்களைப் பார்த்து, அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது ஏன்? சாப்பிடும்படி அவனை அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.
\s5
\v 21 மோசே அந்த மனிதனிடம் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன்னுடைய மகளை மோசேக்குக் கொடுத்தான்.
\v 22 அவள் ஒரு மகனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாக இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான்.
\p
\s5
\v 23 சிலகாலம் சென்றபின்பு, எகிப்தின் ராஜா இறந்தான். இஸ்ரவேலர்கள் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
\v 24 தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
\v 25 தேவன் இஸ்ரவேலர்களைப் பார்த்தார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 மோசேயும் முட்செடியும்
\p
\v 1 மோசே மீதியான் தேசத்தின் ஆசாரியனாக இருந்த தன்னுடைய மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்திரத்தில் தூரமாக நடத்தி, தேவனுடைய மலையாகிய ஓரேப்வரை வந்தான்.
\v 2 அங்கே கர்த்தருடைய தூதன் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினித்தழலில் நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் பற்றி எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.
\v 3 அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாமல் இருக்கிறது ஏன், நான் அருகில் போய் இந்த அற்புதக்காட்சியைப் பார்ப்பேன் என்றான்.
\s5
\v 4 அவன் பார்க்கும்படி அருகில் வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
\v 5 அப்பொழுது அவர்: இங்கே அருகில் வராமல் இரு; உன்னுடைய கால்களில் இருக்கிற காலணியைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
\v 6 பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்க பயந்ததால், தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டான்.
\s5
\v 7 அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என்னுடைய மக்களின் உபத்திரவத்தை நான் பார்த்து, மேற்பார்வையாளர்களால் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.
\v 8 அவர்களை எகிப்தியர்களின் கைகளுக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி, கானானியர்களும், ஏத்தியர்களும், எமோரியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
\s5
\v 9 இப்பொழுதும் இஸ்ரவேல் மக்களின் கூக்குரல் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.
\v 10 நீ இஸ்ரவேல் மக்களாகிய என்னுடைய மக்களை எகிப்திலிருந்து அழைத்துவரும்படி உன்னை பார்வோனிடம் அனுப்புவேன் வா என்றார்.
\s5
\v 11 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடம் போகவும், இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.
\v 12 அதற்கு அவர்: நான் உன்னோடு இருப்பேன்; நீ மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின்பு, நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.
\s5
\v 13 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேலர்களிடம் போய், உங்கள் முன்னோர்களுடைய தேவன் உங்களிடம் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.
\v 14 அதற்கு தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடன் சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று இஸ்ரவேலர்களோடு சொல் என்றார்.
\v 15 மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று நீ இஸ்ரவேலர்களுக்கு சொல்; என்றைக்கும் இதுவே என்னுடைய நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்றென்றைக்கும் என்னுடைய நாமம்.
\s5
\v 16 நீ போய், இஸ்ரவேலின் மூப்பர்களைக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடைய தேவனாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு தரிசனமாகி, உங்களை நிச்சயமாக சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்,
\v 17 நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களுடைய தேசத்திற்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்று சொல்.
\v 18 அவர்கள் உன்னுடைய வார்த்தையை கேட்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் எகிப்தின் ராஜாவினிடம் போய்: எபிரெயர்களுடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்திரத்தில் மூன்று நாட்கள் பயணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.
\s5
\v 19 ஆனாலும், எகிப்து ராஜா என்னுடைய கையின் வல்லமையைக் கண்டாலொழிய, உங்களைப் போகவிடமாட்டான் என்று நான் அறிவேன்.
\v 20 ஆகையால், நான் என்னுடைய கையை நீட்டி, எகிப்தின் நடுவில் நான் செய்யும் எல்லாவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின்பு அவன் உங்களைப் போகவிடுவான்.
\v 21 அப்பொழுது இந்த மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கச்செய்வேன்; நீங்கள் போகும்போது வெறுமையாகப் போவதில்லை.
\v 22 ஒவ்வொரு பெண்ணும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியையும், பொன் நகைகளையும், ஆடைகளையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்களுடைய மகன்களுக்கும் உங்களுடைய மகள்களுக்கும் அணிவித்து, எகிப்தியர்களைக் கொள்ளையிடுவீர்கள் என்றார்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 மோசேக்கு தேவனின் அடையாளங்கள்
\p
\v 1 அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பமாட்டார்கள்; என்னுடைய வார்த்தையை கேட்கமாட்டார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்.
\v 2 கர்த்தர் அவனை நோக்கி: உன்னுடைய கையில் இருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
\v 3 அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது பாம்பாக மாறியது; மோசே அதற்கு விலகி ஓடினான்.
\s5
\v 4 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன்னுடைய கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவனுடைய கையிலே கோலானது.
\v 5 ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாக இருக்கிற தங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.
\s5
\v 6 மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன்னுடைய மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன்னுடைய மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவனுடைய கை உறைந்த பனியைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது.
\v 7 அவர்: உன்னுடைய கையைத் திரும்பவும் உன்னுடைய உன் மடியிலே போடு என்றார். அவன் தன்னுடைய கையைத் திரும்பத் தன்னுடைய மடியிலே போட்டு, மீண்டும் வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலானது.
\s5
\v 8 அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்காமலும்போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள்.
\v 9 இந்த இரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன்னுடைய வார்த்தையைக் கேட்காமலும் இருந்தால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை எடுத்து நிலத்தில் ஊற்று; நதியில் எடுத்த தண்ணீர் காய்ந்த நிலத்தில் இரத்தமாகும் என்றார்.
\s5
\v 10 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்பாவது, தேவரீர் உமது அடியேனோடு பேசினதற்குப் பின்பாவது நான் பேச்சில் வல்லவன் இல்லை; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.
\v 11 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? ஊமையனையும், செவிடனையும், பார்வையுள்ளவனையும், பார்வையற்றவனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?
\v 12 ஆதலால், நீ போ; நான் உன்னுடைய வாயோடு இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்.
\v 13 அதற்கு அவன்: ஆண்டவரே. நீர் அனுப்ப விரும்புகிற யாரையாவது அனுப்பும் என்றான்.
\s5
\v 14 அப்பொழுது கர்த்தர் மோசேயின்மேல் கோபப்பட்டு: லேவியனாகிய ஆரோன் உன்னுடைய சகோதரன் அல்லவா? அவன் நன்றாக பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவனுடைய இருதயம் மகிழும்.
\v 15 நீ அவனோடு பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன்னுடைய வாயிலும் அவனுடைய வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்குக் காட்டுவேன்.
\v 16 அவன் உனக்குப் பதிலாக மக்களோடு பேசுவான்; இந்தவிதமாக அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்கு தேவனாக இருப்பாய்.
\v 17 இந்தக் கோலையும் உன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.
\s1 மோசே எகிப்திற்குத் திரும்புதல்
\p
\s5
\v 18 மோசே தன்னுடைய மாமனாகிய எத்திரோவிடம் வந்து: நான் எகிப்திலிருக்கிற என்னுடைய சகோதரர்களிடத்திற்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாகப் போய்வாரும் என்றான்.
\v 19 பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்திற்குத் திரும்பிப் போ, உன்னுடைய உயிரை எடுக்கத்தேடின மனிதர்கள் எல்லோரும் இறந்துபோனார்கள் என்றார்.
\v 20 அப்பொழுது மோசே தன்னுடைய மனைவியையும் தன்னுடைய பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்திற்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு போனான்.
\s5
\v 21 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப்போய்ச் சேர்ந்தபின்பு, நான் உன்னுடைய கையில் கொடுத்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாக செய்யும்படி எச்சரிக்கையாக இரு; ஆனாலும், நான் அவனுடைய இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் மக்களைப் போகவிடமாட்டான்.
\v 22 அப்பொழுது நீ பார்வோனோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய மகன், என்னுடைய மூத்தமகன்.
\v 23 எனக்கு ஆராதனை செய்யும்படி என்னுடைய மகனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்று சொன்னால் நான் உன்னுடைய மகனை, உன்னுடைய மூத்தமகனை கொல்லுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.
\s5
\v 24 வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் மோசேக்கு எதிராக வந்து, அவனைக் கொல்லநினைத்தார்.
\v 25 அப்பொழுது சிப்போராள் ஒரு கூர்மையான கல்லை எடுத்து, தன் மகனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவனுடைய கால்களுக்கு முன்பாக போட்டு: நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன் என்றாள்.
\v 26 பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்தசேதனத்தினால் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன் என்றாள்.
\p
\s5
\v 27 கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்திரத்தில் மோசேயை சந்திக்கப்போ என்றார். அவன் போய், தேவனுடைய மலையில் அவனைச் சந்தித்து, அவனை முத்தமிட்டான்.
\v 28 அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய எல்லா வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட எல்லா அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.
\s5
\v 29 மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேலர்களுடைய மூப்பர்கள் எல்லோரையும் கூடிவரச் செய்தார்கள்.
\v 30 கர்த்தர் மோசேக்குச் சொல்லிய எல்லா வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, மக்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான்.
\v 31 மக்கள் விசுவாசித்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேலர்களைச் சந்தித்தார் என்றும், அவர்களுடைய உபத்திரவங்களைக் கண்ணோக்கிப் பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்து தொழுதுகொண்டார்கள்.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 பார்வோனின் முன்னே மோசேயும் ஆரோனும்
\p
\v 1 பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்திரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என்னுடைய மக்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.
\v 2 அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? எனக்கு கர்த்தரைத் தெரியாது; நான் இஸ்ரவேலைப் போகவிடமாட்டேன் என்றான்.
\s5
\v 3 அப்பொழுது அவர்கள்: எபிரெயர்களுடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்திரத்தில் மூன்றுநாட்கள் பயணமாக போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாமலிருந்தால், அவர் கொள்ளைநோயையும், பட்டயத்தையும் எங்கள்மேல் வரச்செய்வார் என்றார்கள்.
\v 4 எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் மக்களைத் தங்களுடைய வேலைகளைவிட்டுக் கலையச்செய்கிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப்போங்கள் என்றான்.
\v 5 பின்னும் பார்வோன்: இதோ, தேசத்தில் மக்கள் மிகுதியாக இருக்கிறார்கள்; அவர்கள் சுமை சுமக்கிறதைவிட்டு ஓய்ந்திருக்கும்படி செய்கிறீர்களே என்றான்.
\s5
\v 6 அன்றியும், அந்த நாளிலே பார்வோன் மக்களின் மேற்பார்வையாளர்களையும் அவர்களுடைய தலைவர்களையும் நோக்கி:
\v 7 செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி மக்களுக்கு வைக்கோல் கொடுக்கவேண்டாம்; அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும்.
\v 8 அவர்கள் முன்பு செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்கவேண்டாம், அவர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்களுடைய தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள்.
\v 9 அந்த மனிதர்கள்மேல் முன்பைவிட அதிக வேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும்; அவர்கள் வீண்வார்த்தைகளைக் கேட்கவிடாதீர்கள் என்று கட்டளையிட்டான்.
\s5
\v 10 அப்பொழுது மக்களின் மேற்பார்வையாளர்களும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப்போய் மக்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை;
\v 11 நீங்களே போய் உங்களுக்கு கிடைக்கிற இடங்களில் வைக்கோல் சேகரியுங்கள்; ஆனாலும் உங்களுடைய வேலையில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை என்று பார்வோன் சொல்லுகிறார் என்றார்கள்.
\s5
\v 12 அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாக அதின் தாளடிகளைச் சேர்க்கும்படி மக்கள் எகிப்துதேசம் எங்கும் அலைந்து திரிந்தார்கள்.
\v 13 மேற்பார்வையாளர்கள் அவர்களை நோக்கி: வைக்கோல் இருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.
\v 14 பார்வோனுடைய மேற்பார்வையாளர்கள் இஸ்ரவேலர்கள் மேல்வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன்பு செய்ததுபோல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.
\s5
\v 15 அப்பொழுது இஸ்ரவேலர்களின் தலைவர்கள் பார்வோனிடம் போய் கூக்குரலிட்டு: உமது அடியார்களுக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன?
\v 16 உமது அடியார்களுக்கு வைக்கோல் கொடுக்காமல் இருந்தும், செங்கல் அறுக்கவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுகிறார்கள்; உம்முடைய மக்களிடம் குற்றம் இருக்க, உமது அடியார்களாகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் என்றார்கள்.
\v 17 அதற்கு அவன்: நீங்கள் சோம்பேறிகளாக இருக்கிறீர்கள், சோம்பேறிகளாக இருக்கிறீர்கள்; அதினால்தான் போகவேண்டும், கர்த்தருக்குப் பலியிடவேண்டும் என்கிறீர்கள்.
\v 18 போய், வேலை செய்யுங்கள், உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படுவதில்லை; ஆனாலும் கணக்கின்படியே நீங்கள் செங்கலை அறுத்துக் கொடுக்கவேண்டும் என்றான்.
\s5
\v 19 நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுக்கவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக்கக்கூடாது என்று சொல்லப்பட்டதால், இஸ்ரவேலர்களின் தலைவர்கள் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள்.
\v 20 அவர்கள் பார்வோனுடைய சமுகத்தை விட்டுப் புறப்படும்போது, வழியில் நின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்ப்பட்டு,
\v 21 அவர்களை நோக்கி: நீங்கள் பார்வோனின் கண்களுக்கு முன்பாகவும் அவருடைய வேலைக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவும் எங்களுடைய வாசனையைக் கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்களுடைய கையிலே பட்டயத்தைக் கொடுத்ததால், கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயம் தீர்க்கக்கடவர் என்றார்கள்.
\s5
\v 22 அப்பொழுது மோசே கர்த்தரிடம் திரும்பிப்போய்: ஆண்டவரே, இந்த மக்களுக்குத் தீங்குவரச்செய்ததென்ன? ஏன் என்னை அனுப்பினீர்?
\v 23 நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடம் சென்றதுமுதல் அவன் இந்த மக்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய மக்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\s1 தேவனின் விடுதலை வாக்குத்தத்தம்
\p
\v 1 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; என் வலிமையான கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, அவர்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து துரத்திவிடுவான் என்றார்.
\p
\s5
\v 2 மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,
\v 3 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என்னுடைய நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
\v 4 அவர்கள் பரதேசிகளாகத் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடு என்னுடைய உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன்.
\v 5 எகிப்தியர்கள் அடிமையாக வைத்திருக்கிற இஸ்ரவேலர்களின் பெருமூச்சையும் நான் கேட்டு, என்னுடைய உடன்படிக்கையை நினைத்தேன்.
\s5
\v 6 ஆதலால், இஸ்ரவேலர்களை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு, நீங்கலாக்கி, பலத்த கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,
\v 7 உங்களை எனக்கு மக்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாக இருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்களுடைய தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.
\s5
\v 8 ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
\v 9 இப்படியாக மோசே இஸ்ரவேலர்களுக்குச் சொன்னான்; அவர்களோ மனவருத்தத்தாலும் கொடுமையான வேலையாலும் மோசேயின் வார்த்தைகளை கேட்காமற்போனார்கள்.
\s5
\v 10 பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 11 நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் போய், அவன் தன்னுடைய தேசத்திலிருந்து இஸ்ரவேல் மக்களைப் போகவிடும்படி அவனோடு பேசு என்றார்.
\v 12 மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேலர்களே நான் சொல்வதைக் கேட்கவில்லை; பார்வோன் எப்படி நான் சொல்வதைக் கேட்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்.
\s1 ஆரோன், மோசேயின் வம்சவரலாறு
\p
\v 13 கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேலர்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படி, அவர்களை இஸ்ரவேலர்களிடத்திற்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்திற்கும் கட்டளைக் கொடுத்து அனுப்பினார்.
\p
\s5
\v 14 அவர்களுடைய தகப்பன்மார்களுடைய வீட்டார்களின் தலைவர்கள் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதலில் பிறந்தவனாகிய ரூபனுடைய மகன்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்கள்.
\v 15 சிமியோனின் மகன்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய பெண்ணின் மகனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே.
\s5
\v 16 வம்சப்பட்டியலின்படி பிறந்த லேவியின் மகன்களுடைய பெயர்கள், கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்றுமுப்பத்தேழு வருடங்கள் உயிரோடு இருந்தான்.
\v 17 அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் மகன்கள் லிப்னீ, சிமேயீ என்பவர்கள்.
\v 18 கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்றுமுப்பத்துமூன்று வருடங்கள் உயிரோடு இருந்தான்.
\v 19 மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே.
\s5
\v 20 அம்ராம் தன்னுடைய அத்தையாகிய யோகெபேத்தைத் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருடங்கள் உயிரோடு இருந்தான்.
\v 21 இத்சேயாரின் மகன்கள் கோராகு, நெப்பேக், சித்ரி என்பவர்கள்.
\v 22 ஊசியேலின் மகன்கள் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.
\s5
\v 23 ஆரோன் அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
\v 24 கோராகின் மகன்கள் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியர்களின் வம்சத்தலைவர்கள் இவர்களே.
\v 25 ஆரோனின் மகனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்தான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியர்களுடைய தகப்பன்மார்களாகிய தலைவர்கள் இவர்களே.
\s5
\v 26 இஸ்ரவேலர்களை அணியணியாக எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்குக் கர்த்தரால் கட்டளை பெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.
\v 27 இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடு பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.
\s1 மோசேக்காக ஆரோன் பேசுதல்
\p
\s5
\v 28 கர்த்தர் எகிப்துதேசத்தில் மோசேயோடு பேசின நாளில்;
\v 29 கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடு சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது,
\v 30 மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எப்படி என்னுடைய சொல்லைக் கேட்பான் என்றான்.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 ஆரோனுடைய கோல் பாம்பாக மாறுதல்
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன்னுடைய தீர்க்கதரிசியாக இருப்பான்.
\v 2 நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்; பார்வோன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் அவனிடம் பேசவேண்டும்.
\s5
\v 3 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என்னுடைய அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாக நடப்பிப்பேன்.
\v 4 பார்வோன் உங்களுடைய சொல்லைக்கேட்கமாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என்னுடைய கையை நீட்டி, கொடிய தண்டனையினால் என்னுடைய சேனைகளும் என்னுடைய மக்களுமாகிய இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்வேன்.
\v 5 நான் எகிப்தின்மேல் என்னுடைய கையை நீட்டி, இஸ்ரவேலர்களை அவர்கள் நடுவிலிருந்து புறப்படச்செய்யும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர்கள் அறிவார்கள் என்றார்.
\s5
\v 6 மோசேயும் ஆரோனும் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
\v 7 அவர்கள் பார்வோனோடு பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாக இருந்தது.
\p
\s5
\v 8 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
\v 9 உங்களை ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடு சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன்னுடைய கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது பாம்பாகும் என்றார்.
\v 10 மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களுக்கு முன்பாகவும் தன்னுடைய கோலைப் போட்டான், அது பாம்பானது.
\s5
\v 11 அப்பொழுது பார்வோன் ஞானிகளையும், சூனியக்காரர்களையும் அழைத்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.
\v 12 அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் பாம்புகளாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கியது.
\v 13 கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்.
\s1 இரத்தமாகிய வாதை
\p
\s5
\v 14 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமானது; மக்களை விடமாட்டேன் என்கிறான்.
\v 15 காலையில் நீ பார்வோனிடம் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்தில் நின்று, பாம்பாக மாறின கோலை உன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு,
\s5
\v 16 அவனை நோக்கி: வனாந்திரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயர்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்திற்கு அனுப்பியும், இது வரைக்கும் நீர் கேட்காமற்போனீர்.
\v 17 இதோ, என்னுடைய கையில் இருக்கிற கோலால் நதியில் இருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாக மாறி,
\v 18 நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போகும்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர்கள் குடிக்கமுடியாமல் அருவருப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
\s5
\v 19 மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடம் உன்னுடைய கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும், நதிகள்மேலும், குளங்கள்மேலும், தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படி, உன்னுடைய கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும், கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாகும் என்று சொல் என்றார்.
\s5
\v 20 கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாக மாறியது.
\v 21 நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போனது; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியர்களுக்கு முடியாமற்போனது; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாக இருந்தது.
\v 22 எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய வார்த்தைகளை கேட்காமற்போனான்.
\s5
\v 23 பார்வோன் இதையும் சிந்திக்காமல், தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
\v 24 நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர்கள் எல்லோரும் நதியோரத்தில் ஊற்று தோண்டினார்கள்.
\v 25 கர்த்தர் நதியை அடித்து ஏழுநாட்கள் ஆனது.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 தவளையினால் வாதை
\p
\v 1 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடம் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு.
\v 2 நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்று சொன்னால், உன்னுடைய எல்லை முழுவதும் தவளைகளால் வாதிப்பேன்.
\v 3 நதி தவளைகளைத் திரளாக பிறப்பிக்கும்; அவைகள் உன்னுடைய வீட்டிலும் படுக்கை அறையிலும், படுக்கையின்மேலும், வேலைக்காரர்களுடைய வீடுகளிலும், மக்களிடத்திலும், அடுப்புகளிலும், மாவுபிசைகிற உன்னுடைய பாத்திரங்களிலும் வந்து ஏறும்.
\v 4 அந்தத் தவளைகள் உன்மேலும், உன்னுடைய மக்கள்மேலும், வேலைக்காரர்கள் எல்லோர்மேலும் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
\s5
\v 5 மேலும் கர்த்தர் மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி: நீ உன்னுடைய கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும், வாய்க்கால்கள்மேலும், குளங்கள்மேலும் நீட்டி, எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரும்படிச் செய் என்று சொல் என்றார்.
\v 6 அப்படியே ஆரோன் தன்னுடைய கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.
\v 7 மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரச்செய்தார்கள்.
\s5
\v 8 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: அந்தத் தவளைகள் என்னையும் என்னுடைய மக்களையும்விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி மக்களைப் போகவிடுவேன் என்றான்.
\v 9 அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலே மட்டும் இருக்கும்படி அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிச் செய்ய, உமக்காகவும் உம்முடைய வேலைக்காரர்களுக்காகவும் உம்முடைய மக்களுக்காகவும் நான் விண்ணப்பம் செய்யவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.
\s5
\v 10 அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படி உம்முடைய வார்த்தையின்படி ஆகட்டும்.
\v 11 தவளைகள் உம்மையும், உம்முடைய வீட்டையும், உம்முடைய வேலைக்காரர்களையும், உம்முடைய மக்களையும்விட்டு நீங்கி, நதியிலே மட்டும் இருக்கும் என்றான்.
\v 12 மோசேயும் ஆரோனும் பார்வோனைவிட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு எதிராக வரச்செய்த தவளைகளினால் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.
\s5
\v 13 கர்த்தர் மோசேயின் சொற்படிச் செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போனது.
\v 14 அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது.
\v 15 இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடியே ஆனது.
\s1 பேன்களினால் வாதை
\p
\s5
\v 16 அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி: உன்னுடைய கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசம் முழுவதும் பேன்களாகப்போகும் என்று சொல் என்றார்.
\v 17 அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன்னுடைய கையில் இருந்த தன்னுடைய கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்கள்மேலும், மிருகஜீவன்கள்மேலும், எகிப்து தேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களானது.
\s5
\v 18 மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் பேன்களை உருவாக்கும்படி முயற்சிசெய்தார்கள்; அப்படிச்செய்தும், அவர்களால் முடியாமற்போனது; பேன்கள் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் இருந்தது.
\v 19 அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்.
\s1 வண்டுகளினால் வாதை
\p
\s5
\v 20 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலையில் நீ எழுந்து போய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என்னுடைய மக்களைப் போகவிடு.
\v 21 என்னுடைய மக்களைப் போகவிடாமல் இருந்தால், நான் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், மக்கள்மேலும், வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர்களுடைய வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.
\s5
\v 22 பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என்னுடைய மக்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்த நாட்களிலே வண்டுகள் வராதபடி, அந்த நாட்டை தனிப்படுத்தி,
\v 23 என்னுடைய மக்களுக்கும் உன்னுடைய மக்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
\v 24 அப்படியே கர்த்தர் செய்தார்; வெகு திரளான வண்டுவகைகள் பார்வோனுடைய வீட்டிலும், அவனுடைய வேலைக்காரர்களுடைய வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போனது.
\s5
\v 25 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு இந்த தேசத்திலேயே பலியிடுங்கள் என்றான்.
\v 26 அதற்கு மோசே: அப்படிச் செய்யக்கூடாது; எங்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் எகிப்தியர்களுடைய அருவருப்பைப் பலியிடுகிறதாக இருக்குமே, எகிப்தியர்களுடைய அருவருப்பை நாங்கள் அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பலியிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா?
\v 27 நாங்கள் வனாந்திரத்தில் மூன்று நாட்கள் பயணமாக போய், எங்களுடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம் என்றான்.
\s5
\v 28 அப்பொழுது பார்வோன்: நீங்கள் உங்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு வனாந்திரத்தில் பலியிடும்படி, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாகப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான்.
\v 29 அதற்கு மோசே: நான் உம்மைவிட்டுப் புறப்பட்டபின்பு, நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவருடைய வேலைக்காரர்களையும் அவருடைய மக்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு மக்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி ஏமாற்றாதிருப்பாராக என்றான்.
\s5
\v 30 மோசே பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்.
\v 31 அப்பொழுது கர்த்தர் மோசேயின் சொற்படி, வண்டுவகைகள் பார்வோனையும் அவனுடைய வேலைக்காரர்களையும், மக்களையும்விட்டு நீங்கும்படிச் செய்தார்; ஒன்றுகூட மீதியாக இருக்கவில்லை.
\v 32 பார்வோனோ, இந்த முறையும் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, மக்களைப் போகவிடாமல் இருந்தான்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 மிருகஜீவன்களின் மீது வாதை
\p
\v 1 பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடம் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களைப் போகவிடு.
\v 2 நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்திருந்தால்,
\v 3 கர்த்தருடைய கரம் வெளியில் இருக்கிற உன்னுடைய மிருகங்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின்மேலும் இருக்கும்; பெரிய கொடியதான கொள்ளை நோய் உண்டாகும்.
\v 4 கர்த்தர் இஸ்ரவேலின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியர்களின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்துவார்; இஸ்ரவேலுக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார்.
\s5
\v 5 மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயர்களுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடம் சொல் என்றார்.
\v 6 மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியர்களுடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போனது; இஸ்ரவேலர்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை.
\v 7 பார்வோன் விசாரித்து, இஸ்ரவேல் மக்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் மக்களைப் போகவிடவில்லை.
\s1 கொப்பளங்களினால் வாதை
\p
\s5
\v 8 அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி அளவு சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன்பு வானத்திற்கு நேராக தூவட்டும்.
\v 9 அது எகிப்து தேசம் முழுவதும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பச்செய்யும் என்றார்.
\v 10 அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்திற்கு நேராக தூவினான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் வந்தது.
\s5
\v 11 அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர்கள் எல்லோர்மேலும் உண்டானதால், அந்தக் கொப்புளங்களினால் மந்திரவாதிகளால் மோசேக்கு முன்பாக நிற்கமுடியாமல் இருந்தது.
\v 12 ஆனாலும், கர்த்தர் மோசேயோடு சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுடைய சொல்லைக் கேட்கவில்லை.
\s1 கல்மழையினால் வாதை
\p
\s5
\v 13 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலையில் எழுந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு.
\v 14 விடாமல் இருந்தால், பூமியெங்கும் என்னைப்போல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படி, இந்தமுறை நான் எல்லாவித வாதைகளையும் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், உன்னுடைய மக்கள்மேலும் அனுப்புவேன்.
\s5
\v 15 நீ பூமியில் இல்லாமல் நாசமாகப்போகும்படி நான் என்னுடைய கையை நீட்டி, உன்னையும் உன்னுடைய மக்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்.
\v 16 என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிக்கும்படியும், என்னுடைய நாமம் பூமி முழுவதும் பிரபலமாகும்படியும் உன்னை நிலைநிறுத்தினேன்.
\v 17 நீ என்னுடைய மக்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாக உன்னை உயர்த்துகிறாயா?
\s5
\v 18 எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்த நேரத்தில் பெய்யச்செய்வேன்.
\v 19 இப்பொழுதே ஆள் அனுப்பி, உன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டில் சேர்த்துக்கொள்ளாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகும்படி அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயர்களின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல் என்றார்.
\s5
\v 20 பார்வோனுடைய வேலைக்காரர்களில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரச்செய்தான்.
\v 21 எவன் கர்த்தருடைய வார்த்தையை மதிக்காமல்போனானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.
\p
\s5
\v 22 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசம் எங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற எல்லாவிதமான பயிர் வகைகள்மேலும் கல்மழை பெய்ய, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.
\v 23 அப்படியே மோசே தன்னுடைய கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாக ஓடியது; எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யச்செய்தார்;
\v 24 கல்மழையும் கல்மழையோடு கலந்த அக்கினியும் மிகவும் கொடியதாக இருந்தது; எகிப்து தேசம் தோன்றிய நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை.
\s5
\v 25 எகிப்து தேசம் எங்கும் மனிதர்களையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது.
\v 26 இஸ்ரவேலர்கள் இருந்த கோசேன் நாட்டில் மட்டும் கல்மழை பெய்யாமல் இருந்தது.
\s5
\v 27 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: நான் இந்தமுறை பாவம் செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என்னுடைய மக்களும் துன்மார்க்கர்கள்.
\v 28 இது போதும்; இந்தப் பெரிய இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்யுங்கள்; நான் உங்களைப் போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை என்றான்.
\s5
\v 29 மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடன், என்னுடைய கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோகும்; அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.
\v 30 இருந்தாலும் நீரும் உம்முடைய வேலைக்காரர்களும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன் என்றான்.
\s5
\v 31 அப்பொழுது வாற்கோதுமை கதிர்விட்டும் கொள்ளுப்பயிரானது பூ பூத்திருந்தது; அதினால் கொள்ளும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போனது.
\v 32 கோதுமையும் கம்பும் கதிர்விடாமல் இருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை.
\v 33 மோசே பார்வோனைவிட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன்னுடைய கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமல் இருந்தது.
\s5
\v 34 மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதை பார்வோன் கண்டபோது, அவனும் அவனுடைய வேலைக்காரர்களும் பின்னும் பாவம்செய்து, தங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.
\v 35 கர்த்தர் மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் மக்களைப் போகவிடவில்லை.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 வெட்டுக்கிளியினால் வாதை
\p
\v 1 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடம் போ, அவர்களின் நடுவே நான் என்னுடைய இந்த அடையாளங்களைச் செய்யும்படி,
\v 2 நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என்னுடைய அடையாளங்களையும், நீ உன்னுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும், உன்னுடைய பிள்ளைகளுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படியும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படியும், நான் அவனுடைய இருதயத்தையும் அவனுடைய வேலைக்காரர்களின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.
\s5
\v 3 அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து: நீ எதுவரைக்கும் உன்னைத் தாழ்த்த மனமில்லாமல் இருப்பாய்? என்னுடைய சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களைப் போகவிடு.
\v 4 நீ என்னுடைய மக்களைப் போகவிடமாட்டேன் என்று சொன்னால், நான் நாளைக்கு உன்னுடைய எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரச்செய்வேன்.
\s5
\v 5 தரையை காணமுடியாதபடி அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல்மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைச் சாப்பிட்டு, வெளியிலே துளிர்க்கிற செடிகளையெல்லாம் தின்றுபோடும்.
\v 6 உன்னுடைய வீடுகளும் உன்னுடைய வேலைக்காரர்களுடைய வீடுகளும் எகிப்தியர்களின் வீடுகளும் அவைகளால் நிரம்பும்; உன்னுடைய தகப்பன்களும் உன்னுடைய தகப்பன்களின் தகப்பன்களும் தாங்கள் பூமியில் தோன்றின நாள்முதல் இந்த நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயர்களின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பி பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
\s5
\v 7 அப்பொழுது பார்வோனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: எதுவரைக்கும் இந்த மனிதன் நமக்குத் தொல்லை கொடுக்கிறவனாக இருப்பான்? தங்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனைசெய்ய அந்த மனிதர்களைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்.
\v 8 அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி, யார் யார் போகிறார்கள் என்று கேட்டான்.
\s5
\v 9 அதற்கு மோசே: எங்களுடைய வாலிபர்களோடும், எங்களுடைய முதியோர்களோடும், எங்களுடைய மகன்களோடும், எங்களுடைய மகள்களோடும், எங்களுடைய ஆடுகளையும், எங்களுடைய மாடுகளையும் கூட்டிக்கொண்டுபோவோம்; நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.
\v 10 அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்களுடைய குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடு இருப்பாராக; எச்சரிக்கையாக இருங்கள், உங்களுக்கு தீங்குநேரிடும்;
\v 11 அப்படி வேண்டாம்; ஆண்களாகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்திலிருந்து துரத்திவிடப்பட்டார்கள்.
\p
\s5
\v 12 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின்மேல் வந்து கல்மழையால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் சாப்பிடும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன்னுடைய கையை நீட்டு என்றார்.
\v 13 அப்படியே மோசே தன்னுடைய கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும், அன்று இரவுமுழுவதும் கிழக்குக்காற்றை தேசத்தின்மேல் வீசச்செய்தார்; அதிகாலத்திலே கிழக்குக்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.
\s5
\v 14 வெட்டுக்கிளிகள் எகிப்து தேசம் எங்கும் பரவி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாக இறங்கியது; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்குமுன்பு இருந்ததும் இல்லை, அதற்குப்பின்பு இருப்பதும் இல்லை.
\v 15 அவைகள் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் மூடியது; தேசம் அவைகளால் இருளடைந்தது; கல்மழைக்குத் தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் எல்லாவற்றையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் சாப்பிட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையைக் கூட மீதியாக வைக்கவில்லை.
\s5
\v 16 அப்பொழுது பார்வோன் மோசேயையும், ஆரோனையும் விரைவாக அழைத்து: உங்களுடைய தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்.
\v 17 இந்த ஒருமுறைமட்டும் நீ என்னுடைய பாவத்தை மன்னிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் இந்த மரணத்தைமட்டும் என்னைவிட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம்செய்யுங்கள் என்றான்.
\v 18 அவன் பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்தான்.
\s5
\v 19 அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேற்குக்காற்றை வீசும்படிச் செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுகிளிகூட மீதியாக இருக்கவில்லை.
\v 20 கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் போகவிடவில்லை.
\s1 காரிருளினால் வாதை
\p
\s5
\v 21 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கும்படியாக இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படி, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.
\v 22 மோசே தன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாட்கள்வரை காரிருள் உண்டானது.
\v 23 மூன்றுநாட்கள்வரை ஒருவரையொருவர் பார்க்கவும் இல்லை, ஒருவரும் தம்முடைய இடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் அவர்கள் வாழ்ந்த இடத்திலே வெளிச்சம் இருந்தது.
\s5
\v 24 அப்பொழுது பார்வோன் மோசேயை அழைத்து; நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்களுடைய ஆடுகளும் உங்களுடைய மாடுகளும் மட்டும் நிறுத்தப்படவேண்டும்; உங்களுடைய குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.
\v 25 அதற்கு மோசே: நாங்கள் எங்களுடைய தேவனாகிய கர்த்தருக்குச் செலுத்தும் பலிகளையும் சர்வாங்க தகனபலிகளையும் நீர் எங்களுடைய கையிலே கொடுக்கவேண்டும்.
\v 26 எங்களுடைய மிருகஜீவன்களும் எங்களோடு வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்வதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேரும்வரை எங்களுக்குத் தெரியாது என்றான்.
\s5
\v 27 கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாமல் இருந்தான்.
\v 28 பார்வோன் அவனை நோக்கி: என்னைவிட்டு அந்தப்பக்கம் போ; நீ இனி என்னுடைய முகத்தைப் பார்க்காதபடி எச்சரிக்கையாக இரு; நீ இனி என்னுடைய முகத்தைப் பார்க்கும் நாளில் சாவாய் என்றான்.
\v 29 அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைப் பார்க்கமாட்டேன் என்றான்.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\s1 தலைப்பிள்ளை வாதை
\p
\v 1 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரச்செய்வேன்; அதற்குப்பின்பு அவன் உங்களை இந்த இடத்திலிருந்து போகவிடுவான்; முழுவதுமாக உங்களைப் போகவிடுவதும் மட்டுமின்றி, உங்களை இந்த இடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.
\v 2 இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி மக்களுக்குச் சொல் என்றார்.
\v 3 அப்படியே கர்த்தர் மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவுகிடைக்கும்படிச் செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய வேலைக்காரர்களின் பார்வைக்கும் மக்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாக இருந்தான்.
\p
\s5
\v 4 அப்பொழுது மோசே: கர்த்தர் உரைக்கிறதாவது, நடுஇரவிலே நான் எகிப்திற்குள்ளே புறப்பட்டுப்போவேன்.
\v 5 அப்பொழுது சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் எந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று சொன்னதுமன்றி,
\s5
\v 6 அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருபோதும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்.
\v 7 ஆனாலும் கர்த்தர் எகிப்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் செய்கிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படி, இஸ்ரவேல் மக்கள் அனைவருக்குள்ளும் மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாய் கூட தன்னுடைய நாவை அசைப்பதில்லை.
\v 8 அப்பொழுது உம்முடைய வேலைக்காரர்களாகிய இவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, பணிந்து. நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின்பு புறப்படுவேன் என்று சொல்லி, கடுங்கோபத்தோடு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
\p
\s5
\v 9 கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசத்தில் என்னுடைய அற்புதங்கள் அநேகமாகும்படி, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான் என்று சொல்லியிருந்தார்.
\v 10 மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதால், அவன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து போகவிடவில்லை.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\s1 பஸ்கா பண்டிகை
\p
\v 1 கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும், ஆரோனையும் நோக்கி:
\v 2 இந்த மாதம் உங்களுக்கு துவக்கமாதம்; இது உங்களுக்கு வருடத்தின் முதலாம் மாதமாக இருப்பதாக.
\s5
\v 3 நீங்கள் இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளட்டும்.
\v 4 ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் சாப்பிடுவதற்குப் போதுமானவர்களாக இல்லாமற்போனால், அவனும் அவன் அருகிலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கைக்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் சாப்பிடத்தக்கதாக எண்ணிக்கைபார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
\s5
\v 5 அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுடையதுமாக இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலோ வெள்ளாடுகளிலோ அதைத் தெரிந்துகொள்ளலாம்.
\v 6 அதை இந்த மாதம் பதினான்காம்தேதிவரையும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தார்களும் மாலையில் அதை அடித்து,
\v 7 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைச் சாப்பிடும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
\v 8 அன்று இரவிலே அதின் இறைச்சியை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைச் சாப்பிடட்டும்.
\s5
\v 9 பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள எல்லாவற்றையும் ஒன்றாக நெருப்பினால் சுட்டதாக அதைச் சாப்பிடுங்கள்.
\v 10 அதிலே ஒன்றையும் காலைவரை மீதியாக வைக்காமல், காலைவரை அதிலே மீதியாக இருப்பதை அக்கினியால் சுட்டெரியுங்கள்.
\v 11 அதைச் சாப்பிடவேண்டிய முறையாவது, நீங்கள் உங்களுடைய இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டும், உங்களுடைய கால்களில் காலணியை அணிந்துகொண்டும், உங்களுடைய கையில் தடியைப் பிடித்துக்கொண்டும் அதை விரைவாக சாப்பிடுங்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.
\s5
\v 12 அந்த இரவிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள்வரை, முதலில் பிறந்திருக்கிறவைகளையெல்லாம் நாசம்செய்து, எகிப்து தெய்வங்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
\v 13 நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாக இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராமல் இருக்கும்.
\v 14 அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாக இருக்கட்டும்; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக அனுசரியுங்கள்; அதை உங்களுடைய தலைமுறைதோறும் நிரந்தர கட்டளையாக அனுசரிக்கவேண்டும்.
\s5
\v 15 புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடக்கடவீர்கள்; முதலாம் நாளிலே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம்நாள்துவங்கி ஏழாம் நாள்வரையும் புளித்த அப்பம் சாப்பிடுகிறவன் எவனோ அவன் இஸ்ரவேலர்களிலிருந்து துண்டிக்கப்படுவான்.
\v 16 முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யகூடாது; அவரவர் சாப்பிடுவதற்குத் தேவையானதுமட்டும் உங்களால் செய்யப்படலாம்.
\s5
\v 17 புளிப்பில்லா அப்பப்பண்டிகையை அனுசரியுங்கள்; இந்த நாளில்தான் நான் உங்களுடைய சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரக் கட்டளையாக இந்த நாளை அனுசரிக்கவேண்டும்.
\v 18 முதலாம் மாதம் பதினான்காம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்.
\s5
\v 19 ஏழுநாட்கள்வரை உங்களுடைய வீடுகளில் புளித்தமாவு காணப்படக்கூடாது; எவனாவது புளிப்பிடப்பட்டதைச் சாப்பிட்டால், அவன் அந்நியனானாலும் சொந்த தேசப் பிறப்பானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இல்லாமல் துண்டிக்கப்படுவான்.
\v 20 புளிப்பிடப்பட்ட எதையும் நீங்கள் சாப்பிடவேண்டாம்; நீங்கள் தங்குமிடங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் சாப்பிடுங்கள் என்று சொல் என்றார்.
\p
\s5
\v 21 அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர்கள் எல்லோரையும் அழைத்து: நீங்கள் உங்களுடைய குடும்பங்களுக்குத் தகுந்தபடி உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து,
\v 22 ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணத்தில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; அதிகாலைவரையும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம்.
\s5
\v 23 கர்த்தர் எகிப்தியர்களை நாசம் செய்வதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் அழிக்கிறவனை உங்களுடைய வீடுகளில் உங்களை நாசம் செய்வதற்கு வரவிடாமல், வாசற்படியிலிருந்து விலகிக் கடந்துபோவார்.
\s5
\v 24 இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் நிரந்தர கட்டளையாகக் கைக்கொள்ளுங்கள்.
\v 25 கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளுங்கள்.
\s5
\v 26 அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,
\v 27 இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியர்களை நாசம் செய்து, நம்முடைய வீடுகளைத் தப்பிக்கச்செய்தபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களுடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது மக்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்.
\v 28 இஸ்ரவேலர்கள் போய் அப்படியே செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
\p
\s5
\v 29 நடுஇரவிலே சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.
\v 30 அப்பொழுது பார்வோனும் அவனுடைய எல்லா வேலைக்காரர்களும் எகிப்தியர்கள் அனைவரும் இரவிலே எழுந்தார்கள்; கொடிய கூக்குரல் எகிப்திலே உண்டானது; சாவு இல்லாத ஒரு வீடும் இல்லை.
\s1 கானானுக்கான பயணம்
\p
\s5
\v 31 இரவிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: நீங்களும் இஸ்ரவேலர்களும் எழுந்து, என்னுடைய மக்களைவிட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்.
\v 32 நீங்கள் சொன்னபடியே உங்களுடைய ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.
\v 33 எகிப்தியர்கள்: நாங்கள் எல்லோரும் சாகிறோமே என்று சொல்லி, விரைவாக அந்த மக்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் அவசரப்படுத்தினார்கள்.
\s5
\v 34 பிசைந்தமாவு புளிப்பதற்குமுன்பு மக்கள் அதைப் பாத்திரத்துடன் தங்களுடைய ஆடைகளில் கட்டி, தங்களுடைய தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.
\v 35 மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் மக்கள் எகிப்தியர்களிடம் வெள்ளி நகைகளையும் பொன் நகைகளையும் ஆடைகளையும் கேட்டார்கள்.
\v 36 கர்த்தர் மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தவிதமாக அவர்கள் எகிப்தியர்களைக் கொள்ளையிட்டார்கள்.
\p
\s5
\v 37 இஸ்ரவேலர்கள் ராமசேசைவிட்டுக் கால்நடையாகப் பயணம்செய்து, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் ஆண்களாக இருந்தார்கள்.
\v 38 அவர்களோடு கூடப் பல இஸ்ரவேலர்கள் அல்லாத மக்கள் அநேகர் போனதுமட்டுமல்லால், திரளான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போனது.
\v 39 எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லாத அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் இருக்கமுடியாதபடி துரத்திவிடப்பட்டதால், அது புளிக்காமல் இருந்தது; அவர்கள் தங்களுடைய பயணத்திற்கென்று ஒன்றும் ஆயத்தம்செய்யவில்லை.
\v 40 இஸ்ரவேலர்கள் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருடங்கள்.
\s5
\v 41 நானூற்றுமுப்பது வருடங்கள் முடிந்த அன்றைய நாளே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
\v 42 கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்ததால், இது அவருக்கென்று முக்கியமாக அனுசரிக்கத்தக்க இரவானது; இஸ்ரவேல் சந்ததியார் எல்லோரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாக அனுசரிக்கவேண்டிய இரவு இதுவே.
\s1 பஸ்கா அனுசரிப்பதற்கான கட்டளைகள்
\p
\s5
\v 43 மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் கட்டளையாவது, அந்நியனில் ஒருவனும் அதை சாப்பிடவேண்டாம்.
\v 44 பணத்தினால் வாங்கப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம் செய்தபின்பு, அவன் அதைப் புசிக்கலாம்.
\s5
\v 45 அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.
\v 46 அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த இறைச்சியில் கொஞ்சம்கூட வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது.
\s5
\v 47 இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரும் அதை அனுசரிக்கவேண்டும்.
\v 48 அந்நியன் ஒருவன் உன்னிடம் தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் எல்லோரும் விருத்தசேதனம்செய்யப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை அனுசரிக்கவேண்டும்; அவன் சொந்த தேசத்தில் பிறந்தவனாக இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவரும் அதில் சாப்பிடவேண்டாம்.
\s5
\v 49 சொந்த தேசத்தில் பிறந்தவனுக்கும் உங்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கட்டும் என்றார்.
\v 50 இப்படியே இஸ்ரவேலர்கள் எல்லோரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
\v 51 அன்றைக்கே கர்த்தர் இஸ்ரவேலை அணியணியாக எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தார்.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 முதற்பிறப்புகளைப் பிரதஷ்டை செய்தல்
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 இஸ்ரவேலர்களுக்குள் மனிதர்களிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற, முதற்பேறான அனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.
\p
\s5
\v 3 அப்பொழுது மோசே மக்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை இந்த இடத்திலிருந்து புறப்படச்செய்தார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் சாப்பிடவேண்டாம்.
\v 4 ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள்.
\v 5 ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன்னுடைய முன்னோர்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரச்செய்யும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையை செய்வாயாக.
\s5
\v 6 புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடவேண்டும்; ஏழாம்நாளிலே கர்த்தருக்குப் பண்டிகை அனுசரிக்கப்படவேண்டும்.
\v 7 அந்த ஏழுநாட்களும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன்னுடைய எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்.
\s5
\v 8 அந்த நாளில் நீ உன்னுடைய பிள்ளைகளை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படும்போது, கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல்.
\v 9 கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன்னுடைய வாயிலிருக்கும்படி, இது உன்னுடைய கையிலே ஒரு அடையாளமாகவும் உன்னுடைய கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்;
\v 10 ஆகையால், நீ வருடந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியாயத்தை அனுசரித்து வரவும்.
\p
\s5
\v 11 மேலும், கர்த்தர் உனக்கும் உன்னுடைய முன்னோர்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரச்செய்து, அதை உனக்குக் கொடுக்கும்போது,
\v 12 கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் முதல்பிறப்பு அனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்.
\v 13 கழுதையின் முதற்பிறப்பையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை உடைத்துப்போடு. உன்னுடைய பிள்ளைகளில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள்.
\s5
\v 14 பிற்காலத்தில் உன்னுடைய மகன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.
\v 15 எங்களை விடாதபடி, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் முதல்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் முதற்பிறப்புகள்வரையும் உண்டாயிருந்த முதற்பிறப்புகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆண்களையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என்னுடைய பிள்ளைகளில் முதற்பிறப்புகள் அனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.
\v 16 கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படச்செய்வதற்கு, இது உன்னுடைய கையில் அடையாளமாகவும், உன்னுடைய கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்.
\p
\s5
\v 17 பார்வோன் மக்களைப் போகவிட்டபின்பு: மக்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாகப் போவது அருகாமையாக இருந்தாலும், தேவன் அவர்களை அந்த வழியாக நடத்தாமல்,
\v 18 செங்கடலின் வனாந்திர வழியாக மக்களைச் சுற்றிப் போகச்செய்தார். இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாகப் புறப்பட்டுப்போனார்கள்.
\s5
\v 19 மோசே தன்னோடு யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாக உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடு என்னுடைய எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேலர்களை உறுதியாக ஆணையிடும்படிச் செய்திருந்தான்.
\v 20 அவர்கள் சுக்கோத்திலிருந்து பயணப்பட்டு, வனாந்திரத்தின் ஓரமாக ஏத்தாமிலே முகாமிட்டார்கள்.
\v 21 அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படி, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகமண்டலத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சம் காட்ட அக்கினிமண்டலத்திலும் அவர்களுக்கு முன்பு சென்றார்.
\v 22 பகலிலே மேகமண்டலமும், இரவிலே அக்கினிமண்டலமும் மக்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.
\s5
\c 14
\cl அத்தியாயம்– 14
\s1 செங்கடலைக் கடந்து செல்லுதல்
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் கடலுக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்பாக முகாமிடவேண்டும் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்லு; அதற்கு எதிராக கடற்கரையில் முகாமிடுங்கள்.
\v 3 அப்பொழுது பார்வோன் இஸ்ரவேலர்களைக்குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்திரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான்.
\s5
\v 4 ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படி, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர்கள் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள்.
\v 5 மக்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவிற்கு அறிவிக்கப்பட்டபோது, மக்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவன் வேலைக்காரர்களும் மனம் மாறி: நமக்கு வேலை செய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலர்களைப் போகவிட்டது என்ன காரியம் என்றார்கள்.
\s5
\v 6 அவன் தன்னுடைய இரதத்தைப் பூட்டி, தன்னுடைய மக்களைக் கூட்டிக்கொண்டு,
\v 7 முதல்தரமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற எல்லா இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரர்களையும் கூட்டிக்கொண்டு போனான்.
\v 8 கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேலர்கள் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.
\v 9 எகிப்தியர்கள் பார்வோனுடைய எல்லாக் குதிரைகளோடும், இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரர்களோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், கடலின் அருகிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்பாக முகாமிட்டிருக்கிற அவர்களை நெருங்கினார்கள்.
\s5
\v 10 பார்வோன் அருகில் வருகிறபோது, இஸ்ரவேலர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர்கள் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.
\v 11 அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே கல்லறைகள் இல்லையென்றா வனாந்திரத்திலே சாகும்படி எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்ததால், எங்களுக்கு இப்படிச் செய்தது ஏன்?
\v 12 நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, எகிப்தியர்களுக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்திரத்திலே சாவதைவிட எகிப்தியர்களுக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாக இருக்குமே என்றார்கள்.
\s5
\v 13 அப்பொழுது மோசே மக்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியர்களை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
\v 14 கர்த்தர் உங்களுக்காக யுத்தம்செய்வார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
\p
\s5
\v 15 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடம் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்லு.
\v 16 நீ உன்னுடைய கோலை ஓங்கி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டி, கடலைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோவார்கள்.
\v 17 எகிப்தியர்கள் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்களின் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர்கள் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.
\v 18 இப்படி நான் பார்வோனாலும் அவனுடைய இரதங்களாலும் அவனுடைய குதிரைவீரர்களாலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர்கள் அறிவார்கள் என்றார்.
\s5
\v 19 அப்பொழுது இஸ்ரவேலர்களின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன்பு இருந்த மேகமண்டலமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.
\v 20 அது எகிப்தியர்களின் சேனையும் இஸ்ரவேலர்களின் சேனையும் இரவுமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியர்களுக்கு அது மேகமும் இருளாகவும் இருந்தது, இஸ்ரவேலர்களுக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.
\s5
\v 21 மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இரவுமுழுவதும் பலத்த கிழக்குக் காற்றினால் கடல் ஒதுங்கும்படிச் செய்து, அதை வறண்டுபோகச்செய்தார்; தண்ணீர் பிளந்து பிரிந்துபோனது.
\v 22 இஸ்ரவேலர்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது.
\s5
\v 23 அப்பொழுது எகிப்தியர்கள் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய எல்லாக் குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அவர்கள் பின்னால் கடலின் நடுவே நடந்துபோனார்கள்.
\v 24 காலை நேரத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான மண்டலத்திலிருந்து எகிப்தியர்களின் சேனையைப் பார்த்து, அவர்களுடைய சேனையைக் கலங்கடித்து,
\v 25 அவர்களுடைய இரதங்களிலிருந்து சக்கரங்கள் கழன்றுபோகவும், அவர்கள் தங்களுடைய இரதங்களை வருத்தத்தோடு நடத்தவும் செய்தார்; அப்பொழுது எகிப்தியர்கள்: இஸ்ரவேலர்களைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்கிறார் என்றார்கள்.
\p
\s5
\v 26 கர்த்தர் மோசேயை நோக்கி: தண்ணீர் எகிப்தியர்கள்மேலும் அவர்களுடைய இரதங்களின்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்களின்மேலும் திரும்பும்படி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டு என்றார்.
\v 27 அப்படியே மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அதிகாலையில் கடல் பலமாகத் திரும்பி வந்தது; எகிப்தியர்கள் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திப்போட்டார்.
\v 28 தண்ணீர் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரர்களையும், அவர்கள் பின்னாக கடலில் நுழைந்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.
\s5
\v 29 இஸ்ரவேலர்களோ கடலின் நடுவாக வறண்ட நிலத்தின் வழியாக நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது.
\v 30 இப்படியாகக் கர்த்தர் அந்தநாளிலே இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கைக்குத் தப்புவித்தார்; கடற்கரையிலே எகிப்தியர்கள் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர்கள் கண்டார்கள்.
\v 31 கர்த்தர் எகிப்தியர்களில் செய்த அந்த மகத்தான செயல்களை இஸ்ரவேலர்கள் கண்டார்கள்; அப்பொழுது மக்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் நம்பிக்கை வைத்தார்கள்.
\s5
\c 15
\cl அத்தியாயம்– 15
\s1 மோசே மற்றும் மிரியாம் பாடின பாடல்
\p
\v 1 அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
\s5
\v 2 கர்த்தர் என்னுடைய பெலனும் என்னுடைய கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என்னுடைய தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்செய்வேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
\v 3 கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
\s5
\v 4 பார்வோனின் இரதங்களையும் அவனுடைய சேனைகளையும் கடலிலே தள்ளிவிட்டார்; அவனுடைய முதன்மையான அதிகாரிகள் செங்கடலில் அமிழ்ந்துபோனார்கள்.
\v 5 ஆழம் அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.
\s5
\v 6 கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பெலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் எதிரியை நொறுக்கிவிட்டது.
\v 7 உமக்கு விரோதமாக எழும்பினவர்களை உமது பெரிய மகத்துவத்தினாலே அழித்துப்போட்டீர்; உம்முடைய கோபத்தை அனுப்பினீர், அது அவர்களை வைக்கோல்தாளடியைப்போல எரித்தது.
\v 8 உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான தண்ணீர் நடுக்கடலிலே உறைந்துபோனது.
\s5
\v 9 தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும், என்னுடைய பட்டயத்தை உருவுவேன், என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான்.
\v 10 உம்முடைய காற்றை வீசச்செய்தீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.
\v 11 கர்த்தாவே, தெய்வங்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?
\s5
\v 12 நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.
\v 13 நீர் மீட்டுக்கொண்ட இந்த மக்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திற்கு நேராக அவர்களை உமது பெலத்தினால் வழிநடத்தினீர்.
\s5
\v 14 மக்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவில் குடியிருப்பவர்களைத் திகில் பிடிக்கும்.
\v 15 ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பலசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானில் குடியிருப்பவர்கள் யாவரும் கரைந்துபோவார்கள்.
\s5
\v 16 பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். கர்த்தாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட மக்கள் கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய கரத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவில்லாமல் இருப்பார்கள்.
\s5
\v 17 நீர் அவர்களைக் கொண்டுபோய், கர்த்தராகிய தேவரீர் தங்குவதற்கு நியமித்த இடமாகிய உம்முடைய சுதந்திரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் உண்டாக்கிய பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.
\v 18 கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்செய்வார்.
\s5
\v 19 பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் கடலில் நுழைந்தது; கர்த்தர் கடலின் தண்ணீரை அவர்கள்மேல் திரும்பச்செய்தார்; இஸ்ரவேலர்களோ கடலின் நடுவே காய்ந்த நிலத்திலே நடந்துபோனார்கள் என்று பாடினார்கள்.
\v 20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன்னுடைய கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; எல்லாப் பெண்களும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
\v 21 மிரியாம் அவர்களுக்குப் பதிலாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாக வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.
\s1 மாரா மற்றும் ஏலீமின் தண்ணீர்கள்
\p
\s5
\v 22 பின்பு மோசே இஸ்ரவேல் மக்களைச் செங்கடலிலிருந்து பயணமாக நடத்தினான். அவர்கள் சூர் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்திரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள்.
\v 23 அவர்கள் மாராவிற்கு வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்துக்கு மாரா என்று பெயரிடப்பட்டது.
\s5
\v 24 அப்பொழுது மக்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.
\v 25 மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடன், அது இனிமையான தண்ணீரானது. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு கட்டளையையும், ஒரு நீதிநெறிகளையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:
\v 26 நீ உன்னுடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குச் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் கர்த்தர் என்றார்.
\p
\s5
\v 27 பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள்.
\s5
\c 16
\cl அத்தியாயம்– 16
\s1 மன்னாவும் முறுமுறுப்பும்
\p
\v 1 இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் ஏலிமைவிட்டு பயணம்செய்து, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள்.
\v 2 அந்த வனாந்திரத்திலே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:
\v 3 நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களின் அருகிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்தில், கர்த்தரின் கையால் செத்துப்போனால் பரவாயில்லை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படச்செய்து, இந்த வனாந்திரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடம் சொன்னார்கள்.
\s5
\v 4 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வரச்செய்வேன்; மக்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என்னுடைய கட்டளையின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.
\v 5 ஆறாம் நாளிலோ, அவர்கள் தினந்தோறும் சேர்க்கிறதைவிட இரண்டுமடங்கு சேர்த்து, அதை ஆயத்தம்செய்து வைக்கவேண்டும் என்றார்.
\s5
\v 6 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரையும் நோக்கி: கர்த்தரே உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தவர் என்பதை மாலையில் அறிவீர்கள்;
\v 7 அதிகாலையில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்; கர்த்தருக்கு விரோதமான உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாக முறுமுறுப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள்.
\v 8 பின்னும் மோசே: மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், அதிகாலையில் நீங்கள் திருப்தியடைவதற்கு அப்பத்தையும் கொடுக்கும்போது இது வெளிப்படும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்களுடைய முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாக இருக்கிறது என்றான்.
\s5
\v 9 அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: நீ இஸ்ரவேல் மக்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி: கர்த்தருக்கு முன்பாக சேருங்கள், அவர் உங்களுடைய முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல் என்றான்.
\p
\v 10 ஆரோன் இஸ்ரவேல் மக்களாகிய சபையார்களுக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்திரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.
\v 11 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 12 இஸ்ரவேல் மக்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடு பேசி, நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, அதிகாலையில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
\s5
\v 13 மாலையில் காடைகள் வந்து விழுந்து முகாமை மூடிக்கொண்டது. அதிகாலையில் முகாமைச் சுற்றி பனி பெய்திருந்தது.
\v 14 பெய்திருந்த பனி நீங்கினபின்பு, இதோ, வனாந்திரத்தின்மீது எங்கும் உருண்டையான ஒரு சிறிய பொருள் உறைந்த பனிக்கட்டிப் பொடியைப்போலத் தரையின்மேல் கிடந்தது.
\v 15 இஸ்ரவேல் மக்கள் அதைக் கண்டு, அது என்னவென்று அறியாமல் இருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குச் சாப்பிடக்கொடுத்த அப்பம்.
\s5
\v 16 கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் சாப்பிடும் அளவுக்குத் தகுந்தபடி அதில் எடுத்துச் சேர்க்கட்டும்; உங்களிலுள்ள நபர்களின் எண்ணிக்கையின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
\v 17 இஸ்ரவேல் மக்கள் அப்படியே செய்து, சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள்.
\v 18 பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: அதிகமாகச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, குறைவாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள்.
\s5
\v 19 மோசே அவர்களை நோக்கி: ஒருவனும் அதிகாலைவரை அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்;
\v 20 மோசேயின் சொல் கேட்காமல், சிலர் அதில் அதிகாலைவரை சிறிதளவு மீதியாக வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபம்கொண்டான்.
\v 21 அதை அதிகாலைதோறும் அவரவர் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போகும்.
\p
\s5
\v 22 ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டுமடங்காக ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர்கள் எல்லோரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.
\v 23 அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேகவைக்கவேண்டியதை வேகவைத்து, மீதியாக இருக்கிறதையெல்லாம் நாளைவரை உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.
\s5
\v 24 மோசே கட்டளையிட்டபடி, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை.
\v 25 அப்பொழுது மோசே; அதை இன்றைக்குச் சாப்பிடுங்கள்; இன்று கர்த்தருக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள்.
\s5
\v 26 ஆறுநாட்களும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாக இருக்கிறது; அதிலே அது உண்டாகாது என்றான்.
\v 27 ஏழாம்நாளில் மக்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைப்பார்க்கவில்லை.
\s5
\v 28 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய சட்டங்களையும் கைக்கொள்ள எதுவரை மனம் இல்லாமல் இருப்பீர்கள்?
\v 29 பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை கொடுத்தபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் இடத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் இடத்திலே இருக்கவேண்டும் என்றார்.
\v 30 அப்படியே மக்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
\s5
\v 31 இஸ்ரவேல் மக்கள் அதற்கு மன்னா என்று பெயரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாகவும் வெண்மைநிறமாகவும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணியாரத்தைப்போல இருந்தது.
\v 32 அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, வனாந்திரத்தில் உங்களுக்கு சாப்பிடக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார்கள் பார்க்கும்படி, அவர்களுக்காக அதைப் பாதுகாப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்.
\s5
\v 33 மேலும், மோசே ஆரோனை நோக்கி: நீ ஒரு பாத்திரத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்களுடைய சந்ததியார்களுக்காகப் பாதுகாப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை என்றான்.
\v 34 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.
\v 35 இஸ்ரவேல் மக்கள் குடியிருப்பான தேசத்துக்கு வரும்வரை நாற்பது வருடங்கள் மன்னாவை சாப்பிட்டார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரையும் மன்னாவை சாப்பிட்டார்கள்.
\v 36 ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.
\s5
\c 17
\cl அத்தியாயம்– 17
\s1 கன்மலையிலிருந்து தண்ணீர்
\p
\v 1 பின்பு இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் கர்த்தருடைய கட்டளையின்படி சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு, பயணம்செய்து, ரெவிதீமிலே வந்து முகாமிட்டார்கள்; அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
\v 2 அப்பொழுது மக்கள் மோசேயோடு வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடு ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.
\v 3 மக்கள் அந்த இடத்தில் தண்ணீர்த் தாகமாக இருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்களுடைய பிள்ளைகளையும் எங்களுடைய ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தாகத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள்.
\s5
\v 4 மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த மக்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.
\v 5 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பர்களில் சிலரை உன்னோடு கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன்னுடைய கோலை உன்னுடைய கையில் பிடித்துக்கொண்டு, மக்களுக்கு முன்னே நடந்துபோ.
\v 6 அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பர்களின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
\v 7 இஸ்ரவேலர்கள் வாதாடினதற்காகவும், கர்த்தர் எங்களுடைய நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரை சோதித்துப் பார்த்ததினாலும், அவன் அந்த இடத்திற்கு மாசா என்றும், மேரிபா என்றும் பெயரிட்டான்.
\s1 அமலேக்கியர்கள் தோற்கடிக்கப்படுதல்
\p
\s5
\v 8 அமலேக்கியர்கள் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தார்கள்.
\v 9 அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதர்களைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கியர்களோடு யுத்தம்செய்; நாளைக்கு நான் மலைமேல் தேவனுடைய கோலை என்னுடைய கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.
\v 10 யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கியர்களோடு யுத்தம்செய்தான். மோசேயும், ஆரோனும், ஊர் என்பவனும் மலைமேல் ஏறினார்கள்.
\s5
\v 11 மோசே தன்னுடைய கையை மேலே பிடித்திருக்கும்போது, இஸ்ரவேலர்கள் வெற்றிபெற்றார்கள்; அவன் தன்னுடைய கையைகீழே விடும்போது, அமலேக்கு வெற்றிப்பெற்றான்.
\v 12 மோசேயின் கைகள் சோர்ந்துபோனது, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும், ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறுபக்கத்திலும் இருந்து, அவனுடைய கைகளைத் தாங்கினார்கள்; இந்த விதமாக அவனுடைய கைகள் சூரியன் மறையும்வரையும் ஒரே நிலையாக இருந்தது.
\v 13 யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் கூர்மையான பட்டயத்தாலே தோற்கடித்தான்.
\s5
\v 14 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்படி, நீ ஒரு புத்தகத்தில் எழுதி, யோசுவாவின் காதிலே கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழே எங்கும் இல்லாதபடி நாசம் செய்வேன் என்றார்.
\v 15 மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பெயரிட்டு,
\v 16 அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்திற்கு விரோதமாக இருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாக கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.
\s5
\c 18
\cl அத்தியாயம்– 18
\s1 எத்திரோ மோசேயை சந்தித்தல்
\p
\v 1 தேவன் மோசேக்கும் தமது மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்ததையும், மீதியானில் ஆசாரியனாக இருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,
\v 2 மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினால் திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவனுடைய மனைவியாகிய சிப்போராளையும்,
\v 3 அவளுடைய இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு பயணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பெயரிட்டிருந்தான்.
\v 4 என்னுடைய பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்திற்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பெயரிட்டிருந்தான்.
\s5
\v 5 மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் மகன்களோடும் அவனுடைய மனைவியோடும், அவன் முகாமிட்டிருந்த தேவனுடைய மலையினிடத்தில் வனாந்திரத்திற்கு வந்து:
\v 6 எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளுடன் அவளுடைய இரண்டு மகன்களும் உம்மிடம் வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லி அனுப்பினான்.
\s5
\v 7 அப்பொழுது மோசே தன்னுடைய மாமனுக்கு எதிராகப்போய், அவனை வணங்கி, முத்தம்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு, கூடாரத்திற்குள் நுழைந்தார்கள்.
\v 8 பின்பு மோசே கர்த்தர் இஸ்ரவேலுக்காக பார்வோனுக்கும் எகிப்தியர்களுக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு சம்பவித்த எல்லா வருத்தத்தையும், கர்த்தர் தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன்னுடைய மாமனுக்கு விவரித்துச் சொன்னான்.
\s5
\v 9 கர்த்தர் இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த எல்லா நன்மைகளையும்குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டு:
\v 10 உங்களை எகிப்தியர்களின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியர்களுடைய கையின் கீழ் இருந்த மக்களை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
\v 11 கர்த்தர் எல்லா தெய்வங்களையும்விட பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் ஆணவமாக செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;
\s5
\v 12 மோசேயின் மாமனாகிய எத்திரோ சர்வாங்கதகனபலியையும் மற்ற பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான். பின்பு ஆரோனும் இஸ்ரவேல் மூப்பர்கள் அனைவரும் வந்து, மோசேயின் மாமனுடனே தேவசமுகத்தில் சாப்பிட்டார்கள்.
\s5
\v 13 மறுநாள் மோசே மக்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; மக்கள் காலை துவங்கி மாலைவரை மோசேக்கு முன்பாக நின்றார்கள்.
\v 14 மக்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் மக்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் தனியாக உட்கார்ந்திருக்கவும், மக்கள் எல்லோரும் காலை துவங்கி மாலைவரை உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது ஏன் என்றான்.
\s5
\v 15 அப்பொழுது மோசே தன்னுடைய மாமனை நோக்கி: தேவனிடம் விசாரிக்கும்படி மக்கள் என்னிடம் வருகிறார்கள்.
\v 16 அவர்களுக்கு ஏதாவது காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான்.
\s5
\v 17 அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;
\v 18 நீரும் உம்மோடே இருக்கிற மக்களும் களைத்துபோவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராக அதைச் செய்ய உம்மாலே முடியாது.
\v 19 இப்பொழுது என்னுடைய சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடு இருப்பார், நீர் தேவசந்நிதியிலே மக்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடம் கொண்டுபோய்;
\v 20 கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்.
\s5
\v 21 மக்கள் எல்லோருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் ஏற்படுத்தும்.
\v 22 அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் எல்லாவற்றையும் உம்மிடம் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடு இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாக இருக்கும்.
\v 23 இப்படி நீர் செய்வதும், இப்படி தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே சுமக்கமுடியும்; இந்த மக்கள் எல்லோரும் தாங்கள் போகும் இடத்திற்குச் சுகமாகப் போய்ச் சேரலாம் என்றான்.
\s5
\v 24 மோசே தன்னுடைய மாமனுடைய சொல்லைக்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்.
\v 25 மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரிலும் திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் மக்கள்மேல் தலைவர்களாக்கினான்.
\v 26 அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமட்டும் மோசேயிடம் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.
\v 27 பின்பு மோசே தன்னுடைய மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன்னுடைய தேசத்திற்குப் போய்விட்டான்.
\s5
\c 19
\cl அத்தியாயம்– 19
\s1 சீனாய் மலை அனுபவங்கள்
\p
\v 1 இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள்.
\v 2 அவர்கள் ரெவிதீமிலிருந்து பயணம் புறப்பட்டு, சீனாய் வனாந்திரத்திற்கு வந்து, அந்த வனாந்திரத்தில் முகாமிட்டார்கள்; இஸ்ரவேலர்கள் அங்கே மலைக்கு எதிராக முகாமிட்டார்கள்.
\s5
\v 3 மோசே தேவனிடம் ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தார்களுக்குச் சொல்லவும், இஸ்ரவேல் மக்களுக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,
\v 4 நான் எகிப்தியர்களுக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என் அருகிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.
\v 5 இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைகொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
\v 6 நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்ஜியமும் பரிசுத்த தேசமுமாக இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.
\s5
\v 7 மோசே வந்து மக்களின் மூப்பர்களை அழைத்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.
\v 8 அதற்கு மக்கள் எல்லோரும் ஒன்றாக, கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று மறுமொழி சொன்னார்கள். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடம் தெரிவித்தான்.
\v 9 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடு பேசும்போது மக்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடம் வருவேன் என்றார். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான்.
\s5
\v 10 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மக்களிடம் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து,
\v 11 மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும்; மூன்றாம் நாளில் கர்த்தர் எல்லா மக்களுக்கும் வெளிப்படையாக சீனாய் மலையின்மேல் இறங்குவார்.
\s5
\v 12 மலையைச்சுற்றிலும் நீ ஒரு எல்லையைக் குறித்து, மக்கள் மலையில் ஏறாதபடியும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடியும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
\v 13 ஒரு கையும் அதைத்தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியப்பட்டு, அல்லது வில் எய்யப்பட்டு சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடு வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாகத் தொனிக்கும்போது, அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரவேண்டும் என்றார்.
\s5
\v 14 மோசே மலையிலிருந்து இறங்கி, மக்களிடம் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள்.
\v 15 அவன் மக்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியிடம் சேராமல் இருங்கள் என்றான்.
\s5
\v 16 மூன்றாம் நாள் அதிகாலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டானது; முகாமிலிருந்த மக்கள் எல்லோரும் நடுங்கினார்கள்.
\v 17 அப்பொழுது மக்கள் தேவனுக்கு எதிராகபோக, மோசே அவர்களை முகாமிலிருந்து புறப்படச்செய்தான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.
\v 18 கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கியதால், அது முழுவதும் புகைக்காடாக இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பியது; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
\s5
\v 19 எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாகத் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
\v 20 கர்த்தர் சீனாய்மலையிலுள்ள உச்சியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் உச்சியில் வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.
\v 21 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: மக்கள் பார்ப்பதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடம் வராதபடியும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடியும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.
\v 22 கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களை அழிக்காதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.
\s5
\v 23 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், மக்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.
\v 24 கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும், மக்களும், கர்த்தர் தங்களை அழிக்காதபடி, எல்லையைக் கடந்து கர்த்தரிடம் வராமல் இருக்கவேண்டும் என்றார்.
\v 25 அப்படியே மோசே இறங்கி மக்களிடம் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.
\s5
\c 20
\cl அத்தியாயம்– 20
\s1 பத்துக் கட்டளைகள்
\p
\v 1 தேவன் பேசிச் சொல்லிய எல்லா வார்த்தைகளாவன:
\p
\v 2 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய கர்த்தர் நானே.
\p
\v 3 என்னைத்தவிர உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
\p
\s5
\v 4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சிலையையாவது, விக்கிரகத்தையாவது நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;
\v 5 நீ அவைகளை வணங்கி வழிபடவேண்டாம்; உன்னுடைய தேவனாகிய கர்த்தராக இருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாக இருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து தகப்பன்மார்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடம் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவராக இருக்கிறேன்.
\v 6 என்னிடம் அன்புகூர்ந்து, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரை இரக்கம் செய்கிறவராக இருக்கிறேன்.
\p
\s5
\v 7 உன்னுடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காமல் இருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார்.
\p
\s5
\v 8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிக்க நினை;
\v 9 ஆறுநாட்களும் நீ வேலைசெய்து, உன்னுடைய செயல்களையெல்லாம் நடத்து;
\v 10 ஏழாம்நாளோ உன்னுடைய தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், உன்னுடைய மகளானாலும், உன்னுடைய வேலைக்காரனானாலும், உன்னுடைய வேலைக்காரியானாலும், உன்னுடைய மிருகஜீவனானாலும், உன்னுடைய வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், எந்த வேலையும் செய்யவேண்டாம்.
\v 11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
\p
\s5
\v 12 உன்னுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன்னுடைய நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்னுடைய தகப்பனையும் உன்னுடைய தாயையும் மதிப்பாயாக.
\p
\v 13 கொலை செய்யாதே.
\p
\v 14 விபசாரம் செய்யாதே.
\p
\s5
\v 15 களவு செய்யாதே.
\p
\v 16 பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.
\p
\v 17 பிறனுடைய வீட்டின்மேல் ஆசைப்படாமல் இரு; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுடைய எதின்மேலும் ஆசைப்படாமல் இரு என்றார்.
\p
\s5
\v 18 மக்கள் எல்லோரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, மக்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,
\v 19 மோசேயை நோக்கி: நீர் எங்களோடு பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாமல் இருக்கட்டும், பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.
\v 20 மோசே மக்களை நோக்கி; பயப்படாமல் இருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடி அவரைக்குறித்த பயம் உங்களுடைய முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.
\v 21 மக்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்திற்கு அருகில் சேர்ந்தான்.
\s1 விக்கிரகங்களும் பலிபீடங்களும்
\p
\s5
\v 22 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேலர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடு பேசினேன் என்று கண்டீர்கள்.
\v 23 நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்க வேண்டாம்.
\s5
\v 24 மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன்னுடைய ஆடுகளையும் உன்னுடைய மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்து; நான் என்னுடைய நாமத்தை மகிமைப்படுத்தும் எந்த இடத்திலும் உன்னிடம் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.
\v 25 எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமானால், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளி பதித்தவுடன், அதை அசுத்தப்படுத்துவாய்.
\v 26 என்னுடைய பலிபீடத்தின்மேல் உன்னுடைய நிர்வாணம் காணப்படாதபடி, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.
\s5
\c 21
\cl அத்தியாயம்– 21
\s1 எபிரேய அடிமைகள்
\p
\v 1 மேலும், நீ அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய கட்டளைகள்:
\s5
\v 2 எபிரெயர்களில் ஒரு அடிமையை வாங்கினால், அவன் ஆறுவருடங்கள் வேலைசெய்து, ஏழாம் வருடத்திலே ஒன்றும் தராமல் விடுதலைப்பெற்றுப் போகவேண்டும்.
\v 3 தனியாக வந்திருந்தால், தனியாகப்போகவேண்டும்; திருமணம் செய்தவனாக வந்திருந்தால், அவன் மனைவி அவனோடு போகவேண்டும்.
\v 4 அவனுடைய எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை திருமணம்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையோ பெண்பிள்ளைகளையோ பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவளுடைய பிள்ளைகளும் அவளுடைய எஜமானைச் சேரவேண்டும்; அவன் மட்டும் தனியாகப் போகவேண்டும்.
\s5
\v 5 அந்த வேலைக்காரன்: என்னுடைய எஜமானையும் என்னுடைய மனைவியையும் என்னுடைய பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாகச் சொன்னால்,
\v 6 அவனுடைய எஜமான் அவனை நியாயாதிபதிகளிடம் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரச்செய்து, அங்கே அவனுடைய எஜமான் அவனுடைய காதைக் கம்பியினால் குத்தவேண்டும்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடம் வேலைசெய்துகொண்டிருக்கவேண்டும்.
\p
\s5
\v 7 ஒருவன் தன்னுடைய மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது.
\v 8 அவளைத் தனக்கு நியமித்துக்கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாகப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்செய்து, அவளை அந்நியர்கள் கையில் விற்க அவனுக்கு அதிகாரம் இல்லை.
\s5
\v 9 அவன் தன்னுடைய மகனுக்கு அவளை மனைவியாக நியமித்திருந்தால், தன்னுடைய மகள்களை நடத்துவதுபோல அவளையும் நடத்தவேண்டும்.
\v 10 அவன் வேறொரு பெண்ணைத் தனக்கென்று நியமித்தால், இவளுக்குரிய உணவு, உடை, திருமண உரிமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருக்கவேண்டும்.
\v 11 இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணம் தராமல் விடுதலைபெற்றுப் போகவேண்டும்.
\s1 பலவிதமான தண்டனைகள்
\p
\s5
\v 12 ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாகக் கொலைசெய்யப்பட வேண்டும்.
\v 13 ஒருவன் மறைந்திருந்து கொல்லாமல், தேவச்செயலாகத் தன்னுடைய கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய இடத்தை உனக்கு நியமிப்பேன்.
\v 14 ஒருவன் பிறனுக்கு விரோதமாக சதிமோசம்செய்து, அவனைத் துணிகரமாகக் கொன்றுபோட்டால், அவனை என்னுடைய பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டுபோய்க் கொலைசெய்யவேண்டும்.
\p
\s5
\v 15 தன்னுடைய தகப்பனையாவது தன்னுடைய தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.
\p
\v 16 ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவனிடம் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.
\p
\v 17 தன்னுடைய தகப்பனையோ தன்னுடைய தாயையோ சபிக்கிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.
\p
\s5
\v 18 மனிதர்கள் சண்டையிட்டு, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததாலோ கையால் அடித்ததாலோ அவன் சாகாமல் படுக்கையில் கிடந்து,
\v 19 திரும்ப எழுந்து வெளியிலே தன்னுடைய ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடமாடினால், அடித்தவன் தண்டனைக்கு விலகியிருப்பான்; ஆனாலும் அவனுக்கு நஷ்டஈடு கொடுத்து, அவனை நன்றாகக் குணமாக்கவேண்டும்.
\p
\s5
\v 20 ஒருவன் தனக்கு அடிமையானவனையோ தனக்கு அடிமையானவளையோ, கோலால் அடித்ததாலே, அவனுடைய கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.
\p
\v 21 ஒரு நாளாவது இரண்டு நாட்களாவது உயிரோடு இருந்தால், அவர்கள் அவனுக்கு உரியவனாக இருப்பதால், பழிவாங்கவேண்டியதில்லை.
\s5
\v 22 மனிதர்கள் சண்டையிட்டு, கர்ப்பவதியான ஒரு பெண்ணை அடித்ததால், அவளுக்கு வேறு சேதமில்லாமல் கர்ப்பம் கலைந்துபோனால், அடிபட்ட பெண்ணின் கணவன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தகுந்தபடியும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் அபராதம் கொடுக்கவேண்டும்.
\v 23 வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,
\v 24 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
\v 25 சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு கொடுக்கவேண்டும்.
\p
\s5
\v 26 ஒருவன் தன்னுடைய அடிமையின் கண்ணையோ தன்னுடைய அடிமைப்பெண்ணின் கண்ணையோ அடித்து அதைக் கெடுத்தால், அவனுடைய கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலை செய்யவேண்டும்.
\v 27 அவன் தன்னுடைய அடிமையின் பல்லையோ தன்னுடைய அடிமைப்பெண்ணின் பல்லையோ விழும்படி அடித்தால், அவனுடைய பல்லுக்குப் பதிலாக அவனை விடுதலை செய்துவிடவேண்டும்.
\p
\s5
\v 28 ஒரு மாடு ஒரு ஆணையோ ஒரு பெண்ணையோ முட்டியதால் சாவு உண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் இறைச்சி சாப்பிடப்படக்கூடாது; அப்பொழுது மாட்டின் எஜமான் தண்டனைக்கு விலகியிருப்பான்.
\v 29 தன்னுடைய மாடு வழக்கமாக முட்டுகிற மாடாக இருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததால், அது ஒரு ஆணையோ ஒரு பெண்ணையோ கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலை செய்யப்படவேண்டும்.
\v 30 அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதால், அவன் தன்னுடைய உயிரை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கவேண்டும்.
\s5
\v 31 அது ஒருவனுடைய மகனை முட்டினாலும் சரி, ஒருவனுடைய மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச் செய்யப்படவேண்டும்.
\v 32 அந்த மாடு ஒரு அடிமையையோ ஒரு அடிமைப்பெண்ணையோ முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கவேண்டும்; மாடு கல்லெறியப்படவேண்டும்.
\p
\s5
\v 33 ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததாலோ, ஒரு குழியை வெட்டி அதை மூடாமல் போனதாலோ, அதிலே ஒரு மாடோ ஒரு கழுதையோ விழுந்தால்,
\v 34 குழிக்கு உரியவன் அதற்கு ஈடாகப் பணத்தை மிருகத்தினுடைய எஜமானுக்குக் கொடுக்கவேண்டும்; செத்ததோ அவனுடையதாகவேண்டும்.
\p
\s5
\v 35 ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டியதால் அது செத்தால், உயிரோடு இருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் தொகையைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளவேண்டும்.
\v 36 அந்த மாடு முன்பே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்தும், அதைக் கட்டிவைக்காமல் இருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கவேண்டும்; செத்ததோ அவனுடையதாக வேண்டும்.
\s5
\c 22
\cl அத்தியாயம்– 22
\s1 சொத்தைப் பாதுகாத்தல்
\p
\v 1 ஒருவன் ஒரு மாட்டையோ ஒரு ஆட்டையோ திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நான்கு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கவேண்டும்.
\v 2 திருடன் திருடும்போது கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவனுடைய இரத்தபழி அடித்தவனைச் சேராது.
\v 3 சூரியன் அவன்மேல் உதித்தபின்பு, அவனுடைய இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லாமல் இருந்தால், தான் செய்த திருட்டுக்காக விற்கப்படுவான்.
\v 4 அவன் திருடின மாடோ, கழுதையோ, ஆடோ உயிருடன் அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இருமடங்காக அவன் கொடுக்கவேண்டும்.
\p
\s5
\v 5 ஒருவன் பிறனுடைய வயலிலோ திராட்சைத்தோட்டத்திலோ தன்னுடைய மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன்னுடைய சொந்தவயலிலும் திராட்சைத்தோட்டத்திலும் உள்ள பலனில் சிறந்ததை எடுத்து, பதிலுக்குக் கொடுக்கவேண்டும்.
\p
\s5
\v 6 அக்கினி எழும்பி, முள்ளுகளில் பற்றி, தானியப்போரையோ, விளைந்த பயிரையோ, வயலிலுள்ள வேறு எதையாவது எரித்துப்போட்டால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு ஈடு செய்யவேண்டும்.
\p
\s5
\v 7 ஒருவன் பிறனிடம் பணத்தையோ, பொருட்களையோ பாதுகாப்பிற்காக வைத்திருக்கும்போது, அது அவனுடைய வீட்டிலிருந்து திருட்டுப்போனால், திருடன் அகப்பட்டால், அவன் அதற்கு இருமடங்காக கொடுக்கவேண்டும்.
\v 8 திருடன் அகப்படாற்போனால், அந்த வீட்டுக்காரன் தான் பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடம் அவனைக் கொண்டுபோகவேண்டும்.
\v 9 காணாமல்போன மாடு, கழுதை, ஆடு, உடை முதலியவைகளில் ஏதாவது ஒன்றை வேறொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றம்சொன்னால், இரண்டு பேர்களுடைய வழக்கும் நியாயாதிபதிகளிடம் வரவேண்டும்; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இருமடங்கு கொடுக்கவேண்டும்.
\p
\s5
\v 10 ஒருவன் தன்னுடைய கழுதையையோ மாட்டையோ ஆட்டையோ மற்ற ஏதாவதொரு மிருகஜீவனையோ ஒருவனிடம் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், காயப்பட்டாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்,
\v 11 அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தரின் நாமத்தில் ஆணையிட்டால் அவர்கள் இருவருக்கும் அதுவே நியாயம்தீர்க்கட்டும்; உடையவன் அதை அங்கிகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கத்தேவையில்லை.
\v 12 அது அவனிடமிருந்து திருடப்பட்டுப்போனால், அவன் அதனுடைய எஜமானுக்கு அதற்காக ஈடுகொடுக்கவேண்டும்.
\v 13 அது வேட்டையாடப்பட்டுப்போனால், அதற்கு சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். வேட்டையாடப்பட்டதற்காக அவன் ஈடுகொடுக்கத்தேவையில்லை.
\p
\s5
\v 14 ஒருவன் பிறனிடம் எதையாவது இரவலாக வாங்கியிருந்தால், அதற்குரியவன் கூட இல்லாதபோது, அது காயப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு ஈடுசெய்யவேண்டும்.
\v 15 அதற்குரியவன் கூட இருந்தால், அவன் ஈடுகொடுக்கத்தேவையில்லை; அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால், அது அவனுடைய வாடகைக்கு வந்த சேதம்.
\s1 சமுதாயக் கடமைகள்
\p
\s5
\v 16 திருமணத்திற்கு நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளைத் திருமணம்செய்யவேண்டும்.
\v 17 அவளுடைய தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிசமுறையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.
\p
\s5
\v 18 சூனியக்காரியை உயிரோடு வைக்கவேண்டாம்.
\p
\v 19 மிருகத்தோடு உறவுவைக்கிற எவனும் கொல்லப்படவேண்டும்.
\p
\s5
\v 20 கர்த்தர் ஒருவரைத்தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவன் அழிக்கப்படவேண்டும்.
\v 21 அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே.
\s5
\v 22 விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;
\v 23 அவர்களை அதிகமாக ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாகக் கேட்டு,
\v 24 கோபமடைந்து, உங்களைப் பட்டயத்தால் கொலைசெய்வேன்; உங்களுடைய மனைவிகள் விதவைகளும், உங்களுடைய பிள்ளைகள் திக்கற்றப் பிள்ளைகளுமாவார்கள்.
\p
\s5
\v 25 உங்களுக்குள் ஏழையாக இருக்கிற என்னுடைய மக்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடம் வட்டி வாங்கவேண்டாம்.
\v 26 பிறனுடைய ஆடையை பதிலாக வாங்கினால், பொழுதுமறையும் முன்பே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக.
\v 27 அவன் ஆடை அதுதானே, அதுவே அவன் தன்னுடைய உடம்பை மூடிக்கொள்ளுகிற துணி; வேறு எதினாலே போர்த்திப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுடைய வார்த்தையைக் கேட்பேன், நான் இரக்கமுள்ளவராக இருக்கிறேன்.
\p
\s5
\v 28 தேவனை நிந்திக்காமலும், உன்னுடைய மக்களை ஆளுகிறவர்களைச் சபிக்காமலும் இரு.
\s5
\v 29 முதல் முதல் பழுக்கும் உன்னுடைய பழத்தையும், வடியும் உன்னுடைய ஆலையின் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன்னுடைய மகன்களில் முதலில் பிறந்தவனை எனக்குக் கொடுப்பாயாக.
\v 30 உன்னுடைய மாடுகளிலும் உன்னுடைய ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாட்கள் தன்னுடைய தாயோடு இருக்கட்டும்; எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக.
\v 31 நீங்கள் எனக்குப் பரிசுத்த மனிதர்களாக இருக்கவேண்டும்; வெளியிலே பீறுண்ட இறைச்சியைச் சாப்பிடாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.
\s5
\c 23
\cl அத்தியாயம்– 23
\s1 நீதி மற்றும் இரக்கத்தின் சட்டங்கள்
\p
\v 1 அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாதே; கொடுமையுள்ள சாட்சிக்காரனாக இருக்க ஆகாதவனோடு சேராதே.
\v 2 தீமைசெய்ய அநேகம்பேர்களின் வழியைப் பின்பற்றாதே; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட கூட்டத்தின் பக்கம் சாய்ந்து, தீர்ப்பு சொல்லாதே.
\v 3 வழக்கிலே தரித்திரனுடைய முகத்தைப் பார்க்காதே.
\p
\s5
\v 4 உன்னுடைய எதிரியின் மாடோ அவனுடைய கழுதையோ தப்பிப்போவதைப் பார்த்தால், அதைத் திரும்ப அவனிடம் கொண்டுபோய் விடு.
\v 5 உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடு விழுந்திருப்பதைப் பார்த்தால், அதற்கு உதவிசெய்யாமல் இருக்கலாமா? அவசியமாக அவனோடுகூட அதற்கு உதவிசெய்யவேண்டும்.
\p
\s5
\v 6 உன்னிடத்தில் இருக்கிற எளியவனுடைய வழக்கிலே அவனுடைய நியாயத்தைப் புரட்டாதே.
\v 7 தவறான காரியத்தை விட்டுவிலகு; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாதே; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.
\v 8 லஞ்சம் வாங்காதே; லஞ்சம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.
\v 9 அந்நியனை ஒடுக்காதே; எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.
\s1 ஓய்வுநாளின் கட்டளை
\p
\s5
\v 10 ஆறுவருடங்கள் நீ உன்னுடைய நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள்.
\v 11 ஏழாம் வருடத்தில் உன்னுடைய மக்களிலுள்ள எளியவர்கள் சாப்பிடவும், மீதியானதை வெளியின் மிருகங்கள் சாப்பிடவும், அந்த நிலம் சும்மாகிடக்க விட்டுவிடு; உன்னுடைய திராட்சத்தோட்டத்தையும் உன்னுடைய ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்யவேண்டும்.
\s5
\v 12 ஆறுநாட்கள் உன்னுடைய வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன்னுடைய மாடும் உன்னுடைய கழுதையும் இளைப்பாறவும், உன்னுடைய அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திரு.
\v 13 நான் உங்களுக்குச் சொன்னவைகள் எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள். அந்நிய தெய்வங்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன்னுடைய வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.
\s1 வருடத்தின் மூன்று பண்டிகைகள்
\p
\s5
\v 14 வருடத்தில் மூன்றுமுறை எனக்குப் பண்டிகை அனுசரி.
\v 15 புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடி ஆபிப் மாதத்தின் குறித்தகாலத்தில் ஏழுநாட்கள் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என்னுடைய சந்நிதியில் வெறுங்கையுடன் வரவேண்டாம்.
\s5
\v 16 நீ வயலில் விதைத்த உன்னுடைய பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருடமுடிவிலே நீ வயலில் உன்னுடைய வேலைகளின் பலனைச் சேர்த்து முடிந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி.
\v 17 வருடத்தில் மூன்றுமுறை உன்னுடைய ஆண்மக்கள் எல்லோரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரட்டும்.
\p
\s5
\v 18 எனக்கு பலியிடும் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு பலியிடும் கொழுப்பை அதிகாலைவரையும் வைக்கவும் வேண்டாம்.
\v 19 உன்னுடைய நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதல் கனியை உன்னுடைய தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டும்; வெள்ளாட்டுக்குட்டியை அதனுடைய தாயின் பாலோடு சமைக்கவேண்டாம்.
\s1 வழியை ஆயத்தம் செய்வதற்கான தேவதூதன்
\p
\s5
\v 20 வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்செய்த இடத்திற்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.
\v 21 அவருடைய சமுகத்தில் எச்சரிக்கையாக இருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்களுடைய துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என்னுடைய பெயர் அவருடைய உள்ளத்தில் இருக்கிறது.
\v 22 நீ அவருடைய வாக்கை நன்றாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்தால், நான் உன்னுடைய எதிரிகளுக்கு எதிரியாகவும், உன்னுடைய விரோதிகளுக்கு விரோதியாகவும் இருப்பேன்.
\s5
\v 23 என்னுடைய தூதனானவர் உனக்கு முன்னேசென்று, எமோரியர்களும், ஏத்தியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அழித்துப்போடுவேன்.
\v 24 நீ அவர்களுடைய தெய்வங்களைப் பணிந்துகொள்ளாமலும், தொழுதுகொள்ளாமலும், அவர்களுடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களை முழுவதும் அழித்து, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடவேண்டும்.
\v 25 உங்களுடைய தேவனாகிய கர்த்தரையே ஆராதிக்கவேண்டும்; அவர் உன்னுடைய அப்பத்தையும் உன்னுடைய தண்ணீரையும் ஆசீர்வதித்து. வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
\s5
\v 26 கர்ப்பம் களைகிறதும், மலடும் உன்னுடைய தேசத்தில் இருப்பதில்லை; உன்னுடைய ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன்.
\v 27 எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன்பு செல்லும்படிச் செய்வேன். நீ செல்லும் இடமெங்கும் உள்ள மக்கள் எல்லோரையும் கொன்று, உன்னுடைய எதிரிகள் எல்லோரையும் முதுகு காட்டச்செய்வேன்.
\v 28 உன்னுடைய முகத்திற்கு முன்பாக ஏவியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும் துரத்திவிட குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.
\v 29 தேசம் பாழாகப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாகப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒராண்டிற்குள்ளே உனக்கு முன்பாக துரத்திவிடாமல்,
\s5
\v 30 நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உனக்கு முன்பாக துரத்திவிடுவேன்.
\v 31 செங்கடல் துவங்கி பெலிஸ்தர்களின் கடல்வரைக்கும், வனாந்திரம் துவங்கி நதிவரைக்கும் உன்னுடைய எல்லையாக இருக்கும்படிச் செய்வேன்; நான் அந்த தேசத்தின் குடிகளை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உனக்கு முன்பாக துரத்திவிடுவாய்.
\v 32 அவர்களோடும் அவர்களுடைய தெய்வங்களோடும் நீ உடன்படிக்கை செய்யாதே.
\v 33 உன்னை எனக்கு விரோதமாகப் பாவம் செய்யவைக்காதபடி உன்னுடைய தேசத்திலே அவர்கள் குடியிருக்கவேண்டாம்; நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அது உனக்குக் கண்ணியாக இருக்கும் என்றார்.
\s5
\c 24
\cl அத்தியாயம்– 24
\s1 உடன்படிக்கை உறுதிப்படுத்தப்படுதல்
\p
\v 1 பின்பு அவர் மோசேயை நோக்கி: நீயும் ஆரோனும், நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பர்களில் எழுபதுபேர்களும் கர்த்தரிடம் ஏறிவந்து, தூரத்திலிருந்து தொழுதுகொள்ளுங்கள்.
\v 2 மோசே மட்டும் கர்த்தருக்கு அருகில் வரலாம்; மற்றவர்கள் அருகில் வரக்கூடாது; மக்கள் அவனோடு ஏறிவரவேண்டாம் என்றார்.
\s5
\v 3 மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நீதி சட்டங்கள் யாவையும் மக்களுக்கு அறிவித்தான்; அப்பொழுது மக்கள் எல்லோரும் ஒரேசத்தமாக: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று மறுமொழி சொன்னார்கள்.
\v 4 மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலையில் எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படி பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.
\s5
\v 5 இஸ்ரவேலின் வாலிபர்களை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்.
\v 6 அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, பாத்திரங்களில் ஊற்றி, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து,
\s5
\v 7 உடன்படிக்கையின் புத்தகத்தை எடுத்து, மக்களின் காதுகளில் கேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.
\v 8 அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, மக்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும்குறித்து கர்த்தர் உங்களோடு செய்த உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்.
\s5
\v 9 பின்பு மோசேயும், ஆரோனும், நாதாபும் அபியூவும், இஸ்ரவேலுடைய மூப்பர்கள் எழுபதுபேர்களும் மலைக்கு ஏறிப்போய்,
\v 10 இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழுள்ள இடமானது இழைத்த வேலைப்பாடு மிகுந்த நீலக்கல்லைப்போல தெளிந்த வானத்தின் சுடரொளிக்கு ஒப்பாகவும் இருந்தது.
\v 11 அவர் இஸ்ரவேலர்களுடைய தலைவர்கள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு சாப்பிட்டுக் குடித்தார்கள்.
\p
\s5
\v 12 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு. நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.
\v 13 அப்பொழுது மோசே தன்னுடைய ஊழியக்காரனாகிய யோசுவாவோடு எழுந்து போனான். மோசே தேவனுடைய மலையில் ஏறிப்போகும்போது,
\s5
\v 14 அவன் மூப்பர்களை நோக்கி: நாங்கள் உங்களிடம் திரும்பிவரும்வரை, நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும், ஊரும் உங்களிடம் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு ஏதாவது பிரச்சனை உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்றான்.
\v 15 மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடியது.
\s5
\v 16 கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாட்கள் அதை மூடியிருந்தது; ஏழாம்நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.
\v 17 மலையின் உச்சியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேலர்களுடைய கண்களுக்கு சுட்டெரிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.
\v 18 மோசே மேகத்தின் நடுவிலே நுழைந்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாட்கள் மலையில் இருந்தான்.
\s5
\c 25
\cl அத்தியாயம்– 25
\s1 ஆசாரிப்புக்கூடாரத்திற்கான காணிக்கைகள்
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 இஸ்ரவேலர்கள் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாக உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடம் எனக்குக் காணிக்கையை வாங்கிக்கொள்.
\s5
\v 3 நீங்கள் அவர்களிடம் வாங்க வேண்டிய காணிக்கைகள், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
\v 4 இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்பு நூலும், மெல்லிய பஞ்சு நூலும், வெள்ளாட்டு முடியும்,
\v 5 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலும், மெல்லியத்தோலும், சீத்திம் மரமும்,
\v 6 விளக்கெண்ணெயும், அபிஷேகத் தைலத்திற்குப் பரிமளத்தைலமும், தூபத்திற்கு நறுமண வாசனைப் பொருட்களும்,
\v 7 ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.
\s5
\v 8 அவர்கள் நடுவிலே நான் தங்கியிருக்க, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குங்கள்.
\v 9 நான் உனக்குக் காண்பிக்கும் ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரியின்படியும், அதனுடைய எல்லாப்பொருட்களின் மாதிரியின்படியும் அதைச் செய்யுங்கள்.
\s1 உடன்படிக்கையின் பெட்டி
\p
\s5
\v 10 சீத்திம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்யுங்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாக இருக்கட்டும்.
\v 11 அதை எங்கும் சுத்தப்பொன் தகட்டால் மூடு; நீ அதனுடைய உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதனால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் விளிம்பு உண்டாக்கி,
\s5
\v 12 அதற்கு நான்கு பொன் வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படித் தைத்து,
\v 13 சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
\v 14 அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சு.
\s5
\v 15 அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.
\v 16 நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கையின் கட்டளைகளை அந்தப்பெட்டியிலே வைக்கவேண்டும்.
\v 17 சுத்தப்பொன்னினாலே கிருபாசனத்தைச் செய்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக இருக்கட்டும்.
\v 18 பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்; பொன்னைத் தகடாக அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைக்கவேண்டும்.
\s5
\v 19 ஒருபக்கத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபக்கத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் செய்து வை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடு இருக்கும்படி ஒரேவேலையாக, அவைகளைச் செய்யவேண்டும்.
\v 20 அந்தக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை உயர விரித்து, தங்களுடைய இறக்கைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாக இருக்கட்டும்; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாக இருப்பதாக.
\v 21 கிருபாசனத்தைப் பெட்டியின்மீது வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கையின் கட்டளைகளை வைப்பாயாக.
\s5
\v 22 அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலுமிருந்து நான் இஸ்ரவேலர்களுக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடு சொல்லுவேன்.
\s1 மேஜை
\p
\s5
\v 23 சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் செய்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாக இருக்கட்டும்.
\v 24 அதைச் சுத்தப் பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்னினால் விளிம்பை உண்டாக்கி,
\s5
\v 25 சுற்றிலும் அதற்கு நான்கு விரலளவு உள்ள சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் விளிம்பையும் உண்டாக்கி,
\v 26 அதற்கு நான்கு பொன்வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு கால்களுக்கு இருக்கும் நான்கு மூலைகளிலும் நீ தைக்கவேண்டும்.
\v 27 அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்கள் உண்டாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும்.
\s5
\v 28 அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடு; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.
\v 29 அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலிக்கான கிண்ணங்களையும் செய்யக்கடவாய்; அவைகளைப் சுத்தப்பொன்னினால் செய்.
\v 30 மேஜையின்மேல் எப்போதும் என்னுடைய சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கவேண்டும்.
\s1 விளக்குத்தண்டு
\p
\s5
\v 31 சுத்தப்பொன்னினால் ஒரு குத்துவிளக்கை உண்டாக்கு; அது பொன்னினால் அடிப்புவேலையாகச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும், கிளைகளும், மொக்குகளும், பழங்களும், பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.
\v 32 ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும்.
\s5
\v 33 ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும்.
\v 34 விளக்குத்தண்டிலோ, வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நான்கு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக.
\s5
\v 35 அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருக்கட்டும்; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்.
\v 36 அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாக இருக்கட்டும்; அவையெல்லாம் தகடாக அடித்த சுத்தப்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாக இருக்கவேண்டும்.
\s5
\v 37 அதில் ஏழு அகல்களைச் செய்; அதற்கு நேர்எதிராக எரியும்படி அவைகள் ஏற்றப்படவேண்டும்.
\v 38 அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் சுத்தப்பொன்னினால் செய்யப்படுவதாக.
\v 39 அதையும், அதற்குரிய பணிப்பொருட்கள் யாவையும் ஒரு தாலந்து சுத்தப்பொன்னினால் செய்யவேண்டும்.
\v 40 மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி அவைகளைச் செய்ய எச்சரிக்கையாக இரு.
\s5
\c 26
\cl அத்தியாயம்– 26
\s1 பரிசுத்த ஆசரிப்புக்கூடாரம்
\p
\v 1 மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும், இளநீலநூலினாலும், இரத்தாம்பரநூலினாலும், சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் ஆசரிப்பு கூடாரத்தை உண்டாக்கு; அவைகளில் விசித்திர பின்னல்வேலையாகக் கேருபீன்களைச் செய்.
\v 2 ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும், நான்கு முழ அகலமுமாக இருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாக இருக்கவேண்டும்.
\v 3 ஐந்து மூடுதிரைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
\s5
\v 4 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைசி ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டாக்கு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரைகளின் ஓரத்திலும் அப்படியே செய்.
\v 5 காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கு.
\v 6 ஐம்பது பொன் கொக்கிகளை செய்து, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைக்கப்படவேண்டும். அப்பொழுது ஆசரிப்பு கூடாரம் ஒன்றாகும்.
\s5
\v 7 ஆசரிப்பு கூடாரத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டுமுடியால் பதினொரு மூடுதிரைகளை உண்டாக்கு.
\v 8 ஒவ்வொரு மூடுதிரைகளும் முப்பது முழ நீளமும், நான்கு முழ அகலமாக இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருக்கவேண்டும்.
\v 9 ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடவேண்டும்.
\s5
\v 10 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைசி ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
\v 11 ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடவேண்டும்.
\s5
\v 12 கூடாரத்தின் மூடுதிரைகளில் மீதமான பாதிமூடுதிரை ஆசாரிப்பு கூடாரத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.
\v 13 கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்பக்கத்தில் ஒரு முழமும் அந்தப்பக்கத்தில் ஒரு முழமும் ஆசரிப்பு கூடாரத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.
\v 14 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத் தோலால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் மெல்லியத்தோலால் ஒரு மூடியையும் உண்டாக்கவேண்டும்.
\p
\s5
\v 15 ஆசரிப்பு கூடாரத்திற்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும்.
\v 16 ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக இருக்கவேண்டும்.
\v 17 ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் இரண்டு பொருந்தும் முனை இருக்கவேண்டும்; ஆசரிப்பு கூடாரங்களில் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்யவேண்டும்.
\v 18 ஆசரிப்பு கூடாரத்துக்காகசெய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகைகள் தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கட்டும்.
\s5
\v 19 அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டாக்கவேண்டும்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
\v 20 ஆசரிப்பு கூடாரத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,
\v 21 அவைகளின் கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டாக்கவேண்டும்; ஒரு பலகையின் கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
\s5
\v 22 ஆசரிப்பு கூடாரத்தின் மேற்குபக்கத்திற்கு ஆறு பலகைகளையும்,
\v 23 ஆசரிப்பு கூடாரத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டாக்கவேண்டும்.
\v 24 அவைகள் கீழே சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்கு ஆகும்.
\v 25 அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.
\s5
\v 26 சீத்திம் மரத்தால் ஆசரிப்பு கூடாரத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
\v 27 ஆசாரிப்பு கூடாரத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், ஆசரிப்பு கூடாரத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் செய்.
\v 28 நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைவரை பலகைகளின் மையத்தில் ஊடுருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
\s5
\v 29 பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் செய்து, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடவேண்டும்.
\v 30 இப்படியாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி ஆசரிப்பு கூடாரத்தை அமைக்கவேண்டும்.
\p
\s5
\v 31 இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு மூடுதிரையை செய்யவேண்டும்; அதிலே வேலைப்பாடு செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.
\v 32 சீத்திம் மரத்தால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நான்கு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நான்கு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.
\v 33 கொக்கிகளின்கீழே அந்த மூடுதிரையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே மூடுதிரைக்குள்ளாக வைக்கவேண்டும்; அந்த மூடுதிரை பரிசுத்த இடத்திற்கும் மகா பரிசுத்த இடத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.
\s5
\v 34 மகா பரிசுத்த இடத்திலே சாட்சிப்பெட்டியின்மேல் கிருபாசனத்தை வைப்பாயாக;
\v 35 மூடுதிரைக்கு வெளியே மேஜையையும், மேஜைக்கு எதிரே ஆசரிப்பு கூடாரத்தின் தென்பக்கமாகக் குத்துவிளக்கை வைத்து, மேஜையை வடபக்கமாக வைப்பாயாக.
\s5
\v 36 இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்கு திரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,
\v 37 அந்தத் தொங்கு திரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப்பாதங்களை வார்க்கவேண்டும்.
\s5
\c 27
\cl அத்தியாயம்– 27
\s1 தகனபலியின் பலிபீடம்
\p
\v 1 ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டாக்கவேண்டும்; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாக இருப்பதாக.
\v 2 அதின் நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகளை உண்டாக்கவேண்டும்; அதின் கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும்.
\s5
\v 3 அதின் சாம்பலை எடுக்கத்தகுந்த சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணங்களையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்கவேண்டும்; அதின் பணிப்பொருட்களையெல்லாம் வெண்கலத்தால் செய்வாயாக.
\v 4 வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைச் செய்து, அந்தச் சல்லடையின் நான்கு மூலைகளிலும் நான்கு வெண்கல வளையங்களை உண்டாக்கி,
\s5
\v 5 அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதிஉயரத்தில் இருக்கும்படி அதை பலிபீடத்தின் அடியில் சுற்றடைப்புக்குக் கீழே வைக்கவேண்டும்.
\v 6 பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடவேண்டும்.
\s5
\v 7 பலிபீடத்தைச் சுமக்கும்படி அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே மாட்டப்பட்டிருக்கவேண்டும்.
\v 8 அதை உள்ளே மற்றும் வெளியேவிட்டுப் பலகைகளினாலே செய்யவேண்டும்; மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அதைச்செய்யவேண்டும்.
\s1 பிராகாரம்
\p
\s5
\v 9 ஆசரிப்பு கூடாரத்திற்கு பிராகாரத்தையும் உண்டாக்கவேண்டும்; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்.
\v 10 அவைகளுக்கு வெண்கலத்தினால் இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும்.
\s5
\v 11 அப்படியே வடக்கு பக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாக இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும்.
\v 12 பிராகாரத்தின் மேற்கு பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும்.
\v 13 சூரியன் உதிக்கிற திசையாகிய கிழக்குப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பது முழ அகலமாக இருக்கவேண்டும்.
\s5
\v 14 அங்கே ஒரு பக்கத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
\v 15 மறுபக்கத்துக்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
\v 16 பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாகச் செய்யப்பட்ட இருபதுமுழ நீளமான ஒரு தொங்கு திரையும் அதற்கு நான்கு தூண்களும், அவைகளுக்கு நான்கு பாதங்களும் இருக்கவேண்டும்.
\s5
\v 17 சுற்று பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் வளையம் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
\v 18 பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபக்கத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாக இருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாக இருக்கவேண்டும்.
\v 19 ஆசரிப்பு கூடாரத்தின் எல்லா பணிகளுக்குத் தேவையான எல்லா பணிப்பொருட்களும், அதின் எல்லா ஆப்புகளும், பிராகாரத்தின் எல்லா ஆப்புகளும் வெண்கலமாக இருக்கவேண்டும்.
\s1 விளக்குத்தண்டிற்கான எண்ணெய்
\p
\s5
\v 20 குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களுக்குக் கட்டளையிடு.
\v 21 கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைக்கு வெளியே ஆரோனும் அவனுடைய மகன்களும் மாலை துவங்கி அதிகாலைவரை கர்த்தருடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கவேண்டும்; இது இஸ்ரவேலர்களின் தேசத்திற்கு தலைமுறை தலைமுறையாக நிரந்தர கட்டளையாக இருக்கட்டும்.
\s5
\c 28
\cl அத்தியாயம்– 28
\s1 ஆசாரிய உடை
\p
\v 1 உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ ஆரோனையும் அவனோடு அவனுடைய மகன்களாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்களையும் இஸ்ரவேலர்களிலிருந்து பிரித்து, உன்னிடம் சேர்த்துக்கொள்.
\v 2 உன்னுடைய சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாக இருக்கும்படி, பரிசுத்த ஆடைகளை உண்டாக்கு.
\v 3 ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்ய அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு ஆடைகளை உண்டாக்க, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள எல்லாரோடும் நீ சொல்லு.
\s5
\v 4 அவர்கள் உண்டாக்கவேண்டிய ஆடைகள்; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், வேலைப்பாடுடன் நெய்யப்பட்ட உள்சட்டையும், தலைப்பாகையும், இடுப்புவாருமே. உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசுத்த ஆடைகளை உண்டாக்கவேண்டும்.
\v 5 அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிக்கட்டும்.
\s1 ஏபோத்து
\p
\s5
\v 6 ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாகச் செய்யட்டும்.
\v 7 அது ஒன்றாக இணைக்கப்படும்படி, இரண்டு தோள்துண்டுகளின்மேலும், அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும்.
\v 8 அந்த ஏபோத்தின்மேல் இருக்கவேண்டிய வேலைப்பாடு மிகுந்த வார்க்கச்சை அந்த வேலையைப்போலவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டு, அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்.
\v 9 பின்னும் நீ இரண்டு கோமேதகக்கற்களை எடுத்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களை அவைகளில் வெட்டுவாயாக.
\s5
\v 10 அவர்கள் பிறந்த வரிசையின்படி, அவர்களுடைய பெயர்களில் ஆறு பெயர்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு பெயர்கள் மறுகல்லிலும் இருக்கவேண்டும்.
\v 11 இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறவர்கள் செய்யும் வேலைக்கு ஒப்பாக அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதி.
\v 12 ஆரோன் கர்த்தருக்கு முன்பாகத் தன்னுடைய இரண்டு தோள்களின்மேலும் இஸ்ரவேல் மகன்களின் பெயர்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்து தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படி கற்களாக வைக்கவேண்டும்.
\s5
\v 13 பொன்னினால் வளையங்களைச்செய்து,
\v 14 சரியான அளவுக்குப் பின்னல்வேலையான இரண்டு சங்கிலிகளையும், சுத்தப்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டு.
\s1 மார்ப்பதக்கம்
\p
\s5
\v 15 நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திரவேலையாகச் செய்; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.
\v 16 அது சதுரமும் இரட்டையும், ஒரு சாண் நீளமும் ஒரு சாண் அகலமுமாக இருக்கவேண்டும்.
\s5
\v 17 அதிலே நான்கு வரிசை இரத்தினக்கற்களை நிறையப் பதிக்கவும்; முதலாம் வரிசை பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
\v 18 இரண்டாம் வரிசை மரகதமும் இந்திரநீலமும் வைரமும்,
\v 19 மூன்றாம் வரிசை கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
\v 20 நான்காம் வரிசை படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாக இருக்கட்டும்; இவைகள் அந்தந்த வரிசையில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.
\s5
\v 21 இந்தக் கற்கள் இஸ்ரவேல் மகன்களின் பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாக இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய பெயர் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாக வெட்டியிருக்கவேண்டும்.
\v 22 மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான சுத்தப்பொன் சங்கிலிகளையும் செய்து,
\v 23 அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து,
\v 24 பொன்னினால் செய்த அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டி,
\s5
\v 25 அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு முனைகளை ஏபோத்துத் தோள்துண்டின்மேல் அதின் முன்பக்கத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டவேண்டும்.
\v 26 நீ இரண்டு பொன்வளையங்களை செய்து, அவைகளை ஏபோத்தின் கிழக்குபக்கத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதனுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து,
\s5
\v 27 வேறு இரண்டு பொன்வளையங்களைப் செய்து, அவைகளை ஏபோத்தின் முன்பக்கத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் வேலைப்பாடு மிகுந்த வார்க்கச்சைக்கு மேலாகவும் வைத்து,
\v 28 மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான வார்க்கச்சைக்கு மேலாக இருக்கும்படி, அது ஏபோத்திலிருந்து நீங்காதபடி, அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடு இளநீல நாடாவினால் கட்டவேண்டும்.
\s5
\v 29 ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்போது, இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களைத் தன்னுடைய இருதயத்தின்மேல் இருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் அணிந்துக்கொள்ளவேண்டும்.
\v 30 நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைக்கவேண்டும்; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் நுழையும்போது, அவைகள் அவனுடைய இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன்னுடைய இருதயத்தின்மேல் இஸ்ரவேலர்களுடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் அணிந்துக்கொள்ளவேண்டும்.
\s1 மற்ற ஆசாரிய உடைகள்
\p
\s5
\v 31 ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கவேண்டும்.
\v 32 தலை நுழைகிற அதின் துவாரம் அதின் நடுவில் இருக்கவும், அதின் துவாரத்துக்கு நெய்யப்பட்ட வேலைப்பாடுள்ள ஒரு நாடா சுற்றிலும் இருக்கவேண்டும்; அது கிழியாதபடி மார்க்கவசத்தின் துவாரத்துக்கு ஏற்றதாக இருக்கவேண்டும்.
\s5
\v 33 அதின் கீழ் ஓரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதுளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி செய்துவைக்கவேண்டும்.
\v 34 அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதுளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமுமாகத் தொங்கட்டும்.
\v 35 ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த இடத்துக்குள் நுழையும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதை அணிந்துகொள்ளவேண்டும்.
\p
\s5
\v 36 சுத்தப்பொன்னினால் ஒரு தகட்டைச்செய்து, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டி,
\v 37 அது தலைப்பாகையில் இருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டு.
\v 38 இஸ்ரவேலர்கள் தங்களுடைய பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் அக்கிரமத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக; கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் அங்கிகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவனுடைய நெற்றியின்மேல் இருக்கவேண்டும்.
\s5
\v 39 மெல்லிய பஞ்சுநூலால் வேலைப்பாடு மிகுந்த உள்சட்டையும், மெல்லிய பஞ்சுநூலால் தலைப்பாகையையும் உண்டாக்கி, இடுப்புவாரை வேலைப்பாட்டுடன் செய்யவேண்டும்.
\s5
\v 40 ஆரோனுடைய மகன்களுக்கும், மகிமையும் அலங்காரமுமாக இருக்கும்படி, அங்கிகளையும், இடுப்புவார்களையும், தலைப்பட்டைகளையும் உண்டாக்கவேண்டும்.
\v 41 உன்னுடைய சகோதரனாகிய ஆரோனும் அவனோடு அவனுடைய மகன்களும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ அந்த ஆடைகளை அவர்களுக்கு அணிவித்து, அவர்களை அபிஷேகம்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைசெய்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்.
\s5
\v 42 அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படி, இடுப்புத்துவங்கி முழங்கால்வரை அணிய சணல்நூல் உள்ளாடைகளையும் உண்டாக்கவேண்டும்.
\v 43 ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த இடத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போதும் பலிபீடத்தின் அருகில் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடி, அவைகளை அணிந்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நிரந்தர கட்டளை.
\s5
\c 29
\cl அத்தியாயம்– 29
\s1 ஆசாரியர்களைப் பரிசுத்தப்படுத்துதல்
\p
\v 1 அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்ய அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்படி, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியது: ஒரு காளையையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்.
\v 2 புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லியமாவினால் செய்து,
\s5
\v 3 அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடு அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து,
\v 4 ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் முன்பாக வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவி,
\s5
\v 5 அந்த ஆடைகளை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் அணிந்து, ஏபோத்தின் விசித்திரமான வார்க்கச்சையும் அவனுக்குக் கட்டி,
\v 6 அவன் தலையிலே தலைப்பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைத் தலைப்பாகையின்மேல் அணிந்து,
\v 7 அபிஷேக தைலத்தை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி, அவனை அபிஷேகம் செய்யவேண்டும்.
\s5
\v 8 பின்பு அவனுடைய மகன்களை வரச்செய்து, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்து.
\v 9 ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இடுப்புக்கச்சைகளைக் கட்டி, அவனுடைய மகன்களுக்கு தொப்பிகளையும் அணிந்து, இப்படியாக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் பிரதிஷ்டை செய்யவேண்டும்.
\s5
\v 10 காளையை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவரவேண்டும்; அப்பொழுது ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கவேண்டும்.
\v 11 பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரத்து வாசலின் அருகில் கர்த்தருடைய சந்நிதானத்தில் கொன்று,
\s5
\v 12 அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன்னுடைய விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் பூசி, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
\v 13 குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின்மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து,
\v 14 காளையின் இறைச்சியையும் அதின் தோலையும் அதின் சாணியையும் முகாமிற்கு வெளியே அக்கினியால் சுட்டெரிக்கவேண்டும்; இது பாவநிவாரணபலி.
\s5
\v 15 பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைத்து.
\v 16 அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்து,
\v 17 ஆட்டுக்கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதனுடைய குடல்களையும் அதனுடைய தொடைகளையும் கழுவி, அவைகளை அந்த வெட்டப்பட்ட இறைச்சித் துண்டுகளோடும் அதனுடைய தலையோடும் வைத்து,
\v 18 ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் எரித்துவிடு; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்கதகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாக இருக்கும்.
\s5
\v 19 பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைக்கவேண்டும்.
\v 20 அப்பொழுது அந்தக் கடாவைக் கொன்று, அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காதின் மடலிலும், அவனுடைய மகன்களின் வலது காதுகளின் மடலிலும், அவர்களுடைய வலது கைகளின் பெருவிரலிலும், அவர்களுடைய வலது கால்களின் பெருவிரலிலும் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
\s5
\v 21 பலிபீடத்தின்மேல் இருக்கும் இரத்தத்திலும் அபிஷேகத் தைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவனுடைய ஆடைகளும் அவனுடைய மகன்களும் அவர்களுடைய ஆடைகளும் பரிசுத்தமாக்கப்படும்படி, அவன்மேலும் அவனுடைய ஆடைகள்மேலும் அவனுடைய மகன்கள்மேலும் அவர்களுடைய ஆடைகள்மேலும் தெளிக்கவேண்டும்.
\s5
\v 22 அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவாக இருப்பதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு சிறுநீரகங்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்,
\v 23 கர்த்தருடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து,
\s5
\v 24 அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவனுடைய மகன்களின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி,
\v 25 பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் எரித்துப்போடு; இது கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலி.
\s5
\v 26 ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டு; அது உன்னுடைய பங்காக இருக்கும்.
\v 27 மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவனுடைய மகன்களுடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்க்கண்டத்தையும் உயர்த்திப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.
\v 28 அது உயர்த்திப் படைக்கிற படைப்பானதால், இஸ்ரவேலர்கள் பலியிடுகிறவைகளில் அவைகளே நித்திய கட்டளையாக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேர்வதாக; இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய சந்நிதானத்தில் உயர்த்திப் படைக்கிற சமாதானபலிகளில் அவைகளே உயர்த்திப் படைக்கும் படைப்பாக இருக்கவேண்டும்.
\s5
\v 29 ஆரோனின் பரிசுத்த ஆடைகள், அவனுக்குப்பின்பு, அவனுடைய மகன்களுக்கு சேரும்; அவர்கள் அவைகளை அணிந்துகொண்டு, அபிஷேகம்செய்யப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.
\v 30 அவனுடைய மகன்களில்அவனுடைய பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த இடத்தில்ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் நுழையும்போது, அவைகளை ஏழுநாட்கள்வரை அணிந்துக்கொள்ளவேண்டும்.
\s5
\v 31 பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதனுடைய இறைச்சியை பரிசுத்த இடத்தில் சமைக்கவேண்டும்.
\v 32 அந்த ஆட்டுக்கடாவின் இறைச்சியையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவனுடைய மகன்களும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே சாப்பிடவேண்டும்.
\v 33 அவர்களைப் பிரதிஷ்டைச்செய்து பரிசுத்தப்படுத்தும்படி, அவைகளால் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபடியால், அவைகளை அவர்கள் சாப்பிடவேண்டும்; அந்நியனோ அவைகளை சாப்பிடகூடாது; அவைகள் பரிசுத்தமானவைகள்.
\v 34 பிரதிஷ்டையின் இறைச்சியிலும் அப்பத்திலும் ஏதாவது அதிகாலைவரை மீதியாக இருந்ததால், அதை அக்கினியால் சுட்டெரிக்கவேண்டும்; அது சாப்பிடப்படக்கூடாது, அது பரிசுத்தமானது.
\s5
\v 35 இந்தபடி நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் செய்யவேண்டும்; ஏழுநாட்கள்வரை நீ அவர்களைப் பிரதிஷ்டைசெய்து,
\v 36 பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பரிகாரம் செய்தபின்பு, அந்தப் பலிபீடத்தைச் சுத்திகரிக்கசெய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்செய்யவேண்டும்.
\v 37 ஏழுநாட்கள்வரை பலிபீடத்திற்காகப் பரிகாரம்செய்து, அதைப் பரிசுத்தமாக்கவேண்டும்; பலிபீடமானது மகா பரிசுத்தமாக இருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.
\p
\s5
\v 38 பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவென்றால்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.
\v 39 ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடவேண்டும்.
\s5
\v 40 ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும், இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சை ரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடன் படைக்கவேண்டும்.
\s5
\v 41 மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலே பலியிட்டு, காலையிலே செலுத்தின ஆகாரபலிக்கும் பானபலிக்கும் ஒரேமாதிரியாக அதைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.
\v 42 உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக்கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.
\s5
\v 43 அங்கே இஸ்ரவேலர்களைச் சந்திப்பேன்; அந்த இடம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.
\v 44 ஆசரிப்புக்கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் பரிசுத்தப்படுத்தி,
\s5
\v 45 இஸ்ரவேலர்களின் நடுவே நான் தங்கி, அவர்களுக்குத் தேவனாக இருப்பேன்.
\v 46 தங்கள் நடுவே நான் தங்கும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த நான் தங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்களுடைய தேவனாகிய கர்த்தர்.
\s5
\c 30
\cl அத்தியாயம்– 30
\s1 தூப பீடம்
\p
\v 1 தூபங்காட்டுவதற்கு ஒரு தூபபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும்.
\v 2 அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாக இருக்கவேண்டும், அதனுடைய கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்.
\s5
\v 3 அதின் மேல்பக்கத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்விளிம்பை உண்டாக்கி,
\v 4 அந்த விளிம்பின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்கவேண்டும்.
\s5
\v 5 அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளையும் பொன்தகட்டால் மூடவேண்டும்.
\v 6 சாட்சிப்பெட்டிக்கு முன்பாக இருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்திற்கும் முன்பாக அதை வைக்கவேண்டும்.
\s5
\v 7 ஆரோன் காலைதோறும் அதின்மேல் நறுமண தூபம்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபம்காட்டவேண்டும்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபம்காட்டவேண்டும்.
\v 8 உங்களுடைய தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்டவேண்டிய நிரந்தர தூபம் இதுவே.
\v 9 அதின்மேல் அந்நிய தூபத்தையோ, தகனபலியையோ, ஆகாரபலியையோ படைக்கவேண்டாம்; அதின்மேல் பானபலியை ஊற்றவும் வேண்டாம்.
\s5
\v 10 வருடத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தால் அதின் கொம்புகளின்மேல் பரிகாரம் செய்யவேண்டும்; உங்களுடைய தலைமுறைதோறும் வருடத்தில் ஒருமுறை அதின்மேல் பரிகாரம் செய்யவேண்டும்; அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.
\s1 பாவநிவர்த்திக்கான பணம்
\p
\s5
\v 11 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 12 நீ இஸ்ரவேலர்களை அவர்கள் எண்ணிக்கையின்படி கணக்குப்பார்க்க, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடி, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் நேரத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கவேண்டும்.
\v 13 எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.
\v 14 எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும்.
\s5
\v 15 உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்திசெய்யும்படி நீங்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தும்போது, செல்வந்தன் அரைச்சேக்கலுக்கு அதிகமாகக் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம்.
\v 16 அந்த பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேலர்கள் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுக்கவேண்டும்; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு, இஸ்ரவேலர்களுக்கு ஞாபகக்குறியாக இருக்கும் என்றார்.
\s1 கழுவும் தொட்டி
\p
\s5
\v 17 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 18 கழுவுவதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றவேண்டும்.
\s5
\v 19 அதனிடம் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளையும் தங்களுடைய கால்களையும் கழுவவேண்டும்.
\v 20 அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தில் ஆராதனைசெய்ய சேரும்போதும், அவர்கள் சாகாதபடி தண்ணீரினால் தங்களைக் கழுவவேண்டும்.
\v 21 அவர்கள் சாகாதபடி தங்களுடைய கைகளையும் தங்களுடைய கால்களையும் கழுவவேண்டும்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவனுடைய சந்ததியார்களுக்கும் நிரந்தர கட்டளையாக இருக்கும் என்றார்.
\s1 அபிஷேக தைலம்
\p
\s5
\v 22 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 23 மேன்மையான நறுமணப்பொருட்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த இடத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் எடையையும், நறுமணப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும்,
\v 24 இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் எடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து,
\v 25 அதினால், பரிமளத்தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளத்தைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டாக்கு; அது பரிசுத்த அபிஷேக தைலமாக இருக்கக்கடவது.
\s5
\v 26 அதினாலே ஆசரிப்புக்கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும்,
\v 27 மேஜையையும், அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூப பீடத்தையும்,
\v 28 தகன பலிபீடத்தையும் அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து,
\s5
\v 29 அவைகள் மகா பரிசுத்தமாக இருக்கும்படி, அவைகளைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாக இருக்கும்.
\v 30 ஆரோனும் அவனுடைய மகன்களும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ அவர்களை அபிஷேகம்செய்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்.
\v 31 இஸ்ரவேலர்களோடு நீ பேசிச் சொல்லவேண்டியது: உங்களுடைய தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேகத் தைலமாக இருக்கவேண்டும்.
\s5
\v 32 இது மனிதர்களுடைய சரீரத்தின்மேல் ஊற்றப்படக்கூடாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவும்கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கும்.
\v 33 இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் ஊற்றுகிறவனும், தன்னுடைய மக்களில் இராதபடி அறுப்புண்டுபோகவேண்டும் என்று சொல் என்றார்.
\s1 தூபம்
\p
\s5
\v 34 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமஎடையாக எடுத்து,
\v 35 தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, தூய்மையான பரிசுத்த தூபவர்க்கமாக்கி,
\v 36 அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக்கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைக்கவேண்டும்; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாக இருக்கவேண்டும்.
\s5
\v 37 இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளக்கூடாது; இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும்.
\v 38 இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன்னுடைய மக்களில் இல்லாதபடி துண்டிக்கப்படவேண்டும் என்றார்.
\s5
\c 31
\cl அத்தியாயம்– 31
\s1 பெசலெயேலும் அகோலியாபும்
\p
\v 1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து,
\s5
\v 3 வித்தியாசமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்வதற்கும்,
\v 4 இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் அலங்காரவேலைகளைச் செய்வதற்கும்,
\v 5 மற்றும் எல்லாவித வேலைகளையும் யூகித்துச் செய்வதற்கும் வேண்டிய ஞானமும், புத்தியும், அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன்.
\s5
\v 6 மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் மகனாகிய அகோலியாபையும் அவனோடு துணையாகக் கூட்டினதுமட்டுமல்லாமல், ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் செய்வார்கள்.
\v 7 ஆசரிப்புக்கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள எல்லா பணிப்பொருட்களையும்,
\v 8 மேஜையையும் அதின் பணிப்பொருட்களையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் எல்லா கருவிகளையும், தூபபீடத்தையும்,
\v 9 தகனபலிபீடத்தையும் அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும் அதின் பாதத்தையும்,
\s5
\v 10 ஆராதனை ஆடைகளையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும், அவனுடைய மகன்களின் ஆடைகளையும்,
\v 11 அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்திற்கு வாசனைப்பொருட்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடி, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.
\s1 ஓய்வுநாள்
\p
\s5
\v 12 மேலும், கர்த்தர் மோசேயிடம்:
\v 13 நீ இஸ்ரவேலர்களை நோக்கி, நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாக இருக்கும்.
\v 14 ஆகையால், ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டும்; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதின் பரிசுத்தத்தை கெடுக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; அந்த நாளிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன்னுடைய மக்களின் நடுவில் இல்லாதபடி துண்டிக்கப்பட்டுபோவான்.
\v 15 ஆறுநாட்களும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை செய்யாமல் ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
\s5
\v 16 ஆகையால், இஸ்ரவேலர்கள் தங்களுடைய தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக அனுசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளவேண்டும்.
\v 17 அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அடையாளமாக இருக்கும்; ஆறுநாட்களுக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே வேலைகளை முடித்து ஓய்ந்திருந்தார் என்றார்.
\p
\s5
\v 18 சீனாய்மலையில் அவர் மோசேயோடு பேசி முடிந்தபின்பு, தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய இரண்டு சாட்சி பலகைகளை அவனிடம் கொடுத்தார்.
\s5
\c 32
\cl அத்தியாயம்– 32
\s1 பொற்கன்றுகுட்டி
\p
\v 1 மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை மக்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடம் கூட்டம்கூடி. அவனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டு வந்த அந்த மோசேக்கு என்ன நடந்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டாக்கும் என்றார்கள்.
\v 2 அதற்கு ஆரோன்: உங்களுடைய மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்களுடைய காதுகளில் இருக்கிற தங்க ஆபரணங்களை கழற்றி, என்னிடம் கொண்டுவாருங்கள் என்றான்.
\s5
\v 3 மக்கள் எல்லோரும் தங்களுடைய காதுகளில் இருந்த ஆபரணங்களைக் கழற்றி, ஆரோனிடம் கொண்டுவந்தார்கள்.
\v 4 அவர்களுடைய கையிலிருந்து அவன் அந்தப் தங்கங்களை வாங்கி, சிற்பக்கருவியைக் கூர்மையாக்கி, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலர்களே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்களுடைய தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.
\s5
\v 5 ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்.
\v 6 மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்கதகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, மக்கள் சாப்பிடவும், குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.
\p
\s5
\v 7 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன்னுடைய மக்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்.
\v 8 அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப்பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலர்களே உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்களுடைய தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.
\s5
\v 9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த மக்களைப் பார்த்தேன்; இவர்கள் பிடிவாதமுள்ள மக்கள்.
\v 10 ஆகையால் என்னுடைய கோபம் இவர்கள்மேல் வரவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உனக்கு ஒரு பெரிய தேசத்தை உண்டாக்குவேன் என்றார்.
\v 11 மோசே தன்னுடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பெலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உம்முடைய மக்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவது ஏன்?
\s5
\v 12 மலைகளில் அவர்களைக் கொன்றுபோடவும், பூமியின்மேல் இல்லாதபடி அவர்களை அழிக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்வதற்காகவே அவர்களைப் புறப்படச்செய்தார் என்று எகிப்தியர்கள் சொல்லுவானேன்? உம்முடைய கடுங்கோபத்தைவிட்டுத் திரும்பி, உமது மக்களுக்குத் தீங்குசெய்யாதபடி, அவர்கள்மேல் பரிதாபம்கொள்ளும்.
\v 13 உமது ஊழியக்காரர்களாகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்களுடைய சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்து, நான் சொன்ன இந்த தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார்கள் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படி, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தனை செய்தான்.
\v 14 அப்பொழுது கர்த்தர் தமது மக்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச்செய்யாதபடி பரிதாபங்கொண்டார்.
\p
\s5
\v 15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவனுடைய கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.
\v 16 அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாகவும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்தாகவும் இருந்தது.
\s5
\v 17 மக்கள் ஆரவாரம் செய்கிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: முகாமில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.
\v 18 அதற்கு மோசே: அது வெற்றியின் சத்தமும் அல்ல, தோல்வியின் சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.
\s5
\v 19 அவன் முகாமிற்கு அருகே, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபமடைந்தவனாய், தன்னுடைய கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே வீசி உடைத்துப்போட்டு;
\v 20 அவர்கள் உண்டாக்கின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் மக்கள் குடிக்கும்படி செய்தான்.
\s5
\v 21 பின்பு, மோசே ஆரோனை நோக்கி: நீ இந்த மக்கள்மேல் இந்தப் பெரிய பாவத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்றான்.
\v 22 அதற்கு ஆரோன்: என்னுடைய ஆண்டவனுக்குக் கோபம் வராமல் இருப்பதாக; இது பொல்லாத மக்கள் என்று நீர் அறிந்திருக்கிறீர்.
\v 23 இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டாக்கும்; எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன நடந்ததோ அறியோம் என்றார்கள்.
\v 24 அப்பொழுது நான்: தங்கங்களை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரவேண்டும் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான்.
\p
\s5
\v 25 மக்கள் தங்களுடைய எதிரிகளுக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாக இருக்கிறதை மோசே கண்டு,
\v 26 முகாமின் வாசலில் நின்று: கர்த்தரின் பக்கம் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடம் சேரவேண்டும் என்றான். அப்பொழுது லேவியர்கள் எல்லோரும் அவனிடம் கூடிவந்தார்கள்.
\v 27 அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன்னுடைய பட்டயத்தைத் தன்னுடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு, முகாமெங்கும் உள்ளும் வெளியும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும், ஒவ்வொருவனும் தன் தன் நண்பர்களையும், ஒவ்வொருவனும் தன் தன் அயலானையும் கொன்றுபோடவேண்டும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
\s5
\v 28 லேவியர்கள் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்தநாளில் மக்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர்கள் இறந்தார்கள்.
\v 29 கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன் தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாக இருக்கிறதினால், கர்த்தருக்கு உங்களைப் பிரதிஷ்டைசெய்யுங்கள் என்று மோசே சொல்லியிருந்தான்.
\s5
\v 30 மறுநாளில் மோசே மக்களை நோக்கி: நீங்கள் மகாப் பெரிய பாவம் செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்றான்.
\v 31 அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த மக்கள் தங்கத்தினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரியபாவம் செய்திருக்கிறார்கள்.
\v 32 ஆகிலும், தேவரீர் அவர்களுடைய பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புத்தகத்திலிருந்து என்னுடைய பெயரைக் கிறுக்கிப்போடும் என்றான்.
\s5
\v 33 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாகப் பாவம் செய்தவன் எவனோ, அவனுடைய பெயரை என்னுடைய புத்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.
\v 34 இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு மக்களை அழைத்துக்கொண்டுபோ; என்னுடைய தூதனானவர் உனக்குமுன்பு செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்.
\v 35 ஆரோன் செய்த கன்றுக்குட்டியை மக்கள் செய்யவைத்ததால் கர்த்தர் அவர்களை வாதித்தார்.
\s5
\c 33
\cl அத்தியாயம்– 33
\s1 ஆசரிப்புக்கூடாரம்
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த மக்களும் இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு. உன்னுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குப் போங்கள்.
\v 2 நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியர்களையும், எமோரியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும் ஏவியர்களையும், எபூசியர்களையும் துரத்திவிடுவேன்.
\v 3 ஆனாலும், வழியிலே நான் உங்களை அழிக்காதபடி, நான் உங்களிடம் வரமாட்டேன், நீங்கள் பிடிவாதமுள்ள மக்கள் என்றார்.
\s5
\v 4 துக்கமான இவ்வார்த்தைகளை மக்கள் கேட்டபோது, ஒருவரும் தங்களுடைய ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
\v 5 ஏனென்றால், நீங்கள் பிடிவாதமுள்ள மக்கள், நான் ஒரு நிமிடத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை அழிப்பேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதைக்குறித்துத் தீர்மானிப்பேன் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடு சொல்லியிருந்தார்.
\v 6 ஆகையால், இஸ்ரவேலர்கள் ஓரேப் மலை அருகே தங்களுடைய ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.
\p
\s5
\v 7 மோசே கூடாரத்தை பெயர்த்து, அதை முகாமிற்கு வெளியே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பெயரிட்டான். கர்த்தரைத்தேடும் யாவரும் முகாமிற்குத் தூரமான கூடாரத்திற்குப் போவார்கள்.
\v 8 மோசே கூடாரத்திற்குப் போகும்போது, மக்கள் எல்லோரும் எழுந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்திற்குள் நுழையும்வரை, அவனை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
\v 9 மோசே கூடாரத்திற்குள் நுழையும்போது, மேகமண்டலம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடு பேசினார்.
\s5
\v 10 மக்கள் எல்லோரும் மேகமண்டலம் கூடாரவாசலில் நிற்பதைப்பார்த்தார்கள்; மக்கள் எல்லோரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள்.
\v 11 ஒருவன் தன்னுடைய நண்பனோடு பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடு முகமுகமாகப் பேசினார்; பின்பு, அவன் முகாமிற்குத் திரும்பினான்; நூனின் மகனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தைவிட்டுப் போகாமல் இருந்தான்.
\s1 மோசேயும் கர்த்தருடைய மகிமையும்
\p
\s5
\v 12 மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த மக்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடுகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டு;
\v 13 உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த தேசம் உம்முடைய மக்களென்று நினைத்தருளும் என்றான்.
\s5
\v 14 அதற்கு அவர்: என்னுடைய சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
\v 15 அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடு வராமற்போனால், எங்களை இந்த இடத்திலிருந்து கொண்டுபோகாமல் இரும்.
\v 16 எனக்கும் உமது மக்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் தெரியவரும்; நீர் எங்களோடு வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள மக்கள் எல்லோரையும்விட, நானும் உம்முடைய மக்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.
\p
\s5
\v 17 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படி செய்வேன்; என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப்பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.
\v 18 அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.
\s5
\v 19 அதற்கு அவர்: என்னுடைய எல்லா தயவையும் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்து, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் கிருபையாக இருப்பேன்; எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் இரக்கமாக இருப்பேன் என்று சொல்லி,
\v 20 நீ என்னுடைய முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனிதனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கமுடியாது என்றார்.
\s5
\v 21 பின்னும் கர்த்தர்: இதோ, என் அருகில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.
\v 22 என்னுடைய மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகும்வரை என்னுடைய கரத்தினால் உன்னை மூடுவேன்;
\v 23 பின்பு, என்னுடைய கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என்னுடைய பின்பக்கத்தைக் காண்பாய்; என்னுடைய முகமோ காணப்படாது என்றார்.
\s5
\c 34
\cl அத்தியாயம்– 34
\s1 புதியக் கற்பலகைகள்
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தினக் கற்பலகைகளை போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.
\v 2 அதிகாலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் மேல் காலையில் என்னுடைய சமுகத்தில் வந்து நில்.
\s5
\v 3 உன்னோடு ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையில் எங்கும் ஒருவனும் காணப்படவும்கூடாது; இந்த மலையின் அருகில் ஆடுமாடு மேயவும்கூடாது என்றார்.
\v 4 அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளைப் போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலையில் எழுந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அந்த இரண்டு கற்பலகைகளையும் தன்னுடைய கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான்.
\s5
\v 5 கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்.
\v 6 கர்த்தர் அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன்.
\v 7 ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றம் இல்லாதவனாக விடாமல், தகப்பன்மார்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவர் என்று கூறினார்.
\s5
\v 8 மோசே உடனே தரைவரைக்கும் குனிந்து பணிந்துகொண்டு:
\v 9 ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த மக்கள் பிடிவாதமுள்ளவர்கள்; நீரோ, எங்களுடைய அக்கிரமத்தையும் எங்களுடைய பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளும் என்றான்.
\s5
\v 10 அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைச்செய்கிறேன்; பூமியெங்கும் எந்த தேசங்களிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன்னுடைய மக்கள் எல்லோருக்கும் முன்பாகவும் செய்வேன்; உன்னோடு இருக்கிற மக்கள் எல்லோரும் கர்த்தருடைய செயல்களைக் காண்பார்கள்; உன்னோடு இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாக இருக்கும்.
\v 11 இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும், ஏவியர்களையும், எபூசியர்களையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன்.
\s5
\v 12 நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைச் செய்யாதபடி எச்சரிக்கையாக இரு; செய்தால் அது உன்னுடைய நடுவில் கண்ணியாக இருக்கும்.
\v 13 அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.
\v 14 கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவன்; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.
\s5
\v 15 அந்த தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைச்செய்வாயானால், அவர்கள் தங்களுடைய தெய்வங்களைப் பின்பற்றி, விபசாரம்செய்தார்கள் தங்களுடைய தெய்வங்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கும்போது, நீ போய், அவனுடைய பலி செலுத்தியதில் சாப்பிடுவாய்;
\v 16 அவர்கள் மகள்களில் உன்னுடைய மகன்களுக்கு பெண்களை எடுப்பாய்; அவர்கள் மகள்கள் தங்களுடைய தெய்வங்களை விபசாரமார்க்கமாகப் பின்பற்றுவதும் இல்லாமல், உன்னுடைய மகன்களையும் தங்களுடைய தெய்வங்களை விபசாரமார்க்கமாகப் பின்பற்றும்படி செய்வார்கள்.
\v 17 வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம்.
\s5
\v 18 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை நீங்கள் கைக்கொண்டு, நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஆபீப் மாதத்தில் குறித்த காலத்தில் ஏழுநாட்கள் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுவீர்கள்; ஆபீப் மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே.
\s5
\v 19 கர்ப்பம்திறந்து பிறக்கிற அனைத்தும், உன்னுடைய ஆடுமாடுகளின் முதற்பிறப்பான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.
\v 20 கழுதையின் முதற்பிறப்பை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாமல் இருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன்னுடைய பிள்ளைகளில் முதலில் பிறந்தவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடு என்னுடைய சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது.
\s5
\v 21 ஆறுநாட்கள் வேலைசெய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திரு; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திரு.
\v 22 கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருடமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி.
\s5
\v 23 வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய ஆண்மக்கள் எல்லோரும் இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரவேண்டும்.
\v 24 நான் தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, உங்களுடைய எல்லைகளை விரிவாக்குவேன்; வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாக தோன்றும்போது ஒருவரும் உங்களுடைய தேசத்தின் மீது படையெடுக்க ஆசைப்படுவதில்லை.
\s5
\v 25 எனக்கு செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை அதிகாலைவரை வைக்கவும் வேண்டாம்.
\v 26 உங்களுடைய நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலனை உங்களுடைய தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதினுடைய தாயின் பாலிலே சமைக்கவேண்டாம் என்றார்.
\s5
\v 27 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படி உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைச்செய்தேன் என்றார்.
\v 28 அங்கே அவன் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் கர்த்தரோடு இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
\s1 பிரகாசமான மோசேயின் முகம்
\p
\s5
\v 29 மோசே உடன்படிக்கையின் கட்டளைப் பலகைகள் இரண்டையும் தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடு அவர் பேசினதாலே தன்னுடைய முகம் பிரகாசமாக இருப்பதை அவன் அறியாமல் இருந்தான்.
\v 30 ஆரோனும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டு, அவன் அருகில் வரப்பயந்தார்கள்.
\v 31 மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள தலைவர்கள் அனைவரும் அவனிடத்திற்குத் திரும்பி வந்தார்கள்; மோசே அவர்களோடு பேசினான்.
\s5
\v 32 பின்பு இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் அவனிடம் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய் மலையில் கர்த்தர் தன்னோடு பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான்.
\v 33 மோசே அவர்களோடு பேசி முடியும்வரை, தன்னுடைய முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான்.
\s5
\v 34 மோசே கர்த்தருடைய சந்நிதியில் அவரோடு பேசும்படி உள்ளே நுழைந்ததுமுதல் வெளியே புறப்படும்வரை முக்காடு போடாமல் இருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேலர்களோடு சொல்லும்போது,
\v 35 இஸ்ரவேலர்கள் அவனுடைய முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடு பேசும்படி உள்ளே நுழையும்வரை, முக்காட்டைத் திரும்பத் தன்னுடைய முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.
\s5
\c 35
\cl அத்தியாயம்– 35
\s1 ஓய்வு நாளுக்குரிய ஒழுங்குமுறைகள்
\p
\v 1 மோசே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:
\v 2 நீங்கள் ஆறுநாட்கள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாக இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
\v 3 ஓய்வுநாளில் உங்களுடைய வீடுகளில் நெருப்பு மூட்டாதிருங்கள் என்னும் இந்த வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் என்றான்.
\s1 ஆசரிப்புக்கூடாரத்தின் பணிப்பொருட்கள்
\p
\s5
\v 4 பின்னும் மோசே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி:
\v 5 உங்களுக்கு இருப்பதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
\v 6 இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு முடியும்,
\v 7 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலும், மெல்லியத்தோலும், சீத்திம் மரமும்,
\v 8 விளக்குக்கு எண்ணெயும், அபிஷேகத்தைலத்துக்கு பரிமளத்தைலமும், தூபத்துக்கு நறுமணப் பொருட்களும்,
\v 9 ஆசாரியர்களுடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கவேண்டியது கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
\s5
\v 10 உங்களில் ஞானஇருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.
\v 11 ஆசாரிப்புக்கூடாரத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
\v 12 பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும்,
\s5
\v 13 மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், சமுகத்து அப்பங்களையும்,
\v 14 வெளிச்சம்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
\v 15 தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகத் தைலத்தையும், நறுமணப் பொருட்களையும், ஆசரிப்புக்கூடார வாசலுக்குத் தொங்கு திரையையும்,
\v 16 தகனபலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
\s5
\v 17 பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்கு திரையையும்,
\v 18 கூடாரத்தின் முளைகளையும், ஆசரிப்புக்கூடாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும்,
\v 19 பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய ஆடைகளையும், ஆசாரிய ஊழியம்செய்கிற ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும் அவனுடைய மகன்களின் ஆடைகளையும் அவர்கள் செய்யவேண்டும் என்றான்.
\p
\s5
\v 20 அப்பொழுது இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.
\v 21 பின்பு எவர்களை அவர்களுடைய இருதயம் எழுப்பி, எவர்களை அவர்களுடைய ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லோரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைக்கும், அதின் எல்லா ஊழியத்திற்கும், பரிசுத்த ஆடைகளுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.
\v 22 மனப்பூர்வமுள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும், தங்கத்தினாலான ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான எல்லாவித பொன் ஆபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் தங்கத்தைக் காணிக்கையாகச் செலுத்தினான்.
\s5
\v 23 இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு முடியையும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலையும் மெல்லியத்தோலையும் வைத்திருந்த எல்லோரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
\v 24 வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கும் அனைவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தை வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
\s5
\v 25 ஞான இருதயமுள்ள பெண்கள் எல்லோரும் தங்கள் கைகளினால் பிண்ணி, தாங்கள் பிண்ணின இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள்.
\v 26 எந்த பெண்களுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லோரும் வெள்ளாட்டு முடியைத் திரித்தார்கள்.
\s5
\v 27 தலைவர்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,
\v 28 நறுமணப் பொருட்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகத் தைலத்திற்கும் வாசனை தூபத்திற்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.
\v 29 செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேலர்களுக்குள் தங்களுடைய இருதயத்தில் உற்சாகமடைந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாக கொண்டுவந்தார்கள்.
\s1 பெசலெயேலும் அகோலியாபும்
\p
\s5
\v 30 பின்பு மோசே இஸ்ரவேலர்களை நோக்கி: பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து,
\v 31 அவன் மிகுந்த விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், தங்கத்திலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்யவும்,
\v 32 இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து எல்லா வித்தியாசமான வேலைகளைச் செய்யவும்,
\v 33 அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார்.
\s5
\v 34 அவனுடைய இருதயத்திலும், தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.
\v 35 சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல் வேலையையும், எல்லா விசித்திர நெசவு வேலைகளையும் வித்தியாசமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்.
\s5
\c 36
\cl அத்தியாயம்– 36
\s1 ஆசாரிப்புக்கூடாரம்
\p
\v 1 அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தின் திருப்பணிகளைச் சேர்ந்த எல்லா வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், வேலை செய்யத்தெரிந்த கர்த்தரால் ஞானமும், புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரோடும் செய்யத்தொடங்கினார்கள்.
\s5
\v 2 பெசலெயேலையும், அகோலியாபையும் கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்களுடைய இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயமுள்ளவர்களாகிய எல்லோரையும், மோசே வரவழைத்தான்.
\v 3 அவர்கள், இஸ்ரவேலர்கள் திருப்பணிகளின் எல்லா வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயிடம் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் மக்கள் காலைதோறும் தங்களுக்கு விருப்பமான காணிக்கைகளை அவனிடம் கொண்டுவந்தார்கள்.
\v 4 அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகளைச் செய்கிற அனைவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாக வந்து,
\s5
\v 5 மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை மக்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.
\v 6 அப்பொழுது மோசே இனி ஆண்களோ பெண்களோ பரிசுத்த ஸ்தலத்திற்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று முகாம் எங்கும் சொல்லும்படிக் கட்டளையிட்டான்; இப்படியாக மக்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.
\v 7 செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாகவும் இருந்தது.
\p
\s5
\v 8 வேலை செய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள அனைவரும் ஆசரிப்புக்கூடாரத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், வித்தியாசமான நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைச் செய்தான்.
\v 9 மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நான்கு முழ அகலமுமாக இருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாக இருந்தது.
\v 10 ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான்.
\s5
\v 11 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது வளையங்களை உண்டாக்கி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டாக்கினான்.
\v 12 வளையங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாக இருந்தது.
\v 13 ஐம்பது பொன் கொக்கிகளையும் செய்து, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஆசாரிப்புக்கூடாரம் ஒன்றானது.
\s5
\v 14 ஆசாரிப்புக்கூடாரத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமுடியால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் செய்தான்.
\v 15 ஒவ்வொரு மூடுதிரையும் முப்பது முழ நீளமும் நான்கு முழ அகலமுமாக இருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருந்தது.
\v 16 ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,
\v 17 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
\s5
\v 18 கூடாரத்தை ஒன்றாக இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.
\v 19 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும் அதின்மேல் போட மெல்லியத்தோலினால் ஒரு மூடியையும் உண்டாக்கினான்.
\p
\s5
\v 20 ஆசரிப்புக்கூடாரத்தில் நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.
\v 21 ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரைமுழ அகலமுமாக இருந்தது.
\v 22 ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு பொருந்தும் முனைகள் இருந்தது; ஆசாரிப்புக்கூடாரத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.
\v 23 ஆசாரிப்புக்கூடாரத்திற்காக செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தெற்குதிசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி,
\s5
\v 24 அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டாக்கினான்; ஒரு பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும் செய்துவைத்து;
\v 25 ஆசரிப்புக்கூடாரத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப்பாதங்களையும் செய்தான்.
\v 26 ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.
\s5
\v 27 ஆசரிப்புக்கூடாரத்தின் மேற்கு பக்கத்திற்கு ஆறு பலகைகளையும்,
\v 28 ஆசரிப்புக்கூடாரத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.
\s5
\v 29 அவைகள் கீழே இணைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இணைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலும் உள்ள அந்த இரண்டிற்கும் அப்படியே செய்தான்.
\v 30 அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.
\s5
\v 31 சீத்திம் மரத்தால் ஆசரிப்புக்கூடாரத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
\v 32 ஆசரிப்புக்கூடாரத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்கு புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் செய்தான்.
\v 33 நடுத்தாழ்ப்பாள் ஒருமுனை துவங்கி மறுமுனைவரை பலகைகளின் மையத்தில்ச் செல்லும்படி செய்தான்.
\v 34 பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால்செய்து, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.
\p
\s5
\v 35 இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும், சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்கள் உள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டாக்கி,
\v 36 அதற்குச் சீத்திம் மரத்தினால் நான்கு தூண்களைச் செய்து, அவைகளைப் பொன் தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால்செய்து, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.
\p
\s5
\v 37 கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்கு திரையையும்,
\v 38 அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவான ஆணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்; அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாக இருந்தது.
\s5
\c 37
\cl அத்தியாயம்– 37
\s1 உடன்படிக்கைப் பெட்டி
\p
\v 1 பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டாக்கினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.
\v 2 அதை உள்ளும் வெளியும் சுத்தப்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி,
\v 3 அதற்கு நான்கு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நான்கு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படித் தைத்து,
\s5
\v 4 சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
\v 5 அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான்.
\v 6 கிருபாசனத்தையும் சுத்தப்பொன்னினால் செய்தான்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமானது.
\s5
\v 7 தகடாக அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே,
\v 8 ஒருபக்கத்து ஓரத்தில் ஒரு கேருபீனும் மறுபக்கத்து ஓரத்தில் மற்றக் கேருபீனுமாக அந்தக் கேருபீன்களைக் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடு ஒரே வேலைப்பாடாகவே செய்தான்.
\v 9 அந்தக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை உயர விரித்து, தங்களுடைய இறக்கைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளாகவும் இருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக்கொண்டிருந்தது.
\s1 மேஜை
\p
\s5
\v 10 மேஜையையும் சீத்திம் மரத்தால் செய்தான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.
\v 11 அதைப் சுத்தப் பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி,
\v 12 சுற்றிலும் அதற்கு நான்கு விரல் அளவான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன் விளிம்பையும் உண்டாக்கி,
\v 13 அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நான்கு கால்களுக்கு இருக்கும் நான்கு மூலைகளிலும் தைத்தான்.
\s5
\v 14 அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாக இருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.
\v 15 மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
\v 16 மேஜையின்மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிப்பொருட்களையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் சுத்தப்பொன்னினால் உண்டாக்கினான்.
\s1 விளக்குத்தண்டு
\p
\s5
\v 17 குத்துவிளக்கையும் சுத்தப்பொன்னினால் அடிப்புவேலையாக உண்டாக்கினான்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டிருந்தது.
\v 18 குத்துவிளக்கின் ஒருபக்கத்தில் மூன்று கிளைகளும் அதின் மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக அதின் பக்கங்களில் ஆறு கிளைகள் செய்யப்பட்டது.
\v 19 ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு பூவும் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது.
\s5
\v 20 விளக்குத்தண்டில் வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நான்கு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது.
\v 21 அதில் செய்யப்பட்ட இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருந்தது; விளக்குத்தண்டில் செய்யப்பட்ட ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருந்தது.
\v 22 அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் சுத்தப்பொன்னினால் ஒரே அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டது.
\s5
\v 23 அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் சுத்தப்பொன்னினால் செய்தான்.
\v 24 அதையும் அதின் பணிப்பொருட்கள் யாவையும் ஒரு தாலந்து சுத்தப்பொன்னினால் செய்தான்.
\s1 தூப பீடம்
\p
\s5
\v 25 தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாக இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஒரே வேலைப்பாடாக இருந்தது.
\v 26 அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், சுத்தப்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி,
\s5
\v 27 அந்தவிளிம்பின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களை செய்து, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,
\v 28 சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
\v 29 பரிசுத்த அபிஷேகத் தைலத்தையும், சுத்தமான வாசனைப்பொருட்களின் நறுமணங்களையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டாக்கினான்.
\s5
\c 38
\cl அத்தியாயம்– 38
\s1 தகனபலிபீடம்
\p
\v 1 தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழநீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது.
\v 2 அதின் நான்கு மூலைகளிலும் அதனோடு ஒன்றாக அதின் நான்கு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத்தகட்டால் மூடி,
\v 3 அந்தப் பீடத்தின் எல்லா பணிப்பொருட்களாகிய சாம்பல் எடுக்கும் சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பணிப்பொருட்களையெல்லாம் வெண்கலத்தினால் செய்தான்.
\s5
\v 4 வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி, அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கும்படியாக வைத்து,
\v 5 அந்த வெண்கலச் சல்லடையின் நான்கு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நான்கு வளையங்களை வார்ப்பித்து,
\s5
\v 6 அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடி,
\v 7 பலிபீடத்தை அவைகளால் சுமக்கும்படியாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளால் செய்தான்.
\p
\s5
\v 8 ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாகக் கூடின பெண்கள் கண்ணாடியாக பயன்படுத்தின வெண்கலத்தாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.
\p
\s5
\v 9 பிராகாரத்தையும் உண்டாக்கினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்கு திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்கு திரைகளைச் செய்தான்.
\v 10 அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி.
\s5
\v 11 வடபக்கத்துத் தொங்கு திரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் கம்பிகளும் வெள்ளி.
\v 12 மேற்பக்கத்துத் தொங்கு திரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி.
\s5
\v 13 சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்கு திரைகள் ஐம்பது முழம்.
\v 14 ஒருபுறத்துத் தொங்கு திரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.
\v 15 பிராகாரவாசலின் ஒருபுறத்துக்குச் சரியாக மறுபுறத்திலும் தொங்கு திரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.
\v 16 சுற்றுபிராகாரத்துத் தொங்கு திரைகளெல்லாம் மெல்லிய பஞ்சுநூலால் நெய்யப்பட்டிருந்தது.
\s5
\v 17 தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும், கம்பிகளும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிக்கம்பிகள் போடப்பட்டவைகளுமாக இருந்தது.
\v 18 பிராகாரத்தின் வாசலின் தொங்கு திரை இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்ட சித்திரத்தையல் வேலையாக இருந்தது; அதின் நீளம் இருபது முழம், அதின் அகலமும் உயரமும் பிராகாரத்தின் தொங்கு திரைகளைப்போல ஐந்து முழம்.
\v 19 அவைகளின் தூண்கள் நான்கு; அவைகளின் வெண்கலப் பாதங்கள் நான்கு; அவைகளின் கொக்கிகள் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி.
\v 20 ஆசாரிப்புக்கூடாரத்திற்கும் பிராகாரத்திற்கும் சுற்றிலும் இருந்த ஆப்புகளெல்லாம் வெண்கலம்.
\p
\s5
\v 21 மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் மகனாகிய இத்தாமாரின் கையிலே லேவியர்களின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் ஆசாரிப்புக்கூடாரத்தின் பொருள்களின் தொகை இதுவே.
\v 22 யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான்.
\v 23 அவனோடு தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாப் அலங்காரக் கொத்துவேலைக்காரனும், வித்தியாசமான வேலைகளைச்செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத்தையல்வேலை செய்கிறவனுமாக இருந்தான்.
\p
\s5
\v 24 பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகள் எல்லாவற்றிற்கும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டுச் செலவான பொன்னெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கல் நிறையுமாக இருந்தது.
\p
\v 25 சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாக இருந்தது.
\v 26 எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பதுபேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.
\s5
\v 27 அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்க்கப்பட்டது; பாதத்திற்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவானது.
\v 28 அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குத் கம்பிகளைச்செய்து, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குக் கம்பிகளை உண்டாக்கினான்.
\v 29 காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாக இருந்தது.
\s5
\v 30 அதினாலே ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப்பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் எல்லாப் பணிப்பொருட்களையும்,
\v 31 சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், ஆசரிப்புக்கூடாரத்தின் எல்லா ஆப்புகளையும், சுற்றுப்பிராகாரத்தின் எல்லா ஆப்புகளையும் செய்தான்.
\s5
\c 39
\cl அத்தியாயம்– 39
\s1 ஆசாரிய உடைகள்
\p
\v 1 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய ஆடைகளையும், ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளையும் செய்தார்கள்.
\s1 ஏபோத்
\p
\s5
\v 2 ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
\v 3 அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து வித்தியாசமான வேலையாக நெய்யும்படி, மெல்லிய தகடுகளாக அடித்து, அவைகளை கம்பிகளாகச் செய்தார்கள்.
\s5
\v 4 இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது.
\v 5 அந்த ஏபோத்தின்மேலிருக்கும் வித்தியாசமான வார்க்கச்சை, அந்த வேலைக்கு ஒப்பாகவே பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்யப்பட்டது.
\p
\s5
\v 6 இஸ்ரவேலின் பன்னிரெண்டு மகன்களின் பெயர்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.
\v 7 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவைகள் இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களைக் குறித்து ஞாபகக்குறிக் கற்களாக இருக்கும்படி ஏபோத்துத் தோள்களின்மேல் அவைகளை வைத்தான்.
\s1 மார்ப்பதக்கம்
\p
\s5
\v 8 மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த வித்தியாசமானவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
\v 9 அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாகச் செய்து, ஒரு ஜாண் நீளமும். ஒரு ஜாண் அகலமுமாக்கி,
\s5
\v 10 அதிலே நான்கு வரிசை இரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் வரிசை பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
\v 11 இரண்டாம் வரிசை மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
\v 12 மூன்றாம் வரிசை கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
\v 13 நாலாம் வரிசை படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.
\s5
\v 14 இந்தக் கற்கள் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் உள்ளவைகளுமாக இருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் பெயர் ஒவ்வொன்றில் முத்திரைவெட்டாக வெட்டியிருந்தது.
\v 15 மார்ப்பதக்கத்துக்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான சுத்தப்பொன் சங்கிலிகளையும் செய்து,
\v 16 இரண்டு பொன் குவளைகளையும் இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கத்திலும் வைத்து,
\s5
\v 17 பொன்னினால் செய்த பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களிலும் மாட்டி,
\v 18 பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள்மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள்.
\s5
\v 19 பின்னும் இரண்டு வளையங்களைச்செய்து, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்பக்கத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தின் மற்ற இரண்டு பக்கங்களிலும் அதின் ஓரத்தில் வைத்து,
\v 20 வேறே இரண்டு பொன்வளையங்களையும் செய்து, அவைகளை ஏபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான வார்க்கச்சைக்கு மேலாகவும் வைத்து,
\s5
\v 21 மார்ப்பதக்கம் ஏபோத்தின் வித்தியாசமான வார்க்கச்சைக்கு மேலாக இருக்கும்படியும், ஏபோத்திலிருந்து நீங்கிப்போகாதபடியும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடு இளநீல நாடாவினாலே, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தப்படியே, கட்டினார்கள்.
\s1 மற்ற ஆசாரிய உடைகள்
\p
\s5
\v 22 ஏபோத்தின் கீழ்அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.
\v 23 அங்கியின் நடுவில் மார்க்கவசத் துவாரத்திற்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது.
\v 24 அங்கியின் கீழ்ஓரங்களில் தொங்கும்படியாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதுளம்பழங்களைச் செய்து,
\s5
\v 25 சுத்தப்பொன்னினால் மணிகளையும் செய்து, அந்த மணிகளை அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் மாதுளம்பழங்களின் இடையிடையே தொங்கவைத்தார்கள்.
\v 26 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதுளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதுளம்பழமுமாக இருந்தது.
\p
\s5
\v 27 ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும்,
\v 28 மெல்லிய பஞ்சுநூலால் தலைப்பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் உள்ளாடைகளையும்,
\v 29 திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடைக்கச்சையையும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே செய்தார்கள்.
\p
\s5
\v 30 பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் சுத்தப்பொன்னினாலே செய்து, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாகவெட்டி,
\v 31 அதை உயர தலைப்பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
\s1 மோசே ஆசரிப்புக்கூடாரத்தைப் பார்வையிடுதல்
\p
\s5
\v 32 இப்படியே ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.
\p
\v 33 பின்பு. வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிப்பொருட்களையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
\v 34 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோல் மூடியையும், மெல்லியத்தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும்,
\v 35 சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும்,
\s5
\v 36 மேஜையையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், சமுகத்து அப்பங்களையும்,
\v 37 சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாக ஒழுங்குப்படுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
\v 38 பொற்பீடத்தையும், அபிஷேகத் தைலத்தையும், நறுமணப் பொருட்களையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்கு திரையையும்,
\v 39 வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
\s5
\v 40 பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் மறைவையும், அதின் கயிறுகளையும், அதின் ஆப்புகளையும், ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வேலையின் எல்லா பணிப்பொருட்களையும்,
\v 41 பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்குரிய வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும், அவனுடைய மகன்களின் ஆடைகளையும் கொண்டுவந்தார்கள்.
\s5
\v 42 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் எல்லா வேலைகளையும் செய்தார்கள்.
\v 43 மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; கர்த்தர் கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.
\s5
\c 40
\cl அத்தியாயம்– 40
\s1 ஆசரிப்புக்கூடாரத்தை பிரதிஷ்டைசெய்தல்
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசஸ்தலத்தை பிரதிஷ்டைசெய்.
\s5
\v 3 அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து,
\v 4 மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதை சரியாக வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
\s5
\v 5 பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்தின் வாசலின் தொங்கு திரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.
\v 6 பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,
\v 7 தொட்டியை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து,
\s5
\v 8 சுற்று பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
\v 9 அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்செய்து, அதையும் அதிலுள்ள எல்லாப் பணிப்பொருட்களையும் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது பரிசுத்தமாக இருக்கும்.
\v 10 தகனபலிபீடத்தையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், அபிஷேகம்செய்து, அதைப் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாக இருக்கும்.
\v 11 தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்து.
\s5
\v 12 பின்பு ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் வரச்செய்து, அவர்களை தண்ணீரால் குளிக்கவைத்து,
\v 13 ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்செய்து, அவனைப் பரிசுத்தப்படுத்து.
\s5
\v 14 அவன் மகன்களையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி,
\v 15 அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்செய்தபடியே, அபிஷேகம்செய்; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நிரந்தர ஆசாரியத்துவத்துக்கு ஏதுவாக இருக்கும் என்றார்.
\v 16 கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.
\p
\s5
\v 17 இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் நிறுவப்பட்டது.
\v 18 மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,
\v 19 வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியே போட்டான்.
\v 20 பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,
\s5
\v 21 பெட்டியை வாசஸ்தலத்துக்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான்.
\v 22 பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக்கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாகத் திரைக்குப் புறம்பாக வைத்து,
\v 23 அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான்.
\s5
\v 24 பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக்கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,
\v 25 கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
\s5
\v 26 பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக்கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,
\v 27 அதின்மேல் நறுமணப்பொருட்களால் தூபம்காட்டினான்.
\s5
\v 28 பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
\v 29 தகனபலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான்.
\v 30 அவன் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான்.
\s5
\v 31 அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்.
\v 32 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே நுழைகிறபோதும், பலிபீடத்தினருகில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்.
\v 33 பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றி பிராகாரத்தை அமைத்து, பிராகாரத்தின் தொங்கு திரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாக மோசே வேலையை முடித்தான்.
\s1 கர்த்தருடைய மகிமை
\p
\s5
\v 34 அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது.
\v 35 மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையமுடியாமல் இருந்தது.
\s5
\v 36 வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்யப் புறப்படுவார்கள்.
\v 37 மேகம் எழும்பாமல் இருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பயணம் செய்யாமல் இருப்பார்கள்.
\v 38 இஸ்ரவேல் மக்கள் செய்யும் எல்லாப் பயணங்களிலும் அவர்களெல்லோருடைய கண்களுக்கும் நேரடியாக பகலில் கர்த்தருடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தது.

1396
03-LEV.usfm Normal file
View File

@ -0,0 +1,1396 @@
\id LEV
\ide UTF-8
\h லேவியராகமம்
\toc1 லேவியராகமம்
\toc2 லேவியராகமம்
\toc3 lev
\mt1 லேவியராகமம்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 தகனபலி
\p
\v 1 கர்த்தர் ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து மோசேயை அழைத்து அவனை நோக்கி:
\v 2 நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து பலிசெலுத்தவேண்டும்.
\s5
\v 3 அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில், தான் அங்கிகரிக்கப்படுவதற்கு, அவன் அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கொண்டுவந்து,
\v 4 தன் பாவநிவிர்த்திக்கென்று அது அங்கிகரிக்கப்படுவதற்கு தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,
\s5
\v 5 கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
\v 6 பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைத் துண்டுதுண்டாக வெட்டக்கடவன்.
\s5
\v 7 அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, நெருப்பின்மேல் கட்டைகளை அடுக்கி,
\v 8 அவனுடைய மகன்களாகிய ஆசாரியர்கள், துண்டுகளையும், தலையையும், கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.
\v 9 அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாக எரிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி.
\s5
\v 10 அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து,
\v 11 கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடக்குப் பகுதியில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
\s5
\v 12 பின்பு அவன் அதைத் துண்டுகளாக வெட்டி, அதின் தலையையும் கொழுப்பையும் அதனுடன் வைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன்.
\v 13 குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி.
\s5
\v 14 அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்து செலுத்தக்கடவன்.
\v 15 அதை ஆசாரியன் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் எரித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் அருகில் சிந்தவிட்டு,
\s5
\v 16 அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தின் அருகில் கிழக்குப் பகுதியில் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,
\v 17 பின்பு அதின் இறக்கைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 உணவுபலி
\p
\v 1 ஒருவன் உணவுபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால், அவனுடைய காணிக்கை மெல்லிய மாவாக இருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் ஊற்றி, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,
\v 2 அதை ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் நன்றியின் அடையாளமாக எரிக்கக்கடவன்; அது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி.
\v 3 அந்த உணவுபலியில் மீதியாக இருப்பது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.
\s5
\v 4 நீ படைப்பது அடுப்பில் சமைக்கப்பட்ட உணவுபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்பட்ட புளிப்பில்லாத அதிரசங்களாகவோ, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளாகவோ இருப்பதாக.
\v 5 நீ படைப்பது அடுப்பில் தட்டையான பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவுபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாக இருப்பதாக.
\s5
\v 6 அதைத் துண்டுதுண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் ஊற்றுவாயாக; இது ஒருஉணவுபலி.
\v 7 நீ படைப்பது அடுப்பில் பொரிக்கும் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு பலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக.
\s5
\v 8 இப்படிச் செய்யப்பட்ட உணவுபலியைக் கர்த்தருக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து,
\v 9 அந்த சமைக்கப்பட்ட உணவுபலியிலிருந்து ஆசாரியன் நன்றியின் அடையாளமாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி.
\v 10 இந்த உணவுபலியில் மீதியானது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; கர்த்தருக்குச் செலுத்தும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது.
\s5
\v 11 நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த உணவுபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவு உள்ளவைகளையும் தேன் உள்ளவைகளையும் கர்த்தருக்குத் தகனபலியாக எரிக்கவேண்டாம்.
\v 12 முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகளை நறுமண வாசனையாக எரிக்கக்கூடாது.
\v 13 நீ படைக்கிற எந்த உணவுபலியிலும் உப்பு சேர்க்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் உணவுபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
\s5
\v 14 முதற்பலன்களை உணவுபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், புதிய பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் உணவுபலியாகக் கொண்டுவரக்கடவாய்.
\v 15 அதின்மேல் எண்ணெய் ஊற்றி அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு உணவுபலி.
\v 16 பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, நன்றியின் அடையாளமான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றுடன் எரிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு செலுத்தும் தகனபலி.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 சமாதானபலி
\p
\v 1 ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் பசுவானாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.
\v 2 அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
\s5
\v 3 பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும்,
\v 4 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக.
\v 5 அதை ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் வைக்கப்பட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மேல் போட்டு எரிக்கக்கடவர்கள்; இது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி.
\s5
\v 6 அவன் கர்த்தருக்குச் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதைச் செலுத்துவானாக.
\v 7 அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
\v 8 தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
\s5
\v 9 பின்பு அவன் சமாதானபலியிலே அதின் கொழுப்பையும், நடுஎலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும் அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
\v 10 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
\v 11 அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் செலுத்தும் தகன ஆகாரம்.
\s5
\v 12 அவன் செலுத்துவது வெள்ளாடாக இருக்குமானால், அவன் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
\v 13 அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
\v 14 அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள் மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும்,
\s5
\v 15 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
\v 16 ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளை எரிக்கக்கடவன்; இது நறுமண வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது.
\v 17 கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் சாப்பிடக்கூடாது; இது உங்களுடைய குடியிருப்புகள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருக்கும் என்று சொல் என்றார்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 பாவநிவாரணபலி
\p
\v 1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்திற்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:
\v 3 அபிஷேகம் பெற்ற ஆசாரியன், மக்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவம் செய்தால், தான் செய்த பாவத்திற்காக பழுதற்ற ஒரு இளங்காளையை பாவநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.
\s5
\v 4 அவன் அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.
\v 5 அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவந்து,
\s5
\v 6 தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுமுறை தெளிக்கக்கடவன்.
\v 7 பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் நறுமண தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
\s5
\v 8 பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
\v 9 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும்,
\v 10 சமாதானபலியின் காளையிலிருந்து எடுக்கிறதுபோல அதிலிருந்து எடுத்து, அவைகளைத் தகனபலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்.
\s5
\v 11 காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும்,
\v 12 காளை முழுவதையும் முகாமிற்கு வெளியே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல் கொட்டப்பட்டிருக்கிற இடத்திலே அதைச் சுட்டெரிக்கக்கடவன்.
\s5
\v 13 இஸ்ரவேல் சபையார் எல்லோரும் அறியாமையினால் பாவம்செய்து, அது தங்களுடைய கண்களுக்கு மறைவாக இருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்திற்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,
\v 14 அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்திற்காக ஒரு இளங்காளையை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக பலியிடக் கொண்டுவரவேண்டும்.
\v 15 சபையின் மூப்பர்கள் கர்த்தருடைய சந்நிதியில் தங்களுடைய கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும்.
\s5
\v 16 அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவந்து,
\v 17 தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுமுறை தெளித்து,
\s5
\v 18 ஆசரிப்புக்கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
\v 19 அதின் கொழுப்பு முழுவதையும் அதிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து,
\s5
\v 20 பாவநிவாரணபலியின் காளையைச் செய்ததுபோலவே இந்தக் காளையையும் செய்து, இப்படியே ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
\v 21 பின்பு காளையை முகாமிற்கு வெளியே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக்கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.
\s5
\v 22 ஒரு பிரபு தன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்திற்குட்பட்டுக் குற்றவாளியானால்,
\v 23 தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து,
\s5
\v 24 அந்தக் கடாவின் தலையின்மேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக்கொல்லக்கடவன்; இது பாவநிவாரணபலி.
\v 25 அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
\s5
\v 26 அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப்போல, பலிபீடத்தின்மேல் எரித்து, இந்தவிதமாக ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
\s5
\v 27 சாதாரண மக்களில் ஒருவன் அறியாமையினால் கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்திற்குட்பட்டுக் குற்றவாளியானால்,
\v 28 தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது அவன் தான் செய்த பாவத்திற்காக வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,
\s5
\v 29 பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணபலியைக் கொல்லக்கடவன்.
\v 30 அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தை பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
\s5
\v 31 சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்கு நறுமண வாசனையாக எரித்து, இப்படியே அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
\s5
\v 32 அவன் பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுகுட்டியைக் கொண்டுவருவானாகில், பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டுவந்து,
\v 33 அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரணபலியாகக் கொல்லக்கடவன்.
\s5
\v 34 அப்பொழுது ஆசாரியன் அந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தை பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
\v 35 சமாதானபலியான ஆட்டுக்குட்டியின் கொழுப்பை எடுக்கிறதுபோல அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் ஆசாரியன் எரிக்கவேண்டும்; இந்தவிதமாக அவன் செய்த பாவத்திற்கு ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 குற்றநிவாரணபலி
\p
\v 1 சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவிக்காமலிருந்து பாவம்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
\v 2 அசுத்தமான காட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலையாவது, இந்தவித அசுத்தமான யாதொரு பொருளையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால், அவன் தீட்டும் குற்றமும் உள்ளவனாவான்.
\s5
\v 3 அல்லது எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.
\v 4 மனிதர்கள் பதறி ஆணையிடும் எந்தக் காரியத்திலானாலும், ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.
\s5
\v 5 இப்படிப்பட்டவைகள் ஒன்றில், ஒருவன் குற்றமுள்ளவனாகும்போது, அவன், தான் செய்தது பாவம் என்று அறிக்கையிட்டு,
\v 6 தான் செய்த பாவத்திற்குப் பாவநிவாரணபலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
\s5
\v 7 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்திற்காக இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.
\v 8 அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரணபலிக்குரியதை முதலில் செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்திலிருந்து கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,
\v 9 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து, மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி.
\s5
\v 10 மற்றதை நியமத்தின்படியே அவன் தகனபலியாகச் செலுத்தக்கடவன்; இந்தவிதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
\s5
\v 11 இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்திற்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரணபலியாக இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் ஊற்றாமலும் தூபவர்க்கம் போடாமலும் இருந்து,
\s5
\v 12 அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன் நன்றியின் அடையாளமான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி.
\v 13 இந்தவிதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்திற்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது உணவுபலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்.
\s5
\v 14 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 15 ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றம்செய்து, அறியாமையினால் பாவத்திற்குட்பட்டால், அவன் தன் குற்றத்திற்காக பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் மதிப்புள்ள பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
\v 16 பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த குற்றத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அத்துடன் ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
\s5
\v 17 ஒருவன் செய்யத்தகாததென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்திற்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாக இருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
\v 18 அதினால் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்பிற்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த குற்றத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
\v 19 இது குற்றநிவாரணபலி; அவன் கர்த்தருக்கு விரோதமாகக் குற்றம்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\p
\v 1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானை ஏமாற்றி, அல்லது ஒரு பொருளை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடையூறுசெய்து,
\v 3 அல்லது காணாமற்போனதைக் கண்டுபிடித்து அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாக சத்தியம் செய்து, மனிதர்கள் செய்யும் இதைப்போல யாதொரு காரியத்தில் பாவம்செய்தான் என்றால்,
\v 4 அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானதால், தான் வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டதையும், இடையூறுசெய்து பெற்றுக்கொண்டதையும், தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,
\s5
\v 5 பொய்யாக சத்தியம் செய்து சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவும் சேர்த்து, அதைத் தான் குற்றநிவாரணபலியை செலுத்தும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு,
\v 6 தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்பீட்டுக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்த, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக.
\v 7 கர்த்தருடைய சந்நிதியில் அவனுடைய பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது, அவனைக் குற்றவாளியாக்கிய அப்படிப்பட்ட எந்தக்காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்.
\s1 சர்வாங்க தகனபலிக்குரிய விதிமுறைகள்
\p
\s5
\v 8 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 9 நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய விதிமுறைகள் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இரவுமுதல் விடியற்காலம்வரை பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பு எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.
\s5
\v 10 ஆசாரியன் சணல்நூல் உள்ளாடையை தன் இடுப்பில் போட்டுக்கொண்டு, சணல்நூல் அங்கியை அணிந்து, பலிபீடத்தின்மேல் நெருப்பில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்தின் அருகில் கொட்டி,
\v 11 பின்பு தன் உடைகளைக் கழற்றி, வேறு உடைகளை அணிந்துகொண்டு, அந்தச் சாம்பலை முகாமிற்கு வெளியே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.
\s5
\v 12 பலிபீடத்தின்மேலிருக்கிற நெருப்பு அணையாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதானபலிகளின் கொழுப்பைப் போட்டு எரிக்கக்கடவன்.
\v 13 பலிபீடத்தின்மேல் நெருப்பு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபோதும் அணைந்துபோகக்கூடாது.
\s1 உணவுபலிக்குரிய விதிமுறைகள்
\p
\s5
\v 14 உணவுபலியின் விதிமுறைகள் என்னவென்றால், ஆரோனின் மகன்கள் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்திற்கு முன்னே படைக்கவேண்டும்.
\v 15 அவன், உணவுபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, உணவுபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை நன்றியின் அடையாளமாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன்.
\s5
\v 16 அதில் மீதியானதை ஆரோனும் அவனுடைய மகன்களும் சாப்பிடுவார்களாக; அதை புளிப்பில்லாத அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடவேண்டும்; ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரத்தில் அதைச் சாப்பிடவேண்டும்.
\v 17 அதைப் புளித்தமாவுள்ளதாக வேகவைக்கவேண்டாம்; அது எனக்கு செலுத்தப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலவும் குற்றநிவாரண பலியைப்போலவும் மகா பரிசுத்தமானது.
\v 18 ஆரோனின் சந்ததியில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; கர்த்தருக்கு செலுத்தப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாக இருப்பான் என்று சொல் என்றார்.
\s5
\v 19 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 20 ஆரோன் அபிஷேகம் செய்யப்படும் நாளில், அவனும் அவனுடைய மகன்களும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நிரந்தரமான உணவுபலியாகச் செலுத்தக்கடவர்கள்.
\s5
\v 21 அது பாத்திரத்திலே எண்ணெய்விட்டு வேகவைக்கவேண்டும்; வேகவைத்தபின்பு அதைக் கொண்டுவந்து, உணவுபலியாக கர்த்தருக்கு நறுமண வாசனையாகப் படைக்கக்கடவாய்.
\v 22 அவனுடைய மகன்களில் அவனுடைய இடத்திலே அபிஷேகம்செய்யப்படுகிற ஆசாரியனும் அப்படியே செய்யக்கடவன்; அது முழுவதும் எரிக்கப்படவேண்டும்; அது கர்த்தர் ஏற்படுத்தின நிரந்தரமான கட்டளை.
\v 23 ஆசாரியனுக்காக செலுத்தப்படும் எந்த உணவுபலியும் சாப்பிடாமல், முழுவதும் எரிக்கப்படவேண்டும் என்றார்.
\s1 பாவநிவாரணபலிக்குரிய விதிமுறைகள்
\p
\s5
\v 24 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 25 நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் விதிமுறைகள் என்னவென்றால், சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது.
\v 26 பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைச் சாப்பிடக்கடவன்; ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது சாப்பிடப்படவேண்டும்.
\s5
\v 27 அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாக இருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு உடையில் தெறித்ததென்றால், இரத்தம்தெறித்த உடையைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.
\v 28 அது சமைக்கப்பட்ட மண்பானை உடைக்கப்படவேண்டும்; செப்புப்பானையில் சமைக்கப்பட்டால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.
\s5
\v 29 ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது மகா பரிசுத்தமானது.
\v 30 எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்திக்காக ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலியைச் சாப்பிடக்கூடாது, அது நெருப்பிலே எரிக்கப்படவேண்டும்.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 குற்றநிவாரணபலிக்குரிய விதிமுறைகள்
\p
\v 1 குற்றநிவாரணபலியின் விதிமுறைகள் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.
\v 2 சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரணபலியும் கொல்லப்படவேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
\v 3 அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும்,
\v 4 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறுகுடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக.
\s5
\v 5 இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாக எரிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி.
\v 6 ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.
\s5
\v 7 பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே; அந்த இரண்டிற்கும் விதிமுறை ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும்.
\v 8 ஒருவருடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.
\s5
\v 9 அடுப்பிலே வேகவைக்கப்பட்டதும், பாத்திரத்திலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான உணவுபலி அனைத்தும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாக இருக்கும்.
\v 10 எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல உணவுபலியும் ஆரோனுடைய மகன்கள் அனைவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.
\s1 சமாதானபலிக்குரிய விதிமுறைகள்
\p
\s5
\v 11 கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் விதிமுறைகள் என்னவென்றால்,
\v 12 அதை நன்றிபலியாகச் செலுத்துவானானால், அவன் நன்றிபலியோடுகூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.
\s5
\v 13 அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதானபலியாகிய நன்றிபலியோடுகூட படைக்கவேண்டும்.
\v 14 அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதானபலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.
\s5
\v 15 சமாதானபலியாகிய நன்றிபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றையதினமே சாப்பிடப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலம்வரை வைக்கப்படக்கூடாது.
\v 16 அவன் செலுத்தும் பலி பொருத்தனையாகவோ உற்சாகபலியாகவோ இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியானது மறுநாளிலும் சாப்பிடப்படலாம்.
\s5
\v 17 பலியின் மாம்சத்தில் மீதியாக இருக்கிறது மூன்றாம் நாளில் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
\v 18 சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் சாப்பிடப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைச் சாப்பிடுகிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
\s5
\v 19 தீட்டான எந்த பொருளிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது சாப்பிடப்படாமல் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்ற மாம்சத்தையோ சுத்தமாக இருக்கிறவனெவனும் சாப்பிடலாம்.
\v 20 ஒருவன் தீட்டுள்ளவனாக இருக்கும்போது கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடிக்கு வெட்டுண்டுபோவான்.
\s5
\v 21 மனிதர்களுடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த பொருளையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே சாப்பிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
\s5
\v 22 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 23 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு, ஆடு, வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் சாப்பிடக்கூடாது.
\v 24 தானாகச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், தாக்கப்பட்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.
\s5
\v 25 கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைச் சாப்பிடுகிற எந்த ஆத்துமாவும் தன் மக்களுக்குள் இல்லாதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
\v 26 உங்கள் குடியிருப்புகளில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது சாப்பிடக்கூடாது.
\v 27 எவ்வித இரத்தத்தையாகிலும் சாப்பிடுகிற எவனும் தன் மக்களில் இல்லாதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.
\s1 ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் சேரவேண்டியவை
\p
\s5
\v 28 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 29 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், கர்த்தருக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவருவானாக.
\v 30 கர்த்தருக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவனே கொண்டுவரவேண்டும்; மார்புப் பகுதியையும் அதனுடன் அதின்மேல் வைத்த கொழுப்பையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரக்கடவன்.
\s5
\v 31 அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்; மார்புப் பகுதி ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்.
\v 32 உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக.
\s5
\v 33 ஆரோனுடைய மகன்களில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.
\v 34 இஸ்ரவேல் மக்களின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்புப் பகுதியையும் ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்குள் இருக்கும் நிரந்தரமான கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார்.
\s5
\v 35 கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவனுடைய மகன்களும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம் செய்யப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.
\v 36 இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் மக்கள் தங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான நியமமாகக் கொடுக்கும்படிக் கர்த்தர் அவர்களை அபிஷேகம்செய்த நாளிலே கட்டளையிட்டார்.
\s5
\v 37 சர்வாங்கதகனபலிக்கும் உணவுபலிக்கும் பாவநிவாரணபலிக்கும் குற்றநிவாரணபலிக்கும் பிரதிஷ்டைபலிகளுக்கும் சமாதானபலிகளுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே.
\v 38 கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் மக்களுக்குச் சீனாய் வனாந்திரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய்மலையில் கட்டளையிட்டார்.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்தம் செய்யப்படுதல்
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நீ ஆரோனையும் அவனுடைய மகன்களையும் வரவழைத்து, உடைகளையும், அபிஷேகத் தைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லாத அப்பங்களையும் கொண்டுவந்து,
\v 3 சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார்.
\s5
\v 4 கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடினபோது,
\v 5 மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்ட காரியம் இதுவே என்று சொல்லி,
\s5
\v 6 கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் வரவழைத்து, அவர்களைத் தண்ணீரில் குளிக்கச்செய்து,
\v 7 அவனுக்கு உள் அங்கியைப் போட்டு, இடுப்புக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தை அணிவித்து, அதின்மேல் ஏபோத்தின் விசேஷமான கச்சையைக்கட்டி,
\s5
\v 8 அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிவித்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம், தும்மீம் என்பவைகளையும் வைத்து,
\v 9 அவன் தலையிலே தலைப்பாகையை அணிவித்து, தலைப்பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான்.
\s5
\v 10 பின்பு மோசே, அபிஷேகத் தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள அனைத்தையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்தி,
\v 11 அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுமுறை தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பொருட்களையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்செய்து,
\s5
\v 12 அபிஷேகத் தைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றி அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்செய்தான்.
\v 13 பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் மகன்களை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடுப்புக்கச்சைகளைக் கட்டி, குல்லாக்களை அணிவித்து,
\s5
\v 14 பாவநிவாரணபலிக்கான காளையைக் கொண்டுவந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள்;
\v 15 அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காக சுத்திகரிப்புசெய்து, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேல் பாவநிவிர்த்தி செய்வதற்காக அதைப் பரிசுத்தப்படுத்தினான்.
\s5
\v 16 பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்களின்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து,
\v 17 காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் முகாமிற்கு வெளியே நெருப்பிலே சுட்டெரித்தான்.
\s5
\v 18 பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
\v 19 அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.
\s5
\v 20 ஆட்டுக்கடா துண்டுதுண்டாக வெட்டப்பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டுகளையும் கொழுப்பையும் எரித்தான்.
\v 21 குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்கு நறுமண வாசனைக்கான சர்வாங்க தகனபலியாக எரித்தான்.
\s5
\v 22 பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
\v 23 பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான்.
\v 24 பின்பு ஆரோனுடைய மகன்களையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
\s5
\v 25 கொழுப்பையும், வாலையும், குடல்களின்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து,
\v 26 கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லாத அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லாத அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து,
\v 27 அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் மகன்களுடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும் பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி,
\s5
\v 28 பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் எரித்தான்; அவைகள் நறுமண வாசனையான பிரதிஷ்டை பலிகள்; இது கர்த்தருக்குத் தகனபலியானது.
\v 29 பின்பு மோசே மார்புப் பகுதியை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்கானது.
\s5
\v 30 மோசே அபிஷேகத்தைலத்திலும், பலிபீடத்தின்மேல் இருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவனுடைய உடைகளின்மேலும், அவனுடைய மகன்கள்மேலும் அவர்களுடைய உடைகளின்மேலும் தெளித்து, ஆரோனையும் அவனுடைய உடைகளையும், அவனுடைய மகன்களையும், அவனுடைய மகன்களின் உடைகளையும் பரிசுத்தப்படுத்தினான்.
\s5
\v 31 பின்பு மோசே ஆரோனையும் அவனுடைய மகன்களையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே வேகவைத்து, ஆரோனும் அவனுடைய மகன்களும், அதைச் சாப்பிடுவார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் சாப்பிட்டு,
\v 32 மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை நெருப்பிலே சுட்டெரித்து,
\v 33 பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாட்கள் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலைவிட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழுநாட்களும் நீங்கள் பிரதிஷ்டை செய்யப்படுவீர்கள்.
\s5
\v 34 இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்.
\v 35 நீங்கள் மரணமடையாதிருக்க ஏழுநாட்கள் இரவும் பகலும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலிருந்து கர்த்தருடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் போதிக்கப்பட்டேன் என்றான்.
\v 36 கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவனுடைய மகன்களும் செய்தார்கள்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 ஆசாரிய ஊழியத்தின் துவக்கம்
\p
\v 1 எட்டாம் நாளிலே மோசே, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் இஸ்ரவேலின் மூப்பர்களையும் அழைத்து,
\v 2 ஆரோனை நோக்கி: நீ பாவநிவாரணபலியாக பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் பலியிடக்கடவாய்.
\s5
\v 3 மேலும் இஸ்ரவேல் மக்களை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரணபலியாக பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,
\v 4 சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த உணவுபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குக் காட்சியளிப்பார் என்று சொல் என்றான்.
\v 5 மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லோரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்.
\s5
\v 6 அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.
\v 7 மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தின் அருகில் வந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, மக்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.
\s5
\v 8 அப்பொழுது ஆரோன் பலிபீடத்தின் அருகில் வந்து, தன் பாவநிவாரணபலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான்.
\v 9 ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் நனைத்து, பலிபீடத்தின் கொம்புகளின் மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
\s5
\v 10 பாவநிவாரணபலியின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் எரித்து,
\v 11 மாம்சத்தையும் தோலையும் முகாமிற்கு வெளியே நெருப்பிலே சுட்டெரித்தான்.
\s5
\v 12 பின்பு சர்வாங்கதகனபலியையும் கொன்றான்; ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.
\v 13 சர்வாங்கதகனபலியின் துண்டுகளையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் எரித்து,
\v 14 குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் எரித்தான்.
\s5
\v 15 பின்பு அவன் மக்களின் பலியைக்கொண்டுவந்து, மக்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, முந்தினதைப் பலியிட்டதுபோல, அதைப் பாவநிவாரணபலியாக்கி,
\v 16 சர்வாங்கதகனபலியையும் கொண்டுவந்து, முறைப்படி அதைப் பலியிட்டு,
\v 17 உணவுபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்கதகனபலியுடனே பலிபீடத்தின்மேல் எரித்தான்.
\s5
\v 18 பின்பு மக்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
\v 19 காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், சிறுநீரகங்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து,
\s5
\v 20 கொழுப்பை மார்புப்பகுதிகளின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரித்தான்.
\v 21 மார்புப்பகுதிகளையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்.
\s5
\v 22 பின்பு ஆரோன் மக்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்கதகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.
\v 23 பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழைந்து, வெளியே வந்து, மக்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல மக்களுக்கும் காணப்பட்டது.
\v 24 அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து நெருப்பு புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; மக்களெல்லோரும் அதைக் கண்டபோது ஆர்ப்பரித்து, முகங்குப்புற விழுந்து கர்த்தரைப் பணிந்துகொண்டனர்.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 நாதாபும் அபியூவும்
\p
\v 1 பின்பு ஆரோனின் மகன்களாகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் நெருப்பையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய நெருப்பை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
\v 2 அப்பொழுது நெருப்பு கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களை எரித்துவிட்டது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் மரணமடைந்தார்கள்.
\s5
\v 3 அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் செய்யப்பட்டு, சகல மக்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான்.
\v 4 பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் மகன்களாகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் அருகில்வந்து, உங்கள் சகோதரர்களைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து எடுத்து, முகாமிற்கு வெளியே கொண்டுபோங்கள் என்றான்.
\s5
\v 5 மோசே சொன்னபடி அவர்கள் அருகில்வந்து, அவர்களை அவர்கள் அணிந்திருந்த உடைகளோடும் எடுத்து முகாமிற்கு வெளியே கொண்டுபோனார்கள்.
\v 6 மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவனுடைய மகன்களையும் நோக்கி: நீங்கள் மரணமடையாமல் இருக்கவும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராமல் இருக்கவும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் உடைகளைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரும் கர்த்தர் கொளுத்தின இந்த நெருப்பிற்காகப் புலம்புவார்களாக.
\v 7 நீங்கள் சாகாமல் இருக்க ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; கர்த்தருடைய அபிஷேகத்தைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள்.
\s1 ஆசாரியர்களுக்கான விதிமுறைகள்
\p
\s5
\v 8 கர்த்தர் ஆரோனை நோக்கி:
\v 9 நீயும் உன்னுடன் உன் மகன்களும் மரணமடையாமல் இருக்கவேண்டுமானால், ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழைகிறபோது, திராட்சைரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.
\v 10 பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம் உண்டாக்கும்படிக்கும்,
\v 11 கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்ன சகலபிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருக்கும் என்றார்.
\s5
\v 12 மோசே ஆரோனையும் மீதியாக இருந்த அவனுடைய மகன்களாகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான உணவுபலியை எடுத்து, பலிபீடத்தின் அருகில் புளிப்பில்லாததாக சாப்பிடுங்கள்; அது மகா பரிசுத்தமானது.
\v 13 அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே சாப்பிடுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன் மகன்களுக்கும் ஏற்படுத்தப்பட்டதாக இருக்கிறது; இப்படிக் கட்டளை பெற்றிருக்கிறேன்.
\s5
\v 14 அசைவாட்டும் மார்புப் பகுதியையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் மகன்களும் மகள்களும் சுத்தமான இடத்திலே சாப்பிடுவீர்களாக; இஸ்ரவேல் மக்களுடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
\v 15 கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், அசைவாட்டும் மார்புப் பகுதியையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நிரந்தரமான கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான்.
\s5
\v 16 பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது எரிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாக இருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்கள்மேல் அவன் கோபம்கொண்டு:
\v 17 பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாக இருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக அதை உங்களுக்கு கொடுத்தாரே.
\v 18 அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப்பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடவேண்டியதாக இருந்ததே என்றான்.
\s5
\v 19 அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்கதகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி சம்பவித்ததே; பாவநிவாரணபலியை இன்று நான் சாப்பிட்டேன் என்றால், அது கர்த்தரின் பார்வைக்கு ஏற்றதாக இருக்குமோ என்றான்.
\v 20 மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\s1 அனுமதிக்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட உணவுகள்
\p
\v 1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
\v 2 நீங்கள் இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் சாப்பிடத்தக்க உயிரினங்கள் எவைகள் என்றால்:
\s5
\v 3 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாக இருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிற அனைத்தையும் நீங்கள் சாப்பிடலாம்.
\v 4 ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாக இருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாததால், அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும்.
\s5
\v 5 குழிமுயலானது அசைபோடுகிறதாக இருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும்.
\v 6 முயலானது அசைபோடுகிறதாக இருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும்.
\v 7 பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாக இருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும்.
\v 8 இவைகளின் மாம்சத்தைச் சாப்பிடவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
\s5
\v 9 தண்ணீரிலிருக்கிறவைகளில் நீங்கள் சாப்பிடத்தக்கது எதுவென்றால்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் சாப்பிடலாம்.
\v 10 ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
\s5
\v 11 அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தை சாப்பிடாமலிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.
\v 12 தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.
\s5
\v 13 பறவைகளில் நீங்கள் சாப்பிடாமல் அருவருக்கவேண்டியவைகள் எவைகள் என்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
\v 14 பருந்தும், சகலவித வல்லூறும்,
\v 15 சகலவித காகங்களும்,
\v 16 தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,
\s5
\v 17 ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,
\v 18 நாரையும், கூழக்கடாவும், குருகும்,
\v 19 கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே.
\s5
\v 20 பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
\v 21 ஆகிலும், பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற அனைத்திலும், நீங்கள் சாப்பிடத்தக்கது எதுவென்றால்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,
\v 22 வெட்டுக்கிளி வகையாக இருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிவகையாக இருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிவகையாக இருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிவகையாக இருக்கிறதையும் நீங்கள் சாப்பிடலாம்.
\v 23 பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற மற்ற அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
\s5
\v 24 அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
\v 25 அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
\s1 அசுத்தமான மிருகங்கள்
\p
\s5
\v 26 விரிநகங்கள் உள்ளவைகளாக இருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக இருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.
\v 27 நான்கு கால்களால் நடக்கிற சகல உயிரினங்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக இருப்பதாக; அவைகளின் உடலைத்தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
\v 28 அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
\s5
\v 29 தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையென்றால்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,
\v 30 உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.
\s5
\v 31 சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
\v 32 அவைகளில் செத்தது, எதன்மேல் விழுந்தாலும் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், உடையானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் மாலைவரைத் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.
\v 33 அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை அனைத்தும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.
\s5
\v 34 சாப்பிடத்தக்க உணவுபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.
\v 35 அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுமோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
\s5
\v 36 ஆனாலும், நீரூற்றும், மிகுந்த தண்ணீர் உண்டாகிய கிணறும், சுத்தமாக இருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.
\v 37 மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.
\v 38 அந்த உடலில் ஏதாவதொன்று தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
\s5
\v 39 உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத்தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
\v 40 அதின் மாம்சத்தைச் சாப்பிட்டவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துக்கொண்டுபோனவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
\s5
\v 41 தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை சாப்பிடப்படக்கூடாது.
\v 42 தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நான்கு கால்களால் நடமாடுகிறவைகளையும் அநேகம் கால்களுள்ளவைகளையும் சாப்பிடாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.
\s5
\v 43 ஊருகிற எந்தப் பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்கிக் கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.
\v 44 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராக இருப்பீர்களாக.
\v 45 நான் உங்கள் தேவனாக இருப்பதற்கு உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராக இருப்பீர்களாக.
\s5
\v 46 சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், சாப்பிடத்தக்க உயிரினங்களுக்கும் சாப்பிடத்தகாத உயிரினங்களுக்கும் வித்தியாசம் உண்டாக்குவதற்காக,
\v 47 மிருகத்திற்கும், பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல உயிரினங்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\s1 குழந்தைப் பிறப்பிற்குப்பின் கைக்கொள்ளவேண்டியவை
\p
\v 1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஒரு பெண் கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் மாதவிடாய் உள்ள பெண் விலக்கமாக இருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாட்கள் தீட்டாயிருப்பாள்.
\v 3 எட்டாம் நாளிலே அந்த குழந்தையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படக்கடவது.
\s5
\v 4 பின்பு அவள் முப்பத்துமூன்று நாட்கள் தன் இரத்தச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் முடியும்வரை பரிசுத்தமான யாதொரு பொருளைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரவும் கூடாது.
\v 5 பெண்குழந்தையைப் பெறுவாளென்றால், அவள், இரண்டு வாரங்கள் மாதவிடாய் உள்ள பெண்ணைப்போலத் தீட்டாயிருந்து, பின்பு அறுபத்தாறு நாட்கள் இரத்தச் சுத்திகரிப்பு நிலையிலே இருக்கக்கடவள்.
\s5
\v 6 அவள் ஆண்குழந்தையையாவது பெண்குழந்தையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் முடிந்தபின்பு, அவள் ஒருவயதுடைய ஆட்டுக்குட்டியை சர்வாங்கதகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரணபலியாகவும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.
\s5
\v 7 அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் இரத்தப்போக்கின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்குழந்தையையாவது பெண்குழந்தையையாவது பெற்றவளைக்குறித்த விதிமுறைகள்.
\v 8 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்கு சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஏதாவது ஒன்றை சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 தொழுநோயைக்குறித்த சட்டங்கள்
\p
\v 1 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
\v 2 ஒரு மனிதனுடைய உடலின்மேல் தொழுநோய்போலிருக்கிற ஒரு தடிப்பாவது, புண்ணின் தோலாவது, வெள்ளைப்படராவது உண்டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும், ஆசாரியர்களாகிய அவனுடைய மகன்களில் ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக்கடவன்.
\s5
\v 3 அப்பொழுது ஆசாரியன் அவனுடைய உடலின்மேல் இருக்கிற வியாதியைப் பார்க்கவேண்டும்; வியாதியுள்ள இடத்தில் முடி வெளுத்தும், வியாதியுள்ள இடம் அவனுடைய உடலின் மற்ற பகுதியைவிட அதிகமாகக் குழிந்தும் இருந்தால் அது தொழுநோய்; ஆசாரியன் அவனைப் பார்த்தபின்பு, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.
\v 4 அவனுடைய உடலின்மேல் வெள்ளைப்படர்ந்திருந்தாலும், அந்த இடம் அவனுடைய மற்றத் தோலைவிட அதிக பள்ளமாக இல்லாமலும், அதின் முடி வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
\s5
\v 5 ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; தோலில் வியாதி அதிகமாகாமல், அவன் பார்வைக்கு வியாதி நின்றிருந்தால், ஆசாரியன் இரண்டாவதுமுறை அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
\v 6 இரண்டாவதுமுறை அவனை ஏழாம் நாளில் பார்க்கக்கடவன்; தோலில் வியாதி அதிகமாகாமல் சுருங்கியிருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தேமல்; அவன் தன் உடைகளைத் துவைத்துச் சுத்தமாக இருப்பானாக.
\s5
\v 7 தன்னைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்தபின்பு, தோலில் தேமல் அதிகமாகப் படர்ந்திருந்தால், அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன்.
\v 8 அப்பொழுது தோலிலே தேமல் படர்ந்தது என்று ஆசாரியன் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்.
\s5
\v 9 ஒரு மனிதனுக்கு தொழுநோய் இருந்தால், அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்.
\v 10 அப்பொழுது ஆசாரியன் அவனைப் பார்த்து, தோலிலே வெள்ளையான தடிப்பிருந்து, அது முடியை வெண்மையாக மாறச்செய்தது என்றும், அந்தத் தடிப்புள்ள இடத்திலே புண் உண்டென்றும் கண்டால்,
\v 11 அது அவனுடைய உடலிலுள்ள நாள்பட்ட தொழுநோய்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால், ஆசாரியன் அவனை அடைத்துவைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.
\s5
\v 12 ஆசாரியன் பார்க்கிற இடங்களெங்கும் தோலிலே தொழுநோய் தோன்றி, அந்த வியாதியுள்ளவனுடைய தலைமுதல் கால்வரை அது உடல்முழுவதையும் மூடியிருக்கக்கண்டால்,
\v 13 அப்பொழுது ஆசாரியன் பார்த்து, தொழுநோய் அவன் உடல் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் உடல்முழுவதும் வெண்மையாகிவிட்டதால், அவன் சுத்தமுள்ளவன்.
\v 14 ஆனாலும், புண் அவனில் காணப்பட்டால், அவன் தீட்டுள்ளவன்.
\s5
\v 15 ஆகையால், புண்ணை ஆசாரியன் பார்க்கும்போது, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; புண் தீட்டுள்ளது; அது தொழுநோய்.
\v 16 அல்லது புண் மாறி வெண்மையானால், அவன் ஆசாரியனிடத்திற்கு வரவேண்டும்.
\v 17 ஆசாரியன் அவனைப் பார்த்து, வியாதியுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.
\s5
\v 18 உடலின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்,
\v 19 அந்த இடத்திலே ஒரு வெள்ளைத்தடிப்பாவது சிவப்புக் கலந்த ஒரு வெள்ளைப்படராவது உண்டானால், அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
\v 20 ஆசாரியன் அதைப் பார்த்து, அந்த இடம் மற்ற தோலைவிட குழிந்திருக்கவும், அதின் முடி வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கவேண்டும்; அது புண்ணில் உண்டான தொழுநோய்.
\s5
\v 21 ஆசாரியன் அதைப் பார்த்து, அதில் வெள்ளைமுடி இல்லை என்றும், அது மற்ற தோலைவிட குழிந்திராமல் சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
\v 22 அது தோலில் அதிகமாகப் படர்ந்திருக்கக்கண்டால், அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்தான்.
\v 23 அந்த வெள்ளைப்படர் அதிகமாகாமல், அந்த அளவில் நின்றிருக்குமானால், அது புண்ணின் தழும்பாயிருக்கும்; ஆகையால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.
\s5
\v 24 ஒருவனுடைய உடலின்மேல் நெருப்புப்பட்டதினாலே வெந்து, அந்த தீக்காயம் ஆறிப்போன இடத்திலே சிவப்பான படராவது வெண்மையான படராவது உண்டானால்,
\v 25 ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்; அந்தப் படரிலே முடி வெண்மையாக மாறி, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமாக இருந்தால், அது தீக்காயத்தினால் உண்டான தொழுநோய்; ஆகையால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்தான்.
\s5
\v 26 ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது, படரிலே வெள்ளைமுடி இல்லை என்றும், அது மற்ற தோலைவிட குழிந்திராமல், சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
\v 27 ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாகப் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்.
\v 28 படரானது தோலில் அதிகமாகாமல், அந்த அளவில் நின்று சுருங்கியிருந்ததானால், அது தீக்காயத்தினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது சூட்டினால் வந்த தீக்காயம்.
\s5
\v 29 ஆணுக்காகிலும் பெண்ணுக்காகிலும் தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்,
\v 30 ஆசாரியன் அதைப் பார்த்து, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமும் அதிலே முடி பொன் நிறமும் மிருதுவாகவும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிதொழுநோய்.
\s5
\v 31 ஆசாரியன் அந்தச் சொறிதொழுநோயைப் பார்க்கும்போது, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமாக இல்லாமலும், அதிலே கறுத்தமுடி இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
\s5
\v 32 ஏழாம்நாளில் ஆசாரியன் அதைப்பார்க்கக்கடவன்; அந்தச் சொறி படராமலும், அதிலே பொன்நிறமுடி இல்லாமலும், அந்த இடம் மற்றத் தோலைவிட பள்ளமில்லாமலும் இருந்தால்,
\v 33 அந்தச் சொறியுள்ள இடம்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு, ஆசாரியன் இரண்டாவதுமுறை அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
\s5
\v 34 ஏழாம்நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி, தோலில் பரவாமலும், அந்த இடம் மற்றத் தோலைவிட பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் தன் உடைகளைத் துவைத்தபின் சுத்தமாக இருப்பான்.
\s5
\v 35 அவன் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கப்பட்டபின்பு, அந்தச் சொறி, தோலில் இடங்கொண்டதானால்,
\v 36 ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் பரவியிருந்தால், அப்பொழுது முடி பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்க வேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.
\v 37 அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமுடி முளைத்ததேயாகில், சொறி குணமாகிவிட்டது; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.
\s5
\v 38 ஒரு ஆணுக்காகிலும் பெண்ணுக்காகிலும் அவர்கள் உடலின்மேல் வெள்ளைப் புள்ளிகள் உண்டாயிருந்தால்,
\v 39 ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்களுடைய உடலிலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத்தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.
\s5
\v 40 ஒருவனுடைய தலைமுடி உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாக இருக்கிறான்.
\v 41 அவனுடைய முன்னந்தலை முடி உதிர்ந்தால், அவன் அரைமொட்டையன்; அவனும் சுத்தமாக இருக்கிறான்.
\s5
\v 42 மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது சிவப்புக்கலந்த வெண்மையான படர் உண்டானால், அது அதில் ஏற்படுகிற தொழுநோய்.
\v 43 ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; அவனுடைய மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாகும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக்கண்டால்,
\v 44 அவன் தொழுநோயாளி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.
\s5
\v 45 அந்த வியாதி உண்டாயிருக்கிற தொழுநோயாளி உடை கிழிந்தவனாகவும், தன் தலையை மூடாதவனாகவும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, தீட்டு, தீட்டு என்று சத்தமிடவேண்டும்.
\v 46 அந்த வியாதி அவனில் இருக்கும் நாட்கள்வரை தீட்டுள்ளவனாக கருதப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவனுடைய குடியிருப்பு, முகாமிற்கு வெளியே இருக்கக்கடவது.
\s1 பூசணம் பிடித்த உடைகளுக்கான சட்டம்
\p
\s5
\v 47 ஆட்டுரோம உடையிலாவது, பஞ்சுநூல் உடையிலாவது,
\v 48 பஞ்சுநூல் அல்லது ஆட்டுரோமத்தினாலான நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது பூசணம் தோன்றி,
\v 49 உடையிலாவது, தோலிலாவது, நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலினால் செய்த எந்தவித பொருளிலாவது பூசணம் பச்சையாகவோ சிவப்பாகவோ காணப்பட்டால் அது குஷ்டமாக இருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
\s5
\v 50 ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
\v 51 ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; உடையிலாவது, நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது அது பரவியிருந்தால், அது அரிக்கிற தொழுநோய்; அது தீட்டாயிருக்கும்.
\v 52 அந்த பூசணம் இருக்கிற ஆட்டுரோமத்தினாலும் பஞ்சுநூலினாலும் செய்யப்பட்டஉடையையும், நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்டவைகளையும், தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற தொழுநோய்; ஆகையால் நெருப்பில் சுட்டெரிக்கப்படவேண்டும்.
\s5
\v 53 உடையின் நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது, அந்தப் பூசணம் பரவவில்லை என்று ஆசாரியன் கண்டால்,
\v 54 அப்பொழுது ஆசாரியன் அதைக்கழுவச்சொல்லி, இரண்டாவதுமுறை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
\v 55 அது கழுவப்பட்டபின்பு, அதைப் பார்க்கக்கடவன்; அந்தப் பூசணம் பரவாமல் இருந்தாலும், அது நிறம் மாறாததாக இருந்தால் தீட்டாயிருக்கும்; தீயில் அதை எரித்துவிடவேண்டும்; அது அந்த உடையின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஆழமாக அரிக்கும்.
\s5
\v 56 கழுவப்பட்டபின்பு அது குறைந்ததென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை உடையிலாவது, தோலிலாவது, நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்டவைகளிலாவது இல்லாதபடிக்கு எடுத்துப்போடவேண்டும்.
\v 57 அது இன்னும் உடையிலாவது, நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்டவைகளிலாவது, தோலினால் செய்த எந்தவித பொருளிலாவது காணப்பட்டால், அது படருகிற பூசணம்; ஆகையினால் அது உள்ளதை தீயில் எரித்துவிடவேண்டும்.
\v 58 ஆடையின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித பொருளாவது கழுவப்பட்டபின்பு, அந்தப் பூசணம் அதை விட்டுப் போயிற்றேயானால், இரண்டாவதுமுறை கழுவப்படவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருக்கும்.
\s5
\v 59 ஆட்டுரோமமாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த உடையையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித பொருளையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்மானிக்கிறதற்கு, அதினுடைய தொழுநோய் தோஷத்துக்குரிய விதிமுறைகள் இதுவே என்றார்.
\s5
\c 14
\cl அத்தியாயம்– 14
\s1 தொழுநோயாளியின் சுத்திகரிப்பு
\p
\v 1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 தொழுநோயாளியினுடைய சுத்திகரிப்பின் நாட்களில் அவனுக்குரிய விதிமுறைகள் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும்.
\s5
\v 3 ஆசாரியன் முகாமிற்கு வெளியே போய்; அவனுடைய தொழுநோய் சுகமாகிவிட்டது என்று கண்டால்,
\v 4 சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டளையிடக்கடவன்.
\v 5 பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பானையிலுள்ள சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லச்சொல்லி,
\s5
\v 6 உயிருள்ள குருவியையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே நனைத்து,
\v 7 தொழுநோய் நீங்கச் சுத்திரிக்கப்படுகிறவன்மேல் ஏழுமுறை தெளித்து, அவனைச் சுத்தம்செய்து, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன்.
\s5
\v 8 சுத்திகரிக்கப்படுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தன் முடி முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாவதற்காக தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்கு வந்து, தன் கூடாரத்திற்கு வெளியே ஏழுநாட்கள் தங்கி,
\v 9 ஏழாம் நாளிலே தன் தலையையும், தாடியையும், புருவங்களையும் தன்னுடைய முடிமுழுவதையும் சிரைத்து, தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருப்பான்.
\s5
\v 10 எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒருவயதுள்ள பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், உணவுபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஒரு ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன்.
\v 11 சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அப்பொருட்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.
\s5
\v 12 பின்பு, ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி,
\v 13 பாவநிவாரணபலியும் சர்வாங்கதகனபலியும் செலுத்தும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.
\s5
\v 14 அந்த குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசக்கடவன்.
\v 15 பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் ஊற்றி
\v 16 தன் இடதுகையிலுள்ள எண்ணெயில் தன் வலதுகையின் விரலை நனைத்து, தன் விரலினால் ஏழுமுறை அந்த எண்ணெயில் எடுத்து, கர்த்தருடைய சந்நிதியில் தெளித்து,
\s5
\v 17 தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயிலே கொஞ்சம் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும், ஏற்கனவே பூசியிருக்கிற குற்றநிவாரண பலியினுடைய இரத்தத்தின்மேல் பூசி,
\v 18 தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய தலையிலே ஊற்றி கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
\s5
\v 19 ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்கதகனபலியைக் கொன்று,
\v 20 சர்வாங்கதகனபலியையும் உணவுபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாக இருப்பான்.
\s5
\v 21 அவன் இவ்விதம் செய்யமுடியாத ஏழையாக இருந்தால், அவன் தன் பாவநிவிர்த்திக்கென்று அசைவாட்டும் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்குட்டியையும், உணவுபலிக்கு எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால் மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கையும், ஆழாக்கு எண்ணெயையும்,
\v 22 தன் தகுதிக்குத் தக்கபடி இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்று பாவநிவாரணபலியாகவும், மற்றொன்று சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தும்படி வாங்கி,
\v 23 தான் சுத்திகரிக்கப்படும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவருவானாக.
\s5
\v 24 அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் உணவுபலியாக அசைவாட்டி,
\v 25 குற்றநிவாரணபலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,
\s5
\v 26 அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் ஊற்றி
\v 27 தன் இடதுகையிலுள்ள எண்ணெயிலே தன் வலதுவிரலை நனைத்து, கர்த்தருடைய சந்நிதியில் ஏழுமுறை தெளித்து,
\s5
\v 28 தன் உள்ளங்கையில் இருக்கிற எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின் இரத்தம் பூசியிருக்கிற இடத்தின்மேல் பூசி,
\v 29 தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,
\s5
\v 30 பின்பு, அவன் தன் பெலத்திற்கும் தகுதிக்கும் தக்கதாக காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து,
\v 31 அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, உணவுபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
\v 32 தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கமுடியாத தொழுநோயாளியைக் குறித்த விதிமுறைகள் இதுவே என்றார்.
\s1 பூசணம்பிடித்த வீட்டிற்கான சட்டம்
\p
\s5
\v 33 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
\v 34 நான் உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் சொந்தமான தேசத்தில் ஒரு வீட்டிலே பூசணத்தை நான் வரச்செய்தால்,
\v 35 அந்த வீட்டிற்குச் சொந்தமானவன் வந்து, வீட்டிலே பூசணம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.
\s5
\v 36 அப்பொழுது வீட்டிலுள்ள அனைத்தும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தப் பூசணத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை காலிசெய்துவைக்கச் சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய்,
\v 37 அந்தப் பூசணம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்ற சுவரைவிட பள்ளமாக இருக்கக்கண்டால்,
\v 38 ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
\s5
\v 39 ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, பூசணம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்,
\v 40 பூசணம் இருக்கும் அந்த இடத்தின் கற்களைப் பெயர்க்கவும், பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,
\s5
\v 41 வீட்டின் உட்புறம் சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும்,
\v 42 வேறே கற்களை எடுத்துவந்து, அந்தக் கற்களுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
\s5
\v 43 கற்களைப் பெயர்த்து, வீட்டைச்செதுக்கி, புதிதாகப் பூசினபின்பும், அந்தப் பூசணம் மீண்டும் வீட்டில் வந்ததானால்,
\v 44 ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன்; பூசணம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற பூசணம்; அது தீட்டாயிருக்கும்.
\s5
\v 45 ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கற்களையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும்.
\v 46 வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
\v 47 அந்த வீட்டிலே உறங்கியவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்.
\s5
\v 48 ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தப் பூசணம் படரவில்லை என்று கண்டானேயாகில், பூசணம் நீங்கிவிட்டதால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்மானிக்கக்கடவன்.
\s5
\v 49 அப்பொழுது வீட்டைச் சுத்திகரிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து,
\v 50 ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,
\v 51 கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் நனைத்து, வீட்டின்மேல் ஏழுமுறை தெளித்து,
\s5
\v 52 குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டைச் சுத்திகரித்து,
\v 53 உயிருள்ள குருவியைப் பட்டணத்திற்கு வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாக இருக்கும்.
\s5
\v 54 இது சகலவித தொழுநோய்க்கும், சொறிக்கும்,
\v 55 உடைப் பூசணத்திற்கும், வீட்டுப்பூசணத்திற்கும்,
\v 56 தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் உரிய விதிமுறை.
\v 57 தொழுநோய் மற்றும் பூசணம், எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்கு தொழுநோய்க்குரிய விதிமுறைகள் இதுவே என்றார்.
\s5
\c 15
\cl அத்தியாயம்– 15
\s1 விந்து கழிதலைக் குறித்த சட்டம்
\p
\v 1 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
\v 2 நீங்கள் இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்கு விந்து கழிதல் உண்டானால், அதினாலே அவன் தீட்டானவன்.
\v 3 அவனுடைய மாம்சத்திலுள்ள விந்து ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் விந்து அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்.
\s5
\v 4 விந்து கழிதல் உள்ளவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.
\v 5 அவனுடைய படுக்கையைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கக்கடவன்; மாலைவரைத் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
\s5
\v 6 விந்து கழிதல் உள்ளவன் உட்கார்ந்த இடத்தில் உட்காருகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
\v 7 விந்து கழிதல் உள்ளவனின் உடலைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
\s5
\v 8 விந்து கழிதல் உள்ளவன் சுத்தமாக இருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
\v 9 விந்து கழிதல் உள்ளவன் ஏறும் எந்தச் சேணமும் தீட்டாயிருக்கும்.
\s5
\v 10 அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
\v 11 விந்து கழிதல் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
\v 12 விந்து கழிதல் உள்ளவன் தொட்ட மண்பானை உடைக்கப்படவும், மரச்சாமான் அனைத்தும் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.
\s5
\v 13 விந்து கழிதல் உள்ளவன் தன் விந்து கழிதல் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாட்கள் எண்ணிக்கொண்டிருந்து, தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாக இருப்பான்.
\v 14 எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.
\v 15 ஆசாரியன் அவைகளில் ஒன்றை பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவனுடைய விந்து கழிதலின் காரணமாக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
\s5
\v 16 ஒருவனிலிருந்து விந்து கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரை அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
\v 17 கழிந்த விந்து பட்ட உடையும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, மாலைவரைத் தீட்டாயிருப்பதாக.
\v 18 விந்து கழிந்தவனோடே பெண் படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பார்களாக.
\s5
\v 19 மாதவிடாய் உள்ள பெண் தன் உடலிலுள்ள இரத்தப்போக்கின் காரணமாக ஏழுநாட்கள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
\v 20 அவள் விலக்கத்தில் இருக்கும்போது, எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
\s5
\v 21 அவளுடைய படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
\v 22 அவள் உட்கார்ந்த இருக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
\v 23 அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த இருக்கையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
\s5
\v 24 ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவளுடைய தீட்டு, அவன்மேல் பட்டிருந்தால், அவன் ஏழுநாட்கள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.
\s5
\v 25 ஒரு பெண் விலகியிருக்க வேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய இரத்தம் அநேகநாட்கள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்திற்கும் அதிகமாக அது இருக்கும் நாட்களெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.
\v 26 அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த இருக்கையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.
\v 27 அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
\s5
\v 28 அவள் தன் இரத்தப்போக்கு நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாட்கள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாக இருப்பாள்.
\v 29 எட்டாம்நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.
\v 30 ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய இரத்தப்போக்கினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
\s5
\v 31 இஸ்ரவேல் மக்கள் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் மரணமடையாமலிருக்க, இப்படி நீங்கள் அவர்களுடைய தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்.
\s5
\v 32 விந்து கழிதல் உள்ளவனுக்கும், விந்து கழிந்ததினாலே தீட்டானவனுக்கும்,
\v 33 இரத்தப்போக்கு பலவீனமுள்ளவளுக்கும், விந்து கழிதல் உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே என்றார்.
\s5
\c 16
\cl அத்தியாயம்– 16
\s1 பிராயச்சித்தம் செய்யப்படும் நாள்
\p
\v 1 ஆரோனின் இரண்டு மகன்கள் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரணமடைந்தபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் மரணமடையாமலிருக்க, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாக எல்லா நேரங்களிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
\s5
\v 3 ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி நுழையவேண்டும்.
\v 4 அவன் பரிசுத்தமான சணல்நூல்சட்டையை அணிந்து, தன் இடுப்பிற்குச் சணல்நூல் உள்ளாடையைப் போட்டு, சணல்நூல் இடுப்புக்கச்சையைக் கட்டி, சணல்நூல் தலைப்பாகையைத் அணிந்துகொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த உடைகள்; அவன் தண்ணீரில் குளித்து, அவைகளை அணிந்துகொண்டு,
\v 5 இஸ்ரவேல் மக்களாகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்கதகனபலியாக ஒரு ஆட்டுகடாவையும் வாங்கக்கடவன்.
\s5
\v 6 பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரச்செய்து,
\v 7 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
\s5
\v 8 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
\v 9 கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரச்செய்து,
\v 10 போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்திரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;
\s5
\v 11 பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்திற்கான காளையைக் கொண்டுவந்து, அதைக்கொன்று,
\s5
\v 12 கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட நறுமண தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து,
\v 13 தான் மரணமடையாமலிருக்க தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் நெருப்பின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்.
\s5
\v 14 பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்திற்கு முன்பாக ஏழுமுறை தன் விரலினால் தெளிக்கக்கடவன்.
\s5
\v 15 பின்பு மக்களுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,
\v 16 இஸ்ரவேல் மக்களுடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தம்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக்கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
\s5
\v 17 பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக்கூடாரத்தில் ஒருவரும் இருக்கக்கூடாது.
\v 18 பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தம்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,
\v 19 தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுமுறை அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் மக்களின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன்.
\s5
\v 20 அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் பிராயச்சித்தம் செய்துமுடிந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரச்செய்து,
\v 21 அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் மக்களுடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஒருவன் கையில் கொடுத்து வனாந்திரத்திற்கு அனுப்பிவிடக்கடவன்.
\v 22 அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன்.
\s5
\v 23 ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்போது, அணிந்திருந்த சணல்நூல் உடைகளைக் கழற்றி, அங்கே வைத்துவிட்டு,
\v 24 பரிசுத்த இடத்திலே தண்ணீரில் குளித்து, தன் உடைகளை அணிந்துகொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்கதகனபலியையும் மக்களின் சர்வாங்கதகனபலியையும் செலுத்தி, தனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,
\s5
\v 25 பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்.
\v 26 போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.
\s5
\v 27 பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்திற்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், முகாமிற்கு வெளியே கொண்டுபோய், அவைகளின் தோலையும், மாம்சத்தையும், சாணியையும் நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.
\v 28 அவைகளைச் சுட்டெரித்தவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.
\s5
\v 29 ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, இஸ்ரவேலனானாலும், உங்களுக்குள் தங்கும் அந்நியனானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருக்கக்கடவது.
\v 30 கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்க, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
\v 31 உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வு நாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நிரந்தரமான கட்டளை.
\s5
\v 32 அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பனுடைய பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியம்செய்யப் பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த உடைகளாகிய சணல்நூல் உடைகளை அணிந்துகொண்டு,
\v 33 பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும், பிராயச்சித்தம்செய்து, ஆசாரியர்களுக்காகவும் சபையின் சகல மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
\s5
\v 34 இப்படி வருடத்தில் ஒருமுறை இஸ்ரவேல் மக்களுக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.
\s5
\c 17
\cl அத்தியாயம்– 17
\s1 பரிசுத்த இரத்தம்
\p
\v 1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்:
\v 3 இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,
\v 4 முகாமிற்குள்ளேயோ அல்லது வெளியேயோ அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக கருதப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான்.
\s5
\v 5 ஆகையால் இஸ்ரவேல் மக்கள் வெளியிலே பலியிடுகிற தங்களுடைய பலிகளை, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் கர்த்தருக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள்.
\v 6 அங்கே ஆசாரியன், இரத்தத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் கர்த்தருக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன்.
\s5
\v 7 தாங்கள் முறைகேடான முறையில் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாமல் இருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருக்கக்கடவது.
\s5
\v 8 மேலும் நீ அவர்களை நோக்கி: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்கதகனபலி முதலானவைகளைச் செலுத்தி,
\v 9 அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான் என்று சொல்.
\s5
\v 10 இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் எந்தவொரு இரத்தத்தைச் சாப்பிட்டால், இரத்தத்தைச் சாப்பிட்ட அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகச் செய்வேன்.
\v 11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
\s5
\v 12 ஆகவே உங்களில் ஒருவனும் இரத்தம் சாப்பிடவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் சாப்பிடவேண்டாம் என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன்.
\v 13 இஸ்ரவேல் மக்களிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சாப்பிடத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பறவையையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தச்செய்து, மண்ணினால் அதை மூடக்கடவன்.
\s5
\v 14 சகல மாம்சத்திற்கும் இரத்தம் உயிராக இருக்கிறது; இரத்தம் உயிருக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் சாப்பிடவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தம் தானே; அதைச் சாப்பிடுகிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன்.
\s5
\v 15 தானாக இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது சாப்பிட்டவன் எவனும் அவன் இஸ்ரவேலனானாலும் அந்நியனானாலும், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாக இருப்பான்.
\v 16 அவன் தன் உடைகளைத் துவைக்காமலும், குளிக்காமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.
\s5
\c 18
\cl அத்தியாயம்– 18
\s1 ஒழுக்க சீர்கேடுகளுக்கான விதிமுறைகள்
\p
\v 1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நீ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
\v 3 நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,
\s5
\v 4 என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
\v 5 ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
\s5
\v 6 ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்குவதற்கு அவளைச் சேரக்கூடாது; நான் கர்த்தர்.
\v 7 உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கக்கூடாது.
\v 8 உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.
\s5
\v 9 உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலோ வெளியிலோ பிறந்த மகளாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது.
\v 10 உன் மகனுடைய மகளையாவது உன் மகளுடைய மகளையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அது உன்னுடைய நிர்வாணம்.
\v 11 உன் தகப்பனுடைய மனைவியிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த மகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உனக்குச் சகோதரி.
\s5
\v 12 உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின உறவானவள்.
\v 13 உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின உறவானவள்.
\v 14 உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கக்கூடாது; அவன் மனைவியைச் சேராதே; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.
\s5
\v 15 உன் மருமகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் மகனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கக்கூடாது.
\v 16 உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.
\s5
\v 17 ஒரு பெண்ணையும் அவளுடைய மகளையும் நிர்வாணமாக்கக்கூடாது; அவளுடைய மகன்களின் மகளையும் மகளின் மகளையும் நிர்வாணமாக்கும்படி திருமணம் செய்யக்கூடாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின உறவானவர்கள்; அது முறைகேடு.
\v 18 உன் மனைவி உயிரோடிருக்கும்போது அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்குவதற்காக அவளைத் திருமணம் செய்யக்கூடாது.
\s5
\v 19 பெண்ணானவள் மாதவிலக்கால் விலக்கப்பட்டிருக்கும்போது, அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.
\v 20 பிறனுடைய மனைவியோடே சேர்ந்து உடலுறவுகொண்டு, அவள்மூலம் உன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளவேண்டாம்.
\s5
\v 21 நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகு தெய்வத்திற்கென்று தீயில் பலியாக்க இடம்கொடுக்காதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.
\s5
\v 22 பெண்ணோடு உடலுறவு செய்வதுபோல ஆணோடே உடலுறவு செய்யவேண்டாம்; அது அருவருப்பானது.
\v 23 எந்தவொரு மிருகத்தோடும் நீ உடலுறவுகொண்டு, அதினாலே உன்னைத்தீட்டுப்படுத்த வேண்டாம்; பெண்ணானவள் மிருகத்தோடே உடலுறவுகொள்ள ஏதுவாக அதற்கு முன்பாக நிற்கக்கூடாது; அது அருவருப்பான தாறுமாறு.
\s5
\v 24 இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற மக்கள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
\v 25 ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் மக்களை புறக்கணித்துவிடும்.
\s5
\v 26 இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர்கள் செய்ததினாலே தேசம் தீட்டானது.
\v 27 இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த மக்களை தேசம் புறக்கணித்ததைப்போல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் புறக்கணிக்காதிருக்க,
\v 28 நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம்.
\s5
\v 29 இப்படிபட்ட அருவருப்பானவைகளில் ஒன்றையாவது யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் மக்களுக்குள் இல்லாதபடிக்கு அறுப்புண்டு போவார்கள்.
\v 30 ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலிருக்க என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
\s5
\c 19
\cl அத்தியாயம்– 19
\s1 ஒழுக்கநெறிகள்
\p
\v 1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நீ இஸ்ரவேல் மக்களின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராக இருங்கள்.
\v 3 உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை அனுசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
\v 4 சிலைகளை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
\s5
\v 5 நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மன உற்சாகமாகச் செலுத்துங்கள்.
\v 6 நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைச் சாப்பிடவேண்டும்; மூன்றாம் நாள்வரை மீதியானது நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
\v 7 மூன்றாம் நாளில் அதில் எதையாகிலும் சாப்பிட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது.
\v 8 அதைச் சாப்பிடுகிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினதினால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான்.
\s5
\v 9 நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும்,
\v 10 உன் திராட்சைத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை ஏழைகளுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
\s5
\v 11 நீங்கள் திருடாமலும், வஞ்சனைசெய்யாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.
\v 12 என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
\s5
\v 13 பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்வரை உன்னிடத்தில் இருக்கக்கூடாது.
\v 14 செவிடனை நிந்திக்காமலும், குருடனுக்கு முன்னே தடைகளை வைக்காமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.
\s5
\v 15 நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்திற்கு பயப்படாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.
\v 16 உன் மக்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாதே; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.
\s5
\v 17 உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே; பிறன்மேல் பாவம் சுமராதபடி அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.
\v 18 பழிக்குப்பழி வாங்காமலும் உன் மக்கள்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.
\s5
\v 19 என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகங்களை வேறு இனத்தோடே பெருகச்செய்யாதே; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதைக்காதே; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த உடையை அணியாதே
\s5
\v 20 ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு ஆணுக்கு நியமிக்கப்பட்டவளாக இருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாக விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் காம உணர்வுடன் உடலுறவுகொண்டால், அவர்கள் கொலை செய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுதந்திரமுள்ளவள் அல்ல.
\v 21 அவன் தன் குற்றநிவாரணபலியாக ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.
\v 22 அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
\s5
\v 23 நீங்கள் அந்த தேசத்தில் வந்து, சாப்பிடத்தக்க பழங்களைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு அவைகளின் பழங்களை விருத்தசேதனம் இல்லாதவைகளென்று கருதுவீர்களாக; மூன்று வருடங்கள் அது சாப்பிடப்படாமல், விருத்தசேதனம் இல்லாததாக உங்களுக்கு கருதப்படவேண்டும்.
\v 24 பின்பு நான்காம் வருடத்திலே அவைகளின் பழங்களெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாக இருக்கும்.
\v 25 ஐந்தாம் வருடத்திலே அவைகளின் பழங்களைச் சாப்பிடலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
\s5
\v 26 யாதொன்றையும் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். குறிகேட்காமலும், நாள்பார்க்காமலும் இருப்பீர்களாக.
\v 27 உங்கள் தலைமுடியைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
\v 28 செத்தவனுக்காக உங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
\s5
\v 29 தேசத்தார் வேசித்தனம்செய்து தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் மகளை வேசித்தனம்செய்ய விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காதே.
\v 30 என் ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாக இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
\s5
\v 31 மாந்திரீகம் செய்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
\s5
\v 32 நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்செய்து, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.
\s5
\v 33 யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.
\v 34 உங்களிடத்தில் குடியிருக்கிற அந்நியனை இஸ்ரவேலனைப்போல கருதி, நீங்கள் உங்களில் அன்புசெலுத்துவதுபோல அவனிலும் அன்புசெலுத்துவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
\s5
\v 35 நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.
\v 36 நியாயமான தராசும், நியாயமான நிறைகல்லும், நியாயமான மரக்காலும், நியாயமான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய கர்த்தர்.
\v 37 ஆகையால் என்னுடைய கட்டளைகள், நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
\s5
\c 20
\cl அத்தியாயம்– 20
\s1 சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 பின்னும் நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்; இஸ்ரவேல் மக்களிலும் இஸ்ரவேலில் குடியிருக்கிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுதெய்வத்திற்கென்று கொடுத்தால், அவன் கொலைசெய்யப்படவேண்டும்; தேசத்தின் மக்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும்.
\s5
\v 3 அவன் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும்படிக்கு, தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்ததினாலே, நான் அப்படிப்பட்டவனுக்கு விரோதமாக எதிர்த்து நின்று, அவனைத் தன் மக்களுக்குள் இல்லாதபடிக்கு அறுப்புண்டு போகச் செய்வேன்.
\v 4 அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் மக்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்டுகொள்ளாமல் இருந்தால்,
\v 5 நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்திற்கும் விரோதமாக எதிர்த்து நின்று, அவனையும், அவன் பின்னே மோளேகை விபசாரமார்க்கமாகப் பின்பற்றின அனைவரையும், தங்கள் மக்களுக்குள் இல்லாதபடிக்கு அறுப்புண்டுபோகச் செய்வேன்.
\s5
\v 6 ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்பற்றி கெட்டுப்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோகச் செய்வேன்.
\v 7 ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராக இருங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
\s5
\v 8 என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
\v 9 தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தாயையும் சபித்தான், அவனுடைய இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.
\s5
\v 10 ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
\v 11 தன் தகப்பனுடைய மனைவியோடே உறவுகொள்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
\v 12 ஒருவன் தன் மருமகளோடே உறவுகொண்டால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு செய்தார்கள்; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
\s5
\v 13 ஒருவன் பெண்ணோடே உடலுறவு கொள்கிறதுபோல ஆணோடே உடலுறவுகொண்டால், அருவருப்பான காரியம் செய்த அந்த இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
\v 14 ஒருவன் ஒரு பெண்ணையும் அவள் தாயையும் திருமணம் செய்தால், அது முறைகேடு; இந்தவித முறைகேடு உங்களுக்குள் இல்லாதபடி, அவனையும் அவர்களையும் நெருப்பில் சுட்டெரிக்கவேண்டும்.
\s5
\v 15 ஒருவன் மிருகத்தோடே உடலுறவுகொண்டால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.
\v 16 ஒரு பெண் யாதொரு மிருகத்தோடே சேர்ந்து உடலுறவுகொண்டால், அந்த பெண்ணையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இருஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.
\s5
\v 17 ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது மகளாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் மக்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
\v 18 ஒருவன் மாதவிடாய் உள்ள பெண்ணுடன் உடலுறவுகொண்டு, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய இரத்தப்போக்கைத் திறந்து, அவளும் தன் இரத்தப்போக்கை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோகவேண்டும்.
\s5
\v 19 உன் தாயினுடைய சகோதரியையும் உன் தகப்பனுடைய சகோதரியையும் நிர்வாணமாக்காதே, அப்படிப்பட்டவன் தன் நெருங்கிய இனத்தை அவமானமாக்கினான்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.
\v 20 ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால், அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான்; அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், வாரிசு இல்லாமல் சாவார்கள்.
\v 21 ஒருவன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம்செய்தால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் வாரிசு இல்லாமலிருப்பார்கள்.
\s5
\v 22 ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களை வாந்திபண்ணாதபடி, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடங்கள்.
\v 23 நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற மக்களுடைய பழக்கவழக்கங்களின்படி நடக்காதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை வெறுத்தேன்.
\s5
\v 24 நீங்கள் அவர்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள் என்று உங்களுடன் சொன்னேன்; பாலும் தேனும் ஒடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற மக்களைவிட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.
\v 25 ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும், சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம்செய்து, நான் உங்களுக்குத் தீட்டாக எண்ணச்சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே ஊருகிற யாதொரு பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்காமல் இருப்பீர்களாக.
\s5
\v 26 கர்த்தராகிய நான் பரிசுத்தராக இருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாக இருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படிக்கு, உங்களை மற்ற மக்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.
\s5
\v 27 ஜோதிடம் பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாக இருக்கிற ஆணாகிலும் பெண்ணாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.
\s5
\c 21
\cl அத்தியாயம்– 21
\s1 ஆசாரியர்களுக்கான நடைமுறைகள்
\p
\v 1 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் மக்களில் இறந்துபோன ஒருவருக்காகத் தங்களைத் தீட்டுப்படுத்தக்கூடாதென்று அவர்களோடே சொல்.
\v 2 தன் தாயும், தன் தகப்பனும், தன் மகனும், தன் மகளும், தன் சகோதரனும்,
\v 3 ஆணுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னிப்பெண்ணான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கிய உறவுமுறையான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.
\s5
\v 4 தன் மக்களுக்குள்ளே பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தக்கூடாது.
\v 5 அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், தங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.
\v 6 தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராக இருப்பார்களாக; அவர்கள் கர்த்தரின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராக இருக்கவேண்டும்.
\s5
\v 7 அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும், கற்பை இழந்தவளையாகிலும் திருமணம் செய்யக்கூடாது; தன் கணவனாலே விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்யக்கூடாது.
\v 8 அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தராகிய நான் பரிசுத்தராக இருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாக இருப்பானாக.
\v 9 ஆசாரியனுடைய மகள், வேசித்தனம்செய்து, தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறாள்; அவள் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவள்.
\s5
\v 10 தன் சகோதரர்களுக்குள்ளே பிரதான ஆசாரியனாக தன் தலையில் அபிஷேகத்தைலம் ஊற்றப்பட்டவனும், அவனுக்குரிய உடைகளை அணியும்படி பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறவன் எவனோ, அவன் தன் தலைப்பாகையை எடுக்காமலும், தன் உடைகளைக் கிழித்துக்கொள்ளாமலும்,
\v 11 சடலம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும், தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும்,
\v 12 பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேக தைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் கர்த்தர்.
\s5
\v 13 கன்னியாக இருக்கிற பெண்ணை அவன் திருமணம்செய்யவேண்டும்.
\v 14 விதவையையானாலும் விவாகரத்து செய்யப்பட்டவளையானாலும் கற்புக்குலைந்தவளையானாலும் வேசியையானாலும் திருமணம்செய்யாமல், தன் மக்களுக்குள்ளே ஒரு கன்னிகையைத் திருமணம்செய்யக்கடவன்.
\v 15 அவன் தன் வித்தைத் தன் மக்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
\s5
\v 16 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 17 நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரக்கூடாது.
\s5
\v 18 ஊனமுள்ள ஒருவனும் அணுகக்கூடாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும்,
\v 19 கால் ஒடிந்தவனானாலும், கை ஒடிந்தவனானாலும்,
\v 20 கூன் விழுந்தவனானாலும், குள்ளமானவனானாலும், கண் பார்வை இழந்தவனானாலும், சொறியனானாலும், அசடு உள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகக்கூடாது.
\v 21 ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்த வரக்கூடாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்த வரக்கூடாது.
\s5
\v 22 அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் சாப்பிடலாம்.
\v 23 ஆனாலும் அவன் அங்கவீனமுள்ளவன், ஆகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தின் அருகில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
\v 24 மோசே இவைகளை ஆரோனோடும் அவன் மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொன்னான்.
\s5
\c 22
\cl அத்தியாயம்– 22
\p
\v 1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 இஸ்ரவேல் மக்கள் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தப் பொருட்களைக்குறித்து ஆரோனும் அவனுடைய மகன்களும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்; நான் கர்த்தர்.
\v 3 அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளிலுள்ள சந்ததியாரில் யாராவது தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகள் அருகில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இல்லாதபடி அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் கர்த்தர்.
\s5
\v 4 ஆரோனின் சந்ததியாரில் எவன் தொழுநோயாளியோ, எவன் விந்து கழிதல் உள்ளவனோ, அவன் சுத்தமாகும்வரை பரிசுத்தமானவைகளில் சாப்பிடக்கூடாது; பிணத்தினாலே தீட்டானவைகளில் எதையாகிலும் தொட்டவனும், விந்து கழிந்தவனும்,
\v 5 தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும் பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்,
\v 6 மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தண்ணீரில் குளிக்கும்வரை பரிசுத்தமானவைகளில் சாப்பிடக்கூடாது.
\s5
\v 7 சூரியன் மறைந்தபின்பு சுத்தமாக இருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் சாப்பிடலாம்; அது அவனுடைய ஆகாரம்.
\v 8 தானாகச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் சாப்பிடுகிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாது; நான் கர்த்தர்.
\v 9 ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதன் காரணமாக மரிக்காமலிருக்க, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
\s5
\v 10 அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் சாப்பிடக்கூடாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலை செய்கிறவனும் பரிசுத்தமானதில் சாப்பிடக்கூடாது.
\v 11 ஆசாரியனால் பணத்திற்கு வாங்கப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்தவனும் அவனுடைய ஆகாரத்தில் சாப்பிடலாம்.
\s5
\v 12 ஆசாரியனுடைய மகள் அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே சாப்பிடக்கூடாது.
\v 13 விதவையான, அல்லது விவாகரத்து செய்யப்பட்டவளான ஆசாரியனுடைய மகள் பிள்ளை இல்லாதிருந்து, தன் தகப்பனுடைய வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோல திரும்பவந்து இருந்தாளென்றால், அவள் தன் தகப்பனுடைய ஆகாரத்தில் சாப்பிடலாம்; அந்நியனாகிய ஒருவனும் அதில் சாப்பிடக்கூடாது.
\s5
\v 14 ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் சாப்பிட்டிருந்தால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாக சேர்த்து பரிசுத்தமானவைகளுடன் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.
\v 15 அவர்கள் கர்த்தருக்குப் படைக்கிற இஸ்ரவேல் மக்களுடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும்,
\v 16 அவைகளைச் சாப்பிடுகிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரச்செய்யாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
\s5
\v 17 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 18 நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ,
\v 19 அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.
\s5
\v 20 ஊனமுள்ள ஒன்றையும் செலுத்தவேண்டாம்; அது உங்கள்நிமித்தம் அங்கிகரிக்கப்படுவதில்லை.
\v 21 ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கப்படும்படி, ஒரு ஊனமில்லாமல் உத்தமமாக இருக்கவேண்டும்.
\s5
\v 22 குருடு, எலும்பு முறிந்தவை, முடம், கட்டிகள் உள்ளவை, சொறி, புண் முதலிய குறைபாடு உள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.
\v 23 நீண்ட அல்லது குறுகின உறுப்புள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக செலுத்தலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது.
\s5
\v 24 விதை நசுங்கினதையும், நொறுங்கினதையும், காயப்பட்டதையும், விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்தில் பலியிடாமலும் இருப்பீர்களாக.
\v 25 அந்நியர்களின் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தவேண்டாம்; அவைகளின் குறைபாடும், ஊனமும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கிகரிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.
\s5
\v 26 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 27 ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது, வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாட்கள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள் முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.
\s5
\v 28 பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரே நாளில் கொல்லவேண்டாம்.
\v 29 கர்த்தருக்கு நன்றிபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாக அதைச் செலுத்துவீர்களாக.
\v 30 அந்நாளிலேயே அதைச் சாப்பிட்டுவிடவேண்டும்; விடியற்காலம்வரை நீங்கள் அதில் ஒன்றையும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர்.
\s5
\v 31 நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர்.
\v 32 என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமல் இருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் மக்கள் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
\v 33 நான் உங்களுக்கு தேவனாக இருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
\s5
\c 23
\cl அத்தியாயம்– 23
\s1 பண்டிகை நாட்கள்
\p
\v 1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடி வந்து பரிசுத்த நாட்களாக அனுசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:
\s5
\v 3 ஆறுநாட்களும் வேலைசெய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் குடியிருப்புகளிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாக இருப்பதாக.
\s5
\v 4 சபைகூடிவந்து பரிசுத்தமாக அனுசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் அறிவிக்கவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:
\v 5 முதலாம் மாதம் பதினான்காம் தேதி மாலைநேரமாகிய வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும்,
\v 6 அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையுமாக இருக்கும்; ஏழுநாட்கள் புளிப்பில்லாத அப்பங்களைச் சாப்பிடவேண்டும்.
\s5
\v 7 முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
\v 8 ஏழுநாட்களும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது என்று சொல் என்றார்.
\s5
\v 9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 10 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் விளைச்சலை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.
\v 11 உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக்கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.
\s5
\v 12 நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,
\v 13 கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய உணவுபலியையும், திராட்சைப்பழ ரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
\v 14 உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்தநாள்வரை, அப்பமும் வாட்டிய கதிரையும் பச்சைக்கதிரையும் சாப்பிடவேண்டாம்; இது உங்களுடைய குடியிருப்புகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.
\s5
\v 15 நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் முடிந்தபின்பு,
\v 16 ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்வரை கணக்கிட்டு, கர்த்தருக்குப் புதிய உணவுபலியைச் செலுத்தக்கடவீர்கள்.
\s5
\v 17 நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாக வேகவைக்கப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாக இருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வீடுகளிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,
\v 18 அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாக, ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலியாக அவைகளுக்குரிய உணவுபலியையும், பானபலியையும் செலுத்தி,
\s5
\v 19 வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் செலுத்தக்கடவீர்கள்.
\v 20 அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூட கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும்.
\v 21 அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது; இது உங்கள் வீடுகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.
\s5
\v 22 உங்கள் தேசத்தின் விளைச்சலை நீங்கள் அறுக்கும்போது, வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் அந்நியனுக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
\s5
\v 23 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 24 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாம்தேதி எக்காளச்சத்தத்தால் நினைவுகூறுதலாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாக இருப்பதாக.
\v 25 அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.
\s5
\v 26 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 27 அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாக இருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.
\s5
\v 28 அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாக இருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
\v 29 அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் மக்களுக்குள் இல்லாதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
\s5
\v 30 அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் மக்களின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.
\v 31 அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வீடுகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.
\v 32 அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வு நாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாம்தேதி மாலை துவக்கி, மறுநாள் மாலைவரை உங்கள் ஓய்வை அனுசரிக்கக்கடவீர்கள் என்றார்.
\s5
\v 33 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 34 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாம்தேதிமுதல் ஏழுநாட்களும் கர்த்தருக்கு அனுசரிக்கும் கூடாரப்பண்டிகையாக இருப்பதாக.
\s5
\v 35 முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது.
\v 36 ஏழுநாட்களும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது அனுசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
\s5
\v 37 நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர,
\v 38 நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாகக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, உணவுபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாக அனுசரிப்பதற்காக நீங்கள் அறிவிக்கவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.
\s5
\v 39 நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாட்கள் அனுசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு.
\s5
\v 40 முதல் நாளிலே அலங்காரமான மரங்களின் பழங்களையும் பேரீச்சை மரங்களின் ஓலைகளையும் தழைத்திருக்கிற மரங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாட்களும் மகிழ்ச்சியாக இருங்கள்.
\v 41 வருடந்தோறும் ஏழுநாட்கள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை அனுசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை அனுசரிக்கவேண்டும்.
\s5
\v 42 நான் இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கச்செய்ததை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,
\v 43 ஏழுநாட்கள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லோரும் கூடாரங்களில் குடியிருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
\v 44 அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் மக்களுக்குத் தெரிவித்தான்.
\s5
\c 24
\cl அத்தியாயம்– 24
\s1 குத்துவிளக்கு
\p
\v 1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப்பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் மக்கள் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு.
\s5
\v 3 ஆசரிப்புக்கூடாரத்தில் மகாபரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் மாலைதொடங்கி விடியற்காலம்வரை கர்த்தருடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.
\v 4 அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரியவைக்கக்கடவன்.
\s5
\v 5 அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பமும் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.
\v 6 அவைகளை நீ கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கிலும் ஆறுஆறு அப்பங்கள் இருக்கும்படியாக வைத்து,
\s5
\v 7 ஒவ்வொரு அடுக்கிலும் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்துடன் இருந்து, நன்றியின் அடையாளமாகக் கர்த்தருக்கேற்ற தகனபலியாக இருக்கும்.
\v 8 அப்பத்தை நிரந்தரமான உடன்படிக்கையாக இஸ்ரவேல் மக்கள் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன்.
\v 9 அது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே சாப்பிடக்கடவர்கள்; நிரந்தரமான கட்டளையாக கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாக இருக்கும் என்றார்.
\s1 தெய்வ நிந்தனைக்குத்தண்டனை
\p
\s5
\v 10 அக்காலத்திலே இஸ்ரவேலைச் சார்ந்த பெண்ணுக்கும் எகிப்திய ஆணுக்கும் பிறந்த மகனாகிய ஒருவன் இஸ்ரவேல் மக்களோடு புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் முகாமிலே சண்டையிட்டார்கள்.
\v 11 அப்பொழுது இஸ்ரவேலைச் சார்ந்த அந்தப் பெண்ணின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவனுடைய தாயின் பெயர் செலோமித்; அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் மகள்.
\v 12 கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வரும்வரை, அவனைக் காவலில்வைத்தார்கள்.
\s5
\v 13 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 14 தூஷித்தவனை முகாமிற்கு வெளியே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லோரும் தங்கள் கைகளை அவனுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லோரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள்.
\s5
\v 15 மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.
\v 16 கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லோரும் அவனைக் கல்லெறியவேண்டும்; அந்நியனானாலும் இஸ்ரவேலனானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.
\s5
\v 17 ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
\v 18 மிருகத்தைக் கொன்றவன் மிருகத்திற்கு மிருகம் கொடுக்கக்கடவன்.
\s5
\v 19 ஒருவன் மற்றவனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.
\v 20 நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.
\v 21 மிருகத்தைக் கொன்றவன் அதற்கு பதிலாக வேறு மிருகம் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.
\s5
\v 22 உங்களில் அந்நியனுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
\v 23 அப்படியே, நிந்தித்தவனை முகாமிற்கு வெளியே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் மக்களிடம் சொன்னான்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
\s5
\c 25
\cl அத்தியாயம்– 25
\s1 ஓய்வுநாள்
\p
\v 1 கர்த்தர் சீனாய்மலையில் மோசேயை நோக்கி:
\v 2 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, தேசம் கர்த்தருக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும்.
\s5
\v 3 ஆறுவருடங்கள் உன் வயலை விதைத்து, உன் திராட்சைத்தோட்டத்தைக் கிளைநறுக்கி, அதின் பலனைச் சேர்ப்பாயாக.
\v 4 ஏழாம் வருடத்திலோ, தேசத்திற்கு கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வாக இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சைத்தோட்டத்தைக் கிளைநறுக்காமலும்,
\s5
\v 5 தானாக விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைநறுக்காமல்விட்ட திராட்சைச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்திற்கு அது ஓய்வு வருடமாக இருக்கக்கடவது.
\v 6 தேசத்தின் ஓய்விலே விளைகிறது உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக; உன்னுடைய வேலைக்காரனுக்கும், வேலைக்காரிக்கும், கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும்,
\v 7 உன் நாட்டு மிருகத்திற்கும், உன் தேசத்தில் இருக்கிற காட்டு மிருகத்திற்கும் அதில் விளைந்திருப்பதெல்லாம் ஆகாரமாக இருப்பதாக.
\s1 யூபிலி வருடம்
\p
\s5
\v 8 மேலும், ஏழு ஓய்வு வருடங்களுள்ள ஏழு ஏழு வருடங்களை கணக்கிடுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருடங்களும் நாற்பத்தொன்பது வருடங்களாகும்.
\v 9 அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கச்செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கச்செய்யவேண்டும்.
\s5
\v 10 ஐம்பதாம் வருடத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிமக்களுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருடம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் சொந்த இடத்திற்கும், குடும்பத்திற்கும் திரும்பிப் போகக்கடவன்.
\s5
\v 11 அந்த ஐம்பதாம் வருடம் உங்களுக்கு யூபிலி வருடமாக இருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாக விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைநறுக்காமல் விடப்பட்ட திராட்சைச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.
\v 12 அது யூபிலி வருடம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும்; அந்த வருடத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் சாப்பிடவேண்டும்.
\s5
\v 13 அந்த யூபிலி வருடத்தில் உங்களில் அவனவன் தன்தன் சொந்த இடத்திற்குத் திரும்பிப்போகக்கடவன்.
\v 14 ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது விலைகொடுத்து வாங்கினாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது.
\s5
\v 15 யூபிலி வருடத்திற்குப் பின்வரும் வருடங்களின் எண்ணிக்கைக்கேற்ப பிறனிடத்தில் வாங்குவாயாக; பலனுள்ள வருடங்களின் தொகைக்கேற்ப அவன் உனக்கு விற்பானாக.
\v 16 பலனுள்ள வருடங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறதினால், வருடங்களின் எண்ணிக்கை அதிகமானால் விலையேறவும், வருடங்களின் எண்ணிக்கை குறைந்தால், விலை குறையவும் வேண்டும்.
\v 17 உங்களில் ஒருவனும் மற்றவனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
\s5
\v 18 என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாகக் குடியிருப்பீர்கள்.
\v 19 பூமி தன் பலனைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாகக் குடியிருப்பீர்கள்.
\s5
\v 20 ஏழாம் வருடத்தில் எதைச் சாப்பிடுவோம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,
\v 21 நான் ஆறாம் வருடத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கைகூடிவரச்செய்வேன்; அது உங்களுக்கு மூன்று வருடங்களின் பலனைத் தரும்.
\v 22 நீங்கள் எட்டாம் வருடத்திலே விதைத்து, ஒன்பதாம் வருடம்வரை பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரை பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.
\s1 நிலங்களை மீட்டெடுத்தல்
\p
\s5
\v 23 தேசம் என்னுடையதாக இருக்கிறதினால், நீங்கள் நிலங்களை நிரந்தரமாக விற்கவேண்டாம்; நீங்கள் அன்னியர்களும் என்னிடத்தில் தற்காலக்குடிகளுமாக இருக்கிறீர்கள்.
\v 24 உங்கள் சொந்தமான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள்.
\v 25 உங்கள் சகோதரன் ஏழ்மையடைந்து, தன் சொந்த இடத்திலே சிலதை விற்றால், அவன் உறவினன் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்.
\s5
\v 26 அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால்,
\v 27 அதை விற்றபின் சென்ற வருடங்களின் தொகையைக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை உயர்த்தி, வாங்கினவனுக்குக் கொடுத்து, அவன் தன் சொந்த இடத்திற்கு திரும்பிப்போகக்கடவன்.
\v 28 அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருடம்வரை இருந்து, யூபிலி வருடத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் சொந்த இடத்திற்குத் திரும்பப்போவான்.
\s5
\v 29 ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் குடியிருக்கும் வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருடத்திற்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருடத்திற்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.
\v 30 ஒரு வருடத்திற்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருடத்திலும் அது விடுதலையாகாது.
\s5
\v 31 மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருடத்தில் அவைகள் விடுதலையாகும்.
\v 32 லேவியர்களின் சொந்த இடமாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர்கள் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம்.
\s5
\v 33 இஸ்ரவேல் மக்களுக்குள்ளே லேவியர்களுடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய சொந்தமாக இருப்பதால், லேவியர்களிடத்தில் அவனுடைய சொந்தமான பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு, யூபிலி வருடத்தில் விடுதலையாகும்.
\v 34 அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படக்கூடாது; அது அவர்களுக்கு நிரந்தர சொந்தமாக இருக்கும்.
\s5
\v 35 உன் சகோதரன் ஏழ்மையடைந்து, வசதியில்லாமல் போனவனானால் அவனை ஆதரிக்கவேண்டும்; அந்நியனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் அவன் உன்னோடே பிழைப்பானாக.
\v 36 நீ அவன் கையில் வட்டியையாவது லாபத்தையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னுடன் பிழைக்கச் செய்வாயாக.
\v 37 அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தை லாபத்திற்கும் கொடுக்காதே.
\v 38 உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாக இருப்பதற்கு, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.
\s5
\v 39 உன் சகோதரன் ஏழ்மையடைந்து, உனக்கு விற்கப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல வேலைசெய்ய நெருக்கவேண்டாம்.
\v 40 அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னுடன் இருந்து, யூபிலி வருடம்வரை உன்னிடத்தில் வேலைசெய்யக்கடவன்.
\v 41 பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னைவிட்டு விலகி, தன் குடும்பத்தாரிடத்திற்கும் தன் முற்பிதாக்களின் சொந்த இடத்திற்கும் திரும்பிப்போகக்கடவன்.
\s5
\v 42 அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த என்னுடைய வேலைக்காரர்கள்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படக்கூடாது.
\v 43 நீ அவனைக் கடினமாக நடத்தாமல், உன் தேவனுக்குப் பயந்திரு.
\v 44 உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற அந்நியமக்களாக இருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம்.
\s5
\v 45 உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய மக்களிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச் சொந்தமாக்கலாம்.
\v 46 அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சொந்தமாக்கும்படி நீங்கள் அவர்களைச் சொந்தமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாக இருக்கலாம்; உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் மக்களோ ஒருவரையொருவர் கடினமாக நடத்தக்கூடாது.
\s5
\v 47 உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வந்தனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விற்கப்பட்டுப்போனால்,
\v 48 அவன் விற்கப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவனுடைய சகோதரர்களில் ஒருவன் அவனை மீட்கலாம்.
\s5
\v 49 அவனுடைய தகப்பனின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய மகனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த உறவினரில் யாராவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்.
\v 50 அவன் தான் விற்கப்பட்ட வருடம் துவங்கி, யூபிலி வருடம்வரைக்கும் உள்ள காலத்தைத் தன்னை விலைக்கு வாங்கியவனுடன் கணக்குப் பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருடத்தொகைக்கு ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும்.
\s5
\v 51 இன்னும் அநேக வருடங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக்கொடுக்கக்கடவன்.
\v 52 யூபிலி வருடம்வரை மீதியாக இருக்கிற வருடங்கள் கொஞ்சமாக இருந்தால், அவனோடே கணக்குப் பார்த்து, தன் வருடங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும் பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும்.
\s5
\v 53 இவன் வருடத்திற்கு வருடம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாக கடினமாக நடத்தக்கூடாது.
\v 54 இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடுகூட இவனுடைய பிள்ளைகளும் யூபிலி வருடத்தில் விடுதலையாவார்கள்.
\v 55 இஸ்ரவேல் மக்கள் என் ஊழியக்காரர்கள்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த என் ஊழியக்காரர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
\s5
\c 26
\cl அத்தியாயம்– 26
\s1 வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதம்
\p
\v 1 நீங்கள் உங்களுக்கு சிலைகளையும் உருவங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரம்வடித்த கல்லை வணங்குவதற்காக உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
\v 2 என் ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாக இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
\s5
\v 3 நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்,
\v 4 நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யச்செய்வேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்கும்.
\s5
\v 5 திராட்சைப்பழம் பறிக்கும் காலம்வரைக்கும் போரடிப்புக் காலம் இருக்கும்; விதைப்புக் காலம்வரைக்கும் திராட்சைப்பழம் பறிக்கும் காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாகக் குடியிருப்பீர்கள்.
\v 6 தேசத்தில் சமாதானத்தைக் கட்டளையிடுவேன்; தத்தளிக்கச் செய்பவர்கள் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; கொடிய மிருகங்களைத் தேசத்தில் இல்லாமல் ஒழியச்செய்வேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.
\s5
\v 7 உங்கள் எதிரிகளைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
\v 8 உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் எதிரிகள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
\s5
\v 9 நான் உங்கள்மேல் கண்ணோக்கமாக இருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும் செய்து, உங்களோடே என் உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன்.
\v 10 போன வருடத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்திற்கு இடமுண்டாக, பழையதை அகற்றுவீர்கள்.
\s5
\v 11 உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை நிறுவுவேன்; என் ஆத்துமா உங்களை வெறுப்பதில்லை.
\v 12 நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாக இருப்பேன், நீங்கள் என்னுடைய மக்களாக இருப்பீர்கள்.
\v 13 நீங்கள் எகிப்தியர்களுக்கு அடிமைகளாக இல்லாமல், நான் அவர்களுடைய தேசத்திலிருந்து உங்களைப் புறப்படச்செய்து, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கச்செய்த உங்கள் தேவனாகிய கர்த்தர்.
\s5
\v 14 நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,
\v 15 என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை வெறுத்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறுவீர்களென்றால்:
\s5
\v 16 நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பார்வையிழக்கச் செய்கிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும், நோயையும், காய்ச்சலையும் உங்களுக்கு வரச்செய்வேன்; நீங்கள் விதைக்கும் விதை வீணாயிருக்கும்; உங்கள் எதிரிகள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள்.
\v 17 நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் எதிரிகளுக்கு முன்பாக தோற்கடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைவர்கள் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்.
\s5
\v 18 இந்தவிதமாக நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமலிருந்தால், உங்கள் பாவங்களின் காரணமாக மேலும் ஏழுமடங்காக உங்களைத் தண்டித்து,
\v 19 உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப் போலவும், பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன்.
\v 20 உங்கள் பெலன் வீணாகச் செலவழியும், உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்காது.
\s5
\v 21 நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழுமடங்கு வாதையை உங்கள்மேல் வரச்செய்து,
\v 22 உங்களுக்குள்ளே வெளியின் கொடிய மிருகங்களை வரவிடுவேன்; அவைகள் உங்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்கி, உங்கள் மிருகஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்துபோகச்செய்யும்; உங்கள் வழிகள் பாழாய்க் கிடக்கும்.
\s5
\v 23 நான் கொடுக்கும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
\v 24 நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவங்களின் காரணமாக ஏழுமடங்காக வாதித்து,
\s5
\v 25 என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரச்செய்து, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; எதிரியின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.
\v 26 உங்கள் அப்பம் என்னும் ஆதரவு கோலை நான் முறித்துப்போடும்போது, பத்துப் பெண்கள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்.
\s5
\v 27 இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
\v 28 நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களுக்காக உங்களை ஏழுமடங்காகத் தண்டிப்பேன்.
\s5
\v 29 உங்கள் மகன்களின் மாம்சத்தையும் உங்கள் மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடுவீர்கள்.
\v 30 நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை உடைத்து, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை வெறுக்கும்.
\s5
\v 31 நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழாக்கி, உங்கள் நறுமண வாசனையை முகராமலிருப்பேன்.
\v 32 நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் எதிரிகள் பிரமிப்பார்கள்.
\v 33 தேசங்களுக்குள்ளே உங்களைச் சிதறடித்து, உங்களுக்குப் பின்னே பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்திரமுமாகும்.
\s5
\v 34 நீங்கள் உங்கள் எதிரிகளின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாட்களெல்லாம் தன் ஓய்வுநாட்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கும்.
\v 35 நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருடங்களில் ஓய்வடையாததினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாட்களெல்லாம் ஓய்வடைந்திருக்கும்.
\v 36 உங்களில் உயிரோடு மீதியாக இருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் எதிரிகளின் தேசங்களில் மனம் சோர்வடையச் செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை விரட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.
\s5
\v 37 துரத்துவார் இல்லாமல், பட்டயத்திற்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறிவிழுவார்கள்; உங்கள் எதிரிகளுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இருக்காது.
\v 38 அன்னியர்களுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் எதிரிகளின் தேசம் உங்களை அழிக்கும்.
\v 39 உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினாலேயும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலேயும், உங்கள் எதிரிகளின் தேசங்களில் சோர்ந்துபோவார்கள்.
\s5
\v 40 அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம் செய்து நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் முன்னோர்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமல்லாமல்,
\v 41 அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்ததினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய எதிரிகளின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்திற்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்,
\v 42 நான் யாக்கோபோடே செய்த என் உடன்படிக்கையையும், ஈசாக்குடன் செய்த என் உடன்படிக்கையையும், ஆபிரகாமுடன் செய்த என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.
\s5
\v 43 தேசம் அவர்களாலே கைவிடப்பட்டு, பாழாய்க்கிடக்கிறதினாலே தன் ஓய்வுநாட்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கும்; அவர்கள் என் நியாயங்களை அவமதித்து, அவர்களுடைய ஆத்துமா என் கட்டளைகளை வெறுத்ததினால் அடைந்த தங்களுடைய அக்கிரமத்தின் தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொள்ளுவார்கள்.
\s5
\v 44 அவர்கள் தங்கள் எதிரிகளின் தேசத்திலிருந்தாலும், நான் அவர்களை நிர்மூலமாக்குவதற்கோ, நான் அவர்களோடே செய்த என் உடன்படிக்கையை நிராகரிப்பதற்கோ, நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவும் மாட்டேன்; நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர்.
\v 45 அவர்களுடைய தேவனாக இருக்கும்படிக்கு, நான் அன்னிய மக்களின் கண்களுக்கு முன்பாக எகிப்துதேசத்திலிருந்து அவர்களைப் புறப்படச்செய்து, அவர்களுடைய முன்னோர்களுடன் நான் செய்த உடன்படிக்கையை அவர்களுக்காக நினைவுகூருவேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
\s5
\v 46 கர்த்தர் தமக்கும் இஸ்ரவேல் சந்ததியாருக்கும் நடுவே இருக்கும்படி மோசேயைக்கொண்டு, சீனாய்மலையின்மேல் கொடுத்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
\s5
\c 27
\cl அத்தியாயம்– 27
\s1 மீட்டுக்கொண்டத்தை தேவனுக்கு அர்ப்பணித்தல்
\p
\v 1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: யாராவது ஒருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை செய்திருந்தால், பொருத்தனை செய்யப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.
\s5
\v 3 இருபது வயதுமுதல் அறுபது வயதிற்கு உட்பட்ட ஆண் ஒருவனை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும்,
\v 4 பெண் ஒருவளை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
\s5
\v 5 ஐந்து வயதுமுதல் இருபது வயதிற்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும்,
\v 6 ஒரு மாதம்முதல் ஐந்து வயதிற்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளிச்சேக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிச்சேக்கலாகவும்,
\s5
\v 7 அறுபது வயதுதொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்களைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்களைப் பத்துச் சேக்கலாகவும் மதிக்கக்கடவாய்.
\v 8 உன் மதிப்பின்படி செலுத்தமுடியாத ஏழையாக இருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனைசெய்தவனுடைய தகுதிக்குத் தக்கபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.
\s5
\v 9 ஒருவன் பொருத்தனைசெய்தது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருகமானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அவைகளெல்லாம் பரிசுத்தமாக இருப்பதாக.
\v 10 அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளைத்துப்போனதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளைத்துப்போனதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாக இருப்பதாக.
\s5
\v 11 அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமில்லாத மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.
\v 12 ஆசாரியன் அது நல்லதானாலும் இளைத்ததானாலும் அதை மதிப்பீடு செய்வானாக; உன் மதிப்பின்படியே இருக்கக்கடவது.
\v 13 அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.
\s5
\v 14 ஒருவன் தன் வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்திற்கும், குறைபாடுக்கும் தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருக்கக்கடவது.
\v 15 தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் பொருளுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.
\s5
\v 16 ஒருவன் தனக்குச் சொந்தமான வயலில் யாதொரு பங்கைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாக இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.
\s5
\v 17 யூபிலி வருடம்முதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.
\v 18 யூபிலி வருடத்திற்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருடம்வரையுள்ள மற்ற வருடங்களின்படியே ஆசாரியன் பொருட்களைக் கணக்குப்பார்த்து, அதற்குத்தக்கதை உன் மதிப்பீட்டில் தள்ளுபடி செய்யவேண்டும்.
\s5
\v 19 வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான பொருட்களுடன் ஐந்தில் ஒரு பங்கை சேர்த்துக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.
\v 20 அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறோருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,
\v 21 யூபிலி வருடத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாக இருக்கக்கடவது; அது ஆசாரியனுக்குச் சொந்தமான நிலமாகும்.
\s5
\v 22 ஒருவன் தனக்குச் சொந்தமான வயலாக இல்லாமல், தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
\v 23 அது யூபிலி வருடம்வரை, உன் மதிப்பின்படி பெறும்விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாக இருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.
\s5
\v 24 யார் கையிலே அந்த வயலை வாங்கினானோ, அந்த நிலத்திற்குச் சொந்தக்காரனிடம் அது யூபிலி வருடத்தில் திரும்பச்சேரும்.
\v 25 உன் மதிப்பீடெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.
\s5
\v 26 முதற்பிறந்தவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் முதற்பிறந்தவைகளாகிய மிருகங்களைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளக்கூடாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.
\v 27 சுத்தமல்லாத மிருகத்தினுடைய முதற்பிறந்ததாக இருந்தால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; மீட்கப்படாமலிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.
\s5
\v 28 ஒருவன் தன்னிடத்திலுள்ள மனிதர்களிலாவது, மிருகங்களிலாவது, சொந்தமான நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்று சாபத்தீடாக நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாக இருக்கும்.
\v 29 மனிதர்களில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது.
\s5
\v 30 தேசத்திலே நிலத்தின் வித்திலும், மரங்களின் பழங்களிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
\v 31 ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள விருப்பமாக இருந்தான் என்றால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.
\s5
\v 32 மேய்ப்பனின் கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
\v 33 அது நல்லதோ குறைபாடுள்ளதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக்கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.
\s5
\v 34 இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லும்படி கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.

2069
04-NUM.usfm Normal file
View File

@ -0,0 +1,2069 @@
\id NUM
\ide UTF-8
\h எண்ணாகமம்
\toc1 எண்ணாகமம்
\toc2 எண்ணாகமம்
\toc3 num
\mt1 எண்ணாகமம்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 கணக்கெடுத்தல்
\p
\v 1 இஸ்ரவேல் மக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்திரத்தில் இருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:
\v 2 நீங்கள் இஸ்ரவேலர்களின் முழுச்சபையாக இருக்கிற அவர்கள் தகப்பன்மார்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள ஆண்களாகிய எல்லா தலைகளையும் ஒவ்வொருவராக எண்ணிக் கணக்கெடுங்கள்.
\v 3 இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் அவர்களுடைய சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பாருங்கள்.
\s5
\v 4 ஒவ்வொரு வம்சத்திற்கும் ஒவ்வொரு மனிதன் உங்களோடு இருக்கவேண்டும்; அவன் தன்னுடைய பிதாக்களின் வம்சத்திற்குத் தலைவனாக இருக்கவேண்டும்.
\v 5 உங்களோடு நிற்கவேண்டிய மனிதர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய மகன் எலிசூர்.
\v 6 சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் மகன் செலூமியேல்.
\s5
\v 7 யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் மகன் நகசோன்.
\v 8 இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் மகன் நெதனெயேல்.
\v 9 செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் மகன் எலியாப்.
\s5
\v 10 யோசேப்பின் மகன்களாகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் மகன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் மகன் கமாலியேல்.
\v 11 பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் மகன் அபீதான்.
\s5
\v 12 தாண் கோத்திரத்தில் அம்மீஷதாயின் மகன் அகியேசேர்.
\v 13 ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் மகன் பாகியேல்.
\v 14 காத் கோத்திரத்தில் தேகுவேலின் மகன் எலியாசாப்.
\v 15 நப்தலி கோத்திரத்தில் ஏனானின் மகன் அகீரா.
\s5
\v 16 இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களுமாக இருப்பவர்கள் என்றார்.
\s5
\v 17 அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதர்களைக் கூட்டிக்கொண்டு,
\v 18 இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லோரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள்தங்கள் குடும்பத்தின்படியும், முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், பெயர் கணக்கின்படியும், இருபது வயதுள்ளவர்கள்முதல் தலைதலையாகத் தங்களுடைய வம்சாவளியைத் தெரிவித்தார்கள்.
\v 19 இப்படிக் கர்த்தர் கட்டளையிட்டபடியே, மோசே அவர்களை சீனாய் வனாந்திரத்தில் எண்ணிப்பார்த்தான்.
\s5
\v 20 இஸ்ரவேலின் மூத்தமகனாகிய ரூபன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
\v 21 ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
\s5
\v 22 சிமியோன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
\v 23 சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தொன்பதாயிரத்து முந்நூறுபேர்.
\s5
\v 24 காத் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
\v 25 காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.
\s5
\v 26 யூதா சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
\v 27 யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், எழுபத்து நான்காயிரத்து அறுநூறுபேர்.
\s5
\v 28 இசக்கார் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
\v 29 இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து நான்காயிரத்து நானூறுபேர்.
\s5
\v 30 செபுலோன் சந்ததியாருடைய புறப்படக்கூடிய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
\v 31 செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்.
\s5
\v 32 யோசேப்பின் மகன்களில் எப்பிராயீம் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
\v 33 எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பதாயிரத்து ஐந்நூறுபேர்.
\s5
\v 34 மனாசே சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
\v 35 மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்திரெண்டாயிரத்து இருநூறுபேர்.
\s5
\v 36 பென்யமீன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
\v 37 பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தைந்தாயிரத்து நானூறுபேர்.
\s5
\v 38 தாண் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
\v 39 தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்திரெண்டாயிரத்து எழுநூறுபேர்.
\s5
\v 40 ஆசேர் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
\v 41 ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.
\s5
\v 42 நப்தலி சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
\v 43 நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
\s5
\v 44 எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய கோத்திரங்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.
\v 45 இஸ்ரவேல் பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்களாகிய எண்ணப்பட்ட பேர்கள் எல்லோரும்,
\v 46 ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.
\s5
\v 47 லேவியர்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடன் எண்ணப்படவில்லை.
\v 48 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 49 நீ லேவி கோத்திரத்தாரை மட்டும் எண்ணாமலும், இஸ்ரவேல் மக்களுக்குள்ளே அவர்களுடைய தொகையை சேர்க்காமலும்,
\s5
\v 50 லேவியர்களைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய எல்லா பணிப்பொருட்களுக்கும், அதிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் பொறுப்பாளர்களாக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் எல்லா பணிப்பொருட்களையும் சுமக்க வேண்டும்; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிடவேண்டும்.
\s5
\v 51 வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர்கள் அதை இறக்கிவைத்து, அது நிறுவப்படும்போது, லேவியர்கள் அதை எடுத்து நிறுத்தவேண்டும்; அந்நியன் அதற்கு அருகில் வந்தால் கொலை செய்யப்படவேண்டும்.
\v 52 இஸ்ரவேல் மக்கள் தங்கள் தங்கள் முகாமோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடவேண்டும்.
\s5
\v 53 இஸ்ரவேல் மக்களாகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடி லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிட்டு, லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.
\v 54 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 கோத்திர முகாம்களை அமைத்தல்
\p
\v 1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
\v 2 இஸ்ரவேல் சந்ததியார்கள் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தைச் சேர்ந்த தங்கள் தங்கள் கொடியருகில் தங்களுடைய கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் முகாமிடவேண்டும்.
\s5
\v 3 யூதாவின் முகாமின் கொடியை உடைய இராணுவங்கள் சூரியன் உதிக்கும் கிழக்குப்புறத்திலே முகாமிடவேண்டும்; அம்மினதாபின் மகனாகிய நகசோன் யூதா சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
\v 4 எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் எழுபத்துநான்காயிரத்து அறுநூறுபேர்.
\s5
\v 5 அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூவாரின் மகன் நெதநெயேல் இசக்கார் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
\v 6 எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் ஐம்பத்து நான்காயிரத்து நானூறுபேர்.
\s5
\v 7 அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏலோனின் மகனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
\v 8 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்.
\s5
\v 9 எண்ணப்பட்ட யூதாவின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர்; இவர்கள் பயணத்தில் முதல் முகாமாகப் போகவேண்டும்.
\s5
\v 10 ரூபனுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் தென்புறத்தில் முகாமிடவேண்டும்; சேதேயூரின் மகனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
\v 11 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
\s5
\v 12 அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
\v 13 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தொன்பதாயிரத்து முந்நூறுபேர்.
\s5
\v 14 அவன் அருகே காத் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; தேகுவேலின் மகனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்கு படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
\v 15 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.
\s5
\v 16 எண்ணப்பட்ட ரூபனின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று ஐம்பதுபேர்; இவர்கள் பயணத்தில் இரண்டாம் முகாமாகப் போகவேண்டும்.
\s5
\v 17 பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியர்களின் இராணுவத்தோடு முகாம்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படி முகாமிடுகிறார்களோ, அப்படியே அவரவர் தங்களுடைய வரிசையிலே தங்களுடைய கொடிகளோடு பிரயாணமாகப் போகவேண்டும்.
\s5
\v 18 எப்பிராயீமுடைய முகாமின்கொடியையுடைய இராணுவங்கள் மேற்கு புறத்தில் இறங்கவேண்டும், அம்மியூதின் மகனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
\v 19 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதாயிரத்து ஐந்நூறுபேர்.
\s5
\v 20 அவன் அருகே மனாசே கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; பெதாசூரின் மகனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
\v 21 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
\s5
\v 22 அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; கீதெயோனின் மகனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
\v 23 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தைந்தாயிரத்து நானூறுபேர்.
\s5
\v 24 எண்ணப்பட்ட எப்பிராயீமின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே ஒரு இலட்சத்து எட்டாயிரத்து நூறுபேர்; இவர்கள் பயணத்தில் மூன்றாம் முகாமாகப் போகவேண்டும்.
\s5
\v 25 தாணுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
\v 26 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.
\s5
\v 27 அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஓகிரானின் மகனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
\v 28 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.
\s5
\v 29 அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏனானின் மகனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
\v 30 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
\s5
\v 31 எண்ணப்பட்ட தாணின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறுபேர்; இவர்கள் தங்களுடைய கொடிகளோடு பின்முகாமாகப் போகவேண்டும்.
\s5
\v 32 இவர்களே தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள். முகாம்களிலே தங்கள் தங்கள் இராணுவங்களின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.
\v 33 லேவியர்களோ, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் மக்களுக்குள்ளே எண்ணப்படவில்லை.
\s5
\v 34 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் முகாமிட்டு, தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சங்களின்படியே பயணப்பட்டுப் போனார்கள்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 லேவியர்கள்
\p
\v 1 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடு பேசின நாளில், ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறு:
\v 2 ஆரோனுடைய மகன்கள், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.
\s5
\v 3 ஆசாரிய ஊழியம் செய்வதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம் பெற்ற ஆசாரியர்களான ஆரோனுடைய மகன்களின் பெயர்கள் இவைகளே.
\v 4 நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்திரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் இறந்துப்போனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்களுடைய தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்;
\s5
\v 5 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 6 நீ லேவிகோத்திரத்தார்களைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படி அவர்களை நிறுத்து.
\s5
\v 7 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக அவனுடைய காவலையும் எல்லாச் சபையின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச் செய்யவேண்டும்.
\v 8 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் பொருட்கள் முதலானவைகளையும், இஸ்ரவேல் கோத்திரத்தின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவேண்டும்.
\s5
\v 9 ஆகையால் லேவியர்களை ஆரோனிடத்திலும் அவனுடைய மகன்களிடத்திலும் ஒப்புக்கொடு; இஸ்ரவேல் மக்களில் இவர்கள் முழுவதுமாக அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
\v 10 ஆரோனையும் அவனுடைய மகன்களையுமோ, தங்களுடைய ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கவேண்டும், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும் என்றார்.
\s5
\v 11 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 12 இஸ்ரவேல் மக்களில் கர்ப்பம்திறந்து பிறக்கிற முதற்பேறான எல்லாவற்றிற்கும் பதிலாக, நான் லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாக இருக்கிறார்கள்.
\v 13 முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் கொலைசெய்தநாளில், இஸ்ரவேலில் மனிதர்கள்முதல் மிருகஜீவன் வரையுள்ள முதற்பேறான எல்லாவற்றையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதால், அவைகள் என்னுடையவைகளாக இருக்கும்; நான் கர்த்தர் என்றார்.
\s5
\v 14 பின்னும் கர்த்தர் சீனாய் வனாந்திரத்தில் மோசேயை நோக்கி:
\v 15 லேவியின் மக்களை அவர்களுடைய முன்னோர்களின் வம்சங்களின்படியே எண்ணவேண்டும்; அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணு என்றார்.
\v 16 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை, தனக்குக் கட்டளையிட்டபடி மோசே அவர்களை எண்ணினான்.
\s5
\v 17 லேவியின் மகன்கள் தங்களுடைய பெயர்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
\v 18 தங்களுடைய வம்சத்தின்படியே கெர்சோனுடைய மகன்களின் பெயர்கள், லிப்னீ, சீமேயி என்பவைகள்.
\v 19 தங்களுடைய வம்சங்களின்படியே கோகாத்துடைய மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
\v 20 தங்களுடைய வம்சங்களின்படியே மெராரியினுடைய மகன்கள், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியர்களுடைய பிதாக்களின் வம்சத்தார்.
\s5
\v 21 கெர்சோனின் வழியாக லிப்னீயர்களின் வம்சமும் சீமேயியர்கள் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியர்களின் வம்சங்கள்.
\v 22 அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஏழாயிரத்து ஐந்நூறுபேராக இருந்தார்கள்.
\v 23 கெர்சோனியர்களின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே முகாமிடவேண்டும்.
\s5
\v 24 கெர்சோனியர்களுடைய தகப்பன் வம்சத்திற்குத் தலைவன் லாயேலின் மகனாகிய எலியாசாப் என்பவன்.
\v 25 ஆசரிப்புக் கூடாரத்திலே கெர்சோன் குடும்பத்தாரின் காவலாவது: வாசஸ்தலமும், கூடாரமும், அதின் மூடியும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவும்,
\v 26 வாசஸ்தலத்தின் அருகிலும் பலிபீடத்தின் அருகிலும் சுற்றிலும் இருக்கிற முற்றத்தின் தொங்கு திரைகளும், முற்றத்தின்வாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.
\s5
\v 27 கோகாத்தின் வழியாக அம்ராமியர்களின் வம்சமும் இத்சேயார்களின் வம்சமும் எப்ரோனியர்களின் வம்சமும் ஊசியேலர்களின் வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியர்களின் வம்சங்கள்.
\v 28 ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்திற்குரியவைகளைக் காப்பவர்கள், எட்டாயிரத்து அறுநூறுபேராக இருந்தார்கள்.
\v 29 கோகாத் சந்ததியார்களின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே முகாமிடவேண்டும்.
\s5
\v 30 அவர்களின் தலைவன், ஊசியேலின் மகனாகிய எல்சாபான்.
\v 31 அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிப்பொருட்களும், தொங்கு திரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.
\v 32 ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசார் என்பவன் லேவியர்களுடைய தலைவர்களுக்குத் தலைவனாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாக இருக்கவேண்டும்.
\s5
\v 33 மெராரியின் வழியாக மகேலியரின் வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.
\v 34 அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்குமேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராக இருந்தார்கள்.
\v 35 அபியாயேலின் மகனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாக இருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் முகாமிடவேண்டும்.
\s5
\v 36 அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும், அதினுடைய எல்லாப் பணிப்பொருட்களும், அதற்குரியவைகள் அனைத்தும்,
\v 37 சுற்றுப்பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளுமே.
\s5
\v 38 ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்திற்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கிழக்குபக்கத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல் மக்களின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும்.
\v 39 மோசேயும், ஆரோனும், கர்த்தருடைய வாக்கின்படி, லேவியர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்; அவர்கள் இருபத்திரெண்டாயிரம்பேராக இருந்தார்கள்.
\s5
\v 40 அதன் பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மக்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி அவர்கள் பெயர்களை பட்டியலிட்டு,
\v 41 இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான எல்லாவற்றிற்கும் பதிலாக லேவியர்களையும், இஸ்ரவேல் சந்ததியின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் கர்த்தர் என்றார்.
\s5
\v 42 அப்பொழுது மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான எல்லோரையும் எண்ணினான்.
\v 43 ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளெல்லாரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, இருபத்திரெண்டாராயிரத்து இருநூற்று எழுபத்துமூன்றுபேராக இருந்தார்கள்.
\s5
\v 44 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 45 நீ இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான அனைவருக்கும் பதிலாக லேவியர்களையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப்பதிலாக லேவியர்களின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர்கள் என்னுடையவர்களாக இருப்பார்கள்; நான் கர்த்தர்.
\s5
\v 46 இஸ்ரவேல் மக்களுடைய முதற்பேறுகளில் லேவியர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,
\v 47 நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்கவேண்டும்; அந்தச் சேக்கலானது இருபது கேரா.
\v 48 லேவியர்களுடைய எண்ணிக்கைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் பணத்தை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடு என்றார்.
\v 49 அப்படியே லேவியர்களால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் மக்களுடைய முதற்பேறானவர்களிடத்தில்,
\v 50 ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து சேக்கலாகிய பணத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி,
\v 51 கர்த்தருடைய வார்தையின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும், கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 கோகாத்தியர்கள்
\p
\v 1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
\v 2 லேவியர்களுக்குள்ளே இருக்கிற கோகாத் சந்ததியார்களுடைய முன்னோர்களின் வீட்டு வம்சங்களில்,
\v 3 ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் கூட்டத்திற்கு உட்படத்தக்க முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணி, கணக்கெடுக்கவேண்டும்.
\v 4 ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் சந்ததியாரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்கு உரியது.
\s5
\v 5 முகாம் புறப்படும்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி,
\v 6 அதின்மேல் மெல்லியத்தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
\s5
\v 7 சமுகத்து அப்ப மேஜையின்மேல் நீலத்துப்பட்டியை விரித்து, தட்டுகளையும் தூபக்கரண்டிகளையும் கிண்ணங்களையும் மூடுகிற தட்டுகளையும் அதின்மேல் வைக்கவேண்டும்; நிரந்தர அப்பமும் அதின்மேல் இருக்கவேண்டும்.
\v 8 அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத்துப்பட்டியை விரித்து, அதை மெல்லிய தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
\s5
\v 9 இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத்தண்டையும், அதின் அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், அதற்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி,
\v 10 அதையும் அதற்குரிய பொருட்கள் யாவையும் மெல்லியத்தோல் மூடிக்குள்ளே போட்டு, அதை ஒரு தண்டிலே கட்டி,
\v 11 பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் மெல்லியத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
\s5
\v 12 பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற எல்லா பொருட்களையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, மெல்லியத்தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி,
\v 13 பலிபீடத்தைச் சாம்பல் போக கழுவி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,
\v 14 அதின்மேல் ஆராதனைக்கு ஏற்ற எல்லாப் பணிப்பொருட்களாகிய கலசங்களையும், முள்துறடுகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், கலசங்களையும், பலிபீடத்திற்குரிய எல்லாப் பாத்திரங்களையும், அதின்மேல் வைத்து, அதின்மேல் மெல்லியத்தோல் மூடியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சவேண்டும்.
\s5
\v 15 முகாம் புறப்படும்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய எல்லா பணிப்பொருட்களையும் மூடிவைத்தபின்பு, கோகாத் சந்ததியார்கள் அதை எடுத்துக்கொண்டுபோவதற்கு வரவேண்டும்; அவர்கள் சாகாதபடிக்கு பரிசுத்தமானதைத் தொடாமலிருக்கவேண்டும்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் சந்ததியினர் சுமக்கும் சுமை இதுவே.
\v 16 ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், நறுமண தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேகதைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் பணிப்பொருட்களையும், விசாரிக்கவேண்டும் என்றார்.
\s5
\v 17 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
\v 18 லேவியர்களுக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.
\v 19 அவர்கள் மகா பரிசுத்தமானவைகளின் அருகில் வரும்போது, சாகாமல் உயிரோடு இருக்கும்படி, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியது:
\v 20 ஆரோனும் அவனுடைய மகன்களும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கவேண்டும்; அவர்களோ சாகாதபடிப் பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உள்ளே நுழையாமல் இருக்கவேண்டும் என்றார்.
\s1 கெர்சோனியர்கள்
\p
\s5
\v 21 பின்னும், கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 22 கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
\v 23 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக.
\s5
\v 24 பணிவிடை செய்கிறதிலும் சுமக்கிறதிலும் கெர்சோன் வம்சத்தாரின் வேலையாவது:
\v 25 அவர்கள் வாசஸ்தலத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் உரிய தொங்கு திரையையும், மூடியையும், அவைகளின் மேல் இருக்கிற மெல்லியத்தோல் மூடியையும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவையும்,
\v 26 பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், வாசஸ்தலத்தின் அருகிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்கு திரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்குரிய கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள்.
\s5
\v 27 கெர்சோன் சந்ததியார்கள் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவனுடைய மகன்களும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும்; அவர்கள் சுமக்கவேண்டிய எல்லா சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடம் ஒப்புவியுங்கள்.
\v 28 கெர்சோன் சந்ததியாரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோனின் மகன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.
\s1 மெராரியர்கள்
\p
\s5
\v 29 மெராரி சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
\v 30 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணவேண்டும்.
\s5
\v 31 ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும்,
\v 32 சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் எல்லா கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணவேண்டும்.
\s5
\v 33 ஆசாரியனாகிய ஆரோனுடைய மகனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி சந்ததியாரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.
\s1 லேவியர்களின் வம்சத்தை கணக்கெடுத்தல்
\p
\s5
\v 34 அப்படியே மோசேயும் ஆரோனும் சபையின் பிரபுக்களும் கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களின்படி ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
\v 35 முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணினார்கள்.
\v 36 அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுபேர்.
\s5
\v 37 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயினாலும் ஆரோனாலும் கோகாத் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே.
\s5
\v 38 கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
\v 39 முப்பது வயது முதல் ஐம்பது வயது வரைக்குமுள்ள எல்லோரும் எண்ணப்பட்டார்கள்.
\v 40 அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படியும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
\s5
\v 41 மோசேயினாலும் ஆரோனாலும் கர்த்தர் கட்டளையிட்டபடியே கெர்சோன் புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே.
\s5
\v 42 மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
\v 43 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுள்ளவர்கள் எல்லோரும் எண்ணப்பட்டார்கள்.
\v 44 அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்களுடைய குடும்பங்களின்படியே மூவாயிரத்து இருநூறுபேர்.
\s5
\v 45 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே மோசேயினாலும் ஆரோனாலும் மெராரி புத்திரரின் குடும்பத்தாரில் எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே.
\s5
\v 46 லேவியர்களுடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில் முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ளவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை வேலைக்கும் சுமையின் வேலைக்கும் உட்படத்தக்கவர்களும்,
\v 47 மோசேயினாலும் ஆரோனாலும் இஸ்ரவேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டவர்களும் ஆகிய எல்லோரும்,
\v 48 எட்டாயிரத்து ஐந்நூற்று எண்பதுபேராக இருந்தார்கள்.
\s5
\v 49 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் தங்கள் தங்கள் பணிவிடைக்கென்றும் தங்கள் தங்கள் சுமைக்கென்றும் மோசேயினால் எண்ணப்பட்டார்கள்; இந்த விதமாக, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவனால் எண்ணப்பட்டார்கள்.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 முகாமை சுத்திகரித்தல்
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 குஷ்டரோகிகள் யாவரையும், கசியும் புண்ணுள்ள யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் முகாமிலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிடு.
\v 3 ஆண்பிள்ளையானாலும் பெண்பிள்ளையானாலும் அப்படிப்பட்டவர்களை நீங்கள் விலக்கி, நான் வாசம்செய்கிற தங்களுடைய முகாம்களை அவர்கள் தீட்டுப்படுத்தாதபடி, நீங்கள் அவர்களை முகாமிற்கு வெளியே அனுப்பிவிடவேண்டும் என்றார்.
\v 4 கர்த்தர் மோசேக்குச் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்கள் செய்து, அவர்களை முகாமிற்கு வெளியே அனுப்பிவிட்டார்கள்.
\s1 தவறுகளுக்கான தண்டனை
\p
\s5
\v 5 மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 6 நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஆணோ பெண்ணோ, கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர்கள் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால்,
\v 7 அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிடவேண்டும்; அப்படிப்பட்டவன் தான் செய்த குற்றத்தினால் அபராதத்தின் முதலோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, தான் குற்றஞ்செய்தவனுக்குச் செலுத்தவேண்டும்.
\s5
\v 8 அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாமலிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும்.
\v 9 இஸ்ரவேல் மக்கள் ஏறெடுத்துப் படைக்கும்படி, ஆசாரியனிடத்தில் கொண்டுவருகிற எல்லாப் பரிசுத்தமான படைப்பும் அவனுடையதாக இருக்கும்.
\v 10 ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான பொருட்கள் அவனுடையதாக இருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.
\s1 உண்மையில்லாத மனைவிக்கான சோதனை
\p
\s5
\v 11 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 12 நீ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி பிறர்முகம் பார்த்து, கணவனுக்குத் துரோகம்செய்து,
\s5
\v 13 ஒருவனோடு உறவு கொண்டிருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாக இருந்தும், அவளுடைய கணவன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும்,
\v 14 எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவனுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன்னுடைய மனைவியின்மேல் பகைகொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் பகைகொண்டிருந்தாலும்,
\s5
\v 15 அந்தக் கணவன் தன்னுடைய மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவளுக்காக ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கவேண்டும்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாக இருப்பதால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருக்கவேண்டும்.
\s5
\v 16 ஆசாரியன் அவளைச் சமீபத்தில் அழைத்து, கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
\v 17 ஒரு மண்பானையிலே பரிசுத்த தண்ணீர் வார்த்து, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த தண்ணீரில்போட்டு,
\s5
\v 18 பெண்ணைக் கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அவளுடைய முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவளுடைய உள்ளங்கையிலே வைக்கவேண்டும்; சாபகாரணமான கசப்பான தண்ணீர் ஆசாரியன் கையில் இருக்கவேண்டும்.
\v 19 பின்பு ஆசாரியன் அவளை ஆணையிட வைத்து: ஒருவனும் உன்னோடு உறவுகொள்ளாமலும், உன்னுடைய கணவனுக்கு கீழ்பட்டிருக்கிற நீ தீட்டுப்படும்படி பிறர்முகம் பார்க்காமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான தண்ணீரின் தோஷத்திற்கு நீங்கலாக இருப்பாய்.
\s5
\v 20 உன்னுடைய கணவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன்னுடைய கணவனைத்தவிர அந்நியனோடு உறவுகொண்டு தீட்டுப்பட்டிருப்பாயானால்,
\v 21 கர்த்தர் உன்னுடைய இடுப்பு சூம்பவும், உன்னுடைய வயிறு வீங்கவும்செய்து, உன்னை உன்னுடைய மக்களுக்குள்ளே சாபமும் ஆணையிடும் அடையாளமாகவும் வைப்பாராக.
\v 22 சாபகாரணமான இந்த தண்ணீர் உன்னுடைய வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் செய்யும்படி, உன்னுடைய குடலுக்குள் போகவேண்டும் என்கிற சாபவார்த்தையாலே பெண்ணை ஆணையிடவைத்துச் சொல்வானாக. அதற்கு அந்தப் பெண்: ஆமென், ஆமென், என்று சொல்லவேண்டும்.
\s5
\v 23 பின்பு ஆசாரியன் இந்தச் சாபவார்த்தைகளை ஒரு சீட்டில் எழுதி, அவைகளைக் கசப்பான தண்ணீரால் கழுவிப்போட்டு,
\s5
\v 24 சாபகாரணமான அந்தக் கசப்பான தண்ணீரை அவள் குடிக்கும்படிச் செய்வான்; அப்பொழுது சாபகாரணமான அந்த தண்ணீர் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும்.
\v 25 பின்பு ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை அந்த பெண்ணின் கையிலிருந்து வாங்கி, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல் செலுத்தி,
\v 26 ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, பீடத்தின்மேல் தகனித்து, பின்பு பெண்ணுக்கு அந்த தண்ணீரைக்குடிக்கும்படி கொடுக்கவேண்டும்.
\s5
\v 27 அந்த தண்ணீரைக் குடிக்கச் செய்த பின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன்னுடைய கணவனுக்குத் துரோகம்செய்திருந்தால், சாபகாரணமான அந்த தண்ணீர் அவளுக்குள் நுழைந்து கசப்புண்டானதால், அவளுடைய வயிறு வீங்கி, அவளுடைய இடுப்பு சூம்பும்; இப்படியே அந்தப் பெண் தன்னுடைய மக்களுக்குள்ளே சாபமாக இருப்பாள்.
\v 28 அந்தப் பெண் தீட்டுப்படாமல் சுத்தமாக இருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பம்தரிக்கக்கூடியவளாக இருப்பாள்.
\s5
\v 29 ஒரு பெண் தன்னுடைய கணவனைத்தவிர அந்நிய ஆணோடு சேர்ந்து தீட்டுப்பட்டதால் உண்டான எரிச்சலுக்கும்,
\v 30 கணவன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன்னுடைய மனைவியின்மேல் அடைந்த பொறாமைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன்னுடைய மனைவியை நிறுத்தவேண்டும்; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யவேண்டும்.
\s5
\v 31 கணவன் அக்கிரமத்திற்கு நீங்கலாக இருப்பான்; அப்படிப்பட்டப் பெண்ணோ, தன்னுடைய அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல் என்றார்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\s1 நசரேயன்
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: ஆணோ பெண்ணோ கர்த்தருக்கென்று விரதம் செய்துகொண்டவர்களாக இருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையை செய்தால்,
\v 3 அப்படிப்பட்டவன் திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் விலக்கவேண்டும்; அவன் திராட்சைரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சைரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடிக்காமலும், திராட்சைப்பழங்களையோ திராட்சைவற்றல்களையோ சாப்பிடாமலும்,
\v 4 தான் நசரேயனாக இருக்கும் நாளெல்லாம் திராட்சைச்செடி விதைமுதல் தோல்வரை உள்ளவைகளினால் செய்யப்பட்ட எதையும் சாப்பிடாமலும் இருக்கவேண்டும்.
\s5
\v 5 அவன் நசரேய விரதமிருக்கும் நாட்களெல்லாம் சவரகன் கத்தி அவனுடைய தலையின்மேல் படக்கூடாது; அவன் கர்த்தருக்கென்று விரதமிருக்கும் காலம் நிறைவேறும்வரை பரிசுத்தமாக இருந்து, தன்னுடைய தலைமுடியை வளரவிடவேண்டும்.
\s5
\v 6 அவன் கர்த்தருக்கென்று விரதமிருக்கும் நாட்களெல்லாம் யாதொரு பிரேதத்தின் அருகில் போகக்கூடாது.
\v 7 அவன் தன்முடைய தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவனுடைய தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன்னுடைய தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலோ சகோதரியினாலோ தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாது.
\v 8 அவன் நசரேயனாக இருக்கும் நாட்களெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாக இருப்பான்.
\s5
\v 9 அவனருகில் ஒருவன் திடீரென மரணமடைந்ததால், நசரேய விரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதென்றால், அவன் தன்னுடைய சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன்னுடைய தலைமுடியைச் சிரைத்துக்கொண்டு,
\s5
\v 10 எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையோ இரண்டு புறாக்குஞ்சுகளையோ ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடம் கொண்டுவரவேண்டும்.
\v 11 அப்பொழுது ஆசாரியன் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்திசெய்து, அவனுடைய தலையை அந்தநாளில் பரிசுத்தப்படுத்தவேண்டும்.
\s5
\v 12 அவன் திரும்பவும் தன்னுடைய விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து, ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரவேண்டும்; அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதால் சென்ற நாட்கள் வீணாகும்.
\s5
\v 13 நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதமிருக்கும் நாட்கள் நிறைவேறின அன்றைக்கே, அவன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே வந்து,
\v 14 சர்வாங்க தகனபலியாக ஒருவயதுள்ள பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், பாவநிவாரணபலியாக ஒருவயதுள்ள பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும்,
\v 15 ஒரு கூடையில் எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் கர்த்தருக்குத் தன்னுடைய காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.
\s5
\v 16 அவைகளை ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரணபலியையும் அவனுடைய சர்வாங்கதகனபலியையும் செலுத்தி,
\v 17 ஆட்டுக்கடாவைக் கூடையில் இருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதான பலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைக்கவேண்டும்.
\s5
\v 18 அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன்னுடைய தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன்னுடைய தலைமுடியை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடவேண்டும்.
\s5
\v 19 நசரேயன் பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமுடியைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன் ஆட்டுக்கடாவினுடைய வேகவைக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில் இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத ஒரு அடையையும் எடுத்து, அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து,
\v 20 அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்; அது அசைவாட்டப்பட்ட மார்புப்பகுதியோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும், ஆசாரியனைச் சேரும்; அது பரிசுத்தமானது. பின்பு நசரேயன் திராட்சைரசம் குடிக்கலாம்.
\s5
\v 21 பொருத்தனைசெய்த நசரேயனுக்கும், அவன் தன்னுடைய கைக்கு உதவுகிறதைத்தவிர, தன் நசரேய விரதத்திற்காக கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கையின் பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன்னுடைய பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்றபடி செய்து முடிக்கவேண்டும் என்று சொல் என்றார்.
\s5
\v 22 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 23 நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:
\v 24 கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காப்பார்.
\s5
\v 25 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கச்செய்து, உன்மேல் கிருபையாக இருக்கக்கடவர்.
\v 26 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடுவார் என்பதே.
\v 27 இந்த விதமாக அவர்கள் என்னுடைய நாமத்தை இஸ்ரவேல் மக்கள்மேல் கூறவேண்டும்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 பிரதிஷ்டை காணிக்கை
\p
\v 1 மோசே வாசஸ்தலத்தை நிறுவி, அதையும் அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிப்பொருட்களையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்தி முடித்த நாளில்,
\v 2 தங்களுடைய பிதாக்களுடைய வம்சத்தலைவர்களும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
\v 3 தங்களுடைய காணிக்கையாக, ஆறு கூண்டுவண்டிகளையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டியும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
\s5
\v 4 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 5 நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி. லேவியர்களுக்கு அவரவர் வேலைக்குத் தகுந்தவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார்.
\s5
\v 6 அப்பொழுது மோசே அந்த வண்டிகளையும் மாடுகளையும் வாங்கி, லேவியர்களுக்குக் கொடுத்தான்.
\v 7 இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் சந்ததியார்களுக்கு, அவர்கள் வேலைக்குத்தகுந்த பங்காகக் கொடுத்தான்.
\v 8 நான்கு வண்டிகளையும் எட்டு மாடுகளையும் மெராரியின் சந்ததியினருக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் மகன்கள் இத்தாமாருடைய கையின் கீழிருக்கிற அவர்களுடைய வேலைக்குத்தகுந்த பங்காகக் கொடுத்தான்.
\s5
\v 9 கோகாத்தின் சந்ததியாருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாக இருந்தது.
\s5
\v 10 பலிபீடம் அபிஷேகம்செய்யப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்திற்கு முன்பாகத் தங்களுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.
\v 11 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தவேண்டும் என்றார்.
\s5
\v 12 அப்படியே முதலாம் நாளில் தன்னுடைய காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் மகன் நகசோன்.
\v 13 அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைப்பதற்காக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிபாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
\v 14 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள தங்கத்தால் செய்த ஒரு தூபகரண்டியும்,
\s5
\v 15 சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
\v 16 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
\v 17 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மினதாபின் மகனாகிய நகசோனின் காணிக்கை.
\s5
\v 18 இரண்டாம் நாளில் இசக்காரின் பிரபுவாகிய சூவாரின் மகன் நெதனெயேல் காணிக்கை செலுத்தினான்.
\v 19 அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைப்பதற்காக, எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
\s5
\v 20 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
\v 21 சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
\v 22 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
\v 23 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூவாரின் மகனாகிய நெதனெயேலின் காணிக்கை.
\s5
\v 24 மூன்றாம் நாளில் ஏலோனின் மகனாகிய எலியாப் என்னும் செபுலோன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
\v 25 அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைப்பதற்காக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
\v 26 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
\s5
\v 27 சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
\v 28 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
\v 29 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும் ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏலோனின் மகனாகிய எலியாபின் காணிக்கை.
\s5
\v 30 நான்காம் நாளில் சேதேயூரின் மகனாகிய எலிசூர் என்னும் ரூபன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
\v 31 அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைப்பதற்காக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
\v 32 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
\s5
\v 33 சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
\v 34 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
\v 35 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்காடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சேதேயூரின் மகனாகிய எலிசூரின் காணிக்கை.
\s5
\v 36 ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல் என்னும் சிமியோன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
\v 37 அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிகலமும் ஆகிய இந்த இரண்டும்,
\v 38 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
\s5
\v 39 சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
\v 40 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
\v 41 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூரிஷதாயின் மகனாகிய செலூமியேலின் காணிக்கை.
\s5
\v 42 ஆறாம் நாளிலே தேகுவேலின் மகனாகிய எலியாசாப் என்னும் காத் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
\v 43 அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
\v 44 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
\s5
\v 45 சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
\v 46 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
\v 47 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது தேகுவேலின் மகனாகிய எலியாசாபின் காணிக்கை.
\s5
\v 48 ஏழாம் நாளில் அம்மீயூதின் மகனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
\v 49 அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
\v 50 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
\s5
\v 51 சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
\v 52 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
\v 53 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மியூதின் மகனாகிய எலிஷாமாவின் காணிக்கை.
\s5
\v 54 எட்டாம் நாளில் பெதாசூரின் மகனாகிய கமாலியேல் என்னும் மனாசே சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
\v 55 அவனுடைய காணிக்கையாவது: உணவுபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
\v 56 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
\s5
\v 57 சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
\v 58 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
\v 59 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது பெதாசூரின் மகனாகிய கமாலியேலின் காணிக்கை.
\s5
\v 60 ஒன்பதாம் நாளில் கீதெயோனின் மகனாகிய அபீதான் என்னும் பென்யமீன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
\v 61 அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
\v 62 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
\s5
\v 63 சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
\v 64 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
\v 65 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது கீதெயோனின் மகனாகிய அபீதானின் காணிக்கை.
\s5
\v 66 பத்தாம் நாளில் அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர் என்னும் தாண் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
\v 67 அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
\v 68 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
\s5
\v 69 சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
\v 70 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
\v 71 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேரின் காணிக்கை.
\s5
\v 72 பதினோராம் நாளில் ஓகிரானின் மகனாகிய பாகியேல் என்னும் ஆசேர் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
\v 73 அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
\v 74 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
\s5
\v 75 சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
\v 76 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
\v 77 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஓகிரானின் மகனாகிய பாகியேலின் காணிக்கை.
\s5
\v 78 பன்னிரண்டாம் நாளில் ஏனானின் மகனாகிய அகீரா என்னும் நப்தலி சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
\v 79 அவனுடைய காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்படியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிப்பாத்திரமும் ஆகிய இந்த இரண்டும்,
\v 80 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
\s5
\v 81 சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
\v 82 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
\v 83 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏனானின் மகனாகிய அகீராவின் காணிக்கை.
\s5
\v 84 பலிபீடம் அபிஷேகம் செய்யப்பட்டபோது, இஸ்ரவேல் பிரபுக்களால் செய்யப்பட்ட பிரதிஷ்டையாவது: வெள்ளித்தாலங்கள் பன்னிரண்டு, வெள்ளிக்கலங்கள் பன்னிரண்டு, பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு.
\v 85 ஒவ்வொரு வெள்ளித்தட்டு நூற்று முப்பது சேக்கல் நிறையும், ஒவ்வொரு கலம் எழுபது சேக்கல் நிறையுமாக, இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையாக இருந்தது.
\v 86 தூபவர்க்கம் நிறைந்த பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு, ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி பத்துச்சேக்கல் நிறையாக, தூப கரண்டிகளின் பொன்னெல்லாம் நூற்றிருபது சேக்கல் நிறையாக இருந்தது.
\s5
\v 87 சர்வாங்கதகனபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் பன்னிரண்டு, ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டு, ஒருவயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்கடுத்த போஜனபலிகளும் கூடச் செலுத்தப்பட்டது; பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாக்கள் பன்னிரண்டு.
\v 88 சமாதானபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் இருபத்துநான்கு; ஆட்டுக்கடாக்கள் அறுபது, வெள்ளாட்டுக் கடாக்கள் அறுபது; ஒருவயதான ஆட்டுக்குட்டிகள் அறுபது; பலிபீடம் அபிஷேகம்செய்யப்பட்ட பின்பு செய்யப்பட்ட அதின் பிரதிஷ்டை இதுவே.
\s5
\v 89 மோசே தேவனோடு பேசும்படி ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போது, தன்னோடே பேசுகிறவர்களின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து உண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடு பேசுவார்.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 விளக்குகளை அமைத்தல்
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நீ ஆரோனோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்.
\s5
\v 3 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட பிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான்.
\v 4 இந்தக் குத்துவிளக்கு, அதின் பாதமுதல் பூக்கள்வரைக்கும் தங்கத்தால் அடிப்புவேலையாகச் செய்யப்பட்டிருந்தது; மோசேக்குக் காண்பித்த மாதிரியின்படியே அவன் குத்துவிளக்கை உண்டாக்கினான்.
\s1 லேவியர்களை அமைத்தல்
\p
\s5
\v 5 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 6 நீ இஸ்ரவேல் மக்களிலிருந்து லேவியர்களைப் பிரித்தெடுத்து, அவர்களைச் சுத்திகரிக்கவேண்டும்.
\s5
\v 7 அவர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: அவர்கள்மேல் சுத்திகரிக்கும் தண்ணீரைத் தெளிக்கவேண்டும்; பின்பு அவர்கள் உடல் முழவதும் சவரம்செய்து, தங்களுடைய ஆடைகளைத் துவைத்து, தங்களைச் சுத்திகரிக்கவேண்டும்.
\v 8 அப்பொழுது ஒரு காளையையும், அதற்கேற்ற எண்ணெயிலே பிசைந்த மெல்லியமாவாகிய போஜனபலியையும் கொண்டுவரவேண்டும்; பாவநிவாரணபலியாக வேறொரு காளையையும் நீ வாங்கி.
\s5
\v 9 லேவியர்களை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பு வரச்செய்து, இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரையும் கூடிவரச்செய்.
\v 10 நீ லேவியர்களைக் கர்த்தருடைய சந்நிதியில் வரச்செய்தபோது, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய கைகளை லேவியர்கள்மேல் வைக்கவேண்டும்.
\v 11 லேவியர்கள் கர்த்தருக்குரிய பணிவிடை செய்யும்பொருட்டு, ஆரோன் அவர்களை இஸ்ரவேல் மக்களின் காணிக்கையாகக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டப்படும் காணிக்கையாக நிறுத்தவேண்டும்.
\s5
\v 12 அதன்பின் லேவியர்கள் தங்களுடைய கைகளைக் காளைகளுடைய தலையின்மேல் வைக்கவேண்டும்; பின்பு நீ லேவியர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக, கர்த்தருக்கு அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தி,
\v 13 லேவியர்களை ஆரோனுக்கும் அவனுடைய மகனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் கர்த்தருக்கு அசைவாட்டப்படும் காணிக்கையாக்கி,
\s5
\v 14 இப்படி நீ லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலிருந்து பிரித்தெடுக்கவேண்டும்; லேவியர்கள் என்னுடையவர்களாக இருப்பார்கள்.
\v 15 இப்படி அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக்கவேண்டும்; அதன்பின்பு லேவியர்கள் ஆசரிப்புக்கூடாரத்தில் பணிவிடை செய்ய நுழையவேண்டும்.
\s5
\v 16 இஸ்ரவேல் மக்களிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரவேல் மக்கள் எல்லாரிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற எல்லா முதற்பேறுக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக்கொண்டேன்.
\v 17 இஸ்ரவேல் மக்களில் மனிதர்களிலும் மிருகஜீவன்களிலும் முதற்பேறானதெல்லாம் என்னுடையது; நான் எகிப்துதேசத்திலே முதற்பேறான யாவையும் கொன்ற நாளிலே அவைகளை எனக்கென்று பரிசுத்தப்படுத்தி,
\s5
\v 18 பின்பு லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு,
\v 19 லேவியர்கள் இஸ்ரவேல் மக்களுடைய பணிவிடையை ஆசரிப்புக்கூடாரத்தில் செய்யும்படியும், இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படியும், இஸ்ரவேல் மக்கள் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் மக்களில் வாதை உண்டாகாதபடியும், லேவியர்களை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசாகக் கொடுத்தேன் என்றார்.
\s5
\v 20 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்களின் சபையார் யாவரும் கர்த்தர் லேவியர்களைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் லேவியர்களுக்குச் செய்தார்கள்.
\v 21 லேவியர்கள் சுத்திகரிக்கப்பட்டு, தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள்; பின்பு ஆரோன் அவர்களைக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்க அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான்.
\s5
\v 22 அதற்குப்பின்பு லேவியர்கள் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் முன்பாக ஆசரிப்புக்கூடாரத்தில் தங்களுடைய பணிவிடையைச் செய்யும்படி நுழைந்தார்கள்; கர்த்தர் லேவியர்களைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள்.
\s5
\v 23 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 24 லேவியர்களுக்குரிய கட்டளை என்னவென்றால்: இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் கூட்டத்திற்கு சேவிக்க வரவேண்டும்.
\s5
\v 25 ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடை செய்யும்கூட்டத்தைவிட்டு,
\v 26 ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக்காக்கிறதற்குத் தங்களுடைய சகோதரர்களோடு ஊழியம் செய்வதைத் தவிர, வேறொரு வேலையும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர்கள் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டமிடவேண்டும் என்றார்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 பஸ்கா
\p
\v 1 அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதத்தில் கர்த்தர் சீனாய் வனாந்திரத்தில் மோசேயை நோக்கி:
\v 2 குறித்த காலத்தில் இஸ்ரவேல் மக்கள் பஸ்காவை அனுசரிக்கவேண்டும்.
\v 3 இந்த மாதம் பதினான்காம்தேதி மாலை வேளையாகிய குறித்த காலத்தில் அதை அனுசரிக்கவேண்டும்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைகளின்படியேயும் அதை அனுசரிக்கவேண்டும் என்றார்.
\s5
\v 4 அப்படியே பஸ்காவை அனுசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிட்டான்.
\v 5 அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி மாலைநேரமான வேளையில், சீனாய் வனாந்திரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.
\s5
\v 6 அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை அனுசரிக்கத்தகாதவர்களாக இருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து:
\v 7 நாங்கள் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த காலத்தில் இஸ்ரவேல் மக்களோடு கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தாதபடி, நாங்கள் விலக்கப்பட்டிருக்கவேண்டியது என்ன என்றார்கள்.
\v 8 மோசே அவர்களை நோக்கி: பொறுங்கள்; கர்த்தர் உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான்.
\s5
\v 9 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 10 நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலோ உங்கள் சந்ததியாரிலோ ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பயணமாகத் தூரமாக போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டும்.
\s5
\v 11 அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினான்காம்தேதி மாலைநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து,
\v 12 அதிகாலைவரை அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய எல்லா முறைகளின்படியும் அதை அனுசரிக்கவேண்டும்.
\s5
\v 13 ஒருவன் சுத்தமுள்ளவனுமாகப் பயணம் போகாதவனுமாக இருந்தும், பஸ்காவை அனுசரிக்காமல் போனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியால் தன்னுடைய மக்களில் இல்லாமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன்னுடைய பாவத்தைச் சுமப்பான்.
\v 14 ஒரு பரதேசி உங்களிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின் கட்டளைப்படியும் அதின் முறையின்படியும் அனுசரிக்கவேண்டும்; பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்கவேண்டும் என்று சொல் என்றார்.
\s1 ஆசரிப்புக்கூடாரத்தின் மேல் மேகம்
\p
\s5
\v 15 வாசஸ்தலம் பிரதிஷ்டைசெய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடியது; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டானது; அது அதிகாலைவரை இருந்தது.
\v 16 இப்படி எப்போதும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது.
\v 17 மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்வார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் மக்கள் முகாமிடுவார்கள்.
\s5
\v 18 கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் மக்கள் புறப்படுவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே முகாமிடுவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாட்களெல்லாம் அவர்கள் முகாமில் தங்கியிருப்பார்கள்.
\v 19 மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் புறப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.
\s5
\v 20 மேகம் சிலநாட்கள் மட்டும் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே முகாமிட்டு, கர்த்தருடைய கட்டளையின்படியே புறப்படுவார்கள்.
\v 21 மேகம் மாலைதுவங்கி அதிகாலைவரை இருந்து, அதிகாலையில் உயர எழும்பும்போது, உடனே புறப்படுவார்கள்; பகலிலோ இரவிலோ மேகம் எழும்பும்போது புறப்படுவார்கள்.
\s5
\v 22 மேகமானது இரண்டு நாளாவது ஒரு மாதமாவது ஒரு வருடமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்யாமல் முகாமிட்டிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ புறப்படுவார்கள்.
\v 23 கர்த்தருடைய கட்டளையின்படியே முகாமிடுவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பயணம் செய்வார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 சபையைக் கூடிவரவழைப்பதற்கும் முகாம்களைப் புறப்படச்செய்வதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்துகொள்; அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும்.
\s5
\v 3 அவைகளை ஊதும்போது, சபையார் எல்லோரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.
\v 4 ஒன்றைமட்டும் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களாகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.
\v 5 நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாக முழக்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற முகாம்கள் புறப்படவேண்டும்.
\s5
\v 6 அவைகளை நீங்கள் இரண்டாந்தரம் பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற முகாம்கள் புறப்படவேண்டும்; அவர்களைப் புறப்படச்செய்வதற்கு பெருந்தொனியாக முழக்கவேண்டும்.
\v 7 சபையைக் கூட்டுகிறதற்கு நீங்கள் ஊதினால் போதும் பெருந்தொனியாக முழக்கவேண்டாம்.
\v 8 ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதவேண்டும்; உங்களுடைய தலைமுறைதோறும் இது உங்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கவேண்டும்.
\s5
\v 9 உங்களுடைய தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்திற்குப் போகும்போது, எக்காளங்களைப் பெருந்தொனியாக முழக்கக்கடவீர்கள்; அப்பொழுது உங்களுடைய தேவனாகிய கர்த்தருடைய சமூகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள்.
\s5
\v 10 உங்களுடைய மகிழ்ச்சியின் நாட்களிலும், உங்களுடைய பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்களுடைய சர்வாங்கதகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது எக்காளங்களை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்களுடைய தேவனுடைய சமூகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாக இருக்கும்; நான் உங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்றார்.
\s5
\v 11 இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பியது.
\v 12 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் சீனாய் வனாந்திரத்திலிருந்து தங்களுடைய பயண வரிசைகளின்படி புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்திரத்தில் தங்கிற்று.
\v 13 இப்படியே கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடி முதல் பயணம் செய்தார்கள்.
\s5
\v 14 யூதா சந்ததியாருடைய முகாமின் கொடி அவர்களுடைய இராணுவங்களோடு முதல் புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்கு அம்மினதாபின் மகன் நகசோன் தலைவனாக இருந்தான்.
\v 15 இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூவாரின் மகன் நெதனெயேல் தலைவனாக இருந்தான்.
\v 16 செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஏலோனின் மகன் எலியாப் தலைவனாக இருந்தான்.
\s5
\v 17 அப்பொழுது வாசஸ்தலம் இறக்கி வைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் சந்ததியாரும் மெராரி சந்ததியாரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.
\v 18 அதற்குப்பின்பு ரூபன் சந்ததியாருடைய முகாமின் கொடி அவர்களுடைய இராணுவங்களோடு புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்குச் சேதேயூரின் மகன் எலிசூர் தலைவனாக இருந்தான்.
\v 19 சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூரிஷதாயின் மகன் செலூமியேல் தலைவனாக இருந்தான்.
\v 20 காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குத் தேகுவேலின் மகன் எலியாசாப் தலைவனாக இருந்தான்.
\s5
\v 21 கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன்பு மற்றவர்கள் வாசஸ்தலத்தை நிறுவுவார்கள்.
\v 22 அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய முகாமின் கொடி அவர்களுடைய இராணுவங்களோடு புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்கு அம்மியூதின் மகன் எலிஷாமா தலைவனாக இருந்தான்.
\v 23 மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குப் பெதாசூரின் மகன் கமாலியேல் தலைவனாக இருந்தான்.
\v 24 பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குக் கீதெயோனின் மகன் அபீதான் தலைவனாக இருந்தான்.
\s5
\v 25 அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய முகாமின் கொடி எல்லா முகாம்களுக்கும் பின்னாக அவர்களுடைய இராணுவங்களோடு புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்கு அம்மிஷதாயின் மகன் அகியேசேர் தலைவனாக இருந்தான்.
\v 26 ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஓகிரானின் மகன் பாகியேல் தலைவனாக இருந்தான்.
\v 27 நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஏனானின் மகன் அகீரா தலைவனாக இருந்தான்.
\v 28 இஸ்ரவேல் மக்கள் புறப்பட்டபோது, இந்த விதமாகத் தங்கள் தங்கள் இராணுவங்களின்படியே பயணம்செய்தார்கள்.
\s5
\v 29 அப்பொழுது மோசே தன்னுடைய மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய மகனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன இடத்திற்கு நாங்கள் பயணமாகப் போகிறோம்; நீயும் எங்களோடு கூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்றான்.
\v 30 அதற்கு அவன்: நான் வரக்கூடாது; என்னுடைய தேசத்திற்கும் என்னுடைய இனத்தாரிடத்திற்கும் போகவேண்டும் என்றான்.
\s5
\v 31 அப்பொழுது மோசே: நீ எங்களை விட்டுப் போகவேண்டாம்; வனாந்திரத்திலே நாங்கள் முகாமிடும் இடங்களை நீ அறிந்திருக்கிறபடியால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய்.
\v 32 நீ எங்களோடு வந்தால், கர்த்தர் எங்களுக்குச் செய்தருளும் நன்மையின்படியே உனக்கும் நன்மைசெய்வோம் என்றான்.
\s5
\v 33 அவர்கள் கர்த்தருடைய மலையைவிட்டு, மூன்றுநாட்கள் பயணமாக போனார்கள்; மூன்றுநாட்கள் பயணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள் முன்பு சென்றது.
\v 34 அவர்கள் முகாமிலிருந்து பயணமாக போகிறபோது, கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது.
\s5
\v 35 பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய எதிரிகள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான்.
\v 36 அது தங்கும்போது: கர்த்தாவே, அநேக ஆயிரம்பேர்களாகிய இஸ்ரவேலர்களிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான்.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\p
\v 1 பின்பு, மக்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் தீமையாக இருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, முகாமின் கடைசியிலிருந்த சிலரை எரித்தது.
\v 2 அப்பொழுது மக்கள் மோசேயை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மோசே கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்தான்; உடனே அக்கினி அணைந்துபோயிற்று.
\v 3 கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததால், அந்த இடத்திற்குத் தபேரா என்று பெயரிட்டான்.
\s5
\v 4 பின்பு அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய மக்கள் மிகுந்த ஆசையுள்ளவர்களாக மாறினார்கள்; இஸ்ரவேல் மக்களும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியை சாப்பிடக்கொடுப்பவர் யார்?
\v 5 நாம் எகிப்திலே விலையில்லாமல் சாப்பிட்ட மீன்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெங்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.
\v 6 இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்.
\s5
\v 7 அந்த மன்னா கொத்துமல்லி விதையளவும், அதின் நிறம் முத்துப்போலவும் இருந்தது.
\v 8 மக்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டு வந்து, எந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது.
\s5
\v 9 இரவிலே முகாமின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்.
\v 10 அந்தந்த வம்சங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று அழுகிறதை மோசே கேட்டான்; கர்த்தருக்கு மிகவும் கோபம் மூண்டது; மோசேயின் பார்வைக்கும் அது தீமையாக இருந்தது.
\s5
\v 11 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த மக்கள் எல்லோருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரச்செய்தது ஏன்? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைக்காமல் போனது ஏன்?
\v 12 இவர்களுடைய முன்னோர்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்திற்கு நீ இவர்களை பால்குடிக்கிற பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல, உன்னுடைய மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர் என்னோடு சொல்லும்படி இந்த மக்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ?
\s5
\v 13 இந்த மக்கள் எல்லாருக்கும் கொடுக்கிறதற்கு எனக்கு இறைச்சி எங்கேயிருந்து வரும்? எனக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுகிறார்களே.
\v 14 இந்த மக்கள் எல்லோரையும் நான் ஒருவனாகத் தாங்கமுடியாது; எனக்கு இது மிஞ்சின பாரமாக இருக்கிறது.
\v 15 உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என்னுடைய உபத்திரவத்தை நான் காணாதபடி இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்.
\s5
\v 16 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் மக்களுக்கு மூப்பர்களும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக்கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடு வந்து நிற்கும்படிசெய்.
\v 17 அப்பொழுது நான் இறங்கிவந்து, அங்கே உன்னோடு பேசி, நீ ஒருவன் மட்டும் மக்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடு அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்.
\s5
\v 18 நீ மக்களை நோக்கி: நாளைக்காக உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள்; நீங்கள் இறைச்சி சாப்பிடுவீர்கள்; எங்களுக்கு இறைச்சி சாப்பிடக் கொடுப்பவர் யார் என்றும், எகிப்திலே எங்களுக்குச் சௌக்கியமாக இருந்தது என்றும், கர்த்தருடைய செவிகள் கேட்க அழுதீர்களே; ஆகையால், நீங்கள் சாப்பிடும்படி கர்த்தர் உங்களுக்கு இறைச்சி கொடுப்பார்.
\v 19 நீங்கள் ஒருநாள், இரண்டுநாட்கள், ஐந்துநாட்கள், பத்துநாட்கள், இருபதுநாட்கள் மட்டும் இல்லை,
\v 20 ஒரு மாதம்வரை சாப்பிடுவீர்கள்; அது உங்களுடைய மூக்கிலிருந்து புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகும்வரை சாப்பிடுவீர்கள்; உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைசெய்து, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.
\s5
\v 21 அதற்கு மோசே: என்னுடன் இருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் சாப்பிடும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.
\v 22 ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்தின் மீன்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்றான்.
\v 23 அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார்.
\s5
\v 24 அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை மக்களுக்குச் சொல்லி, மக்களின் மூப்பர்களில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.
\v 25 கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடு பேசி, அவன் மேலிருந்த ஆவியை மூப்பர்களாகிய அந்த எழுபது பேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினவுடன் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.
\s5
\v 26 அப்பொழுது இரண்டு பேர் முகாமில் இருந்துவிட்டார்கள்; ஒருவன் பேர் எல்தாத், மற்றவன் பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்திற்குப் போகப் புறப்படாமலிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், முகாமில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
\v 27 ஒரு பிள்ளை ஓடிவந்து, எல்தாதும், மேதாதும் முகாமில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான்.
\s5
\v 28 உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபர்களில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் மகனுமாகிய யோசுவா மறுமொழியாக: என்னுடைய ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைசெய்யும் என்றான்.
\v 29 அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய மக்கள் எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்படி, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கச்செய்தால் நலமாக இருக்குமே என்றான்.
\v 30 பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் முகாமிலே வந்து சேர்ந்தார்கள்.
\s5
\v 31 அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, முகாமிலும் முகாமைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, அந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.
\v 32 அப்பொழுது மக்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இரவுமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாகச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளை முகாமைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்து வைத்தார்கள்.
\s5
\v 33 தங்களுடைய பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று சாப்பிடும்முன்னே கர்த்தருடைய கோபம் மக்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் மக்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.
\v 34 ஆசைப்பட்ட மக்களை அங்கே அடக்கம்செய்ததால், அந்த இடத்திற்குக் கிப்ரோத் அத்தாவா என்று பெயரிட்டான்.
\v 35 பின்பு, மக்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸ்ரோத்திற்குப் பயணம்செய்து, ஆஸ்ரோத்திலே தங்கினார்கள்.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\p
\v 1 எத்தியோப்பியா தேசத்து பெண்ணை மோசே திருமணம்செய்திருந்தபடியால், மிரியாமும் ஆரோனும் அவன் திருமணம்செய்த எத்தியோப்பியா தேசத்து பெண்ணினால் அவனுக்கு விரோதமாகப் பேசி:
\v 2 கர்த்தர் மோசேயைக்கொண்டுமட்டும் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.
\v 3 மோசே ஆனவன் பூமியிலுள்ள சகல மனிதர்களிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாக இருந்தான்.
\s5
\v 4 உடனே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: நீங்கள் மூன்று பேரும் ஆசரிப்புக்கூடாரத்திற்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள்.
\v 5 கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள்.
\s5
\v 6 அப்பொழுது அவர்: என்னுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாக இருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடு பேசுவேன்.
\v 7 என்னுடைய தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என்னுடைய வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.
\v 8 நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாக பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என்னுடைய தாசனாகிய மோசேக்கு விரோதமாகப் பேச, உங்களுக்குப் பயமில்லாமல் போனது என்ன என்றார்.
\s5
\v 9 கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார்.
\v 10 மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற தொழுநோயாளினாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் தொழுநோயாளியாக இருக்கக் கண்டான்.
\s5
\v 11 அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என்னுடைய ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாகச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாமலிரும்.
\v 12 தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாமலிருப்பாளாக என்றான்.
\s5
\v 13 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என்னுடைய தேவனே. அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.
\v 14 கர்த்தர் மோசேயை நோக்கி: அவளுடைய தகப்பன் அவளுடைய முகத்திலே காறித் துப்பினால், அவள் ஏழுநாட்கள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் முகாமிற்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்றார்.
\v 15 அப்படியே மிரியாம் ஏழு நாட்கள் முகாமிற்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படும்வரை மக்கள் பயணம் செய்யாமலிருந்தார்கள்.
\s5
\v 16 பின்பு, மக்கள் ஆஸ்ரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 கானானை விவரித்தல்
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதர்களை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய மனிதனை அனுப்பவேண்டும் என்றார்.
\s5
\v 3 மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்திரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர்கள் யாவரும் இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள்.
\v 4 அவர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் மகன் சம்முவா.
\s5
\v 5 சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் மகன் சாப்பாத்.
\v 6 யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் மகன் காலேப்.
\v 7 இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் மகன் ஈகால்.
\v 8 எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் மகன் ஓசேயா.
\s5
\v 9 பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் மகன் பல்த்தி.
\v 10 செபுலோன் கோத்திரத்தில் சோதியின் மகன் காதியேல்.
\v 11 யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் மகன் காதி.
\v 12 தாண் கோத்திரத்தில் கெமல்லியின் மகன் அம்மியேல்.
\s5
\v 13 ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் மகன் சேத்தூர்.
\v 14 நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் மகன் நாகபி.
\v 15 காத் கோத்திரத்தில் மாகியின் மகன் கூவேல்.
\v 16 தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதர்களின் பெயர்கள் இவைகளே: நூனின் மகனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பெயரிட்டிருந்தான்.
\s5
\v 17 அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்பும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,
\v 18 தேசம் எப்படிப்பட்டது என்றும், அங்கே குடியிருக்கிற மக்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,
\v 19 அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டது என்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,
\v 20 நிலம் எப்படிப்பட்டது அது வளமானதோ வளமில்லாததோ என்றும்; அதில் மரங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியம்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சைச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாக இருந்தது.
\s5
\v 21 அவர்கள் போய், சீன் வனாந்திரம்துவங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை, தேசத்தைச் சுற்றிப்பார்த்து,
\v 22 தெற்கேயும் சென்று, எபிரோன்வரை போனார்கள்; அங்கே ஏனாக்கின் மகன்களாகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருடங்களுக்குமுன்னே கட்டப்பட்டது.
\s5
\v 23 பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சைக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டு பேர் கட்டித் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; மாதுளம் பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.
\v 24 இஸ்ரவேல் மக்கள் அங்கே அறுத்த திராட்சைக்குலையினால், அந்த இடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு எனப்பட்டது.
\s5
\v 25 அவர்கள் தேசத்தைச் சுற்றிப் பார்த்து, நாற்பதுநாட்கள் சென்றபின்பு திரும்பினார்கள்.
\v 26 அவர்கள் பாரான் வனாந்திரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் செய்தியை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.
\s5
\v 27 அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்திற்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.
\v 28 ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற மக்கள் பலவான்கள்; பட்டணங்கள் பாதுகாப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாக இருக்கிறது; அங்கே ஏனாக்கின் மகன்களையும் கண்டோம்.
\v 29 அமலேக்கியர்கள் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியர்களும், எபூசியர்களும், எமோரியர்களும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர்கள் கடல் அருகேயும் யோர்தானுக்கு அருகில் குடியிருக்கிறார்கள் என்றார்கள்.
\s5
\v 30 அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக மக்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம்; நாம் அதை எளிதாக ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.
\v 31 அவனோடுகூடப் போய்வந்த மனிதர்களோ: நாம் போய் அந்த மக்களோடு எதிர்க்க நம்மாலே முடியாது; அவர்கள் நம்மைவிட பலவான்கள் என்றார்கள்.
\s5
\v 32 நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன்னுடைய குடிகளை தாங்களே உண்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட மக்கள் எல்லோரும் மிகவும் பெரிய ஆட்கள்.
\v 33 அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் மகன்களாகிய இராட்சதர்களையும் கண்டோம்; நாங்கள் எங்களுடைய பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்களுடைய பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் மக்களுக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.
\s5
\c 14
\cl அத்தியாயம்– 14
\s1 மக்கள் கலகம் செய்தல்
\p
\v 1 அப்பொழுது சபையார் எல்லோரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; மக்கள் அன்று இரவுமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.
\v 2 இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லோரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாக இருக்கும்; இந்த வனாந்திரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.
\v 3 நாங்கள் பட்டயத்தால் மடியும்படியும், எங்களுடைய மனைவிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படியும், கர்த்தர் எங்களை இந்த தேசத்திற்குக் கொண்டு வந்தது என்ன? எகிப்திற்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள்.
\s5
\v 4 பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்திற்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
\v 5 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்களின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்கு முன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள்.
\s5
\v 6 தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் மகனாகிய காலேபும், தங்களுடைய ஆடைகளைக்கிழித்துக்கொண்டு,
\v 7 இஸ்ரவேல் மக்களின் முழு சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம்.
\v 8 கர்த்தர் நம்மேல் பிரியமாக இருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.
\s5
\v 9 கர்த்தருக்கு விரோதமாகமட்டும் கலகம்செய்யாமலிருங்கள்; அந்த தேசத்தின் மக்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போனது; கர்த்தர் நம்மோடு இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்.
\v 10 அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லோரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்தில் இஸ்ரவேல் மக்கள் எல்லோருக்கும் முன்பாகக் காணப்பட்டது.
\s5
\v 11 கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த மக்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை நம்பாமலிருப்பீர்கள்?
\v 12 நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, கானானில் அவர்களுக்குரியதை வெளியே தள்ளி, அவர்களைவிட உன்னைப் பெரிதும் பலத்ததுமான தேசமாக்குவேன் என்றார்.
\s5
\v 13 மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர்கள் இதைக் கேட்பார்கள், அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த மக்களைக் கொண்டுவந்தீரே.
\v 14 கர்த்தராகிய நீர் இந்த மக்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாகத் தரிசனமாவதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்பதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன்பு செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள்; இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள்.
\s5
\v 15 ஒரே மனிதனைக் கொல்லுகிறது போல இந்த மக்களையெல்லாம் நீர் கொன்று போட்டால், அப்பொழுது உம்முடைய புகழைக் கேட்டிருக்கும் புறஜாதியார்:
\v 16 கர்த்தர் அந்த மக்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விடமுடியாமல் போனபடியால், அவர்களை வனாந்திரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.
\s5
\v 17 ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே,
\v 18 என்னுடைய ஆண்டவருடைய வல்லமை பெரிதாக விளங்குவதாக.
\v 19 உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த மக்களுக்கு மன்னித்து வந்ததின்படியேயும், இந்த மக்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.
\s5
\v 20 அப்பொழுது கர்த்தர்: உன்னுடைய வார்த்தையின்படியே மன்னித்தேன்.
\v 21 பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
\v 22 என்னுடைய மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்திரத்திலும் செய்த என்னுடைய அடையாளங்களையும் கண்டிருந்தும், என்னுடைய சத்தத்தை கேட்காமல், இதோடு பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதர்களில் ஒருவரும்,
\s5
\v 23 அவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள்.
\v 24 என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாக இருக்கிறபடியாலும், உத்தமமாக என்னைப் பின்பற்றி வந்தபடியாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரும்படிச்செய்வேன்; அவனுடைய சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
\v 25 அமலேக்கியர்களும் கானானியர்களும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்திற்குப்போகிற வழியாக வனாந்திரத்திற்குப் பயணம்செய்யுங்கள் என்றார்.
\s5
\v 26 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
\v 27 எனக்கு விரோதமாக முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் மக்கள் எனக்கு விரோதமாக முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.
\s5
\v 28 நீ அவர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என்னுடைய காதுகள் கேட்கச் சொன்னபடியே உங்களுக்குச் செய்வேன் என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
\v 29 இந்த வனாந்திரத்தில் உங்களுடைய பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாக முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.
\v 30 எப்புன்னேயின் மகன் காலேபும், நூனின் மகன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நுழைவதில்லை.
\s5
\v 31 கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்களுடைய குழந்தைகளையோ நான் அதில் நுழையச் செய்வேன்; நீங்கள் அசட்டைச்செய்த தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள்.
\v 32 உங்களுடைய பிரேதங்களோ இந்த வனாந்திரத்திலே விழும்.
\v 33 அவைகள் வனாந்திரத்திலே விழுந்து தீரும்வரை, உங்களுடைய பிள்ளைகள் நாற்பது வருடங்கள் வனாந்திரத்திலே திரிந்து, நீங்கள் செய்த கலகங்களின் பலனைச் சுமப்பார்கள்.
\s5
\v 34 நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாட்கள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருடமாக, நீங்கள் நாற்பது வருடங்கள் உங்களுடைய அக்கிரமங்களைச் சுமந்து, என்னுடைய உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.
\v 35 கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்திரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.
\s5
\v 36 அந்தத் தேசத்தைச் சோதித்துப் பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்தத் தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து,
\v 37 சபையார் எல்லோரும் அவனுக்கு விரோதமாக முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்.
\v 38 தேசத்தைச் சுற்றிப் பார்க்கப்போன அந்த மனிதர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் மகனாகிய காலேபும் மட்டும் உயிரோடு இருந்தார்கள்.
\s5
\v 39 மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொன்னபோது, மக்கள் மிகவும் துக்கித்தார்கள்.
\v 40 அதிகாலையில் அவர்கள் எழுந்து: நாங்கள் பாவம்செய்தோம், கர்த்தர் வாக்குத்தத்தம்செய்த இடத்திற்கு நாங்கள் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள்.
\s5
\v 41 மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இப்படி கர்த்தரின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது.
\v 42 நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக முறியடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாமலிருங்கள்; கர்த்தர் உங்களுடைய நடுவில் இருக்கமாட்டார்.
\v 43 அமலேக்கியர்களும் கானானியர்களும் அங்கே உங்களுக்குமுன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் கர்த்தரை விட்டுப் பின்வாங்கினபடியால், கர்த்தர் உங்களோடு இருக்கமாட்டார் என்றான்.
\s5
\v 44 ஆனாலும் அவர்கள் மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கையின் பெட்டியும் மோசேயும் முகாமை விட்டுப்போகவில்லை.
\v 45 அப்பொழுது அமலேக்கியர்களும் கானானியர்களும் அந்த மலையிலே இருந்து இறங்கி வந்து, அவர்களை முறியடித்து, அவர்களை ஓர்மாவரை துரத்தினார்கள்.
\s5
\c 15
\cl அத்தியாயம்– 15
\s1 மற்ற பலிகள்
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு,
\v 3 விசேஷித்த பொருத்தனையையோ, உற்சாக பலியையோ, உங்களுடைய பண்டிகைகளில் செலுத்தும் பலியையோ, கர்த்தருக்கு மாடுகளிலாவது ஆடுகளிலாவது சர்வாங்கதகனபலியையாவது மற்ற ஏதாவது ஒரு பலியையாவது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனமாகப் பலியிடும்போது,
\s5
\v 4 தன்னுடைய படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்கதகனபலிக்காவது மற்றப் பலிக்காவது ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தவேண்டும்.
\v 5 பானபலியாக காற்படி திராட்சைரசத்தையும் படைக்கவேண்டும்.
\s5
\v 6 ஆட்டுக்கடாவாக இருந்ததென்றால், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லியமாவின் போஜனபலியையும்,
\v 7 பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சைரசத்தையும் கர்த்தருக்கு நறுமண வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.
\s5
\v 8 நீ சர்வாங்கதகனபலிக்காவது, விசேஷித்த பொருத்தனைபலிக்காவது, சமாதானபலிக்காவது, ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது,
\v 9 அதனோடு பத்தில் மூன்றுபங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,
\v 10 பானபலியாக அரைப்படி திராட்சைரசத்தையும், கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.
\s5
\v 11 இந்தமுறையாகவே ஒவ்வொரு மாட்டுக்கும், ஆட்டுக்கடாவுக்கும், செம்மறியாட்டுக் குட்டிக்கும், வெள்ளாட்டுக் குட்டிக்கும் செய்து படைக்கவேண்டும்.
\v 12 நீங்கள் படைக்கிறவைகளின் எண்ணிக்கைக்குத்தகுந்தபடி, ஒவ்வொன்றிற்காகவும் இந்த முறையில் செய்யவேண்டும்.
\v 13 சுயதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இந்த விதமாகவே செய்யவேண்டும்.
\s5
\v 14 உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்களுடைய தலைமுறைதோறும் குடியிருக்கிறவனோ, கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.
\v 15 சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்களுடைய தலைமுறைகளில் நிரந்தர கட்டளையாக இருக்கவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.
\v 16 உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே கட்டளையும் இருக்கவேண்டும் என்று சொல் என்றார்.
\s5
\v 17 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 18 நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,
\v 19 தேசத்தின் ஆகாரத்தை சாப்பிடும்போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தவேண்டும்.
\s5
\v 20 நீங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப்படைக்கவேண்டும்; போரடிக்கிற களத்தின் படைப்பை படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப்படைக்கவேண்டும்.
\v 21 இப்படி உங்களுடைய தலைமுறைதோறும் உங்களுடைய பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப்படைக்கவேண்டும்.
\s1 அறியாமல் செய்த பாவத்திற்கான பலி
\p
\s5
\v 22 கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,
\v 23 கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்களுடைய சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல்,
\v 24 அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லோரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், கட்டளையின்படி அதற்கேற்ற உணவுபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
\s5
\v 25 அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் மக்களின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்; அது அறியாமையினால் செய்யப்பட்டதாலும், அதற்காக அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
\v 26 அது அறியாமையினாலே மக்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் மக்களின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.
\s5
\v 27 ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தால், ஒருவயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தவேண்டும்.
\v 28 அப்பொழுது அறியாமையினால் பாவம்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.
\v 29 இஸ்ரவேல் மக்களாகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவம்செய்தவனுக்கும், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.
\s5
\v 30 அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலோ அந்நியர்களிலோ எவனாவது துணிகரமாக ஏதாவது ஒன்றைச்செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன்னுடைய மக்களில் இல்லாதபடி துண்டிக்கப்படவேண்டும்.
\v 31 அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைசெய்து, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா துண்டிக்கப்பட வேண்டும்; அவனுடைய அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.
\s1 ஓய்வு நாள் சட்டத்தை மீறியவனின் மரண தண்டனை
\p
\s5
\v 32 இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் இருக்கும்போது, ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.
\v 33 விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்திற்கும் சபையார் அனைவரிடத்திற்கும் கொண்டுவந்தார்கள்.
\v 34 அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று சரியான தீர்ப்பு இல்லாதபடியால், அவனைக் காவலில் வைத்தார்கள்.
\s5
\v 35 கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லோரும் அவனை முகாமிற்குப் புறம்பே கல்லெறியவேண்டும் என்றார்.
\v 36 அப்பொழுது சபையார் எல்லோரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனை முகாமிற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.
\s1 ஆடையில் தொங்கல்கள்
\p
\s5
\v 37 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 38 நீ இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் பேசி, அவர்கள் தங்களுடைய தலைமுறைதோறும் தங்களுடைய ஆடைகளின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்.
\v 39 நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்களுடைய இருதயத்திற்கும் உங்களுடைய கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படி, அது உங்களுக்குத் தொங்கலாக இருக்கவேண்டும்.
\s5
\v 40 நீங்கள் என்னுடைய கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்களுடைய தேவனுக்குப் பரிசுத்தராக இருக்கும்படி அதைப் பார்க்கவேண்டும்.
\v 41 நான் உங்களுக்கு தேவனாக இருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்களுடைய தேவனாகிய கர்த்தர்; நானே உங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
\s5
\c 16
\cl அத்தியாயம்– 16
\s1 கோராகு, தாத்தான் மற்றும் அபிராம்
\p
\v 1 லேவிக்குப் பிறந்த கோகாத்தின் மகனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் மகனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு,
\v 2 இஸ்ரவேல் மக்களில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்திற்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக எழும்பி,
\v 3 மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டம்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லோரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.
\s5
\v 4 மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.
\v 5 பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம் அருகில் சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக்கட்டளையிடுவார்.
\s5
\v 6 ஒன்று செய்யுங்கள்; கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, நீங்கள் எல்லோரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு,
\v 7 நாளைக்கு அவைகளில் அக்கினி போட்டு, கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கம் போடுங்கள்; அப்பொழுது கர்த்தர் எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாக இருப்பான்; லேவியின் சந்ததியாராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள் என்றான்.
\s5
\v 8 பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் சந்ததியாரே, கேளுங்கள்;
\v 9 கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம் அருகில் சேரச்செய்யும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும்,
\v 10 அவர் உன்னையும் உன்னோடு லேவியின் சந்ததியாராகிய உன்னுடைய எல்லாச் சகோதரனையும் சேரச்செய்ததும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?
\v 11 இதற்காக நீயும் உன்னுடைய கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு விரோதமாகவே கூட்டம்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் யார் என்றான்.
\s5
\v 12 பின்பு மோசே எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை;
\v 13 இந்த வனாந்திரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களைக் கொண்டு வந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் அதிகாரமும் செய்யப்பார்கிறாயோ?
\v 14 மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சைத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதர்களுடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை என்றார்கள்.
\s5
\v 15 அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்தும் காணிக்கையை அங்கிகரியாமல் இருப்பீராக; நான் அவர்களிடம் ஒரு கழுதையை கூட எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு தீங்கு செய்யவும் இல்லை என்றான்.
\v 16 பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன்னுடைய கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.
\v 17 உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபகலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்.
\s5
\v 18 அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள்.
\v 19 அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.
\s5
\v 20 கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி:
\v 21 இந்தச் சபையை விட்டுப் பிரிந்து போங்கள்; ஒரு நிமிடத்திலே அவர்களை அழித்துப்போடுவேன் என்றார்.
\v 22 அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபம்கொள்வீரோ என்றார்கள்.
\s5
\v 23 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 24 கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார்.
\s5
\v 25 உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடம் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள்.
\v 26 அவன் சபையாரை நோக்கி: இந்தப் பொல்லாத மனிதர்களின் எல்லா பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடி, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாமலிருங்கள் என்றான்.
\v 27 அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தைவிட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்களுடைய மனைவிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்களுடைய கூடாரவாசலிலே நின்றார்கள்.
\s5
\v 28 அப்பொழுது மோசே: இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என்னுடைய மனதின்படியே செய்யவில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால்,
\v 29 எல்லா மனிதர்களும் சாகிறபடி இவர்கள் செத்து, எல்லா மனிதர்களுக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.
\v 30 கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்றான்.
\s5
\v 31 அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது;
\v 32 பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் அவர்களுடைய வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதர்களையும், அவர்களுக்கு உண்டான எல்லா பொருள்களையும் விழுங்கியது.
\s5
\v 33 அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.
\v 34 அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர்கள் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள்.
\v 35 அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப் போட்டது.
\s5
\v 36 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 37 அக்கினிக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமானது.
\v 38 தங்களுடைய ஆத்துமாக்களுக்கே கேடு உண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடும் தட்டையான தகடுகளாக அடிக்கவேண்டும்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததால் அவைகள் பரிசுத்தமானது; அவைகள் இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்றார்.
\s5
\v 39 அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து,
\v 40 ஆரோனின் சந்ததியாக இல்லாத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடியும், கோராகைப்போலவும் அவனுடைய கூட்டத்தாரைப்போலவும் இல்லாதபடியும், இஸ்ரவேல் மக்களுக்கு நினைவுப்பொருளாக இருக்கும்படியாக, கர்த்தர் மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.
\s5
\v 41 மறுநாளில் இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் கர்த்தரின் மக்களைக் கொன்று போட்டீர்கள் என்றார்கள்.
\v 42 சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்திற்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, கர்த்தரின் மகிமை காணப்பட்டது.
\v 43 மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக வந்தார்கள்;
\s5
\v 44 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 45 இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிடத்தில் அவர்களை அழிப்பேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.
\v 46 மோசே ஆரோனை நோக்கி: நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாகச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது. வாதை துவங்கியது என்றான்.
\s5
\v 47 மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; மக்களுக்குள்ளே வாதை துவங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து,
\v 48 செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது.
\s5
\v 49 கோராகின் காரியத்தினால் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினான்காயிரத்து எழுநூறுபேர்.
\v 50 வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு மோசேயினிடம் திரும்பிவந்தான்.
\s5
\c 17
\cl அத்தியாயம்– 17
\s1 ஆரோனின் கோல் துளிர்த்தல்
\p
\v 1 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நீ இஸ்ரவேல் மக்களோடு பேசி, அவர்களுடைய பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பெயரை எழுது.
\s5
\v 3 லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பெயரை எழுதவேண்டும்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும்.
\v 4 அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் இடமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கவேண்டும்.
\v 5 அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் மக்கள் உங்களுக்கு விரோதமாக முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியச்செய்வேன் என்றார்.
\s5
\v 6 இதை மோசே இஸ்ரவேல் மக்களோடு சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லோரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒவ்வொரு பிரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது.
\v 7 அந்தக் கோல்களை மோசே சாட்சியின் கூடாரத்திலே கர்த்தருடைய சமுகத்தில் வைத்தான்.
\s5
\v 8 மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்திற்குள் நுழைந்தபோது, இதோ, லேவியின் குடுப்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது.
\v 9 அப்பொழுது மோசே கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்.
\s5
\v 10 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரர்களுக்கு விரோதமான அடையாளமாவதற்காக, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டு போய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாக முறுமுறுப்பதை ஒழியச்செய்வாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார்.
\v 11 கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
\s5
\v 12 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லோரும் அழிந்துபோகிறோம்.
\v 13 கர்த்தரின் வாசஸ்தலத்தின் அருகில் வருகிற எவனும் சாகிறான்; நாங்கள் எல்லோரும் சாகத்தான் வேண்டுமோ என்றார்கள்.
\s5
\c 18
\cl அத்தியாயம்– 18
\s1 ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் பணிகள்
\p
\v 1 பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னுடன் உன்னுடைய மகன்களும் உன்னுடைய தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னுடன் உன்னுடைய மகன்களும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்க வேண்டும்.
\v 2 உன்னுடைய தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன்னுடைய சகோதரர்களையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன்னுடைய மகன்களுமோ சாட்சியின் கூடாரத்திற்குமுன்பு ஊழியம் செய்யவேண்டும்.
\s5
\v 3 அவர்கள் உன்னுடைய காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கவேண்டும்; ஆனாலும் அவர்களும் நீங்களும் சாகாதபடி, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிப்பொருட்களின் அருகிலும் பலிபீடத்தின் அருகிலும் சேராமல்,
\v 4 உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்தின் எல்லா வேலையையும் செய்ய, ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக் காக்கவேண்டும்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது.
\v 5 இஸ்ரவேல் மக்கள்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடி, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கவேண்டும்.
\s5
\v 6 ஆசரிப்புக்கூடாரத்தின் வேலையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரர்களாகிய லேவியர்களை நான் இஸ்ரவேல் சந்ததியாரிலிருந்து பிரித்து, உங்களுக்கு பரிசாகக் கொடுத்தேன்.
\v 7 ஆகையால் நீயும் உன்னோடேகூட உன்னுடைய மகன்களும் பலிபீடத்திற்கும் திரைக்கு உட்புறத்திற்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்வதற்காக, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கவேண்டும்; உங்களுடைய ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு பரிசாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலை செய்யப்படவேண்டும் என்றார்.
\s1 ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் காணிக்கை
\p
\s5
\v 8 பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: இஸ்ரவேல் மக்கள் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப்படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக் கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினால் அவைகளை உனக்கும் உன் மகன்களுக்கும் நிரந்தர கட்டளையாகக் கொடுத்தேன்.
\v 9 மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாக இருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லா உணவுபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் பரிசுத்தமாக இருக்கும்.
\s5
\v 10 பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைச் சாப்பிடவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைச் சாப்பிடலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாக இருப்பதாக.
\v 11 இஸ்ரவேல் மக்கள் ஏறெடுத்துப்படைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாக இருக்கும்; அவைகளை உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் உன்னுடைய மகள்களுக்கும் நிரந்தர பங்காகக் கொடுத்தேன்; உன்னுடைய வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லோரும் அவைகளைச் சாப்பிடலாம்.
\s5
\v 12 அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய சிறந்த எண்ணெயையும், சிறந்த திராட்சைரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.
\v 13 தங்களுடைய தேசத்தில் முதற் பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன்னுடைய வீட்டிலே சுத்தமாக இருப்பவர்கள் யாவரும் அவைகளைச் சாப்பிடலாம்.
\s5
\v 14 இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாக இருக்கும்.
\v 15 மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எல்லா மிருகங்களுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாக இருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை கொல்லப்படாத நியமத்தின்படி மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.
\v 16 மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதானால், உன்னுடைய மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது கேரா.
\s5
\v 17 மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.
\v 18 அசைவாட்டும் மார்க்கண்டத்தைப்போலவும் வலது முன்னந்தொடையைப்போலவும் அவைகளின் இறைச்சியும் உன்னுடையதாகும்.
\s5
\v 19 இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் உன்னுடைய மகள்களுக்கும் நிரந்தர கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன்னுடைய சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.
\v 20 பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் மக்கள் நடுவில் நானே உன்னுடைய பங்கும் உன்னுடைய சுதந்தரமுமாக இருக்கிறேன்.
\s5
\v 21 இதோ, லேவியின் சந்ததி ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
\v 22 இஸ்ரவேல் மக்கள் குற்றஞ்சுமந்து சாகாதபடி, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் அருகில் வராமலிருக்க வேண்டும்.
\s5
\v 23 லேவியர்கள் மட்டும் ஆசரிப்புக் கூடாரத்தைச்சேர்ந்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் மக்கள் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்களுடைய தலைமுறைதோறும் நிரந்தர கட்டளையாக இருக்கும்.
\v 24 இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்.
\s5
\v 25 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 26 நீ லேவியரோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்கள் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது. தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
\v 27 நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.
\s5
\v 28 இப்படியே நீங்கள் இஸ்ரவேல் மக்கள் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்களுடைய பங்குகளிலெல்லாம் நீங்களும் கர்த்தருக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும்.
\v 29 உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள சிறந்த பரிசுத்த பங்கையெல்லாம் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
\s5
\v 30 ஆதலால் நீ அவர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் சிறந்ததை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச்செலுத்துகிறதுபோல லேவியர்களுக்கு எண்ணப்படும்.
\v 31 அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் சாப்பிடலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்.
\v 32 இப்படி அதில் சிறந்ததை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதற்காக பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படி, இஸ்ரவேல் மக்களின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தக்கூடாது என்று சொல் என்றார்.
\s5
\c 19
\cl அத்தியாயம்– 19
\s1 சுத்திகரிக்கும் தண்ணீர்
\p
\v 1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
\v 2 கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு பயன்படுத்தாதுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லுங்கள்.
\s5
\v 3 அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் முகாமிற்கு வெளியே கொண்டுபோகவேண்டும்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது.
\v 4 அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன்னுடைய விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராக ஏழுதரம் தெளிக்கவேண்டும்.
\v 5 பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் இறைச்சியும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும்.
\v 6 அப்பொழுது ஆசாரியன் கேதுருக்கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடவேண்டும்.
\s5
\v 7 பின்பு ஆசாரியன் தன்னுடைய ஆடைகளைத் தோய்த்து, தண்ணீரிலே குளித்து, அதின்பின்பு முகாமில் நுழையவேண்டும்; ஆசாரியன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
\v 8 அதைச் சுட்டெரித்தவனும் தன்னுடைய ஆடைகளை தண்ணீரில் தோய்த்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
\s5
\v 9 சுத்தமாக இருக்கிற ஒருவன் அந்தக்கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, முகாமிற்கு வெளியே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கவேண்டும்; அது இஸ்ரவேல் மக்களின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் தண்ணீருக்கென்று பாதுகாத்து வைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும்.
\v 10 கிடாரியின் சாம்பலை வாரினவன் தன்னுடைய ஆடைகளைத் துவைக்கவேண்டும்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் மக்களுக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாக இருப்பதாக.
\s5
\v 11 இறந்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாட்கள் தீட்டுப்பட்டிருப்பான்.
\v 12 அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிக்கும் தண்ணீரினால் தன்னைச் சுத்திகரிக்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாவான்; மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திகரிக்காமல் இருந்தால் சுத்தமாகமாட்டான்.
\v 13 செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இல்லாமல் அழிந்துபோவான்; தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவனுடைய தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்.
\s5
\v 14 கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதைச்சேர்ந்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் நுழைகிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாட்கள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.
\v 15 மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும்.
\v 16 வெளியிலே பட்டயத்தால் வெட்டபட்டவனையோ, செத்தவனையோ, மனித எலும்பையோ, பிரேதக்குழியையோ, தொட்டவன் எவனும் ஏழுநாட்கள் தீட்டுப்பட்டிருப்பான்.
\s5
\v 17 ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று தண்ணீர் ஊற்றவேண்டும்.
\v 18 சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த தண்ணீரிலே நனைத்து, கூடாரத்தின்மேலும் அதிலுள்ள எல்லா பணிப்பொருட்களின்மேலும் அங்கேயிருக்கிற மக்களின்மேலும் தெளிக்கிறதும் இல்லாமல், எலும்பையோ வெட்டப்பட்டவனையோ செத்தவனையோ பிரேதக்குழியையோ தொட்டவன்மேலும் தெளிக்கவேண்டும்.
\v 19 சுத்தமாக இருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன்னுடைய ஆடைகளைத் தோய்த்து, தண்ணீரில் குளித்து, மாலையிலே சுத்தமாக இருப்பான்.
\s5
\v 20 தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாமல் இருந்தால், அவன் சபையில் இல்லாதபடி அழிந்துபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான்.
\v 21 தீட்டுக்கழிக்கும் தண்ணீரைத் தெளிக்கிறவனும் தன்னுடைய ஆடைகளைத் துவைக்கவேண்டும்; தீட்டுக்கழிக்கும் தண்ணீரைத் தொட்டவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
\v 22 தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும் என்றார்.
\s5
\c 20
\cl அத்தியாயம்– 20
\s1 கன்மலையிலிருந்து தண்ணீர்
\p
\v 1 இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்திரத்திலே சேர்ந்து, மக்கள் காதேசிலே தங்கியிருக்கும்போது, மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்செய்யப்பட்டாள்.
\s5
\v 2 மக்களுக்குத் தண்ணீர் இல்லாமல் இருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டம்கூடினார்கள்.
\v 3 மக்கள் மோசேயோடு வாக்குவாதம்செய்து: எங்களுடைய சகோதரர்கள் கர்த்தருடைய சந்நிதியில் இறந்தபோது நாங்களும் இறந்துபோயிருந்தால் நலமாக இருக்கும்.
\s5
\v 4 நாங்களும் எங்களுடைய மிருகங்களும் இங்கே இறக்கும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்திரத்திலே கொண்டு வந்தது என்ன;
\v 5 விதைப்பும், அத்திமரமும், திராட்சைச்செடியும், மாதுளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தது ஏன் என்றார்கள்.
\s5
\v 6 அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.
\s5
\v 7 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 8 நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன்னுடைய சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்து, சபையாருக்கும் அவர்களுடைய மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.
\v 9 அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான்.
\s5
\v 10 மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படச்செய்வோமோ என்று சொல்லி,
\v 11 தன்னுடைய கையை ஓங்கி, கன்மலையைத் தன்னுடைய கோலினால் இரண்டுமுறை அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாகப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.
\s5
\v 12 பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் மக்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்செய்யும்படி, நீங்கள் என்னை விசுவாசிக்காமல் போனதால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.
\v 13 இங்கே இஸ்ரவேல் மக்கள் கர்த்தரோடு வாக்குவாதம் செய்ததினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.
\s1 ஏதோம் இஸ்ரவேலர்களுக்கு அனுமதி மறுத்தல்
\p
\s5
\v 14 பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி:
\v 15 எங்களுடைய பிதாக்கள் எகிப்திற்குப் போனதும், நாங்கள் எகிப்திலே நெடுநாட்கள் வாசம்செய்ததும், எகிப்தியர்கள் எங்களையும் எங்களுடைய பிதாக்களையும் உபத்திரவப்படுத்தினதும், இவைகளினால் எங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தமும் உமக்குத் தெரிந்திருக்கிறது.
\v 16 கர்த்தரை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம்.
\s5
\v 17 நாங்கள் உமது தேசத்தின் வழியாகக் கடந்துபோகும்படி அனுமதி கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சைத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், கிணறுகளின் தண்ணீரைக் குடிக்காமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகும்வரை, வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் இருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 18 அதற்கு ஏதோம்: நீ என்னுடைய தேசத்தின் வழியாகக் கடந்துபோகக்கூடாது; போனால் பட்டயத்தோடு உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான்.
\v 19 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் அவனை நோக்கி: நடப்பான பாதையின் வழியாகப் போவோம்; நாங்களும் எங்களுடைய மிருகங்களும் உன்னுடைய தண்ணீரைக் குடித்தால், அதற்குக் தகுந்த விலைகொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாக மட்டும் கடந்துபோவோம் என்றார்கள்.
\s5
\v 20 அதற்கு அவன்: நீ கடந்துபோகக்கூடாது என்று சொல்லி, கணக்கற்ற மக்களோடும் பலத்த கரங்களோடும், படையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான்.
\v 21 இப்படி ஏதோம் தன்னுடைய எல்லைவழியாகக் கடந்துபோகும்படி இஸ்ரவேலர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர்கள் அவனை விட்டு விலகிப் போனார்கள்.
\s1 ஆரோனின் மரணம்
\p
\s5
\v 22 இஸ்ரவேல் மக்களான சபையார் எல்லோரும் காதேசை விட்டுப் பயணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.
\v 23 ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
\v 24 ஆரோன் தன்னுடைய மக்களோடு சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என்னுடைய வாக்குக்குக் கீழ்ப்படியாமல் போனபடியால், நான் இஸ்ரவேல் மக்களுக்குக்கொடுக்கிற தேசத்தில் அவன் நுழைவதில்லை.
\s5
\v 25 நீ ஆரோனையும் அவனுடைய மகனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறச்செய்து,
\v 26 ஆரோன் உடுத்திருக்கிற ஆடைகளைக் கழற்றி, அவைகளை அவனுடைய மகனாகிய எலெயாசாருக்கு உடுத்து; ஆரோன் அங்கே மரித்து, தன்னுடைய மக்களோடு சேர்க்கப்படுவான் என்றார்.
\s5
\v 27 கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லோரும் பார்க்க, அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள்.
\v 28 அங்கே ஆரோன் உடுத்தியிருந்த ஆடைகளை மோசே கழற்றி, அவைகளை அவனுடைய மகனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே இறந்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள்.
\v 29 ஆரோன் இறந்துப்போனான் என்பதைச் சபையார் எல்லோரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் ஆரோனுக்காக முப்பது நாட்கள் துக்கம்கொண்டாடினார்கள்.
\s5
\c 21
\cl அத்தியாயம்– 21
\s1 ஆராத் அழிக்கப்படுதல்
\p
\v 1 வேவுகாரர்கள் காண்பித்த வழியாக இஸ்ரவேலர்கள் வருகிறார்கள் என்று தெற்கே வாழ்கிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலர்களுக்கு எதிராக யுத்தம் செய்து, அவர்களில் சிலரைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.
\v 2 அப்பொழுது இஸ்ரவேலர்கள் கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த மக்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் அழிப்போம் என்று சபதம் செய்தார்கள்.
\v 3 கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியர்களை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்களுடைய பட்டணங்களையும் அழித்து, அந்த இடத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டார்கள்.
\s1 வெண்கல பாம்பு
\p
\s5
\v 4 அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படி, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாகப் பயணம்செய்தார்கள்; வழிப்பயணத்தின் காரணமாக மக்கள் மனவேதனையடைந்தார்கள்.
\v 5 மக்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்திரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்தது ஏன்? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்களுடைய மனதிற்கு வெறுப்பாக இருக்கிறது என்றார்கள்.
\s5
\v 6 அப்பொழுது கர்த்தர் விஷமுள்ள பாம்புகளை மக்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் மக்களைக் கடித்ததினால் இஸ்ரவேலர்களுக்குள்ளே அநேக மக்கள் இறந்தார்கள்.
\v 7 அதினால் மக்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாகப் பேசினதினால் பாவம்செய்தோம்; பாம்புகள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்யவேண்டும் என்றார்கள்; மோசே மக்களுக்காக விண்ணப்பம்செய்தான்.
\s5
\v 8 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு விஷமுள்ள பாம்பின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.
\v 9 அப்படியே மோசே ஒரு வெண்கலப்பாம்பை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; பாம்பு ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலப்பாம்பை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.
\s1 மோவாபுக்கு பயணம்
\p
\s5
\v 10 இஸ்ரவேல் மக்கள் பயணப்பட்டுப்போய், ஓபோத்தில் முகாமிட்டார்கள்.
\v 11 ஓபோத்திலிருந்து பயணம் செய்து, கிழக்குதிசைக்கு நேராக மோவாபுக்கு எதிரான வனாந்திரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் முகாமிட்டார்கள்.
\s5
\v 12 அங்கேயிருந்து பயணப்பட்டுப் போய், சாரேத் பள்ளத்தாக்கிலே முகாமிட்டார்கள்.
\v 13 அங்கேயிருந்து பயணப்பட்டுப் போய், எமோரியர்களின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்திரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இந்தப்பக்கம் முகாமிட்டார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியர்களுக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை.
\s5
\v 14 அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,
\v 15 ஆர் என்னும் இடத்திற்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
\s5
\v 16 அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; மக்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.
\s5
\v 17 அப்பொழுது இஸ்ரவேலர்கள் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள்.
\v 18 நியாயப்பிரமாணத் தலைவனின் தூண்டுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; மக்களின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள்.
\s5
\v 19 அந்த வனாந்திரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்திற்கும்,
\v 20 பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.
\s1 சீகோனையும் ஓகையும் தோற்கடித்தல்
\p
\s5
\v 21 அப்பொழுது இஸ்ரவேலர்கள் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனிடத்தில் தூதுவர்களை அனுப்பி:
\v 22 உமது தேசத்தின் வழியாகக் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; நாங்கள் வயல்களிலும், திராட்சைத்தோட்டங்களிலும் போகாமலும், கிணறுகளின் தண்ணீரைக் குடிக்காமலும், உமது எல்லையைக் கடந்துபோகும்வரை ராஜபாதையில் நடந்துபோவோம் என்று சொல்லச்சொன்னார்கள்.
\v 23 சீகோன் தன்னுடைய எல்லை வழியாகக் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன்னுடைய மக்கள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலர்களுக்கு எதிராக வனாந்திரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான்.
\s5
\v 24 இஸ்ரவேலர்கள் அவனைப் பட்டயக்கூர்மையினால் வெட்டி, அர்னோன் துவங்கி அம்மோன் மக்களின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்கும் உள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் மக்களின் எல்லை பாதுகாப்பானதாக இருந்தது.
\v 25 இஸ்ரவேலர்கள் அந்தப் பட்டணங்கள் யாவையும் பிடித்து, எஸ்போனிலும் அதைச் சார்ந்த எல்லாக் கிராமங்களிலும் எமோரியர்களுடைய எல்லாப் பட்டணங்களிலும் குடியிருந்தார்கள்.
\v 26 எஸ்போனானது எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாக இருந்தது; அவன் மோவாபியர்களின் முந்தின ராஜாவுக்கு எதிராக யுத்தம்செய்து, அர்னோன் வரைக்கும் இருந்த அவனுடைய தேசத்தையெல்லாம் அவனுடைய கையிலிருந்து பறித்துக்கொண்டான்.
\s5
\v 27 அதினாலே நீதிமொழியை பேசுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் உறுதியாகக் கட்டப்படட்டும்.
\v 28 எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜூவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவன்மார்களையும் எரித்தது.
\s5
\v 29 ஐயோ, மோவாபே, கேமோஷ் தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன்னுடைய மகன்களையும் தன்னுடைய மகள்களையும் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக ஒப்புக்கொடுத்தான்.
\v 30 அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம் தீபோன் ஊர்வரைக்கும் அழிந்தது; மேதோபாவுக்குச் அருகான நோப்பா பட்டணம்வரை அவர்களைப் பாழாக்கினோம் என்று பாடினார்கள்.
\s5
\v 31 இஸ்ரவேலர்கள் இப்படியே எமோரியர்களின் தேசத்திலே குடியிருந்தார்கள்.
\v 32 பின்பு, மோசே யாசேர் பட்டணத்திற்கு வேவுபார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கைப்பற்றி, அங்கே இருந்த எமோரியர்களைத் துரத்திவிட்டார்கள்.
\s5
\v 33 பின்பு பாசானுக்குப் போகிற வழியாகத் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசான் ராஜாவாகிய ஓக் என்பவன் தன்னுடைய எல்லா மக்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்செய்யும்படி, எத்ரேயுக்குப் புறப்பட்டு வந்தான்.
\v 34 கர்த்தர் மோசேயை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய மக்கள் எல்லோரையும், அவனுடைய தேசத்தையும் உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார்.
\v 35 அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாக இல்லாதபடி அவனையும், அவனுடைய மகன்களையும், அவனுடைய எல்லா மக்களையும் வெட்டிப்போட்டு, அவனுடைய தேசத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள்.
\s5
\c 22
\cl அத்தியாயம்– 22
\s1 பாலாக் பிலேயாமை அழைத்தல்
\p
\v 1 பின்பு இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்து, எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமவெளிகளில் முகாமிட்டார்கள்.
\s5
\v 2 இஸ்ரவேலர்கள் எமோரியர்களுக்குச் செய்த யாவையும் சிப்போரின் மகனாகிய பாலாக் கண்டான்.
\v 3 மக்கள் ஏராளமாக இருந்தபடியால், மோவாப் மிகவும் பயந்து, இஸ்ரவேல் மக்களினால் கலக்கமடைந்து,
\v 4 மீதியானியர்களின் மூப்பர்களை நோக்கி: மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாவற்றையும் மேய்ந்துபோடும் என்றான். அக்காலத்திலே சிப்போரின் மகனாகிய பாலாக் மோவாபியர்களுக்கு ராஜாவாக இருந்தான்.
\s5
\v 5 அவன் பேயோரின் மகனாகிய பிலேயாமை அழைத்துவரும்படி, தன்னுடைய சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பெத்தூருக்கு தூதுவர்களை அனுப்பி: எகிப்திலிருந்து ஒரு மக்கள்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள்.
\v 6 அவர்கள் என்னைவிட பலவான்கள்; இருந்தாலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால் நீர் வந்து, எனக்காக அந்த மக்களை சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறியடித்து, அவர்களை இந்த தேசத்திலிருந்து துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 7 அப்படியே மோவாபின் மூப்பர்களும் மீதியானின் மூப்பர்களும் குறிசொல்லுதலுக்கு உரிய கூலியைத் தங்களுடைய கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமிடத்தில் போய், பாலாகின் வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள்.
\v 8 அவன் அவர்களை நோக்கி: இரவு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள்.
\s5
\v 9 தேவன் பிலேயாமிடத்தில் வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர்கள் யார் என்றார்.
\v 10 பிலேயாம் தேவனை நோக்கி: சிப்போரின் மகனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்திற்கு அனுப்பி:
\v 11 பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு மக்கள்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடு யுத்தம்செய்து, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான் என்றான்.
\s5
\v 12 அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடு போகவேண்டாம்; அந்த மக்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.
\v 13 பிலேயாம் காலையில் எழுந்து, பாலாகின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்களுடைய தேசத்திற்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடு வருவதற்குக் கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்கமாட்டோம் என்கிறார் என்று சொன்னான்.
\v 14 அப்படியே மோவாபியர்களுடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகிடம் போய்: பிலேயாம் எங்களோடு வரமாட்டேன் என்று சொன்னான் என்றார்கள்.
\s5
\v 15 பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான்.
\v 16 அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் மகனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருவதற்குத் தடைபடவேண்டாம்;
\v 17 உம்மை மிகவும் மரியாதைசெய்வேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த மக்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார் என்றார்கள்.
\s5
\v 18 பிலேயாம் பாலாகின் ஊழியக்காரர்களுக்கு மறுமொழியாக: பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்வதற்காக, என்னுடைய தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக்கூடாது.
\v 19 ஆனாலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படி, நீங்களும் இந்த இரவு இங்கே தங்கியிருங்கள் என்றான்.
\v 20 இரவிலே தேவன் பிலேயாமிடம் வந்து; அந்த மனிதர்கள் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடு கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமட்டும் நீ செய்யவேண்டும் என்றார்.
\s1 பிலேயாமின் கழுதை
\p
\s5
\v 21 பிலேயாம் காலையில் எழுந்து, தன்னுடைய கழுதையின்மேல் சேணங்கட்டி மோவாபின் பிரபுக்களோடு கூடப் போனான்.
\v 22 அவன் போவதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன்னுடைய கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவனுடைய வேலைக்காரர்கள் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.
\v 23 கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போனது; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.
\s5
\v 24 கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சைத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.
\v 25 கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஒரமாக ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடு நெருக்கியது; திரும்பவும் அதை அடித்தான்.
\s5
\v 26 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.
\v 27 கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் வந்தவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.
\s5
\v 28 உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.
\v 29 அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னை கேலி செய்துகொண்டு வருகிறாய்; என்னுடைய கையில் ஒரு பட்டயம்மட்டும் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.
\v 30 கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாவது நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான்.
\s5
\v 31 அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.
\v 32 கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன்னுடைய கழுதையை இதோடு மூன்றுமுறை அடித்தது ஏன்? உன்னுடைய வழி எனக்கு மாறுபாடாக இருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.
\v 33 கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்றுமுறை எனக்கு விலகியது; எனக்கு விலகாமல் இருந்திருந்தால், இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடு வைப்பேன் என்றார்.
\s5
\v 34 அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவம்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாமலிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது பிரியமில்லாமல் இருந்தால், நான் திரும்பிப்போய்விடுகிறேன் என்றான்.
\v 35 கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதர்களோடு கூடப்போ; நான் உன்னோடு சொல்லும் வார்த்தையை மட்டும் நீ சொல்லவேண்டும் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடு கூடப்போனான்.
\s5
\v 36 பிலேயாம் வருகிறதைப் பாலாக் கேட்டவுடன், கடைசி எல்லையான அர்னோன் நதியின் ஓரத்திலுள்ள மோவாபின் பட்டணம்வரை அவனுக்கு எதிர்கொண்டு போனான்.
\v 37 பாலாக் பிலேயாமை நோக்கி: உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடு உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா? என்னிடத்திற்கு வராமல் இருந்தது ஏன்? ஏற்றபடி உமக்கு நான் மரியாதை செலுத்தமாட்டேனா என்றான்.
\s5
\v 38 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும், ஏதாவது சொல்வதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என்னுடைய வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.
\v 39 பிலேயாம் பாலாகுடனே கூடப்போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள்.
\v 40 அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான்.
\s5
\v 41 மறுநாள் காலையில் பாலாக் பிலேயாமைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பாகாலுடைய மேடுகளில் ஏறச்செய்தான்; அந்த இடத்திலிருந்து பிலேயாம் ஜனத்தின் கடைசி முகாமைப் பார்த்தான்.
\s5
\c 23
\cl அத்தியாயம்– 23
\s1 பிலேயாமின் முதல் தேவ வாக்கு
\p
\v 1 பிலேயாம் பாலாகை நோக்கி: நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும் என்றான்.
\v 2 பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான்; பாலாகும் பிலேயாமும் ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டார்கள்.
\v 3 பின்பு பிலேயாம் பாலாகை நோக்கி: உம்முடைய சர்வாங்கதகனபலி அருகில் நில்லும், நான் போய்வருகிறேன்; கர்த்தர் வந்து என்னைச் சந்திப்பதாக இருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி, ஒரு மேட்டின்மேல் ஏறினான்.
\s5
\v 4 தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம்செய்து, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன் என்றான்.
\v 5 கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப் போய், இந்த விதமாகச் சொல்லவேண்டும் என்றார்.
\v 6 அவனிடம் அவன் திரும்பிப்போனான்; பாலாக் மோவாபுடைய எல்லா பிரபுக்களோடுங்கூட தன்னுடைய சர்வாங்கதகனபலி அருகிலே நின்று கொண்டிருந்தான்.
\s5
\v 7 அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும் என்று சொன்னான்.
\v 8 தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?
\s5
\v 9 உயரமான மலையிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த மக்கள் தேசத்தோடு கலக்காமல் தனியே வாழ்வார்கள்.
\s5
\v 10 யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என்னுடைய முடிவு அவனுடைய முடிவுபோல் இருப்பதாக என்றான்.
\s5
\v 11 அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்ன செய்தீர்; என்னுடைய எதிரிகளைச் சபிக்கும்படி உம்மை அழைத்து வந்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்.
\v 12 அதற்கு அவன்: கர்த்தர் என்னுடைய வாயில் அருளினதையே சொல்வது என்னுடைய கடமையல்லவா என்றான்.
\s1 பிலேயாமின் இரண்டாவது தேவ வாக்கு
\p
\s5
\v 13 பின்பு பாலாக் அவனை நோக்கி: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடுகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லோரையும் பாரக்காமல், அவர்களுடைய கடைசி முகாமை மட்டும் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லி,
\v 14 அவனைப் பிஸ்காவின் உச்சியில் இருக்கிற சோப்பீமின் வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.
\v 15 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்கதகனபலி அருகில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.
\s5
\v 16 கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவனுடைய வாயிலே வசனத்தை அருளி; நீ பாலாகினிடம் திரும்பிப்போய், இந்த விதமாகச் சொல்லவேண்டும் என்றார்.
\v 17 அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலி அருகிலே நின்று கொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.
\v 18 அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் மகனே, எனக்குச் செவிகொடும்.
\s5
\v 19 பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா? அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா?
\v 20 இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.
\s5
\v 21 அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடு இருக்கிறார்; ராஜாவின் வெற்றியின் கெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.
\v 22 தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; காண்டாமிருகத்துக்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு.
\s5
\v 23 யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.
\s5
\v 24 அந்த மக்கள் கொடிய சிங்கம்போல எழும்பும், இளம்சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைச் சாப்பிட்டு, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்கும்வரை படுத்துக்கொள்வதில்லை என்றான்.
\s5
\v 25 அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்றான்.
\v 26 அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடு நான் சொல்லவில்லையா என்றான்.
\s1 பிலேயாமின் மூன்றாவது தேவ வாக்கு
\p
\v 27 அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கே இருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாக இருக்கும் என்று சொல்லி,
\s5
\v 28 அவனை எஷிமோனுக்கு எதிராக இருக்கிற பேயோரின் உச்சிக்கு அழைத்துக்கொண்டு போனான்.
\v 29 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஆயத்தம்செய்யும் என்றான்.
\v 30 பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.
\s5
\c 24
\cl அத்தியாயம்– 24
\p
\v 1 இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் பார்த்தபோது, அவன் முந்திச் செய்து வந்ததுபோல கர்த்தரைப் பார்க்கப் போகாமல், வனாந்திரத்திற்கு நேராகத் தன்னுடைய முகத்தைத் திருப்பி,
\s5
\v 2 தன்னுடைய கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன்னுடைய கோத்திரங்களின்படியே முகாமிட்டிருக்கிறதைப் பார்த்தான்; தேவஆவி அவன்மேல் வந்தது.
\v 3 அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
\s5
\v 4 தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது,
\v 5 யாக்கோபே, உன்னுடைய கூடாரங்களும், இஸ்ரவேலே, உன்னுடைய தங்குமிடங்களும் எவ்வளவு அழகானவைகள்!
\s5
\v 6 அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு மரங்களைப்போலவும் இருக்கிறது.
\s5
\v 7 அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் விதை திரளான தண்ணீர்களில் பரவும்; அவர்களுடைய ராஜா ஆகாகை விட உயருவான்; அவர்களுடைய ராஜ்ஜியம் மேன்மையடையும்.
\s5
\v 8 தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; காண்டாமிருகத்துக்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்களுடைய எதிரிகளாகிய தேசத்தை தின்று, அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்களுடைய அம்புகளாலே எய்வார்கள்.
\s5
\v 9 சிங்கம்போலவும் கொடிய சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.
\s5
\v 10 அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் வந்தவனாகி, கையோடு கைதட்டி, பிலேயாமை நோக்கி: என்னுடைய எதிரிகளைச் சபிக்க உன்னை அழைத்து வந்தேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.
\v 11 ஆகையால் உன்னுடைய இடத்திற்கு ஓடிப்போ; உன்னை மிகவும் மேன்மைப்படுத்துவேன் என்றேன்; நீ மேன்மை அடையாதபடி கர்த்தர் தடுத்தார் என்றான்.
\s5
\v 12 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என்னுடைய மனதாக நன்மையையோ தீமையையோ செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக்கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,
\v 13 நீர் என்னிடத்திற்கு அனுப்பின தூதுவர்களிடத்தில் நான் சொல்லவில்லையா?
\v 14 இதோ, நான் என்னுடைய மக்களிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த மக்கள் உம்முடைய மக்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும் என்று சொல்லி,
\s1 பிலேயாமின் நான்காவது தேவ வாக்கு
\p
\s5
\v 15 அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் மகன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
\v 16 தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது;
\s5
\v 17 அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், அருகாமையில்அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்சந்ததி எல்லோரையும் நிர்மூலமாக்கும்.
\s5
\v 18 ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன்னுடைய எதிரிகளுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமம்செய்யும்.
\v 19 யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான்.
\s1 பிலேயாமின் கடைசி தேவ வாக்கு
\p
\s5
\v 20 மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவில் முற்றிலும் நாசமாவான் என்றான்.
\s5
\v 21 அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: உன்னுடைய தங்குமிடம் பாதுகாப்பானது; உன்னுடைய கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
\v 22 ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனை நாட்கள் ஆகும் என்றான்.
\s5
\v 23 பின்னும் அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்;
\v 24 சித்தீமின் கடல் துறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான்.
\v 25 பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன்னுடைய வழியே போனான்.
\s5
\c 25
\cl அத்தியாயம்– 25
\s1 இஸ்ரவேல் மோவாபியபெண்களோடு விபசாரம் செய்தல்
\p
\v 1 இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கும்போது, மக்கள் மோவாபின் மகள்களோடு விபசாரம் செய்யத்துவங்கினார்கள்.
\v 2 அவர்கள் தங்களுடைய தெய்வங்களுக்கு செலுத்திய பலிகளை விருந்துண்ணும்படி மக்களை அழைத்தார்கள்; மக்கள் போய் சாப்பிட்டு, அவர்கள் தெய்வங்களைப் பணிந்துகொண்டார்கள்.
\v 3 இப்படி இஸ்ரவேலர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்கள்மேல் கர்த்தருடைய கோபம் வந்தது.
\s5
\v 4 கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கடுமையான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ மக்களின் தலைவர் எல்லோரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரிய வெளிச்சத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார்.
\v 5 அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்களுடைய மனிதர்களைக் கொன்றுபோடுங்கள் என்றான்.
\s5
\v 6 அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களாகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரத்தின்வாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கும்போது, அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் மக்களில் ஒருவன் ஒரு மீதியானிய பெண்ணைத் தன்னுடைய சகோதரர்களிடம் அழைத்துக்கொண்டுவந்தான்.
\v 7 அதை ஆசாரியனாகிய ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் பார்த்தபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன்னுடைய கையிலே பிடித்து,
\s5
\v 8 இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் விபசாரம்செய்யும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த பெண்ணுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி வெளியே போகுமளவுக்கு அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் மக்களில் உண்டான வாதை நின்றுபோயிற்று.
\v 9 அந்த வாதையால் இறந்தவர்கள் இருபத்துநான்காயிரம்பேர்.
\s5
\v 10 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 11 நான் என்னுடைய எரிச்சலில் இஸ்ரவேல் மக்களை அழிக்காதபடி, ஆசாரியனாகிய ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், எனக்காக அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் மக்கள்மேல் உண்டான என்னுடைய கடும்கோபத்தை திருப்பினான்.
\s5
\v 12 ஆகையால், இதோ, அவனுக்கு என்னுடைய சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்.
\v 13 அவன் தன்னுடைய தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நிரந்தர ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.
\s5
\v 14 மீதியானிய பெண்ணோடு குத்தப்பட்டு இறந்த இஸ்ரவேல் மனிதனுடைய பெயர் சிம்ரி; அவன் சல்லூவின் மகனும், சிமியோனியர்களின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவாகவும் இருந்தான்.
\v 15 குத்துண்ட மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி, அவள் சூரின் மகள், அவன் மீதியானியர்களுடைய தகப்பன் வம்சத்தாரான மக்களுக்குத் தலைவனாக இருந்தான்.
\s5
\v 16 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 17 மீதியானியர்களை வீழ்த்தி அவர்களை வெட்டிப்போடுங்கள்.
\v 18 பேயோரின் காரியத்திலும் பேயோரினால் வாதை உண்டான நாளிலே குத்துண்ட அவர்களுடைய சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய மகளின் காரியத்திலும், அவர்கள் உங்களுக்குச் செய்த துரோகங்களினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார்.
\s5
\c 26
\cl அத்தியாயம்– 26
\s1 இரண்டாவது கணக்கெடுப்பு
\p
\v 1 அந்த வாதை தீர்ந்தபின்பு, கர்த்தர் மோசேயையும் ஆரோனின் மகனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி:
\v 2 இஸ்ரவேல் மக்களின் எல்லா சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் எண்ணுங்கள் என்றார்.
\s5
\v 3 அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு அருகிலே மோவாபின் சமவெளிகளிலே அவர்களோடு பேசி:
\v 4 கர்த்தர் மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயது முதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள்.
\s5
\v 5 ரூபன் இஸ்ரவேலின் மூத்த மகன்: ரூபனுடைய மகன்கள், ஆனோக்கியர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான ஆனோக்கும், பல்லூவியர்கள் குடும்பத்திற்குத் தகப்பனான பல்லூவும்,
\v 6 எஸ்ரோனியர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான எஸ்ரோனும், கர்மீயர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான கர்மீயுமே.
\v 7 இவைகளே ரூபனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பதுபேர்.
\s5
\v 8 பல்லூவின் மகன் எலியாப்.
\v 9 எலியாபின் மகன்கள் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பெயர்பெற்றவர்களாக இருந்து, கர்த்தருக்கு எதிராகப் போராட்டம்செய்து, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக விவாதம்செய்தவர்கள்.
\s5
\v 10 பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பதுபேரைப் எரித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.
\v 11 கோராகின் மகன்களோ சாகவில்லை.
\s5
\v 12 சிமியோனுடைய மகன்களின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியான நேமுவேலர்களின் குடும்பமும், யாமினியின் சந்ததியான, யாமினியர்களின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியர்களின் குடும்பமும்,
\v 13 சேராகின் சந்ததியான சேராகியர்களின் குடும்பமும், சவுலின் சந்ததியான சவுலியர்களின் குடும்பமுமே.
\v 14 இவைகளே சிமியோனியர்களின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்திரெண்டாயிரத்து இருநூறுபேர்.
\s5
\v 15 காத்துடைய மகன்களின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியர்களின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியர்களின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியர்களின் குடும்பமும்,
\v 16 ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியர்களின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியர்களின் குடும்பமும்,
\v 17 ஆரோதின் சந்ததியான ஆரோதியர்களின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியர்களின் குடும்பமுமே.
\v 18 இவைகளே காத் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதாயிரத்து ஐந்நூறுபேர்.
\s5
\v 19 யூதாவின் மகன்கள் ஏர், ஓனான் என்பவர்கள்; ஏரும், ஓனானும் கானான்தேசத்தில் செத்தார்கள்.
\v 20 யூதாவுடைய மற்ற மகன்களின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியர்களின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியர்களின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியர்களின் குடும்பமுமே.
\v 21 பாரேசுடைய மகன்களின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியர்களின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியர்களின் குடும்பமுமே.
\v 22 இவைகளே யூதாவின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
\s5
\v 23 இசக்காருடைய மகன்களின் குடும்பங்களாவன: தோலாவின் சந்ததியான தோலாவியர்களின் குடும்பமும், பூவாவின் சந்ததியான பூவாவியர்களின் குடும்பமும்,
\v 24 யாசூபின் சந்ததியான யாசூபியர்களின் குடும்பமும், சிம்ரோனின் சந்ததியான சிம்ரோனியர்களின் குடும்பமுமே.
\v 25 இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து நான்காயிரத்து முந்நூறுபேர்.
\s5
\v 26 செபுலோனுடைய மகன்களின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சேரேத்தியர்களின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியர்களின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியர்களின் குடும்பமுமே.
\v 27 இவைகளே செபுலோனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறுபேர்.
\s5
\v 28 யோசேப்புடைய மகனான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:
\v 29 மனாசேயினுடைய மகன்களின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியர்களின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியர்களின் குடும்பமும்,
\s5
\v 30 கிலெயாத் பெற்ற ஈயேசேர்களின் சந்ததியான ஈயேசேரியர்களின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியர்களின் குடும்பமும்,
\v 31 அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலர்களின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியர்களின் குடும்பமும்,
\v 32 செமீதாவின் சந்ததியான செமீதாவியர்களின் குடும்பமும், எப்பேரின் சந்ததியான ஏப்பேரியர்களின் குடும்பமுமே.
\s5
\v 33 எப்பேரின் மகனான செலொப்பியாத்திற்கு மகன்கள் இல்லாமல், மகள்கள் மட்டும் இருந்தார்கள்; இவர்கள் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.
\v 34 இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்திரெண்டாயிரத்து எழுநூறுபேர்.
\s5
\v 35 எப்பிராயீமுடைய மகன்களின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியர்களின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியர்களின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியர்களின் குடும்பமும்,
\v 36 சுத்தெலாக் பெற்ற ஏரானின் சந்ததியான ஏரானியர்களின் குடும்பமுமே.
\v 37 இவைகளே எப்பீராயீம் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்திரெண்டாயிரத்து ஐந்நூறுபேர்; இவர்களே யோசேப்பு சந்ததியின் குடும்பங்கள்.
\s5
\v 38 பென்யமீனுடைய மகன்களின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியர்களின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியர்களின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியர்களின் குடும்பமும்,
\v 39 சுப்பாமின் சந்ததியான சுப்பாமியர்களின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியர்களின் குடும்பமும்,
\v 40 பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியர்களின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியர்களின் குடும்பமுமே.
\v 41 இவைகளே பென்யமீன் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தைந்தாயிரத்து அறுநூறுபேர்.
\s5
\v 42 தாணுடைய மகன்களின் குடும்பங்களாவன: சூகாமின் சந்ததியான சூகாமியரின் குடும்பமே; இவைகள் தாணின் குடும்பம்.
\v 43 சூகாமியர்களின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் அறுபத்து நான்காயிரத்து நானூறுபேர்.
\s5
\v 44 ஆசேருடைய மகன்களின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியர்களின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியர்களின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியர்களின் குடும்பமும்,
\v 45 பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியர்களின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியர்களின் குடும்பமுமே.
\v 46 ஆசேருடைய மகளின் பெயர் சாராள்.
\v 47 இவைகளே ஆசேர் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
\s5
\v 48 நப்தலியினுடைய மகன்களின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியான யாத்சியேலியர்களின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியர்களின் குடும்பமும்,
\v 49 எத்செரின் சந்ததியான எத்செரியர்களின் குடும்பமும், சில்லேமின் சந்ததியான சில்லேமியர்களின் குடும்பமுமே.
\v 50 இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தைந்தாயிரத்து நானூறுபேர்.
\s5
\v 51 இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பது பேராக இருந்தார்கள்.
\s5
\v 52 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 53 இவர்களுடைய பேர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி தேசம் இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிடப்படவேண்டும்.
\s5
\v 54 அநேகம்பேருக்கு அதிக சுதந்தரமும் கொஞ்சம்பேருக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுக்கவேண்டும்; அவர்களில் எண்ணப்பட்ட எண்ணிக்கைக்குத் தகுந்தபடி அவரவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும்.
\v 55 ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய பெயர்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளவேண்டும்.
\v 56 அநேகம்பேர்களோ கொஞ்சம்பேர்களோ சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும் என்றார்.
\s5
\v 57 எண்ணப்பட்ட லேவியர்களின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியர்களின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியர்களின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியர்களின் குடும்பமும்;
\v 58 லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயர்களின் குடும்பமும், எப்ரோனியர்களின் குடும்பமும், மகலியர்களின் குடும்பமும், மூசியர்களின் குடும்பமும், கோராகியர்களின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.
\v 59 அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பெயர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த மகள்; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.
\s5
\v 60 ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.
\v 61 நாதாபும் அபியூவும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள்.
\v 62 அவர்களில் ஒரு மாத ஆண்பிள்ளையிலிருந்து எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் சந்ததியின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கைக்கு உட்படவில்லை.
\s5
\v 63 மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகேயிருக்கும் யோர்தானுக்கு அருகிலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் மக்களை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.
\v 64 முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்திரத்தில் இஸ்ரவேல் சந்ததியை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.
\s5
\v 65 வனாந்திரத்தில் நிச்சயமாக சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக் குறித்துச்சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் மகனாகிய காலேபும் நூனின் மகனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாக இருக்கவில்லை.
\s5
\c 27
\cl அத்தியாயம்– 27
\s1 செலோப்பியாத்தின் மகள்கள்
\p
\v 1 யோசேப்பின் மகனாகிய மனாசேயின் குடும்பங்களில், மனாசேயின் மகனாகிய மாகீரின் மகனான கிலெயாத்திற்குப் பிறந்த ஏபேருக்குப் மகனாயிருந்த செலோப்பியாத்தின் மகள்களாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து,
\s5
\v 2 ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று:
\v 3 எங்களுடைய தகப்பன் வனாந்திரத்தில் மரணமடைந்தார்; அவர் கர்த்தருக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே இறந்தார்; அவருக்கு மகன்கள் இல்லை.
\s5
\v 4 எங்களுடைய தகப்பனுக்கு மகன் இல்லாததினாலே, அவருடைய பெயர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் சொந்த நிலம் கொடுக்கவேண்டும் என்றார்கள்.
\v 5 மோசே அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு போனான்.
\s5
\v 6 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 7 செலோபியாத்தின் மகள்கள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரர்களுக்குள்ளே சுதந்தரம் கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்.
\v 8 மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: ஒருவன் மகன் இல்லாமல் இறந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் மகளுக்குக் கொடுக்கவேண்டும்.
\s5
\v 9 அவனுக்குக் மகளும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
\v 10 அவனுக்குச் சகோதரர்களும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
\v 11 அவன் தகப்பனுக்குச் சகோதரர்கள் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் நெருங்கிய உறவின் முறையானுக்குச் சுதந்தரமாகக் கொடுக்க வேண்டும்; இது, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் மக்களுக்கு நியாயவிதிப்பிரமாணமாக இருக்கக்கடவது என்று சொல் என்றார்.
\s1 மோசே யோசுவாவை தேர்ந்தெடுத்தல்
\p
\s5
\v 12 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேசத்தைப் பார்.
\v 13 நீ அதைப் பார்த்தபின்பு, உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன்னுடைய மக்களிடத்தில் சேர்க்கப்படுவாய்;
\v 14 சபையார் வாக்குவாதம்செய்த சீன் வனாந்திரத்தில் தண்ணீரின் காரியத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்செய்யவேண்டிய நீங்கள் என்னுடைய கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன் வனாந்திரத்தில் காதேஸ் ஊர் அருகே உண்டான மேரிபாவின் தண்ணீரின் காரியமே.
\s5
\v 15 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி:
\v 16 கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இல்லாதபடி,
\v 17 அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாக இருக்கும்படி, அவர்களைப் போகவும் வரவும் செய்யும்படி, மனிதர்களான எல்லோருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு வாலிபனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான்.
\s5
\v 18 கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற வாலிபனாகிய யோசுவா என்னும் நூனின் மகனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன்னுடைய கையை வைத்து,
\v 19 அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளைகொடுத்து,
\s5
\v 20 இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படி, உன்னுடைய அதிகாரத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு.
\v 21 அவனுடைய ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கவேண்டும்; அவனுக்காக அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கவேண்டும்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடுகூட இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.
\s5
\v 22 மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடி யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,
\v 23 அவன்மேல் தன்னுடைய கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.
\s5
\c 28
\cl அத்தியாயம்– 28
\s1 அனுதின காணிக்கை
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 எனக்கு நறுமணவாசனையாக, தகனபலிகளுக்குரிய காணிக்கையையும், அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படி கவனமாக இருக்கவேண்டும் என்று நீ இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிடு.
\s5
\v 3 மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நிரந்தர சர்வாங்கதகனபலியாக நாள்தோறும் ஒருவயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.
\v 4 காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு,
\v 5 உணவுபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தவேண்டும்.
\s5
\v 6 இது சீனாய் மலையிலே கட்டளையிடப்பட்ட நிரந்தர சர்வாங்கதகனபலி; இது கர்த்தருக்கு நறுமண வாசனைக்கான தகனபலி.
\v 7 காற்படி திராட்சைரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி; பரிசுத்த ஸ்தலத்திலே கர்த்தருக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படவேண்டும்.
\v 8 காலையின் போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும் ஒப்பாகவே மாலையில் மற்ற ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலியாகச் செலுத்தவேண்டும்.
\s1 ஓய்வு நாள் காணிக்கை
\p
\s5
\v 9 ஓய்வுநாளிலோ உணவுபலிக்காக ஒருவயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தவேண்டும்.
\v 10 எப்பொழுதும் செலுத்தும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும்.
\s5
\v 11 உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தவேண்டும்.
\v 12 உணவுபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், உணவுபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,
\v 13 உணவுபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாகச் செலுத்தவேண்டும்.
\s5
\v 14 அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சைரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாக இருக்கவேண்டும்; இது வருடமுழுவதும் மாதம்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்கதகனபலி.
\v 15 எப்பொழுதும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரணபலியாகக் கர்த்தருக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும்.
\s1 பஸ்கா
\p
\s5
\v 16 முதலாம் மாதம் பதினான்காம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.
\v 17 அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகை நாள்; ஏழு நாட்களளவும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும்.
\v 18 முதலாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அன்றையத்தினம் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யகூடாது.
\s5
\v 19 அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
\v 20 அவைகளுக்கேற்ற உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
\v 21 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
\v 22 உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
\s5
\v 23 காலையிலே எப்பொழுதும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும் தவிர இவைகளையும் செலுத்தவேண்டும்.
\v 24 இப்படியாக ஏழுநாட்களளவும் நாள்தோறும் கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி செலுத்தவேண்டும்; எப்பொழுதும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியையும் அதின் பானபலியையும் தவிர, இதையும் செலுத்தவேண்டும்.
\v 25 ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.
\s1 பண்டிகைகளின் வாரம்
\p
\s5
\v 26 அந்த வாரங்களுக்குப்பின்பு நீங்கள் கர்த்தருக்குப் புதிய உணவுபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.
\v 27 அப்பொழுது நீங்கள் கர்த்தருக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
\v 28 அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
\s5
\v 29 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
\v 30 உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
\v 31 நிரந்தர சர்வாங்கதகனபலியையும் அதின் உணவுபலியையும் அதின் பானபலியையும் தவிர, இவைகளையும் செலுத்தவேண்டும்; இவைகள் பழுதற்றவைகளாக இருக்கவேண்டும்.
\s5
\c 29
\cl அத்தியாயம்– 29
\s1 எக்காள பண்டிகை
\p
\v 1 ஏழாம் மாதம் முதல் தேதி பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்தஒரு வேலையும் செய்யக்கூடாது; அது உங்களுக்கு எக்காளம் ஊதும் நாளாக இருக்கவேண்டும்.
\s5
\v 2 அப்பொழுது நீங்கள் கர்த்தருக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
\s5
\v 3 அவைகளுக்கு அடுத்த உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
\v 4 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
\v 5 உங்கள் பாவநிவிர்த்திக்கான பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி,
\s5
\v 6 மாதப்பிறப்பின் சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், தினந்தோறும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் முறைமைக்கேற்ற பானபலிகளையும் தவிர, இவைகளையும் கர்த்தருக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாகச் செலுத்தவேண்டும்.
\s1 பரிகாரத்தின் நாள்
\p
\s5
\v 7 இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதிலே நீங்கள் எந்தஒரு வேலையும் செய்யாமல், உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி,
\v 8 கர்த்தருக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
\s5
\v 9 அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
\v 10 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
\v 11 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, பாவநிவாரணபலியையும், நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும் தவிர, இவைகளையும் செலுத்தவேண்டும்.
\s1 ஆசரிப்புக்கூடார பண்டிகை
\p
\s5
\v 12 ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது; ஏழு நாட்கள் கர்த்தருக்குப் பண்டிகை அனுசரிக்கவேண்டும்.
\v 13 நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்கதகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
\s5
\v 14 அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றிற்காக இரண்டு பங்கையும்,
\v 15 பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
\v 16 நிரந்தர தகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
\s5
\v 17 இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
\v 18 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தகுந்தபடி முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
\v 19 நிரந்தர சர்வாங்க தகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
\s5
\v 20 மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
\v 21 காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
\v 22 நிரந்தர சர்வாங்க தகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
\s5
\v 23 நான்காம் நாளிலே பத்துக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
\v 24 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
\v 25 நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
\s5
\v 26 ஐந்தாம் நாளிலே ஒன்பது காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
\v 27 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
\v 28 நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
\s5
\v 29 ஆறாம் நாளிலே எட்டுக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
\v 30 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
\v 31 நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலிகளையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
\s5
\v 32 ஏழாம் நாளிலே ஏழு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
\v 33 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
\v 34 நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
\s5
\v 35 எட்டாம் நாள் உங்களுக்கு விசேஷித்த ஆசரிப்பு நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யகூடாது.
\v 36 அப்பொழுது நீங்கள் கர்த்தருக்கு நறுமண வாசனையுள்ள தகனமான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
\s5
\v 37 காளையும், ஆட்டுக்கடாவும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற எண்ணிக்கைக்குத் தகுந்தபடி முறைமையின்படி அவைகளின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
\v 38 நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
\s5
\v 39 உங்களுடைய பொருத்தனைகளையும், உங்களுடைய உற்சாகபலிகளையும், உங்களுடைய சர்வாங்கதகனபலிகளையும், உங்களுடைய உணவுபலிகளையும், உங்களுடைய பானபலிகளையும், உங்களுடைய சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்களுடைய பண்டிகைகளிலே கர்த்தருக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்.
\v 40 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னான்.
\s5
\c 30
\cl அத்தியாயம்– 30
\s1 பொருத்தனைகள்
\p
\v 1 மோசே இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் தலைவர்களை நோக்கி: கர்த்தர் கட்டளையிடுவது என்னவென்றால்:
\v 2 ஒருவன் கர்த்தருக்கு எந்த ஒரு பொருத்தனை செய்தாலும், அல்லது எந்த ஒரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன்னுடைய வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யவேண்டும்.
\s5
\v 3 தன்னுடைய தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண்பிள்ளை தன்னுடைய சிறுவயதிலே கர்த்தருக்குப் பொருத்தனைச்செய்து எந்த ஒரு காரியத்தைச் செய்யும்படி தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்டால்,
\v 4 அவள் செய்த பொருத்தனையையும், அவள் செய்துக்கொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாமல் இருப்பானானால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.
\s5
\v 5 அவள் செய்த பொருத்தனைகளையும், அவள் செய்யும்படி தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்தின நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்தால், அது நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய தகப்பன் வேண்டாம் என்று தடுத்தபடியால், கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.
\s5
\v 6 அவள் பொருத்தனை செய்யும்போதும், தன்னுடைய உதடுகளைத் திறந்து தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொள்ளும்போதும், அவளுக்கு கணவன் இருந்தால்,
\v 7 அப்பொழுது அவளுடைய கணவன் அதைக் கேட்டிருந்தும், அதைக் கேள்விப்படுகிற நாளில் அவளுக்கு ஒன்றும் சொல்லாமல் இருந்தால், அவளுடைய பொருத்தனைகளும் அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்தின நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.
\s5
\v 8 அவளுடைய கணவன் அதைக் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்து, அவள் செய்த பொருத்தனையும் அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் செல்லாதபடி செய்தானென்றால், அப்பொழுது கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.
\s5
\v 9 ஒரு விதவையாவது, தள்ளப்பட்டுப்போன ஒரு பெண்ணாவது தன்னுடைய ஆத்துமாவை எந்த நிபந்தனைக்கு உட்படுத்திக்கொள்ளுகிறாளோ அந்த நிபந்தனை நிறைவேறவேண்டும்.
\v 10 அவள் தன்னுடைய கணவனுடைய வீட்டில் எந்த ஒரு பொருத்தனை செய்தாலும், அல்லது எந்த ஒரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்டாலும்,
\v 11 அவளுடைய கணவன் அதைக் கேட்டும் அவளுக்கு அதை வேண்டாமென்று தடுக்காமல் மவுனமாக இருந்தால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும், அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்தின எல்லா நிபந்தனைகளும் நிறைவேறவேண்டும்.
\s5
\v 12 அவளுடைய கணவன் அவைகளைக்கேட்ட நாளில் அவைகளைச் செல்லாதபடி செய்தால், அப்பொழுது அவள் செய்த பொருத்தனைகளும், அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்தின நிபந்தனையைக்குறித்து அவள் வாயிலிருந்து புறப்பட்டதொன்றும் நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய கணவன் அவைகளைச் செல்லாதபடி செய்ததினாலே கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.
\s5
\v 13 எந்தப் பொருத்தனையையும், ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி செய்யப்பட்ட எந்த ஆணையையும், அவளுடைய கணவன் உறுதிப்படுத்தவும் முடியும், செல்லாதபடி செய்யவும் முடியும்.
\v 14 அவளுடைய கணவன் ஒருநாளும் அவளுக்கு ஒன்றும் சொல்லாமல் இருந்தால், அவன் அவளுடைய எல்லாப் பொருத்தனைகளையும், அவள் பெயரிலிருக்கிற அவளுடைய எல்லா நிபந்தனைகளையும் உறுதிப்படுத்துகிறான்; அவன் அதைக் கேட்ட நாளிலே அவளுக்கு ஒன்றும் சொல்லாமல்போனதினால், அவைகளை உறுதிப்படுத்துகிறான்.
\s5
\v 15 அவன் அவைகளைக் கேட்டபின்பு செல்லாதபடி செய்தால், அவளுடைய அக்கிரமத்தை அவன் சுமப்பான் என்றார்.
\v 16 கணவனையும், மனைவியையும், தகப்பனையும், தகப்பனுடைய வீட்டில் சிறு வயதில் இருக்கிற அவனுடைய மகளையும் குறித்து, கர்த்தர் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.
\s5
\c 31
\cl அத்தியாயம்– 31
\s1 மீதியானியர்களைப் பழிவாங்குதல்
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 இஸ்ரவேல் மக்களுக்காக மீதியானியர்களிடத்தில் பழிவாங்கு; அதின் பின்பு உன்னுடைய மக்களிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.
\s5
\v 3 அப்பொழுது மோசே மக்களை நோக்கி: கர்த்தருக்காக மீதியானியர்களிடம் பழிவாங்கத்தக்க, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகும்படியாக மனிதர்களைப் பிரித்தெடுங்கள்.
\v 4 இஸ்ரவேலர்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரம்பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும் என்றான்.
\v 5 அப்படியே இஸ்ரவேலர்களாகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னிரெண்டாயிரம்பேர் யுத்தத்திற்குஆயத்தமாக நிறுத்தப்பட்டார்கள்.
\s5
\v 6 மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசாரின் மகன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்பும்போது, அவனுடைய கையிலே பரிசுத்த பொருட்களையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான்.
\v 7 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மீதியானியர்களுடன் யுத்தம்செய்து, ஆண்கள் எல்லோரையும் கொன்றுபோட்டார்கள்.
\v 8 அவர்களைக் கொன்றுபோட்டதும் அல்லாமல், மீதியானியர்களின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் மகனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள்.
\s5
\v 9 அன்றியும் இஸ்ரவேல் இராணுவம் மீதியானியர்களின் பெண்களையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற சொத்துகள் அனைத்தையும் கொள்ளையிட்டு,
\v 10 அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து,
\s5
\v 11 தாங்கள் கொள்ளையிட்ட பொருள்களையும் தாங்கள் பிடித்த மனிதர்கள் மிருகங்கள் அனைத்தையும் சேர்த்து,
\v 12 சிறைப்பிடிக்கப்பட்ட மனிதர்களையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும், எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமவெளிகளிலுள்ள முகாமிலிருந்த மோசேயினிடத்திற்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடமும், இஸ்ரவேல் மக்களாகிய சபையாரிடமும் கொண்டுவந்தார்கள்.
\s5
\v 13 மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லோரும் அவர்களைச் சந்திக்க முகாமிற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
\v 14 அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவர்களும், நூறுபேருக்குத் தலைவர்களுமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,
\v 15 அவர்களை நோக்கி: பெண்கள் எல்லோரையும் உயிரோடு விட்டுவிட்டீர்களா?
\s5
\v 16 பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு விரோதமாகத் துரோகம்செய்யக் காரணமாக இருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.
\v 17 ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், ஆண்தொடர்பு கொண்டுள்ள எல்லா பெண்களையும் கொன்றுபோடுங்கள்.
\s5
\v 18 பெண்களில் ஆண்தொடர்பு அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடு வையுங்கள்.
\v 19 பின்பு நீங்கள் ஏழுநாட்கள் முகாமிற்கு வெளியே தங்குங்கள்; மனிதஉயிரினை கொன்றவர்களும். வெட்டுண்டவர்களைத் தொட்டவர்களுமாகிய நீங்கள் யாவரும் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் உங்களையும் உங்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களையும் சுத்திகரித்து,
\v 20 அந்தப்படியே எல்லா ஆடைகளையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமுடியினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கவேண்டும் என்றான்.
\s5
\v 21 ஆசாரியனாகிய எலெயாசாரும் யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரர்களை நோக்கி: கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்:
\v 22 அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படி,
\v 23 அவைகளை அக்கினியிலே போட்டு எடுக்கவேண்டும்; தீட்டுக்கழிக்கும் தண்ணீராலும் அவைகள் சுத்திகரிக்கப்படவேண்டும்; அக்கினிக்கு நிற்கத் தகாதவைகள் எல்லாம் தண்ணீரினால் சுத்தம் செய்யவேண்டும்.
\v 24 ஏழாம் நாளில் உங்களுடைய ஆடைகளைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருப்பீர்கள்; பின்பு நீங்கள் முகாமிற்குள் வரலாம் என்றான்.
\s1 கொள்ளையிடப்பட்டவைகளை பங்கிடுதல்
\p
\s5
\v 25 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 26 பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதர்களையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையினுடைய முன்னோர்களாகிய தலைவர்களும் கணக்கிட்டு,
\v 27 கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்.
\s5
\v 28 மேலும் யுத்தத்திற்குப் போன படைவீரர்களிடத்தில் கர்த்தருக்காக மனிதர்களிலும், மாடுகளிலும், கழுதைகளிலும், ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு மிருகம் வீதமாக வரி வாங்கி,
\v 29 அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்கு கொடுக்கவேண்டும்.
\s5
\v 30 இஸ்ரவேல் மக்களின் பாதிப்பங்கிலோ மனிதர்களிலும், மாடுகள், கழுதைகள், ஆடுகளாகிய எல்லா வித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாக வாங்கி, அவைகளைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்றார்.
\v 31 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள்.
\s5
\v 32 படைவீரர்கள் கொள்ளையிட்ட பொருளில், ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும்,
\v 33 எழுபத்திரெண்டாயிரம் மாடுகளும்,
\v 34 அறுபத்தோராயிரம் கழுதைகளும் மீதியாக இருந்தது.
\v 35 ஆண்தொடர்பு அறியாத பெண்களில் முப்பத்திரெண்டாயிரம்பேர் இருந்தார்கள்.
\s5
\v 36 யுத்தம்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
\v 37 இந்த ஆடுகளிலே கர்த்தருக்கு வரியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து.
\v 38 மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்கு வரியாக வந்தது எழுபத்திரண்டு.
\s5
\v 39 கழுதைகள் முப்பதாயிரத்து ஐந்நூறு; அவைகளில் கர்த்தரின் பகுதியாக வந்தது அறுபத்தொன்று.
\v 40 மனிதஉயிர்கள் பத்தாயிரம்பேர்; அவர்களில் கர்த்தருக்கு வரியாக வந்தவர்கள் முப்பத்திரண்டு பேர்.
\v 41 கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி. ஆசாரியனாகிய எலெயாசாரிடம் கொடுத்தான்.
\s5
\v 42 யுத்தம்செய்த பேர்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் மோசே பாதி பாதியாகப் பங்கிட்டதின்படி சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது:
\v 43 ஆடுகளில் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு,
\v 44 மாடுகளில் முப்பத்தாறாயிரம்,
\v 45 கழுதைகளில் முப்பதாயிரத்து ஐந்நூறு,
\v 46 மனிதஉயிர்களில் பத்தாயிரம்பேருமே.
\s5
\v 47 இஸ்ரவேல் மக்களின் பாதிப்பங்குக்கு வந்த இந்த மனிதஉயிர்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதிற்கு ஒன்று வீதமாக, எடுத்து அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியர்களுக்குக் கொடுத்தான்.
\s5
\v 48 பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவர்களும் நூறுபேருக்குத் தலைவர்களுமான அதிகாரிகள் மோசேயிடம் வந்து,
\v 49 உமது ஊழியக்காரராகிய நாங்கள் எங்களுடைய கையின் கீழிருக்கிற யுத்தமனிதர்களை கணக்கு பார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை.
\s5
\v 50 ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்களுடைய ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய காலனிகளையும், கையணிகளையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.
\v 51 அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எல்லாவித வேலைப்பாடுள்ள பொருட்களான அந்தப் பொன் ஆபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள்.
\s5
\v 52 இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவர்களானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவர்களானவர்களாலும் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பத்தாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாக இருந்தது.
\v 53 யுத்தத்திற்குப் போன மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்காக கொள்ளையிட்டிருந்தார்கள்.
\v 54 அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம் பேருக்குத் தலைவர்களானவர்களின் கையிலும், நூறு பேருக்குத் தலைவர்களானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் மக்களுக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்.
\s5
\c 32
\cl அத்தியாயம்– 32
\p
\v 1 ரூபன், காத் சந்ததிக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாக இருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.
\v 2 ஆகையால் ரூபன் சந்ததியும் காத் சந்ததியும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி:
\v 3 கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறியடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.
\s5
\v 4 உமது அடியார்களுக்கு ஆடுமாடுகள் உண்டு.
\v 5 உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகச்செய்வாராக; இந்த நாட்டை உமது அடியார்களுக்குக் சொந்த நிலமாக கொடுக்கவேண்டும் என்றார்கள்.
\s5
\v 6 அப்பொழுது மோசே காத் சந்ததியையும் ரூபன் சந்ததியையும் நோக்கி: உங்கள் சகோதரர்கள் யுத்தத்திற்குப் போகும்போது, நீங்கள் இங்கே இருப்பீர்களோ?
\v 7 கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடி, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகச்செய்கிறது ஏன்?
\s5
\v 8 அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்களுடைய தகப்பன்மார்களை காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.
\v 9 அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை போய், அத்தேசத்தைப் பார்த்து வந்து, இஸ்ரவேல் மக்கள் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடி அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகச்செய்தார்கள்.
\s5
\v 10 அதினால் கர்த்தர் அந்த நாளிலே கோபம் வந்தவராகி:
\v 11 உத்தமமாக என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் மகன் காலேபும், நூனின் மகன் யோசுவாவும் தவிர,
\v 12 எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாகப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்.
\s5
\v 13 அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின் மேல் வந்தது; கர்த்தருடைய சமுகத்தில் தீங்குசெய்த அந்தச் சந்ததியெல்லாம் அழிந்துபோகும்வரை அவர்களை வனாந்திரத்திலே நாற்பது வருடங்கள் அலையச்செய்தார்.
\v 14 இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்களின் மேல் இருக்கும் கர்த்தருடைய கோபத்தின் கடுமையை இன்னும் அதிகரிக்கச்செய்யும்படி, நீங்கள் உங்களுடைய தகப்பன்களின் இடத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாக எழும்பியிருக்கிறீர்கள்.
\v 15 நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்திரத்தில் இருக்கச்செய்வார்; இப்படி நீங்கள் இந்த மக்களையெல்லாம் அழியச்செயவீர்கள் என்றான்.
\s5
\v 16 அப்பொழுது அவர்கள் அவன் அருகில் வந்து: எங்களுடைய ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும், எங்களுடைய பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம்.
\v 17 நாங்களோ இஸ்ரவேலர்களுடைய ராணுவத்தை அவர்கள் இடத்திலே கொண்டுபோய்ச் சேர்க்கும்வரையும், யுத்தத்திற்கு ஆயத்தமாக தீவிரத்தோடு அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்களுடைய பிள்ளைகள் இத்தேசத்து மக்களின் பொருட்டு பாதுகாப்பான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.
\s5
\v 18 இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் தங்கள்தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் வரைக்கும், நாங்கள் எங்களுடைய வீடுகளுக்குத் திரும்புவதில்லை.
\v 19 யோர்தானுக்கு இப்புறத்தில் கிழக்கே எங்களுக்குச் சுதந்தரம் உண்டானபடியினாலே, நாங்கள் அவர்களோடு யோர்தானுக்கு அக்கரையிலும், அதற்கு அப்புறத்திலும் சுதந்தரம் வாங்கமாட்டோம் என்றார்கள்.
\s5
\v 20 அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படி செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகி,
\v 21 கர்த்தர் தம்முடைய எதிரிகளைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடும்வரை, நீங்கள் எல்லோரும் அவருடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாக யோர்தானைக் கடந்து போவீர்களானால்,
\v 22 அந்ததேசம் கர்த்தருக்கு முன்பாக கிடைத்தபின்பு, நீங்கள் திரும்பி வந்து, கர்த்தருக்கு முன்பாகவும், இஸ்ரவேலர்களுக்கு முன்பாகவும், குற்றமில்லாமல் இருப்பீர்கள்; அதற்குப்பின்பு இந்த தேசம் கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குச் சுதந்தரமாகும்.
\s5
\v 23 நீங்கள் இப்படிச் செய்யாமல்போனால், கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாக அறியுங்கள்.
\v 24 உங்களுடைய பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்களுடைய ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்களுடைய வாய்மொழியின்படியே செய்யுங்கள் என்றான்.
\v 25 அப்பொழுது காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மோசேயை நோக்கி: எங்களுடைய ஆண்டவன் கட்டளையிட்டபடி உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம்.
\s5
\v 26 எங்களுடைய பிள்ளைகளும் எங்களுடைய மனைவிகளும், எங்களுடைய ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும், இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.
\v 27 உமது ஊழியக்காரர்களாகிய நாங்களோ எங்களுடைய ஆண்டவன் சொன்னபடி, ஒவ்வொருவரும் யுத்தத்திற்கு ஆயத்தமாக, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள்.
\s5
\v 28 அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் மகனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் மக்களுடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:
\v 29 காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் அவரவர் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாக உங்களோடுகூட யோர்தானைக் கடந்துபோனால், அந்ததேசம் உங்களுக்கு கிடைத்தபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுக்கக்கடவீர்கள்.
\v 30 உங்களோடுகூட யுத்தவீரர்களாகக் கடந்துபோகாமல் இருந்தார்களேயானால், அவர்கள் உங்கள் நடுவே கானான் தேசத்திலே சுதந்தரம் அடையவேண்டும் என்றான்.
\s5
\v 31 காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மறுமொழியாக: உம்முடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.
\v 32 யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் சொந்தநிலம் எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகி கானான் தேசத்திற்குப் போவோம் என்றார்கள்.
\s5
\v 33 அப்பொழுது மோசே காத் சந்ததிக்கும், ரூபன் சந்ததிக்கும், யோசேப்பின் மகனாகிய மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்ஜியத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்ஜியத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.
\s5
\v 34 பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,
\v 35 ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,
\v 36 பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் பாதுகாப்பான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.
\s5
\v 37 ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,
\v 38 பேர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறு பெயர்களைக் கொடுத்தார்கள்.
\v 39 மனாசேயின் மகனாகிய மாகீரின் சந்ததி கீலேயாத்திற்குப் போய், அதைக்கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியர்களைத் துரத்திவிட்டார்கள்.
\s5
\v 40 அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் மகனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.
\v 41 மனாசேயின் மகனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பெயரிட்டான்.
\v 42 நோபாக் போய், கேனாத்தையும், அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன்னுடைய பெயரின்படி நோபாக் என்று பெயரிட்டான்.
\s5
\c 33
\cl அத்தியாயம்– 33
\s1 இஸ்ரவேல் பயணத்தின் நிலைகள்
\p
\v 1 மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள்தங்கள் இராணுவங்களின்படி எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களுடைய பயணங்களின் விபரம்:
\v 2 மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடி அவர்கள் புறப்பட்ட முறையாக அவர்களுடைய பயணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டு பயணித்த பயணங்களாவன:
\s5
\v 3 முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர்கள் எல்லோரும் பார்க்க, இஸ்ரவேல் மக்கள் பலத்தகையுடன் புறப்பட்டார்கள்.
\v 4 அப்பொழுது எகிப்தியர்கள் கர்த்தர் தங்களுக்குள்ளே அழித்த மூத்தபிள்ளைகளையெல்லாம் அடக்கம்செய்தார்கள்; அவர்களுடைய தெய்வங்களின் பெயரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார்.
\s5
\v 5 பின்பு இஸ்ரவேல் மக்கள் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே முகாமிட்டார்கள்.
\v 6 சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்திரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே முகாமிட்டார்கள்.
\v 7 ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாக முகாமிட்டார்கள்.
\s5
\v 8 ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்திரத்திற்குப் போய், ஏத்தாம் வனாந்திரத்திலே மூன்று நாட்கள் பயணம்செய்து, மாராவிலே முகாமிட்டார்கள்.
\v 9 மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே முகாமிட்டார்கள்.
\v 10 ஏலிமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே முகாமிட்டார்கள்.
\s5
\v 11 சிவந்த சமுத்திரத்தை விட்டுப் பறப்பட்டுப்போய், சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
\v 12 சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே முகாமிட்டார்கள்.
\v 13 தொப்காவிலிருந்து புறப்பட்டுப் போய், ஆலூசிலே முகாமிட்டார்கள்.
\v 14 ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே முகாமிட்டார்கள். அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
\s5
\v 15 ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
\v 16 சீனாய் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே முகாமிட்டார்கள்.
\v 17 கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே முகாமிட்டார்கள்.
\v 18 ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே முகாமிட்டார்கள்.
\s5
\v 19 ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே முகாமிட்டார்கள்.
\v 20 ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே முகாமிட்டார்கள்.
\v 21 லிப்னாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரீசாவிலே முகாமிட்டார்கள்.
\v 22 ரீசாவிலிருந்து புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே முகாமிட்டார்கள்.
\s5
\v 23 கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே முகாமிட்டார்கள்.
\v 24 சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே முகாமிட்டார்கள்.
\v 25 ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே முகாமிட்டார்கள்.
\v 26 மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே முகாமிட்டார்கள்.
\s5
\v 27 தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே முகாமிட்டார்கள்.
\v 28 தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மித்காவிலே முகாமிட்டார்கள்.
\v 29 மித்காவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே முகாமிட்டார்கள்.
\v 30 அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே முகாமிட்டார்கள்.
\s5
\v 31 மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே முகாமிட்டார்கள்.
\v 32 பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே முகாமிட்டார்கள்.
\v 33 கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே முகாமிட்டார்கள்.
\v 34 யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே முகாமிட்டார்கள்.
\s5
\v 35 எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே முகாமிட்டார்கள்.
\v 36 எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
\v 37 காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே முகாமிட்டார்கள்.
\s5
\v 38 அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படி ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருடம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.
\v 39 ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்து மூன்று வயதாக இருந்தான்.
\s5
\v 40 அந்த நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் மக்கள் வருகிறதைக் கேள்விப்பட்டான்.
\s5
\v 41 ஓர் என்னும் மலையை விட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே முகாமிட்டார்கள்.
\v 42 சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே முகாமிட்டார்கள்.
\v 43 பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே முகாமிட்டார்கள்.
\s5
\v 44 ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரிமீன் மேடுகளிலே முகாமிட்டார்கள்.
\v 45 அந்த மேடுகளை விட்டுப்பறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே முகாமிட்டார்கள்.
\v 46 தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலே முகாமிட்டார்கள்.
\s5
\v 47 அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே முகாமிட்டார்கள்.
\v 48 அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே முகாமிட்டார்கள்.
\v 49 யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் துவங்கி, ஆபேல் சித்தீம்மட்டும் முகாமிட்டிருந்தார்கள்.
\s5
\v 50 எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 51 நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது,
\v 52 அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,
\s5
\v 53 தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கவேண்டும்; அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.
\v 54 சீட்டுப்போட்டு, தேசத்தை உங்களுடைய குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக மக்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச மக்களுக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அந்த இடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.
\s5
\v 55 நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமல் இருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்களுடைய கண்களில் முள்ளுகளும் உங்களுடைய விலாக்களிலே கூர்களுமாக இருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.
\v 56 அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல் என்றார்.
\s5
\c 34
\cl அத்தியாயம்– 34
\s1 கானானின் எல்லைகள்
\p
\v 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 நீ இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது; நீங்கள் கானான்தேசத்தில் சேரும்போது,
\v 3 உங்கள் தென்புறம் சீன்வனாந்திரம் துவங்கி ஏதோம் தேசத்தின் ஓரம்வரை இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி துவங்கி உங்களுடைய தென் எல்லையாக இருக்கும்.
\s5
\v 4 உங்களுடைய எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்திரம் வரையில் போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் ஆதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய்,
\v 5 அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதிவரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும்.
\s5
\v 6 மேற்கு திசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்கு புறத்து எல்லையாக இருக்கும்.
\s5
\v 7 உங்களுக்கு வடதிசை எல்லை பெருங்கடல் துவங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து,
\v 8 ஓர் என்னும் மலை துவங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாக வைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,
\v 9 அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப் போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாக இருக்கும்.
\s5
\v 10 உங்களுக்குக் கிழக்குத்திசை எல்லைக்கு ஆத்சார் ஏனானிலிருந்து சேப்பாமைக் குறிப்பாக வைத்து,
\v 11 சேப்பாமிலிருந்து எல்லையானது ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாவரையும், அங்கேயிருந்து கின்னரேத் கடல் வரையும் அதின் கிழக்குக் கரையோரமாக,
\v 12 அங்கேயிருந்து யோர்தான் வரையும் போய், உப்புக்கடலில் முடியும்; இந்தச் சுற்று எல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார்.
\s5
\v 13 அப்பொழுது மோசே இஸ்ரவேல் மக்களை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே.
\v 14 ரூபன் சந்ததியர்கள் தங்கள் முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், காத் சந்ததியர்கள் தங்கள் முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், தங்களுடைய சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டதும் அல்லாமல், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்களுடைய சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
\v 15 இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்களுடைய சுகந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்றான்.
\s5
\v 16 மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 17 உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக் கொடுக்கும் மனிதர்களின் பெயர்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவுமே.
\v 18 அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்.
\s5
\v 19 அந்த மனிதர்களுடைய பெயர்களாவன: யூதா கோத்திரத்திற்கு எப்புன்னேயின் மகனாகிய காலேபும்,
\v 20 சிமியோன் சந்ததியாரும் கோத்திரத்திற்கு அம்மியூதின் மகனாகிய சாமுவேலும்,
\s5
\v 21 பென்யமீன் கோத்திரத்திற்குக் கிஸ்லோனின் மகனாகிய எலிதாதும்,
\v 22 தாண் சந்ததியாரின் கோத்திரத்திற்கு யொக்லியின் மகனாகிய புக்கி என்னும் பிரபுவும்,
\v 23 யோசேப்பின் மகனாகிய மனாசே சந்ததியாரின் கோத்திரத்திற்கு எபோதின் மகனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,
\s5
\v 24 எப்பிராயீம் சந்ததியாரின் கோத்திரத்திற்கு சிப்தானின் மகனாகிய கேமுவேல் என்னும் பிரபுவும்,
\v 25 செபுலோன் சந்ததியாரின் கோத்திரத்திற்கு பர்னாகின் மகனாகிய எலிசாப்பான் என்னும் பிரபுவும்,
\v 26 இசக்கார் சந்ததியாரின் கோத்திரத்திற்கு ஆசானின் மகனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,
\s5
\v 27 ஆசேர் சந்ததியாரின் கோத்திரத்திற்கு சேலோமியின் மகனாகிய அகியூத் என்னும் பிரபுவும்,
\v 28 நப்தலி சந்ததியாரின் கோத்திரத்திற்கு அம்மியூதின் மகனாகிய, பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார்.
\v 29 கானான்தேசத்திலே இஸ்ரவேல் கோத்திரங்களுக்கு சுதந்தரங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டவர்கள் இவர்களே.
\s5
\c 35
\cl அத்தியாயம்– 35
\s1 லேவியர்களுக்கான பட்டணங்கள்
\p
\v 1 எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமவெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 2 இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தை லேவியர்கள் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு; அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
\s5
\v 3 அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடு மாடுகளுக்கும், அவர்களுடைய சொத்துக்களுக்கும், அவர்களுடைய எல்லா மிருக ஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும்.
\v 4 நீங்கள் லேவியர்களுக்கு கொடுக்கும் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலங்கள் பட்டணத்தின் மதில்துவங்கி, வெளியிலே சுற்றிலும் ஆயிரமுழ தூரத்திற்கு எட்டவேண்டும்.
\s5
\v 5 பட்டணம் மத்தியில் இருக்க, பட்டணத்தின் வெளிப்புறம் துவங்கி, கிழக்கே இரண்டாயிரமுழமும், தெற்கே இரண்டாயிரமுழமும், வடக்கே இரண்டாயிரமுழமும் மேற்கே இரண்டாயிரமுழமும் அளந்துவிடவேண்டும்; இது அவர்களுடைய பட்டணங்களுக்கு வெளிநிலங்களாக இருப்பதாக.
\s1 அடைக்கலப்பட்டணம்
\p
\s5
\v 6 நீங்கள் லேவியர்களுக்கு கொடுக்கும் பட்டணங்களில் அடைக்கலத்துக்காக ஆறு பட்டணங்கள் இருக்கவேண்டும்; கொலை செய்தவன் அங்கே தப்பி ஓடிப்போகிறதற்கு அவைகளைக் குறிக்கவேண்டும்; அவைகளையல்லாமல், நாற்பத்திரண்டு பட்டணங்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
\v 7 நீங்கள் லேவியர்களுக்கு கொடுக்கவேண்டிய பட்டணங்களெல்லாம் நாற்பத்தெட்டுப் பட்டணங்களும் அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்களுமே.
\s5
\v 8 நீங்கள் இஸ்ரவேல் மக்களின் சுதந்தரத்திலிருந்து அந்தப் பட்டணங்களைப் பிரித்துக் கொடுக்கும்போது, அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து கொஞ்சமும் பிரித்துக்கொடுக்கவேண்டும்; அவரவர் சுதந்தரித்துக்கொண்ட சுதந்தரத்தின்படி தங்களுடைய பட்டணங்களில் லேவியர்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார்.
\s5
\v 9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 10 நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான் தேசத்தில் நுழையும்போது,
\v 11 கைதவறி ஒருவனைக் கொன்று போட்டவன் ஓடிப்போயிருக்கும் அடைக்கலப்பட்டணங்களாகச் சில பட்டணங்களைக் குறிக்கவேண்டும்.
\s5
\v 12 கொலைசெய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கப்படும் முன்பு சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாக இருக்கவேண்டும்.
\v 13 நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்துக்காக இருக்கவேண்டும்.
\s5
\v 14 யோர்தானுக்கு இப்புறத்தில் மூன்று பட்டணங்களையும், கானான்தேசத்தில் மூன்று பட்டணங்களையும் கொடுக்கவேண்டும்; அவைகள் அடைக்கலப்பட்டணங்களாகும்.
\v 15 கைதவறி ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படி, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் மக்களுக்கும் உங்களின் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாக இருக்கவேண்டும்.
\s5
\v 16 ஒருவன் இரும்பு ஆயுதத்தினால் ஒருவனை வெட்டினதினால் அவன் செத்துப்போனால், வெட்டினவன் கொலைபாதகனாக இருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.
\v 17 ஒருவன் ஒரு கல்லை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவன்மேல் எறிகிறதினாலே அவன் செத்துப்போனால் கல்லெறிந்தவன் கொலைபாதகனாக இருக்கிறான்; அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
\v 18 ஒருவன் தன்னுடைய கையில் ஒரு மர ஆயுதத்தை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவனை அடித்ததினால் அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகனாக இருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.
\s5
\v 19 பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்; அவனைக் கண்டவுடன் அவனைக் கொன்று போடலாம்.
\v 20 ஒருவன் பகையினால் ஒருவனை விழத்தள்ளினதினாலோ, பதுங்கியிருந்து அவன் சாகும்படி அவன்மேல் ஏதாகிலும் எறிந்ததினாலோ,
\v 21 அவனைப் பகைத்து, தன்னுடைய கையினால் அடித்ததினாலோ, அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகன்; அவன் கொலைசெய்யப்படவேண்டும், பழிவாங்குகிறவன் கொலைபாதகனைக் கண்டவுடன் கொன்றுபோடலாம்.
\s5
\v 22 ஒருவன் பகையொன்றும் இல்லாமல் திடீரென ஒருவனைத் தள்ளி விழச்செய்ததாலோ, பதுங்காமல் எந்த ஒரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினாலோ,
\v 23 அவனுக்கு எதிரியாக இல்லாமலும் அவனுக்குத் தீங்கு செய்ய நினைக்காமலும் இருக்கும்போது, ஒருவனைக் கொன்றுபோடும்படியான ஒரு கல்லினால் அவனைபார்க்காமல் எறிய, அது அவன்மேல் பட்டதினாலோ, அவன் செத்துப்போனால்,
\s5
\v 24 அப்பொழுது கொலைசெய்தவனையும் பழிவாங்குகிறவனையும் சபையார் இந்த நியாயப்படி விசாரித்து,
\v 25 கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்திற்கு அவனைத் திரும்பப்போகும்படி செய்யவேண்டும்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரை அவன் அதிலே இருக்கவேண்டும்.
\s5
\v 26 ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது,
\v 27 பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை அடைக்கலப்பட்டணத்திற்கு வெளியே கண்டுபிடித்துக்கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை.
\v 28 கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையும்வரை அடைக்கலப் பட்டணத்தில் இருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன்னுடைய சுதந்தரமான தன்னுடைய சொந்த நிலத்திற்குத் திரும்பிப்போகலாம்.
\s5
\v 29 இவைகள் உங்களுடைய வீடுகளில் எங்கும் உங்களுடைய தலைமுறைதோறும் உங்களுக்கு நியாயவிதிப் பிரமாணமாக இருக்கக்கடவது.
\v 30 எவனாவது, ஒரு மனிதனைக்கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படி அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யவேண்டும்; ஒரே சாட்சியைக்கொண்டுமட்டும் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யகூடாது.
\s5
\v 31 சாகிறதற்கேற்ற குற்றம் சுமந்த கொலைபாதகனுடைய உயிருக்காக நீங்கள் மீட்கும் பொருளை வாங்கக்கூடாது; அவன் தப்பாமல் கொலைசெய்யப்படவேண்டும்.
\v 32 தன்னுடைய அடைக்கலப்பட்டணத்திற்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன்னுடைய நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும் பொருளை வாங்கக்கூடாது.
\s5
\v 33 நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேஅன்றி, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்தப்பட்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.
\v 34 நீங்கள் குடியிருக்கும் என்னுடைய வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; கர்த்தராகிய நான் இஸ்ரவேல் மக்களின் நடுவே வாழ்ந்திருக்கிறேன் என்று சொல் என்றார்.
\s5
\c 36
\cl அத்தியாயம்– 36
\s1 செலொப்பியாத்தின் மகள்களுடைய சுதந்திரம்
\p
\v 1 யோசேப்பின் மகனுடைய வம்சத்தாரில் மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின் வம்ச பிதாக்களான தலைவர்கள் சேர்ந்து, மோசேக்கும் இஸ்ரவேலின் முன்னோர்களுடைய பிதாக்களில் தலைவர்களாகிய பிரபுக்களுக்கும் முன்பாக வந்து, அவர்களை நோக்கி:
\v 2 சீட்டுப்போட்டு, தேசத்தை இஸ்ரவேல் மக்களுக்கு சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்களுடைய ஆண்டவனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டாரே; அன்றியும், எங்களுடைய சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை அவன் மகள்களுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்களுடைய ஆண்டவனுக்குக் கர்த்தராலே கட்டளையிடப்பட்டதே.
\s5
\v 3 இப்படியிருக்க, இவர்கள் இஸ்ரவேல் மக்களுடைய வேறொரு கோத்திரத்தின் ஆண்களுக்கு மனைவிகளானால், அந்த மகள்களுடைய சுதந்தரம் எங்கள் பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி, அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடு சேர்ந்துபோகும்; இப்படி எங்களுடைய சுதந்தரத்திற்குச் சீட்டினால் விழுந்த பங்கில் இல்லாமல் அற்றுப்போகுமே.
\v 4 இஸ்ரவேல் மக்களுக்கு யூபிலி வருடம் வந்தாலும், அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் உட்பட்டுப்போன கோத்திரத்தின் சுதந்தரத்தோடு சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலிருந்து அது நீங்கிப்போகுமே என்றார்கள்.
\s5
\v 5 அப்பொழுது மோசே கர்த்தருடைய கட்டளையின்படி இஸ்ரவேல் மக்களை நோக்கி: யோசேப்பு சந்ததியாரின் கோத்திரத்தார் சொல்லுகிறது சரியே.
\v 6 கர்த்தர் செலொப்பியாத்தின் மகள்களைக்குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை திருமணம்செய்யலாம்; ஆனாலும், தங்களுடைய பிதாவின் கோத்திரவம்சத்தாரில் மட்டும் அவர்கள் திருமணம் செய்யவேண்டும்.
\s5
\v 7 இப்படியே இஸ்ரவேல் மக்களின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்திற்குப் போகாமல் இருக்கும்; இஸ்ரவேல் மக்கள் அவரவர் தங்கள்தங்கள் முன்னோர்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும்.
\s5
\v 8 இஸ்ரவேல் மக்கள் அவரவர் தங்கள்தங்கள் பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் மக்களுடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் மகளும் தன்னுடைய முன்னோரின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும்.
\v 9 சுதந்தரமானது ஒரு கோத்திரத்தை விட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக்கூடாது; இஸ்ரவேல் மக்களுடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார் என்றான்.
\s5
\v 10 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி செலொப்பியாத்தின் மகள்கள் செய்தார்கள்.
\v 11 செலொப்பியாத்தின் மகள்களாகிய மக்லாள், திர்சாள், ஒக்லாள், மில்காள், நோவாள் என்பவர்கள் தங்களுடைய பிதாவின் சகோதரர்களுடைய சந்ததியாரை திருமணம் செய்தார்கள்; அவர்கள் யோசேப்பின் மகனாகிய மனாசே சந்ததியாரின் வம்சத்தாரைத் திருமணம் செய்தபடியால்,
\v 12 அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வம்சமான கோத்திரத்தோடு இருந்தது.
\s5
\v 13 எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமவெளிகளில் கர்த்தர் மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் மக்களுக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.

1694
05-DEU.usfm Normal file
View File

@ -0,0 +1,1694 @@
\id DEU
\ide UTF-8
\h உபாகமம்
\toc1 உபாகமம்
\toc2 உபாகமம்
\toc3 deu
\mt1 உபாகமம்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 ஓரேபைவிட்டுப் புறப்படுவதற்கான கட்டளை
\p
\v 1 சேயீர் மலைவழியாக ஓரேபுக்குப் பதினொரு நாட்கள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து,
\v 2 சூப்புக்கு எதிராகவும், பாரான், தோப்பேல், லாபான், ஆஸரோத், திசாகாப் ஆகியவற்றிக்கு நடுவிலும் இருக்கிற யோர்தானுக்கு இக்கரையிலுள்ள வனாந்திரத்தின் சமவெளிக்கு வந்தபோது, மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன:
\s5
\v 3 எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும், மோசே தோற்கடித்தபின்பு,
\v 4 நாற்பதாம் வருடம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் கொடுத்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்.
\s5
\v 5 யோர்தானுக்கு இப்புறத்திலிருக்கிற மோவாபின் தேசத்தில் மோசே இந்த நியாயப்பிரமாணத்தை விவரித்துக் காண்பிக்கத் துவங்கி,
\v 6 ஓரேபிலே நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மிடம் சொன்னது என்னவென்றால்: நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும்.
\s5
\v 7 நீங்கள் திரும்பிப் பிரயாணம் செய்து, எமோரியர்களின் மலைநாட்டிற்கும், அதற்கு அருகிலுள்ள எல்லா சமவெளிகளிலும், குன்றுகளிலும், பள்ளத்தாக்குகளிலும், தென்திசையிலும், கடலோரத்திலும் இருக்கிற கானானியர்களின் தேசத்திற்கும், லீபனோனுக்கும், ஐப்பிராத்து நதி என்னும் பெரிய நதிவரைக்கும் செல்லுங்கள்.
\v 8 இதோ, இந்த தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், கர்த்தர் உங்களுடைய முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்களுடைய சந்ததிக்கும் வாக்களித்துக் கொடுத்த அந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள் என்றார்.
\s1 தலைவர்கள் நியமனம்
\p
\s5
\v 9 அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: நான் ஒருவனே உங்களுடைய பாரத்தை சுமக்கமுடியாது.
\v 10 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெருகச்செய்தார்; இதோ, இந்நாளில் நீங்கள் வானத்தின் நட்சத்திரங்களைப்போல திரளாக இருக்கிறீர்கள்.
\v 11 நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரம் மடங்கு அதிகமாகும்படி உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக.
\s5
\v 12 உங்களுடைய வருத்தத்தையும், பிரச்சனைகளையும், வழக்குகளையும் நான் ஒருவனே தாங்குவது எப்படி?
\v 13 நான் உங்களுக்கு தலைவர்களை ஏற்படுத்துவதற்காக, உங்களுடைய கோத்திரங்களில் ஞானமும், விவேகமும், அறிவும் உள்ளவர்களென்று நன்மதிப்பு பெற்ற மனிதர்களைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன்.
\v 14 நீங்கள் எனக்கு மறுமொழியாக: நீர் செய்யச்சொன்ன காரியம் நல்லது என்றீர்கள்.
\s5
\v 15 ஆகையால் நான் ஞானமும், அறிவுமுள்ள மனிதர்களாகிய உங்கள் கோத்திரங்களின் வம்சத் தலைவர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவர்களாயிருக்க, ஆயிரம்பேருக்கு தலைவர்களாகவும், நூறுபேருக்கு தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்கு தலைவர்களாகவும், பத்துப்பேருக்கு தலைவர்களாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்தினேன்.
\v 16 அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேட்டு, உங்கள் சகோதரர்களுக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச் செய்யுங்கள்.
\s5
\v 17 நியாயத்திலே முகதாட்சிணியம் பார்க்காமல் பெரியவன் சொல்வதைக் கேட்பதுபோலச் சிறியவன் சொல்வதையும் கேட்கக்கடவீர்கள்; மனிதனுடைய முகத்திற்குப் பயப்படக்கூடாது; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடம் கொண்டு வாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,
\v 18 நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் எல்லாவற்றையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன்.
\s1 உளவாளிகள் அனுப்பப்படுதல்
\p
\s5
\v 19 நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம் செய்து, எமோரியர்களின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் பார்த்த அந்தப் பயங்கரமான பெரிய வனாந்திர வழி முழுவதும் நடந்து வந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.
\s5
\v 20 அப்பொழுது நான் உங்களை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக்கொடுக்கும் எமோரியர்களின் மலைநாடு வரை வந்து சேர்ந்தீர்கள்.
\v 21 இதோ, உன் தேவனாகிய கர்த்தர் அந்த தேசத்தை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார்; உன் முற்பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ போய் அதை சொந்தமாக்கிக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றேன்.
\s5
\v 22 அப்பொழுது நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து: நமக்காக அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்ன பட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்பாக மனிதர்களை அனுப்புவோம் என்றீர்கள்.
\v 23 அது எனக்கு நன்றாகக்கண்டது; கோத்திரத்திற்கு ஒருவனாக பன்னிரண்டு மனிதர்களைத் தெரிந்தெடுத்து அனுப்பினேன்.
\v 24 அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறி, எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை போய், அதை உளவுப்பார்த்து,
\s5
\v 25 அந்தத்தேசத்தின் பழங்களில் சிலவற்றைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள்.
\s1 தேவனுக்கு எதிரான கலகம்
\p
\s5
\v 26 அப்படியிருந்தும், நீங்கள், போகமாட்டோம் என்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாக எதிர்த்து,
\v 27 உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்து: கர்த்தர் நம்மை வெறுத்து, நம்மை அழிப்பதற்காக நம்மை எமோரியர்களின் கையில் ஒப்புக்கொடுக்க, நம்மை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தார்.
\v 28 நாம் எங்கே போகலாம்; அந்த மக்கள் நம்மைவிட பலவான்களும், உயரமானவர்களும், அவர்களுடைய பட்டணங்கள் பெரியவைகளும், வானளாவிய மதிலுள்ளவைகளுமாக இருக்கிறதென்றும், ஏனாக்கியர்களின் சந்ததியையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர்கள் சொல்லி, நம்முடைய இருதயத்தைக் கலங்கச்செய்தார்கள் என்று சொன்னீர்கள்.
\s5
\v 29 அப்பொழுது நான் உங்களை நோக்கி: நீங்கள் கலங்காமலும் அவர்களுக்குப் பயப்படாமலும் இருங்கள்.
\v 30 உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்த எல்லாவற்றைப் போலவும், வனாந்திரத்தில் செய்துவந்ததுபோலவும், உங்களுக்காக போர்செய்வார்.
\v 31 ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.
\s5
\v 32 உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் முகாம் அமைக்கத்தக்க இடத்தைப் பார்க்கவும், நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும்,
\v 33 இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்குமுன் சென்றாரே. இப்படியிருந்தும், இந்தக் காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசிக்காமற்போனீர்கள்.
\s5
\v 34 ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு:
\v 35 உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் வாக்களித்த அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதர்களில் ஒருவரும் காண்பதில்லை என்றும்,
\v 36 எப்புன்னேயின் மகனாகிய காலேப் மாத்திரம் அதைக் காண்பான்; அவன் கர்த்தரை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், நான் அவன் மிதித்து வந்த தேசத்தை அவனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் வாக்களித்தார்.
\s5
\v 37 அன்றியும் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்மேலும் கோபங்கொண்டு: நீயும் அதில் நுழைவதில்லை;
\v 38 உனக்கு முன்பாக நிற்கிற நூனின் மகனாகிய யோசுவா அதில் நுழைவான்; அவனைத் திடப்படுத்து; அவனே அதை இஸ்ரவேலுக்குச் சொந்தமாகப் பங்கிடுவான்.
\s5
\v 39 கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் நுழைவார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
\v 40 நீங்களோ திரும்பிக்கொண்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாக வனாந்திரத்திற்குப் பிரயாணப்பட்டுப் போங்கள் என்றார்.
\s5
\v 41 அப்பொழுது நீங்கள் எனக்கு மறுமொழியாக: கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தோம்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் போர் செய்வோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்களுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.
\v 42 அப்பொழுது கர்த்தர் என்னைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக தோற்றுப்போகாதபடி, போகாமலும் போர் செய்யாமலும் இருப்பீர்களாக; நான் உங்களுடன் இருக்கமாட்டேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
\s5
\v 43 அப்படியே நான் உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ செவிகொடாமல், கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாகத் துணிந்து மலையின்மேல் ஏறினீர்கள்.
\v 44 அந்த மலையிலே குடியிருந்த எமோரியர்கள் உங்களை எதிர்க்கும்படி புறப்பட்டுவந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி, உங்களைச் சேயீர் துவங்கி ஓர்மாவரை தாக்கினார்கள்.
\s5
\v 45 நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருடைய சமுகத்தில் அழுதீர்கள்; கர்த்தர் உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை.
\v 46 இப்படி காதேசிலே அநேக நாட்கள் தங்கியிருந்தீர்கள்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 வனாந்திரத்தில் சுற்றித்திரிதல்
\p
\v 1 கர்த்தர் எனக்குச் சொன்னபடி நாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாக வனாந்திரத்திற்குப் பிரயாணம்செய்து, அநேக நாட்கள் சேயீர் நாட்டை சுற்றித்திரிந்தோம்.
\v 2 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி:
\v 3 நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றித்திரிந்தது போதும்; வடக்கே திரும்புங்கள்.
\s5
\v 4 மக்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் சந்ததியான உங்கள் சகோதரர்களின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்;
\v 5 அவர்களோடு போர்செய்யவேண்டாம்; அவர்களுடைய தேசத்திலே ஒரு அடி நிலத்தைக்கூட உங்களுக்குக் கொடுக்கமாட்டேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சொந்தமாகக் கொடுத்திருக்கிறேன்.
\s5
\v 6 உணவுப்பொருட்களை அவர்களிடம் பணத்திற்கு வாங்கிச் சாப்பிட்டு, தண்ணீரையும் அவர்களிடம் பணத்திற்கு வாங்கிக் குடியுங்கள்.
\v 7 உன் தேவனாகிய கர்த்தர் உன் கையின் செயல்களிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்திரத்தின்வழியாக நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருடங்களும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடன் இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.
\s5
\v 8 அப்படியே நாம் சேயீரிலே குடியிருக்கிற நம்முடைய சகோதரர்களாகிய ஏசாவின் சந்ததியைவிட்டுப் புறப்பட்டு, சமபூமி வழியாக ஏலாத்திற்கும், எசியோன்கேபேருக்கும் போய், திரும்பிக்கொண்டு, மோவாப் வனாந்திரவழியாக வந்தோம்.
\s5
\v 9 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ மோவாபை துன்பப்படுத்தாமலும், அவர்களுடன் போர்செய்யாமலும் இரு; அவர்களுடைய தேசத்தில் உனக்கு ஒன்றையும் சொந்தமாகக் கொடுக்கமாட்டேன்; ஆர் என்னும் பட்டணத்தை லோத் சந்ததிக்குச் சொந்தமாகக் கொடுத்தேன்.
\s5
\v 10 திரளானவர்களும், ஏனாக்கியர்களைப்போல உயரமானவர்களுமான பலத்த மக்களாகிய ஏமியர்கள் அதில் முன்னே குடியிருந்தார்கள்.
\v 11 அவர்களும் ஏனாக்கியர்களைப்போல இராட்சதர்கள் என்று கருதப்பட்டார்கள், மோவாபியர்களோ அவர்களை ஏமியர்கள் என்று சொல்லுகிறார்கள்.
\s5
\v 12 ஓரியர்களும் சேயீரில் முன்னே குடியிருந்தார்கள்; கர்த்தர் தங்களுக்குச் சொந்தமாகக் கொடுத்த தேசத்தாரை இஸ்ரவேல் துரத்தினதுபோல, ஏசாவின் சந்ததியினர் அந்த ஓரியர்களைத் துரத்தி, அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக அழித்து, அவர்கள் இருந்த பகுதியில் குடியேறினார்கள்.
\s5
\v 13 நீங்கள் எழுந்து, சேரேத் ஆற்றை கடந்துபோங்கள் என்று சொன்னார்; அப்படியே சேரேத் ஆற்றைக் கடந்தோம்.
\v 14 போர்செய்யத் தகுதியுள்ளவர்களான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு வாக்களித்தபடியே முகாமிலிருந்து அழிந்துபோக, நாம் காதேஸ்பர்னேயாவைவிட்டுப் புறப்பட்டதுமுதல், சேரேத் ஆற்றைக் கடக்கும்வரை சென்றகாலங்கள் முப்பத்தெட்டு வருடங்கள்.
\v 15 அவர்கள் முகாமிலிருந்து அழிந்துபோகும்வரை கர்த்தரின் கை அவர்களை நிர்மூலமாக்குவதற்கு அவர்களுக்கு விரோதமாயிருந்தது.
\s5
\v 16 போர் செய்யத் தகுதியுடையவர்கள் எல்லோரும் மக்களின் நடுவிலிருந்து மரணமடைந்தபின்பு,
\v 17 கர்த்தர் என்னை நோக்கி:
\v 18 நீ ஆர் பட்டணம் இருக்கிற மோவாபின் எல்லையை இன்றைக்குக் கடந்து,
\v 19 அம்மோன் மக்களுக்கு எதிராகச் சேரப்போகிறாய்; நீ அவர்களைத் துன்பப்படுத்தவும் அவர்களுடன் போர்செய்யவும் வேண்டாம்; அம்மோன் மக்களின் தேசத்தில் ஒன்றையும் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கமாட்டேன்; அதை லோத்தின் சந்ததியினருக்குச் சொந்தமாகக் கொடுத்திருக்கிறேன்.
\s5
\v 20 அதுவும் இராட்சதருடைய தேசமாக கருதப்பட்டது; முற்காலத்தில் இராட்சதர்கள் அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர்கள் அவர்களைச் சம்சூமியர்கள் என்று சொல்லுகிறார்கள்.
\v 21 அவர்கள் திரளானவர்களும் ஏனாக்கியர்களைப்போல உயரமானவர்களுமான பலத்த மக்களாயிருந்தார்கள்; கர்த்தரோ சேயீரில் குடியிருந்த ஏசாவின் சந்ததிக்கு முன்பாக ஓரியர்களை அழிக்க, அவர்கள் அந்த மக்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த பகுதியில் இந்நாள்வரைக்கும் குடியிருக்கிறதுபோலவும்,
\v 22 கப்தோரிலிருந்து புறப்பட்ட கப்தோரியர்கள் ஆசேரீம் துவங்கி ஆசாவரை குடியிருந்த ஆவியர்களை அழித்து, அவர்கள் இருந்த பகுதியிலே குடியேறினது போலவும்,
\s5
\v 23 கர்த்தர் அவர்களை இவர்களுக்கு முன்பாக அழியச்செய்ய, இவர்கள் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த பகுதியிலே குடியேறினார்கள்.
\s1 சீகோனின் தோல்வி
\p
\s5
\v 24 நீங்கள் எழுந்து பிரயாணம்செய்து, அர்னோன் ஆற்றைக் கடந்துபோங்கள்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் என்னும் எமோரியனையும் அவனுடைய தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; இதுமுதல் அதைச் சொந்தமாக்கிக்கொள்ள அவனோடு போரிடு.
\v 25 வானத்தின்கீழ் எங்குமுள்ள மக்கள் உன்னாலே திகிலும் பயமும் அடையும்படி இன்று நான் செய்யத் துவங்குவேன்; அவர்கள் உன்னுடைய புகழைக் கேட்டு, உன்னிமித்தம் நடுங்கி, வேதனைப்படுவார்கள் என்றார்.
\s5
\v 26 அப்பொழுது நான் கெதெமோத் வனாந்திரத்திலிருந்து எஸ்போனின் ராஜாவாகிய சீகோனிடத்தில், சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி பிரதிநிதிகளை அனுப்பி:
\v 27 நான் உம்முடைய தேசத்தைக் கடந்துபோகும்படி அனுமதிகொடும்; வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் பெரும்பாதை வழியாக நடப்பேன்.
\s5
\v 28 சேயீரில் குடியிருக்கிற ஏசாவின் சந்ததியினரும், ஆர் பட்டணத்தில் குடியிருக்கிற மோவாபியர்களும் எனக்குச் செய்ததுபோல, நான் யோர்தானைக் கடந்து, எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் சேரும்வரை,
\v 29 நீர் எனக்கு சாப்பிட உணவையும், குடிக்கத் தண்ணீரையும் விலைக்குத் தாரும்; நான் கால்நடையாகக் கடந்து போகமாத்திரம் அனுமதிகொடும் என்று சொல்லி அனுப்பினேன்.
\s5
\v 30 ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோவதற்கு, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு அனுமதி கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக, அவனுடைய மனதையும், இருதயத்தையும் கடினப்படுத்தியிருந்தார்.
\v 31 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவனுடைய தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவனுடைய தேசத்தை வசப்படுத்தி, சொந்தமாக்கிக்கொள் என்றார்.
\s5
\v 32 சீகோன் தன்னுடைய எல்லா மக்களோடு நம்முடன் போர்செய்யப் புறப்பட்டு, யாகாசுக்கு வந்தான்.
\v 33 அவனை நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவனுடைய மகன்களையும், அனைத்து மக்களையும் தோற்கடித்து,
\s5
\v 34 அக்காலத்தில் அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த பெண்களையும், ஆண்களையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் முற்றிலும் அழித்தோம்.
\v 35 மிருகஜீவன்களையும், நாம் பிடித்த பட்டணங்களில் கொள்ளையடித்த பொருட்களையும் மாத்திரம் நமக்கென்று வைத்துக்கொண்டோம்.
\s5
\v 36 அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், ஆற்றுக்கு அருகிலிருக்கிற பட்டணமும் துவங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்து நிற்கத்தக்க பாதுகாப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்.
\v 37 அம்மோன் மக்களுடைய தேசத்தையும், யாபோக்கு ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 ஓக் ராஜாவாவின் தோல்வி
\p
\v 1 பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப்போகிற வழியாகப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல மக்களோடும் நம்மை எதிர்த்துப் போர்செய்யும்படிப் புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான்.
\v 2 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய மக்கள் எல்லோரையும் அவனுடைய தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்ததுபோல, அவனுக்கும் செய்வாய் என்றார்.
\s5
\v 3 அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல மக்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமல்போகும்வரை அவனை முற்றிலும் அழித்தோம்.
\v 4 அக்காலத்திலே அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்தோம்; அவர்களிடத்தில் நாம் பிடித்துக்கொள்ளாத பட்டணம் இல்லை; பாசானிலிருந்த ஓகின் ராஜ்ஜியமான அறுபது பட்டணங்களுள்ள அர்கோப் தேசம் முழுவதையும் பிடித்தோம்.
\s5
\v 5 அந்தப் பட்டணங்களெல்லாம் உயர்ந்த மதில்களாலும், வாசல்களாலும், தாழ்ப்பாள்களாலும் பாதுகாக்கப்பட்டிருந்தது; மட்டுமின்றி அவைகளில் மதில் இல்லாத பட்டணங்களும் அநேகம் இருந்தன.
\v 6 அவைகளையும் முற்றிலும் அழித்தோம்; நாம் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்ததுபோல, அந்த எல்லாப் பட்டணங்களிலுமுள்ள ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் அழித்தோம்.
\v 7 ஆனாலும் பட்டணங்களிலுள்ள ஆஸ்தியையும் சகல மிருகஜீவன்களையும் நமக்கென்று கொள்ளையிட்டோம்.
\s5
\v 8 இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதுவங்கி, எர்மோன் மலைவரையுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியர்களுடைய இரண்டு ராஜாக்களிடமிருந்து பிடித்தோம்.
\v 9 சீதோனியர்கள் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியர்களோ அதைச் சேனீர் என்கிறார்கள்.
\v 10 சமமான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்ஜியத்தின் பட்டணங்கள்வரையுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.
\s5
\v 11 மீதியாயிருந்த இராட்சதர்களில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன் மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினால் செய்யப்பட்ட அவனுடைய கட்டில், மனிதர்களுடைய கை முழத்தின்படியே, ஒன்பது முழ நீளமும் நான்கு முழ அகலமுமாயிருந்தது; அது அம்மோன் சந்ததியாருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?
\s1 தேசம் பிரிக்கப்படுதல்
\p
\s5
\v 12 அக்காலத்திலே சொந்தமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் துவங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் கொடுத்தேன்.
\v 13 கீலேயாத்தின் மற்றப் பங்கையும், ஓகின் ராஜ்ஜியமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குக் கொடுத்ததுமல்லாமல், இராட்சத தேசம் என்று கருதப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் பகுதி முழுவதையும் கொடுத்தேன்.
\s5
\v 14 மனாசேயின் மகனாகிய யாவீர் அர்கோப் பகுதி முழுவதையும் கேசூரியர்கள் மாகாத்தியர்கள் என்பவர்களுடைய எல்லைவரை கட்டிக்கொண்டு, அதற்குத் தன் பெயரின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பெயரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது.
\s5
\v 15 மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன்.
\v 16 மேலும் கீலேயாத் துவங்கி, அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், அம்மோனியர்களுடைய கடைசிஎல்லையாகிய யாபோக்கு ஆறுவரை இருக்கிற தேசத்தையும்,
\s5
\v 17 கின்னரேத் துவங்கி அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாகக் கிழக்கே இருக்கிற உப்புக்கடலான சமவெளியின் கடல்வரை, யோர்தானின் எல்லைக்குள் அடங்கிய சமவெளியையும், ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் கொடுத்தேன்.
\s5
\v 18 அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்த தேசத்தைச் சொந்தமாகக் கொடுத்தார்; போர்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லோரும் இஸ்ரவேல் மக்களான உங்கள் சகோதரர்களுக்கு முன்பாக ஆயுதம் ஏந்தியவர்களாக நடந்துபோங்கள்.
\s5
\v 19 உங்களுடைய மனைவிகளும், பிள்ளைகளும் உங்களுடைய ஆடுமாடுகளும் மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்; உங்களுக்குத் திரளான ஆடுமாடுகள் உண்டென்று அறிவேன்.
\v 20 ஆனாலும் கர்த்தர் உங்களை இளைப்பாறச்செய்ததுபோல, உங்களுடைய சகோதரர்களையும் இளைப்பாறச்செய்து, யோர்தானுக்கு அப்புறத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும்வரை நீங்கள் இருந்து, பின்பு அவரவர் நான் உங்களுக்குக் கொடுத்த உங்களுடைய இடத்திற்குத் திரும்புவீர்களாக என்றேன்.
\s1 யோர்தானைக் கடந்துசெல்ல மோசேக்கு தடை
\p
\s5
\v 21 அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன்னுடைய கண்கள் கண்டது; நீ போய்ச்சேரும் எல்லா ராஜ்ஜியங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார்.
\v 22 அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்காகப் போர் செய்வார் என்று சொன்னேன்.
\s5
\v 23 அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி:
\v 24 கர்த்தராகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் துவங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய செயல்களுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன் யார்?
\v 25 நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி அனுமதி கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.
\s5
\v 26 கர்த்தரோ உங்கள்நிமித்தம் என்மேல் கோபம்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னுடன் பேசவேண்டாம்.
\v 27 நீ பிஸ்கா மலையுச்சியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை.
\s5
\v 28 நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த மக்களுக்கு முன்பாகக் கடந்துபோய், நீ காணும் தேசத்தை அவனே அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார்.
\v 29 பின்பு பெத்பெயோருக்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 கீழ்ப்படிவதற்கான கட்டளை
\p
\v 1 இஸ்ரவேலர்களே, நீங்கள் பிழைத்திருப்பதற்கும், உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் நுழைந்து அதைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கும், நீங்கள் கைக்கொள்வதற்காக நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்.
\v 2 நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
\s5
\v 3 பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதர்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடி அழித்துப்போட்டார்.
\v 4 ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்ட நீங்கள் எல்லோரும் இந்நாள்வரைக்கும் உயிரோடிருக்கிறீர்கள்.
\s5
\v 5 நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும்படி நுழையும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.
\v 6 ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; மக்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாக இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய மக்கள் கூட்டமே ஞானமும் விவேகமும் உள்ள மக்கள் என்பார்கள்.
\s5
\v 7 நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாகப் பெற்றிருக்கிற வேறே பெரிய மக்கள் கூட்டம் எது?
\v 8 இந்நாளில் நான் உங்களுக்கு கொடுக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுவதற்கும் இணையாக இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய மக்களும் எது?
\s5
\v 9 ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: மக்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கச்செய்வேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொன்ன நாளில்,
\v 10 உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறக்காமலிருக்கவும், நீ உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவைகள் உன் இருதயத்தைவிட்டு நீங்காமலிருக்கவும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவை கவனமாகக் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.
\s5
\v 11 நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.
\v 12 அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களுடன் பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு உருவத்தையும் காணவில்லை.
\s5
\v 13 நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.
\v 14 நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்தில் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்.
\s1 சிலைவழிபாடு தடைசெய்யப்படுதல்
\p
\s5
\v 15 கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடன் பேசின நாளில், நீங்கள் ஒரு உருவத்தையும் காணவில்லை.
\v 16 ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவமும், பெண் உருவமும்,
\v 17 பூமியிலிருக்கிற எந்தவொரு மிருகத்தின் உருவமும், ஆகாயத்தில் பறக்கிற இறக்கையுள்ள எந்தவொரு உருவமும்,
\v 18 பூமியிலுள்ள எந்தவொரு ஊரும் பிராணியின் உருவமும், பூமியின்கீழ் தண்ணீரிலுள்ள எந்தவொரு உயிரியின் உருவமாயிருக்கிற இவைகளில் எந்தவொரு உருவத்திற்கும் ஒப்பான சிலையை உங்களுக்கு உண்டாக்காமல்,
\s5
\v 19 உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா மக்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுதுவணங்க சம்மதிக்காமல், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
\v 20 இந்நாளில் நீங்கள் இருக்கிறதுபோல, தமக்குச் சொந்தமான மக்களாயிருக்க, கர்த்தர் உங்களைச் சேர்த்துக்கொண்டு, உங்களை எகிப்து என்னும் இரும்பு உலையிலிருந்து புறப்படச்செய்தார்.
\s5
\v 21 கர்த்தர் உங்களால் என்மேல் கோபங்கொண்டு, நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் நுழைவதில்லை என்றும் உறுதியாகக் கூறினார்.
\v 22 அதினால் இந்த தேசத்தில் நான் மரணமடையவேண்டும்; நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை; நீங்களோ கடந்துபோய், அந்த நல்ல தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள்.
\s5
\v 23 உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடன் செய்த உடன்படிக்கையை நீங்கள் மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர், வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான சிலையையும் உங்களுக்கு உண்டாக்காமல் எச்சரிக்கையாயிருங்கள்.
\v 24 உன் தேவனாகிய கர்த்தர் சுட்டெரிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.
\s5
\v 25 நீங்கள் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் பெற்று, தேசத்தில் அதிகநாட்கள் இருந்தபின்பு, நீங்கள் உங்களைக் கெடுத்து, எந்தவொரு சிலையையாவது எந்தவொரு சாயலான உருவத்தையாவது செய்து, உன் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால்,
\v 26 நீங்கள் யோர்தானைக்கடந்து சொந்தமாக்கப்போகிற தேசத்தில் இல்லாமல், சீக்கிரமாக முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சியாக வைக்கிறேன்; நீங்கள் அதிலே அதிகநாட்கள் இராமல் அழிக்கப்படுவீர்கள்.
\s5
\v 27 கர்த்தர் உங்களை யூதரல்லாத மக்களுக்குள்ளே சிதறடிப்பார்; கர்த்தர் உங்களைக் கொண்டுபோய் விடப்போகிற மக்களிடத்திலே கொஞ்ச மக்களாக மீந்திருப்பீர்கள்.
\v 28 அங்கே காணாமலும், கேளாமலும், சாப்பிடாமலும், முகராமலும் இருக்கிற மரமும் கல்லுமான, மனிதர்களுடைய கைவேலையாகிய தெய்வங்களை வணங்குவீர்கள்.
\s5
\v 29 அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்.
\s5
\v 30 நீ துன்பப்பட இவைகளெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்போது, கடைசி நாட்களில் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவாயானால்,
\v 31 உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருப்பதினால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் முற்பிதாக்களுக்குத் தாம் வாக்களித்துக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்.
\s1 கர்த்தரே தேவன்
\p
\s5
\v 32 தேவன் மனிதனைப் பூமியிலே படைத்த நாள்முதல், உனக்கு முன் இருந்த ஆதிநாட்களில், வானத்தின் ஒருமுனை துவங்கி அதின் மறுமுனைவரையுள்ள எவ்விடத்திலாகிலும் இப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ, இப்படிப்பட்ட காரியம் கேள்விப்பட்டதுண்டோ;
\v 33 அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டது போல, எந்தவொரு மக்களாவது கேட்டதும் உயிரோடிருந்ததும் உண்டோ,
\s5
\v 34 அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய மக்களின் நடுவிலிருந்து ஒரு மக்கள்கூட்டத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், போரினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வழிசெய்ததுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.
\s5
\v 35 கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறிந்துகொள்ள, இது உனக்குக் காட்டப்பட்டது.
\v 36 உனக்கு உபதேசிக்கும்படி, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கச்செய்து, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்.
\s5
\v 37 அவர் உன் முற்பிதாக்களிடத்தில் அன்பு செலுத்தியதால், அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு,
\v 38 உன்னிலும் பலத்த பெரிய மக்களை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச்சொந்தமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்திற்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.
\s5
\v 39 ஆகையால், உயர வானத்திலும் கீழே பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,
\v 40 நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கவும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீண்ட நாட்கள் வாழ்வதற்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான்.
\s1 அடைக்கலப் பட்டணங்கள்
\p
\s5
\v 41 முன்பகை இல்லாமல் கைதவறுதலாக மற்றவனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பி ஓடிப்போய்ப் பிழைத்திருப்பதற்கு,
\v 42 ரூபனியர்களைச் சேர்ந்த சமபூமியாகிய வனாந்திரத்திலுள்ள பேசேரும், காத்தியர்களைச் சேர்ந்த கீலேயாத்திலுள்ள ராமோத்தும், மனாசேயர்களைச் சேர்ந்த பாசானிலுள்ள கோலானுமாகிய,
\v 43 மூன்று பட்டணங்களை மோசே யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசையிலே ஏற்படுத்தினான்.
\s1 நியாயப்பிரமாணத்தின் அறிமுகம்
\p
\s5
\v 44 இதுவே மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த பிரமாணம்.
\v 45 இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, யோர்தானுக்கு இப்புறத்தில் எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுடைய தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே, அவர்களுக்கு மோசே சொன்ன சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
\v 46 மோசேயும் இஸ்ரவேல் மக்களும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு அந்த ராஜாவைத் தோற்கடித்து,
\s5
\v 47 யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசையில் அர்னோன் ஆற்றங்கரையிலுள்ள ஆரோவேர் துவங்கி எர்மோன் என்னும் சீயோன் மலைவரைக்கும் உள்ள தேசமும்,
\v 48 யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசையிலே அஸ்தோத் பிஸ்காவுக்கும் தாழ்ந்த சமவெளியைச்சேர்ந்த கடல் வரையுள்ள சமவெளி அனைத்துமாகிய,
\v 49 எமோரியர்களுடைய இரண்டு ராஜாக்களின் தேசங்களான சீகோனுடைய தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 பத்துக் கட்டளைகள்
\p
\v 1 மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலர்களே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்வதற்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
\v 2 நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்முடன் உடன்படிக்கை செய்தார்.
\v 3 அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய முற்பிதாக்களுடன் செய்யாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம் அனைவரோடும் செய்தார்.
\s5
\v 4 கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாக உங்களோடு பேசினார்.
\v 5 கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிப்பதற்கு, அக்காலத்திலே நான் கர்த்தருக்கும், உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்:
\v 6 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உன் தேவனாகிய கர்த்தர் நானே.
\s5
\v 7 என்னைத்தவிர உனக்கு வேறு தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
\v 8 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு உருவத்தையாகிலும் யாதொரு சிலையையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.
\s5
\v 9 நீ அவைகளை வணங்கவும் பூஜை செய்யவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து முற்பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
\v 10 என்னிடத்தில் அன்புசெலுத்தி, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரைக்கும் இரக்கம்செய்கிறவராயிருக்கிறேன்.
\s5
\v 11 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்தாதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்துகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார்.
\s5
\v 12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிப்பாயாக.
\v 13 ஆறு நாளும் நீ வேலைசெய்து, உன் செயல்களையெல்லாம் நடப்பிப்பாயாக.
\v 14 ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், மகளானாலும், வேலைக்காரனானாலும், வேலைக்காரியானாலும், எருதானாலும், கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் எந்தவொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும், வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;
\s5
\v 15 நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படச்செய்தார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை அனுசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.
\s5
\v 16 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், தாயையும் மதிப்புடன் நடத்துவாயாக.
\s5
\v 17 கொலை செய்யாதிருப்பாயாக.
\v 18 விபசாரம் செய்யாதிருப்பாயாக.
\v 19 திருடாதிருப்பாயாக.
\v 20 மற்றவனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
\s5
\v 21 மற்றவனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; அவனுடைய வீட்டையும், நிலத்தையும், வேலைக்காரனையும், வேலைக்காரியையும், எருதையும், கழுதையையும், மேலும் அவனுக்குச் சொந்தமான எதையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
\s5
\v 22 இந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினி, மேகம், காரிருள் ஆகியவற்றிலிருந்து உங்கள் சபையார் அனைவரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடத்தில் கொடுத்தார்.
\s5
\v 23 மலை அக்கினியாக எரியும்போது இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவர்களும் மூப்பர்களுமாகிய நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து:
\v 24 இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து பேசின அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனிதனுடன் பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளிலே கண்டோம்.
\s5
\v 25 இப்பொழுது நாங்கள் ஏன் சாகவேண்டும்? இந்தப் பெரிய அக்கினி எங்களை சுட்டெரிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்போமானால் சாவோம்.
\v 26 நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டா?
\v 27 நீரோ அருகில் சென்று, நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு, அவைகளை நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்.
\s5
\v 28 நீங்கள் என்னுடன் பேசும்போது, கர்த்தர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தர் என்னை நோக்கி; இந்த மக்கள் உன்னிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாக இருந்தது.
\v 29 அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருப்பதற்கு, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.
\v 30 நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள் என்று அவர்களுக்குச் சொல்.
\s5
\v 31 நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய சகல கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார்.
\s5
\v 32 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய கவனமாக இருங்கள்; வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்பீர்களாக.
\v 33 நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்திலே பிழைத்து சுகமாக நீண்டநாட்கள் வாழ, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு ஏற்படுத்தின வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\s1 உன் தேவனாகிய கர்த்தரிடம் அன்புசெலுத்து
\p
\v 1 நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம், நீயும் உன் மகனும், மகளும், நான் உனக்கு கொடுக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினால் உன் வாழ்நாட்கள் நீடித்திருப்பதற்கு,
\v 2 நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்களுடைய தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும், கட்டளைகளும், நியாயங்களும் இவைகளே.
\s5
\v 3 இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் பெருகுவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யக் கவனமாயிரு.
\s5
\v 4 இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
\v 5 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக.
\s5
\v 6 இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது.
\v 7 நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குத் தெளிவாகப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி,
\s5
\v 8 அவைகளை உன் கைகளிலே அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாக இருக்கக்கடவது.
\v 9 அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.
\s5
\v 10 உன் தேவனாகிய கர்த்தர், உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களாகிய உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்தில் உன்னை நுழையச்செய்யும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,
\v 11 நீ நிரப்பாத சகல நல்ல பொருட்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் ஏற்கனவே வெட்டப்பட்டிருக்கிற கிணறுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும்,
\v 12 நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படச்செய்த கர்த்தரை மறக்காதபடி எச்சரிக்கையாயிரு.
\s5
\v 13 உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே வாக்குறுதி கொடுப்பாயாக.
\v 14 உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் ஏற்பட்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடி, உங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களின் தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.
\v 15 உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே.
\s5
\v 16 நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரை சோதித்துப்பார்க்காதீர்கள்.
\v 17 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும், சாட்சிகளையும், கட்டளைகளையும் அக்கறையுடன் கைக்கொள்வீர்களாக.
\s5
\v 18 நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த நல்ல தேசத்தில் நீ நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கும்,
\v 19 கர்த்தர் தாம் சொன்னபடி, உன் எதிரிகளையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாக இருக்கிறதைச் செய்வாயாக.
\s5
\v 20 நாளைக்கு உன் மகன்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்த சாட்சிகளும், கட்டளைகளும், நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்;
\v 21 நீ உன் மகனை நோக்கி: நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம்; கர்த்தர் பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.
\v 22 கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன் மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து,
\v 23 தாம் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திற்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுப்பதற்காக எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படச்செய்தார்.
\s5
\v 24 இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்.
\v 25 நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யக் கவனமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 மக்களைத் துரத்திவிடுதல்
\p
\v 1 நீ சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நுழையச்செய்து, உன்னைவிட எண்ணிக்கையிலும் பெலத்திலும் மிகுந்த மக்களாகிய ஏத்தியர்கள், கிர்காசியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் ஏழு பலத்த தேசங்களை உனக்கு முன்பாகத் துரத்தி,
\s5
\v 2 உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களைத் தாக்கி, முற்றிலும் அழித்துவிடவேண்டும்; அவர்களுடன் உடன்படிக்கைசெய்யவும் அவர்களுக்கு மனமிரங்கவும் வேண்டாம்.
\v 3 அவர்களுடன் சம்பந்தம் ஏற்படுத்தக்கூடாது; உன் மகள்களை அவர்கள் மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உன் மகன்களுக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக.
\s5
\v 4 என்னைப் பின்பற்றாமல், அந்நிய தெய்வங்களை வணங்கும்படி அவர்கள் உன்னுடைய மகன்களை விலகச்செய்வார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.
\v 5 நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளை உடைத்து, தோப்புகளை வெட்டி, சிலைகளை அக்கினியிலே எரித்துவிடவேண்டும்.
\s5
\v 6 நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த மக்கள், பூமியிலுள்ள எல்லா மக்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருப்பதற்காகத் தெரிந்துகொண்டார்.
\s5
\v 7 சகல மக்களிலும் நீங்கள் எண்ணிக்கையில் அதிகமான மக்களென்று கர்த்தர் உங்கள்மேல் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் எல்லா மக்களிலும் சிறிய கூட்டமாயிருந்தீர்கள்.
\v 8 கர்த்தர் உங்களில் அன்புசெலுத்தியதாலும், உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படச்செய்து, அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்தும், அதின் ராஜாவான பார்வோனின் கையிலிருந்தும் உங்களை மீட்டுக்கொண்டார்.
\s5
\v 9 ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புவைத்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைவரை உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்,
\v 10 தம்மைப் பகைக்கிறவர்களுக்கு வெளிப்படையாகப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் வெளிப்படையாகப் பதிலளிப்பார் என்றும் நீ அறியக்கடவாய்.
\v 11 ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்வாயாக.
\s5
\v 12 இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து,
\v 13 உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்து, கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகச்செய்து, உன் கர்ப்பப்பிறப்புகளையும், உன் நிலத்தின் பலன்களாகிய தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.
\s5
\v 14 சகல மக்களைவிட நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் கால்நடைகளுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடு இருப்பதில்லை.
\v 15 கர்த்தர் சகல நோய்களையும் உன்னை விட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியர்களின் கொடிய வியாதிகளில் ஒன்றும் உன்மேல் வரச்செய்யாமல், உன்னைப் பகைக்கிற அனைவரின்மேலும் அவைகளை வரச்செய்வார்.
\s5
\v 16 உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும் சகல மக்களையும் நிர்மூலமாக்கக்கடவாய்; உன் கண் அவர்களுக்கு இரக்கம்காட்டாமல் இருப்பதாக; அவர்கள் தெய்வங்களை நீ வழிபடாமல் இருப்பாயாக; அது உனக்குக் கண்ணியாக இருக்கும்.
\s5
\v 17 அந்த மக்கள்கூட்டத்தினர் என்னைவிட எண்ணிக்கையில் அதிகமுள்ளவர்கள், நான் அவர்களைத் துரத்திவிடுவது எப்படி என்று உன் இருதயத்தில் சொல்லிக்கொள்வாயானால்,
\v 18 உன் தேவனாகிய கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தியர்கள் அனைவருக்கும் செய்ததையும்,
\v 19 உன்னுடைய கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும், அற்புதங்களையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புறப்படச்செய்து காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாக நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ யாரைப்பார்த்துப் பயப்படுகிறாயோ அவர்களுக்கும் உன் தேவனாகிய கர்த்தர் அப்படியே செய்வார்.
\s5
\v 20 மீதியாயிருந்து உன் கண்களுக்குத்தப்பி ஒளிந்துகொள்ளுகிறவர்களும் அழிந்துபோகும்வரை உன் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குள்ளே குளவிகளை அனுப்புவார்.
\v 21 அவர்களைப் பார்த்து பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.
\v 22 அந்த மக்களை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாக உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒரேசமயத்தில் அழிக்கவேண்டாம்; அழித்தால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.
\s5
\v 23 உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவர்கள் அழியும்வரை அவர்களை மிகவும் கலங்கடிப்பார்.
\v 24 அவர்களுடைய ராஜாக்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பார்; அவர்களுடைய பெயர் வானத்தின்கீழ் இராதபடி அவர்களை அழிக்கக்கடவாய்; நீ அவர்களை அழித்துமுடியும்வரை ஒருவரும் உனக்கு எதிர்த்து நிற்கமாட்டார்கள்.
\s5
\v 25 அவர்களுடைய தெய்வங்களின் சிலைகளை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடி, அவைகளில் இருக்கிற வெள்ளியையும், பொன்னையும் ஆசைப்படாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
\v 26 அவைகளைப்போல நீ சாபத்திற்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிற்குக் கொண்டுபோகாதே; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருக்கக்கடவாய், அது சாபத்திற்குள்ளானது.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 கர்த்தரை மறக்காதே
\p
\v 1 நீங்கள் பிழைத்து, பெருகி, கர்த்தர் உங்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திலே நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கு நான் இன்று உங்களுக்கு கொடுக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யக் கவனமாயிருப்பீர்களாக.
\v 2 உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருடங்களும் வனாந்திரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.
\s5
\v 3 அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனிதன் உணவினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்துவதற்கு, நீயும் உன் முற்பிதாக்களும் அறியாமலிருந்த மன்னாவினால் உன்னைப் பராமரித்தார்.
\s5
\v 4 இந்த நாற்பது வருடங்களும் உன்மேல் இருந்த ஆடை பழையதாகிப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை.
\v 5 ஒருவன் தன் மகனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.
\v 6 ஆகையால், உன் தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படி, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்.
\s5
\v 7 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே நுழையச்செய்கிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளுமுள்ள தேசம்;
\v 8 அது கோதுமையும், வாற்கோதுமையும், திராட்சைச்செடிகளும், அத்திமரங்களும், மாதுளம்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும், தேனுமுள்ள தேசம்;
\s5
\v 9 அது குறையில்லாமல் அப்பம் சாப்பிடத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அதின் கற்கள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டியெடுக்கத்தக்க மலைகள் உள்ளதுமான தேசம்.
\v 10 ஆகையால், நீ சாப்பிட்டுத் திருப்தியடைந்திருக்கும்போது, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்.
\s5
\v 11 உன் தேவனாகிய கர்த்தரை மறக்காதபடிக்கும், நான் இன்று உனக்குக் கொடுக்கிற அவருடைய கற்பனைகளையும், நியாயங்களையும், கட்டளைகளையும், கைக்கொள்ளாமல் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
\v 12 நீ சாப்பிட்டுத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும்,
\s5
\v 13 உன் ஆடுமாடுகள் மிகுதியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் பெருகும்போதும்,
\v 14 உன் இருதயம் பெருமைகொள்ளாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தவரும்,
\s5
\v 15 உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்வதற்காக, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும், தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்திரத்தின்வழியாக உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்தவரும்,
\v 16 உன்னுடைய முற்பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்திரத்திலே உன்னைப் பராமரித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறக்காமலும்,
\v 17 என் திறமையும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,
\s5
\v 18 உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.
\v 19 உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறு தெய்வங்களைப் பின்பற்றி அவைகளை வணங்கி, அவைகளைப் பணிந்துகொள்வாயானால், நிச்சயமாக அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கிறேன்.
\v 20 உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த மக்களைப்போல நீங்களும் அழிவீர்கள்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 நீதியினால் அல்ல
\p
\v 1 இஸ்ரவேலே, கேள்: நீ இப்பொழுது யோர்தானைக் கடந்து, உன்னைவிட எண்ணிக்கையில் அதிகமும், பலத்ததுமான மக்களைத் துரத்தி, மிக உயர்ந்த மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களைப் பிடித்து,
\v 2 ஏனாக்கின் மகன்களாகிய பெரியவர்களும் உயரமானவர்களுமான மக்களைத் துரத்திவிடப்போகிறாய்; இவர்களுடைய செய்தியை நீ அறிந்து, ஏனாக்கின் மகன்களுக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய்.
\s5
\v 3 உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் செல்கிறவர் என்பதை இன்று அறிந்துகொள்; அவர் சுட்டெரித்துப்போடுகிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழச்செய்வார்; இவ்விதமாகக் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களை சீக்கிரமாகத் துரத்தி, அவர்களை அழிப்பாய்.
\s5
\v 4 உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்தும்போது, நீ உன் இருதயத்திலே: என் நீதியினால் இந்த தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வதற்காக கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாதே; அந்த மக்களுடைய ஒழுக்கக்கேடுகளின் காரணமாக கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.
\s5
\v 5 உன் நீதியினாலும், உன் இருதயத்தினுடைய உத்தமத்தினாலும் நீ அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள நுழைவதில்லை; அந்த மக்களுடைய ஒழுக்கக்கேடுகளின் காரணமாகவும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் முற்பிதாக்களுக்குக் கர்த்தர் வாக்களித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவதற்காகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.
\s5
\v 6 ஆகையால், உன் நீதியினிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அந்த நல்ல தேசத்தைச் சொந்தமாகக் கொடுக்கமாட்டார் என்பதை அறிந்துகொள்; நீ பிடிவாத குணமுள்ள மக்கள் கூட்டம்.
\s1 பொன் கன்றுக்குட்டி
\p
\s5
\v 7 நீ வனாந்திரத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதை நினைத்துக்கொள், அதை மறக்காதே; நீங்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல், இந்த இடத்திற்கு வந்துசேரும்வரை, கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்செய்தீர்கள்.
\v 8 ஓரேபிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதால், கர்த்தர் உங்களை அழித்துப்போடும்அளவிற்கு கோபப்பட்டார்.
\s5
\v 9 கர்த்தர் உங்களுடன்செய்த உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாட்கள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருந்தேன்.
\v 10 அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதப்பட்டிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்படைத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையின்மேல் அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதப்பட்டிருந்தது.
\s5
\v 11 இரவும் பகலும் நாற்பதுநாட்கள் முடிந்து, கர்த்தர் எனக்கு அந்த உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகளைக் கொடுக்கிறபோது,
\v 12 கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாக இந்த இடத்தைவிட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன்னுடைய மக்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டுவிலகி, வார்ப்பிக்கப்பட்ட சிலையைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார்.
\s5
\v 13 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: இந்த மக்களைப் பார்த்தேன்; அவர்கள் பிடிவாத குணமுள்ள மக்கள்.
\v 14 ஆகையால், நான் அவர்களை அழித்து, அவர்கள் பெயரை வானத்தின் கீழ் இல்லாமல்போகச்செய்ய, நீ என்னை விட்டுவிடு; அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பலத்ததும் எண்ணிக்கையில் அதிகமானதுமான தேசமாக்குவேன் என்றார்.
\s5
\v 15 அப்பொழுது நான் மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினியால் பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளில் இருந்தது.
\v 16 நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவம்செய்து, வார்ப்பிக்கப்பட்டக் கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாக விட்டுவிலகினதைக் கண்டேன்.
\s5
\v 17 அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் தூக்கி எறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன்.
\v 18 கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து, நடப்பித்த உங்களுடைய சகல பாவங்களுக்காகவும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்புபோல இரவும்பகலும் நாற்பது நாட்கள் விழுந்து கிடந்தேன்; நான் அப்பம் சாப்பிடவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.
\s5
\v 19 கர்த்தர் உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும் பயங்கரத்திற்கும் பயந்திருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டார்.
\v 20 ஆரோன் மேலும் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டும் என்றிருந்தார்; அப்பொழுது ஆரோனுக்காகவும் விண்ணப்பம்செய்தேன்.
\s5
\v 21 உங்கள் பாவச்செயலாகிய அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து அக்கினியில் எரித்து, அதை நொறுக்கி, தூளாகப் போகும்வரை அரைத்து, அந்தத் தூளை மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலே போட்டுவிட்டேன்.
\s5
\v 22 தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள்.
\v 23 நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் காதேஸ்பர்னேயாவிலிருந்து உங்களை அனுப்பும்போது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை விசுவாசிக்காமலும், அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமலும், அவருடைய வாக்குக்கு விரோதமாகக் கலகம்செய்தீர்கள்.
\v 24 நான் உங்களை அறிந்த நாள் முதற்கொண்டு, நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம் செய்கிறவர்களாயிருந்தீர்கள்.
\s5
\v 25 உங்களை அழிப்பேன் என்று கர்த்தர் சொன்னதினால், நான் முன்புபோல கர்த்தரின் சமுகத்தில் இரவும்பகலும் நாற்பது நாட்கள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிச் செய்த விண்ணப்பம் என்னவென்றால்:
\v 26 கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே மீட்டு, பலத்த கையினால் எகிப்திலிருந்து கொண்டுவந்த உமது மக்களையும், உமக்குச் சொந்தமானதையும் அழிக்காதிருங்கள்
\s5
\v 27 கர்த்தர் அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்திருந்த தேசத்தில் அவர்களை நுழையச்செய்ய முடியாமற்போனதினாலும், அவர்களை வெறுத்ததினாலும், அவர்களை வனாந்திரத்தில் கொன்றுபோடுவதற்கே கொண்டுவந்தார் என்று நாங்கள் விட்டுப் புறப்படும்படி நீர் செய்த தேசத்தின் குடிகள் சொல்லாதபடி,
\v 28 தேவரீர் இந்த மக்களின் முரட்டாட்டத்தையும், ஒழுக்கக்கேடுகளையும், பாவத்தையும் பாராமல், உம்முடையவர்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களை நினைத்தருளும்.
\v 29 நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படச்செய்த இவர்கள் உமது மக்களும் உமது சொந்தமுமாக இருக்கிறார்களே என்று விண்ணப்பம்செய்தேன்.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 கற்பலகைகள்
\p
\v 1 அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முன்னிருந்ததைப் போலவே இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்திற்கு வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.
\v 2 நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார்.
\s5
\v 3 அப்படியே நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முன்னிருந்ததைப் போலவே இரண்டு கற்பலகைகளை வெட்டி, அவைகளை என் கையிலே எடுத்துக்கொண்டு மலையில் ஏறினேன்.
\v 4 முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர், மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்குச் சொன்ன பத்துக்கற்பனைகளையும் முன்பு அவர் எழுதியிருந்ததுபோலவே அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்.
\s5
\v 5 அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைக்கப்பட்டிருக்கிறது.
\s5
\v 6 பின்பு இஸ்ரவேல் மக்கள் பெனெயாக்கானுக்கடுத்த பேரோத்திலேயிருந்து மோசெராவுக்குப் பிரயாணம்செய்தார்கள்; அங்கே ஆரோன் மரணமடைந்து, அடக்கம்செய்யப்பட்டான்; அவனுடைய இடத்திலே அவன் மகனாகிய எலெயாசார் ஆசாரியனானான்.
\v 7 அங்கேயிருந்து குத்கோதாவுக்கும், குத்கோதாவிலிருந்து ஆறுகளுள்ள நாடாகிய யோத்பாத்திற்கும் பிரயாணம்செய்தார்கள்.
\s5
\v 8 அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவருடைய நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார்.
\v 9 ஆகையால் லேவிக்கு அவன் சகோதரர்களுடன் பங்கும் சொத்தும் இல்லை; உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடியே, கர்த்தரே அவனுக்கு சொத்து.
\s5
\v 10 நான் முன்புபோலவே நாற்பது நாட்கள் இரவும்பகலும் மலையில் இருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டு, உன்னை அழிக்காமல் விட்டார்.
\v 11 கர்த்தர் என்னை நோக்கி: நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில் அவர்கள் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்காக, நீ எழுந்து, மக்களுக்கு முன்பாகப் பிரயாணப்பட்டுப் போ என்றார்.
\s1 கர்த்தருக்குப் பயப்படுதல்
\p
\s5
\v 12 இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புசெலுத்தி, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு,
\v 13 நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாவதற்கு கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
\s5
\v 14 இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.
\v 15 ஆனாலும் கர்த்தர் உன் முற்பிதாக்கள்மேல் அன்புசெலுத்துவதற்காக அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல மக்களுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார்.
\s5
\v 16 ஆகையால் நீங்கள் இனி நீங்கள் பிடிவாதம் செய்யாமல், உங்கள் இருதயத்தை விருத்தசேதனம் செய்யுங்கள்.
\v 17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாக இருக்கிறார்; அவர் பட்சபாதம்செய்கிறவரும் அல்ல, லஞ்சம் வாங்குகிறவரும் அல்ல.
\s5
\v 18 அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயம்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு உணவும் உடையும் கொடுக்கிறவருமாக இருக்கிறார்.
\v 19 நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்ததினால், அந்நியர்களைச் சிநேகிப்பீர்களாக.
\s5
\v 20 உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைப் பணிந்துகொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக.
\v 21 அவரே உன் புகழ்ச்சி; உன் கண்கள் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன்னுடையதேவன் அவரே.
\s5
\v 22 உன் முற்பிதாக்கள் எழுபதுபேராக எகிப்திற்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய பெருக்கத்திலே வானத்தின் நட்சத்திரங்களைப் போலாக்கினார்.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\s1 தேவனுக்குக் கீழ்ப்படிதல்
\p
\v 1 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய பிரமாணங்களையும், கட்டளைகளையும், நியாயங்களையும், கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக.
\s5
\v 2 உங்களுடைய தேவனாகிய கர்த்தருடைய தண்டனையையும், அவருடைய மகத்துவத்தையும், பலத்த கையையும், ஓங்கிய புயத்தையும்,
\v 3 அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய செயல்களையும்,
\s5
\v 4 எகிப்திய படையும் அவர்களுடைய குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின்தொடர்ந்து வரும்போது, கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை அவர்கள்மேல் புரளச்செய்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செயலையும்,
\v 5 நீங்கள் இவ்விடத்திற்கு வரும்வரை அவர் உங்களுக்கு வனாந்திரத்தில் செய்ததையும்,
\s5
\v 6 ரூபன் வம்சத்தைச் சேர்ந்த எலியாபின் மகன்களான தாத்தானையும், அபிராமையும், அவர்களுடைய குடும்பங்களையும், அவர்களுடைய கூடாரங்களையும், இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருட்களையும் பூமி தன் வாயைத் திறந்து விழுங்கச்செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்துகொள்ளுங்கள்.
\v 7 கர்த்தர் செய்த மகத்துவமான செயல்களையெல்லாம் உங்களுடைய கண்கள் அல்லவோ கண்டது.
\s5
\v 8 ஆகையால் நீங்கள் பலப்படுவதற்கும்,
\v 9 நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்திற்குள் நுழைந்து அதைச் சொந்தமாக்குவதற்கும், கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழ்வதற்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக.
\s5
\v 10 நீ சொந்தமாக்கப்போகிற தேசம், நீ விட்டுவந்த எகிப்துதேசத்தைப்போல் இருக்காது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.
\v 11 நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ள தேசம்; அது வானத்தின் மழைத்தண்ணீரைக் குடிக்கும் தேசம்;
\v 12 அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருடத்தின் துவக்கமுதல் வருடத்தின் முடிவுவரை எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.
\s5
\v 13 நீங்கள் உங்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்தி, அவரைப் பணிந்துகொள்ள, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால்,
\v 14 நீ உன்னுடைய தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும் சேர்க்கும்படி, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யச்செய்து,
\v 15 மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படிச் செய்வேன், நீ சாப்பிட்டுத் திருப்தியடைவாய் என்கிறார்.
\s5
\v 16 உங்களுடைய இருதயம் ஏமாற்றப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தெய்வங்களைப் பணிந்துகொண்டு, அவைகளை வணங்காமலும் இருக்க எச்சரிக்கையாயிருங்கள்.
\v 17 இல்லாவிட்டால் கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் வந்து, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடுக்காமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள்.
\s5
\v 18 ஆகையால் கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்த தேசத்தில் உங்களுடைய நாட்களும், உங்களுடைய பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும்வரை நீடித்திருப்பதற்கு,
\v 19 நீங்கள் என் வார்த்தைகளை உங்களுடைய இருதயத்திலும் உங்களுடைய ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,
\s5
\v 20 அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக.
\v 21 அவைகளை உங்களுடைய வீட்டு நிலைகளிலும் உங்களுடைய வாசல்களிலும் எழுதுவீர்களாக.
\s5
\v 22 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் கவனமாகக் கைக்கொள்வீர்களானால்,
\v 23 கர்த்தர் உங்களுக்கு முன்பாக அந்த மக்களையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் எண்ணிக்கையில் அதிகமும், பலத்ததுமான மக்களை நீங்கள் துரத்துவீர்கள்.
\s5
\v 24 உங்களுடைய உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்திரத்தையும் லீபனோனையும் துவங்கி, ஐப்பிராத்து நதியையும் துவங்கி, கடைசி சமுத்திரம்வரைக்கும் உங்களுடைய எல்லையாக இருக்கும்.
\v 25 ஒருவரும் உங்களுக்கு எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் திகிலும் நீங்கள் மிதிக்கும் பூமியின்மேலெல்லாம் வரச்செய்வார்.
\s5
\v 26 இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.
\v 27 இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்,
\v 28 எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தெய்வங்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.
\s5
\v 29 நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நுழையச்செய்யும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும், ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறவேண்டும்.
\v 30 அவைகள் யோர்தானுக்கு அப்புறத்திலே சூரியன் மறைகிற மேற்குவழியாகக் கானானியர்கள் குடியிருக்கிற பகுதியிலே, கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகேயல்லவோ இருக்கிறது?
\s5
\v 31 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கு, நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதிலே குடியிருப்பீர்கள்.
\v 32 ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\s1 ஆராதனைசெய்ய ஒரே இடம்
\p
\v 1 உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர், நீங்கள் சொந்தமாக்கிக்கொள்வதற்காக உங்களுக்கு கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியமங்களுமாவன:
\v 2 நீங்கள் துரத்திவிடும் மக்கள் தங்கள் தெய்வங்களை வணங்கிய உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,
\s5
\v 3 அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, தெய்வங்களின் சிலைகளை நொறுக்கி, அவைகளின் பெயரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.
\v 4 உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் அப்படிச் செய்யாமல்,
\s5
\v 5 உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் இடமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,
\v 6 அங்கே உங்களுடைய சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், தசமபாகங்களையும், உங்களுடைய கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், பொருத்தனைகளையும், உற்சாகபலிகளையும், ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து,
\s5
\v 7 அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே சாப்பிட்டு, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான எல்லாவற்றிக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.
\s5
\v 8 இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.
\v 9 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும், தேசத்திலும் நீங்கள் இன்னும் நுழையவில்லையே.
\s5
\v 10 நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் குடியேறும்போதும், சுற்றிலும் இருக்கிற உங்களுடைய எதிரிகளையெல்லாம் அவர் விலக்கி, உங்களை இளைப்பாறச்செய்கிறதினால் நீங்கள் சுகமாக வாழ்ந்திருக்கும்போதும்,
\v 11 உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்களுடைய சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், தசமபாகங்களையும், உங்களுடைய கை ஏறெடுத்துப்படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,
\s5
\v 12 உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நீங்களும், உங்களுடைய மகன்களும், மகள்களும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், உங்களுடன் பங்கும் சொத்தும் இல்லாமல் உங்களுடைய வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக.
\s5
\v 13 நீ நினைத்த இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாதபடி எச்சரிக்கையாயிரு.
\v 14 உன் கோத்திரங்களின் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில் மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.
\s5
\v 15 ஆனாலும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, நீ உன் வாசல்களிலெங்கும் உன் விருப்பப்படியே மிருகஜீவன்களை அடித்து சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் சாப்பிடுவதுபோல சாப்பிடலாம்.
\v 16 இரத்தத்தை மாத்திரம் சாப்பிடவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.
\s5
\v 17 உன்னுடைய தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் சாப்பிடவேண்டாம்.
\s5
\v 18 உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில் நீயும் உன் மகனும், மகளும், வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைச் சாப்பிட்டு, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.
\v 19 நீ உன் தேசத்திலிருக்கும் நாட்களெல்லாம் லேவியனைக் கைவிடாதபடி எச்சரிக்கையாயிரு.
\s5
\v 20 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, அவர் உன் எல்லையை விரிவாக்கும்போது, நீ இறைச்சியைச் சாப்பிட ஆசைகொண்டு, இறைச்சி சாப்பிடுவேன் என்பாயானால், நீ உன் விருப்பப்படி இறைச்சி சாப்பிடலாம்.
\s5
\v 21 உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படித் தெரிந்துகொள்ளும் இடம் உனக்குத் தூரமானால், கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் ஆடுமாடுகளில் எதையாகிலும் நான் உனக்குக் கட்டளையிட்டபடி நீ அடித்து, உன் விருப்பப்படி உன் வாசல்களிலே சாப்பிடலாம்.
\v 22 வெளிமானையும் கலைமானையும் சாப்பிடுவதுபோல நீ அதைச் சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைச் சாப்பிடலாம்.
\s5
\v 23 இரத்தத்தை மாத்திரம் சாப்பிடாதபடி எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே இரத்தத்தையும் சாப்பிடவேண்டாம்.
\v 24 அதை நீ சாப்பிடாமல் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.
\v 25 நீ கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடக்கூடாது.
\s5
\v 26 உனக்குரிய பரிசுத்த பொருட்களையும், உன் பொருத்தனைகளையும் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திற்கு நீ கொண்டுவந்து,
\v 27 உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்ற பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படக்கடவது; மாம்சத்தையோ நீ சாப்பிடலாம்.
\s5
\v 28 நீ உன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருப்பதற்கு, நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள்.
\s5
\v 29 நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தின் மக்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாக அகற்றும்போதும், நீ அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கி அதிலே குடியிருக்கும்போதும்,
\v 30 அவர்கள் உனக்கு முன்பாக அழிக்கப்பட்டபின்பு, நீ அவர்களைப் பின்பற்றிச் சிக்கிக்கொள்ளாதபடிக்கும், இந்த மக்கள் தங்கள் தெய்வங்களை வணங்கியதுபோல நானும் வணங்குவேன் என்று சொல்லி அவர்களுடைய தெய்வங்களைக்குறித்துக் கேட்டு விசாரிக்காதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
\s5
\v 31 உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாமலிருப்பாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்து தங்கள் மகன்களையும், மகள்களையும் தங்கள் தெய்வங்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.
\v 32 நான் உனக்குக் கொடுக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனுடன் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 அந்நிய தெய்வங்களை வணங்குதல்
\p
\v 1 உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி:
\v 2 நீங்கள் அறியாத வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவர்களை வணங்குவோம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாகச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும்,
\v 3 அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேட்காதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்துகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.
\s5
\v 4 நீங்கள் உங்களுடைய தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.
\v 5 அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைவிட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப்பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக.
\s5
\v 6 உன் தாய்க்குப் பிறந்த உன்னுடைய சகோதரனாகிலும், உன்னுடைய மகனாகிலும், மகளாகிலும், உன் மனைவியாகிலும், உன் உயிரைப்போலிருக்கிற உன்னுடைய நண்பனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தெய்வங்களை வணங்குவோம் வாருங்கள் என்று சொல்லி,
\v 7 உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை துவங்கி மறுமுனைவரையுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற மக்களுடைய தெய்வங்களில், நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத அந்நிய தெய்வங்களை வணங்கும்படி இரகசியமாக உன்னைத் தூண்டிவிட்டால்,
\s5
\v 8 நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கம்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்துவைக்காமலும்,
\v 9 அவனைக் கொலை செய்துவிடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதலில் உன் கையும் பின்பு சகல மக்களின் கைகளும் அவன்மேல் இருக்கக்கடவது.
\s5
\v 10 அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படச்செய்த உன் தேவனாகிய கர்த்தரை விட்டுவிலகும்படி அவன் உன்னை தூண்டியதால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறியக்கடவாய்.
\v 11 இஸ்ரவேலர்கள் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாமலிருப்பார்கள்.
\s5
\v 12 உன் தேவனாகிய கர்த்தர் நீ குடியிருப்பதற்குக் கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் வீணர்களாகிய துன்மார்க்கர்கள் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு,
\v 13 நீங்கள் அறியாத வேறே தெய்வங்களை வணங்குவதற்குப் போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிமக்களைத் தூண்டினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது,
\v 14 நீ நன்றாக விசாரித்து, ஆராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது உண்மையும் நிச்சயமும் என்று கண்டால்,
\s5
\v 15 அந்தப் பட்டணத்தின் குடிமக்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள அனைத்தையும் அதின் மிருகஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்து,
\v 16 அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கென்று அந்தப் பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப்பட்ட அனைத்தையும் முழுவதுமாக அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல் என்றென்றைக்கும் மண்மேடாயிருக்கக்கடவது.
\s5
\v 17 சபிக்கப்பட்ட பொருட்களில் ஒன்றும் உன் கையில் இருக்கவேண்டாம். நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால்,
\v 18 கர்த்தர் தமது கோபத்தின் பயங்கரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைவு செய்து, உனக்கு மனமிரங்கி, அவர் உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடி உன்னைப் பெருகச்செய்வார்.
\s5
\c 14
\cl அத்தியாயம்– 14
\s1 சுத்தமான மற்றும் அசுத்தமான உணவுகள்
\p
\v 1 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் காயப்படுத்திக்கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்செய்யாமலும் இருப்பீர்களாக.
\v 2 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான மக்கள்; பூமியின் மீதெங்குமுள்ள எல்லா மக்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்தமான மக்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.
\s5
\v 3 அருவருப்பான ஒன்றையும் சாப்பிடவேண்டாம்.
\v 4 நீங்கள் சாப்பிடுவதற்கேற்ற மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,
\v 5 மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், மலை ஆடுகளுமே.
\s5
\v 6 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் சாப்பிடலாம்;
\v 7 அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் சாப்பிடக்கூடாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முயலும், குழிமுயலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
\s5
\v 8 பன்றியும் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தை சாப்பிடாமலும் இவைகளின் உடலைத்தொடாமலும் இருப்பீர்களாக.
\s5
\v 9 தண்ணீரிலிருக்கிற எல்லாவற்றிலும் துடுப்பும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் சாப்பிடலாம்.
\v 10 துடுப்பும் செதிளும் இல்லாத யாதொன்றையும் சாப்பிடக்கூடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
\s5
\v 11 சுத்தமான சகல பறவைகளையும் நீங்கள் சாப்பிடலாம்.
\v 12 நீங்கள் சாப்பிடக்கூடாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
\v 13 பைரியும், வல்லூறும், சகலவித பருந்தும்,
\s5
\v 14 சகலவித காகங்களும்,
\v 15 தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும்,
\v 16 ஆந்தையும், கோட்டானும், நாரையும்,
\v 17 கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும்,
\s5
\v 18 கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே.
\v 19 பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் சாப்பிடக்கூடாதவைகள்.
\v 20 சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் சாப்பிடலாம்.
\s5
\v 21 தானாக இறந்துபோன எதையும் சாப்பிடவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற அந்நியனுக்கு அதை சாப்பிடக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்களுடைய தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த மக்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
\s1 தசமபாகங்கள்
\p
\s5
\v 22 நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படி, வருடந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
\v 23 உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சைரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் சாப்பிடுவாயாக.
\s5
\v 24 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படித் தெரிந்துகொண்ட இடம் உனக்கு வெகுதூரமாக இருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகுதொலைவினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகமுடியாமல் இருக்குமானால்,
\v 25 அதைப் பணமாக மாற்றி, பணமுடிப்பை உன் கையிலே எடுத்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திற்குப் போய்,
\s5
\v 26 அங்கே உன் விருப்பப்படி ஆடுமாடு, திராட்சைரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம் கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் சாப்பிட்டுச் சந்தோஷப்படுவீர்களாக.
\v 27 லேவியனுக்கு உன்னுடன் பங்கும் சொத்தும் இல்லாததால் அவனைக் கைவிடாதே.
\s5
\v 28 மூன்றாம் வருடத்தின் முடிவிலே அந்தவருடத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.
\v 29 லேவியனுக்கு உன்னுடன் பங்கும் சொத்தும் இல்லாததால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனும், திக்கற்றவனும், விதவையும் வந்து சாப்பிட்டுத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.
\s5
\c 15
\cl அத்தியாயம்– 15
\s1 விடுதலையின் வருடம்
\p
\v 1 ஏழாம் வருடத்தின் முடிவிலே விடுதலைசெய்வாயாக.
\v 2 விடுதலையின் விபரமாவது: மற்றவனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டதால், அந்தக் கடனை மற்றவனிடத்திலாவது தன் சகோதரனிடத்திலாவது வாங்காமல் விட்டுவிடக்கடவன்.
\v 3 அந்நியனிடத்தில் நீ கடனை வசூலிக்கலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடக்கடவது.
\s5
\v 4 எளியவன் உனக்குள் இல்லாதிருக்க இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்ய, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாகக் கேட்பாயானால்.,
\v 5 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாக கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.
\v 6 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் மக்களுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் மக்களை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.
\s5
\v 7 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரர்களில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,
\v 8 அவனுக்கு உன் கையைத் தாராளமாகத் திறந்து, அவனுடைய அவசரத்தின் காரணமாக அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.
\s5
\v 9 விடுதலை வருடமாகிய ஏழாம் வருடம் நெருங்கிவிட்டதென்று அறிந்து, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடுக்காமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.
\v 10 அவனுக்குத் தாராளமாகக் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதன்காரணமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் செயல்களிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
\s5
\v 11 தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாகத் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
\s1 வேலைக்காரர்களின் விடுதலை
\p
\s5
\v 12 உன் சதோதரனாகிய எபிரெய ஆணாகிலும் பெண்ணாகிலும் உனக்கு விற்கப்பட்டால், ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்யவேண்டும்; ஏழாம் வருடத்தில் அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடுவாயாக.
\v 13 அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாக அனுப்பிவிடாமல்,
\v 14 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும், உன் களத்திலும், உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாகக் கொடுத்து அனுப்பிவிடுவாயாக.
\s5
\v 15 நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் ஞாபகப்படுத்துவாயாக; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.
\v 16 ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில்,
\v 17 நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய்.
\s5
\v 18 அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு வருத்தமாகக் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு இணையாக ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்தானே; இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
\s1 முதற்பிறந்த மிருகங்கள்
\p
\s5
\v 19 உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலை வாங்காமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரிக்காமலும் இருப்பாயாக.
\v 20 கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலே வருடந்தோறும் நீயும் உன் வீட்டாருமாக உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைச் சாப்பிடுங்கள்.
\v 21 அதற்கு ஊனம், குருடு முதலான யாதொரு குறையிருந்தால், அதை உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிட வேண்டாம்.
\s5
\v 22 அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும், வெளிமானையும், சாப்பிடுவதுபோலச் சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைச் சாப்பிடலாம்.
\v 23 அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய்.
\s5
\c 16
\cl அத்தியாயம்– 16
\s1 பஸ்கா பண்டிகை
\p
\v 1 ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை அனுசரிக்கக்கடவாய்; ஆபிப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.
\v 2 கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக.
\s5
\v 3 நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் நினைக்கும்படி, பஸ்கா பலியுடனே புளிப்புள்ள அப்பம் சாப்பிடாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லா அப்பங்களை ஏழுநாட்கள் வரைக்கும் சாப்பிடக்கடவாய்; நீ விரைவாக எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.
\v 4 ஏழுநாட்களளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படக்கூடாது; நீ முதல் நாள் மாலையில் செலுத்திய பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இரவுமுழுதும் விடியற்காலம் வரைக்கும் வைக்கவேண்டாம்.
\s5
\v 5 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக்கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.
\v 6 உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும் இடத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் மறையும்போது பஸ்காவை அடித்து,
\s5
\v 7 உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திலே, அதைப் பொரித்துச் சாப்பிட்டு, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக.
\v 8 நீ ஆறு நாட்களும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும், ஏழாம் நாள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அனுசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
\s1 வாரங்களின் பண்டிகை
\p
\s5
\v 9 ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் துவங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்.
\v 10 அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கென்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத்தக்கதாக உன்னால் முடிந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,
\s5
\v 11 உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,
\v 12 நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய்.
\s1 கூடாரப் பண்டிகை
\p
\s5
\v 13 நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாட்கள் ஆசரித்து,
\v 14 உன் பண்டிகையில் நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;
\s5
\v 15 உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லா செயலிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழு நாட்கள் பண்டிகையை ஆசரித்து சந்தோஷமாயிருப்பாயாக.
\s5
\v 16 வருடத்தில் மூன்றுமுறை புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லோரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
\v 17 ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.
\s1 நியாயாதிபதிகள்
\p
\s5
\v 18 உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவர்களையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.
\v 19 நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; பாரபட்சம் பார்க்காமலும், லஞ்சம் வாங்காமலும் இருப்பாயாக; லஞ்சம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.
\v 20 நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள நீதியையே பின்பற்றுவாயாக.
\s1 அந்நிய தெய்வங்களை வணங்குதல்
\p
\s5
\v 21 நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்திற்கு அருகில் எந்த தோப்பையும் உண்டாக்கவேண்டாம்;
\v 22 எந்த சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.
\s5
\c 17
\cl அத்தியாயம்– 17
\p
\v 1 பழுதும் அவலட்சணமுமான யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பாக இருக்கும்.
\s5
\v 2 உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்த ஆணாவது பெண்ணாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமம்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,
\v 3 நான் விலக்கியிருக்கிற வேறே தெய்வங்களையாவது, சந்திரன் சூரியன் முதலான வானசேனைகளையாவது பணிந்து, அவைகளை வணங்குகிறதாகக் காணப்பட்டால்,
\v 4 அது உன் காதுகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாக விசாரிக்கக்கடவாய்; அது உண்மையென்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் காண்பாயானால்,
\s5
\v 5 அந்த அக்கிரமத்தைச்செய்த ஆணையும் பெண்ணையும் உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.
\v 6 சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலை செய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவனைக் கொலைசெய்யகூடாது.
\v 7 அவனைக் கொலை செய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா மக்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
\s1 நீதிமன்றங்கள்
\p
\s5
\v 8 உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக்குறித்தும், உரிமைகளைக்குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும், வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு கடினமாக இருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்தெடுத்த இடத்திற்குப்போய்,
\v 9 லேவியர்களான ஆசாரியர்களிடத்திலும், அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதிகளிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்.
\s5
\v 10 கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள் உனக்குக் கட்டளையிடுகிறபடி செய்யக் கவனமாயிருப்பாயாக.
\v 11 அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்.
\s5
\v 12 அங்கே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் பிடிவாதம் செய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.
\v 13 அப்பொழுது மக்கள் எல்லோரும் அதைக் கேட்டு, பயந்து, இனி பிடிவாதம் செய்யாமலிருப்பார்கள்.
\s1 இராஜாவின் தகுதிகள்
\p
\s5
\v 14 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல மக்களையும்போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்;
\v 15 உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரர்களுக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக எற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது.
\s5
\v 16 அவன் அநேக குதிரைகளைச் சம்பாதிக்காமலும் அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படி மக்களைத் திரும்ப எகிப்திற்குப் போகச்செய்யாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாக நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.
\v 17 அவனுடைய இருதயம் பின்வாங்கிப் போகாமலிருக்க அவன் அநேகம் மனைவிகளைத் திருமணம் செய்யவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாகப் பெருகச்செய்யவும் வேண்டாம்.
\s5
\v 18 அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்கள்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்,
\v 19 இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்வதற்கு,
\s5
\v 20 அவன் லேவியர்களாகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண புத்தகத்தைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் உயிருள்ள நாட்களெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் மகன்களும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்ஜியத்திலே நீடித்து வாழ்வார்கள்.
\s5
\c 18
\cl அத்தியாயம்– 18
\s1 காணிக்கைகள்
\p
\v 1 லேவியர்களாகிய ஆசாரியர்களும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் மக்களுடன் பங்கும் உரிமையும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலிகளையும் அவருக்கு உரிமையானவைகளையும் அவர்கள் சாப்பிடலாம்.
\v 2 அவர்களுடைய சகோதரர்களுக்குள்ளே அவர்களுக்கு உரிமையில்லை; கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவரே அவர்களுடைய சொத்து.
\s5
\v 3 மக்களிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய ஆசாரியர்களுக்குரிய வரவானது: மக்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்.
\v 4 உன் தானியம், திராட்சைரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும்.
\v 5 அவனும் அவனுடைய மகன்களும் எல்லா நாட்களும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனைசெய்ய நிற்பதற்காக, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லோருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார்.
\s5
\v 6 இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தை விட்டு, கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திற்கு மனப்பூர்வமாக வந்தால்,
\v 7 அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியர்களாகிய தன் எல்லா சகோதரர்களைப்போலவும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியம்செய்வான்.
\v 8 அப்படிப்பட்டவர்கள் தங்கள் முற்பிதாக்களுடைய சொத்தின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காக சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.
\s1 அருவருப்பான செயல்பாடுகள்
\p
\s5
\v 9 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேரும்போது, அந்த மக்கள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம்.
\v 10 தன் மகனையாவது தன் மகளையாவது தகனபலியாகத் தீயில் பலியிடுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், ஜோதிடம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,
\v 11 மந்திரவாதியும், வசியக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.
\s5
\v 12 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்பான செயலின் காரணமாக உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.
\v 13 உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்.
\s1 தீர்க்கதரிசி
\p
\v 14 நீ துரத்திவிடப்போகிற இந்த மக்கள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடுக்கமாட்டார்.
\s5
\v 15 உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரர்களிடத்திலிருந்து எழும்பச்செய்வார்; அவர் சொல்வதைக் கேட்பீர்களாக.
\v 16 ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதையெல்லாம் அவர் செய்வார்.
\s5
\v 17 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.
\v 18 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரர்களிடத்திலிருந்து எழும்பச்செய்து, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.
\v 19 என் பெயராலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
\s5
\v 20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தைகளை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தெய்வங்களின் பெயராலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
\v 21 கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,
\s5
\v 22 ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினால் சொல்லும் காரியம் நடக்காமலும் செயல்படாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
\s5
\c 19
\cl அத்தியாயம்– 19
\s1 அடைக்கலப் பட்டணங்கள்
\p
\v 1 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் மக்களை அவர் வேரற்றுப்போகச்செய்வதினால், நீ அவர்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது,
\v 2 நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக்கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்துவைக்கக்கடவாய்.
\v 3 கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கப்போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டாக்குவாய்.
\s5
\v 4 கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்தானே.
\v 5 ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனுடன் காட்டிற்குப்போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பைவிட்டுக் கழன்று மற்றவன்மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால்,
\s5
\v 6 இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரியும்போது கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின்தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்றுபோடாதபடி, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காததினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை.
\v 7 இதினிமித்தம் மூன்று பட்டணங்களை உனக்காகப் பிரித்துவைக்கக்கடவாய் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
\s5
\v 8 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புசெலுத்தி, எந்நாளும் அவர் வழிகளில் நடப்பதற்காக, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு அதின்படி செய்து,
\v 9 உன் தேவனாகிய கர்த்தர் உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால்,
\v 10 அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுதிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடி, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய்.
\s5
\v 11 ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்கு மறைந்திருந்து, அவனுக்கு விரோதமாக எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில்,
\v 12 அந்தப் பட்டணத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அங்கேயிருந்து அவனைக் கொண்டுவரும்படி செய்து, அவன் சாகும்படி அவனை இரத்தப்பழி வாங்குகிறவன் கையில் ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.
\v 13 உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; குற்றமில்லாத இரத்தப்பழியை இஸ்ரவேலை விட்டு விலக்கக்கடவாய்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்.
\s5
\v 14 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் உன்னிடத்திலிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை எடுத்துப்போடதே.
\s1 சாட்சிகள்
\p
\s5
\v 15 ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிரூபிக்கப்படவேண்டும்.
\v 16 ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சி சொல்ல எழும்பினால்,
\s5
\v 17 வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.
\v 18 அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாக விசாரணை செய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன்மேல் அபாண்டமாகக் குற்றம்சுமத்தினான் என்றும் கண்டால்,
\v 19 அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாகத் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.
\s5
\v 20 மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள்.
\v 21 உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.
\s5
\c 20
\cl அத்தியாயம்– 20
\s1 போருக்குச் செல்லுதல்
\p
\v 1 நீ உன் விரோதிகளுக்கு எதிராக போர்செய்யப் புறப்பட்டுப்போகும்போது, குதிரைகளையும், இரதங்களையும், உன்னைவிட பெரிய கூட்டமாகிய மக்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாதே; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்.
\s5
\v 2 நீங்கள்போர்செய்யத் துவங்கும்போது, ஆசாரியன் சேர்ந்து வந்து, மக்களிடத்தில் பேசி:
\v 3 இஸ்ரவேலர்களே, கேளுங்கள்; இன்று உங்கள் விரோதிகளுடன் போர்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் வருந்தவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்து பயப்படவும், கலங்கவும், திகைக்கவும் வேண்டாம்.
\v 4 உங்களுக்காக உங்கள் விரோதிகளுடன் போர்செய்யவும் உங்களை இரட்சிக்கவும் உங்களுடன்கூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லவேண்டும்.
\s5
\v 5 அன்றியும் அதிபதிகள் மக்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அதை அர்ப்பணம் செய்யவேண்டியதாகும்.
\s5
\v 6 திராட்சத்தோட்டத்தை நாட்டி, அதை அனுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அதை அனுபவிக்கவேண்டியதாகும்.
\v 7 ஒரு பெண்ணைத் தனக்கு நிச்சயம் செய்துகொண்டு, அவளைத் திருமணம்செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அவளைத் திருமணம்செய்ய வேண்டியதாகும் என்று சொல்லவேண்டும்.
\s5
\v 8 பின்னும் அதிபதிகள் மக்களுடனே பேசி: பயந்தவனும் மிகவும் பெலவீனமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரர்களின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகச்செய்யாதபடி, தன் வீட்டுக்குத் திரும்பிப் போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.
\v 9 அதிபதிகள் மக்களுடன் பேசி முடிந்தபின்பு, மக்களை நடத்துவதற்கு சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள்.
\s5
\v 10 நீ ஒரு பட்டணத்தின்மேல் போர்செய்ய நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.
\v 11 அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவு கொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள மக்கள் எல்லோரும் உனக்கு வரி கட்டுகிறவர்களாகி, உனக்கு வேலை செய்யக்கடவர்கள்.
\s5
\v 12 அவர்கள் உன்னுடன் சமாதானமாகாமல், உன்னுடன் போர் செய்வார்களானால், நீ அதை முற்றுகையிட்டு,
\v 13 உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள ஆண்கள் எல்லோரையும் பட்டயத்தால் வெட்டி,
\s5
\v 14 பெண்களையும், குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் விரோதிகளின் கொள்ளைப்பொருளை அனுபவிப்பாயாக.
\v 15 இந்த மக்களைச்சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.
\s5
\v 16 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,
\v 17 அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய்.
\v 18 அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவம்செய்யாமலும் இருக்க இப்படிச் செய்யவேண்டும்.
\s5
\v 19 நீ ஒரு பட்டணத்தின்மேல் போர்செய்து அதைப் பிடிக்க அநேகநாட்கள் முற்றுகையிட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களை வெட்டிச் சேதம் செய்யாதே அவைகளின் கனியை நீ சாப்பிடலாமே; ஆகையால் உனக்குக் கோட்டைமதில் அமைக்க உதவும் என்று அவைகளை வெட்டாதே; வெளியின் மரங்கள் மனிதனுடைய உயிர்வாழ்வதற்கு ஏற்றவைகள்.
\v 20 சாப்பிடுவதற்கேற்ற கனிகொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களை மாத்திரம் வெட்டி அழித்து, உன்னோடு போர்செய்கிற பட்டணம் பிடிபடும்வரை அதற்கு எதிராகக் கோட்டைமதில் போடலாம்.
\s5
\c 21
\cl அத்தியாயம்– 21
\s1 கொலைக்கான பரிகாரம்
\p
\v 1 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில், கொலை செய்யப்பட்டுக்கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் யார் என்று தெரியாதிருந்தால்,
\v 2 உன் மூப்பர்களும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்வரை அளப்பார்களாக.
\s5
\v 3 கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர்கள், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து,
\v 4 உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடக்கடவர்கள்.
\s5
\v 5 உன் தேவனாகிய கர்த்தர் தமக்கு ஆராதனை செய்யவும் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் மகன்களாகிய ஆசாரியர்களைத் தெரிந்துகொண்டதால், அவர்களும் அச்சமயத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே எல்லா வழக்கும் எல்லா காயப்பாதிப்புகளும் தீர்மானிக்கப்படவேண்டும்.
\s5
\v 6 கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் மூப்பர்கள் எல்லோரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவி:
\v 7 எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதும் இல்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதும் இல்லை;
\s5
\v 8 கர்த்தாவே, நீர் மீட்டுக்கொண்ட உமது மக்களாகிய இஸ்ரவேலின்மேல் குற்றமில்லாத இரத்தப்பழியைச் சுமத்தாமல், உமது மக்களாகிய இஸ்ரவேலின்மேல் கிருபையுள்ளவராயிரும் என்று சொல்வார்களாக; அப்பொழுது இரத்தப்பழி அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
\v 9 இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.
\s1 சிறைபிடிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்தல்
\p
\s5
\v 10 நீ உன் விரோதிகளுக்கு எதிராக போர்செய்யப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,
\v 11 சிறைகளில் அழகான ஒரு பெண்ணைக்கண்டு, அவளை திருமணம்செய்ய விரும்பி,
\v 12 அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களை வெட்டி,
\s5
\v 13 தன் சிறையிருப்பின் ஆடையையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதம்வரை தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கம்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளுடன் சேர்ந்து, அவளுக்குக் கணவனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.
\v 14 அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் விருப்பப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினதினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.
\s1 முதற்பிறந்தவனின் உரிமை
\p
\s5
\v 15 இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பமாகவும் மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் மகனானாலும்,
\v 16 தகப்பன் தனக்கு உண்டான சொத்தைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு மூத்தமகனின் உரிமையைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கக்கூடாது.
\v 17 வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை மூத்தமகனாக அங்கீகரித்து, தனக்கு உண்டான சொத்துக்களிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், மூத்தமகனின் உரிமை அவனுக்கே உரியது.
\s1 அடங்காத மகன்
\p
\s5
\v 18 தன் தகப்பனுடைய சொல்லையும், தாயினுடைய சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும், அடங்காமலும் போகிற மகன் ஒருவனுக்கு இருந்தால்,
\v 19 அவனுடைய தகப்பனும் தாயும் அவனைப் பிடித்து, அப்பட்டணத்தின் மூப்பர்களிடத்திற்கும், அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்:
\s5
\v 20 எங்கள் மகனாகிய இவன் அடங்காதவனாக இருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளாமலும்; பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பர்களோடு சொல்லுவார்களாக.
\v 21 அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள்.
\s1 பிறச் சட்டங்கள்
\p
\s5
\v 22 கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால்,
\v 23 இரவிலே அவன் உடலை மரத்திலே தொங்கவிடக்கூடாது; அந்த நாளிலேயே அதை அடக்கம் செய்யவேண்டும்; தூக்கில் போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தைக் கறைப்படுத்தாதே.
\s5
\c 22
\cl அத்தியாயம்– 22
\s1 ஆண்-பெண் உடை
\p
\v 1 உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதை நீ கண்டால், அதைக் காணாதவன்போல் இருக்காமல், அதை உன் சகோதரனிடத்திற்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய்.
\v 2 உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும், உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை உன் வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவரும்வரை உன்னிடத்திலே வைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய்.
\s5
\v 3 அப்படியே அவனுடைய கழுதையைக்குறித்தும் செய்யக்கடவாய்; அவன் உடையைக்குறித்தும் அப்படியே செய்யக்கடவாய்; உன் சகோதரனிடத்திலிருந்து காணாமற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியே செய்யக்கடவாய்; அவைகளை நீ காணாதவன் போல் விட்டுப்போகக்கூடாது.
\v 4 உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதை நீ கண்டால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனுடன்கூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக.
\s5
\v 5 ஆண்களின் உடைகளை பெண்கள் அணியக்கூடாது, பெண்களின் உடைகளை ஆண்கள் அணியக்கூடாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லோரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
\s5
\v 6 வழியருகே ஒரு மரத்திலோ தரையிலோ குஞ்சுகளாவது முட்டைகளாவது உள்ள ஒரு குருவிக்கூட்டை நீ பார்க்கும்போது, தாயானது குஞ்சுகளின் மேலாவது முட்டைகளின் மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளுடன் தாயையும் பிடிக்கக்கூடாது.
\v 7 தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும்.
\s5
\v 8 நீ புது வீட்டைக் கட்டினால், ஒருவன் அதன் மாடியிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாமலிருக்க, அதற்குக் கைப்பிடிச் சுவரைக் கட்டவேண்டும்.
\s5
\v 9 உன் திராட்சத்தோட்டத்திலே பலவிதமான விதையை விதைக்காதே; இப்படிச் செய்தால் நீ விதைத்த விதைகளின் பயிரையும், திராட்சத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.
\v 10 மாட்டையும், கழுதையையும் இணைத்து உழாதிருப்பாயாக.
\v 11 ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த ஆடையை அணியாதே.
\s5
\v 12 நீ அணிந்துகொள்கிற உன் மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டாக்குவாயாக.
\s1 திருமணச் சட்டங்கள்
\p
\s5
\v 13 ஒரு பெண்ணைத் திருமணம்செய்த ஒருவன் அவளிடத்தில் உறவுகொண்ட பின்பு அவளை வெறுத்து:
\v 14 நான் இந்தப் பெண்ணைத் திருமணம்செய்து, அவளிடத்தில் உறவுகொண்டபோது கன்னித்தன்மையைக் காணவில்லை என்று அவள் மேல் குற்றம் சுமத்தி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்;
\s5
\v 15 அந்தப் பெண்ணின் தகப்பனும் தாயும் அவளுடைய கன்னித்தன்மையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பர்களிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.
\s5
\v 16 அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,
\v 17 நான் உன் மகளிடத்தில் கன்னித்தன்மையைக் காணவில்லையென்று அவள்மேல் குற்றம் சுமத்துகிறான்; என் மகளுடைய கன்னித்தன்மையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பர்களிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பர்களுக்கு முன்பாக அந்த ஆடையை விரிக்கக்கடவர்கள்.
\s5
\v 18 அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,
\v 19 அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுசெய்ததால், அவன் கையிலிருந்து நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தான் உயிருள்ளவரை அவளைத் தள்ளிவிடக்கூடாது.
\s5
\v 20 அந்தப் பெண்ணிடத்தில் கன்னித்தன்மை காணப்படவில்லையென்னும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்,
\v 21 அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம்செய்ததால், அவளுடைய பட்டணத்து மனிதர்கள் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
\s5
\v 22 ஆணுக்கு திருமணம்செய்யப்பட்ட பெண்ணுடன் ஒருவன் உறவுகொள்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப்பெண்ணுடன் உறவுகொண்ட மனிதனும் அந்த பெண்ணும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.
\s5
\v 23 கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளுடன் உறவுகொண்டால்,
\v 24 அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூச்சலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
\s5
\v 25 ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாகப் பிடித்து, அவளுடன் உறவுகொண்டானேயாகில், அவளுடன் உறவுகொண்ட மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.
\v 26 பெண்ணுக்கு ஒன்றும் செய்யக்கூடாது; பெண்ணின்மேல் மரணத்திற்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனைக் கொன்றதுபோல இருக்கிறது.
\v 27 வெளியிலே அவன் அவளைக் கண்டான்; நிச்சயிக்கப்பட்ட அந்தப்பெண் அச்சமயத்தில் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுபவர் இல்லாமற்போனது.
\p
\s5
\v 28 நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,
\v 29 அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது.
\s5
\v 30 ஒருவனும் தன் தகப்பனுடைய மனைவியுடன் உறவுகொள்ளக்கூடாது; தன் தகப்பன் மானத்தை அவன் வெளிப்படுத்தக்கூடாது.
\s5
\c 23
\cl அத்தியாயம்– 23
\s1 சபையின் ஒழுங்குகள்
\p
\v 1 விரை நசுக்கப்பட்டவனும், ஆணுறுப்பு வெட்டப்பட்டவனும் கர்த்தருடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது.
\v 2 வேசித்தனத்தினால் பிறந்த பிள்ளையும் கர்த்தருடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது.
\s5
\v 3 அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது.
\v 4 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும், தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினாலும், உன்னை சபிக்கும்படியாக மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் மகன் பிலேயாமுக்குக் கூலி பேசி அவனை அழைப்பித்ததினாலும் இப்படிச் செய்யவேண்டும்.
\s5
\v 5 உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்க விருப்பமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புசெலுத்தியதால், உன் தேவனாகிய கர்த்தர் அந்த சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறச்செய்தார்.
\v 6 நீ உயிருள்ளவரைக்கும் அவர்களுக்கு ஒருபோதும் சமாதானத்தையும் நன்மையையும் செய்யாதே.
\s5
\v 7 ஏதோமியனை வெறுக்காதே, அவன் உன்னுடைய சகோதரன்; எகிப்தியனை வெறுக்காதே, அவனுடைய தேசத்திலே நீ அந்நியனாக இருந்தாய்.
\v 8 மூன்றாம் தலைமுறையில் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் கர்த்தருடைய சபையில் சேர்க்கப்படலாம்.
\s1 முகாமிற்குள் அசுத்தம்
\p
\s5
\v 9 நீ படையெடுத்து உன்னுடைய எதிரிகளுக்கு விரோதமாகப் புறப்படும்போது, தீமையான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக.
\v 10 இரவு நேரத்தில் விந்து வெளியேறியதால் அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களுக்குள் இருந்தால், அவன் முகாமிற்கு வெளியே போய், முகாமிற்குள் வராமல்,
\v 11 மாலையில் தண்ணீரில் குளித்து, சூரியன் மறையும்போது முகாமிற்குள் வரக்கடவன்.
\s5
\v 12 உன் மலம் கழிக்கும் இடம் முகாமிற்கு வெளியே இருக்கவேண்டும்.
\v 13 உன் ஆயுதங்களுடன் ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்; நீ மலம் கழிக்கும்போது, அந்தக்கோலினால் மண்ணைத் தோண்டி, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய்.
\v 14 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் முகாமிற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுத்தமான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாமலிருக்க, உன்னுடைய முகாம் சுத்தமாயிருக்கக்கடவது.
\s1 பல்வேறு சட்டங்கள்
\p
\s5
\v 15 தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்திற்கு வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாதே.
\v 16 அவன் உனக்கு இருக்கிற உன் வாசல்கள் ஒன்றிலே தனக்கு விருப்பமான இடத்தைத் தெரிந்துகொண்டு, அதிலே உன்னுடனே இருப்பானாக; அவனை ஒடுக்கவேண்டாம்.
\s5
\v 17 இஸ்ரவேலின் மகள்களில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் மகன்களில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாக இருக்கக்கூடாது.
\v 18 வேசிப்பணத்தையும், நாயின் பணத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராதே; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு வெறுப்பானவைகள்.
\s5
\v 19 கடனாகக் கொடுக்கிற பணத்திற்கும், ஆகாரத்திற்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரனுடைய கையில் வட்டிவாங்காதே.
\v 20 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிட்டுச்செய்யும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்க உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காதே.
\s5
\v 21 நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை செய்திருந்தால், அதைச் செலுத்தத் தாமதம்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாக உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்.
\v 22 நீ பொருத்தனை செய்யாமலிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.
\v 23 உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய கர்த்தருக்கு உன் வாயினால் நீ பொருத்தனைசெய்து சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக.
\s5
\v 24 நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் நுழைந்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திருப்தியாக சாப்பிடலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது.
\v 25 பிறனுடைய விளைச்சலில் நுழைந்தால், உன் கையினால் கதிர்களைப் பறிக்கலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளைப் பயன்படுத்தக்கூடாது.
\s5
\c 24
\cl அத்தியாயம்– 24
\s1 விவாகரத்து
\p
\v 1 ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டபின்பு, அவளிடத்தில் வெட்கக்கேடான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் விவாகரத்தின் கடிதத்தை எழுதி, அவளுடைய கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம்.
\v 2 அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம்.
\s5
\v 3 அந்த இரண்டாம் கணவனும் அவளை வெறுத்து, விவாகரத்தின் கடிதத்தை எழுதி, அவளுடைய கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளைத் திருமணம்செய்த அந்த இரண்டாம் கணவன் இறந்துபோனாலும்,
\v 4 அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளை விவாகரத்து செய்த அவளுடைய முந்தின கணவன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவத்தை வரச்செய்யாதே.
\s5
\v 5 ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாகத் திருமணம்செய்திருந்தால், அவன் போருக்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் எந்தவொரு வேலையையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருடம்வரை தன் வீட்டில் தன் விருப்பப்படி இருந்து, தான் திருமணம்செய்த பெண்ணைச் சந்தோஷப்படுத்துவானாக.
\s5
\v 6 மாவரைக்கும் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடைமானமாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகுவாங்குவதுபோலாகும்.
\s5
\v 7 தன் சகோதரர்களாகிய இஸ்ரவேல் மக்களில் ஒருவனைத் திருடி, அதினால் ஆதாயத்துக்காக அவனை விற்றுப்போட்ட ஒருவன் அகப்பட்டால், அந்தத் திருடன் கொலைசெய்யப்படவேண்டும்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
\s5
\v 8 தொழுநோயைக்குறித்து லேவியர்களாகிய ஆசாரியர்கள் உங்களுக்குப் போதிக்கும் யாவையும் கவனித்துச் செய்யும்படி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்யக் கவனமாயிருப்பீர்களாக.
\v 9 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.
\s5
\v 10 பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் நுழையவேண்டாம்.
\v 11 வெளியே நிற்பாயாக; கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டுவருவானாக.
\s5
\v 12 அவன் ஏழையாயிருந்தால், நீ அவனுடைய அடகை வைத்துக்கொண்டு தூங்காமல்,
\v 13 அவன் தன் ஆடையைப் போட்டுப் படுத்துக்கொண்டு, உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும்.
\s5
\v 14 உன் சகோதரர்களிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காதே.
\v 15 அவன் வேலைசெய்த நாளிலேயே, பொழுதுபோகுமுன்னே, அவனுடைய கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடுக்காவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.
\s5
\v 16 பிள்ளைகளுக்காகப் பெற்றோர்களும், பெற்றோர்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்திற்காக அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.
\s5
\v 17 நீ அந்நியனுடைய நியாயத்தையும் திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின் உடையை அடகாக வாங்காமலும் இருந்து,
\v 18 நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
\s5
\v 19 நீ உன் பயிரை அறுக்கும்போது உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாக வைத்து வந்தாயானால், அதை எடுத்துவர திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிப்பதற்காக, அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.
\v 20 நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்ட பின்பு, கொம்பிலே விடுபட்டதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதை அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் விட்டுவிடுவாயாக;
\s5
\v 21 நீ உன் திராட்சப்பழங்களை அறுத்த பின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதை அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் விட்டுவிடுவாயாக.
\v 22 நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
\s5
\c 25
\cl அத்தியாயம்– 25
\s1 சகோதரனின் மனைவியைத் திருமணம் செய்தல்
\p
\v 1 மனிதர்களுக்குள்ளே வழக்கு இருந்தால், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நீதிமன்றத்திற்கு வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் நியாயம் தீர்க்கவேண்டும்.
\v 2 குற்றவாளி அடிக்கப்பட தண்டனை பெற்றால், நியாயாதிபதி அவனைக் கீழே படுக்கச்செய்து, அவன் குற்றத்திற்குத்தக்கதாகத் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன்.
\s5
\v 3 அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாக அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக அற்பமானவனாக காணப்படுவான்; ஆதலால் அவனை அதிகமாக அடிக்கவேண்டாம்.
\s5
\v 4 போரடிக்கிற மாட்டை வாய் கட்டாதே.
\s5
\v 5 சகோதரர்கள் ஒன்றாகக் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் வாரிசு இல்லாமல் இறந்தால், இறந்தவனுடைய மனைவி வெளியிலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய கணவனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.
\v 6 இறந்த சகோதரனுடைய பெயர் இஸ்ரவேலில் மறைந்துபோகாதிருக்க, அவன் பெயரை அவள் பெறும் தலைமகனுக்கு வைக்கவேண்டும்.
\s5
\v 7 அவன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பர்களிடத்திற்குப் போய், என் கணவனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பெயரை இஸ்ரவேலில் நிலைக்கச்செய்யமாட்டேன் என்கிறான்; கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் விருப்பமில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.
\v 8 அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அவனை அழைத்து அவனுடன் பேசியும், அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாகச் சொன்னால்,
\s5
\v 9 அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற காலணியைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக்கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள்.
\v 10 இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, காலணி கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.
\s5
\v 11 இரண்டு கணவன்மார்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒருவனுடைய மனைவி தன் கணவனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்க வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவனுடைய உயிர்நாடியைப் பிடித்ததுண்டானால்.,
\v 12 அவளுடைய கையை வெட்டக்கடவாய்; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்.
\s5
\v 13 உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம்.
\v 14 உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான பலவித படிகளையும் வைத்திருக்கவேண்டாம்.
\s5
\v 15 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக்கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்காக, குறையற்ற சரியான நிறைகல்லும், குறையற்ற சரியான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்.
\v 16 இதுபோன்ற அநியாயத்தைச் செய்கிறவன் எவனும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவன்.
\s5
\v 17 எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து,
\v 18 நீ இளைத்து சோர்ந்திருக்கும்போது, பின்வருகிற உன் முகாமிலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு.
\v 19 உன் தேவனாகிய கர்த்தர் நீ சொந்தமாக்கிக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய விரோதிகளையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறச்செய்யும்போது, நீ அமலேக்கியர்களின் பெயர் வானத்தின்கீழ் இராமல் அழித்துப்போடக்கடவாய்; இதை மறக்கவேண்டாம்.
\s5
\c 26
\cl அத்தியாயம்– 26
\s1 முதற்பலன்களும் தசமபாகங்களும்
\p
\v 1 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு அதில் குடியிருக்கும்போது,
\v 2 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் அறுவடையிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் இடத்திற்குப் போய்,
\s5
\v 3 அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக.
\v 4 அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவன்.
\s5
\v 5 அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று அறிக்கையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாக இருந்தான்; அவன் கொஞ்சம் மக்களுடன் எகிப்திற்குப் போய், அவ்விடத்தில் அந்நியனாகக் குடியிருந்து, அங்கே பெரிய பலத்த எண்ணிக்கை மிகுந்த மக்கள் கூட்டமானான்.
\s5
\v 6 எகிப்தியர்கள் எங்களை ஒடுக்கி, எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்கள்மேல் கடினமான வேலையைச் சுமத்தினபோது,
\v 7 எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்களுடைய சிறுமையையும், வருத்தத்தையும், ஒடுக்கத்தையும் பார்த்து,
\s5
\v 8 எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படச்செய்து,
\v 9 எங்களை இவ்விடத்திற்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.
\s5
\v 10 இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய அறுவடைகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து,
\v 11 நீயும், லேவியனும் உன்னிடத்தில் இருக்கிற அந்நியனும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் செய்த சகல நன்மைகளுக்காகவும் சந்தோஷப்படுவீர்களாக.
\s5
\v 12 தசமபாகம் செலுத்தும் வருடமாகிய மூன்றாம் வருடத்திலே, நீ உன் விளைச்சலில் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் அந்நியனும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் உன் வாசல்களில் சாப்பிட்டுத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்தபின்பு,
\v 13 நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருட்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும், அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை, மறக்கவும் இல்லை.
\s5
\v 14 நான் துக்கம்கொண்டாடும்போது அதைச் சாப்பிடவும் இல்லை, தீட்டான காரியத்திற்கு அதில் ஒன்றும் எடுக்கவும் இல்லை; மரணகாரியத்துக்காக அதில் ஒன்றும் செலுத்தவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.
\v 15 நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து பார்த்து, உமது மக்களாகிய இஸ்ரவேலர்களையும், நீர் எங்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக.
\s1 கர்த்தருடைய கட்டளைகள்
\p
\s5
\v 16 இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்ய, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் கைக்கொண்டு நடக்கக்கடவாய்.
\v 17 கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவருடைய வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.
\s5
\v 18 கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த மக்களாயிருப்பாய் என்றும்,
\v 19 நான் உண்டாக்கிய எல்லா மக்களையும்விட, புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கச் செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த மக்களாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.
\s5
\c 27
\cl அத்தியாயம்– 27
\s1 ஏபால் மலையின் பலிபீடம்
\p
\v 1 பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்களுடன் இருக்கும்போது, மக்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு கொடுக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
\v 2 உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரிய கற்களை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
\v 3 உன் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உனக்குக் கொடுக்கும் பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குள் நுழையும்படி நீ கடந்துபோனபின்பு, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய்.
\s5
\v 4 மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கற்களை ஏபால் மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
\v 5 அங்கே இரும்பு ஆயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டக்கடவாய்.
\s5
\v 6 நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலிகளையும்,
\v 7 சமாதானபலிகளையும் செலுத்தி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சாப்பிட்டுச் சந்தோஷமாக இருந்து,
\v 8 அந்தக் கற்களில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் மிகத்தெளிவாக எழுதக்கடவாய் என்று கட்டளையிட்டான்.
\s1 ஏபால் மலையிலிருந்து கூறப்பட்ட சாபங்கள்
\p
\s5
\v 9 பின்னும் மோசே, லேவியர்களாகிய ஆசாரியர்களுடன் இருக்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்குரிய மக்களானாய்.
\v 10 ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு கொடுக்கிற அவருடைய கற்பனைகளின்படியும், கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.
\s5
\v 11 மேலும் அந்நாளிலே மோசே மக்களை நோக்கி:
\v 12 நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, மக்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
\s5
\v 13 சாபத்தைக் கூறுவதற்கு, ஏபால் மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
\v 14 அப்பொழுது லேவியர்கள் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரையும் பார்த்து:
\s5
\v 15 கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையாக செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான எந்தவொரு விக்கிரகத்தையும் உண்டாக்கி ஒளித்துவைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு மக்களெல்லோரும் மறுமொழியாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
\s5
\v 16 தன் தகப்பனையும் தன் தாயையும் அவமதிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
\v 17 பிறனுடைய எல்லைக்குறியை மாற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
\s5
\v 18 குருடனை வழிமாறச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
\v 19 அந்நியன், திக்கற்றவன், விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
\s5
\v 20 தன் தகப்பனுடைய மனைவியோடே உறவுகொள்கிறவன், தன் தகப்பனை அவமானப்படுத்தியதால், சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
\v 21 யாதொரு மிருகத்தோடே உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
\s5
\v 22 தன் தகப்பனுக்காவது தாய்க்காவது மகளாகிய தன் சகோதரியுடன் உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
\v 23 தன் மாமியாருடன் உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
\s5
\v 24 மறைவிலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
\v 25 குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்கு லஞ்சம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
\s5
\v 26 இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடக்காதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
\s5
\c 28
\cl அத்தியாயம்– 28
\s1 கீழ்ப்படிதலின் ஆசீர்வாதங்கள்
\p
\v 1 இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருப்பதற்கு, அவருடைய சத்தத்திற்கு உண்மையாகச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள அனைத்து மக்களிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
\v 2 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
\s5
\v 3 நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
\v 4 உன் கர்ப்பத்தின் பிறப்புகளும், உன் நிலத்தின் பலனும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
\s5
\v 5 உன் கூடையும், மாவு பிசைகிற உன் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
\v 6 நீ வரும்போதும் போகும்போதும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
\s5
\v 7 உனக்கு விரோதமாக எழும்பும் உன் எதிரிகளைக் கர்த்தர் உனக்கு முன்பாக தோற்கடிக்கப்பட ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாக உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாக உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
\v 8 கர்த்தர் உன் பண்டகசாலைகளிலும், நீ செய்யும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
\s5
\v 9 நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவருடைய வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு வாக்களித்தபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த மக்களாக நிலைப்படுத்துவார்.
\v 10 அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குச் சூட்டப்பட்டது என்று பூமியின் மக்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.
\s5
\v 11 உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பப்பிறப்பிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் பலனிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
\v 12 ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் மக்களுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
\s5
\v 13 இன்று நான் உங்களுக்கு கொடுக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டுவிலகி வேறே தெய்வங்களை வணங்குவதற்கு, நீ வலதுபுறமோ, இடதுபுறமோ சாயாமல்,
\v 14 இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.
\s1 கீழ்ப்படியாமையின் சாபங்கள்
\p
\s5
\v 15 இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவருடைய சத்தத்தை கேட்காவிட்டால், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.
\s5
\v 16 நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சபிக்கப்பட்டிருப்பாய்.
\v 17 உன் கூடையும், மாவு பிசைகிற உன் பாத்திரமும் சபிக்கப்பட்டிருக்கும்.
\s5
\v 18 உன் கர்ப்பத்தின் பிறப்பும், உன் நிலத்தின் பலனும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்.
\v 19 நீ வரும்போதும் போகும்போதும் சபிக்கப்பட்டிருப்பாய்.
\s5
\v 20 என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் தீயசெயல்களின் காரணமாக சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியும்வரை, நீ கையிட்டுச் செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தர் உனக்கு சாபத்தையும், குழப்பத்தையும், அழிவையும் வரச்செய்வார்.
\v 21 நீ சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் கர்த்தர் நீ அழிந்துபோகும்வரை கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளச்செய்வார்.
\s5
\v 22 கர்த்தர் உன்னை நோயினாலும், காய்ச்சலினாலும், வெப்பத்தினாலும், எரிகொப்பளத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியும்வரை இவைகள் உன்னைப் பின்தொடரும்.
\s5
\v 23 உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாக இருக்கும்.
\v 24 உன் தேசத்தின் மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யச்செய்வார்; நீ அழியும்வரை அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும்.
\s5
\v 25 உன் எதிரிகளுக்கு முன்பாக நீ தோற்கடிக்கப்படும்படி கர்த்தர் செய்வார்; ஒரு வழியாக அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாக அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்ஜியங்களிலும் சிதறிப்போவாய்.
\v 26 உன் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை விரட்டுபவர்கள் இல்லாதிருப்பார்கள்.
\s5
\v 27 நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
\v 28 கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.
\v 29 குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோகும்; உதவி செய்பவர் இல்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாக இருப்பாய்.
\s5
\v 30 பெண்ணை உனக்கு நிச்சயம் செய்வாய், வேறொருவன் அவளுடன் உறவுகொள்வான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.
\v 31 உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் சாப்பிடுவதில்லை; உன்னுடைய கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப கிடைக்காமற்போகும்; உன்னுடைய ஆடுகள் உன் எதிரிகளுக்குக் கொடுக்கப்படும். விடுவிப்பவர் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
\s5
\v 32 உன்னுடைய மகன்களும் மகள்களும் அந்நிய மக்களுக்கு ஒப்புக் கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாள்தோறும் பார்த்துப் பார்த்துப் பூத்துப்போகும்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.
\s5
\v 33 உன் நிலத்தின் பலனையும், உன் உழைப்பின் எல்லாப் பலனையும் நீ அறியாத மக்கள் சாப்பிடுவார்கள்; நீ சகல நாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.
\v 34 உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய்.
\v 35 உன் உள்ளங்கால் துவங்கி உன் உச்சந்தலைவரை குணமாகாதபடி, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும், தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.
\s5
\v 36 கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத மக்களிடத்திற்குப் போகச்செய்வார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தெய்வங்களை வணங்குவாய்.
\v 37 கர்த்தர் உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா மக்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் கேலிச் சொல்லுமாவாய்.
\s5
\v 38 மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதை அழித்துப்போடும்.
\v 39 திராட்சைத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சைரசம் குடிப்பதும் இல்லை, திராட்சைப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்றுவிடும்.
\s5
\v 40 ஒலிவமரங்கள் உன்னுடைய எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோகும்.
\v 41 நீ மகன்களையும் மகள்களையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடுகூட இருக்கமாட்டார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.
\s5
\v 42 உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் பலன்களையும் வெட்டுக்கிளி அழித்துப்போடும்.
\v 43 உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேலாக மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய்.
\v 44 அவன் உன்னிடத்தில் கடன்படமாட்டான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் உனக்குத் தலைவனாயிருப்பான், நீ அவனுக்குக் கீழாயிருப்பாய்.
\s5
\v 45 உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கொடுத்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்தை கேட்காதால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியும்வரை உன்னைத் தொடர்ந்து பிடித்து,
\v 46 உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.
\s5
\v 47 சகலமும் நிறைவாக இருக்கும்போது, நீ மனமகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் உன் தேவனாகிய கர்த்தரை வணங்காததால்,
\v 48 சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும், தாகத்தோடும், நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாக அனுப்பும் எதிரிகளுக்கு வேலைசெய்வாய்; அவர்கள் உன்னை முற்றிலும் அழிக்கும்வரை, இரும்பு நுகத்தை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.
\s5
\v 49 முதியவன் என்று பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும்,
\v 50 உனக்குத் தெரியாத மொழியைப் பேசுகிறதுமான மக்களை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடைசியிலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகைப்போல வேகமாக வரச்செய்வார்.
\v 51 நீ அழியும்வரை அந்த மனிதன் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் பலனையும் சாப்பிடுவான்; அவன் உன்னை முற்றிலும் அழிக்கும்வரை உன் தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்கமாட்டான்.
\s5
\v 52 உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் பாதுகாப்புமான உன் மதில்கள் விழும்வரை, அவன் உன்னுடைய வாசல்களிலெங்கும் உன்னை முற்றுகையிடுவான்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய ஒவ்வொரு வாசல்களிலும் உன்னை முற்றுகையிடுவான்.
\v 53 உன்னுடைய எதிரிகள் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பப்பிறப்பான உன்னுடைய மகன்கள் மற்றும் மகள்களின் மாம்சத்தை சாப்பிடுவாய்.
\s5
\v 54 உன் எதிரிகள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, உன்னிடத்தில் கர்வமும் செல்வசெழிப்புமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையினாலே தான் உண்ணும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே,
\v 55 தன் சகோதரனுக்காவது, தன் மனைவிக்காவது, தனக்கு மீதியாயிருக்கிற தன் மக்களின் ஒருவனுக்காவது கொஞ்சமும் கொடுக்காமல் அவர்கள்மேல் கொடுமையுள்ளவனாக இருப்பான்.
\s5
\v 56 உன்னிடத்தில் செல்வசெழிப்பினாலும் கர்வத்தினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க பயப்பட்ட பெண் தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன்னுடைய கணவன், மகன் மற்றும் மகளின் மேலும் கொடுமையுள்ளவளாக இருப்பாள்;
\v 57 உன் எதிரிகள் உன் வாசல்களில் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, சகலமும் குறைவுபடுவதால், அவைகளை இரகசியமாக சாப்பிடுவான்.
\s5
\v 58 உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படி, நீ இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாக இருக்காவிட்டால்,
\v 59 கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய வியாதிகளாலும் உன்னையும் உன் சந்ததியையும் கடுமையாக வாதித்து,
\s5
\v 60 நீ கண்டு பயந்த எகிப்தின் வியாதிகளெல்லாம் உன்மேல் வரச்செய்வார்; அவைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும்.
\v 61 இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிராத எல்லா வியாதியையும் வாதையையும் நீ அழியும்வரை கர்த்தர் உன்மேல் வரச்செய்வார்.
\v 62 எண்ணிக்கையிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், எண்ணிக்கையில் குறைந்துபோவீர்கள்.
\s5
\v 63 கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகச்செய்யவும் எப்படி உங்கள்மேல் விருப்பமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் விருப்பமாயிருப்பார்; நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப் போடப்படுவீர்கள்.
\v 64 கர்த்தர் உன்னைப் பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைவரை இருக்கிற எல்லா மக்களுக்குள்ளும் சிதறடிப்பார்; அங்கே நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தெய்வங்களை வணங்குவாய்.
\s5
\v 65 அந்த மக்களுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இருக்காது, உன் உள்ளங்கால்கள் ஊன்றி நிற்க இடமும் இருக்காது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனவேதனையையும் கொடுப்பார்.
\v 66 உன் வாழ்க்கை உனக்கு முன்பாகச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் வாழ்க்கையைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் மிகுந்த பயத்தோடிருப்பாய்.
\s5
\v 67 உன் இருதயத்தின் பயத்தினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.
\v 68 இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாக, கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகச்செய்வார்; அங்கே உங்கள் எதிரிகளுக்கு வேலைக்காரர்களாகவும், வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் வாங்குபவரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.
\s5
\c 29
\cl அத்தியாயம்– 29
\s1 உடன்படிக்கையைப் புதுப்பித்தல்
\p
\v 1 ஓரேபிலே இஸ்ரவேல் மக்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களுடன் உடன்படிக்கைசெய்யக் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே.
\s5
\v 2 மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: எகிப்து தேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்களுக்கும் அவனுடைய தேசம் முழுவதற்கும்,
\v 3 கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே.
\v 4 என்றாலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்கக் கண்களையும், கேட்கத்தக்கக் காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.
\s5
\v 5 கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளுவதற்காக, நான் நாற்பது வருடங்கள் உங்களை வனாந்திரத்தில் நடத்தினேன்; உங்களுடைய ஆடைகள் பழையதாகப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த காலணிகள் பழையதாகப் போகவும் இல்லை.
\v 6 நீங்கள் அப்பம் சாப்பிடவும் இல்லை, திராட்சைரசமும், மதுவும் குடிக்கவும் இல்லை என்றார்.
\s5
\v 7 நீங்கள் இவ்விடத்திற்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்முடன் போர்செய்யப் புறப்பட்டார்கள்; நாம் அவர்களைத் தோற்கடித்து,
\v 8 அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தோம்.
\v 9 இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்ப்பதற்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.
\s5
\v 10 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியேயும், உன் முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் வாக்குக்கொடுத்தபடியேயும், இன்று உன்னைத் தமக்கு மக்களாக ஏற்படுத்திக்கொள்ளவும், தாம் உனக்கு தேவனாயிருக்கவும்,
\v 11 நீ உன் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைக்கும் இன்று அவர் உன்னுடன் செய்கிற அவருடைய வாக்குறுதிக்கும் உட்படுவதற்கு,
\s5
\v 12 உங்கள் கோத்திரங்களின் தலைவர்களும் உங்கள் மூப்பர்களும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் எல்லா ஆண்களும்,
\v 13 உங்கள் பிள்ளைகளும், மனைவிகளும், உங்கள் முகாமிற்குள்ளிருக்கிற விறகுக்காரனும், தண்ணீர்க்காரனுமான அந்நியர்கள் எல்லோரும் இன்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறீர்களே.
\s5
\v 14 நான் உங்களுடன்மட்டும் இந்த உடன்படிக்கையையும் இந்த வாக்கையும் உறுதியையும் செய்யாமல்,
\v 15 இன்று இங்கே நம்முடனும், நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறவர்களுடனும், இன்று இங்கே நம்முடன் இல்லாதவர்களுடனும் அதைச்செய்கிறேன்.
\v 16 நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த மக்களின் நடுவில் நடந்துவந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
\s5
\v 17 அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தெய்வங்களையும் கண்டிருக்கிறீர்கள்.
\v 18 ஆகையால், அந்த மக்களின் தெய்வங்களை வணங்கப்போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகுகிற இருதயமுள்ள ஒரு ஆணாகிலும், பெண்ணாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இல்லாதபடிக்கும், விஷத்தையும் கசப்பையும் முளைப்பிக்கிற எந்தவொரு வேர் உங்களில் இல்லாமலிருக்கப்பாருங்கள்.
\v 19 அப்படிப்பட்டவன் இந்த வாக்குறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினாலே வெறிக்கக் குடித்து, மன விருப்பத்தின்டி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால், கர்த்தர் அவனை மன்னிக்க விரும்பமாட்டார்.
\s5
\v 20 அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் வரும்; கர்த்தர் அவன் பெயரை வானத்தின்கீழ் இல்லாமல் அழித்துப்போடுவார்.
\v 21 இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற உடன்படிக்கையினுடைய எல்லா சாபங்களின்படியும் அவனுக்குத் தீங்காக கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனை வெளியேற்றிப்போடுவார்.
\s5
\v 22 அப்பொழுது உங்களுக்குப்பின் வரும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியர்களும், கர்த்தர் இந்த தேசத்திற்கு வரச்செய்த வாதைகளையும் நோய்களையும் காணும்போதும்,
\v 23 கர்த்தர் தமது கோபத்திலும், பயங்கரத்திலும் சோதோமையும், கோமோராவையும், அத்மாவையும், செபோயீமையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் எந்தவொரு பூண்டின் முளைப்பும் இல்லாதபடி, கந்தகத்தாலும், உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,
\v 24 அந்த மக்களெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.
\s5
\v 25 அதற்கு: அவர்களுடைய முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, அவர்களுடன் செய்த உடன்படிக்கையை அவர்கள் விட்டுப்போய்,
\v 26 தாங்கள் அறியாமலும் தங்களுக்கு ஒரு பலனும் அளிக்காமலும் இருக்கிற தெய்வங்களாகிய வேறே தெய்வங்களை வணங்கி, அவைகளைப் பணிந்துகொண்டதினாலே,
\s5
\v 27 கர்த்தர் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரச்செய்ய, அதின்மேல் கோபம் மூண்டவராகி,
\v 28 அவர்களைக் கோபத்தினாலும், பயங்கரத்தினாலும், மகா எரிச்சலினாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து வேரோடே பிடுங்கி, இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்களை வேறே தேசத்தில் எறிந்துவிட்டார் என்று சொல்லப்படும்.
\s5
\v 29 மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்வதற்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.
\s5
\c 30
\cl அத்தியாயம்– 30
\s1 கர்த்தரிடம் திரும்பிவரும்போது கிடைக்கும் செழிப்பு
\p
\v 1 நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய கர்த்தரால் துரத்திவிடப்பட்டு, எல்லா மக்களுக்குள்ளும் சிதறியிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து,
\v 2 உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்தை கேட்டால்,
\v 3 உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பை மாற்றி, உனக்கு மனமிரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதறடித்த எல்லா மக்களுக்குள்ளும் சிதறியிருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்வார்.
\s5
\v 4 உன்னுடையவர்கள் வானத்தின்கீழே கடைசி எல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னை ஒன்றுசேர்த்து, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து,
\v 5 உன் முற்பிதாக்கள் சொந்தமாக்கியிருந்த தேசத்தை நீ மீண்டும் சொந்தமாக்க, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் முற்பிதாக்களைவிட உன்னைப் பெருகச்செய்வார்.
\s5
\v 6 உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்தி பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்செய்து,
\v 7 இந்தச் சாபங்களையெல்லாம் உன் எதிரிகளின்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைவர்கள்மேலும் வரச்செய்வார்.
\v 8 நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.
\s5
\v 9 அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் பிறப்பிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் பலனிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.
\v 10 உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் முற்பிதாக்கள்மேல் மகிழ்ச்சியாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாக மீண்டும் மகிழ்ச்சியாயிருப்பார்.
\s1 ஜீவனும் மரணமும்
\p
\s5
\v 11 நான் இன்று உனக்கு கொடுக்கிற கட்டளை உனக்கு மிகக் கடினமானதும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல.
\v 12 நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்வதற்கு, எங்களுக்காக வானத்திற்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல;
\s5
\v 13 நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்வதற்கு, எங்களுக்காக சமுத்திரத்தைக் கடந்து, அதைக்கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல;
\v 14 நீ அந்த வார்த்தையின்படியே செய்வதற்கு, அது உனக்கு மிகவும் சமீபமாக உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.
\s5
\v 15 இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்பாக வைத்தேன்.
\v 16 நீ பிழைத்து, பெருகுவதற்கும், நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புசெலுத்தவும், அவருடைய வழிகளில் நடக்கவும், அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.
\s5
\v 17 நீ கேடகாதபடி, மனம் தடுமாறி, இழுக்கப்பட்டு, மற்ற தெய்வங்களைப் பணிந்து, அவர்களை வணங்கினால்,
\v 18 நீங்கள் சொந்தமாக்குவதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நீண்டநாட்கள் வாழாமல், நிச்சயமாக அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.
\s5
\v 19 நான் ஜீவனையும், மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு முன்பாக வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சியாக வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைப்பதற்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,
\v 20 கர்த்தர் உன் முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புசெலுத்தி, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு வாழ்க்கையும், நீண்ட ஆயுளுமானவர் என்றான்.
\s5
\c 31
\cl அத்தியாயம்– 31
\s1 யோசுவாவுக்குக் கிடைத்த தலைமைப்பொறுப்பு
\p
\v 1 பின்னும் மோசே போய் இஸ்ரவேலர்கள் அனைவரையும் நோக்கி:
\v 2 இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாக இருக்கக்கூடாது; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை என்று கர்த்தர் என்னுடன் சொல்லியிருக்கிறார்.
\v 3 உன் தேவனாகிய கர்த்தர் தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், அவரே உனக்கு முன்னிருந்து, அந்த தேசத்தாரை அழிப்பார்; நீ அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்குவாய்; கர்த்தர் சொன்னபடியே யோசுவா உனக்கு முன்பாகக் கடந்துபோவான்.
\s5
\v 4 கர்த்தர் அழித்த எமோரியர்களின் ராஜாக்களாகிய சீகோனுக்கும், ஓகுக்கும், அவர்களுடைய தேசத்திற்கும் செய்ததுபோலவே அவர்களுக்கும் செய்வார்.
\v 5 நான் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்.
\v 6 நீங்கள் பலங்கொண்டு திடமானதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னுடன்கூட வருகிறார்; அவர் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.
\s5
\v 7 பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவனை நோக்கி: பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்திற்கு நீ இந்த மக்களை அழைத்துக்கொண்டு போய், அதை இவர்கள் சொந்தமாக்கும்படி செய்வாய்.
\v 8 கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னுடன் இருப்பார்; அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.
\s1 நியாயப்பிரமாணத்தை வாசித்தல்
\p
\s5
\v 9 மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, அதைக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவி வம்சத்தாரான ஆசாரியர்களுக்கும் இஸ்ரவேலுடைய மூப்பர்கள் எல்லோருக்கும் ஒப்புவித்து,
\v 10 அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: விடுதலையின் வருடமாகிய ஒவ்வொரு ஏழாம் வருடத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில்,
\v 11 உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவருடைய சந்நிதியில் சேர்ந்து வந்திருக்கும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய்.
\s5
\v 12 ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும்,
\v 13 அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் மக்களைக்கூட்டி, அதை வாசிக்கவேண்டும் என்றான்.
\s1 இஸ்ரவேலர்களின் கலகம்
\p
\s5
\v 14 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதோ, நீ மரணமடையும்காலம் நெருங்கியிருக்கிறது; நான் யோசுவாவுக்குக் கட்டளை கொடுக்கும்படி, அவனை அழைத்துக் கொண்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள் என்றார்; அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள்.
\v 15 கர்த்தர் கூடாரத்திலே மேகமண்டலத்தில் காட்சியளித்தார்; மேகமண்டலம் கூடார வாசலின்மேல் நின்றது.
\s5
\v 16 கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்படப் போகிறாய்; இந்த மக்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தெய்வங்களை, விபசாரம் செய்வதுபோலப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடன் நான் செய்த உடன்படிக்கையை மீறுவார்கள்.
\s5
\v 17 அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபம்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் அழிக்கப்படும்படி அநேக தீமைகளும் இடையூறுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இல்லாததினால் அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்.
\v 18 அவர்கள் வேறே தெய்வங்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளுக்காகவும் நான் அந்நாளிலே என் முகத்தை நிச்சயமாகவே மறைப்பேன்.
\s5
\v 19 இப்பொழுது நீங்கள் இந்தப் பாட்டை எழுதிக்கொண்டு, இதை இஸ்ரவேல் மக்களுக்குக் கற்றுக்கொடுத்து, இந்தப் பாட்டு எனக்குச் சாட்சியாக இஸ்ரவேல் மக்களுக்குள்ளே இருக்கும்படி இதை அவர்களைப் பாடச்செய்யுங்கள்.
\v 20 நான் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களை நுழையச்செய்த பின்பு, அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தெய்வங்களிடத்தில் திரும்பி, அவர்களை வணங்கி, என்னைக் கோபப்படுத்தி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.
\s5
\v 21 அநேக தீமைகளும் இடையூறுகளும் அவர்களைத் தொடரும்போது, அவர்களுடைய சந்ததியார் மறந்துபோகாமலிருக்கிற இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சி சொல்லும்; நான் வாக்களித்துக்கொடுத்த தேசத்தில் அவர்களை நுழையச்செய்யாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் எப்படிப்பட்டது என்பதை அறிவேன் என்றார்.
\s5
\v 22 அன்றைக்கே மோசே அந்தப் பாட்டை எழுதி, அதை இஸ்ரவேல் மக்களுக்குக் கற்பித்தான்.
\v 23 அவர் நூனின் மகனாகிய யோசுவாவை நோக்கி: நீ பலங்கொண்டு திடமானதாயிரு, இஸ்ரவேல் மக்களுக்கு நான் வாக்களித்துக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார்.
\s5
\v 24 மோசே இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் முழுவதையும் ஒரு புத்தகத்தில் எழுதி முடித்தபின்பு,
\v 25 மோசே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களை நோக்கி:
\v 26 நீங்கள் இந்த நியாயப்பிரமாண புத்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் அருகிலே வையுங்கள்; அங்கே அது உனக்கு எதிரான சாட்சியாயிருக்கும்.
\s5
\v 27 நான் உன் கலக குணத்தையும் உன் பிடிவாதத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கும்போது, கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்செய்தீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாகக் கலகம்செய்வீர்கள்!
\v 28 உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர்கள் மற்றும் அதிபதிகள் எல்லோருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள்.
\v 29 என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாக உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியை விட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசி நாட்களில் தீமை உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைகளின் செயல்களினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும்படி, அவருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் என்று சொல்லி,
\p
\s5
\v 30 இஸ்ரவேல் சபையார் எல்லோரும் கேட்க, மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரை சொன்னான்.
\s5
\c 32
\cl அத்தியாயம்– 32
\s1 மோசேயின் பாடல்
\p
\v 1 வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக.
\v 2 மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.
\s5
\v 3 கர்த்தருடைய நாமத்தை பிரபலப்படுத்துவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள்.
\v 4 அவர் கன்மலை; அவருடைய செயல் உத்தமமானது; அவருடைய வழிகளெல்லாம் நியாயம், அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.
\s5
\v 5 அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்களுடைய காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்.
\v 6 விவேகமில்லாத மதிகெட்ட மக்களே, இப்படியா கர்த்தருக்குப் பதிலளிக்கிறீர்கள், உன்னை ஆட்கொண்ட தகப்பன் அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா?
\s5
\v 7 ஆரம்பநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாக கடந்துபோன வருடங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்.
\v 8 உன்னதமானவர் மக்களுக்குச் சொத்துக்களைப் பங்கிட்டு, ஆதாமின் பிள்ளைகளை வெவ்வேறாகப் பிரித்த காலத்தில், இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கைக்குத்தக்கதாக, அனைத்து மக்களின் எல்லைகளைத் திட்டம்செய்தார்.
\s5
\v 9 கர்த்தருடைய மக்களே அவருடைய பங்கு; யாக்கோபு அவருக்குச் சொந்தமானவர்கள்.
\v 10 பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான வெட்டவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்.
\s5
\v 11 கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் இறக்கைகளை விரித்து, குஞ்சுகளை எடுத்து, அவைகளைத் தன் இறக்கைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,
\v 12 கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தெய்வம் அவருடன் இருந்ததில்லை.
\s5
\v 13 பூமியிலுள்ள உயர்ந்த இடங்களின்மேல் அவனை ஏறிவரச்செய்தார்; வயலில் விளையும் பலனை அவனுக்குச் சாப்பிடக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் சாப்பிடும்படி செய்தார்.
\s5
\v 14 பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள், வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற பொங்கிவழிகிற திராட்சைரசத்தையும் சாப்பிட்டாய்.
\s5
\v 15 யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமானதால், தன்னை உண்டாக்கின தேவனைவிட்டு, தன் இரட்சிப்பின் கன்மலையை அசட்டைசெய்தான்.
\v 16 அந்நிய தெய்வங்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள்.
\s5
\v 17 அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் முற்பிதாக்கள் பயப்படாதவைகளும், புதுமையாகத் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள்.
\v 18 உன்னை பிறக்கச் செய்த கன்மலையை நீ நினைக்காமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.
\s5
\v 19 கர்த்தர் அதைக்கண்டு, தமது மகன்களும், மகள்களும் தம்மைக் கோபப்படுத்தியதால் மனச்சோர்வடைந்து, அவர்களைப் புறக்கணித்து:
\v 20 என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள்.
\s5
\v 21 தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்களுடைய வீணான தீயசெயல்களினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப்படாத மக்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட மக்களால் அவர்களைப் கோபப்படுத்துவேன்.
\s5
\v 22 என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும்.
\s5
\v 23 தீமைகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பயன்படுத்துவேன்.
\v 24 அவர்கள் பசியினால் வாடி, சுட்டெரிக்கும் வெப்பத்தினாலும், கொடிய தண்டனையினாலும் இறந்துபோவார்கள்; கொடியமிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன்.
\s5
\v 25 வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும், இளம்பெண்ணையும், குழந்தையையும், நரைத்த கிழவனையும் அழிக்கும்.
\v 26 எங்கள் கை உயர்ந்ததென்றும், கர்த்தர் இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைவர்கள் தவறான எண்ணம்கொண்டு சொல்லுவார்கள் என்று,
\s5
\v 27 நான் எதிரியின் கோபத்திற்கு பயப்படாமல் இருந்தேன் என்றால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதறடித்து, மனிதர்களுக்குள் அவர்களுடைய பெயர் அழிந்துபோகச்செய்வேன் என்று சொல்லியிருப்பேன்.
\s5
\v 28 அவர்கள் யோசனைஇல்லாத மக்கள், அவர்களுக்கு உணர்வு இல்லை.
\v 29 அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.
\s5
\v 30 அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேர்களைத் துரத்தி, இரண்டுபேர்கள் பத்தாயிரம்பேர்களைத் துரத்துவது எப்படி?
\v 31 தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.
\s5
\v 32 அவர்களுடைய திராட்சச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சச்செடியிலும் குறைந்த தரமுள்ளதாக இருக்கிறது, அவைகளின் பழங்கள் விஷமும் அவைகளின் குலைகள் கசப்புமாக இருக்கிறது.
\s5
\v 33 அவர்களுடைய திராட்சைரசம் வலுசர்ப்பங்களின் விஷமும், விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது.
\v 34 இது என்னிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டு இருக்கிறதில்லையோ?
\s5
\v 35 பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் நெருங்கியிருக்கிறது; அவர்களுக்கு சம்பவிக்கும் காரியங்கள் விரைவாக வரும்.
\s5
\v 36 கர்த்தர் தம்முடைய மக்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்று என்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார்.
\s5
\v 37 அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைச் சாப்பிட்டு, பானபலிகளின் திராட்சைரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே?
\v 38 அவைகள் எழுந்து உங்களுக்கு உதவிசெய்து உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும்.
\s5
\v 39 நான் நானே அவர், என்னுடன் வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் குணமாக்குகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பவர் இல்லை.
\v 40 நான் என் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவர் என்கிறேன்.
\s5
\v 41 மின்னும் என் பட்டயத்தை நான் கூர்மையாக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் எதிரிகளிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதில்கொடுப்பேன்.
\s5
\v 42 கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்; என் பட்டயம் தலைவர்கள் முதற்கொண்டு சகல எதிரிகளின் மாம்சத்தையும் அழிக்கும்.
\s5
\v 43 மக்களே, அவருடைய மக்களுடன் மகிழ்ச்சியாயிருங்கள்; அவர் தமது ஊழியக்காரர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய எதிரிகளுக்குப் பதில்கொடுத்து, தமது தேசத்தின்மேலும் தமது மக்களின்மேலும் கிருபையுள்ளவராக இருப்பார்.
\s5
\v 44 மோசேயும் நூனின் மகனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.
\v 45 மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர்கள் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு,
\s5
\v 46 அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாக ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.
\v 47 இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள் என்றான்.
\s1 மோசேயின் மரணம்
\p
\s5
\v 48 அந்த நாளிலேதானே கர்த்தர் மோசேயை நோக்கி:
\v 49 நீ எரிகோவுக்கு எதிரேயுள்ள மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்கு சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;
\s5
\v 50 நீங்கள் சீன் வனாந்திரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீரின் அருகில் இஸ்ரவேல் மக்களுக்குள்ளே என்னைப் பரிசுத்தம்செய்யாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,
\v 51 உன் சகோதரனாகிய ஆரோன், ஓர் என்னும் மலையிலே மரணமடைந்து, தன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரணமடைந்து, உன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்படுவாய்.
\v 52 நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற எதிரேயுள்ள தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ நுழைவதில்லை என்றார்.
\s5
\c 33
\cl அத்தியாயம்– 33
\s1 மோசே இஸ்ரவேல் கோத்திரங்களை ஆசீர்வதித்தல்
\p
\v 1 தேவனுடைய மனிதனாகிய மோசே தான் மரணமடைவதற்கு முன்னே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:
\v 2 கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பத்தாயிரங்களான பரிசுத்தவான்களுடன் வெளிப்பட்டார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.
\s5
\v 3 உண்மையாகவே அவர் மக்களை நேசிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லோரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதிக்கப்படுவார்கள்.
\v 4 மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்; அது யாக்கோபின் சபைக்குச் சொந்தமானது.
\s5
\v 5 மக்களின் தலைவர்களும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் ஒன்றாகக்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்.
\v 6 ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக; அவன் மக்கள் குறைவாக இருக்கமாட்டார்கள் என்றான்.
\s5
\v 7 அவன் யூதாவைக்குறித்து: கர்த்தாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, அவன் தன்னுடைய மக்களிடத்திற்கு திரும்பிவரச் செய்யும்; அவனுடைய கை பலப்படுவதாக; அவனுடைய எதிரிகளுக்கு அவனைப் பாதுகாத்து விடுவிக்கிற உதவி செய்கிறவராக இருப்பீராக என்றான்.
\s5
\v 8 லேவியர்களைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரின் அருகில் வாக்குவாதம்செய்த உன் பரிசுத்த மனிதனிடம் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.
\s5
\v 9 தன்னுடைய தகப்பனையும், தாயையும் குறித்து நான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி, தன் சகோதரர்களையும், பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறவனிடத்தில் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.
\s5
\v 10 அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும், இஸ்ரவேலுக்கு உம்முடைய பிரமாணத்தையும் கற்பித்து, உமது சந்நிதானத்திலே தூபவர்க்கத்தையும், உமது பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளையும் செலுத்துவார்கள்.
\s5
\v 11 கர்த்தாவே, அவனுடைய ஆஸ்தியை ஆசீர்வதித்து, அவன் கையின் செயல்களின்மேல் பிரியமாயிரும்; அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் திரும்ப எழுந்திருக்காதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும் என்றான்.
\s5
\v 12 பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவருடன் சுகமாகத் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவனுடைய எல்லைக்குள்ளே தங்கியிருப்பார் என்றான்.
\s5
\v 13 யோசேப்பைக்குறித்து: கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும்,
\s5
\v 14 சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான பழங்களினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும்,
\v 15 பழமையான மலைகளில் உண்டாகும் விலையுயர்ந்த பொருட்களினாலும், நித்திய மலைகளில் கிடைக்கும் அரிதானபொருட்களினாலும்,
\s5
\v 16 நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக. முட்செடியில் காட்சியளித்தவரின் தயவு யோசேப்புடைய தலையின்மேலும், தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.
\s5
\v 17 அவனுடைய அலங்காரம் அவன் முதற்பிறந்த காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; அவைகளாலே மக்கள் அனைவரையும் தேசத்தின் கடைசிவரை முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பத்தாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்.
\s5
\v 18 செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகும்போதும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்கும்போதும் சந்தோஷமாயிரு.
\v 19 அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருட்களையும் அநுபவிப்பார்கள் என்றான்.
\s5
\v 20 காத்தைக்குறித்து: காத்திற்கு விசாலமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான்.
\s5
\v 21 அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்; அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது; ஆனாலும் அவன் மக்களுக்கு முன்பாக வந்து, மற்ற இஸ்ரவேலுடனே கர்த்தரின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் செய்வான் என்றான்.
\s5
\v 22 தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்.
\s5
\v 23 நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திருப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்குத் திசையையும் தெற்குத் திசையையும் சொந்தமாக்கிக்கொள் என்றான்.
\s5
\v 24 ஆசேரைக்குறித்து: ஆசேர் குழந்தை பாக்கியமுடையவனாக, தன் சகோதரர்களுக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.
\v 25 இரும்பும் வெண்கலமும் உன் காலணியின் கீழிருக்கும்; உன் நாட்களுக்குத்தக்கதாக உன் பெலனும் இருக்கும் என்றான்.
\s5
\v 26 யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்.
\s5
\v 27 அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று எதிரிகளைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
\s5
\v 28 இஸ்ரவேல் சுகமாகத் தனித்து குடியிருப்பான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சைரசமும் உள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.
\s5
\v 29 இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட மக்களே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்கு உதவிசெய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் எதிரிகள் உன்னை நிந்தித்துப் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய மேடுகளை மிதிப்பாய் என்று சொன்னான்.
\s5
\c 34
\cl அத்தியாயம்– 34
\s1 மோசே தேவனால் அடக்கம் செய்யப்படுதல்
\p
\v 1 பின்பு மோசே மோவாபின் சமவெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நெபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் மலையுச்சியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்வரை உள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,
\v 2 நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசி சமுத்திரம்வரை உள்ள யூதா தேசம் அனைத்தையும்,
\v 3 தென்புறத்தையும், சோவார்வரை உள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர் முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமமான பூமியையும் காண்பித்தார்.
\s5
\v 4 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்களுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் வாக்களித்த தேசம் இதுதான், இதை உன்னுடைய கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அந்த இடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார்.
\v 5 அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அந்த இடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரணமடைந்தான்.
\v 6 அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் செய்தார். ஒருவனுக்கும் அவனுடைய பிரேதக்குழி எங்கேயென்று இந்நாள்வரைக்கும் தெரியாது.
\s5
\v 7 மோசே மரணமடைகிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவனுடைய கண்கள் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.
\v 8 இஸ்ரவேல் மக்கள் மோவாபின் சமவெளிகளில் மோசேக்காக முப்பது நாட்கள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.
\s5
\v 9 மோசே நூனின் மகனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்ததால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிரப்பப்பட்டான்; இஸ்ரவேல் மக்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
\s5
\v 10 மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா வேலைக்காரர்களுக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பி நடப்பித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,
\v 11 அவன் இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் வெளிப்படையாகச் செய்த சகல வல்லமையான செயல்களையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,
\v 12 கர்த்தரை முகமுகமாக அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அவனுக்குப்பின்பு எழும்பினதில்லை என்று விளங்கும்.

1121
06-JOS.usfm Normal file
View File

@ -0,0 +1,1121 @@
\id JOS
\ide UTF-8
\h யோசுவா
\toc1 யோசுவா
\toc2 யோசுவா
\toc3 jos
\mt1 யோசுவா
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 யோசுவாவிற்குக் கர்த்தருடைய கட்டளை
\p
\v 1 கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே இறந்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் மகனாகிய யோசுவாவைப் பார்த்து:
\v 2 என் ஊழியக்காரனாகிய மோசே இறந்துபோனான்; இப்பொழுது நீயும் இந்த மக்கள் எல்லோரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் மக்களுக்கு நான் கொடுக்கும் தேசத்திற்குப் போங்கள்.
\v 3 நான் மோசேக்குச் சொன்னபடி உங்களுடைய கால்கள் மிதிக்கும் எல்லா இடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.
\s5
\v 4 வனாந்திரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதிவரைக்கும் உள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் மறைகிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்களுடைய எல்லையாக இருக்கும்.
\v 5 நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடு இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
\s5
\v 6 பெலன்கொண்டு திடமனதாக இரு; இந்த மக்களின் முற்பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்த தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.
\v 7 என் ஊழியக்காரனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்ய கவனமாக இருப்பதற்கு மிகவும் பெலன்கொண்டு திடமனதாக இரு; நீ போகும் இடங்களெல்லாம் புத்திமானாக நடந்துகொள்ளும்படி, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாமல் இருப்பாயாக.
\s5
\v 8 இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்ய கவனமாக இருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.
\v 9 நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பெலன்கொண்டு திடமனதாக இரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடங்களெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்றார்.
\s5
\v 10 அப்பொழுது யோசுவா மக்களின் தலைவர்களை நோக்கி:
\v 11 நீங்கள் முகாமிற்குள்ளே நடந்துபோய், மக்களைப் பார்த்து: உங்களுக்கு உணவுப் பொருட்களை ஆயத்தம் செய்யுங்கள்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரித்துக்கொள்வதற்காகக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்றுநாட்களுக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 12 பின்பு யோசுவா; ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களையும் நோக்கி:
\v 13 கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறச்செய்து, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே.
\s5
\v 14 உங்களுடைய மனைவிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இந்தப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர்கள் எல்லோரும் உங்களுடைய சகோதரர்களுக்கு முன்பாக அணியணியாகக் கடந்துபோய்,
\v 15 கர்த்தர் உங்களைப்போல உங்களுடைய சகோதரர்களையும் இளைப்பாறச்செய்து, அவர்களும் உங்களுடைய தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரை, அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இந்தப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்களுடைய சொந்தமான தேசத்திற்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக் கொண்டிருப்பீர்களாக என்றான்.
\s5
\v 16 அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடங்களுக்கெல்லாம் போவோம்.
\v 17 நாங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்ததுபோல உமக்கும் கீழ்ப்படிவோம்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் மட்டும் மோசேயோடு இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக.
\v 18 நீர் எங்களுக்குக் கட்டளையிடும் எல்லா காரியத்திலும் உம்முடைய சொல்லைக் கேட்காமல், உம்முடைய கட்டளைக்கு எதிராக முரட்டாட்டம் செய்கிற எவனும் கொலை செய்யப்படக்கடவன்; பெலன்கொண்டு திடமனதாக மட்டும் இரும் என்றார்கள்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 ராகாபும் வேவுபார்க்கிறவர்களும்
\p
\v 1 நூனின் மகனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுபார்க்கிறவர்களாகிய இரண்டு மனிதர்களை இரகசியமாக வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயருடைய விலைமாதுவின் வீட்டிற்குச் சென்று, அங்கே தங்கினார்கள்.
\v 2 தேசத்தை வேவுபார்ப்பதற்காக, இஸ்ரவேல் மக்களில் சில மனிதர்கள் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்கு சொல்லப்பட்டது.
\v 3 அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபிடத்திற்கு ஆள் அனுப்பி: உன்னிடத்தில் வந்து, உன் வீட்டிற்குள் பிரவேசித்த மனிதர்களை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்ப்பதற்காக வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 4 அந்தப் பெண் அந்த இரண்டு மனிதர்களையும் கொண்டுபோய் அவர்களை ஒளித்துவைத்து: உண்மைதான், என்னிடத்தில் மனிதர்கள் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எந்த ஊரைச்சார்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது.
\v 5 பட்டணத்தின் வாசற்கதவை அடைக்கும் நேரத்தில் இருட்டும்வேளையிலே, அந்த மனிதர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் எங்கு போனார்கள் என்று எனக்குத் தெரியாது; சீக்கிரமாகப் போய் அவர்களைத் தேடுங்கள்; நீங்கள் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என்றாள்.
\s5
\v 6 அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறச்செய்து, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் நார்களுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள்.
\v 7 ராஜாவின் ஆட்கள் யோர்தானுக்குப் போகிற வழியில் துறைமுகம்வரை அவர்களைத் தேடிப்போனார்கள்; அவர்களைத் தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசற்கதவு அடைக்கப்பட்டது.
\s5
\v 8 அந்த மனிதர்கள் படுத்துக்கொள்வதற்குமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிச்சென்று,
\v 9 கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், தேசத்து மக்கள் எல்லோரும் பயந்துபோனார்களென்றும் அறிவேன்.
\s5
\v 10 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகச்செய்ததையும், நீங்கள் யோர்தானுக்கு மறுபுறத்தில் அழித்துப்போட்ட எமோரியர்களின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.
\v 11 கேள்விப்பட்டபோது எங்களுடைய இருதயம் கரைந்துபோனது, உங்களாலே எல்லோருடைய தைரியமும் அற்றுப்போனது; உங்களுடைய தேவனாகிய கர்த்தரே மேலே வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்.
\s5
\v 12 இப்போதும், நான் உங்களுக்கு தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்திற்கு தயவுசெய்வோம் என்று கர்த்தருடைய நாமத்தில் எனக்கு சத்தியம் செய்து,
\v 13 நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரர்களையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடு வைத்து, எங்களுடைய ஜீவனை சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றாள்.
\s5
\v 14 அப்பொழுது அந்த மனிதர்கள் அவளை நோக்கி: எங்களுடைய ஜீவன் உங்களுடைய ஜீவனுக்கு சமம்; நீங்கள் எங்களுடைய காரியத்தை வெளிப்படுத்தாமலிருந்தால், கர்த்தர் எங்களுக்கு தேசத்தைக் கொடுக்கும்போது, நாங்கள் உங்களிடம் தயவாகவும் உண்மையாகவும் இருப்போம் என்றார்கள்.
\s5
\v 15 அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாக இறக்கிவிட்டாள்; அவள் வீடு பட்டணத்தின் மதில்மேல் இருந்தது; பட்டணத்திலே அவள் குடியிருந்தாள்.
\v 16 அப்பொழுது அவள் அவர்களை நோக்கி: தேடுகிறவர்கள் உங்களைப் பார்க்காதபடி, நீங்கள் மலையிலே போய், அவர்கள் திரும்பிவரும்வரைக்கும் அங்கே மூன்றுநாட்கள் ஒளிந்திருந்து, பின்பு உங்களுடைய வழியிலே போங்கள் என்றாள்.
\v 17 அப்பொழுது அந்த மனிதர்கள் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்த சிவப்பு நூல்கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன் வீட்டிலே சேர்த்துக்கொள்.
\s5
\v 18 இல்லாவிட்டால் நீ எங்கள் கையில் வாங்கின சத்தியத்திற்கு நீங்கலாயிருப்போம்.
\v 19 எவனாகிலும் உன் வீட்டு வாசல்களிலிருந்து வெளியே புறப்பட்டால், அவனுடைய இரத்தப்பழி அவனுடைய தலையின்மேல் இருக்கும்; எங்கள்மேல் குற்றம் இல்லை; உன்னோடு வீட்டில் இருக்கிற எவன்மீதாவது கைபோடப்பட்டதானால், அவனுடைய இரத்தப்பழி எங்கள் தலையின்மேல் இருக்கும்.
\s5
\v 20 நீ எங்களுடைய காரியத்தை வெளிப்படுத்துவாயானால், நீ எங்கள் கையில் வாங்கின சத்தியத்திற்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள்.
\v 21 அதற்கு அவள்: உங்களுடைய வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்; அவர்கள் போய்விட்டார்கள்; பின்பு அவள் அந்த சிவப்புக்கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள்.
\s5
\v 22 அவர்கள் போய், மலையிலே சேர்ந்து, தேடுகிறவர்கள் திரும்பிவரும்வரைக்கும், மூன்றுநாட்கள் அங்கே தங்கியிருந்தார்கள்; தேடுகிறவர்கள் வழிகளிலெல்லாம் அவர்களைத் தேடியும் காணமுடியாமல்போனார்கள்.
\s5
\v 23 அந்த இரண்டு மனிதர்களும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின் மகனாகிய யோசுவாவிடம் வந்து, தங்களுக்கு சம்பவித்த எல்லாவற்றையும் அவனுக்குத் தெரிவித்து;
\v 24 கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் மக்களெல்லோரும் நமக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள் என்று அவனிடம் சொன்னார்கள்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 யோர்தானைக் கடந்துபோகுதல்
\p
\v 1 அதிகாலையிலே யோசுவா எழுந்த பின்பு, அவனும் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் சித்தீமிலிருந்து பயணம்செய்து, யோர்தான்வரைக்கும் வந்து, அதைக் கடந்துபோகுமுன்னே அங்கே இரவு தங்கினார்கள்.
\s5
\v 2 மூன்றுநாட்களானபின்பு, அதிகாரிகள் முகாமின் நடுவே போய்,
\v 3 மக்களை நோக்கி: நீங்கள் உங்களுடைய தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச் சுமக்கிற லேவியர்களாகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்களுடைய இடத்தைவிட்டுப் பயணம்செய்து, அதைப் பின்பற்றிச்செல்லுங்கள்.
\v 4 உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் முழந்தூரம் இடைவெளி இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படி, அதற்கு அருகில் வராமலிருப்பீர்களாக; இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாக நடந்துபோகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள்.
\s5
\v 5 யோசுவா மக்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.
\v 6 பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு, மக்களுக்கு முன்னே நடந்துபோங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு மக்களுக்கு முன்னே போனார்கள்.
\s5
\v 7 கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடு இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலர்கள் எல்லோரும் அறிவதற்கு, இன்று அவர்களுடைய கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.
\v 8 உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தானில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார்.
\s5
\v 9 யோசுவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: நீங்கள் இங்கே வந்து, உங்களுடைய தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான்.
\v 10 பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியர்களையும், ஏத்தியர்களையும், ஏவியர்களையும், பெரிசியர்களையும், கிர்காசியர்களையும், எமோரியர்களையும், எபூசியர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக:
\v 11 இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது.
\s5
\v 12 இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள்.
\v 13 சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.
\s5
\v 14 மக்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்களுடைய கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை மக்களுக்கு முன்னே சுமந்துகொண்டுபோய், யோர்தான்வரைக்கும் வந்தார்கள்.
\v 15 யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டோடும். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே,
\v 16 மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமவெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடினது; அப்பொழுது மக்கள் எரிகோவிற்கு எதிரே கடந்துபோனார்கள்.
\s5
\v 17 எல்லா மக்களும் யோர்தானைக் கடந்துபோகும்வரைக்கும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் தண்ணீரில்லாத உலர்ந்த தரைவழியாகக் கடந்துபோனார்கள்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\p
\v 1 மக்கள் எல்லோரும் யோர்தானைக் கடந்தபின்பு, கர்த்தர் யோசுவாவை நோக்கி:
\v 2 நீங்கள், ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக மக்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு,
\v 3 இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியர்களின் கால்கள் நிலையாக நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடு அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில் தங்கும் இடத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார்.
\s5
\v 4 அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் மக்களில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து,
\v 5 அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் நடுவில் உங்களுடைய தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்துபோய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாக இருக்கும்படிக்கு, இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாக, உங்களில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோங்கள்.
\s5
\v 6 நாளை இந்தக் கற்கள் என்னவென்று உங்களுடைய பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது,
\v 7 நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனது; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் மக்களுக்கு என்றென்றைக்கும் நினைவூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.
\s5
\v 8 யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, கர்த்தர் யோசுவாவிடம் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடு அக்கரைக்குக் கொண்டுபோய், அவர்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.
\v 9 யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியர்களின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்த நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.
\s5
\v 10 மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் மக்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்து முடிக்கும்வரைக்கும், பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவே நின்றார்கள்; மக்கள் வேகமாகக் கடந்துபோனார்கள்.
\v 11 மக்களெல்லோரும் கடந்துபோனபின்பு, கர்த்தருடைய பெட்டியும் கடந்துபோனது; ஆசாரியர்கள் மக்களுக்கு முன்பாகப் போனார்கள்.
\s5
\v 12 ரூபன் கோத்திரத்தார்களும் காத் கோத்திரத்தார்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணியணியாக இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகக் கடந்துபோனார்கள்.
\v 13 ஏறக்குறைய நாற்பதாயிரம்பேர்கள் யுத்தத்திற்காக பயிற்சிபெற்றவர்களாக யுத்தம்செய்ய, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமவெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.
\v 14 அந்தநாளிலே கர்த்தர் யோசுவாவை எல்லா இஸ்ரவேலர்களின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, யோசுவாவிற்கும், அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் பயந்திருந்தார்கள்.
\s5
\v 15 கர்த்தர் யோசுவாவை நோக்கி:
\v 16 சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார்.
\s5
\v 17 யோசுவா: யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான்.
\v 18 அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தான் நடுவிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்திற்குத் திரும்பி, முன்புபோல அதின் கரையெங்கும் புரண்டோடியது.
\s5
\v 19 இந்தவிதமாக முதலாம் மாதம் பத்தாம் தேதியிலே மக்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கிழக்கு எல்லையான கில்காலிலே முகாமிட்டார்கள்.
\v 20 அவர்கள் யோர்தானிலிருந்து எடுத்துக்கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி,
\v 21 இஸ்ரவேல் மக்களை நோக்கி: நாளை உங்களுடைய பிள்ளைகள் இந்தக் கற்கள் என்னவென்று தங்களுடைய தகப்பன்மார்களைக் கேட்கும்போது,
\s5
\v 22 நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் வெட்டாந்தரை வழியாக இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள்.
\v 23 பூமியின் எல்லா மக்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் எல்லா நாட்களும் உங்களுடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும்,
\v 24 உங்களுடைய தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்துபோகும்வரைக்கும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகச்செய்ததுபோல, உங்களுடைய தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்துபோகும்வரைக்கும் வற்றிப்போகச்செய்தார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 கில்காலில் விருத்தசேதனம்
\p
\v 1 இஸ்ரவேல் மக்கள் கடந்துபோகும்வரைக்கும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகச்செய்ததை, யோர்தானுக்கு மேற்குப்பகுதியில் குடியிருந்த எமோரியர்களின் எல்லா ராஜாக்களும், சமுத்திரத்தின் அருகே குடியிருந்த கானானியர்களின் எல்லா ராஜாக்களும் கேட்டதுமுதல், அவர்களுடைய இருதயம் கரைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக சோர்ந்துபோனார்கள்.
\s5
\v 2 அந்தக் காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கூர்மையான கத்திகளை உண்டாக்கி, மீண்டும் இரண்டாம்முறை இஸ்ரவேலின் எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய் என்றார்.
\v 3 அப்பொழுது யோசுவா கூரான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேலின் எல்லா ஆண்களுக்கும் ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம்செய்தான்.
\s5
\v 4 யோசுவா இப்படி விருத்தசேதனம்செய்த நோக்கம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஆண்மக்களாகிய யுத்த மனிதர்கள் எல்லோரும் எகிப்திலிருந்து புறப்பட்டப்பின்பு, வழியில் வனாந்திரத்திலே இறந்துபோனார்கள்.
\v 5 எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா மக்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தார்கள்; அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டப்பின்பு, வழியில் வனாந்திரத்திலே பிறந்த எல்லா மக்களும் விருத்தசேதனம் செய்யப்படாமலிருந்தார்கள்.
\s5
\v 6 கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த மனிதர்களான எல்லோரும் இறக்கும்வரைக்கும், இஸ்ரவேல் மக்கள் நாற்பதுவருடங்கள் வனாந்திரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்களுடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் செய்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.
\v 7 அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்களுடைய ஆண் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம்செய்தான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்செய்யாததினால் அவர்கள் விருத்தசேதனம் செய்யப்படாமலிருந்தார்கள்.
\s5
\v 8 மக்கள் எல்லோரும் விருத்தசேதனம்செய்யப்பட்டபின்பு, அவர்கள் குணமாகும்வரைக்கும் தங்கள்தங்கள் இடத்திலே முகாமில் தங்கியிருந்தார்கள்.
\v 9 கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இல்லாதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த இடம் இந்த நாள்வரைக்கும் கில்கால் எனப்படுகிறது.
\s5
\v 10 இஸ்ரவேல் மக்கள் கில்காலில் முகாமிட்டிருந்து, மாதத்தின் பதினான்காம் தேதி மாலைநேரத்திலே எரிகோவின் சமவெளிகளிலே பஸ்காவை அனுசரித்தார்கள்.
\v 11 பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தால் செய்யப்பட்ட புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் சாப்பிட்டார்கள்.
\s5
\v 12 அவர்கள் தேசத்தின் தானியத்தைச் சாப்பிட்ட மறுநாளிலே மன்னா பெய்யாமல் நின்றுபோனது; அதுமுதல் இஸ்ரவேல் மக்களுக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்தின் பலனை அந்த வருடத்திலே சாப்பிட்டார்கள்.
\s1 எரிகோவின் வீழ்ச்சி
\p
\s5
\v 13 பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவிய பட்டயம் அவருடைய கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ அல்லது எங்களுடைய சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.
\s5
\v 14 அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாக இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தம்முடைய ஊழியனான எனக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.
\v 15 அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களில் இருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\s1 எரிகோவைக் கைப்பற்றுதல்
\p
\v 1 எரிகோ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.
\v 2 கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும், யுத்தவீரர்களையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.
\s5
\v 3 யுத்தமனிதர்களாகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தை ஒருமுறை சுற்றி வாருங்கள்; இப்படி ஆறுநாட்கள் சுற்றிவரவேண்டும்.
\v 4 ஏழு ஆசாரியர்கள் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவாருங்கள்; ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதவேண்டும்.
\s5
\v 5 அவர்கள் அந்தக் கொம்புகளினால் நீண்ட சப்தம் எழுப்பும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், மக்கள் எல்லோரும் மகா சத்தத்தோடு ஆர்ப்பரிக்கவேண்டும்; அப்பொழுது பட்டணத்தின் மதில் இடிந்துவிழும்; உடனே மக்கள் அவரவர்கள் தங்களுக்கு நேராக ஏறிப்போகவேண்டும் என்றார்.
\s5
\v 6 அந்தப்படியே நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;
\v 7 மக்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்த வீரர்கள் கர்த்தரின் பெட்டிக்குமுன்னே நடக்கவேண்டும் என்றான்.
\s5
\v 8 யோசுவா மக்களிடம் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர்கள் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்குப் பின்னே சென்றது.
\v 9 எக்காளங்களை ஊதுகிற ஆசாரியர்களுக்கு முன்னே யுத்த வீரர்கள் நடந்தார்கள்; பின்புறம் உள்ள வீரர்கள், எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின்னே சென்றார்கள்.
\s5
\v 10 யோசுவா மக்களை நோக்கி: நான் சொல்லும் நாள் வரைக்கும், நீங்கள் ஆர்ப்பரிக்காமலும் உங்கள் வாயினால் சத்தம் போடாமலும் இருங்கள்; உங்களுடைய வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளில் ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான்.
\v 11 அப்படியே கர்த்தரின் பெட்டியைப் பட்டணத்தைச் சுற்றி ஒருமுறை சுற்றிவரச் செய்தான்; அவர்கள் திரும்பப் முகாமிற்கு வந்து, அங்கே இரவுதங்கினார்கள்.
\s5
\v 12 யோசுவா அதிகாலையில் எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
\v 13 தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்த வீரர்கள் அவர்களுக்கு முன்னே நடந்தார்கள்; பின்புறம் இருந்த படை, எக்காளங்கள் ஊதப்படும்போது, கர்த்தரின் பெட்டிக்குப் பின்னே சென்றது.
\v 14 இரண்டாம் நாளிலும் பட்டணத்தை ஒருமுறை சுற்றிவந்து, முகாமிற்குத் திரும்பினார்கள்; இவ்விதமாக ஆறுநாட்களும் செய்தார்கள்.
\s5
\v 15 ஏழாம் நாளில், அதிகாலையிலே பொழுதுவிடியும்போது எழுந்திருந்து அந்தவிதமாகவே பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவந்தார்கள்; அந்த நாளில் மட்டும் பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவந்தார்கள்.
\v 16 ஏழாம்முறை ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதும்போது, யோசுவா மக்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
\s5
\v 17 ஆனாலும் இந்தப் பட்டணமும், இதில் உள்ள அனைத்தும் கர்த்தருக்கு சபிக்கப்பட்டதாக இருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் விலைமாது மறைத்துவைத்தபடியால், அவளும் அவளுடைய வீட்டில் இருக்கிற அனைவரும் உயிரோடிருக்கட்டும்.
\v 18 சபிக்கப்பட்டதிலிருந்து எதையாவது எடுத்துக்கொள்வதினாலே, நீங்கள் சபிக்கப்பட்டவர்களாகாதபடிக்கும், இஸ்ரவேல் முகாமை சபிக்கப்பட்டதாக்கி அதைக் கலங்கச்செய்யாதபடிக்கும், நீங்கள் சபிக்கப்பட்டதற்குமட்டும் எச்சரிக்கையாக இருங்கள்.
\v 19 அனைத்து வெள்ளியும், பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.
\s5
\v 20 எக்காளங்களை ஊதும்போது, மக்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை மக்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடு சத்தமிடும்போது, மதில் இடிந்து விழுந்தது; உடனே மக்கள் அவரவர்கள் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து,
\v 21 பட்டணத்திலிருந்த ஆண்களையும் பெண்களையும் வாலிபர்களையும் வயதானவர்களையும் ஆடுமாடுகளையும் கழுதைகள் அனைத்தையும் கூரான பட்டயத்தினால் அழித்துப்போட்டார்கள்.
\s5
\v 22 யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு மனிதர்களை நோக்கி: நீங்கள் அந்த விலைமாதுவின் வீட்டிற்குப் போய், நீங்கள் அவளுக்கு வாக்குச்செய்தபடி அந்தப் பெண்ணையும் அவளுக்கு உண்டான எல்லாவற்றையும் அங்கிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
\s5
\v 23 அப்பொழுது வேவுகாரர்களான அந்த வாலிபர்கள் உள்ளே சென்று, ராகாபையும் அவளுடைய தகப்பனையும், தாயையும், சகோதரர்களையும், அவளுக்குண்டான எல்லாவற்றையும் அவளுடைய குடும்பத்தினர் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் முகாமுக்கு வெளியே இருக்கும்படி செய்தார்கள்.
\v 24 பட்டணத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பாத்திரங்களை மட்டும் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள்.
\s5
\v 25 எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் விலைமாது மறைத்துவைத்தபடியினால், அவளையும், அவளுடைய தகப்பன் வீட்டாரையும், அவளுக்குண்டான எல்லாவற்றையும் யோசுவா உயிரோடு வைத்தான்; அவள் இந்தநாள்வரைக்கும் இஸ்ரவேலில் வாழ்கிறாள்.
\s5
\v 26 அந்தக் காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டுவதற்காக எழும்பும் மனிதன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருப்பான்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த மகனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய மகனையும் சாகக் கொடுப்பான் என்று சாபம் கூறினான்.
\v 27 இந்தவிதமாகக் கர்த்தர் யோசுவாவோடு இருந்தார்; அவனுடைய புகழ் தேசமெல்லாம் பரவியது.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 ஆகானின் பாவம்
\p
\v 1 இஸ்ரவேல் மக்கள் சபிக்கப்பட்டவைகளினாலே துரோகம் செய்தார்கள்; எப்படியென்றால், யூதாகோத்திரத்தின் சேராகுடைய மகனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சபிக்கப்பட்டவைகளிலே சிலவற்றை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின்மீது கர்த்தருடைய கோபம் மூண்டது.
\s5
\v 2 யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கில் உள்ள பெத்தாவேனுக்கு அருகில் இருக்கிற ஆயி பட்டணத்திற்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனிதர்கள் போய், ஆயியை வேவுபார்த்து,
\v 3 யோசுவாவிடம் திரும்பிவந்து, அவனை நோக்கி: மக்கள் எல்லோரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை முறியடிக்கலாம்; எல்லா மக்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள்.
\s5
\v 4 அப்படியே மக்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அந்த இடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனிதர்களிடம் தோல்வியடைந்து ஓடிப்போனார்கள்.
\v 5 ஆயியின் மனிதர்கள் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளியிலிருந்து செபாரீம்வரைக்கும் அவர்களைத் துரத்தி, மலையடிவாரத்தில் அவர்களை வெட்டினார்கள்; மக்களின் இருதயம் கரைந்து தண்ணீராகப்போனது.
\s5
\v 6 அப்பொழுது யோசுவா தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பர்களும் மாலைநேரம்வரைக்கும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.
\v 7 யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர்களின் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா இந்த மக்களை யோர்தானைக் கடக்கச்செய்தீர்? நாங்கள் யோர்தானுக்கு மறுபுறத்தில் மனதிருப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாக இருக்கும்.
\s5
\v 8 ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன்.
\v 9 கானானியர்களும் தேசத்தின் குடிகள் அனைவரும் இதைக்கேட்டு, எங்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு, எங்களுடைய பெயரை பூமியில் இல்லாதபடிக்கு வேரில்லாமற்போகச் செய்வார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்திற்கு என்ன செய்வீர் என்றான்.
\s5
\v 10 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன?
\v 11 இஸ்ரவேலர்கள் பாவம் செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சபிக்கப்பட்டவைகளில் சிலவற்றை எடுத்துக்கொண்டதும், திருடியதும், ஏமாற்றியதும், தங்களுடைய பொருட்களுக்குள்ளே வைத்ததும் உண்டே.
\v 12 ஆகவே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்க முடியாமல், தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சபிக்கப்பட்டவர்களானார்கள்; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அழிக்காவிட்டால், இனி உங்களோடு இருக்கமாட்டேன்.
\s5
\v 13 எழுந்திரு, நீ மக்களைப் பரிசுத்தம்செய்யச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்திற்கு உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; இஸ்ரவேலர்களே, சபிக்கப்பட்டவைகள் உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அகற்றாமலிருக்கும்வரை, நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
\s5
\v 14 காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்.
\v 15 அப்பொழுது சபிக்கப்பட்டவைகளை எடுத்தவனாகக் கண்டுபிடிக்கப்படுகிறவன், கர்த்தரின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குண்டான அனைத்தும் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றார்.
\s5
\v 16 யோசுவா அதிகாலையில் எழுந்திருந்து, இஸ்ரவேலர்களைக் கோத்திரம் கோத்திரமாக வரச்செய்தான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது.
\v 17 அவன் யூதாவின் வம்சங்களை வரச்செய்தபோது, சேராகியர்களின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியர்களின் வம்சத்தைப் பேர்பேராக வரச்செய்தபோது, சப்தி குறிக்கப்பட்டான்.
\v 18 அவனுடைய வீட்டாரை அவன் பேர்பேராக வரச்செய்தபோது, யூதா கோத்திரத்தின் சேராகின் மகனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான்.
\s5
\v 19 அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைசெய்து, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு மறைக்காதே என்றான்.
\v 20 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு மறுமொழியாக: உண்மையாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்; இன்னின்ன விதமாகச் செய்தேன்.
\v 21 கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையுள்ள ஒரு தங்கக் கட்டியையும் நான் கண்டு, அவைகளை ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என்கூடாரத்தின் நடுவில் நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருக்கிறது, வெள்ளி அதற்கு அடியில் இருக்கிறது என்றான்.
\s5
\v 22 உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்திற்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைக்கப்பட்டிருந்தது, வெள்ளியும் அதின்கீழே இருந்தது.
\v 23 அவைகளைக் கூடாரத்தின் நடுவிலிருந்து எடுத்து, யோசுவாவிடமும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரிடமும் கொண்டுவந்து, கர்த்தருடைய சமூகத்தில் வைத்தார்கள்.
\s5
\v 24 அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் சேராகின் மகனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும், சால்வையையும், பொன் கட்டியையும், அவனுடைய மகன்களையும், மகள்களையும், அவனுடைய மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும், அவனுடைய கூடாரத்தையும், அவனுக்குண்டான அனைத்தையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுபோனார்கள்.
\s5
\v 25 அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கச்செய்தது என்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கச்செய்வார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி;
\v 26 அவன்மேல் இந்தநாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கடுங்கோபத்தைவிட்டு மாறினார்; ஆகவே அந்த இடம் இந்தநாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 ஆயி பட்டணத்தின் அழிவு
\p
\v 1 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த மக்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயி பட்டணம்வரைக்கும் போ, இதோ, ஆயியின் ராஜாவையும். அவனுடைய மக்களையும் அவனுடைய பட்டணத்தையும் அவனுடைய நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
\v 2 நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததுபோல, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்டப் பொருட்களையும் மிருகஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்திற்குப் பின்புறத்திலே இரகசியப்படையை வை என்றார்.
\s5
\v 3 அப்பொழுது ஆயியின் மீது படையெடுத்துப் போக, யோசுவாவும் எல்லா யுத்தமனிதர்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரர்களான முப்பதாயிரம்பேரைத் தேர்ந்தெடுத்து, இரவிலே அவர்களை அனுப்பி,
\v 4 அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: நீங்கள் பட்டணத்தின் பின்புறத்திலே ஒளிந்திருக்கவேண்டும்; பட்டணத்தைவிட்டு வெகுதூரம் போகாமல், எல்லோரும் ஆயத்தமாக இருங்கள்.
\s5
\v 5 நானும் என்னோடு இருக்கிற எல்லா மக்களும் பட்டணத்திற்கு அருகில் நெருங்கி வருவோம்; அவர்கள் முன்புபோல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.
\v 6 அப்பொழுது அவர்கள்; முன்பு போலவே நமக்கு முன்பாக தோற்று ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு வெளியே வரப்பண்ணும்வரைக்கும், அவர்களுக்கு முன்பாக ஓடுவோம்.
\v 7 அப்பொழுது நீங்கள் மறைவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அதை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்.
\s5
\v 8 நீங்கள் பட்டணத்தைப் பிடிக்கும்போது, அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள்; கர்த்தருடைய சொற்படி செய்யுங்கள்; இதோ, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் என்று சொல்லி,
\v 9 அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்கில் ஒளிந்திருந்தார்கள்; யோசுவா அன்று இரவு மக்களுடன் தங்கினான்.
\s5
\v 10 அதிகாலையில் யோசுவா எழுந்திருந்து, மக்களை எண்ணிப்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பர்களோடு மக்களுக்கு முன்பே நடந்து, ஆயியின் மேல் படையெடுத்தான்.
\v 11 அவனோடு இருந்த யுத்த மக்கள் எல்லோரும் நடந்து, பட்டணத்திற்கு அருகே வந்துசேர்ந்து, ஆயிக்கு வடக்கே முகாமிட்டார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
\v 12 அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களை பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே பட்டணத்திற்குமேலே இரகசியப் படையாக வைத்தான்.
\s5
\v 13 பட்டணத்திற்கு வடக்கே இருந்த எல்லா சேனையையும் பட்டணத்திற்கு மேற்கே ஒளிந்திருக்கிறவர்களையும் ஒழுங்குசெய்தபின்பு, யோசுவா அன்று இரவு பள்ளத்தாக்கிற்குப் போயிருந்தான்.
\v 14 ஆயியின் ராஜா அதைக் கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனிதர்களாகிய அவனுடைய எல்லா மக்களும் துரிதப்பட்டு, அதிகாலையிலே குறித்த வேளையில் இஸ்ரவேலர்களுக்கு எதிரே யுத்தம்செய்ய சமவெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்திற்குப் பின்னாலே தன்னைத் தாக்குவதற்காக இரகசியப் படை வைக்கப்பட்டிருக்கிறதை அவன் அறியாமலிருந்தான்.
\s5
\v 15 யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்திரத்திற்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள்.
\v 16 அப்பொழுது பட்டணத்திற்குள் இருந்த மக்கள் எல்லோரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தை விட்டுப் புறப்பட்டார்கள்.
\v 17 ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலர்களைப் பின்தொடராத மனிதன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.
\s5
\v 18 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டு; பட்டணத்தை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்; அப்படியே யோசுவா தன் கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்திற்கு நேராக நீட்டினான்.
\v 19 அவன் தன் கையை நீட்டினவுடனே, ஒளிந்திருந்தவர்கள் வேகமாகத் தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பி ஓடி, பட்டணத்திற்கு வந்து, அதைப் பிடித்து, தீவிரத்தோடு பட்டணத்தைத் தீக்கொளுத்தினார்கள்.
\s5
\v 20 ஆயியின் மனிதர்கள் பின்நோக்கிப் பார்த்தபோது, இதோ, பட்டணத்தின் புகை ஆகாயத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமல்போனது; வனாந்திரத்திற்கு ஓடின மக்கள் தங்களைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கித் திரும்பினார்கள்.
\v 21 ஒளிந்திருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலர்களும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனிதர்களை முறியடித்தார்கள்.
\s5
\v 22 பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இந்தப்பக்கத்திலும் சிலர் அந்தப்பக்கத்திலும் இருந்த இஸ்ரவேலர்களின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகவே, அவர்களில் ஒருவரும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,
\v 23 ஆயியின் ராஜாவை உயிரோடு பிடித்து, யோசுவாவிடம் கொண்டுவந்தார்கள்.
\s5
\v 24 இஸ்ரவேலர்கள் வனாந்திரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் அழியும்வரை பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் ஆயிக்குத் திரும்பி, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்.
\v 25 அந்த நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயியின் மனிதர்கள் எல்லோரும் பன்னிரண்டாயிரம்பேர் மரித்தார்கள்.
\v 26 ஆயியின் குடிகளையெல்லாம் அழித்துத் தீரும்வரைக்கும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.
\s5
\v 27 கர்த்தர் யோசுவாவிற்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தில் கொள்ளையிட்டவைகளையும் மட்டும் இஸ்ரவேலர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
\v 28 யோசுவா ஆயியைச் சுட்டெரித்து, அதை இந்த நாள்வரைக்கும் இருக்கிறபடி என்றைக்கும் பாழாய்க்கிடக்கும் மண்மேடாக்கி,
\s5
\v 29 ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கி, மாலைநேரம்வரைக்கும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் மறைந்தபின்பு யோசுவா அவனுடைய உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணத்தின் வாசலில் போட்டு, இந்த நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.
\s1 ஏபால் மலையில் உடன்படிக்கை புதுப்பிக்கப்படுதல்
\p
\s5
\v 30 அப்பொழுது யோசுவா: கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிட்டபடியும், மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியும், ஏபால் மலையில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு இரும்பு ஆயுதம் படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
\v 31 அதின்மேல் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
\v 32 இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் எழுதினான்.
\s5
\v 33 இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிப்பதற்காக கர்த்தரின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே, இஸ்ரவேலர்கள் எல்லோரும், அவர்களுடைய மூப்பர்களும், அதிகாரிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களான ஆசாரியர்களுக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிபேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிபேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.
\s5
\v 34 அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய எல்லா வார்த்தைகளையும் வாசித்தான்.
\v 35 மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா இஸ்ரவேலின் முழுச்சபைக்கும், பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் வாழ்ந்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையையும் விடாமல் வாசித்தான்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 கிபியோனியர்களின் தந்திரம்
\p
\v 1 யோர்தானுக்கு இந்தப்புறத்திலே மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான பெரிய சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியர்களும், எமோரியர்களும், கானானியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் அவர்களுடைய எல்லா ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது,
\v 2 அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலர்களோடும் யுத்தம்செய்ய ஒன்றாகக் கூடினார்கள்.
\s5
\v 3 எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது,
\v 4 ஒரு தந்திரமான யோசனைசெய்து, தங்களைப் பிரதிநிதிகளைப் போலக்காண்பித்து, பழைய சாக்குப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சரசத் தோல்பைகளையும் தங்களுடைய கழுதைகள்மேல் வைத்து,
\v 5 பழுதுபார்க்கப்பட்ட பழைய காலணிகளைத் தங்களுடைய கால்களில் அணிந்து, பழைய உடைகளை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பங்களெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாக இருந்தது.
\s5
\v 6 அவர்கள் கில்காலில் இருக்கிற கூடாரத்திற்கு யோசுவாவிடம் போய், அவனையும் இஸ்ரவேல் மனிதர்களையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடு உடன்படிக்கைசெய்யுங்கள் என்றார்கள்.
\v 7 அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் அந்த ஏவியர்களை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்கள்; நாங்கள் எப்படி உங்களுடன் உடன்படிக்கை செய்யமுடியும் என்றார்கள்.
\v 8 அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.
\s5
\v 9 அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் கேள்விப்பட்டு, உமது அடியார்களாகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய புகழ்ச்சியையும், அவர் எகிப்திலே செய்த எல்லாவற்றையும்,
\v 10 அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு மறுபுறத்திலிருந்த எமோரியர்களின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம்.
\s5
\v 11 ஆகவே, எங்கள் மூப்பர்களும் எங்கள் தேசத்தின் குடிகளெல்லோரும் எங்களை நோக்கி: உங்களுடைய கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடம்: நாங்கள் உங்களுடைய அடியார்கள், எங்களோடு உடன்படிக்கை செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்.
\v 12 உங்களிடம் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்களுடைய வழிப்பிரயாணத்திற்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது.
\v 13 நாங்கள் இந்தத் திராட்சரசத் தோல்பைகளை நிரப்பும்போது புதிதாக இருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோனது; எங்கள் உடைகளும், காலணிகளும் நெடுந்தூர பிரயாணத்தினாலே பழையதாகப்போனது என்றார்கள்.
\s5
\v 14 அப்பொழுது இஸ்ரவேலர்கள்: கர்த்தருடைய வார்த்தையைக் கேட்காமல் அவர்களுடைய உணவுப்பதார்த்தங்களிலே சிறிது வாங்கிக்கொண்டார்கள்.
\v 15 யோசுவா அவர்களோடு சமாதானம்செய்து, அவர்களை உயிரோடு காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடு செய்தான்; அதற்காக சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு வாக்குக்கொடுத்தார்கள்.
\s5
\v 16 அவர்களோடு உடன்படிக்கைசெய்து, மூன்று நாட்கள் சென்றபின்பு, அவர்கள் தங்களுடைய அயலகத்தார்கள் என்றும் தங்கள் நடுவில் குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.
\v 17 இஸ்ரவேல் மக்கள் பிரயாணம்செய்யும்போது, மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள்.
\s5
\v 18 சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் மக்கள் அவர்களைத் தாக்கவில்லை; ஆனாலும் சபையார்கள் எல்லோரும் பிரபுக்களுக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.
\v 19 அப்பொழுது எல்லா பிரபுக்களும், சபையார்கள் அனைவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் அவர்களுக்கு வாக்குக்கொடுத்தோம்; ஆகவே அவர்களை நாம் தொடக்கூடாது.
\s5
\v 20 கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி நாம் அவர்களை உயிரோடு வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.
\v 21 பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார்கள் எல்லோருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருங்கள் என்று பிரபுக்கள் அவர்களிடம் சொன்னார்கள்.
\s5
\v 22 பின்பு யோசுவா அவர்களை அழைத்து: நீங்கள் எங்கள் நடுவில் குடியிருக்கும்போது: நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாக இருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை ஏமாற்றியது ஏன்?
\v 23 இப்பொழுதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்திற்கு விறகு வெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான வேலைக்காரர்களாக இருப்பீர்கள்; இந்த வேலை உங்களைவிட்டு நீங்காது என்றான்.
\s5
\v 24 அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது ஊழியக்காரனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியார்களுக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்களுடைய ஜீவனுக்காக உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக் காரியத்தைச் செய்தோம்.
\v 25 இப்போதும், இதோ, உமது கைகளில் இருக்கிறோம், உம்முடைய பார்வைக்கு நன்மையும் நியாயமுமாகத் தோன்றுகிறபடி எங்களுக்குச் செய்யும் என்றார்கள்.
\s5
\v 26 அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் மக்கள் அவர்களைக் கொன்றுபோடாதபடிக்கு, அவர்களை இவர்கள் கைகளிலிருந்து தப்புவித்தான்.
\v 27 இந்தநாள்வரை இருக்கிறபடியே, அந்தநாளில் அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்திற்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் வைத்தான்.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 சூரியனை நிறுத்துதல்
\p
\v 1 யோசுவா ஆயியைப் பிடித்து, முழுவதும் அழித்து, எரிகோவிற்கும் அதின் ராஜாவிற்கும் செய்தபடி, ஆயிக்கும் அதின் ராஜாவிற்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலர்களோடு சமாதானம்செய்து அவர்களுக்குள் குடியிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,
\v 2 கிபியோன், ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல பெரிய பட்டணமும், ஆயியைவிட பெரியதுமாக இருந்தபடியினாலும், அதின் மனிதர்கள் எல்லோரும் பலசாலிகளாக இருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.
\s5
\v 3 ஆகவே, எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:
\v 4 நாங்கள் கிபியோனைத் தாக்கும்படி, நீங்கள் என்னிடம் வந்து, எனக்கு உதவிசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும், இஸ்ரவேல் மக்களோடும் சமாதானம் செய்தார்கள் என்று சொல்லியனுப்பினான்.
\s5
\v 5 அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியர்களின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லா சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாக முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்தார்கள்.
\s5
\v 6 அப்பொழுது கிபியோனின் மனிதர்கள் கில்காலில் இருக்கிற முகாமிற்கு யோசுவாவிடம் ஆள் அனுப்பி: உமது அடியார்களைக் கைவிடாமல், சீக்கிரமாக எங்களிடம் வந்து, எங்களைக் காப்பாற்றி, எங்களுக்கு உதவிசெய்யும்; மலை தேசங்களிலே குடியிருக்கிற எமோரியர்களின் ராஜாக்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.
\v 7 உடனே யோசுவாவும் அவனோடு எல்லா யுத்தமனிதர்களும், எல்லா பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள்.
\s5
\v 8 கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்.
\s5
\v 9 யோசுவா கில்காலிலிருந்து இரவுமுழுவதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான்.
\v 10 கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கச்செய்தார்; ஆகவே அவர்களைக் கிபியோனிலே மகா பயங்கரமாகத் தாக்கி, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்கா மற்றும் மக்கெதாவரைக்கும் முறியடித்தார்கள்.
\s5
\v 11 அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகும்போது, அசெக்காவரைக்கும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழச்செய்தார், அவர்கள் இறந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுடைய பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களைவிட கல்மழையினால் இறந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
\s5
\v 12 கர்த்தர் எமோரியர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்த நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும் நில்லுங்கள் என்றான்.
\s5
\v 13 அப்பொழுது மக்கள் தங்களுடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும்வரைக்கும் சூரியன் நின்றது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புத்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் மறைவதற்குத் துரிதப்படாமல், ஏறக்குறைய ஒருபகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது.
\v 14 இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்லைக் கேட்ட அந்த நாளைப்போன்ற ஒருநாள் அதற்கு முன்னும் இல்லை, அதற்குப் பின்னும் இல்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்செய்தார்.
\s5
\v 15 பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் கில்காலில் இருக்கிற முகாமிற்குத் திரும்பினான்.
\s1 ஐந்து எமோரிய இராஜாக்கள் கொல்லப்படுதல்
\p
\v 16 அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு குகையில் ஒளிந்துகொண்டார்கள்.
\v 17 ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு குகையில் ஒளிந்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவிற்கு அறிவிக்கப்பட்டது.
\s5
\v 18 அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் குகையின் வாயிலே புரட்டிவைத்து, அந்த இடத்தில் அவர்களைக் காவல்காக்க மனிதர்களை நிறுத்துங்கள்.
\v 19 நீங்களோ நிற்காமல், உங்களுடைய எதிரிகளைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே நுழையவிடாதிருங்கள்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.
\s5
\v 20 யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் அவர்களை மகா பயங்கரமாக அவர்கள் முழுவதும் அழியும்வரைக்கும் தாக்கினார்கள்; அவர்களில் மீதியானவர்கள் பாதுகாப்பான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.
\v 21 மக்களெல்லோரும் சுகமாக மக்கெதாவிலிருக்கிற முகாமிலே, யோசுவாவிடம் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.
\s5
\v 22 அப்பொழுது யோசுவா: குகையின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து என்னிடம் வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
\v 23 அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து வெளியே அவனிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.
\s5
\v 24 அவர்களை யோசுவாவிடம் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரையும் அழைத்து, தன்னோடு வந்த யுத்தமனிதர்களின் அதிகாரிகளை நோக்கி: நீங்கள் அருகில் வந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் அருகில் வந்து, தங்களுடைய கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.
\v 25 அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலமாகவும் திடமனதாகவும் இருங்கள்; நீங்கள் யுத்தம்செய்யும் உங்களுடைய எதிரிகளுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான்.
\s5
\v 26 அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; மாலைநேரம்வரைக்கும் மரங்களில் தொங்கினார்கள்.
\v 27 சூரியன் மறைகிற நேரத்திலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளிந்துகொண்டிருந்த குகையிலே அவர்களைப் போட்டு; இந்தநாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களைக் குகையின் வாயிலே அடைத்தார்கள்.
\s5
\v 28 அந்தநாளிலே யோசுவா மக்கெதாவைப் பிடித்து, அதைப் பட்டயத்தினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனிதர்களையும் எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான்.
\s1 தென்திசைப் பட்டணங்கள் கைப்பற்றப்படுதல்
\p
\s5
\v 29 மக்கெதாவிலிருந்து யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்செய்தான்.
\v 30 கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயத்தினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான்.
\s5
\v 31 லிப்னாவிலிருந்து யோசுவா இஸ்ரவேல் அனைவரோடும் லாகீசுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்தான்.
\v 32 கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் பட்டயத்தினால் அழித்தான்.
\s5
\v 33 அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்கு உதவிசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவனுடைய மக்களையும், ஒருவனும் மீதியாக இல்லாதபடி, வெட்டிப்போட்டான்.
\s5
\v 34 லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர்கள் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்து,
\v 35 அதை அந்தநாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் அந்தநாளிலே அழித்துப்போட்டான்.
\s5
\v 36 பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர்கள் அனைவருமாக எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்செய்து,
\v 37 அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப் பட்டணங்களையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், பட்டயத்தினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் அழித்துப்போட்டான்.
\s5
\v 38 பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்செய்து,
\v 39 அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயத்தினால் அழித்து, அதிலுள்ள உயிரினங்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், அழித்தார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோல தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.
\s5
\v 40 இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் அழித்து,
\v 41 காதேஸ்பர்னேயா துவங்கிக் காத்சாவரை இருக்கிறதையும் கிபியோன்வரை இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான்.
\s5
\v 42 அந்த ராஜாக்கள் எல்லோரையும் அவர்களுடைய தேசத்தையும் யோசுவா ஒரே சமயத்தில் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்செய்தார்.
\v 43 பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் கில்காலில் இருக்கிற முகாமிற்குத் திரும்பினான்.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\s1 வடதிசை இராஜாக்கள் முறியடிக்கப்படுதல்
\p
\v 1 ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடமும், சிம்ரோனின் ராஜாவிடமும், அக்சாபின் ராஜாவிடமும்,
\v 2 வடக்கே இருக்கிற மலைகளிலும் கின்னரோத்திற்குத் தெற்கே இருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும் இருக்கிற ராஜாக்களிடமும்,
\v 3 கிழக்கேயும், மேற்கேயும் இருக்கிற கானானியர்களிடமும், மலைகளில் இருக்கிற எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்களிடமும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா தேசத்தில் இருக்கிற ஏவியர்களிடமும் ஆள் அனுப்பினான்.
\s5
\v 4 அவர்கள் கடற்கரை மணலைப்போல ஏராளமான மக்களாகிய தங்களுடைய எல்லா சேனைகளோடும், ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடும் புறப்பட்டார்கள்.
\v 5 இந்த ராஜாக்கள் எல்லோரும் கூடி, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்ய வந்து, மேரோம் என்கிற ஏரியின் அருகில் ஏகமாக முகாமிட்டார்கள்.
\s5
\v 6 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; நாளை இந்த நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டப்பட்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாய் என்றார்.
\v 7 யோசுவாவும், அவனோடு யுத்த மக்கள் அனைவரும், திடீரென்று மேரோம் ஏரியின் அருகே இருக்கிற எதிரிகளிடம் வந்து, அவர்களைத் தாக்கினார்கள்.
\s5
\v 8 கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்து, பெரிய சீதோன்வரைக்கும் மிஸ்ரபோத்மாயீம்வரைக்கும், கிழக்கே இருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குவரைக்கும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியில்லாதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள்.
\v 9 யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்களுடைய இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான்.
\s5
\v 10 அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப் பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாக இருந்தது.
\v 11 அதில் இருந்த உயிரினங்களையெல்லாம் பட்டயத்தினால் வெட்டி, அழித்துப்போட்டான்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.
\s5
\v 12 அந்த ராஜாக்களுடைய எல்லாப் பட்டணங்களையும் அவைகளுடைய எல்லா ராஜாக்களையும் யோசுவா பிடித்து, பட்டயத்தினால் வெட்டி, கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துப்போட்டான்.
\v 13 ஆனாலும் தங்களுடைய மேட்டின்மேல் இருந்த பட்டணங்களையெல்லாம் இஸ்ரவேலர்கள் சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்; ஆத்சோரைமாத்திரம் யோசுவா சுட்டெரித்துப்போட்டான்.
\s5
\v 14 அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்றக் கொள்ளைப்பொருட்களையும் இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆனாலும் எல்லா மனிதர்களையும் அழித்துபோடும்வரைக்கும் அவர்களைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்; சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை.
\v 15 கர்த்தர் தமது ஊழியக்காரனாகிய மோசேக்கு எப்படிக் கட்டளையிட்டிருந்தாரோ, அப்படியே மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான்; அப்படியே யோசுவா செய்தான்; அவன், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டதில் ஒன்றையும் செய்யாமல் விடவில்லை.
\s5
\v 16 இந்த விதமாக யோசுவா சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக் மலைதுவங்கி லீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடியில் இருக்கிற பாகால் காத்வரையுள்ள அந்த முழுத்தேசமாகிய மலைகளையும், தென்தேசம் எல்லாவற்றையும், கோசேன் தேசத்தையும் சமனான பூமியையும், நாட்டுப்புறத்தையும், இஸ்ரவேலின் மலைகளையும் அதின் சமபூமியையும் பிடித்துக்கொண்டு,
\v 17 அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்.
\s5
\v 18 யோசுவா நீண்டநாட்களாக அந்த ராஜாக்கள் எல்லோரோடும் யுத்தம்செய்தான்.
\v 19 கிபியோனின் குடிகளாகிய ஏவியர்களைத்தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் மக்களோடு சமாதானம் செய்யவில்லை; மற்ற எல்லாப் பட்டணங்களையும் யுத்தம்செய்துப் பிடித்தார்கள்.
\v 20 யுத்தம்செய்ய இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்மேல் இரக்கம் உண்டாகாமல், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துப்போட்டதும் கர்த்தரால் வந்த காரியமாக இருந்தது.
\s5
\v 21 அக்காலத்திலே யோசுவா போய், மலைத்தேசமாகிய எபிரோனிலும் தெபீரிலும் ஆனாபிலும் யூதாவின் எல்லா மலைகளிலும் இருந்த ஏனாக்கியர்களை அவர்களுடைய பட்டணங்களோடு சேர்த்து அழித்தான்.
\v 22 இஸ்ரவேல் மக்களின் தேசத்தில் ஏனாக்கியர்கள் ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை; காசாவிலும் காத்திலும் அஸ்தோத்திலும்மட்டும் சிலர் மீதியாக இருந்தார்கள்.
\s5
\v 23 அப்படியே யோசுவா, கர்த்தர் மோசேயிடம் சொன்னபடியெல்லாம் முழுதேசத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலுக்கு, அவர்களின் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சொந்தமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\s1 முறியடிக்கப்பட்ட இராஜாக்கள்
\p
\v 1 யோர்தானுக்கு அந்தப் புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவங்கி எர்மோன் மலைவரைக்கும், கிழக்கே சமபூமி எல்லைகளிலெல்லாம் உள்ள ராஜாக்களை இஸ்ரவேலர்கள் முறியடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
\v 2 அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேர் துவங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத் உட்பட அம்மோனியர்களின் எல்லையான யாபோக்கு ஆறுவரையுள்ள தேசத்தையும்,
\s5
\v 3 சமவெளி துவங்கிக் கிழக்கே இருக்கிற கின்னரோத் கடல்வரைக்கும் பெத்யெசிமோத் வழியாகக் கிழக்கே இருக்கிற சமவெளியின் கடலாகிய உப்புக்கடல்வரைக்கும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குக் கீழாக இருக்கிற தேசத்தையும் அரசாண்டான்.
\v 4 இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்து,
\v 5 எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர்கள், மாகாத்தியர்கள் எல்லைவரைக்கும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாக இருந்த பாதிக் கீலேயாத்வரைக்கும் இருக்கும் பாசான் அனைத்தையும் அரசாண்டான்.
\s5
\v 6 அவர்களைக் கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசேயும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தார்கள்; அந்த தேசத்தைக் கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசே ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தான்.
\s5
\v 7 யோர்தானுக்கு இந்தப் புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத் துவங்கி சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைவரைக்கும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த பகுதிகளிலும் வனாந்திரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,
\v 8 யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தவர்களுமான ராஜாக்கள் யாரென்றால்:
\s5
\v 9 எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,
\v 10 எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,
\v 11 யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,
\v 12 எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,
\s5
\v 13 தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,
\v 14 ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,
\v 15 லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,
\v 16 மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,
\s5
\v 17 தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,
\v 18 ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
\v 19 மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,
\v 20 சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,
\s5
\v 21 தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,
\v 22 கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,
\v 23 தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த கோயிமின் ராஜா ஒன்று,
\v 24 திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லோரும் முப்பத்தொரு ராஜாக்கள்.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 சுதந்தரிக்கப்படவேண்டிய தேசம்
\p
\v 1 யோசுவா வயதுமுதிர்ந்தவனானபோது, கர்த்தர் அவனை நோக்கி: நீ வயதுமுதிர்ந்தவனானாய்; கைப்பற்றிக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விசாலமாக இருக்கிறது.
\s5
\v 2 மீதியாக இருக்கிற தேசம் எவைகளென்றால், எகிப்துக்கு எதிரான சீகோர் ஆறு துவங்கிக் கானானியர்களைச் சேர்ந்ததாக என்னப்படும் வடக்கே இருக்கிற எக்ரோனின் எல்லைவரையுள்ள பெலிஸ்தர்களின் எல்லா எல்லைகளும், கெசூரிம் முழுவதும்,
\v 3 காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களில் இருக்கிற பெலிஸ்தர்களுடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியர்களின் நாடும்,
\s5
\v 4 தெற்கே துவங்கி ஆப்பெக்வரை எமோரியர்கள் எல்லைவரை இருக்கிற கானானியர்களின் எல்லா தேசமும், சீதோனியர்களுக்கடுத்த மெயாரா நாடும்,
\v 5 கிப்லியர்களின் நாடும், சூரியன் உதயமாகும் திசையில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத்முதல் ஆமாத்துக்குள் நுழையும்வரையுள்ள லீபனோன் முழுவதும்,
\s5
\v 6 லீபனோன் துவங்கி மிஸ்ரபோத்மாயீம்வரை மலைகளில் குடியிருக்கிற அனைவருடைய நாடும், சீதோனியர்களுடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குப் பங்குகளைக் கொடுக்கச் சீட்டுகளைப்போட்டு தேசத்தைப் பங்கிடவேண்டும்.
\v 7 ஆதலால் இந்த தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகும்படிப் பங்கிடு என்றார்.
\s1 யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள தேசத்தின் பிரிவுகள்
\p
\s5
\v 8 மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களும் ரூபனியர்களும் காத்தியர்களும் தங்களுடைய பங்குகளை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.
\v 9 அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், நதியின் நடுவிலிருக்கிற பட்டணம் துவங்கி தீபோன்வரைக்கும் இருக்கிற மெதெபாவின் சமபூமி அனைத்தையும்,
\s5
\v 10 எஸ்போனிலிருந்து அம்மோனியர்களின் எல்லைவரை ஆட்சிசெய்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குரிய எல்லாப் பட்டணங்களையும்,
\v 11 கீலேயாத்தையும், கெசூரியர்கள் மாகாத்தியர்களுடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும்,
\v 12 அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆட்சிசெய்து, மோசே முறியடித்துத் துரத்தின இராட்சதர்களில் மீதியாக இருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காவரையிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.
\s5
\v 13 இஸ்ரவேல் மக்களோ கெசூரியர்களையும் மாகாத்தியர்களையும் துரத்திவிடவில்லை, கெசூரியர்களும் மாகாத்தியர்களும் இந்தநாள்வரை இஸ்ரவேலின் நடுவில் குடியிருக்கிறார்கள்.
\s5
\v 14 லேவியர்களின் கோத்திரத்திற்குமட்டும் அவன் பங்கு கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய பங்கு.
\s5
\v 15 மோசே ரூபன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களுக்குத்தக்கதாகப் பங்கு கொடுத்தான்.
\v 16 அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், ஆற்றின் நடுவிலிருக்கிற பட்டணம் துவங்கி மெதெபாவரையுள்ள சமபூமி முழுவதும்,
\s5
\v 17 சமபூமியில் இருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால் மெயோன்,
\v 18 யாகசா, கெதெமோத், மேபாகாத்,
\v 19 கீரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார்,
\s5
\v 20 பெத்பேயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான
\v 21 சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆட்சிசெய்த சீகோன் என்னும் எமோரியர்களுடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளானது; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாக இருந்த ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.
\s5
\v 22 இஸ்ரவேல் மக்கள் வெட்டின மற்றவர்களோடும், பேயோரின் மகனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.
\v 23 அப்படியே யோர்தானும் அதற்கடுத்த பகுதியும் ரூபன் கோத்திரத்தின் எல்லையானது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் கோத்திரத்தார்களுக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த பங்கு.
\s5
\v 24 காத் கோத்திரத்திற்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத் தகுந்தபடிக் கொடுத்தது என்னவென்றால்:
\v 25 யாசேரும், கீலேயாத்தின் எல்லாப் பட்டணங்களும், ரபாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்வரையுள்ள அம்மோனியர்களின் பாதித் தேசமும்,
\v 26 எஸ்போன் துவங்கி ராமாத்மிஸ்பே வரை பெத்தொனீம் வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவங்கி தெபீரின் எல்லைவரை இருக்கிறதும்,
\s5
\v 27 எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப் பகுதிகளாகிய பள்ளத்தாக்கில் இருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்வரை இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாக கின்னரேத் கடலின் கடைசிவரைக்கும் இருக்கிறதும், அவர்கள் எல்லைக்குள்ளானது.
\v 28 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் காத் கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி வந்த பங்கு.
\s5
\v 29 மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும், மோசே அவர்களுடைய வம்சத்திற்குத் தகுந்தபடிக் கொடுத்தான்.
\v 30 மகனாயீம் துவங்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாக இருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் எல்லா ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்களுடைய எல்லைக்குள்ளானது.
\v 31 பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் மகனாகிய மாகீரின் மக்கள் பாதிபேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே கொடுத்தான்.
\s5
\v 32 மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற மோவாபின் சமவெளிகளில் பங்குகளாகக் கொடுத்தவைகள் இவைகளே.
\v 33 லேவி கோத்திரத்திற்கு மோசே பங்கு கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருந்தபடி, அவரே அவர்களுடைய பங்கு.
\s5
\c 14
\cl அத்தியாயம்– 14
\s1 யோர்தானுக்கு மேற்கேயுள்ள தேசத்தின் பிரிவுகள்
\p
\v 1 கானான் தேசத்திலே இஸ்ரவேல் மக்கள் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரப் பிதாக்களின் தலைவர்களும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,
\s5
\v 2 ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சொந்தமாகப் பங்கிட்டார்கள்.
\v 3 மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே பங்கு கொடுத்திருந்தான்; லேவியர்களுக்குமட்டும் அவர்கள் நடுவில் பங்கு கொடுக்கவில்லை.
\v 4 மனாசே மற்றும் எப்பிராயீம் என்பவர்கள் யோசேப்பின் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆகவே அவர்கள் லேவியர்களுக்கு தேசத்திலே பங்குகொடுக்காமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களைமட்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
\v 5 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.
\s1 எபிரோன் காலேபுக்குக் கொடுக்கப்படுதல்
\p
\s5
\v 6 அப்பொழுது யூதாவின் கோத்திரத்தார்கள் கில்காலிலே யோசுவாவிடம் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பர்னெயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனிதனாகிய மோசேயிடம் சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.
\v 7 தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாக இருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.
\s5
\v 8 ஆனாலும் என்னோடு வந்த என் சகோதரர்கள் மக்களின் இருதயத்தைப் பயத்தினாலே கரையச்செய்தார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாகப் பின்பற்றினேன்.
\v 9 அந்த நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் சொந்தமாக இருக்கட்டும் என்று சொல்லி ஆணையிட்டார்.
\s5
\v 10 இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடு காத்தார்; இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் நடந்தபோது, கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயிடம் சொல்லி இப்பொழுது நாற்பத்தைந்து வருடங்கள் ஆனது; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.
\v 11 மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்த பெலன் இந்தநாள்வரை எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாக இருக்கிறதற்கு அப்பொழுது எனக்கு இருந்த பெலன் இப்பொழுதும் எனக்கு இருக்கிறது.
\s5
\v 12 ஆகவே கர்த்தர் அந்த நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத்தாரும்; அங்கே ஏனாக்கியர்களும், பாதுகாப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்த நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடு இருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.
\s5
\v 13 அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் மகனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குப் பங்காகக் கொடுத்தான்.
\v 14 ஆகவே கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், இந்த நாள்வரை இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சொந்தமானது.
\v 15 முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்ற பெயர் இருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியர்களுக்குள்ளே பெரிய மனிதனாக இருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது.
\s5
\c 15
\cl அத்தியாயம்– 15
\s1 யூதா கோத்திரத்தார்களின் பங்கு
\p
\v 1 யூதா கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகே உள்ள சீன்வனாந்திரமே தென்பகுதியின் கடைசி எல்லை.
\v 2 தென்பகுதியான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின் கடைசியில் தெற்கு நோக்கி இருக்கிற முனைதுவங்கி,
\s5
\v 3 தென்பகுதியில் இருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கே இருக்கிற காதேஸ்பர்னெயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப் போய்,
\v 4 அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல்வரைக்கும் போய் முடியும்; இதுவே உங்களுடைய தென்பகுதிக்கு எல்லையாக இருக்கும் என்றான்.
\s5
\v 5 கிழக்கு எல்லையானது, யோர்தான் நதியின் ஆரம்பம்வரை இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் நதியின் ஆரம்பம் இருக்கிற கடலின் முனைதுவங்கி,
\v 6 பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கே இருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் மகனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,
\s5
\v 7 பிறகு ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் நீரூற்றுவரைக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,
\v 8 பிறகு எபூசியர்கள் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாக இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கே இருக்கிற இராட்சதர்களுடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் உச்சிவரை ஏறிப்போய்,
\s5
\v 9 அந்த மலையின் உச்சியிலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,
\v 10 பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
\s5
\v 11 பின்பு வடக்கே இருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாகச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.
\v 12 மேற்கு எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.
\s5
\v 13 எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை யூதா கோத்திரத்தின் நடுவே பங்காகக் கொடுத்தான்.
\v 14 அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று மகன்களையும் காலேப் துரத்திவிட்டு,
\v 15 அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பெயர் கீரியாத்செப்பேர்.
\s5
\v 16 கீரியாத்செப்பேரை அழித்துக் கைப்பற்றுகிறவனுக்கு, என் மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
\v 17 அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினான்; எனவே, தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
\s5
\v 18 அவள் புறப்படும்போது, என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.
\s5
\v 19 அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
\s5
\v 20 யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்கு என்னவென்றால்:
\s5
\v 21 தென்புறத்தின் கடைசியான ஏதோமின் எல்லைக்கு நேராக, யூதா கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,
\v 22 கீனா. திமோனா, ஆதாதா,
\v 23 கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
\v 24 சீப், தேலெம், பெயாலோத்,
\s5
\v 25 ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
\v 26 ஆமாம், சேமா, மொலாதா,
\v 27 ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பாலேத்,
\v 28 ஆத்சார்சுவால், பெயர்செபா, பிஸ்யோத்யா,
\s5
\v 29 பாலா, ஈயிம், ஆத்சேம்,
\v 30 எல்தோலாத், கெசீல், ஒர்மா,
\v 31 சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
\v 32 லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இருபத்தொன்பது.
\s5
\v 33 பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
\v 34 சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
\v 35 யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
\v 36 சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினான்கு.
\s5
\v 37 சேனான், அதாஷா, மிக்தால்காத்,
\v 38 திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
\v 39 லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
\s5
\v 40 காபோன், லகமாம், கித்லீஷ்,
\v 41 கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினாறு.
\s5
\v 42 லிப்னா, ஏத்தேர், ஆஷான்,
\v 43 இப்தா, அஸ்னா, நெத்சீப்,
\v 44 கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
\s5
\v 45 எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
\v 46 எக்ரோன் துவங்கிச் சமுத்திரம்வரை, அஸ்தோத்தின் பகுதியில் இருக்கிற எல்லா ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
\v 47 அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிவரையிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை.
\s5
\v 48 மலைகளில் சாமீர், யாத்தீர், சோக்கோ,
\v 49 தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
\v 50 ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
\v 51 கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினொன்று.
\s5
\v 52 அராப், தூமா, எஷியான்,
\v 53 யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
\v 54 உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
\s5
\v 55 மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
\v 56 யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
\v 57 காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்படப் பத்து.
\s5
\v 58 அல்கூல், பெத்சூர், கெதோர்,
\v 59 மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு.
\s5
\v 60 கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இரண்டு.
\v 61 வனாந்திரத்தில், பெத்அரபா, மித்தீன், செக்காக்கா,
\v 62 நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு.
\s5
\v 63 எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களை யூதா கோத்திரத்தார்கள் துரத்திவிடமுடியாமல்போனது; ஆகவே இந்த நாள்வரை எபூசியர்கள் யூதா கோத்திரத்தார்களோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.
\s5
\c 16
\cl அத்தியாயம்– 16
\s1 மனாசே மற்றும் எப்பிராயீமியர்களின் பங்கு
\p
\v 1 யோசேப்பின் கோத்திரத்தார்களுக்கு விழுந்த சீட்டினால் கிடைத்த பங்குவீதமாவது: எரிகோவின் அருகே இருக்கிற யோர்தானிலிருந்து, யோர்தானுக்குக் கிழக்கான நீரூற்றுக்குப் போய், எரிகோ துவங்கிப் பெத்தேலின் மலைகள்வரையுள்ள வனாந்திர வழியாகவும் சென்று,
\v 2 பெத்தேலிலிருந்து லூசுக்குப் போய், அர்கீயினுடைய எல்லையாகிய அதரோத்தைக் கடந்து,
\s5
\v 3 மேற்கே யப்லெத்தியர்களின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள்வரை இறங்கி, சமுத்திரம்வரைக்கும் போய் முடியும்.
\v 4 இதை யோசேப்பின் கோத்திரங்களாகிய மனாசேயும் எப்பிராயீமும் சுதந்தரித்தார்கள்.
\s5
\v 5 எப்பிராயீம் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்கினுடைய கிழக்கு எல்லை அதரோத் அதார் துவங்கி, மேலான பெத்தொரோன்வரை போகிறது.
\v 6 மேற்கு எல்லை மிக்மேத்தாத்திற்கு வடக்காகச் சென்று, கிழக்கே தானாத்சீலோவுக்குத் திரும்பி, அதை யநோகாவுக்குக் கிழக்காகக் கடந்து,
\v 7 யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நகராத்திற்கும் இறங்கி, எரிகோவின் அருகே வந்து, யோர்தானுக்குச் செல்லும்.
\s5
\v 8 தப்புவாவிலிருந்து மேற்கு எல்லை, கானா நதிக்குப் போய், சமுத்திரத்திலே முடியும்; இது எப்பிராயீம் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான பங்கு.
\v 9 பின்னும் எப்பிராயீம் கோத்திரத்தார்களுக்குப் பிரத்தியேகமாகக் கொடுக்கப்பட்ட பட்டணங்களும் அவைகளின் கிராமங்கள் எல்லாம் மனாசே கோத்திரத்தார்களுடைய பங்கின் நடுவில் இருக்கிறது.
\s5
\v 10 அவர்கள் காசேரிலே குடியிருந்த கானானியர்களைத் துரத்திவிடவில்லை; ஆகவே கானானியர்கள், இந்த நாள்வரை இருக்கிறபடி, எப்பிராயீமர்களுக்குள்ளே குடியிருந்து, கட்டாய வேலைக்காரர்களாக்கப்பட்டார்கள்.
\s5
\c 17
\cl அத்தியாயம்– 17
\s1 யோசேப்பின் வம்சத்தார்களின் பங்குகள்
\p
\v 1 மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது; அவன் யோசேப்புக்குத் தலைப்பிள்ளையானவன்; மனாசேயின் மூத்தமகனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனிதனானபடியினால், கீலேயாத்தும், பாசானும் அவனுக்குக் கிடைத்தது.
\v 2 அபியேசரின் கோத்திரத்தார்களும், ஏலேக்கின் கோத்திரத்தார்களும், அஸ்ரியேலின் கோத்திரத்தார்களும், செகேமின் கோத்திரத்தார்களும், எப்பேரின் கோத்திரத்தார்களும், செமீதாவின் கோத்திரத்தார்களுமான மனாசேயினுடைய மற்ற மகன்களின் கோத்திரத்தார்களாகிய அபியேசரின் வம்சங்களுக்குத் தகுந்த பங்குகள் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்பின் மகனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாக இருந்தார்கள்.
\s5
\v 3 மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் மகனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்கு மகள்கள் தவிர மகன்கள் இல்லை; மகள்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.
\v 4 அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் மகனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்களுடைய சகோதரர்கள் நடுவே எங்களுக்குப் பங்குகள் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகவே அவர்களுடைய தகப்பனுடைய சகோதரர்களின் நடுவே, கர்த்தருடைய கட்டளையின்படி, அவர்களுக்குப் பங்குகளைக் கொடுத்தான்.
\s5
\v 5 யோர்தானுக்கு மறுபுறத்திலே இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்கள் அல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாகும்.
\v 6 மனாசேயின் மகள்கள் அவனுடைய மகன்களோடு பங்குகளைப் பெற்றார்கள்; மனாசேயின் மற்றக் கோத்திரத்தார்களுக்கு கீலேயாத் தேசம் கிடைத்தது.
\s5
\v 7 மனாசேயின் எல்லை, ஆசேர் துவங்கி சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாக என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது.
\v 8 தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடு இருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் கோத்திரத்தின் வசமானது.
\s5
\v 9 பிறகு அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயினுடைய பட்டணங்களின் நடுவில் இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பிராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்திற்குப் போய் முடியும்.
\v 10 தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.
\s5
\v 11 இசக்காரிலும் ஆசேரிலும் இருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் கிராமங்களும், இப்லெயாமும் அதின் கிராமங்களும், தோரின் குடிகளும் அதின் கிராமங்களும் எந்தோரின் குடிகளும் அதின் கிராமங்களும், தானாகின் குடிகளும் அதின் கிராமங்களும் மெகிதோவின் குடிகளும் அதின் கிராமங்களும் மனாசேயினுடையவைகள்.
\v 12 மனாசேயின் கோத்திரத்தார்கள் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிட முடியாமல்போனது; கானானியர்கள் அந்தப் பகுதியிலே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள்.
\s5
\v 13 இஸ்ரவேல் மக்கள் பலத்து பெருகினபோதும், கானானியர்களை முழுவதும் துரத்திவிடாமல், அவர்களைக் கட்டாய வேலைக்காரர்களாக்கிக்கொண்டார்கள்.
\s5
\v 14 யோசேப்பின் சந்ததியினர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்து வந்ததினால், நாங்கள் எண்ணிக்கையில் பெருகினவர்களாக இருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சொந்தமாக ஒரே அளவையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.
\v 15 அதற்கு யோசுவா: நீங்கள் எண்ணிக்கையில் பெருகினவர்களாகவும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாகவும் இருந்தால், பெரிசியர்கள் ரெப்பாயீமியர்கள் குடியிருக்கிற மலைதேசத்திற்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான்.
\s5
\v 16 அதற்கு யோசேப்பின் சந்ததியினர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் கிராமங்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியர்களிடமும் இரும்பு இரதங்கள் உண்டு என்றார்கள்.
\v 17 யோசுவா, யோசேப்பு வம்சத்தார்களாகிய எப்பிராயீமியர்களையும் மனாசேயர்களையும் நோக்கி: நீங்கள் எண்ணிக்கையில் பெருகினவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமட்டும் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும்.
\v 18 அது காடாக இருக்கிறபடியினாலே, அதை வெட்டிச் சீர்படுத்துங்கள், அப்பொழுது அதின் கடைசிவரைக்கும் உங்களுடையதாக இருக்கும்; கானானியர்களுக்கு இரும்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாக இருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.
\s5
\c 18
\cl அத்தியாயம்– 18
\s1 மீதமுள்ள தேசத்தின் பிரிவுகள்
\p
\v 1 இஸ்ரவேல் மக்களின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை அமைத்தார்கள். தேசம் அவர்களின் வசமானது.
\v 2 இஸ்ரவேல் மக்களில் தங்களுடைய பங்குகளை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தன.
\s5
\v 3 ஆகவே யோசுவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு, நீங்கள் எதுவரைக்கும் அசதியாக இருப்பீர்கள்.
\v 4 கோத்திரத்திற்கு மும்மூன்று மனிதர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் பங்குகளுக்குத்தக்கதாக விபரமாக எழுதி, என்னிடம் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன்.
\s5
\v 5 அதை ஏழு பங்குகளாகப் பங்கிடுவார்கள்; யூதா வம்சத்தார்கள் தெற்கே இருக்கிற தங்களுடைய எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார்கள் வடக்கே இருக்கிற தங்களுடைய எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.
\v 6 நீங்கள் தேசத்தை ஏழு பங்குகளாக விவரித்து எழுதி, இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இந்த இடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்.
\s5
\v 7 லேவியர்களுக்கு உங்கள் நடுவே பங்கு இல்லை; கர்த்தருடைய ஆசாரியத்துவமே அவர்களின் பங்கு; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு மறுபுறத்திலே கிழக்கே கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் பங்குகளைப் பெற்றுவிட்டார்கள் என்றான்.
\s5
\v 8 அப்பொழுது அந்த மனிதர்கள் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக் குறித்து விபரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விபரத்தை எழுதி, என்னிடம் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்.
\v 9 அந்த மனிதர்கள் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழுபங்குகளாக ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவில் இருக்கிற முகாமிலே யோசுவாவிடத்திற்கு வந்தார்கள்.
\s5
\v 10 அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் மக்களின் பங்குவீதப்படி அவர்களுக்கு தேசத்தைப் பங்கிட்டான்.
\s1 பென்யமீன் கோத்திரத்தார்களின் பங்கு
\p
\s5
\v 11 பென்யமீன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுக்குச் சீட்டு விழுந்தது; அவர்கள் பங்கு வீதத்தின் எல்லையானது யூதா வம்சத்தார்களுக்கும் யோசேப்பு வம்சத்தார்களுக்கும் நடுவில் இருந்தது.
\v 12 அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவிற்கு வடக்குப் பக்கமாகச் சென்று, அதன்பின் மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன் வனாந்திரத்தில் போய் முடியும்.
\s5
\v 13 அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லூசுக்கு வந்து, லூசுக்குத் தெற்குப் பக்கமாகப் போய், அதரோத்அதாருக்குக் கீழே உள்ள பெத்தொரோனுக்குத் தெற்கே இருக்கிற மலையருகே இறங்கும்.
\v 14 அங்கேயிருந்து எல்லை மேற்குமூலைக்குப் பெத்தொரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாகப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா கோத்திரத்தார்களின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.
\s5
\v 15 தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவில் இருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று,
\v 16 அங்கேயிருந்து இராட்சதர்களின் பள்ளத்தாக்கில் வடக்கே இருக்கிற இன்னோமுடைய மகன்களின் பள்ளத்தாக்கிற்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியர்களுக்குப் பக்கமான இன்னோமின் பள்ளத்தாக்கிற்கும், அங்கேயிருந்து என்ரொகேலுக்கும் இறங்கிவந்து,
\s5
\v 17 வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபனின் மகனாகிய போகனின் கல்லிடம் இறங்கிவந்து,
\v 18 அராபாவுக்கு எதிரான வடக்குப்பக்கமாகப் போய், அராபாவுக்கு இறங்கும்.
\s5
\v 19 அப்புறம் அந்த எல்லை, பெத்ஓக்லாவுக்கு வடக்குப்பக்கமாகப் போய், யோர்தானின் தெற்கான உப்புக்கடலின் வடக்கு முனையிலே முடிந்துபோகும்; இது தென் எல்லை.
\v 20 கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான பங்குகள்.
\s5
\v 21 பென்யமீன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா, கேசீஸ் பள்ளத்தாக்கு,
\v 22 பெத்அரபா, செமராயிம், பெத்தேல்,
\v 23 ஆவீம், பாரா. ஓப்ரா,
\v 24 கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
\s5
\v 25 கிபியோன், ராமா, பேரோத்,
\v 26 மிஸ்பே, கெப்பிரா, மோத்சா,
\v 27 ரெக்கேம், இர்பெயெல், தாராலா,
\v 28 சேலா, ஏலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரேயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பங்குகள் இவைகளே.
\s5
\c 19
\cl அத்தியாயம்– 19
\s1 சிமியோன் கோத்திரத்தார்களின் பங்கு
\p
\v 1 இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கு, யூதா கோத்திரத்தார்களுடைய பங்குகளின் நடுவே இருக்கிறது.
\s5
\v 2 அவர்களுக்குச் சொந்தமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,
\v 3 ஆசார்சூகால், பாலா, ஆத்சேம்,
\v 4 எல்தோலாத், பெத்தூல், ஒர்மா,
\s5
\v 5 சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,
\v 6 பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பதிமூன்று.
\v 7 மேலும் ஆயின், ரிம்மோன். எத்தேர், ஆசான் என்னும் நான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
\s5
\v 8 இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கே இருக்கிற ராமாத்வரை இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பங்கு.
\v 9 சிமியோன் கோத்திரத்தார்களுடைய பங்கு யூதா கோத்திரத்தார்களின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா கோத்திரத்தார்களின் பங்கு அவர்களுக்கு மிகுதியாக இருந்தபடியால், சிமியோன் கோத்திரத்தார் அவர்களுடைய பங்குகளின் நடுவிலே பங்குகளைப் பெற்றார்கள்.
\s1 செபுலோன் கோத்திரத்தார்களின் பங்கு
\p
\s5
\v 10 மூன்றாம் சீட்டு செபுலோன் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சொந்தமான பங்குவீதம் சாரீத் வரை உள்ளது.
\v 11 அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்திற்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போகும்.
\s5
\v 12 சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்திற்குத் திரும்பி, தாபராத்திற்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,
\v 13 அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே கித்தாஏபேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போகும்.
\s5
\v 14 அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.
\v 15 காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,
\v 16 செபுலோன் கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி, கிடைத்த பங்குகள் ஆகும்.
\s1 இசக்கார் கோத்திரத்தார்களின் பங்கு
\p
\s5
\v 17 நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
\v 18 இசக்கார் கோத்திரத்தார்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,
\v 19 அப்பிராயீம், சீகோன் அனாகராத்,
\s5
\v 20 ராப்பித், கிஷியோன், அபெத்ஸ்,
\v 21 ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.
\v 22 அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உண்டு.
\s5
\v 23 இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கு ஆகும்.
\s1 ஆசேர் கோத்திரத்தார்களின் பங்கு
\p
\s5
\v 24 ஐந்தாம் சீட்டு ஆசேர் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
\v 25 அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
\v 26 அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,
\s5
\v 27 கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கே இருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்கிற்கும் பெத்தேமேக்கிற்கும் நேகியெலிற்கும் வந்து, இடதுபுறமான காபூலிற்கும்,
\v 28 எபிரோனிற்கும், ரேகோபிற்கும், அம்மோனிற்கும், கானாவிற்கும், பெரிய சீதோன்வரைக்கும் போகும்.
\s5
\v 29 அப்புறம் அந்த எல்லை ராமாவிற்கும் தீரு என்னும் பாதுகாப்பான பட்டணம்வரைத் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவிற்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்தில் உள்ள சமுத்திரத்திலே முடியும்.
\v 30 உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.
\s5
\v 31 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்குகள் ஆகும்.
\s1 நப்தலி கோத்திரத்தார்களின் பங்கு
\p
\s5
\v 32 ஆறாம் சீட்டு நப்தலி கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
\v 33 நப்தலி கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின் மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்வரைக்கும் போய், யோர்தானில் முடியும்.
\v 34 அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகக்கிற்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.
\s5
\v 35 பாதுகாப்பான பட்டணங்களாவன: சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,
\v 36 ஆதமா, ராமா, ஆத்சோர்,
\v 37 கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர்,
\s5
\v 38 ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெதானாத் பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பத்தொன்பது.
\v 39 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும்.
\s1 தாண் கோத்திரத்தார்களின் பங்கு
\p
\s5
\v 40 ஏழாம் சீட்டு தாண் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
\v 41 அவர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,
\v 42 சாலாபீன், ஆயலோன், யெத்லா,
\s5
\v 43 ஏலோன், திம்னாதா, எக்ரோன்,
\v 44 எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,
\v 45 யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,
\v 46 மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே.
\s5
\v 47 தாண் கோத்திரத்தார்களின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாக இருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, பட்டயத்தினால் அழித்து, அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்களுடைய தகப்பனாகிய தாணுடைய பெயரின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
\v 48 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும்.
\s1 யோசுவாவின் பங்கு
\p
\s5
\v 49 தேசத்தை அதின் எல்லைகளின்படி சொந்தமாகப் பங்கிட்டு முடித்தபோது, இஸ்ரவேல் மக்கள் நூனின் மகனாகிய யோசுவாவிற்குத் தங்கள் நடுவிலே ஒரு பங்கைக் கொடுத்தார்கள்.
\v 50 எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத்சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய கட்டளையின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான்.
\s5
\v 51 ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் மக்களின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்தப் பங்குகள் இவைகளே; இவ்விதமாக அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.
\s5
\c 20
\cl அத்தியாயம்– 20
\s1 அடைக்கலப் பட்டணங்கள்
\p
\v 1 கர்த்தர் யோசுவாவை நோக்கி:
\v 2 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: உள்நோக்கம் இல்லாமல் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போய் தங்குவதற்காக; நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
\v 3 அவைகள், உங்களுக்கு இரத்தப்பழி வாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போய் இருக்கத்தக்க அடைக்கலமாக இருக்கும்.
\s5
\v 4 அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் வாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பர்களின் காதுகளில் கேட்கும்படி, தன்னுடைய காரியத்தைச் சொல்வான்; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடம் பட்டணத்திற்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடு குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கவேண்டும்.
\s5
\v 5 பழிவாங்குகிறவன் அவனைப் பின்தொடர்ந்துவந்தால், அவன் அவனை முன்விரோதம் இல்லாமல் அறியாமல் கொன்றதினால், அவனை இவனுடைய கையில் ஒப்புக்கொடுக்காமல் இருக்கவேண்டும்.
\v 6 நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்த நாட்களில் இருக்கிற பிரதான ஆசாரியன் மரிக்கும்வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கவேண்டும்; பின்பு கொலைசெய்தவன் தான் விட்டுவந்த தன்னுடைய பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார்.
\s5
\v 7 அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் உள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
\v 8 எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்தில் உள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும், மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்துவைத்தார்கள்.
\s5
\v 9 உள்நோக்கம் இல்லாமல் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும்வரைக்கும் பழிவாங்குகிறவனுடைய கையினால் சாகாதபடி ஓடிப்போய் ஒதுங்குவதற்கு இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற அந்நியர்களுக்கும் குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.
\s5
\c 21
\cl அத்தியாயம்– 21
\s1 லேவியர்களுக்கான பட்டணங்கள்
\p
\v 1 அப்பொழுது லேவியர்களின் வம்சப்பிதாக்களின் தலைவர்கள்; கானான்தேசத்தில் இருக்கிற சீலோவிலே ஆசாரியனாகிய எலெயாசாரிடமும், நூனின் மகனாகிய யோசுவாவிடமும், இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரப் பிதாக்களில் உள்ள தலைவர்களிடமும் வந்து:
\v 2 நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்களுடைய மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.
\s5
\v 3 கர்த்தருடைய கட்டளையின்படியே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய பங்குகளிலே லேவியர்களுக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
\s5
\v 4 கோகாத்தியர்களின் வம்சங்களுக்குச் சீட்டு விழுந்தது; அந்தச் சீட்டின்படி லேவியர்களில் ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததிக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.
\v 5 கோகாத்தின் மற்ற வம்சங்களுக்கு, எப்பிராயீம் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், தாண் கோத்திரத்திலும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பத்து.
\s5
\v 6 கெர்சோன் வம்சத்தின் மக்களுக்கு, இசக்கார் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானில் இருக்கிற மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.
\v 7 மெராரி வம்சத்தின் மக்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு.
\s5
\v 8 இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல் மக்கள், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியர்களுக்குக் கொடுத்தார்கள்.
\v 9 லேவியின் கோத்திரத்தில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியர்களின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் சந்ததியினர்களுக்கு,
\v 10 யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், அவர்கள் கொடுத்தவைகளும் பெயர்பெயராகச் சொல்லப்பட்டவைகளுமான பட்டணங்களின் பெயர்களாவன:
\s5
\v 11 யூதாவின் மலைத்தேசத்தில் ஆனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனையும் அதைச் சுற்றியுள்ள வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
\v 12 பட்டணத்தின் வயல்களையும் அதினுடைய கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குச் சொந்தமாகக் கொடுத்தார்கள்.
\s5
\v 13 இப்படியே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியார்களுக்கு எபிரோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 14 யாத்தீரையும் அதினுடைய வெளிநிலங்களையும், எஸ்தெமொவாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 15 ஓலோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், தெபீரையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 16 ஆயினையும் அதினுடைய வெளிநிலங்களையும், யுத்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களில் இருக்கிற பட்டணங்கள் ஒன்பது.
\s5
\v 17 பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் கேபாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 18 ஆனதோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், அல்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\v 19 ஆசாரியர்களான ஆரோனுடைய சந்ததியார்களின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பதின்மூன்று.
\s5
\v 20 லேவியர்களான கோகாத்தின் குடும்பத்தார்களில் மீதியான அவர்களுடைய மற்ற வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே அவர்களுக்குப் பங்குவீதமாக அவர்கள் கொடுத்த பட்டணங்களாவன:
\v 21 கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதினுடைய வெளிநிலங்களையும், கேசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 22 கிப்சாயீமையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\s5
\v 23 தாண் கோத்திரத்திலே எல்தெக்கேயையும் அதினுடைய வெளிநிலங்களையும், கிபெத்தோனையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 24 ஆயலோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\s5
\v 25 மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதினுடைய வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
\v 26 கோகாத் வம்சத்தின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பத்து.
\s5
\v 27 லேவியர்களின் வம்சங்களிலே கெர்சோன் வம்சத்தார்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தில் கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள கோலானையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெயேஸ்திராவையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
\s5
\v 28 இசக்காரின் கோத்திரத்திலே கீசோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், தாபராத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 29 யர்மூத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\v 30 ஆசேரின் கோத்திரத்திலே மிஷயாலையும் அதினுடைய வெளிநிலங்களையும், அப்தோனையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 31 எல்காத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், ரேகோபையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\s5
\v 32 நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதினுடைய வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதினுடைய வெளிநிலங்களையும், கர்தானையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று.
\v 33 கெர்சோனியர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பதின்மூன்று.
\s5
\v 34 மற்ற லேவியர்களாகிய மெராரி வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதினுடைய வெளிநிலங்களையும், கர்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 35 திம்னாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், நகலாலையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\s5
\v 36 ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும், யாகசாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\v 37 கெதெமோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், மெபாகாத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\v 38 காத் கோத்திரத்திலே கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், மக்னாயீமையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
\s5
\v 39 எஸ்போனையும் அதினுடைய வெளிநிலங்களையும், யாசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
\v 40 இவைகளெல்லாம் லேவியர்களின் மற்ற வம்சங்களாகிய மெராரி வம்சத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள்.
\s5
\v 41 இஸ்ரவேல் மக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தின் நடுவிலே இருக்கிற லேவியர்களின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களும் உட்பட நாற்பத்தெட்டு.
\v 42 இந்தப் பட்டணங்களில் ஒவ்வொன்றிற்கும் அதைச் சுற்றியுள்ள வெளிநிலங்கள் இருந்தது; எல்லாப் பட்டணங்களுக்கும் அப்படியே இருந்தது.
\s5
\v 43 இந்தவிதமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள்.
\v 44 கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் ஓய்ந்திருக்கச்செய்தார்; அவர்களுடைய எல்லா எதிரிகளிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் எதிரிகளையெல்லாம் கர்த்தர் அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.
\v 45 கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தார்களுக்குச் சொல்லியிருந்த நல்ல வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறினது.
\s5
\c 22
\cl அத்தியாயம்– 22
\s1 கிழக்கு திசைக் கோத்திரங்கள் கூடாரங்களுக்குத் திரும்புதல்
\p
\v 1 அப்பொழுது யோசுவா ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களையும் அழைத்து,
\v 2 அவர்களை நோக்கி: கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் நீங்கள் செய்தீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிலும் என் வார்த்தையின்படி செய்தீர்கள்.
\v 3 நீங்கள் இதுவரைக்கும் அநேக நாட்களாக உங்களுடைய சகோதரர்களைக் கைவிடாமல், உங்களுடைய தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்.
\s5
\v 4 இப்பொழுதும் உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களுக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை ஓய்ந்திருக்கச் செய்தார்; ஆகவே கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்களுக்குச் சொந்தமான தேசத்தில் இருக்கிற உங்களுடைய கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள்.
\v 5 ஆனாலும் நீங்கள் உங்களுடைய தேவனாகிய கர்த்தரிடம் அன்புவைத்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்களுடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் தொழுதுகொள்கிறதற்காக, கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கட்டளைகளின்படியும் நியாயப்பிரமாணத்தின்படியும் செய்வதற்கு மிகவும் கவனமாக இருங்கள் என்றான்.
\v 6 இவ்விதமாக யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
\s5
\v 7 மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு மோசே பாசானிலே பங்கு கொடுத்தான்; அதினுடைய மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தானுக்கு இந்தப் புறத்திலே மேற்கே அவர்களுடைய சகோதரர்களோடு பங்கு கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்களுடைய கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது, அவர்களை ஆசீர்வதித்து:
\v 8 நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்போடும், அநேக ஆடைகளோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்களுடைய எதிரிகளிடம் கொள்ளையிட்டதை உங்களுடைய சகோதரர்களோடு பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்றான்.
\s5
\v 9 அப்பொழுது ரூபனுடைய சந்ததியினர்களும் காத்தின் சந்ததியினர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடியே, அவர்கள் கைவசப்படுத்திக்கொண்ட அவர்களுடைய சொந்த தேசமான கீலேயாத் தேசத்திற்குப் போக, கானான் தேசத்தில் உள்ள சீலோவில் இருந்த இஸ்ரவேல் மக்களைவிட்டுத் திரும்பிப்போனார்கள்.
\s5
\v 10 கானான் தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபனுடைய சந்ததியினர்களும், காத்தின் சந்ததியினர்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள்.
\v 11 ரூபனுடைய சந்ததியினர்களும் காத்தின் சந்ததியினர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும் கானான் தேசத்திற்கு எதிரே இஸ்ரவேல் மக்களுக்குச் சொந்தமான யோர்தானின் எல்லைகளில் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் மக்கள் கேள்விப்பட்டார்கள்.
\s5
\v 12 அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் மக்களின் சபையாரெல்லோரும் அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்வதற்காக சீலோவிலே கூடி,
\s5
\v 13 கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் கோத்திரத்தார்களிடமும், காத் கோத்திரத்தார்களிடமும்,, மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களிடமும், ஆசாரியனாகிய எலெயாசாருடைய மகனாகிய பினெகாசையும்,
\v 14 அவனோடு இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு பிதாவின் குடும்பத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகப் பத்துப் பிரபுக்களையும் அனுப்பினார்கள்; இஸ்ரவேலின் சேனைகளிலே ஆயிரம்பேர்களுக்குள்ளே ஒவ்வொருவனும் தன் தன் பிதாவின் குடும்பத்திற்குத் தலைவனாக இருந்தான்.
\s5
\v 15 அவர்கள் கீலேயாத் தேசத்திலே ரூபன் கோத்திரத்தார், காத் கோத்திரத்தார், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களாகிய இவர்களிடம் வந்து:
\v 16 நீங்கள் இந்த நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடித் திரும்பி, இந்த நாளிலே கர்த்தருக்கு எதிராகக் கலகம் செய்யும்படியாக உங்களுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு எதிராகச் செய்த இந்தத் துரோகம் என்ன?
\s5
\v 17 பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? கர்த்தருடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்த நாள்வரைக்கும் நாம் அதிலிருந்து நீங்கிச் சுத்தமாகவில்லையே.
\v 18 நீங்கள் இந்த நாளில் கர்த்தரைப் பின்பற்றாதபடித் திரும்புவீர்களோ? இன்று கர்த்தருக்கு எதிராகக் கலகம் செய்வீர்களோ? அவர் நாளைக்கு இஸ்ரவேலின் சபையின்மேல் கடுங்கோபங்கொள்வாரே.
\s5
\v 19 உங்களுடைய சொந்த தேசம் தீட்டாக இருந்ததானால், கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரம் இருக்கிற கர்த்தருடைய சொந்தமான அக்கரையில் உள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே பங்குகளைப் பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தை அல்லாமல் உங்களுக்கு வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் எதிராக பிடிவாதம் செய்யாமல் இருங்கள்.
\v 20 சேராவின் மகனாகிய ஆகான் சாபத்தீடானப் பொருளைக்குறித்துத் துரோகம்செய்ததினாலே, இஸ்ரவேல் மக்களின்மேல் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன்மட்டும் தன்னுடைய அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று கர்த்தருடைய சபையார்கள் எல்லோரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.
\s5
\v 21 அப்பொழுது ரூபன் கோத்திரத்தார்களும், காத் கோத்திரத்தார்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், இஸ்ரவேலின் ஆயிரம்பேர்களின் தலைவர்களுக்கு மறுமொழியாக:
\v 22 தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலர்களும் அறிந்துகொள்ளுவார்கள்; அது பிடிவாதத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு எதிரான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்த நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.
\v 23 ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்த பலிபீடத்தைக் கட்டினதே அல்லாமல், கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்கதகனபலியையாவது போஜனபலியையாவது சமாதானபலிகளையாவது செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், கர்த்தர் அதை விசாரிப்பாராக.
\s5
\v 24 நாளைக்கு உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் என்ன?
\s5
\v 25 ரூபனுடைய மக்கள் காத்தின் மக்களாகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே கர்த்தர் யோர்தானை எல்லையாக வைத்தார்; கர்த்தரிடம் உங்களுக்குப் பங்கு இல்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படாமலிருக்கச் செய்வார்கள் என்கிற பயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
\s5
\v 26 சர்வாங்கதகனத்திற்கு அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும், பலிகளாலும், சமாதானபலிகளாலும், நாங்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியார்களுக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்,
\v 27 கர்த்தரிடம் உங்களுக்குப் பங்கு இல்லை என்று உங்களுடைய பிள்ளைகள் நாளைக்கு எங்களுடைய பிள்ளைகளிடம் சொல்லாமலிருப்பதற்காகவே, ஒரு பலிபீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.
\s5
\v 28 நாளைக்கு எங்களோடாவது, எங்களுடைய சந்ததியார்களோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சிக்காக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின கர்த்தருடைய பலிபீடத்தின் சாயலான பலிபீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.
\v 29 நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத்தவிர, நாங்கள் சர்வாங்க தகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப் பலிக்கும் வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கு எதிராகக் கலகம்பண்ணுவதும், இன்று கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும், எங்களுக்குத் தூரமாக இருப்பதாக என்றார்கள்.
\s5
\v 30 ரூபனுடைய கோத்திரத்தார்களும், காத்தின் கோத்திரத்தார்களும், மனாசே கோத்திரத்தார்களும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடு இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரம்பேர்களின் தலைவர்களும் கேட்டபோது, அது அவர்களுடைய பார்வைக்கு நன்றாக இருந்தது.
\v 31 அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும், மனாசே கோத்திரத்தார்களையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு எதிராக அப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் மக்களைக் கர்த்தருடைய கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.
\s5
\v 32 ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாசும், பிரபுக்களும், கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும் விட்டு, கானான் தேசத்திற்கு இஸ்ரவேல் மக்களிடம் திரும்பிவந்து, அவர்களுக்கு மறுசெய்தி சொன்னார்கள்.
\v 33 அந்தச் செய்தி இஸ்ரவேல் மக்களின் பார்வைக்கு நன்றாக இருந்தது; ஆகவே ரூபனுடைய வம்சத்தார்களும் காத்தின் வம்சத்தார்களும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சை விட்டு, இஸ்ரவேல் மக்கள் தேவனை ஸ்தோத்தரித்தார்கள்.
\s5
\v 34 கர்த்தரே தேவன் என்பதற்கு அந்த பலிபீடம் நமக்குள்ளே சாட்சியாக இருக்கும் என்று சொல்லி, ரூபனுடைய வம்சத்தார்களும், காத்தின் வம்சத்தார்களும் அதற்கு ஏத் என்று பெயரிட்டார்கள்.
\s5
\c 23
\cl அத்தியாயம்– 23
\s1 யோசுவாவின் இறுதி உரை
\p
\v 1 கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லா எதிரிகளாலும் யுத்தமில்லாதபடி ஓய்ந்திருக்கச்செய்து அநேக நாட்கள் சென்றபின்பு, யோசுவா முதிர்வயதானபோது,
\v 2 யோசுவா இஸ்ரவேலின் மூப்பர்களையும், தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், அதிகாரிகளையும், மற்ற எல்லோரையும் அழைத்து, அவர்களை நோக்கி: நான் முதிர்வயதானேன்.
\v 3 உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்த எல்லா தேசங்களுக்கும் செய்த எல்லாவற்றையும் நீங்கள் பார்த்தீர்கள்; உங்களுடைய தேவனாகிய கர்த்தரே உங்களுக்காக யுத்தம்செய்தார்.
\s5
\v 4 பாருங்கள், யோர்தான்முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கில் உள்ள பெரிய சமுத்திரம்வரைக்கும் இன்னும் மீதியாக இருக்கிறவைகளுமான எல்லா தேசங்களையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்களுடைய கோத்திரங்களுக்குத் தகுந்தபடி, சொந்தமாகப் பங்கிட்டேன்.
\v 5 உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்களுடைய தேவனாகிய கர்த்தரே அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்களுடைய பார்வையிலிருந்து அகற்றிப்போடுவார்.
\s5
\v 6 ஆகவே, மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறதை விட்டுவிட்டு, வலதுபுறமாவது இடதுபுறமாவது விலகிப்போகாமல், அதையெல்லாம் கடைபிடிக்கவும், செய்யவும் உறுதி செய்துகொள்ளுங்கள்.
\v 7 உங்களுக்குள்ளே மீதியாக இருக்கிற இந்த தேசங்களோடு சேராமலும், அவர்களுடைய தெய்வங்களின் பெயர்களை நினைக்காமலும், அவைகளைக்கொண்டு சத்தியம்செய்யாமலும், அவைகளைத் தொழுதுகொள்ளாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாக இருங்கள்.
\v 8 இந்த நாள்வரைக்கும் நீங்கள் செய்ததுபோல, உங்களுடைய தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்.
\s5
\v 9 கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான தேசங்களைத் துரத்தியிருக்கிறார்; இந்த நாள்வரைக்கும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை.
\v 10 உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவரே உங்களுக்காக யுத்தம்செய்கிறார்.
\v 11 ஆகவே, உங்களுடைய தேவனாகிய கர்த்தரிடம் அன்புசெலுத்தும்படி, உங்களுடைய ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
\s5
\v 12 நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாக இருக்கிற இந்த மக்களோடு சேர்ந்துகொண்டு, அவர்களோடு சம்பந்தம் கலந்து, நீங்கள் அவர்களிடமும் அவர்கள் உங்களிடமும் உறவாடினால்,
\v 13 உங்களுடைய தேவனாகிய கர்த்தர் இனி இந்த தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகும்வரைக்கும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்களுடைய முதுகுகளுக்குச் சவுக்காகவும், உங்களுடைய கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாக அறியுங்கள்.
\s5
\v 14 இதோ, இன்று நான் பூலோகத்தார்கள் எல்லோரும் போகிற வழியிலே போகிறேன்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்ல வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்களுடைய முழு இருதயத்தாலும், முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறினது, அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.
\v 15 இப்பொழுதும் உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களிடம் சொன்ன நல்ல காரியமெல்லாம் உங்களுக்கு எப்படி நிறைவேறியதோ, அப்படியே, உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு, அவைகளைப் பணிந்துகொள்ளும் காலத்தில்,
\s5
\v 16 உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை அழிக்கும்வரைக்கும், கர்த்தர் உங்கள்மேல் எல்லாத் தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாக அழிந்துபோவீர்கள் என்றான்.
\s5
\c 24
\cl அத்தியாயம்– 24
\s1 சீகேமிலே உடன்படிக்கை புதுப்பிக்கப்படுதல்
\p
\v 1 பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரச்செய்து, இஸ்ரவேலின் மூப்பர்களையும், தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், அதிகாரிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.
\v 2 அப்பொழுது யோசுவா எல்லா மக்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வ காலத்திலே உங்களுடைய பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்பால் குடியிருந்தபோது அவர்கள் வேறு தெய்வங்களைத் தொழுதுகொண்டார்கள்;
\s5
\v 3 நான் நதிக்கு அப்பால் இருந்த உங்களுடைய தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசத்திலே வாழச்செய்து, அவனுடைய சந்ததியை மிகுதியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்.
\v 4 ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கொடுத்து, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்;
\s5
\v 5 நான் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி, எகிப்தியர்களை வாதித்தேன்; அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்தபின்பு உங்களைப் புறப்படச்செய்தேன்.
\v 6 நான் உங்களுடைய பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்படச் செய்தபோது, சமுத்திரத்தின் கரைக்கு வந்தீர்கள்; எகிப்தியர்கள் இரதங்களோடும், குதிரைவீரர்களோடும் உங்களுடைய பிதாக்களைச் சிவந்த சமுத்திரம்வரைப் பின்தொடர்ந்தார்கள்.
\s5
\v 7 அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியர்களுக்கும் நடுவில் இருளை வரச்செய்து, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்களுடைய கண்கள் கண்டது; பின்பு வனாந்திரத்தில் அநேக நாட்கள் வாழ்ந்தீர்கள்.
\s5
\v 8 அதற்குப்பின்பு உங்களை யோர்தானுக்கு மறுபுறத்திலே குடியிருந்த எமோரியர்களின் தேசத்திற்குக் கொண்டுவந்தேன்; அவர்கள் உங்களோடு யுத்தம்செய்கிறபோது, அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; அவர்களுடைய தேசத்தை சுதந்தரித்துக்கொண்டீர்கள்; அவர்களை உங்களுக்கு முன்பாக அழித்துவிட்டேன்.
\s5
\v 9 அப்பொழுது சிப்போரின் மகனாகிய பாலாக் என்னும் மோவாபியர்களின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்செய்து, உங்களைச் சபிப்பதற்காக, பேயோரின் மகனாகிய பிலேயாமை அழைத்தான்.
\v 10 பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்கு விருப்பம் இல்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இந்தவிதமாக உங்களை அவனுடைய கைகளிலிருந்து தப்புவித்தேன்.
\s5
\v 11 பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏத்தியர்களும், கிர்காசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், உங்களுக்கு எதிராக யுத்தம்செய்தார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்களுடைய கைகளிலே ஒப்புக்கொடுத்தேன்.
\v 12 எமோரியர்களின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்களுடைய வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னிருந்து துரத்திவிட்டது.
\s5
\v 13 அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் சாப்பிடுகிறீர்கள் என்றார்.
\s5
\v 14 ஆகவே நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாகத் தொழுதுகொண்டு, உங்களுடைய பிதாக்கள் நதிக்கு அப்பாலும் எகிப்திலும் தொழுதுகொண்ட தெய்வங்களை அகற்றிவிட்டு, கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
\v 15 கர்த்தரைத் தொழுதுகொள்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாகத் தெரிந்தால், பின்பு யாரைத் தொழுதுகொள்வீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்பால் உங்களுடைய பிதாக்கள் தொழுதுகொண்ட தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நீங்கள் வாழ்கின்ற தேசத்தின் மக்களாகிய எமோரியர்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நானும் என் வீட்டார்களுமோவென்றால், கர்த்தரையே தொழுதுகொள்ளுவோம் என்றான்.
\s5
\v 16 அப்பொழுது மக்கள் மறுமொழியாக: வேறு தெய்வங்களைத் தொழுதுகொள்ளும்படி, கர்த்தரைவிட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாக இருப்பதாக.
\v 17 நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா மக்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே.
\v 18 தேசத்திலே குடியிருந்த எமோரியர்கள் முதலான எல்லா மக்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகவே நாங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளுவோம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.
\s5
\v 19 யோசுவா மக்களை நோக்கி: நீங்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்; உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னிக்கமாட்டார்.
\v 20 கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் கர்த்தரைவிட்டு, அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை அழிப்பார் என்றான்.
\s5
\v 21 மக்கள் யோசுவாவை நோக்கி: அப்படியல்ல, நாங்கள் கர்த்தரையே தொழுதுகொள்ளுவோம் என்றார்கள்.
\v 22 அப்பொழுது யோசுவா மக்களை நோக்கி: கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள்.
\v 23 அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்களுடைய நடுவே இருக்கிற அந்நிய தெய்வங்களை அகற்றிவிட்டு, உங்களுடைய இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.
\s5
\v 24 அப்பொழுது மக்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே தொழுதுகொண்டு, அவருடைய சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள்.
\v 25 அந்தப்படி யோசுவா அந்த நாளில் சீகேமிலே மக்களோடு உடன்படிக்கைசெய்து, அவர்களுக்கு அதைப் பிரமாணமாகவும் கட்டளையாகவும் ஏற்படுத்தினான்.
\v 26 இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த இடத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழே நட்டு,
\s5
\v 27 எல்லா மக்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாக இருக்கக்கடவது; கர்த்தர் நம்மோடு சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்களுடைய தேவனுக்கு எதிராகப் பொய்சொல்லாதபடி, இது உங்களுக்குச் சாட்சியாக இருக்கக்கடவது என்று சொல்லி,
\s1 வாக்குத்தத்த தேசத்தில் அடக்கம்செய்தல்
\p
\v 28 யோசுவா மக்களை அவரவர்களுடைய சொந்தமான தேசத்திற்கு அனுப்பிவிட்டான்.
\s5
\v 29 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் மகனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாக மரணமடைந்தான்.
\v 30 அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கே இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவனுடைய பங்கின் எல்லைக்குள்ளே அடக்கம் செய்தார்கள்.
\s5
\v 31 யோசுவா உயிரோடு இருந்த எல்லா நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய செயல்கள் அனைத்தையும் அறிந்து யோசுவாவிற்குப்பின்பு அநேக நாட்கள் உயிரோடு இருந்த மூப்பர்களுடைய எல்லா நாட்களிலும், இஸ்ரவேலர்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.
\s5
\v 32 இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியர்களுடைய மகன்களின் கையில் நூறு வெள்ளிக்காசுக்கு வாங்கின நிலத்தின் பங்கிலே அடக்கம்செய்தார்கள்; அந்த நிலம் யோசேப்பின் சந்ததியினர்களுக்குச் சொந்தமானது.
\v 33 ஆரோனின் மகனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவனுடைய மகனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத்தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்செய்தார்கள்.

1078
07-JDG.usfm Normal file
View File

@ -0,0 +1,1078 @@
\id JDG
\ide UTF-8
\h நியாயாதிபதிகள்
\toc1 நியாயாதிபதிகள்
\toc2 நியாயாதிபதிகள்
\toc3 jdg
\mt1 நியாயாதிபதிகள்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 கானானியர்களோடு போரிடுதல்
\p
\v 1 யோசுவா இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி: கானானியர்களை எதிர்த்து யுத்தம்செய்யும்படி, எங்களில் யார் முதலில் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.
\v 2 அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படட்டும்; இதோ, அந்த தேசத்தை அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
\v 3 அப்பொழுது யூதாவின் மனிதர்கள் தங்களுடைய சகோதரர்களாகிய சிமியோனின் மனிதர்களை நோக்கி: நாம் கானானியர்களோடு யுத்தம்செய்ய நீங்கள் என்னுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் எங்களோடு எழுந்துவாருங்கள்; உங்களுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் நாங்களும் உங்களோடு வருவோம் என்றார்கள்; அப்படியே சிமியோன் கோத்திரத்தார்கள் அவர்களோடு போனார்கள்.
\s5
\v 4 யூதா மனிதர்கள் எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியர்களையும், பெரிசியர்களையும் அவர்களுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பத்தாயிரம்பேரை வெட்டினார்கள்.
\v 5 பேசேக்கிலே அதோனிபேசேக்கைப் பார்த்து, அவனோடு யுத்தம்செய்து, கானானியர்களையும், பெரிசியர்களையும் வெட்டினார்கள்.
\s5
\v 6 அதோனிபேசேக் ஓடிப்போகும்போது, அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவனுடைய கை கால்களின் பெருவிரல்களை வெட்டிப்போட்டார்கள்.
\v 7 அப்பொழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கை கால்களின் பெருவிரல்கள் வெட்டப்பட்டவர்களாக என்னுடைய மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிகட்டினார் என்றான். அவனை எருசலேமிற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் இறந்தான்.
\s5
\v 8 யூதாவின் மக்கள் எருசலேமின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, அங்குள்ளவர்களை கூர்மையான பட்டயத்தினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கினார்கள்.
\v 9 பின்பு யூதாவின் மக்கள் மலைத்தேசத்திலும், தெற்கிலும், பள்ளத்தாக்குகளிலும் குடியிருக்கிற கானானியர்களோடு யுத்தம்செய்யப் புறப்பட்டுப்போனார்கள்.
\v 10 அப்படியே யூதா கோத்திரத்தார்கள் எபிரோனிலே குடியிருக்கிற கானானியர்களுக்கு எதிராகப்போய் சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முன்நாட்களில் அந்த எபிரோனுக்கு கீரியாத்அர்பா என்று பெயர்.
\s1 காலேப்பும் அவருடைய மகளும்
\p
\s5
\v 11 அங்கேயிருந்து தெபீரில் குடியிருப்பவர்களுக்கு எதிராகப் போனார்கள்; முன்நாட்களில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பெயர்.
\v 12 அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரை முறியடித்துப் பிடிக்கிறவனுக்கு என்னுடைய மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்றான்.
\v 13 அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; எனவே, தன்னுடைய மகளாகிய அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
\s5
\v 14 அவள் புறப்படும்போது, என்னுடைய தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று ஒத்னியேலினிடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.
\v 15 அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
\s5
\v 16 மோசேயின் மாமனாகிய கேனியனின் மக்களும் யூதாவின் மக்களோடு பேரீச்சை மரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கில் இருக்கிற யூதாவின் வனாந்திரத்திற்கு வந்து, மக்களோடு குடியேறினார்கள்.
\v 17 யூதா தன்னுடைய சகோதரனாகிய சிமியோனோடு போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியர்களை முறியடித்து, அதை அழித்து, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பெயரிட்டார்கள்.
\s5
\v 18 யூதா, காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.
\v 19 கர்த்தர் யூதாவோடு இருந்ததினால், மலைத்தேசத்தார்களைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கில் குடியிருப்பவர்களுக்கு இரும்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தமுடியாமல்போனது.
\s5
\v 20 மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று மகன்களையும் துரத்திவிட்டான்.
\v 21 பென்யமீனின் மகன்கள் எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களையும் துரத்திவிடவில்லை; எனவே, எபூசியர்கள் இந்த நாள்வரை பென்யமீன் மக்களோடு எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
\s5
\v 22 யோசேப்பின் குடும்பத்தினரும் பெத்தேலுக்கு எதிராகப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடு இருந்தார்.
\v 23 யோசேப்பின் குடும்பத்தினர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பெயர்.
\v 24 அந்த வேவுகாரர்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனிதனைக் கண்டு: பட்டணத்திற்குள் நுழையும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.
\s5
\v 25 அப்படியே பட்டணத்திற்குள் நுழையும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்தில் உள்ளவர்களைக் கூர்மையான பட்டயத்தினால் வெட்டி, அந்த மனிதனையும் அவனுடைய குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.
\v 26 அப்பொழுது அந்த மனிதன் ஏத்தியர்களின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பெயரிட்டான்; அதுதான் இந்த நாள்வரை அதினுடைய பெயர்.
\s1 கானானியர்களோடு மற்ற கோத்திரங்கள் போரிடுதல்
\p
\s5
\v 27 மனாசே கோத்திரத்தார்கள் பெத்செயான் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தானாக் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தோரில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், இப்லெயாம் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், மெகிதோவில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும் துரத்திவிடவில்லை; கானானியர்கள் அந்த தேசத்தில்தான் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்.
\v 28 இஸ்ரவேலர்கள் பலத்தபோது, கானானியர்களை முழுவதும் துரத்திவிடாமல் அவர்களை கட்டாயப்படுத்தி கடினமாக வேலை செய்யவைத்தார்கள்.
\s5
\v 29 எப்பிராயீம் கோத்திரத்தார்கள், கேசேரிலே குடியிருந்த கானானியர்களையும் துரத்திவிடவில்லை; ஆகவே, கானானியர்கள் அவர்களோடு குடியிருந்தார்கள்.
\s5
\v 30 செபுலோன் கோத்திரத்தார்கள், கித்ரோனில் குடியிருக்கிறவர்களையும், நாகலோலில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை. ஆகவே, கானானியர்கள், அவர்களோடு குடியிருந்து, கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
\s5
\v 31 ஆசேர் கோத்திரத்தார்கள், அக்கோவில் குடியிருக்கிறவர்களையும், சீதோனில் குடியிருக்கிறவர்களையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை.
\v 32 ஆசேரியர்கள், தேசத்தில் குடியிருக்கிறவர்களாகிய கானானியர்களோடு குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.
\s5
\v 33 நப்தலி கோத்திரத்தார்கள், பெத்ஷிமேசில் குடியிருக்கிறவர்களையும், பெத்தானாத்தில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடாமல், தேசத்தில் குடியிருக்கிறவர்களாகிய கானானியர்களோடு குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களில் குடியிருக்கிறவர்களும் அவர்களுக்கு கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
\s5
\v 34 எமோரியர்கள் தாண் கோத்திரத்தார்களைப் பள்ளத்தாக்கில் இறங்கவிடாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படிக் கட்டாயப்படுத்தினார்கள்.
\v 35 எமோரியர்கள் ஏரேஸ் மலைகளிலும், ஆயலோனிலும், சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தார்களின் பலம் பெருகினபடியால், அவர்களுக்கு கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
\v 36 எமோரியர்களின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடு துவங்கி அதற்கு அப்புறமும் போனது.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 போகீமில் கர்த்தருடைய தூதன்
\p
\v 1 கர்த்தருடைய தூதன் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்து, உங்களுடைய பிதாக்களுக்கு வாக்குக்கொடுத்த தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடு செய்த என்னுடைய உடன்படிக்கையை நான் ஒருபோதும் முறித்துப்போடுவதில்லை என்றும்,
\v 2 நீங்கள் இந்த தேசத்தில் குடியிருக்கிறவர்களோடு உடன்படிக்கைசெய்யாமல், அவர்களுடைய பலிபீடங்களை இடித்துவிடவேண்டும் என்றும் சொன்னேன்; ஆனாலும் என்னுடைய சொல்லைக் கேட்காமல்போனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?
\s5
\v 3 ஆகவே, நான் அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.
\v 4 கர்த்தருடைய தூதன் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் மக்கள் அனைவரிடமும் சொல்லும்போது, மக்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.
\v 5 அந்த இடத்திற்கு போகீம் என்று பெயரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலிசெலுத்தினார்கள்.
\s1 கீழ்ப்படியாமையும், தோல்வியும்
\p
\s5
\v 6 யோசுவா இஸ்ரவேல் மக்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகத்திற்குப் போனார்கள்.
\v 7 யோசுவாவின் எல்லா நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய செயல்களையெல்லாம் பார்த்தவர்களும், யோசுவாவிற்குப் பின்பு உயிரோடு இருந்தவர்களுமாகிய மூப்பர்களின் எல்லா நாட்களிலும் மக்கள் கர்த்தரைத் தொழுது கொண்டார்கள்.
\v 8 நூனின் மகனான யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாக இறந்துபோனான்.
\s5
\v 9 அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கில் இருக்கிற அவனுடைய சுதந்திரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்செய்தார்கள்.
\v 10 அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களோடு சேர்க்கப்பட்டப்பின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த செய்கைகளையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின்பு எழும்பியது.
\s5
\v 11 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் பார்வைக்கு தீமையானதைச் செய்து, பாகால்களை தொழுது,
\v 12 தங்களுடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச் செய்த அவர்களுடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களுடைய தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிப்போய், அவைகளைத் தொழுதுகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்.
\v 13 அவர்கள் கர்த்தரைவிட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுதுகொண்டார்கள்.
\s5
\v 14 அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி, அவர்கள் அதற்குப்பின்பு தங்கள் எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர்களுடைய கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்களுடைய எதிரிகளின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
\v 15 கர்த்தர் அவர்களுக்கு வாக்கு செய்தபடி, அவர்கள் புறப்பட்டுப்போகிற இடங்கலெல்லாம் கர்த்தருடைய கரம் தீமைக்கென்றே அவர்களுக்கு எதிராக இருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
\s5
\v 16 கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பச்செய்தார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றினார்கள்.
\v 17 அவர்கள் தங்களுடைய நியாயாதிபதிகளின் சொல்லைக் கேட்காமல், அந்நிய தெய்வங்களுக்குத் தங்களை விலைமாதர்களைப்போல ஒப்புக்கொடுத்து, அவைகளைத் தொழுதுகொண்டார்கள்; தங்களுடைய பிதாக்கள் கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, பிதாக்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.
\s5
\v 18 கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பச்செய்கிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடு இருந்து அந்த நியாயாதிபதி வாழ்ந்த நாட்களிலெல்லாம் அவர்களுடைய எதிரிகளின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றிவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினால் தவிக்கிறதினாலே, கர்த்தர் துக்கப்படுவார்.
\v 19 நியாயாதிபதி மரித்தவுடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி, பணிவிடை செய்யவும், தொழுதுகொள்ளவும், தங்களுடைய பிதாக்களைவிட இழிவாக நடந்து, தங்களுடைய தீய செய்கைகளையும் தங்களுடைய முரட்டாட்டமான வழிகளையும் விடாதிருப்பார்கள்.
\s5
\v 20 ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி: இந்த மக்கள் தங்களுடைய பிதாக்களுக்கு நான் கற்பித்த என்னுடைய உடன்படிக்கையை மீறி என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனதினால்,
\v 21 யோசுவா இறந்தபின்பு விட்டுப்போன தேசங்களில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன்.
\v 22 அவர்களுடைய பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படி, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலை சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.
\v 23 அதற்காகக் கர்த்தர் அந்த தேசங்களை யோசுவாவுடைய கையில் ஒப்புக்கொடுக்காமலும், அவைகளை சீக்கிரமாகத் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 கர்த்தர் இஸ்ரவேலர்களின் போர்த்திறமையை சோதித்தல்
\p
\v 1 கானான் தேசத்தில் நடந்த எல்லா யுத்தங்களையும் அறியாமலிருந்த இஸ்ரவேலர்களாகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும்,
\v 2 இஸ்ரவேலின் புதிய சந்ததியாரும், அதற்குமுன்பு யுத்தம் செய்ய அறியாமலிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும் கர்த்தர் விட்டுவைத்தவர்கள் யாரென்றால்:
\v 3 பெலிஸ்தர்களின் ஐந்து அதிபதிகளும், எல்லா கானானியர்களும், சீதோனியர்களும், பாகால் எர்மோன் துவங்கி ஆமாத்திற்குள் நுழையும்வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியர்களுமே.
\s5
\v 4 கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்களுடைய பிதாக்களுக்கு விதித்த கட்டளைகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலர்கள் அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.
\v 5 இப்படி இஸ்ரவேல் மக்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களாகிய இவர்களின் நடுவே குடியிருந்து,
\v 6 அவர்களுடைய மகள்களை திருமணம்செய்து, தங்களுடைய மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டார்கள்.
\s1 முதல் நியாயாதிபதியாகிய ஒத்னியேல்
\p
\s5
\v 7 இப்படி இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் தொழுதுகொள்கிறபோது,
\v 8 கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபம் கொண்டு அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் மக்கள் கூசான்ரிஷதாயீமை எட்டு வருடங்கள் பணிந்துகொண்டார்கள்.
\s5
\v 9 இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் மக்களை காப்பாற்றும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய மகனான ஒத்னியேல் என்னும் ஒரு இரட்சகனை அவர்களுக்கு எழும்பச்செய்தார்.
\v 10 அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்து அவனை பெலப்படுத்தியதால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்செய்யப் புறப்பட்டான்; கர்த்தர் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவனுடைய கை கூசான்ரிஷதாயீமின்மேல் பெலங்கொண்டது.
\v 11 தேசம் நாற்பது வருடங்கள் அமைதலாக இருந்தது. கேனாசின் மகனான ஒத்னியேல் இறந்துபோனான்.
\s1 நியாயாதிபதியாகிய ஏகூத்
\p
\s5
\v 12 இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலிற்கு எதிராக பெலனடையச் செய்தார்.
\v 13 அவன் அம்மோனிய மக்களையும் அமலேக்கியர்களையும் அழைத்துக்கொண்டுவந்து, இஸ்ரவேலை முறியடித்தான்; பேரீச்சை மரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்.
\v 14 இவ்வாறு இஸ்ரவேல் மக்கள் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருடங்கள் பணிந்துகொண்டார்கள்.
\s5
\v 15 இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பச்செய்தார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாக இருந்தான்; அவனுடைய கையிலே இஸ்ரவேல் மக்கள் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.
\s5
\v 16 ஏகூத், இருபுறமும் கூர்மையான ஒரு முழ நீளமுமான ஒரு பட்டயத்தை உண்டாக்கி, அதைத் தன்னுடைய ஆடைக்குள்ளே தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டிக்கொண்டு,
\v 17 காணிக்கையை மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குச் செலுத்தினான்; எக்லோன் மிகவும் பருமனான மனிதனாக இருந்தான்.
\v 18 அவன் காணிக்கையைச் செலுத்தி முடிந்தபின்பு, காணிக்கையைச் சுமந்து வந்த மக்களை அனுப்பிவிட்டான்.
\s5
\v 19 அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து: ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்ற அனைவரும் அவனை விட்டு வெளியே போய்விட்டார்கள்.
\v 20 ஏகூத் அவன் அருகில் போனான்; அவனோ தனக்குத் தனியாக இருந்த குளிர்ச்சியான மேல் வீட்டு அறையில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடம் சொல்லவேண்டிய தேவ வாக்கு என்னிடம் உண்டு என்றான்; அவன் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தான்.
\s5
\v 21 உடனே ஏகூத் தன்னுடைய இடதுகையை நீட்டி, தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டியிருந்த பட்டயத்தை உருவி, அதை அவனுடைய வயிற்றிற்குள் குத்தினான்.
\v 22 கத்தியோடு கைப்பிடியும் உள்ளே போனது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கமுடியாதபடி, கொழுப்பு கத்தியைச் சுற்றிக் கொண்டது; அது பின்புறமாக வந்தது.
\v 23 ஏகூத் புறப்பட்டு, மேல் வீட்டு அறையின் கதவை மூடிப் பூட்டிவிட்டு, தலைவாசல் வழியாகப் போய்விட்டான்.
\s5
\v 24 அவன் போனபின்பு வேலைக்காரர்கள் வந்து பார்த்தார்கள்; இதோ, மேல் வீட்டு அறையின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான வீட்டிலே கழிவறையில் இருக்கலாம் என்றார்கள்.
\v 25 அவர்கள் சலித்துப்போகும் வரைக்கும் காத்திருந்தார்கள்; அவன் மேல் வீட்டு அறையின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்களுடைய எஜமான் தரையிலே இறந்துக்கிடந்தான்.
\s5
\v 26 அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான்.
\v 27 அங்கே வந்தபோது எப்பிராயீம் மலையில் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் அவனோடு மலையிலிருந்து இறங்கினார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக நடந்து:
\s5
\v 28 என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; கர்த்தர் உங்கள் எதிரிகளாகிய மோவாபியர்களை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைமுகத்தைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவிடாமல்,
\v 29 அக்காலத்திலே மோவாபியர்களில் ஏறக்குறையப் பத்தாயிரம் பேரை வெட்டினார்கள்; அவர்கள் எல்லாரும் திறமையுள்ளவர்களும் பலசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.
\v 30 இப்படியே அந்த நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் எண்பது வருடங்கள் அமைதலாக இருந்தது.
\s1 நியாயாதிபதியாகிய சம்கார்
\p
\s5
\v 31 அவனுக்குப்பின்பு ஆனாத்தின் மகன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தர்களில் அறுநூறு பேரை, கால்நடைகளை நடத்த பயன்படுத்தப்படும் ஒரு கோலால் கொன்றான்; அவனும் இஸ்ரவேலைக் காப்பாற்றினான்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 பெண் நியாயாதிபதியும் தீர்க்கதரிசியுமாகிய தெபோராள்
\p
\v 1 ஏகூத் இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பக் கர்த்தருடைய பார்வைக்குத் தீமையானதைச் செய்துவந்தார்கள்.
\v 2 ஆகவே, கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியர்களுடைய ராஜாவின் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவனுடைய தளபதிக்கு சிசெரா என்று பெயர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.
\v 3 அவனுக்குத் தொள்ளாயிரம் இரும்பு ரதங்கள் இருந்தன; அவன் இஸ்ரவேல் மக்களை இருபது வருடங்கள் கொடுமையாக ஒடுக்கினான்; இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.
\s5
\v 4 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.
\v 5 அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சை மரத்தின்கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் மக்கள் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள்.
\s5
\v 6 அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் மகன் பாராக்கை வரவழைத்து: நீ நப்தலி மனிதர்களிலும், செபுலோன் மனிதர்களிலும் பத்தாயிரம்பேரை அழைத்துக்கொண்டு, தாபோர் மலைக்குப் போகவேண்டும் என்றும்,
\v 7 நான் யாபீனின் தளபதியாகிய சிசெராவையும், அவனுடைய ரதங்களையும், அவனுடைய படைகளையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புகொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள்.
\s5
\v 8 அதற்குப் பாராக்: நீ என்னோடு வந்தால் போவேன்; என்னோடு வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.
\v 9 அதற்கு அவள்: நான் உன்னோடு நிச்சயமாக வருவேன்; ஆனாலும் நீ போகிற பயணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு பெண்ணின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழுந்து, பாராக்கோடு கேதேசுக்குப் போனாள்.
\s5
\v 10 அப்பொழுது பாராக்: செபுலோன் மனிதர்களையும் நப்தலி மனிதர்களையும் கேதேசுக்கு வரவழைத்து, தனக்குப் பின்செல்லும் பத்தாயிரம்பேர்களோடு போனான்; தெபொராளும் அவனோடு போனாள்.
\s5
\v 11 கேனியனான ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் சந்ததியாக இருக்கிற கேனியர்களை விட்டுப் பிரிந்து, கேதேசின் அருகில் இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலி மரங்களின் அருகே தன்னுடைய கூடாரத்தைப் போட்டிருந்தான்.
\s5
\v 12 அபினோகாமின் மகன் பாராக் தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது,
\v 13 சிசெரா தொள்ளாயிரம் இரும்பு ரதங்களாகிய தன்னுடைய எல்லா ரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா மக்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிற்கு வரவழைத்தான்.
\s5
\v 14 அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னே பத்தாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.
\s5
\v 15 கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் படைகள் அனைத்தையும் பாராக்குக்கு முன்பாகக் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டு இறங்கி கால்நடையாக ஓடிப்போனான்.
\v 16 பாராக் ரதங்களையும் படையையும் யூதர் அல்லாதவர்களுடைய அரோசேத்வரை துரத்தினான்; சிசெராவின் படையெல்லாம் பட்டயக்கூர்மையினால் விழுந்தது; ஒருவனும் மீதியாக இருக்கவில்லை.
\s5
\v 17 சிசெரா கால்நடையாகக் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டிற்கும் சமாதானம் உண்டாயிருந்தது.
\v 18 யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என்னுடைய ஆண்டவனே, என்னிடத்தில் உள்ளே வாரும், பயப்பட வேண்டாம் என்று அவனிடம் சொன்னாள்; அப்படியே அவள் கூடாரத்தின் உள்ளே வந்தபோது, அவனை ஒரு போர்வையினாலே மூடினாள்.
\s5
\v 19 அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு, தாகமாக இருக்கிறேன் என்றான்; அவள் பால் இருக்கும் தோல்பையை திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்.
\v 20 அப்பொழுது அவன்: நீ கூடாரவாசலிலே நின்று, எவராகிலும் ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடம் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.
\s5
\v 21 பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து தன்னுடைய கையிலே சுத்தியைப் பிடித்துக்கொண்டு, மெதுவாக அவனுடைய அருகில் வந்து, அவனுடைய தலையின் பக்கவாட்டில் அந்த ஆணியை அடித்தாள்; அது ஊடுருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அவன் இறந்துப்போனான்.
\v 22 பின்பு சிசெராவை பின்தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்: வாரும், நீ தேடுகிற மனிதனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவனுடைய தலையில் அடித்திருந்தது.
\s5
\v 23 இப்படி தேவன் அந்த நாளிலே கானானியர்களின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தினார்.
\v 24 இஸ்ரவேல் மக்களின் கை கானானியர்களின் ராஜாவாகிய யாபீனை அழிக்கும்வரைக்கும் அவன்மேல் பெலத்துக்கொண்டேயிருந்தது.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 தெபோராளின் பாடல்
\p
\v 1 அந்த நாட்களிலே தெபொராளும் அபினோகாமின் மகன் பாராக்கும் பாடினது:
\v 2 கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டியதற்காகவும், மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை ஒப்புக்கொடுத்ததற்காகவும் அவரை ஸ்தோத்திரியுங்கள்.
\s5
\v 3 ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப் பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்செய்வேன்.
\v 4 கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வரும்போது, பூமி அதிர்ந்தது, வானம் பொழிந்தது, மேகங்களும் தண்ணீராகப் பொழிந்தது.
\s5
\v 5 கர்த்தருக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சீனாய் மலையும் அதிர்ந்தது.
\v 6 ஆனாத்தின் மகனான சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்ப் போனது; வழியில் நடக்கிறவர்கள் பக்கவழியாக நடந்தார்கள்.
\s5
\v 7 தெபொராளாகிய நான் எழும்பும்வரைக்கும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்பும்வரைக்கும், கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போனது.
\v 8 புதிய தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே நாற்பதாயிரம்பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?
\s5
\v 9 மக்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என்னுடைய இருதயம் நாடுகிறது; கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
\v 10 வெள்ளைக் கழுதைகளின் சேணத்தின் விரிப்புகளில் வீற்றிருக்கிறவர்களே, வழியில் நடக்கிறவர்களே, இதைப் பற்றி யோசியுங்கள்.
\s5
\v 11 தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரர்களின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையும் அறிவிப்பார்கள்; அதுமுதல் கர்த்தரின் மக்கள் நகரத்தின் வாசல்களில் போய் இறங்குவார்கள்.
\s5
\v 12 விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ.
\v 13 மீதியாக இருந்தவர்கள் மக்களின் தலைவர்களை ஆளும்படி செய்தார்; கர்த்தர் எனக்குப் பெலசாலிகளின்மேல் ஆளுகை தந்தார்.
\s5
\v 14 அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; உன்னுடைய மக்களுக்குள்ளே பென்யமீன் மனிதர்கள் உனக்குப் பின்சென்றார்கள்; மாகீரிலிருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.
\s5
\v 15 இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்; பாராக்கைப்போல இசக்கார் மனிதர்களும் பள்ளத்தாக்கில் கால்நடையாக அனுப்பப்பட்டார்கள்; ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.
\s5
\v 16 மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டது என்ன? ரூபனின் பிரிவினைகளால் மனதின் வேதனைகள் மிகுதி.
\s5
\v 17 கீலேயாத் மனிதர்கள் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; தாண் மனிதர்கள் கப்பல்களில் தங்கியிருந்தது என்ன? ஆசேர் மனிதர்கள் கடற்கரையிலே தங்கி, மூன்று பக்கமும் தரைசூழ்ந்தகடல் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.
\v 18 செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள்.
\s5
\v 19 ராஜாக்கள் வந்து யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது கானானியர்களின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்செய்தார்கள்; அவர்களுக்கு வெள்ளி கொள்ளைப் பொருளாக கிடைக்கவில்லை.
\v 20 வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் வானமண்டலங்களிலிருந்து சிசெராவோடு யுத்தம் செய்தன.
\s5
\v 21 கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே, அவர்களை அடித்துக்கொண்டு போனது; என்னுடைய ஆத்துமாவே, நீ பெலவான்களை மிதித்தாய்.
\v 22 அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே, பெலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.
\s5
\v 23 மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் நிச்சயமாகவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தரோடு துணை நிற்க வரவில்லை; பலசாலிகளுக்கு எதிராக அவர்கள் கர்த்தரோடு துணைநிற்க வரவில்லையே.
\s5
\v 24 பெண்களுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்; கூடாரத்தில் தங்கியிருக்கிற பெண்களுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே.
\v 25 தண்ணீரைக் கேட்டான், பாலைக் கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணத்திலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
\s5
\v 26 தன்னுடைய கையால் ஆணியையும், தன்னுடைய வலது கையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து, சிசெராவை அடித்தாள்; அவனுடைய தலையில் உருவக்குத்தி, அவனுடைய தலையை உடைத்துப்போட்டாள்.
\v 27 அவன் அவளுடைய காலின் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே இறந்துகிடந்தான்.
\s5
\v 28 சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்து: அவனுடைய இரதம் வராமல் தாமதமானது என்ன? அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறது என்ன என்று புலம்பினாள்.
\s5
\v 29 அவளுடைய பெண்களில் புத்திசாலிகள் அவளுக்கு பதில் சொன்னதுமின்றி, அவள் தனக்குத் தானே மறுமொழியாக:
\v 30 அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவர்ணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவர்ணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திர வேலை செய்யப்பட்டுள்ள பலநிறமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.
\s5
\v 31 கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற அனைவரும் இப்படியே அழியட்டும்; அவரிடம் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடு உதிக்கிற சூரியனைப்போல இருக்கட்டும் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருடங்கள் அமைதலாக இருந்தது.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\s1 மீதியானியர்கள் இஸ்ரவேலரிடம் போரிடுதல்
\p
\v 1 பின்னும் இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
\v 2 மீதியானியர்களின் கை இஸ்ரவேலின்மேல் பெலமாக இருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினால் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் பாதுகாப்பான இடங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.
\s5
\v 3 இஸ்ரவேலர்கள் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்குப்பகுதி மக்களும் அவர்களுக்கு எதிராக எழுந்து வந்து;
\v 4 அவர்களுக்கு எதிரே முகாமிட்டு, காசாவின் எல்லைவரை நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையும், ஆடுமாடுகள் கழுதைகளையும்கூட வைக்காமல் போவார்கள்.
\s5
\v 5 அவர்கள் தங்களுடைய மிருகஜீவன்களோடும், தங்களுடைய கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல திரளாக வருவார்கள்; அவர்களும் அவர்களுடைய ஒட்டகங்களும் எண்ணமுடியாததாக இருக்கும்; இப்படியாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள்.
\v 6 இப்படியாக மீதியானியர்களாலே இஸ்ரவேலர்கள் மிகவும் பெலவீனப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.
\s5
\v 7 இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினாலே கர்த்தரை நோக்கி முறையிட்டபோது,
\v 8 கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமையாக இருந்த வீட்டிலிருந்து புறப்படவும் செய்து,
\s5
\v 9 எகிப்தியர்கள் கைகளிலிருந்தும், உங்களை ஒடுக்கின எல்லோருடைய கைகளிலிருந்தும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து,
\v 10 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியர்களுடைய தெய்வங்களுக்குப் பயப்படாமல் இருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனீர்கள் என்கிறார் என்று சொன்னான்.
\s1 கிதியோனை கர்த்தருடைய தூதன் சந்தித்தல்
\p
\s5
\v 11 அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய மகன் கிதியோன் கோதுமையை மீதியானியர்களின் கைக்குத் தப்புவிக்க, ஆலைக்கு அருகில் அதைப் போரடித்தான்.
\v 12 கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பெலசாலியே கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்றார்.
\s5
\v 13 அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவரே, கர்த்தர் எங்களோடு இருந்தால், இவைகளெல்லாம் எங்களுக்கு ஏன் சம்பவித்தது? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்களுடைய பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர்களின் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.
\s5
\v 14 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பெலத்தோடு போ; நீ இஸ்ரவேலை மீதியானியர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றுவாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.
\v 15 அதற்கு அவன்: ஆ என்னுடைய ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே காப்பாற்றுவேன்; இதோ, மனாசேயில் என்னுடைய குடும்பம் மிகவும் எளியது; என்னுடைய தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன் என்றான்.
\s5
\v 16 அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடு இருப்பேன்; ஒரே மனிதனை முறியடிப்பதுபோல நீ மீதியானியர்களை முறியடிப்பாய் என்றார்.
\v 17 அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும்.
\v 18 நான் உம்மிடத்திற்கு என்னுடைய காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்கும் வரை, இந்த இடத்தை விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பி வரும்வரை நான் இருப்பேன் என்றார்.
\s5
\v 19 உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, குழம்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதை வெளியே கர்வாலி மரத்தின் கீழே இருக்கிற அவரிடம் கொண்டுவந்து வைத்தான்.
\v 20 அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து குழம்பை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான்.
\s5
\v 21 அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எரித்துப்போட்டது; கர்த்தரின் தூதனோ. அவனுடைய கண்களுக்கு மறைந்துபோனார்.
\s5
\v 22 அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று அறிந்து: ஐயோ, கர்த்தராகிய ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாக பார்த்தேனே என்றான்.
\v 23 அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.
\v 24 அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான்; அது இந்த நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.
\s5
\v 25 அன்று இரவிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழுவயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு,
\s1 பாகாலின் பலிபீடத்தை கிதியோன் அழித்தல்
\p
\v 26 இந்தக் கற்பாறையின் உச்சியிலே சரியான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடவேண்டும் என்றார்.
\s5
\v 27 அப்பொழுது கிதியோன், தன்னுடைய வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன்னுடைய தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனிதர்களுக்கும் பயந்ததினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான்.
\s5
\v 28 அந்த ஊர் மனிதர்கள் காலையில் எழுந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டும், அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டு இருக்கிறதையும் அவர்கள் பார்த்து;
\v 29 ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.
\s5
\v 30 அப்பொழுது ஊர்க்காரர்கள் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகே இருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்.
\s5
\v 31 யோவாஸ் தன்னை எதிர்த்து நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வாதாடுவீர்கள்? நீங்களா அதைக் காப்பாற்றுவீர்கள்? அதற்காக வாதாடுகிறவர்கள் இன்று காலையிலே சாகட்டும்; அது தேவனானால் தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால், அதுவே தனக்காக வாதாடட்டும் என்றான்.
\v 32 தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால் பாகால் அவனோடு வாதாடட்டும் என்று சொல்லி, அந்த நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பெயர் சூட்டப்பட்டது.
\s5
\v 33 மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்கு பகுதியை சேர்ந்த மக்கள் எல்லோரும் ஒன்றாக கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் முகாமிட்டார்கள்.
\s5
\v 34 அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,
\v 35 மனாசே நாடெங்கும் தூதுவர்களை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.
\s5
\v 36 அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என்னுடைய கையினாலே இஸ்ரவேலை காப்பாற்றவேண்டுமானால்,
\v 37 இதோ, நான் முடியுள்ள ஒரு தோலை கதிரடிக்கும் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மட்டும் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என்னுடைய கையினால் காப்பாற்றுவீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.
\s5
\v 38 அப்படியே ஆனது. அவன் மறுநாள் காலையில் எழுந்து, தோலைக்கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான்.
\s5
\v 39 அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒரு முறை மட்டும் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் வராமல் இருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரே முறை மட்டும் சோதனைசெய்கிறேன்; தோல் மட்டும் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.
\v 40 அப்படியே தேவன் அன்று இரவு செய்தார்; தோல்மட்டும் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 கிதியோன் மீதியானியரை முறியடித்தல்
\p
\v 1 அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீருற்றின் அருகில் முகாமிட்டார்கள்; மீதியானியர்களின் முகாம் அவனுக்கு வடக்கில் மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது.
\s5
\v 2 அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியர்களை உன்னோடிருக்கிற மக்களின் கையில் ஒப்புக்கொடுப்பதற்கு அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்; என்னுடைய கை என்னை காப்பாற்றியது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீண்பெருமைகொள்ள வாய்ப்புண்டாகும்.
\v 3 ஆகையால் பயமும் நடுக்கமும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து வேகமாக ஓடிப்போகட்டும் என்று, நீ மக்களின் காதுகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது மக்களில் இருபத்து இரண்டாயிரம்பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; பத்தாயிரம்பேர் மீதியாக இருந்தார்கள்.
\s5
\v 4 கர்த்தர் கிதியோனை நோக்கி: மக்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரின் அருகே இறங்கிப்போகச்செய்; அங்கே அவர்களை சோதித்துப் பார்ப்பேன்; உன்னோடு வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடு வரட்டும்; உன்னோடு வரக்கூடாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடு வராதிருக்கவேண்டும் என்றார்.
\s5
\v 5 அப்படியே அவன் மக்களைத் தண்ணீரின் அருகே இறங்கிப்போகச்செய்தான்; அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்குவதுபோல அதைத் தன்னுடைய நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியாகவும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக்குனிகிறவன் எவனோ, அவனைத் தனியாகவும் நிறுத்து என்றார்.
\v 6 தங்கள் கைகளால் அள்ளி, தங்கள் வாய்க்கு எடுத்து, நக்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை முந்நூறுபேர்; மற்ற மக்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்.
\s5
\v 7 அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற மக்களெல்லோரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகவேண்டும் என்றார்.
\v 8 அப்பொழுது மக்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலர்கள் எல்லோரையும் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குஅனுப்பிவிட்டு, அந்த முந்நூறுபேரைமட்டும் வைத்துக்கொண்டான்; மீதியானியர்களின் படை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது.
\s5
\v 9 அன்று இராத்திரி கர்த்தர் அவனை நோக்கி: நீ எழுந்து, அந்த படையினிடத்திற்குப் போ; அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்.
\v 10 போகப் பயந்தால், முதலில் நீயும் உன்னுடைய வேலைக்காரனாகிய பூராவும் படையினிடத்திற்குப் போய்,
\v 11 அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்; பின்பு படையினிடத்திற்குப் போக, உன்னுடைய கைகள் பெலப்படும் என்றார்; அப்படியே அவனும் அவனுடைய வேலைக்காரனாகிய பூராவும் படையின் முன்பகுதியிலே இரவுகாவல் காக்கிறவர்களின் இடம்வரைக்கும் போனார்கள்.
\s5
\v 12 மீதியானியர்களும், அமலேக்கியர்களும், எல்லாக் கிழக்குப் பகுதி மக்களும், வெட்டுக்கிளிகளைப்போலத் திரளாகப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாக இருந்தது.
\s5
\v 13 கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு கனவைச் சொன்னான். அதாவது இதோ ஒரு கனவுகண்டேன்; சுடப்பட்ட ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியர்களின் முகாமிற்கு உருண்டுவந்தது, அது கூடாரம்வரை வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.
\v 14 அப்பொழுது மற்றவன்; இது யோவாசின் மகனான கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியர்களையும், இந்த ராணுவம் அனைத்தையும், அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.
\s5
\v 15 கிதியோன் அந்த கனவையும் அதனுடைய விளக்கத்தையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் முகாமிற்கு திரும்பிவந்து: எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியர்களின் படையை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,
\v 16 அந்த முந்நூறுபேரை மூன்று படையாக பிரித்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,
\s5
\v 17 அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் முகாமின் முன்பகுதியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும்.
\v 18 நானும் என்னோடு இருக்கும் அனைவரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் முகாமைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிடுவீர்களாக என்று சொன்னான்.
\s5
\v 19 நடுஇரவின் துவக்கத்தில், இரவுக்காவலர்களை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடு இருந்த நூறுபேரும் அந்த இரவின் துவக்கத்திலே முகாமின் முன்பகுதியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.
\s5
\v 20 மூன்று படைகளின் மனிதர்களும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,
\v 21 முகாமைச் சுற்றிலும் அவரவர் தங்கள் இடத்திலே நின்றார்கள்; அப்பொழுது முகாமில் இருந்தவர்கள் எல்லோரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள்.
\s5
\v 22 முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதும்போது, கர்த்தர் முகாமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு எதிராக ஓங்கச்செய்தார்; ராணுவமானது சேரோத்திலுள்ள பெத்சித்தாவரை, தாபாத்திற்கு அருகிலான ஆபேல்மேகொலாவின் எல்லைவரை ஓடிப்போனது.
\v 23 அப்பொழுது நப்தலி மனிதர்களும், ஆசேர் மனிதர்களும், மனாசேயின் எல்லா மனிதர்களுமாகிய இஸ்ரவேலர்கள் கூடிவந்து, மீதியானியர்களைப் பின்தொடர்ந்து போனார்கள்.
\s5
\v 24 கிதியோன் எப்பிராயீம் மலைகள் எங்கும் ஆட்களை அனுப்பி: மீதியானியர்களுக்கு எதிராக இறங்கி, பெத்தாபரா இருக்கும் யோர்தான்வரை வந்து, அவர்களுக்கு முந்தித் துறைமுகங்களைக் கைப்பற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லச் சொன்னான்; அப்படியே எப்பிராயீமின் மனிதர்கள் எல்லோரும் கூடி, பெத்தாபரா இருக்கும் யோர்தான் வரை வந்து, துறைமுகங்களைக் கைப்பற்றிக்கொண்டு,
\v 25 மீதியானியர்களின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் பிடித்து, ஓரேபை ஓரேப் என்னப்பட்ட கன்மலையிலும், சேபை சேப் என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுபோட்டு, மீதியானியர்களை துரத்தி, ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு இக்கரையிலிருந்த கிதியோனிடம் கொண்டுவந்தார்கள்.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 சேபாவும் சல்முனாவும்
\p
\v 1 அப்பொழுது எப்பிராயீம் மனிதர்கள் அவனை நோக்கி: நீ மீதியானியர்கள்மேல் யுத்தம் செய்யப்போகிறபோது, எங்களை அழைக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று, அவனோடு கடுமையாக வாக்குவாதம்செய்தார்கள்.
\s5
\v 2 அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியர்களின் திராட்சை பழத்தின் முழு அறுவடையை விட, எப்பிராயீமர்களின் மீதியான அறுவடை அதிகம் அல்லவா?
\v 3 தேவன் உங்கள் கையிலே மீதியானியர்களின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன் மேலிருந்த அவர்களுடைய கோபம் நீங்கினது.
\s5
\v 4 கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், களைப்பாக இருந்தும் (எதிரியை) பின்தொடர்ந்தார்கள்.
\v 5 அவன் சுக்கோத்தின் மனிதர்களை நோக்கி: என்னோடிருக்கிற மக்களுக்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் களைப்பாக இருக்கிறார்கள், நான் மீதியானியர்களின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.
\s5
\v 6 அதற்குச் சுக்கோத்தின் பிரபுக்கள்: உன் ராணுவத்திற்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன்னுடைய கைவசம் வந்ததோ என்றார்கள்.
\v 7 அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என்னுடைய கையில் ஒப்புக்கொடுக்கும்போது, உங்கள் சரீரத்தை வனாந்திரத்தின் நெரிஞ்சில்முள்ளுகளால் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,
\s5
\v 8 அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப் போய், அந்த ஊர்க்காரர்களிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனிதர்கள் பதில் சொன்னபடியே பெனூவேலின் மனிதர்களும் அவனுக்குச் சொன்னார்கள்.
\v 9 அப்பொழுது அவன், பெனூவேலின் மனிதர்களைப் பார்த்து: நான் சமாதானத்தோடு திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.
\s5
\v 10 சேபாவும் சல்முனாவும் அவர்களோடு அவர்களுடைய படைகளும் ஏறக்குறைய பதினைந்தாயிரம்பேர் கர்கோரில் இருந்தார்கள்; பட்டயம் உருவத்தக்கவர்கள் ஒரு லட்சத்து இருபதாயிரம்பேர் விழுந்தபடியால், கிழக்குப்பகுதி மக்கள் எல்லா ராணுவத்திலும் இவர்கள் மட்டும் மீதியாக இருந்தார்கள்.
\s5
\v 11 கிதியோன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்கள் வழியாக நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கில் போய், அந்த ராணுவம் பயமில்லை என்று இருந்தபோது, அதை முறியடித்தான்.
\v 12 சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியர்களின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, ராணுவம் முழுவதையும் கலங்கடித்தான்.
\s5
\v 13 யோவாசின் மகனான கிதியோன் யுத்தம்செய்து, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது,
\v 14 சுக்கோத்தின் மனிதர்களில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின் பிரபுக்களும் அதின் மூப்பர்களுமாகிய எழுபத்தேழு மனிதர்களின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான்.
\s5
\v 15 அவன் சுக்கோத்து ஊர்க்காரர்களிடத்தில் வந்து: இதோ, களைத்திருக்கிற உன் மனிதர்களுக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன்னுடைய கைவசம் வந்ததோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும் சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி,
\v 16 பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் நெரிஞ்சில்முள்ளுகளை கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனிதர்களுக்குப் புத்திவரசெய்து,
\v 17 பெனூவேலின் கோபுரத்தை இடித்து, அந்த ஊர் மனிதர்களையும் கொன்றுபோட்டான்.
\s5
\v 18 பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்றுபோட்ட அந்த மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போல் இருந்தான் என்றார்கள்.
\v 19 அப்பொழுது அவன்: அவர்கள் என்னுடைய சகோதரர்களும் என்னுடைய தாயின் பிள்ளைகளுமாக இருந்தார்கள்; அவர்களை உயிரோடே வைத்திருந்தீர்களானால். உங்களைக் கொல்லாதிருப்பேன் என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,
\s5
\v 20 தன்னுடைய மூத்தமகனான யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் தான் இளைஞனானபடியால் பயந்து தன்னுடைய பட்டயத்தை உருவாமல் இருந்தான்.
\v 21 அப்பொழுது சேபாவும் சல்முனாவும்: நீரே எழுந்து எங்களைக் கொல்லும்; மனிதன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த பொன்னால் அலங்கரிக்கப்பட்ட பிறை வடிவமான ஆபரணங்களை எடுத்துக்கொண்டான்.
\s1 கிதியோன் ஓர் ஏபோத்தை செய்தல்
\p
\s5
\v 22 அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர்கள் கைக்கு தப்புவித்தபடியால் நீரும் உம்முடைய மகனும், உம்முடைய மகனின் மகனும், எங்களை ஆண்டுகொள்ளக்கடவீர்கள் என்றார்கள்.
\v 23 அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என்னுடைய மகனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.
\s5
\v 24 பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலர்களாக இருந்தபடியால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.
\v 25 இஸ்ரவேலர்கள்: சந்தோஷமாகக் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு துணியை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.
\s5
\v 26 பிறை வடிவிலான ஆபரணங்களும், ஆரங்களும், மீதியானியர்களின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த விலையுயர்ந்த ஊதா நிற ஆடைகளும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சங்கலிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்தி எழுநூறு பொன் சேக்கலின் நிறையாக இருந்தது.
\s5
\v 27 அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன்னுடைய ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைத் தொழுதுகொண்டதால் விபச்சாரம் செய்தவர்களானார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியானது.
\s1 கிதியோனின் மரணம்
\p
\v 28 இப்படியாக மீதியானியர்கள் திரும்ப தலை தூக்காதபடி, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் நாற்பது வருடங்கள் அமைதியாக இருந்தது.
\s5
\v 29 யோவாசின் மகனான யெருபாகால் போய், தன்னுடைய வீட்டிலே வாழ்ந்து வந்தான்.
\v 30 கிதியோனுக்கு அநேகம் மனைவிகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான மகன்கள் எழுபதுபேர்.
\v 31 சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பெயரிட்டான்.
\s5
\v 32 பின்பு யோவாசின் மகனான கிதியோன் நல்ல முதிர்வயதிலே இறந்து, ஒப்ராவிலே தன்னுடைய தகப்பனான யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம்செய்யப்பட்டான்.
\v 33 கிதியோன் இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பவும் பாகால்களைத் தொழுதுகொண்டதால் விபச்சாரம் செய்தவர்களாகி, பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.
\s5
\v 34 இஸ்ரவேல் மக்கள் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லா எதிரிகளின் கைகளிலிருந்தும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்காமலும்,
\v 35 கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலிற்குச் செய்த எல்லா நன்மைகளுக்குத்தகுந்த தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 அபிமலேக்கு ராஜாவாகுதல்
\p
\v 1 யெருபாகாலின் மகன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன்னுடைய தாயினுடைய சகோதரர்களிடம் போய், அவர்களையும் தன்னுடைய தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:
\v 2 யெருபாகாலின் மகன்கள் எழுபதுபேரான எல்லோரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மட்டும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் சரீரமுமானவன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்றான்.
\s5
\v 3 அப்படியே அவன் தாயின் சகோதரர்கள் சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றும்படியாக மாறியது.
\v 4 அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனிதர்களை வேலைக்கு வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.
\s5
\v 5 அவன் ஒப்ராவிலிருக்கிற தன்னுடைய தகப்பன் வீட்டிற்குப் போய், யெருபாகாலின் மகன்களான தன்னுடைய சகோதரர்கள் எழுபது பேர்களையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய மகனான யோதாம் ஒளிந்திருந்தபடியால் அவன் தப்பினான்.
\v 6 பின்பு சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களும், மில்லோவின் குடும்பத்தார்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து போய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தின் அருகில் அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.
\s1 யோதாமின் கதை
\p
\s5
\v 7 இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறி நின்று, உரத்த சத்தமிட்டுக்கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனிதர்களே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.
\v 8 மரங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்செய்யும்படி போய், ஒலிவமரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.
\s5
\v 9 அதற்கு ஒலிவமரம்: தேவனையும் மனிதனையும் கனப்படுத்துகிற என்னிலுள்ள என்னுடைய எண்ணெயை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
\v 10 அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.
\v 11 அதற்கு அத்திமரம்: நான் என்னுடைய இனிமையையும் என்னுடைய நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
\s5
\v 12 அப்பொழுது மரங்கள் திராட்சை செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.
\v 13 அதற்குத் திராட்சை செடி: தெய்வங்களையும் மனிதர்களையும் மகிழச்செய்யும் என்னுடைய ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
\v 14 அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.
\s5
\v 15 அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம் செய்கிறது உண்மையானால், என்னுடைய நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுரு மரங்களை எரிக்கட்டும் என்றது.
\v 16 என்னுடைய தகப்பன் உங்களுக்காக யுத்தம்செய்து, தன்னுடைய ஜீவனை நினைக்காமற்போய், உங்களை மீதியானியர்களின் கையிலிருந்து காப்பாற்றினார்.
\s5
\v 17 நீங்களோ இன்று என்னுடைய தகப்பனுடைய குடும்பத்துக்கு எதிராக எழும்பி, அவருடைய மகன்களான எழுபதுபேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்து, அவருடைய வேலைக்காரியின் மகனான அபிமெலேக்கு உங்கள் சகோதரனானபடியால், அவனைச் சீகேம் பட்டணத்தார்களுக்கு ராஜாவாக்கினீர்கள்.
\v 18 இப்போதும் நீங்கள் அவனை ராஜாவாக்கின செய்கை உண்மையும் உத்தமமுமான செய்கையாக இருந்தால்,
\s5
\v 19 நீங்கள் யெருபாகாலையும் அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி, அவர் கைகளின் செய்கைக்குத் தகுந்ததை அவருக்குச் செய்து, இப்படி இந்த நாளில் அவரையும் அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாக இருக்குமானால், அபிமெலேக்கின்மேல் நீங்களும் சந்தோஷமாக இருங்கள்; உங்கள்மேல் அவனும் சந்தோஷமாக இருக்கட்டும்.
\v 20 இல்லாவிட்டால் அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தார்களையும், மில்லோவின் குடும்பத்தினரையும் எரிக்கவும், சீகேம் பட்டணத்தார்களிலும் மில்லோவின் குடும்பத்தினரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கை எரிப்பதாக என்று யோதாம் சொல்லி,
\v 21 தன்னுடைய சகோதரனான அபிமெலேக்குக்குப் பயந்து, தப்பியோடி, பேயேருக்குப் போய், அங்கே குடியிருந்தான்.
\s1 அபிமெலேக்கு சீகேமை எதிர்த்துப் போரிடுதல்
\p
\s5
\v 22 அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருடங்கள் அரசாண்டபின்பு,
\v 23 அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனிதர்களுக்கும் நடுவே தீங்கை உண்டாக்கும் ஆவியை தேவன் வரச்செய்தார்.
\v 24 யெருபாகாலின் எழுபது மகன்களுக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்தது, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனான அபிமெலேக்கின்மேலும், தன்னுடைய சகோதரர்களைக் கொல்ல அவனுடைய கைகளை பெலப்படுத்தின சீகேம் மனிதர்கள் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனிதர்கள் அபிமெலேக்குக்கு துரோகம் செய்தார்கள்.
\s5
\v 25 சீகேமின் மனிதர்கள் மலைகளின் உச்சியில் அவனுக்கு ஒளிந்திருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழிநடந்துபோகிற எல்லோரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.
\s5
\v 26 ஏபேதின் மகனான காகால் தன்னுடைய சகோதரர்களோடு சீகேமுக்குள் போனான்; சீகேமின் பெரிய மனிதர்கள் அவனை நம்பி,
\v 27 வெளியே புறப்பட்டு, தங்கள் திராட்சை தோட்டங்களின் பழங்களை அறுத்து, ஆலையில் ஆட்டி, ஆடிப்பாடி, தங்கள் தேவனின் வீட்டிற்குள் போய், புசித்துக்குடித்து, அபிமெலேக்கை சபித்தார்கள்.
\s5
\v 28 அப்பொழுது ஏபேதின் மகனான காகால்: அபிமெலேக்கு யார்? சீகேம் யார்? நாம் அவனுக்கு பணியாற்றவேண்டியது என்ன? அவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய காரியதரிசி அல்லவா? சீகேமின் தகப்பனான ஏமோரின் மனிதர்களையே பணிந்துகொள்ளுங்கள்; அவனை நாங்கள் பணிந்துகொள்வானேன்?
\v 29 இந்த மக்கள்மட்டும் என்னுடைய கைக்குள் இருக்கட்டும்; நான் அபிமெலேக்கைத் துரத்திவிடுவேன் என்றான். உன் படையைப் பெருகச்செய்துப் புறப்பட்டுவா என்று, அவன் அபிமெலேக்குக்குச் சொல்லியனுப்பினான்.
\s5
\v 30 பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் மகனான காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமடைந்து,
\v 31 இரகசியமாக அபிமெலேக்கினிடத்திற்கு ஆட்களை அனுப்பி: இதோ, ஏபேதின் மகனான காகாலும் அவனுடைய சகோதரர்களும் சீகேமுக்கு வந்திருக்கிறார்கள்; பட்டணத்தை உமக்கு எதிராக எழுப்புகிறார்கள்.
\s5
\v 32 ஆகையால் நீர் உம்மோடிருக்கும் மக்களோடு இரவில் எழுந்து வந்து வெளியிலே ஒளிந்திருந்து,
\v 33 காலையில் சூரியன் உதிக்கும்போது எழுந்து, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற மக்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, நீர் செய்ய நினைத்ததை அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான்.
\s5
\v 34 அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த எல்லா மக்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு எதிராக நான்கு படைகளாக ஒளிந்திருந்தார்கள்.
\v 35 ஏபேதின் மகன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் நுழைவுவாயிலில் நின்றான்; அப்பொழுது ஒளிந்திருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற மக்களோடு எழும்பி வந்தான்.
\s5
\v 36 காகால் அந்த மக்களைப் பார்த்து: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து மக்கள் இறங்கி வருகிறார்கள் என்று சேபூலோடு சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைப் பார்த்து, மனிதர்கள் என்று நினைக்கிறாய் என்றான்.
\v 37 காகாலோ திரும்பவும்: இதோ, மக்கள் தேசத்தின் மத்தியிலிருந்து இறங்கிவந்து, ஒரு படை மெயொனெனீமின் கர்வாலிமரத்தின் வழியாக வருகிறது என்றான்.
\s5
\v 38 அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் பணிந்துகொள்வதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன்னுடைய வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த மக்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடு யுத்தம்செய் என்றான்.
\v 39 அப்பொழுது காகால் சீகேமின் மனிதர்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடு யுத்தம்செய்தான்.
\v 40 அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல்வரை அநேகர் வெட்டப்பட்டு விழுந்தார்கள்.
\s5
\v 41 அபிமெலேக்கு அருமாவில் இருந்து விட்டான்; சேபூல் காகாலையும் அவனுடைய சகோதரர்களையும் சீகேமிலே குடியிருக்கவிடாதபடி துரத்திவிட்டான்.
\v 42 மறுநாளிலே மக்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
\v 43 அவன் மக்களைக்கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படைகளாக பிரித்து, வெளியிலே ஒளிந்திருந்து, அந்த மக்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிறதைப் பார்த்து, அவர்களைத் தாக்கிக் கொன்றான்.
\s5
\v 44 அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் நுழைவுவாயிலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற அனைவரையும் தாக்கி, அவர்களைக் கொன்றார்கள்.
\v 45 அபிமெலேக்கு அந்த நாள் முழுதும் பட்டணத்தின்மேல் யுத்தம்செய்து, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த மக்களைக்கொன்று, பட்டணத்தை இடித்துவிட்டு, அதில் உப்பு விதைத்தான்.
\s5
\v 46 அதைச் சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் கோட்டைக்குள் நுழைந்தார்கள்.
\v 47 சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் அங்கே கூடியிருக்கிறது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
\s5
\v 48 அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா மக்களோடும் சல்மோன் மலையில் ஏறி, தன்னுடைய கையிலே கோடாரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கிளையை வெட்டி, அதை எடுத்து, தன்னுடைய தோளின்மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த மக்களைப் பார்த்து: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் விரைவாக என்னைப்போலச் செய்யுங்கள் என்றான்.
\v 49 அப்படியே எல்லா மக்களும் அவரவர் ஒவ்வொரு கிளைகளை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று, அவைகளை அந்தக் கோட்டைக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த கோட்டையை எரித்துப்போட்டார்கள்; அதினால் ஆண்களும் பெண்களும் ஏறக்குறைய ஆயிரம்பேரான சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் இறந்தார்கள்.
\s1 அபிமெலேக்கின் மரணம்
\p
\s5
\v 50 பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப் போய், அதற்கு எதிராக முகாமிட்டு, அதைப் பிடித்தான்.
\v 51 அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த கோபுரம் இருந்தது; அங்கே எல்லா ஆண்களும் பெண்களும் பட்டணத்து மனிதர்கள் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, கோபுரத்தின்மேல் ஏறினார்கள்.
\s5
\v 52 அபிமெலேக்கு அந்த கோபுரம்வரை வந்து, அதின்மேல் யுத்தம்செய்து, கோபுரத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படி, வாசலின் அருகே வந்தான்.
\v 53 அப்பொழுது ஒரு பெண் ஒரு மாவரைக்கும் கல்லின் துண்டை அபிமெலேக்குடைய தலையின்மேல் போட்டாள்; அது அவனுடைய மண்டையை உடைத்தது.
\v 54 உடனே அவன் தன்னுடைய ஆயுதம் ஏந்திய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு பெண் என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடி, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு என்று அவனோடு சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை, பட்டயம் மறுபக்கம் துளையிட்டு வெளியேறுமாறு குத்தினான், அவன் இறந்துப்போனான்.
\s5
\v 55 அபிமெலேக்கு இறந்துப்போனதை இஸ்ரவேல் மனிதர்கள் பார்த்தபோது, அவர்கள் தங்கள்தங்கள் இடங்களுக்குப் போய் விட்டார்கள்.
\v 56 இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரர்களைக் கொலை செய்ததால், தன்னுடைய தகப்பனுக்குச் செய்த தீங்கை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.
\v 57 சீகேம் மனிதர்கள் செய்த எல்லா தீமையையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின் மகன் யோதாமின் சாபம் அவர்களுக்குப் பலித்தது.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 நியாயாதிபதியாகிய தோலா
\p
\v 1 அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனான பூவாவின் மகன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை காப்பாற்ற எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.
\v 2 அவன் இஸ்ரவேலை இருபத்துமூன்று வருடங்கள் நியாயம் விசாரித்து, பின்பு இறந்து, சாமீரிலே அடக்கம்செய்யப்பட்டான்.
\s1 நியாயாதிபதியாகிய யாவீர்
\p
\s5
\v 3 அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
\v 4 முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது மகன்கள் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்த நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்கள் என்கிற பெயர் இருக்கிறது.
\v 5 யாவீர் இறந்து, காமோனிலே அடக்கம்செய்யப்பட்டான்.
\s1 அம்மோனியர் இஸ்ரவேலரை எதிர்த்துப் போரிடுதல்
\p
\s5
\v 6 இஸ்ரவேல் மக்கள், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானவைகளைச் செய்து, கர்த்தரை வணங்காமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தெய்வங்களையும், சீதோனின் தெய்வங்களையும், மோவாபின் தெய்வங்களையும், அம்மோன் மக்களின் தெய்வங்களையும், பெலிஸ்தர்களின் தெய்வங்களையும் தொழுதுகொண்டார்கள்.
\v 7 அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமடைந்து, அவர்களைப் பெலிஸ்தர்கள் கையிலும், அம்மோனியர்களின் கையிலும் ஒப்புக்கொடுத்தார்.
\s5
\v 8 அவர்கள் அந்த ஆண்டுமுதல் பதினெட்டு வருடங்களாக யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியர்களின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் மக்களையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.
\v 9 அம்மோனியர்கள் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தினர்மேலும் யுத்தம்செய்ய யோர்தானைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர்கள் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
\s5
\v 10 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்களுடைய தேவனைவிட்டு, பாகால்களைத் தொழுதுகொண்டோம் என்றார்கள்.
\v 11 கர்த்தர் இஸ்ரவேல் மக்களை நோக்கி: எகிப்தியர்களும், எமோரியர்களும், அம்மோனியர்களும், பெலிஸ்தர்களும்,
\v 12 சீதோனியர்களும், அமலேக்கியர்களும், மாகோனியர்களும், உங்களை ஒடுக்கும் நேரங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்களுடைய கைக்கு விலக்கி இரட்சிக்கவில்லையா?
\s5
\v 13 அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தெய்வங்களை ஆராதனை செய்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சிக்கமாட்டேன்.
\v 14 நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தெய்வங்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்களுடைய ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.
\s5
\v 15 இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமட்டும் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,
\v 16 அந்நிய தெய்வங்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் துயரத்தைப் பார்த்து மனதுருகினார்.
\s1 யெப்தா தலைவனாக தேர்ந்தெடுக்கப்படுதல்
\p
\s5
\v 17 அம்மோனியர்கள் கூட்டங்கூடி, கீலேயாத்திலே முகாமிட்டார்கள்; இஸ்ரவேல் மக்களும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே முகாமிட்டார்கள்.
\v 18 அப்பொழுது கீலேயாத்தின் மக்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோனியர்கள்மேல் முதலில் யுத்தம்செய்யப்போகிற மனிதன் யார்? அவனே கீலேயாத்தின் குடியிருப்புகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பான் என்றார்கள்.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\p
\v 1 கீலேயாத்தியனான யெப்தா வல்லமையுள்ள வீரனாக இருந்தான்; அவன் வேசியின் மகன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.
\v 2 கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் மகன்களைப் பெற்றாள்; அவனுடைய மனைவி பெற்ற மகன்கள் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்களுடைய தகப்பன் வீட்டிலே சொத்து இல்லை; நீ அந்நிய பெண்ணின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.
\v 3 அப்பொழுது யெப்தா: தன்னுடைய சகோதரர்களை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனிதர்கள் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடு யுத்தத்திற்குப் போவார்கள்.
\s5
\v 4 சிலநாட்களுக்குப்பின்பு, அம்மோனிய மக்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்.
\v 5 அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்யும்போது கீலேயாத்தின் மூப்பர்கள் யெப்தாவைத் தோப் தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,
\v 6 யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய எங்களுடைய தளபதியாக இருக்கவேண்டும் என்றார்கள்.
\s5
\v 7 அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என்னுடைய தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து சம்பவித்திருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.
\v 8 அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களோடு வந்து, அம்மோன் மக்களோடு யுத்தம்செய்து, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாக இருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடம் வந்தோம் என்றார்கள்.
\s5
\v 9 அதற்கு யெப்தா: அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை எனக்கு முன்பாக ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாக வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.
\v 10 கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன்னுடைய வார்த்தையின்படியே செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுவாக நின்று கேட்பாராக என்றார்கள்.
\s1 அம்மோனிய ஜனங்களின் அரசனுக்கு யெப்தாவின் செய்தி
\p
\v 11 அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பர்களோடு போனான்; மக்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் தளபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன்னுடைய காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான்.
\s5
\v 12 பின்பு யெப்தா அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நீ என்னுடைய தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்செய்ய வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச் சொன்னான்.
\v 13 அம்மோன் மக்களின் ராஜா யெப்தாவின் தூதுவர்களை நோக்கி: இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவங்கி யாபோக், யோர்தான்வரை இருக்கிற என்னுடைய தேசத்தைக் பிடித்துக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாகத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்.
\s5
\v 14 யெப்தா மறுபடியும் அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது:
\v 15 யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் தேசத்தையாகிலும், அம்மோன் மக்களின் தேசத்தையாகிலும் பிடித்துக்கொண்டதில்லையே.
\v 16 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்திரத்தில் சிவந்த சமுத்திரம்வரை நடந்து, பின்பு காதேசுக்கு வந்து,
\s5
\v 17 இஸ்ரவேலர்கள் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாயகக் கடந்துபோகிறோம்என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர்கள் காதேசிலே தங்கியிருந்து,
\v 18 பின்பு வனாந்திரவழியாக நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கேவந்து, மோவாபின் எல்லைக்குள் நுழையாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே முகாமிட்டார்கள்.
\s5
\v 19 அப்பொழுது இஸ்ரவேலர்கள் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியர்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாக எங்களுடைய இடத்திற்கு கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள்.
\v 20 சீகோன் இஸ்ரவேலர்களை நம்பாததால், தன்னுடைய எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன்னுடைய மக்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே முகாமிட்டு, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான்.
\s5
\v 21 அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சீகோனையும் அவனுடைய எல்லா மக்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர்கள் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியர்களின் நாடுகளையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி,
\v 22 யாபோக்வரை, வனாந்திரம் துவக்கி யோர்தான்வரை இருக்கிற எமோரியரின் எல்லைகளையெல்லாம் சொந்தமாக பிடித்துக்கொண்டார்கள்.
\s5
\v 23 இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியர்களை தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலிற்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தை பிடித்துக்கொள்ளமுடியுமா?
\v 24 உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் பிடித்துக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் பிடித்துக்கொள்கிறோம்.
\v 25 மேலும் சிப்போரின் மகனான பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைவிட உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலர்களோடு எப்போதாவது வாதாடினானா? எப்போதாவது அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்தானா?
\s5
\v 26 இஸ்ரவேலர்கள் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியின் அருகே எல்லா ஊர்களிலும், முந்நூறு வருடங்கள் குடியிருக்கும்போது, இவ்வளவு காலமாக நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாமல் போனதென்ன?
\v 27 நான் உமக்கு எதிராகக் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு எதிராக யுத்தம்செய்கிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் மக்களுக்கும் அம்மோன் மக்களுக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.
\v 28 ஆனாலும் அம்மோன் மக்களின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளை கேட்காமற்போனான்.
\s1 யெப்தாவின் பொருத்தனை
\p
\s5
\v 29 அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் மக்களுக்கு எதிராகப் போனான்.
\v 30 அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைச் செய்து: தேவரீர் அம்மோன் மக்களை என் கையில் ஒப்புக்கொடுத்தால்,
\v 31 நான் அம்மோன் மக்களிடத்திலிருந்து சமாதானத்தோடு திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.
\s5
\v 32 யெப்தா அம்மோன் மக்களின்மேல் யுத்தம்செய்ய, அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
\v 33 அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகும்வரை, திராட்சைத் தோட்டத்து நிலங்கள்வரைக்கும், பேரழிவாக முறியடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் மக்கள் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.
\s5
\v 34 யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன்னுடைய வீட்டிற்கு வருகிறபோது, இதோ, அவன் மகள் தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளை; அவளைத்தவிர அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை.
\v 35 அவன் அவளைப் பார்த்தவுடனே தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனவேதனை அடையவும் கலங்கவும் செய்கிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான்.
\s5
\v 36 அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் மக்களாகிய உம்முடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்.
\v 37 பின்னும் அவள் தன்னுடைய தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என்னுடைய தோழிகளும் என்னுடைய கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டு மாதங்கள் தவணைகொடும் என்றாள்.
\s5
\v 38 அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன்னுடைய தோழிகளோடு போய்த் தன்னுடைய கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,
\v 39 இரண்டு மாதம் முடிந்தபின்பு, தன்னுடைய தகப்பனிடம் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் செய்திருந்த தன்னுடைய பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் திருமணம் ஆகாதவளாக இருந்தாள்.
\v 40 இதினிமித்தம் இஸ்ரவேலின் மகள்கள் வருடந்தோறும் போய், நான்கு நாட்கள் கீலேயாத்தியனான யெப்தாவின் மகளைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமானது.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\s1 யெப்தாவும் எப்பிராயீமும்
\p
\v 1 எப்பிராயீம் மனிதர்கள் ஒன்றாகக் கூடி வடக்கே புறப்பட்டுப்போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடு வரும்படி அழைக்காமல் அம்மோனியர்கள்மேல் யுத்தம்செய்யப்போனதென்ன? உன்னுடைய வீட்டையும் உன்னையும் அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள்.
\v 2 அதற்கு யெப்தா: எனக்கும் என்னுடைய மக்களுக்கும் அம்மோனியர்களோடு பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு விலக்கி காப்பாற்றவில்லை.
\s5
\v 3 நீங்கள் என்னை காப்பாற்றவில்லை என்று நான் பார்த்தபோது, நான் என்னுடைய ஜீவனை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் மக்களுக்கு எதிராகப்போனேன்; கர்த்தர் அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்செய்ய, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.
\v 4 பின்பு யெப்தா கீலேயாத் மனிதர்களையெல்லாம் கூட்டி, எப்பிராயீமர்களோடு யுத்தம்செய்தான்; எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியர்களான நீங்கள் எப்பிராயீமைவிட்டு ஓடிப்போனவர்கள் என்று எப்பிராயீமர்கள் சொன்னபடியினால், கீலேயாத் மனிதர்கள் அவர்களை முறியடித்தார்கள்.
\s5
\v 5 கீலேயாத்தியர்கள் எப்பிராயீமர்களை முந்தி யோர்தானின் துறைமுகங்களைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமர்களிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனிதர்கள்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால்,
\v 6 நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்கக்கூடாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறைமுகத்திலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்திரண்டாயிரம்பேர் இறந்தார்கள்.
\s5
\v 7 யெப்தா இஸ்ரவேலை ஆறு வருடங்கள் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா இறந்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம்செய்யப்பட்டான்.
\s1 நியாயாதிபதியாகிய இப்சான்
\p
\s5
\v 8 அவனுக்குப்பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
\v 9 அவனுக்கு முப்பது மகன்களும் முப்பது மகள்களும் இருந்தார்கள்; முப்பது மகள்களையும் வேறு இனத்திலே திருமணம் செய்துகொடுத்து, தன்னுடைய மகன்களுக்கு முப்பது பெண்களை வேறு இனத்திலிருந்து எடுத்தான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
\s5
\v 10 பின்பு இப்சான் இறந்து, பெத்லெகேமிலே அடக்கம்செய்யப்பட்டான்.
\s1 நியாயாதிபதியாகிய ஏலோன்
\p
\v 11 அவனுக்குப் பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
\v 12 பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இறந்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம் செய்யப்பட்டான்.
\s1 நியாயாதிபதியாகிய அப்தோன்
\p
\s5
\v 13 அவனுக்குப்பின்பு இல்லேலின் மகனான பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
\v 14 அவனுக்கு நாற்பது மகன்களும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
\v 15 பின்பு பிரத்தோனியனான இல்லேலின் மகனான அப்தோன் இறந்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம்செய்யப்பட்டான்.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 சிம்சோனின் பிறப்பு
\p
\v 1 இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்கு தீமையானதைச் செய்ததால், கர்த்தர் அவர்களை நாற்பது வருடங்கள் வரை பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
\v 2 அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனிதன் இருந்தான்; அவன் பெயர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.
\s5
\v 3 கர்த்தருடைய தூதன் அந்த பெண்ணுக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.
\v 4 ஆதலால் நீ திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காதபடிக்கும், தீட்டானது ஒன்றும் சாப்பிட்டாதபடிக்கும் எச்சரிக்கையாக இரு.
\v 5 நீ கர்ப்பம் தரித்து, ஒரு மகனைப் பெறுவாய்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படவேண்டாம்; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றத் தொடங்குவான் என்றார்.
\s5
\v 6 அப்பொழுது அந்தப் பெண் தன்னுடைய கணவனிடம் வந்து: தேவனுடைய மனிதன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாக இருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.
\v 7 அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பம் தரித்து, ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; ஆதலால் நீ திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காமலும், தீட்டானது ஒன்றும் சாப்பிடாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன்னுடைய மரணநாள்வரை தேவனுக்கென்று நசரேயனாக இருப்பான் என்று சொன்னார் என்றாள்.
\s5
\v 8 அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்து: ஆ, என்னுடைய ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனிதன் மறுபடியும் ஒருமுறை எங்களிடம் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்.
\v 9 தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்தப் பெண் வயல்வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் கணவனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை.
\s5
\v 10 ஆகையால் அந்தப் பெண் சீக்கிரமாய் ஓடி, இதோ, அன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானார் என்று தன்னுடைய கணவனுக்கு அறிவித்தாள்.
\v 11 அப்பொழுது மனோவா எழுந்து, தன்னுடைய மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்தப் பெண்ணோடு பேசியவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான்தான் என்றார்.
\s5
\v 12 அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.
\v 13 கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் அந்தப் பெண்ணோடே சொன்ன எல்லாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,
\v 14 திராட்சைச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காமலும், தீட்டானதொன்றும் சாப்பிடாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கடைபிடிக்கட்டும் என்றார்.
\s5
\v 15 அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காக சமைத்துக் கொண்டுவரும்வரை தங்கியிரும் என்றான்.
\v 16 கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன்னுடைய உணவை சாப்பிடமாட்டேன்; நீ சர்வாங்க தகனபலி செலுத்தவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.
\s5
\v 17 அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மை மரியாதை செய்யும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.
\v 18 அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.
\s5
\v 19 மனோவா போய், வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவனுடைய மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அதிசயம் வெளிப்பட்டது.
\v 20 அக்கினிஜூவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜூவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் பார்த்து, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.
\s5
\v 21 பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,
\v 22 தன்னுடைய மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், நிச்சயமாக மரிப்போம்என்றான்.
\s5
\v 23 அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்கதகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.
\s5
\v 24 பின்பு அந்தப் பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.
\v 25 அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் முகாமில் இருக்கும்போது கர்த்தருடைய ஆவியானவர் அவனை தூண்டத்தொடங்கினார்.
\s5
\c 14
\cl அத்தியாயம்– 14
\s1 சிம்சோனின் திருமணம்
\p
\v 1 சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தர்களின் மகள்களில் ஒரு பெண்ணைப் பார்த்து,
\v 2 திரும்ப வந்து, தன்னுடைய தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தர்களின் மகள்களில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்; அவளை எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான்.
\s5
\v 3 அப்பொழுது அவனுடைய தாயும் அவனுடைய தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தர்களிடத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவேண்டியதென்ன? உன்னுடைய சகோதரர்களின் மகள்களிலும், எங்கள் மக்கள் அனைவரிலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன்னுடைய தகப்பனை நோக்கி: அவள் என்னுடைய கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான்.
\v 4 அவன் பெலிஸ்தர்களிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவனுடைய தாயும் தகப்பனும் அறியாமல் இருந்தார்கள்: அக்காலத்திலே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலை ஆண்டார்கள்.
\s5
\v 5 அப்படியே சிம்சோனும் அவனுடைய தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சைத் தோட்டங்கள் வரை வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற இளம் சிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.
\v 6 அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன்னுடைய கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன்னுடைய தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
\s5
\v 7 அவன் போய் அந்தப் பெண்ணோடு பேசினான்; அவள் சிம்சோனின் கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள்.
\v 8 சில நாட்களுக்குப்பின்பு, அவன் அவளைத் திருமணம் செய்யத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப்போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.
\v 9 அவன் அதைத் தன்னுடைய கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன்னுடைய தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள்; ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.
\s5
\v 10 அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன் அங்கே விருந்துசெய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம்.
\v 11 அவர்கள் அவனைப் பார்த்தபோது, அவனோடு இருக்கும்படி முப்பது நண்பர்களை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
\s5
\v 12 சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்து சாப்பிடுகிற ஏழுநாட்களுக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது மேலாடைகளையும் முப்பது மாற்று உடைகளையும் கொடுப்பேன்.
\v 13 அதை எனக்கு விடுவிக்காமல் போனால், நீங்கள் எனக்கு முப்பது மேலாடைகளையும் முப்பது மாற்று உடைகளையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கிறோம் என்றார்கள்.
\s5
\v 14 அப்பொழுது அவன்: பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்று நாட்கள்வரை விடுவிக்கமுடியாமற்போனது.
\s5
\v 15 ஏழாம்நாளிலே அவர்கள் சிம்சோனின் மனைவியைப் பார்த்து: உன்னுடைய கணவன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படி நீ அவனை வசப்படுத்து; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் அக்கினியால் எரித்துப்போடுவோம்; எங்களுடையவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள்.
\s5
\v 16 அப்பொழுது சிம்சோனின் மனைவி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசிக்காமல் என்னைப் பகைக்கிறாய், என்னுடைய மக்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என்னுடைய தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான்.
\v 17 விருந்து சாப்பிடுகிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம் நாளிலே அவள் அவனை தொல்லை செய்துக்கொண்டிருந்ததினால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன்னுடைய மக்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.
\s5
\v 18 ஆகையால் ஏழாம் நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனிதர்கள் அவனைப் பார்த்து: தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என்னுடைய விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.
\s5
\v 19 கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கியதானால், அவன் அஸ்கலோனுக்குப் போய், அந்த ஊர் மக்களில் முப்பதுபேரைக் கொன்று, அவர்களுடைய ஆடைகளை எடுத்துக்கொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று ஆடைகளைக் கொடுத்து, கோபம் வந்தவனாகப் புறப்பட்டு, தன்னுடைய தகப்பன் வீட்டிற்குப் போய்விட்டான்.
\v 20 சிம்சோனின் மனைவியோ, அவனுடைய நண்பர்களில் அவனோடு சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.
\s5
\c 15
\cl அத்தியாயம்– 15
\s1 சிம்சோன் பெலிஸ்தியர்களுக்குத் தொல்லை கொடுத்தல்
\p
\v 1 சிலநாட்கள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன்னுடைய மனைவியைப் பார்க்கப்போய்: நான் என்னுடைய மனைவியின் அறைக்குள் போகவேண்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளேபோகவிடாமல்:
\v 2 நீ அவளை முழுவதும் பகைத்துவிட்டாய் என்று நான் நினைத்து, அவளை உன்னுடைய நண்பனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன்; அவளுடைய தங்கை அவளைவிட அழகானவள் அல்லவா, அவளுக்குப் பதிலாக இவள் உனக்கு இருக்கட்டும் என்று சொன்னான்.
\s5
\v 3 அப்பொழுது சிம்சோன்: நான் பெலிஸ்தர்களுக்குப் பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி,
\v 4 புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடு வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக்கட்டி,
\s5
\v 5 பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தர்களின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சை தோட்டங்களையும் ஒலிவ தோப்புக்களையும் சுட்டெரித்துப்போட்டான்.
\v 6 இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர்கள் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனான சிம்சோன்தான்; அவனுடைய மனைவியை அவனுடைய நண்பனுக்குத் திருமணம் செய்துகொடுத்ததினால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.
\s5
\v 7 அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்காமல் ஓயமாட்டேன் என்று சொல்லி,
\v 8 அவர்களைத் தொடையிலும் இடுப்பிலுமாக துண்டுதுண்டாக வெட்டி, பின்பு போய், ஏத்தாம் ஊர்க் கன்மலைக் குகையில் குடியிருந்தான்.
\s5
\v 9 அப்பொழுது பெலிஸ்தர்கள் போய், யூதாவிலே முகாமிட்டு, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள்.
\v 10 நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனிதர்கள் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள்.
\s5
\v 11 அப்பொழுது யூதாவிலே மூவாயிரம்பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைக் குகைக்குப் போய்: பெலிஸ்தர்கள் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.
\s5
\v 12 அப்பொழுது அவர்கள்: உன்னைக்கட்டி, பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்குச் சிம்சோன்: நீங்கள் என்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள் என்றான்.
\v 13 அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்.
\s5
\v 14 அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர்கள் அவனுக்கு எதிராக ஆரவாரம் செய்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாக இறங்கினதால், அவனுடைய புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவனுடைய கைகளைவிட்டு அறுந்துபோயின.
\s5
\v 15 உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கண்டு, தன்னுடைய கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம்பேரைக் கொன்றுபோட்டான்.
\v 16 அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடை எலும்பினால் குவியல் குவியலாக இறந்துக்கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான்.
\s5
\v 17 அப்படிச் சொல்லிமுடிந்தபின்பு, தன்னுடைய கையில் இருந்த தாடை எலும்பை எறிந்துவிட்டு, அந்த இடத்திற்கு ராமாத்லேகி என்று பெயரிட்டான்.
\v 18 அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருந்தசேதனம் பண்ணப்படாதவர்களின் கைகளினால் சாகவேண்டுமோ என்றான்.
\s5
\v 19 அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கச்செய்தார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவனுடைய உயிர் திரும்ப வந்தது, அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பெயரிட்டான்; அது இந்த நாள்வரையும் லேகியில் இருக்கிறது.
\v 20 அவன் பெலிஸ்தர்களின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
\s5
\c 16
\cl அத்தியாயம்– 16
\s1 காசா என்னும் நகருக்கு சிம்சோன் செல்லுதல்
\p
\v 1 பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு விபச்சாரியை கண்டு, அவளிடம் போனான்.
\v 2 அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊர்க்காரர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை சுற்றிவளைத்து இரவுமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் காத்திருந்து இரவு முழுவதும் பேசாமல் இருந்தார்கள்.
\s5
\v 3 சிம்சோன் நடுஇரவுவரை படுத்திருந்து, நடுஇரவில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடுப் பெயர்த்து, தன்னுடைய தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்துகொண்டுபோனான்.
\s1 சிம்சோனும் தெலீலாளும்
\p
\s5
\v 4 அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணோடு அன்பாயிருந்தான்.
\v 5 அவளிடத்திற்கு பெலிஸ்தர்களின் அதிபதிகள் போய்: நீ அவனை வசப்படுத்தி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டி பலவீனப்படுத்துவதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்துநூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்.
\s5
\v 6 அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன்னுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது. உன்னை பலவீனப்படுத்த, உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ என்னிடம் சொல்லவேண்டும் என்றாள்.
\v 7 அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு வில்நார்க் கயிறுகளினாலே என்னைக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான்.
\s5
\v 8 அப்பொழுது பெலிஸ்தர்களின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு வில்நார்க் கயிறுகளை அவளிடம் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள்.
\v 9 மறைந்திருக்கிறவர்கள் உள் அறையிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல்நூலானது நெருப்புப் பட்டவுடனே அறுந்துபோகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவனுடைய பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று அவர்களால் அறிந்துகொள்ளமுடியவில்லை.
\s5
\v 10 அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னை ஏமாற்றி, எனக்கு பொய் சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று என்னிடம் சொல்லவேண்டும் என்றாள்.
\v 11 அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் பயன்படுத்தாமலிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான்.
\v 12 அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக்கட்டி: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்: மறைந்திருக்கிறவர்கள் உள் அறையில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன்னுடைய புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.
\s5
\v 13 பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னை ஏமாற்றி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினால் கட்டலாம் என்று நீ என்னிடம் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன்: நீ என்னுடைய தலைமுடியின் ஏழு ஜடைகளை நெசவுநூல் தறியோடு பின்னிவிட்டால் மற்ற மனிதர்களைப்போல் ஆவேன் என்றான்.
\v 14 அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு எழுந்து, நெசவு ஆணியையும் தறியையும் பிடுங்கிக்கொண்டு போனான்.
\s5
\v 15 அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன்னுடைய இருதயம் என்னோடு இல்லாமலிருக்க, உன்னை நேசிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுமுறைகளும் என்னைப் பரியாசம் செய்தாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று என்னிடம் சொல்லாமல் போனாயே என்று சொல்லி,
\v 16 இப்படி அவனைத் தினம்தினம் தன்னுடைய வார்த்தைகளினாலே நெருக்கி தொந்தரவுசெய்தபடியால், சாகத்தக்கதாக அவனுடைய ஆத்துமா துக்கப்பட்டு,
\s5
\v 17 தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என்னுடைய தலையின்மேல் படவில்லை; நான் என்னுடைய தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என்னுடைய தலைசிரைக்கப்பட்டால், என்னுடைய பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலவீனனாகி, மற்ற எல்லா மனிதர்களைப்போல ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.
\s5
\v 18 அவன் தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதை தெலீலாள் கேட்டபோது, அவள் பெலிஸ்தர்களின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருமுறை வாருங்கள், அவன் தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் என்னிடத்தில் வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தர்களின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் வந்தார்கள்.
\v 19 அவள் அவனைத் தன்னுடைய மடியிலே தூங்கவைத்து, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைத்து, அவனை பலவீனப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கியது.
\s5
\v 20 அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.
\v 21 பெலிஸ்தர்கள் அவனைப் பிடித்து, அவனுடைய கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைக்க வைத்தார்கள்.
\v 22 அவனுடைய தலைமுடி சிரைக்கப்பட்டப்பின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கியது.
\s1 சிம்சோனின் மரணம்
\p
\s5
\v 23 பெலிஸ்தர்களின் பிரபுக்கள்: நம்முடைய எதிரியாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்களுடைய தெய்வமாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடிவந்தார்கள்.
\v 24 மக்கள் அவனைப் பார்த்தவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய எதிரியை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்களுடைய தேவனைப் புகழ்ந்தார்கள்.
\s5
\v 25 இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாக இருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைககாட்டுவதற்கு, சிம்சோனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து அழைத்துக்கொண்டு வந்தார்கள், அவர்களுக்கு முன்பாக வேடிக்கைக் காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.
\v 26 சிம்சோன் தன்னுடையக் கையைப் பிடித்து நடத்துகிற சிறுவனோடு, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கவேண்டும் என்றான்.
\s5
\v 27 அந்த வீடு ஆண்களாலும், பெண்களாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தர்களின் எல்லா பிரபுக்களும், வீட்டின்மேல் ஆண்களும் பெண்களுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
\s5
\v 28 அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என்னுடைய இரண்டு கண்களுக்காக ஒரே முடிவாகப் பெலிஸ்தர்கள் கையிலே பழிவாங்கும்படி, இந்த ஒருமுறைமட்டும் என்னை நினைத்தருளும், தேவனே பெலப்படுத்தும் என்று சொல்லி,
\v 29 சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன்னுடைய வலதுகையினாலும், மற்றொன்றைத் தன்னுடைய இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,
\s5
\v 30 என்னுடைய ஜீவன் பெலிஸ்தர்களோடு மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா மக்கள்மேலும் விழுந்தது; இப்படி அவன் உயிரோடிருக்கும்போது அவனால் கொல்லப்பட்டவர்களைவிட, அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
\v 31 பின்பு அவன் சகோதரர்களும், அவன் தகப்பனுடைய வீட்டார் அனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவனுடைய தகப்பனான மனோவாவின் கல்லறையில் அடக்கம்செய்தார்கள். அவன் இஸ்ரவேலை இருபது வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
\s5
\c 17
\cl அத்தியாயம்– 17
\s1 மீகாவின் விக்கிரகங்கள்
\p
\v 1 எப்பீராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பெயருள்ள ஒரு மனிதன் இருந்தான்.
\v 2 அவன் தன்னுடைய தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு திருட்டுபோனதே, அதைக் குறித்து என்னுடைய காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.
\s5
\v 3 அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன்னுடைய தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டாக்க, நான் என்னுடைய கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முழுவதும் கர்த்தருக்கென்று நியமித்தேன்; இப்போதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்.
\v 4 அவன் அந்த வெள்ளியைத் தன்னுடைய தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, கொல்லன் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் செய்தான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.
\s5
\v 5 மீகா, சிலைகளுக்கு ஒரு வீட்டை ஏற்படுத்தி வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும், சிலைகளையும் உண்டாக்கி, தன்னுடைய மகன்களில் ஒருவனை அர்ப்பணம் செய்தான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான்.
\v 6 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானபடி செய்துவந்தான்.
\s5
\v 7 யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊர்க்காரனும் லேவியனுமான ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான்;
\v 8 அந்த மனிதன் எங்கேயாவது போய்த் தங்கும்படி, யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பயணம்போகும்போது, எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான்.
\v 9 எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாவது போய்த் தங்கப்போகிறேன் என்றான்.
\s5
\v 10 அப்பொழுது மீகா: நீ என்னிடத்தில் இரு, நீ எனக்குத் தகப்பனும் ஆசாரியனுமாக இருப்பாய்; நான் உனக்கு வருடத்திலே பத்து வெள்ளிக்காசையும், மாற்று ஆடைகளையும், உனக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுப்பேன் என்று அவனிடத்தில் சொன்னான்; அப்படியே லேவியன் உள்ளே போனான்.
\v 11 அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவனுடைய மகன்களில் ஒருவனைப்போல் இருந்தான்.
\s5
\v 12 மீகா அந்த லேவியனைப் புனிதமான வேலைக்கு அர்ப்பணம் செய்தான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி, மீகாவின் வீட்டில் இருந்தான்.
\v 13 அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மை செய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.
\s5
\c 18
\cl அத்தியாயம்– 18
\s1 லாயீசு நகரத்தை தாண் கைப்பற்றுதல்
\p
\v 1 அந்த நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார்கள் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குப் பங்கு தேடினார்கள்; அந்த நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போதிய பங்கு கிடைக்கவில்லை.
\v 2 ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் மக்கள் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனிதர்களாகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலும் இருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுவரை போய், அங்கே இரவு தங்கினார்கள்.
\s5
\v 3 அவர்கள் மீகாவின் வீட்டின் அருகில் இருக்கும்போது லேவியனான வாலிபனுடைய சத்தத்தை அறிந்து, அங்கே அவனிடத்தில் போய்: உன்னை இங்கே அழைத்து வந்தது யார்? இவ்விடத்தில் என்ன செய்கிறாய்? உனக்கு இங்கே என்ன இருக்கிறது என்று அவனிடத்தில் கேட்டார்கள்.
\v 4 அதற்கு அவன்: இன்ன இன்னபடி மீகா எனக்குச் செய்தான்; என்னை சம்பளத்திற்கு பணியமர்த்தினான்; அவனுக்கு ஆசாரியனானேன் என்றான்.
\s5
\v 5 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பயணம் வெற்றியாக முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.
\v 6 அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடு போங்கள்; உங்கள் பயணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான்.
\s5
\v 7 அப்பொழுது அந்த ஐந்து மனிதர்களும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற மக்கள் சீதோனியர்களுடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமைதியாகவும் சுகமாக இருக்கிறதையும், தேசத்திலே அவர்களை அடக்கி ஆள எந்த ஒரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியர்களுக்குத் தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் இல்லை என்பதையும் பார்த்து,
\v 8 சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தங்கள் சகோதரர்களிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்களுடைய சகோதரர்கள்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள்.
\s5
\v 9 அதற்கு அவர்கள்: எழும்புங்கள், அவர்களுக்கு எதிராகப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது, நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த தேசத்தைச் கைப்பற்றிக்கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாக இருக்கவேண்டாம்.
\v 10 நீங்கள் அங்கே சேரும்போது, சுகமாய்க் குடியிருக்கிற மக்களிடம் சேருவீர்கள்; அந்த தேசம் விசாலமாக இருக்கிறது; தேவன் அதை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார்; அது பூமியிலுள்ள எல்லாப் பொருட்களும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றார்கள்.
\s5
\v 11 அப்பொழுது சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தாண் கோத்திரத்தார்களில் அறுநூறுபேர் ஆயுதம் அணிந்தவர்களாக அங்கேயிருந்து புறப்பட்டுப்போய்,
\v 12 யூதாவிலுள்ள கீரியாத்யாரீமிலே முகாமிட்டார்கள்; ஆதலால் மக்கள் அதை இந்நாள்வரைக்கும் மக்னிதான் என்று அழைக்கிறார்கள்; அது கீரியாத்யாரீமின் மேற்குப்பகுதியிலே இருக்கிறது.
\s5
\v 13 பின்பு அவர்கள் அங்கேயிருந்து எப்பிராயீம் மலைக்குப் போய், மீகாவின் வீடுவரை வந்தார்கள்.
\v 14 அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனிதர்கள் தங்கள் சகோதரர்களைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.
\s5
\v 15 அப்பொழுது அந்த இடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிற்கு வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள்.
\v 16 ஆயுதம் அணிந்தவர்களாகிய தாண் கோத்திரத்தார்கள் அறுநூறுபேரும் வாசற்படியிலே நின்றார்கள்.
\s5
\v 17 ஆசாரியனும் ஆயுதம் அணிந்தவர்களாகிய அறுநூறுபேரும் வாசற்படியிலே நிற்க்கும்போது, தேசத்தை உளவுபார்க்கப் போய் வந்த அந்த ஐந்து மனிதர்கள் உள்ளே புகுந்து, செதுக்கப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் உருவங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.
\v 18 அவர்கள் மீகாவின் வீட்டிற்குள் புகுந்து, செதுக்கப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் உருவங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வருகிறபோது, ஆசாரியன் அவர்களைப் பார்த்து: நீங்கள் செய்கிறது என்ன என்று கேட்டான்.
\s5
\v 19 அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன்னுடைய வாயை மூடிக்கொண்டு, எங்களோடு வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒருவனுடைய வீட்டிற்கு மட்டும் ஆசாரியனாக இருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாக இருக்கிறது நல்லதோ? என்றார்கள்.
\v 20 அப்பொழுது ஆசாரியனுடைய மனது மகிழ்ச்சியடைந்து, அவன் ஏபோத்தையும் உருவங்களையும் செதுக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, மக்களிடம் போனான்.
\s5
\v 21 அவர்கள் திரும்பும்படிப் புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், உடைமைகளையும், தங்களுக்கு முன்னே போகச்செய்தார்கள்.
\v 22 அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் கோத்திரத்தார்களை பின்தொடர்ந்துவந்து,
\v 23 அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.
\s5
\v 24 அதற்கு அவன்: நான் உண்டாக்கின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டு போகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்.
\v 25 தாண் மக்கள் அவனைப் பார்த்து: எங்கள் காதுகள் கேட்க சத்தமிடாதே, சத்தமிட்டால் கடுங்கோபக்காரர்கள் உங்களைத் தாக்குவார்கள்; அப்பொழுது நீயும் உன்னுடைய குடும்பத்தினர்களும் கொல்லப்படுவார்கள் என்று சொல்லி,
\v 26 தங்களுடைய வழியிலே நடந்துபோனார்கள்; அவர்கள் தன்னைவிட பலசாலிகள் என்று மீகா பார்த்து, அவன் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினான்.
\s5
\v 27 அவர்களோ மீகா உண்டாக்கினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் மக்களிடத்தில் சேர்த்து, அவர்களைக் கூர்மையான பட்டயத்தால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் எரித்துப்போட்டார்கள்.
\v 28 அது சீதோனுக்குத் தூரமாயிருந்தது; மற்ற மனிதர்களோடு அவர்களுக்குச் சம்பந்தமில்லாமலும் இருந்ததால், அவர்களைக் காப்பாற்ற ஒருவரும் இல்லை; அந்தப் பட்டணம் பெத்ரேகோபுக்கு அருகே பள்ளத்தாக்கில் இருந்தது; அவர்கள் அதைத் திரும்பக் கட்டி, அதிலே குடியிருந்து,
\v 29 முதலில் லாயீஸ் என்னும் பெயர்கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலிற்குப் பிறந்த தங்கள் தகப்பனான தாணுடைய பெயரின்படியே தாண் என்று பெயரிட்டார்கள்.
\s5
\v 30 அப்பொழுது தாண் மக்கள் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு நியமித்துக்கொண்டார்கள்; மனாசேயின் மகனான கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் மகன்களும் அந்தத் தேசம் சிறைப்பட்டுப்போன நாள்வரை, தாண் கோத்திரத்தார்கள் ஆசாரியர்களாக இருந்தார்கள்.
\v 31 தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலம் முழுவதும் அவர்கள் மீகா உண்டாக்கின சிலையை வைத்துக்கொண்டிருந்தார்கள்.
\s5
\c 19
\cl அத்தியாயம்– 19
\s1 லேவியனான மனிதனும் அவனது மறுமனையாட்டியும்
\p
\v 1 இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்த நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே தங்கின ஒரு லேவியன் இருந்தான்; அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராளாகிய ஒரு பெண்ணைத் தனக்கு மறுமனையாட்டியாக வைத்திருந்தான்.
\v 2 அவள் அவனுக்குத் துரோகமாக, விபச்சாரம்செய்து, அவனை விட்டு, யூதா தேசத்துப் பெத்லெகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பனுடைய வீட்டிற்குப் போய், அங்கே நான்கு மாதங்கள் வரை இருந்தாள்.
\s5
\v 3 அவளுடைய கணவன் அவளை சம்மதிக்கவும், அவளைத் திரும்ப அழைத்துவரவும், இரண்டு கழுதைகளை ஆயத்தப்படுத்தி, தன்னுடைய வேலைக்காரனைக் கூட்டிக்கொண்டு, அவளிடத்திற்குப் போனான்; அப்பொழுது அவள் அவனைத் தன்னுடைய தகப்பன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனாள்; பெண்ணின் தகப்பன் அவனைப் பார்த்தபோது சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு,
\v 4 பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன் அவனை, மூன்றுநாட்கள் அங்கே தங்கும்படி சம்மதிக்கவைத்ததினால். அவன் அங்கே அவனோடிருந்தான்; அவர்கள் அங்கே சாப்பிட்டுக் குடித்து இரவு தங்கினார்கள்.
\s5
\v 5 நான்காம் நாள் அதிகாலையில் அவர்கள் எழுந்து, அவன் பயணப்படும்போது, பெண்ணின் தகப்பன் தன்னுடைய மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் சாப்பிட்டு, உன்னுடைய மனதைத் தேற்றிக்கொள்; பின்பு நீங்கள் போகலாம் என்றான்.
\v 6 அவர்கள் உட்கார்ந்து, இருவரும் சாப்பிட்டுக் குடித்தார்கள்; பெண்ணின் தகப்பன் அந்த மனிதனைப் பார்த்து: நீ தயவுசெய்து, உன்னுடைய இருதயம் மகிழ்ச்சியடைய இரவும் இரு என்றான்.
\s5
\v 7 அப்படியே போகும்படி அந்த மனிதன் எழுந்தபோது, அவனுடைய மாமன் அவனை வருந்திக்கொண்டதினால், அவன் அன்று இரவும் அங்கே இருந்தான்.
\v 8 ஐந்தாம் நாளிலே அவன் போகும்படி அதிகாலையில் எழுந்தபோது, பெண்ணின் தகப்பன்: இருந்து உன்னுடைய இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே மாலைவரை இருந்து, இருவரும் சாப்பிட்டார்கள்.
\s5
\v 9 பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகும்படி எழுந்தபோது, பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன்: இதோ, பொழுது மறையப்போகிறது, சாயங்காலமுமானது; இரவு இங்கே இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையானது: உன்னுடைய இருதயம் சந்தோஷமாக இருக்கும்படி, இங்கே இரவு தங்கி நாளை அதிகாலையில் எழுந்து, உன்னுடைய வீட்டிற்குப் போகலாம் என்றான்.
\s5
\v 10 அந்த மனிதனோ, இரவு தங்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள்மேலும் சேணம்வைத்து, தன்னுடைய மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான்.
\v 11 அவர்கள் எபூசுக்கு அருகே வரும்போது, இரவு நேரமானது; அப்பொழுது வேலைக்காரன் தன்னுடைய எஜமானை நோக்கி: எபூசியர்கள் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இரவு தங்கலாம் என்றான்.
\s5
\v 12 அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல் மக்களல்லாதவர்கள் இருக்கிற பட்டணத்திற்குப் போகக்கூடாது; அதற்கடுத்த கிபியாவரை போவோம் என்று சொல்லி,
\v 13 தன்னுடைய வேலைக்காரனைப் பார்த்து: நாம் கிபியாவிலாவது ராமாவிலாவது இரவு தங்கும்படி, அவைகளில் ஒரு இடத்திற்குப் போய்ச்சேர நடந்துபோவோம் வா என்றான்.
\s5
\v 14 அப்படியே அதற்கடுத்து நடந்துபோனார்கள்; பென்யமீன் நாட்டைச் சேர்ந்த கிபியாவின் அருகில் வரும்போது, சூரியன் மறைந்துபோனது.
\v 15 ஆகையால் கிபியாவிலே வந்து இரவு தங்கும்படி, வழியைவிட்டு அந்த இடத்திற்குப் போனார்கள்; அவன் பட்டணத்திற்குள் போனபோது, இரவு தங்குவதற்கு அவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்பவர்கள் இல்லாததினால், வீதியில் உட்கார்ந்தான்.
\s5
\v 16 வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு முதியவர் வந்தார்; அந்த மனிதனும் எப்பிராயீம் மலைதேசத்தை சார்ந்தவன், அவன் கிபியாவிலே வாழ வந்தான்; அந்த இடத்தின் மனிதர்களோ பென்யமீனர்கள்.
\v 17 அந்த முதியவர் தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பட்டணத்து வீதியில் அந்த பயணியைப் பார்த்து: எங்கே போகிறாய், எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டான்.
\s5
\v 18 அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் மிகவும் தொலைதூரம்வரைப் போகிறோம்; நான் அந்த இடத்தைச் சேர்ந்தவன்; யூதாவிலுள்ள பெத்லெகேம்வரைப் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்பவர்கள் ஒருவரும் இல்லை.
\v 19 எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீவனமும் உண்டு; எனக்கும் உமது அடியாளுக்கும் உமது அடியானோடிருக்கிற வேலைக்காரனுக்கும் ரொட்டியும் திராட்சை ரசமும் உண்டு; ஒன்றிலும் குறைவில்லை என்றான்.
\s5
\v 20 அப்பொழுது அந்த முதியவர்: உனக்குச் சமாதானம் உண்டாவதாக; உன் குறைவுகளெல்லாம் என்மேல் இருக்கட்டும்; வீதியிலேமட்டும் இரவு தங்கவேண்டாம் என்று சொல்லி,
\v 21 அவனைத் தன்னுடைய வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு, சாப்பிட்டுக் குடித்தார்கள்.
\s5
\v 22 அவர்கள் மனமகிழ்ச்சியாக இருக்கிறபோது, இதோ, அந்த ஊர் துன்மார்க்க மனிதர்களில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனிதனை, நாங்கள் அவனோடு உறவுகொள்ளும்படி, வெளியே கொண்டுவா என்று வீட்டுக்காரனாகிய அந்த முதியவரோடு சொன்னார்கள்.
\v 23 அப்பொழுது வீட்டுக்காரனான அந்த மனிதன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச்செய்யவேண்டாம்; என் சகோதரர்களே, இப்படிப்பட்ட தீமையைச் செய்யவேண்டாம்; அந்த மனிதன் என்னுடைய வீட்டிற்குள் வந்திருக்கும்போது, இப்படிப்பட்ட மதிகேட்டைச் செய்ய வேண்டாம்.
\s5
\v 24 இதோ, கன்னிப்பெண்ணாகிய என்னுடைய மகளும், அந்த மனிதனுடைய மறுமனையாட்டியும் இருக்கிறார்கள்; அவர்களை உங்களிடத்தில் வெளியே கொண்டுவருகிறேன்; அவர்களை அவமானப்படுத்தி, உங்கள் பார்வைக்குச் சரியானபடி அவர்களுக்குச் செய்யுங்கள்; ஆனாலும் இந்த மனிதனுக்கு அப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம் என்றான்.
\v 25 அந்த மனிதர்கள் அவன் சொல்லைக்கேட்கவில்லை; அப்பொழுது அந்த மனிதன் தன்னுடைய மறுமனையாட்டியைப் பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்து விட்டான்; அவர்கள் அவளை பலாத்காரம் செய்து, இரவு முழுவதும் அவளை மோசமாக நடத்தி, அதிகாலையில் அவளைப்போகவிட்டார்கள்.
\v 26 விடிவதற்கு முன்னே அந்தப் பெண் வந்து, வெளிச்சமாகும்வரை அங்கே தன்னுடைய எஜமான் இருந்த வீட்டுவாசற்படியிலே விழுந்துகிடந்தாள்.
\s5
\v 27 அவள் எஜமான் காலையில் எழுந்திருந்து வீட்டின் கதவைத் திறந்து, தன்னுடைய வழியே போகப் புறப்படுகிறபோது, இதோ, அவன் மறுமனையாட்டியாகிய பெண் வீட்டுவாசலுக்கு முன் தன்னுடைய கைகளை வாசற்படியின்மேல் வைத்தவளாகக் கிடந்தாள்.
\v 28 எழுந்திரு போவோம் என்று அவன் அவளோடே சொன்னதற்கு அவள் பதில் சொல்லவில்லை. அப்பொழுது அந்த மனிதன் அவளைக் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு, பயணப்பட்டு, தன்னுடைய இடத்திற்குப் போனான்.
\s5
\v 29 அந்த லேவியன் வீட்டிற்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன்னுடைய மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளோடு பன்னிரண்டு துண்டுகளாக்கி, இஸ்ரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான்.
\v 30 அப்பொழுது அதைப் பார்த்தவர்கள் எல்லோரும், இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாளிலிருந்து இந்த நாள்வரைக்கும் இதைப்போன்ற காரியம் செய்யப்படவும் இல்லை, காணப்படவும் இல்லை; இந்தக் காரியத்தைப்பற்றி யோசித்து, ஆலோசனை செய்து, செய்யவேண்டியது என்னவென்று சொல்லுங்கள் என்றார்கள்.
\s5
\c 20
\cl அத்தியாயம்– 20
\s1 இஸ்ரவேலர்கள் பென்யமீனர்களோடு யுத்தம் செய்தல்
\p
\v 1 அப்பொழுது தாண்முதல் பெயெர்செபா வரையுள்ள இஸ்ரவேல் மக்கள் அனைவரும் கீலேயாத் தேசத்தார்களோடு மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஒருமித்து சபையாகக் கூடினார்கள்.
\v 2 எல்லா மக்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்தார்களும் தேவனுடைய மக்கள் சபையாகக் கூடி நின்றார்கள்; அவர்கள் பட்டயத்தினால் சண்டையிட ஆயத்தமாக இருக்கிற நான்கு லட்சம் வீரர்கள்.
\s5
\v 3 இஸ்ரவேல் மக்கள் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் மக்கள் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் மக்கள் கேட்டார்கள்.
\v 4 அப்பொழுது கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனாகிய லேவியன் பதிலாக: நானும் என்னுடைய மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இரவுதங்க வந்தோம்.
\s5
\v 5 அப்பொழுது கிபியாபட்டணத்தார்கள் எனக்கு எதிராக எழும்பி, என்னைக் கொலை செய்ய நினைத்து, நான் இருந்த வீட்டை இரவிலே சுற்றிவளைத்து, என்னுடைய மறுமனையாட்டியைக் கெடுத்தார்கள்; அதினாலே அவள் இறந்துபோனாள்.
\v 6 ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்ததினால், நான் என்னுடைய மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான எல்லா நாடுகளுக்கும் அனுப்பினேன்.
\v 7 நீங்கள் எல்லோரும் இஸ்ரவேலர்கள், இங்கே ஆலோசித்துத் தீர்மானம்செய்யுங்கள் என்றான்.
\s5
\v 8 அப்பொழுது எல்லா மக்களும் ஒருமித்து எழும்பி: நம்மில் ஒருவரும் தன்னுடைய கூடாரத்திற்குப் போகவும்கூடாது, ஒருவனும் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பவும்கூடாது.
\v 9 இப்பொழுது கிபியாவுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: சீட்டுப்போட்டு அதற்கு எதிராகப் போவோம்.
\s5
\v 10 பென்யமீன் கோத்திரமான கிபியா பட்டணத்தார்கள் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தகுந்ததாக மக்கள் வந்து செய்யும்படி, நாம் தானியங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறு பேர்களில் பத்துப்பேர்களையும், ஆயிரம் பேர்களில் நூறுபேர்களையும், பத்தாயிரம் பேர்களில் ஆயிரம்பேர்களையும் தெரிந்தெடுப்போம் என்றார்கள்.
\v 11 இஸ்ரவேலர்கள் எல்லோரும் ஒன்றுபோல ஒருமித்து பட்டணத்திற்கு முன்பாகக் கூட்டங்கூடி,
\s5
\v 12 அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார்கள் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?
\v 13 இப்பொழுது கிபியாவில் இருக்கிற துன்மார்க்க மக்களாகிய அந்த மனிதர்களை நாங்கள் கொன்று, தீமையை இஸ்ரவேலைவிட்டு விலக்கும்படி, அவர்களை ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லச் சொன்னார்கள்; பென்யமீனியர்கள் இஸ்ரவேல் மக்களாகிய தங்கள் சகோதரர்களின் சொல்லைக் கேட்க மனமில்லாமல்,
\v 14 இஸ்ரவேல் மக்களோடு யுத்தம்செய்யப் புறப்படும்படி, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு வந்து கூடினார்கள்.
\s5
\v 15 கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட எழுநூறுபேரைத் தவிர அந்த நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயத்தால் சண்டையிடுவதற்கு பயிற்சி பெற்ற மனிதர்களின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்பேர் என்று கணக்கிடப்பட்டது.
\v 16 அந்த மக்கள் எல்லோரிலும் தெரிந்துகொள்ளப்பட்ட, இடது கை பழக்கமுள்ள எழுநூறுபேர் இருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக் கவண்கல் எறிவார்கள்.
\s5
\v 17 பென்யமீன் கோத்திரத்தைத் தவிர இஸ்ரவேலிலே பட்டயத்தினால் சண்டையிடுவதற்குப் பயிற்சிபெற்ற மனிதர்கள் நான்கு லட்சம்பேர் என்று கணக்கிடப்பட்டது; இவர்கள் எல்லோரும் யுத்தவீரர்களாக இருந்தார்கள்.
\v 18 இஸ்ரவேல் மக்களான அவர்கள் எழுந்து, பெத்தேலுக்குப் போய்: எங்களில் யார் முதலில் போய் பென்யமீனியர்களோடு யுத்தம்செய்யவேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முதலில் போகவேண்டும் என்றார்.
\s5
\v 19 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் காலையில் எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராக முகாமிட்டார்கள்.
\v 20 பின்பு இஸ்ரவேல் போர்வீரர்கள் பென்யமீனியர்களோடு யுத்தம்செய்யப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்.
\v 21 ஆனாலும் பென்யமீன் போர்வீரர்கள் கிபியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலில் இருபத்து இரண்டாயிரம் பேரை அன்றையதினம் கொன்றுபோட்டார்கள்.
\s5
\v 22 இஸ்ரவேல் போர்வீரர்கள் தங்களை பெலப்படுத்திக்கொண்டு, முதல் நாளில் அணிவகுத்து நின்ற இடத்திலே, மறுபடியும் போர் செய்ய அணிவகுத்து நின்றார்கள்.
\v 23 அவர்கள் போய், கர்த்தருக்கு முன்பாக மாலைவரை அழுது, எங்கள் சகோதரர்களாகிய பென்யமீன் மக்களோடு திரும்பவும் யுத்தம் செய்யப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: அவர்களுக்கு எதிராகப் போங்கள் என்றார்.
\s5
\v 24 மறுநாளிலே இஸ்ரவேல் போர்வீரர்கள் பென்யமீன் போர்வீரர்களுக்கு எதிராகப் போனார்கள்.
\v 25 பென்யமீனியர்கள் அந்த நாளிலே கிபியாவிலிருந்து அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுவந்து, பின்னும் இஸ்ரவேல் புத்திரரில் பட்டயத்தினால் சண்டையிடுவதற்குப் பயிற்சிபெற்றவர்கள் பதினெட்டாயிரம்பேரைக் கொன்றுபோட்டார்கள்.
\s5
\v 26 அப்பொழுது இஸ்ரவேல் போர்வீரர்களும் எல்லா மக்களும் புறப்பட்டு, பெத்தேலுக்குப் போய், அங்கே கர்த்தருக்கு முன்பாக அழுது, உட்கார்ந்து, அன்று மாலைவரை உபவாசித்து, கர்த்தருக்கு முன்பாக சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தி,
\s5
\v 27 கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி அந்த நாட்களில் அங்கே இருந்தது.
\v 28 ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் அந்த நாட்களில் பெட்டியின் முன்பாகப் பணிசெய்துகொண்டிருந்தான்; எங்கள் சகோதரர்களாகிய பென்யமீன் மக்களோடு மறுபடியும் யுத்தம்செய்யப் புறப்படலாமா? வேண்டாமா? என்று அவர்கள் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: போங்கள்; நாளைக்கு அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
\s5
\v 29 அப்பொழுது இஸ்ரவேலர்கள் கிபியாவைச்சுற்றிலும் மறைவிடங்களில் ஆட்களை வைத்து,
\v 30 மூன்றாம் நாளிலே இஸ்ரவேல் போர்வீரர்கள், பென்யமீன் போர்வீரர்களுக்கு எதிராகப் போய், முன் இரண்டு முறை செய்ததுபோல, கிபியாவுக்கு அருகில் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.
\s5
\v 31 அப்பொழுது பென்யமீன் மக்கள் இஸ்ரவேல் மக்களுக்கு எதிராகப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, கடந்து வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் மக்களில் ஏறக்குறைய முப்பதுபேரை, முதல் இரண்டுதரம் செய்ததுபோல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.
\s5
\v 32 முன்போல நமக்கு முன்பாக முறியடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீனியர்கள் சொன்னார்கள்; இஸ்ரவேல் போர்வீரர்களோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு வெளியிலே இருக்கிற வழிகளில் வரச்செய்யும்படி, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.
\v 33 அப்பொழுது இஸ்ரவேல் போர்வீரர்கள் எல்லோரும் தங்கள் இடத்திலிருந்து எழுந்து, பாகால்தாமாரிலே யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்; கிபியாவின் பள்ளத்தாக்கிலே மறைந்திருந்தவர்கள் தங்கள் இடத்திலிருந்து புறப்பட்டு,
\s5
\v 34 அவர்களில் இஸ்ரவேல் எல்லோரிலும் தெரிந்துகொள்ளப்பட்ட பத்தாயிரம்பேர் கிபியாவுக்கு எதிராக வந்தார்கள்; யுத்தம் பலத்தது; ஆனாலும் தங்களுக்கு ஆபத்து நேரிட்டது என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
\v 35 கர்த்தர் இஸ்ரவேலிற்கு முன்பாகப் பென்யமீனை முறியடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் மக்கள் பென்யமீனிலே பட்டயத்தினால் சண்டையிடுவதற்குப் பயிற்சிபெற்ற ஆட்களாகிய இருபத்தைந்தாயிரத்து நூறுபேரைக் கொன்றுபோட்டார்கள்.
\s5
\v 36 இஸ்ரவேலர்கள் கிபியாவுக்கு அப்பாலே வைத்த மறைவிடங்களில் இருந்தவர்களை நம்பியிருந்ததினால், பென்யமீனர்களுக்கு இடம் கொடுத்தார்கள்; அதினாலே அவர்கள் முறியடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீனின் போர்வீரர்கள் கண்டார்கள்.
\v 37 அப்பொழுது மறைந்திருந்தவர்கள் துரிதமாக கிபியாவுக்குள் விரைந்து, பட்டணத்தில் இருக்கிறவர்கள் எல்லோரையும் கூர்மையான பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.
\v 38 பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பச்செய்வதே இஸ்ரவேலர்களுக்கும் மறைந்திருக்கிறவர்களுக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாக இருந்தது.
\s5
\v 39 ஆகவே, இஸ்ரவேலின் போர்வீரர்கள் யுத்தத்திலே பின்வாங்கினபோது, பென்யமீனர்கள்: முந்தின யுத்தத்தில் நடந்ததுபோல, அவர்கள் நமக்கு முன்பாக முறியடிக்கப்படுகிறார்களே என்று சொல்லி, இஸ்ரவேலரில் ஏறக்குறைய முப்பதுபேரை வெட்டவும் கொல்லவும் துவங்கினார்கள்.
\s5
\v 40 பட்டணத்திலிருந்து புகையானது தூண் போல உயர எழும்பியபோது, பென்யமீனர்கள் திரும்பிப் பார்த்தார்கள்; இதோ, பட்டணத்தின் அக்கினி ஜூவாலை வானபரியந்தம் எழும்பினது.
\v 41 அப்பொழுது இஸ்ரவேலர்கள் அவர்களுக்கு எதிராகத் திரும்பிக்கொண்டார்கள்; பென்யமீன் மனிதர்களோ, தங்களுக்கு ஆபத்து நேர்ந்ததைக் கண்டு திகைத்து.
\s5
\v 42 இஸ்ரவேல் போர்வீரர்களைவிட்டு, வனாந்திரத்திற்குப் போகிற வழிக்கு நேராகத் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; இஸ்ரவேல் போர்வீரர்கள் நகரங்களில் இருந்து வெளியே வந்து அவர்கள் நின்ற இடங்களிலேயே அவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
\s5
\v 43 இப்படியே பென்யமீனர்களை சுற்றிவளைத்துக்கொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வரும்வரை, அவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
\v 44 இதினால் பென்யமீனரிலே பதினெட்டாயிரம்பேர் இறந்தார்கள்; அவர்கள் எல்லோரும் பெலவான்களாக இருந்தார்கள்.
\s5
\v 45 மற்றவர்கள் விலகி, வனாந்திரத்தில் இருக்கிற ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போனார்கள்; அவர்களில் இன்னும் ஐயாயிரம்பேரை இஸ்ரவேலர்கள் வழிகளில் கொன்று, மற்றவர்களைக் கீதோம்வரைப் பின்தொடர்ந்து, அவர்களில் இரண்டாயிரம்பேரைக் கொன்றுபோட்டார்கள்.
\v 46 இவ்விதமாக பென்யமீனர்களில் அந்த நாளில் பட்டயத்தினால் சண்டையிடுவதற்குப் பயிற்சிபெற்றவர்கள் இருபத்தைந்தாயிரம்பேர் இறந்தார்கள்; அவர்கள் எல்லோரும் யுத்தத்தில் பெலமுள்ளவர்களாக இருந்தார்கள்.
\s5
\v 47 அறுநூறுபேர் திரும்பி தப்பி ஓடி, வனாந்திரத்திலிருக்கிற ரிம்மோன் கன்மலைக்குப் போய், ரிம்மோன் கன்மலையிலே நான்கு மாதங்கள் இருந்தார்கள்.
\v 48 இஸ்ரவேல் போர்வீரர்களோ, பென்யமீன் மக்களுக்கு எதிராக திரும்பி, பட்டணத்தில் மனிதர்கள் தொடங்கி மிருகங்கள்வரை பார்த்தவைகள் எல்லாவற்றையும் கூர்மையான பட்டயத்தால் கொன்று, தாங்கள் பார்த்த பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப்போட்டார்கள்.
\s5
\c 21
\cl அத்தியாயம்– 21
\s1 பென்யமீன் மனிதர்களுக்கு மனைவிகளைத் தேர்ந்தெடுத்தல்
\p
\v 1 இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலே இருக்கும்போது: நம்மில் ஒருவனும் தன்னுடைய மகளைப் பென்யமீனர்களுக்கு திருமணம் செய்துகொடுப்பதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள்.
\v 2 ஆகவே, மக்கள் பெத்தேலுக்குப்போய், அங்கே தேவனுக்கு முன்பாக மாலைவரை உட்கார்ந்திருந்து, சத்தமிட்டு மிகவும் அழுது:
\v 3 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகும்படி இஸ்ரவேலில் இந்தக் காரியம் சம்பவித்தது என்ன என்றார்கள்.
\s5
\v 4 மறுநாளிலே, மக்கள் அதிகாலையில் எழுந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
\v 5 கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராமல்போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.
\s5
\v 6 இஸ்ரவேல் மக்கள் தங்கள் சகோதரனாகிய பென்யமீனனை நினைத்து, வேதனையடைந்து: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டு போயிற்றே.
\v 7 மீதியாக இருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்க நாம் அவர்களுக்கு என்ன செய்யலாம்? நம்முடைய மகள்களில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் கர்த்தர்மேல் ஆணையிட்டுக் கொண்டோமே.
\s5
\v 8 இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராமல் போனவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்களில் ஒருவரும் முகாமில் சபைகூடினபோது வரவில்லை.
\v 9 மக்கள் கணக்கு பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடியிருப்புகளில் அங்கே ஒருவரும் இருக்கவில்லை.
\v 10 உடனே சபையார் பெலவான்களில் பன்னிரண்டாயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் கீலேயாத்திலுள்ள யாபேசிற்குப் போய், பெண்களையும் பிள்ளைகளையும்கூட கூர்மையான பட்டயத்தால் கொன்றுபோடுங்கள்.
\s5
\v 11 எல்லா ஆண்பிள்ளைகளையும், திருமணமான எல்லா பெண்பிள்ளைகளையும் கொன்றுபோடவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளைக கொடுத்து அனுப்பினார்கள்.
\v 12 இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடியிருக்கிறவர்களிடத்தில் திருமணமாகாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டுபிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற முகாமிற்கு கொண்டுவந்தார்கள்.
\s5
\v 13 அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் மக்களோடு பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லோரும் செய்தி அனுப்பினார்கள்.
\v 14 எனவே, அக்காலத்தில் பென்யமீனர்கள் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் பெண்களில் உயிரோடு வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் எல்லோருக்கும் பெண்கள் போதாமலிருந்தது.
\v 15 இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிரிவை உண்டாக்கினார் என்று மக்கள் பென்யமீனர்களுக்காக மனவேதனை அடைந்தார்கள்.
\s5
\v 16 பென்யமீன் கோத்திர பெண்கள் இறந்தபடியினாலே, மீதியான மற்றவர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படி என்ன செய்யலாம் என்று சபையின் மூப்பர்கள் கேட்டு,
\v 17 இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அழிந்துபோகாதபடி, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,
\s5
\v 18 நாமோ நம்முடைய மகள்களில் அவர்களுக்கு பெண் கொடுக்கக்கூடாது; பென்யமீனர்களுக்குப் பெண் கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல் மக்கள் ஆணையிட்டார்களே என்றார்கள்.
\v 19 பின்னும், இதோ, பெத்தேலுக்கு வடக்கில் பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதைக்குக் கிழக்காகவும் லிபோனாவுக்குத் தெற்காகவும் இருக்கிற சீலோவிலே ஒவ்வொரு வருடமும் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடப்படுகிறதே என்று சொல்லி,
\s5
\v 20 அவர்கள் பென்யமீன் மனிதர்களை நோக்கி: நீங்கள் போய், திராட்சைத் தோட்டங்களிலே மறைந்திருந்து,
\v 21 சீலோவின் பெண்பிள்ளைகள் கீதவாத்தியத்தோடு நடனம் செய்கிறவர்களாகப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் பார்க்கும்போது, திராட்சைத் தோட்டங்களிலிருந்து விரைந்து, உங்களில் அவரவர் சீலோவின் பெண்பிள்ளைகளில் ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.
\s5
\v 22 அவர்களுடைய தகப்பன்மார்களாகிலும், சகோதரர்களாகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்களுக்காக அவர்களுக்குத் தயவு செய்யுங்கள்; நாங்கள் யுத்தம் செய்து, அவனவனுக்கு மனைவியைப் பிடித்துக்கொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக, இப்போது நீங்கள் அவர்களுக்கு உங்கள் மகள்களைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள்.
\s5
\v 23 பென்யமீன் மக்கள் அப்படியே செய்து, நடனம்செய்கிறவர்களிலே தங்கள் எண்ணிக்கைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.
\v 24 இஸ்ரவேல் மக்களும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.
\s5
\v 25 அந்த நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்னுடைய பார்வைக்குச் சரியானபடி செய்து வந்தான்.

153
08-RUT.usfm Normal file
View File

@ -0,0 +1,153 @@
\id RUT
\ide UTF-8
\h ரூத்
\toc1 ரூத்
\toc2 ரூத்
\toc3 rut
\mt1 ரூத்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 நகோமியும் ரூத்தும்
\p
\v 1 நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவந்த நாட்களில், தேசத்தில் பஞ்சம் உண்டானது; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த ஒரு மனிதன் தன்னுடைய மனைவியோடும், இரண்டு மகன்களோடும் மோவாப் தேசத்திற்குப் போய் குடியிருந்தான்.
\v 2 அந்த மனிதனுடைய பெயர் எலிமெலேக்கு, அவனுடைய மனைவியின் பெயர் நகோமி, அவனுடைய இரண்டு மகன்களில் ஒருவன் பெயர் மக்லோன், மற்றொருவன் பெயர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியர்களாகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.
\s5
\v 3 நகோமியின் கணவனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு மகன்கள்மட்டும் இருந்தார்கள்.
\v 4 இவர்கள் மோவாபிய பெண்களைத் திருமணம் செய்தார்கள்; அவர்களில் ஒருத்தியின் பெயர் ஒர்பாள், மற்றவளுடைய பெயர் ரூத்; அங்கே ஏறக்குறைய பத்து வருடங்கள் வாழ்ந்தார்கள்.
\v 5 பின்பு மக்லோன் கிலியோன் என்ற அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்தப் பெண் தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னுடைய கணவனையும் இழந்து தனிமையானாள்.
\s5
\v 6 கர்த்தர் தம்முடைய மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு; தன்னுடைய மருமகள்களோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,
\v 7 தன்னுடைய இரண்டு மருமகள்களோடு தான் இருந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டாள். யூதா தேசத்திற்குத் திரும்பிப்போக, அவர்கள் வழியிலே நடந்துபோகும்போது,
\s5
\v 8 நகோமி தன்னுடைய இரண்டு மருமகள்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டிற்குத் திரும்பிப்போங்கள்; இறந்துபோனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயவுசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயவுசெய்வாராக.
\v 9 கர்த்தர் உங்கள் இருவருக்கும் கிடைக்கும் கணவனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாக வாழச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:
\v 10 உம்முடைய மக்களிடத்திற்கு உம்மோடு நாங்களும் வருவோம் என்றார்கள்.
\s5
\v 11 அதற்கு நகோமி: என் பிள்ளைகளே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடு ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குக் கணவனாவதற்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்கு மகன்கள் பிறப்பார்களோ?
\v 12 என் பிள்ளைகளே, திரும்பிப்போங்கள்; நான் வயதானவள்; ஒரு கணவனோடு வாழத் தகுதியுள்ளவள் அல்ல; அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாகி, நான் இன்று இரவில் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு, மகன்களைப் பெற்றெடுத்தாலும்,
\v 13 அவர்கள் பெரியவர்களாகும்வரை, கணவனுக்கு வாழ்க்கைப்படாமல் நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது முடியாது; என் பிள்ளைகளே, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாக இருக்கிறதினால், உங்களைக் குறித்து எனக்கு மிகுந்த துக்கம் இருக்கிறது என்றாள்.
\s5
\v 14 அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாக அழுதார்கள்; ஒர்பாள் தன்னுடைய மாமியாரை முத்தம் செய்துவிட்டுக் கடந்துபோனாள்; ரூத்தோ மாமியாரை விடாமல் பற்றிக்கொண்டாள்.
\v 15 அப்பொழுது அவள்: இதோ, உன்னுடைய சகோதரி தன்னுடைய மக்களிடத்துக்கும் தன்னுடைய தெய்வங்களிடத்துக்கும் திரும்பிப்போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பின்னே திரும்பிப்போ என்றாள்.
\s5
\v 16 அதற்கு ரூத்: நான் உம்மைப்பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடு பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய மக்கள் என்னுடைய மக்கள்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
\v 17 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்செய்யப்படுவேன்; மரணத்தைத்தவிர வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
\v 18 அவள் தன்னோடு வர மனஉறுதியாக இருக்கிறதைக் கண்டு, அதன்பின்பு அதைக்குறித்து அவளோடு ஒன்றும் பேசவில்லை.
\s5
\v 19 அப்படியே இருவரும் பெத்லெகேம்வரைக்கும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊர் மக்கள் எல்லோரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்.
\v 20 அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
\v 21 நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாகத் திரும்பிவரச்செய்தார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னை வருத்தப்படுத்தியிருக்கும்போது, நீங்கள் என்னை நகோமி என்று சொல்வது ஏன் என்றாள்.
\s5
\v 22 இப்படி, நகோமி மோவாபிய பெண்ணாகிய தன்னுடைய மருமகள் ரூத்தோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமிற்கு வந்தார்கள்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 ரூத் போவாசை சந்தித்தல்
\p
\v 1 நகோமிக்கு அவளுடைய கணவனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பெயருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்.
\v 2 மோவாபிய பெண்ணாகிய ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமோ, அவர் பின்னே போய் கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு வருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.
\s5
\v 3 அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பின்னே பொறுக்கினாள்; தற்செயலாக அவள் சென்ற அந்த வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாக இருந்தது.
\v 4 அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடு இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.
\s5
\v 5 பின்பு போவாஸ் அறுக்கிறவர்களின்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.
\v 6 அறுக்கிறவர்களின்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் மறுமொழியாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடு வந்த மோவாபிய பெண்பிள்ளை.
\v 7 அறுக்கிறவர்களின் பின்னே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடம் கேட்டுக்கொண்டாள்; காலை துவங்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரம்தான் ஆனது என்றான்.
\s5
\v 8 அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறு வயலுக்கு போகாமலும், இந்த இடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடு இரு.
\v 9 அவர்கள் அறுப்பு அறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பின்னே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களிடத்திற்குப் போய், வேலைக்காரர்கள் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.
\s5
\v 10 அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நிய தேசத்தைச் சேர்ந்தவளாக இருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயவு கிடைத்தது என்றாள்.
\v 11 அதற்கு போவாஸ் மறுமொழியாக: உன் கணவன் மரணமடைந்தபின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், நீ பிறந்த தேசத்தையும் விட்டு, இதற்கு முன்னே நீ அறியாத மக்களிடம் வந்ததும் எல்லாம் எனக்கு விபரமாகத் தெரிவிக்கப்பட்டது.
\v 12 உன் செயல்களுக்குத் தகுந்த பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய சிறகுகளின்கீழ் அடைக்கலமாக வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.
\s5
\v 13 அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமமாக இல்லாவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளாகிய என்னோடு தயவாகப் பேசினீரே என்றாள்.
\s5
\v 14 பின்பு போவாஸ் சாப்பாட்டு நேரத்தில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்தைப் புசிக்க, புளிப்பான திராட்சை ரசத்திலே உன் அப்பத் துண்டுகளைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பு அறுக்கிறவர்களின் அருகில் உட்கார்ந்தாள்; அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீதியானதை வைத்துக்கொண்டாள்.
\s5
\v 15 அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஒன்றும் சொல்லவேண்டாம்.
\v 16 அவள் பொறுக்கிக்கொள்ளும்படி அவளுக்காக அரிகளிலே சிலவற்றைச் சிந்திவிடுங்கள், அவளை அதட்டாமல் இருங்கள் என்று கட்டளையிட்டான்.
\s5
\v 17 அப்படியே அவள் மாலைநேரம்வரைக்கும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துமுடிக்கும்போது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமையாக இருந்தது.
\v 18 அவள் அதை எடுத்துக்கொண்டு ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமியார் பார்த்தாள்; தான் திருப்தியாகச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள்.
\s5
\v 19 அப்பொழுது அவளுடைய மாமியார்: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய், எந்த இடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடம் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள் இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமியாருக்கு அறிவித்து: நான் இன்று வேலைசெய்த வயல்காரனுடைய பெயர் போவாஸ் என்றாள்.
\v 20 அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனிதன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற பங்காளிகளில் ஒருவனுமாக இருக்கிறான் என்றாள்.
\s5
\v 21 பின்னும் மோவாபிய பெண்ணாகிய ரூத்: அவர் என்னை நோக்கி, என்னுடைய அறுவடை எல்லாம் முடியும்வரைக்கும், நீ என் வேலைக்காரிகளோடு இரு என்று சொன்னார் என்றாள்.
\v 22 அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனிதர்கள் உன்னை எதிர்க்காதபடிக்கு நீ அவனுடைய வேலைக்காரிகளோடு போகிறது நல்லது என்றாள்.
\s5
\v 23 அப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் முடியும்வரைக்கும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடு இருந்து, தன் மாமியாரோடு வாழ்ந்தாள்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 கோதுமைக் களத்தில் ரூத்தும் போவாசும்
\p
\v 1 பின்பு அவள் மாமியாராகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாக வாழ்ந்திருக்கும்படி நான் உனக்கு சவுக்கியத்தைத் தேடாமல் இருப்பேனோ?
\v 2 நீ போவாசின் வேலைக்காரிகளோடு இருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இரவு களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.
\s5
\v 3 நீ குளித்து, எண்ணெய் பூசி, உன்னுடைய ஆடைகளை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ; அந்த மனிதன் சாப்பிட்டுக் குடித்து முடிக்கும்வரைக்கும் அவனுடைய கண்களுக்கு எதிர்ப்படாமல் இரு.
\v 4 அவன் படுத்துக்கொண்டபின்பு, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்து போய், அவனுடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை விலக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது என்னவென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.
\v 5 இதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.
\s5
\v 6 அவள் களத்திற்குப்போய், தன் மாமியார் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்தாள்.
\v 7 போவாஸ் சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இருந்து, ஒரு அம்பாரத்தின் அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெதுவாகச்சென்று, அவனுடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை விலக்கிப் படுத்துக்கொண்டாள்.
\s5
\v 8 நடுஇரவிலே, அந்த மனிதன் திடுக்கிட்டுத் திரும்பி, ஒரு பெண் தன்னுடைய பாதத்தின் அருகிலே படுத்திருக்கிறதைக் கண்டு,
\v 9 நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் உறவினன் என்றாள்.
\s5
\v 10 அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ ஏழைகளும் பணக்காரர்களுமான வாலிபர்களின் பின்னே போகாததினால், உன்னுடைய முந்தின நற்குணத்தைவிட உன்னுடைய பிந்தின நற்குணம் உத்தமமாக இருக்கிறது.
\v 11 இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் மக்களாகிய ஊரார் எல்லோரும் அறிவார்கள்.
\s5
\v 12 நான் உறவினன் என்பது உண்மைதான்; ஆனாலும் என்னைவிட நெருங்கின உறவினன் ஒருவன் இருக்கிறான்.
\v 13 இன்று இரவு தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னை உறவின்முறைப்படித் திருமணம்செய்யச் சம்மதித்தால் நல்லது, அவன் திருமணம் செய்யட்டும்; அவன் உன்னைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால் நான் உன்னை உறவின்முறைப்படித் திருமணம்செய்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலம்வரை படுத்துக்கொண்டிரு என்றான்.
\s5
\v 14 அவள் விடியற்காலம்வரைக்கும் அவனுடைய பாதத்தின் அருகே படுத்திருந்து, களத்திற்கு ஒரு பெண் வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரிவதற்கு முன்னே எழுந்திருந்தாள்.
\v 15 அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப்பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.
\s5
\v 16 அவள் தன் மாமியாரிடம் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனிதன் தனக்குச் செய்தவைகளையெல்லாம் அவளுக்கு விவரித்துச் சொன்னாள்.
\v 17 மேலும் அவர், நீ உன் மாமியாரிடத்திற்கு வெறுமையாகப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.
\v 18 அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னவாக முடியும் என்று நீ அறியும்வரை பொறுமையாக இரு; அந்த மனிதன் இன்றைக்கு இந்தக் காரியத்தைச் செய்து முடிக்கும்முன் ஓயமாட்டான் என்றாள்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 போவாஸ் ரூத்தைத் திருமணம்செய்தல்
\p
\v 1 போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்து கொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்த உறவினன் அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.
\v 2 அப்பொழுது அவன் பட்டணத்தின் பெரியவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள்.
\s5
\v 3 அப்பொழுது அவன் அந்த உறவினனை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள்.
\v 4 ஆகவே, நீர் அதை ஊர் மக்களுக்கு முன்பாகவும், என்னுடைய மக்களின் பெரியவர்களுக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்குத் தெரிவிக்கவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதை உறவுமுறையாக மீட்டுக்கொள்ள விருப்பமாக இருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள விருப்பமில்லாதிருந்தால், நான் அதைத் தெரிந்துகொள்ளும்படி எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கக்கூடியவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
\s5
\v 5 அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவனுடைய பெயரை நிலைநிற்கச்செய்யும்படிக்கு, மரித்தவனுடைய மனைவியாகிய மோவாபிய பெண்ணாகிய ரூத்தைத் திருமணம் செய்யவேண்டும் என்றான்.
\v 6 அப்பொழுது அந்த உறவினன்: நான் என் சுதந்திரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்; நான் மீட்கவேண்டியதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.
\s5
\v 7 மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் எல்லாக் காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன்னுடைய காலணியைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழக்கமாக இருந்த உறுதிப்பாடு.
\v 8 அப்படியே அந்த உறவினன் போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன்னுடைய காலணியைக் கழற்றிப்போட்டான்.
\s5
\v 9 அப்பொழுது போவாஸ் பெரியவர்களையும் எல்லா மக்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.
\v 10 இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரர்களுக்குள்ளும், ஊரார்களுக்குள்ளும், அவனுடைய பெயர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்திரத்திலே அவனுடைய பெயரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாக இருந்த மோவாபிய பெண்ணான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான்.
\s5
\v 11 அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற எல்லா மக்களும் பெரியவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன்னுடைய வீட்டிற்கு வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டின இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாக இருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
\v 12 இந்தப் பெண்ணிடம் கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்ததியினாலே, உன்னுடைய வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.
\s1 தாவீதின் வம்சவரலாறு
\p
\s5
\v 13 போவாஸ் ரூத்தைத் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளுடன் வாழ்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்றெடுக்கக் கர்த்தர் அருள்செய்தார்.
\v 14 அப்பொழுது பெண்கள் நகோமியைப் பார்த்து: உறவினன் இல்லாமல்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயவுசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவனுடைய பெயர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.
\v 15 அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாக இருப்பானாக; உன்னைச் சிநேகித்து, ஏழு மகன்களைப்பார்க்கிலும் உனக்கு அருமையாக இருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றெடுத்தாளே என்றார்கள்.
\s5
\v 16 நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.
\v 17 அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பெயரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.
\s5
\v 18 பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
\v 19 எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான்.
\v 20 அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.
\v 21 சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
\v 22 ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.

1429
09-1SA.usfm Normal file
View File

@ -0,0 +1,1429 @@
\id 1SA
\ide UTF-8
\h I சாமுவேல்
\toc1 I சாமுவேல்
\toc2 I சாமுவேல்
\toc3 1sa
\mt1 I சாமுவேல்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 எல்க்கானாவும் அவனது குடும்பமும்
\p
\v 1 எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பெயர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் மகனான எலிகூவின் மகனான எரோகாமின் மகன்.
\v 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பெயர் அன்னாள், மற்றவள் பெயர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.
\s5
\v 3 அந்த மனிதன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைத் தொழுதுகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும், பினெகாசும் இருந்தார்கள்.
\v 4 அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே அவன் தன்னுடைய மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் பங்குபோட்டுக் கொடுப்பான்.
\s5
\v 5 அன்னாளை நேசித்ததினால், அவளுக்கு இரண்டு பங்கு கொடுப்பான்; கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்.
\v 6 கர்த்தர் அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளுக்கு மிகவும் எரிச்சலுண்டாக்குவாள்.
\s5
\v 7 அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும்போது, அவன் ஒவ்வொரு வருடமும் அப்படியே செய்வான்; இவள் அன்னாளை மனவேதனைப்படுத்துவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.
\v 8 அவளுடைய கணவனான எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்து மகன்களைவிட நான் உனக்கு மேலானவன் அல்லவா? என்றான்.
\s1 அன்னாளின் ஜெபம்
\p
\s5
\v 9 சீலோவிலே அவர்கள் சாப்பிட்டுக் குடித்தப்பின்பு, அன்னாள் எழுந்தாள்; ஆசாரியனான ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசற்கதவருகில் ஒரு இருக்கையின்மேல் உட்கார்ந்திருந்தான்.
\v 10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்து:
\s5
\v 11 சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறக்காமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை செய்தாள்.
\s5
\v 12 அவள் கர்த்தருக்கு முன்பாக அதிகநேரம் விண்ணப்பம்செய்கிறபோது, ஏலி அவளுடைய வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
\v 13 அன்னாள் தன்னுடைய இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மட்டும் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கவில்லை; ஆகவே, அவள் குடிவெறியில் இருக்கிறாள் என்று ஏலி நினைத்து,
\v 14 அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் குடிவெறியில் இருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.
\s5
\v 15 அதற்கு அன்னாள் பதிலாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனவேதனையுள்ள பெண்; நான் திராட்சை ரசமோ, மதுவோ குடிக்கவில்லை; நான் கர்த்தருக்கு முன்பாக என்னுடைய இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
\v 16 உம்முடைய அடிமையை துன்மார்க்கத்தின் பெண்ணாக நினைக்கவேண்டாம்; மிகுதியான துன்பத்தினாலும், துயரத்தினாலும் இந்த நேரம்வரை விண்ணப்பம்செய்தேன் என்றாள்.
\s5
\v 17 அதற்கு ஏலி சமாதானத்துடன் போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
\v 18 அப்பொழுது அவள்: உம்முடைய அடிமைக்கு உம்முடைய கண்களிலே தயவு கிடைக்கட்டும் என்றாள்; பின்பு அந்த பெண் புறப்பட்டுப்போய் சாப்பிட்டாள்; அதன் பின்பு அவள் துக்கமுகமாக இருக்கவில்லை.
\s1 சாமுவேலின் பிறப்பும் பொருத்தனையும்
\p
\s5
\v 19 அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைத் தொழுதுகொண்டு, ராமாவிலிருக்கிற தங்களுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளுடன் இணைந்தான்; கர்த்தர் அவளை நினைத்தார்.
\v 20 சிலநாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள்.
\s5
\v 21 எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருடந்தோறும் செலுத்தும் பலியையும் தன்னுடைய பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன்னுடைய வீட்டார் அனைவரோடும் போனான்.
\v 22 அன்னாள் அவர்களுடன் போகவில்லை; அவள்: பிள்ளை பால்குடிப்பதை மறந்தபின்பு, அவன் கர்த்தருக்கு முன்பாக காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய்விடுவேன் என்று தன்னுடைய கணவனிடம் சொன்னாள்.
\s1 கர்த்தருடைய ஆலயத்தில் சாமுவேல்
\p
\v 23 அப்பொழுது அவளுடைய கணவனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன்னுடைய விருப்பத்தின்படி செய்து, அவனை பால் மறக்கப்பண்ணும்வரை இரு; கர்த்தர் தம்முடைய வார்த்தையைமட்டும் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்தப் பெண் தன்னுடைய பிள்ளையைப் பால் மறக்கப்பண்ணும்வரைக்கும் பாலூட்டி வளர்த்தாள்.
\s5
\v 24 அவள் அவனைப் பால்மறக்கச் செய்தபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாக இருந்தான்.
\v 25 அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள்.
\s5
\v 26 அப்பொழுது அவள்: என்னுடைய ஆண்டவனே, இங்கே உம்முடைய அருகிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்த பெண் நான்தான் என்று என்னுடைய ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.
\v 27 இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்செய்தேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என்னுடைய விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.
\v 28 எனவே, அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டதால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைத் தொழுதுகொண்டான்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 அன்னாளின் ஜெபம்
\p
\v 1 அப்பொழுது அன்னாள் ஜெபம்செய்து: என்னுடைய இருதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது; என்னுடைய பெலன் கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என்னுடைய எதிரியின்மேல் என்னுடைய வாய் தைரியமாகப் பேசும்; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.
\s5
\v 2 கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்களுடைய தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.
\s5
\v 3 இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்களுடைய வாயிலிருந்து வெளியே வரவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செயல்கள் யதார்த்தமல்லவா?
\v 4 பலவான்களினுடைய வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பெலத்தினால் வலிமையடைந்தனர்.
\s5
\v 5 திருப்தியாக இருந்தவர்கள் அப்பத்திற்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாக இருந்தவர்களோ இனிப் பசியாக இருக்கமாட்டார்கள்; மலடியாயிருந்தவள் ஏழுப் பிள்ளைகளை பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ இளைத்துப்போனாள்.
\s5
\v 6 கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர்.
\v 7 கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையச்செய்கிறவருமாக இருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.
\s5
\v 8 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் செய்கிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் உலகத்தை வைத்தார்.
\s5
\v 9 அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர்கள் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் வெற்றிபெறுவதில்லை.
\s5
\v 10 கர்த்தரோடு வாதாடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழக்கமிடுவார்; கர்த்தர் பூமியின் கடைசிவரை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் செய்தவரின் பெலனை உயரச்செய்வார் என்று துதித்தாள்.
\s5
\v 11 பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன்னுடைய வீட்டுக்குப்போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.
\s1 ஏலியின் துன்மார்க்க மகன்கள்
\p
\s5
\v 12 ஏலியின் மகன்கள் துன்மார்க்கத்தின் மனிதர்களாக இருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை.
\v 13 அந்த ஆசாரியர்கள் மக்களை நடத்தினவிதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்தும் காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று முனை கூருள்ள ஒரு ஆயுதத்தைத் தன்னுடைய கையிலே பிடித்துவந்து,
\v 14 அதினாலே, உலோகத்தட்டிலோ, பானையிலோ, மரத்தொட்டியிலோ, சட்டியிலோ குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதை ஆசாரியன் எடுத்துக்கொள்வான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலர்களுக்கு எல்லாம் செய்தார்கள்.
\s5
\v 15 கொழுப்பைத் தகனம் செய்வதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனிதனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், வேக வைத்ததை உன்னுடைய கையிலே வாங்கமாட்டேன் என்பான்.
\v 16 அதற்கு அந்த மனிதன்: இன்று செய்யவேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனம் செய்யட்டும்; பிற்பாடு உன் மனவிருப்பத்தின்படி எடுத்துக்கொள் என்று சொன்னாலும்; அவன்: அப்படியல்ல, இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாக எடுத்துக்கொள்வேன் என்பான்.
\v 17 ஆதலால் அந்த வாலிபர்களின் பாவம் கர்த்தருக்கு முன்பாக மிகவும் பெரிதாக இருந்தது; மனிதர்கள் கர்த்தருடைய காணிக்கையை வெறுப்பாக நினைத்தார்கள்.
\s5
\v 18 சாமுவேல் என்னும் பிள்ளை சணல்நூல் ஏபோத்தை அணிந்தவனாகக் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான்.
\v 19 அவனுடைய தாய் ஒவ்வொரு வருடந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன்னுடைய கணவனோடு வரும்போதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்.
\s5
\v 20 ஏலி எல்க்கானாவையும் அவனுடைய மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த பெண் கர்த்தருக்கென்று ஒப்புக் கொடுத்ததற்குப் பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே அனேகம் பிள்ளைகளைக் கொடுப்பாராக என்றான்; அவர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள்.
\v 21 அப்படியே கர்த்தர் அன்னாளுக்கு உதவிசெய்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளை கர்த்தருக்கு முன்பாக வளர்ந்தான்.
\s1 ஏலியும் துன்மார்க்க மகன்களும்
\p
\s5
\v 22 ஏலி மிகுந்த வயதானவனாக இருந்தான்; அவன் தன்னுடைய மகன்கள் இஸ்ரவேலர்களுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூடுகிற பெண்களோடு தகாதஉறவு கொள்வதையும் கேள்விப்பட்டு,
\v 23 அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த மக்கள் எல்லோரும் உங்கள் தீய செய்கைகளைச் சொல்லக்கேட்கிறேன்.
\v 24 என்னுடைய மகன்களே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; கர்த்தருடைய மக்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாக இருக்கிறீர்களே.
\s5
\v 25 மனிதனுக்கு விரோதமாக மனிதன் பாவம்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம்செய்தால், அவனுக்காக விண்ணப்பம் செய்கிறவன் யார் என்றான்; அவர்களோ தங்களுடைய தகப்பனுடைய சொல்லைக்கேட்காமல் போனார்கள்; அவர்களைக் கொலைசெய்வதற்கு கர்த்தர் சித்தமாக இருந்தார்.
\v 26 பிள்ளையாகிய சாமுவேல், பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனிதனுக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.
\s1 ஏலியின் குடும்பத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம்
\p
\s5
\v 27 தேவனுடைய மனிதன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்கள் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கும்போது, நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி,
\v 28 என்னுடைய பலிபீடத்தின்மேல் பலியிடவும், தூபம் காட்டவும், என்னுடைய சமுகத்தில் ஏபோத்தைத் அணிந்துகொள்ளவும், இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் அவனை எனக்கு ஆசாரியனாகத் தெரிந்துகொண்டு, உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்களுக்கு இஸ்ரவேல் மக்களுடைய தகனபலிகளையெல்லாம் கொடுக்கவில்லையா?
\s5
\v 29 நான் தங்குமிடத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என்னுடைய பலியையும், என்னுடைய காணிக்கையையும், நீங்கள் ஏன் உதைக்கிறீர்கள்? என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளில் எல்லாம் சிறந்தவைகளைக்கொண்டு உங்களைக் கொழுக்கச்செய்ய, நீ என்னைவிட உன்னுடைய மகன்களை ஏன் மதிக்கிறாய் என்கிறார்.
\v 30 ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறதாவது: உன்னுடைய வீட்டார்களும் உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்களும் என்றைக்கும் என்னுடைய சந்நிதியில் நடந்துகொள்வார்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாக இருப்பதாக; என்னை மதிக்கிறவர்களை நானும் மதிப்பேன்; என்னை அசட்டை செய்கிறவர்கள் அசட்டை செய்யப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
\s5
\v 31 உன்னுடைய வீட்டில் ஒரு முதிர்வயதானவனும் இல்லாதபடி உன்னுடைய பெலனையும் உன்னுடைய தகப்பனுடைய வீட்டின் பெலனையும் நான் வெட்டிப்போடும் நாட்கள் வரும்.
\v 32 இஸ்ரவேலுக்குச் செய்யப்படும் எல்லா நன்மைக்கும் மாறாக நான் தங்குமிடத்திலே உபத்திரவத்தைப் பார்ப்பாய்; ஒருபோதும் உன்னுடைய வீட்டில் ஒரு முதிர்வயதானவனும் இருப்பதில்லை.
\v 33 என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன்னுடைய சந்ததியில் நான் அழிக்காதவர்களோ, உன்னுடைய கண்களைப் பூத்துப்போகச்செய்யவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; உன்னுடைய வம்சத்திலுள்ள எல்லோரும் இளவயதிலே இறப்பார்கள்.
\s5
\v 34 ஓப்னி பினெகாஸ் என்னும் உன்னுடைய இரண்டு மகன்களின்மேல் வருவதே உனக்கு அடையாளமாக இருக்கும்; அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள்.
\v 35 நான் என்னுடைய உள்ளத்துக்கும் என்னுடைய சித்தத்திற்கும் தகுந்தபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பச்செய்து, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம் செய்யப்பட்டவனுக்கு முன்பாக எல்லா நாட்களும் நடந்துகொள்வான்.
\s5
\v 36 அப்பொழுது உன்னுடைய வீட்டார்களில் மீதியாக இருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப் பணத்துக்காகவும் ஒரு அப்பத்துண்டுக்காகவும் அவனிடத்தில் வந்து பணிந்து: நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட ஏதாவது ஒரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான் என்று சொல்கிறார் என்றான்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 கர்த்தர் சாமுவேலை அழைக்கிறார்
\p
\v 1 சிறுவனாகிய சாமுவேல் ஏலியுடன் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்த நாட்களிலே கர்த்தருடைய வசனம் அரிதாக இருந்தது; வெளிப்படையான தரிசனம் இருந்ததில்லை.
\v 2 ஒருநாள் ஏலி தன்னுடைய படுக்கையிலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்க முடியாதபடி அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது.
\v 3 தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோவதற்கு முன்பு சாமுவேல் படுத்திருந்தான்.
\v 4 அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,
\s5
\v 5 ஏலியினிடம் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப்படுத்துக்கொண்டான்.
\v 6 மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன் என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்.
\s5
\v 7 சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாமல் இருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை.
\v 8 கர்த்தர் மறுபடியும் மூன்றாம்முறை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து,
\s5
\v 9 சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய இடத்திலே படுத்துக்கொண்டான்.
\s5
\v 10 அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்புபோல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.
\v 11 கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ. நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது ஒலித்துக்கொண்டிருக்கும்.
\s5
\v 12 நான் ஏலியின் குடும்பத்திற்கு எதிராகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்த நாளிலே வரச்செய்வேன்; அதைத் துவங்கவும் அதை முடிக்கவும் போகிறேன்.
\v 13 அவனுடைய மகன்கள் தங்கள்மேல் சாபத்தை வரச்செய்வதை அவன் அறிந்தும், அவர்களை அடக்காமல்போன பாவத்தினால், நான் அவனுடைய குடும்பத்திற்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.
\v 14 அதினால் ஏலியின் குடும்பத்தினர் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியிலோ காணிக்கையிலோ நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்.
\s5
\v 15 சாமுவேல் காலைவரை படுத்திருந்து, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான்; சாமுவேல் ஏலிக்கு அந்தத் தரிசனத்தை அறிவிக்கப் பயந்தான்.
\v 16 ஏலியோ: சாமுவேலே, என் மகனே என்று சாமுவேலைக் கூப்பிட்டான். அவன்: இதோ, இருக்கிறேன் என்றான்.
\s5
\v 17 அப்பொழுது அவன்: கர்த்தர் உன்னிடத்தில் சொன்ன காரியம் என்ன? எனக்கு அதை மறைக்கவேண்டாம்; அவர் உன்னிடத்தில் சொன்ன எல்லா காரியத்திலும் ஏதாவது ஒன்றை எனக்கு மறைத்தால், தேவன் உனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்வாராக என்றான்.
\v 18 அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்: அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
\s5
\v 19 சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனோடு இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாவது தரையிலே விழுந்துபோகவிடவில்லை.
\v 20 சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண் துவங்கி பெயெர்செபாவரை உள்ள எல்லா இஸ்ரவேலர்களுக்கும் தெரிந்தது.
\v 21 கர்த்தர் பின்னும் சீலோவிலே தரிசனம் தந்தருளினார்; கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 பெலிஸ்தர்கள் உடன்படிக்கைப் பெட்டியைக் கைப்பற்றுதல்
\p
\v 1 சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர்கள்: பெலிஸ்தர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்கு அருகில் முகாமிட்டார்கள்; பெலிஸ்தர்களோ ஆப்பெக்கிலே முகாமிட்டிருந்தார்கள்.
\v 2 பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராக அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டார்கள்; அவர்கள் படையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நான்காயிரம்பேர் வெட்டப்பட்டு இறந்தார்கள்.
\s5
\v 3 மக்கள் திரும்ப முகாமிற்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தர்களுக்கு முன்பாக நம்மை முறியடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய எதிரியின் கைக்கு விலக்கி இரட்சிக்கும்படி, நம்முடைய நடுவில் வரவேண்டும் என்றார்கள்.
\v 4 அப்படியே கேருபீன்களின் மத்தியில் இருக்கிற சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துவர, மக்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியின் அருகில் இருந்தார்கள்.
\s5
\v 5 கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி முகாமிலே வருகிறபோது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் பூமி அதிரும்படி அதிக சத்தமாக ஆர்ப்பரித்தார்கள்.
\v 6 அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர்கள் கேட்டபோது: எபிரெயர்களுடைய முகாமில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு கர்த்தரின் பெட்டி முகாமில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள்.
\s5
\v 7 தேவன் முகாமில் வந்தார் என்று சொல்லப்பட்டதினால், பெலிஸ்தர்கள் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன்பு ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே.
\v 8 ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்திரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே.
\v 9 பெலிஸ்தர்களே, திடன் கொண்டு ஆண்களைப்போல நடந்துகொள்ளுங்கள்; எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்ததுபோல நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடி ஆண்களாக இருந்து யுத்தம்செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
\s5
\v 10 அப்பொழுது பெலிஸ்தர்கள் யுத்தம்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் விழுந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய அழிவு உண்டானது; இஸ்ரவேலிலே முப்பதாயிரம் காலாட்படையினர் மடிந்தார்கள்.
\v 11 தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும் இறந்தார்கள்.
\s1 ஏலியின் மரணம்
\p
\s5
\v 12 பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, தன்னுடைய தலையின்மேல் புழுதியை வாரிப்போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான்.
\v 13 அவன் வந்தபோது: ஏலி ஒரு இருக்கையின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான்; தேவனுடைய பெட்டிக்காக அவனுடைய இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது, ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனிதன் வந்தபோது, ஊரெங்கும் அழுகை உண்டானது.
\s5
\v 14 அழுகிற இந்தச் சத்தத்தை ஏலி கேட்டபோது: இந்த கூச்சலின் சத்தம் என்ன என்று கேட்டான்; அப்பொழுது அந்த மனிதன் விரைவாக வந்து, ஏலிக்கு அறிவித்தான்.
\v 15 ஏலி தொண்ணூற்று எட்டு வயதுள்ளவனாக இருந்தான்; அவன் பார்க்க முடியாதபடி அவனுடைய கண்கள் மங்கலாக இருந்தது.
\s5
\v 16 அந்த மனிதன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்றுதான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.
\v 17 செய்தி கொண்டுவந்தவன் பதிலாக: இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; மக்களுக்குள்ளே பெரிய அழிவு உண்டானது; உம்முடைய மகன்களான ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டது என்றான்.
\s5
\v 18 அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி இருக்கையிலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாக்க விழுந்தான்; அவன் முதிர்வயதானவனும் அதிக பருமனானவனுமாக இருந்தபடியால், அவன் பிடரி முறிந்து இறந்துபோனான். அவன் இஸ்ரவேலை நாற்பது வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
\s1 மகிமை கடந்தது
\p
\s5
\v 19 பினெகாசின் மனைவியான அவனுடைய மருமகள் நிறைகர்ப்பிணியாக இருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன்னுடைய மாமனும் தன்னுடைய கணவனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள்.
\v 20 அவள் மரிக்கப்போகிற நேரத்தில் அவள்அருகே நின்ற பெண்கள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை.
\s5
\v 21 தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய கணவனும் மரித்தபடியால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பெயரிட்டாள்.
\v 22 தேவனுடைய பெட்டி பிடிபட்டுப்போனபடியால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போனது என்றாள்.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 அஸ்தோத்திலும் எக்ரோனிலும் உடன்படிக்கைப்பெட்டி
\p
\v 1 பெலிஸ்தர்கள் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.
\v 2 பெலிஸ்தர்கள் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனின் அருகில் வைத்தார்கள்.
\v 3 அஸ்தோத் ஊர்க்காரர்கள் மறுநாள் காலையில் எழுந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் இடத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள்.
\s5
\v 4 அவர்கள் மறுநாள் அதிகாலையில் எழுந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைந்து கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாக இருந்தது.
\v 5 ஆதலால் இந்த நாள்வரைக்கும் தாகோனின் ஆசாரியர்களும் தாகோனின் கோவிலுக்குள் போகிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை.
\s5
\v 6 அஸ்தோத் ஊர்க்காரர்களை வாதிக்கும்படி கர்த்தருடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் மக்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.
\v 7 இப்படி நடந்ததை அஸ்தோத்தின் மக்கள் பார்த்தபோது: இஸ்ரவேலின் தேவனுடைய கை நமதுமேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாக இருந்ததால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்ககூடாது என்று சொல்லி;
\s5
\v 8 பெலிஸ்தர்களின் அதிபதிகளையெல்லாம் அழைத்து, தங்களின் அருகிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத் பட்டணம்வரை எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனார்கள்.
\v 9 அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, கர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் கடுங்கோபமாக இறங்கினது; அந்தப் பட்டணத்தின் மனிதருக்குள் சிறியவர் துவங்கிப் பெரியவர்வரை மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார்.
\s5
\v 10 அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊர்க்காரர்கள்: எங்களையும் எங்கள் மக்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்கள் அருகில் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.
\s5
\v 11 அவர்கள் பெலிஸ்தர்களின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் மக்களையும் கொன்றுபோடாதபடி, அவருடைய பெட்டியை அதின் இடத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் மரணம் அதிகமாக இருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.
\v 12 இறந்துப்போகாமல் இருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானம்வரை எழும்பினது.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\s1 உடன்படிக்கைப் பெட்டி இஸ்ரவேலுக்கு திரும்புதல்
\p
\v 1 கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தர்களின் தேசத்தில் ஏழுமாதங்கள் இருந்தது.
\v 2 பின்பு பெலிஸ்தர்கள் ஆசாரியர்களையும் குறிசொல்கிறவர்களையும் அழைத்து: கர்த்தருடைய பெட்டியை நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை நாங்கள் எவ்விதமாக அதனுடைய இடத்திற்கு அனுப்பிவிடலாம் என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள்.
\s5
\v 3 அதற்கு அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நீங்கள் அனுப்பினால், அதை வெறுமையாக அனுப்பாமல், குற்றநிவாரணக் காணிக்கையை எப்படியாவது அவருக்குச் செலுத்தவேண்டும்; அப்பொழுது நீங்கள் சுகமடைவதும் மட்டுமில்லாமல், அவருடைய கை உங்களை விடாதிருந்த காரணம் என்ன என்றும் உங்களுக்குத் தெரியவரும் என்றார்கள்.
\v 4 அதற்கு அவர்கள்: குற்றநிவாரணக் காணிக்கையாக நாங்கள் அவருக்கு எதைச் செலுத்தவேண்டும் என்று கேட்டதற்கு, அவர்கள்: உங்கள் எல்லோருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதை உண்டானதினால், பெலிஸ்தர்களுடைய அதிபதிகளின் எண்ணிக்கைக்குச் சரியாக மூலவியாதியின் சாயலின்படி செய்த ஐந்து பொன் சிலைகளும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.
\s5
\v 5 ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சிலைகளையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சிலைகளையும் நீங்கள் உண்டாக்கி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள் மேலும், உங்களுடைய தேவர்கள்மேலும், உங்களுடைய தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களைவிட்டு விலகும்.
\v 6 எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினது போல, நீங்கள் உங்கள் இருதயத்தை ஏன் கடினப்படுத்துகிறீர்கள்? அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, மக்களை அவர்கள் அனுப்பிவிட்டதும், அவர்கள் போய்விட்டதும் இல்லையோ?
\s5
\v 7 இப்போதும் நீங்கள் ஒரு புதுவண்டி செய்து, நுகம்பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப் பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டியிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டுவந்து விட்டு,
\v 8 பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டியின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரணக் காணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன் உருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.
\v 9 அப்பொழுது பாருங்கள்; அது தன்னுடைய எல்லைக்குப் போகிறவழியாக பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாக நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.
\s5
\v 10 அந்த மனிதர்கள் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டு வந்து, அவைகளை வண்டியிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,
\v 11 கர்த்தருடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சிலைகளும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டியின்மேல் வைத்தார்கள்.
\v 12 அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியில் செவ்வையாகப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கத்திக்கொண்டே நடந்தது; பெலிஸ்தர்களின் ஆளுனர்கள் பெத்ஷிமேசின் எல்லைவரை அவைகளின் பின்னாகவே போனார்கள்.
\s5
\v 13 பெத்ஷிமேசின் மனிதர்கள் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களினால் ஏறெடுத்துப்பார்க்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள்.
\s5
\v 14 அந்த வண்டி பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல் இருந்தது; அப்பொழுது வண்டியின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள்.
\v 15 லேவியர்கள் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடு இருந்த பொன் உருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனிதர்கள், அன்றையதினம் கர்த்தருக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்திப் பலிகளையிட்டார்கள்.
\s5
\v 16 பெலிஸ்தரின் ஐந்து ஆளுநர்களும் இவைகளைப் பார்த்து, அன்றையதினம் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள்.
\s5
\v 17 பெலிஸ்தர்கள் குற்றநிவாரணத்திற்காக, கர்த்தருக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சிலைகளாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று.
\v 18 பொன்னால் செய்த சுண்டெலிகளோ, அரணான பட்டணங்கள் துவங்கி நாட்டிலுள்ள கிராமங்கள் வரை, கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்வரை, ஐந்து ஆளுநர்களுக்கும் அதிகாரத்தில் இருக்கிற பெலிஸ்தர்களுடைய எல்லா ஊர்களின் எண்ணிக்கைக்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்த நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானான யோசுவாவின் வயலில் இருக்கிறது.
\s5
\v 19 ஆனாலும் பெத்ஷிமேசின் மனிதர்கள் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் மக்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் மக்களைப் பேரழிவாக அடித்ததினால், மக்கள் துக்கமாக இருந்தார்கள்.
\v 20 இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கக்கூடியவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனிதர்கள் சொல்லி,
\s5
\v 21 கீரியாத்யாரீமின் குடியிருப்புகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தர்கள் கர்த்தருடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்துக்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 இஸ்ரவேலர்களைக் கர்த்தர் இரட்சிக்கிறார்
\p
\v 1 அப்படியே கீரியாத்யாரீமின் மனிதர்கள் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படி, அவனுடைய மகனான எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.
\v 2 பெட்டி கீரியாத்யாரீமிலே அநேகநாள் தங்கியிருந்தது; இருபது வருடங்கள் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தார்கள் எல்லோரும் கர்த்தரை நினைத்து, அழுதுகொண்டிருந்தார்கள்.
\s5
\v 3 அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார்கள் அனைவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்பினால், அந்நிய தெய்வங்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தரிடம் திருப்பி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தர்களுடைய கைகளுக்கு விடுவிப்பார் என்றான்.
\v 4 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள்.
\s5
\v 5 பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரிடம் மன்றாடும்படி, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் மிஸ்பாவிலே கூடிவரச்செய்யுங்கள் என்றான்.
\v 6 அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றையதினம் உபவாசம்செய்து, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் மக்களை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.
\s5
\v 7 இஸ்ரவேல் மக்கள் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்களின் ஆளுனர்கள் இஸ்ரவேலுக்கு எதிராக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் மக்கள் கேட்டு, பெலிஸ்தர்களினிமித்தம் பயந்து,
\v 8 சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தர்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கும்படி, எங்களுக்காக அவரை நோக்கி இடைவிடாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.
\s5
\v 9 அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு பதில் அருளினார்.
\s5
\v 10 சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்தும்போது, பெலிஸ்தர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்கள்மேல் அந்த நாளிலே முழங்கச்செய்தார், அவர்களைக் குழம்பச்செய்ததால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டு மடிந்தார்கள்.
\v 11 அப்பொழுது இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தர்களைப் பின்தொடர்ந்துபோய், பெத்காரீம் பள்ளத்தாக்குவரை அவர்களை முறியடித்தார்கள்.
\s5
\v 12 அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இதுவரை கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பெயரிட்டான்.
\s5
\v 13 இப்படியாக பெலிஸ்தர்கள் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடித் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் கர்த்தருடைய கை பெலிஸ்தர்களுக்கு எதிராக இருந்தது.
\v 14 பெலிஸ்தர்கள் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவங்கிக் காத்வரை உள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்கள் கையில் இல்லாதபடி, திருப்பிக்கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியர்களுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.
\s5
\v 15 சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
\v 16 அவன் ஒவ்வொரு வருடமும் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அந்த இடங்களில் எல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தப்பின்பு,
\v 17 அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 இஸ்ரவேலர்களுக்கான ராஜா
\p
\v 1 சாமுவேல் முதிர்வயதானபோது, தன் மகன்களை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.
\v 2 அவனுடைய மூத்தமகனின் பெயர் யோவேல், இளையமகனின் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாக இருந்தார்கள்.
\v 3 ஆனாலும் அவனுடைய மகன்கள் அவனுடைய வழிகளில் நடக்காமல், பொருளாசைக்குச் சாய்ந்து, லஞ்சம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
\s5
\v 4 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் கூட்டம்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் வந்து:
\v 5 இதோ, நீர் முதிர்வயதானீர்; உம்முடைய மகன்கள் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் எல்லா ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்க, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.
\s5
\v 6 எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தவறானதாக தோன்றினது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்தான்.
\v 7 அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: மக்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடி, என்னைத்தான் தள்ளினார்கள்.
\s5
\v 8 நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்த நாள்வரை அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களை ஆராதித்துவந்த தங்கள் எல்லாச் செயல்களின்படி செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள்.
\v 9 இப்பொழுதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் விருப்பத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் விதம் என்னவென்று அவர்களுக்கு வலியுறுத்தி தெரியப்படுத்து என்றார்.
\s5
\v 10 அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட மக்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:
\v 11 உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன்னுடைய ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் மகன்களை எடுத்து, தன்னுடைய ரதங்களை ஓட்டுபவர்களாகவும் தன்னுடைய குதிரை வீரர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.
\v 12 ஆயிரம் பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன்னுடைய நிலத்தை உழுகிறவர்களாகவும், தன்னுடைய விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன்னுடைய யுத்த ஆயுதங்களையும் தன்னுடைய ரதங்களின் உபகரணங்களையும் செய்கிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.
\s5
\v 13 உங்கள் மகள்களைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல்செய்கிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.
\v 14 உங்களுடைய வயல்களிலும், உங்களுடைய திராட்சை தோட்டங்களிலும், உங்களுடைய ஒலிவத்தோப்புக்களிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன்னுடைய ஊழியக்காரர்களுக்குக் கொடுப்பான்.
\v 15 உங்களுடைய தானியத்திலும் உங்களுடைய திராட்சை பலனிலும் தசமபாகம் வாங்கி, தன்னுடைய அதிகாரிகளுக்கும் தன்னுடைய வேலைக்காரர்களுக்கும் கொடுப்பான்.
\s5
\v 16 உங்களுடைய வேலைக்காரர்களையும், உங்களுடைய வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபர்களையும், உங்களுடைய கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.
\v 17 உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
\v 18 நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினால் அந்த நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்த நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.
\s5
\v 19 மக்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனம் இல்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.
\v 20 எல்லா மக்களையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள்.
\s5
\v 21 சாமுவேல் மக்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான்.
\v 22 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் மக்களைப் பார்த்து: அவரவர்கள் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 சவுல் தன் தந்தையின் கழுதைகளைத் தேடுதல்
\p
\v 1 பென்யமீன் கோத்திரத்தார்களில் கீஸ் என்னும் பெயருள்ள, செல்வாக்குள்ள ஒரு மனிதன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் மகனான அபீயேலின் மகன்.
\v 2 அவனுக்குச் சவுல் என்னும் பெயருள்ள மிகவும் அழகான வாலிபனான ஒரு மகன் இருந்தான்; இஸ்ரவேல் மக்களில் அவனை விட அழகுள்ளவன் இல்லை; எல்லா மக்களும் அவனுடைய தோளிற்கு கீழ் இருந்தனர். இவன் அவர்களை விட உயரமுள்ளவனாயிருந்தான்.
\s5
\v 3 சவுலின் தகப்பனான கீசுடைய கழுதைகள் காணாமல்போனது; ஆகையால் கீஸ் தன் மகனான சவுலைப் பார்த்து: நீ வேலைக்காரர்களில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான்.
\v 4 அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக் கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை; பென்யமீன் நாட்டைக் கடந்தும் அவைகளைக் காணவில்லை.
\s5
\v 5 அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னோடிருந்த வேலைக்காரனை நோக்கி: என் தகப்பன், கழுதைகளின் மேலுள்ள கவலையை விட்டு, நமக்காகக் கவலைப்படாதபடித் திரும்பிப்போவோம் வா என்றான்.
\v 6 அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனிதன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒரு வேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்.
\s5
\v 7 அப்பொழுது சவுல் தன்னுடைய வேலைக்காரனைப் பார்த்து: நாம் போனாலும் அந்த மனிதனுக்கு என்ன கொண்டுபோவோம்; நம்முடைய பைகளில் இருந்த தின்பண்டங்கள் செலவழிந்து போனது; தேவனுடைய மனிதனாகிய அவருக்குக் கொண்டு போவதற்குரிய காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்றான்.
\v 8 அந்த வேலைக்காரன் மறுபடியும் சவுலைப் பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனிதன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படி, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான்.
\s5
\v 9 முற்காலத்தில் இஸ்ரவேலில் தேவனிடத்தில் விசாரிக்கப்போகிற எவனும் ஞானதிருஷ்டிக்காரனிடம் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்த நாளிலே தீர்க்கதரிசி எனப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான்.
\v 10 அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து: நல்ல காரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனிதன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள்.
\v 11 அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாக ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.
\s5
\v 12 அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; சீக்கிரமாகப் போங்கள்; இன்றைக்கு மக்கள் மேடையில் பலியிடுகிறதினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார்.
\v 13 நீங்கள் பட்டணத்திற்குள் நுழைந்தவுடனே, அவர் மேடையின்மேல் சாப்பிடப் போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வரும்வரை மக்கள் சாப்பிடமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் சாப்பிடுவார்கள்; உடனே போங்கள்; இந்த நேரத்திலே அவரைக் காணலாம் என்றார்கள்.
\s5
\v 14 அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின்மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டு வந்தான்.
\s5
\v 15 சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காது கேட்கும்படி:
\v 16 நாளை இதே நேரத்தில் பென்யமீன் நாட்டானான ஒரு மனிதனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என்னுடைய மக்களான இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம் செய்வாய்; அவன் என்னுடைய மக்களை பெலிஸ்தர்களின் கையிலிருந்து மீட்பான்; என்னுடைய மக்களின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியால், நான் அவர்களை ஏக்கத்தோடு பார்த்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.
\s5
\v 17 சாமுவேல் சவுலைக் கண்டபோது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனிதன் இவனே; இவன்தான் என்னுடைய மக்களை ஆளுவான் என்றார்.
\v 18 சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான்.
\v 19 சாமுவேல் சவுலுக்குப் பதிலாக: ஞானதிருஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடு சாப்பிடவேண்டும்; நாளைக்காலை நான் உன்னுடைய இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன்.
\s5
\v 20 மூன்று நாளைக்கு முன்னே காணாமல்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் கண்டுபிடிக்கப்பட்டது; இதைத் தவிர எல்லா இஸ்ரவேலின் விருப்பம் யாரை நாடுகிறது? உன்னையும் உன்னுடைய வீட்டார்கள் அனைவரையும் அல்லவா? என்றான்.
\v 21 அப்பொழுது சவுல் பதிலாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என்னுடைய குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வது ஏன் என்றான்.
\s5
\v 22 சாமுவேல் சவுலையும் அவனுடைய வேலைக்காரனையும் உணவறைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய முப்பது பேராக இருந்தார்கள்.
\s5
\v 23 பின்பு சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து: நான் உன்னுடைய கையிலே ஒரு பங்கைக் கொடுத்துவைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை என்றான்.
\v 24 அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடு இருந்ததையும் எடுத்துக்கொண்டு வந்து அதை சவுலுக்கு முன்பாக வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்காக வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் மக்களை விருந்துக்கு அழைத்தது முதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடு சாப்பிட்டான்.
\s5
\v 25 அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு, அவனுடைய மேல்வீட்டிலே சவுலோடு பேசிக்கொண்டிருந்தான்.
\v 26 அவர்கள் அதிகாலை கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின்மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படி ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள்.
\s5
\v 27 அவர்கள் பட்டணத்தின் கடைசிவரை இறங்கிவந்தபோது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்துபோனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படி, நீ சற்று இங்கே நில் என்றான்.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 சாமுவேல் சவுலை அபிஷேகித்தல்
\p
\v 1 அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி, அவனை முத்தமிட்டு: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்செய்தார் அல்லவா?
\v 2 நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையான செல்சாகில் ராகேலின் கல்லறைக்கு அருகில் இரண்டு மனிதர்களைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளைப்பற்றிய கவலையைவிட்டு, உங்களுக்காக கவலைப்பட்டு, என் மகனுக்காக என்ன செய்வேன்? என்கிறான் என்று சொல்வார்கள்.
\s5
\v 3 நீ அந்த இடத்தைவிட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியிலே சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனிதர்கள் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சை ரசமுள்ள ஒரு தோல்பையும் கொண்டுவந்து,
\v 4 உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும்.
\s5
\v 5 பின்பு பெலிஸ்தர்களின் முகாம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் வரும்போது, மேடையிலிருந்து இறங்கி வருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தைச் சந்திப்பாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும், மேளமும், நாகசுரமும், சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.
\v 6 அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடு தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனிதனாவாய்.
\s5
\v 7 இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, நேரத்திற்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடு இருக்கிறார்.
\v 8 நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படி, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்கும்வரை, ஏழு நாட்கள் காத்திரு என்றான்.
\s1 சவுல் தீர்க்கதரிசிகளைப்போல மாறுதல்
\p
\s5
\v 9 அவன் சாமுவேலைவிட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறு இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நடந்தது.
\v 10 அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கியதால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்.
\s5
\v 11 அதற்கு முன்னே அவனை அறிந்தவர்கள் எல்லோரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்கிறதைப் பார்த்தபோது: கீசின் மகனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொண்டார்கள்.
\v 12 அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியானது.
\v 13 அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான்.
\s5
\v 14 அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவனுடைய வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்கும் காணாததால், சாமுவேலிடத்துக்குப் போனோம் என்றான்.
\v 15 அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான்.
\v 16 சவுல் தன் சிறிய தகப்பனைப் பார்த்து: கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று எங்களுக்கு வெளிப்படையாக சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்ஜிய காரியத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை.
\s1 சவுலை ராஜாவாக சாமுவேல் அறிவித்தல்
\p
\s5
\v 17 சாமுவேல் மக்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து,
\v 18 இஸ்ரவேல் மக்களைப் பார்த்து: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படச்செய்த, உங்களை எகிப்தியர்களின் கைக்கும், உங்களைத் துன்பப்படுத்தின எல்லா ராஜாக்களின் கைக்கும் மீட்டுவிட்டேன்.
\v 19 நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை மீட்டு இரட்சித்த உங்கள் தேவனை இந்த நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்களுக்கு ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருக்கு முன்பாக உங்கள் கோத்திரத்தின் படியும், வம்சங்களின்படியும் வந்து நில்லுங்கள் என்றான்.
\s5
\v 20 சாமுவேல் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் அருகில் வரச்செய்தபின்பு பென்யமீனின் கோத்திரத்தின்மேல் சீட்டு விழுந்தது.
\v 21 அவன் பென்யமீன் கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படி அருகில் வரச்செய்தபின்பு, மாத்திரி குடும்பத்தின்மேலும், அதிலே கீசின் மகனான சவுலின்மேலும், சீட்டு விழுந்தது; அவனைத் தேடினபோது, அவன் காணவில்லை.
\s5
\v 22 அவன் இனி இங்கே வருவானா என்று அவர்கள் திரும்பக் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது: இதோ, அவன் பொருட்கள் வைக்கிற இடத்திலே ஒளிந்துகொண்டிருக்கிறான் என்று கர்த்தர் சொன்னார்.
\v 23 அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் மக்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா மக்களும் அவனுடைய தோளிற்கு கீழ் இருந்தார்கள். இவன் அவர்களை விட உயரமுள்ளவனாயிருந்தான்.
\s5
\v 24 அப்பொழுது சாமுவேல் எல்லா மக்களையும் பார்த்து: கர்த்தர் தெரிந்து கொண்டவனைப் பாருங்கள், எல்லா மக்களுக்குள்ளும் அவனுக்குச் சமமானவன் இல்லை என்றான்; அப்பொழுது மக்கள் எல்லோரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள்.
\s5
\v 25 சாமுவேல் ராஜ்ஜிய முறையை மக்களுக்குத் தெரிவித்து, அதை ஒரு புத்தகத்தில் எழுதி, கர்த்தருக்கு முன்பாக வைத்து, மக்களையெல்லாம் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.
\s5
\v 26 சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதைத் தூண்டினாரோ, அவர்களும் அவனோடு போனார்கள்.
\v 27 ஆனாலும் சில பயனற்ற மக்கள்: இவனா நம்மைக் காப்பாற்றப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டுவராமல் அவனை அசட்டைசெய்தார்கள்; அவனோ காது கேட்காதவனைப்போல இருந்தான்.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\s1 அம்மோனிய ராஜாவாகிய நாகாஸ்
\p
\v 1 அந்தக் காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிகையிட்டான்; அப்பொழுது யாபேசின் மனிதர்கள் எல்லோரும் நாகாசை நோக்கி: எங்களோடு உடன்படிக்கைசெய்துகொள்; அப்பொழுது உமக்கு பணிவிடை செய்வோம் என்றார்கள்.
\v 2 அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின்மேலும் நிந்தைவரசெய்வதே நான் உங்களோடு செய்யும் உடன்படிக்கை என்றான்.
\s5
\v 3 அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் தூதுவர்களை அனுப்பும்படியாக, ஏழு நாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை காப்பாற்றுகிறவர்கள் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள்.
\s1 சவுல் யாபேஸ் கீலேயாத்தைக் காப்பாற்றுதல்
\p
\s5
\v 4 அந்தத் தூதுவர்கள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, மக்களின் காது கேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது மக்களெல்லோரும் சத்தமிட்டு அழுதார்கள்.
\v 5 இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, மக்கள் அழுகிற காரணம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனிதர்கள் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
\s5
\v 6 சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கியதால் அவன் மிகவும் கோபப்பட்டு,
\v 7 அவன் இரண்டு எருதுகளைப் பிடித்து, துண்டித்து அந்தத் தூதுவர்களின் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுல் மற்றும் சாமுவேலின் பின்செல்லாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படியே செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் மக்களின்மேல் வந்ததால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.
\v 8 அவர்களைப் பேசேக்கிலே கணக்கிட்டுப் பார்த்தான்; இஸ்ரவேல் மக்களில் மூன்று லட்சம்பேரும், யூதா மனிதர்களில் முப்பதாயிரம்பேரும் இருந்தார்கள்.
\s5
\v 9 அங்கே வந்த தூதுவர்களை அவர்கள் பார்த்து: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு மீட்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனிதர்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; தூதுவர்கள் வந்து யாபேசின் மனிதர்களிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
\v 10 பின்பு யாபேசின் மனிதர்கள்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் விருப்பத்தின்படி எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள்.
\s5
\v 11 மறுநாளிலே சவுல் மக்களை மூன்று படைகளாக பிரித்து, விடியற்காலையில் முகாமிற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியர்களை முறியடித்தான்; தப்பினவர்களில் இருவர் இருவராக சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லோரும் சிதறிப்போனார்கள்.
\s5
\v 12 அப்பொழுது மக்கள் சாமுவேலைப் பார்த்து: சவுலா நமக்கு ராஜாவாக இருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனிதனை நாங்கள் கொல்லும்படி ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.
\v 13 அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படக்கூடாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு மீட்பைக் கொடுத்தார் என்றான்.
\s5
\v 14 அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜாவை ஏற்படுத்துவோம் வாருங்கள் என்றான்.
\v 15 அப்படியே மக்கள் எல்லோரும் கில்காலுக்குப் போய், அந்த இடத்திலே கர்த்தருக்கு முன்பாக சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருக்கு முன்பாக சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\s1 சாமுவேல் இஸ்ரவேலரிடம் ராஜாவை பற்றி பேசுதல்
\p
\v 1 அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர்கள் அனைவரையும் பார்த்து: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொல்லைக்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன்.
\v 2 இப்போதும் இதோ, ராஜா உங்களுக்கு முன்பாக வாழ்ந்துவருகிறார்; நானோ முதிர்வயதானவனும் நரைத்தவனுமானேன்; என்னுடைய மகன்கள் உங்களோடிருப்பார்கள்; நான் என்னுடைய சிறுவயதுமுதல் இந்த நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாக வாழ்ந்துவந்தேன்.
\s5
\v 3 இதோ, நான் இருக்கிறேன்; கர்த்தருக்கு முன்பாகவும் அவர் அபிஷேகம்செய்து வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயம்செய்தேன்? யாருக்கு தீங்கு செய்தேன்? யார் கையில் லஞ்சம் வாங்கிக்கொண்டு குருடனாக இருந்தேன்? சொல்லுங்கள்; அப்படி இருக்குமானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.
\s5
\v 4 அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயம் செய்யவும் இல்லை; எங்களுக்கு தீங்கு செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள்.
\v 5 அதற்கு அவன்: நீங்கள் என்னுடைய கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாக இருக்கிறார்; அவர் அபிஷேகம்செய்தவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சிதான் என்றார்கள்.
\s5
\v 6 அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: மோசே, ஆரோனை, ஏற்படுத்தியவரும், உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தவரும் கர்த்தரே.
\v 7 இப்பொழுதும் கர்த்தர் உங்களுக்கும் உங்களுடைய பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான செய்கைகளைக்குறித்தும், நான் கர்த்தருக்கு முன்பாக உங்களோடு நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்.
\s5
\v 8 யாக்கோபு எகிப்திற்கு போயிருக்கும்போது, உங்கள் முன்னோர்கள் கர்த்தரைப் பார்த்து முறையிட்டார்கள், அப்பொழுது கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் அனுப்பினார்; அவர்கள் உங்கள் முன்னோர்களை எகிப்திலிருந்து அழைத்துவந்து, அவர்களை இந்த இடத்திலே குடியிருக்கச்செய்தார்கள்.
\v 9 அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்துபோகிறபோது, அவர் அவர்களை ஆத்சோரின் படைத்தலைவனாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தர்களின் கையிலும், மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்தார்கள்.
\s5
\v 10 ஆகையால் அவர்கள் கர்த்தரைப் பார்த்து முறையிட்டு: நாங்கள் கர்த்தரை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் வழிபட்டதினாலே, பாவம்செய்தோம்; இப்போதும் எங்கள் எதிரிகளின் கைக்கு எங்களை மீட்டுவிடும்; இனி உம்மை வழிபடுவோம் என்றார்கள்.
\v 11 அப்பொழுது கர்த்தர் எருபாகாலையும், பேதானையும், யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிச் சுற்றிலும் இருந்த உங்கள் எதிரிகளின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.
\s5
\v 12 அம்மோன் மக்களின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாக வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாக இருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள்.
\v 13 இப்பொழுதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, கர்த்தர் உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார்.
\s5
\v 14 நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாகக் கலகம்செய்யாமல் கர்த்தருக்குப் பயந்து, அவருக்கு பணிவிடைசெய்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாக இருப்பீர்கள்.
\v 15 நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு எதிராக கலகம் செய்தால், கர்த்தருடைய கை உங்கள் முன்னோர்களுக்கு எதிராக இருந்ததுபோல உங்களுக்கும் எதிராக இருக்கும்.
\s5
\v 16 இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்.
\v 17 இன்று கோதுமை அறுவடையின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதால், கர்த்தரின் பார்வைக்குச் செய்த உங்களுடைய தீங்கு பெரியதென்று நீங்கள் பார்த்து உணரும்படி, நான் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்வேன்; அப்பொழுது இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி,
\v 18 சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்தான்; அன்றையதினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து;
\s5
\v 19 சாமுவேலைப் பார்த்து: நாங்கள் சாகாதபடி உம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் உம்முடைய அடியாருக்காக விண்ணப்பம் செய்யும்; நாங்கள் செய்த எல்லாப் பாவங்களோடும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்ட இந்தப் பாவத்தையும் சேர்த்துக்கொண்டோம் என்று மக்கள் எல்லோரும் சொன்னார்கள்.
\v 20 அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: பயப்படாதீர்கள்; நீங்கள் இந்தத் தீங்கையெல்லாம் செய்தீர்கள்; ஆனாலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் தொழுதுகொள்ளுங்கள்.
\v 21 பயனற்றதும், விடுவிக்கமுடியாததுமாக இருக்கிற வெறுமையானவைகளைப் பின்பற்றும்படி திரும்பாதீர்கள்; அவைகள் வீணானவைகளே.
\s5
\v 22 கர்த்தர் உங்களைத் தம்முடைய மக்களாக்கிக்கொள்வதற்கு பிரியமானதால், கர்த்தர் தம்முடைய மேன்மையான நாமத்தினிமித்தம் தமது மக்களைக் கைவிடமாட்டார்.
\v 23 நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாமல் இருந்தால் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்கிறவனாக இருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருக்கட்டும்; நன்மையும் சரியானதுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.
\s5
\v 24 நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் தொழுதுகொள்ளக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
\v 25 நீங்கள் இன்னும் தீங்கையே செய்தால், நீங்களும் உங்கள் ராஜாவும் அழிந்துபோவீர்கள் என்றான்.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 சாமுவேல் சவுலைக் கடிந்துகொள்ளல்
\p
\v 1 சவுல் அரசாட்சி செய்து, ஒரு வருடமானது; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருடம் அரசாண்டபோது,
\v 2 இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்காகத் தெரிந்துகொண்டான்; அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலோடு மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், ஆயிரம்பேர் யோனத்தானோடு பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலும் இருந்தார்கள்; மற்ற மக்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான்.
\s5
\v 3 யோனத்தான் கேபாவிலே முகாமிட்டிருந்த பெலிஸ்தர்களை முறியடித்தான்; பெலிஸ்தர்கள் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகவே, இதை எபிரெயர்கள் கேட்கட்டும் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதச்செய்தான்.
\v 4 முகாமிட்டிருந்த பெலிஸ்தர்களைச் சவுல் முறியடித்தான் என்றும், இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, மக்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
\s5
\v 5 பெலிஸ்தர்கள் இஸ்ரவேலோடு யுத்தம்செய்ய முப்பதாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலைப்போல எண்ணற்ற மக்களோடும் கூடிவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே முகாமிட்டார்கள்.
\s5
\v 6 அப்பொழுது இஸ்ரவேலர்கள் தங்களுக்கு உண்டான இக்கட்டை பார்த்தபோது, மக்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், கிணறுகளிலும், குகைகளிலும் ஒளிந்துக்கொண்டார்கள்.
\v 7 எபிரெயர்களில் சிலர் யோர்தானையும் கடந்து, காத் நாட்டிற்கும் கீலேயாத் தேசத்திற்கும் போனார்கள்; சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்; எல்லா மக்களும் பயந்து அவனுக்குப் பின்சென்றார்கள்.
\s5
\v 8 அவன் தனக்குச் சாமுவேல் குறித்தகாலத்தின்படி ஏழுநாள்வரை காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, மக்கள் அவனை விட்டுச் சிதறிப்போனார்கள்.
\v 9 அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான்.
\v 10 அவன் சர்வாங்கதகனபலியிட்டு முடிக்கிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வரவேற்க அவனுக்கு எதிராக போனான்.
\s5
\v 11 நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: மக்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாளில் நீர் வராததையும், பெலிஸ்தர்கள் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் பார்த்ததினால்,
\v 12 கில்காலில் பெலிஸ்தர்கள் எனக்கு விரோதமாக வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய இரக்கத்தைத் தேடவில்லை என்றும் நினைத்துத் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான்.
\s5
\v 13 சாமுவேல் சவுலைப் பார்த்து: முட்டாள் தனமாக செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; கைக்கொண்டிருந்தால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்ஜியத்தை என்றென்றும் உறுதிப்படுத்துவார்.
\v 14 இப்போதோ உம்முடைய ஆட்சி நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய மக்கள்மேல் தலைவனாக இருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.
\s5
\v 15 சாமுவேல் எழுந்து, கில்காலைவிட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடு இருக்கிற மக்களைக் கணக்கெடுக்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.
\v 16 சவுலும் அவனுடைய மகனான யோனத்தானும் அவர்களோடு இருக்கிற மக்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தர்களோ மிக்மாசிலே முகாமிட்டிருந்தார்கள்.
\s5
\v 17 கொள்ளைக்காரர்கள் பெலிஸ்தர்களின் முகாமிலிருந்து மூன்று படைகளாகப் புறப்பட்டு வந்தார்கள்; ஒரு படை ஒப்ரா வழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப்போனது.
\v 18 வேறொரு படை பெத்தொரோன் வழியாகப் போனது; வேறொரு படை வனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாகப் போனது.
\s5
\v 19 எபிரெயர்கள் பட்டயங்களையும் ஈட்டிகளையும் உண்டாக்காதபடிப் பார்த்துகொள்ள வேண்டும் என்று பெலிஸ்தர்கள் சொல்லியிருந்ததால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லனும் காணப்படவில்லை.
\v 20 இஸ்ரவேலர்கள் அனைவரும் அவரவர் தங்கள் கலப்பைகளின் இரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடாரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குவதற்கு, பெலிஸ்தர்களிடத்துக்குப் போகவேண்டியதாக இருந்தது.
\v 21 கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், மூன்று கூருள்ள ஆயுதங்களையும், கோடாரிகளையும், கதிர் அரிவாளையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது.
\s5
\v 22 யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவனுடைய மகனான யோனத்தானையும் தவிர, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற மக்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாமல் இருந்தது.
\v 23 பெலிஸ்தர்களின் முகாம் மிக்மாசிலிருந்து போகிற வழிவரை பரவியிருந்தது.
\s5
\c 14
\cl அத்தியாயம்– 14
\s1 யோனத்தான் பெலிஸ்தர்களைத் தாக்குதல்
\p
\v 1 ஒரு நாள் சவுலின் மகனான யோனத்தான் தன்னுடைய ஆயுததாரியான வாலிபனைப் பார்த்து: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தர்களின் முகாமிற்கு போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன்னுடைய தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
\s5
\v 2 சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதுளைமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடு இருந்த மக்கள் ஏறக்குறைய அறுநூறுபேராக இருந்தார்கள்.
\v 3 சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் மகனான பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும், அகிதூபின் மகனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தை அணிந்திருந்தான்; யோனத்தான் போனதை மக்கள் அறியாமல் இருந்தார்கள்.
\s5
\v 4 யோனத்தான் பெலிஸ்தர்களின் முகாமிற்கு போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பெயர், மற்றொன்றுக்குச் சேனே என்று பெயர்.
\v 5 அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது.
\s5
\v 6 யோனத்தான் தன் ஆயுததாரியான வாலிபனை பார்த்து: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்த முகாமிற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம் பேரைக்கொண்டோ, கொஞ்சம்பேரைக்கொண்டோ, இரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.
\v 7 அப்பொழுது அவனுடைய ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போங்கள்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடு வருகிறேன் என்றான்.
\s5
\v 8 அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனிதரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம்.
\v 9 நாங்கள் உங்களிடத்துக்கு வரும் வரை நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம்.
\v 10 எங்களிடத்துக்கு ஏறி வாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான்.
\s5
\v 11 அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தர்களின் முகாமிற்குமுன் தங்களைக் காண்பித்தார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள்: இதோ, எபிரெயர்கள் ஒளிந்துக்கொண்டிருந்த குழிகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி,
\v 12 முகாமில் இருக்கிற மனிதர்கள் யோனத்தானையும் அவனுடைய ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்திற்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியைப் பார்த்து: என் பின்னாலே ஏறி வா, கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,
\s5
\v 13 யோனத்தான் தன் கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறினான்; அவனுடைய ஆயுததாரி அவனுக்குப் பின்னாலே ஏறினான்; அப்பொழுது அவர்கள் யோனத்தானுக்கு முன்பாக மடிந்து விழுந்தார்கள்; அவனுடைய ஆயுததாரியும் அவனுக்குப் பின்னாலே வெட்டிக்கொண்டேபோனான்.
\v 14 யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய இருபதுபேர் அரை ஏர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள்.
\s5
\v 15 அப்பொழுது முகாமிலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், திகில் உண்டாகி, முகாமில் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன கூட்டத்திலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான திகிலாயிருந்தது.
\s5
\v 16 பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த இரவுக்காவலர்கள் பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, அங்கும் இங்கும் ஓடுவதைக் கண்டார்கள்.
\v 17 அப்பொழுது சவுல் தன்னோடு இருக்கிற மக்களைப் பார்த்து: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று கணக்கெடுங்கள் என்றான்; அவர்கள் கணக்கெடுக்கிறபோது, இதோ, யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.
\s5
\v 18 அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்த நாட்களில் இஸ்ரவேல் மக்களிடத்தில் இருந்தது.
\v 19 இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசும்போது, பெலிஸ்தர்களின் முகாமில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான்.
\s5
\v 20 சவுலும் அவனோடிருந்த மக்களும் கூட்டம் கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு எதிராக இருந்தபடியால் மகா குழப்பம் உண்டானது.
\v 21 இதற்குமுன்பு பெலிஸ்தர்களுடன் கூடி அவர்களோடு முகாமிலே திரிந்துவந்த எபிரெயர்களும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலர்களோடு சேர்ந்துக்கொண்டார்கள்.
\s5
\v 22 எப்பிராயீம் மலைகளில் ஒளிந்துக்கொண்டிருந்த எல்லா இஸ்ரவேலர்களும் பெலிஸ்தர்கள் தப்பியோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.
\v 23 இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை இரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன் வரை நடந்தது.
\s1 சவுல் ஆணையிடுதல்
\p
\s5
\v 24 இஸ்ரவேலர்கள் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; நான் என் எதிரிகளை பழிவாங்கவேண்டும், மாலைவரைக்கும் பொறுக்காமல் எவன் சாப்பிடுகிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் மக்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், மக்களில் ஒருவரும் கொஞ்சம்கூட சாப்பிடாதிருந்தார்கள்.
\v 25 தேசத்து மக்கள் எல்லோரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே நிலத்திலே தேன் கூடு கட்டியிருந்தது.
\v 26 மக்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; மக்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.
\s5
\v 27 யோனத்தான் தன் தகப்பன் மக்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டான்; அதினால் அவனுடைய கண்கள் தெளிந்தது.
\v 28 அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் மக்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகவே மக்கள் களைத்திருக்கிறார்கள் என்றான்.
\s5
\v 29 அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் மக்களைக் கலங்கப்பண்ணினார்: நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததில், என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.
\v 30 இன்றையதினம் மக்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் எதிரிகளின் கொள்ளையிலே ஏதாவது சாப்பிட்டிருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான படுகொலை மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.
\s5
\v 31 அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன் வரை பெலிஸ்தர்களை முறியடித்தபோது, மக்கள் மிகவும் களைத்திருந்தார்கள்.
\v 32 அப்பொழுது மக்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும், மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் சாப்பிட்டார்கள்.
\s5
\v 33 அப்பொழுது, இதோ, இரத்தத்தோடு இருக்கிறதை சாப்பிட்டதால் மக்கள் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்செய்தீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடம் உருட்டிக்கொண்டுவாருங்கள்.
\v 34 நீங்கள் மக்களுக்குள்ளே போய், இரத்தத்தோடிருக்கிறதைச் சாப்பிடுவதால், கர்த்தருக்கு எதிராக பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்து, பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; ஆகவே, மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இரவு தாங்களே கொண்டுவந்து, அங்கே அடித்தார்கள்.
\s5
\v 35 பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.
\s5
\v 36 அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இரவிலே பெலிஸ்தர்களைத் தொடர்ந்துபோய், காலை வெளிச்சமாகும் வரை அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவனிடத்தில் சேர்வோம் என்றான்.
\v 37 அப்படியே: பெலிஸ்தர்களைத் தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு பதில் சொல்லவில்லை.
\s5
\v 38 அப்பொழுது சவுல்: மக்களின் தலைவர்களே, நீங்கள் எல்லோரும் இங்கே சேர்ந்து வந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்து அறியுங்கள்.
\v 39 அது என் மகனான யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் நிச்சயமாக சாகவேண்டும் என்று இஸ்ரவேலை இரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பதில் சொல்லவில்லை.
\s5
\v 40 அதற்குப்பின்பு அவன் இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் மகனான யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; மக்கள் சவுலைப்பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள்.
\v 41 அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு உண்மையை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது, மக்களோ தப்பினார்கள்.
\v 42 எனக்கும் என் மகனான யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.
\s5
\v 43 அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான்.
\v 44 அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான் வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான்.
\s5
\v 45 மக்களோ சவுலை பார்த்து: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலை செய்யப்படலாமா? அது கூடாது; அவனுடைய தலையில் இருக்கிற ஒரு முடியும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடி, மக்கள் அவனைத் தப்புவித்தார்கள்.
\v 46 சவுல் பெலிஸ்தர்களை பின்தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தர்களும் தங்கள் இடத்திற்குப் போய்விட்டார்கள்.
\s1 சவுல் இஸ்ரவேலர்களின் பகைவர்களோடு போரிடுதல்
\p
\s5
\v 47 இப்படிச் சவுல் இஸ்ரவேலை ஆளுகிற ராஜரீகத்தைப் பெற்றுக்கொண்டு, சுற்றிலும் இருக்கிற தன்னுடைய எல்லா எதிரிகளாகிய மோவாபியர்களுக்கும், அம்மோன் மக்களுக்கும், ஏதோமியர்களுக்கும், சோபாவின் ராஜாக்களுக்கும், பெலிஸ்தர்களுக்கும் விரோதமாக யுத்தம்செய்து, எவர்கள்மேல் படையெடுத்தானோ, அவர்களையெல்லாம் அடக்கினான்.
\v 48 அவன் பலத்து, அமலேக்கியர்களை முறியடித்து, இஸ்ரவேலர்களைக் கொள்ளையிடுகிற எல்லோருடைய கைக்கும் அவர்களை மீட்டெடுத்தான்.
\s5
\v 49 சவுலுக்கு இருந்த மகன்கள்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்பவர்கள் அவனுடைய இரண்டு மகள்களில், மூத்தவள் பேர் மேரப், இளையவள் பேர் மீகாள்.
\v 50 சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம், அவள் அகிமாசின் மகள்; அவனுடைய சேனாபதியின்பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறிய தகப்பனாகிய நேரின் மகன்.
\v 51 கீஸ் சவுலின் தகப்பன்; அப்னேரின் தகப்பனாகிய நேர் ஆபியேலின் மகன்.
\s5
\v 52 சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தர்களின்மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையோ ஒரு பலசாலியையோ பார்க்கும்போது, அவர்கள் எல்லோரையும் தன்னிடம் சேர்த்துக்கொள்ளுவான்.
\s5
\c 15
\cl அத்தியாயம்– 15
\s1 சவுலை ராஜாவாக இராதபடி கர்த்தர் புறக்கணித்தல்
\p
\v 1 பின்பு சாமுவேல் சவுலைப் பார்த்து: இஸ்ரவேலர்களாகிய தம்முடைய மக்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்செய்வதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்:
\v 2 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
\v 3 இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான்.
\s5
\v 4 அப்பொழுது சவுல்: இதை மக்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களை கணக்கெடுத்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா மக்கள் பத்தாயிரம்பேருமாக இருந்தார்கள்.
\v 5 சவுல் அமலேக்குடைய பட்டணம் வரை வந்து, பள்ளத்தாக்கிலே காத்திருந்தான்.
\s5
\v 6 சவுல் கேனியரை பார்த்து: நான் அமலேக்கியர்களோடு உங்களையும் அழிக்காதபடி, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் தயைசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர்கள் அமலேக்கியர்களின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள்.
\v 7 அப்பொழுது சவுல்: ஆவிலா துவங்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லை வரை இருந்த அமலேக்கியர்களை முறியடித்து,
\s5
\v 8 அமலேக்கியர்களின் ராஜாவான ஆகாகை உயிரோடு பிடித்தான்; மக்கள் அனைவரையும் கூர்மையான பட்டயத்தாலே படுகொலை செய்தான்.
\s1 சவுலின் பாவத்தை சாமுவேல் உணர்த்துதல்
\p
\v 9 சவுலும் மக்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் சிறந்தவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனமில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான அனைத்தையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள்.
\s5
\v 10 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது:
\v 11 நான் சவுலை ராஜாவாக்கியது எனக்கு வருத்தமாக இருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமல் போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் வருந்தி, இரவு முழுவதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.
\s5
\v 12 மறுநாள் அதிகாலையில் சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு வெற்றிதூண் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது.
\v 13 சாமுவேல் சவுலினிடத்திற்கு போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.
\s5
\v 14 அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.
\v 15 அதற்குச் சவுல்: அமலேக்கியர்களிடத்திலிருந்து அவைகளைக் கொண்டு வந்தார்கள்; மக்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.
\v 16 அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இரவில் எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான்.
\s5
\v 17 அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராக இருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தாரே.
\v 18 இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியர்களாகிய அந்தப் பாவிகளைக் கொன்று, அவர்களை முழுவதுமாக அழிக்கும்வரை, அவர்களோடு யுத்தம்செய் என்று சொல்லி, உம்மை அந்த வழியாக அனுப்பினார்.
\v 19 இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக்கேட்காமல், கொள்ளைபொருட்களின் மேல் ஆசைவைத்து, கர்த்தருடைய பார்வைக்குப் தீங்கானதை செய்தது என்ன என்றான்.
\s5
\v 20 சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவான ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியர்களைச் கொலை செய்தேன்.
\v 21 மக்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுவதற்காக, கொள்ளைபொருட்களிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே முதன்மையானவகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.
\s5
\v 22 அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைவிட, சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைவிட கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் கொழுப்பைவிட செவிகொடுத்தலும் உத்தமம்.
\v 23 கலகம்செய்தல் பில்லிசூனிய பாவத்திற்கும், பிடிவாதம்செய்தல் அவபக்திக்கும் விக்கிரக ஆராதனைக்கும் சமமாக இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்ததாலே, அவர் உம்மை ராஜாவாக இல்லாதபடி புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
\s5
\v 24 அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதால் பாவம் செய்தேன்; நான் மக்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.
\v 25 இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான்.
\s5
\v 26 சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடுத் திரும்பிவருவதில்லை; கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இல்லாதபடி, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
\v 27 போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவனுடைய சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான், அது கிழிந்துபோயிற்று.
\s5
\v 28 அப்பொழுது சாமுவேல் அவனை பார்த்து: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்ஜியத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைவிட உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.
\v 29 இஸ்ரவேலின் பெலனாக இருப்பவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதிலிருந்து மனம் மாறுவதும் இல்லை; மனம் மாற அவர் மனிதன் அல்ல என்றான்.
\s5
\v 30 அதற்கு அவன்: நான் பாவம் செய்தேன்; இப்போது என் மக்களின் மூப்பர்களுக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி, என்னோடுத் திரும்பிவாரும் என்றான்.
\v 31 அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் கர்த்தரைத் தொழுதுகொண்டான்.
\s5
\v 32 பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவான ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு போனது நிச்சயம் என்றான்.
\v 33 சாமுவேல்: உன் பட்டயம் பெண்களைப் பிள்ளை இல்லாதவர்களாக ஆக்கினதுபோல, பெண்களுக்குள்ளே உன் தாயும் பிள்ளை இல்லாதவள் ஆவாள் என்று சொல்லி, சாமுவேல் கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக ஆகாகைத் துண்டு துண்டாக வெட்டிப்போட்டான்.
\s5
\v 34 பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
\v 35 சவுல் மரணமடையும் நாள்வரை சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மன வருத்தப்பட்டதினால், சாமுவேல் சவுலுக்காகத் துக்கப்பட்டுக்கொண்டிருந்தான்.
\s5
\c 16
\cl அத்தியாயம்– 16
\s1 சாமுவேல் தாவீதை அபிஷேகம் செய்தல்
\p
\v 1 கர்த்தர் சாமுவேலைப் பார்த்து: இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இல்லாதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எதுவரை துக்கப்பட்டுக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவனுடைய மகன்களில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
\s5
\v 2 அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி,
\v 3 ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்கிறவனை எனக்காக அபிஷேகம்செய்வாயாக என்றார்.
\s5
\v 4 கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அந்த ஊரின் மூப்பர்கள் நடுக்கத்தோடு அவனுக்கு எதிராக வந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள்.
\v 5 அதற்கு அவன்: சமாதானம் தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு, என்னோடுப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவனுடைய மகன்களையும் பரிசுத்தம்செய்து, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான்.
\s5
\v 6 அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம் செய்யப்படுபவன் இவன்தானோ என்றான்.
\v 7 கர்த்தர் சாமுவேலை பார்த்து: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனிதன் பார்க்கிறபடி நான் பார்க்கமாட்டேன்; மனிதன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
\s5
\v 8 அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்தான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை என்றான்.
\v 9 ஈசாய் சம்மாவையும் கடந்துபோகச்செய்தான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான்.
\v 10 இப்படி ஈசாய் தன்னுடைய மகன்களில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்தான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;
\s5
\v 11 உன்னுடைய பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லோருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயைப் பார்த்து: ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; அவன் இங்கே வரும்வரை நான் சாப்பிடாமல் இருப்பேன் என்றான்.
\v 12 ஆள் அனுப்பி அவனை வரவழைத்தான்; அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல அழகுள்ளவனாக இருந்தான்; அப்பொழுது கர்த்தர் இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்செய் என்றார்.
\s5
\v 13 அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர்கள் நடுவிலே அபிஷேகம்செய்தான்; அந்த நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.
\s1 சவுலைத் தீய ஆவி துன்புறுத்துதல்
\p
\s5
\v 14 கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு தீய ஆவி அவனை அலைக்கழித்துக்கொண்டிருந்தது.
\v 15 அப்பொழுது சவுலின் ஊழியக்காரர்கள் அவனை பார்த்து: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு தீய ஆவி உம்மை அலைக்கழிக்கிறதே.
\v 16 சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட தீய ஆவி உம்மேல் இறங்கும்போது, அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சுகமுண்டாகும் என்றார்கள்.
\s5
\v 17 சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: நன்றாக வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
\v 18 அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பதிலாக: இதோ, பெத்லெகேமியனான ஈசாயின் மகன் ஒருவனை பார்த்திருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பலசாலி, யுத்தவீரன், பேச்சு திறமை உள்ளவன், அழகானவன்; கர்த்தர் அவனோடு இருக்கிறார் என்றான்.
\v 19 அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டு மந்தையில் இருக்கிற உன் மகனான தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.
\s5
\v 20 அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் மகனான தாவீதின் மூலமாக சவுலுக்கு அனுப்பினான்.
\v 21 அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் நேசித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்.
\s5
\v 22 சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என்னுடைய கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொல்லச் சொன்னான்.
\v 23 அப்படியே தேவனால் விடப்பட்ட தீய ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன்னுடைய கையினால் வாசிப்பான்; அதினாலே தீய ஆவி சவுலை விட்டு நீங்கி, ஆறுதலடைந்து, சுகமடைவான்.
\s5
\c 17
\cl அத்தியாயம்– 17
\s1 இஸ்ரவேலர்களுக்குக் கோலியாத்தின் சவால்
\p
\v 1 பெலிஸ்தர்கள் யுத்தம் செய்வதற்குத் தங்கள் இராணுவங்களைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒன்றாகக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே முகாமிட்டார்கள்.
\s5
\v 2 சவுலும் இஸ்ரவேல் மனிதர்களும் ஒன்றாகக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே முகாமிட்டு, பெலிஸ்தர்களுக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.
\v 3 பெலிஸ்தர்கள் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர்கள் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.
\s5
\v 4 அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தர்களின் முகாமிலிருந்து புறப்பட்டு வந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறு முழமும் ஒரு ஜாணுமாம்.
\v 5 அவன் தன்னுடைய தலையின்மேல் வெண்கல கவசத்தை போட்டு, ஒரு போர்க்கவசம்அணிந்திருப்பான்; அந்தக் கவசத்தின் எடை ஐயாயிரம் சேக்கல் வெண்கலமாக இருக்கும்.
\s5
\v 6 அவன் தன்னுடைய கால்களிலே வெண்கலக்கவசத்தையும் தன்னுடைய தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் அணிந்திருப்பான்.
\v 7 அவனுடைய ஈட்டியின் தாங்குக்கோல் நெசவுக்காரர்களின் தறிமரத்தின் அடர்த்தியாகவும் அவன் ஈட்டியின் முனை அறுநூறு சேக்கல் இரும்புமாயிருக்கும்; கேடகம் பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்.
\s5
\v 8 அவன் வந்து நின்று, இஸ்ரவேல் இராணுவங்களைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தியன் அல்லவா? நீங்கள் சவுலின் ஊழியக்காரர்கள் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்து கொள்ளுங்கள், அவன் என்னிடத்தில் வரட்டும்.
\v 9 அவன் என்னோடே யுத்தம்செய்யவும் என்னைக் கொல்லவும் திறமையுள்ளவனாக இருந்தால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரர்களாக இருப்போம்; நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரர்களாக இருந்து, எங்களுக்கு பணிவிடைச்செய்யவேண்டும் என்று சொல்லி,
\s5
\v 10 பின்னும் அந்தப் பெலிஸ்தியன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய இராணுவங்களுக்கு சவால் விட்டேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்செய்ய ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டு வருவான்.
\v 11 சவுலும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்.
\s1 தாவீது போருக்குச் செல்லுதல்
\p
\s5
\v 12 தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானான ஈசாய் என்னும் பெயருள்ள எப்பிராத்திய மனிதனுடைய மகனாக இருந்தான்; ஈசாய்க்கு எட்டுக் மகன்கள் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற மக்களுக்குள்ளே வயது முதிர்ந்த கிழவனாக மதிக்கப்பட்டான்.
\v 13 ஈசாயினுடைய மூன்று மூத்த மகன்கள் சவுலோடு யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று மகன்களில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாம் மகனுக்கு அபினதாப் என்றும், மூன்றாம் மகனுக்கு சம்மா என்றும் பெயர்.
\s5
\v 14 தாவீது எல்லோருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடுப் போயிருந்தார்கள்.
\v 15 தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப்போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.
\v 16 அந்தப் பெலிஸ்தியன் காலையிலும் மாலையிலும் நாற்பது நாட்கள் வந்துவந்து நிற்பான்.
\s5
\v 17 ஈசாய் தன்னுடைய மகனான தாவீதை பார்த்து: உன்னுடைய சகோதரர்களுக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கிற உன்னுடைய சகோதரர்களிடத்தில் ஓட்டமாகப் போய்,
\v 18 இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர்கள் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக்கொண்டுவா என்றான்.
\s5
\v 19 அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர்கள் எல்லோரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்துக்கொண்டிருந்தார்கள்.
\v 20 தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளியிடம் ஒப்படைத்துவிட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; இராணுவங்கள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள்.
\v 21 இஸ்ரவேலர்களும் பெலிஸ்தர்களும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள்.
\s5
\v 22 அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, பொருட்களை காக்கிறவனிடத்தில் ஒப்படைத்துவிட்டு, இராணுவங்களுக்குள் ஓடி, தன் சகோதரர்களைப்பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.
\v 23 அவன் இவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்திய வீரன் பெலிஸ்தர்களின் இராணுவங்களிலிருந்து எழும்பிவந்து நின்று, முன்பு சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.
\v 24 இஸ்ரவேலர்கள் எல்லோரும் அந்த மனிதனைப் பார்க்கும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள்.
\s5
\v 25 அந்தநேரத்தில் இஸ்ரவேலர்கள்: வந்து நிற்கிற அந்த மனிதனைப் பார்த்தீர்களா?, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்கிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய மகளைத் தந்து, அவனுடைய தகப்பன் வீட்டாரை இஸ்ரவேலிலே வரியில்லாமல் வாழச் செய்வார் என்றார்கள்.
\s5
\v 26 அப்பொழுது தாவீது தன்னுடன் நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்திப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் என்றான்.
\v 27 அதற்கு மக்கள்: அவனைக் கொல்கிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள்.
\s5
\v 28 அந்த மனிதர்களோடு அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபம் கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்திரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யாரிடம் ஒப்படைத்தாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் பெருமையையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.
\v 29 அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு காரணம் இல்லையா என்று சொல்லி,
\v 30 அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்படியே கேட்டான்; மக்கள் முன்போலவே பதில் சொன்னார்கள்.
\s5
\v 31 தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலினிடம் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைத்தான்.
\v 32 தாவீது சவுலை பார்த்து: இவனால் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்செய்வேன் என்றான்.
\v 33 அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்செய்ய உன்னால் முடியாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்றான்.
\s5
\v 34 தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு முறை ஒரு சிங்கமும் ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.
\v 35 நான் அதைப் பின்தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடையைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன்.
\s5
\v 36 அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்தித்தானே என்றான்.
\s5
\v 37 பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடன் இருப்பாராக என்றான்.
\v 38 சவுல் தாவீதுக்குத் தன் உடைகளை அணிவித்து வெண்கலமான ஒரு கவசத்தை அவனுடைய தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் அணிவித்தான்.
\s5
\v 39 அவனுடைய பட்டயத்தை தாவீது தன் உடைகளின்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்து பார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகமுடியாது; இந்த பழக்கம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு,
\v 40 தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பர்களுக்குரிய தன்னுடைய பையிலே போட்டு, தன்னுடைய கவணைத் தன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனின் அருகில் போனான்.
\s1 தாவீது கோலியாத்தைக் கொல்லுதல்
\p
\s5
\v 41 பெலிஸ்தனும் நடந்து, தாவீதின் அருகில் வந்தான்; கேடகத்தை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்.
\v 42 பெலிஸ்தியன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் அழகுமான சிவந்த மேனியுள்ளவனுமாக இருந்தபடியால், அவனை இழிவாகக் கருதினான்.
\v 43 பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன்னுடைய தெய்வங்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.
\s5
\v 44 பின்னும் அந்தப் பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன்னுடைய மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான்.
\v 45 அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.
\s5
\v 46 இன்றையதினம் கர்த்தர் உன்னை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன்னுடைய தலையை உன்னை விட்டு எடுத்து, பெலிஸ்தர்களுடைய முகாமின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்துகொள்ளுவார்கள்.
\v 47 கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த மக்கள்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
\s5
\v 48 அப்பொழுது அந்தப் பெலிஸ்தியன் எழும்பி, தாவீதுக்கு எதிராக நெருங்கி வரும்போது, தாவீது விரைவாக அந்த இராணுவத்திற்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி,
\v 49 தன்னுடைய கையை பையிலே விட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.
\s5
\v 50 இப்படியாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனைத் தோற்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லை.
\v 51 எனவே, தாவீது பெலிஸ்தியனின் அருகே ஓடி அவன்மேல் நின்று, அவனுடைய பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக்கொன்று அதினாலே அவனுடைய தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர்கள் கண்டு, ஓடிப்போனார்கள்.
\s5
\v 52 அப்பொழுது இஸ்ரவேலர்களும் யூதா மனிதர்களும் எழுந்து, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைவரை, எக்ரோனின் வாசல்கள்வரை, பெலிஸ்தர்களைத் துரத்தினார்கள்; சாராயீமின் வழியிலும், காத் பட்டணம் வரை, எக்ரோன் பட்டணம் வரை, பெலிஸ்தர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.
\v 53 இஸ்ரவேல் மக்கள் பெலிஸ்தர்களை துரத்தின பின்பு, திரும்பி வந்து, அவர்களுடைய முகாம்களைக் கொள்ளையிட்டார்கள்.
\v 54 தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன்னுடைய கூடாரத்திலே வைத்தான்.
\s5
\v 55 தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப் போகிறதை சவுல் கண்டபோது, அவன் சேனாதிபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
\v 56 அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளை யாருடைய மகன் என்று கேள் என்றான்.
\s5
\v 57 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பும்போது, அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவனுடைய கையில் இருந்தது.
\v 58 அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக்கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாக இருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.
\s5
\c 18
\cl அத்தியாயம்– 18
\s1 தாவீதும் யோனத்தானும் நண்பர்களாகிறார்கள்
\p
\v 1 அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடு ஒன்றாக இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போல நேசித்தான்.
\v 2 சவுல் அவனை அவனுடைய தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக விடாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான்.
\s5
\v 3 யோனத்தான் தாவீதைத் தன்னுடைய ஆத்துமாவைப்போல நேசித்ததால், அவனும் இவனும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.
\v 4 யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் உடைகளையும், தன் பட்டயத்தையும், தன்னுடைய வில்லையும், தன்னுடைய கச்சையையும் கூடத் தாவீதுக்குக் கொடுத்தான்.
\s1 தாவீதின் வெற்றிகளை சவுல் கவனித்தல்
\p
\s5
\v 5 தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடத்தியதால், சவுல் அவனை யுத்தமனிதர்களின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா மக்களின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரர்களின் கண்களுக்கும் பிரியமாயிருந்தான்.
\s5
\v 6 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, மக்கள் திரும்ப வரும்போதும், பெண்கள் இஸ்ரவேலின் எல்லா பட்டணங்களிலும் இருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.
\v 7 அந்த பெண்கள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பத்தாயிரம் என்று பாடினார்கள்.
\s5
\v 8 அந்த வார்த்தை சவுலுக்கு ஆழ்ந்த துக்கமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பத்தாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ஆட்சி மட்டும் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி,
\v 9 அந்த நாள் முதற்கொண்டு சவுல் தாவீதை சந்தேகத்தோடு பார்த்தான்.
\s1 தாவீதைக் கண்டு சவுல் பயப்படுதல்
\p
\s5
\v 10 மறுநாளிலே தேவனால் விடப்பட்ட தீயஆவி சவுலின்மேல் இறங்கினது; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன்னுடைய கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது.
\v 11 அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு முறை அவனுக்குத் தப்பினான்.
\v 12 கர்த்தர் தாவீதோடு இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து,
\s5
\v 13 அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான்.
\v 14 தாவீது தன்னுடைய செயல்களில் எல்லாம் புத்திமானாக நடந்தான்; கர்த்தர் அவனோடு இருந்தார்.
\s5
\v 15 அவன் மகா புத்திமானாக நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்தான்.
\v 16 இஸ்ரவேலர்களும் யூதா மக்களுமாகிய யாவரும் தாவீதை நேசித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான்.
\s5
\v 17 என்னுடைய கை அல்ல, பெலிஸ்தர்களின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என்னுடைய மூத்த மகளாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல தைரியமுள்ளவனாக மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.
\v 18 அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாவதற்கு நான் எம்மாத்திரம், என்னுடைய ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என்னுடைய தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான்.
\s5
\v 19 சவுலின் மகளாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படும் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.
\s5
\v 20 சவுலின் மகளாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.
\v 21 அவள் அவனுக்கு இடையூராக இருக்கவும், பெலிஸ்தர்களின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் நினைத்து, தாவீதை பார்த்து: நீ என்னுடைய இரண்டாம் மகளால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான்.
\s5
\v 22 பின்பு சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: நீங்கள் தாவீதோடு இரகசியமாகப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் உம்மை நேசிக்கிறார்கள்; இப்போதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான்.
\s5
\v 23 சவுலின் ஊழியக்காரர்கள் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாக இருக்கிறேன் என்றான்.
\v 24 தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர்கள் அவனுக்கு அறிவித்தார்கள்.
\s5
\v 25 அப்பொழுது சவுல்: ராஜா சீதனத்தை விரும்பாமல், பெலிஸ்தர்களின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் எதிரிகளிடத்தில் பழிவாங்க விருப்பமாக இருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தர்களின் கையினால் விழச்செய்வதே சவுலுடைய எண்ணமாக இருந்தது.
\v 26 அவன் ஊழியக்காரர்கள் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.
\s5
\v 27 அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறும் முன்பே, தாவீது எழுந்து, தன்னுடைய மனிதர்களை கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தர்களில் இருநூறுபேரை வெட்டி, அவர்களின் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, தான் ராஜாவுக்கு மருமகனாகும்படி, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன்னுடைய மகளாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
\v 28 கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்து கொண்டான்; சவுலின் மகளாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.
\v 29 ஆகையால் சவுல் இன்னும் அதிகமாகத் தாவீதுக்குப் பயந்து, தான் உயிரோடிருந்த நாளெல்லாம் தாவீதுக்கு எதிரியாக இருந்தான்.
\s5
\v 30 பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் புறப்படும் போதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர்கள் எல்லோரையும் விட புத்திமானாக நடந்துகொண்டான்; அவனுடைய பெயர் மிகவும் புகழ்பெற்றது.
\s5
\c 19
\cl அத்தியாயம்– 19
\s1 யோனத்தான் தாவீதுக்கு உதவுதல்
\p
\v 1 தாவீதைக் கொன்றுபோடும்படி, சவுல் தன்னுடைய மகனான யோனத்தானோடும் தன்னுடைய ஊழியக்காரர்கள் எல்லோரோடும் பேசினான்.
\v 2 சவுலின் மகனான யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என்னுடைய தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்றுபோட வகை தேடுகிறார்; இப்போதும் நாளைக்காலை நீர் எச்சரிக்கையாக இருந்து, மறைவான இடத்தில் ஒளிந்துக்கொண்டிரும்.
\v 3 நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என்னுடைய தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என்னுடைய தகப்பனோடு பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான்.
\s5
\v 4 அப்படியே யோனத்தான் தன்னுடைய தகப்பனாகிய சவுலோடு தாவீதுக்காக நலமாகப் பேசி, ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு விரோதமாகப் பாவம் செய்யாமல் இருப்பாராக; அவன் உமக்கு விரோதமாகப் பாவம் செய்யவில்லை; அவனுடைய செய்கைகள் உமக்கு அதிக உபயோகமாக இருக்கிறதே.
\v 5 அவன் தன்னுடைய உயிரைத் தன்னுடைய கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினாலே, கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் காரணமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் ஏன் பாவம் செய்கிறீர் என்றான்.
\s5
\v 6 சவுல் யோனத்தானுடைய சொல்லைக்கேட்டு: அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.
\v 7 பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலினிடத்தில் கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன்புபோலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான்.
\s1 சவுல் தாவீதைக் கொல்ல முயற்சித்தல்
\p
\s5
\v 8 மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய், பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்து, அவர்களை பயங்கரமாக வெட்டியதால் அவர்கள் அவனுக்கு முன்பாக சிதறி ஓடிப்போனார்கள்.
\v 9 கர்த்தரால் விடப்பட்ட தீய ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன்னுடைய வீட்டில் உட்கார்ந்து, தன்னுடைய ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன்னுடைய கையினாலே சுரமண்டலம் வாசித்தான்.
\s5
\v 10 அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இரவு ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.
\v 11 தாவீதைக் காவல்செய்து, மறுநாள் காலையில் அவனைக் கொன்று போடும்படி, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீர் இன்று இரவில் உம்முடைய ஜீவனை தப்புவித்துக் கொள்ளாவிட்டால், நாளைக்கு நீர் கொன்று போடப்படுவீர் என்று சொல்லி,
\s5
\v 12 மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான்.
\v 13 மீகாளோ ஒரு சிலையை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத் தோலைப் போட்டு, போர்வையினால் மூடி வைத்தாள்.
\s5
\v 14 தாவீதைக் கொண்டுவரச் சவுல் காவலர்களைஅனுப்பினபோது, அவர் வியாதியாக இருக்கிறார் என்றாள்.
\v 15 அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் காவலரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படி, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
\s5
\v 16 காவலர்கள் வந்தபோது, இதோ, சிலை கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.
\v 17 அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏமாற்றி, என்னுடைய எதிரியைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.
\s5
\v 18 தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.
\v 19 தாவீது ராமாவில் உள்ள நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.
\v 20 அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவர காவலரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய காவலர்களின்மேல் தேவனுடைய ஆவி இறங்கியதால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
\s5
\v 21 இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே காவலரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாம் முறையும் சவுல் காவலரைஅனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
\v 22 அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றின் அருகே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவிலுள்ள நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
\s5
\v 23 அப்பொழுது ராமாவிலுள்ள நாயோதிற்குப் போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கியதால் அவன் ராமாவிலுள்ள நாயோதிலே சேரும் வரை, தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து,
\v 24 தானும் தன்னுடைய உடைகளை கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல்முழுவதும் இராமுழுவதும் உடை இல்லாமல் விழுந்துகிடந்தான்; எனவே, சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.
\s5
\c 20
\cl அத்தியாயம்– 20
\s1 தாவீதும் யோனத்தானும் ஒப்பந்தம் செய்தல்
\p
\v 1 தாவீது ராமாவிலிருந்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என்னுடைய ஜீவனை வாங்கத் தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என்னுடைய அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.
\v 2 அதற்கு அவன்: அப்படி ஒருபோதும் வராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என்னுடைய தகப்பன் பெரிய காரியமானாலும், சிறிய காரியமானாலும் ஒன்றும் செய்வதில்லை; இந்தக் காரியத்தை என்னுடைய தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்காது என்றான்.
\s5
\v 3 அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாக அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனவருத்தம் உண்டாகாதபடி அவன் இதை அறியக்கூடாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரம் மாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று பதில் சொல்லி ஆணையிட்டான்.
\s5
\v 4 அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: உமது மனவிருப்பம் என்ன என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன் என்றான்.
\v 5 தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசை, நான் ராஜாவோடு பந்தியில் சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலம் வரை வெளியிலே ஒளிந்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும்.
\s5
\v 6 உம்முடைய தகப்பன் என்னைக்குறித்து விசாரித்தால், தன்னுடைய ஊராகிய பெத்லகேமிலே தன்னுடைய குடும்பத்தினர் எல்லோரும் வருடத்துக்கு ஒருமுறை பலியிட வருகிறபடியால் தாவீது அந்த இடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக் கேட்டான் என்று நீர் சொல்லும்.
\v 7 அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே தீமை உறுதிப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்.
\s5
\v 8 ஆகவே, உம்முடைய அடியானுக்குத் தயை செய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை செய்திருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்தால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்திற்குக் கொண்டு போகவேண்டியது என்ன என்றான்.
\v 9 அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்கு தீமைச் செய்ய என் தகப்பனாலே உறுதிப்பட்டிருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனா என்றான்.
\s5
\v 10 தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான பதில் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.
\v 11 அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
\s5
\v 12 அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை முன்னிட்டு தாவீதைப் பார்த்து: நான் நாளையோ மறுநாளிலோ என்னுடைய தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல் தயவாக இருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படி, உமக்குச் சொல்லியனுப்பாமலிருந்தால்,
\v 13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யோனத்தானுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யட்டும்; ஆனாலும் உமக்குத் தீங்குசெய்ய என்னுடைய தகப்பனுக்குப் பிரியமாக இருந்தால், அதை உமது செவிகளுக்கு வெளிப்படுத்தி, நீர் சமாதானத்தோடு போகும்படி உம்மை அனுப்பிவிடுவேன்; கர்த்தர் என்னுடைய தகப்பனோடு இருந்ததுபோல், உம்மோடும் இருப்பாராக.
\s5
\v 14 மேலும், நான் உயிரோடிருக்கும்போது, நான் சாகாதபடி நீர் கர்த்தரின் நிமித்தமாக எனக்குத் தயை செய்யவேண்டியதும் அன்றி,
\v 15 கர்த்தர் தாவீதின் எதிரிகள் ஒருவரையும் பூமியின்மேல் இல்லாதபடி, வேர் அறுக்கும்போதும், நீர் என்றென்றைக்கும் உமது தயவை என்னுடைய வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.
\v 16 இப்படி யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடு உடன்படிக்கைசெய்து, தாவீதுடைய எதிரிகளின் கையிலே கர்த்தர் கணக்குக் கேட்பாராக என்று சொல்லி,
\s5
\v 17 யோனத்தான் தாவீதை மிகவும் நேசித்தபடியால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன்னுடைய உயிரை நேசித்ததுபோல அவனை நேசித்தான்.
\v 18 பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசை, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாக இருப்பதால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
\v 19 காரியம் நடந்தபோது, மூன்றாம் நாளிலே நீர் ஒளிந்திருக்கும் இடத்திற்கு விரைவாக வந்து, ஏசேல் என்னும் கல்லின் அருகில் உட்கார்ந்திரும்.
\s5
\v 20 அப்பொழுது நான் குறிப்பு வைத்து எய்கிறதுபோல, அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து:
\v 21 நீ போய், அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு சிறுவனை அனுப்புவேன்; இதோ, அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது, அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று சிறுவனிடத்தில் நான் சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை, உமக்குச் சமாதானம் இருக்கும் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
\s5
\v 22 இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்த சிறுவனிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறிந்துகொள்.
\v 23 நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, கர்த்தர் எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான்.
\s5
\v 24 அப்படியே தாவீது வெளியிலே ஒளிந்துக்கொண்டிருந்தான்; அமாவாசையானபோது ராஜா சாப்பிட உட்கார்ந்தான்.
\v 25 ராஜா சுவரின் அருகிலிருக்கிற தன்னுடைய இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாக இருந்தது.
\s5
\v 26 ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானா, அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.
\v 27 அமாவாசைக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாக இருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் சாப்பாட்டிற்கு வராமல்போனது என்ன என்று தன்னுடைய மகனான யோனத்தானைக் கேட்டான்.
\s5
\v 28 யோனத்தான் சவுலுக்குப் பதிலாக: பெத்லெகேம்வரை போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,
\v 29 அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என்னுடைய சகோதரர்களில் ஒருவன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்ததானால், நான் என் சகோதரர்களைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.
\s5
\v 30 அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபப்பட்டு, அவனைப் பார்த்து: கலகமும் முரட்டாட்டமும் உள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்து கொண்டிருக்கிறதை நான் அறியேனோ?
\v 31 ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் அரசாட்சியானாலும் நிலைப்பதில்லை; இப்போதே அவனை அழைத்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.
\s5
\v 32 யோனத்தான் தன்னுடைய தகப்பனாகிய சவுலுக்குப் பதிலாக; அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான்.
\v 33 அப்பொழுது சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான்; ஆகையால் தாவீதைக் கொன்றுபோடத் தன்னுடைய தகப்பன் தீர்மானித்திருக்கிறான் என்பதை யோனத்தான் அறிந்துகொண்டு,
\v 34 கோபத்தோடு பந்தியைவிட்டு எழுந்துபோய், அமாவாசையின் மறுநாளாகிய அன்றையதினம் சாப்பிடாமல் இருந்தான்; தன்னுடைய தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனவருத்தமாக இருந்தது.
\s1 தாவீதும் யோனத்தானும் விடை பெறுதல்
\p
\s5
\v 35 மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்த நேரத்திலே ஒரு சிறுவனைகூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்:
\v 36 சிறுவனை பார்த்து: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி, அந்தப் சிறுவன் ஓடும்போது, அவனுக்கு அப்பால் போகும்படி ஒரு அம்பை எய்தான்.
\v 37 யோனத்தான் எய்த அம்பு இருக்கும் இடம்வரை சிறுவன் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் சிறுவனுக்கு பின்னால் இருந்து கூப்பிட்டான்.
\s5
\v 38 நீ நிற்காமல் விரைவாக சீக்கிரமாகப் போ என்றும் யோனத்தான் சிறுவனுக்குப் பின்னால் இருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் சிறுவன் அம்புகளைப் பொறுக்கி, தன்னுடைய எஜமானிடத்தில் கொண்டு வந்தான்.
\v 39 அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்த சிறுவனுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது.
\v 40 அப்பொழுது யோனத்தான்: தன்னுடைய ஆயுதங்களை சிறுவனிடத்தில் கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான்.
\s5
\v 41 சிறுவன் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்து வந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்று விசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தம்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.
\v 42 அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என்னுடைய சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.
\s5
\c 21
\cl அத்தியாயம்– 21
\s1 நோபில் தாவீது
\p
\v 1 தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடம் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடு வராமல், நீர் தனித்து வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான்.
\v 2 தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னார்; குறிப்பிட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று வாலிபர்களுக்கு சொல்லியிருக்கிறேன்.
\s5
\v 3 இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பங்களோ, எதாவது, இருக்கிறதை என்னுடைய கையிலே கொடும் என்றான்.
\v 4 ஆசாரியன் தாவீதுக்குப் பதிலாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே தவிர, சாதாரண அப்பம் என்னுடைய கையில் இல்லை; வாலிபர் பெண்களோடு மட்டும் சேராமலிருந்தால் கொடுப்பேன் என்றான்.
\s5
\v 5 தாவீது ஆசாரியனுக்குப் பதிலாக: நான் புறப்படுகிறதற்கு முன்பு நேற்றும் முந்தையநாளும் பெண்கள் எங்களுக்கு விலகியிருந்தார்கள்; வாலிபர்களுடைய சரீரங்களும் சுத்தமாயிருக்கிறது; இன்றையதினம் வேறே அப்பம் பாத்திரத்தில் பிரதிஷ்டைசெய்யப்பட்டதினால், இது சாதாரணமாயிற்றே என்றான்.
\v 6 அப்பொழுது கர்த்தருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமூகத்தின் அப்பங்களைத்தவிர, வேறு அப்பம் அங்கே இல்லாததால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தை கொடுத்தான்; அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும்.
\s5
\v 7 சவுலுடைய வேலைக்காரர்களில் ஏதோமியனாகிய தோவேக்கு என்னும் பேருள்ள ஒருவன் அன்றையதினம் அங்கே கர்த்தருடைய சந்நிதியில் தடைபட்டிருந்தான்; அவன் சவுலுடைய மேய்ப்பருக்குத் தலைவனாயிருந்தான்.
\s5
\v 8 தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியோ, பட்டயமோ இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியால், என் பட்டயத்தையோ, என் ஆயுதங்களையோ, நான் எடுத்துக்கொண்டுவரவில்லை என்றான்.
\v 9 அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இங்கே இல்லை என்றான்; அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்குத் தாரும் என்றான்.
\s1 தாவீது காத்திற்கு ஓடுதல்
\p
\s5
\v 10 அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான்.
\v 11 ஆகீசின் ஊழியக்காரர்கள் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பத்தாயிரம் என்று இவனைக் குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள்.
\s5
\v 12 இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு,
\v 13 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் செய்கையை வேறுபடுத்தி, அவர்களிடம் பைத்தியக்காரனைப் போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழசெய்துக்கொண்டிருந்தான்.
\s5
\v 14 அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரர்களை நோக்கி: இதோ, இந்த மனிதன் பைத்தியக்காரன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது என்ன?
\v 15 எனக்கு முன்பாகப் பைத்திய சேட்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டு வருவதற்கு, பைத்தியக்காரர்கள் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிற்கு வரலாமா என்றான்.
\s5
\c 22
\cl அத்தியாயம்– 22
\s1 அதுல்லாம் மற்றும் மிஸ்பாவில் தாவீது
\p
\v 1 தாவீது அந்த இடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் குகைக்குப் போனான்; அதை அவன் சகோதரர்களும் அவன் தகப்பன் வீட்டார்கள் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.
\v 2 ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடு கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் படியாக ஏறக்குறைய நானூறு பேர் அவனோடு இருந்தார்கள்.
\s5
\v 3 தாவீது அந்த இடத்தைவிட்டு மோவாபியர்களைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியும் வரை, என்னுடைய தகப்பனும் என்னுடைய தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயை செய்யும் என்று சொல்லி,
\v 4 அவர்களை மோவாபின் ராஜாவிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது கோட்டையில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.
\v 5 பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் கோட்டையில் இருக்காமல் யூதா தேசத்திற்குப் புறப்பட்டு வாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிற்கு போனான்.
\s1 சவுல் அகிமெலேக்கின் குடும்பத்தை அழித்தல்
\p
\s5
\v 6 தாவீதும் அவனோடிருந்த மனிதர்களும் காணப்பட்ட செய்தியை சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் தன்னைச் சூழ்ந்து நிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும்போது,
\s5
\v 7 சவுல் தன்னுடைய அருகில் நிற்கிற தன் ஊழியக்காரர்களைப் பார்த்து: பென்யமீன் மக்களே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் எல்லோருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லோரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?
\v 8 நீங்களெல்லோரும் எனக்கு எதிராக சதி செய்தது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவன் கூட இல்லையா? இந்த நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிசெய்ய, என்னுடைய மகன் என்னுடைய வேலைக்காரனை எனக்கு விரோதமாக தூண்டிவிட்டானே என்றான்.
\s5
\v 9 அப்பொழுது சவுலின் ஊழியக்காரர்களோடு நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பதிலாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் மகனான அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன்.
\v 10 இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு ஆகாரம் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.
\s5
\v 11 அப்பொழுது ராஜா: அகிதூபின் மகனான அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டார்களாகிய எல்லா ஆசாரியர்களையும் அழைத்தான்; அவர்கள் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.
\v 12 அப்பொழுது சவுல்: அகிதூபின் மகனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என்னுடைய ஆண்டவனே என்றான்.
\v 13 அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாக சதிசெய்து, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிசெய்ய அவன் எனக்கு எதிராக எழும்பும்படி, நீ அவனுக்கு ரொட்டியும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.
\s5
\v 14 அகிமெலேக் ராஜாவுக்குப் பதிலாக: உம்முடைய எல்லா ஊழியக்காரர்களிலும் தாவீதைப் போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்து வருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்?
\v 15 இன்றையதினம் அவனுக்காக தேவனிடத்தில் வேண்டுதல் செய்யத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாவது என்னுடைய தகப்பன் வீட்டார்களில் எவன் மேலாவது குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்ததில்லை என்றான்.
\s5
\v 16 ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன்னுடைய தகப்பன் வீட்டார்கள் அனைவரும் நிச்சயமாக சாகவேண்டும் என்றான்.
\v 17 பின்பு ராஜா தன்னருகில் நிற்கிற காவலர்களை பார்த்து: நீங்கள் போய், கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரர்களோ, கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை.
\s5
\v 18 அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல்விழுந்து, சணல் நூல் ஏபோத்தைத் அணிந்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான்.
\v 19 ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும், கைக் குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் கூர்மையான பட்டயத்தால் வெட்டிப்போட்டான்.
\s5
\v 20 அகிதூபின் மகனான அகிமெலேக்கின் மகன்களில் அபியத்தார் என்னும் பெயருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் இடத்திற்கு ஓடிப்போய்,
\v 21 சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.
\s5
\v 22 அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்ததாலே, அவன் எப்படியாகிலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன்னுடைய தகப்பன் வீட்டார்களாகிய எல்லோருடைய மரணத்துக்கும் காரணம் நானே.
\v 23 நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் உயிரை வாங்கத்தேடுகிறவனே உன்னுடைய உயிரையும் வாங்கத்தேடுகிறான்; நீ என்னுடைய ஆதரவிலே இரு என்றான்.
\s5
\c 23
\cl அத்தியாயம்– 23
\s1 தாவீது கேகிலா நகரத்தை மீட்டல்
\p
\v 1 இதோ, பெலிஸ்தர்கள் கேகிலாவின்மேல் யுத்தம்செய்து, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
\v 2 அப்பொழுது தாவீது: நான் போய், அந்தப் பெலிஸ்தர்களை முறியடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர்: நீ போ; பெலிஸ்தர்களை முறிய அடித்து, கேகிலாவை இரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார்.
\s5
\v 3 ஆனாலும் தாவீதின் மனிதர்கள் அவனை பார்த்து: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தர்களுடைய இராணுவங்களை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள்.
\v 4 அப்பொழுது தாவீது திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் அவனுக்கு பதிலாக: நீ எழுந்து, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
\s5
\v 5 அப்படியே தாவீது தன் மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்து, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்களுடைய ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு போனான்; இவ்விதமாக கேகிலாவின் குடிகளை இரட்சித்தான்.
\v 6 அகிமெலேக்கின் மகனான அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.
\s1 சவுல் தாவீதை துரத்துதல்
\p
\s5
\v 7 தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் நுழைந்ததால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி,
\v 8 தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் முற்றிகை போடும்படி, கேகிலாவுக்குப் போக, எல்லா மக்களையும் யுத்தத்திற்கு அழைத்தான்.
\v 9 தனக்கு தீங்குச் செய்யச் சவுல் முயற்சிக்கிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.
\s5
\v 10 அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னாலே பட்டணத்தை அழிக்க வழிதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.
\v 11 கேகிலா பட்டணத்தார்கள் என்னை அவனுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.
\s5
\v 12 கேகிலா பட்டணத்தார்கள் என்னையும் என்னுடைய மனிதர்களையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.
\s5
\v 13 ஆகையால் தாவீதும் ஏறக்குறைய அறுநூறுபேராகிய அவனுடைய மனிதர்களும் எழும்பி, கேகிலாவை விட்டுப் புறப்பட்டு, போகக்கூடிய இடத்திற்குப் போனார்கள்; தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தான் புறப்படுகிறதை நிறுத்திவிட்டான்.
\v 14 தாவீது வனாந்திரத்திலுள்ள பாதுகாப்பான இடங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தங்கியிருந்தான்; சவுல் அனுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.
\s5
\v 15 தன்னுடைய உயிரை வாங்கத் தேடும்படி, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியால், தாவீது சீப் வனாந்திரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான்.
\v 16 அப்பொழுது சவுலின் மகனான யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையை பலப்படுத்தி:
\s5
\v 17 நீர் பயப்படவேண்டாம்; என்னுடைய தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்காது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாக இருப்பேன்; அப்படி நடக்கும் என்று என்னுடைய தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்.
\v 18 அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கைசெய்த பின்பு, தாவீது காட்டில் இருந்து விட்டான்; யோனத்தானோ தன்னுடைய வீட்டிற்குப் போனான்.
\s5
\v 19 பின்பு சீப் ஊர்க்காரர்கள் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள பாதுகாப்பான இடங்களில் ஒளிந்துக்கொண்டிருக்கிறான் அல்லவா?
\v 20 இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.
\s5
\v 21 அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக.
\v 22 நீங்கள் போய், அவனுடைய கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாக விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரிய வந்தது.
\v 23 அவன் ஒளிந்துக்கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்து அறிந்துகொண்டு, நிச்சயமான செய்தியை எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடு வந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரம் பேருக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான்.
\s5
\v 24 அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் எஷிமோனுக்குத் தெற்கான மாகோன் வனாந்திரத்தில் இருந்தார்கள்.
\v 25 சவுலும் அவனுடைய மனிதர்களும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்திரத்திலே தங்கினான்; அதை சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின்தொடர்ந்தான்.
\s5
\v 26 சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும், அவனுடைய மனிதர்களும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது விரைந்தபோது, சவுலும் அவனுடைய மனிதர்களும் தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் பிடிக்கத்தக்கதாக அவர்களை சூழ்ந்துகொண்டார்கள்.
\v 27 அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர்கள் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்.
\s5
\v 28 அதனால் சவுல் தாவீதைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தர்களை எதிர்க்கும்படி போனான்; எனவே, அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பெயரிட்டார்கள்.
\v 29 தாவீது அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கினான்.
\s5
\c 24
\cl அத்தியாயம்– 24
\s1 தாவீது சவுலின் ஜீவனை விட்டுக்கொடுத்தல்
\p
\v 1 சவுல் பெலிஸ்தர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்திரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
\v 2 அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான்.
\s5
\v 3 வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு குகை இருந்தது; அதிலே சவுல் காலைக்கடன் கழிக்கப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்தக் குகையின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள்.
\v 4 அப்பொழுது தாவீதின் மனிதர்கள் அவனை நோக்கி: இதோ, நான் உன்னுடைய எதிரியை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன்னுடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடு சொன்ன நாள் இதுவே என்றார்கள்; தாவீது எழுந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெதுவாக அறுத்துக்கொண்டான்.
\s5
\v 5 தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினால் அவனுடைய மனது அடித்துக்கொண்டிருந்தது.
\v 6 அவன் தன்னுடைய மனிதர்களைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்செய்த என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடி, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம்செய்யப்பட்டவர் என்று சொல்லி,
\v 7 தன்னுடைய மனிதர்களை சவுலின்மேல் எழும்ப விடாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடை செய்தான்; சவுல் எழுந்து, குகையைவிட்டு, வழியே நடந்து போனான்.
\s5
\v 8 அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப்பார்த்தபோது, தாவீது தரை வரை முகங்குனிந்து வணங்கி,
\v 9 சவுலை நோக்கி: தாவீது உமக்கு தீங்கு செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனிதர்களுடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?
\s5
\v 10 இதோ, கர்த்தர் இன்று குகையில் உம்மை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என்னுடைய கை உம்மைத் தப்பவிட்டது; என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்செய்யப்பட்டவராமே என்றேன்.
\v 11 என்னுடைய தகப்பனே பாரும்; என்னுடைய கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என்னுடைய கையிலே தீங்கும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என்னுடைய உயிரை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.
\s5
\v 12 கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என்னுடைய காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது.
\v 13 முதியோர் வாக்கின்படியே, தீயோரிடமிருந்து தீமை பிறக்கும்; எனவே, என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது.
\s5
\v 14 இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்?
\v 15 கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வாதாடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.
\s5
\v 16 தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,
\s5
\v 17 தாவீதைப் பார்த்து: நீ என்னைவிட நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமை செய்தேன்.
\v 18 நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கச்செய்தாய்; கர்த்தர் என்னை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்று போடவில்லை.
\s5
\v 19 ஒருவன் தன்னுடைய எதிரியைக்கண்டுபிடித்தால், அவனைச் சுகமாக போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக.
\v 20 நீ நிச்சயமாக ராஜாவாக இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்ஜியம் உன்னுடைய கையில் நிலைக்கும் என்றும் அறிவேன்.
\s5
\v 21 இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என்னுடைய சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என்னுடைய தகப்பன் வீட்டாரில் என்னுடைய பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் கர்த்தர்மேல் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.
\v 22 அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் பாதுகாப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.
\s5
\c 25
\cl அத்தியாயம்– 25
\s1 தாவீது, நாபால் மற்றும் அபிகாயில்
\p
\v 1 சாமுவேல் இறந்தான். இஸ்ரவேலர்கள் எல்லோரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வீட்டில் அவனை அடக்கம்செய்தார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப் போனான்.
\s5
\v 2 மாகோனிலே ஒரு மனிதன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனிதன் பெரும் செல்வந்தனாக இருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன்னுடைய ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.
\v 3 அந்த மனிதனுக்கு நாபால் என்றும், அவனுடைய மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த பெண் மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தக் கணவனோ முரடனும், தீயவனும், கபடுள்ளவனுமாக இருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான்.
\s5
\v 4 நாபால் தன்னுடைய ஆடுகளை மயிர் கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது,
\v 5 தாவீது பத்து வாலிபர்களை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப் போய், நாபாலிடத்தில் சென்று, என்னுடைய பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து,
\v 6 அவனை பார்த்து: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,
\s5
\v 7 இப்பொழுது ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடு இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமல் போனதும் இல்லை.
\v 8 உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபர்களுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கையில் உள்ளதை உம்முடைய ஊழியக்காரர்களுக்கும், உம்முடைய மகனான தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.
\s5
\v 9 தாவீதின் வாலிபர்கள் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் பெயரினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்பு ஒன்றும் பேசாதிருந்தார்கள்.
\v 10 நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பதிலாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.
\v 11 நான் என்னுடைய அப்பத்தையும், என்னுடைய தண்ணீரையும், என்னுடைய ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல்செய்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனிதருக்கு கொடுப்பேனோ என்றான்.
\s5
\v 12 தாவீதின் வாலிபர்கள் தங்கள் வழியே திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள்.
\v 13 அப்பொழுது தாவீது தன்னுடைய மனிதர்களை பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன்னுடைய பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின்சென்று புறப்பட்டுப்போனார்கள்; இருநூறுபேர் பொருட்கள் அருகில் இருந்து விட்டார்கள்.
\s5
\v 14 அப்பொழுது வேலைக்காரர்களில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலைப் பார்த்து: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தியை விசாரிக்க தாவீது வனாந்திரத்திலிருந்து தூதுவர்களை அனுப்பினான்; அவர் அவர்கள்மேல் கோபம்கொண்டார்.
\v 15 அந்த மனிதர்களோ எங்களுக்கு மிகவும் நல்லவர்களாக இருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமல் போனதுமில்லை.
\s5
\v 16 நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாக இருந்தார்கள்.
\v 17 இப்பொழுது நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான் மேலும், அவருடைய வீட்டார்கள் எல்லோர்மேலும், நிச்சயமாய் ஒரு தீங்கு வருகிறதாக இருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடி, மதிப்பற்ற மகனாக இருக்கிறார் என்றான்.
\s5
\v 18 அப்பொழுது அபிகாயில் வேகமாக இருநூறு அப்பங்களையும் இரண்டு தோல்பை திராட்சை ரசத்தையும், சமையல்செய்யப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்துபடி வறுத்த பயிற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சை குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,
\v 19 தன்னுடைய வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன்னுடைய கணவனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.
\s5
\v 20 அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவருகையில், இதோ, தாவீதும் அவனுடைய மனிதர்களும் அவளுக்கு எதிராக இறங்கி வந்தார்கள்; அவர்களைச் சந்தித்தாள்.
\s5
\v 21 தாவீது தன்னுடைய மக்களைப் பார்த்து: அவனுக்கு வனாந்திரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமல்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமை செய்தான்.
\v 22 அவனுக்கு உண்டான எல்லாவற்றிலும் சுவரில் நீர்விடும் ஒரு நாய் முதற்கொண்டு பொழுதுவிடியும்வரை நான் உயிரோடே வைத்தால், தேவன் தாவீதின் சத்துருக்களுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று சொல்லியிருந்தான்.
\s5
\v 23 அபிகாயில் தாவீதைப் பார்க்கும்போது, விரைந்து கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து,
\v 24 அவனுடைய பாதத்திலே விழுந்து: என்னுடைய ஆண்டவனே, இந்தப்பழி என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்படி உம்முடைய அடியாள் உமது செவி கேட்கப் பேசவேண்டும்.
\s5
\v 25 என்னுடைய ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்த மதிப்பற்ற மனிதனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவனுடைய பேர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவனுடைய பெயர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என்னுடைய ஆண்டவன் அனுப்பின வாலிபர்களைக் காணவில்லை.
\v 26 இப்பொழுதும் என்னுடைய ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய எதிரிகளும், என்னுடைய ஆண்டவனுக்கு விரோதமாகத் தீங்கு தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகட்டும்.
\s5
\v 27 இப்போதும் உமது அடியாள் என்னுடைய ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என்னுடைய ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபர்களுக்கு கொடுப்பீராக.
\v 28 உமது அடியாளின் மீறுதலை மன்னியும், கர்த்தர் என்னுடைய ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என்னுடைய ஆண்டவன் கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு தீங்கும் உம்மிலே காணப்படாமலிருப்பதாக.
\s5
\v 29 உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வழிதேடவும், ஒரு மனிதன் எழுந்தாலும் என்னுடைய ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய எதிரிகளின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்படும்.
\s5
\v 30 கர்த்தர் உம்மைக்குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என்னுடைய ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நியமிக்கும்போது,
\v 31 நீர் காரணமில்லாமல் இரத்தம் சிந்தாமலும், என்னுடைய ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என்னுடைய ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இருக்காது, மனவருத்தமும் இருக்காது; கர்த்தர் என்னுடைய ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள்.
\s5
\v 32 அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
\v 33 நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடியும், என்னுடைய கையே பழிவாங்காதபடியும், நீ இன்றையதினம் எனக்குத் தடைசெய்ததால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.
\s5
\v 34 நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியும் வரை நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குத் தீங்குச்செய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு உண்மையாய்ச் சொல்கிறேன் என்று சொல்லி,
\v 35 அவள் தனக்குக் கொண்டு வந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடு உன்னுடைய வீட்டுக்குப் போ; இதோ, நான் உன்னுடைய சொல்லைக்கேட்டு, உன்னுடைய முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.
\s1 நாபாலின் மரணம்
\p
\s5
\v 36 அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு இணையான விருந்து அவனுடைய வீட்டிலே நடந்தது; அவனுடைய இருதயம் மகிழ்ச்சியாக இருந்தது; அவன் குடி வெறியில் இருந்தான்; எனவே, பொழுது விடியும்வரை சிறிய, பெரிய காரியங்கள், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.
\s5
\v 37 பொழுது விடிந்து, நாபாலின் குடிவெறி தெளிந்தபின்பு, அவனுடைய மனைவி இந்தக் காரியங்களை அவனுக்கு அறிவித்தாள்; அப்பொழுது அவனுடைய இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான்.
\v 38 கர்த்தர் நாபாலை தண்டித்தார், ஏறக்குறைய பத்து நாட்களுக்குப்பின்பு, அவன் செத்தான்.
\s5
\v 39 நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என்னுடைய நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானை தீங்குச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; கர்த்தர் தாமே நாபாலின் தீங்கை அவன் தலையின்மேல் திரும்பச்செய்தார் என்று சொல்லி, அபிகாயிலை திருமணம் செய்வற்காக அவளோடு பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்.
\v 40 தாவீதின் ஊழியக்காரர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாயிலினிடம் வந்து, தாவீது உன்னை திருமணம் செய்ய விரும்பி, எங்களை உன்னிடத்தில் அனுப்பினார் என்று அவளோடு சொல்லுகிறபோது,
\s5
\v 41 அவள் எழுந்திருந்து தரைவரை முகங்குனிந்து, இதோ, நான் என்னுடைய ஆண்டவனுடைய ஊழியக்காரர்களின் கால்களைக் கழுவும் பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள்.
\v 42 பின்பு அபிகாயில் விரைவாக எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து பணிப்பெண்களைக் கூட்டிக்கொண்டு, தாவீதின் தூதுவர்கள் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள்.
\s5
\v 43 யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது திருமணம் செய்தான்; அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவிகளானார்கள்.
\v 44 சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன்னுடைய மகளைக் காலீம் ஊர்க்காரனாகிய லாயீசின் மகனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.
\s5
\c 26
\cl அத்தியாயம்– 26
\s1 சவுல் மறுபடியும் தாவீதைக் கொலைசெய்யத் தேடுதல்
\p
\v 1 பின்பு சீப் ஊர்க்காரர்கள் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளிந்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்.
\v 2 அப்பொழுது சவுல்: சீப் வனாந்திரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரோடு, சீப் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போனான்.
\s5
\v 3 சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியருகே இருக்கிற ஆகிலாமேட்டிலே முகாமிட்டான்; தாவீது வனாந்திரத்தில் தங்கி, சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்திரத்திற்கு வருகிறதைக் கண்டு,
\v 4 தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான்.
\s5
\v 5 பின்பு தாவீது எழுந்து, சவுல் முகாமிட்ட இடத்திற்குப் போய், சவுலும் நேரின் மகனான அப்னேர் என்னும் அவனுடைய படைத்தலைவனும் படுத்துக்கொண்டிருக்கிற இடத்தைப் பார்த்தான்; சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; மக்கள் அவனைச் சுற்றிலும் முகாமிட்டிருந்தார்கள்.
\s5
\v 6 தாவீது ஏத்தியனாகிய அகிமெலேக்கையும், செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் பார்த்து: என்னோடுச் சவுலின் முகாமிற்கு இறங்கிவருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்: நான் உம்மோடு வருகிறேன் என்றான்.
\v 7 அப்படியே தாவீதும் அபிசாயும் இரவிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து தூங்கிக்கொண்டிருந்தான்; அவனுடைய தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் மக்களும் படுத்திருந்தார்கள்.
\v 8 அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய எதிரியை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் பாயக் குத்தட்டுமா என்றான்.
\s5
\v 9 தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம்செய்தவர்மேல் தன்னுடைய கையைப் போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்? என்று சொன்னான்.
\v 10 பின்னும் தாவீது: கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப் போய் இறந்தாலொழிய,
\s5
\v 11 நான் என்னுடைய கையைக் கர்த்தர் அபிஷேகம்செய்தவர்மேல் போடாதபடி, கர்த்தர் என்னைக் காப்பாராக என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்கிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான்.
\v 12 தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுப்போனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த தூக்கத்தை வரச்செய்ததால், அவர்கள் எல்லாரும் தூங்கினார்கள்.
\s5
\v 13 தாவீது கடந்து, அந்தப் பக்கத்திற்குப் போய், தங்களுக்கும் அவர்களுக்கும் நடுவே போதிய இடைவெளி உண்டாக, தூரத்திலிருக்கிற மலையின் உச்சியிலே,
\v 14 மக்களுக்கும் நேரின் மகனான அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே, பதில் சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான்.
\s5
\v 15 அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி: நீர் வீரன் அல்லவா? இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார்? பின்னே நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமல் போனதென்ன? மக்களில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே.
\v 16 நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்செய்த உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமல் போனபடியால், நீங்கள் மரணத்திற்கு ஏதுவானவர்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச்செம்பும் எங்கே என்று பாரும் என்றான்.
\s5
\v 17 அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என்னுடைய ஆண்டவனே, இது என்னுடைய சத்தந்தான் என்று சொல்லி,
\v 18 பின்னும்: என்னுடைய ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின் தொடருகிறது என்ன? நான் என்ன செய்தேன்? என்னிடத்தில் என்ன தீங்கு இருக்கிறது?
\s5
\v 19 இப்பொழுது ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக; கர்த்தர் உம்மை எனக்கு விரோதமாக தூண்டிவிட்டது உண்டானால், அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக; மனிதர்கள் அதைச் செய்தார்களென்றால், அவர்கள் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டவர்கள்; அவர்கள்: நீ போய்; அந்நிய தேவர்களைத் தொழுதுகொள் என்று சொல்லி, அவர்கள் இன்று என்னைக் கர்த்தருடைய சுதந்தரத்தில் சேரமுடியாதபடி துரத்திவிட்டார்களே.
\v 20 இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என்னுடைய இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்.
\s5
\v 21 அப்பொழுது சவுல்: நான் பாவம் செய்தேன்; என்னுடைய மகனான தாவீதே, திரும்பி வா; என்னுடைய ஜீவன் இன்றையதினம் உன்னுடைய பார்வைக்கு அருமையாக இருந்தபடியால், இனி உனக்கு ஒரு தீங்கும் செய்யமாட்டேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தவறு செய்தேன் என்றான்.
\s5
\v 22 அதற்குத் தாவீது: இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது; வாலிபர்களில் ஒருவன் இந்த இடத்திற்கு வந்து, அதை வாங்கிக்கொண்டு போகட்டும்.
\v 23 கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தகுந்த பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்செய்தவர்மேல், என்னுடைய கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.
\s5
\v 24 இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என்னுடைய பார்வைக்கு எப்படி அருமையாக இருந்ததோ, அப்படியே என்னுடைய ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாக இருப்பதால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் விடுவிப்பாராக என்றான்.
\v 25 அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என்னுடைய மகனான தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பெலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியில் போனான்; சவுலும் தன்னுடைய இடத்திற்கு திரும்பினான்.
\s5
\c 27
\cl அத்தியாயம்– 27
\s1 பெலிஸ்தர்களோடு தாவீது
\p
\v 1 பின்பு தாவீது: நான் எந்த நாளிலாவது ஒரு நாள் சவுலின் கையினால் அழிந்து போவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை இல்லாமல்போகும்படியும், நான் அவனுடைய கைக்கு நீங்கியிருக்கும்படியும், நான் பெலிஸ்தர்களின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதை விட நலமான காரியம் வேறில்லை என்று தன்னுடைய இருதயத்தில் யோசித்தான்.
\s5
\v 2 ஆகையால் தாவீது தன்னோடு இருந்த அறுநூறுபேரோடு எழுந்து, மாயோகின் மகனான ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான்.
\v 3 அங்கே தாவீதும், அவனுடைய மனிதர்களும், அவரவர் வீட்டாரும், தாவீதோடு அவனுடைய இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோகாமும், நாபாலின் மனைவியாக இருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலும், காத் பட்டணத்தில் ஆகீசிடத்தில் தங்கியிருந்தார்கள்.
\v 4 தாவீது காத் பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை.
\s5
\v 5 தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமானால், நான் தங்கும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடம் தாரும்; உம்முடைய அடியான் உம்மோடு இராஜரீக பட்டணத்திலே ஏன் தங்கவேண்டும் என்றான்.
\v 6 அப்பொழுது ஆகீஸ்: அன்றையதினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்த நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது.
\v 7 தாவீது பெலிஸ்தர்களின் நாட்டிலே ஒரு வருடமும் நான்கு மாதங்களும் குடியிருந்தான்.
\s1 ஆகீஸை தாவீது ஏமாற்றுதல்
\p
\s5
\v 8 அங்கேயிருந்து தாவீதும் அவனுடைய மனிதர்களும் கெசூரியர்கள் மேலும் கெஸ்ரியர்கள்மேலும் அமலேக்கியர்கள்மேலும் படையெடுத்துப் போனார்கள்; சூருக்குப் போகிற எல்லை தொடங்கி எகிப்து தேசம் வரை இருக்கிற நாட்டிலே பூர்வகாலம் தொடங்கி குடியிருந்தவர்கள் இவர்களே.
\v 9 தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, ஆண்களையும் பெண்களையும் உயிரோடே வைக்காமல், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் உடைகளையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பி வருவான்.
\s5
\v 10 இன்று எந்த திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தெற்கு திசையிலும், யெராமியேலர்களுடைய தெற்கு திசையிலும் கேனியருடைய தெற்கு திசையிலும் என்பான்.
\s5
\v 11 இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கும்படி ஒருவரையும் தாவீது காத் பட்டணத்திற்குக் கொண்டுவராதபடி, ஒரு ஆணையாவது பெண்ணையாவது உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தர்களின் நாட்டுப்புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இப்படியே செய்துகொண்டுவந்தான்.
\v 12 ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய மக்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றென்றும் அவன் என்னுடைய ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.
\s5
\c 28
\cl அத்தியாயம்– 28
\s1 பெலிஸ்தர்கள் போருக்குத் தயாராகுதல்
\p
\v 1 அந்த நாட்களிலே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்ய, தங்களுடைய இராணுவங்களைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன்னுடைய மனிதர்களும் என்னோடு யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறிந்துகொள் என்றான்.
\v 2 தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை நிரந்தரமாக என்னுடைய மெய்காவலனாக வைப்பேன் என்றான்.
\s1 சவுலும், எந்நோரின் குறி சொல்லும் பெண்ணும்
\p
\s5
\v 3 சாமுவேல் இதற்கு முன்பே இறந்துப்போனான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவனுடைய ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடித் துரத்திவிட்டான்.
\v 4 பெலிஸ்தர்கள் கூடிவந்து, சூநேமிலே முகாமிட்டார்கள்; சவுலும் இஸ்ரவேலர்கள் எல்லோரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே முகாமிட்டார்கள்.
\s5
\v 5 சவுல் பெலிஸ்தர்களின் முகாமை கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் நடுங்கிக்கொண்டிருந்தது.
\v 6 சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலும், ஊரீமினாலும், தீர்க்கதரிசிகளினாலும் பதில் சொல்லவில்லை.
\v 7 அப்பொழுது சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண்ணைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்கள்: இதோ, எந்தோரில் இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண் இருக்கிறாள் என்றார்கள்.
\s5
\v 8 அப்பொழுது சவுல் வேடம் மாறி, வேறு உடை அணிந்துக்கொண்டு, அவனும் அவனோடு இரண்டுபேரும் இரவிலே அந்த பெண்ணிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் பார்த்து: நீ எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான்.
\v 9 அதற்கு அந்த பெண்: சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடி, தடை செய்த செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என்னுடைய உயிருக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.
\v 10 அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் தீங்கு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான்.
\s5
\v 11 அப்பொழுது அந்த பெண்: உமக்கு நான் யாரை எழும்பிவரச்செய்யவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரச்செய்யவேண்டும் என்றான்.
\v 12 அந்த பெண் சாமுவேலைப் பார்த்தவுடன் மகா சத்தமாய் அலறி, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தானே சவுல் என்றாள்.
\s5
\v 13 ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ பார்க்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த பெண்: முதியவர் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.
\v 14 அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனிதன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைவரை முகங்குனிந்து வணங்கினான்.
\s5
\v 15 சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரச் செய்து, என்னைத் தொந்தரவு செய்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர்கள் எனக்கு விரோதமாய் யுத்தம்செய்கிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலும், சொப்பனங்களினாலும் எனக்கு பதில் சொல்கிறதில்லை; எனவே, நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைக்க செய்தேன் என்றான்.
\s5
\v 16 அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்கு எதிரியாக இருக்கும்போது, நீ என்னிடத்தில் ஏன் கேட்கிறாய்?
\v 17 கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்துமுடித்து, ராஜ்ஜியத்தை உன்னுடைய கையிலிருந்து பறித்து, அதை உன்னுடைய தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.
\s5
\v 18 நீ கர்த்தருடைய சொல் கேட்காமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியால், கர்த்தர் இன்றையதினம் உனக்கு இப்படிச் செய்தார்.
\v 19 கர்த்தர் உன்னையும், உன்னுடைய மக்களாகிய இஸ்ரவேலர்களையும் பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன்னுடைய மகன்களும் என்னோடு இருப்பீர்கள்; இஸ்ரவேலின் முகாமையும் கர்த்தர் பெலிஸ்தர்களின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
\s5
\v 20 அதை கேட்டவுடனே சவுல் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் அன்று பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தபடியால், அவன் பெலவீனமாக இருந்தான்.
\v 21 அப்பொழுது அந்த பெண் சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என்னுடைய உயிரை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
\s5
\v 22 இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக; அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.
\v 23 அவனோ அதை மறுத்து, நான் புசிக்கமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரர்களும் அந்த பெண் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்து கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.
\s5
\v 24 அந்த பெண்ணிடம் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதை விரைவாக அடித்து, மாவு எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு,
\v 25 சவுலுக்கும் அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் சாப்பிட்டு எழுந்து, அந்த இரவிலேயே புறப்பட்டுப் போனார்கள்.
\s5
\c 29
\cl அத்தியாயம்– 29
\s1 பெலிஸ்தர்களால் தாவீது கைவிடப்படுதல்
\p
\v 1 பெலிஸ்தர்கள் தங்கள் இராணுவங்ளையெல்லாம் ஆப்பெக்கிலே கூடிவரச்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் யெஸ்ரயேலிலிருக்கிற நீரூற்றின் அருகே முகாமிட்டார்கள்.
\v 2 அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள் நூறும் ஆயிரமுமான படைகளோடு போனார்கள்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் ஆகீசோடே பின் சென்றார்கள்.
\s5
\v 3 அப்பொழுது பெலிஸ்தர்களின் பிரபுக்கள்: இந்த எபிரெயர்கள் எதற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும் இத்தனை வருடங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றுவரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான்.
\s5
\v 4 அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனிதன் நீர் குறித்த தன்னுடைய இடத்திற்குத் திரும்பிப்போகும்படி, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்கு எதிரியாய் மாறாதபடி, இவன் நம்மோடு யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனிதர்களுடைய தலைகளினால் அல்லவா?
\s5
\v 5 சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பத்தாயிரம் என்று இந்த தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.
\s5
\v 6 அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ முகாமில் என்னோடே போக்கும் வரத்துமாக இருக்கிறது என்னுடைய பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றுவரை நான் உன்னில் ஒரு தீங்கும் காணவில்லை; ஆனாலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல.
\v 7 ஆகையால் பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் உன்மேல் சங்கடம் அடையாதபடி, இப்போது சமாதானத்தோடு திரும்பிப் போய்விடு என்றான்.
\s5
\v 8 தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய எதிரிகளோடு யுத்தம்செய்யாதபடி, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதல் இன்றுவரை உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான்.
\v 9 ஆகீஸ் தாவீதுக்குப் பதிலாக: நான் அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என்னுடைய பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடு யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தர்களின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்.
\s5
\v 10 இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடு வந்த உன்னுடைய ஆண்டவனுடைய வேலைக்காரர்களைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலை வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான்.
\v 11 அப்படியே தாவீது அதிகாலையில் தன்னுடைய மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தர்களின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோ யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.
\s5
\c 30
\cl அத்தியாயம்– 30
\s1 சிக்லாக் மீது அமலேக்கியர்கள் தாக்குதல்
\p
\v 1 தாவீதும் அவனுடைய மனிதர்களும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருவதற்குள்ளே, அமலேக்கியர்கள் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,
\v 2 அதிலிருந்த பெண்களையும், சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்களுடைய வழியே போய்விட்டார்கள்.
\s5
\v 3 தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்களுடைய மனைவிகளும் தங்களுடைய மகன்களும் தங்களுடைய மகள்களும் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.
\v 4 அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த மக்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகும் வரை சத்தமிட்டு அழுதார்கள்.
\s5
\v 5 தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாக இருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
\v 6 தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; எல்லா மக்களும் தங்கள் மகன்கள், மகள்களினிமித்தம் மனவருத்தமானதால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன்னுடைய தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
\s5
\v 7 தாவீது அகிமெலேக்கின் மகனான அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.
\v 8 தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தப் படையைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்ந்து போ; அதை நீ பிடித்து, எல்லாவற்றையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.
\s5
\v 9 அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றின் அருகில் வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள்.
\s1 எகிப்திய அடிமை
\p
\v 10 தாவீதோ, நானூறுபேரோடுத் தொடர்ந்து போனான்; இருநூறுபேர் களைத்துப்போனபடியால் பேசோர் ஆற்றைக் கடக்கமுடியாமல் நின்றுபோனார்கள்.
\s5
\v 11 ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, சாப்பிட அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து,
\v 12 அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், உலர்ந்த இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்டபின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இரவு பகல் மூன்று நாளாக அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.
\s5
\v 13 தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எந்த இடத்தை சேர்ந்தவன் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்துப் வாலிபன்; மூன்று நாளைக்குமுன்பு நான் வியாதிப்பட்டபோது, என்னுடைய எஜமான் என்னைக் கைவிட்டான்.
\v 14 நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவுக்கடுத்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப் போட்டோம் என்றான்.
\s5
\v 15 தாவீது அவனை பார்த்து: நீ என்னை அந்த படையினிடத்துக்குக் கொண்டுபோவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என்னுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் படையினிடத்துக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான்.
\s1 தாவீது அமலேக்கியர்களைத் தோற்கடித்தல்
\p
\s5
\v 16 இவன் அவனைக் கொண்டுபோய்விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, சாப்பிட்டுக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர்கள் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டு வந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.
\v 17 அவர்களைத் தாவீது அன்று மாலைதொடங்கி மறுநாள் மாலை வரை முறியடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர்கள் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.
\s5
\v 18 அமலேக்கியர்கள் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.
\v 19 அவர்கள் கொள்ளையடித்துக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், மகன்களிலும், மகள்களிலும், ஒன்றும் குறையாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.
\v 20 எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள்.
\s1 அனைவருக்கும் சமமாகப் பங்கிடுதல்
\p
\s5
\v 21 களைத்துப்போனதால் தாவீதுக்குப் பின்னே செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த இருநூறுபேரிடம் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த மக்களிடத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த மக்களிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான்.
\v 22 அப்பொழுது தாவீதோடு நடந்து வந்த மனிதர்களில் துன்மார்க்கர்களும், பயனற்ற மக்களுமான எல்லோரும்: அவர்கள் எங்களோடே வராதபடியால் நாங்கள் திருப்பிக்கொண்ட கொள்ளையுடமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் மனைவியையும் தன்தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள்.
\s5
\v 23 அதற்குத் தாவீது: என்னுடைய சகோதரர்களே, கர்த்தர் நமக்கு கொடுத்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்; கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாக வந்திருந்த அந்தப் படையை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.
\v 24 இந்தக் காரியத்தில் உங்கள் சொல் கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அந்த அளவில் பொருட்களின் அருகே இருந்தவர்களுக்கும் பங்கு கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.
\v 25 அப்படியே அந்த நாள் முதல் நடந்து வருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்த நாள் வரைக்கும் இருக்கும் கட்டளையும் ஆணையுமாக ஏற்படுத்தினான்.
\s5
\v 26 தாவீது சிக்லாகுக்கு வந்தபோது, அவன் கொள்ளையடித்தவைகளிலே தன்னுடைய நண்பர்களாகிய யூதாவின் மூப்பர்களுக்குச் சிலவற்றை அனுப்பி: இதோ, கர்த்தருடைய எதிரிகளின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாதபாகம் என்று சொல்லச் சொன்னான்.
\v 27 யார் யாருக்கு அனுப்பினான் என்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,
\v 28 ஆரோவேரில் இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தேமோகாவில் இருக்கிறவர்களுக்கும்,
\s5
\v 29 ராக்காலில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியர்களின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியர்களின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும்,
\v 30 ஒர்மாவில் இருக்கிறவர்களுக்கும், கொராசானில் இருக்கிறவர்களுக்கும், ஆற்றாகில் இருக்கிறவர்களுக்கும்,
\v 31 எப்ரோனில் இருக்கிறவர்களுக்கும், தாவீதும் அவனுடைய மனிதர்களும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான்.
\s5
\c 31
\cl அத்தியாயம்– 31
\s1 சவுலின் மரணம்
\p
\v 1 பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக பயந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு இறந்தார்கள்.
\v 2 பெலிஸ்தர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் மகனாகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள்.
\v 3 சவுலுக்கு விரோதமாக யுத்தம் பலத்தது; வில்வீரர்கள் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரர்களால் மிகவும் காயப்பட்டு,
\s5
\v 4 தன்னுடைய ஆயுததாரியைப் பார்த்து: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடி, நீ உன்னுடைய பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நிலத்திலே குத்தி வைத்து அதின்மேல் விழுந்தான்.
\v 5 சவுல் இறந்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன்னுடைய பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடு இறந்துப்போனான்.
\v 6 அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று மகன்களும், அவனுடைய ஆயுதம் ஏந்துபவனும், அவனுடைய எல்லா மனிதர்களும் ஒன்றாக இறந்துப்போனார்கள்.
\s5
\v 7 இஸ்ரவேலர்கள் பயந்தோடினார்கள் என்றும், சவுலும் அவனுடைய மகன்களும் இறந்துப் போனார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்புறத்திலும் யோர்தானுக்கு இப்புறத்திலும் இருந்த இஸ்ரவேலர்கள் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள்.
\v 8 வெட்டுண்டவர்களை கொள்ளையிட, பெலிஸ்தர்கள் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவனுடைய மூன்று மகன்களும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டு,
\s5
\v 9 அவனுடைய தலையை வெட்டி, அவனுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்களுடைய விக்கிரகங்களின் கோவில்களிலும் மக்களுக்குள்ளும் செய்தியைப் பரப்பும்படி, அவைகளைப் பெலிஸ்தர்கள் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி,
\v 10 அவனுடைய ஆயுதங்களை அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே வைத்து, அவனுடைய உடலைப் பெத்சானின் சுவற்றிலே தூக்கிப்போட்டார்கள்.
\s5
\v 11 பெலிஸ்தர்கள் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத் தேசத்து யாபேஸ் பட்டணத்தார்கள் கேட்டபோது,
\v 12 அவர்களிலே பலசாலிகள் எல்லோரும் எழுந்து இரவு முழுவதும் நடந்துபோய், பெத்சானின் சுவற்றிலிருந்த சவுலின் உடலையும் அவன் மகன்களின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம்செய்து,
\v 13 அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்செய்து, ஏழுநாள் உபவாசம்செய்தார்கள்.

1177
10-2SA.usfm Normal file
View File

@ -0,0 +1,1177 @@
\id 2SA
\ide UTF-8
\h II சாமுவேல்
\toc1 II சாமுவேல்
\toc2 II சாமுவேல்
\toc3 2sa
\mt1 II சாமுவேல்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 சவுலின் மரணத்தை தாவீது அறிதல்
\p
\v 1 சவுல் இறந்தபின்பு, தாவீது அமலேக்கியர்களை முறியடித்து, சிக்லாகுக்குத் திரும்பிவந்து, இரண்டு நாட்கள் அங்கே இருந்த பின்பு,
\v 2 மூன்றாம் நாளிலே ஒரு மனிதன் சவுலின் முகாமிலிருந்து புறப்பட்டு, தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தன்னுடைய தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, தாவீதிடம் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான்.
\s5
\v 3 தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு, அவன்: இஸ்ரவேலின் முகாமிலிருந்து தப்பிவந்தேன் என்றான்.
\v 4 தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: மக்கள் யுத்தத்தைவிட்டு ஓடிப்போனார்கள்; மக்களில் அநேகம் பேர்கள் விழுந்து இறந்துபோனார்கள்; சவுலும் அவருடைய மகனான யோனத்தானும் இறந்தார்கள் என்றான்.
\v 5 சவுலும் அவருடைய மகனான யோனத்தானும் இறந்துபோனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்கு அதை அறிவித்த வாலிபனிடம் கேட்டதற்கு,
\s5
\v 6 அந்த வாலிபன்: நான் தற்செயலாகக் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்துகிடந்தார்; இரதங்களும் குதிரை வீரர்களும் அவரைப் பின்தொடர்ந்து நெருங்கினார்கள்.
\v 7 அவர் திரும்பிப் பார்த்து: என்னைக் கண்டு கூப்பிட்டார்; அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்.
\s5
\v 8 அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.
\v 9 அவர் என்னை நோக்கி: நீ என் அருகில் வந்து நின்று, என்னைக் கொன்றுபோடு; இன்னும், என்னுடைய உயிர் முழுவதும் போகாததால் எனக்கு வேதனையாக இருக்கிறது என்றார்.
\v 10 அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவருக்கு அருகில் போய் நின்று, அவரைக் கொன்றுபோட்டேன்; பின்பு அவருடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தையும் அவருடைய கையில் இருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு, அவைகளை இங்கே என்னுடைய ஆண்டவனிடம் கொண்டுவந்தேன் என்றான்.
\s5
\v 11 அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த எல்லா மனிதர்களும் தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,
\v 12 சவுலும், அவனுடைய மகனான யோனத்தானும், கர்த்தருடைய மக்களும், இஸ்ரவேல் குடும்பத்தார்களும், பட்டயத்தால் விழுந்ததால் புலம்பி அழுது மாலைவரை உபவாசத்தோடு இருந்தார்கள்.
\v 13 தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய தேசத்தானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான்.
\s5
\v 14 தாவீது அவனை நோக்கி: கர்த்தர் அபிஷேகம் செய்தவரைக் கொன்றுபோடும்படி நீ உன்னுடைய கையை நீட்டப் பயப்படாமல் போனது என்ன என்று சொல்லி,
\v 15 வாலிபர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, நீ அவன் அருகே போய், அவனைக் கொன்றுபோடு என்றான்; அவன் அமலேக்கியனை வெட்டினான்; அவன் இறந்தான்.
\v 16 தாவீது அவனைப் பார்த்து: உன்னுடைய இரத்தப்பழி உன்னுடைய தலையின்மேல் இருக்கட்டும்; கர்த்தர் அபிஷேகம் செய்தவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன்னுடைய வாயே உனக்கு விரோதமான சாட்சி சொன்னது என்றான்.
\s1 தாவீதின் புலம்பல்
\p
\s5
\v 17 தாவீது சவுலையும் அவனது மகன் யோனத்தானையும்குறித்து, துயரப்பாடலைப் பாடினான்.
\v 18 (வில்வித்தையை யூதாவின் மகன்களுக்குக் கற்றுக்கொடுக்கும்படிக் கட்டளையிட்டான்; அது யாசேரின் புத்தகத்தில் எழுதியிருக்கிறது) அவன் பாடின துயரப்பாடலாவது:
\p
\v 19 இஸ்ரவேலின் புகழ், உயர்ந்த மலைகளில் இறந்துபோனது; பலசாலிகள் கொலைசெய்யப்பட்டுபோனார்கள்.
\v 20 பெலிஸ்தர்களின் மகள்கள் சந்தோஷப்படாதபடியும், விருத்தசேதனம் இல்லாதவர்களின் மகள்கள் கொண்டாடாதபடியும், அதைக் காத் பட்டணத்தில் அறிவிக்காமலும் அஸ்கலோனின் வீதிகளில் தெரிவிக்காமலும் இருங்கள்.
\s5
\v 21 கில்போவா மலைகளே, உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும், காணிக்கைக்கு ஏற்ற பலன் தரும் வயல்கள் இருக்காமலும் போகட்டும்; அங்கே பெலசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம் செய்யப்படாதவர்போல அவருடைய கேடகமும் அவமதிக்கப்பட்டதே.
\v 22 கொலைசெய்யப்பட்டவர்களின் இரத்தத்தைக் குடிக்காமலும், பெலசாலிகளின் கொழுப்பை சாப்பிடாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை; சவுலின் பட்டயம் வெறுமையாகத் திரும்பினதில்லை.
\s5
\v 23 உயிரோடு இருக்கும்போது சவுலும் யோனத்தானும் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டி மகிழ்ச்சியாக இருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்துபோனதில்லை; கழுகுகளைவிட வேகமும், சிங்கங்களைவிட பலமும் உள்ளவர்களாக இருந்தார்கள்.
\v 24 இஸ்ரவேலின் மகள்களே, உங்களுக்கு சிவந்த ஆடையை நேர்த்தியாக அணிவித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைப் பதித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.
\s5
\v 25 போர்க்களத்தில் பெலசாலிகள் விழுந்தார்களே. யோனத்தானே, உயரமான இடங்களில் இறந்துபோனாயே.
\v 26 என்னுடைய சகோதரனான யோனத்தானே, உனக்காக நான் துயரப்படுகிறேன்; நீ எனக்கு மிகவும் இன்பமாக இருந்தாய்; உன்னுடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது; பெண்களின் அன்பை விட அதிகமாக இருந்தது.
\v 27 பெலசாலிகள் விழுந்துபோனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோனதே என்று பாடினான்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 தாவீது ராஜாவாக அபிஷேகம் பெறுதல்
\p
\v 1 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்களில் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எந்த இடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்.
\v 2 அப்படியே தாவீது தன்னுடைய இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊரைச் சேர்ந்த அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊரைச் சேர்ந்த அபிகாயிலோடும் அந்த இடத்திற்குப் போனான்.
\v 3 மேலும், தன்னோடு இருந்த மனிதர்களையும், அவர்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனின் நகரங்களில் குடியேறினார்கள்.
\s5
\v 4 அப்பொழுது யூதாவின் மனிதர்கள் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தார்களின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள். சவுலை அடக்கம்செய்தவர்கள் கீலேயாத்தேசத்து யாபேசின் மனிதர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்தபோது,
\p
\v 5 தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனிதர்களிடம் தூதுவர்களை அனுப்பி, நீங்கள் உங்களுடைய ஆண்டவனான சவுலுக்கு இந்த தயவைச் செய்து, அவரை அடக்கம்செய்தபடியால், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
\s5
\v 6 கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாக நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியால், நானும் இந்த நன்மைக்கு ஏற்றபடி உங்களை நடத்துவேன்.
\v 7 இப்பொழுதும் நீங்கள் உங்களுடைய கைகளை பெலப்படுத்திக்கொண்டு தைரியமாக இருங்கள்; உங்களுடைய ஆண்டவனான சவுல் இறந்த பின்பு, யூதா வம்சத்தார்கள் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.
\s1 தாவீது மற்றும் சவுல் குடும்பத்தார்களுக்கு இடையே யுத்தம்
\p
\s5
\v 8 சவுலின் படைத்தலைவனான நேரின் மகனான அப்னேர், சவுலின் மகனான இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய்,
\v 9 அவனைக் கீலேயாத்தின்மேலும், அஷூரியர்கள்மேலும், யெஸ்ரயேலின்மேலும், எப்பிராயீமின்மேலும், பென்யமீனின்மேலும், இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாக்கினான்.
\s5
\v 10 சவுலின் மகனான இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது, நாற்பது வயதாக இருந்தான்; அவன் இரண்டுவருடங்கள் ஆட்சி செய்தான்; யூதா கோத்திரத்தார்கள் மட்டும் தாவீதைப் பின்பற்றினார்கள்.
\v 11 தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாக இருந்த நாட்களின் எண்ணிக்கை ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் ஆகும்.
\p
\s5
\v 12 நேரின் மகனான அப்னேர் சவுலின் மகனான இஸ்போசேத்தின் வீரர்களைக் கூட்டிக்கொண்டு, மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப் போனான்.
\v 13 அப்பொழுது செருயாவின் மகனான யோவாபும் தாவீதின் வீரர்களும் புறப்பட்டுப்போய், கிபியோனின் குளத்தின் அருகில் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து, குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும், குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள்.
\s5
\v 14 அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர்கள் எழுந்து, நமக்கு முன்பாகச் சண்டையிடட்டும் என்றான். அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து, அப்படிச் செய்யட்டும் என்றான்.
\v 15 அப்பொழுது சவுலின் மகனான இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனிதர்களில் பன்னிரெண்டுபேர்களும், தாவீதுடைய வீரர்களிலே பன்னிரெண்டுபேர்களும், எழுந்து ஒரு பக்கமாகப் போய்,
\s5
\v 16 ஒருவர் தலையை ஒருவர் பிடித்து, ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி, ஒன்றாக விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த இடம் எல்காத்அசூரிம் எனப்பட்டது.
\v 17 அந்த நாளில் மிகவும் கடுமையான யுத்தமாகி, அப்னேரும் இஸ்ரவேல் மனிதர்களும் தாவீதின் வீரர்களால் முறியடிக்கப்பட்டார்கள்.
\s5
\v 18 அங்கே செருயாவின் மூன்று மகன்களான யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் காட்டுமான்களில் ஒன்றைப்போல வேகமாக ஓடுகிறவனாக இருந்தான்.
\v 19 அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறமாவது இடதுபுறமாவது, அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.
\s5
\v 20 அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான். அவன்: நான்தான் என்றான்.
\v 21 அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலதுபக்கத்திலோ இடதுபக்கத்திலோ விலகி, வாலிபர்களில் ஒருவனைப் பிடித்து அவனுடைய ஆயுதங்களை எடுத்துக்கொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.
\s5
\v 22 பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ; நான் உன்னை ஏன் தரையில் விழ வெட்டவேண்டும்? பின்பு உன்னுடைய சகோதரனான யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.
\v 23 ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற மழுங்கிய முனையால் அவனுடைய வயிற்றிலே குத்தினான்; ஈட்டி மறுபக்கத்தில் வந்தது; அவன் அங்கேயே விழுந்து இறந்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் அங்கேயே நின்றார்கள்.
\s5
\v 24 யோவாபும் அபிசாயும் சூரியன் மறையும்வரை அப்னேரைப் பின்தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்திர வழிக்கு அருகில் இருக்கிற கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுவரை வந்தார்கள்.
\v 25 அப்பொழுது அப்னேருக்குப் பின்சென்ற பென்யமீன் மனிதர்கள் ஒரே படையாகக் கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.
\s5
\v 26 அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு, பட்டயம் எப்போதும் அழித்துக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று தெரியாதோ, தங்களுடைய சகோதரர்களைவிட்டுப் பின்வாங்கும்படி எதுவரைக்கும் மக்களுக்குச் சொல்லாமல் இருப்பீர் என்றான்.
\v 27 அதற்கு யோவாப்: இன்று காலையில் நீர் பேசாமல் இருந்திருந்தால் மக்கள் அவரவர்கள் தங்களுடைய சகோதரர்களைப் பின்தொடராமல், அப்போதே திரும்பியிருப்பார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
\s5
\v 28 யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது மக்கள் அனைவரும் இஸ்ரவேலைப் பின்தொடராமலும், யுத்தம்செய்யாமலும் நின்றுவிட்டார்கள்.
\v 29 அன்று இரவு முழுவதும் அப்னேரும் அவனுடைய மனிதர்களும் பாலைவனம் வழியாகப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோன் வழியே சென்று அதைக் கடந்து, மகனாயீமுக்குப் போனார்கள்.
\s5
\v 30 யோவாப் அப்னேரைப் பின்தொடராமல் மக்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் வீரர்களில் பத்தொன்பதுபேர்களும் ஆசகேலும் குறைந்திருந்தார்கள்.
\v 31 தாவீதின் வீரர்களோ பென்யமீனியர்களிலும், அப்னேரின் மனிதர்களிலும், முந்நூற்று அறுபதுபேரைக் கொன்றிருந்தார்கள்.
\v 32 அவர்கள் ஆசகேலை எடுத்து, பெத்லெகேமிலுள்ள அவனுடைய தகப்பனுடைய கல்லறையில் அவனை அடக்கம்செய்தார்கள்; யோவாபும் அவனுடைய மனிதர்களும் இரவு முழுவதும் நடந்து, பொழுது விடியும்போது எப்ரோனிற்கு வந்துசேர்ந்தார்கள்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\p
\v 1 சவுலின் குடும்பத்திற்கும் தாவீதின் குடும்பத்திற்கும் பல நாட்கள் யுத்தம் நடந்தது; தாவீது மென்மேலும் வலிமை பெற்றுக்கொண்டே வந்தான்; சவுலின் குடும்பத்தார்களோ வரவர பலவீனப்பட்டுப்போனார்கள்.
\s5
\v 2 எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த மகன்கள்: யெஸ்ரயேல் ஊரைச்சேர்ந்த அகினோவாமிடம் பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.
\v 3 நாபாலின் மனைவியாக இருந்த கர்மேல் ஊரைச்சேர்ந்த அபிகாயிலிடம் பிறந்த கீலேயாப் அவனுடைய இரண்டாம் மகன்; மூன்றாம் மகன் கேசூரின் ராஜாவான தல்மாய் மகளான மாக்காள் பெற்ற அப்சலோம் என்பவன்.
\s5
\v 4 நாலாம் மகன் ஆகீத் பெற்ற அதொனியா என்பவன்; ஐந்தாம் மகன் அபித்தால் பெற்ற செப்பத்தியா என்பவன்.
\v 5 ஆறாம் மகன் தாவீதின் மனைவியான எக்லாளிடம் பிறந்த இத்ரேயாம் என்பவன்; இவர்கள் எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்தவர்கள்.
\s1 அப்னேர் தாவீதிடம் செல்லுதல்
\p
\s5
\v 6 சவுலின் குடும்பத்திற்கும் தாவீதின் குடும்பத்திற்கும் யுத்தம் நடந்து வருகிறபோது, அப்னேர் சவுலின் குடும்பத்திலே வலிமை அடைந்தவனான்.
\v 7 சவுலுக்கு ஆயாவின் மகளான ரிஸ்பாள் என்னும் பெயருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள்; இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியோடு உறவுகொண்டது என்ன என்றான்.
\s5
\v 8 அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங்கொண்டு: உம்மை தாவீதின் கையில் ஒப்புக்கொடுக்காமல், இந்த நாள்வரை உம்முடைய தகப்பனான சவுலின் குடும்பத்திற்கும், அவருடைய சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும், தயவு செய்கிறவனான என்னை நீர் இன்று ஒரு பெண்ணிற்காக குற்றம் கண்டுபிடிப்பதற்கு, நான் யூதாவைச் சேர்ந்த ஒரு நாயின் தலையா?
\s5
\v 9 நான் அரசாட்சியை சவுலின் குடும்பத்தைவிட்டு மாற்றி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவங்கிப் பெயெர்செபாவரையுள்ள இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படி,
\v 10 கர்த்தர் தாவீதுக்கு ஆணையிட்டபடியே, நான் அவனுக்குச் செய்யாமற்போனால், தேவன் அப்னேருக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யட்டும் என்றான்.
\v 11 அப்பொழுது அவன் அப்னேருக்குப் பயப்பட்டதால், அதன் பின்பு ஒரு பதிலும் அவனுக்குச் சொல்லாமலிருந்தான்.
\p
\s5
\v 12 அப்னேர் தன்னுடைய பெயராலே தாவீதிடம் தூதுவர்களை அனுப்பி: தேசம் யாருடையது? என்னோடு உடன்படிக்கை செய்யும்; இதோ, இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என்னுடைய கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான்.
\v 13 அதற்குத் தாவீது: நல்லது, உன்னோடு நான் உடன்படிக்கை செய்வேன்; ஆனாலும், ஒரு காரியம் உன்னிடம் கேட்டுக்கொள்ளுகிறேன்; அது என்னவென்றால், நீ என்னுடைய முகத்தைப் பார்க்க வரும்போது, சவுலின் மகளான மீகாளை அழைத்து வரவேண்டும்; அதற்குமுன் நீ என்னுடைய முகத்தைப் பார்ப்பதில்லை என்று சொல்லச்சொல்லி,
\s5
\v 14 அவன் சவுலின் மகனான இஸ்போசேத்திடமும் தூதுவர்களை அனுப்பி: நான் பெலிஸ்தர்களுடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம்செய்த என்னுடைய மனைவியான மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்.
\v 15 அப்பொழுது, இஸ்போசேத் அவளை லாயிசின் மகனான பல்த்தியேல் என்னும் அவளுடைய கணவனிடமிருந்து அழைத்துவர ஆட்களை அனுப்பினான்.
\v 16 அவள் கணவன் பகூரீம்வரை அவளுக்கு பின்னே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.
\p
\s5
\v 17 அப்னேர் இஸ்ரவேலின் மூப்பர்களோடு பேசி: தாவீதை உங்கள்மேல் ராஜாவாக வைக்கும்படி நீங்கள் அநேகநாட்களாகத் தேடினீர்களே.
\v 18 இப்போதும் அப்படிச் செய்யுங்கள்; என்னுடைய தாசனான தாவீதின் கைகளினால், என்னுடைய மக்களான இஸ்ரவேலைப் பெலிஸ்தர்களின் கைக்கும், அவர்களுடைய எல்லா எதிரிகளின் கைகளுக்கும் மீட்டு இரட்சிப்பேன் என்று கர்த்தர் தாவீதைக்குறித்துச் சொல்லியிருக்கிறாரே என்றான்.
\s5
\v 19 இப்படியே அப்னேர் பென்யமீன் மக்களின் காதுகள் கேட்கப் பேசினான்; பின்பு அப்னேர் இஸ்ரவேலர்களின் பார்வைக்கும், பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தார்களின் பார்வைக்கும், விரும்பினதையெல்லாம் எப்ரோனிலே தாவீதினுடைய காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான்.
\v 20 அப்னேரும், அவனோடு இருபதுபேர்களும் எப்ரோனிலிருக்கிற தாவீதிடம் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடு வந்த மனிதர்களுக்கும் விருந்துசெய்தான்.
\s5
\v 21 பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய், இஸ்ரவேலர்களை எல்லாம் உம்மோடு உடன்படிக்கைசெய்யும்படி, ராஜாவான என்னுடைய ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டுவருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடு போனான்.
\s1 யோவாப் அப்னேரைக் கொலைசெய்தல்
\p
\s5
\v 22 தாவீதின் வீரர்களும் யோவாபும் அநேக பொருட்களைக் கொள்ளையிட்டு, படையிலிருந்து கொண்டு வந்தார்கள்; அப்பொழுது அப்னேர் எப்ரோனில் தாவீதிடம் இல்லை; அவனை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடு போய்விட்டான்.
\v 23 யோவாபும் அவனோடு இருந்த எல்லா இராணுவமும் வந்தபோது, நேரின் மகனான அப்னேர் ராஜாவிடம் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாகப் போகவிட்டார் என்றும், யோவாபுக்கு அறிவித்தார்கள்.
\s5
\v 24 அப்பொழுது யோவாப் ராஜாவின் அருகில் வந்து: என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?
\v 25 நேரின் மகனான அப்னேரை அறிவீரே; அவன் உம்மை மோசம் போக்கவும், உம்முடைய போக்குவரத்தை அறியவும், நீர் செய்கிறதையெல்லாம் ஆராயவும் வந்தான் என்று சொன்னான்.
\v 26 யோவாப் தாவீதைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் கிணறுவரை போய் அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்.
\s5
\v 27 அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடு இரகசியமாகப் பேசப்போகிறவன்போல, அவனை வாசலின் நடுவே ஒரு பக்கமாக அழைத்துப்போய், தன்னுடைய தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க, அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான்.
\s5
\v 28 தாவீது அதைக் கேட்டபோது: நேரின் மகனான அப்னேரின் இரத்தத்திற்காக, என்மேலும் என்னுடைய ராஜ்ஜியத்தின் மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை.
\v 29 அது யோவாபுடைய தலையின்மேலும், அவனுடைய தகப்பனுடைய குடும்பத்தின்மேலும் சுமந்திருப்பதாக; யோவாபினுடைய வீட்டார்களிலே புண் உள்ளவனும், குஷ்டரோகியும், கோல் ஊன்றி நடக்கிறவனும், பட்டயத்தால் சாகிறவனும், அப்பம் இல்லாதவனும், ஒருபோதும் ஒழிந்துபோவதில்லை என்றான்.
\v 30 அப்னேர் கிபியோனில் நடந்த யுத்தத்திலே தங்களுடைய தம்பியான ஆசகேலைக் கொன்றதினால் யோவாபும் அவனுடைய சகோதரனான அபிசாயும் அவனைப் படுகொலைசெய்தார்கள்.
\p
\s5
\v 31 தாவீது யோவாபையும், அவனோடு இருந்த எல்லா மக்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, சாக்கு உடை அணிந்து, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீது ராஜாவும் பாடைக்குப் பின்னே சென்றான்.
\v 32 அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்செய்யும்போது, ராஜா அப்னேரின் கல்லறையின் அருகில் சத்தமிட்டு அழுதான்; எல்லா மக்களும் அழுதார்கள்.
\s5
\v 33 ராஜா அப்னேருக்காகப் புலம்பி: மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ?
\v 34 உன்னுடைய கைகள் கட்டப்படவும் இல்லை; உன்னுடைய கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை; அக்கிரமக்காரர்களுடைய கையில் இறக்கிறதுபோல இறந்தாயே என்றான்; அப்பொழுது மக்கள் எல்லோரும் பின்னும் அதிகமாக அவனுக்காக அழுதார்கள்.
\s5
\v 35 பகலாக இருக்கும்போது, மக்கள் எல்லோரும் வந்து: அப்பம் சாப்பிடும் என்று தாவீதுக்குச் சொன்னபோது, தாவீது: சூரியன் மறைவதற்கு முன்பு நான் அப்பமாவது வேறு எதையாவது ருசி பார்த்தால், தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று ஆணையிட்டுச் சொன்னான்.
\v 36 மக்கள் எல்லோரும் அதைக் கவனித்தார்கள், அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்தது அனைத்தும் எல்லா மக்களுக்கும் நலமாகத் தோன்றினது.
\s5
\v 37 நேரின் மகனான அப்னேரைக் கொன்றுபோட்டது ராஜாவால் உண்டாகவில்லை என்று அந்த நாளிலே எல்லா மக்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் அறிந்துகொண்டார்கள்.
\v 38 ராஜா தன்னுடைய ஊழியக்காரர்களை நோக்கி: இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும் பெரிய மனிதனுமான ஒருவன் விழுந்தான் என்று அறியீர்களா?
\v 39 நான் ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்டவனாக இருந்தபோதும், நான் இன்னும் பெலவீனன்; செருயாவின் மகன்களான இந்த மனிதர்கள் என்னுடைய பெலத்திற்கு மிஞ்சினவர்களாக இருக்கிறார்கள், அந்தத் தீங்கைச் செய்தவனுக்குக் கர்த்தர் அவனுடைய தீங்கிற்கு ஏற்றபடிச் சரிக்கட்டுவாராக என்றான்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 இஸ்போசேத் கொலை செய்யப்படுதல்
\p
\v 1 அப்னேர் எப்ரோனிலே இறந்துப்போனதைச் சவுலின் மகன் கேட்டபோது, அவனுடைய கைகள் பெலன் இல்லாமல் போனது; இஸ்ரவேலர்கள் அனைவரும் கலங்கினார்கள்.
\v 2 சவுலின் மகனுக்குப் படைத்தலைவர்களாக இரண்டுபேர்கள் இருந்தார்கள்; ஒருவனுக்கு பானா என்றும், மற்றவனுக்கு ரேகாப் என்றும் பெயர்; அவர்கள் பென்யமீன் மக்களில் பேரோத்தியனான ரிம்மோனின் மகன்கள். பேரோத்தும் பென்யமீனின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது.
\v 3 பேரோத்தியர்கள் கித்தாயீமுக்கு ஓடிப்போய், இந்தநாள்வரைக்கும் அங்கே வாழ்கிறார்கள்.
\p
\s5
\v 4 சவுலின் மகன் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு மகன் இருந்தான்; சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிறபோது, அவன் ஐந்து வயது உள்ளவனாக இருந்தான்; அப்பொழுது அவனுடைய செவிலியர் அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள்; அவள் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவன் ஆனான்: அவனுக்கு மேவிபோசேத் என்று பெயர்.
\p
\s5
\v 5 பேரோத்தியனான அந்த ரிம்மோனின் மகன்களான ரேகாபும் பானாவும் போய், இஸ்போசேத் நண்பகல் வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்போது அவனுடைய வீட்டிற்குள் நுழைந்து,
\v 6 கோதுமை வாங்க வருகிறவர்கள்போல, நடுவீடுவரை வந்து, அவனை வயிற்றிலே குத்தினார்கள்; பின்பு ரேகாபும் அவனுடைய சகோதரன் பானாவும் தப்பி ஓடிப்போனார்கள்.
\v 7 அவன் தன்னுடைய படுக்கையறையில் தன்னுடைய கட்டிலின்மேல் படுத்திருக்கும்போது இவர்கள் உள்ளே போய், அவனைக் குத்திக் கொன்றுபோட்டு, அவனுடைய தலையை வெட்டிப்போட்டார்கள்; பின்பு அவனுடைய தலையை எடுத்துக்கொண்டு, இரவுமுழுவதும் பாலைவனம் வழியாக நடந்து,
\s5
\v 8 எப்ரோனிலிருக்கிற தாவீதிடம் இஸ்போசேத்தின் தலையைக்கொண்டுவந்து, ராஜாவை நோக்கி: இதோ, உம்முடைய உயிரை வாங்கத்தேடின உம்முடைய எதிரியாக இருந்த சவுலின் மகனான இஸ்போசேத்தின் தலை; இன்றையதினம் கர்த்தர் ராஜாவான எங்களுடைய ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவனுடைய குடும்பத்தார்களின் கையிலும் பழிவாங்கினார் என்றார்கள்.
\v 9 ஆனாலும் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் மகன்களான ரேகாபுக்கும், அவனுடைய சகோதரன் பானாவுக்கும் பதிலாக: என்னுடைய ஆத்துமாவை எல்லாத் துன்பத்திற்கும் விலக்கிமீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு நான் சொல்லுகிறதைக் கேளுங்கள்.
\v 10 இதோ, ஒருவன் எனக்கு நற்செய்தி கொண்டுவருகிறவன் என்று நினைத்து, சவுல் இறந்துபோனான் என்று எனக்கு அறிவித்து, தனக்கு பரிசு கிடைக்கும் என்று நினைத்தபோது, அவனை நான் பிடித்து சிக்லாகிலே கொன்றுபோட்டேனே.
\s5
\v 11 தமது வீட்டிற்குள் தமது படுக்கையின்மேல் படுத்திருந்த நீதிமானைக் கொலைசெய்த பொல்லாத மனிதர்களுக்கு எவ்வளவு அதிகமான தண்டனை கொடுக்கவேண்டும்? இப்போதும் நான் அவருடைய இரத்தப்பழியை உங்களுடைய கைகளில் வாங்கி, உங்களை பூமியிலிருந்து அழித்துப்போடாமல் இருப்பேனோ என்று சொல்லி,
\v 12 அவர்களைக் கொன்றுபோடவும், அவர்கள் கைகளையும் கால்களையும் வெட்டி, எப்ரோனிலிருக்கிற குளத்தின் அருகில் தூக்கிப்போடவும் தன்னுடைய வீரர்களுக்குக் கட்டளையிட்டான். இஸ்போசேத்தின் தலையை எடுத்து, எப்ரோனிலிருக்கிற அப்னேரின் கல்லறையில் அடக்கம்செய்தார்கள்.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யப்படுதல்
\p
\v 1 அந்தக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனில் இருக்கிற தாவீதிடம் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய சதையுமானவர்கள்.
\v 2 சவுல் எங்கள்மேல் ராஜாவாக இருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும், நடத்திக்கொண்டுவந்தவரும் நீரே; கர்த்தர்: என்னுடைய மக்களான இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாக இருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள்.
\s5
\v 3 இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் எப்ரோனிலே ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது ராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கைசெய்தபின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள்.
\v 4 தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாக இருந்தான்; அவன் நாற்பது வருடங்கள் ஆட்சி செய்தான்.
\v 5 அவன் எப்ரோனிலே யூதாவை ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும், எருசலேமிலே இஸ்ரவேல் முழுவதும் யூதாவையும் முப்பத்துமூன்று வருடங்களும் ஆட்சிசெய்தான்.
\s1 தாவீது எருசலேமைக் கைப்பற்றுதல்
\p
\s5
\v 6 தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்கள்மேல் யுத்தம்செய்ய ராஜா தன்னுடைய மனிதர்களோடு எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே தாவீதால் நுழையமுடியாது என்று நினைத்து, தாவீதை நோக்கி: நீ இதற்குள் நுழையமுடியாது; குருடர்களும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்.
\v 7 ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமானது.
\s5
\v 8 எவன் கழிவுநீர்க்கால்வாய் வழியாக ஏறி, எபூசியர்களையும் தாவீதின் எதிரிகளான சப்பாணிகளையும், குருடர்களையும் முறியடிக்கிறானோ, அவன் தலைவனாக இருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிற்குள் வரக்கூடாது என்று சொல்வதுண்டு.
\v 9 அந்தக் கோட்டையிலே தாவீது வாழ்ந்து, அதற்குத் தாவீதின் நகரம் என்று பெயரிட்டு, மில்லோ என்னும் இடம் துவங்கி, உட்புறம்வரை சுற்றிலும் மதிலைக் கட்டினான்.
\v 10 தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; ஏனென்றால், சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடு இருந்தார்.
\p
\s5
\v 11 தீருவின் ராஜாவான ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.
\v 12 கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகப் பெலப்படுத்தி, தம்முடைய மக்களான இஸ்ரவேலிற்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை உயர்த்தினார் என்று தாவீது தெளிவாக அறிந்தபோது,
\p
\s5
\v 13 அவன் எப்ரோனிலிருந்து வந்த பின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் பெண்களையும் திருமணம் செய்துகொண்டான்; இன்னும் அதிக மகன்களும், மகள்களும் தாவீதுக்குப் பிறந்தார்கள்.
\v 14 எருசலேமில் அவனுக்குச் சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
\v 15 இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா,
\v 16 எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்ற பெயர்களை உடைய மகன்கள் பிறந்தார்கள்.
\s1 தாவீது பெலிஸ்தர்களைத் தோற்கடித்தல்
\p
\s5
\v 17 தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள் என்று பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லோரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு கோட்டைக்குள் போனான்.
\v 18 பெலிஸ்தர்களோ வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
\s5
\v 19 பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போகலாமா, அவர்களை என்னுடைய கையிலே ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடம் விசாரித்தபோது, கர்த்தர்: போ, பெலிஸ்தர்களை உன்னுடைய கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார்.
\v 20 தாவீது பாகால் பிராசீமிற்கு வந்து, அங்கே அவர்களை முறியடித்து: தண்ணீர்கள் பெருக்கெடுத்து ஓடுகிறதுபோல, கர்த்தர் என்னுடைய எதிரிகளை எனக்கு முன்பாக சிதறடித்தார் என்று சொல்லி, அதினால் அந்த இடத்திற்குப் பாகால்பிராசீம் என்று பெயரிட்டான்.
\v 21 அங்கே பெலிஸ்தர்கள் தங்களுடைய விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவனுடைய மனிதர்களும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.
\p
\s5
\v 22 பெலிஸ்தர்கள் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
\v 23 தாவீது கர்த்தரிடம் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராகப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிராக இருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
\s5
\v 24 முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற சத்தத்தை நீ கேட்கும்போது, சீக்கிரமாக எழுந்துப்போ; அப்பொழுது பெலிஸ்தர்களின் முகாமை முறியடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.
\v 25 கர்த்தர் தாவீதுக்குக் கட்டளையிட்டபடி அவன் செய்து, பெலிஸ்தர்களைக் கேபா துவங்கிக் கேசேர் எல்லைவரை முறியடித்தான்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\s1 தேவனுடைய பெட்டி எருசலேமிற்குக் கொண்டுவரப்படுதல்
\p
\v 1 பின்பு தாவீது இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதாயிரம்பேரைக் கூட்டி,
\v 2 கேருபீன்களின் நடுவே அமர்ந்திருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தைத் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியை யூதாவிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடு இருந்த அந்த இடத்தைச்சேர்ந்தவர்களும் எழுந்து போய்,
\s5
\v 3 தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
\v 4 அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.
\v 5 தாவீதும் இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட எல்லாவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள்.
\s5
\v 6 அவர்கள் நாகோனின் போரடிக்கும் களம் இருக்கிற இடத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியால், ஊசா தேவனுடைய பெட்டிக்கு நேராகத் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தான்.
\v 7 அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபம் வந்தது; அவனுடைய துணிவினால் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியின் அருகில் இறந்தான்.
\s5
\v 8 அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினால் தாவீது துயரமடைந்து, அந்த இடத்திற்கு இந்தநாள்வரை அழைக்கப்படுகிற பேரேஸ்ஊசா என்னும் பெயரிட்டான்.
\v 9 தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடம் வருவது எப்படியென்று சொல்லி,
\s5
\v 10 அதைத் தன்னுடைய தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான்.
\v 11 கர்த்தருடைய பெட்டி கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதங்கள் இருக்கும்போது கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவனுடைய வீட்டார்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
\s5
\v 12 தேவனுடைய பெட்டியினாலே கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான்.
\v 13 கர்த்தருடைய பெட்டியைச் சுமந்து போகிறவர்கள் ஆறு காலடி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.
\s5
\v 14 தாவீது சணல்நூல் ஏபோத்தை அணிந்துகொண்டு, தன்னுடைய முழு பெலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்செய்தான்.
\v 15 அப்படியே தாவீதும், இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் கர்த்தருடைய பெட்டியை ஆரவார சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.
\s5
\v 16 கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் நுழைகிறபோது, சவுலின் மகளான மீகாள் ஜன்னல் வழியாகப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து நடனம் செய்கிறதைக் கண்டு, தன்னுடைய இருதயத்திலே அவனை அவமதித்தாள்.
\v 17 அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் இடத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருக்கு முன்பாக சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்.
\s5
\v 18 தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தியபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே மக்களை ஆசீர்வதித்து,
\v 19 இஸ்ரவேலின் திரள்கூட்டமான பெண்கள் ஆண்களான அனைத்து மக்களுக்கும், அவரவர்களுக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்; பிறகு மக்கள் எல்லோரும் தங்களுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள்.
\s5
\v 20 தாவீது தன்னுடைய வீட்டார்களை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் மகளான மீகாள் தாவீதுக்கு நேரேவந்து, அற்பமனிதர்களில் ஒருவன் தன்னுடைய ஆடைகளைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய வேலைக்காரர்களுடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய ஆடைகளைக் கழற்றிப்போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எவ்வளவு மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.
\s5
\v 21 அதற்கு தாவீது மீகாளைப் பார்த்து: உன்னுடைய தகப்பனைவிட, அவருடைய எல்லா வீட்டார்களையும்விட, என்னை இஸ்ரவேலான கர்த்தருடைய மக்களின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படித் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.
\v 22 இதைவிட இன்னும் நான் இழிவானவனும் என்னுடைய பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்கும்கூட மகிமையாக விளங்குவேன் என்றான்.
\v 23 அதினால் சவுலின் மகளான மீகாளுக்கு மரணமடையும் நாள்வரைக்கும் பிள்ளை இல்லாமலிருந்தது.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 தேவன் தாவீதுக்கு வாக்குத்தத்தம் அளித்தல்
\p
\v 1 கர்த்தர் ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லா எதிரிகளுக்கும் அவனை விலக்கி, இளைப்பாறச் செய்தபோது, அவன் தன்னுடைய வீட்டிலே குடியிருக்கும்போது,
\v 2 ராஜா தீர்க்கதரிசியான நாத்தானை நோக்கி: பாரும், கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் குடியிருக்கும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே இருக்கிறதே என்றான்.
\s5
\v 3 அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான்.
\v 4 அன்று இரவிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
\v 5 நீ போய் என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் வாழும்படி ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?
\s5
\v 6 நான் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்த நாள்முதல் இந்த நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாழாமல், கூடாரத்திலும் வீட்டிலும் உலாவினேன்.
\v 7 நான் இஸ்ரவேலான என்னுடைய மக்களை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் தலைவர்களில் யாரையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுரு மரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாமலிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் மக்களுக்குள் உலாவி வந்த எந்த இடத்திலாவது ஏதாவது ஒரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?
\s5
\v 8 இப்போதும் நீ என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என்னுடைய மக்களுக்கு அதிபதியாக இருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,
\v 9 நீ போன எந்த இடத்திலும் உன்னோடு இருந்து, உன்னுடைய எதிரிகளையெல்லாம் உனக்கு முன்பாக அழித்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் பெயர்களுக்கு இணையான பெரிய பெயரை உனக்கு உண்டாக்கினேன்.
\s5
\v 10 நான் என்னுடைய மக்களான இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்களுடைய இடத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்புபோலவும், நான் என்னுடைய மக்களான இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்வரையில் நடந்ததுபோலவும், துன்மார்க்கமான மக்களால் இனி சிறுமைப்படாமலும் இருக்கும்படி அவர்களை நியமித்தேன்.
\v 11 உன்னுடைய எல்லா எதிரிகளுக்கும் உன்னை விலக்கி, இளைப்பாறவும் செய்தேன்; இப்போதும் கர்த்தர் உனக்கு வீட்டை உண்டாக்குவார் என்பதைக் கர்த்தர் உனக்கு அறிவிக்கிறார்.
\s5
\v 12 உன்னுடைய நாட்கள் நிறைவேறி, நீ உன்னுடைய பிதாக்களோடு படுத்திருக்கும்போது, நான் உனக்குப்பின்பு உனக்கு பிறக்கும் உன்னுடைய சந்ததியை எழும்பச்செய்து, அவன் ராஜ்ஜியத்தை நிலைப்படுத்துவேன்.
\v 13 அவன் என்னுடைய நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவனுடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கச்செய்வேன்.
\v 14 நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனிதர்கள் பயன்படுத்தும் பிரம்பினாலும் மனிதர்களுடைய கசையடிகளினாலும் தண்டிப்பேன்.
\s5
\v 15 உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடமிருந்து என்னுடைய கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.
\v 16 உன்னுடைய வீடும், உன்னுடைய ராஜ்ஜியமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக உறுதிப்பட்டிருக்கும்; உன்னுடைய சிங்காசனம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்கிறார் என்று சொல்லச்சொன்னார்.
\v 17 நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லா தரிசனத்தின்படியும், தாவீதுக்குச் சொன்னான்.
\s1 தாவீதின் ஜெபம்
\p
\s5
\v 18 அப்பொழுது தாவீது ராஜா உள்ளே நுழைந்து, கர்த்தருக்கு முன்பாக அமர்ந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் யார்? என் குடும்பம் எப்படிப்பட்டது?.
\v 19 கர்த்தராகிய ஆண்டவரே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குச் சின்னதாக இருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவராக இருக்கிற தேவரீர் உம்முடைய அடியானுடைய குடும்பத்தைக்குறித்து, வெகுகாலத்திற்குமுன்பு சொன்ன செய்தியை மனிதர்கள் வழக்கத்தின்படி சொன்னீரே.
\v 20 இனி தாவீது உம்மிடம் சொல்லவேண்டியது என்ன? கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர்.
\s5
\v 21 உம்முடைய வாக்குத்தத்தத்தினாலும், உம்முடைய சித்தத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் உமது அடியானுக்கு அறிவிக்கும்படித் தயவு செய்தீர்.
\v 22 ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்களுடைய காதுகளாலே கேட்ட எல்லா காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறு தேவனும் இல்லை.
\v 23 உம்முடைய மக்களான இஸ்ரவேலர்களுக்கு நிகரான மக்களும் உண்டோ? பூலோகத்து மக்களில் இந்த ஒரே மக்களை தேவன் தமக்கு மக்களாக மீட்பதற்கும், தமக்குபுகழ்ச்சி விளங்கச்செய்வதற்கும் ஏற்படுத்தினாரே; தேவரீர் எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டுவந்த உம்முடைய மக்களுக்கு முன்பாகப் பயங்கரமான பெரிய காரியங்களை நடத்தி, உம்முடைய தேசத்திற்கும், அதிலிருந்த மக்களுக்கும், அவர்கள் தெய்வங்களுக்கும், உமது மகிமையை விளங்கச்செய்து,
\s5
\v 24 உம்முடைய மக்களான இஸ்ரவேலர்கள் என்றென்றைக்கும் உம்முடைய மக்களாக இருப்பதற்கு, அவர்களை நிலைப்படுத்தி, கர்த்தராகிய நீரே அவர்களுக்குத் தேவனானீர்.
\v 25 இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவனுடைய வீட்டையும்குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
\v 26 அப்படியே சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானான தாவீதினுடைய வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக.
\s5
\v 27 உனக்கு வீடுகட்டுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தராக இருக்கிற நீர் உமது அடியானுக்கு வெளிப்படுத்தினீர்: ஆகையால் உம்மை நோக்கி இந்த விண்ணப்பத்தைச் செய்ய உமது அடியானுக்கு மன தைரியம் கிடைத்தது.
\v 28 இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நற்செய்தியை வாக்குத்தத்தம்செய்தீர்.
\v 29 இப்போதும் உமது அடியானின் வீடு என்றென்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 தாவீதின் வெற்றிகள்
\p
\v 1 இதற்குப் பின்பு தாவீது பெலிஸ்தர்களை முறியடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.
\s5
\v 2 அவன் மோவாபியர்களையும் முறியடித்து, அவர்களைத் தரையிலே படுக்கச்செய்து, அவர்கள்மேல் நூல்போட்டு அளவெடுத்து இரண்டு வரிசை மனிதர்களைக் கொன்றுபோட்டு, ஒரு வரிசை மனிதர்களை உயிரோடு வைத்தான்; இவ்விதமாக மோவாபியர்கள் தாவீதுக்குச் சேவை செய்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.
\s5
\v 3 ரேகோபின் மகனான ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐபிராத்து நதி அருகில் இருக்கிற இடத்தைத் திரும்பத் தனக்குக் கைப்பற்றுவதற்காகச் சென்றபோது, தாவீது அவனையும் முறியடித்து,
\v 4 அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரர்களையும், இருபதாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் முடமாக்கினான்.
\s5
\v 5 சோபாவின் ராஜாவான ஆதாதேசருக்கு உதவிசெய்ய தமஸ்குப் பட்டணத்தார்களான சீரியர்கள் வந்தார்கள்; தாவீது சீரியர்களில் இருபத்திரெண்டாயிரம்பேரைக் கொன்று,
\v 6 தமஸ்குவிற்கு அடுத்த சீரியாவிலே படைகளை வைத்தான்; சீரியர்கள் தாவீதுக்குச் சேவை செய்து, அவனுக்குக் கப்பங்கட்டினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம், கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
\s5
\v 7 ஆதாதேசரின் வேலைக்காரர்களுடைய பொன்கேடகங்களை தாவீது எடுத்து, அவைகளை எருசலேமிற்குக் கொண்டுவந்தான்.
\v 8 ஆதாதேசரின் பட்டணங்களான பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீது ராஜா மிகத் திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்.
\s5
\v 9 தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறியடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவான தோயீ கேட்டபோது,
\v 10 ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்செய்துகொண்டிருந்ததால், ராஜாவான தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடு யுத்தம்செய்து, அவனை முறியடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும் தோயீ தன்னுடைய மகனான யோராமை ராஜாவினிடம் அனுப்பினான். மேலும் யோராம் தன்னுடைய கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான பொருட்களைக் கொண்டுவந்தான்.
\s5
\v 11 அவன் கொண்டு வந்தவைகளை தாவீது ராஜா வெற்றிகண்ட சீரியர்கள், மோவாபியர்கள், அம்மோன் மக்கள், பெலிஸ்தர்கள், அமலேக்கியர்கள் என்னும் எல்லா தேசத்தார்களிடத்திலும்,
\v 12 ரேகோபின் மகனான ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவினிடமும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடும் கர்த்தருக்குப் பிரதிஷ்டை செய்தான்.
\s5
\v 13 தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெட்டாயிரம் சீரியர்களை முறியடித்துத் திரும்பினதால் புகழ்பெற்றான்.
\v 14 ஏதோமில் படைகளை வைத்தான்; ஏதோம் எங்கிலும் அவன் படைகளை வைத்ததால், ஏதோமியர்கள் எல்லோரும் தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன எல்லா இடத்திலும் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
\s1 தாவீதின் அலுவலர்கள்
\p
\s5
\v 15 இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாக இருந்தான்; அவன் தன்னுடைய எல்லா மக்களுக்கும் நியாயமும் நீதியும் செய்துவந்தான்.
\v 16 செருயாவின் மகனான யோவாப் இராணுவத்தலைவனாக இருந்தான்; அகிலூதின் மகனான யோசபாத் மந்திரியாக இருந்தான்.
\v 17 அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அகிமெலேக்கும் ஆசாரியர்களாக இருந்தார்கள்; செராயா எழுத்தாளனாக இருந்தான்.
\v 18 யோய்தாவின் மகன் பெனாயா கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும் தலைவனாக இருந்தான்; தாவீதின் மகன்களோ முன்னணி ஆலோசகர்களாக இருந்தார்கள்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 தாவீதும் மேவிபோசேத்தும்
\p
\v 1 யோனத்தானுக்காக என்னால் தயவு பெறக்கூடியவன் யாராவது சவுலின் குடும்பத்தார்களில் இன்னும் மீதியாக இருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.
\v 2 அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனான சீபா என்னும் பெயருள்ளவனைத் தாவீதிடம் அழைத்து வந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.
\s5
\v 3 அப்பொழுது ராஜா: தேவனுக்காக நான் சவுலின் குடும்பத்தார்களுக்குத் தயைசெய்யும்படி அவன் குடும்பத்தார்களில் யாராவது ஒருவன் இன்னும் மீதியாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு மகன் இருக்கிறான் என்றான்.
\v 4 அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.
\s5
\v 5 அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து வரவழைத்தான்.
\v 6 சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதிடம் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
\s5
\v 7 தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன்னுடைய தகப்பனான யோனத்தானிற்காக நான் நிச்சயமாக உனக்கு தயைசெய்து, உன்னுடைய தகப்பனான சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என்னுடைய பந்தியில் எப்பொழுதும் அப்பம் சாப்பிடுவாய் என்றான்.
\v 8 அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்ப்பதற்கு, உமது அடியான் யார் என்றான்.
\s5
\v 9 ராஜா சவுலின் வேலைக்காரனான சீபாவை வரவழைத்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவருடைய குடும்பத்தார்களில் எல்லோருக்கும் இருந்த யாவையும் உன்னுடைய எஜமானுடைய மகனுக்குக் கொடுத்தேன்.
\v 10 எனவே, நீ உன்னுடைய மகன்களையும் உன்னுடைய வேலைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு, உன்னுடைய எஜமானுடைய மகன் சாப்பிட அப்பம் உண்டாயிருக்க, அந்த நிலத்தைப் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன்னுடைய எஜமானுடைய மகன் மேவிபோசேத் எப்பொழுதும் என்னுடைய பந்தியிலே அப்பம் புசிப்பான் என்றான்; சீபாவுக்கு பதினைந்து மகன்களும் இருபது வேலைக்காரர்களும் இருந்தார்கள்.
\s5
\v 11 சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவான என்னுடைய ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானான நான் செய்வேன் என்றான். ராஜாவின் மகன்களில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என்னுடைய பந்தியிலே சாப்பிடுவான் என்று ராஜா சொன்னான்.
\v 12 மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பெயருள்ள சிறுவனான ஒரு மகன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த அனைவரும், மேவிபோசேத்திற்கு வேலைக்காரர்களாக இருந்தார்கள்.
\v 13 மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் எப்பொழுதும் சாப்பிடுகிறவனாக இருந்தபடியால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு கால்களும் முடமாக இருந்தது.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 தாவீது அம்மோனியர்களைத் தோற்கடித்தல்
\p
\v 1 அதன் பின்பு அம்மோன் மக்களின் ராஜா இறந்தான்; அவனுடைய மகனான ஆனூன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\v 2 அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனான நாகாஸ் எனக்கு தயவு செய்ததுபோல, அவனுடைய மகனான இவனுக்கு நான் தயவு செய்வேன் என்று சொல்லி, அவனுடைய தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன்னுடைய வேலைக்காரர்களை அனுப்பினான்; தாவீதின் வேலைக்காரர்கள் அம்மோன் மக்களுடைய தேசத்திற்கு வந்தபோது,
\v 3 அம்மோன் மக்களின் பிரபுக்கள் தங்களுடைய ஆண்டவனான ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனிற்கு மரியாதைக் கொடுப்பதாக உமக்குத் தோன்றுகிறதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவுபார்த்து, அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன்னுடைய வேலைக்கரர்களை உம்மிடத்திற்கு அனுப்பினான் என்றார்கள்.
\s5
\v 4 அப்பொழுது ஆனூன்: தாவீதின் வேலைக்காரர்களைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய ஆடைகளை இடுப்புவரை வைத்துவிட்டு, மற்றப்பாதியைக் கத்தரித்து, அவர்களை அனுப்பிவிட்டான்.
\v 5 அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அந்த மனிதர்கள் மிகவும் வெட்கப்பட்டபடியால், ராஜா அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்களுடைய தாடி வளரும்வரை நீங்கள் எரிகோவில் இருந்து, பின்பு வாருங்கள் என்று சொல்லச் சொன்னான்.
\s5
\v 6 அம்மோன் மக்கள் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, தூதுவர்களை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியர்களிலும், சோபாவிலிருக்கிற சீரியர்களிலும் இருபதாயிரம் காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவிடம் ஆயிரம்பேர்களையும், இஷ்தோபிலிருக்கிற பன்னிரெண்டாயிரம்பேர்களையும், கூலிப்படையாக வரவழைத்தார்கள்.
\v 7 அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பலசாலிகளான எல்லா இராணுவங்களையும் அனுப்பினான்.
\v 8 அம்மோன் மக்கள் புறப்பட்டு, நகரத்து வாசலிலே யுத்தம்செய்ய அணிவகுத்து நின்றார்கள்; ஆனாலும் சோபாவிலும் ரேகோபிலுமிருந்து வந்த சீரியர்களும், இஷ்தோபிலும் மாக்காவிலுமிருந்து வந்த மனிதர்களும், வெளியிலே தனியாக இருந்தார்கள்.
\s5
\v 9 யோவாபோ இராணுவங்களின் படை தனக்கு நேராக முன்னும் பின்னும் இருக்கிறதைக் காணும்போது, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பகுதியைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியர்களுக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தி,
\v 10 மற்ற மக்களை அம்மோன் இராணுவத்திற்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி தன்னுடைய சகோதரனான அபிசாயினிடம் ஒப்புவித்து:
\s5
\v 11 சீரியர்களின் கரம் மேலோங்கினால் நீ எனக்கு உதவிசெய்யவேண்டும்; அம்மோன் இராணுவத்தினுடைய கரம் மேலோங்கினால் நான் உனக்கு உதவிசெய்ய வருவேன்.
\v 12 தைரியமாக இரு: நம்முடைய மக்களுக்காகவும், நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் நம்முடைய பெலத்தைக் காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
\s5
\v 13 யோவாபும் அவனோடிருந்த மக்களும் சீரியர்கள்மேல் யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாகத் தப்பியோடினார்கள்.
\v 14 சீரியர்கள் தப்பியோடுகிறதை அம்மோன் இராணுவத்தினர்கள் பார்த்தபோது, அவர்களும் அபிசாயிக்கு முன்பாக தப்பியோடிப் பட்டணத்திற்குள் நுழைந்தார்கள்: அப்பொழுது யோவாப் அம்மோன் மக்களைவிட்டுத் திரும்பி எருசலேமிற்கு வந்தான்.
\s5
\v 15 தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதை சீரியர்கள் பார்த்தபோது, ஒன்றாகக் கூடினார்கள்.
\v 16 ஆதாரேசர் நதிக்கு மறுகரையில் சீரியர்களையும் அழைத்தனுப்பினான்; அவர்கள் ஏலாமுக்கு வந்தார்கள்; ஆதாரேசருடைய படைத்தலைவனான சோபாக் அவர்களுக்கு முன்னாலே சென்றான்.
\s5
\v 17 அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, ஏலாமுக்குப் போனான்; சீரியர்கள் இராணுவங்களை அணிவகுத்து தாவீதுக்கு எதிராக நின்றார்கள்; அவனோடு யுத்தம்செய்கிறபோது,
\v 18 சீரியர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தப்பி ஓடினார்கள்; தாவீது சீரியர்களில் எழுநூறு இரதவீரர்களையும் நாற்பதாயிரம் குதிரைவீரர்களையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனான சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்.
\v 19 அப்பொழுது ஆதாரேசருக்கு பணிவிடை செய்கிற எல்லா ராஜாக்களும் தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதைக் கண்டு, இஸ்ரவேலர்களோடு சமாதானம்செய்து, அவர்களுக்கு பணிவிடை செய்தார்கள். அதன் பின்பு அம்மோன் மக்களுக்கு உதவிசெய்ய சீரியர்கள் பயப்பட்டார்கள்.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\s1 தாவீதும் பத்சேபாளும்
\p
\v 1 அடுத்த வருடம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடு தன்னுடைய வீரர்களையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் இராணுவத்தை அழிக்கவும், ரப்பாவை முற்றுகையிடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.
\s5
\v 2 ஒருநாள் மாலையில் தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள்.
\v 3 அப்பொழுது தாவீது, அந்த பெண் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் மகளும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள்.
\s5
\v 4 அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்தபோது, அவளோடு உறவுகொண்டான்; பின்பு அவள் தன்னுடைய தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குப் போனாள்.
\v 5 அந்தப் பெண் கர்ப்பமடைந்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.
\s5
\v 6 அப்பொழுது தாவீது: ஏத்தியனான உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினிடம் ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதிடம் அனுப்பினான்.
\v 7 உரியா அவனிடம் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, மக்கள் சுகமாக இருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான்.
\v 8 பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன்னுடைய வீட்டிற்குப் போய், கால்களை கழுவு என்றான்; உரியா ராஜாவின் அரண்மனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவிடமிருந்து ராஜ உணவு அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.
\s5
\v 9 ஆனாலும் உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், ராஜ அரண்மனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லா வீரர்களோடும் படுத்துக்கொண்டிருந்தான்.
\v 10 உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன்னுடைய வீட்டிற்குப் போகாமல் இருக்கிறது என்ன என்று கேட்டான்.
\v 11 உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என்னுடைய ஆண்டவனான யோவாபும் என்னுடைய ஆண்டவனின் வீரர்களும் வெளியிலே முகாமிட்டிருக்கும்போது, நான் சாப்பிடுவதற்கும், குடிக்கிறதற்கும், என்னுடைய மனைவியோடு உறங்கவும், என்னுடைய வீட்டிற்குள் நுழைவேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபெயரிலும் உம்முடைய ஆத்துமாவின்பெயரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.
\s5
\v 12 அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயே இரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான்.
\v 13 தாவீது அவனைத் தனக்கு முன்பாக சாப்பிட்டுக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனுக்கு போதை உண்டாக்கினான்; ஆனாலும் அவன் தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், மாலையில் தன்னுடைய ஆண்டவனின் வீரர்களோடு தன்னுடைய படுக்கையிலே படுத்துக்கொண்டான்.
\s5
\v 14 காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.
\v 15 அந்தக் கடிதத்திலே கடுமையாக யுத்தம் நடக்கிற இடத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டப்பட்டு சாகும்படி, அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.
\s5
\v 16 அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சுற்றி காவல்போட்டிருக்கும்போது பெலசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.
\v 17 பட்டணத்தின் மனிதர்கள் புறப்பட்டுவந்து யோவாபோடு யுத்தம் செய்யும்போது, தாவீதின் வீரர்களான மக்களில் சிலர் விழுந்து இறந்தார்கள்; ஏத்தியனான உரியாவும் இறந்தான்.
\s5
\v 18 அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி,
\v 19 தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லி முடிந்தபோது,
\v 20 ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டணத்திற்கு இத்தனை அருகில் போய் யுத்தம் செய்யவேண்டியது என்ன? மதிலின் மேல் நின்று அம்பு எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?
\s5
\v 21 எருப்பேசேத்தினுடைய மகன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை மதிலின் மேலிருந்து ஒரு மாவரைக்கும் கல்லின் துண்டை அவன்மேல் போட்டதால் அல்லவோ அவன் இறந்தான்; நீங்கள் மதிலிற்கு இவ்வளவு அருகில் போனது என்ன என்று உன்னோடு சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய வீரனான உரியா என்னும் ஏத்தியனும் இறந்தான் என்று சொல் என்றான்.
\s5
\v 22 அந்த ஆள் போய், நுழைந்து, யோவாப் தன்னிடம் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து,
\v 23 தாவீதைப் பார்த்து; அந்த மனிதர்கள் மேலோங்கி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்வரை அவர்களைத் துரத்தினோம்.
\s5
\v 24 அப்பொழுது வில்வீரர்கள் மதிலின் மேலிருந்து உம்முடைய வீரர்களின்மேல் அம்பு எய்ததால், ராஜாவின் வீரர்களில் சிலர் இறந்தார்கள்; உம்முடைய வீரனான உரியா என்னும் ஏத்தியனும் இறந்தான் என்றான்.
\v 25 அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடம் போய், இந்தக் காரியத்தைப்பற்றிக் கலங்கவேண்டாம்; பட்டயம் ஒருமுறை ஒருவனையும், மற்றொருமுறை வேறொருவனையும் தாக்கும்; நீ யுத்தத்தைப் பலக்கச்செய்து, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனைத் தைரியப்படுத்து என்றான்.
\s5
\v 26 தன்னுடைய கணவனான உரியா இறந்தான் என்று அவனுடைய மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன்னுடைய கணவனுக்காக துக்கம் கொண்டாடினாள்.
\v 27 துக்கநாள் முடிந்தபின்பு, தாவீது அவளை வரவழைத்து, தன்னுடைய வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி, அவனுக்கு ஒரு மகனைப்பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தருக்கு மனவருத்தமாக இருந்தது.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\s1 நாத்தான் தாவீதைக் கடிந்துகொள்ளுதல்
\p
\v 1 கர்த்தர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார்; நாத்தான் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள், ஒருவன் செல்வந்தன், மற்றவன் தரித்திரன்.
\v 2 செல்வந்தனுக்கு ஆடுமாடுகள் மிக அதிகமாக இருந்தது.
\v 3 தரித்திரனுக்கோ தான் விலைக்கு வாங்கி வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாமல் இருந்தது; அது அவனோடும் அவனுடைய பிள்ளைகளோடும் இருந்து வளர்ந்து, அவனுடைய அப்பத்தை சாப்பிட்டு, அவனுடைய பாத்திரத்திலே குடித்து, அவனுடைய மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.
\s5
\v 4 அந்த செல்வந்தனிடம் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல்செய்ய, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனமில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனிதனுக்குச் சமையல்செய்யச் சொன்னான் என்றான்.
\v 5 அப்பொழுது தாவீது: அந்த மனிதன்மேல் மிகவும் கோபமடைந்து, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனிதன் மரணத்திற்கு ஏதுவானவன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.
\v 6 அவன் இரக்கமற்றவனாக இருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.
\s5
\v 7 அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனிதன்; இஸ்ரவேலின் தேவனான கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,
\v 8 உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய பெண்களையும் உன்னுடைய மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கொடுத்தேன்; இது போதாமலிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.
\s5
\v 9 கர்த்தருடைய பார்வைக்குத் தீங்கான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை செய்தது என்ன? ஏத்தியனான உரியாவை நீ பட்டயத்தால் இறக்கச்செய்து, அவனுடைய மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் இராணுவத்தினர்களின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.
\v 10 இப்போதும் நீ என்னை அசட்டைசெய்து, ஏத்தியனான உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியால், பட்டயம் எப்பொழுதும் உன்னுடைய வீட்டைவிட்டு நீங்காமலிருக்கும்.
\s5
\v 11 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னுடைய வீட்டிலே அழிவை உன்மேல் எழும்பச்செய்து, உன்னுடைய கண்கள் பார்க்க, உன்னுடைய மனைவிகளை எடுத்து, உன்னுடைய அயலானுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன்னுடைய மனைவிகளோடு உறவுகொள்வான்.
\v 12 நீ மறைவில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்வேன் என்றார் என்று சொன்னான்.
\v 13 அப்பொழுது தாவீது நாத்தானிடம்: நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடி, கர்த்தர் உன்னுடைய பாவத்தை நீங்கச்செய்தார்.
\s5
\v 14 ஆனாலும் இந்த சம்பவத்தால் கர்த்தருடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான்.
\v 15 அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாக இருந்தது.
\s5
\v 16 அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடம் ஜெபம்செய்து, உபவாசித்து, உள்ளே போய், இரவு முழுவதும் தரையிலே கிடந்தான்.
\v 17 அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கச்செய்ய, அவனுடைய வீட்டிலுள்ள மூப்பர்கள் எழுந்து, அவன் அருகில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடு அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.
\v 18 ஏழாம் நாளில், பிள்ளை இறந்துபோனது. பிள்ளை இறந்துபோனது என்று தாவீதின் வேலைக்காரர்கள் அவனுக்கு அறிவிக்க பயந்தார்கள்: பிள்ளை உயிரோடிருக்கும்போது, நாம் அவரோடு பேசுகிறபோது, அவர் நம்முடைய சொல்லைக் கேட்கவில்லை; பிள்ளை இறந்துபோனது என்று அவரிடம் எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக மனவேதனை அடைவாரே என்று பேசிக்கொண்டார்கள்.
\s5
\v 19 தாவீது தன்னுடைய வேலைக்காரர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்கிறதைக் கண்டு, பிள்ளை இறந்துபோனது என்று அறிந்து, தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: பிள்ளை இறந்துபோனதோ என்று கேட்டான்; இறந்துபோனது என்றார்கள்.
\v 20 அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, குளித்து, எண்ணெய் பூசிக்கொண்டு, தன்னுடைய ஆடைகளை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் நுழைந்து, தொழுதுகொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வந்து, உணவு கேட்டான்; அவன் முன்னே அதை வைத்தபோது சாப்பிட்டான்.
\s5
\v 21 அப்பொழுது அவன் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கும்போது உபவாசித்து அழுதீர்; பிள்ளை மரித்தபின்பு, எழுந்து சாப்பிடுகிறீரே என்றார்கள்.
\v 22 அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கும்போது, பிள்ளை பிழைக்கும்படிக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன்.
\v 23 அது இறந்திருக்க, இப்போது நான் ஏன் உபவாசிக்க வேண்டும்? இனி நான் அதைத் திரும்பிவரச்செய்ய முடியுமோ? நான் அதினிடம் போவேனே தவிர, அது என்னிடம் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.
\s5
\v 24 பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலோமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் கர்த்தர் அன்பாக இருந்தார்.
\v 25 அவர் தீர்க்கதரிசியான நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தருக்காக அவனுக்கு யெதிதியா என்று பெயரிட்டான்.
\s5
\v 26 அதற்குள்ளே யோவாப் அம்மோன் மக்களுடைய ரப்பா பட்டணத்தின்மேல் யுத்தம்செய்து, தலைநகரத்தைப் பிடித்து,
\v 27 தாவீதிடம் ஆள் அனுப்பி, நான் ரப்பாவின்மேல் யுத்தம்செய்து, தண்ணீர் ஓரமான பட்டணத்தைப் பிடித்துக்கொண்டேன்.
\v 28 நான் பட்டணத்தைப் பிடிக்கிறதினால், என் பெயர் சொல்லாதபடி, நீர் மற்ற மக்களைக் கூட்டிக்கொண்டுவந்து, பட்டணத்தை முற்றுகைபோட்டு, பிடிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 29 அப்படியே தாவீது மக்களையெல்லாம் கூட்டிக்கொண்டு, ரப்பாவுக்குப் போய், அதின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்தான்.
\v 30 அவர்களுடைய ராஜாவின் தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து நிறைபொன்னும், இரத்தினங்கள் பதித்ததுமாகவும் இருந்தது; அது தாவீதுடைய தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளைப்பொருட்களைக் கொண்டுபோனான்.
\s5
\v 31 பின்பு அதிலிருந்த மக்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களும், இரும்பு ஆயதங்களும், இரும்புக் கோடரிகளும் செய்யும் வேளையில் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளைகளிலும் வேலைசெய்யவைத்தான்; இப்படி அம்மோன் மக்களின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா மக்களோடும் எருசலேமிற்குத் திரும்பினான்.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 அம்னோனும் தாமாரும்
\p
\v 1 இதற்குப்பின்பு தாவீதின் மகனான அப்சலோமிற்குத் தாமார் என்னும் பெயருள்ள அழகான ஒரு சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் மகன் அம்னோன் ஆசை வைத்தான்.
\v 2 தன்னுடைய சகோதரியான தாமாருக்காக கவலையோடு இருந்து வியாதிப்பட்டான்; அவள் கன்னிப்பெண்ணாக இருந்தாள்; அவளுக்குத் தீங்குசெய்ய, அம்னோனுக்கு வருத்தமாக இருந்தது.
\s5
\v 3 அம்னோனுக்குத் தாவீதினுடைய சகோதரன் சிமியாவின் மகனான யோனதாப் என்னும் பெயருள்ள ஒரு நண்பன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரமுள்ளவன்.
\v 4 அவன் இவனைப் பார்த்து: ராஜாவின் மகனான நீ, நாளுக்குநாள் எதனால் இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச் சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என்னுடைய சகோதரன் அப்சலோமின் சகோதரியான தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான்.
\s5
\v 5 அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதியுள்ளனைப்போல உன்னுடைய படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்ப்பதற்கு உன்னுடைய தகப்பனார் வரும்போது, நீ என்னுடைய சகோதரியான தாமார் வந்து, எனக்கு உணவு கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படி நான் பார்க்க, என்னுடைய கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவுசெய்து அவளை அனுப்பும் என்று சொல் என்றான்.
\v 6 அப்படியே அம்னோன் வியாதியுள்ளவன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என்னுடைய சகோதரியான தாமார் வந்து நான் அவளுடைய கையினாலே சாப்பிடும்படி, என்னுடைய கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைச் செய்யும்படி அனுமதி கொடுக்கவேண்டும் என்றான்.
\s5
\v 7 அப்பொழுது தாவீது; தாமாரின் வீட்டுக்கு ஆள் அனுப்பி, தாமாரிடம் நீ உன்னுடைய சகோதரனான அம்னோன் வீட்டுக்குப் போய், அவனுக்கு சமையல் செய்துகொடு என்று சொல்லச்சொன்னான்.
\v 8 தாமார் தன்னுடைய சகோதரனான அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப்போய், மாவெடுத்துப் பிசைந்து, அவனுடைய கண்களுக்கு முன்பாகத் தட்டி, பணியாரங்களைச் சுட்டு,
\v 9 பாத்திரத்தை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன்: எல்லோரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லோரும் அவனைவிட்டு வெளியே போனார்கள்.
\s5
\v 10 அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன்னுடைய கையினாலே சாப்பிடும்படி, அந்தப் பலகாரத்தை என்னுடைய அறைக்கு கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை வீட்டின் அறையில் இருக்கிற தன்னுடைய சகோதரனான அம்னோனிடத்தில் கொண்டுபோனாள்.
\v 11 அவன் சாப்பிடும்படி அவள் அவைகளைக் அருகில் கொண்டுவரும்போது, அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடு உறவுகொள் என்றான்.
\v 12 அதற்கு அவள்: வேண்டாம், என்னுடைய சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யக்கூடாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.
\s5
\v 13 நான் இந்த வெட்கத்தோடு எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவுடன் பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள்.
\v 14 அவன் அவளுடைய சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாகப் பிடித்து, அவளோடு உறவுகொண்டான்.
\s5
\v 15 அதன்பின்பு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைவிட, அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாக இருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடு சொன்னான்.
\v 16 அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைவிட, இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற இந்த அநியாயம் கொடுமையாக இருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவளுடைய சொல்லைக் கேட்க மனமில்லாமல்,
\v 17 தன்னிடத்தில் வேலைசெய்கிற தன்னுடைய வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளி, கதவைப் பூட்டு என்றான்.
\s5
\v 18 அப்படியே அவனிடம் வேலைசெய்கிறவன் அவளை வெளியேத் தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவர்ணமான ஆடையை அணிந்துகொண்டிருந்தாள்; ராஜாவின் மகள்களான கன்னிகைகள் இதைப்போல சால்வைகளை அணிந்துகொள்வார்கள்.
\v 19 அப்பொழுது தாமார்: தன்னுடைய தலையின்மேல் சாம்பலை வாரிப் போட்டுக்கொண்டு, தான் அணிந்திருந்த பலவர்ணமான ஆடையைக்கிழித்து, தன்னுடைய கையைத் தன்னுடைய தலையின்மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டுபோனாள்.
\s5
\v 20 அப்பொழுது அவள் சகோதரனான அப்சலோம் அவளைப் பார்த்து: உன்னுடைய சகோதரனான அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என்னுடைய சகோதரியே, நீ மவுனமாக இரு; அவன் உன்னுடைய சகோதரன்; இந்தச் சம்பவத்தை உன்னுடைய மனதிலே வைக்காதே என்றான்; அப்படியே தாமார் தன்னுடைய சகோதரனான அப்சலோமின் வீட்டில் தனியாக மனவேதனைப்பட்டுக்கொண்டிருந்தாள்.
\v 21 தாவீது ராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, கடுங்கோபம் கொண்டான்.
\v 22 அப்சலோம் அம்னோனோடு நன்மையோ தீமையோ பேசவில்லை; தன்னுடைய சகோதரியான தாமாரை அம்னோன் கற்பழித்ததினால் அப்சலோம் அவனைப் பகைத்தான்.
\s1 அம்னோனை அப்சலோம் கொலைசெய்தல்
\p
\s5
\v 23 இரண்டு வருடங்கள் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர் கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜாவின் மகன்கள் எல்லோரையும் விருந்துக்கு அழைத்தான்.
\v 24 அப்சலோம் ராஜாவிடம் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர் கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய வேலைக்காரர்களும் உமது அடியானோடு வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
\s5
\v 25 ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என்னுடைய மகனே; நாங்கள் எல்லோரும் வந்தால் உனக்கு அதிக செலவு உண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனமில்லாமல், அவனை ஆசீர்வதித்தான்.
\v 26 அப்பொழுது அப்சலோம்: நீர் வராமல் இருந்தால், என்னுடைய சகோதரனான அம்னோனாவது எங்களோடு வரும்படி அவனுக்கு அனுமதி தாரும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடு வரவேண்டியது என்ன என்றான்.
\s5
\v 27 அப்சலோம் பின்பும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டபடியால், அவன் அம்னோனையும், ராஜாவின் மகன்கள் அனைவரையும் அவனோடு போகவிட்டான்.
\v 28 அப்சலோம் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்து சந்தோஷமாக இருக்கும் நேரத்தை நன்றாக எதிர்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாக இருங்கள் என்று சொல்லியிருந்தான்.
\v 29 அப்சலோம் கட்டளையிட்டபடியே அப்சலோமின் வேலைக்காரர்கள் அம்னோனுக்குச் செய்தார்கள்; அப்பொழுது ராஜாவின் மகன்கள் எல்லோரும் எழுந்து, அவரவர்கள் தங்களுடைய கோவேறு கழுதையின்மேல் ஏறி ஓடிப்போனார்கள்.
\s5
\v 30 அவர்கள் வழியில் இருக்கும்போதே, அப்சலோம் ராஜாவின் மகன்கள் எல்லோரையும் அடித்துக் கொன்றுபோட்டான், அவர்களில் ஒருவரும் மீதியாக இருக்கவிடவில்லை என்று, தாவீதுக்குச் செய்தி வந்தது.
\v 31 அப்பொழுது ராஜா எழுந்து, தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்து கிடந்தான்; அவனுடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள்.
\s5
\v 32 அப்பொழுது தாவீதின் சகோதரனான சிமியாவின் மகன் யோனதாப் வந்து: ராஜாவின் மகன்களான வாலிபர்களையெல்லாம் கொன்று போட்டார்கள் என்று என்னுடைய ஆண்டவன் நினைக்கவேண்டாம்; அம்னோன் மட்டும் இறந்துபோனான்; அவன் தன்னுடைய சகோதரியான தாமாரைக் கற்பழித்த நாள்முதற்கொண்டு, அது அப்சலோமின் மனதில் இருந்தது.
\v 33 இப்போதும் ராஜாவின் மகன்கள் எல்லோரும் இறந்தார்கள் என்கிற பேச்சை ராஜாவான என்னுடைய ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்கவேண்டாம்; அம்னோன் ஒருவனே இறந்தான் என்றான்; அப்சலோம் ஓடிப்போனான்.
\s5
\v 34 இரவுக்காவலன் தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, அநேக மக்கள் தனக்குப் பின்னாலே மலை ஓரமாக வருகிறதைக் கண்டான்.
\v 35 அப்பொழுது யோனதாப் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவின் மகன்கள் வருகிறார்கள்; உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று என்றான்.
\v 36 அவன் பேசி முடிந்தபோது, ராஜாவின் மகன்கள் வந்து, சத்தமிட்டு அழுதார்கள்; ராஜாவும் அவனுடைய எல்லா வேலைக்காரர்களும் மிகவும் புலம்பி அழுதார்கள்.
\s5
\v 37 அப்சலோமோ அம்மீயூதின் மகனான தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடமாக ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன்னுடைய மகனுக்காக வேதனைப்பட்டுக்கொண்டிருந்தான்.
\v 38 அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருடங்கள் இருந்தான்.
\v 39 தாவீது ராஜா அம்னோன் இறந்தபடியால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் எண்ணத்தை விட்டுவிட்டான்.
\s5
\c 14
\cl அத்தியாயம்– 14
\s1 அப்சலோம் எருசலேமிற்குத் திரும்புதல்
\p
\v 1 ராஜாவின் இருதயம் அப்சலோமின் மேல் இன்னும் நினைவாக இருக்கிறதைச் செருயாவின் மகன் யோவாப் கண்டு,
\v 2 அவன் தெக்கோவாவில் இருக்கிற புத்தியுள்ள ஒரு பெண்ணை அழைத்து: நீ துக்கம் கொண்டாடுகிறவளைப்போல, துக்கத்துக்குரிய ஆடைகளை அணிந்துக்கொண்டு, எண்ணெய் பூசாமல், இறந்து போனவனுக்காக அநேக நாட்கள் துக்கம் கொண்டாடுகிற பெண்ணைப்போலக் காண்பித்து,
\v 3 ராஜாவிடம் போய், அவரை நோக்கி: இவ்வாறாகச் சொல் என்று அவள் சொல்லவேண்டிய வார்த்தைகளை யோவாப் அவளிடம் சொன்னான்.
\s5
\v 4 அப்படியே தெக்கோவா ஊரைச்சேர்ந்த அந்த பெண் ராஜாவோடு பேசப்போய், தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே, இரட்சியும் என்றாள்.
\v 5 ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, அவள்: நான் ஒரு விதவை, என்னுடைய கணவன் இறந்துபோனான்.
\v 6 உமது அடியாளுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபோட்டு, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான்.
\s5
\v 7 வம்சத்தார்கள் எல்லோரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாக எழும்பி, தன்னுடைய சகோதரனைக் கொன்று போட்டவனை எங்களிடம் ஒப்புவி; அவன் கொன்ற அவனுடைய சகோதரனுடைய உயிருக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; ஒரே வாரிசாக இருந்தாலும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் கணவனின் பெயரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடி, எனக்கு இன்னும் மீதியாக இருக்கிற கடைசியாக எரிகிற சிறு நெருப்பையும் அணைத்துப்போட மனதாக இருக்கிறார்கள் என்றாள்.
\s5
\v 8 ராஜா அந்தப் பெண்ணைப் பார்த்து: நீ உன்னுடைய வீட்டுக்குப் போ, உன்னுடைய காரியத்தைக் குறித்து கட்டளை கொடுப்பேன் என்றான்.
\v 9 பின்னும் அந்தத் தெக்கோவாவூர் பெண் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, ராஜாவின் மேலும் அவருடைய சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடி, அந்தப் பழி என்மேலும் என்னுடைய தகப்பன் குடும்பத்தின்மேலும் சுமரட்டும் என்றாள்.
\s5
\v 10 அதற்கு ராஜா: உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடம் கொண்டுவா; அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாமல் இருப்பான் என்றான்.
\v 11 பின்னும் அவள்: இரத்தப்பழி வாங்குகிறவர்கள் தீங்கு செய்து, என்னுடைய மகனை அழிக்கப் பெருகாதபடி, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உன் மகனுடைய தலைமுடியில் ஒன்றும் தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
\s5
\v 12 அப்பொழுது அந்த பெண்: ராஜாவான என்னுடைய ஆண்டவனோடு உமது அடியாள் ஒரு வார்த்தை சொல்ல அனுமதி வேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.
\v 13 அப்பொழுது அந்தப் பெண்: பின்னே ஏன் தேவனுடைய மக்களுக்கு எதிராக இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர், துரத்தப்பட்ட தம்முடைய மகனை ராஜா திரும்ப அழைக்காததாலே, ராஜா இப்பொழுது சொன்ன வார்த்தையால் குற்றமுள்ளவரைப்போல் இருக்கிறார்.
\v 14 நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச் சேர்க்கக்கூடாதபடி, தரையிலே சிந்தப்படுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்தப்பட்டவன் முழுவதும் தம்மைவிட்டு விலக்க முடியாமலிருக்கும் நினைவுகளை நினைக்கிறார்.
\s5
\v 15 இப்பொழுதும் நான் என்னுடைய ஆண்டவனாகிய ராஜாவோடு இந்த வார்த்தையைப் பேசவந்த காரணம் என்னவென்றால்: மக்கள் எனக்குப் பயமுண்டாக்கியதால், நான் ராஜாவோடு பேசவந்தேன்; ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளான நான் நினைத்ததாலும் வந்தேனே தவிர வேறொன்றுமில்லை.
\v 16 என்னையும் என்னுடைய மகனையும் ஒன்றாக தேவனுடைய சுதந்தரத்திலிருந்து நீக்கி, அழிக்க நினைக்கிற மனிதனுடைய கைக்குத் தமது அடியாளை தப்புவிக்கும்படி ராஜா கேட்பார்.
\v 17 ராஜாவான என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாக இருக்கும் என்று உமது அடியாளான நான் நினைத்தேன்; நன்மையையும் தீமையையும் கேட்கும்படி, ராஜாவான என்னுடைய ஆண்டவன் தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; இதற்காக உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மோடு இருக்கிறார் என்றாள்.
\s5
\v 18 அப்பொழுது ராஜா அந்தப் பெண்ணுக்கு பதிலாக: நான் உன்னிடம் கேட்கும் காரியத்தை நீ எனக்கு மறைக்க வேண்டாம் என்றான். அதற்கு அந்தப் பெண் பதிலாக, ராஜாவான என்னுடைய ஆண்டவர் சொல்லட்டும் என்றாள்.
\v 19 அப்பொழுது ராஜா: இதற்கெல்லாம் யோவாப் உனக்கு உதவியாக இருக்கவில்லையா என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண் பதிலாக, ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் சொன்னவைகளைவிட்டு வலது பக்கத்திலாவது இடது பக்கத்திலாவது விலகுவதற்கு ஒருவராலும் முடியாது என்று ராஜாவான என் ஆண்டவனுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; உமது அடியானாகிய யோவாப் தான் இதை எனக்குக் கற்பித்து, அவனே இந்த எல்லா வார்த்தைகளையும் உமது அடியாளின் வாயிலிருந்து சொல்ல வைத்தான்.
\v 20 நான் இந்தக் காரியத்தை விளக்கிப் பேசுவதற்கு உமது அடியானாகிய யோவாப் அதற்குக் காரணமாக இருந்தான்; ஆனாலும் தேசத்தில் நடக்கிறதையெல்லாம் அறிய, என் ஆண்டவனுடைய ஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப்போல் இருக்கிறது என்றாள்.
\s5
\v 21 அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் வாலிபனைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.
\v 22 அப்பொழுது யோவாப் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி, ராஜாவை வாழ்த்தி, ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததால், என்னுடைய ஆண்டவனாகிய ராஜாவின் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.
\s5
\v 23 பின்பு யோவாப் எழுந்து, கேசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமிற்கு அழைத்துக்கொண்டு வந்தான்.
\v 24 ராஜா: அவன் என்னுடைய முகத்தைப் பார்க்கவேண்டியதில்லை; தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும் என்றான்; அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப்போனான்.
\s5
\v 25 இஸ்ரவேலர்கள் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல் அழகுள்ளவனும் புகழப்பட்டவனும் இல்லை; உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை அவனில் ஒரு குறையும் இல்லாமல் இருந்தது.
\v 26 அவன் தன்னுடைய தலைமுடி தனக்குப் பாரமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவனுடைய தலைமுடி ராஜாவுடைய அளவின்படி இருநூறு சேக்கல் எடையாக இருக்கும்.
\v 27 அப்சலோமுக்கு மூன்று மகன்களும், தாமார் என்னும் பெயர்கொண்ட ஒரு மகளும் பிறந்தார்கள்; இவள் மிக அழகான பெண்ணாக இருந்தாள்.
\s5
\v 28 அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருடங்கள் எருசலேமிலே குடியிருந்தான்.
\v 29 ஆகையால் அப்சலோம் யோவாபை ராஜாவிடம் அனுப்பும்படி அழைப்பு கொடுத்தான்; அவனோ அவனிடம் வரமாட்டேன் என்றான்; இரண்டாம்முறையும் அவன் அழைப்பு கொடுத்தான்; அவன் வரமாட்டேன் என்றான்.
\s5
\v 30 அப்பொழுது அவன் தன்னுடைய வேலைக்காரர்களைப் பார்த்து: இதோ என்னுடைய நிலத்திற்கு அருகில் யோவாபின் நிலம் இருக்கிறது; அதிலே அவனுக்கு வாற்கோதுமை விளைந்திருக்கிறது; நீங்கள் போய் அதிலே தீயைக்கொளுத்திப் போடுங்கள் என்றான்; அப்படியே அப்சலோமின் வேலைக்காரர்கள் அந்த நிலத்தில் தீயைக் கொளுத்திப்போட்டார்கள்.
\v 31 அப்பொழுது யோவாப் எழுந்து, அப்சலோமின் வீட்டிற்குள் போய், என்னுடைய நிலத்தை உம்முடைய வேலைக்காரர்கள் தீயைக் கொளுத்திப்போட்டது என்ன என்று அவனைக் கேட்டான்.
\s5
\v 32 அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கேசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவிடம் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பு கொடுத்தேன்; இப்போதும் நான் ராஜாவின் முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றம் இருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்.
\s1 அப்சலோம் தாவீது ராஜாவை சந்தித்தல்
\p
\v 33 யோவாப் ராஜாவிடம் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமிற்கு அழைப்பு கொடுத்தான்; அவன் ராஜாவிடம் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.
\s5
\c 15
\cl அத்தியாயம்– 15
\s1 அப்சலோமின் சதி
\p
\v 1 இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன்பாக ஓட ஐம்பது வீரர்களையும் சம்பாதித்தான்.
\v 2 மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, யாராவது தன்னிடம் இருக்கிற வழக்குக்காக ராஜாவிடம் நியாயம் கேட்பதற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரைச் சேர்ந்தவன் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றின், இந்த ஊரைச் சேர்ந்தவன் என்று சொன்னால்,
\s5
\v 3 அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன்னுடைய வழக்கு நேர்மையும் நியாயமுமாக இருக்கிறது; ஆனாலும் ராஜாவிடம் உன்னுடைய வழக்கை விசாரிப்பவர்கள் ஒருவரும் இல்லை என்பான்.
\v 4 பின்னும் அப்சலோம்: சிக்கலான வழக்கு உள்ளவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படி, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாக இருக்கும் என்பான்.
\s5
\v 5 யாராவது ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன்னுடைய கையை நீட்டி அவனைத் தழுவி முத்தம் செய்வான்.
\v 6 இப்படியாக அப்சலோம், ராஜாவிடம் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலர்களுக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனிதர்களுடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.
\s5
\v 7 நாற்பது வருடங்கள் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் கர்த்தருக்கு செய்த என்னுடைய பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படி நான் போக அனுமதிகொடும்.
\v 8 கர்த்தர் என்னை எருசலேமிற்குத் திரும்பி வரச்செய்தால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியா தேசத்தில் கேசூரில் குடியிருக்கும்போது, பொருத்தனை செய்தேன் என்றான்.
\s5
\v 9 அதற்கு ராஜா, சமாதானத்தோடு போ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்கு போனான்.
\v 10 அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் உளவாளிகளை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.
\s5
\v 11 எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர்கள் அப்சலோமோடுப் போனார்கள்; அவர்கள் வஞ்சகம் இல்லாமல் ஒன்றும் அறியாமற்போனார்கள்.
\s1 தாவீது பயந்தோடுதல்
\p
\v 12 அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனான அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊரான கீலோவிலிருந்து வரவழைத்தான்; அப்படியே கட்டுப்பாடு பெலத்து, மக்கள் அப்சலோமிடம் திரளாக வந்து கூடினார்கள்.
\s5
\v 13 அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதிடம் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைச் சார்ந்துப்போகிறது என்றான்.
\v 14 அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்தில் உள்ள தன்னுடைய எல்லா வேலைக்காரர்களையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் விரைவாக நம்மிடம் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் தீங்கு வரச்செய்து, நகரத்தைக் கூர்மையான பட்டயத்தால் அழிக்காதபடிக்கு விரைவாகப் புறப்படுங்கள் என்றான்.
\v 15 ராஜாவின் வேலைக்காரர்கள் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவான எங்கள் ஆண்டவன் கட்டளைகளை எல்லாம் செய்ய உமது அடியார்களான நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம் என்றார்கள்.
\s5
\v 16 அப்படியே ராஜாவும் அவனுடைய குடும்பத்தினர் எல்லோரும் கால்நடையாகப் புறப்பட்டார்கள்; வீட்டைக்காக்க ராஜா மறுமனையாட்டிகளான பத்து பெண்களை வைத்தான்.
\v 17 ராஜாவும் எல்லா மக்களும் கால்நடையாகப் புறப்பட்டு, சற்றுத்தூரம் போய், ஒரு இடத்திலே நின்றார்கள்.
\v 18 அவனுடைய வேலைக்காரர்கள் எல்லாரும், கிரேத்தியர்கள் யாவரும், பிலேத்தியர்கள் யாவரும் அவன் பக்கத்திலே நடந்து போனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாக வந்த அறுநூறுபேர்களான கித்தியர்கள் எல்லோரும் ராஜாவுக்கு முன்பாக நடந்தார்கள்.
\s5
\v 19 அப்பொழுது ராஜா, கித்தியனான ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடன் ஏன் வருகிறாய்? நீ திரும்பிப்போய், ராஜாவுடன் இரு; நீ அந்நிய தேசத்தை சேர்ந்தவன்; நீ உன்னுடைய இடத்திற்குத் திரும்பிப் போகலாம்.
\v 20 நீ நேற்றுதானே வந்தாய்; இன்று நான் உன்னை எங்களோடு நடந்துவரும்படி அழைத்துக்கொண்டு போகலாமா நான் போகவேண்டிய இடத்திற்குப் போகிறேன்; நீ உன்னுடைய சகோதரர்களையும் அழைத்துகொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடு இருப்பதாக என்றான்.
\s5
\v 21 ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பதிலாக: ராஜாவான என்னுடைய ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவான என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
\v 22 அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்துவா என்றான்; அப்படியே கித்தியனான ஈத்தாயும் அவனுடைய எல்லா மனிதர்களும் அவனோடு இருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள்.
\v 23 அனைத்து மக்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார்கள் எல்லோரும் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்; ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்; மக்கள் எல்லோரும் வனாந்திரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள்.
\s5
\v 24 சாதோக்கும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை அவனோடு இருந்து சுமக்கிற எல்லா லேவியர்களும் வந்து, தேவனுடைய பெட்டியை அங்கே வைத்தார்கள்; மக்கள் எல்லோரும் நகரத்திலிருந்து கடந்துபோகும்வரை, அபியத்தார் அங்கேயே இருந்தான்.
\v 25 ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நான் அதையும் அவர் தங்கும் இடத்தையும் பார்ப்பதற்கு, என்னைத் திரும்ப வரச்செய்வார்.
\v 26 அவர்: உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்று சொன்னால், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்.
\s5
\v 27 பின்னும் ராஜா ஆசாரியனான சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடு நகரத்திற்குத் திரும்பு; உன்னுடைய மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமான உங்கள் மகன்கள் இரண்டுபேர்களும் உங்களோடு திரும்பிப் போகட்டும்.
\v 28 எனக்கு அறிவிப்பதற்கு உங்களிடமிருந்து செய்தி வரும்வரை, நான் வனாந்திரத்தின் பள்ளத்தாக்கிலே தங்கியிருப்பேன் என்றான்.
\v 29 அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமிற்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்.
\s5
\v 30 தாவீது தன்னுடைய முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடு இருந்த எல்லா மக்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.
\v 31 அப்சலோமோடு சதி செய்தவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பைத்தியமாக்கிவிடுவீராக என்றான்.
\s5
\v 32 தாவீது மலையின் உச்சிவரை வந்து, அங்கே தேவனைத் தொழுதுகொண்டபோது, இதோ, அற்கியனான ஊசாய் தன்னுடைய ஆடையைக் கிழித்துக் கொண்டு, தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவனாக அவனுக்கு எதிராக வந்தான்.
\v 33 தாவீது அவனைப் பார்த்து: நீ என்னோடு நடந்துவந்தால் எனக்குப் பாரமாக இருப்பாய்.
\v 34 நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய வேலைக்காரனாக இருப்பேன்; முன்பு நான் உம்முடைய தகப்பனுக்கு வேலைக்காரனாக இருந்தேன்; இப்போது நான் உமக்கு வேலைக்காரன் என்று சொன்னால், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை பயனற்றுப் போகும்படிச் செய்வாய்.
\s5
\v 35 உன்னோடு அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே ஏதேனும் செய்தியை கேள்விப்பட்டால், அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு தெரியப்படுத்து.
\v 36 அங்கே அவர்களோடு சாதோக்கின் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்களுடைய இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள் மூலமாக எனக்கு அனுப்புங்கள் என்றான்.
\v 37 அப்படியே தாவீதின் நண்பனான ஊசாய் நகரத்திற்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமிற்கு வந்தான்.
\s5
\c 16
\cl அத்தியாயம்– 16
\s1 தாவீதும் சீபாவும்
\p
\v 1 தாவீது மலை உச்சியிலிருந்து சற்றுதூரம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் வேலைக்காரனான சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனை சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், உலர்ந்த நூறு திராட்சப்பழக் குலைகளும், வசந்தகாலத்து கனிகளான நூறு அத்திக் குலைகளும், ஒரு தோல்பை திராட்சரசமும் இருந்தது.
\v 2 ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் எதற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் குடும்பத்தார்கள் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும், வாலிபர்கள் சாப்பிடுவதற்கும், திராட்சரசம் வனாந்திரத்தில் களைத்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.
\s5
\v 3 அப்பொழுது ராஜா: உன் ஆண்டவனுடைய மகன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் குடும்பத்தார்கள் என் தகப்பனுடைய ராஜ்ஜியத்தை என் பக்கமாகத் திரும்பச்செய்வார்கள் என்றான் என்று சொன்னான்.
\v 4 அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உரியதையெல்லாம் உனக்கு தருகிறேன் என்றான். அதற்குச் சீபா: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
\s1 சீமேயி தாவீதை சபித்தல்
\p
\s5
\v 5 தாவீது ராஜா பகூரிம்வரை வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாக இருக்கிற கேராவின் மகனான சீமேயி என்னும் பெயருள்ள ஒரு மனிதன் அங்கேயிருந்து புறப்பட்டு, சபித்துக்கொண்டே நடந்துவந்து,
\v 6 எல்லா மக்களும், எல்லா பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கும்போது, தாவீதின்மேலும், தாவீது ராஜாவுடைய எல்லா அதிகாரிகள்மேலும் கற்களை எறிந்தான்.
\s5
\v 7 சீமேயி அவனை சபித்து: இரத்தப்பிரியனே, பாவியான மனிதனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
\v 8 சவுலின் இடத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல் குடும்பத்தார்களின் இரத்தப்பழியைத் திரும்பச் செய்வார்; கர்த்தர் ராஜ்ஜியபாரத்தை உன்னுடைய மகனான அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன்னுடைய அக்கிரமத்தில் சிக்கிக்கொண்டாய்; நீ இரத்தப்பிரியனான மனிதன் என்றான்.
\s5
\v 9 அப்பொழுது செருயாவின் மகன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ராஜாவான என்னுடைய ஆண்டவனை ஏன் சபிக்கவேண்டும்? நான் போய் அவனுடைய தலையை வெட்டிப்போடட்டும் என்றான்.
\v 10 அதற்கு ராஜா: செருயாவின் மகன்களே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னை சபிக்கட்டும்; தாவீதை சபிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்பவன் யார் என்றான்.
\s5
\v 11 பின்னும் தாவீது அபிசாயையும் தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லோரையும் பார்த்து: இதோ, என்னுடைய கர்ப்பத்தின் பிறப்பான என்னுடைய மகனே என்னுடைய உயிரை எடுக்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாகச் செய்வான், அவன் சபிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
\v 12 ஒருவேளை கர்த்தர் என்னுடைய சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் சபித்த சாபத்திற்குப் பதிலாக எனக்கு நன்மை செய்வார் என்றான்.
\s5
\v 13 அப்படியே தாவீதும் அவனுடைய மனிதர்களும் வழியிலே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து சபித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.
\v 14 ராஜாவும் அவனோடு இருந்த எல்லா மக்களும் களைத்தவர்களாக, தங்குமிடத்திலே சேர்ந்து, இளைப்பாறினார்கள்.
\s1 அகித்தோப்பேல் மற்றும் ஊசாயின் ஆலோசனை
\p
\s5
\v 15 அப்சலோமும் இஸ்ரவேல் மனிதர்களான எல்லா மக்களும் அவனோடு அகித்தோப்பேலும் எருசலேமிற்கு வந்தார்கள்.
\v 16 அற்கியனான ஊசாய் என்னும் தாவீதின் நண்பன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான்.
\s5
\v 17 அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன்னுடைய நண்பன்மேல் உனக்கு இருக்கிற தயவு இதுதானோ? உன்னுடைய நண்பனோடு நீ போகாமல்போனது என்ன என்று கேட்டான்.
\v 18 அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, கர்த்தரும் இந்த மக்களும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரோடு நான் சேர்ந்து அவரோடு இருப்பேன்.
\s5
\v 19 இதுவும் அல்லாமல், நான் யாருக்கு பணிவிடை செய்வேன்? அவருடைய மகனிடம் தானே? உம்முடைய தகப்பனிடம் எப்படி பணிவிடை செய்தோனோ, அப்படியே உம்மிடமும் பணிவிடை செய்வேன் என்றான்.
\s5
\v 20 அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது என்னவென்று ஆலோசனை சொல்லும் என்றான்.
\v 21 அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் வைத்துப்போன அவருடைய மறுமனையாட்டிகளிடம் உறவுகொள்ளும், அப்பொழுது உம்முடைய தகப்பனால் வெறுக்கப்பட்டீர் என்பதை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லோருடைய கைகளும் பெலனடையும் என்றான்.
\s5
\v 22 அப்படியே அப்சலோமுக்கு மாடியின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் எல்லா இஸ்ரவேலர்களின் கண்களுக்கும் முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் உறவுகொண்டான்.
\v 23 அந்த நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது; அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.
\s5
\c 17
\cl அத்தியாயம்– 17
\s1 தாவீது யோர்தானைக் கடந்து செல்லுதல்
\p
\v 1 பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னிரெண்டாயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இரவு தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.
\v 2 அவன் களைத்தவனும் கை வலிமையற்றவனுமாக இருக்கும்போது, நான் அவனிடம் போய், அவனைத் திடுக்கிடும்படிச் செய்வேன்; அப்பொழுது அவனோடு இருக்கும் மக்கள் எல்லோரும் பயந்து ஓடிப்போவதால், நான் ராஜாவைமட்டும் வெட்டி,
\v 3 மக்களை எல்லாம் உம்முடைய பக்கமாகத் திரும்பச்செய்வேன், இப்படிச் செய்ய நீர் முயற்சித்தால், எல்லோரும் திரும்பினபின்பு மக்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான்.
\v 4 இந்த வார்த்தை அப்சலோமின் பார்வைக்கும், இஸ்ரவேலுடைய எல்லா மூப்பர்களின் பார்வைக்கும் நலமாகத் தோன்றியது.
\s5
\v 5 ஆனாலும் அப்சலோம்: அற்கியனான ஊசாயைக் கூப்பிட்டு, அவன் சொல்வதையும் கேட்போம் என்றான்.
\v 6 ஊசாய் அப்சலோமிடம் வந்தபோது, அப்சலோம் அவனைப் பார்த்து: இப்படியாக அகிப்தோப்பேல் சொன்னான்; அவனுடைய வார்த்தையின்படி செய்வோமா? அல்லது, நீ சொல் என்றான்.
\v 7 அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்தமுறை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான்.
\s5
\v 8 மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவனுடைய மனிதர்களும் பெலசாலிகள் என்றும், காட்டிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல கோபமுள்ளவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாக இருக்கிறார்; அவர் இரவில் மக்களோடு தங்கமாட்டார்.
\v 9 இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறு எந்த இடத்திலாவது ஒளிந்திருப்பார்; ஆரம்பத்திலே நம்முடையவர்களில் சிலர் தாக்கப்பட்டார்கள் என்றால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமுக்குப் பின்செல்லுகிற வீரர்கள் கொலைச் செய்யப்பட்டார்கள் என்பார்கள்.
\v 10 அப்பொழுது சிங்கத்தின் இருதயத்துக்கு இணையான இருதயமுள்ள பலவானாக இருக்கிறவனும்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் வல்லமையுள்ளவன் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அறிவார்கள்.
\s5
\v 11 ஆதலால் நான் சொல்லுகிற ஆலோசனை என்னவென்றால், தாண்முதல் பெயெர்செபாவரை இருக்கிற கடற்கரை மணலைப்போல திரளான இஸ்ரவேலர்கள் எல்லோரும் உம்முடைய அருகில் சேர்க்கப்பட்டு, நீரும் யுத்தத்திற்குப் போகவேண்டும்.
\v 12 அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எந்த இடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம்; அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனிதர்களிலும் ஒருவனும் அவருக்கு மீதியாக இருப்பதில்லை.
\s5
\v 13 ஒரு பட்டணத்திற்குள் நுழைந்தால், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப் போட்டு, அங்கே ஒரு பொடிக்கல்லும் இல்லாமற்போகும்வரை, அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.
\v 14 அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைவிட அற்கியனான ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்; இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் தீங்கு வரச்செய்வதற்காக, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அழிக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்.
\s5
\v 15 பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இதன் இதன்படி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பர்களுக்கும் ஆலோசனை சொன்னான்; நானோ இதன் இதன்படி ஆலோசனை சொன்னேன்.
\v 16 இப்பொழுதும் நீங்கள் சீக்கிரமாகத் தாவீதுக்கு அறிவிக்கும்படிச் செய்தி அனுப்பி; நீர் இன்று இரவு வனாந்திரத்தின் பள்ளத்தாக்கிலே தங்கவேண்டாம்; நீரும் உம்மோடிருக்கிற எல்லா மக்களும் ராஜாவால் விழுங்கப்படாதபடித் தாமதம் இல்லாமல் அக்கரைக்குப் போகவேண்டும் என்று சொல்லச்சொல்லுங்கள் என்றான்.
\s5
\v 17 யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் நுழைவதை யாரும் காணாதபடி, இன்றொகேல் அருகில் நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீது ராஜாவுக்கு அதை அறிவிக்கப் போனார்கள்.
\v 18 ஒரு வாலிபன் அவர்களைக் கண்டு, அப்சலோமுக்கு அறிவித்தான்; ஆகையால் அவர்கள் இருவரும் சீக்கிரமாகப் போய், பகூரிமிலிருக்கிற ஒரு மனிதனுடைய வீட்டிற்குள் நுழைந்தார்கள்; அவனுடைய முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது; அதில் இறங்கினார்கள்.
\s5
\v 19 வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றின்மேல் விரித்து, அவர்கள் உள்ளே இருக்கிறதைத் தெரியாதபடி, அதின்மேல் தானியத்தைப் பரப்பிவைத்தாள்.
\v 20 அப்சலோமின் மனிதர்கள் அந்தப் பெண்ணிடம் வீட்டிற்குள் வந்து: அகிமாசும் யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்தப் பெண்: வாய்க்காலுக்கு அந்தப் பக்கத்திற்கு போய்விட்டார்கள் என்றாள்; இவர்கள் தேடியும் காணாமல், எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
\s5
\v 21 இவர்கள் போனபின்பு, அவர்கள் கிணற்றிலிருந்து ஏறிவந்து, தாவீது ராஜாவுக்கு அறிவித்து, தாவீதை நோக்கி: சீக்கிரமாக எழுந்து ஆற்றைக் கடந்துபோங்கள்; இதன்படி அகித்தோப்பேல் உங்களுக்கு எதிராக ஆலோசனை சொன்னான் என்றார்கள்.
\v 22 அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த எல்லா மக்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள்; பொழுதுவிடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடந்துபோகாதவன் ஒருவனும் இல்லை.
\s5
\v 23 அகித்தோப்பேல் தன்னுடைய யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன்னுடைய கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன்னுடைய ஊரிலிருக்கிற தன்னுடைய வீட்டுக்குப் போய், தன்னுடைய வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, தூக்குப்போட்டு இறந்தான்; அவன் தகப்பனுடைய கல்லறையில் அவனை அடக்கம்செய்தார்கள்.
\s5
\v 24 தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோமும் எல்லா இஸ்ரவேலர்களோடும் யோர்தானைக் கடந்தான்.
\v 25 அப்சலோம், யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக ஆக்கினான்; இந்த அமாசா, நாகாசின் மகளும், செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமான அபிகாயிலை திருமணம் செய்த இஸ்ரவேலனான எத்திரா என்னும் பெயருள்ள ஒருவனுடைய மகனாக இருந்தான்.
\v 26 இஸ்ரவேல் மக்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே முகாமிட்டார்கள்.
\s5
\v 27 தாவீது மக்னாயீமை அடைந்தபோது, அம்மோனியர்கள் தேசத்து ரப்பா பட்டணத்தானான சோபி என்னும் நாகாசின் மகனும், லோதேபார் ஊரைச்சேர்ந்த அம்மியேலின் மகன் மாகீரும், ரோகிலிம் ஊரைச்சேர்ந்தவனும் கீலேயாத்தியனுமான பர்சிலாவும்,
\v 28 மெத்தைகளையும், போர்வைகளையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயற்றையும், பெரும் பயிற்றையும், சிறு பயிற்றையும், வறுத்த சிறு பயிற்றையும்,
\v 29 தேனையும், வெண்ணெயையும், ஆடுகளையும், பால்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடு இருந்த மக்களுக்கும் சாப்பிடுகிறதற்குக் கொண்டுவந்தார்கள்; அந்த மக்கள் வனாந்திரத்திலே பசியும், களைப்பும், தாகமாகவும் இருப்பார்கள் என்று இப்படிச் செய்தார்கள்.
\s5
\c 18
\cl அத்தியாயம்– 18
\s1 அப்சலோமின் மரணம்
\p
\v 1 தாவீது தன்னோடு இருந்த மக்களைக் கணக்கிட்டுப்பார்த்து, அவர்கள்மேல் ஆயிரம்பேருக்கு தலைவர்களையும், நூறுபேருக்கு தலைவர்களையும் ஏற்படுத்தி,
\v 2 பின்பு தாவீது படைகளில் மூன்றில் ஒரு பிரிவை யோவாபின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைச் செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைக் கித்தியனான ஈத்தாயின் கையிலுமாக அனுப்பி: நானும் உங்களோடு புறப்பட்டு வருவேன் என்று ராஜா இராணுவங்களுக்குச் சொன்னான்.
\s5
\v 3 மக்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் ஓடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார்கள்; எங்களில் பாதிபேர்கள் இறந்துபோனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பத்தாயிரம்பேருக்கு சமமானவர்; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்கிறது எங்களுக்கு நலமாக இருக்கும் என்றார்கள்.
\v 4 அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாகத் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா நகர வாசலின் ஓரத்திலே நின்றான்; மக்கள் எல்லோரும் நூறு நூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.
\s5
\v 5 ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: வாலிபனான அப்சலோமை எனக்காக மெதுவாக நடத்துங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக் குறித்து தலைவர்களுக்கெல்லாம் கட்டளையிட்டதை மக்கள் எல்லோரும் கேட்டிருந்தார்கள்.
\s5
\v 6 மக்கள் வெளியே இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் புறப்பட்டபின்பு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.
\v 7 அங்கே இஸ்ரவேல் மக்கள் தாவீதின் வீரர்களுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டார்கள்; அங்கே அந்த நாளிலே இருபதாயிரம்பேர்கள் சாகத்தக்கதாக பேரழிவு உண்டானது.
\v 8 யுத்தம் அந்த தேசம் எங்கும் பரவியது; அந்த நாளில் பட்டயத்தால் இறந்த மக்களைவிட, காடு பட்சித்துப்போட்ட மக்கள் அதிகம்.
\s5
\v 9 அப்சலோம் தாவீதின் வீரர்களை சந்திக்க நேர்ந்தது; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின்கீழ் வந்ததினால், அவனுடைய தலை கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்திற்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை தள்ளிப்போனது.
\v 10 அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலி மரத்திலே தொங்குவதைப் பார்த்தேன் என்றான்.
\v 11 அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைப்பார்த்தாயே; பின்பு ஏன் அவனை அங்கேயே வெட்டி, நிலத்தில் விழும்படி செய்யவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும் ஒரு வாரையும் கொடுக்கக் கடமையுள்ளவனாக இருப்பேனே என்றான்.
\s5
\v 12 அந்த மனிதன் யோவாபை நோக்கி: என்னுடைய கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய மகன்மேல் என்னுடைய கையை நீட்டமாட்டேன்; வாலிபனான அப்சலோமை நீங்களே காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள் கேட்கக் கட்டளையிட்டாரே.
\v 13 ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவானது இல்லை; ஆதலால், நான் அதைச் செய்தால், என்னுடைய உயிருக்கே எதிராக செய்பவனாவேன், நீரும் எனக்கு எதிராக இருப்பீர் என்றான்.
\s5
\v 14 பின்பு யோவாப்: நான் இப்படி உன்னோடு பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன்னுடைய கையிலே மூன்று ஈட்டிகளை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலி மரத்தின் நடுவிலே உயிரோடு தொங்கிக்கொண்டிருக்கும்போது, அவனுடைய மார்பிலே குத்தினான்.
\v 15 அப்பொழுது யோவாபின் ஆயுதம் ஏந்தினவர்களான பத்து வீரர்கள் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக்கொன்று போட்டார்கள்.
\s5
\v 16 அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி இராணுவத்தை நிறுத்தியதால், இராணுவம் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பினார்கள்.
\v 17 அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மிகப் பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.
\s5
\v 18 அப்சலோம் உயிரோடு இருக்கும்போது: என்னுடைய பெயரை நினைக்கச்செய்யும்படியாக எனக்கு மகன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன்னுடைய பெயரை சூட்டினான்; அது இந்த நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.
\s1 தாவீதின் புலம்பல்
\p
\s5
\v 19 சாதோக்கின் மகனான அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர்களுடைய எதிரிகளின் கைக்கு விலக்கி நியாயம் செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் வேகமாக ஓடட்டும் என்றான்.
\v 20 யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக்கூடாது; இன்னொரு நாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் மகன் இறந்ததால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,
\s5
\v 21 யோவாப் கூஷியை நோக்கி: நீ போய், பார்த்ததை ராஜாவுக்கு அறிவிப்பாயாக என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.
\v 22 சாதோக்கின் மகனான அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பின்பாக நானும் ஓடுகிறேன் என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கும்போது, நீ ஓடவேண்டியது என்ன என்றான்.
\v 23 அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமவெளி நிலத்தின் வழியாக ஓடி கூஷிக்கு முந்திப்போனான்.
\s5
\v 24 தாவீது உள் மற்றும் வெளி வாசலின் நடுவாக உட்கார்ந்திருந்தான்; இரவு காவலன் மதில் வாசலின் மேற்கூரையின்மேல் நடந்து, தன்னுடைய கண்களை உயர்த்தி, இதோ, ஒரு மனிதன் தனியே ஓடிவருகிறதைப் பார்த்து,
\v 25 கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான். அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாக வந்தால், அவனுடைய வாயிலே நல்ல செய்தி இருக்கும் என்றான்; அவன் அருகே ஓடிவரும்போது,
\s5
\v 26 இரவு காவலன், வேறொருவன் ஓடிவருகிறதைப் பார்த்து: அதோ இன்னொரு மனிதன் தனியே ஓடிவருகிறான் என்று வாயிற்காவலனைக் கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
\v 27 மேலும் இரவு காவலன்; முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனிதன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.
\s5
\v 28 அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவான என்னுடைய ஆண்டவனுக்கு எதிராகத் தங்கள் கைகளை எடுத்த மனிதர்களை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனான கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.
\v 29 அப்பொழுது ராஜா: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய குழப்பம் இருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.
\v 30 அப்பொழுது ராஜா: நீ அங்கே போய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான்.
\s5
\v 31 இதோ, கூஷி வந்து: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு எதிராக எழும்பின எல்லோடைய கைக்கும் உம்மை விலக்கி நியாயம் செய்தார் என்றான்.
\v 32 அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்த வாலிபனுக்கு நடந்ததுபோல, ராஜாவான என் ஆண்டவனுடைய விரோதிகளுக்கும், தீங்கு செய்ய உமக்கு விரோதமாக எழும்புகிற யாவருக்கும் நடக்கட்டும் என்றான்.
\v 33 அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, நகரவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகும்போது: என் மகனான அப்சலோமே, என் மகனே, என் மகனான அப்சலோமே, நான் உனக்குப் பதிலாக இறந்துபோனால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.
\s5
\c 19
\cl அத்தியாயம்– 19
\s1 தாவீது எருசலேமிற்குத் திரும்புதல்
\p
\v 1 இதோ, ராஜா அப்சலோமிற்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
\v 2 ராஜா தம்முடைய மகனுக்காக மனவேதனை அடைந்திருக்கிறார் என்று அன்றையதினம் இராணுவத்தினர் கேள்விப்பட்டார்கள்; அதற்காக அன்றையதினம் அந்த வெற்றி இராணுவங்களுக்கெல்லாம் துக்கமாக மாறினது.
\s5
\v 3 யுத்தத்தில் பயந்து ஓடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருடனைப்போல, மக்கள் அன்றையதினம் திருட்டுத்தனமாக பட்டணத்திற்குள் வந்தார்கள்.
\v 4 ராஜா தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு, மிகவும் சத்தமாக: என் மகனான அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
\s5
\v 5 அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவிடம் போய்: இன்று உம்முடைய உயிரையும், உம்முடைய மகன்கள், மகள்கள் மற்றும் மனைவிகளின் உயிரையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் உயிரையும் பாதுகாத்த உம்முடைய போர்வீரர்கள் எல்லோருடைய முகத்தையும் வெட்கப்படுத்தினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களை நேசித்து, உம்மை நேசிக்கிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது.
\v 6 தளபதிகளும், வீரர்களும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கச்செய்கிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று இறந்துபோனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாக இருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன்.
\s5
\v 7 இப்போதும் எழுந்து வெளியே வந்து, உம்முடைய வீரர்களோடு அன்பாகப் பேசும்; நீர் வெளியே வராமலிருந்தால், இன்று இரவு ஒருவரும் உம்மோடு தங்கியிருப்பதில்லை என்று கர்த்தர்மேல் ஆணையிடுகிறேன்; அப்பொழுது உம்முடைய சிறுவயது முதல் இதுவரைக்கும் உமக்கு நடந்த எல்லாத் தீமையைவிட, அது உமக்கு அதிகத் தீமையாக இருக்கும் என்றான்.
\v 8 அப்பொழுது ராஜா எழுந்துபோய், நகரவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா நகரவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, மக்கள் எல்லோரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலர்களோ தங்களுடைய வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.
\s5
\v 9 இஸ்ரவேலுடைய எல்லா கோத்திரங்களிலுமுள்ள எல்லா மக்களுக்குள்ளும் வாக்குவாதம் உண்டாகி, அவர்கள்: ராஜா நம்முடைய எதிரிகளின் கைக்கு நம்மை விலக்கிவிட்டார், அவர்தான் பெலிஸ்தர்களின் கைக்கு நம்மை பாதுகாத்தார்; இப்போதோ அப்சலோமிடம் தப்பிக்க, தேசத்தைவிட்டு ஓடிப்போனார்.
\v 10 நமக்கு ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்ட அப்சலோம் யுத்தத்திலே இறந்தான்; இப்போதும் ராஜாவைத் திரும்ப அழைத்துவராமல் நீங்கள் சும்மாயிருக்கிறது என்ன என்று சொல்லிக்கொண்டார்கள்.
\s5
\v 11 இப்படி இஸ்ரவேலர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறதை, ராஜா இருக்கிற வீட்டில் அவன் கேள்விப்பட்டபடியால், தாவீது ராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்திற்கு ஆள் அனுப்பி, நீங்கள் யூதாவின் மூப்பர்களோடு பேசி: ராஜாவைத் தம்முடைய வீட்டிற்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பின்னே போகிறது என்ன?
\v 12 நீங்கள் என்னுடைய சகோதரர்கள், நீங்கள் என்னுடைய எலும்பும் என்னுடைய சதையுமானவர்கள் அல்லவோ?; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் கடைசியாக இருக்கிறது என்ன என்று சொல்லுங்கள்.
\s5
\v 13 நீங்கள் அமாசாவையும் நோக்கி: நீ என்னுடைய எலும்பும் என்னுடைய சதையும் அல்லவோ? நீ யோவாபுக்குப் பதிலாக எந்த நாளும் எனக்கு முன்பாகப் படைத்தலைவனாக இல்லாவிட்டால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யட்டும் என்று சொல்லச்சொன்னான்.
\v 14 இப்படியே யூதாவின் எல்லா மனிதர்களுடைய இருதயத்தையும் ஒரு மனிதனுடைய இருதயத்தைப்போல் இணங்கச்செய்ததால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா மனிதர்களோடும் திரும்பி வாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
\v 15 ராஜா திரும்ப வருகிறதற்கு யோர்தான்வரை வந்தபோது, யூதா மனிதர்கள் ராஜாவுக்கு எதிராகப்போய், ராஜாவை யோர்தானைக் கடக்கச்செய்த கில்கால்வரை வந்தார்கள்.
\s5
\v 16 பகூரிம் ஊரைச்சேர்ந்த பென்யமீனியனான கேராவின் மகன் சீமேயியும் விரைந்து, யூதா மனிதர்களோடு தாவீது ராஜாவுக்கு எதிராகப்போனான்.
\v 17 அவனோடு பென்யமீன் மனிதர்கள் ஆயிரம்பேர்களும், சவுலின் வீட்டின் வேலைக்காரனான சீபாவும், அவனோடு அவனுடைய பதினைந்து மகன்களும், அவனுடைய இருபது வேலைக்காரர்களும் இருந்தார்கள்; அவர்கள் ராஜாவுக்கு முன்பாக யோர்தானை வேகமாகக் கடந்து போனார்கள்.
\v 18 அவர்கள் ராஜாவின் குடும்பத்தினரை இக்கரைக்கு கொண்டுவந்து சேர்க்கவும், அவன் விரும்பும் காரியத்துக்கு உதவவும், ஒரு படகு இக்கரைக்கு வந்தது; அப்பொழுது கேராவின் மகனான சீமேயி யோர்தானைக் கடக்கப்போகிற ராஜாவுக்கு முன்பாகத் தாழவிழுந்து,
\s5
\v 19 ராஜாவைப் பார்த்து: என்னுடைய ஆண்டவன் என்னுடைய அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமலும், ராஜாவான என்னுடைய ஆண்டவன் எருசலேமிலிருந்து புறப்பட்டுவருகிற நாளிலே, உமது அடியான் செய்த துரோகத்தை ராஜா நினைக்காமலும், தம்முடைய மனதில் வைக்காமலும் இருக்கட்டும்.
\v 20 உமது அடியானான நான் பாவம்செய்தேன் என்று அறிந்திருக்கிறேன்; இப்போதும், இதோ, ராஜாவான என்னுடைய ஆண்டவனுக்கு எதிராக வருவதற்கு, யோசேப்பின் குடும்பத்தார்கள் அனைவரையும் நான் இன்று முந்தி வந்தேன் என்றான்.
\s5
\v 21 அப்பொழுது செருயாவின் மகனான அபிசாய் பதிலாக: கர்த்தர் அபிஷேகம்செய்தவரைச் சீமேயி சபித்ததால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.
\v 22 அதற்கு தாவீது: செருயாவின் மகன்களே, இன்று நீங்கள் எனக்கு எதிரிகளாவதற்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன? இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா? இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்று சொல்லி,
\v 23 ராஜா சீமேயியைப் பார்த்து: நீ இறப்பதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்.
\s5
\v 24 சவுலின் மகனான மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போன நாள்முதல் அவன் சமாதானத்தோடு திரும்பிவருகிற நாள்வரை அவன் தன்னுடைய கால்களைச் சுத்தம் செய்யவும் இல்லை, தன்னுடைய தாடியைச் சவரம் செய்யவும் இல்லை; தன்னுடைய ஆடைகளை வெளுக்கவுமில்லை இல்லை.
\v 25 அவன் எருசலேமிலிருந்து ராஜாவுக்கு எதிராக வருகிறபோது, ராஜா அவனைப் பார்த்து: மேவிபோசேத்தே, நீ என்னோடு வராமற்போனது என்ன என்று கேட்டான்.
\s5
\v 26 அதற்கு அவன்: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, என்னுடைய வேலைக்காரன் என்னை மோசம் போக்கினான்; உமது அடியானான நான் முடவனானபடியால், ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி, ராஜாவோடு போகிறேன் என்று அடியேன் சொன்னேன்.
\v 27 அவன் ராஜாவான என்னுடைய ஆண்டவனிடம் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவான என்னுடைய ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; உமது பார்வைக்கு நலமாகத் தோன்றுகிறபடி செய்யும்.
\v 28 ராஜாவான என்னுடைய ஆண்டவனுக்கு முன்பாக என்னுடைய தகப்பன் வீட்டார்கள் எல்லோரும் இறப்பதற்கு தகுதியானவர்கள் தவிர, மற்றப்படி அல்ல; ஆனாலும் உமது பந்தியிலே சாப்பிடுகிறவர்களோடு உமது அடியேனை வைத்தீர்; இன்னும் நான் ராஜாவினிடத்தில் முறையிட, இனி எனக்கு என்ன நியாயம் இருக்கிறது என்றான்.
\s5
\v 29 அப்பொழுது ராஜா அவனைப் பார்த்து: உன்னுடைய காரியத்தைக் குறித்து அதிகமாக ஏன் பேசவேண்டும்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.
\v 30 அதற்கு மேவிபோசேத் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவன் சமாதானத்தோடு தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
\s5
\v 31 கீலேயாத்தியனான பர்சிலாவும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான்வரை ராஜாவை வழியனுப்ப, அவனோடு யோர்தானின் துறைமுகம்வரை கடந்துவந்தான்.
\v 32 பர்சிலா எண்பது வயது முதியவனாக இருந்தான்; ராஜா மகனாயீமிலே தங்கியிருக்கும்வரை அவனைப் பராமரித்துவந்தான்; அவன் மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தான்.
\v 33 ராஜா பர்சிலாவைப் பார்த்து: நீ என்னோடு வா, எருசலேமிலே உன்னை என்னிடத்திலே வைத்து பராமரிப்பேன் என்றான்.
\s5
\v 34 பர்சிலா ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடு எருசலேமிற்கு வருவதற்கு, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எவ்வளவு?
\v 35 இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும், தீமையானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசியாக இருக்குமோ? பாடகர்கள் பாடகிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனான நான் இனி ராஜாவான என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன?
\v 36 அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்வரை ராஜாவோடு வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?
\s5
\v 37 நான் என்னுடைய ஊரிலே இறந்து, என்னுடைய தாய் தகப்பன்மார்களுடைய கல்லறையில் அடக்கம்செய்யும்படி, உமது அடியான் திரும்பிப்போகட்டும்; ஆனாலும், இதோ, உமது அடியானான கிம்காம், ராஜாவான என்னுடைய ஆண்டவனோடு வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.
\s5
\v 38 அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடு வரட்டும்; உன்னுடைய பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு செய்து, நீ என்னிடத்தில் கேட்டுக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.
\v 39 மக்கள் எல்லோரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னுடைய இடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.
\s5
\v 40 ராஜா கடந்து, கில்கால்வரை போனான்; கிம்காம் அவனோடு வந்தான்; யூதாவின் இராணுவம் அனைத்தும், இஸ்ரவேலில் பாதி இராணுவங்களும், ராஜாவை இக்கரைக்கு அழைத்துவந்தபின்பு,
\v 41 இதோ, இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரும் ராஜாவினிடம் வந்து, ராஜாவைப் பார்த்து: எங்களுடைய சகோதரர்களான யூதா மனிதர்கள் திருட்டுத்தனமாக உம்மை அழைத்துவந்து, ராஜாவையும், அவர் வீட்டாரையும், அவரோடு இருக்கிற தாவீதின் மனிதர்கள் அனைவரையும், யோர்தானைக் கடக்கச்செய்தது என்ன என்றார்கள்.
\s5
\v 42 அப்பொழுது யூதா மனிதர்கள் எல்லோரும் இஸ்ரவேல் மனிதர்களுக்கு பதிலாக: ராஜா எங்களைச் சேர்ந்தவரானபடியால் இதைச் செய்தோம்; இதற்காக நீங்கள் கோபப்படுவது என்ன? நாங்கள் ராஜாவின் கையிலே ஏதாகிலும் வாங்கி சாப்பிட்டோமா? எங்களுக்குப் பரிசு கொடுக்கப்பட்டதா? என்றார்கள்.
\v 43 இஸ்ரவேல் மனிதர்களோ யூதா மனிதர்களுக்கு பதிலாக: ராஜாவிடம் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைவிட எங்களுக்கு தாவீதிடம் அதிக உரிமை உண்டு; பின்னே ஏன் எங்களை அற்பமாக நினைத்தீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனிதர்களின் பேச்சைவிட யூதா மனிதர்களின் பேச்சு பெலத்தது.
\s5
\c 20
\cl அத்தியாயம்– 20
\s1 சேபா தாவீதுக்கு எதிராகக் கலகம் செய்தல்
\p
\v 1 அப்பொழுது பென்யமீன் மனிதனான பிக்கிரியின் மகனான சேபா என்னும் பெயருள்ள பிரச்சினைக்குரிய மனிதன் ஒருவன் தற்செயலாக அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்கு தாவீதிடம் பங்கும் இல்லை, ஈசாயின் மகனிடம் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலர்களே, நீங்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்குப் போய்விடுங்கள் என்றான்.
\v 2 அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரும் தாவீதைவிட்டுப் பிரிந்து, பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம் வரையுள்ள யூதா மனிதர்கள் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்.
\s5
\v 3 தாவீது எருசலேமிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது, வீட்டைக்காக்க ராஜா வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வரவழைத்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்துப் பராமரித்தான்; அதன்பின்பு அவர்களிடம் அவன் உறவு வைத்துக்கொள்ளவில்லை; அப்படியே அவர்கள் இறக்கிற நாட்கள்வரை அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் விதவைகளைப்போல இருந்தார்கள்.
\s5
\v 4 பின்பு ராஜா அமாசாவைப் பார்த்து: நீ யூதா மனிதர்களை மூன்று நாட்களுக்குள்ளே என்னிடம் வரவழைத்து, நீயும் வந்து இருக்கவேண்டும் என்றான்.
\v 5 அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பதற்காக போய், தனக்குக் குறித்த காலத்தில் வராமல் தாமதித்தான்.
\s5
\v 6 அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைவிட பிக்கிரியின் மகனான சேபா, இப்பொழுது நமக்கு தீங்கு செய்வான்; அவன் பாதுகாப்பான பட்டணங்களுக்கு வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடி, நீ உன் எஜமானுடைய வீரர்களை அழைத்துக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான்.
\v 7 அப்படியே யோவாபின் மனிதர்களும், கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும், எல்லா வலிமையான வீரர்களும் அவனுக்குப்பின்பாகப் புறப்பட்டு, பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர்வதற்கு எருசலேமிலிருந்து போனார்கள்.
\s5
\v 8 அவர்கள் கிபியோனின் பக்கத்தில் இருக்கிற பெரிய பாறை அருகில் வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிராக வந்தான்; யோவாபோ, தான் அணிந்துகொண்டிருக்கிற தன்னுடைய சட்டையின்மேல் ஒரு வாரைக் கட்டியிருந்தான்; அதில் உறையோடு ஒரு பட்டயம் அவன் இடுப்பில் தொங்கினது; அவன் புறப்படும்போது அது விழுந்தது.
\s5
\v 9 அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என்னுடைய சகோதரனே, சுகமாக இருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தம்செய்யும்படி, தன்னுடைய வலது கையினால் அவன் தாடியைப் பிடித்து,
\v 10 தன்னுடைய கையிலிருக்கிற பட்டயத்திற்கு அமாசா எச்சரிக்கையாக இல்லாமலிருந்தபோது, யோவாப் அவனை அவனுடைய குடல்கள் தரையிலே விழும்படி, அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்; அவன் இறந்துபோனான்; அப்பொழுது யோவாபும் அவனுடைய சகோதரனான அபிசாயும் பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர்ந்தார்கள்.
\s5
\v 11 யோவாபுடைய வாலிபர்களில் ஒருவன் இறந்தவன் அருகில் நின்று, யோவாபின்மேல் பிரியப்படுகிறவன் எவனோ, தாவீதை ஆதரிக்கிறவன் எவனோ, அவன் யோவாபைப் பின்பற்றிப்போகட்டும் என்றான்.
\v 12 அமாசா நடுவழியில் இரத்தத்திலே புரண்டுகிடந்தபடியால், மக்கள் எல்லோரும் அங்கேயே நிற்பதை அவன் கண்டு, அமாசாவை வழியிலிருந்து வயலிலே இழுத்துப்போட்டான்; அவன் அருகில் வருகிறவர்கள் எல்லோரும் அங்கேயே நிற்பதைக் கண்டு, ஒரு ஆடையை அவன்மேல் போட்டான்.
\v 13 அவன் வழியிலிருந்து எடுத்துப்போடப்பட்டப் பின்பு, எல்லோரும் கடந்து, பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர, யோவாபுக்குப் பின்னேசென்றார்கள்.
\s5
\v 14 அவன் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி, பெத்மாக்காவான ஆபேல்வரையும், பேரீமின் கடைசிவரையிலும் வந்திருந்தான்; அந்த இடத்தார்களும் கூடி, தாங்களும் அவனுக்குப் பின்சென்றார்கள்.
\v 15 அவர்கள் போய் பெத்மாக்காவான ஆபேலிலே அவனை முற்றுகையிட்டு, பட்டணத்திற்குள் போகத் தடைச்சுவர்களைக் கட்டினார்கள்; யோவாபோடு இருக்கிற இராணுவத்தினர்கள் எல்லோரும் மதிலை விழச்செய்யும்படி அழிக்க முயற்சிசெய்தார்கள்.
\v 16 அப்பொழுது புத்தியுள்ள ஒரு பெண் பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடு பேசவேண்டும்; அவரை இங்கே அருகில் வரச்சொல்லுங்கள் என்றாள்.
\s5
\v 17 அவன் அவளுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பெண்: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான்.
\v 18 அப்பொழுது அவள்: முற்காலத்து மக்கள் ஆபேலிலே விசாரித்தால் வழக்குத் தீரும் என்பார்கள்.
\v 19 இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுமுள்ளவளாக இருக்கும்போது, நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாக இருக்கிறதை அழிக்கவேண்டும் என்று பார்க்கிறீரோ? நீர் கர்த்தருடைய சுதந்திரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்.
\s5
\v 20 யோவாப் மறுமொழியாக: விழுங்கவேண்டும் அழிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு வெகுதூரமாக இருக்கட்டும்.
\v 21 காரியம் அப்படியல்ல; பிக்கிரியின் மகனான சேபா என்னும் பெயருள்ள எப்பிராயீம் மலையை சேந்தவனாக இருக்கிற ஒரு மனிதன், ராஜாவான தாவீதுக்கு விரோதமாகத் தன்னுடைய கையை ஓங்கினான்; அவனைமட்டும் ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது பட்டணத்தைவிட்டுப் போவேன் என்றான். அப்பொழுது அந்தப் பெண் யோவாபைப் பார்த்து: இதோ, அவனுடைய தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி,
\v 22 அவள் மக்களிடத்தில் போய் புத்தியாகப் பேசியதால், அவர்கள் பிக்கிரியின் மகனான சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடம் போட்டார்கள்; அப்பொழுது அவன் எக்காளம் ஊதினான்; எல்லோரும் பட்டணத்தைவிட்டுக் கலைந்து, தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுப்போனார்கள்; யோவாபும் ராஜாவிடம் போகும்படி எருசலேமிற்குத் திரும்பினான்.
\p
\s5
\v 23 யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் மகனான பெனாயா கிரேத்தியர்கள்மேலும் பிலேத்தியர்கள்மேலும் தலைவராக இருந்தார்கள்.
\v 24 அதோராம் கடினமாக வேலை வாங்குகிறவனும், அகிலூதின் மகனான யோசபாத் மந்திரியும்,
\v 25 சேவா எழுத்தாளனாகவும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாகவும் இருந்தார்கள்.
\v 26 யயீரியனான ஈராவும் தாவீதுக்கு முதலமைச்சராக இருந்தான்.
\s5
\c 21
\cl அத்தியாயம்– 21
\s1 கிபியோனியர்கள் பழிவாங்கப்படுதல்
\p
\v 1 தாவீதின் நாட்களில் மூன்று வருடங்கள் தீராத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய முகத்தைத் தேடினான். கர்த்தர்: கிபியோனியர்களைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் குடும்பத்தாருக்காகவும் இது உண்டானது என்றார்.
\s5
\v 2 அப்பொழுது ராஜா: கிபியோனியர்களை அழைத்தான்; கிபியோனியர்களோ, இஸ்ரவேல் மக்களாக இல்லாமல் எமோரியர்களில் மீதியாக இருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் மக்கள் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் மக்களுக்காகவும், யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்.
\v 3 ஆகையால் தாவீது கிபியோனியர்களைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்யவேண்டியது என்ன? கர்த்தருடைய நன்மைகளையும் வாக்குத்தத்தங்களையும் சுதந்திரத்துக்கொண்டிருக்கிற அவருடைய மக்களை நீங்கள் ஆசீர்வதிக்கும்படி, நான் செய்யவேண்டிய பரிகாரம் என்ன என்று கேட்டான்.
\s5
\v 4 அப்பொழுது கிபியோனியர்கள் அவனைப் பார்த்து: சவுலோடும் அவன் குடும்பத்தார்களோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்களுடைய விருப்பம் இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால், நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
\s5
\v 5 அவர்கள் ராஜாவை நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கும் இல்லாதபடி, அழிந்துபோக எவன் எங்களை அழித்து எங்களுக்குத் தீங்குச்செய்ய நினைத்தானோ,
\v 6 அவன் மகன்களில் ஏழுபேர் கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊரான கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கில்போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான்.
\s5
\v 7 ஆனாலும் தாவீதும் சவுலின் மகனான யோனத்தானும் கர்த்தருக்கு செய்துகொண்ட ஆணைக்காக, ராஜா சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,
\v 8 ஆயாவின் மகளான ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவளுடைய இரண்டு மகன்களான அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் மகள்களான மேரப் மேகோலாத்தியனான பர்சிலாவின் மகனான ஆதரியேலுக்குப் பெற்ற அவளுடைய ஐந்து மகன்களையும் பிடித்து,
\v 9 அவர்களைக் கிபியோனியர்கள் கையில் ஒப்புக்கொடுத்தான்; அவர்களைக் கர்த்தருடைய சமூகத்தில் மலையின்மேல் தூக்கில்போட்டார்கள்; அப்படியே அவர்கள் ஏழுபேர்களும் ஒன்றாக இறந்தார்கள்; வாற்கோதுமை அறுப்பு துவங்குகிற அறுப்புக்காலத்தின் ஆரம்ப நாட்களிலே அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
\s5
\v 10 அப்பொழுது ஆயாவின் மகளான ரிஸ்பாள் சணல்நூல் துணியை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாட்களின் ஆரம்பம் முதல் வானத்திலிருந்து அவர்கள்மேல் மழைபெய்யும்வரை பகலில் ஆகாயத்துப் பறவைகளோ இரவில் காட்டுமிருகங்களோ அந்த உடல்களைத் தொந்தரவு செய்யாதபடி பார்த்துவந்தாள்.
\v 11 ஆயாவின் மகளான ரிஸ்பாள் என்னும் சவுலின் மறுமனையாட்டி செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது,
\s5
\v 12 தாவீது போய், பெலிஸ்தர்கள் கில்போவாவிலே சவுலை வெட்டினபோது, பெத்சானின் வீதியிலே தூக்கிப்போடப்பட்டதும், கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டணத்தார்கள் அங்கே போய்த் திருட்டுத்தனமாகக் கொண்டுவந்ததுமான சவுலின் எலும்புகளையும், அவனுடைய மகனான யோனத்தானின் எலும்புகளையும், அவர்களிடத்திலிருந்து எடுத்து,
\v 13 அங்கே இருந்து அவைகளைக் கொண்டுவந்து, தூக்கிப்போடப்பட்டவர்களின் எலும்புகளையும் அவைகளோடு சேர்த்து,
\s5
\v 14 சவுலின் எலும்புகளையும் அவன் மகனான யோனத்தானின் எலும்புகளையும், பென்யமீன் தேசத்து சேலா ஊரிலிருக்கிற அவனுடைய தகப்பனான கீசின் கல்லறையில் அடக்கம்செய்தான்; ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டார்.
\s1 பெலிஸ்தர்களுக்கு விரோதமாக யுத்தம்
\p
\s5
\v 15 பின்பு பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்கள்மேல் யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது தாவீதும் அவனோடு அவனுடைய இராணுவமும் போய், பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்தார்கள்; தாவீது களைத்துப்போனான்.
\v 16 அப்பொழுது முந்நூறு சேக்கல் நிறை வெண்கலமான ஈட்டியைப் பிடிக்கிறவனும், புது பட்டயத்தை கட்டிக்கொண்டவனுமான இஸ்பிபெனோப் என்னும் இராட்சத சந்ததியர்களில் ஒருவன் தாவீதை வெட்டவேண்டும் என்று இருந்தான்.
\v 17 செருயாவின் மகனான அபிசாய் ராஜாவுக்கு உதவியாக வந்து, பெலிஸ்தியனை வெட்டிக் கொன்றுபோட்டான். அப்பொழுது தாவீதின் மனிதர்கள்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்துபோகாதபடி, நீர் இனி எங்களோடு யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்.
\s5
\v 18 அதற்குப் பின்பு பெலிஸ்தரோடு திரும்பவும் கோபிலே யுத்தம்நடந்தது; ஊசாத்தியனான சீபேக்காய் இராட்சத சந்ததியான சாப்பை வெட்டிப்போட்டான்.
\v 19 பெலிஸ்தர்களோடு இன்னும் வேறொரு யுத்தம் கோபிலே உண்டானபோது, யாரெயொர்கிமின் மகனான எல்க்கானான் என்னும் பெத்லகேமியன் காத் ஊரைச்சேர்ந்த கோலியாத்தின் சகோதரனை வெட்டினான்; அவன் ஈட்டிக் கம்பானது நெய்கிறவர்களின் தறிமரம்போல பெரிதாக இருந்தது.
\s5
\v 20 இன்னும் ஒரு யுத்தம் காத் ஊரிலே நடந்தபோது, அங்கே உயரமான ஒரு மனிதன் இருந்தான்; அவன் கைகளில் ஆறு ஆறு விரல்களும் அவன் கால்களில் ஆறு ஆறு விரல்களும், ஆக இருபத்து நான்கு விரல்களுள்ளவன்; இவனும் இராட்சத பிறவியாக இருந்து,
\v 21 இஸ்ரவேலர்களைச் சபித்தான்; தாவீதின் சகோதரனான சீமேயாவின் மகனான யோனத்தான் அவனை வெட்டினான்.
\v 22 இந்த நான்கு பேர்களும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் வீரர்களின் கையினாலும் இறந்தார்கள்.
\s5
\c 22
\cl அத்தியாயம்– 22
\s1 தாவீதின் துதிப் பாடல்
\p
\v 1 கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லா எதிரிகளின் கைக்கும், சவுலின் கைக்கும், விலக்கி விடுவித்தபோது, அவன் கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:
\v 2 கர்த்தர் என்னுடைய கன்மலையும், என்னுடைய கோட்டையும், என்னுடைய இரட்சகரும் ஆனவர்.
\s5
\v 3 தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும், என்னுடைய கேடகமும், என்னுடைய பாதுகாப்பின் கொம்பும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், என்னுடைய இருப்பிடமும், என்னுடைய இரட்சகருமானவர்; என்னைத் துன்பத்திற்கு விலக்கி இரட்சிக்கிறவர் அவரே.
\v 4 துதிக்குக் காரணரான கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என்னுடைய எதிரிகளுக்கு விலக்கி இரட்சிக்கப்படுவேன்.
\s5
\v 5 மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, பயனற்ற வெள்ளப்பெருக்கு என்னைப் பயப்படுத்தினது.
\v 6 பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
\s5
\v 7 எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என்னுடைய தேவனை நோக்கிக் கூப்பிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்; என்னுடைய கூப்பிடுதல் அவர் செவிகளில் விழுந்தது.
\s5
\v 8 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டதால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
\v 9 அவர் நாசியிலிருந்து புகை வந்தது, அவர் வாயிலிருந்து ஒளிவீசும் அக்கினி புறப்பட்டது, அதனால் தீப்பற்றிக்கொண்டது.
\s5
\v 10 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
\v 11 கேருபீனின்மேல் ஏறி வேகமாகப் பறந்து சென்றார். காற்றின் இறக்கைகளின்மேல் காட்சியளித்தார்.
\v 12 வானத்து மேகங்களில் கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
\s5
\v 13 அவருக்கு முன்பாக இருந்த மின்னலினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
\v 14 கர்த்தர் வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச் செய்தார்.
\v 15 அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்து, மின்னல்களை உபயோகித்து, அவர்களைச் சிதறடித்தார்.
\s5
\v 16 கர்த்தருடைய கடிந்துகொள்ளுதலினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறக்கப்பட்டு, பூமியின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
\s5
\v 17 உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, வெள்ளப்பெருக்கில் இருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
\v 18 என்னைவிட பெலவானாக இருந்த என்னுடைய எதிரிக்கும் என்னுடைய விரோதிகளுக்கும் என்னை விடுவித்தார்.
\s5
\v 19 என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாக இருந்தார்.
\v 20 என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.
\v 21 கர்த்தர் என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்; என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார்.
\s5
\v 22 கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என்னுடைய தேவனுக்குத் துரோகம் செய்ததில்லை.
\v 23 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய கட்டளைகளைவிட்டு விலகாமல்,
\s5
\v 24 அவருக்கு முன்பாக மனஉண்மையாக இருந்து, பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
\v 25 ஆகையால் கர்த்தர் என்னுடைய நீதிக்குத் தகுந்தபடியும், தம்முடைய கண்களுக்கு முன்பாக இருக்கிற என்னுடைய சுத்தத்திற்குத்தகுந்தபடியும் எனக்கு பலனளித்தார்.
\s5
\v 26 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,
\v 27 புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
\s5
\v 28 சிறுமைப்பட்ட மக்களை இரட்சிப்பீர்; பெருமையுள்ளவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாகத் திருப்பப்பட்டிருக்கிறது.
\v 29 கர்த்தராகிய தேவரீர் என்னுடைய விளக்காக இருக்கிறீர்; கர்த்தர் என்னுடைய இருளை வெளிச்சமாக்குகிறவர்.
\s5
\v 30 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என்னுடைய தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
\v 31 தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் சுத்தமானது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.
\s5
\v 32 கர்த்தரைத் தவிர தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்?
\v 33 தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்; அவர் என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
\s5
\v 34 அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி, உயர்ந்த மலைகளில் என்னை நிறுத்துகிறார்.
\v 35 வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி, என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குகிறார்.
\s5
\v 36 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய தயவு என்னைப் பெரியவனாக்கும்.
\v 37 என்னுடைய கால்கள் வழுக்காதபடி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
\s5
\v 38 என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை அழிக்கும்வரையும் திரும்பமாட்டேன்.
\v 39 அவர்கள் எழுந்திருக்கமுடியாதபடி என்னுடைய பாதங்களின்கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறியடித்து வெட்டினேன்.
\s5
\v 40 யுத்தத்திற்கு நீர் என்னை பெலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் விழும்படிச் செய்தீர்.
\v 41 நான் என்னுடைய விரோதியை அழிக்கும்படி, என்னுடைய எதிரிகளின் பின்கழுத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
\s5
\v 42 அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பவர்கள் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் பதில் கொடுக்கிறதில்லை.
\v 43 அவர்களை பூமியின் தூளாக இடித்து, தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறச்செய்கிறேன்.
\s5
\v 44 என்னுடைய மக்களின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, தேசங்களுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத மக்கள் என்னைப் பணிகிறார்கள்.
\v 45 அந்நியர்கள் எனக்கு எதிராகப் பேசி அடங்கி, என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
\v 46 அந்நியர்கள் பயந்துபோய், தங்கள் கோட்டைகளிலிருந்து பயத்தோடு புறப்படுகிறார்கள்.
\s5
\v 47 கர்த்தர் ஜீவனுள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக; என்னுடைய இரட்சிப்பின் கன்மலையான தேவன் உயர்ந்திருப்பாராக.
\v 48 அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
\v 49 அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
\s5
\v 50 இதனால் கர்த்தாவே, தேசங்களுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்கு துதிப் பாடல்கள் பாடுவேன்.
\v 51 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்செய்த தாவீதுக்கும் அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.
\s5
\c 23
\cl அத்தியாயம்– 23
\s1 தாவீதின் கடைசி வார்த்தைகள்
\p
\v 1 தாவீதின் கடைசி வார்த்தைகள்: மேன்மையாக உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இனிமையாகப் பாடின ஈசாயின் மகனான தாவீது என்னும் மனிதன் சொல்லுகிறது என்னவென்றால்;
\v 2 கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.
\s5
\v 3 இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து, தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார்.
\v 4 அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து, மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால் புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.
\s5
\v 5 என்னுடைய வீடு தேவனிடம் இப்படி இருக்காதோ? அனைத்தும் தீர்மானித்திருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா இரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் பெருகச்செய்யாமல் இருப்பாரோ?
\s5
\v 6 தீயவர்கள் அனைவரும், கையினால் பிடிக்கப்படமுடியாததாக எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள்.
\v 7 அவைகளை ஒருவன் தொடப்போனால், இரும்பாலான ஆயுதத்தையும் ஈட்டிப்பிடியையும் இறுகப் பிடித்துக்கொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்திலேயே அக்கினியால் முழுவதும் சுட்டெரிக்கப்படும் என்றான்.
\p
\s5
\v 8 தாவீதுக்கு இருந்த பலசாலிகளின் பெயர்கள்: தக்கெமோனியின் மகனான யோசேப்பாசெபெத் என்பவன் உயரடுக்கு வீரர்களின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களை ஒன்றாக வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரைச்சேர்த்தவன்.
\s5
\v 9 இவனுக்கு இரண்டாவது, அகோயின் மகனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர்கள் யுத்தத்திற்குக் கூடின இடத்திலே இஸ்ரவேல் மனிதர்கள் போகும்போது, தாவீதோடு இருந்து பெலிஸ்தர்களை சபித்த மூன்று பலசாலிகளில் ஒருவனாக இருந்தான்.
\v 10 இவன் எழுந்து தன்னுடைய கைசோர்ந்து, தன்னுடைய கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளும்வரை பெலிஸ்தர்களை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடத்தினார்; மக்கள் கொள்ளையிடுவதற்குமட்டும் அவனுக்குப் பின்சென்றார்கள்.
\s5
\v 11 இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் மகனான சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர்கள் ஏராளமாகக் கூடி, மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடுகிறபோது,
\v 12 இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தர்களைக் கொன்றுபோட்டான்; அதனால் கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடத்தினார்.
\s5
\v 13 முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்று பேர்களும் அறுவடையின் நாளில் அதுல்லாம் கெபியிலே தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே முகாமிட்டபோது,
\v 14 தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் முகாம் பெத்லகேமிலே இருந்தது.
\s5
\v 15 தாவீது பெத்லகேமின் நுழைவு வாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
\v 16 அப்பொழுது இந்த மூன்று பெலசாலிகளும் பெலிஸ்தர்களின் முகாமில் துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் நுழைவுவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதிடம் கொண்டு வந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனம் இல்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:
\v 17 கர்த்தாவே, தங்கள் உயிரை பொருட்டாக எண்ணாமல் போய்வந்த அந்த மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாக இருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனம் இல்லாமலிருந்தான்; இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள்.
\s5
\v 18 யோவாபின் சகோதரனும் செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரைக் கொன்றதால், இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான்.
\v 19 இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாக இருந்ததால் அல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமமானவன் அல்ல.
\s5
\v 20 பலசாலியான யோய்தாவின் மகனும் கப்செயேல் ஊரைச்சேர்ந்தவனுமான பெனாயாவும் செயல்களில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைக்காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.
\v 21 அவன் பயங்கர உயரமுள்ள ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அவன் ஈட்டியாலே அவனைக் கொன்றுபோட்டான்.
\s5
\v 22 இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்தபடியால், மூன்று பலசாலிகளுக்குள்ளே புகழ்பெற்றவனாக இருந்தான்.
\v 23 முப்பதுபேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான்.
\p
\s5
\v 24 யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேர்களில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
\v 25 ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா,
\v 26 பல்தியனான ஏலெஸ், இக்கேசின் மகனான ஈரா என்னும் தெக்கோவியன்.
\v 27 ஆனதோத்தியனான அபியேசர், ஊசாத்தியனான மெபுன்னாயி,
\v 28 அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி,
\s5
\v 29 பானாவின் மகனான ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் வம்சத்தார்களின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி,
\v 30 பிரத்தோனியனான பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானான ஈத்தாயி,
\v 31 அர்பாத்தியனான அபிஅல்பொன், பருமியனான அஸ்மாவேத்,
\v 32 சால்போனியனான எலியூபா, யாசேனின் மகன்களில் யோனத்தான் என்பவன்.
\s5
\v 33 ஆராரியனான சம்மா, சாராரின் மகனான அகியாம் என்னும் ஆராரியன்,
\v 34 மாகாத்தியனின் மகனான அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனான அகித்தோப்பேலின் மகன் எலியாம் என்பவன்.
\v 35 கர்மேலியனான எஸ்ராயி, அர்பியனான பாராயி,
\v 36 சோபா ஊரைச்சேர்ந்த நாத்தானின் மகன் ஈகால், காதியனான பானி,
\s5
\v 37 அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுதம் ஏந்திய பெரோத்தியனான நகராய்,
\v 38 இத்ரியனான ஈரா, இத்ரியனான காரேப்,
\v 39 ஏத்தியனான உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்கள்.
\s5
\c 24
\cl அத்தியாயம்– 24
\s1 தாவீது வீரர்களைக் கணக்கெடுத்தல்
\p
\v 1 கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் வந்தது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை எண்ணிக்கை பார் என்று அவர்களுக்கு எதிராகச் சொல்லுகிறதற்கு தாவீது தூண்டப்பட்டான்.
\v 2 அப்படியே ராஜா தன்னோடு இருக்கிற தளபதியான யோவாபைப் பார்த்து: மக்களின் எண்ணிக்கையை நான் அறியும்படி நீ தாண்முதல் பெயெர்செபா வரையுள்ள இஸ்ரவேலர்களின் கோத்திரங்கள் எங்கும் சுற்றித்திரிந்து மக்களைக் கணக்கெடுங்கள் என்றான்.
\s5
\v 3 அப்பொழுது யோவாப் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனான கர்த்தர் மக்களை இப்பொழுது இருக்கிறதைவிட, நூறுமடங்கு அதிகமாகப் பெருகச்செய்வாராக; ஆனாலும் என் ஆண்டவனான ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.
\v 4 ஆனாலும் யோவாபும் இராணுவத்தலைவர்களும் சொன்ன வார்த்தை செல்லாமற்போகும்படி, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் மக்களைக் கணக்கெடுக்க, யோவாபும் இராணுவத்தலைவர்களும் ராஜாவைவிட்டுப் புறப்பட்டுப்போய்,
\s5
\v 5 யோர்தானைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் முகாமிட்டு,
\v 6 அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய்,
\v 7 பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர்கள், கானானியர்களுடைய எல்லா பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,
\s5
\v 8 இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதங்களும் இருபது நாட்களும் ஆனபிறகு எருசலேமிற்கு வந்தார்கள்.
\v 9 யோவாப் மக்களைக் கணக்கெடுத்தத் தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் எடுக்கத்தக்க யுத்தவீரர்கள் எட்டு லட்சம்பேர்கள் இருந்தார்கள்; யூதா மனிதர்கள் ஐந்து லட்சம்பேர்கள் இருந்தார்கள்.
\p
\s5
\v 10 இவ்விதமாக மக்களை எண்ணிப்பார்த்த பின்பு, ராஜாவின் இருதயம் அவனை நோகடித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததால் பெரிய பாவம் செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் பெரிய முட்டாள்தனமான காரியம் செய்தேன் என்றான்.
\s5
\v 11 தாவீது காலையில் எழுந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனான காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:
\v 12 நீ தாவீதிடம் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
\s5
\v 13 அப்படியே காத் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருடங்கள் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்று மாதங்கள் உம்முடைய எதிரிகள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்தில் மூன்று நாட்கள் கொள்ளைநோய் உண்டாக வேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன பதில் கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப் பாரும் என்று சொன்னான்.
\v 14 அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய பிரச்சனையில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான்.
\p
\s5
\v 15 அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலைதுவங்கி குறித்தகாலம்வரை கொள்ளைநோயை வரச்செய்தார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாவரையுள்ள மக்களில் எழுபதாயிரம்பேர்கள் இறந்துபோனார்கள்.
\v 16 தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன்னுடைய கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனவேதனையடைந்து, மக்களை அழிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன்னுடைய கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனான அர்வனாவினுடைய போரடிக்கிற களத்திற்கு நேராக இருந்தான்.
\s5
\v 17 மக்களை வேதனைப்படுத்துகிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவம் செய்தேன்; நான்தான் அக்கிரமம் செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என்னுடைய தகப்பன் வீட்டுக்கும் விரோதமாக இருப்பதாக என்று விண்ணப்பம்செய்தான்.
\s1 தாவீது பலிபீடம் கட்டுதல்
\p
\s5
\v 18 அன்றையதினம் காத் என்பவன் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனான அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.
\v 19 காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்தபடி போனான்.
\v 20 அர்வனா பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரர்களும் தன்னிடம் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைவரைக்கும் குனிந்து ராஜாவை வணங்கி,
\s5
\v 21 ராஜாவான என்னுடைய ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை மக்களைவிட்டு நிறுத்தக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி இந்தக் களத்தை உன்னுடைய கையிலே வாங்க வந்தேன் என்றான்.
\v 22 அர்வனா தாவீதைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகங்களும் இங்கே இருக்கிறது என்று சொல்லி,
\v 23 அர்வனா அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்தபின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனான கர்த்தர் உம்மிடம் கிருபையாக இருப்பாராக என்றான்.
\s5
\v 24 ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாக வாங்கி, என்னுடைய தேவனான கர்த்தருக்கு சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன்னுடைய கையிலே விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்கு வாங்கிக்கொண்டான்.
\v 25 அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.

1373
11-1KI.usfm Normal file
View File

@ -0,0 +1,1373 @@
\id 1KI
\ide UTF-8
\h I இராஜாக்கள்
\toc1 I இராஜாக்கள்
\toc2 I இராஜாக்கள்
\toc3 1ki
\mt1 I இராஜாக்கள்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 அதோனியா தன்னை இராஜாவாக ஏற்படுத்துதல்
\p
\v 1 தாவீது ராஜா வயதுமுதிர்ந்தவனானபோது, துணிகளால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.
\v 2 அப்பொழுது அவனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: ராஜாவிற்கு முன்பாக நின்று, அவருக்குப் பணிவிடை செய்யவும், ராஜாவாகிய எங்களுடைய எஜமானுக்கு சூடு உண்டாக உம்முடைய மடியிலே படுத்துக்கொள்ளவும் கன்னியாகிய ஒரு இளம்பெண்ணை ராஜாவாகிய எங்கள் எஜமானுக்குத் தேடுவோம் என்று சொல்லி,
\s5
\v 3 இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகைக் கண்டு, அவளை ராஜாவிடம் கொண்டுவந்தார்கள்.
\v 4 அந்தப் பெண் மிகவும் அழகாக இருந்தாள்; அவள் ராஜாவிற்கு உதவியாக இருந்து அவனுக்குப் பணிவிடை செய்தாள்; ஆனாலும் ராஜா அவளுடன் உறவுகொள்ளவில்லை.
\s5
\v 5 ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரை வீரர்களையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது வீரர்களையும் சம்பாதித்தான்.
\v 6 அவனுடைய தகப்பன்: நீ ஏன் இப்படிச் செய்கிறாய் என்று அவனை ஒருபோதும் கண்டிக்கவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாக இருந்தான்; அப்சலோமுக்குப்பின்பு அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.
\s5
\v 7 அவன் செருயாவின் மகனாகிய யோவாபோடும், ஆசாரியனாகிய அபியத்தாரோடும் ஆலோசனை செய்துவந்தான்; அவர்கள் அவனோடு இருந்து அவனுக்கு உதவி செய்துவந்தார்கள்.
\v 8 ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் மகனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதுடன் இருக்கிற பலசாலிகளும், அதோனியாவுக்கு துணைபோகவில்லை.
\s5
\v 9 அதோனியா இன்ரோகேலுக்கு அருகிலுள்ள சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுமாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்து, ராஜாவின் மகன்களாகிய தன்னுடைய சகோதரர்கள் எல்லோரையும், ராஜாவின் வேலைக்காரர்களான யூதாவின் மனிதர்கள் அனைவரையும் அழைத்தான்.
\v 10 தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், பெனாயாவையும், பலசாலிகளையும், தன்னுடைய சகோதரனாகிய சாலொமோனையும் அழைக்கவில்லை.
\s5
\v 11 அப்பொழுது நாத்தான் சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை நோக்கி: நம்முடைய எஜமானாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் மகனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா?
\v 12 இப்போதும் உன்னுடைய உயிரையும் உன் மகனாகிய சாலொமோனின் உயிரையும் காப்பாற்றும்படி நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன்.
\s5
\v 13 நீ தாவீது ராஜாவிடம் போய்: ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, எனக்குப்பின்பு உன்னுடைய மகனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க, அதோனியா ராஜாவாகிறது என்ன? என்று அவரிடத்தில் கேள்.
\v 14 நீ அங்கே ராஜாவோடு பேசிக்கொண்டிருக்கும்போது, நானும் உனக்குப் பின்வந்து, உன்னுடைய வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான்.
\s5
\v 15 அப்படியே பத்சேபாள் ராஜாவின் அறைக்குள் சென்றாள்; ராஜா மிகவும் வயதானவனாக இருந்தான்; சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாக் ராஜாவிற்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
\v 16 பத்சேபாள் குனிந்து, ராஜாவை வணங்கினாள்; அப்பொழுது ராஜா: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.
\v 17 அதற்கு அவள்: என்னுடைய எஜமானே, எனக்குப்பின்பு உன்னுடைய மகனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே.
\s5
\v 18 இப்பொழுது, இதோ, அதோனியா ராஜாவாகிறான்; என்னுடைய எஜமானாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை.
\v 19 அவன் மாடுகளையும் கொழுத்தக் கன்றுகளையும் ஆடுகளையும் மிகுதியாக அடித்து, ராஜாவின் மகன்கள் அனைவரையும் ஆசாரியனாகிய அபியத்தாரையும், யோவாப் என்னும் படைத்தலைவனையும் அழைத்தான்; ஆனாலும் உமது அடியானாகிய சாலொமோனை அழைக்கவில்லை.
\s5
\v 20 ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, ராஜாவாகிய என்னுடைய எஜமானுக்குப் பிறகு அவருடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பவன் யார் என்று தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரவேலர்கள் அனைவரின் கண்களும் உம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது.
\v 21 அறிவிக்காமற்போனால் ராஜாவாகிய என்னுடைய எஜமான் இறந்து தம்முடைய பிதாக்களோடு படுத்துக்கொண்டபின்பு, நானும் என்னுடைய மகனாகிய சாலொமோனும் குற்றவாளிகளாகக் கருதப்படுவோம் என்றாள்.
\s5
\v 22 அவள் ராஜாவோடு பேசிக்கொண்டிருக்கும்போது, தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்தான்.
\v 23 தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவிற்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவிற்கு முன்பாக வந்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான்.
\s5
\v 24 நாத்தான்: ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, அதோனியா எனக்குப்பின்பு ராஜாவாகி, அவனே என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நீர் சொன்னது உண்டோ?
\v 25 அவன் இன்றையதினம் போய், மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும், ஆடுகளையும் மிகுதியாக அடித்து, ராஜாவின் மகன்கள் அனைவரையும் இராணுவத்தலைவர்களையும், ஆசாரியனாகிய அபியத்தாரையும் அழைத்தான்; அவர்கள் அவனுக்கு முன்பாக சாப்பிட்டுக் குடித்து, ராஜாவாகிய அதோனியா வாழ்க என்று சொல்லுகிறார்கள்.
\s5
\v 26 ஆனாலும் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், யோய்தாவின் மகனாகிய பெனாயாவையும், உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை.
\v 27 ராஜாவாகிய என்னுடைய எஜமானனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவன் இவன்தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காமலிருக்கும்போது, இந்தக் காரியம் ராஜாவாகிய என்னுடைய எஜமானுடைய கட்டளையால் நடந்திருக்குமோ என்றான்.
\s1 தாவீது சாலொமோனை இராஜாவாக்குதல்
\p
\s5
\v 28 அப்பொழுது தாவீது ராஜா மறுமொழியாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜாவின் சமுகத்தில் வந்து ராஜாவிற்கு முன்பாக நின்றாள்.
\v 29 அப்பொழுது ராஜா: உன்னுடைய மகனாகிய சாலொமோன் எனக்குப்பின்பு அரசாண்டு, அவனே என்னுடைய இடத்தில் என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்பதை,
\v 30 என்னுடைய ஆத்துமாவை எல்லாப் பிரச்சனையிலிருந்தும் விலக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான்.
\v 31 அப்பொழுது பத்சேபாள் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, என்னுடைய எஜமானாகிய தாவீது ராஜா என்றைக்கும் வாழ்க என்றாள்.
\s5
\v 32 பின்பு தாவீது ராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் மகன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்.
\v 33 அவர்கள் ராஜாவிற்கு முன்பாக வந்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய வேலைக்காரர்களைக் கூட்டிக்கொண்டு, என்னுடைய மகனாகிய சாலொமோனை என்னுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டுபோங்கள்.
\v 34 அங்கே ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்யவேண்டும்; பின்பு எக்காளம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள்.
\s5
\v 35 அதின் பின்பு அவன் நகர்வலம் வந்து, என்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும்படி, அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்; அவனே என்னுடைய இடத்தில் ராஜாவாக இருப்பான்; அவன் இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் தலைவனாக இருக்கும்படி அவனை ஏற்படுத்தினேன் என்றான்.
\v 36 அப்பொழுது யோய்தாவின் மகன் பெனாயா ராஜாவிற்குப் பிரதியுத்தரமாக: ஆமென், ராஜாவாகிய என்னுடைய எஜமானுடைய தேவனாகிய கர்த்தரும் இப்படியே சொல்வாராக.
\v 37 கர்த்தர் ராஜாவாகிய என்னுடைய எஜமானோடு எப்படி இருந்தாரோ, அப்படியே அவர் சாலொமோனோடும் இருந்து, தாவீது ராஜாவாகிய என்னுடைய எஜமானுடைய சிங்காசனத்தைவிட அவருடைய சிங்காசனத்தைப் பெரிதாக்குவாராக என்றான்.
\s5
\v 38 அப்படியே ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், யோய்தாவின் மகன் பெனாயாவும், கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும் போய், சாலொமோனைத் தாவீது ராஜாவினுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு நடத்திக்கொண்டுபோனார்கள்.
\v 39 ஆசாரியனாகிய சாதோக்கு தைலக் கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்செய்தான்; அப்பொழுது எக்காளம் ஊதி, மக்களெல்லோரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள்.
\v 40 பின்பு மக்களெல்லோரும் அவன் பின்னே போனார்கள்; மக்கள் நாதசுரங்களை ஊதி, பூமி அவர்கள் சத்தத்தினால் அதிரும்படி மிகவும் பூரிப்பாகச் சந்தோஷித்தார்கள்.
\s5
\v 41 அதோனியாவும் அவனோடிருந்த எல்லா விருந்தாளிகளும் சாப்பிட்டு முடித்தபோது, அதைக் கேட்டார்கள்; யோவாப் எக்காளசத்தத்தைக் கேட்டபோது, நகரத்தில் உண்டாயிருக்கிற ஆரவாரம் என்ன என்று விசாரித்தான்.
\v 42 அவன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசாரியனாகிய அபியத்தாரின் மகன் யோனத்தான் வந்தான்; அப்பொழுது அதோனியா, உள்ளே வா, நீ கெட்டிக்காரன், நீ நற்செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
\s5
\v 43 யோனத்தான் அதோனியாவுக்கு மறுமொழியாக: ஏது, தாவீது ராஜாவாகிய நம்முடைய எஜமான் சாலொமோனை ராஜாவாக்கினாரே.
\v 44 ராஜா ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் மகன் பெனாயாவையும், கிரேத்தியர்களையும் பிலேத்தியர்களையும் அவனோடு அனுப்பினார்; அவர்கள் அவனை ராஜாவுடைய கோவேறு கழுதையின்மேல் ஏற்றினார்கள்.
\v 45 ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், அவனைக் கீகோனிலே ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள்; நகரமெல்லாம் அதிரத்தக்கதாக அங்கேயிருந்து பூரிப்போடு புறப்பட்டுப்போனார்கள்; நீங்கள் கேட்ட சத்தம் அதுதான்.
\s5
\v 46 அல்லாமலும் சாலொமோன் ராஜாங்கத்திற்குரிய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறான்.
\v 47 ராஜாவின் ஊழியக்காரர்களும் தாவீது ராஜாவாகிய நம்முடைய எஜமானனை வாழ்த்த வந்து: தேவன் சாலொமோனின் பெயரை உம்முடைய பெயரைவிட பிரபலப்படுத்தி, அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தைவிட பெரிதாக்குவாராக என்றார்கள்; ராஜா தம்முடைய கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்டார்.
\v 48 பின்னும் ராஜா: என்னுடைய கண்கள் காண இன்றையதினம் என்னுடைய சிங்காசனத்தின்மேல் ஒருவனை வீற்றிருக்கச்செய்த இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் என்றான்.
\s5
\v 49 அப்பொழுது அதோனியாவின் விருந்தாளிகளெல்லோரும் அதிர்ந்து எழுந்து, அவரவர் தங்கள் வழியே போய்விட்டார்கள்.
\v 50 அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்.
\v 51 இதோ, அதோனியா ராஜாவாகிய சாலொமோனுக்குப் பயப்படுகிறான் என்றும், இதோ, அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, ராஜாவாகிய சாலொமோன் தமது அடியானைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று இன்று எனக்கு ஆணையிடுவாராக என்கிறான் என்றும், சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.
\s5
\v 52 அப்பொழுது சாலொமோன்: அவன் தன்னை யோக்கியன் என்று காண்பித்தால் அவன் தலைமுடியில் ஒன்றும் தரையிலே விழாது; அவனிடம் தீமை காணப்பட்டால், அவன் சாகவேண்டும் என்றான்.
\v 53 அவனை பலிபீடத்திலிருந்து கொண்டுவர, ராஜாவாகிய சாலொமோன் ஆட்களை அனுப்பினான்; அவன் வந்து, ராஜாவாகிய சாலொமோனை வணங்கினான்; சாலொமோன் அவனைப் பார்த்து: உன்னுடைய வீட்டிற்குப் போ என்றான்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 தாவீது சாலொமோனை அரசனாக்குதல்
\p
\v 1 தாவீது மரணமடையும் காலம் நெருங்கியபோது, அவன் தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:
\v 2 நான் பூமியில் உள்ள யாவரும் போகிறவழியே போகிறேன்; நீ திடன்கொண்டு தைரியமானவனாக இரு.
\v 3 நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திசாலியாக இருப்பதற்கும், கர்த்தர் என்னைக் குறித்து: உன்னுடைய பிள்ளைகள் தங்களுடைய முழு இதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாக நடக்கும்படித் தங்கள் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கத்தக்க ஆண் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்துவதற்கும்,
\v 4 மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன்னுடைய தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படி அவருடைய கட்டளைகளைக் காப்பாயாக.
\s5
\v 5 செருயாவின் மகனாகிய யோவாப், இஸ்ரவேலின் இரண்டு தளபதிகளாகிய நேரின் மகன் அப்னேருக்கும், ஏத்தேரின் மகன் அமாசாவுக்கும் செய்த காரியத்தினால் எனக்குச் செய்த குற்றத்தை நீ அறிந்திருக்கிறாயே; அவன் அவர்களைக் கொன்று, சமாதானகாலத்திலே யுத்தகாலத்து இரத்தத்தைச் சிந்தி, யுத்தகாலத்து இரத்தத்தைத் தன்னுடைய இடுப்பிலுள்ள வாரிலும் தன்னுடைய கால்களில் இருந்த காலணிகளிலும் சிந்தவிட்டானே.
\v 6 ஆகையால் உன்னுடைய ஞானத்தின்படியே நீ செய்து, அவனுடைய நரைமுடி சமாதானமாகப் பாதாளத்தில் இறங்கவிடாமலிரு.
\s5
\v 7 கீலேயாத்தியனான பர்சிலாயின் மகன்களுக்குத் தயவுசெய்வாயாக; அவர்கள் உன்னுடைய பந்தியிலே சாப்பிடுகிறவர்களுடன் இருப்பார்களாக; உன்னுடைய சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் ஓடிப்போகும்போது, அவர்கள் என்னை ஆதரித்தார்கள்.
\s5
\v 8 மேலும் பகூரிம் ஊரைச்சேர்ந்த பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடம் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னை மிகவும் மோசமாக சபித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிரே வந்ததால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.
\v 9 ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.
\s5
\v 10 பின்பு தாவீது தன்னுடைய முன்னோர்களோடு மரணமடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
\v 11 தாவீது இஸ்ரவேலை அரசாட்சி செய்த நாட்கள் நாற்பது வருடங்கள்; அவன் எப்ரோனில் ஏழு வருடங்களும், எருசலேமில் முப்பத்துமூன்று வருடங்களும் அரசாண்டான்.
\p
\v 12 சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்; அவனுடைய அரசாட்சி மிகவும் உறுதிப்பட்டது.
\s1 சாலோமோனின் சிங்காசனம் உறுதிப்படுத்தப்படுதல்
\p
\s5
\v 13 ஆகீத்தின் மகனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடம் வந்தான். நீ சமாதானமாக வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாகத்தான் வருகிறேன் என்றான்.
\v 14 பின்பு அவன்: உம்மோடு நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.
\v 15 அப்பொழுது அவன்: ராஜ்ஜியம் என்னுடையதாக இருந்தது என்றும், நான் அரசாளுவதற்கு இஸ்ரவேலர்கள் எல்லோரும் என்னை எதிர்பார்த்தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் அரசாட்சி என்னைவிட்டுத் தாண்டி, என்னுடைய சகோதரனுடையதானது; கர்த்தரால் அது அவருக்குக் கிடைத்தது.
\s5
\v 16 இப்பொழுது நான் உம்மிடம் ஒரு விண்ணப்பத்தைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.
\v 17 அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகை எனக்கு அவர் திருமணம் செய்துக்கொடுக்க, அவரோடு பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.
\v 18 அதற்கு பத்சேபாள்; நல்லது, நான் உனக்காக ராஜாவிடம் பேசுவேன் என்றாள்.
\s5
\v 19 பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடம் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்து, அவளுக்கு எதிரேவந்து அவளை வணங்கி, தன்னுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன்னுடைய வலதுபுறமாக உட்கார அவளுக்கு ஒரு இருக்கையை வைத்தான்.
\v 20 அப்பொழுது அவள்: நான் உம்மிடம் ஒரு சிறிய விண்ணப்பத்தைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என்னுடைய தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.
\v 21 அப்பொழுது அவள்: சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகை உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்குத் திருமணம் செய்துகொடுக்கவேண்டும் என்றாள்.
\s5
\v 22 ராஜாவாகிய சாலொமோன் தன்னுடைய தாயாருக்கு மறுமொழியாக: நீர் சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகை அதோனியாவுக்கு ஏன் கேட்கிறாய்? அப்படியானால் ராஜ்ஜியபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செரூயாவின் மகன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்.
\v 23 பின்பு சாலொமோன் ராஜா: அதோனியா இந்த வார்த்தையைத் தன்னுடைய உயிருக்குச் சேதம் உண்டாக்கும்படிச் சொல்லாமலிருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யட்டும் என்று கர்த்தர்மேல் ஆணையிட்டு,
\s5
\v 24 இப்போதும் இன்றைக்கு அதோனியா கொலை செய்யப்படுவான் என்று என்னை உறுதிப்படுத்தினவரும், என்னை என்னுடைய தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கச்செய்து, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டினவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,
\v 25 ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்; பெனாயா அதோனியாவைக் கண்டுபிடித்து அவனைக் கொன்றுபோட்டான்.
\s5
\v 26 ராஜா: ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: நீ உன்னுடைய நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குரியவனாக இருந்தும், நீ என்னுடைய தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்ததாலும், என்னுடைய தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீ கூட அநுபவித்ததாலும், இன்றைய தினம் நான் உன்னைக் கொலை செய்யமாட்டேன் என்றான்.
\v 27 அப்படியே கர்த்தர் சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாக இல்லாதபடித் தள்ளிப்போட்டான்.
\s5
\v 28 நடந்த இந்தச் செய்தி யோவாபுக்கு வந்தபோது, அவன் கர்த்தருடைய கூடாரத்திற்கு ஓடிப்போய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்; யோவாப் அப்சலோமின் பக்கம் சாயாதவனாக இருந்தும், அதோனியாவின் பக்கம் சாய்ந்திருந்தான்.
\v 29 யோவாப் கர்த்தரின் கூடாரத்திற்கு ஓடிப்போனான் என்றும், இதோ, பலிபீடத்தின் அருகில் நிற்கிறான் என்றும், ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, சாலொமோன் யோய்தாவின் மகனாகிய பெனாயாவை அனுப்பி, நீ போய் அவனைக் கொலைசெய் என்றான்.
\s5
\v 30 பெனாயா கர்த்தரின் கூடாரத்திற்குப் போய், அவனைப் பார்த்து: வெளியே வா என்று ராஜா சொல்லுகிறார் என்றான். அதற்கு அவன்: நான் வரமாட்டேன்; இங்கேயே சாவேன் என்றான்; ஆகையால் பெனாயா ராஜாவிடம் போய், யோவாப் இன்னபடி சொல்லி, இன்னபடி எனக்கு பதில் கொடுத்தான் என்று மறுசெய்தி சொன்னான்.
\v 31 அப்பொழுது ராஜா அவனை நோக்கி: அவன் சொன்னபடியே நீ செய்து, அவனைக் கொன்று, அடக்கம்செய்து, இவ்விதமாக யோவாப் காரணமில்லாமல் சிந்தின இரத்தத்தை என்னைவிட்டும் என்னுடைய தகப்பன் வீட்டைவிட்டும் விலக்கிப்போடு.
\s5
\v 32 அவன் தன்னைவிட நீதியும் நற்குணமும் உள்ள இரண்டு பேர்களாகிய நேரின் மகன் அப்னேர் என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவனையும், ஏதேரின் மகன் அமாசா என்னும் யூதாவின் படைத்தலைவனையும் தாக்கி, என்னுடைய தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அவர்களைப் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப்பழியைக் கர்த்தர் அவனுடைய தலையின்மேல் திரும்பச்செய்வாராக.
\v 33 இப்படியே அவர்களுடைய இரத்தப் பழி என்றும் யோவாபுடைய தலையின்மேலும், அவனுடைய சந்ததியினர்களின் தலையின்மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவருடைய சந்ததியினர்களுக்கும் அவருடைய வீட்டார்களுக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் கர்த்தராலே சமாதானம் உண்டாயிருக்கவும்கடவது என்றான்.
\s5
\v 34 அப்படியே யோய்தாவின் மகன் பெனாயா போய், அவனைத் தாக்கி அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்திரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம்செய்யப்பட்டான்.
\v 35 அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் மகன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் இடத்திலும் வைத்தான்.
\p
\s5
\v 36 பின்பு ராஜா சீமேயியை அழைத்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக்கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேயே குடியிரு.
\v 37 நீ வெளியே போய்க் கீதரோன் ஆற்றைக் கடக்கும் நாளில், நீ சாவாய்; அப்பொழுது உன்னுடைய இரத்தப்பழி உன்னுடைய தலையின்மேல் இருக்கும் என்பதை நீ நிச்சயமாக அறிந்துகொள் என்றான்.
\v 38 சீமேயி ராஜாவைப் பார்த்து: அது நல்ல வார்த்தை; ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் சொன்னபடியே, உமது அடியானாகிய நான் செய்வேன் என்று சொல்லி, சீமேயி அநேகநாட்கள் எருசலேமிலே குடியிருந்தான்.
\s5
\v 39 மூன்று வருடங்கள்சென்றபோது, சீமேயியின் வேலைக்காரர்கள் இரண்டுபேர் மாக்காவின் மகனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவிடம் ஓடிப்போனார்கள்; உன்னுடைய வேலைக்காரர்கள் காத் ஊரில் இருக்கிறார்கள் என்று சீமேயிக்கு அறிவித்தார்கள்.
\v 40 அப்பொழுது சீமேயி எழுந்து, தன்னுடைய கழுதையின்மேல் சேணம் வைத்து, தன்னுடைய வேலைக்காரர்களைத் தேட, காத் ஊரிலிருக்கிற ஆகீசிடம் புறப்பட்டுப் போனான்; இப்படி சீமேயி போய், தன்னுடைய வேலைக்காரர்களைக் காத் ஊரிலிருந்து கொண்டுவந்தான்.
\s5
\v 41 சீமேயி எருசலேமிலிருந்து காத் ஊருக்குப் போய், திரும்பி வந்தான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது,
\v 42 ராஜா சீமேயியை அழைத்து: நீ வெளியே புறப்பட்டு எங்கேயாவது போகிற நாளிலே சாவாய் என்பதை நீ நிச்சயமாக அறிந்துகொள் என்று நான் உன்னைக் கர்த்தர்மேல் ஆணையிடச் செய்து, உனக்கு மிகவும் உறுதியாகச் சொல்லியிருக்க, அதற்கு நீ: நான் கேட்ட வார்த்தை நல்லதென்று சொல்லவில்லையா?
\s5
\v 43 நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாமற்போனது என்ன? என்று சொல்லி,
\v 44 பின்னும் ராஜா சீமேயியைப் பார்த்து: நீ என்னுடைய தகப்பனாகிய தாவீதுக்குச் செய்ததும் உன் மனதுக்குத் தெரிந்திருக்கிறதுமான எல்லாத் தீங்கையும் அறிந்திருக்கிறாய்; ஆகையால் கர்த்தர் உன்னுடைய தீங்கை உன்னுடைய தலையின்மேல் திரும்பச்செய்வார்.
\s5
\v 45 ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக உறுதியாக இருக்கும் என்று சொல்லி,
\v 46 ராஜா யோய்தாவின் மகனாகிய பெனாயாவுக்குக் கட்டளை கொடுத்தான்; அவன் வெளியே போய், அவனைக் கொன்றுபோட்டான். அரசாட்சி சாலொமோனின் கையிலே உறுதிப்பட்டது.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 சாலொமோன் தேவனிடத்தில் ஞானம் பெறுதல்
\p
\v 1 சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடு சம்பந்தங்கலந்து, பார்வோனின் மகளைத் திருமணம் செய்து, தன்னுடைய அரண்மனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டி முடியும்வரை அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.
\v 2 அந்த நாட்கள்வரை கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாமல் இருந்ததால், மக்கள் மேடைகளில் பலியிட்டு வந்தார்கள்.
\v 3 சாலொமோன் கர்த்தரை நேசித்து, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஆனாலும் அவன் மேடைகளிலே பலியிட்டுத் தூபம்காட்டி வந்தான்.
\p
\s5
\v 4 அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாக இருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.
\v 5 கிபியோனில் கர்த்தர் சாலொமோனுக்கு இரவில் கனவில் தரிசனமாகி: நீ விரும்புவதை என்னிடம் கேள் என்று தேவன் சொன்னார்.
\s5
\v 6 அதற்கு சாலொமோன்: என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் செம்மையான இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்த நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ஒரு மகனை அவருக்குத் தந்தீர்.
\s5
\v 7 இப்போதும் என்னுடைய தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என்னுடைய தகப்பனாகிய தாவீதின் இடத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்குவரத்து அறியாத சிறுபிள்ளையாக இருக்கிறேன்.
\v 8 நீர் தெரிந்துகொண்டதும் மிகுதியான எண்ணிக்கைக்கு அடங்காததும் கணக்கில் சேராததுமான திரளான மக்களாகிய உமது மக்களின் நடுவில் அடியேன் இருக்கிறேன்.
\v 9 ஆகையால் உமது மக்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; மிகுதியாக இருக்கிற உமது மக்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.
\s5
\v 10 சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்குப் பிரியமான விண்ணப்பமாக இருந்தது.
\v 11 ஆகையால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேட்காமலும், ஐசுவரியத்தைக் கேட்காமலும், உன்னுடைய எதிரிகளின் உயிரைக் கேட்காமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிப்பதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு கேட்டுக்கொண்டதால்,
\v 12 உன்னுடைய வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்கு இணையானவன் உனக்குமுன்பு இருந்ததுமில்லை, உனக்கு இணையானவன் உனக்குப்பின்பு எழும்புவதுமில்லை.
\s5
\v 13 இதுவுமில்லாமல், நீ கேட்காத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன்னுடைய நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்கு இணையானவன் இருப்பதில்லை.
\v 14 உன்னுடைய தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய நியமங்களையும் கைக்கொண்டு, என்னுடைய வழிகளில் நடந்தால், உன்னுடைய நாட்களையும் நீடித்திருக்கச்செய்வேன் என்றார்.
\s5
\v 15 சாலொமோனுக்கு தூக்கம் தெளிந்தபோது, அது கனவு என்று அறிந்தான்; அவன் எருசலேமுக்கு வந்து, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று, சர்வாங்க தகனபலிகளை செலுத்தி, சமாதானபலிகளைச் செலுத்தி, தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லோருக்கும் விருந்தளித்தான்.
\s1 ஞானமுள்ள ஆட்சி
\p
\s5
\v 16 அப்பொழுது வேசிகளான இரண்டு பெண்கள் ராஜாவிடம் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.
\v 17 அவர்களில் ஒருத்தி: என்னுடைய எஜமானனே, நானும் இந்த பெண்ணும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடு வீட்டிலிருக்கும்போது ஆண்பிள்ளை பெற்றேன்.
\s5
\v 18 நான் பிள்ளை பெற்ற மூன்றாம் நாளிலே, இந்த பெண்ணும் ஆண்பிள்ளை பெற்றாள்; நாங்கள் ஒன்றாக இருந்தோம், எங்கள் இருவரையும் தவிர, வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை.
\v 19 இரவு தூக்கத்திலே இந்த பெண் தன்னுடைய பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததால் அது செத்துப்போனது.
\v 20 அப்பொழுது, உமது அடியாள் தூங்கும்போது, இவள் நடுஇரவில் எழுந்து, என்னுடைய பக்கத்திலே கிடக்கிற என்னுடைய பிள்ளையை எடுத்து, தன்னுடைய மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன்னுடைய பிள்ளையை எடுத்து, என்னுடைய மார்பிலே கிடத்திவிட்டாள்.
\s5
\v 21 என்னுடைய பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலையில் நான் எழுந்தபோது, அது இறந்து கிடந்தது; பொழுது விடிந்தபின்பு நான் அதை உற்றுப்பார்க்கும்போது, அது நான் பெற்ற பிள்ளை இல்லை என்று கண்டேன் என்றாள்.
\v 22 அதற்கு மற்ற பெண்: அப்படியல்ல, உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை, செத்தது உன்னுடைய பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன்னுடைய பிள்ளை, உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவிற்கு முன்பாக வாதாடினார்கள்.
\s5
\v 23 அப்பொழுது ராஜா: உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை, செத்தது உன்னுடைய பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன்னுடைய பிள்ளை, உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,
\v 24 ஒரு பட்டயத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்; அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவிடம் கொண்டுவந்தார்கள்.
\v 25 ராஜா உயிரோடு இருக்கிற பிள்ளையை இரண்டாக பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான்.
\s5
\v 26 அப்பொழுது உயிரோடு இருக்கிற பிள்ளையின் தாய், தன்னுடைய பிள்ளைக்காக அவள் இருதயம் துடித்ததால், ராஜாவை நோக்கி: ஐயோ, என்னுடைய எஜமானனே, உயிரோடு இருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள்.
\v 27 அப்பொழுது ராஜா உயிரோடு இருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான்.
\v 28 ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிப்பதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவிற்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 சாலொமோனின் அதிகாரிகளும் அதிபதிகளும்
\p
\v 1 ராஜாவாகிய சாலொமோன் அனைத்து இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக இருந்தான்.
\v 2 அவனுக்கு இருந்த அதிகாரிகள்: சாதோக்கின் மகனாகிய அசரியா ஆசாரியனாக இருந்தான்.
\v 3 சீசாவின் மகனாகிய ஏலிகோரேப்பும் அகியாவும் எழுத்தர்களாக இருந்தார்கள்; அகிலூதின் மகன் யோசபாத் மந்திரியாக இருந்தான்.
\v 4 யோய்தாவின் மகன் பெனாயா படைத்தலைவனும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாக இருந்தார்கள்.
\s5
\v 5 நாத்தானின் மகன் அசரியா அலுவலர்களின் தலைவனாக இருந்தான்; நாத்தானின் மகன் சாபூத் ராஜாவின் ஆசாரியனும் நண்பனாகவும் இருந்தான்.
\v 6 அகீஷார் அரண்மனை அதிகாரியும், அப்தாவின் மகன் அதோனீராம் கட்டாய வேலை செய்கிறவர்களின் அதிகாரியாக இருந்தான்.
\s5
\v 7 ராஜாவிற்கும் அவனுடைய அரண்மனையில் உள்ளவர்களுக்கும் தேவையான உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு அதிகாரிகள் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்திற்கு ஒவ்வொருவராக வருடம் முழுவதும் பராமரித்துவந்தார்கள்.
\v 8 அவர்களின் பெயர்கள்: ஊரின் மகன், இவன் எப்பிராயீம் மலைத் தேசத்தில் இருந்தான்.
\v 9 தேக்கேரின் மகன், இவன் மாக்காத்சிலும், சால்பீமிலும், பெத்ஷிமேசிலும், ஏலோன்பெத்தானானிலும் இருந்தான்.
\v 10 ஏசேதின் மகன், இவன் அறுபோத்தில் இருந்தான்; சோகோவும் எப்பேர் பூமியனைத்தும் இவனுடைய விசாரிப்பில் இருந்தது.
\s5
\v 11 அபினதாபின் மகன், இவன் தோரின் நாட்டுப்புறம் அனைத்திற்கும் அதிகாரியாக இருந்தான்; சாலொமோனின் மகளாகிய தாபாத் இவனுக்கு மனைவியாக இருந்தாள்.
\v 12 அகிலூதின் மகனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான்துவங்கி ஆபேல் மெகொல்லாவரை யக்மெயாமுக்கு மறுபக்கம்வரை இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது.
\v 13 கேபேரின் மகன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் மகனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கலத் தாழ்ப்பாள்களுமுள்ள பாசான் தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் பட்டணமும் இவன் விசாரிப்பில் இருந்தது.
\v 14 இத்தோவின் மகன் அகினதாப், இவன் மக்னாயீமில் இருந்தான்.
\s5
\v 15 அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு மகளாகிய பஸ்மாத் என்பவளைத் திருமணம்செய்தான்.
\v 16 ஊசாயின் மகன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.
\v 17 பருவாவின் மகன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.
\s5
\v 18 ஏலாவின் மகன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
\v 19 ஊரியின் மகன் கேபேர், இவன் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத் தேசத்தில் இருந்தான்; இவன் மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாக இருந்தான்.
\s1 சாலொமோனுக்கு ஒதுக்கப்பட்ட அனுதின உணவு
\p
\s5
\v 20 யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலைப்போல அதிகமாக இருந்து, சாப்பிட்டுக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.
\v 21 நதிதுவங்கி, பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாக எகிப்தின் எல்லைவரை இருக்கிற சகல ராஜ்ஜியங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவனுக்கு பணிவிடை செய்தார்கள்.
\v 22 ஒரு நாளுக்கு சாலொமோனுக்கு ஆகும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும்,
\v 23 கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுத்த பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாகும்.
\s5
\v 24 நதிக்கு இந்த பக்கத்தில் இருக்கிற திப்சாமுதற்கொண்டு ஆசாவரை உள்ளவைகள் எல்லாவற்றையும், நதிக்கு இந்தப்பக்கத்திலுள்ள சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாக இருந்தது.
\v 25 சாலொமோனுடைய நாட்களெல்லாம் தாண் துவங்கி பெயெர்செபாவரையும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.
\s5
\v 26 சாலொமோனுக்கு நான்காயிரம் குதிரைலாயங்களும், பன்னிரண்டாயிரம் குதிரை வீரர்களும் இருந்தார்கள்.
\v 27 மேற்சொல்லிய அதிகாரிகளில் ஒவ்வொருவரும் தன்தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவிற்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் தேவையானவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து,
\v 28 குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் தேவையான வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் இடத்திற்குக் கொண்டுவருவார்கள்.
\s1 சாலொமோனின் ஞானம்
\p
\s5
\v 29 தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலைப்போல பரந்த புரிந்துகொள்ளும் திறனையும் கொடுத்தார்.
\v 30 சகல கிழக்குப்பகுதி மக்களின் ஞானத்தையும் எகிப்தியர்களின் சகல ஞானத்தையும்விட சாலொமோனின் ஞானம் சிறந்ததாக இருந்தது.
\v 31 அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் மகன்களிலும், மற்ற எல்லா மனிதர்களிலும் ஞானவானாக இருந்தான்; சுற்றிலும் இருந்த சகல தேசங்களிலும் அவன் புகழ் பிரபலமாக இருந்தது.
\s5
\v 32 அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.
\v 33 லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊருகின்ற பிராணிகள் மீன்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் சொன்னான்.
\v 34 சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் எல்லா ராஜாக்களிடத்திலுமிருந்தும் எல்லா தேசத்து மக்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்பதற்கு வந்தார்கள்.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 சாலொமோன் ஆலயத்தைக் கட்ட ஆயத்தப்படுதல்
\p
\v 1 சாலொமோனை அவனுடைய தகப்பன் இடத்தில் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன்னுடைய வேலைக்காரர்களை அவனிடம் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்கு எப்பொழுதும் நண்பனாக இருந்தான்.
\v 2 அப்பொழுது சாலொமோன் ஈராமிடம் ஆட்களை அனுப்பி:
\v 3 என்னுடைய தகப்பனாகிய தாவீதின் எதிரிகளைக் கர்த்தர் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தும்வரை, அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால், அவர் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட, அவரால் முடியாமலிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர்.
\s5
\v 4 ஆனாலும் இப்பொழுதோ என்னுடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு எங்கும் இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை.
\v 5 ஆகையால்: நான் உன்னுடைய இடத்தில் உன் சிங்காசனத்தின்மேல் அமர்த்தும் உன்னுடைய மகனே என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் என்னுடைய தகப்பனாகிய தாவீதிடம் சொன்னபடியே, என்னுடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்.
\s5
\v 6 ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுருமரங்களை வெட்ட கட்டளை கொடும்; சீதோனியர்களைப்போல மரம்வெட்டும் வேலை தெரிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்; அதற்காக என்னுடைய வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு இருப்பார்கள்; நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரர்களின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான்.
\s5
\v 7 ஈராம் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு: அந்த ஏராளமான மக்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள மகனைக் கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்று சொல்லி;
\v 8 ஈராம் சாலொமோனிடத்தில் செய்தி அனுப்பி: நீர் எனக்குச் சொல்லியனுப்பின காரியத்தை நான் கேட்டேன்; கேதுருமரங்களுக்காகவும், தேவதாரு மரங்களுக்காகவும், உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய்வேன்.
\s5
\v 9 என்னுடைய வேலைக்காரர்கள் லீபனோனிலிருந்து அவைகளை இறக்கிக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைக் கட்டுமரங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்திற்குக் கடல்வழியாக அனுப்பி, அவைகளை அவிழ்ப்பேன்; அங்கே நீர் அவைகளை எடுத்துக்கொண்டு என்னுடைய மக்களுக்கு ஆகாரங்கொடுத்து, என்னுடைய விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 10 அப்படியே ஈராம் சாலொமோனுக்கு தேவையான அளவு கேதுருமரங்களையும் தேவதாரு மரங்களையும் கொடுத்துக்கொண்டுவந்தான்.
\v 11 சாலொமோன் ஈராமின் அரண்மனைக்கு உணவிற்காக இருபதாயிரம் கலம் கோதுமையையும், இடித்துப் பிழிந்த ஒலிவமரங்களின் இருபது கல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படி சாலொமோன் ஈராமுக்கு ஆண்டுதோறும் கொடுத்துவந்தான்.
\v 12 கர்த்தர் சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியே அவனுக்கு ஞானத்தைத் தந்தருளினார்; ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம்உண்டாயிருந்து, இருவரும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.
\p
\s5
\v 13 ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலர்கள் எல்லோரிலும் வேலைக்கு முப்பதாயிரம் கூலியில்லா வேலைக்காரர்களைப் பிடித்தான்.
\v 14 அவர்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் பத்தாயிரம்பேரை மாற்றி மாற்றி, லீபனோனுக்கு அனுப்பினான்; அவர்கள் ஒரு மாதம் லீபனோனிலும், இரண்டு மாதங்கள் தங்களுடைய வீடுகளிலும் இருப்பார்கள்; அதோனீராம் அந்த கூலியில்லா ஆட்களின்மேல் தலைவனாக இருந்தான்.
\s5
\v 15 சாலொமோனிடம் சுமை சுமக்கிறவர்கள் எழுபதாயிரம்பேர்களும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் எண்பதாயிரம்பேர்களும்,
\v 16 இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிப்பதற்கு தலைமையான அதிகாரிகள் மூவாயிரத்து முந்நூறுபேர்களும் இருந்தார்கள்.
\s5
\v 17 வெட்டின கல்லால் ஆலயத்திற்கு அஸ்திபாரம்போட, பெரிதும் விலையுயர்ந்ததுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான்.
\v 18 ஆலயத்தைக் கட்ட, சாலொமோனின் சிற்பிகளும், ஈராமின் சிற்பிகளும், கிபலி ஊரைச் சேர்ந்தவர்களும், அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\s1 சாலொமோன் ஆலயத்தைக் கட்டுதல்
\p
\v 1 இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருடத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நான்காம் வருடம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.
\v 2 சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாக இருந்தது.
\s5
\v 3 ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சமமாக இருபதுமுழ நீளமும், ஆலயத்திற்கு முன்னே பத்துமுழ அகலமுமாக இருந்தது.
\v 4 பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்தான்.
\s5
\v 5 அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி இடச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுச்சுவரைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.
\v 6 கீழே இருக்கிற சுற்றுச்சுவர் ஐந்துமுழ அகலமும், நடுவே இருக்கிறது ஆறுமுழ அகலமும், மூன்றாவதாக இருக்கிறது ஏழுமுழ அகலமுமாக இருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய விட்டத்தினாலே தாங்காதபடி ஆலயத்தைச் சுற்றிலும் வெளிப்புறமாக ஒட்டுச்சுவர்களைக் கட்டினான்.
\s5
\v 7 ஆலயம் கட்டப்படும்போது, அது வேலைசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் கோடாரிகள் முதலான எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.
\v 8 நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலதுபுறத்தில் இருந்தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள்.
\s5
\v 9 இவ்விதமாக அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுரு மர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மூடி ஆலயப்பணியை முடித்தான்.
\v 10 அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டினான்; அவைகள் கேதுருமரங்களால் ஆலயத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.
\p
\s5
\v 11 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று; அவர்:
\v 12 நீ என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நீதி நியாயங்களை நிறைவேற்றி, என்னுடைய கற்பனைகளின்படியெல்லாம் நடந்துகொள்ளும்படி, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன்னுடைய தகப்பனாகிய தாவீதோடு சொன்ன என்னுடைய வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,
\v 13 இஸ்ரவேல் மக்களின் நடுவிலே இருந்து, என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
\s5
\v 14 அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.
\p
\v 15 ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தரை துவங்கி சுவர்களின் மேற்கூரைவரை, கேதுரு பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையால் செய்து, ஆலயத்தின் தரையை தேவதாரு மரங்களின் பலகைகளால் தரையை மூடினான்.
\s5
\v 16 மூடப்பட்ட தரைதுவங்கி சுவர்களின் மேற்கூரைவரை ஆலயத்தின் பக்கங்களைத் தொட்டிருக்கிற இருபதுமுழ நீளமான மறைப்பையும் கேதுரு பலகைகளால் செய்து, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதியினிடமாகக் கட்டினான்.
\v 17 அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை நாற்பதுமுழ நீளமாக இருந்தது.
\v 18 ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்கூட காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாக இருந்தது.
\s5
\v 19 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கு ஆலயத்திற்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தினான்.
\v 20 மகா பரிசுத்த ஸ்தலம் முன்புறம்வரை இருபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், இருபதுமுழ உயரமுமாக இருந்தது; அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.
\s5
\v 21 ஆலயத்தின் உட்புறத்தை சாலொமோன் பசும்பொன்தகட்டால் மூடி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் மறைப்புக்கும் பொன்சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன்தகட்டால் மூடினான்.
\v 22 இப்படி ஆலயம் முழுவதும் கட்டிமுடியும்வரை, அவன் ஆலயம் முழுவதையும் பொன்தகட்டால் மூடி, மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான்.
\s5
\v 23 மகா பரிசுத்த ஸ்தலத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமுமாக இருந்தது.
\v 24 கேருபீனுக்கு இருக்கிற ஒருசெட்டை ஐந்துமுழமும் கேருபீனின் மற்றச்செட்டை ஐந்து முழமுமாக, இப்படி ஒரு செட்டையின் கடைசிமுனை தொடங்கி மற்றச்செட்டையின் கடைசி முனைவரை பத்துமுழமுமாக இருந்தது.
\v 25 மற்றக் கேருபீனும் பத்து முழமுமாக இருந்தது; இரண்டு கேருபீன்களும் ஒரே அளவும் ஒரே திட்டமுமாக இருந்தது.
\v 26 ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாக இருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.
\s5
\v 27 அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் செட்டைகள் விரித்திருந்ததால், ஒரு கேருபீனின் செட்டை ஒரு பக்கத்துச்சுவரிலும், மற்றக் கேருபீனின் செட்டை மறுபக்கத்துச் சுவரிலும் தொடும்படியிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் செட்டைகள் ஒன்றோடொன்று தொடத்தக்கதாயிருந்தது.
\v 28 அந்தக் கேருபீன்களைப் பொன்தகட்டால் மூடினான்.
\s5
\v 29 ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளேயும் வெளியேயுமாகக் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.
\v 30 உள்ளேயும் வெளியேயும் இருக்கிற ஆலயத்து தரையையும் பொன்தகட்டால் மூடினான்.
\s5
\v 31 மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலுக்கு ஒலிவமரங்களால் இரட்டைக் கதவுகளைச் செய்தான்; மேல்சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காக இருந்தது.
\v 32 ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பனை மரங்களிலும் பொன்பதியத்தக்கதாகப் பொன்தகட்டால் மூடினான்.
\s5
\v 33 இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைக்கால்களைச் செய்தான்; அது சுவர் அளவில் நான்கு பக்கமும் ஒரே அளவு சதுரமாக இருந்தது.
\v 34 அதின் இரண்டு கதவுகளும் தேவதாருப் பலகைகளால் செய்யப்பட்டிருந்தது; ஒரு கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும், மற்றக் கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும் இருந்தது.
\v 35 அவைகளில் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திர வேலையைச் செய்து, சித்திரங்களுக்குச் சமமாகச் செய்யப்பட்ட பொன்தகட்டால் அவைகளை மூடினான்.
\s5
\v 36 அவன் உட்பிரகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுரு பலகைகளாலும் கட்டினான்.
\s5
\v 37 நான்காம் வருடம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டு,
\v 38 பதினோராம் வருடம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே, அந்த ஆலயம்முழுவதும் எல்லா சட்டதிட்டத்தின்படியே ஒருபங்கும் குறையாமல் கட்டி முடிந்தது; அவன் அதைக் கட்டிமுடிக்க ஏழுவருடங்கள் ஆனது.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 சாலொமோன் தன்னுடைய அரண்மனையைக் கட்டுதல்
\p
\v 1 சாலொமோன் தன்னுடைய அரண்மனை முழுவதையும் கட்டிமுடிக்க பதிமூன்று வருடங்கள் சென்றது.
\v 2 அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது நூறுமுழ நீளமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாக இருந்தது; அதைக் கேதுருமர உத்திரங்கள் கட்டப்பட்ட கேதுருமரத்தூண்களின் நான்கு வரிசைகளின்மேல் கட்டினான்.
\s5
\v 3 ஒவ்வொரு வரிசைக்கும் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின்மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுருக்களால் கூரை வேயப்பட்டிருந்தது.
\v 4 மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராக இருந்தது.
\v 5 எல்லா ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் சதுரமாக இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராக இருந்தது.
\s5
\v 6 ஐம்பதுமுழ நீளமும் முப்பதுமுழ அகலமுமான மண்டபத்தையும், தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களுக்கும் உத்திரங்களுக்கும் எதிராக இருந்தது.
\s5
\v 7 தான் இருந்து நியாயம் தீர்ப்பதற்கு நியாயாசனம் போடப்பட்டிருக்கும் ஒரு நியாய விசாரணை மண்டபத்தையும் கட்டி, அதின் ஒரு பக்கம் துவங்கி மறுபக்கம்வரை கேதுரு பலகைகளால் தரையை மூடினான்.
\s5
\v 8 அவன் தங்கும் அவனுடைய அரண்மனை மண்டபத்திற்குள்ளே அதேமாதிரியாகச் செய்யப்பட்ட வேறொரு மண்டபமும் இருந்தது. சாலொமோன் திருமணம் செய்த பார்வோனின் மகளுக்கும் அந்த மண்டபத்தைப்போல ஒரு மாளிகையைக் கட்டினான்.
\s5
\v 9 இவைகளெல்லாம், உள்ளேயும் வெளியேயும், அஸ்திபாரம்முதல் மேல் கூரைவரை, வெளியே இருக்கும் பெரிய முற்றம்வரைக்கும், அளவின்படி வெட்டி வாளால் அறுக்கப்பட்ட விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்டது.
\v 10 அஸ்திபாரம் பத்துமுழக் கற்களும், எட்டுமுழக் கற்களுமான விலையுயர்ந்த பெரிய கற்களாக இருந்தது.
\s5
\v 11 அதின்மேல் உயரமாக இருக்கும் அளவின்படி வேலைப்பாடு செய்யப்பட்ட விலையுயர்ந்த கற்களும், கேதுரு மரங்களும் வைக்கப்பட்டிருந்தது.
\v 12 பெரிய முற்றத்திற்குச் சுற்றிலும் மூன்று வரிசைக் கேதுருமர உத்திரங்களாலும் ஒரு வரிசை வேலைப்பாடு செய்யப்பட்ட கற்களாலும் செய்யப்பட்டிருந்தது; கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திற்கும், அதின் முன்மண்டபத்திற்கும் அப்படியே செய்யப்பட்டிருந்தது.
\s1 ஆலயத்தை அலங்காரம் செய்தல்
\p
\s5
\v 13 ராஜாவாகிய சாலொமோன் ஈராம் என்னும் ஒருவனைத் தீருவிலிருந்து அழைப்பித்தான்.
\v 14 இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு விதவையின் மகன்; இவனுடைய தகப்பன் தீரு நகரத்தைச் சேர்ந்த வெண்கல கைவினை கலைஞர்; இவன் சகலவித வெண்கல வேலையையும் செய்யத்தக்க யுக்தியும், புத்தியும், அறிவும் உள்ளவனாக இருந்தான்; இவன் ராஜாவாகிய சாலொமோனிடம் வந்து, அவனுடைய வேலையையெல்லாம் செய்தான்.
\s5
\v 15 இவன் இரண்டு வெண்கலத் தூண்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு தூணும் பதினெட்டுமுழ உயரமும், ஒவ்வொரு தூணின் சுற்றளவும் பன்னிரண்டு முழ நூலளவுமாக இருந்தது.
\v 16 அந்தத் தூண்களுடைய உச்சியில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் ஐந்துமுழ உயரமாக இருந்தது.
\v 17 தூண்களுடைய முனையின்மேலுள்ள கும்பங்களுக்கு வலைபோன்ற பின்னல்களும், சங்கிலிபோன்ற தொங்கல்களும், ஒவ்வொரு கும்பத்திற்கும் ஏழு ஏழாக இருந்தது.
\s5
\v 18 தூண்களைச்செய்த விதம்: உச்சியில் உள்ள கும்பங்களை மூடுவதற்காக, கும்பங்கள் ஒவ்வொன்றிலும் பின்னலின்மேல் சுற்றிலும் இரண்டு வரிசை மாதுளம்பழங்களைச் செய்தான்.
\v 19 மண்டபத்தின் முன்னிருக்கும் அந்தத் தூண்களுடைய உச்சியில் உள்ள கும்பங்கள் லீலிபுஷ்பங்களின் வேலையும், நான்குமுழ உயரமுமாக இருந்தது.
\s5
\v 20 இரண்டு தூண்களின்மேலே உள்ள கும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகில் இருந்த இடத்தில் இருநூறு மாதுளம்பழங்களின் வரிசைகள் சுற்றிலும் இருந்தது; மற்றக் கும்பத்திலும் அப்படியே இருந்தது.
\v 21 அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான்.
\v 22 தூண்களுடைய சிகரத்தில் லீலிமலர்களைப்போல வேலை செய்யப்பட்டிருந்தது; இவ்விதமாகத் தூண்களின் வேலை முடிந்தது.
\s5
\v 23 வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வட்டவடிவில் கட்டினான்; சுற்றிலும் அதினுடைய ஒருவிளிம்பு துவங்கி மறுவிளிம்புவரை, அகலம் பத்துமுழமும், உயரம் ஐந்துமுழமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாக இருந்தது.
\v 24 அந்தக் கடல்தொட்டியைச் சுற்றி விளிம்புக்குக் கீழே அதைச் சுற்றிலும் மொக்குகள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து பத்தாகச் செய்யப்பட்டிருந்தது; வார்க்கப்பட்ட அந்த மொக்குகளின் வரிசைகள் இரண்டும் தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தது.
\s5
\v 25 அது பன்னிரண்டு காளைகளின் மேல் நின்றது; அவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி காளைகளின் மேலாகவும், அவைகளின் பின்புறங்களெல்லாம் உள்ளாகவும் இருந்தது.
\v 26 அதின் கனம் நான்கு விரலளவும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிமலர் போலவும் இருந்தது; அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.
\s5
\v 27 பத்து வெண்கல கால்களையும் செய்தான்; ஒவ்வொரு காலும் நான்குமுழ நீளமும், நான்குமுழ அகலமும், மூன்றுமுழ உயரமுமாக இருந்தது.
\v 28 அந்த கால்களின் வேலைப்பாடு என்னவெனில், அவைகளுக்கு பலகைகள் உண்டாக்கப்பட்டிருந்தது; பலகைகளோ சட்டங்களின் நடுவில் இருந்தது.
\v 29 சட்டங்களுக்கு நடுவே இருக்கிற அந்த பலகைகளில் சிங்கங்களும், காளைகளும், கேருபீன்களும், சட்டங்களுக்கு மேலேயும், சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் கீழாக சாய்வான வேலைப்பாடுள்ள வாய்க்கால்களும் அதனோடு இருந்தது.
\s5
\v 30 ஒவ்வொரு கால்களுக்கும் நான்கு வெண்கல உருளைகளும், வெண்கலத் தட்டுகளும், அதின் நான்கு முனைகளுக்கு அச்சுகளும் இருந்தது; கொப்பரையின் கீழிருக்க, அந்த அச்சுகள் ஒவ்வொன்றும் வார்ப்பு வேலையாக வாய்க்கால்களுக்கு நேராக இருந்தது.
\v 31 அதின் வாய் மேலே ஒருமுழம் உயர்ந்திருந்தது; அதின் வாய் ஒன்றரை முழ தட்டையுமாக, அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் பலகைகள் வட்டமாயிராமல் சதுரமாக இருந்தது.
\s5
\v 32 அந்த நான்கு உருளைகள் பலகைகளின் கீழும், உருளைகளின் அச்சுகள் கால்களிலும் இருந்தது; ஒவ்வொரு உருளை ஒன்றரை முழ உயரமாக இருந்தது.
\v 33 உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலையைப் போலவே இருந்தது; அவைகளின் அச்சுகளும், சக்கரங்களும், வட்டங்களும், கம்பிகளும் எல்லாம் வார்ப்பு வேலையாக இருந்தது.
\s5
\v 34 ஒவ்வொரு காலுடைய நான்கு முனைகளிலும், காலிலிருந்து புறப்படுகிற நான்கு கைப்பிடிகள் இருந்தது.
\v 35 ஒவ்வொரு கால்களின் தலைப்பகுதியிலும் அரைமுழ உயரமான வட்டவடிவ கட்டும், ஒவ்வொரு காலினுடைய தலைப்பின்மேலும் அதிலிருந்து புறப்படுகிற அதின் கைப்பிடிகளும் பலகைகளும் இருந்தது.
\s5
\v 36 அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் பலகைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பனை மரங்களுடைய சித்திர வேலைகளை செய்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், வாய்க்கால்களிலும் இருக்கும் இடங்களுக்குத் தகுந்தபடி செய்தான்.
\v 37 இப்படியாக அந்தப் பத்து கால்களையும் செய்தான்; அவைகளெல்லாம் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரேவித கொத்து வேலையுமாக இருந்தது.
\s5
\v 38 பத்து வெண்கலக் கொப்பரைகளையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கொப்பரையும் நாற்பது குடம் பிடிக்கும்; நான்குமுழ அகலமான ஒவ்வொரு கொப்பரையும் அந்தப் பத்து கால்களில் ஒவ்வொன்றின்மேலும் வைக்கப்பட்டது.
\v 39 ஐந்து கால்களை ஆலயத்தின் வலதுபுறத்திலும், ஐந்து கால்களை ஆலயத்தின் இடதுபுறத்திலும் வைத்தான்; கடல்தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலதுபுறத்திலே தெற்குநோக்கி வைத்தான்.
\s5
\v 40 பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாக ஈராம் கர்த்தருடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான்.
\v 41 அவைகள் என்னவெனில்: இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களும், தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும் இரண்டு வலைப் பின்னல்களும்,
\s5
\v 42 தூண்களின் மேலுள்ள இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் செய்த இரண்டு வரிசை மாதுளம்பழங்களும், ஆக இரண்டு வலைப்பின்னல்களுக்கும் நானூறு மாதுளம்பழங்களும்,
\v 43 பத்து கால்களும், கால்களின்மேல் வைத்த பத்துக் கொப்பரைகளும்,
\s5
\v 44 ஒரு கடல் தொட்டியும், கடல் தொட்டியின் கீழிருக்கிற பன்னிரண்டு காளைகளும்,
\v 45 செம்புச்சட்டிகளும், சாம்பல் கரண்டிகளும், கலங்களும் செய்தான்; கர்த்தரின் ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்கு ஈராம் செய்த இந்த எல்லாப் பணிப்பொருட்களும் சுத்தமான வெண்கலமாக இருந்தது.
\s5
\v 46 யோர்தானுக்கு அடுத்த சமமான பூமியிலே, சுக்கோத்திற்கும் சர்தானுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா இவைகளை வார்த்தான்.
\v 47 இந்தச் சகல பணிப்பொருட்களின் வெண்கலம் மிகவும் ஏராளமாக இருந்ததால், சாலொமோன் அவைகளை எடை பார்க்கவில்லை; அதினுடைய எடை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை.
\s5
\v 48 பின்னும் கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பணிப்பொருட்களையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்; அவையாவன, பொன் பலிபீடத்தையும், சமுகத்து அப்பங்களை வைக்கும் பொன் மேசையையும்,
\v 49 மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக வைக்கும் பசும்பொன் விளக்குத்தண்டுகள், வலதுபுறமாக ஐந்தையும் இடதுபுறமாக ஐந்தையும், பொன்னான அதின் பூக்களோடும் விளக்குகளோடும் கத்தரிகளோடும் உண்டாக்கினான்.
\s5
\v 50 பசும்பொன் கிண்ணங்களையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும், மகாபரிசுத்தமான உள் ஆலயத்தினுடைய கதவுகளின் பொன்னான மொட்டுகளையும், தேவாலயமாகிய மாளிகைக் கதவுகளின் பொன்னான மொட்டுகளையும் செய்தான்.
\s5
\v 51 இப்படியாக ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்திற்காகச் செய்த வேலைகளெல்லாம் முடிந்தது; அப்பொழுது சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்செய்யும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் கொண்டுவந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 உடன்படிக்கைப் பெட்டி ஆலயத்திற்குக் கொண்டுவரப்படுதல்
\p
\v 1 அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரத் தலைமையில் உள்ளவர்களாகிய இஸ்ரவேல் மக்களிலுள்ள பிதாக்களின் தலைவர்கள் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடம் கூடிவரச்செய்தான்.
\v 2 இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரும் ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதத்தின் பண்டிகையிலே, ராஜாவாகிய சாலொமோனிடம் கூடிவந்தார்கள்.
\s5
\v 3 இஸ்ரவேலின் மூப்பர்கள் அனைவரும் வந்திருக்கும்போது, ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டியை எடுத்து,
\v 4 பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருந்த பரிசுத்த பணிப்பொருட்கள் அனைத்தையும் சுமந்து கொண்டுவந்தார்கள்; ஆசாரியர்களும், லேவியர்களும், அவைகளைச் சுமந்தார்கள்.
\v 5 ராஜாவாகிய சாலொமோனும் அவனோடு கூடிய இஸ்ரவேல் சபை மக்கள் அனைவரும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையும் கணக்கும் இல்லாத திரளான ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டார்கள்.
\s5
\v 6 அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்தின் உள் அறையாகிய மகாபரிசுத்த ஸ்தலத்திலே கேருபீன்களுடைய இறக்கைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்.
\v 7 கேருபீன்கள் பெட்டி இருக்கும் இடத்திலே தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.
\v 8 தண்டுகளின் முனைகள் உள் அறைக்கு முன்னான பரிசுத்த இடத்திலே காணப்படும்படியாக அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்த நாள் வரைக்கும் அங்கேதான் இருக்கிறது.
\s5
\v 9 இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டபின்பு கர்த்தர் அவர்களோடு உடன்படிக்கை செய்கிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளைத் தவிர அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.
\v 10 அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படும்போது, மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பியது.
\v 11 மேகத்தினால் ஆசாரியர்கள் ஊழியம் செய்வதற்கு நிற்கமுடியாமற்போனது; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பியது.
\p
\s5
\v 12 அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாழ்வேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
\v 13 தேவரீர் தங்கக்கூடிய வீடும், நீர் என்றைக்கும் தங்ககூடிய நிலையான இடமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,
\s5
\v 14 ராஜா திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரும் நின்றார்கள்.
\v 15 அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என்னுடைய தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.
\v 16 அவர் நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படச்செய்த நாள்முதல், என்னுடைய நாமம் வெளிப்படும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் உள்ள ஒரு பட்டணத்தையும் தெரிந்துகொள்ளாமல் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் அதிகாரியாக இருக்கும்படி தாவீதையே தெரிந்துகொண்டேன் என்றார்.
\s5
\v 17 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என்னுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது.
\v 18 ஆனாலும் கர்த்தர் என்னுடைய தகப்பனாகிய தாவீதை நோக்கி: என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன்னுடைய மனதிலே இருந்தது நல்ல காரியந்தான்.
\v 19 ஆனாலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய், உனக்கு பிறக்கும் உன்னுடைய மகனே என்னுடைய நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.
\s5
\v 20 இப்போதும் கர்த்தர் சொல்லிய தம்முடைய வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என்னுடைய தகப்பனாகிய தாவீதின் இடத்தில் எழுந்து, இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டினேன்.
\v 21 கர்த்தர் நம்முடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, அவர்களோடு செய்த உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு இடத்தை உண்டாக்கினேன் என்றான்.
\s1 சாலொமோனின் பிரதிஷ்டை ஜெபம்
\p
\s5
\v 22 பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையார்கள் எல்லோருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராகத் தன்னுடைய கைகளை விரித்து:
\v 23 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு நிகரான தேவன் இல்லை; தங்களுடைய முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியார்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருகிறீர்.
\v 24 தேவரீர் என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்த நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர்.
\s5
\v 25 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியக்காரனை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன்னுடைய மகன்களும் எனக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஆண்மகன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமல் போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.
\v 26 இஸ்ரவேலின் தேவனே, என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியக்காரனுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய்யென்று வெளிப்படுவதாக.
\s5
\v 27 தேவன் மெய்யாக பூமியிலே தங்குவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உமக்குப் போதாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?
\v 28 என்னுடைய தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமக்கு முன்பாக செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கவனத்தில் கொண்டருளும்.
\s5
\v 29 உமது அடியேன் இந்த இடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் அங்கே இருக்கும் என்று நீர் சொன்ன இடமாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக.
\v 30 உமது அடியானும், இந்த இடத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்யும் ஜெபத்தைக் கேட்டருளும்; பரலோகமாகிய நீர் தங்குமிடத்திலே அதை கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.
\s5
\v 31 ஒருவன் தன் அருகில் உள்ளவனுக்கு விரோதமாகக் குற்றம் செய்திருக்கும்போது, இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பு வந்தால்,
\v 32 அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய செய்கையை அவனுடைய தலையின்மேல் சுமரச்செய்து, அவனைக் குற்றவாளியாகத் தீர்க்கவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத் தகுந்தபடி செய்து அவனை நீதிமானாக்கவும் தக்கதாக உமது அடியார்களை நியாயந்தீர்ப்பீராக.
\s5
\v 33 உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் எதிரிகளுக்கு முன்பாக தோற்றுபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, இந்த ஆலயத்திற்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,
\v 34 பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுடைய முன்னோர்களுக்கு நீர் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பி வரச்செய்வீராக.
\s5
\v 35 அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் வானம் அடைபட்டு மழைபெய்யாமல் இருக்கும்போது, அவர்கள் இந்த இடத்திற்கு நேராக விண்ணப்பம் செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, தங்களை தேவரீர் மனவருத்தப்படுத்தும்போது தங்களுடைய பாவங்களைவிட்டுத் திரும்பினால்.
\v 36 பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியார்களும் உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது மக்களுக்குச் சுதந்திரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீராக.
\s5
\v 37 தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, விஷப்பனி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய எதிரிகள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றுக்கையிடும்போதும், ஏதாவது ஒரு வாதையோ வியாதியோ வரும்போதும்,
\v 38 உம்முடைய மக்களாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனிதனானாலும் தன்னுடைய இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன்னுடைய கைகளை விரித்துச் செய்யும் எல்லா விண்ணப்பத்தையும், எல்லா வேண்டுதலையும்,
\s5
\v 39 நீர் தங்குமிடமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,
\v 40 தேவரீர் எங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படி தேவரீர் ஒருவரே எல்லா மனிதர்களின் இருதயத்தையும் அறிந்தவராக இருக்கிறபடியால், நீர் அவனவனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத் தகுந்தபடி செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.
\s5
\v 41 உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் அல்லாத அந்நியர்கள் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே.
\v 42 அப்படிப்பட்ட அந்நியனும், உமது நாமத்தினிமித்தம் தூர தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்திற்கு நேராக விண்ணப்பம் செய்தால்,
\v 43 உமது தங்குமிடமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் மக்களெல்லோரும் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படியும், நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் வைக்கப்பட்டதென்று அறியும்படியும், உம்முடைய நாமத்தை அறிந்துகொள்வதற்காக, அந்த அந்நியன் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக.
\s5
\v 44 நீர் உம்முடைய மக்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் எதிரிகளோடு யுத்தம் செய்யப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்தால்,
\v 45 பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்களுடைய நியாயத்தை விசாரிப்பீராக.
\s5
\v 46 பாவம் செய்யாத மனிதன் இல்லையே; ஆகையால், அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபம்கொண்டு, அவர்களுடைய எதிரிகளுடைய கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அந்த எதிரிகள் அவர்களைத் தூரத்திலோ அருகிலோ இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகும்போது,
\v 47 அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவம்செய்து, அக்கிரமம்செய்து, துன்மார்க்கமாக நடந்தோம் என்று தங்களுடைய சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி வேண்டுதல் செய்து,
\s5
\v 48 தங்களைச் சிறைபிடித்துக்கொண்ட தங்களுடைய எதிரிகளின் தேசத்திலே தங்களுடைய முழு இருதயத்தோடும் தங்களுடைய முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்களுடைய பிதாக்களுக்குக் கொடுத்த தங்களுடைய தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது,
\s5
\v 49 நீர் தங்குமிடமாகிய பரலோகத்திலே இருக்கிற தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்களுடைய நியாயத்தை விசாரித்து,
\v 50 உம்முடைய மக்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்களுடைய துரோகங்களை எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்வீராக.
\s5
\v 51 அவர்கள் எகிப்து என்கிற இரும்புச் சூளையின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படச்செய்த உம்முடைய மக்களும் உம்முடைய சுதந்திரமுமாக இருக்கிறார்களே.
\v 52 அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது மக்களாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக.
\v 53 கர்த்தராகிய ஆண்டவரே, நீர் எங்களுடைய பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்யும்போது, உம்முடைய ஊழியக்காரனாகிய மோசேயைக்கொண்டு சொன்னபடியே, தேவரீர் பூமியின் எல்லா மக்களிலும் அவர்களை உமக்குச் சுதந்திரமாகப் பிரித்தெடுத்தீரே என்று விண்ணப்பம் செய்தான்.
\p
\s5
\v 54 சாலொமோன் கர்த்தரை நோக்கி, இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு, அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன்னுடைய கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததைவிட்டு எழுந்து,
\v 55 நின்று, இஸ்ரவேல் சபையார் எல்லோரையும் ஆசீர்வதித்து, உரத்த சத்தத்தோடு சொன்னது:
\v 56 தாம் வாக்குத்தத்தம் செய்தபடியெல்லாம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் தம்முடைய ஊழியக்காரனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் ஒரு வார்த்தைகூட தவறிப்போகவில்லை.
\s5
\v 57 நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழவிடாமலும், அவர் நம்முடைய முன்னோர்களோடு இருந்ததுபோல, நம்மோடும் இருந்து,
\v 58 நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடப்பதற்கும், அவர் நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளுவதற்கும், நம்முடைய இருதயத்தை அவர்பக்கமாக திரும்பச்செய்வாராக.
\s5
\v 59 கர்த்தரே தேவன், வேறொருவரும் இல்லையென்பதை பூமியின் மக்களெல்லாம் அறியும்படியாக,
\v 60 அவர் தமது அடியானுடைய நியாயத்தையும், தமது மக்களாகிய இஸ்ரவேலின் நியாயத்தையும், அந்தந்த நாளில் நடக்கும் காரியத்திற்குத் தகுந்தபடி விசாரிப்பதற்கு, நான் கர்த்தருக்கு முன்பாக விண்ணப்பம்செய்த என்னுடைய வார்த்தைகள் இரவும்பகலும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் இருப்பதாக.
\v 61 ஆதலால் இந்த நாளில் இருக்கிறதுபோல, நீங்கள் அவருடைய கட்டளைகளில் நடந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள, உங்களுடைய இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாக இருப்பதாக என்றான்.
\s1 ஆலய பிரதிஷ்டை
\p
\s5
\v 62 பின்பு ராஜாவும் அவனோடு இருந்த இஸ்ரவேலர்கள் அனைவரும், கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள்.
\v 63 சாலொமோன் கர்த்தருக்குச் சமாதானபலிகளாக, இருபத்திரெண்டாயிரம் மாடுகளையும், ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாக ராஜாவும் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் கர்த்தருடைய ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள்.
\s5
\v 64 கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடமானது சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் கொழுப்பையும் கொள்ளமாட்டாமல் சிறிதாக இருந்ததால், ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குமுன்பு இருக்கிற முற்றத்தின் மையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், உணவுபலிகளையும், சமாதானபலிகளின் கொழுப்பையும் செலுத்தினான்.
\s5
\v 65 அந்தக்காலத்திலேயே சாலொமோனும், ஆமாத்தின் எல்லைதுவங்கி எகிப்தின் நதிவரை இருந்து, அவனோடு இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் மக்கள் அனைவரும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாட்களும், அதற்குப் பின்பு வேறே ஏழுநாட்களுமாக பதினான்கு நாட்கள்வரை பண்டிகையை கொண்டாடினார்கள்.
\v 66 எட்டாம் நாளிலே மக்களுக்கு விடைகொடுத்து அனுப்பினான்; அவர்கள் ராஜாவை வாழ்த்தி, கர்த்தர் தமது ஊழியக்காரனாகிய தாவீதுக்கும் தமது மக்களாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடு தங்களுடைய வீடுகளுக்குப் போனார்கள்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 சாலொமோனுக்கு கர்த்தர் காட்சியளித்தல்
\p
\v 1 சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரண்மனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு,
\v 2 கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாவது முறையும் அவனுக்குத் தரிசனமானார்.
\s5
\v 3 கர்த்தர் அவனை நோக்கி: நீ என்னுடைய சமுகத்தில் செய்த உன்னுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என்னுடைய நாமம் என்றைக்கும் வெளிப்படும்படி, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என்னுடைய கண்களும், இருதயமும் எப்பொழுதும் அங்கே இருக்கும்.
\s5
\v 4 நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என்னுடைய கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளும்படி, என்னுடைய சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாக உன்னுடைய தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடந்தால்,
\v 5 இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் ஆண்மகன் உனக்கு இல்லாமல் போவதில்லை என்று உன்னுடைய தகப்பனாகிய தாவீதோடு நான் சொன்னபடியே, இஸ்ரவேலின் மேலுள்ள உன்னுடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கச்செய்வேன்.
\s5
\v 6 நீங்களும் உங்களுடைய பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்னே வைத்த என்னுடைய கற்பனைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறு தெய்வங்களை வணங்கி, அவைகளைப் பணிந்துகொண்டால்,
\v 7 நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடி அழித்துப்போட்டு, என்னுடைய நாமம் வெளிப்பட நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என்னுடைய பார்வையைவிட்டு அகற்றுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் என்கிற பெயர் எல்லா மக்கள் மத்தியிலும் பழமொழியாகவும் நகைப்பாகவும் இருப்பார்கள்.
\s5
\v 8 அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, இழிவாகப் பேசி: கர்த்தர் இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.
\v 9 அதற்கு அவர்கள்: தங்கள் முன்னோர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த தங்களுடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு வேறு தெய்வங்களைப் பற்றிக்கொண்டு, அவர்களை வணங்கி தொழுதபடியால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரச்செய்தார் என்று சொல்லுவார்கள் என்றார்.
\s1 சாலொமோனின் மற்ற செயல்பாடுகள்
\p
\s5
\v 10 சாலொமோன் கர்த்தருடைய ஆலயமும் ராஜ அரண்மனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற இருபதாம் வருடம் முடிவிலே,
\v 11 தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாருமரங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.
\s5
\v 12 ஈராம் தனக்கு சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்ப்பதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டு வந்தான்; அவைகளின்மேல் அவன் பிரியப்படவில்லை.
\v 13 அதனாலே அவன்: என்னுடைய சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்த நாள்வரை சொல்லி வருகிறபடி காபூல் நாடு என்று பெயரிட்டான்.
\v 14 ஈராம் ராஜாவிற்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான்.
\p
\s5
\v 15 பிடித்த கூலியில்லா வேலையாட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன்னுடைய அரண்மனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.
\v 16 கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர் பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியர்களைக் கொன்றுபோட்டு, அதை சாலொமோனின் மனைவியாகிய தன்னுடைய மகளுக்கு சீதனமாகக் கொடுத்திருந்தான்.
\s5
\v 17 சாலொமோன் அந்தக் கேசேர் பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்,
\v 18 பாலாத்தையும், வனாந்திரத்திலுள்ள தத்மோரையும்,
\v 19 தனக்கு இருக்கிற எல்லாவற்றையும் சேமித்துவைக்கும் எல்லாப் பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர்கள் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாட்சி செய்த தேசமெங்கும் தனக்கு விருப்பமானதையெல்லாம் கட்டினான்.
\s5
\v 20 இஸ்ரவேல் மக்கள் அழிக்காமல் மீதியாக விட்டிருந்த இஸ்ரவேல் மக்களல்லாத எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களுமான எல்லா மக்களிலும்,
\v 21 அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீதியாக இருந்த எல்லா மக்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்த நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, கூலியில்லாமல் வேலைசெய்ய அடிமைப்படுத்திக்கொண்டான்.
\s5
\v 22 இஸ்ரவேல் மக்களில் ஒருவரையும் சாலொமோன் அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தவீரர்களும், அவனுக்குப் பணிவிடைக்காரர்களும், பிரபுக்களும், படைத்தலைவர்களும், இரதவீரர்களும், குதிரைவீரர்களுமாக இருந்தார்கள்.
\s5
\v 23 ஐந்நூற்றைம்பதுபேர்கள் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிப்பதற்குத் தலைமையான விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்.
\s5
\v 24 பார்வோனின் மகள், தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன்னுடைய மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோவைக் கட்டினான்.
\s5
\v 25 சாலொமோன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டி முடித்தபின்பு, அவருக்குக் கட்டின பலிபீடத்தின்மேல் ஒரு வருடத்தில் மூன்றுமுறை சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரின் சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின்மேல் தூபம் காட்டிவந்தான்.
\p
\s5
\v 26 ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் செங்கடலின் கரையிலே ஏலோத்திற்கு அருகிலுள்ள எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தான்.
\v 27 அந்தக் கப்பல்களில், கடல் பயணத்தில் பழகின கப்பலாட்களாகிய தன்னுடைய வேலைக்காரர்களை ஈராம் சாலொமோனுடைய வேலைக்காரர்களோடு அனுப்பினான்.
\v 28 அவர்கள் ஓப்பீருக்குப்போய், அந்த இடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடம் கொண்டுவந்தார்கள்.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 சேபாவின் ராணி சாலொமோனைப் பார்க்க வருதல்
\p
\v 1 கர்த்தருடைய நாமத்தைக்குறித்து சாலொமோனுக்கு உண்டாயிருந்த புகழை சேபாவின் ராணி கேள்விப்பட்டபோது, அவள் விடுகதைகளால் அவனைச் சோதிப்பதற்காக,
\v 2 திரளான கூட்டத்தோடும், நறுமணப்பொருட்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலோமோனிடம் வந்தபோது, தன்னுடைய மனதில் இருந்த எல்லாவற்றையும்குறித்து அவனிடம் உரையாடினாள்.
\s5
\v 3 அப்பொழுது சாலொமோன் அவள் கேட்ட எல்லாவற்றிக்கும் பதிலளித்தான். அவளுக்கு பதிலளிக்க முடியாதபடி, ஒன்றுகூட ராஜாவிற்கு தெரியாமலிருக்கவில்லை.
\p
\v 4 சேபாவின் ராணி சாலொமோனுடைய எல்லா ஞானத்தையும், அவன் கட்டின அரண்மனையையும்,
\v 5 அவனுடைய பந்தியின் உணவு வகைகளையும், வேலைக்காரர்களின் வீடுகளையும், வேலைக்காரர்களின் பணியையும், அவனுடைய ஆடைகளையும், அவனுக்கு பானம் பரிமாறுகிறவர்களையும், அவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் வியப்படைந்து,
\s5
\v 6 ராஜாவை நோக்கி: உம்முடைய வார்த்தைகளையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என்னுடைய தேசத்தில் கேட்ட செய்தி மெய்யானது.
\v 7 நான் வந்து அதை என்னுடைய கண்களால் காணும்வரை அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதிகூட எனக்கு அறிவிக்கப்படவில்லை; நான் கேள்விப்பட்ட புகழ்ச்சியைவிட, உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாக இருக்கிறது.
\s5
\v 8 உம்முடைய மக்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய வேலைக்காரர்களும் பாக்கியவான்கள்.
\v 9 உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியம் கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக: கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் நேசிப்பதால், நியாயமும் நீதியும் செய்வதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள்.
\s5
\v 10 அவள் ராஜாவிற்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், திரளான நறுமணப்பொருட்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராணி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு நறுமணப்பொருட்கள் பிறகு ஒருபோதும் வரவில்லை.
\s5
\v 11 ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது.
\v 12 அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும் ராஜ அரண்மனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரர்களுக்குச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்ட வாசனை மரங்கள் பிறகு வந்ததுமில்லை, இந்த நாள்வரைக்கும் காணப்படவும் இல்லை.
\s5
\v 13 ராஜாவாகிய சாலொமோன் சேபாவின் ராணிக்கு சந்தோஷமாக வெகுமதிகள் கொடுத்ததுமட்டுமல்லாமல், அவள் விருப்பப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன்னுடைய கூட்டத்தோடு தன்னுடைய தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.
\s1 சாலொமோனின் பெருமை
\p
\s5
\v 14 சாலொமோனுக்கு வியாபாரிகளும், நறுமணபொருட்களின் மொத்த வியாபாரிகளும், அரபிதேசத்து எல்லா ராஜாக்களும், மாகாணங்களின் அதிபதிகளும் கொண்டு வந்த பொன்னைத்தவிர,
\v 15 ஒவ்வொரு வருடத்திலும் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாக இருந்தது.
\s5
\v 16 சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் இருநூறு பெரிய கேடகங்களைச் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் அறுநூறு சேக்கல் நிறைபொன் செலவானது.
\v 17 அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் மூன்று இராத்தல் நிறுவை பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
\s5
\v 18 ராஜா தந்தத்தினால் பெரிய ஒரு சிங்காசனத்தையும் செய்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.
\v 19 அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாக இருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைப்பிடிகள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைப்பிடிகளின் அருகே நின்றது.
\v 20 ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும், பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் செய்யப்படவில்லை.
\s5
\v 21 ராஜாவாகிய சாலோமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிப்பொருட்களெல்லாம் பசும்பொன்னுமாக இருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாக நினைக்கப்படவில்லை.
\v 22 ராஜாவிற்குக் கடலிலே ஈராமின் கப்பல்களோடு தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருடத்திற்கு ஒருமுறை பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
\s5
\v 23 பூமியின் எல்லா ராஜாக்களையும்விட, ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாக இருந்தான்.
\v 24 சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்காக, எல்லா தேசத்தை சேர்ந்தவர்களும் அவனுடைய முகத்தின் தரிசனத்தைத் தேடினார்கள்.
\v 25 ஒவ்வொரு வருடமும் அவரவர் தங்களுடைய காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், நறுமணப்பொருட்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
\s5
\v 26 சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரர்களையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்துநானூறு இரதங்கள் இருந்தது, பன்னிரெண்டாயிரம் குதிரைவீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.
\v 27 எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள் போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
\s5
\v 28 சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் இணைப்புக் கயிறுகளையும் எகிப்திலிருந்து வரவழைத்தான்; ராஜாவின் வியாபாரிகள் அவைகளை ஒப்பந்த விலைக்கு வாங்கினார்கள்.
\v 29 எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை அறுநூறு வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை நூற்றைம்பது வெள்ளிக் காசுமாக இருந்தது; இந்தமுறையிலே ஏத்தியர்களின் ராஜாக்கள் எல்லோருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும், அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டது.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\s1 சாலொமோனின் மனைவிகள்
\p
\v 1 ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் மகளை நேசித்ததுமட்டுமல்லாமல், மோவாபியர்களும், அம்மோனியர்களும், ஏதோமியர்களும், சீதோனியர்களும், ஏத்தியர்களுமாகிய அந்நியர்களான அநேக பெண்கள்மேலும் ஆசைவைத்தான்.
\v 2 கர்த்தர் இஸ்ரவேல் மக்களை நோக்கி: நீங்கள் அவர்களுக்குள்ளும் அவர்கள் உங்களுக்குள்ளும் நுழையக்கூடாது; அவர்கள் நிச்சயமாகத் தங்கள் தெய்வங்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைத் திருப்புவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாக இருந்தான்.
\s5
\v 3 அவனுக்கு ராஜ பரம்பரையுள்ள எழுநூறு மனைவிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய பெண்கள் அவனுடைய இருதயத்தைத் திரும்பச்செய்தார்கள்.
\v 4 சாலொமோனுக்கு வயதானபோது, அவனுடைய மனைவிகள் அவனுடைய இருதயத்தை அந்நிய தெய்வங்களைப் பின்பற்றும்படி திருப்பிவிட்டார்கள்; அதினால் அவனுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயம் கர்த்தரிடத்தில் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டதைப்போல, சாலொமோனின் இருதயம் தன்னுடைய தேவனாகிய கர்த்தரோடு முழுமையாக அர்ப்பணிக்கப்படவில்லை.
\s5
\v 5 சாலொமோன் சீதோனியர்களின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியர்களின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான்.
\v 6 சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாகப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவைகளைச் செய்தான்.
\s5
\v 7 அப்பொழுது சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியர்களின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் மக்களின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான்.
\v 8 இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நியர்களான தன்னுடைய மனைவிகள் எல்லோருக்காகவும் செய்தான்.
\p
\s5
\v 9 ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டு முறை தரிசனமாகி, அந்நிய தெய்வங்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரைவிட்டுத் தன்னுடைய இருதயத்தைத் திருப்பி,
\v 10 அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமல்போனதால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.
\s5
\v 11 ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என்னுடைய உடன்படிக்கையையும் என்னுடைய கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமல்போய் இந்தக் காரியத்தைச் செய்ததால், ராஜ்ஜியபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன்னுடைய வேலைக்காரனுக்குக் கொடுப்பேன்.
\v 12 ஆகிலும் உன்னுடைய தகப்பனாகிய தாவீதிற்காக, நான் அதை உன்னுடைய நாட்களிலே செய்வதில்லை; உன்னுடைய மகனுடைய கையிலிருந்து அதைப் பிடுங்குவேன்.
\v 13 ஆனாலும் ராஜ்ஜியம் முழுவதையும் நான் பிடுங்காமல், என்னுடைய ஊழியக்காரனாகிய தாவீதிற்காகவும், நான் தெரிந்துகொண்ட எருசலேமிற்காகவும், ஒரு கோத்திரத்தை நான் உன்னுடைய மகனுக்குக் கொடுப்பேன் என்றார்.
\s1 சாலொமோனின் எதிரிகள்
\p
\s5
\v 14 கர்த்தர் ஏதோமியனான ஆதாத் என்னும் ஒரு எதிரியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜ குடும்பத்தைச்சேர்ந்தவன்.
\v 15 தாவீது ஏதோமில் இருக்கும்போது படைத்தலைவனாகிய யோவாப் ஏதோமிலுள்ள ஆண்மக்களையெல்லாம் கொன்று, இறந்தவர்களை அடக்கம்செய்யப் போனான்.
\v 16 அவர்களையெல்லாம் கொன்றுபோடும்வரை, தானும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அங்கே ஆறுமாதங்கள் இருக்கும்போது,
\v 17 ஆதாதும் அவனோடு அவனுடைய தகப்பனுடைய வேலைக்காரர்கள் சில ஏதோமியர்களும் எகிப்திற்கு ஓடிப்போனார்கள்; ஆதாத் அப்பொழுது ஒரு சிறுபிள்ளையாக இருந்தான்.
\s5
\v 18 அவர்கள் மீதியானிலிருந்து எழுந்து, பாரானுக்குச் சென்று, பாரானிலே சில மனிதர்களை எகிப்திற்குக் கூட்டிக்கொண்டு, பார்வோன் என்னும் எகிப்தின் ராஜாவிடத்திற்குப் போனார்கள்; அவன் இவனுக்கு ஒரு வீடு கொடுத்து, இவனுக்கு உணவுக்கு ஏற்பாடுசெய்து, நிலத்தையும் கொடுத்தான்.
\v 19 ஆதாதுக்குப் பார்வோனின் கண்களில் மிகுந்த தயவு கிடைத்ததால், அவனுடைய ராணியாகிய தாப்பெனேஸ் என்னும் தன்னுடைய மனைவியின் சகோதரியை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
\s5
\v 20 தாப்பெனேசின் சகோதரியாகிய இவள் அவனுக்குக் கேனுபாத் என்னும் ஒரு மகனைப் பெற்றாள்; அவனைத் தாப்பெனேஸ் பார்வோனின் வீட்டிலே வளர்த்தாள்; அப்படியே கேனுபாத் பார்வோனின் வீட்டில் அவனுடைய மகன்களுடன் இருந்தான்.
\v 21 தாவீது தன்னுடைய முன்னோர்களோடு மரணமடைந்தான் என்றும், படைத்தலைவனாகிய யோவாப் இறந்துபோனான் என்றும், எகிப்திலே ஆதாத் கேள்விப்பட்டபோது, ஆதாத் பார்வோனை நோக்கி: நான் என்னுடைய சொந்த நாட்டிற்குப்போக என்னை அனுப்பவேண்டும் என்றான்.
\v 22 அதற்குப் பார்வோன்: இதோ, நீ உன்னுடைய சொந்தநாட்டிற்குப்போக விரும்புவதற்கு, என்னிடத்தில் உனக்கு என்ன குறை இருக்கிறது என்றான்; அதற்கு அவன்: ஒரு குறையும் இல்லை; இருந்தாலும் என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.
\p
\s5
\v 23 எலியாதாவின் மகனாகிய ரேசோன் என்னும் வேறொரு எதிரியை தேவன் எழுப்பினார்; இவன் தன்னுடைய தலைவனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவைவிட்டு ஓடிப்போய்,
\v 24 தாவீது சோபாவில் உள்ளவர்களைக் கொன்றுபோடும்போது, அவன் தன்னோடு சில மனிதர்களைச் சேர்த்துக்கொண்டு, அந்தக் கூட்டத்திற்குத் தலைவனானான்; இவர்கள் தமஸ்குவுக்குப் போய், அங்கே குடியிருந்து, தமஸ்குவில் ஆட்சி செய்தார்கள்.
\v 25 ஆதாத் தீங்கு செய்ததுமல்லாமல், ரேசோன் சாலொமோனுடைய நாட்களெல்லாம் இஸ்ரவேலர்களுக்கு எதிரியாகி, சீரியாவின்மேல் ராஜாவாக இருந்து, இஸ்ரவேலைப் பகைத்தான்.
\s1 சாலோமோனுக்கு எதிராக யெரொபெயாம் கலகம் செய்தல்
\p
\s5
\v 26 சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனிதனாகிய நேபாத்தின் மகன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் அதிகாரியும் ராஜாவிற்கு எதிரியாக எழும்பினான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பெயருள்ள ஒரு விதவை.
\v 27 அவன் ராஜாவிற்கு எதிரியாக எழும்பிய காரணம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன்னுடைய தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுதுபார்த்தபோது,
\s5
\v 28 யெரொபெயாம் என்பவன் பலசாலியாக இருந்தான்; அவன் திறமையுள்ள வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தார்களின் காரியத்தையெல்லாம் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.
\v 29 அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிறபோது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதிய சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியில் தனியாக இருக்கும்போது,
\v 30 அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதிய சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு,
\s5
\v 31 யெரொபெயாமை நோக்கி: பத்துத்துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்ஜியபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.
\v 32 ஆனாலும் என்னுடைய ஊழியனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்திற்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்.
\v 33 அவர்கள் என்னைவிட்டு, சீதோனியர்களின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியர்களின் தேவனாகிய காமோசையும், அம்மோன் மக்களின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவனுடைய தகப்பனாகிய தாவீதைப்போல என்னுடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யவும், என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என்னுடைய வழிகளில் நடக்காமல்போனதால் அப்படிச் செய்வேன்.
\s5
\v 34 ஆனாலும் அரசாட்சி முழுவதையும் நான் அவனுடைய கையிலிருந்து எடுத்துப்போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என்னுடைய கற்பனைகளையும் என்னுடைய கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என்னுடைய ஊழியனாகிய தாவீதிற்காக, அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன்.
\v 35 ஆனாலும் ராஜ்ஜியபாரத்தை அவனுடைய மகனுடைய கையிலிருந்து எடுத்து, அதிலே பத்துக் கோத்திரங்களை உனக்குத் தருவேன்.
\v 36 என்னுடைய நாமம் வெளிப்படும்படி, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே எனக்கு முன்பாக என்னுடைய ஊழியனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கும்படி, அவனுடைய மகனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்.
\s5
\v 37 நீ உன்னுடைய மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்.
\v 38 நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என்னுடைய வழிகளில் நடந்து, என்னுடைய ஊழியனாகிய தாவீது செய்ததுபோல, என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய கற்பனைகளையும் கைக்கொள்ளும்படி என்னுடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்தால், நான் உன்னோடு இருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலர்களை உனக்குத் தருவேன்.
\v 39 இப்படி நான் இந்தக் காரியத்திற்காக தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; இருந்தாலும் எல்லா நாளும் அப்படி இருக்காது என்று சொன்னான்.
\s5
\v 40 அதற்காக சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல முயற்சி செய்தான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்கு சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடம் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையும்வரை எகிப்தில் இருந்தான்.
\s1 சாலொமோனின் மரணம்
\p
\s5
\v 41 சாலொமோனின் மற்றக் காரியங்களும், அவன் செய்த அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய வரலாற்றுப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
\v 42 சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலர்களையெல்லாம் அரசாட்சி செய்த நாட்கள் நாற்பது வருடங்கள்.
\v 43 சாலொமோன் தன்னுடைய முன்னோர்களோடு மரணமடைந்து, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ரெகொபெயாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\s1 யெரொபெயாமுக்கு எதிராக இஸ்ரவேலர்கள்கலகம் செய்தல்
\p
\v 1 ரெகொபெயாமை ராஜாவாக்க, இஸ்ரவேலர்கள் எல்லோரும் சீகேமுக்கு வந்ததால், அவனும் சீகேமுக்குப் போனான்.
\v 2 ராஜாவாகிய சாலொமோனைவிட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கும்போது இதைக் கேள்விப்பட்டான்.
\s5
\v 3 அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைத்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபையார்கள் அனைவரும் வந்து, ரெகொபெயாமை நோக்கி:
\v 4 உம்முடைய தகப்பன் பாரமான சுமையை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்திய கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான சுமையையும் இலகுவாக்கும்; அப்பொழுது உமக்கு வேலை செய்வோம் என்றார்கள்.
\v 5 அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்று நாட்களுக்குப் பின்பு என்னிடம் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள்.
\s5
\v 6 அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன்னுடைய தகப்பனாகிய சாலொமோன் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு முன்பாக நின்ற முதியவர்களோடு ஆலோசனைசெய்து, இந்த மக்களுக்கு பதில் சொல்ல, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
\v 7 அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த மக்களுக்கு வேலைக்காரனாகி, அவர்களைப் பணிந்து, அவர்களுடைய சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எப்போதும் அவர்கள் உமக்கு வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்றார்கள்.
\s5
\v 8 முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்து தனக்கு முன்னால் நிற்கிற வாலிபர்களோடு ஆலோசனைசெய்து,
\v 9 அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த சுமையை இலகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு பதில் சொல்ல, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
\s5
\v 10 அப்பொழுது அவனோடு வளர்ந்த வாலிபர்கள் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்களுடைய சுமையைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடம் சொன்ன இந்த மக்களுக்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என்னுடைய சுண்டுவிரல் என்னுடைய தகப்பனுடைய இடுப்பைவிட பருமனாக இருக்கும்.
\v 11 இப்போதும் என்னுடைய தகப்பன் பாரமான சுமையை உங்கள்மேல் வைத்தார், நான் உங்களுடைய சுமையை அதிக பாரமாக்குவேன்; என்னுடைய தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடு சொல்லவேண்டும் என்றார்கள்.
\s5
\v 12 மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் எல்லா மக்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடம் வந்தார்கள்.
\v 13 ராஜா முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபர்களுடைய ஆலோசனையின்படி அவர்களோடு பேசி:
\v 14 என்னுடைய தகப்பன் உங்களுடைய சுமையைப் பாரமாக்கினார், நான் உங்களுடைய சுமையை அதிக பாரமாக்குவேன்; என்னுடைய தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று மக்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.
\s5
\v 15 ராஜா, மக்கள் சொன்னதைக் கேட்காமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது.
\s5
\v 16 ராஜா தாங்கள் சொன்னவைகளைக் கேட்காததை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது, மக்கள் ராஜாவிற்கு மறுமொழியாக: தாவீதோடு எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் மகனிடம் எங்களுக்குச் சுதந்திரம் இல்லை; இஸ்ரவேலே, உன்னுடைய கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன்னுடைய சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
\v 17 ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் மக்களுக்கு ரெகொபெயாம் ராஜாவாக இருந்தான்.
\s5
\v 18 பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் கட்டாய வேலைக்காரர்களின் பொறுப்பாளனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் வேகமாக இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான்.
\v 19 அப்படியே இந்தநாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர்கள் தாவீதின் சந்ததிக்கு எதிராக கலகம்செய்துப் பிரிந்து போயிருக்கிறார்கள்.
\s5
\v 20 யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டபோது, அவனை சபையினிடம் அழைத்தனுப்பி, அவனை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதா கோத்திரத்தைத் தவிர வேறொருவரும் தாவீதின் சந்ததியைப் பின்பற்றவில்லை.
\p
\s5
\v 21 ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேல் சந்ததியோடு யுத்தம்செய்யவும், ராஜ்ஜியத்தை சாலொமோனின் மகனாகிய தன்னிடம் திருப்பிக்கொள்ளவும், யூதா வீட்டார்கள் பென்யமீன் கோத்திரத்தார்கள் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர்கள் ஒருலட்சத்து எண்பதாயிரம் பேரைக் கூட்டினான்.
\s5
\v 22 தேவனுடைய மனிதனாகிய சேமாயாவுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாகி, அவர் சொன்னது:
\v 23 நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் மகனையும் யூதாவின் வீட்டார்கள் அனைவரையும், பென்யமீனர்களையும், மற்ற மக்களையும் நோக்கி:
\v 24 நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் மக்களான உங்கள் சகோதரர்களோடு யுத்தம்செய்யாமலும், அவரவர் தங்களுடைய வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் சொல்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள்: கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தருடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள்.
\s1 தான் மற்றும் பெத்தேலில் பொற்கன்றுக்குட்டிகள்
\p
\s5
\v 25 யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே குடியிருந்து, அங்கிருந்து போய் பெனூவேலைக் கட்டினான்.
\v 26 யெரொபெயாம்: இப்போது அரசாட்சி தாவீது குடும்பத்தாரின் பக்கமாகத் திரும்பும்.
\v 27 இந்த மக்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த மக்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்களுடைய எஜமானின் பக்கமாகத் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பக்கமாகப் போய்விடுவார்கள் என்று தன்னுடைய மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்.
\s5
\v 28 ஆகையால் ராஜா யோசனைசெய்து, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, மக்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போவது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலர்களே, இதோ, இவைகளே உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த உங்கள் தெய்வங்கள் என்று சொல்லி,
\v 29 ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் வைத்தான்.
\v 30 இந்தக் காரியம் பாவமாக மாறினது; மக்கள் இந்த கன்றுக்குட்டிக்காகத் தாண்வரை போவார்கள்.
\s5
\v 31 அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் மகன்களாக இல்லாத மற்ற தாழ்ந்த மக்களை ஆசாரியர்களாக ஆக்கினான்.
\v 32 யூதாவில் கொண்டாடப்படும் பண்டிகையைப்போலவே எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டாக்கின மேடைகளில் ஆசாரியர்களைப் பெத்தேலிலே நியமித்து,
\s5
\v 33 தன்னுடைய மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் மக்களுக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டினான்.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதன்
\p
\v 1 யெரொபெயாம் தூபம் காட்ட பலிபீடத்தின் அருகில் நிற்கும்போது, இதோ, தேவனுடைய மனிதன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,
\v 2 அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பெயருள்ள ஒரு மகன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனிதர்களின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் சொல்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;
\v 3 அன்றையதினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்த பலிபீடம் வெடித்து, அதின்மேல் உள்ள சாம்பல் கொட்டப்பட்டுப்போகும்; கர்த்தர் சொன்னதற்கு இதுவே அடையாளம் என்றான்.
\s5
\v 4 பெத்தேலில் இருக்கிற அந்த பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனிதன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன்னுடைய கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாக நீட்டின கை தன்னிடமாக மடக்கமுடியாதபடி மரத்துப்போனது.
\v 5 தேவனுடைய மனிதன் கர்த்தருடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டப்பட்டுப்போனது.
\s5
\v 6 அப்பொழுது ராஜா, தேவனுடைய மனிதனுக்கு மறுமொழியாக: நீ உன்னுடைய தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என்னுடைய கை முன்போல இருக்கும்படி எனக்காக விண்ணப்பம் செய்யவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனிதன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம்செய்தான், ராஜாவின் கை முன்னே இருந்தபடியே சரியானது.
\v 7 அப்பொழுது ராஜா தேவனுடைய மனிதனை நோக்கி: நீ என்னோடு வீட்டிற்கு வந்து இளைப்பாறு; உனக்கு பரிசு தருவேன் என்றான்.
\s5
\v 8 தேவனுடைய மனிதன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதியைக் கொடுத்தாலும், நான் உம்மோடு வருவதும் இல்லை, இந்த இடத்தில் அப்பம் சாப்பிடுவதும் இல்லை, தண்ணீர் குடிப்பதும் இல்லை.
\v 9 ஏனென்றால் நீ அப்பம் சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும், போனவழியாகத் திரும்பாலும் இரு என்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி,
\v 10 அவன் பெத்தேலுக்கு வந்த வழியாகத் திரும்பாமல், வேறு வழியாகப் போய்விட்டான்.
\p
\s5
\v 11 வயது முதிர்ந்த ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவனுடைய மகன்கள் வந்து தேவனுடைய மனிதன் அன்றையதினம் பெத்தேலிலே செய்த எல்லா செய்கைகளையும், அவன் ராஜாவோடு சொன்ன வார்த்தைகளையும் தங்களுடைய தகப்பனுக்கு அறிவித்தார்கள்.
\v 12 அப்பொழுது அவர்களுடைய தகப்பன்: அவன் எந்த வழியாகப் போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதன் போனவழி எதுவென்று அவனுடைய மகன்கள் பார்த்திருந்தபடியால்,
\v 13 அவன் தன்னுடைய மகன்களிடம்: கழுதையின்மேல் சேணம் வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம் வைத்துக் கொடுத்தபின்பு, அவன் அதின்மேல் ஏறி,
\s5
\v 14 தேவனுடைய மனிதனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான்.
\v 15 அப்பொழுது அவனை நோக்கி: என்னோடு வீட்டுக்கு வந்து அப்பம் சாப்பிடும் என்றான்.
\v 16 அதற்கு அவன்: நான் உம்மோடு திரும்பவும், உம்மோடு உள்ளே வரவுமாட்டேன்; இந்த இடத்திலே உம்மோடு நான் அப்பம் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்.
\v 17 ஏனென்றால் நீ அப்பம் சாப்பிடாமலும், அங்கே தண்ணீர் குடிக்காமலும், நீ போன வழியாகத் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான்.
\s5
\v 18 அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் சாப்பிட்டுத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன்னுடைய வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடு சொன்னான் என்று அவனிடம் பொய் சொன்னான்.
\v 19 அப்பொழுது அவன் இவனோடு திரும்பிப் போய், இவன் வீட்டிலே அப்பம் சாப்பிட்டுத் தண்ணீர் குடித்தான்.
\s5
\v 20 அவர்கள் பந்தியில் உட்கார்ந்திருக்கிறபோது, அவனைத் திருப்பிக் கொண்டுவந்த தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானதால்,
\v 21 அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன்னுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வார்த்தையை மீறி,
\v 22 அப்பம் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின இடத்திற்கு நீ திரும்பிப் போய், அப்பம் சாப்பிட்டுத் தண்ணீர் குடித்ததால், உன்னுடைய சடலம் உன்னுடைய பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
\s5
\v 23 அவன் சாப்பிட்டுக் குடித்து முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக் கொண்டுவந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம் வைத்துக்கொடுத்தான்.
\v 24 அவன் போனபிறகு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவனுடைய சடலம் வழியில் கிடந்தது; கழுதை அதின் அருகில் நின்றது; சிங்கமும் சடலத்தின் அருகில் நின்றது.
\v 25 அந்த வழியே கடந்துவருகிற மனிதர்கள், வழியிலே கிடந்த சடலத்தையும், சடலத்தின் அருகில் நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள்.
\s5
\v 26 அவனை வழியிலிருந்து திரும்பச்செய்த தீர்க்கதரிசி அதைக் கேட்டபோது, அவன் கர்த்தருடைய வாக்கை மீறிய தேவனுடைய மனிதன் தான், கர்த்தர் அவனுக்குச் சொன்ன வார்த்தையின்படியே, கர்த்தர் அவனை ஒரு சிங்கத்திற்கு ஒப்புக்கொடுத்தார்; அது அவனைத் தாக்கிக் கொன்றுபோட்டது என்று சொல்லி,
\v 27 தன் மகன்களை நோக்கி: எனக்குக் கழுதையின்மேல் சேணம் வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் சேணம் வைத்துக் கொடுத்தார்கள்.
\v 28 அப்பொழுது அவன் போய், வழியிலே கிடக்கிற அவனுடைய சடலத்தையும், சடலத்தின் அருகில் கழுதையும் சிங்கமும் நிற்பதையும் கண்டான்; அந்தச் சிங்கம் சடலத்தை சாப்பிடவும் இல்லை, கழுதையை தாக்கவும் இல்லை.
\s5
\v 29 அப்பொழுது வயது முதிர்ந்த அந்தத் தீர்க்கதரிசி தேவனுடைய மனிதனின் சடலத்தை எடுத்து, அதைக் கழுதையின்மேல் வைத்து, அதற்காகத் துக்கம் கொண்டாடவும் அதை அடக்கம் செய்யவும், அதைத் தன்னுடைய பட்டணத்திற்குக் கொண்டுவந்து,
\v 30 அவனுடைய சடலத்தைத் தன்னுடைய கல்லறையில் வைத்தான். அவனுக்காக: ஐயோ, என்னுடைய சகோதரனே என்று புலம்பி, துக்கம்கொண்டாடினார்கள்.
\s5
\v 31 அவனை அடக்கம்செய்த பின்பு, அவன் தன்னுடைய மகன்களை நோக்கி: நான் மரிக்கும்போது, தேவனுடைய மனிதன் அடக்கம்செய்யப்பட்ட கல்லறையிலே என்னையும் நீங்கள் அடக்கம்செய்து, அவனுடைய எலும்புகளின் அருகில் என்னுடைய எலும்புகளையும் வையுங்கள்.
\v 32 அவன் பெத்தேலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் பட்டணங்களில் இருக்கிற மேடைகளாகிய எல்லாக் கோவில்களுக்கும் விரோதமாகக் கூறிய கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாக நிறைவேறும் என்றான்.
\p
\s5
\v 33 இதற்குப்பின்பு, யெரொபெயாம் தன்னுடைய பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல், மறுபடியும் மக்களில் தாழ்ந்தவர்களை மேடைகளின் ஆசாரியர்களாக்கினான்; எவன்மேல் அவனுக்கு விருப்பம் இருந்ததோ அவனைப் பிரதிஷ்டை செய்தான்; அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியர்களானார்கள்.
\v 34 யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அவர்களை நீக்கி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமானது.
\s5
\c 14
\cl அத்தியாயம்– 14
\s1 யெரொபெயாமுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்தல்
\p
\v 1 அக்காலத்திலே யெரொபெயாமின் மகனாகிய அபியா வியாதியில் படுத்தான்.
\v 2 அப்பொழுது யெரொபெயாம் தன்னுடைய மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடி வேஷம் மாறி சீலோவுக்குப் போ; இந்த மக்களின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடு சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.
\v 3 நீ உன்னுடைய கையிலே பத்து அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு கலசம் தேனையும் எடுத்துக்கொண்டு அவனிடம் போ; பிள்ளைக்கு நடக்கப்போகிறது என்னவென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான்.
\s5
\v 4 யெரொபெயாமின் மனைவி அப்படியே செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் நுழைந்தாள்; அகியாவோ முதிர் வயதானதால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கமுடியாமல் இருந்தான்.
\v 5 கர்த்தர் அகியாவினிடம்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாக இருக்கிற தன்னுடைய மகனுக்காக உன்னிடம் ஒரு ஆலோசனை கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்னபடியாகச் சொல்லவேண்டும்; அவள் உள்ளே நுழைகிறபோது, தன்னை வேறு பெண்ணாகக் காட்டுவாள் என்றார்.
\s5
\v 6 எனவே, வாசற்படிக்குள் நுழையும் அவளுடைய நடையின் சத்தத்தை அகியா கேட்டவுடனே, அவன்: யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; உன்னை வேறு பெண்ணாக ஏன் காட்டுகிறாய்? துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன்.
\v 7 நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; மக்களிடத்திலிருந்து உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என்னுடைய மக்களின்மேல் அதிபதியாக வைத்தேன்.
\v 8 நான் ராஜ்ஜியபாரத்தை தாவீது வீட்டாரினுடைய கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, என்னுடைய பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன்னுடைய முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என்னுடைய ஊழியனாகிய தாவீதைப்போல நீ இல்லாமல்,
\s5
\v 9 உனக்கு முன்னே இருந்த எல்லோரையும்விட பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தெய்வங்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் ஏற்படுத்தி, என்னை உனக்குப் பின்னே தள்ளிவிட்டாய்.
\v 10 ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் தீங்கை வரச்செய்து, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் கூட இல்லாதபடி, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் அழித்து, குப்பை கழித்துப்போடப்படுவதுபோல யெரொபெயாமுக்கு பின்வருபவர்களை அவர்கள் முழுவதும் அழியும்வரை கழித்துப்போடுவேன் என்றார்.
\s5
\v 11 யெரொபெயாமின் குடும்பத்தார்களில் பட்டணத்தில் சாகிறவனை நாய்கள் சாப்பிடும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் சாப்பிடும்; கர்த்தர் இதை உரைத்தார்.
\v 12 ஆகையால் நீ எழுந்து, உன்னுடைய வீட்டுக்குப்போ, உன்னுடைய கால்கள் பட்டணத்திற்குள் நுழையும்போது பிள்ளை செத்துப்போவான்.
\v 13 அவனுக்காக இஸ்ரவேலர்கள் எல்லோரும் துக்கம் கொண்டாடி அவனை அடக்கம்செய்வார்கள்; யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடம் நல்ல காரியம் காணப்பட்டதால், யெரொபெயாமின் வீட்டாரில் அவன் ஒருவனே கல்லறைக்குப்போவான்.
\s5
\v 14 ஆனாலும் கர்த்தர் தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பச்செய்வார்; அவன் அந்த நாளிலே யெரொபெயாமின் வீட்டாரை அழிப்பான்; இப்போதே இது நடக்கும்.
\v 15 தண்ணீரில் நாணல் அசைகிறதுபோல, கர்த்தர் இஸ்ரவேலை முறித்து அசையச்செய்து, அவர்களுடைய முன்னோர்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்ரவேலை வேரோடு பிடுங்கி, அவர்கள் தங்களுக்கு தோப்பு விக்கிரகங்களை வைத்து, கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கியதால், அவர்களை நதிக்கு மறுபுறம் சிதறடித்து,
\v 16 யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான பாவத்தினால் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான்.
\s5
\v 17 அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வரும்போது பிள்ளை செத்துப்போனான்.
\v 18 கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்செய்து, இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்காகத் துக்கம் அனுசரித்தார்கள்.
\p
\s5
\v 19 யெரொபெயாம் யுத்தம்செய்ததும் ஆட்சி செய்ததுமான அவனுடைய மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
\v 20 யெரொபெயாம் இருபத்திரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான்; அவன் இறந்து தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டப்பிறகு, அவனுடைய மகனாகிய நாதாப் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s1 யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம்
\p
\s5
\v 21 சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ஆட்சிசெய்தான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாக இருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் வெளிப்படும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருடங்கள் ஆட்சிசெய்தான்; அம்மோனிய பெண்ணான அவனுடைய தாயின் பெயர் நாமாள்.
\v 22 யூதா மக்கள் கர்த்தரின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தாங்கள் செய்து வருகிற தங்களுடைய பாவங்களினால் தங்களுடைய பிதாக்கள் செய்த எல்லாவற்றையும்விட அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.
\s5
\v 23 அவர்களும் உயர்ந்த எல்லா மேட்டின் மேலும், பச்சையான எல்லா மரத்தின் கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்புவிக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.
\v 24 தேசத்திலே ஆண் விபசாரக்காரர்களும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட தேசங்களுடைய அருவருப்புகளின்படியெல்லாம் செய்தார்கள்.
\s5
\v 25 ரெகொபெயாம் அரசாட்சிசெய்யும் ஐந்தாம் வருடத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு எதிராக வந்து,
\v 26 கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்த பொன் கேடகங்கள் ஆகிய எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
\s5
\v 27 அவைகளுக்கு பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கல கேடகங்களைச் செய்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற காவற்காரர்களுடைய தளபதிகளின் கைகளில் ஒப்புவித்தான்.
\v 28 ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையும்போது, அரண்மனைக் காவலர்கள் அவைகளைப் பிடித்துக்கொண்டுபோய், திரும்பத் தங்களுடைய அறையிலே வைப்பார்கள்.
\s5
\v 29 ரெகொபெயாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
\v 30 ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
\v 31 ரெகொபெயாம் இறந்து தன்னுடைய முன்னோர்களோடு தாவீதின் நகரத்தில் தன்னுடைய பிதாக்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அம்மோனிய பெண்ணான அவனுடைய தாய்க்கு நாமாள் என்று பெயர்; அவனுடைய மகனாகிய அபியாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\c 15
\cl அத்தியாயம்– 15
\s1 யூதாவின் ராஜாவாகிய அபியாம்
\p
\v 1 நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருடத்திலே அபியாம் யூதா தேசத்திற்கு ராஜாவாகி,
\v 2 மூன்று வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.
\v 3 தன்னுடைய தகப்பன் தன் காலத்திற்குமுன்பு செய்த எல்லாப் பாவங்களிலும் தானும் நடந்தான்; அவனுடைய இருதயம் அவனுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன்னுடைய தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாக இருக்கவில்லை.
\s5
\v 4 ஆனாலும் தாவீதுக்காக அவனுடைய தேவனாகிய கர்த்தர், அவனுக்குப் பிறகு அவனுடைய மகனை எழும்பச்செய்வதாலும், எருசலேமை நிலைநிறுத்துவதாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார்.
\v 5 தாவீது ஏத்தியனாகிய உரியாவின் காரியம் ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடு இருந்த நாட்களெல்லாம் ஒன்றையும் விட்டுவிலகாமல், அவருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.
\v 6 ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
\s5
\v 7 அபியாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளெல்லாம் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
\v 8 அபியாம் இறந்தபின்பு அவனுடைய முன்னோர்களோடு, அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய மகனாகிய ஆசா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s1 யூதாவின் ராஜாவாகிய ஆசா
\p
\s5
\v 9 இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபதாம் வருடத்திலே ஆசா யூதா தேசத்திற்கு ராஜாவாகி,
\v 10 நாற்பத்தொரு வருடங்கள் எருசலேமில் அரசாட்சி செய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.
\v 11 ஆசா தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
\s5
\v 12 அவன் ஆண் விபசாரக்காரர்களை தேசத்திலிருந்து அகற்றி, தன்னுடைய முன்னோர்கள் ஏற்படுத்தின அருவருப்பான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,
\v 13 தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை ஏற்படுத்தின தன்னுடைய தாயாகிய மாகாளையும் ராணியாக இல்லாதபடி விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா அழித்து, கீதரோன் ஆற்றின் அருகில் சுட்டெரித்துப்போட்டான்.
\s5
\v 14 மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடு இருந்த நாட்களெல்லாம் அவனுடைய இருதயம் கர்த்தரோடு இணைந்திருந்தது.
\v 15 தன்னுடைய தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்தான்.
\s5
\v 16 ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
\v 17 ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடம் போக்குவரத்தாக இல்லாதபடி, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்.
\s5
\v 18 அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன்னுடைய வேலைக்காரர்கள் மூலம் தமஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் மகன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவிற்குக் கொடுத்தனுப்பி:
\v 19 எனக்கும் உமக்கும் என்னுடைய தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாக வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படி, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 20 பெனாதாத், ராஜாவாகிய ஆசாவின் சொல்லைக்கேட்டு, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும் கின்னரோத் அனைத்தையும் நப்தலியின் முழுத்தேசத்தையும் தோற்கடித்தான்.
\v 21 பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதைவிட்டு திர்சாவில் இருந்துவிட்டான்.
\v 22 அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லோரும் போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர அறிவிப்புகொடுத்து; அவைகளால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
\s5
\v 23 ஆசாவின் மற்ற எல்லா செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி வந்திருந்தது.
\v 24 ஆசா இறந்தபின்பு தன்னுடைய முன்னோர்களோடு, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோசபாத் அவனுடைய இடத்திலே ராஜாவானான்.
\s1 இஸ்ரவேலின் ராஜாவாகிய நாதாப்
\p
\s5
\v 25 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருடத்திலே யெரொபெயாமின் மகனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, இரண்டு வருடம் இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்தான்.
\v 26 அவன் கர்த்தருடைய பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தன்னுடைய தகப்பனுடைய வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
\s5
\v 27 இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் மகனான பாஷா, அவனுக்கு எதிராகக் சதிசெய்து, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தர்களுக்கு இருந்த கிபெத்தோனை முற்றுகை இட்டிருக்கும்போது, பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.
\v 28 பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருடத்திலே அவனைக் கொன்றுபோட்டபின்பு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\v 29 அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான பாவங்களினாலும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கின கோபத்தினாலும், கர்த்தர் சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே,
\v 30 அவன் ராஜாவானபின்பு அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை.
\s5
\v 31 நாதாபின் மற்ற செயல்பாடுகளும் அவன் செய்தவைகளும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
\v 32 ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
\p
\s5
\v 33 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருடத்திலே அகியாவின் மகனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நான்கு வருடங்கள் ஆண்டு,
\v 34 கர்த்தரின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
\s5
\c 16
\cl அத்தியாயம்– 16
\p
\v 1 பாஷாவுக்கு எதிராகக் கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் மகனாகிய யெகூவுக்கு உண்டானது, அவர்:
\v 2 நான் உன்னைத் குப்பையிலிருந்து உயர்த்தி, உன்னை என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாக வைத்திருக்கும்போது, நீ யெரொபெயாமின் வழியிலே நடந்து, என்னுடைய மக்களாகிய இஸ்ரவேல் தங்களுடைய பாவங்களால் எனக்குக் கோபமுண்டாக்கும்படி அவர்களைப் பாவம் செய்யச்செய்கிறபடியால்,
\s5
\v 3 இதோ, நான் பாஷாவுக்கு பின்பு வருபவர்களையும் அவனுடைய வீட்டாருக்கு பின்பு வருபவர்களையும் அழித்துப்போட்டு, உன்னுடைய வீட்டை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன்.
\v 4 பாஷாவின் சந்ததியிலே பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் சாப்பிடும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகள் சாப்பிடும் என்றார்.
\p
\s5
\v 5 பாஷாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்ததும், அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
\v 6 பாஷா இறந்து தன்னுடைய பிதாக்களோடு திர்சாவில் அடக்கம்செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஏலா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\v 7 பாஷா தன்னுடைய கைகளின் செய்கையால் கர்த்தருக்குக் கோபமுண்டாக்கி, அவருடைய பார்வைக்குச் செய்த எல்லாத் தீமையினால், அவன் யெரொபெயாமின் வீட்டாரை வெட்டிப்போட்டதால், இவர்களைப்போல் ஆவான் என்று அவனுக்கும், அவனுடைய வீட்டுக்கும் எதிராக ஆனானியின் மகனாகிய யெகூ என்னும் தீர்க்கதரிசியினால் கர்த்தருடைய வார்த்தை பின்னும் உண்டாயிற்று.
\s1 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலா
\p
\s5
\v 8 யூதாவின் ராஜாவான ஆசாவின் இருபத்தாறாம் வருடத்திலே பாஷாவின் மகனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருடங்கள் அரசாட்சி செய்தான்.
\v 9 இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவனுடைய வேலைக்காரன் அவனுக்கு விரோதமாக சதிசெய்து, அவன் திர்சாவிலே அந்த இடத்தின் அரண்மனைப்பொறுப்பாளன் அர்சாவின் வீட்டிலே குடிவெறியில் இருக்கும்போது,
\v 10 சிம்ரி உள்ளே புகுந்து, யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருடத்தில் அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\v 11 அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டார்களையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவனுடைய உறவினர்களையோ, நண்பர்களையோ, சுவரில் நீர்விடும் ஒரு நாயையோ, அவன் உயிரோடு வைக்கவில்லை.
\v 12 அப்படியே பாஷாவும், அவனுடைய மகனாகிய ஏலாவும், தங்கள் வீணான விக்கிரகங்களினாலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கிச் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான அவர்களுடைய எல்லாப் பாவங்களினால்,
\v 13 கர்த்தர் தீர்க்கதரிசியாகிய யெகூவினால் பாஷாவைக்குறித்துச் சொல்லியிருந்த அவருடைய வார்த்தையின்படியே, சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டான்.
\s5
\v 14 ஏலாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
\s1 இஸ்ரவேலின் ராஜாவாகிய சிம்ரி
\p
\s5
\v 15 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருடத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாட்கள் ராஜாவாக இருந்தான்; மக்கள் அப்பொழுது பெலிஸ்தர்களுக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராக முகாமிட்டிருந்தார்கள்.
\v 16 சிம்ரி சதிசெய்து, ராஜாவைக் கொன்றுபோட்டான் என்பதை அங்கே முகாமிட்டிருந்த மக்கள் கேட்டபோது, இஸ்ரவேலர்களெல்லாம் அந்த நாளிலே முகாமிலே படைத்தலைவனாகிய உம்ரியை இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கினார்கள்.
\v 17 அப்பொழுது உம்ரியும் அவனோடு இஸ்ரவேல் அனைத்தும் கிபெத்தோனிலிருந்து வந்து, திர்சாவை முற்றுகை போட்டார்கள்.
\s5
\v 18 பட்டணம் பிடிபட்டதை சிம்ரி கண்டபோது, அவன் ராஜாவின் வீடாகிய அரண்மனைக்குள் நுழைந்து, தான் இருக்கிற ராஜ அரண்மனையைத் தீயிட்டுகொளுத்தி, அதிலே செத்தான்.
\v 19 அவன் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும் அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்ததால், அப்படி நடந்தது.
\v 20 சிம்ரியின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த அவனுடைய சதியும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
\s1 இஸ்ரவேலின் ராஜாவாகிய உம்ரி
\p
\s5
\v 21 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் இரண்டு வகுப்பாகப் பிரிந்து, பாதி மக்கள் கீனாத்தின் மகனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி மக்கள் உம்ரியைப் பின்பற்றினார்கள்.
\v 22 ஆனாலும் கீனாத்தின் மகனாகிய திப்னியைப் பின்பற்றின மக்களைவிட, உம்ரியைப் பின்பற்றின மக்கள் பலப்பட்டார்கள்; திப்னி இறந்துபோனான்; உம்ரி அரசாட்சி செய்தான்.
\s5
\v 23 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருடத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருடங்கள் அரசாட்சிசெய்தான்; அவன் திர்சாவிலே ஆறு வருடங்கள் அரசாட்சி செய்து,
\v 24 பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாக இருந்த சேமேருடைய பெயரின்படியே சமாரியா என்னும் பெயரை வைத்தான்.
\s5
\v 25 உம்ரி கர்த்தரின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தனக்கு முன்னே இருந்த எல்லோரையும்விட கேடாக நடந்து,
\v 26 நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் எல்லா வழியிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குத் தங்களுடைய வீணான விக்கிரகங்களாலே கோபம் ஏற்படுத்தும்படியாக இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவங்களிலும் நடந்தான்.
\s5
\v 27 உம்ரி செய்த அவனுடைய மற்ற செயல்பாடுகளும், அவன் காண்பித்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
\v 28 உம்ரி இறந்து தன்னுடைய முன்னோர்களோடு, சமாரியாவிலே அடக்கம்செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஆகாப் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s1 ஆகாப் இஸ்ரவேலின் ராஜாவாகுதல்
\p
\s5
\v 29 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருடத்தில் உம்ரியின் மகனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் இருபத்திரண்டு வருடங்கள் அரசாட்சி செய்தான்.
\v 30 உம்ரியின் மகனாகிய ஆகாப், தனக்கு முன்னே இருந்த எல்லோரையும் விட கர்த்தரின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்தான்.
\s5
\v 31 நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்ததைப்போல அவன் சீதோனியர்களின் ராஜாவாகிய ஏத்பாகாலின் மகள் யேசபேலை திருமணம் செய்ததுமல்லாமல், அவன் போய் பாகாலையும் தொழுது அதைப் பணிந்துகொண்டு,
\v 32 தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தைக் கட்டினான்.
\v 33 ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படி தனக்கு முன்னே இருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைவிட அதிகமாகச் செய்துவந்தான்.
\s5
\v 34 அவனுடைய நாட்களிலே பெத்தேல் ஊரைச்சேர்ந்த ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் மகனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன்னுடைய இளைய மகனையும் சாகக்கொடுத்தான்.
\s5
\c 17
\cl அத்தியாயம்– 17
\s1 எலியா காகத்தினால் போஷிக்கப்படுதல்
\p
\v 1 கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என்னுடைய வார்த்தை இல்லாமல் இந்த வருடங்களிலே பனியும் மழையும் பெய்யாமல் இருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
\s5
\v 2 பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டானது, அவர்:
\v 3 நீ இந்த இடத்தைவிட்டுக் கிழக்குத்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராக இருக்கிற கேரீத் ஆற்றின் அருகில் ஒளிந்துக்கொள்.
\v 4 அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உனக்கு உணவளிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
\s5
\v 5 அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராக இருக்கிற கேரீத் ஆற்றின் அருகில் தங்கியிருந்தான்.
\v 6 காகங்கள் அவனுக்கு காலையில் அப்பமும் இறைச்சியும், மாலையில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
\v 7 தேசத்தில் மழை பெய்யாததால், சில நாட்களுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போனது.
\s1 சாரிபாத்திலுள்ள விதவை
\p
\s5
\v 8 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டானது, அவர்:
\v 9 நீ எழுந்து, சீதோனைச்சேர்ந்த சாரிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன் என்றார்.
\v 10 அப்படியே அவன் எழுந்து, சாரிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் வாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.
\s5
\v 11 கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன்னுடைய கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்.
\v 12 அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயையும் தவிர, என்னிடத்தில் ஒரு அப்பமும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என்னுடைய மகனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்த இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.
\v 13 அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன்னுடைய வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அப்பத்தைச் செய்து என்னிடம் கொண்டுவா; பின்பு உனக்கும் உன்னுடைய மகனுக்கும் செய்யலாம்.
\s5
\v 14 கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்வரையும் பானையில் இருந்த மாவு தீர்ந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
\v 15 அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவளுடைய வீட்டாரும் அநேகநாட்கள் சாப்பிட்டார்கள்.
\v 16 கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மாவு தீர்ந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.
\s5
\v 17 இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த பெண்ணின் மகன் வியாதிப்பட்டுப் படுத்தான்; அவனுடைய உயிர்போகும்வரை அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது.
\v 18 அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனிதனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னுடைய அக்கிரமத்தை நினைக்கச்செய்யவும், என்னுடைய மகனைச் சாகச்செய்யவுமா என்னிடம் வந்தீர் என்றாள்.
\s5
\v 19 அதற்கு அவன்: உன்னுடைய மகனை என்னிடத்தில் கொடு என்று சொல்லி, அவனை அவளுடைய மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன்னுடைய கட்டிலின்மேல் வைத்து:
\v 20 என்னுடைய தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடம்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகச்செய்ததால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு;
\v 21 அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுமுறை குப்புறவிழுந்து: என்னுடைய தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரச்செய்யும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்தான்.
\s5
\v 22 கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.
\v 23 அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவனுடைய தாயினிடம் கொடுத்து: பார் உன்னுடைய பிள்ளை உயிரோடு இருக்கிறான் என்று சொன்னான்.
\v 24 அப்பொழுது அந்தப்பெண் எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனிதன் என்றும், உம்முடைய வாயிலிருந்து வரும் கர்த்தருடைய வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.
\s5
\c 18
\cl அத்தியாயம்– 18
\s1 எலியாவும் ஒபதியாவும்
\p
\v 1 அநேகநாட்கள் சென்று, மூன்றாம் வருடமாகும்போது, கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.
\v 2 அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்; பஞ்சமோ சமாரியாவிலே கொடியதாக இருந்தது.
\s5
\v 3 ஆனபடியால் ஆகாப் அரண்மனைப் பொருப்பாளனாகிய ஒபதியாவை அழைத்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாக இருந்தான்.
\v 4 யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொல்லுகிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான்.
\s5
\v 5 ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் எல்லா மிருகஜீவன்களையும் சாகவிடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடு காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் கிடைக்குமா என்று பார் என்றான்.
\v 6 அப்படியே தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி, அதைப் பிரித்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாகவும், ஒபதியா வேறொரு வழியாகவும் போனார்கள்.
\s5
\v 7 ஒபதியா வழியில் போகும்போது, எலியா அவனுக்கு எதிராக வந்தான்; அவன் எலியாவை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என்னுடைய எஜமானாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு;
\v 8 அவன், நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன்னுடைய எஜமானுக்குச் சொல் என்றான்.
\s5
\v 9 அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படி, நீர் உமது அடியானை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன்.
\v 10 உம்மைத் தேடும்படி என்னுடைய எஜமான் மனிதர்களை அனுப்பாத தேசமும் ராஜ்ஜியமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்ஜியத்திலும் அந்த தேசத்திலும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கிக்கொண்டான்.
\v 11 இப்போதும் நீ போய், உன்னுடைய எஜமானுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே.
\s5
\v 12 நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்; அப்பொழுது நான் ஆகாபிடம் போய் அறிவித்தப் பின்பு, அவன் உம்மைக் பார்க்காவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே; உமது அடியானாகிய நான் சிறுவயது முதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன்.
\v 13 யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறுபேரை ஒவ்வொரு குகையிலே ஐம்பது ஐம்பதுபேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செயல் என்னுடைய எஜமானுக்கு அறிவிக்கப்படவில்லையோ?
\s5
\v 14 இப்போதும் என்னுடைய எஜமான் என்னைக் கொன்றுபோட, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான்.
\v 15 அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
\s1 கர்மேல் மலையில் எலியா
\p
\s5
\v 16 அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடன், ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்.
\v 17 ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவன் நீயல்லவா என்றான்.
\s5
\v 18 அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளைவிட்டு பாகால்களைப் பின்பற்றியதால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவர்கள்.
\v 19 இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்புவிக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடம் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.
\s5
\v 20 அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் மக்கள் எல்லோரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்.
\v 21 அப்பொழுது எலியா எல்லா மக்களுக்கும் அருகில் வந்து: நீங்கள் எதுவரைக்கும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வம் என்றால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வம் என்றால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், மக்கள் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
\s5
\v 22 அப்பொழுது எலியா மக்களை நோக்கி: கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீதியாக இருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர்.
\v 23 அவர்கள் இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடம் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதை துண்டுத் துண்டாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கட்டும்; நான் மற்றக் காளையையும் அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன்.
\v 24 நீங்கள் உங்களுடைய தெய்வத்தின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியால் பதில் சொல்லும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு மக்களெல்லோரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்.
\p
\s5
\v 25 அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகராக இருப்பதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம்செய்து, நெருப்புப்போடாமல் உங்கள் தெய்வத்தினுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.
\v 26 தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்செய்து: பாகாலே, எங்களுக்கு பதில் சொல்லும் என்று காலைதுவங்கி மத்தியானம்வரை பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் வரவில்லை, பதில் கொடுப்பவரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.
\s5
\v 27 மத்தியானவேளையில் எலியா அவர்களை கேலிசெய்து: உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்; அவன் தெய்வமாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது வேலையாக இருப்பான்; அல்லது பயணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக இருக்கும் என்றான்.
\v 28 அவர்கள் உரத்தசத்தமாகக் கூப்பிட்டு, தங்களுடைய வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியும்வரை கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.
\v 29 மத்தியானவேளை சென்றபின்பு, மாலைபலி செலுத்தும் நேரம்வரை கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, பதில் கொடுப்பவரும் இல்லை, கவனிப்பவர்களும் இல்லை.
\s5
\v 30 அப்பொழுது எலியா எல்லா மக்களையும் நோக்கி: என் அருகில் வாருங்கள் என்றான்; எல்லா மக்களும் அவன் அருகில் வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் பழுதுபார்த்து:
\v 31 உனக்கு இஸ்ரவேல் என்னும் பெயர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய மகன்களால் உண்டான கோத்திரங்களுடைய எண்ணிக்கைன்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,
\v 32 அந்தக் கற்களால் கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடம் இருக்கும்படி ஒரு வாய்க்காலை உண்டாக்கி,
\s5
\v 33 விறகுகளை அடுக்கி, ஒரு காளையைத் துண்டு துண்டாக துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான்.
\v 34 பிற்பாடு அவன்: நீங்கள் நான்கு குடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாவது முறையும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாவது முறையும் ஊற்றினார்கள்.
\v 35 அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான்.
\s5
\v 36 மாலைபலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படிச்செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கச்செய்யும்.
\v 37 கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்களுடைய இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த மக்கள் அறியும்படி, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்.
\s5
\v 38 அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் எரித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.
\v 39 மக்களெல்லோரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.
\v 40 அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடி அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.
\s5
\v 41 பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், சாப்பிட்டு குடியும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.
\v 42 ஆகாப் சாப்பிட்டு குடிக்கப்போனான்; பின்பு எலியா கர்மேல் மலையிலுள்ள சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன்னுடைய முகம் தன்னுடைய முழங்காலில் படும்படிக்குனிந்து,
\s5
\v 43 தன்னுடைய ஊழியக்காரனை நோக்கி: நீ போய் சமுத்திரத்தை நோக்கிப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுமுறை போய்ப் பார் என்றான்.
\v 44 ஏழாவது முறை இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனிதனுடைய உள்ளங்கை அளவுள்ள ஒரு சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடி இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான்.
\s5
\v 45 அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் இருண்டு பெருமழை உண்டானது; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.
\v 46 கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததால், அவன் தன்னுடைய அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வரும்வரை ஆகாபுக்கு முன்னே ஓடினான்.
\s5
\c 19
\cl அத்தியாயம்– 19
\s1 எலியா ஓரேபுக்கு ஓடிப்போதல்
\p
\v 1 எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகள் எல்லோரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.
\v 2 அப்பொழுது யேசபேல் எலியாவிடம் ஆள் அனுப்பி: அவர்களிலே ஒவ்வொருவனுடைய உயிருக்கும் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்த நேரத்தில் உன்னுடைய உயிருக்குச் செய்யாமற்போனால், தெய்வங்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச் சொன்னாள்.
\v 3 அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன்னுடைய உயிரைக் காப்பாற்ற யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன்னுடைய வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்.
\s5
\v 4 அவன் வனாந்திரத்தில் ஒருநாள் பயணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று சொல்லி: போதும் கர்த்தாவே, என்னுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என்னுடைய முன்னோர்களைவிட நல்லவன் இல்லை என்று சொல்லி,
\v 5 ஒரு சூரைச்செடியின்கீழேப் படுத்துத் தூங்கினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டி எழுப்பி: எழுந்து சாப்பிடு என்றான்.
\v 6 அவன் விழித்துப் பார்த்தபோது, இதோ, நெருப்பில் சுடப்பட்ட அப்பமும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவனுடைய தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், சாப்பிட்டுக் குடித்துத் திரும்பவும் படுத்துக்கொண்டான்.
\s5
\v 7 கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாவதுமுறையும் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்து சாப்பிடு; நீ போகவேண்டிய பயணம் வெகுதூரம் என்றான்.
\v 8 அப்பொழுது அவன் எழுந்து சாப்பிட்டுக் குடித்து, அந்த உணவின் பெலத்தினால் நாற்பது நாட்கள் இரவும் பகலும் ஓரேப் என்னும் தேவனுடைய மலைவரையும் நடந்துபோனான்.
\s1 கர்த்தர் எலியாவுக்குக் காட்சியளித்தல்
\p
\s5
\v 9 அங்கே அவன் ஒரு குகைக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்றார்.
\v 10 அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக மிகவும் பக்திவைராக்கியமாக இருந்தேன்; இஸ்ரவேல் மக்கள் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மட்டும் மீதியாக இருக்கிறேன்; என்னுடைய உயிரையும் எடுக்கத் தேடுகிறார்கள் என்றான்.
\s5
\v 11 அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாக மலையின்மேல் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் மலைகளைப் பிளக்கிறதும் பாறைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டானது; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின்பு பூமி அதிர்ச்சி உண்டானது; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை.
\v 12 பூமி அதிர்ச்சிக்குப்பின்பு அக்கினி உண்டானது; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின்பு அமைதியான மெல்லிய சத்தம் உண்டானது.
\s5
\v 13 அதை எலியா கேட்டபோது, தன்னுடைய சால்வையால் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, குகையின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்கிற சத்தம் அவனுக்கு உண்டானது.
\v 14 அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக மிகவும் பக்திவைராக்கியமாக இருந்தேன்; இஸ்ரவேல் மக்கள் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன் மட்டும் மீதியாக இருக்கிறேன்; என்னுடைய உயிரையும் எடுக்கத் தேடுகிறார்கள் என்றான்.
\s5
\v 15 அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாக வனாந்திரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து,
\v 16 பின்பு நிம்சியின் மகனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் மகனாகிய எலிசாவை உன்னுடைய இடத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்செய்.
\s5
\v 17 சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்.
\v 18 ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தம்செய்யாமலிருக்கிற வாய்களையும் உடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.
\s1 எலிசாவின் அழைப்பு
\p
\s5
\v 19 அப்படியே அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்களைபூட்டி உழுத சாப்பாத்தின் மகனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடம்வரை போய், அவன்மேல் தன்னுடைய சால்வையைப் போட்டான்.
\v 20 அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பின்னே ஓடி: நான் என்னுடைய தகப்பனையும் என்னுடைய தாயையும் முத்தம்செய்ய உத்தரவு கொடும், அதற்குப்பின்பு உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான்.
\s5
\v 21 அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரங்களால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து மக்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிறகு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்னேசென்று அவனுக்கு பணிவிடைசெய்தான்.
\s5
\c 20
\cl அத்தியாயம்– 20
\s1 பெனாதாத் சமாரியாவைத் தாக்குதல்
\p
\v 1 சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன்னுடைய படையையெல்லாம் கூட்டிக்கொண்டுபோய், சமாரியாவை முற்றுகையிட்டு அதின்மேல் யுத்தம்செய்தான்; அவனோடு முப்பத்திரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது.
\v 2 அவன் நகரத்திற்குள் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் தூதுவர்களை அனுப்பி:
\v 3 உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய பெண்களும் உன்னுடைய மகன்களுக்குள் சிறந்தவர்களாக இருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான்.
\s5
\v 4 இஸ்ரவேலின் ராஜா அதற்கு மறுமொழியாக: ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான்.
\v 5 அந்த தூதுவர்கள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய வெள்ளியையும், பொன்னையும், பெண்களையும், மகன்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே.
\v 6 ஆனாலும் நாளை இந்த நேரத்தில் என்னுடைய வேலைக்காரர்களை உன்னிடம் அனுப்புவேன்; அவர்கள் உன்னுடைய வீட்டையும் உன்னுடைய வேலைக்காரர்களின் வீடுகளையும் சோதித்து, உன்னுடைய கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டு போவார்கள் என்றார் என்று சொன்னார்கள்.
\s5
\v 7 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, தேசத்தின் மூப்பர்களையெல்லாம் அழைத்து: இவன் ஆபத்தைத் தேடுகிற விதத்தைக் கவனித்துப் பாருங்கள்; என்னுடைய பெண்களையும், என்னுடைய மகன்களையும், என்னுடைய வெள்ளியையும், என்னுடைய பொன்னையும் கேட்க, இவன் என்னிடம் ஆள் அனுப்பினபோது, நான் கொடுக்கமாட்டேன் என்று இவனுக்கு மறுக்கவில்லையே என்றான்.
\v 8 அப்பொழுது எல்லா மூப்பர்களும் எல்லா மக்களும் அவனைப் பார்த்து: நீர் அவனுடைய வார்த்தைகளைக் கேட்கவும், அவனுக்குச் சம்மதிக்கவும் வேண்டாம் என்றார்கள்.
\s5
\v 9 அதினால் அவன் பெனாதாத்தின் தூதுவர்களை நோக்கி: நீங்கள் ராஜாவாகிய என்னுடைய எஜமானுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், நீர் முதல்முறை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன்; இந்தக் காரியத்தையோ நான் செய்யக்கூடாது என்று சொல்லுங்கள் என்றான்; தூதுவர்கள் போய், இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள்.
\v 10 அப்பொழுது பெனாதாத் அவனிடம் ஆள் அனுப்பி: எனக்குப் பின்னே செல்லுகிற மக்கள் எல்லோரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாக இருந்தால், தெய்வங்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 11 அதற்கு இஸ்ரவேலின் ராஜா மறுமொழியாக; ஆயுதம் அணிந்திருக்கிறவன், ஆயுதம் பிடுங்கிப் போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டக்கூடாது என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றான்.
\v 12 பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கும்போது, இந்த வார்த்தையைக் கேட்டு, தன்னுடைய ஆட்களை நோக்கி: யுத்தம் செய்ய ஆயத்தம்செய்யுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் யுத்தம்செய்ய ஆயத்தம்செய்தார்கள்.
\s5
\v 13 அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் வந்து: அந்த ஏராளமான மக்கள்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
\v 14 யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்களைக்கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான்.
\v 15 அவன் மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்களை எண்ணிப்பார்த்தான், அவர்கள் இருநூற்று முப்பத்திரண்டுபேர்; அவர்களுக்குப்பின்பு, இஸ்ரவேல் மக்களாகிய எல்லா மக்களின் எண்ணிக்கையும் பார்த்து ஏழாயிரம்பேர் என்று கண்டான்.
\s5
\v 16 அவர்கள் மத்தியான வேளையிலே வெளியே புறப்பட்டார்கள்; பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த முப்பத்திரண்டு ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடிவெறி கொண்டிருந்தார்கள்.
\v 17 மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்கள் முதலில் புறப்படுகிறபோது, பெனாதாத் அனுப்பின மனிதர்கள்: சமாரியாவிலிருந்து மனிதர்கள் புறப்பட்டு வருகிறார்கள் என்று அவனுக்கு அறிவித்தார்கள்.
\s5
\v 18 அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடு பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடு பிடியுங்கள் என்றான்.
\v 19 மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்களான அவர்களும், அவர்கள் பின்னே வருகிற இராணுவமும், நகரத்திலிருந்து வெளியே வந்தபோது,
\s5
\v 20 அவர்கள் அவரவர் தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை வெட்டினார்கள்; சீரியர்கள் பயந்தோடிப் போனார்கள்; இஸ்ரவேலர்கள் அவர்களைத் துரத்தினார்கள்; சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத், குதிரையின்மேல் ஏறிச் சில குதிரை வீரர்களோடு தப்பியோடிப்போனான்.
\v 21 இஸ்ரவேலின் ராஜா புறப்பட்டு, குதிரைகளையும், இரதங்களையும் தாக்கி, சீரியர்களில் பெரிய அழிவு உண்டாக வெட்டினான்.
\s5
\v 22 பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடம் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யவேண்டியது என்னவென்று கவனித்துப்பாரும்; அடுத்த வருடத்திலே சீரியாவின் ராஜா உமக்கு எதிராக வருவான் என்றான்.
\p
\v 23 சீரியாவின் ராஜாவுடைய வேலைக்காரர்கள் அவனைப் பார்த்து: அவர்களுடைய தெய்வங்கள் மலைத்தெய்வங்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்; நாம் அவர்களோடு சமபூமியிலே யுத்தம்செய்தால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம்.
\s5
\v 24 அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த ராஜாக்கள் ஒவ்வொருவரையும் தங்களுடைய இடத்திலிருந்து மாற்றி, அவர்களுக்குப் பதிலாக வீரர்களை ஏற்படுத்தி;
\v 25 நீர் சாகக்கொடுத்த வீரர்களுக்குச் சரியாக வீரர்களையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாகக் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாக இரதங்களையும் எண்ணிப் பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்செய்து, நிச்சயமாக அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான்.
\s5
\v 26 அடுத்த வருடத்திலே பெனாதாத் சீரியர்களை எண்ணிப் பார்த்து, இஸ்ரவேலோடு யுத்தம்செய்ய ஆப்பெக்குக்கு வந்தான்.
\v 27 இஸ்ரவேல் மக்களும் எண்ணிக்கைப் பார்க்கப்பட்டு, தேவையானதைச் சம்பாதித்துக்கொண்டு, அவர்களை எதிர்க்கப் புறப்பட்டு, அவர்களுக்கு எதிரே இரண்டு சிறிய வெள்ளாட்டு மந்தையைப்போல முகாமிட்டார்கள்; தேசம் சீரியர்களால் நிறைந்திருந்தது.
\s5
\v 28 அப்பொழுது தேவனுடைய மனிதன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாக இல்லாமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர்கள் சொல்லியிருக்கிறபடியால், நான் இந்த ஏராளமான மக்கள் கூட்டத்தையெல்லாம் உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
\s5
\v 29 ஏழுநாட்கள்வரை அவர்கள் நேருக்கு நேராக முகாமிட்டிருந்தார்கள்; ஏழாம் நாளில் யுத்தம் துவங்கி, இஸ்ரவேல் மக்கள் ஒரே நாளிலே சீரியர்களில் ஒரு இலட்சம் காலாட்களைக் கொன்றுபோட்டார்கள்.
\v 30 மீதியானவர்கள் ஆப்பெக் பட்டணத்திற்குள் ஓடிப்போனார்கள்; அங்கே மீதியாக இருந்த இருபத்தேழாயிரம்பேரின்மேல் மதில் இடிந்து விழுந்தது; பெனாதாத்தும் ஓடிப்போய் நகரத்திற்குள் புகுந்து, உள்ளறையில் பதுங்கினான்.
\s5
\v 31 அப்பொழுது அவனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: இதோ, இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்; நாங்கள் சணலாடைகளை எங்களுடைய இடுப்புகளில் கட்டி, கயிறுகளை எங்களுடைய தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவிடம் போவோம்; ஒருவேளை உம்மை உயிரோடு வைப்பார் என்று சொல்லி,
\v 32 சணலாடைகளைத் தங்களுடைய இடுப்புகளில் கட்டி, கயிறுகளைத் தங்களுடைய தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவிடம் வந்து: என்னை உயிரோடு வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்செய்கிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடு இருக்கிறானா, அவன் என்னுடைய சகோதரன் என்றான்.
\s5
\v 33 அந்த மனிதர்கள் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின்சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடம் வந்தபோது, அவனைத் தன்னுடைய இரதத்தில் ஏற்றிக்கொண்டான்.
\v 34 அப்பொழுது பெனாதாத் இவனைப்பார்த்து: என்னுடைய தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என்னுடைய தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கைசெய்து அவனை அனுப்பிவிட்டான்.
\s1 ஆகாபை தீர்க்கதரிசி கடிந்துகொள்ளுதல்
\p
\s5
\v 35 அப்பொழுது தீர்க்கதரிசிகளின் மகன்களில் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படி தன்னுடைய நண்பனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனிதன் அவனைப்பார்த்து அடிக்கமாட்டேன் என்றான்.
\v 36 அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல் போனதால், இதோ, நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான்; அப்படியே இவன் அவனைவிட்டுப் புறப்பட்டவுடனே, ஒரு சிங்கம் இவனைக் கண்டு கொன்றுபோட்டது.
\s5
\v 37 அதின்பின்பு அவன் வேறொருவனைக் கண்டு: என்னை அடி என்றான்; அந்த மனிதன், அவனைக் காயமுண்டாக அடித்தான்.
\v 38 அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன்னுடைய முகத்தின்மேல் சாம்பலைப் போட்டு, மாறுவேடமிட்டு வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான்.
\s5
\v 39 ராஜா அவ்வழியாக வருகிறபோது, இவன் ராஜாவைப் பார்த்துக் கூப்பிட்டு: உமது அடியான் யுத்தத்தில் நின்றபோது, ஒருவன் விலகி, என்னிடத்தில் ஒருவனைக் கொண்டுவந்து, இந்த மனிதனைப் பாதுகாப்பாக வைத்திரு; இவன் தப்பிப்போனால் உன்னுடைய உயிர் அவன் உயிருக்குச்சமமாக இருக்கும், அல்லது ஒரு தாலந்து வெள்ளியை நீ கொடுக்கவேண்டும் என்றான்.
\v 40 ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் வேலையாக இருக்கும்போது, அவன் போய்விட்டான் என்றான். இஸ்ரவேலின் ராஜா அவனைப் பார்த்து: நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான்.
\s5
\v 41 அப்பொழுது அவன் சீக்கிரமாகத் தன்னுடைய முகத்தின் மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதால், இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான்.
\v 42 அப்பொழுது இவன் அவனை நோக்கி: கொலைசெய்வதற்கு நான் நியமித்த மனிதனை உன்னுடைய கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டதால், உன்னுடைய உயிர் அவனுடைய உயிருக்கு ஈடாகவும், உன்னுடைய மக்கள் அவனுடைய மக்களுக்கு இணையாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
\v 43 அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் கோபமுமாகத் தன்னுடைய வீட்டிற்குப் போகப்புறப்பட்டு சமாரியாவுக்கு வந்தான்.
\s5
\c 21
\cl அத்தியாயம்– 21
\s1 நாபோத்தின் திராட்சைத்தோட்டம்
\p
\v 1 இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரண்மனையின் அருகில் ஒரு திராட்சைத்தோட்டம் இருந்தது.
\v 2 ஆகாப் நாபோத்தோடு பேசி: உன்னுடைய திராட்சைத்தோட்டம் என்னுடைய வீட்டிற்கு அருகிலிருக்கிறபடியால், அதைக் கீரைத்தோட்டமாக்கும்படி எனக்குக் கொடு, அதைவிட நல்ல திராட்சைத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான்.
\s5
\v 3 நாபோத் ஆகாபை நோக்கி: நான் என்னுடைய முன்னோர்களின் சுதந்தரத்தை உமக்குத் தராதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான்.
\v 4 இப்படி என்னுடைய முன்னோர்களின் சுதந்திரத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடு சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் கோபமுமாகத் தன்னுடைய வீட்டிற்கு வந்து, சாப்பிட்டாமல், தன்னுடைய கட்டிலின்மேல் படுத்து, தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.
\s5
\v 5 அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனிடம் வந்து: நீர் சாப்பிடாதபடி, உம்முடைய மனம் சோர்வாக இருப்பது என்ன என்று அவனைக் கேட்டதற்கு,
\v 6 அவன் அவளைப் பார்த்து: நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தோடு பேசி: உன்னுடைய திராட்சைத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாகக் கொடு; அல்லது உனக்கு பிடித்திருந்தால் அதற்குப் பதிலாக வேறு திராட்சைத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என்னுடைய திராட்சைத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னான் என்றான்.
\v 7 அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்கிறவர் அல்லவா? நீர் எழுந்து சாப்பிட்டு மனமகிழ்ச்சியாக இரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்.
\s5
\v 8 அவள் ஆகாபின் பெயரால் கடிதங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த கடிதங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடு குடியிருக்கிற மூப்பர்களிடத்திற்கும் பெரியோர்களிடத்திற்கும் அனுப்பினாள்.
\v 9 அந்த கடிதங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி, நாபோத்தை மக்களின் முன்பாக நிறுத்தி,
\v 10 தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற வஞ்சகமான இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படி அவன் மீது கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.
\s5
\v 11 அவன் பட்டணத்தில் குடியிருக்கிற மூப்பர்களும் பெரியோர்களுமாகிய அவன் பட்டணத்து மனிதர்கள், யேசபேல் தங்களுக்கு அனுப்பின கடிதங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்.
\v 12 அவர்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி நாபோத்தை மக்களின் முன்னே நிறுத்தினார்கள்.
\v 13 அப்பொழுது வஞ்சகமான இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று மக்களுக்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படி அவனைக் கல்லெறிந்து,
\v 14 பிறகு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியப்பட்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்.
\s5
\v 15 நாபோத் கல்லெறியப்பட்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாகக் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடு இல்லை, அவன் செத்துப்போனான் என்றாள்.
\v 16 நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும்படி எழுந்து போனான்.
\p
\s5
\v 17 கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டானது, அவர்:
\v 18 நீ எழுந்து, சமாரியாவில் இருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான்.
\s5
\v 19 நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின இடத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
\v 20 அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என்னுடைய பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.
\s5
\v 21 நான் உன்மேல் தீங்கு வரச்செய்து, உன்னுடைய சந்ததியை அழித்துப் போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாவது இல்லாதபடி இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் அழித்து,
\v 22 நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவம் செய்யச்செய்ததால், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் குடும்பத்திற்கும், அகியாவின் மகனாகிய பாஷாவின் குடும்பத்திற்கும் சமமாக்குவேன் என்றார் என்று சொன்னான்.
\s5
\v 23 யேசேபேலையும் குறித்துக் கர்த்தர்: நாய்கள் யேசபேலை யெஸ்ரவேலின் மதில் அருகே தின்னும்.
\v 24 ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே சாகிறவனை நாய்களும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் சாப்பிடும் என்றார்.
\s5
\v 25 தன்னுடைய மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.
\v 26 கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக துரத்திவிட்ட எமோரியர்கள் செய்தபடியெல்லாம், அவன் அருவருப்பான விக்கிரகங்களைப் பின்பற்றி, மிகவும் அருவருப்பாய் நடந்துகொண்டான்.
\s5
\v 27 ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, தன்னுடைய சரீரத்தின்மேல் சணலாடையைப் போர்த்துக்கொண்டு, உபவாசம்செய்து, சணலாடையில் படுத்துத் தாழ்மையாக நடந்துகொண்டான்.
\v 28 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:
\v 29 ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தியதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறதால், நான் அவனுடைய நாட்களில் அந்த அழிவை வரச்செய்யாமல், அவனுடைய மகனுடைய நாட்களில் அதை அவனுடைய வீட்டின்மேல் வரச்செய்வேன் என்றார்.
\s5
\c 22
\cl அத்தியாயம்– 22
\s1 மிகாயா ஆகாபிற்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்தல்
\p
\v 1 சீரியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் மூன்று வருடங்கள் யுத்தமில்லாமல் இருந்தது.
\v 2 மூன்றாம் வருடத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவிடம் போயிருக்கும்போது,
\s5
\v 3 இஸ்ரவேலின் ராஜா தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி,
\v 4 யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்ய என்னோடு கூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
\s5
\v 5 பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.
\v 6 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப்போகலாமா, போக வேண்டாமா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
\s5
\v 7 பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிவதற்கு இவர்களைத் தவிர கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராவது இங்கே இல்லையா என்று கேட்டான்.
\v 8 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடம் விசாரித்து அறிவதற்கு இம்லாவின் மகனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.
\v 9 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா அதிகாரிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் மகனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.
\s5
\v 10 இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் வாசலுக்கு முன்பாக இருக்கும் திறந்த வெளியிலே ராஜஉடை அணிந்துக்கொண்டவர்களாக, அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; எல்லாத் தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
\v 11 கேனானாவின் மகனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியர்களைத் தள்ளி அழித்துப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
\v 12 எல்லாத் தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் நீர் போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
\s5
\v 13 மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் எல்லாம் ராஜாவிற்கு நன்மையாக இருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான்.
\v 14 அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடம் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
\p
\v 15 அவன் ராஜாவிடம் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப் போகலாமா, போகவேண்டாமா என்று கேட்டான். அதற்கு அவன்: நீர் போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்; என்றான்.
\s5
\v 16 ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்தில் உண்மையைத்தவிர வேறொன்றையும் என்னிடம் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைமுறை உன்னை ஆணையிடச் செய்யவேண்டும் என்று சொன்னான்.
\v 17 அப்பொழுது மிகாயா: இஸ்ரவேலர்கள் எல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.
\s5
\v 18 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடு சொல்லவில்லையா என்றான்.
\p
\v 19 அப்பொழுது மிகாயா சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவரின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.
\v 20 அப்பொழுது கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படி, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.
\s5
\v 21 அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது.
\v 22 எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும் பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச்செய்வாய்; போய் அப்படிச் செய் என்றார்.
\v 23 ஆதலால் கர்த்தர் பொய்யின் ஆவியை உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லோருடைய வாயிலும் கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.
\s5
\v 24 அப்பொழுது கேனானாவின் மகனாகிய சிதேக்கியா அருகில் வந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்த வழியாக என்னைவிட்டு உன்னோடு பேசும்படி வந்தது என்றான்.
\v 25 அதற்கு மிகாயா: நீ ஒளிந்துகொள்ள உள்அறையிலே பதுங்கும் அந்த நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
\s5
\v 26 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்தின் தலைவனாகிய ஆமோனிடத்திற்கும், ராஜாவின் மகனாகிய யோவாசிடத்திற்கும் திரும்பக் கொண்டுபோய்,
\v 27 இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடு வரும்வரை, இவனுக்கு கொஞ்சம் அப்பத்தையும் கொஞ்சம் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.
\v 28 அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடு திரும்பி வருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசவில்லை என்று சொல்லி; மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள் என்றான்.
\s1 ராமோத் கீலேயாத்திலே ஆகாப் கொல்லப்படுதல்
\p
\s5
\v 29 பின்பு இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
\v 30 இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் நுழைவேன்; நீரோ ராஜஉடை அணிந்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் நுழைந்தான்.
\s5
\v 31 சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பத்திரண்டு தலைவர்களையும் நோக்கி: நீங்கள் சிறியவர்களோடும் பெரியவர்களோடும் யுத்தம்செய்யாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடுமட்டும் யுத்தம் செய்யுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.
\v 32 எனவே, இரதங்களின் தலைவர்கள் யோசபாத்தைக் காணும்போது, இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்செய்ய அவனுக்கு நேராக வந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான்.
\v 33 இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர்கள் கண்டு அவனைவிட்டு விலகிப்போனார்கள்.
\s5
\v 34 ஒருவன் தெரியாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது; அப்பொழுது அவன் தன்னுடைய ரத ஓட்டியைப் பார்த்து; நீ திருப்பி என்னை இராணுவத்திற்கு மறுபுறம் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான்.
\s5
\v 35 அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியர்களுக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது.
\v 36 பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் அறிவிக்கப்பட்டது.
\s5
\v 37 அப்படியே ராஜா இறந்தபின்பு சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டான்; ராஜாவை சமாரியாவில் அடக்கம்செய்தார்கள்.
\v 38 அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கினது.
\s5
\v 39 ஆகாபின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின அரண்மனையின் வரலாறும், அவன் கட்டின எல்லாப் பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
\v 40 ஆகாப் மரணமடைந்து முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டபின்பு, அவனுடைய மகனாகிய அகசியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s1 யூதாவின் ராஜாவாகிய யோசபாத்
\p
\s5
\v 41 ஆசாவின் மகனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் அரசாட்சி செய்த நான்காம் வருடத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
\v 42 யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாக இருந்து, இருபத்தைந்து வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; சில்கியின் மகளாகிய அவனுடைய தாயின்பெயர் அசுபாள்.
\s5
\v 43 அவன் தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதைவிட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் மேடைகள் இடிக்கப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்.
\v 44 யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடு சமாதானமாக இருந்தான்.
\s5
\v 45 யோசபாத்தின் மற்ற செயல்பாடுகளும், அவன் காட்டிய வல்லமையும், அவன் செய்த யுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
\v 46 தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாக விட்டிருந்த ஆண் விபசாரக்காரர்களையும் அவனுடைய தேசத்திலிருந்து அற்றுப்போகச்செய்தான்.
\v 47 அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பதில்ராஜா ஒருவன் இருந்தான்.
\s5
\v 48 பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன்கேபேரிலே உடைந்துபோனது.
\v 49 அப்பொழுது ஆகாபின் மகனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என்னுடைய வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு கப்பல்களில் போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை.
\v 50 யோசபாத் மரணமடைந்து, தாவீதின் நகரத்தில் தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம்செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s1 இஸ்ரவேலின் ராஜாவாகிய அகசியா
\p
\s5
\v 51 ஆகாபின் மகனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருடத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருடங்கள் அரசாட்சிசெய்து,
\v 52 கர்த்தரின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தன்னுடைய தகப்பன் வழியிலும், தன்னுடைய தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து,
\v 53 பாகாலை வணங்கி, அதைப் பணிந்துகொண்டு, தன்னுடைய தகப்பன் செய்தபடியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான்.

1228
12-2KI.usfm Normal file
View File

@ -0,0 +1,1228 @@
\id 2KI
\ide UTF-8
\h II இராஜாக்கள்
\toc1 II இராஜாக்கள்
\toc2 II இராஜாக்கள்
\toc3 2ki
\mt1 II இராஜாக்கள்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 அகசியாவுக்கு வந்த தேவனுடைய நியாயத்தீர்ப்பு
\p
\v 1 ஆகாப் மரணமடைந்தபின்பு, மோவாபியர்கள் இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கலகம்செய்து பிரிந்துபோனார்கள்.
\v 2 அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டின் மர தளத்திலிருந்து விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்.
\s5
\v 3 கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களைச் சந்தித்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்?
\v 4 இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், நிச்சயமாக மரணமடைவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்.
\s5
\v 5 அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் ஏன் திரும்பிவந்தீர்கள் என்று அவன் அவர்களிடம் கேட்டான்.
\v 6 அதற்கு அவர்கள்: ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனிடம் சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்.
\s5
\v 7 அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களைச் சந்தித்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனிதனின் தோற்றம் எப்படி இருந்தது என்று கேட்டான்.
\v 8 அதற்கு அவர்கள்: அவன் கம்பளி உடையை அணிந்து, தோல் கச்சையைத் தன் இடுப்பிலே கட்டியிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி;
\s5
\v 9 அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்.
\v 10 அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேர்களையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பது பேர்களையும் சுட்டெரித்தது.
\s5
\v 11 மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னைச் சீக்கிரமாக வரச்சொல்லுகிறார் என்றான்.
\v 12 எலியா அவர்களுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன்னுடைய ஐம்பதுபேர்களையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பதுபேர்களையும் சுட்டெரித்தது.
\s5
\v 13 மறுபடியும் மூன்றாவது முறை ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; இந்த மூன்றாவது தலைவன் ஏறிவந்து, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனிதனே, என்னுடைய உயிரும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் உயிரும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக.
\v 14 இதோ, வானத்திலிருந்து அக்கினி இறங்கி, முந்தின இரண்டு தலைவர்களையும், அவரவர்களுடைய ஐம்பது வீரர்களையும் சுட்டெரித்தது; இப்போதும் என்னுடைய உயிர் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.
\s5
\v 15 அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப்போய்,
\v 16 அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
\s5
\v 17 எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்துபோனான்; அவனுக்கு மகன் இல்லாததால், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய மகனான யோராமின் இரண்டாம் வருடத்தில் யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\v 18 அகசியாவின் மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 எலியா பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுதல்
\p
\v 1 கர்த்தர் எலியாவை சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான்.
\v 2 எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்வரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுவதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.
\s5
\v 3 அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
\v 4 பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோவரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.
\s5
\v 5 எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
\v 6 பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.
\s5
\v 7 தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஐம்பதுபேர்கள் தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.
\v 8 அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இரண்டாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாக மறுகரைக்குப் போனார்கள்.
\s5
\v 9 அவர்கள் மறுகரைக்குப் போனபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரண்டு மடங்காகக் கிடைக்க வேண்டுகிறேன் என்றான்.
\v 10 அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படும்போது என்னை நீ பார்த்தால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடைக்காது என்றான்.
\s5
\v 11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகும்போது, இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
\v 12 அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாக இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அதற்குப் பிறகு காணாமல், தன் உடையைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான்.
\s5
\v 13 பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,
\v 14 எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இரண்டாகப் பிரிந்ததால் எலிசா இக்கரைக்கு வந்தான்.
\s5
\v 15 எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி:
\v 16 இதோ, உமது அடியாரோடு ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்தரவு கொடும்; ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, மலைகளில் ஒன்றின் மேலாகிலும் பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு எலிசா: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.
\s5
\v 17 அவன் சோர்ந்துபோகும்வரை அவர்கள் அவனைத் தொந்தரவு செய்துகொண்டிருந்ததால், அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பதுபேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்று நாட்கள் அவனைத் தேடியும் காணாமல்,
\v 18 எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்.
\s1 எலிசாவின் அற்புதம்
\p
\s5
\v 19 பின்பு அந்தப் பட்டணத்தின் மனிதர்கள் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்பதற்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்.
\v 20 அப்பொழுது அவன்: ஒரு புதிய பாத்திரத்தை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது,
\s5
\v 21 அவன் நீரூற்றிற்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை சுத்திகரித்தேன்; இனி இதனால் சாவும் வராது, பாழ்நிலமாகவும் இருக்காது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
\v 22 எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்தநாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமானது.
\s1 எலிசா கேலிசெய்யப்படுதல்
\p
\s5
\v 23 அவன் அந்த இடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழியிலே நடந்துபோகும்போது வாலிபர்கள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி கேலி செய்தார்கள்.
\v 24 அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு வாலிபர்களைக் கொன்றுபோட்டது.
\v 25 அவன் அந்த இடத்தைவிட்டுக் கர்மேல் மலைக்குப்போய், அங்கேயிருந்து சமாரியாவுக்குத் திரும்பினான்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 மோவாப் கலகம் செய்தல்
\p
\v 1 யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினெட்டாம் வருடத்தில் ஆகாபின் மகனாகிய யோராம் சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிப் பன்னிரெண்டு வருடங்கள் ஆட்சிசெய்து,
\v 2 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப் போலவும் தன் தாயைப் போலவும் அல்ல; தன் தகப்பன் உண்டாக்கிய பாகாலின் சிலையை அகற்றிவிட்டான்.
\v 3 என்றாலும் இஸ்ரவேலைப் பாவம் செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் நீங்காமல் அவைகளிலே சிக்கிக்கொண்டிருந்தான்.
\s5
\v 4 மோவாபின் ராஜாவாகிய மேசா, திரளான ஆடுமாடுகளை உடையவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவிற்கு ஒரு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், ஒரு இலட்சம் குறும்பாட்டுக் கடாக்களையும் செலுத்திவந்தான்.
\v 5 ஆகாப் இறந்தபின்பு மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவிற்கு விரோதமாகக் கலகம் செய்தான்.
\v 6 அந்தக் காலத்திலே யோராம் என்னும் ராஜா சமாரியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலையெல்லாம் எண்ணிக்கை செய்து போய்:
\s5
\v 7 மோவாபின் ராஜா எனக்கு விரோதமாகக் கலகம்செய்தான்; மோவாபியர்கள்மேல் போர்செய்ய, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு; அவன் நான் வருகிறேன்; நான்தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
\v 8 எந்த வழியாகப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்திரவழியாகப் போவோம் என்றான்.
\s5
\v 9 அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாட்கள் சுற்றித்திரிந்தபோது, அவர்களுக்குப் பின்செல்லுகிற இராணுவத்திற்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாமல்போனது.
\v 10 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியர்களின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.
\s5
\v 11 அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிப்பதற்கு கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் ஊற்றிய சாப்பாத்தின் மகனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் வேலைக்காரர்களில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான்.
\v 12 அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்திற்குப் போனார்கள்.
\s5
\v 13 எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பன் மற்றும் தாயாருடைய தீர்க்கதரிசிகளிடம் போ என்றான்; அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியர்களின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.
\v 14 அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பார்க்காமலிருந்தால் நான் உம்மைக் கவனிக்கவும் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன் நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
\s5
\v 15 இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி,
\v 16 அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்.
\v 17 நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும், உங்களுடைய ஆடுமாடுகளும் கால்நடைகளும் குடிப்பதற்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
\s5
\v 18 இது கர்த்தரின் பார்வைக்கு சாதாரணகாரியம்; மோவாபியர்களையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்.
\v 19 நீங்கள் சகல கோட்டைகளையும், சிறந்த பட்டணங்களையும் தகர்த்து நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் அடைத்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.
\s5
\v 20 அடுத்தநாள் காலையில் பலிசெலுத்துகிற நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாக வந்ததால் தேசம் தண்ணீரால் நிரம்பினது.
\s5
\v 21 தங்களோடு போர்செய்ய ராஜாக்கள் வருகிறதை மோவாபியர்கள் அனைவரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் பயன்படுத்தக்கூடிய வயதுள்ளவர்களையும், அதற்குமேல் தகுதியானவர்கள் எல்லோரையும் சேர்த்து அழைத்துக்கொண்டுவந்து எல்லையிலே நின்றார்கள்.
\v 22 மோவாபியர்கள் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தத்தைப் போல சிவப்பாகக் காணப்பட்டது.
\v 23 அதனால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்துபோனார்கள்; ஆதலால் மோவாபியர்களே, கொள்ளையிட வாருங்கள் என்று சொன்னார்கள்.
\s5
\v 24 அவர்கள் இஸ்ரவேலின் முகாமிற்கு வந்தபோது, இஸ்ரவேலர்கள் எழும்பி, மோவாபியர்களைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாகத் தாக்கி, அவர்களுடைய தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியர்களைத் தாக்கி,
\v 25 பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலங்களிலும் கற்களால் நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் அடைத்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிக்கப்படாமல் இருக்கிறபோது; கவண்காரர்கள் அதைச் சுற்றிவளைத்து அதையும் சேதமாக்கினார்கள்.
\s5
\v 26 போர் மும்முரமாகிறதென்று மோவாபியர்களின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் கடுமையாகத் தாக்குகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டுபோனான்; ஆனாலும் அவர்களாலே முடியாமல்போனது.
\v 27 அப்பொழுது அவன் தன்னுடைய இடத்தில் ராஜாவாகப்போகிற தன் மூத்த மகனைப் பிடித்து, மதிலின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்கள்மேல் கடுங்கோபம் ஏற்பட்டதால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 விதவையும் எண்ணையும்
\p
\v 1 தீர்க்கதரிசிகளுடைய கூட்டத்தாரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு பெண் எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் கணவன் இறந்துபோனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு மகன்களையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.
\v 2 எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெயைத் தவிர உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்.
\s5
\v 3 அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அண்டைவீட்டுக்காரர்கள் எல்லோரிடத்திலும் அநேகம் காலியான பாத்திரங்களைக் கேட்டுவாங்கி,
\v 4 நீயும் உன் பிள்ளைகளும் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் ஊற்றி, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.
\s5
\v 5 அவள் அவனிடத்திலிருந்துபோய், கதவைப் பூட்டிக்கொண்டு, மகன்கள் அவளிடத்தில் பாத்திரங்களை கொடுக்க, அவள் அவைகளில் ஊற்றினாள்.
\v 6 அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின்பு, அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறு பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்றுபோனது.
\s5
\v 7 அவள் போய் தேவனுடைய மனிதனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீதம் இருக்கிறதைக்கொண்டு நீயும் உன் மகன்களும் வாழக்கையை நடத்துங்கள் என்றான்.
\s1 சூனேமியாளின் மகன் உயிர்ப்பிக்கப்படுதல்
\p
\s5
\v 8 பின்பு ஒரு நாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு பெண் அவனை சாப்பிட வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பிரயாணமாக வருகிறபோதெல்லாம் சாப்பிடுவதற்காக அங்கே வந்து தங்குவான்.
\v 9 அவள் தன் கணவனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனிதனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.
\s5
\v 10 நாம் மேல்மாடியில் ஒரு சிறிய அறையைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.
\v 11 ஒரு நாள் அவன் அங்கே வந்து, அந்த அறையிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான்.
\s5
\v 12 அவன் தன்னுடைய வேலைக்காரனாகிய கேயாசை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள்.
\v 13 அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல கரிசனையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் என்றும் ராஜாவிடமாவது சேனாதிபதியிடமாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்றும் அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் மக்களின் நடுவே நான் சுகமாகக் குடியிருக்கிறேன் என்றாள்.
\s5
\v 14 அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குக் குழந்தை இல்லை, அவளுடைய கணவனும் அதிக வயதுள்ளவன் என்றான்.
\v 15 அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள்.
\v 16 அப்பொழுது அவன்: ஒரு கர்ப்பகாலத்திட்டத்திலே ஒரு மகனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: இல்லை, தேவனுடைய மனிதனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு பொய் சொல்லவேண்டாம் என்றாள்.
\s5
\v 17 அந்த பெண் கர்ப்பவதியாகி, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் ஒரு மகனைப் பெற்றாள்.
\v 18 அந்த மகன் வளர்ந்தான், ஒரு நாள் அவன் அறுப்பறுக்கிறவர்களிடத்திலிருந்த தன் தகப்பனிடம் போயிருக்கும்போது,
\v 19 தன் தகப்பனைப் பார்த்து: என் தலை வலிக்கிறது, என் தலை வலிக்கிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய் விடு என்றான்.
\v 20 அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானம்வரை அவள் மடியில் இருந்து இறந்துபோனான்.
\s5
\v 21 அப்பொழுது அவள் மாடிக்கு ஏறிப்போய், அவனை தேவனுடைய மனிதனின் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிவிட்டு போய்,
\v 22 தன் கணவனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாக தேவனுடைய மனிதன் இருக்கும் இடம்வரை போய்வருவதற்கு; வேலைக்காரர்களில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.
\s5
\v 23 அப்பொழுது அவன்: இது அமாவாசையும் அல்ல ஓய்வு நாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்திற்கு ஏன் போகவேண்டும் என்று கேட்கச் சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போகவேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி,
\v 24 கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய, போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,
\s5
\v 25 கர்மேல் மலையிலிருக்கிற தேவனுடைய மனிதனிடத்திற்குப் போனாள்; தேவனுடைய மனிதன் தூரத்திலே அவளை வரக்கண்டு, தன் வேலைக்காரனாகிய கேயாசியைப் பார்த்து: அதோ சூனேமியாள் வருகிறாள்.
\v 26 நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடி, நீ சுகமாயிருக்கிறாயா, உன் கணவன் சுகமாயிருக்கிறானா, அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா என்று அவளிடத்தில் கேள் என்றான். அவள்: சுகம்தான் என்று சொல்லி,
\s5
\v 27 மலையில் இருக்கிற தேவனுடைய மனிதனிடத்தில் வந்து, அவனுடைய காலைப் பிடித்துக்கொண்டாள்; அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்; தேவனுடைய மனிதன்: அவளைத் தடுக்காதே; அவளுடைய ஆத்துமா துக்கமாயிருக்கிறது; கர்த்தர் அதை எனக்கு அறிவிக்காமல் மறைத்துவைத்தார் என்றான்.
\s5
\v 28 அப்பொழுது அவள், என் ஆண்டவனே எனக்கு ஒரு மகன் வேண்டும் என்று நான் உம்மிடத்தில் கேட்டேனா? என்னை ஏமாற்றவேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள்.
\v 29 அப்பொழுது அவன் கேயாசியைப் பார்த்து: நீ உன் பயணத்திற்கான உடையை அணிந்துகொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் யாரைச் சந்தித்தாலும் அவனைக் கேள்வி கேட்காமலும், உன்னை ஒருவன் கேள்வி கேட்டாலும் அவனுக்கு பதில் சொல்லாமலும் போய், என் தடியை அந்தச் சிறுவனின் முகத்தின்மேல் வை என்றான்.
\s5
\v 30 சிறுவனின் தாயோ: நான் உம்மை விடுவதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான்.
\v 31 கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தத் தடியைச் சிறுவனின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டு வந்து: சிறுவன் கண் விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான்.
\s5
\v 32 எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, இந்தச் சிறுவன் அவனுடைய கட்டிலின்மேல் இறந்துகிடந்தான்.
\v 33 உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப்பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல்செய்து,
\v 34 அருகில்போய், தன் வாய் சிறுவனின் வாயின்மேலும், தன் கண்கள் அவனுடைய கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவனுடைய உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக்கொண்டான்; அப்பொழுது சிறுவனின் உடலில் சூடு ஏற்பட்டது.
\s5
\v 35 அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பவும் அருகில்போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தச் சிறுவன் ஏழுமுறை தும்மித் தன் கண்களைத் திறந்தான்.
\v 36 அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது; அவன், உன் மகனை எடுத்துக்கொண்டுபோ என்றான்.
\v 37 அப்பொழுது அவள் உள்ளே போய், அவனுடைய பாதத்திலே விழுந்து, தரைவரை பணிந்து, தன் மகனை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.
\s1 பானையிலிருந்த விஷம் நீங்குதல்
\p
\s5
\v 38 எலிசா கில்காலுக்குத் திரும்பி வந்தான். தேசத்திலே பஞ்சம் உண்டானது; தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாருக்குக் கூழ் காய்ச்சு என்றான்.
\v 39 ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலேபோய், ஒரு கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதின் காய்களை மடிநிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாமலிருந்தது.
\s5
\v 40 சாப்பிட அதைக் கூட்டத்தாருக்குக் கொடுத்தார்கள்; அவர்கள் அந்தக் கூழை எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடமுடியாமல்: தேவனுடைய மனிதனே, பானையில் விஷம் இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.
\v 41 அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, கூட்டத்தார் சாப்பிடும்படி அவர்களுக்கு கொடு என்றான்; அப்புறம் பானையிலே விஷம் இல்லாமல்போனது.
\s1 நூறுபேருக்கு உணவளித்தல்
\p
\s5
\v 42 பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனிதன் தேவனுடைய மனிதனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் கதிர்த்தட்டுகளையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: கூட்டத்தாருக்குச் சாப்பிடக்கொடு என்றான்.
\v 43 அதற்கு அவனுடைய வேலைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதைக் கூட்டத்தாருக்குச் சாப்பிடக்கொடு; சாப்பிட்டப் பிறகு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
\v 44 அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமல்லாமல் மீதியும் இருந்தது.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 நாகமான் தொழுநோயிலிருந்து சுகமாக்கப்படுதல்
\p
\v 1 சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் எஜமானிடத்தில் பெரியவனும் மதிக்கத்தக்கவனுமாக இருந்தான்; அவனைக்கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு வெற்றியைக் கொடுத்தார்; மிகவும் பலசாலியாகிய அவனோ தொழுநோயாளியாக இருந்தான்.
\v 2 சீரியாவிலிருந்து படைகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறுபெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
\s5
\v 3 அவள் தன் எஜமானியைப் பார்த்து: என் எஜமான் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய தொழுநோயை நீக்கிவிடுவார் என்றாள்.
\v 4 அப்பொழுது நாகமான் போய், இஸ்ரவேல் தேசத்துப் பெண் சொன்ன காரியங்களைத் தன் எஜமானிடத்தில் அறிவித்தான்.
\s5
\v 5 அப்பொழுது சீரியாவின் ராஜா: நல்லது போகலாம், இஸ்ரவேலின் ராஜாவிற்கு கடிதம் தருகிறேன் என்றான்; அப்படியே அவன் தன் கையிலே பத்துத்தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் எடையுள்ள பொன்னையும், பத்து மாற்றுஉடைகளையும் எடுத்துக்கொண்டுபோய்,
\v 6 இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்தக் கடிதத்தைக் கொடுத்தான். அதிலே: இந்தக் கடிதத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவனுடைய தொழுநோயை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.
\s5
\v 7 இஸ்ரவேலின் ராஜா அந்த கடிதத்தை வாசித்தபோது, அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனிதனை தொழுநோயிலிருந்து சுகப்படுத்தவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் கடிதம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்க வாய்ப்பைத் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான்.
\s5
\v 8 இஸ்ரவேலின் ராஜா தன் உடைகளைக் கிழித்துக்கொண்ட செய்தியை தேவனுடைய மனிதனாகிய எலிசா கேட்டபோது, அவன்: நீர் உம்முடைய உடைகளை ஏன் கிழித்துக்கொள்ளவேண்டும்? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள்ளட்டும் என்று ராஜாவிற்குச் சொல்லியனுப்பினான்.
\v 9 அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான்.
\v 10 அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுமுறை மூழ்கி எழு; அப்பொழுது உன் சரீரம் புதிதாகி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 11 அதற்கு நாகமான் கடுங்கோபம்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி தொழுநோயை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன்.
\v 12 நான் மூழ்கிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, கோபத்தோடே திரும்பிப்போனான்.
\s5
\v 13 அவனுடைய வேலைக்காரர்கள் அருகில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்யச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? மூழ்கி எழும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.
\v 14 அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனிதனின் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுமுறை முழுகினபோது, அவனுடைய சரீரம் ஒரு சிறுபிள்ளையின் சரீரத்தைப்போல புதிதாகி, அவன் சுத்தமானான்.
\s5
\v 15 அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடு தேவனுடைய மனிதனிடத்திற்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேனுடைய கையிலிருந்து ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.
\v 16 அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வற்புறுத்தியும் மறுத்துவிட்டான்.
\s5
\v 17 அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை.
\v 18 ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக; என் எஜமான் பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும்போது, நான் அவருக்கு உதவி செய்து ரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாயிருக்கும்; இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணியவேண்டிய இந்தக் காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக என்றான்.
\v 19 அதற்கு அவன்: சமாதானத்தோடே போ என்றான்; இவன் புறப்பட்டுக் கொஞ்சதூரம் போனபோது,
\p
\s5
\v 20 தேவனுடைய மனிதனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் எஜமான் அவனுடைய கையிலிருந்து வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பின்னே ஓடி, அவனுடைய கையிலிருந்து ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு,
\v 21 நாகமானைப் பின்தொடர்ந்தான்; அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டுபோக இரதத்திலிருந்து குதித்து: சுகசெய்தியா என்று கேட்டான்.
\v 22 அதற்கு அவன்: சுகசெய்திதான்; தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் இரண்டு வாலிபர்கள் இப்பொழுதுதான் எப்பிராயீம் மலைத்தேசத்திலிருந்து என்னிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்றுஉடைகளையும் தரவேண்டும் என்று கேட்க, என் எஜமான் என்னை அனுப்பினார் என்றான்.
\s5
\v 23 அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வற்புறுத்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு பைகளில் இரண்டு மாற்றுஉடைகளோடே கட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்துபோக, தன் வேலைக்காரர்களான இரண்டுபேர்மேல் வைத்தான்.
\v 24 அவன் மேடான இடத்திற்கு வந்தபோது, அவன் அதை அவர்கள் கையிலிருந்து வாங்கி, வீட்டிலே வைத்து, அந்த மனிதர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் போய்விட்டார்கள்.
\v 25 பின்பு அவன் உள்ளேபோய்த் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான்; கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா அவனைக் கேட்டதற்கு, அவன்: உமது அடியான் எங்கும் போகவில்லை என்றான்.
\s5
\v 26 அப்பொழுது அவன் இவனைப்பார்த்து: அந்த மனிதன் உனக்கு எதிர்கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், உடைகளையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?
\v 27 ஆகையால் நாகமானின் தொழுநோய் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழையின் நிறமான தொழுநோயாளியாகி, அவனைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\s1 கோடரி தண்ணீரில் மிதத்தல்
\p
\v 1 தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
\v 2 நாங்கள் யோர்தான்வரை சென்று அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.
\v 3 அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியார்களாகிய எங்களுடன் வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,
\s5
\v 4 அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகே வந்தபோது மரங்களை வெட்டினார்கள்.
\v 5 ஒருவன் ஒரு மரத்தை வெட்டி வீழ்த்தும்போது கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று சத்தமிட்டான்.
\s5
\v 6 தேவனுடைய மனிதன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கிளையை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கச் செய்து,
\v 7 அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.
\s1 கண்மயக்கம் ஏற்பட்ட சீரியர்களை எலிசா சிறைபிடித்தல்
\p
\s5
\v 8 அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாக போர்செய்து, இந்த இந்த இடத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் வேலைக்காரர்களோடு ஆலோசனைசெய்தான்.
\v 9 ஆகிலும் தேவனுடைய மனிதன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்திற்குப் போகாதபடி எச்சரிக்கையாயிரும்; சீரியர்கள் அங்கே வருவார்கள் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 10 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனிதன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன இடத்திற்கு மனிதர்களை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேக முறை தன்னைக் காத்துக்கொண்டான்.
\v 11 இந்தக் காரியத்தால் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் இராணுவ அதிகாரிகளை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவிற்கு உளவாளியாக இருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்.
\s5
\v 12 அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன்: அப்படியில்லை; என் எஜமானாகிய ராஜாவே, நீர் உம்முடைய படுக்கையறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவிற்கு அறிவிப்பான் என்றான்.
\v 13 அப்பொழுது அவன்: நான் மனிதர்களை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
\s5
\v 14 அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இரவிலே வந்து பட்டணத்தை சூழ்ந்துகொண்டார்கள்.
\v 15 தேவனுடைய மனிதனின் வேலைக்காரன் அதிகாலையில் எழுந்து வெளியே புறப்படும்போது, இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.
\v 16 அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
\s5
\v 17 அப்பொழுது எலிசா விண்ணப்பம்செய்து: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவனுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரனுடைய கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
\v 18 அவர்கள் அவனிடத்தில் வரும்போது, எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்து: இந்த மக்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படிச் செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகச் செய்தார்.
\v 19 அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பின்னே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனிதனிடத்திற்கு நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.
\s5
\v 20 அவர்கள் சமாரியாவிற்கு வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக் கர்த்தர் அவர்களுடைய கண்களைத் திறக்கும்போது, இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.
\v 21 இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான்.
\s5
\v 22 அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறைபிடித்தவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் சாப்பிட்டுக் குடித்து, தங்கள் எஜமானிடத்திற்குப் போகும்படி, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கு முன்பாக வையும் என்றான்.
\v 23 அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துசெய்து, அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய ஆண்டவனிடத்திற்குப் போய்விட்டார்கள்; சீரியர்களின் படைகள் இஸ்ரவேல் தேசத்திலே அதற்குப் பிறகு வரவில்லை.
\s1 முற்றுகையிடப்பட்ட சமாரியாவில் ஏற்பட்ட பஞ்சம்
\p
\s5
\v 24 இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றுகையிட்டான்.
\v 25 அதனால் சமாரியாவிலே கொடிய பஞ்சம் ஏற்பட்டது; ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படும்வரை அதை முற்றுகையிட்டார்கள்.
\v 26 இஸ்ரவேலின் ராஜா மதிலின்மேல் நடந்துபோகும்போது, ஒரு பெண் அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, உதவி செய்யும் என்றாள்.
\s5
\v 27 அதற்கு அவன்: கர்த்தர் உனக்கு உதவி செய்யாதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உனக்கு உதவி செய்ய முடியும்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,
\v 28 ராஜா மேலும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்தப் பெண் என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று சாப்பிடுவோம்; நாளைக்கு என் மகனைச் சாப்பிடுவோம் என்றாள்.
\v 29 அப்படியே என் மகனை வேகவைத்துச் சாப்பிட்டோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைச் சாப்பிட அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவைத்துவிட்டாள் என்றாள்.
\s5
\v 30 அந்தப் பெண்ணின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, மதிலின்மேல் நடந்துபோகிற அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே சணல் ஆடையை அணிந்திருக்கிறதை மக்கள் கண்டார்கள்.
\v 31 அவன்: சாப்பாத்தின் மகனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான்.
\s5
\v 32 எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பர்களும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனிதனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்திற்கு வருவதற்குமுன்னே, அவன் அந்த மூப்பர்களை நோக்கி: என் தலையை வெட்ட, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவிடாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவனுடைய எஜமானின் காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.
\v 33 அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு கர்த்தரால் உண்டானது; நான் இனிக் கர்த்தருக்காக ஏன் காத்திருக்கவேண்டும் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\p
\v 1 அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நாளை இந்த நேரத்தில் சமாரியாவின் வாசலிலே எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒருசேக்கலுக்கும், பதினாறுபடி அளவுள்ள இரண்டுமரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
\v 2 அப்பொழுது ராஜாவிற்குக் கை கொடுத்து உதவி செய்கிற அதிகாரி ஒருவன் தேவனுடைய மனிதனுக்கு மறுமொழியாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.
\s1 அசீரியர்கள் பயந்து ஓடிப்போகுதல்
\p
\s5
\v 3 தொழுநோயாளிகளான நான்குபேர் பட்டணத்தின் நுழைவாயிலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து ஏன் சாக வேண்டும்?
\v 4 பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி,
\s5
\v 5 சீரியருடைய இராணுவத்திற்குப் போக இரவிலே எழுந்திருந்து, சீரியருடைய முகாமிற்கு அருகில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை.
\v 6 ஆண்டவர் சீரியர்களின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கச் செய்ததால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நமக்கு எதிராகப் போருக்குவர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் கூலிக்கு அமர்த்தினான் என்று சொல்லி,
\s5
\v 7 இரவிலே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும், குதிரைகளையும், கழுதைகளையும், முகாமையும் அவைகள் இருந்த விதமாகவே விட்டுவிட்டு, தங்கள் உயிர் தப்ப ஓடிப்போனார்கள்.
\v 8 அந்தத் தொழுநோயாளிகள், முகாமின் அருகில் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் நுழைந்து சாப்பிட்டுக் குடித்து, அதிலிருந்த வெள்ளியையும், பொன்னையும், ஆடைகளையும் எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் நுழைந்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து,
\s5
\v 9 பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியும்வரை காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரண்மனையில் உள்ளவர்களுக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்.
\v 10 அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியர்களின் முகாமிற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனிதனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும், கழுதைகளும், கூடாரங்களும் இருந்த விதமாகவே இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள்.
\v 11 அப்பொழுது அவன் வாசல்காக்கிற மற்றவர்களைக் கூப்பிட்டான்; அவர்கள் உள்ளே போய் ராஜாவின் அரண்மனையில் உள்ளவர்களுக்கு அதை அறிவித்தார்கள்.
\s5
\v 12 அப்பொழுது இராஜா இரவில் எழுந்து, தன் வேலைக்காரர்களை நோக்கி: சீரியர்கள் நமக்குச் செய்கிற காரியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம் என்று அவர்கள் அறிவார்கள்; ஆகையால் நாம் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் முகாமை விட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளிந்துக்கொண்டிருக்கிறார்கள் என்றான்.
\v 13 அவனுடைய வேலைக்காரர்களில் ஒருவன் மறுமொழியாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்தரவு கொடும்; இதோ, இங்கே இஸ்ரவேலின் சகல மிகுதியிலும், இறந்துபோன இஸ்ரவேலின் அனைத்து கூட்டத்திலும், அவைகள் மாத்திரம் மீதியாக இருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான்.
\s5
\v 14 அப்படியே இரண்டு இரதக்குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய்வாருங்கள் என்று சொல்லி, சீரியர்களின் இராணுவத்தைப் பின்தொடர்ந்து போகும்படி அனுப்பினான்.
\v 15 அவர்கள் யோர்தான்வரை அவர்களைப் பின்தொடர்ந்துபோனார்கள்; சீரியர்கள் அவசரமாக ஓடும்போது, அவர்கள் எறிந்துபோட்ட உடைகளும் பொருட்களும் வழி முழுவதும் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவிற்கு அதை அறிவித்தார்கள்.
\s5
\v 16 அப்பொழுது மக்கள் புறப்பட்டு, சீரியர்களின் முகாமைக் கொள்ளையிட்டார்கள்; கர்த்தருடைய வார்த்தையின்படியே, எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒருசேக்கலுக்கும், பதினாறுபடி அளவுள்ள இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது.
\v 17 ராஜா தனக்குக் கை கொடுத்து உதவி செய்கிற அதிகாரியை பட்டணத்தின் நுழைவாயிலில் கண்காணிக்கக் கட்டளையிட்டிருந்தான்; பட்டணத்தின் நுழைவாயிலிலே மக்கள் அவனை நெருக்கி மிதித்ததாலே, ராஜா தேவனுடைய மனிதனிடத்தில் வந்தபோது சொல்லியிருந்தபடியே அவன் இறந்துபோனான்.
\s5
\v 18 பதினாறுபடி அளவுள்ள இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும், எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒருசேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியா பட்டணத்தின் நுழைவாயிலில் விற்கும் என்று தேவனுடைய மனிதன் ராஜாவோடே சொன்னபடியே நடந்தது.
\v 19 அதற்கு அந்த அதிகாரி தேவனுடைய மனிதனுக்கு மறுமொழியாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின்படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே.
\v 20 அப்படியே அவனுக்கு நடந்தது; பட்டணத்தின் நுழைவாயிலிலே மக்கள் அவனை நெருக்கி மிதித்ததினாலே அவன் இறந்துபோனான்.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 சூனேமியாளின் நிலம் மீட்கப்படுதல்
\p
\v 1 எலிசா தான் உயிரோடு எழுப்பின சிறுவனின் தாயை நோக்கி: நீ உன் குடும்பத்தாரோடு எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாவது போய் தங்கியிரு; கர்த்தர் பஞ்சத்தை வரச்செய்வார்; அது ஏழுவருடங்கள் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான்.
\v 2 அந்தப் பெண் எழுந்து, தேவனுடைய மனிதன் சொன்ன வார்த்தையின்படியே செய்து, தன் குடும்பத்தாரோடுகூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்திற்குப்போய், ஏழுவருடங்கள் குடியிருந்தாள்.
\s5
\v 3 ஏழுவருடங்கள் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தைவிட்டுத் திரும்பவந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடுவதற்காகப் போனாள்.
\v 4 அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனிதனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாகச் சொல் என்றான்.
\s5
\v 5 இறந்துபோனவனை உயிரோடு எழுப்பினார் என்பதை அவன் ராஜாவிற்குச் சொல்லுகிறபோது, இதோ, அவன் உயிரோடு எழுப்பின சிறுவனின் தாயாகிய அந்தப் பெண் வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவிடம் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த பெண்; எலிசா உயிரோடு எழுப்பின இவளுடைய மகன் இவன்தான் என்றான்.
\v 6 ராஜா அந்த பெண்ணைக் கேட்டதற்கு, அவள்: அதை அவனுக்கு விவரமாகச் சொன்னாள்; அப்பொழுது ராஜா அவளுக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவளுக்குரிய எல்லாவற்றையும், அவள் தேசத்தைவிட்டுப் போன நாள்முதல் இதுவரைக்கும் உண்டான அந்த வயலின் வருமானம் அனைத்தையும் அவளுக்குக் கிடைக்கச் செய் என்றான்.
\s1 ஆசகேல் பெனாதாத்தை கொலை செய்தல்
\p
\s5
\v 7 சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனிதன் இவ்விடத்திற்கு வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது.
\v 8 ராஜா ஆசகேலை நோக்கி: நீ உன் கையிலே காணிக்கையை எடுத்துக்கொண்டு, தேவனுடைய மனிதனுக்கு எதிர்கொண்டுபோய், நான் இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று அவனைக் கொண்டு கர்த்தரிடத்தில் விசாரிக்கச் சொன்னான்.
\v 9 ஆசகேல் தமஸ்குவின் சகல உச்சிதங்களிலும் நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு, அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவனுக்கு முன்பாக நின்று, சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் என்னும் உம்முடைய மகன் என்னை உம்மிடத்திற்கு அனுப்பி, இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று கேட்கச்சொன்னார் என்றான்.
\s5
\v 10 எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி சுகமாகிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார் என்றான்.
\v 11 பின்பு தேவனுடைய மனிதன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகும்வரை அவனைப் பார்த்துக்கொண்டே அழுதான்.
\v 12 அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவனே, ஏன் அழுகிறீர் என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் மக்களுக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறதால் அழுகிறேன்; நீ அவர்களுடைய கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்களுடைய வாலிபர்களைப் பட்டயத்தால் கொன்று, அவர்களுடைய குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்களுடைய கர்ப்பவதிகளின் வயிற்றைக் கிழித்துப்போடுவாய் என்றான்.
\s5
\v 13 அப்பொழுது ஆசகேல், இத்தனை பெரிய காரியத்தைச் செய்வதற்கு நாயைப்போல இருக்கிற உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.
\v 14 இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் எஜமானிடத்திற்கு வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன், நீர் இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,
\v 15 மறுநாளிலே ஒரு சமுக்காளத்தை எடுத்து, தண்ணீரிலே தோய்த்து அவனுடைய முகத்தின்மேல் விரித்தான்; அதனால் அவன் இறந்துபோனான்; ஆசகேல் அவனுக்குப் பதிலாக ராஜாவானான்.
\s1 யூதாவின் ராஜாவாகிய யோராம்
\p
\s5
\v 16 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகன் யோராமுடைய ஐந்தாம் வருடத்தில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாக இருக்கும்போது, யோசபாத்தின் மகனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ஆட்சிசெய்யத் துவங்கினான்.
\v 17 அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
\s5
\v 18 அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் மகள் அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
\v 19 கர்த்தர்: உன் மகன்களுக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னபடியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் அழிக்கவில்லை.
\s5
\v 20 அவனுடைய நாட்களில் யூதாவுடைய ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் கலகம்செய்து, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
\v 21 அதனாலே யோராம் சகல இரதங்களோடுங்கூட சாயீருக்குப் புறப்பட்டுப் போனான்; அவன் இரவில் எழுந்திருந்து, தன்னைச் சூழ்ந்துகொண்ட ஏதோமியர்களையும் இரதங்களின் தலைவர்களையும் தாக்கியபோது, மக்கள் தங்களுடைய கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
\s5
\v 22 அப்படியே யூதாவுடைய ஆளுகையின் கீழிருந்த ஏதோமியர்கள், இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல கலகம்செய்தார்கள்; அக்காலத்தில்தானே லிப்னா பட்டணத்தாரும் கலகம்செய்தார்கள்.
\v 23 யோராமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த அனைத்தும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 24 யோராம் இறந்து, தாவீதின் நகரத்தில் தன் முன்னோர்களுடன் அடக்கம்செய்யப்பட்டான்; அவனுக்குப் பதிலாக அவனுடைய மகனாகிய அகசியா ராஜாவானான்.
\s1 யூதாவின் ராஜாவாகிய அகசியா
\p
\s5
\v 25 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகன் யோராமுடைய பன்னிரண்டாம் வருடத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா ராஜாவானான்.
\v 26 அகசியா ராஜாவாகிறபோது, இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே ஒரு வருடம் எருசலேமில் அரசாட்சி செய்தான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒம்ரியின் மகளான அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள்.
\v 27 அவன் ஆகாபுடைய வீட்டாரின் வழியே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் ஆகாப் வீட்டாரோடே சம்பந்தம் கலந்திருந்தான்.
\s5
\v 28 அவன் ஆகாபின் மகனாகிய யோராமோடேகூடக் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு போரிடப்போனான்; சீரியர்கள் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
\v 29 ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு போர்செய்யும்போது, சீரியர்கள் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக்கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான்; ஆகாபின் மகனாகிய யோராம் வியாதியாயிருந்ததால், யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்ப்பதற்குப் போனான்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 யெகூ இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யப்படுதல்
\p
\v 1 அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஒருவனை அழைத்து: நீ பயணத்திற்கான உடையணிந்துகொண்டு, இந்தத் தைலக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ.
\v 2 நீ அங்கே சென்றபின்பு, நிம்சியின் மகனான யோசபாத்தின் மகன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து, அங்கே சென்று, அவனைத் தன் சகோதரர்களின் நடுவிலிருந்து எழுந்திருக்கச்செய்து, அவனை ஒரு உள்அறையிலே அழைத்துக்கொண்டுபோய்,
\v 3 தைலக்குப்பியை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதிக்காமல் ஓடிப்போ என்றான்.
\s5
\v 4 அப்படியே தீர்க்கதரிசியின் ஊழியக்காரனாகிய அந்த வாலிபன் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போனான்.
\v 5 அவன் அங்கே சென்றபோது, சேனாதிபதிகள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது அவன்: சேனாதிபதியே, உமக்குச் சொல்லவேண்டிய ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு யெகூ: எங்களில் யாருக்கு என்று கேட்டதற்கு, அவன், சேனாதிபதியாகிய உமக்குத்தான் என்றான்.
\v 6 அவன் எழுந்து, அறைவீட்டிற்குள் பிரவேசித்தான்; அவன் அந்தத் தைலத்தை அவன் தலையின்மேல் ஊற்றி:, அவனை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னைக் கர்த்தருடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன்.
\s5
\v 7 நான் என் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், கர்த்தருடைய சகல ஊழியக்காரர்களின் இரத்தப்பழியையும், யேசபேலின் கையிலே வாங்கும்படி நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடவேண்டும்.
\v 8 ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும்படி, நான் ஆகாபுக்குச் சுவரில் நீர்விடும் ஒரு நாய்முதலாக இருக்காதபடி, இஸ்ரவேலிலே அவனுடையவர்களில் அடிமைபட்டவனையும் மற்றவனையும் கருவறுத்து,
\s5
\v 9 ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் குடும்பத்திற்கும், அகியாவின் மகனாகிய பாஷாவின் குடும்பத்திற்கும் சரியாக்குவேன்.
\v 10 யேசபேலை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் தின்றுவிடும்; அவளை அடக்கம்செய்கிறவன் இல்லையென்று சொல்கிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து ஓடிப்போனான்.
\s5
\v 11 யெகூ தன் எஜமானுடைய ஊழியக்காரர்களிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்திற்கு எதற்காக வந்தான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனிதனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.
\v 12 அதற்கு அவர்கள்: அது பொய், அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அப்பொழுது அவன்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று இன்ன இன்ன பிரகாரமாக என்னிடத்தில் சொன்னான் என்றான்.
\v 13 அப்பொழுது அவர்கள் துரிதமாக அவரவர் தங்கள் ஆடைகளைப் படிகளின் உயரத்தில் அவனுக்கு கீழே விரித்து, எக்காளம் ஊதி: யெகூ ராஜாவானான் என்றார்கள்.
\s1 யோராமையும் அகசியாவையும் யெகூ கொன்றுபோடுதல்
\p
\s5
\v 14 அப்படியே நிம்சியின் மகனாகிய யோசபாத்தின் மகன் யெகூ என்பவன் யோராமுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டினான்; யோராமோ இஸ்ரவேலர்கள் எல்லோரோடுங்கூட கீலேயாத்திலுள்ள ராமோத்திலே சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலினிமித்தம் காவல் வைத்துவைத்தான்.
\v 15 ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே செய்த போரிலே, சீரியர்கள் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்வதற்கு, ராஜாவாகிய யோராம் திரும்பிப்போயிருந்தான். யெகூ என்பவன்; இது உங்களுக்குச் சம்மதமாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிச்செல்ல விடாதிருங்கள் என்றான்.
\v 16 அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான், யோராம் அங்கே வியாதியாகக் கிடந்தான்; யோராமைப்பார்க்க, யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அங்கே வந்திருந்தான்.
\s5
\v 17 யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைக் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பி சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்.
\v 18 அந்தக் குதிரைவீரன்: அவனுக்கு எதிர்கொண்டுபோய், சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பின்னே திரும்பிவா என்றான். அப்பொழுது ஜாமக்காரன்: அனுப்பப்பட்டவன் அவர்கள் இருக்கும் இடம்வரை போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றான்.
\s5
\v 19 ஆகையால் வேறொரு குதிரைவீரனை அனுப்பினான், அவன் அவர்களிடத்தில் போய்: சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பின்னே திரும்பிவா என்றான்.
\v 20 அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடம்வரை போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் மகனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாக ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.
\s5
\v 21 அப்பொழுது யோராம்: இரதத்தை ஆயத்தப்படுத்து என்றான்; அவனுடைய இரதத்தை ஆயத்தப்படுத்தினபோது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அவனவன் தன்தன் இரதத்தில் ஏறி யெகூவுக்கு நேராகப் புறப்பட்டு, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் நிலத்திலே அவனுக்கு எதிர்ப்பட்டார்கள்.
\v 22 யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கும்போது சமாதானம் ஏது என்றான்.
\s5
\v 23 அப்பொழுது யோராம் தன் இரதத்தைத் திருப்பிக்கொண்டு ஓடிப்போய், அகசியாவை நோக்கி: அகசியாவே, இது சதி என்றான்.
\v 24 யெகூ தன் கையால் வில்லை நாணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் ஊடுருவிப் போகத்தக்கதாக, அவனை அவனுடைய புயங்களின் நடுவே எய்தான்; அதினால் அவன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான்.
\s5
\v 25 அப்பொழுது யெகூ, தன் சேனாதிபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்துபோடு; நானும் நீயும் ஒன்றுசேர்ந்து அவனுடைய தகப்பனாகிய ஆகாபின் பின்னே குதிரையில் ஏறிவருகிறபோது, கர்த்தர் இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.
\v 26 நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவனுடைய மகன்களின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில் உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது கர்த்தர் சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.
\s5
\v 27 இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாக ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின்தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் அருகில் இருக்கிற கூர் என்னும் மலையின்மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே இறந்துபோனான்.
\v 28 அவனுடைய வேலைக்காரர்கள் அவனை இரதத்தில் ஏற்றி எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களோடு அவனுடைய கல்லறையிலே அடக்கம்செய்தார்கள்.
\s5
\v 29 இந்த அகசியா, ஆகாபுடைய மகனாகிய யோராமின் பதினோராம் வருடத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
\s1 யேசபேல் யெகூவினால் கொல்லப்படுதல்
\p
\s5
\v 30 யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையை அலங்கரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து,
\v 31 யெகூ பட்டணத்து நுழைவாயிலுக்கு வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி பாதுகாக்கப்பட்டானா என்றாள்.
\v 32 அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என்னுடன் இருக்கிறது யார் யார் என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று அதிகாரிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.
\s5
\v 33 அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு,
\v 34 உள்ளேபோய், சாப்பிட்டுக் குடித்த பின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த பெண்ணைப் பார்த்து, அவளை அடக்கம்செய்யுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான்.
\s5
\v 35 அவர்கள் அவளை அடக்கம்செய்யப்போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையும் தவிர வேறொன்றையும் காணவில்லை.
\v 36 ஆகையால் அவர்கள் திரும்பிவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும்,
\v 37 இதுதான் யேசபேலென்று சொல்லமுடியாத அளவிற்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 ஆகாபின் குடும்பத்தினர் கொல்லப்படுதல்
\p
\v 1 ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது மகன்கள் இருந்ததால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பர்களிடத்திற்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்திற்கும் கடிதங்களை எழுதியனுப்பினான்.
\v 2 அதில்: உங்கள் எஜமானுடைய மகன்கள் உங்களோடிருக்கிறார்களே; இரதங்களும், குதிரைகளும், பாதுகாப்பான பட்டணமும் ஆயுதங்களும் உங்களுக்கு இருக்கிறதே.
\v 3 இப்போதும் இந்தக் கடிதம் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் உங்கள் எஜமானுடைய மகன்களில் உத்தமமும் செம்மையுமாயிருக்கிறவனைப் பார்த்து, அவனை அவன் தகப்பனுடைய சிங்காசனத்தின்மேல் வைத்து, உங்கள் எஜமானுடைய குடும்பத்துக்காக போர்செய்யுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
\s5
\v 4 அவர்கள் மிகவும் பயந்து: இதோ, இரண்டு ராஜாக்கள் அவனுக்கு முன்பாக நிற்கவில்லையே; நாங்கள் எப்படி நிற்போம் என்றார்கள்.
\v 5 ஆகையால் அரண்மனை விசாரிப்புக்காரனும், நகர விசாரிப்புக்காரனும், மூப்பர்களும், பிள்ளைகளின் விசாரிப்புக்காரர்களும்: நாங்கள் உமது அடியார்கள், நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்; நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குவதில்லை; உமது பார்வைக்கு நலமானதைச் செய்யும் என்று யெகூவுக்குச் சொல்லியனுப்பினார்கள்.
\s5
\v 6 அப்பொழுது அவன்: அவர்களுக்கு இரண்டாம் கடிதத்தை எழுதினான்; அதில்: நீங்கள் என்னோடு சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால், உங்கள் ஆண்டவனுடைய மகன்களின் தலைகளைத் துண்டித்து, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. ராஜாவின் மகன்களாகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனிதர்களோடு இருந்தார்கள்.
\v 7 இந்த கடிதம் அவர்களிடத்தில் வந்தபோது, அவர்கள் ராஜாவின் மகன்களாகிய எழுபது பேர்களையும் பிடித்து வெட்டி, அவர்கள் தலைகளைக் கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலிலிருக்கிற அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.
\s5
\v 8 அனுப்பப்பட்ட ஆள் வந்து: ராஜகுமாரரின் தலைகளைக் கொண்டுவந்தார்கள் என்று அவனுக்கு அறிவித்தபோது, அவன் விடியற்காலம்வரை அவைகளை பட்டணத்து நுழைவாயிலில் இரண்டு குவியலாகக் குவித்து வையுங்கள் என்றான்.
\v 9 மறுநாள் காலமே அவன் வெளியேவந்து நின்று, சகல மக்களையும் நோக்கி: நீங்கள் நீதிமான்களல்லவா? இதோ, நான் என் எஜமானுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி அவனைக் கொன்றுபோட்டேனே; ஆனாலும் இவர்கள் எல்லோரையும் கொன்றவன் யார்?
\s5
\v 10 ஆதலால் கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்; கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார் என்றான்.
\v 11 யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச் சேர்ந்த மனிதர்களையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடி, யெகூ கொன்றுபோட்டான்.
\s5
\v 12 பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்குப் போகப் புறப்பட்டான்; வழியிலே அவன் ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்திற்கு வந்தபோது,
\v 13 யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரர்களை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்கள்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜாத்தியின் பிள்ளைகளையும் நலம் விசாரிப்பதற்குப் போகிறோம் என்றார்கள்.
\v 14 அப்பொழுது அவன்: இவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்; அவர்களை உயிரோடே பிடித்து, நாற்பத்திரண்டுபேர்களாகிய அவர்களை ஆட்டுமயிர் கத்தரிக்கிற கிணற்றின் அருகில் வெட்டிப்போட்டார்கள்; அவர்களில் ஒருவனையும் அவன் மீதியாக விடவில்லை.
\s5
\v 15 அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் மகனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாக இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாக இருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,
\v 16 நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவனுடைய இரதத்தின்மேல் ஏற்றினார்கள்.
\v 17 அவன் சமாரியாவுக்கு வந்தபோது, கர்த்தர் எலியாவோடே சொன்ன வார்த்தையின்படியே, சமாரியாவில் ஆகாபுக்கு மீதியான யாவரும் அழியும்வரை கொன்றுபோட்டான்.
\s1 பாகாலின் தீர்க்கதரிசிகள் கொல்லப்படுதல்
\p
\s5
\v 18 பின்பு யெகூ மக்களையெல்லாம் கூட்டி, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி.
\v 19 இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக்காரர்களையும், அவனுடைய சகல ஆசாரியர்களையும் என்னிடத்தில் வரவழையுங்கள்; ஒருவனும் விடுபடக்கூடாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரர்களை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாகச் செய்தான்.
\v 20 பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பு நாளை நியமியுங்கள் என்று யெகூ சொன்னான்; அப்படியே நியமித்தார்கள்.
\s5
\v 21 யெகூ இஸ்ரவேல் தேசமெங்கும் அதைச் சொல்லியனுப்பினதால், பாகாலின் பணிவிடைக்காரர்கள் எல்லோரும் வந்தார்கள்; வராதவன் ஒருவனுமில்லை; அவர்கள் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்ததால் பாகாலின் கோவில் நான்குபுறமும் நிறைந்திருந்தது.
\v 22 அப்பொழுது அவன், ஆடைகள் வைக்கும் அறைகளின் கண்காணிப்பாளனை நோக்கி: பாகாலின் பணிவிடைக்காரர்கள் அனைவருக்கும் ஆடைகளை எடுத்துக்கொண்டுவா என்றான்; அவர்களுக்கு ஆடைகளை எடுத்துக்கொண்டுவந்தான்.
\s5
\v 23 பின்பு யெகூ: ரேகாபின் மகனாகிய யோனதாபோடுகூடப் பாகாலின் கோவிலுக்குள் சென்று, பாகாலின் பணிவிடைக்காரர்களை நோக்கி: பாகாலின் ஊழியக்காரர்களைத் தவிர கர்த்தரின் ஊழியக்காரர்களில் ஒருவரும் இங்கே உங்களோடு இருக்காமல் கவனமாகப் பாருங்கள் என்றான்.
\v 24 அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகனங்களையும் செலுத்த உட்பிரவேசித்த பின்பு, யெகூ வெளியிலே எண்பதுபேரைத் தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனிதர்களில் ஒருவனை எவன் தப்பவிடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாக அவனைத் தப்பவிட்டவனுடைய ஜீவன் ஈடாயிருக்கும் என்றான்.
\s5
\v 25 சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்தபோது, யெகூ வீரர்களையும் அவர்களின் தலைவர்களையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் வீரர்களும் அவர்களின் தலைவர்களும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகாலின் கோவிலைச் சேர்ந்த இடமெங்கும் போய்,
\v 26 கோவிலின் சிலைகளை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி,
\v 27 சிலையைத் தகர்த்து, பாகாலின் கோவிலை இடித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல கழிப்பிடமாக்கினார்கள்.
\v 28 இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இல்லாமல் அழித்துப்போட்டான்.
\s5
\v 29 ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டுவிலகவில்லை.
\v 30 கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாகச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்திற்குச் செய்ததால், உன் மகன்கள் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நான்கு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்.
\v 31 ஆனாலும் யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த யெரொபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவும் இல்லை.
\s5
\v 32 அந்நாட்கள்முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகச் செய்தார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் தோற்கடித்து,
\v 33 யோர்தான் துவங்கிக் கிழக்கிலுள்ள அர்னோன் நதிக்கு அருகிலுள்ள ஆரோவேர் முதற்கொண்டிருக்கிற கீலேயாத்திலும் பாசானிலுமுள்ள காதியர்கள், ரூபேனியர்கள், மனாசேயர்கள் இவர்களுடைய தேசமாகிய கீலேயாத் முழுவதையும் தோற்கடித்தான்.
\s5
\v 34 யெகூவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவனுடைய அனைத்து வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 35 யெகூ இறந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.
\v 36 யெகூ சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்த நாட்கள் இருபத்தெட்டு வருடங்கள்.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\s1 அத்தாலியாளும் யோவாசும்
\p
\v 1 அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் மகன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சத்தார்கள் அனைவரையும் கொலைசெய்தாள்.
\v 2 ராஜாவாகிய யோராமின் மகளும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலைசெய்யப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசை யாருக்கும் தெரியாமல் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் வளர்ப்புத் தாயையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் படுக்கையறையில் ஒளித்துவைத்தார்கள்.
\v 3 இவளோடேகூட அவன் ஆறுவருடங்கள் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் அரசாட்சிசெய்தாள்.
\s5
\v 4 ஏழாம் வருடத்திலே யோய்தா நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவர்களையும் காவலாளர்களையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைசெய்து, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே உடன்படிக்கை செய்துகொண்டு, அவர்களுக்கு ராஜாவின் மகனைக் காண்பித்து,
\v 5 அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரண்மனையைக் காவல் காக்கவேண்டும்.
\v 6 மூன்றில் ஒரு பங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒரு பங்கு காவலாளர்களின் காவலின் பின்னே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாகக் காக்கவேண்டும்.
\s5
\v 7 இப்படியே ஓய்வு நாளில் முறைப்படியே உங்களில் இரண்டு பங்குபேர், ராஜாவினிடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும்.
\v 8 நீங்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்தவர்களாக, ராஜாவைச் சுற்றிலும் வரிசையாக நிற்கவேண்டும்; வரிசைகளுக்குள் புகுந்துவருகிறவன் கொலை செய்யப்படவேண்டும்; ராஜா வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.
\s5
\v 9 ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் போகிறவர்களுமாகிய தங்கள் மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள்.
\v 10 ஆசாரியன் கர்த்தரின் ஆலயத்தில் தாவீதுராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான்.
\s5
\v 11 காவலாளர்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாக, ஆலயத்தின் வலப்பக்கம் தொடங்கி அதன் இடப்பக்கம்வரை, பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள்.
\v 12 அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம் செய்து: ராஜா வாழ்க என்று சொல்லி கரங்களைத் தட்டினார்கள்.
\s5
\v 13 ஓடிவருகிற மக்களின் ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள மக்களிடம் வந்து,
\v 14 இதோ, முறைமையின்படியே ராஜா தூண் அருகில் நிற்கிறதையும், ராஜாவின் அருகில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று சத்தமிட்டாள்.
\s5
\v 15 ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவர்களாகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்கு வெளியே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லக்கூடாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.
\v 16 அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரண்மனைக்குள் குதிரைகள் நுழைகிற வழியிலே அவள் போகும்போது, அவளைக் கொன்றுபோட்டார்கள்.
\s5
\v 17 அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய மக்களாயிருக்கும்படிக்கு, ராஜாவும் மக்களும் கர்த்தரோடே உடன்படிக்கைசெய்யவும், ராஜாவும் மக்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைசெய்யவும் செய்து,
\v 18 பின்பு தேசத்தின் மக்கள் எல்லோரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் சிலைகளையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் அதிகாரிகளை ஏற்படுத்தினான்.
\s5
\v 19 நூறுபேருக்கு அதிபதிகளையும், தலைவர்களையும், காவலாளர்களையும் தேசத்தின் மக்களையும் கூட்டி, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கச்செய்து, அவனைக் காவலாளர்களின் வாசல் வழியாக ராஜஅரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான்.
\v 20 தேசத்தின் மக்கள் எல்லோரும் மகிழ்ந்து, நகரம் அமைதலானது. அத்தாலியாளையோ ராஜாவின் அரண்மனைஅருகில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.
\s5
\v 21 யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\s1 யோவாஸ் தேவாலயத்தைப் பழுதுபார்த்தல்
\p
\v 1 யெகூவின் ஏழாம் வருடத்தில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருடங்கள் அரசாட்சி செய்தான்; பெயெர்செபா ஊரைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் சிபியாள்.
\v 2 ஆசாரியனாகிய யோய்தா யோவாசுக்கு அறிவுரைசெய்த நாட்களெல்லாம் அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
\v 3 மேடைகளை மாத்திரம் அகற்றவில்லை; மக்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்.
\s5
\v 4 யோவாஸ் ஆசாரியர்களை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்படுகிற பிரதிஷ்டை செய்யப்பட்ட பொருட்களாகிய எல்லாப் பணத்தையும், மக்களின் வரிப்பணத்தையும், மீட்புக்காக மதிக்கப்படுகிற ஆட்களின் பணத்தையும், கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரும்படி அவரவர் தம்தம் மனதிலே நியமித்திருக்கும் எல்லாப் பணத்தையும்,
\v 5 ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்களின் கையில் வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது இருக்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான்.
\s5
\v 6 ஆனாலும் ராஜாவாகிய யோவாசின் இருபத்துமூன்றாம் வருடம்வரை ஆசாரியர்கள் ஆலயத்தைப் பழுதுபார்க்காததால்,
\v 7 ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து: நீங்கள் ஆலயத்தை ஏன் பழுதுபார்க்கவில்லை? இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல், அதை ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக விட்டுவிடுங்கள் என்றான்.
\v 8 அப்பொழுது ஆசாரியர்கள் மக்களின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளாமலும், ஆலயத்தைப் பழுதுபார்க்காமலும் இருக்கிறதற்குச் சம்மதித்தார்கள்.
\s5
\v 9 ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தின் அருகில் கர்த்தருடைய ஆலயத்தில் மக்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள்.
\v 10 பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் அதிகாரியும் பிரதான ஆசாரியனும் வந்து: கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி பைகளிலேபோட்டுக் கட்டி,
\s5
\v 11 எண்ணின பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்திலே கண்காணிப்பாளர்களின் கையிலே கொடுப்பார்கள்; அதை அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பிகளுக்கும்,
\v 12 கொல்லருக்கும், கல்தச்சருக்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குத் தேவையான எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள்.
\s5
\v 13 கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், வாத்தியக்கருவிகளும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் செய்யப்படாமல்,
\v 14 கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்காக வேலை செய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள்.
\s5
\v 15 வேலைசெய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படி, பணத்தைப் பெற்றுக்கொண்ட மனிதர்களின் கையிலே கணக்குக் கேட்காமலிருந்தார்கள்; அவர்கள் அதை உண்மையாகச் செய்தார்கள்.
\v 16 குற்றப்பிராயசித்தப் பணமும் பாவபிராயசித்தப் பணமும் கர்த்தருடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப்படவில்லை; அது ஆசாரியர்களைச் சேர்ந்தது.
\s5
\v 17 அதற்குப் பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் போர்செய்து அதைப் பிடித்தான்; அதன் பின்பு எருசலேமுக்கு விரோதமாகப்போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான்.
\v 18 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் முன்னோர்களாகிய யோசபாத், யோராம், அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்செய்துவைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம் செய்துவைத்ததையும், கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலுமுள்ள பொக்கிஷங்களில் கிடைத்த பொன் எல்லாவற்றையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமைவிட்டுத் திரும்பிப்போனான்.
\s5
\v 19 யோவாசின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 20 யோவாசின் ஊழியக்காரர்கள் எழும்பி சதிசெய்து, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.
\v 21 சிமியாதின் மகனாகிய யோசகார், சோமேரின் மகனாகிய யோசபாத் என்னும் அவனுடைய ஊழியக்காரர்கள் அவனைக் கொன்றார்கள்; இறந்துபோன அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய அமத்சியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாஸ்
\p
\v 1 அகசியா என்னும் யூதாவுடைய ராஜாவின் மகனாகிய யோவாசுடைய இருபத்துமூன்றாம் வருடத்தில் யெகூவின் மகனாகிய யோவாகாஸ் இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே பதினேழுவருடங்கள் அரசாட்சிசெய்து,
\v 2 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றி நடந்தான்; அவைகளைவிட்டு அவன் விலகவில்லை.
\s5
\v 3 ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலர்களின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் மகனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.
\v 4 யோவாகாஸ் கர்த்தருடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்; சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதால் அவர்கள் ஒடுங்கிப்போகிறதைப் பார்த்து: கர்த்தர் அவனுக்குச் செவிகொடுத்தார்.
\v 5 கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததால், அவர்கள் சீரியருடைய ஆளுகையின்கீழிருந்து விடுதலையானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் மக்கள் முன்புபோல தங்களுடைய கூடாரங்களிலே குடியிருந்தார்கள்.
\s5
\v 6 ஆகிலும் இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த யெரொபெயாம் வீட்டாரின் பாவங்களை அவர்கள்விட்டு விலகாமல் அதிலே நடந்தார்கள்; சமாரியாவிலிருந்த விக்கிரகத்தோப்பும் நிலைத்திருந்தது.
\v 7 யோவாகாசுக்குச் சீரியாவின் ராஜா, ஐம்பது குதிரைவீரர்களையும், பத்து இரதங்களையும், பத்தாயிரம் காலாட்களையுமே அல்லாமல், மக்களில் வேறொன்றும் மீதியாக வைக்கவில்லை; அவன் அவர்களை அழித்து, போரடிக்கும்இடத்தின் தூளைப்போல ஆக்கிவிட்டான்.
\s5
\v 8 யோவாகாசின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 9 யோவாகாஸ் இறந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோவாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s1 இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ்
\p
\s5
\v 10 யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருடத்தில் யோவாகாசின் மகனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பதினாறுவருடங்கள் அரசாட்சிசெய்து,
\v 11 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் அவைகளையெல்லாம் செய்தான்.
\s5
\v 12 யோவாசின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் போர்செய்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 13 யோவாஸ் இறந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களின் அருகில் அடக்கம்செய்யப்பட்டான்.
\s5
\v 14 அவனுடைய நாட்களில் எலிசா மரணத்திற்கு ஏதுவான வியாதியாகக் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்திற்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.
\v 15 எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான்.
\v 16 அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து:
\s5
\v 17 கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும் என்றான்; அவன் அதைத் திறந்தபோது, எலிசா: எய்யும் என்றான்; இவன் எய்தபோது, அவன்: அது கர்த்தருடைய ரட்சிப்பின் அம்பும், சீரியர்களிடமிருந்து விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமாக இருக்கிறது; நீர் ஆப்பெக்கிலே சீரியர்களை முற்றிலும் முறியடிப்பீர் என்றான்.
\v 18 பின்பு அம்புகளைப் பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்றுமுறை அடித்து நின்றான்.
\v 19 அப்பொழுது தேவனுடைய மனிதன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுமுறை அடித்தீரானால், அப்பொழுது சீரியர்களை முற்றிலும் முறியடிப்பீர்; இப்பொழுதோ சீரியர்களை மூன்றுமுறை மாத்திரம் முறியடிப்பீர் என்றான்.
\s5
\v 20 எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்செய்தார்கள்; மறுவருடத்திலே மோவாபியரின் கூட்டம் தேசத்திலே வந்தது.
\v 21 அப்பொழுது அவர்கள், ஒரு மனிதனை அடக்கம் செய்யப்போகும்போது, அந்தக் கூட்டத்தைக் கண்டு, அந்த மனிதனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனிதனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனிதன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
\s5
\v 22 யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான்.
\v 23 ஆனாலும் கர்த்தர் அவர்களுக்கு மனமிரங்கி, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்க விருப்பமில்லாமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார்.
\v 24 சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இறந்துபோய், அவன் மகனாகிய பெனாதாத் அவனுடைய இடத்திலே ராஜாவான பின்பு,
\v 25 யோவாகாசின் மகனாகிய யோவாஸ், ஆசகேலோடே போர்செய்து, தன் தகப்பனாகிய யோவாகாசின் கையிலிருந்து பிடித்துக்கொண்ட பட்டணங்களை அவனுடைய மகனாகிய பெனாதாத்தின் கையிலிருந்து திரும்பப் பிடித்துக்கொண்டான்; மூன்றுமுறை யோவாஸ் அவனை முறியடித்து இஸ்ரவேலின் பட்டணங்களைத் திரும்பக் கட்டிக்கொண்டான்.
\s5
\c 14
\cl அத்தியாயம்– 14
\s1 யூதாவின் ராஜாவாகிய அமத்சியா
\p
\v 1 இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் மகனாகிய யோவாசுடைய இரண்டாம் வருடத்திலே யூதாவின் ராஜாவாகிய யோவாசின் மகன் அமத்சியா ராஜாவானான்.
\v 2 அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருடங்கள் அரசாட்சி செய்தான்; எருசலேம் நகரத்தைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் யொவதானாள்.
\v 3 அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் அல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான்.
\s5
\v 4 மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம்காட்டி வந்தார்கள்.
\v 5 அரசாட்சி அவன் கையிலே உறுதிப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் வேலைக்காரர்களைக் கொன்றுபோட்டான்.
\s5
\v 6 ஆனாலும் பிள்ளைகளினாலே தகப்பன்களும், தகப்பன்களினாலே பிள்ளைகளும் கொலை செய்யப்படாமலும், அவனவன் செய்த பாவத்தினாலே அவனவன் கொலை செய்யப்படவேண்டும் என்று மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்ட பிரகாரம் கொலைசெய்தவர்களின் பிள்ளைகளை அவன் கொல்லவில்லை.
\v 7 அவன் உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியர்களில் பத்தாயிரம்பேரைக் கொன்று, போர்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பெயர் வைத்தான்.
\s5
\v 8 அப்பொழுது அமத்சியா யெகூவின் மகனாகிய யோவாகாசின் மகன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் பிரதிநிதிகளை அனுப்பி: நம்முடைய திறமையைப் பார்ப்போம் வா என்று சொல்லச் சொன்னான்.
\v 9 அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக திருமணம் செய்துகொடு என்று சொல்லச்சொன்னது; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழியே ஓடும்போது அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
\v 10 நீ ஏதோமியர்களை முறியடித்ததால் உன் இருதயம் உன்னைக் கர்வமடையச்செய்தது; நீ பெருமை பாராட்டிக்கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும்படி, பொல்லாப்பை ஏன் வருவித்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 11 ஆனாலும் அமத்சியா கேட்காமல்போனான்; ஆகையால், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும், யூதாவின் ராஜா அமத்சியாவும், தங்கள் திறமையைப் பார்க்கிறபோது,
\v 12 யூதா மக்கள் இஸ்ரவேலருக்கு முன்பாகத் தோற்று அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
\s5
\v 13 அகசியாவின் மகனாகிய யோவாசின் மகன் அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவையோ, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் பெத்ஷிமேசிலே பிடித்து, எருசலேமுக்கு வந்து, எருசலேமின் மதிலிலே எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலைவாசல்வரை நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு,
\v 14 கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனைப் பொக்கிஷங்களிலும் கிடைத்த பொன் வெள்ளி அனைத்தையும், சகல பணிமுட்டுகளையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.
\s5
\v 15 யோவாஸ் செய்த மற்ற செயல்பாடுகளும், அவனுடைய வல்லமையும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு போர்செய்த விதமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 16 யோவாஸ் இறந்தபின், சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களின் அருகில் அடக்கம்செய்யப்பட்டான்; அவன் மகனாகிய யெரொபெயாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\v 17 இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் மகன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் மகன் அமத்சியா பதினைந்துவருடங்கள் உயிரோடிருந்தான்.
\v 18 அமத்சியாவின் மற்ற செயல்பாடுகள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 19 எருசலேமிலே அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டினார்கள்; அப்பொழுது லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவர்கள் அவன் பின்னே லாகீசுக்கு மனிதர்களை அனுப்பி, அங்கே அவனைக் கொன்றுபோட்டு,
\s5
\v 20 குதிரைகள்மேல் அவனை எடுத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் எருசலேமில் இருக்கிற தாவீதின் நகரத்திலே தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்யப்பட்டான்.
\v 21 யூதா மக்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவனுடைய தகப்பனாகிய அமத்சியாவின் இடத்தில் ராஜாவாக்கினார்கள்.
\v 22 ராஜா இறந்தபின்பு, இவன் ஏலாதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.
\s1 இஸ்ரவேலின் ராஜாவாகிய இரண்டாம் யெரொபெயாம்
\p
\s5
\v 23 யூதாவின் ராஜாவாகிய யோவாசின் மகன் அமத்சியாவின் பதினைந்தாம் வருடத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் மகன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தொரு வருடங்கள் ஆட்சிசெய்து,
\v 24 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டுவிலகவில்லை.
\v 25 காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் மகன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்வரை உள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்.
\s5
\v 26 இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடியது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார்.
\v 27 இஸ்ரவேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் மகனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை இரட்சித்தார்.
\s5
\v 28 யெரொபெயாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் போர்செய்து, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 29 யெரொபெயாம் இறந்தபின், அவன் மகனாகிய சகரியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\c 15
\cl அத்தியாயம்– 15
\s1 யூதாவின் ராஜாவாகிய அசரியா
\p
\v 1 இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருடத்தில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் மகன் அசரியா ராஜாவானான்.
\v 2 அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருடங்கள் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் எக்கோலியாள்.
\v 3 அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
\s5
\v 4 மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்.
\v 5 கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததால், அவன் தன் மரணநாள்வரை தொழுநோயாளியாக இருந்து, தனித்து ஒரு வீட்டிலே குடியிருந்தான்; ராஜாவின் மகனாகிய யோதாம் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.
\s5
\v 6 அசரியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 7 அசரியா இறந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோதாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s1 இஸ்ரவேலின் ராஜாவாகிய சகரியா
\p
\s5
\v 8 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருடத்திலே யெரொபெயாமின் மகனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ஆட்சிசெய்து,
\v 9 தன் முன்னோர்கள் செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை.
\s5
\v 10 யாபேசின் மகனாகிய சல்லூம் அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, மக்களுக்கு முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\v 11 சகரியாவின் மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 12 உன் மகன்கள் நான்காம் தலைமுறைவரை இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே நிறைவேறியது.
\s1 இஸ்ரவேலின் ராஜாவாகிய சல்லூம்
\p
\s5
\v 13 யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருடத்தில் யாபேசின் மகனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான்.
\v 14 காதியின் மகனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் மகனாகிய சல்லூமை சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\v 15 சல்லூமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த சதித்திட்டமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 16 அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சா தொடங்கி அதின் எல்லைகளையும் தாக்கினான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லையென்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளின் கர்ப்பங்களையெல்லாம் கிழித்துப்போட்டான்.
\s1 இஸ்ரவேலின் ராஜாவாகிய மெனாகேம்
\p
\s5
\v 17 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் வருடத்தில், காதியின் மகனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பத்துவருடங்கள் அரசாட்சிசெய்து, அவன் தன் நாட்களிலெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
\v 18 இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு விலகாதிருந்தான்.
\s5
\v 19 அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாக வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் அரசாட்சியை தன் கையில் பலப்படுத்துவதற்காக, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.
\v 20 இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவிற்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் சுமத்தினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான்.
\s5
\v 21 மெனாகேமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 22 மெனாகேம் இறந்தபின், அவனுடைய மகனாகிய பெக்காகியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s1 இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காகியா
\p
\s5
\v 23 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருடத்தில், மெனாகேமின் மகனாகிய பெக்காகியா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டுவருடங்கள் அரசாட்சிசெய்து,
\v 24 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு விலகவில்லை.
\s5
\v 25 ஆனாலும் ரெமலியாவின் மகனாகிய பெக்கா என்னும் அவனுடைய அதிகாரி அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, கீலேயாத் மனிதர்களில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆரியேயையும் ராஜாவின் வீடாகிய அரண்மனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\v 26 பெக்காகியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\s1 இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்கா
\p
\s5
\v 27 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருடத்தில், ரெமலியாவின் மகனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருடங்கள் அரசாட்சிசெய்து,
\v 28 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை.
\s5
\v 29 இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிமக்களைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
\v 30 ஏலாவின் மகனாகிய ஓசெயா ரெமலியாவின் மகனாகிய பெக்காவுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, அவனை உசியாவின் மகனாகிய யோதாமின் இருபதாம் வருடத்தில் வெட்டிக்கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\v 31 பெக்காவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\s1 யூதாவின் ராஜாவாகிய யோதாம்
\p
\s5
\v 32 இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் மகன் பெக்காவின் இரண்டாம் வருடத்தில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் மகன் யோதாம் ராஜாவானான்.
\v 33 அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருடங்கள் அரசாண்டான்; சாதோக்கின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் எருசாள்.
\s5
\v 34 அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.
\v 35 மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.
\v 36 யோதாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 37 அந்நாட்களிலே கர்த்தர் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் மகனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார்.
\v 38 யோதாம் இறந்தபின். தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஆகாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\c 16
\cl அத்தியாயம்– 16
\s1 யூதாவின் ராஜாவாகிய ஆகாஸ்
\p
\v 1 ரெமலியாவின் மகனாகிய பெக்காவின் பதினேழாம் வருடத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் மகன் ஆகாஸ் ராஜாவானான்.
\v 2 ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருடங்கள் அரசாண்டான்; அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,
\s5
\v 3 இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே தன் மகன் முதற்கொண்டு அக்கினியில் சுட்டெரித்துப்போட்டான்.
\v 4 மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின் கீழும் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தான்.
\s5
\v 5 அப்பொழுது சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் மகன் பெக்காவும், எருசலேமின்மேல் போர்செய்யவந்து ஆகாசை முற்றுகையிட்டார்கள்; ஆனாலும் வெற்றிபெற முடியவில்லை.
\v 6 அக்காலத்திலே சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு. யூதர்களை ஏலாத்திலிருந்து துரத்தினான்; சீரியர்கள் ஏலாத்திற்கு வந்து இந்நாள்வரைக்கும் அவ்விடத்திலே குடியிருக்கிறார்கள்.
\s5
\v 7 ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி: நான் உம்முடைய அடியானும் உம்முடைய மகனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாக எழும்பின சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னைத் தப்புவியும் என்று சொல்லச் சொல்லி;
\v 8 கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷங்களிலும் கிடைத்த வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவிற்குக் காணிக்கையாக அனுப்பினான்.
\v 9 அசீரியா ராஜா அவனுக்குச் செவிகொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிமக்களைக் கீர் என்னும் பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.
\s5
\v 10 அப்பொழுது ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலுள்ள அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசருக்கு எதிர்கொண்டுபோய்த் தமஸ்குவிலுள்ள பலிபீடத்தைக் கண்டான். ராஜாவாகிய ஆகாஸ் அந்தப் பலிபீடத்தின் தோற்றத்தையும், அதினுடைய சகல வேலைப்பாடாகிய அதின் மாதிரியையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அனுப்பினான்.
\v 11 ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து வருகிறதற்குள் ஆசாரியனாகிய உரியா அதைப்போலவே ஒரு பலிபீடத்தைக் கட்டி, ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து அனுப்பின கட்டளையின்படியெல்லாம் செய்தான்.
\v 12 ராஜா தமஸ்குவிலிருந்து வந்தபோது, அவன் அந்தப் பலிபீடத்தைப் பார்த்து, அந்தப் பலிபீடத்திற்கு அருகில் வந்து, அதின்மேல் பலியிட்டு,
\s5
\v 13 தன் சர்வாங்க தகனபலியையும் தன் போஜனபலியையும் தகனித்து, தன் பானபலியை ஊற்றி, தன் சமாதானபலிகளின் இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.
\v 14 கர்த்தரின் சந்நிதியிலிருந்த வெண்கலப் பலிபீடத்தை அவன் தன் பலிபீடத்திற்கும் கர்த்தரின் ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முன்புறத்திலிருந்து எடுத்து, அதைத் தன் பலிபீடத்திற்கு வடபுறமாக வைத்தான்.
\s5
\v 15 ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலை சர்வாங்க தகனபலியையும், மாலை போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல மக்களுடைய சர்வாங்க தகனபலி, போஜனபலி, பானபலி ஆகியவற்றைச் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் உதவி கேட்கிறதற்கு உதவும் என்றான்.
\v 16 ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் ஆசாரியனாகிய உரியா செய்தான்.
\s5
\v 17 பின்னும் ராஜாவாகிய ஆகாஸ் ஆதாரங்களின் பலகைகளை அகற்றிவிட்டு, அவைகளின் மேலிருந்த கொப்பரைகளை எடுத்து, கடல்தொட்டியைக் கீழே நிற்கிற வெண்கல காளைகளின்மேலிருந்து இறக்கி, அதைக் கற்களின் தளவரிசையிலே வைத்து,
\v 18 ஆலயத்தின் அருகே கட்டப்பட்டிருந்த ஓய்வுநாளின் மண்டபத்தையும், ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும், அசீரியருடைய ராஜாவினிமித்தம் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான்.
\s5
\v 19 ஆகாஸ் செய்த மற்ற செயல்பாடுகள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 20 ஆகாஸ் இறந்தபின், அவன் தாவீதின் நகரத்தில் தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்யப்பட்டான்; அவன் மகனாகிய எசேக்கியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\c 17
\cl அத்தியாயம்– 17
\s1 இஸ்ரவேலின் கடைசி ராஜாவாகிய ஓசெயா
\p
\v 1 யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருடத்தில், ஏலாவின் மகனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருடங்கள் அரசாட்சிசெய்து,
\v 2 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களைப்போல் செய்யவில்லை.
\v 3 அவனுக்கு விரோதமாக அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் வந்தான்; அப்பொழுது ஓசெயா அவனுக்குக் கீழிருந்து, அவனுக்கு வரி செலுத்தினான்.
\s5
\v 4 ஓசெயா எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பினதும், தனக்கு வருடந்தோறும் செய்ததுபோல், வரி செலுத்தாமல் போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு, அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான்.
\v 5 அசீரியா ராஜா தேசம் எங்கும் போய், சமாரியாவுக்கும் வந்து அதை மூன்றுவருடங்கள் முற்றுகையிட்டிருந்தான்.
\v 6 ஓசெயாவின் ஒன்பதாம் வருடத்தில் அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய் அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும், ஆபோரிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
\s1 பாவத்திற்காக இஸ்ரவேல் சிறையாகக் கொண்டுசெல்லப்படுதல்
\p
\s5
\v 7 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் மக்கள் பாவம்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து,
\v 8 கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களின் வழிபாடுகளிலும் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிபாடுகளிலும் நடந்துகொண்டிருந்தார்கள்.
\s5
\v 9 செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் மக்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள்வரையுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி,
\v 10 உயரமான சகல மேட்டின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் தங்களுக்குச் சிலைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் நிறுத்தி,
\s5
\v 11 கர்த்தர் தங்களை விட்டுக் குடிவிலக்கின மக்களைப்போல, சகல மேடைகளிலும் தூபம்காட்டி, கர்த்தருக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து,
\v 12 இப்படிச் செய்யத்தகாது என்று கர்த்தர் தங்களுக்குச் சொல்லியிருந்தும், அருவருப்பான விக்கிரகங்களை வழிபட்டு வந்தார்கள்.
\s5
\v 13 நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பி, நான் உங்கள் முன்னோர்களுக்குக் கட்டளையிட்டதும், என் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமான நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் தீர்க்கதரிசிகள், தரிசனம் காண்கிறவர்கள் எல்லோரையும்கொண்டு இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் மிக உறுதியாக எச்சரித்துக்கொண்டிருந்தும்,
\s5
\v 14 அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய கர்த்தர்மேல் விசுவாசிக்காமலிருந்த கடினக் கழுத்துள்ள தங்கள் முன்னோர்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி,
\v 15 அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் முன்னோர்களோடுசெய்த அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்கு மிக உறுதியாகக் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்துவிட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த மக்களுக்குப் பின்சென்று,
\s5
\v 16 தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலை வணங்கினார்கள்.
\v 17 அவர்கள் தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் அக்கினியில் சுட்டெரித்துப்போட்டு, குறிகேட்டு சகுனங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள்.
\v 18 ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதா வம்சம் மாத்திரமே மீதியானது.
\s5
\v 19 யூதா மக்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள்.
\v 20 ஆகையால் கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளும்வரை ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
\s5
\v 21 இஸ்ரவேலர்கள் தாவீது வம்சத்தைவிட்டுப் பிரிந்து, நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் கர்த்தரைவிட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும் செய்தான்.
\v 22 அப்படியே இஸ்ரவேல் மக்கள் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து,
\v 23 கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்கள் எல்லோரையும் கொண்டு சொல்லியிருந்தபடி. அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிறவரைக்கும், அவைகளைவிட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்திலிருந்து அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.
\s1 சமாரியா மீண்டும் குடியேற்றப்படுதல்
\p
\s5
\v 24 அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்வாயிமிலும் இருந்து மனிதர்களை வரச்செய்து, அவர்களை இஸ்ரவேல் மக்களுக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாகக் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள்.
\v 25 அவர்கள் அங்கே குடியேறினது முதல், கர்த்தருக்குப் பயப்படாததால், கர்த்தர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது.
\v 26 அப்பொழுது மக்கள் அசீரியா ராஜாவை நோக்கி: நீர் இங்கேயிருந்து அனுப்பி, சமாரியாவின் பட்டணங்களிலே குடியேறச்செய்த மக்கள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாததால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாததால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள்.
\s5
\v 27 அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படி, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான்.
\v 28 அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான்.
\s5
\v 29 ஆனாலும் அந்தந்த மக்கள் தங்கள் தங்கள் தேவர்களைத் தங்களுக்கு உண்டாக்கி, அந்தந்த மக்கள் குடியேறின தங்கள் தங்கள் பட்டணங்களில் சமாரியர்கள் உண்டாக்கிய மேடைகளின் கோவில்களில் வைத்தார்கள்.
\v 30 பாபிலோனின் மனிதர்கள் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனிதர்கள் நேர்காலையும், ஆமாத்தின் மனிதர்கள் அசிமாவையும்,
\v 31 ஆவியர்கள் நிபேகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள், செப்பர்வியர்கள் செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் சுட்டெரித்து வந்தார்கள்.
\s5
\v 32 அவர்கள் கர்த்தருக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் இழிவானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள்.
\v 33 அப்படியே கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த மக்களுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களை வணங்கியும் வந்தார்கள்.
\s5
\v 34 இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின முறைகளின்படியே செய்து வருகிறார்கள்; அவர்கள் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுய திட்டங்கள் முறைமைகளின்படியாகிலும், கர்த்தர் இஸ்ரவேல் என்று பெயரிட்ட யாக்கோபின் மக்களுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் ஒத்தவிதமாகிலும் செய்கிறதுமில்லை.
\v 35 கர்த்தர் இவர்களோடே உடன்படிக்கைசெய்து, இவர்களுக்குக் கற்பித்தது என்னவென்றால்: நீங்கள் அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், அவர்களைப் பணிந்துகொள்ளாமலும், வணங்காமலும், அவர்களுக்குப் பலியிடாமலும்,
\s5
\v 36 உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த கர்த்தருக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு,
\v 37 அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்கள், முறைமைகள், நியாயப்பிரமாணம், கற்பனைகள் ஆகியவற்றை நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
\v 38 நான் உங்களோடே செய்த உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும்,
\s5
\v 39 உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்களுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார்.
\v 40 ஆனாலும் அவர்கள் அவைகளைக் கேட்காமல் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள்.
\v 41 அப்படியே அந்த மக்கள் கர்த்தருக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் முன்னோர்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்து வருகிறார்கள்.
\s5
\c 18
\cl அத்தியாயம்– 18
\s1 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா
\p
\v 1 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் மூன்றாம் வருடத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் மகனாகிய எசேக்கியா ராஜாவானான்.
\v 2 அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருடங்கள் அரசாண்டான்; சகரியாவின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் ஆபி.
\v 3 அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
\s5
\v 4 அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே உண்டாக்கியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்வரை இஸ்ரவேல் மக்கள் அதற்குத் தூபம் காட்டிவந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பெயரிட்டான்.
\v 5 அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.
\s5
\v 6 அவன் கர்த்தரைவிட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.
\v 7 ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடமெங்கும் அவனுக்கு அனுகூலமானது; அவன் அசீரியா ராஜாவிற்குக் கட்டுப்படாமல், அவனுடைய அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.
\v 8 அவன் பெலிஸ்தியர்களைக் காசாவரை அதின் எல்லைகள் வரைக்கும், காவலாளர்கள் காக்கிற கோபுரங்கள் துவங்கி பாதுகாப்பான நகரங்கள் வரைக்கும் தாக்கினான்.
\s5
\v 9 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் ஏழாம் வருடத்திற்குச் சரியான எசேக்கியா ராஜாவின் நான்காம் வருடத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாக வந்து அதை முற்றுகையிட்டான்.
\v 10 மூன்றுவருடங்கள் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருடத்திலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருடத்திலும் சமாரியா பிடிபட்டது.
\s5
\v 11 அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும், ஆபோரிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
\v 12 அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், அவருடைய உடன்படிக்கையையும் கர்த்தரின் தாசனாகிய மோசே கற்பித்த யாவற்றையும் மீறி, அதைக் கேட்காமலும் அதின்படி செய்யாமலும் போனார்கள்.
\s5
\v 13 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினான்காம் வருடத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து அவைகளைப் பிடித்தான்.
\v 14 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவிற்கு ஆள் அனுப்பி: நான் குற்றம்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான்.
\v 15 ஆதலால் எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.
\s5
\v 16 அக்காலத்திலே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா கர்த்தருடைய ஆலயக்கதவுகளிலும் நிலைகளிலும் தான் அழுத்தியிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவைகளை அசீரியா ராஜாவிற்குக் கொடுத்தான்.
\s1 சனகெரிப் எருசலேமைப் பயமுறுத்துதல்
\p
\v 17 ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும், ரப்சாரீசையும், ரப்சாக்கேயையும் பெரிய படையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்தின் வாய்க்காலின் அருகில் நின்று,
\v 18 ராஜாவை வரவழைத்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகனாகிய யோவாக் என்னும் கணக்காளனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.
\s5
\v 19 ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?
\v 20 போருக்கு மந்திர ஆலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய் பேச்சேயல்லாமல் வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
\v 21 இதோ, நெரிந்த நாணற்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவனுடைய உள்ளங்கையில் பட்டு ஊடுருவிப்போகும்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்.
\s5
\v 22 நீங்கள் என்னிடத்தில்: எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களானால், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும் எருசலேமையும் நோக்கி: எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.
\v 23 நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத் தகுதியுள்ளவர்களைச் சம்பாதிக்க முடியுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதம்செய்.
\s5
\v 24 செய்யாமல்போனால், நீ என் ஆண்டவனுடைய வேலைக்காரர்களில் ஒரே ஒரு சிறிய தலைவனின் முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரர்களும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்?
\v 25 இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த இடத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாகப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்.
\s5
\v 26 அப்பொழுது இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும், செப்னாவும், யோவாகும், ரப்சாக்கேயைப் பார்த்து: உமது அடியார்களோடு சீரியமொழியிலே பேசும், அந்த மொழி எங்களுக்குத் தெரியும்; மதிலிலிருக்கிற மக்களின் காதுகள் கேட்க எங்களோடே யூதமொழியிலே பேசவேண்டாம் என்றார்கள்.
\v 27 அதற்கு ரப்சாக்கே: உங்களோடுகூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் சிறுநீரைக் குடிக்கவும் மதிலிலே தங்கியிருக்கிற மனிதர்களிடத்திற்கே அல்லாமல், உன் எஜமானிடத்திற்கும் உன்னிடத்திற்குமா என் எஜமான் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,
\s5
\v 28 ரப்சாக்கே நின்றுகொண்டு யூதமொழியிலே உரத்தசத்தமாக: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
\v 29 எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
\v 30 கர்த்தர் நம்மை நிச்சயமாகத் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பச்செய்வான்; அதற்கு இடம்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.
\s5
\v 31 எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே சமாதானமாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்திற்கு ஒப்பான தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சைரசமும் உள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனும் உள்ள தேசமுமாகிய வேறொரு நாட்டிற்கு அழைத்துக்கொண்டுபோகும் வரைக்கும்,
\v 32 அவனவன் தன்தன் திராட்சச்செடியின் பழத்தையும் தன்தன் அத்திமரத்தின் பழத்தையும் சாப்பிட்டு, அவனவன் தன்தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்; இவ்விதமாக நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்; கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று எசேக்கியா உங்களுக்குப் போதிக்கும்போது அதைக் கேட்காதிருங்கள்.
\s5
\v 33 மக்களுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
\v 34 ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயிம், ஏனா, ஈவாப் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
\v 35 கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்த தேசங்களுடைய எல்லா தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்கிறார் என்று சொன்னான்.
\s5
\v 36 ஆனாலும் மக்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லாமல் மவுனமாக இருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.
\v 37 அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகன் யோவாக் என்னும் கணக்காளனும் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
\s5
\c 19
\cl அத்தியாயம்– 19
\s1 எருசலேமின் விடுதலை முன்னறிவிக்கப்படுதல்
\p
\v 1 ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்து, சணல் ஆடையை அணிந்துகொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,
\v 2 அரண்மனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், எழுத்தனாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பர்களையும், ஆமோத்தின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு சணல் ஆடையை அணிந்துகொண்டவர்களாக அனுப்பினான்.
\s5
\v 3 இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கடிந்துகொள்ளுதலும் அவமானமும் அநுபவிக்கிற நாள்; பிரசவகாலம் நெருங்கியிருக்கிறது, பெற்றெடுக்கவோ பெலனில்லை.
\v 4 ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் எஜமானால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளுக்காக தண்டனை செய்வார்; ஆகையால் இன்னும் மீதியாக இருக்கிறவர்களுக்காக விண்ணப்பம்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.
\s5
\v 5 இவ்விதமாக எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர்கள் ஏசாயாவிடம் வந்து சொன்னார்கள்.
\v 6 அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் வேலைக்காரர்கள் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.
\v 7 இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்திற்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழச்செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் எஜமானிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
\s5
\v 8 அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் போர்செய்கிறதைக் கண்டான்.
\v 9 இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு போர்செய்யப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி:
\s5
\v 10 நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை ஏமாற்ற இடம்கொடாதே.
\v 11 இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் அழித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ?
\s5
\v 12 என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் மக்களையும், அவர்களுடைய தேவர்கள் தப்புவித்தது உண்டோ?
\v 13 ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயிம், ஏனா, ஈவா பட்டணங்களின் ராஜாக்களும் எங்கே என்று சொல்லுங்கள் என்றான்.
\s1 எசேக்கியாவின் ஜெபம்
\p
\s5
\v 14 எசேக்கியா பிரதிநிதிகளின் கையிலிருந்து கடிதத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப்போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,
\v 15 கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்செய்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே. நீர் ஒருவரே பூமியின் ராஜ்ஜியங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.
\s5
\v 16 கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை ஏளனம் செய்யும்படி சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும்.
\v 17 கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த மக்களையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,
\v 18 அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது உண்மைதான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனிதர்கள் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை அழித்துப்போட்டார்கள்.
\s5
\v 19 இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்ஜியங்கள் அனைத்தும் அறியும்படிக்கு, எங்களை அவனுடைய கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்செய்தான்.
\s1 சனகெரிப்பின் தோல்வியைக் குறித்த ஏசாயாவின் தீர்க்கதரிசனம்
\p
\s5
\v 20 அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிப்பினிமித்தம் நீ என்னை நோக்கிச் செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்.
\v 21 அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்செய்கிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையை அசைக்கிறாள்.
\v 22 யாரை அவமதித்து தூஷித்தாய்? யாருக்கு விரோதமாக உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாக அல்லவோ உன் கண்களைப் பெருமையாக ஏறெடுத்தாய்?
\s5
\v 23 உன் பிரதிநிதிகளைக்கொண்டு நீ ஆண்டவரை அவமதித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் உச்சிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரி மரங்களையும் நான் வெட்டி, அதின் கடைசிவரை, அதின் செழுமையான காடுவரை வருவேன் என்றும்,
\v 24 நான் அந்நிய தேசங்களில் கிணறுவெட்டி தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் பாதுகாப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறண்டுபோகச்செய்தேன் என்றும் சொன்னாய்.
\s5
\v 25 நான் வெகுகாலத்திற்குமுன்பு அதை ஏற்படுத்தி, ஆரம்பநாட்கள் முதல் அதைத் திட்டம்செய்தேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ பாதுகாப்பான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கச்செய்தேன்.
\v 26 அதினாலே அவைகளின் குடிமக்கள் சோர்வடைந்து, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கிவளருவதற்கு முன் உலர்ந்துபோகும் பயிருக்கும் சமமானார்கள்.
\s5
\v 27 உன் உட்காருதலையும், போக்கையும், வரவையும், நீ எனக்கு விரோதமாகக் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.
\v 28 நீ எனக்கு விரோதமாகக் கொந்தளித்து, வீராப்பு பேசினது என் காதுகளுக்கு எட்டினதால், நான் என் கொக்கியை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டுபோவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.
\s5
\v 29 உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருடத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருடத்திலே தானாக விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருடத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் பழங்களை சாப்பிடுவீர்கள்.
\v 30 யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.
\v 31 மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.
\s5
\v 32 ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராக முற்றுகை போடுவதுமில்லை.
\v 33 அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
\v 34 என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.
\s5
\v 35 அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியர்களின் பாளயத்தில் லட்சத்தெண்பத்து ஐயாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அதிகாலையில் எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லோரும் செத்த பிரதேங்களாகக் கிடந்தார்கள்.
\v 36 அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப்போய் நினிவேயில் இருந்துவிட்டான்.
\v 37 அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவனுடைய மகனாகிய அத்ரமலேக்கும், சரேத்சேரும் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டு, ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவனுடைய மகனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.
\s5
\c 20
\cl அத்தியாயம்– 20
\s1 எசேக்கியாவின் வியாதி
\p
\v 1 அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்தருவாயில் இருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், இறந்துபோவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
\v 2 அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:
\v 3 ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாக நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்செய்தான். எசேக்கியா மிகவும் அழுதான்.
\s5
\v 4 ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது:
\v 5 நீ திரும்பிப்போய், என் மக்களின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவாய்.
\s5
\v 6 உன் நாட்களோடே பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் இந்த நகரத்திற்கு ஆதரவாக இருப்பேன் என்று சொல் என்றார்.
\v 7 பின்பு ஏசாயா: அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, புண்ணின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்.
\s5
\v 8 எசேக்கியா ஏசாயாவை நோக்கி: கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம் நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான்.
\v 9 அதற்கு ஏசாயா: கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வார் என்பதற்கு, கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாக நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப் போகவேண்டுமோ, பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான்.
\s5
\v 10 அதற்கு எசேக்கியா: நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப்போவது எளிதான காரியம்; அப்படி வேண்டாம்; நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பவேண்டும் என்றான்.
\v 11 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் ஆகாசுடைய சூரிய கடிகாரத்தில் கோட்டுக்கு கோடு முன்னோக்கிச் சென்ற நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பும்படி செய்தார்.
\s1 பாபிலோனிலிருந்து வந்த பிரதிநிதிகள்
\p
\s5
\v 12 அக்காலத்திலே பலாதானின் மகனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்திற்கு கடிதங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.
\v 13 எசேக்கியா அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரண்மனையிலும் தன் ராஜ்ஜியத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை.
\s5
\v 14 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனிதர்கள் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான்.
\v 15 அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் எவைகளைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.
\s5
\v 16 அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்.
\v 17 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது முன்னோர்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
\v 18 நீர் பெறப்போகிற உமது சந்ததியாகிய உமது மகன்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே அரண்மனை வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
\s5
\v 19 அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.
\v 20 எசேக்கியாவின் மற்ற செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் வாய்க்காலையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரச்செய்ததும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 21 எசேக்கியா இறந்தபின், அவனுடைய மகனாகிய மனாசே அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\c 21
\cl அத்தியாயம்– 21
\s1 யூதாவின் ராஜாவாகிய மனாசே
\p
\v 1 மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் அரசாண்டான்; அவனுடைய தாயின் பெயர் எப்சிபாள்.
\v 2 கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,
\v 3 தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளை வணங்கினான்.
\s5
\v 4 எருசலேமிலே என் நாமத்தை விளங்கச்செய்வேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,
\v 5 கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி,
\v 6 தன் மகனைப் பலியாக அக்கினியில் சுட்டெரித்து, நாள் நட்சத்திரம் பார்க்கிறவனுமாயிருந்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாகச் செய்தான்.
\s5
\v 7 இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என்நாமத்தை என்றைக்கும் விளங்கச் செய்வேன் என்று கர்த்தர் தாவீதோடும் அவனுடைய மகனாகிய சாலொமோனோடும் சொல்லி குறித்த ஆலயத்திலே அவன் செய்த தோப்புவிக்கிரகத்தை வைத்தான்.
\v 8 நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாக இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்தை விட்டு அலையச் செய்வதில்லை என்று சொல்லியிருந்தார்.
\v 9 ஆனாலும் அவர்கள் கேட்காமல்போனார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அழித்த மக்கள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாகச் செய்ய மனாசே அவர்களைத் தூண்டிவிட்டான்.
\s5
\v 10 ஆகையால் கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களைக் கொண்டு உரைத்தது:
\v 11 யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் அருவருப்பான சிலைகளால் யூதாவையும் பாவம் செய்யவைத்ததால்,
\v 12 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும், யூதாவின்மேலும் வரச்செய்து,
\s5
\v 13 எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தட்டைத் துடைத்து, பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன்.
\v 14 அவர்கள் தங்களுடைய முன்னோர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, என்னைக் கோபப்படுத்தி வந்ததால், என் சுதந்தரத்தில் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் பகைஞரின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன்.
\v 15 தங்கள் பகைஞர்களுக்கெல்லாம் கொள்ளையும் சூறையுமாகப் போவார்கள் என்றார்.
\s5
\v 16 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவம்செய்யவைத்த அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நான்கு மூலைகள்வரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாக, குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான்.
\v 17 மனாசேயின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 18 மனாசே இறந்தபின், அவன் ஊசாவின் தோட்டமாகிய தன் அரண்மனைத் தோட்டத்தில் அடக்கம்செய்யப்பட்டான்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ஆமோன் ராஜாவானான்.
\s1 யூதாவின் ராஜாவாகிய ஆமோன்
\p
\s5
\v 19 ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருடங்கள் எருசலேமில் அரசாண்டான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் மகளான அவனுடைய தாயின் பெயர் மெசுல்லேமேத்.
\v 20 அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,
\s5
\v 21 தன் தகப்பன் நடந்த எல்லா வழியிலும் நடந்து, தன் தகப்பன் சேவித்த அருவருப்பான சிலைகளை வணங்கி அவைகளைப் பணிந்துகொண்டு,
\v 22 கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டான்.
\v 23 ஆமோனின் ஊழியக்காரர்கள் அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, ராஜாவை அவன் அரண்மனையிலே கொன்றுபோட்டார்கள்.
\s5
\v 24 அதினால் தேசத்து மக்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டியவர்களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் மகனாகிய யோசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள்.
\v 25 ஆமோன் செய்த மற்ற செயல்பாடுகள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 26 அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம்செய்யப்பட்டான்; அவன் இடத்திலே அவனுடைய மகனாகிய யோசியா ராஜாவானான்.
\s5
\c 22
\cl அத்தியாயம்– 22
\s1 நியாயப்பிரமாண புத்தகம் கண்டெடுக்கப்படுதல்
\p
\v 1 யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருடங்கள் எருசலேமில் அரசாண்டான்; போஸ்காத் ஊரைச் சேர்ந்த அதாயாவின் மகளான அவனுடைய தாயின் பெயர் எதிதாள்.
\v 2 அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.
\s5
\v 3 ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருடத்திலே, ராஜா மெசுல்லாமின் மகனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் எழுத்தனைக் கர்த்தரின் ஆலயத்திற்கு அனுப்பி:
\v 4 நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்டதும் வாசல் காக்கிறவர்கள் மக்களின் கையிலே வாங்கப்பட்டதுமான பணத்தை அவன் தொகைபார்த்து,
\v 5 பின்பு அவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களின் கையிலே கொடுத்து, அவர்கள் அதைக் கர்த்தரின் ஆலயத்தைப் பழுது பார்க்கிறதற்காக அதிலிருக்கிற வேலைக்காரர்களாகிய,
\s5
\v 6 தச்சர்களுக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொல்லர்களுக்கும், ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்குத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும்.
\v 7 ஆகிலும் அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாக நடப்பிக்கிறபடியினால், அவர்களிடத்தில் அதின் கணக்கைக் கேட்கவேண்டியதில்லை என்று சொல் என்றான்.
\s5
\v 8 அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா எழுத்தனாகிய சாப்பானை நோக்கி: நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புத்தகத்தைக் கண்டுபிடித்தேன் என்று சொல்லி, அந்தப் புத்தகத்தை சாப்பானிடத்தில் கொடுத்தான்; அவன் அதை வாசித்தான்.
\v 9 அப்பொழுது சாப்பான் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவிற்கு மறுஉத்தரவு சொல்லி, ஆலயத்திலே தொகையிட்டுக் கிடைத்த பணத்தை உமது அடியார்கள் சேர்த்துக் கட்டி, அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களின் கையிலே கொடுத்தார்கள் என்று சொன்னான்.
\v 10 எழுத்தனாகிய சாப்பான் மேலும் ராஜாவை நோக்கி: ஆசாரியனாகிய இல்க்கியா என்னிடத்தில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தான் என்று அறிவித்து, அதை ராஜாவிற்கு முன்பாக வாசித்தான்.
\s5
\v 11 ராஜா நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,
\v 12 ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகனாகிய அகீக்காமுக்கும், மிகாயாவின் மகனாகிய அக்போருக்கும், எழுத்தனாகிய சாப்பானுக்கும், ராஜாவின் வேலைக்காரனாகிய அசாயாவுக்கும் ராஜா கட்டளையிட்டது:
\v 13 கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளுக்காக நீங்கள் போய், எனக்காகவும் மக்களுக்காகவும் யூதா அனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய முன்னோர்கள் இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்காததால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய கடுங்கோபம் பெரியது என்றான்.
\s5
\v 14 அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் மகனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் ஆடைகள் வைக்கும் அறைகளின் கண்காணிப்பாளனின் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப்போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் பகுதியில் குடியிருந்தாள்.
\v 15 அவள் அவர்களை நோக்கி: உங்களை என்னிடத்திற்கு அனுப்பினவரிடத்தில் நீங்கள் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்:
\v 16 இதோ, யூதாவின் ராஜா, வாசித்த புத்தகத்தின் வார்த்தைகளிலெல்லாம் எழுதப்பட்டிருக்கிற பொல்லாப்பை நான் இந்த இடத்தின்மேலும், அதின் குடிமக்களின்மேலும் வரச்செய்வேன்.
\s5
\v 17 அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபமுண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபம்காட்டினதால், என் கடுங்கோபம் இந்த இடத்தின்மேல் பற்றியெரியும்; அது அவிந்துபோவது இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லுங்கள்.
\v 18 கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீர் கேட்ட வார்த்தைகளைக் குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
\v 19 நான் இந்த இடத்திற்கும் அதின் குடிமக்களுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எனக்குமுன்பாக அழுததால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.
\s5
\v 20 ஆகையால், இதோ, நான் உன்னை உன் முன்னோர்களுக்கு அருகில் சேர்த்துக்கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய்; நான் இந்த இடத்தின்மேல் வரச்செய்யும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றாள்; இந்த மறுஉத்தரவை அவர்கள் போய் ராஜாவிற்குச் சொன்னார்கள்.
\s5
\c 23
\cl அத்தியாயம்– 23
\s1 யோசியா உடன்படிக்கையைப் புதுப்பித்தல்
\p
\v 1 அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பர்களையெல்லாம் வரவழைத்தான்; அவர்கள் அவனிடத்தில் கூடினபோது,
\v 2 ராஜாவும், அவனோடு யூதாவின் மனிதர்கள் யாவரும் எருசலேமின் குடிமக்கள் அனைவரும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சிறியோர்முதல் பெரியோர்வரையுள்ள அனைவரும் கர்த்தரின் ஆலயத்திற்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.
\s5
\v 3 அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கை செய்தான்; மக்கள் எல்லோரும் உடன்படிக்கைக்கு உடன்பட்டார்கள்.
\s5
\v 4 பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் செய்யப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெளியேற்ற, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் பகுதியிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்கு வெளியே கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகச்செய்தான்.
\v 5 யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபம்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபம்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான்.
\s5
\v 6 தோப்பு விக்கிரகத்தை கர்த்தரின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்கு வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோய், அதைக் கீதரோன் ஆற்றின் ஓரத்திலே சுட்டெரித்து, அதைத் தூளாக்கி, அந்தத் தூளைப் பொதுமக்களுடைய பிரேதக் குழிகளின்மேல் போடச்செய்தான்.
\v 7 கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே பெண்கள் தோப்பு விக்கிரகத்திற்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள அவமானமான ஆண் விபசாரக்காரர்களின் வீடுகளை இடித்துப்போட்டான்.
\s5
\v 8 அவன் யூதாவின் பட்டணங்களிலுள்ள எல்லா ஆசாரியர்களையும் வரச்சொல்லி, கேபாமுதல் பெயெர்செபாவரை ஆசாரியர்கள் தூபம்காட்டியிருந்த மேடைகளைத் தீட்டாக்கி, பட்டணத்தின் நுழைவாயில்களின் மேடைகளையும், பட்டணத்து வாசலுக்குப்போகும் வழிக்கு இடதுபுறமாயிருக்கிற பட்டணத்தலைவனாகிய யோசுவாவின் வாசற்படியில் இருந்த மேடையையும் இடித்துப்போட்டான்.
\v 9 மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரர்களுக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களை சாப்பிடுவதற்குமாத்திரம் அனுமதிபெற்றார்கள்.
\s5
\v 10 ஒருவனும் மோளேகுக்கென்று தன் மகனையாகிலும் தன் மகளையாகிலும் நெருப்பிலே பலியிடாமலிருக்க, பென் இன்னோம் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் இடத்தையும் அவன் தீட்டாக்கி,
\v 11 கர்த்தரின் ஆலயத்திற்குள் போகிற இடம்துவங்கி, பட்டணத்திற்கு வெளியே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறைவீடுவரை யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான்.
\s5
\v 12 யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும், மனாசே கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின் தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான்.
\v 13 எருசலேமுக்கு எதிரே இருக்கிற நாசமலையின் வலதுபுறத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் சீதோனியர்களின் அருவருப்பாகிய அஸ்தரோத்திற்கும், மோவாபியர்களின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோனியர்களின் அருவருப்பாகிய மில்கோமுக்கும் கட்டியிருந்த மேடைகளையும் ராஜா தீட்டாக்கி,
\v 14 சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை நிர்மூலமாக்கி, அவைகளின் இடத்தை மனிதர்களின் எலும்புகளால் நிரப்பினான்.
\s5
\v 15 இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த பலிபீடமும் மேடையும் ஆகிய அவ்விரண்டையும் அவன் இடித்து, அந்த மேடையைச் சுட்டெரித்துத் தூளாக்கி, விக்கிரகத்தோப்பையும் சுட்டெரித்தான்.
\v 16 யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையிலிருக்கிற கல்லறைகளைக் கண்டு, ஆட்களை அனுப்பி, அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்துவரச்செய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனிதன் கூறின கர்த்தருடைய வார்த்தையின்படியே, அவைகளை அந்தப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து அதைத் தீட்டாக்கினான்.
\s5
\v 17 அப்பொழுது அவன்: நான் காண்கிற அந்தக் குறிப்படையாளம் என்ன என்று கேட்டதற்கு, அந்தப் பட்டணத்து மனிதர்கள்: அது யூதாவிலிருந்து வந்து, நீர் செய்த இந்தக் கிரியைகளைப் பெத்தேலின் பலிபீடத்திற்கு விரோதமாகக் கூறி அறிவித்த தேவனுடைய மனிதனின் கல்லறை என்றார்கள்.
\v 18 அதற்கு அவன்: இருக்கட்டும், ஒருவனும் அவன் எலும்புகளைத் தொடவேண்டாம் என்றான்; அப்படியே அவனுடைய எலும்புகளைச் சமாரியாவிலிருந்து வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு விட்டுவிட்டார்கள்.
\s5
\v 19 கர்த்தருக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேலின் ராஜாக்கள் சமாரியாவின் பட்டணங்களில் உண்டாக்கியிருந்த மேடைகளின் கோவில்களையெல்லாம் யோசியா தகர்த்து, பெத்தேலிலே தான் செய்த செய்கைகளின்படியே அவைகளுக்குச் செய்து,
\v 20 அவ்விடங்களில் இருக்கிற மேடைகளின் ஆசாரியர்களையெல்லாம் பலிபீடங்களின்மேல் கொன்றுபோட்டு, அவைகளின்மேல் மனிதர்களின் எலும்புகளைச் சுட்டெரித்து, எருசலேமுக்குத் திரும்பினான்.
\s5
\v 21 பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல மக்களுக்கும் கட்டளையிட்டான்.
\v 22 இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் துவங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா அனுசரிக்கப்படவில்லை.
\v 23 ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருடத்திலே கர்த்தருக்கு இந்தப் பஸ்கா எருசலேமிலே அனுசரிக்கப்பட்டது.
\s5
\v 24 ஆசாரியனாகிய இல்க்கியா கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை நிறைவேற்றும்படிக்கு, யோசியா ஜோதிடர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், சிலைகளையும் அருவருப்பான சிலைகளையும், யூதாதேசத்திலும் எருசலேமிலும் காணப்பட்ட எல்லா அருவருப்புகளையும் நிர்மூலமாக்கினான்.
\v 25 கர்த்தரிடத்திற்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போன்ற ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை.
\s5
\v 26 ஆகிலும், மனாசே கர்த்தருக்குக் கோபமுண்டாக்கின சகல காரியங்களினிமித்தமும் அவர் யூதாவின்மேல் கொண்ட தம்முடைய மகா கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பாமல்:
\v 27 நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டதுபோல யூதாவையும் என் முகத்தைவிட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார்.
\s5
\v 28 யோசியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 29 அவனுடைய நாட்களில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்நேகோ அசீரியா ராஜாவிற்கு விரோதமாக ஐபிராத்து நதிக்குப் போகிறபோது ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; பார்வோன்நேகோ அவனை மெகிதோவிலே கண்டபோது, அவனைக் கொன்றுபோட்டான்.
\v 30 மரணமடைந்த அவனை அவனுடைய வேலைக்காரர்கள் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்செய்தார்கள்; அப்பொழுது தேசத்தின் மக்கள் யோசியாவின் மகனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்செய்து, அவன் தகப்பனுடைய இடத்தில் அவனை ராஜாவாக்கினார்கள்.
\s1 யூதாவின் ராஜாவாகிய யோவாகாஸ்
\p
\s5
\v 31 யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்; லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின் மகளான அவனுடைய தாயின் பெயர் அமுத்தாள்.
\v 32 அவன் தன் முன்னோர்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
\v 33 அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக் கட்டுவித்து, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தி,
\s5
\v 34 யோசியாவின் மகனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் இடத்தில் ராஜாவாக வைத்து, அவன் பெயரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திற்குப் போய் அங்கே மரணமடைந்தான்.
\v 35 அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்படி அவன் தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பார்வோன்நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாக தேசத்து மக்களின் கையிலே சுமத்தினான்.
\s1 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம்
\p
\s5
\v 36 யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருடங்கள் எருசலேமில் அரசாண்டான்; ரூமா ஊரைச்சேர்ந்த பெதாயாமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் செபுதாள்.
\v 37 அவன் தன் முன்னோர்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
\s5
\c 24
\cl அத்தியாயம்– 24
\p
\v 1 அவனுடைய நாட்களிலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருடங்கள் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்செய்தான்.
\v 2 அப்பொழுது கர்த்தர் கல்தேயர்களின் படைகளையும், சீரியர்களின் படைகளையும், மோவாபியர்களின் படைகளையும், அம்மோனியர்களின் படைகளையும் அவன்மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிப்பதற்கு வரவிட்டார்.
\s5
\v 3 மனாசே தன் எல்லாச் செய்கைகளினாலும் செய்த பாவங்களினிமித்தம் யூதாவைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றும்படி கர்த்தருடைய கட்டளையினால் அப்படி நடந்தது.
\v 4 அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்க விருப்பமில்லாதிருந்தார்.
\s5
\v 5 யோயாக்கீமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 6 யோயாக்கீம் இறந்தபின், அவனுடைய மகனாகிய யோயாக்கீன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\v 7 எகிப்தின் ராஜா பின்பு தன் தேசத்திலிருந்து புறப்பட்டு வரவில்லை; எகிப்தின் நதிதுவங்கி ஐபிராத்து நதிவரை எகிப்தின் ராஜாவிற்கு இருந்த யாவையும் பாபிலோன் ராஜா பிடித்திருந்தான்.
\s1 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீன்
\p
\s5
\v 8 யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதங்கள் அரசாண்டான்; எருசலேம் ஊரைச்சேர்ந்த எல்நாத்தானின் மகளான அவனுடைய தாயின் பெயர் நெகுஸ்தாள்.
\v 9 அவன் தன் தகப்பன் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
\s5
\v 10 அக்காலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் வீரர்கள் எருசலேமுக்கு வந்தார்கள்; நகரம் முற்றுகையிடப்பட்டது.
\v 11 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய வீரர்கள் நகரத்தை முற்றுகையிடும்போது அவனும் அதற்கு விரோதமாக வந்தான்.
\v 12 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவனுடைய தாயும், ஊழியக்காரர்களும், பிரபுக்களும், அதிகாரிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருடத்திலே பிடித்துக்கொண்டான்.
\s5
\v 13 அங்கேயிருந்து கர்த்தருடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தில் உண்டாக்கியிருந்த பொன் பணிமுட்டுகளையெல்லாம் கர்த்தர் சொல்லியிருந்தபடியே உடைத்துப்போட்டு,
\v 14 எருசலேமியர்கள் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பத்தாயிரம்பேர்களையும், சகல தச்சர்களையும் கொல்லர்களையும் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; தேசத்தில் ஏழைமக்களைத் தவிர வேறொருவரும் மீதியாயிருக்கவில்லை.
\s5
\v 15 அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் பெண்களையும், அவன் அதிகாரிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோனான்.
\v 16 இப்படியே பாபிலோன் ராஜா பராக்கிரமசாலிகளான மனிதர்களாகிய ஏழாயிரம்பேர்களையும், தச்சர்களும் கொல்லர்களுமாகிய ஆயிரம்பேர்களையும், போர்செய்யத்தக்க பலசாலிகளையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோனான்.
\v 17 அவனுக்குப் பதிலாகப் பாபிலோன் ராஜா அவனுடைய சிறிய தகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக ஏற்படுத்தி, அவனுக்கு சிதேக்கியா என்று வேறுபெயரிட்டான்.
\s1 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா
\p
\s5
\v 18 சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொருவருடங்கள் எருசலேமிலே அரசாண்டான்; லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின் மகளான அவனுடைய தாயின் பெயர் அமுத்தாள்.
\v 19 யோயாக்கீம் செய்தபடியெல்லாம் அவனும் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
\v 20 எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றிவிடும்வரை, அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவிற்கு விரோதமாகக் கலகமும் செய்தான்.
\s5
\c 25
\cl அத்தியாயம்– 25
\s1 எருசலேமின் வீழ்ச்சி
\p
\v 1 அவன் அரசாட்சிசெய்யும் ஒன்பதாம்வருடம் பத்தாம்மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அவனுடைய எல்லா படைகளோடு எருசலேமுக்கு விரோதமாக வந்து, அதற்கு எதிரே முகாமிட்டு, சுற்றிலும் அதற்கு எதிராக முற்றுகை சுவர்களைக் கட்டினான்.
\v 2 அப்படியே ராஜாவாகிய சிதேக்கியாவின் பதினோராம் வருடம்வரை நகரம் முற்றுகையிடப்பட்டிருந்தது.
\v 3 நான்காம் மாதம் ஒன்பதாந்தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் மக்களுக்கு உணவு இல்லாமல்போனது; நகரத்தின் மதிலில் உடைப்பு ஏற்பட்டது.
\s5
\v 4 அப்பொழுது கல்தேயர்கள் நகரத்தைச் சூழ்ந்திருக்கும்போது, போர்வீரர்கள் எல்லோரும் இரவுநேரத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாக இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவும் சமபூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.
\v 5 கல்தேயரின் போர்வீரர்கள் ராஜாவைப் பின்தொடர்ந்து எரிகோவின் சமபூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய படைகளெல்லாம் அவனைவிட்டுச் சிதறிப்போனது.
\s5
\v 6 அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,
\v 7 சிதேக்கியாவின் மகன்களை அவனுடைய கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
\s5
\v 8 ஐந்தாம் மாதம் ஏழாந்தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருடத்திலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் மெய்க்காப்பாளர்களின் தலைவன் எருசலேமுக்கு வந்து,
\v 9 கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரண்மனையையும், எருசலேமின் சகல கட்டிடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான்.
\v 10 மெய்க்காப்பாளர்களின் தலைவனோடிருந்த கல்தேயரின் போர்வீரர்கள் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள்.
\s5
\v 11 நகரத்தில் மீதியான மற்ற மக்களையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற மக்கள்கூட்டத்தையும், மெய்க்காப்பாளர்களின் தலைவனாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.
\v 12 தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சத்தோட்டக்காரர்களாகவும் பயிரிடுகிறவர்களாகவும் விட்டிருந்தான்.
\s5
\v 13 கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர்கள் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.
\v 14 செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.
\v 15 சுத்தப் பொன்னும் சுத்த வெள்ளியுமான தூபகலசங்களையும் கலங்களையும் மெய்க்காப்பாளர்களின் தலைவன் எடுத்துக்கொண்டான்.
\s5
\v 16 சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காக உண்டாக்கிய இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்தின் எடைக்கு கணக்கில்லை.
\v 17 ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதுளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போலவே இருந்தது.
\s5
\v 18 மெய்க்காப்பாளர்களின் தலைவன், பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரர்களையும் பிடித்தான்.
\v 19 நகரத்திலே அவன் போர்வீரர்களின் விசாரிப்புக்காரனாகிய அதிகாரி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் பிடிபட்ட ஐந்துபேர்களையும், தேசத்தின் மக்களைப் படையில் சேர்க்கிற படைத்தலைவனின் தலைமைச் செயலாளனையும், நகரத்தில் பிடிப்பட்ட பொதுமக்களில் அறுபதுபேர்களையும் பிடித்தான்.
\s5
\v 20 அவர்களை மெய்க்காப்பாளர்களின் தலைவனாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனான்.
\v 21 அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோட்டான்; இப்படியே யூதாமக்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
\s5
\v 22 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த மக்களின்மேல், சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.
\v 23 பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல படைத்தலைவர்களும் அவர்களுடைய வீரர்களும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவிடம் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் மகன் இஸ்மவேலும், கரேயாவின் மகன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் மகன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய மகன் யசனியாவும் அவர்களுடைய மனிதர்களுமே.
\v 24 அப்பொழுது கெதலியா அவர்களுக்கும் அவர்கள் மனிதர்களுக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயர்களின் ஆளுகைக்கு உட்பட பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவிற்குக் கீழ்ப்பட்டிருங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான்.
\s5
\v 25 ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் மகனாகிய நெத்தனியாவின் மகன் இஸ்மவேல் பத்து மனிதர்களோடு வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதர்களையும், கல்தேயர்களையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.
\v 26 அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய மக்கள்அனைவரும் படைத்தலைவர்களும் கல்தேயருக்குப் பயந்ததினாலே எழுந்து புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.
\s1 யோயாக்கீன் விடுதலை செய்யப்படுதல்
\p
\s5
\v 27 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருடம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருடத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து விடுதலைசெய்து, அவனுடைய தலையை உயர்த்தி,
\s5
\v 28 அவனோடே அன்பாகப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்த ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,
\v 29 அவனுடைய சிறைச்சாலை உடைகளை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாட்களும் எப்பொழுதும் தனக்கு முன்பாக உணவருந்தச் செய்தான்.
\v 30 அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவினால் கட்டளையான அனுதினத் திட்டத்தின்படி, ஒவ்வொருநாளும் கொடுக்கப்பட்டுவந்தது.

1556
13-1CH.usfm Normal file
View File

@ -0,0 +1,1556 @@
\id 1CH
\ide UTF-8
\h I நாளாகமம்
\toc1 I நாளாகமம்
\toc2 I நாளாகமம்
\toc3 1ch
\mt1 I நாளாகமம்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 ஆதாம் முதல் நோவா வரையுள்ள குடும்ப வரலாறு
\p
\v 1 ஆதாம், சேத், ஏனோஸ்,
\v 2 கேனான், மகலாலெயேல், யாரேத்,
\v 3 ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
\v 4 நோவா, சேம், காம், யாப்பேத்,
\s1 யாப்பேத்தின் சந்ததியினர்
\p
\s5
\v 5 யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
\v 6 கோமருடைய மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
\v 7 யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
\s1 காமின் சந்ததியினர்
\p
\s5
\v 8 காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.
\v 9 கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள்.
\v 10 கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான்.
\s5
\v 11 மிஸ்ராயிம் லூதீமியர்களையும், ஆனாமியர்களையும், லெகாபியர்களையும், நப்தூகியர்களையும்,
\v 12 பத்ரூசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தோரியர்களையும் பெற்றான்.
\s5
\v 13 கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
\v 14 எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,
\v 15 ஏவியர்களையும், அர்கீயர்களையும், சீனியர்களையும்,
\v 16 அர்வாதியர்களையும், செமாரியர்களையும், காமாத்தியர்களையும் பெற்றான்.
\s1 சேமின் சந்ததியினர்
\p
\s5
\v 17 சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.
\v 18 அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
\v 19 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
\s5
\v 20 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,
\v 21 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
\v 22 ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
\v 23 ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள்.
\s5
\v 24 சேம், அர்பக்சாத், சாலா,
\v 25 ஏபேர், பேலேகு, ரெகூ,
\v 26 செரூகு, நாகோர், தேராகு,
\v 27 ஆபிராமாகிய ஆபிரகாம்.
\s1 ஆபிரகாமின் குடும்பம்
\p
\s5
\v 28 ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
\s1 ஆகாரின் சந்ததியினர்
\p
\v 29 இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
\v 30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
\v 31 யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் மகன்கள்.
\s1 கேத்தூராளின் சந்ததியினர்
\p
\s5
\v 32 ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள்.
\v 33 மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள்.
\s1 சாராளுடைய சந்ததியினர்
\p
\s5
\v 34 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.
\s1 ஏசாவின் மகன்கள்
\p
\v 35 ஏசாவின் மகன்கள் எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
\v 36 எலீப்பாசினுடைய மகன்கள் தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
\v 37 ரெகுவேலினுடைய மகன்கள் நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
\s1 ஏதோமிலுள்ள சேயீரின் மக்கள்
\p
\s5
\v 38 சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.
\v 39 லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
\v 40 சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்.
\s5
\v 41 ஆனாகின் மகன்களில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் மகன்கள் அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
\v 42 திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
\s1 ஏதோமை அரசாண்ட இராஜாக்கள்
\p
\s5
\v 43 இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா.
\v 44 பேலா இறந்தபின்பு போஸ்ரா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
\v 45 யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊசாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
\s5
\v 46 ஊசாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத்.
\v 47 ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
\v 48 சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
\s5
\v 49 சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
\v 50 பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மாத்திரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்.
\s1 ஏதோமின் பிரபுக்கள்
\p
\s5
\v 51 ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,
\v 52 அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
\v 53 கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
\v 54 மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 இஸ்ரவேலுடைய மகன்கள்
\p
\v 1 இஸ்ரவேலின் மகன்கள் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
\v 2 தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்;
\s1 யூதாவின் மகன்கள்
\p
\s5
\v 3 யூதாவின் மகன்கள் ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று மகன்களும் சூவாவின் மகளான கானானிய பெண்ணிடம் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த மகன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானதால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
\v 4 யூதாவின் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் மகன்கள் எல்லோரும் ஐந்துபேர்கள்.
\s5
\v 5 பாரேசின் மகன்கள் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
\v 6 சேராவின் மகன்கள் எல்லோரும் சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்கள்.
\v 7 சாபத்தீடான காரியத்திலே துரோகம்செய்து இஸ்ரவேலைக் கலங்கச்செய்த ஆகார் என்பவன் கர்மீ மகன்களில் ஒருவன்.
\v 8 ஏத்தானின் மகன்கள் அசரியா முதலானவர்கள்.
\s5
\v 9 எஸ்ரோனுக்குப் பிறந்த மகன்கள் யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
\s1 எஸ்ரோனின் மகனாகிய ராமிலிருந்து
\p
\v 10 ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா சந்ததியின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
\v 11 நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
\v 12 போவாஸ் ஓபேத்தைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
\s5
\v 13 ஈசாய் தன்னுடைய மூத்த மகன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் மகனையும், சம்மா என்னும் மூன்றாம் மகனையும்,
\v 14 நெதனெயேல் என்னும் நான்காம் மகனையும், ரதாயி என்னும் ஐந்தாம் மகனையும்,
\v 15 ஓத்சேம் என்னும் ஆறாம் மகனையும், தாவீது என்னும் ஏழாம் மகனையும் பெற்றான்.
\s5
\v 16 அவர்களுடைய சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் மகன்கள், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.
\v 17 அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலனாகிய யெத்தேர் என்பவன்.
\s1 எஸ்ரோனின் மகனாகிய காலேப்
\p
\s5
\v 18 எஸ்ரோனின் மகன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன்னுடைய மனைவியாகிய அசுபாளாலே பெற்ற மகன்கள் ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
\v 19 அசுபாள் இறந்த பின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
\v 20 ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.
\s5
\v 21 பின்பு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தினுடைய தகப்பனாகிய மாகீரினுடைய மகளைத் திருமணம்செய்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
\v 22 செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலெயாத் தேசத்தில் இருபத்து மூன்று ஊர்கள் இருந்தது.
\s5
\v 23 கேசூரும், ஆராமும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் எடுத்துக்கொண்டார்கள்; இவர்கள் எல்லோரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் மகன்கள்.
\v 24 காலேபினுடைய ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்தபின்பு, எஸ்ரோனின் மனைவியாகிய அபியாள் அவனுக்கு தெக்கொவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
\s1 எஸ்ரோனின் மகனாகிய யெர்மெயேல்
\p
\s5
\v 25 எஸ்ரோனுக்கு முதலில் பிறந்த யெர்மெயேலின் மகன்கள் ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
\v 26 அத்தாராள் என்னும் பெயருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
\v 27 யெர்மெயேலுக்கு முதலில் பிறந்த ராமின் மகன்கள் மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
\v 28 ஓனாமின் மகன்கள் சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் மகன்கள் நாதாப், அபிசூர் என்பவர்கள்.
\s5
\v 29 அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
\v 30 நாதாபினுடைய மகன்கள் சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
\v 31 அப்பாயிமின் மகன் இஷி; இஷியின் மகன் சேசான்; சேசானின் மகள் அக்லாய்.
\v 32 சம்மாயினுடைய சகோதரனாகிய யாதாவினுடைய மகன்கள், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
\v 33 யோனத்தானின் மகன்கள், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் சந்ததி.
\s5
\v 34 சேசானுக்கு மகள்களைத் தவிர மகன்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பெயருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
\v 35 சேசான் தன்னுடைய மகளைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்கு திருமணம் செய்துகொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
\s5
\v 36 அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.
\v 37 சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான்.
\v 38 ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.
\s5
\v 39 அசரியா எலேத்சைப் பெற்றான்; ஏலெத்ஸ் எலெயாசாவைப் பெற்றான்.
\v 40 எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லூமைப் பெற்றான்.
\v 41 சல்லூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிசாமாவைப் பெற்றான்.
\s1 காலேபின் சந்ததி
\p
\s5
\v 42 யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் மகன்கள் முதலில் பிறந்த சீப்பின் தகப்பனாகிய மேசாவும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் மகன்களுமே.
\v 43 எப்ரோனின் மகன்கள் கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா என்பவர்கள்.
\v 44 செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
\s5
\v 45 சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
\v 46 காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
\v 47 யாதாயின் மகன்கள் ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
\s5
\v 48 காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.
\v 49 அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் மகள் அக்சாள் என்பவள்.
\v 50 எப்ராத்தாளிடம் முதலில் பிறந்த ஊருடைய மகனாகிய காலேபினுடைய மகன்கள் கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
\s5
\v 51 பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.
\s5
\v 52 கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் மகன்கள், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
\v 53 கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியர்களும் பூகியர்களும் சுமாத்தியர்களும் மிஸ்ராவியர்களுமே; இவர்களிடம் சோராத்தியர்களும், எஸ்தவோலியர்களும் பிறந்தார்கள்.
\s5
\v 54 சல்மாவின் சந்ததிகள் பெத்லெகேமியர்களும், நேத்தோப்பாத்தியர்களும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊர்க்காரர்களும், மானாத்தியர்களிலும் சோரியர்களிலும் பாதி மக்களுமே.
\v 55 யாபேசில் குடியிருந்த வேத வல்லுனர்களுடைய வம்சங்கள் திராத்தியர்களும் சிமாத்தியர்களும் சுக்காத்தியர்களுமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியார்களான கேனியர்கள் இவர்களே.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 தாவீதின் மகன்கள்
\p
\v 1 தாவீதுக்கு எப்ரோனில் பிறந்த மகன்கள்: யெஸ்ரெயேல் ஊரைச்சேர்ந்த அகிநோவாமிடம் பிறந்த அம்னோன் முதலில் பிறந்தவன்; கர்மேலின் ஊரைச்சேர்ந்த அபிகாயேலிடம் பிறந்த கீலேயாப் இரண்டாம் மகன்.
\v 2 கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் மகள் மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் மகன்; ஆகீத் பெற்ற அதோனியா நான்காம் மகன்.
\v 3 அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் மகன்; அவனுடைய மனைவியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் மகன்.
\s5
\v 4 இந்த ஆறு மகன்கள் அவனுக்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் அரசாண்டான்; எருசலேமில் முப்பத்துமூன்று வருடங்கள் அரசாண்டான்.
\v 5 எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் மகளாகிய பத்சேபாளிடம் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நான்குபேர்களும்,
\s5
\v 6 இப்கார், எலிசாமா, எலிப்பெலேத்,
\v 7 நோகா, நேபேக், யப்பியா,
\v 8 எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேர்களுமே.
\v 9 மறுமனையாட்டிகளின் மகன்களையும் இவர்களுடைய சகோதரியாகிய தாமாரையும்தவிர, இவர்களெல்லோரும் தாவீதின் மகன்கள்.
\s1 யூதாவின் இராஜா
\p
\s5
\v 10 சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; இவனுடைய மகன் அபியா; இவனுடைய மகன் ஆசா; இவனுடைய மகன் யோசபாத்.
\v 11 இவனுடைய மகன் யோராம்; இவனுடைய மகன் அகசியா; இவனுடைய மகன் யோவாஸ்.
\v 12 இவனுடைய மகன் அமத்சியா; இவனுடைய மகன் அசரியா; இவனுடைய மகன் யோதாம்.
\s5
\v 13 இவனுடைய மகன் ஆகாஸ்; இவனுடைய மகன் எசேக்கியா; இவனுடைய மகன் மனாசே.
\v 14 இவனுடைய மகன் ஆமோன்; இவனுடைய மகன் யோசியா.
\s5
\v 15 யோசியாவின் மகன்கள், முதலில் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் மகனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் மகனும், சல்லூம் என்னும் நான்காம் மகனுமே.
\v 16 யோயாக்கீமின் மகன்கள் எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.
\s1 சிறையிருப்புக்குப்பின் ராஜ வம்சம்
\p
\s5
\v 17 கட்டுண்ட எகொனியாவின் மகன்கள் சலாத்தியேல்,
\v 18 மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
\s5
\v 19 பெதாயாவின் மகன்கள் செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் மகன்கள் மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.
\v 20 அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேர்களுமே.
\v 21 அனனியாவின் மகன்கள், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய மகன் ரெபாயா; இவனுடைய மகன் அர்னான்; இவனுடைய மகன் ஒபதியா; இவனுடைய மகன் செக்கனியா.
\s5
\v 22 செக்கனியாவின் மகன்கள் செமாயா முதலானவர்கள்; செமாயாவின் மகன்கள் அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்கள்.
\v 23 நெயாரியாவின் மகன்கள் எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர்கள்.
\v 24 எலியோனாவின் ஏழு மகன்கள் ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்பவர்கள்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 யூதாவின் மற்றக் கோத்திரங்கள்
\p
\v 1 யூதாவின் சந்ததிகள் பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.
\v 2 சோபாலின் மகன் ராயா யாகாத்தைப் பெற்றான்; யாகாத் அகுமாயியையும், லாகாதையும் பெற்றான்; சோராத்தியர்களின் வம்சங்கள் இவைகளே.
\s5
\v 3 ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார்கள், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பெயர் அத்செலெல்போனி;
\v 4 கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதலில் பிறந்த ஊரின் மகன்கள்.
\s5
\v 5 தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு மனைவிகள் இருந்தார்கள்.
\v 6 நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் மகன்கள் இவர்களே.
\v 7 ஏலாளின் மகன்கள், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.
\v 8 கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் மகனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.
\s5
\v 9 யாபேஸ் தன்னுடைய சகோதரர்களைவிட மதிப்பிற்குரியவனாக இருந்தான். அவனுடைய தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டாள்.
\v 10 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என்னுடைய எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடு இருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடி அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
\s5
\v 11 சூகாவின் சகோதரனாகிய கேலூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன்.
\v 12 எஸ்தோன் பெத்ராபாவையும், பசேயாகையும், இர்நாகாஷின் தகப்பனாகிய தெகினாகையும் பெற்றான்; இவர்கள் ரேகாவூர் மனிதர்கள்.
\s5
\v 13 கேனாசின் மகன்கள் ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் மகன்களில் ஒருவன் ஆத்தாத்.
\v 14 மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளர்களாக இருந்தார்கள்.
\v 15 எப்புன்னேயின் மகனாகிய காலேபின் மகன்கள் ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் மகன்களில் ஒருவன் கேனாஸ்.
\v 16 எகலெலேலின் மகன்கள் சீப், சீப்பா, திரியா, அசாரெயேல்.
\s5
\v 17 எஸ்றாவின் மகன்கள் யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் மனைவி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.
\v 18 அவன் மனைவியாகிய எகுதியாள் கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் திருமணம் செய்த பார்வோனின் மகளாகிய பித்தியாளின் மகன்கள் இவர்களே.
\s5
\v 19 நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய மனைவியின் மகன்கள் கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தியனாகிய எஸ்தேமோவாவுமே.
\v 20 ஷீமோனின் மகன்கள் அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன் என்பவர்கள், இஷியின் மகன்கள் சோகேதும் பென்சோகேதுமே.
\s5
\v 21 யூதாவின் மகனாகிய சேலாகின் மகன்கள்: லேக்காவூர் மூப்பனான ஏரும், மரேசாவூர் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டு வம்சங்களும்,
\v 22 யோக்கீமும், கோசேபாவின் மனிதர்களும், மோவாபியர்களை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் ஆரம்பகாலத்தின் செய்திகள்.
\v 23 இவர்கள் குயவர்களாக இருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிப்பதற்கு அங்கே குடியிருந்தார்கள்.
\s1 சிமியோனின் சந்ததிகள்
\p
\s5
\v 24 சிமியோனின் மகன்கள் நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
\v 25 இவனுடைய மகன் சல்லூம்; இவனுடைய மகன் மிப்சாம்; இவனுடைய மகன் மிஸ்மா.
\v 26 மிஸ்மாவின் மகன்களில் ஒருவன் அம்முவேல்; இவனுடைய மகன் சக்கூர்; இவனுடைய மகன் சீமேயி.
\s5
\v 27 சீமேயிக்குப் பதினாறு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தார்கள்; அவனுடைய சகோதரர்களுக்கு அதிக பிள்ளைகள் இல்லை; அவர்கள் வம்சங்களெல்லாம் யூதாவின் மக்களைப்போலப் பெருகினதுமில்லை.
\v 28 அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும்,
\s5
\v 29 பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும்,
\v 30 பெத்தூவேலிலும், ஒர்மாவிலும், சிக்லாகிலும்,
\v 31 பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகும்வரை இவைகள் அவர்களுடைய பட்டணங்களாக இருந்தது.
\s5
\v 32 அவர்களுடைய ஐந்து பட்டணங்கள் ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்பவைகள்.
\v 33 அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்வரையுள்ள அவர்களுடைய எல்லா குடியிருப்புக்களும், அவர்கள் தங்குமிடங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.
\s5
\v 34 மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் மகன் யோஷாவும்,
\v 35 யோவேலும், ஆசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் மகன் ஏகூவும்,
\v 36 எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகாயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும்,
\v 37 செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் மகனாகிய சீப்பியின் மகன் சீசாவும் என்று,
\v 38 பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் தங்களுடைய வம்சங்களில் பிரபுக்களாக இருந்தார்கள்; இவர்களுடைய பிதாக்களின் வீட்டார்கள் ஏராளமாகப் பரவியிருந்தார்கள்.
\s5
\v 39 தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படி தேதோரின் எல்லையாகிய மலைப்பகுதியின் கிழக்குப்புறம்வரை போய்,
\v 40 நல்ல செழிப்பான மேய்ச்சலும், அமைதியும், சுகமுமுள்ள விசாலமான தேசத்தைக் கண்டுபிடித்தார்கள்; ஆரம்பத்திலே காமின் சந்ததியார்கள் அங்கே குடியிருந்தார்கள்.
\v 41 பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் மறைவிடங்களையும் அழித்து, இந்த நாளிலே இருக்கிறதுபோல, அவர்களை முற்றிலும் அழித்து, அங்கே தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியால், அவர்கள் அந்த இடத்திலே குடியேறினார்கள்.
\s5
\v 42 சிமியோனின் கோத்திரத்தார்களாகிய இவர்களில் ஐந்நூறு மனிதர்களும், அவர்களுடைய தலைவர்களாகிய இஷியின் மகன்களான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,
\v 43 அமலேக்கியர்களில் தப்பி மீதியாக இருந்தவர்களைத் தோற்கடித்து, இந்த நாள்வரை இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள்.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 ரூபனின் சந்ததியினர்
\p
\v 1 ரூபன் இஸ்ரவேலுக்கு முதலில் பிறந்த மூத்தமகன் ஆவான்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய படுக்கையைத் தீட்டுப்படுத்தியதால், கோத்திரத்து அட்டவணையில் அவன் முதற்பிறப்பவனாக கருதப்படாமல், அவனுடைய மூத்த மகன் என்கிற பிறப்புரிமை இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் மகன்களுக்குக் கொடுக்கப்பட்டது.
\v 2 யூதா தன்னுடைய சகோதரர்களிலே பலவானாக இருந்ததால் தலைமைத்துவம் அவனுடைய சந்ததியில் உண்டானது; ஆகிலும் மூத்தமகன் என்கிற பிறப்புரிமை யோசேப்பிற்குரியதாக மாறினது.
\v 3 இஸ்ரவேலின் முதலில் பிறந்தவனான ரூபனின் மகன் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
\s5
\v 4 யோவேலின் மகன்களில் ஒருவன் செமாயா; இவனுடைய மகன் கோக்; இவனுடைய மகன் சிமேய்.
\v 5 இவனுடைய மகன் மீகா; இவனுடைய மகன் ராயா; இவனுடைய மகன் பாகால்.
\v 6 இவனுடைய மகன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான்.
\s5
\v 7 தங்களுடைய சந்ததிகளின்படியே தங்களுடைய வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவனுடைய சகோதரர்களில் தலைவர்கள் ஏயேலும், சகரியாவும்,
\v 8 யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் மகன் பேலாவும்; இவனுடைய சந்ததியார் ஆரோவேரிலும், நேபோவரை, பாகால்மெயோன்வரை தங்கியிருந்தார்கள்.
\v 9 கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி வனாந்திரத்தின் எல்லைவரை அவர்கள் தங்கியிருந்தார்கள்; அவர்களுடைய ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியானது.
\s5
\v 10 சவுலின் நாட்களில் ஆகாரியர்களோடு அவர்கள் யுத்தம்செய்து, தங்களுடைய கையால் அவர்கள் விழுந்தபின்பு, அவர்களுடைய கூடாரங்களிலே கீலேயாத்தின் கிழக்கில் குடியேறினார்கள்.
\s1 காத்தின் சந்ததியினர்
\p
\s5
\v 11 காத்தின் கோத்திரம் அவர்களுக்கு எதிரே பாசான் தேசத்திலே சல்காவரை தங்கியிருந்தார்கள்.
\v 12 அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பாம் அவனுக்கு இரண்டாவதாகவும் இருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள்.
\v 13 அவர்களுடைய தகப்பன் வழி உறவினர்களாகிய சகோதரர்கள், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழு பேர்கள்.
\s5
\v 14 இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் மகன்கள்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்துக்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் மகன்களாக இருந்தவர்கள்.
\v 15 கூனியின் மகனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்களுடைய பிதாக்களின் வீட்டுத் தலைவனாக இருந்தான்.
\s5
\v 16 அவர்கள் கீலேயாத்தில் இருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாக் குடியிருப்புக்களிலும் அவைகளின் எல்லைவரை தங்கியிருந்தார்கள்.
\v 17 இவர்களெல்லோரும் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் நாட்களிலும் தங்களுடைய வம்சத்து அட்டவணைப்படி வரிசைப்படுத்தப்பட்டார்கள்.
\p
\s5
\v 18 ரூபனியர்களிலும், காத்தியர்களிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில் எய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க வீரர்கள் நாற்பத்துநான்காயிரத்து எழுநூற்று அறுபதுபேர்களாக இருந்தார்கள்.
\v 19 அவர்கள் ஆகாரியர்களோடும், யெத்தூர் நாப்பீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்செய்கிறபோது,
\s5
\v 20 அவர்களை எதிர்க்கத் தேவனுடைய உதவி பெற்றபடியால், ஆகாரியர்களும் இவர்களோடு இருக்கிற யாவரும் தோற்கடிக்கப்பட்டார்கள்; அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்தபடியால் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
\v 21 அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனிதர்களில் லட்சம்பேர்களையும் பிடித்தார்கள்.
\v 22 யுத்தம் தேவனால் நடந்ததால் அவர்களுடைய எதிரிகளில் அநேகரை வெட்டி வீழ்த்தினார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகும்வரை இவர்களுடைய இடத்திலே குடியிருந்தார்கள்.
\s1 மனாசேயின் பாதிக்கோத்திரம்
\p
\s5
\v 23 மனாசேயின் பாதிக்கோத்திரம் அந்த தேசத்தில் குடியிருந்து, பாசான் தொடங்கிப் பாகால் எர்மோன்வரை, செனீர்வரை, எர்மோன் பர்வதம்வரை பெருகியிருந்தார்கள்.
\v 24 அவர்கள் தங்களுடைய பிதாக்களின் வீட்டுத் தலைவர்களாகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரர்களான மனிதர்களும் பெயர்பெற்ற தலைவர்களுமாக இருந்தார்கள்.
\s5
\v 25 அவர்கள் தங்களுடைய பிதாக்களின் தேவனுக்கு துரோகம்செய்து, தேவன் அவர்களுக்கு முன்பாக அழித்திருந்த தேச மக்களின் தேவர்களைப் பின்பற்றி கெட்டுப்போனார்கள்.
\v 26 ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பியதால், அவன் ரூபனியர்களும் காத்தியர்களும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களுமாகிய அவர்களை சிறைபிடித்து, இந்த நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\s1 லேவியின் சந்ததி
\p
\v 1 லேவியின் மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
\v 2 கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சார், எப்ரோன் ஊசியேல் என்பவர்கள்.
\v 3 அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் மகன்கள் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
\s5
\v 4 எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான்.
\v 5 அபிசுவா புக்கியைப் பெற்றான்; புக்கி ஊசியைப் பெற்றான்.
\v 6 ஊசி செராகியாவைப் பெற்றான்; செராகியா மெராயோதைப் பெற்றான்.
\s5
\v 7 மெராயோத் அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.
\v 8 அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.
\v 9 அகிமாஸ் அசரியாவைப் பெற்றான்; அசரியா யோகனானைப் பெற்றான்.
\s5
\v 10 யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணியைச் செய்தவன் இவன்தான்.
\v 11 அசரியா அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.
\v 12 அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் சல்லூமைப் பெற்றான்.
\s5
\v 13 சல்லூம் இல்க்கியாவைப் பெற்றான்; இல்க்கியா அசரியாவைப் பெற்றான்.
\v 14 அசரியா செராயாவைப் பெற்றான்; செராயா யோசதாக்கைப் பெற்றான்.
\v 15 கர்த்தர் நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதா மக்களையும் எருசலேமியர்களையும் சிறைபிடித்துக் கொண்டுபோகச்செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான்.
\p
\s5
\v 16 லேவியின் மகன்கள் கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
\v 17 கெர்சோமுடைய மகன்களின் பெயர்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.
\v 18 கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
\s5
\v 19 மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள். லேவியர்களுக்கு அவர்களுடைய பிதாக்களின் வழியாக உண்டான வம்சங்கள்:
\v 20 கெர்சோமின் மகன் லிப்னி; இவனுடைய மகன் யாகாத்; இவனுடைய மகன் சிம்மா.
\v 21 இவனுடைய மகன் யோவா; இவனுடைய மகன் இத்தோ; இவனுடைய மகன் சேரா; இவனுடைய மகன் யாத்திராயி.
\s5
\v 22 கோகாத்தின் மகன்களில் ஒருவன் அம்மினதாப், இவனுடைய மகன் கோராகு; இவனுடைய மகன் ஆசீர்.
\v 23 இவனுடைய மகன் எல்க்கானா; இவனுடைய மகன் அபியாசாப்; இவனுடைய மகன் ஆசீர்.
\v 24 இவனுடைய மகன் எல்க்கானா; இவனுடைய மகன் ஊரியேல்; இவனுடைய மகன் ஊசியா; இவனுடைய மகன் சவுல்.
\s5
\v 25 எல்க்கானாவின் மகன்கள் அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள்.
\v 26 எல்க்கானாவின் மகன்களில் ஒருவன் சோபாய்; இவனுடைய மகன் நாகாத்.
\v 27 இவனுடைய மகன் எலியாப்; இவனுடைய மகன் எரோகாம்; இவனுடைய மகன் எல்க்கானா.
\s5
\v 28 சாமுவேலின் மகன்கள் அவனுக்கு முதலில் பிறந்த வஷ்னீ அபியா என்பவர்கள்.
\v 29 மெராரியின் மகன்களில் ஒருவன் மகேலி; இவனுடைய மகன் லிப்னி; இவனுடைய மகன் சிமேயி; இவனுடைய மகன் ஊசா.
\v 30 இவனுடைய மகன் சிமெயா; இவனுடைய மகன் அகியா; இவனுடைய மகன் அசாயா.
\s1 ஆலயத்தின் இசைக் கலைஞர்கள்
\p
\s5
\v 31 கர்த்தருடைய பெட்டி தங்கினபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துவற்கு ஏற்படுத்தியவர்களும்,
\v 32 சாலொமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டி முடியும்வரை ஆசரிப்புக்கூடாரம் இருந்த இடத்திற்கு முன்பாக சங்கீத சேவையுடன் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனிதர்களும் அவர்களுடைய மகன்களாவர்
\s5
\v 33 கோகாத்தியர்களின் மகன்களில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் மகன்; இவன் சாமுவேலின் மகன்.
\v 34 இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யெரொகாமின் மகன்; இவன் எலியேலின் மகன்; இவன் தோவாகின் மகன்.
\v 35 இவன் சூப்பின் மகன்; இவன் இல்க்கானாவின் மகன்; இவன் மாகாத்தின் மகன்; இவன் அமாசாயின் மகன்.
\s5
\v 36 இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யோவேலின் மகன்; இவன் அசரியாவின் மகன்; இவன் செப்பனியாவின் மகன்.
\v 37 இவன் தாகாதின் மகன்; இவன் ஆசீரின் மகன்; இவன் எபியாசாப்பின் மகன்; இவன் கோராகின் மகன்.
\v 38 இவன் இத்சாரின் மகன்; இவன் கோகாத்தின் மகன்; இவன் இஸ்ரவேலின் மகனாகிய லேவியின் மகன்.
\s5
\v 39 இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலது பக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் மகன்; இவன் சிமேயாவின் மகன்.
\v 40 இவன் மிகாவேலின் மகன்; இவன் பாசெயாவின் மகன்; இவன் மல்கியாவின் மகன்.
\v 41 இவன் எத்னியின் மகன்; இவன் சேராவின் மகன்; இவன் அதாயாவின் மகன்.
\v 42 இவன் ஏத்தானின் மகன்; இவன் சிம்மாவின் மகன்; இவன் சீமேயின் மகன்.
\v 43 இவன் யாகாதின் மகன்; இவன் கெர்சோமின் மகன்; இவன் லேவியின் மகன்.
\s5
\v 44 மெராரியின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் மகன்; இவன் அப்தியின் மகன்; இவன் மல்லூகின் மகன்.
\v 45 இவன் அஸபியாவின் மகன்; இவன் அமத்சியாவின் மகன்; இவன் இல்க்கியாவின் மகன்.
\v 46 இவன் அம்சியின் மகன்; இவன் பானியின் மகன்; இவன் சாமேரின் மகன்.
\v 47 இவன் மகேலியின் மகன்; இவன் மூசியின் மகன்; இவன் மெராரியின் மகன்; இவன் லேவியின் மகன்.
\s5
\v 48 அவர்களுடைய சகோதரர்களாகிய மற்ற லேவியர்கள் தேவனுடைய ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
\p
\s5
\v 49 ஆரோனும் அவனுடைய மகன்களும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டு தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த இடத்தின் எல்லா வேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்கவும் வைக்கப்பட்டிருந்தார்கள்.
\s5
\v 50 ஆரோனின் மகன்களில் எலெயாசார் என்பவனுடைய மகன் பினேகாஸ்; இவனுடைய மகன் அபிசுவா.
\v 51 இவனுடைய மகன் புக்கி; இவனுடைய மகன் ஊசி; இவனுடைய மகன் செராகியா.
\v 52 இவனுடைய மகன் மெராயோத்; இவனுடைய மகன் அமரியா; இவனுடைய மகன் அகித்தூப்.
\v 53 இவனுடைய மகன் சாதோக்; இவனுடைய மகன் அகிமாஸ்.
\p
\s5
\v 54 அவர்களுடைய குடியிருப்புக்களின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் தங்கும் இடங்களாவன: கோகாத்தியர்களின் வம்சமான ஆரோனின் சந்ததிக்கு விழுந்த சீட்டின்படியே,
\v 55 யூதா தேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
\v 56 அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.
\s5
\v 57 இப்படியே ஆரோனின் சந்ததிக்கு எப்ரோன் என்னும் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றையும் லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், யாத்தீரையும் எஸ்தமோவாவையும் அவற்றின் வெளிநிலங்களையும்,
\v 58 ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
\s5
\v 59 ஆசானையும் அதின் வெளிநிலங்களையும், பெத்சேமேசையும் அதின் வெளிநிலங்களையும்,
\v 60 பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.
\s5
\v 61 கோகாத்தின் மற்ற வம்சத்தினருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக் கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது.
\v 62 கெர்சோமின் சந்ததிக்கு அவர்கள் வம்சங்களின்படியே, இசக்கார் கோத்திரத்திலும் ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று பட்டணங்கள் இருந்தது.
\s5
\v 63 மெராரியின் சந்ததிக்கு அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரெண்டு பட்டணங்கள் இருந்தது.
\v 64 அப்படியே இஸ்ரவேல் மக்கள் லேவியர்களுக்குக் கொடுத்த பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும் என்னவென்றால்,
\v 65 சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும், பெயர் வரிசையில் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.
\s5
\v 66 கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.
\v 67 எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
\v 68 யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பேத்ஓரோனையும் அதின் வெளிநிலங்களையும்,
\v 69 ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,
\s5
\v 70 மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் காகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு இருந்தது.
\s5
\v 71 கெர்சோம் சந்ததிகளுக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானில் இருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,
\v 72 இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபிராத்தும் அதின் வெளிநிலங்களும்,
\v 73 ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் வெளிநிலங்களும்,
\s5
\v 74 ஆசேர் கோத்திரத்திலே மாஷாலும் அதின் வெளிநிலங்களும், அப்தோனும் அதின் வெளிநிலங்களும்,
\v 75 உக்கோக்கும் அதின் வெளிநிலங்களும், ரேகோபும் அதின் வெளிநிலங்களும்,
\v 76 நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவில் இருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கீரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.
\s5
\v 77 மெராரியின் மற்ற சந்ததிகளுக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,
\v 78 எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அடுத்து யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்திரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,
\v 79 கேதேமோத்தும் அதின் வெளிநிலங்களும், மேப்பாத்தும் அதின் வெளிநிலங்களும்,
\s5
\v 80 காத் கோத்திரத்திலே கீலேயாத்தில் உள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மக்னாயீமும் அதின் வெளிநிலங்களும்,
\v 81 எஸ்போனும் அதின் வெளிநிலங்களும், யாசேரும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 இசக்காரின் சந்ததி
\p
\v 1 இசக்காருடைய மகன்கள் தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நான்கு பேர்கள்.
\v 2 தோலாவின் மகன்கள் ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்களுடைய பிதாக்கள் வம்சத்தலைவர்களும் தங்களுடைய சந்ததிகளிலே பெலசாலிகளுமாக இருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்து அறுநூறு பேர்களாக இருந்தது.
\v 3 ஊசியின் மகன்களில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் மகன்கள் மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவர்களாக இருந்தார்கள்.
\s5
\v 4 அவர்கள் முன்னோர்களின் வம்சத்தார்களான அவர்கள் சந்ததிகளில் யுத்தமனிதர்களான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர்கள் அவர்களோடு இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மனைவிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.
\v 5 இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்கு சகோதரர்களான பெலசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம் பேர்களாக இருந்தார்கள்.
\s1 பென்யமீன் சந்ததி
\p
\s5
\v 6 பென்யமீன் மகன்கள் பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்கள்.
\v 7 பேலாவின் மகன்கள் எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தில் பெலசாலிகளான ஐந்து தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களுடைய வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்திரெண்டாயிரத்து முப்பத்துநான்குபேர்கள்.
\s5
\v 8 பெகேரின் மகன்கள் செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் பெகேரின் மகன்கள்.
\v 9 தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவர்களாகிய அவர்களுடைய சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பெலசாலிகள் இருபதாயிரத்து இருநூறுபேர்கள்.
\v 10 யெதியாயேலின் மகன்களில் ஒருவன் பில்கான்; பில்கானின் மகன்கள் ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
\s5
\v 11 யெதியாயேலின் மகன்களாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தார்களில் தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களான பெலசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்கள்.
\v 12 சுப்பீமும், உப்பீமும் ஈரின் மகன்கள் ஊசிம் ஆகேரின் மகன்களில் ஒருவன்.
\s1 நப்தலியின் சந்ததி
\p
\s5
\v 13 நப்தலியின் மகன்களான பில்காளின் பேரன்மார்கள், யாத்தியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.
\s1 மனாசேயின் சந்ததி
\p
\s5
\v 14 மனாசேயின் மகன்களில் ஒருவன் அஸ்ரியேல்; அவனுடைய மறுமனையாட்டியாகிய அராமிய பெண்ணிடம் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.
\v 15 மாகீர் மாக்காள் என்னும் பெயருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியைத் திருமணம் செய்தான்; மனாசேயின் இரண்டாம் மகன் செலோப்பியாத்; செலோப்பியாத்திற்கு மகள்கள் இருந்தார்கள்.
\v 16 மாகீரின் மனைவியாகிய மாக்காள் ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு பேரேஸ் என்று பெயரிட்டாள்; இவனுடைய சகோதரனின் பெயர் சேரேஸ்; இவனுடைய மகன்கள் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.
\s5
\v 17 ஊலாமின் மகன்களில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் மகன்கள்.
\v 18 இவனுடைய சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.
\v 19 செமிதாவின் மகன்கள் அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.
\s1 எப்பிராயீமின் சந்ததி
\p
\s5
\v 20 எப்பிராயீமின் மகன்களில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய மகன் பேரேத்; இவனுடைய மகன் தாகாத்; இவனுடைய மகன் எலாதா; இவனுடைய மகன் தாகாத்.
\v 21 இவனுடைய மகன் சாபாத்; இவனுடைய மகன்கள் சுத்தெலாக், எத்சேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூரார்களுடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனதால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
\v 22 அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேகநாள் துக்கங்கொண்டாடும்போது, அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள்.
\s5
\v 23 பின்பு அவன் தன்னுடைய மனைவியிடம் இணைந்ததால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு மகனைப் பெற்றாள்; அவன், தன்னுடைய குடும்பத்திற்குத் தீங்கு உண்டானதால், இவனுக்கு பெரீயா என்று பெயரிட்டான்.
\v 24 இவனுடைய மகளாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.
\s5
\v 25 அவனுடைய மகன்கள் ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய மகன் தேலாக்; இவனுடைய மகன் தாகான்.
\v 26 இவனுடைய மகன் லாதான்; இவனுடைய மகன் அம்மீயூத்; இவனுடைய மகன் எலிஷாமா.
\v 27 இவனுடைய மகன் நூன்; இவனுடைய மகன் யோசுவா.
\s5
\v 28 அவர்களுடைய சொந்த நிலங்களும், தங்குமிடங்களும், கிழக்கே இருக்கிற நாரானும், மேற்கே இருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாவரையுள்ள அதின் கிராமங்களும்,
\v 29 மனாசே கோத்திரத்தின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இந்த இடங்களில் இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் சந்ததியர்கள் குடியிருந்தார்கள்.
\s1 ஆசேரின் சந்ததி
\p
\s5
\v 30 ஆசேரின் மகன்கள் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி சேராள்.
\v 31 பெரீயாவின் மகன்கள் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.
\v 32 ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்களுடைய சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
\s5
\v 33 யப்லேத்தின் மகன்கள் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் மகன்கள்.
\v 34 சோமேரின் மகன்கள் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.
\v 35 அவனுடைய சகோதரனாகிய ஏலேமின் மகன்கள் சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.
\s5
\v 36 சோபாக்கின் மகன்கள் சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,
\v 37 பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.
\v 38 யெத்தேரின் மகன்கள் எப்புனே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.
\s5
\v 39 உல்லாவின் மகன்கள் ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.
\v 40 ஆசேரின் சந்ததிகளாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தலைவர்களும் தெரிந்துகொள்ளப்பட்ட பெலசாலிகளும், பிரபுக்களின் தலைவர்களுமாக இருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்பேர்கள்.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 பென்யமீனியனாகிய சவுலின் வம்ச வரலாறு
\p
\v 1 பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும்,
\v 2 நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான்.
\v 3 பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
\v 4 அபிசுவா, நாமான், அகோவா,
\v 5 கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள்.
\s5
\v 6 கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
\v 7 கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியூதையும் பெற்றான்.
\s5
\v 8 அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர,
\v 9 தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
\v 10 எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள்.
\v 11 ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
\s5
\v 12 எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
\v 13 பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள்.
\s5
\v 14 அகியோ, சாஷாக், எரேமோத்,
\v 15 செபதியா, ஆராத், ஆதேர்,
\v 16 மிகாயேஸ், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.
\v 17 செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
\v 18 இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
\s5
\v 19 யாக்கிம், சிக்ரி, சப்தி,
\v 20 எலியேனாய், சில்தாய், எலியேல்,
\v 21 அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள்.
\s5
\v 22 இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
\v 23 அப்தோன், சிக்ரி, ஆனான்,
\v 24 அனனியா, ஏலாம், அந்தோதியா,
\v 25 இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
\s5
\v 26 சம்சேராய், செகரியா, அத்தாலியா,
\v 27 யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள்.
\v 28 இவர்கள் தங்களுடைய சந்ததிகளின் பிதாக்களிலே தலைவர்களாக இருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
\s5
\v 29 கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
\v 30 அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்,
\v 31 கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
\s5
\v 32 மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள்.
\v 33 நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
\v 34 யோனத்தானின் மகன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான்.
\s5
\v 35 மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
\v 36 ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
\v 37 மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலியாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
\s5
\v 38 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள்.
\v 39 அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் மகனுமே.
\v 40 ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்கள்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 எருசலேமில் உள்ள மக்கள்
\p
\v 1 இஸ்ரவேல் எல்லோரும் தங்கள் வம்சவரலாற்றின்படி பதிவுசெய்யப்பட்டார்கள்; இவர்களுடைய பெயர்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார்கள் தங்களுடைய துரோகத்தினால், பாபிலோனுக்கு சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
\v 2 தங்களுடைய சொந்த நிலங்களிலும் தங்களுடைய பட்டணங்களிலும் முன்பு குடியிருந்தவர்கள் இஸ்ரவேலர்களும் ஆசாரியர்களும் லேவியர்களும் ஆலயப்பணியாளர்களுமே.
\v 3 யூதா சந்ததிகளிலும், பென்யமீன் சந்ததிகளிலும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் சந்ததிகளிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால்,
\s5
\v 4 யூதாவின் மகனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் மகனாகிய இம்ரியின் மகனான உம்ரிக்குப் பிறந்த அம்மியூதின் மகன் ஊத்தாய்.
\v 5 சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவனுடைய பிள்ளைகளும்,
\v 6 சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவனுடைய சகோதரர்களாகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேர்களுமே.
\s5
\v 7 பென்யமீன் சந்ததியில் அசெனூவாவின் மகனாகிய ஓதாவியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு.
\v 8 எரோகாமின் மகன் இப்னெயா; மிக்கிரியின் மகனாகிய ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் மகனாகிய ரேகுவேலுக்குப் பிறந்த செபதியாவின் மகன் மெசுல்லாம் என்பவர்களும்;
\v 9 தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரர்களாகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேர்களுமே; இந்த மனிதர்கள் எல்லோரும், தங்களுடைய பிதாக்களின் வம்சத்திலே முன்னோர்களின் தலைவர்களாக இருந்தார்கள்.
\p
\s5
\v 10 ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின்.
\v 11 அகிதூபின் மகனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் மகனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக்காரன்.
\s5
\v 12 மல்கியாவின் மகனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மெரின் மகனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் மகனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,
\v 13 அவர்களுடைய சகோதரர்களும், தங்கள் முன்னோர்களின் வம்சத்தலைவர்களான ஆயிரத்து எழுநூற்று அறுபதுபேர்கள் தேவாலயத்தின் பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாக இருந்தார்கள்.
\s5
\v 14 லேவியர்களில் மெராரியின் சந்ததியான அசபியாவின் மகனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா,
\v 15 பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் மகனாகிய சிக்ரிக்குப் பிறந்த மிகாவின் மகன் மத்தனியா,
\v 16 எதுத்தூனின் மகனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியர்களின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் மகனாகிய ஆசாவின் மகன் பெரகியா,
\s5
\v 17 வாசல் காவலாளிகளாகிய சல்லூம், அக்கூப், தல்மோன், அகிமான் என்பவர்களும், இவர்கள் சகோதரர்களுமே; இவர்கள் தலைவன் சல்லூம்.
\v 18 லேவி சந்ததியின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல் காத்துவந்தார்கள்.
\v 19 கோராகின் மகனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களாகிய அவனுடைய சகோதரர்களுமான கோராகியர்கள் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் கர்த்தருடைய இடத்திலே கூடாரத்திற்குப்போகிற வழியைக் காவல்காத்ததுபோல, கூடாரத்துவாசல்களைக் காத்துவந்தார்கள்.
\s5
\v 20 எலெயாசாரின் மகனாகிய பினேகாசுடனே கர்த்தர் இருந்ததால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாக இருந்தான்.
\v 21 மெசெல்மியாவின் மகனாகிய சகரியா ஆசரிப்புக் கூடாரவாசல் காவல்காரனாக இருந்தான்.
\s5
\v 22 வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்றுப் பன்னிரெண்டுபேர்களாக இருந்து, தங்கள் கிராமங்களின்படியே தங்களுடைய வம்சத்து அட்டவணைகளில் எழுதப்பட்டார்கள்; தாவீதும், தரிசனம்காண்கிறவனாகிய சாமுவேலும், அவர்களைத் தங்களுடைய வேலைகளில் வைத்தார்கள்.
\v 23 அப்படியே அவர்களும், அவர்களுடைய மகன்களும் கர்த்தருடைய ஆலயமாகிய கூடாரத்து வாசல்களைக் காக்கிறவர்களை வரிசையாக விசாரித்து வந்தார்கள்.
\v 24 வாசல்களைக் காக்கிறவர்கள் நான்கு திசைகளாகிய கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள்.
\s5
\v 25 அவர்களுடைய சகோதரர்கள் தங்களுடைய கிராமங்களிலிருந்து, ஏழுநாட்களுக்கு ஒருமுறை மாறிமாறி அவர்களோடு இருக்க வருவார்கள்.
\v 26 தேவாலயத்தின் அறைகள்மேலும் கருவூலஅறைகள்மேலும் உள்ள விசாரிக்கும் வேலை லேவியர்களான அந்த நான்கு தலைமைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
\v 27 காவல் அவர்களுக்கு ஒப்படைத்திருந்ததால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இரவு தங்கியிருந்து, காலையில் கதவுகளைத் திறந்துவிடுவார்கள்.
\s5
\v 28 அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பொருட்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள்.
\v 29 அவர்களில் சிலர் மற்றப் பொருட்களின்மேலும், பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மாவு, திராட்சரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப் பொருட்களின்மேலும் விசாரணைக்காரர்களாக இருந்தார்கள்.
\s5
\v 30 ஆசாரியர்களின் மகன்களில் சிலர் நறுமணப் பொருட்களால் பரிமளதைலம் இறக்குவார்கள்.
\v 31 லேவியர்களில் கோராகியனான சல்லூமின் மூத்த மகனாகிய மத்தித்தியாவுக்குப் பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
\v 32 அவர்கள் சகோதரர்களாகிய கோகாத்தியர்களின் மகன்களில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் சமுகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.
\s5
\v 33 இவர்களில் லேவியர்களுடைய குடும்பத்தலைவர்களாகிய சங்கீதக்காரர்கள் இரவும் பகலும் தங்களுடைய வேலையை நடத்தவேண்டியதிருந்ததால், மற்ற வேலைக்கு நீங்கலாகித் தங்களுடைய அறைகளில் இருந்தார்கள்.
\v 34 லேவியர்களில் குடும்பத்தலைவர்களாகிய இவர்கள் தங்களுடைய சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.
\s1 சவுலின் வம்ச வரலாறு
\p
\s5
\v 35 கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
\v 36 அவன் மூத்த மகனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
\v 37 கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே.
\s5
\v 38 மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலிருக்கிற தங்களுடைய சகோதரர்களுக்கு சமீபத்தில் குடியிருந்தார்கள்.
\v 39 நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசுவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
\v 40 யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
\s5
\v 41 மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
\v 42 ஆகாஸ் யாராகைப் பெற்றான்; யாராக் அலெமேத்தையும், அஸ்மவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
\v 43 மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பாயா; இவனுடைய மகன் எலியாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
\v 44 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்களுடைய பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான், இவர்கள் ஆத்சேலின் மகன்கள்.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 சவுலின் மரணம்
\p
\v 1 பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களோடு யுத்தம் செய்தார்கள்; இஸ்ரவேல் பெலிஸ்தர்களுக்கு முன்பாக பயந்தோடி, கில்போவா மலையிலே வெட்டப்பட்டு விழுந்தார்கள்.
\v 2 பெலிஸ்தர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் மகன்களாகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும் வெட்டிப்போட்டார்கள்.
\v 3 சவுலுக்கு விரோதமாக போர் பலத்தது; வில்வீரர்கள் அவனைக்கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரர்களுக்கு மிகவும் பயந்து,
\s5
\v 4 தன்னுடைய ஆயுதவீரனை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடி, நீ உன்னுடைய பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுதவீரன் மிகவும் பயப்பட்டதால் அப்படி செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் பட்டயத்தை ஊன்றி அதின்மேல் விழுந்தான்.
\s5
\v 5 சவுல் செத்துப்போனதை அவனுடைய ஆயுதவீரன் கண்டபோது, அவனும் பட்டயத்தின்மேல் விழுந்து செத்துப்போனான்.
\v 6 அப்படியே சவுலும், அவனுடைய மூன்று மகன்களும், அவனுடைய வீட்டு மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இறந்துபோனார்கள்.
\s5
\v 7 மக்கள் பயந்தோடியதையும், சவுலும் அவனுடைய மகன்களும் இறந்துபோனதையும், பள்ளத்தாக்கிலுள்ள இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது தங்களுடைய பட்டணங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள் வந்து, அவைகளில் குடியிருந்தார்கள்.
\p
\v 8 வெட்டப்பட்டவர்களின் ஆடைகளை எடுத்துக்கொள்ளப் பெலிஸ்தர்கள் மறுநாளில் வந்தபோது, அவர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கக்கண்டு,
\s5
\v 9 அவனுடைய ஆடைகளையும், அவனுடைய தலையையும், அவனுடைய ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தங்களுடைய விக்கிரகங்களுக்கும் மக்களுக்கும் அதை அறிவிக்கும்படி பெலிஸ்தர்களுடைய தேசத்தைச்சுற்றிலும் செய்தி அனுப்பி,
\v 10 அவனுடைய ஆயுதங்களைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே வைத்து, அவனுடைய தலையைத் தாகோன் கோவிலிலே தூக்கிவைத்தார்கள்.
\s5
\v 11 பெலிஸ்தர்கள் சவுலுக்கு செய்த எல்லாவற்றையும் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார்கள் எல்லோரும் கேட்டபோது,
\v 12 பெலசாலிகள் எல்லோரும் எழுந்துபோய், சவுலின் உடலையும், அவனுடைய மகன்களின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்களுடைய எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்செய்து, ஏழுநாட்கள் உபவாசம் இருந்தார்கள்.
\s5
\v 13 அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், கர்த்தருக்குச் செய்த தன்னுடைய துரோகத்தினாலும், அவன் கர்த்தரைத் தேடாமல் குறி சொல்லுகிறவர்களைக் கேட்கும்படி தேடியதாலும் செத்துப்போனான்.
\v 14 அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்ஜியபாரத்தை ஈசாயின் மகனாகிய தாவீதிடம் ஒப்படைத்தார்.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\s1 தாவீது இஸ்ரவேலின்மேல் ராஜாவாகுதல்
\p
\v 1 இஸ்ரவேலர்கள் எல்லோரும் எப்ரோனிலிருக்கிற தாவீதிடம் கூடிவந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய சரீரமுமானவர்கள்.
\v 2 சவுல் இன்னும் ராஜாவாக இருக்கும்போதே, நீர் இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோய் நடத்திக்கொண்டு வருவீர்; என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலை நீர் மேய்த்து, அவர்கள்மேல் தலைவனாக இருப்பீர் என்று உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்குச் சொல்லியும் இருக்கிறார் என்றார்கள்.
\v 3 அப்படியே இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் எப்ரோனிலே ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டபின்பு, கர்த்தர் சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள்.
\s1 தாவீது எருசலேமைக் கைப்பற்றுதல்
\p
\s5
\v 4 பின்பு தாவீது இஸ்ரவேல் எல்லோரோடும் ஏபூசாகிய எருசலேமிற்குப் போனான்; எபூசியர்கள் அந்த தேசத்தின் குடிகளாக இருந்தார்கள்.
\v 5 அப்பொழுது ஏபூசின் குடிகள் தாவீதை நோக்கி: நீ இதற்குள் நுழைவதில்லை என்றார்கள்; ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமானது.
\v 6 எபூசியர்களை முறியடிப்பதில் எவன் முந்தினவனாக இருக்கிறானோ, அவன் தலைவனும் தளபதியுமாக இருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் மகனாகிய யோவாப் முந்தி அவர்களை முறியடித்து தலைவனாக்கப்பட்டான்.
\s5
\v 7 தாவீது அந்தக் கோட்டையில் தங்கியிருந்ததால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது.
\v 8 பிற்பாடு அவன் நகரத்தை மில்லோ தொடங்கிச் சுற்றிலும் கட்டினான்; யோவாப் நகரத்தின் மற்ற இடங்களைப் பழுதுபார்த்தான்.
\v 9 தாவீதின் பெயரும் புகழும் நாளுக்குநாள் வளர்ந்துவந்தது; ஏனென்றால், சேனைகளுடைய கர்த்தர் அவனோடு இருந்தார்.
\s1 தாவீதின் பலசாலிகள்
\p
\s5
\v 10 கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்க அவனோடு இருந்து ராஜ்ஜியபாரம்செய்கிற அவனிடமும், எல்லா இஸ்ரவேலர்களிடமும், வீரர்களாக இருந்த முதன்மையான பெலசாலிகளும்,
\v 11 தாவீதுக்கு இருந்த அந்த பலசாலிகளின் எண்ணிக்கையாவது: அக்மோனியின் மகனாகிய யாஷோபியாம் என்னும் முப்பது பேர்களின் தலைவன்: இவன் முந்நூறுபேர்களின்மேல் தன்னுடைய ஈட்டியை ஓங்கி அவர்களை ஒன்றாகக் கொன்றுபோட்டான்.
\s5
\v 12 இவனுக்கு இரண்டாவது அகோயின் மகனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பெலசாலிகளில் ஒருவன்.
\v 13 பெலிஸ்தர்கள் பாஸ்தம்மீமிலிருக்கிற வாற்கோதுமை நிறைந்த வயல்நிலத்தில் யுத்தத்திற்குக் கூடிவந்தபோதும், மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடினபோதும் இவன் தாவீதோடு அங்கே இருந்தான்.
\v 14 அப்பொழுது அவர்கள் இந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றிப் பெலிஸ்தர்களை வெட்டிப்போட்டார்கள்; அதினாலே கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்.
\s5
\v 15 முப்பது தலைவர்களில் மூன்றுபேர்கள் அதுல்லாம் என்னும் கன்மலைக் குகையில் இருக்கிற தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் முகாம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இறங்குகிறபோது,
\v 16 தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் படை பெத்லகேமில் இருந்தது.
\v 17 தாவீது பெத்லகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல்கொண்டு, என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
\s5
\v 18 அப்பொழுது அந்த மூன்றுபேர்களும் பெலிஸ்தர்களின் முகாமிற்குள் துணிவுடன் நுழைந்துபோய், பெத்லகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றிலிருந்து தண்ணீர் மொண்டு, தாவீதிடம் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனமில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:
\v 19 நான் இதைச் செய்யாதபடி, என்னுடைய தேவன் என்னைக் காத்துக்கொள்வாராக; தங்களுடைய உயிரைப்பற்றி நினைக்காமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனிதர்களின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள்.
\s5
\v 20 யோவாபின் சகோதரனாகிய அபிசாய் அந்த மூன்றுபேர்களில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி, முந்நூறுபேர்களை கொன்றதால் இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான்.
\v 21 இந்த மூன்றுபேர்களில் அவன் மற்ற இரண்டுபேர்களிலும் மேன்மையுள்ளவனானதால், அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேர்களுக்கு அவன் சமமானவன் இல்லை.
\s5
\v 22 பெலசாலியாகிய யோய்தாவின் மகனும், கப்சேயேல் ஊரைச்சேர்ந்தவனுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமட்டுமல்லாமல், உறைந்த மழைபெய்த நாளில் அவன் ஒரு குகைக்குள்ளே இறங்கிப்போய், ஒரு சிங்கத்தைக் கொன்றான்.
\v 23 ஐந்து முழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியனுடைய கையில் நெய்கிறவர்களின் படைமரத்திற்கு இணையான ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியனுடைய கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவனுடைய ஈட்டியால் அவனைக் கொன்றுபோட்டான்.
\s5
\v 24 இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்ததால், மூன்று பெலசாலிகளுக்குள்ளே பெயர்பெற்றவனாக இருந்தான்.
\v 25 முப்பதுபேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேர்களுக்கும் இவன் சமமானவன் இல்லை; அவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான்.
\p
\s5
\v 26 இராணுவத்திலிருந்த மற்ற பெலசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் ஏல்க்கானான்,
\v 27 ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,
\v 28 தெக்கோவியனாகிய இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனாகிய அபியேசர்,
\v 29 ஊசாத்தியனாகிய சிபெக்காய், அகோகியனாகிய ஈலாய்,
\s5
\v 30 நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் மகன் ஏலேத்,
\v 31 பென்யமீன் சந்ததியில் கிபேயா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா,
\v 32 காகாஸ் நீரோடைத் தேசத்தானாகிய ஊராயி, அர்பாத்தியனாகிய அபியேல்,
\v 33 பகரூமியனாகிய அஸ்மாவேத், சால்போனியனாகிய ஏலியாபா,
\s5
\v 34 கீசோனியனாகிய ஆசேமின் மகன்கள், ஆராரியனாகிய சாகியின் மகன் யோனத்தான்.
\v 35 ஆராரியனாகிய சாக்காரின் மகன் அகியாம், ஊரின் மகன் ஏலிபால்,
\v 36 மெகராத்தியனாகிய எப்பேர், பெலோனியனாகிய அகியா,
\v 37 கர்மேலியனாகிய ஏஸ்ரோ, ஏஸ்பாயின் மகன் நாராயி,
\s5
\v 38 நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் மகன் மிப்கார்,
\v 39 அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுதவீரனான பெரோத்தியனாகிய நாராயி,
\v 40 இத்தரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரெப்,
\v 41 ஏத்தியனாகிய உரியா, அக்லாயின் மகன் சாபாத்,
\s5
\v 42 ரூபனியர்களின் தலைவனாகிய சீசாவின் மகன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடு முப்பது பேர்கள் இருந்தார்கள்.
\v 43 மாகாவின் மகன் ஆனான், மிதினியனாகிய யோசபாத்,
\v 44 அஸ்தரேத்தியனாகிய உசியா, ஆரோவேரியனாகிய ஓத்தாமின் மகன்கள் சமாவும், யேகியேலும்,
\s5
\v 45 சிம்ரியின் மகன் ஏதியாயேல், தித்சியனாகிய அவனுடைய சகோதரன் யோகா,
\v 46 மாகாவியர்களான ஏலியேல், ஏல்நாமின் மகன்கள் ஏரிபாயும், யொசவியாவும், மோவாபியனான இத்மாவும்,
\v 47 மெசோபாயா ஊரைச்சேர்ந்தவர்களாகிய ஏலியேலும், ஓபேதும், யாசீயேலுமே.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\s1 தாவீதோடு சேர்ந்த வீரர்கள்
\p
\v 1 தாவீது கீசின் மகனாகிய சவுலால் இன்னும் மறைவாக இருக்கும்போது, சிக்லாகில் இருக்கிற அவனிடம் வந்து,
\v 2 யுத்தத்திற்கு ஒத்தாசை செய்த வில்வீரர்களும், கவண்கல் எறிவதற்கும் வில்லினால் அம்பு எய்வதற்கும் வலது இடது கை பழக்கமான பலசாலிகளான மற்ற மனிதர்களுமாவன: சவுலின் சகோதரர்களாகிய பென்யமீன் கோத்திரத்தில்,
\s5
\v 3 கிபேயா ஊரைச்சேர்ந்த சேமாவின் மகன்கள் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் மகன்களாகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும்,
\v 4 முப்பதுபேர்களில் பலசாலியும் முப்பதுபேர்களுக்குப் பெரியவனுமான இஸ்மாயா என்னும் கிபியோனியனும், எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரைச்சேர்ந்த யோசபாத்,
\s5
\v 5 எலுசாயி, எரிமோத், பிகலியா, செமரியா, அருப்பியனான செப்பத்தியா,
\v 6 எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யசொபெயாம் என்னும் கோரேகியர்களும்,
\v 7 யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரைச்சேர்ந்த எரோகாமின் மகன்களுமே.
\s5
\v 8 காத்தியர்களில் கேடகமும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளில் இருக்கிற வெளிமான் வேகம் போன்ற வேகமும் உள்ளவர்களாக இருந்து, யுத்தவீரர்களான பலசாலிகள் சிலரும் வனாந்திரத்திலுள்ள பாதுகாப்பான இடத்தில் இருக்கிற தாவீதுக்கு ஆதரவாக சேர்ந்தார்கள்.
\s5
\v 9 யாரென்றால், எத்சேர் என்னும் தலைவன், அவனுக்கு இரண்டாவது ஒபதியா; மூன்றாவது எலியாப்,
\v 10 நாலாவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா,
\v 11 ஆறாவது அத்தாயி, ஏழாவது எலியேல்,
\v 12 எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சபாத்,
\v 13 பத்தாவது எரேமியா, பதினோராவது மக்பன்னாயி,
\s5
\v 14 காத் மகன்களான இவர்கள் இராணுவத்தலைவர்களாக இருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேர்களுக்கும் பெரியவன் ஆயிரம்பேர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.
\v 15 யோர்தான் கரைபுரண்டு போயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற அனைவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.
\s5
\v 16 பின்னும் பென்யமீன் மனிதர்களிலும் யூதா மனிதர்களிலும் சிலர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிற தாவீதிடம் வந்தார்கள்.
\v 17 தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களை சந்தித்து: நீங்கள் எனக்கு உதவி செய்ய சமாதானமாக என்னிடம் வந்தீர்களானால், என்னுடைய இருதயம் உங்களோடு இணைந்திருக்கும்; என்னுடைய கைகளில் கொடுமை இல்லாமலிருக்க, என்னை என்னுடைய எதிரிகளுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களென்றால், நம்முடைய பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.
\s5
\v 18 அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கியதால், அவன்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் மகனே, உமக்கு ஆதரவாக இருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவி செய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார் என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை படைகளுக்குத் தலைவர்களாக்கினான்.
\s5
\v 19 சவுலின்மேல் யுத்தம்செய்யப்போகிற பெலிஸ்தர்களுடனே தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவனுக்கு ஆதரவாகச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தர்களின் பிரபுக்கள் யோசனைசெய்து, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாகத் தன்னுடைய ஆண்டவனாகிய சவுலிற்கு ஆதரவாகப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்; அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவில்லை.
\v 20 அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகும்போது, மனாசேயில் அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தார்களின் ஆயிரம்பேர்களுக்கு தலைவர்கள் அவனுக்கு ஆதரவாக வந்தார்கள்.
\s5
\v 21 அந்த படைகளுக்கு விரோதமாக இவர்கள் தாவீதுக்கு உதவி செய்தார்கள்; இவர்களெல்லோரும் பலசாலிகளும் இராணுவத்தில் தலைவர்களுமாக இருந்தார்கள்.
\v 22 அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனிதர்கள் அவனிடம் வந்து சேர்ந்ததால், அவர்கள் தேவசேனையைப்போல பெரிய சேனையானார்கள்.
\s1 எப்ரோனில் தாவீதோடு சேர்ந்த மற்ற வீரர்கள்
\p
\s5
\v 23 கர்த்தருடைய வார்த்தையின்படியே, சவுலின் ராஜ்ஜியபாரத்தைத் தாவீதிடம் திருப்ப, எப்ரோனில் இருக்கிற அவனிடம் வந்த போர்வீரர்களான தலைவர்களின் எண்ணிக்கை:
\v 24 யூதா கோத்திரத்தில் கேடகமும் ஈட்டியும் பிடித்து, யுத்த போர்வீரர்களானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர்கள்.
\v 25 சிமியோன் கோத்திரத்தில் பலசாலிகளாகிய யுத்தவீரர்கள் ஏழாயிரத்து நூறுபேர்கள்.
\s5
\v 26 லேவி கோத்திரத்தில் நான்காயிரத்து அறுநூறுபேர்கள்.
\v 27 ஆரோன் சந்ததியார்களின் அதிபதியாகிய யோய்தாவும், அவனோடு இருந்த மூவாயிரத்து எழுநூறுபேர்களும்,
\v 28 பலசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களான இருபத்திரண்டு தலைவர்களுமே.
\s5
\v 29 பென்யமீன் கோத்திரத்தார்களான சவுலின் சகோதரர்களில் மூவாயிரம்பேர்கள்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப்பார்த்தார்கள்.
\v 30 எப்பிராயீம் கோத்திரத்தில் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தில் பெயர் பெற்ற மனிதர்களான பலசாலிகள் இருபதாயிரத்து எண்ணூறுபேர்கள்.
\v 31 மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்க வரும்படி, பெயர்பெயராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெட்டாயிரம்பேர்கள்.
\s5
\v 32 இசக்கார் கோத்திரத்தில், இஸ்ரவேலர்கள் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேர்களும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லா சகோதரர்களுமே.
\v 33 செபுலோன் கோத்திரத்தில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்வதற்கும், தங்களுடைய அணியைக் காத்து நிற்பதற்கும் பழகி, வஞ்சனை செய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதாயிரம்பேர்கள்.
\s5
\v 34 நப்தலி கோத்திரத்தில் ஆயிரம் தலைவர்கள் கேடகமும் ஈட்டியும் பிடித்த அவர்களோடு இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்கள்.
\v 35 தாண் கோத்திரத்தில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எட்டாயிரத்து அறுநூறுபேர்கள்.
\s5
\v 36 ஆசேர் கோத்திரத்தில் யுத்தத்திற்குத் தேறினவர்களாக போர்செய்யப்போகத்தக்கவர்கள் நாற்பதாயிரம்பேர்கள்.
\v 37 யோர்தானுக்கு அக்கரையான ரூபனியர்களிலும், காத்தியர்களிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களிலும், யுத்தம்செய்ய எல்லாவித ஆயுதங்களையும் அணிந்தவர்கள் நூற்றிருபதாயிரம்பேர்கள்.
\s5
\v 38 தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்க, இந்த யுத்தமனிதர்கள் எல்லோரும் அணிஅணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இதயத்தோடு எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற அனைவரும் தாவீதை ராஜாவாக்க ஒருமனப்பட்டிருந்தார்கள்.
\v 39 அவர்கள் அங்கே தாவீதோடு மூன்று நாட்கள் இருந்து, சாப்பிட்டுக் குடித்தார்கள்; அவர்கள் சகோதரர்கள் அவர்களுக்காக எல்லாவற்றையும் ஆயத்தம்செய்திருந்தார்கள்.
\v 40 இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைவரை அவர்களுக்கு அருகில் இருந்தவர்களும், கழுதைகள்மேலும், ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும், மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், உலர்ந்த திராட்சப்பழங்கள், திராட்சரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகிய இவைகளைத் தேவையான அளவு ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டானது.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 உடன்படிக்கைப் பெட்டியைத் திரும்பக் கொண்டுவருதல்
\p
\v 1 தாவீது ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களோடும் நூறுபேர்களுக்குத் தலைவர்களோடும் எல்லா அதிபதிகளோடும் ஆலோசனைசெய்து,
\v 2 இஸ்ரவேல் சபைகளையெல்லாம் நோக்கி: உங்களுக்கு விருப்பமாகவும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு சித்தமாகவும் இருந்தால், இஸ்ரவேலின் தேசங்களில் எல்லாம் இருக்கிற நம்முடைய மற்ற சகோதரர்களும், அவர்களோடு தங்களுடைய ஊரில் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் நம்மோடு சேரும்படி நாம் சீக்கிரமாக அவர்களிடம் ஆள் அனுப்பி,
\v 3 நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டு வருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாமற்போனோம் என்றான்.
\v 4 இந்தக் காரியம் எல்லா மக்களின் பார்வைக்கும் சரியாக இருந்ததால், சபையார்கள் எல்லோரும் அப்படியே செய்வோம் என்றார்கள்.
\s5
\v 5 அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதிதுவங்கி ஆமாத்தின் எல்லைவரையுள்ள இஸ்ரவேலையெல்லாம்சேர்த்து,
\v 6 கேருபீன்களின் நடுவே வாசம்செய்கிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அந்த இடத்திற்குப் போனார்கள்.
\s5
\v 7 அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது ரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை வழிநடத்தினார்கள்.
\v 8 தாவீதும் எல்லா இஸ்ரவேலர்களும் தங்களுடைய முழு பெலத்தோடும் தேவனுக்கு முன்பாக சுரமண்டலங்களையும் தம்புருகளையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் இசைத்து மகிழ்ச்சியாக ஆடிப்பாடினார்கள்.
\s5
\v 9 அவர்கள் கீதோனின் களம்வரை வந்தபோது, மாடுகள் தடுமாறியதால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன்னுடைய கையை நீட்டினான்.
\v 10 அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம்மூண்டவராக, அவன் தன்னுடைய கையைப் பெட்டியின் அருகில் நீட்டியதால் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.
\v 11 அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததால் தாவீது கவலைப்பட்டு, அந்த இடத்திற்கு இந்த நாள்வரை சொல்லப்பட்டவருகிற பேரேஸ் ஊசா என்னும் பெயரிட்டு,
\s5
\v 12 அன்றையதினம் தேவனுக்கு பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடம் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,
\v 13 பெட்டியைத் தன்னிடம் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் சேர்த்தான்.
\v 14 தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடம் மூன்று மாதங்கள் இருக்கும்போது, கர்த்தர் ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.
\s5
\c 14
\cl அத்தியாயம்– 14
\s1 தாவீதின் வீடும் குடும்பமும்
\p
\v 1 தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுவற்குக் கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான்.
\v 2 கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக ஏற்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய மக்களுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.
\p
\s5
\v 3 எருசலேமிலே தாவீது பின்னும் அநேக பெண்களைத் திருமணம்செய்து, பின்னும் மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
\v 4 எருசலேமிலே அவனுக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
\v 5 இப்கார், எலிசூவா, எல்பெலேத்,
\v 6 நோகா, நெப்பேக், யப்பியா,
\v 7 எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.
\s1 தாவீது பெலிஸ்தர்களைத் தோற்கடித்தல்
\p
\s5
\v 8 தாவீது அனைத்து இஸ்ரவேலர்களின்மேலும் ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்டதைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்கள் எல்லோரும் தாவீதைத் தேட வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டான்.
\v 9 பெலிஸ்தர்கள் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
\s5
\v 10 பெலிஸ்தர்களுக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர்: போ, அவர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
\v 11 அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களைத் தோற்கடித்து: தண்ணீர்கள் உடைந்து ஓடுவதுபோல, தேவன் என்னுடைய கையால் என்னுடைய எதிரிகளை உடைந்து ஓடச்செய்தார் என்றான்; அதினால் அந்த இடத்திற்கு பாகால்பிராசீம் என்னும் பெயரிட்டார்கள்.
\v 12 அங்கே அவர்கள் தங்களுடைய தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன.
\s5
\v 13 பெலிஸ்தர்கள் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
\v 14 அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடம் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களைச் சுற்றிவளைத்து, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிராக இருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
\s5
\v 15 முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தர்களின் முகாமை முறியடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.
\v 16 தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தர்களின் இராணுவத்தைக் கிபியோன் துவங்கிக் காசேர்வரைத் தோற்கடித்தார்கள்.
\v 17 அப்படியே தாவீதின் புகழ் எல்லா தேசங்களிலும் பிரபலமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் எல்லா தேசங்களின்மேலும் வரச்செய்தார்.
\s5
\c 15
\cl அத்தியாயம்– 15
\s1 உடன்படிக்கைப் பெட்டி எருசலேமிற்கு கொண்டுவரப்படுதல்
\p
\v 1 அவன் தனக்கு தாவீதின் நகரத்தில் வீடுகளைக் கட்டி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.
\v 2 பிறகு தாவீது: லேவியர்கள் தவிர வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கக் கூடாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களையே கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான்.
\v 3 அப்படியே கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் இடத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
\s5
\v 4 ஆரோனின் சந்ததிகளையும்,
\v 5 லேவியர்களாகிய கோகாத் சந்ததியில் பிரபுவாகிய ஊரியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றிருபதுபேர்களையும்,
\v 6 மெராரியின் சந்ததியில் பிரபுவாகிய அசாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூற்றிருபதுபேரையும்,
\s5
\v 7 கெர்சோன் மகன்களில் பிரபுவாகிய யோவேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுமுப்பதுபேர்களையும்,
\v 8 எலிசாப்பான் மகன்களில் பிரபுவாகிய செமாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூறுபேர்களையும்,
\v 9 எப்ரோன் சந்ததியில் பிரபுவாகிய எலியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய எண்பதுபேர்களையும்,
\v 10 ஊசியேல் சந்ததியில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுப்பன்னிரெண்டு பேர்களையும் தாவீது கூடிவரச்செய்தான்.
\s5
\v 11 பின்பு தாவீது ஆசாரியர்களாகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியர்களாகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து,
\v 12 அவர்களை நோக்கி: லேவியர்களில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர்கள், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்செய்த இடத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்களுடைய சகோதரர்களையும் பரிசுத்தம்செய்துகொள்ளுங்கள்.
\s5
\v 13 முதலில் நீங்கள் அதை சுமக்காததாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடி தேடாமற்போனதாலும், அவர் நமக்குள்ளே அடிவிழச்செய்தார் என்றான்.
\v 14 ஆசாரியர்களும் லேவியர்களும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியைக் கொண்டுவரத் தங்களைச் சுத்தம்செய்துகொண்டார்கள்.
\v 15 பின்பு லேவியர்கள் கர்த்தருடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபடி தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினால் தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.
\s5
\v 16 தாவீது லேவியர்களின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களாகிய பாடகர்களைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான்.
\v 17 அப்படியே லேவியர்கள் யோவேலின் மகனாகிய ஏமானையும், அவனுடைய சகோதரர்களில் பெரகியாவின் மகனாகிய ஆசாப்பையும், மெராரியின் சந்ததியான தங்களுடைய சகோதரர்களில் குஷாயாவின் மகனாகிய ஏத்தானையும்,
\v 18 இவர்களோடு இரண்டாவது வரிசையாகத் தங்களுடைய சகோதரர்களாகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளர்களையும் நிறுத்தினார்கள்.
\s5
\v 19 பாடகர்களாகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், வெண்கல தொனியுள்ள கைத்தாளங்களை ஒலிக்கச்செய்து பாடினார்கள்.
\v 20 சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருகளை வாசித்தார்கள்.
\v 21 மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாக வாசித்தார்கள்.
\s5
\v 22 லேவியர்களுக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாக இருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையை நடத்தினான்.
\v 23 பெரகியாவும் எல்க்கானாவும் பெட்டிக்கு முன்பாகக் காவல்காத்துவந்தார்கள்.
\v 24 செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர்கள் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத்ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளிகளாக இருந்தார்கள்.
\s5
\v 25 இப்படி தாவீதும், இஸ்ரவேலின் மூப்பர்களும், ஆயிரம்பேர்களின் தலைவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடு கொண்டுவரச்செய்தார்கள்.
\v 26 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களுக்கு தேவன் தயவு செய்ததால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள்.
\s5
\v 27 தாவீதும், பெட்டியை சுமக்கிற எல்லா லேவியர்களும், பாடகர்களும், பாடகர்களின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளை அணிந்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தை அணிந்திருந்தான்.
\v 28 அப்படியே இஸ்ரவேலனைத்தும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் சத்தத்தோடும், தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.
\s5
\v 29 கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி, தாவீதின் நகரம்வரை வந்தபோது, சவுலின் மகளாகிய மீகாள் பலகணி வழியாகப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன்னுடைய இருதயத்தில் அவமதித்தாள்.
\s5
\c 16
\cl அத்தியாயம்– 16
\s1 தாவீதின் நன்றிப்பாடல்
\p
\v 1 அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
\v 2 தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தி முடிந்தபின்பு, அவன் மக்களைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதித்து,
\v 3 ஆண்கள்துவங்கி பெண்கள்வரை, இஸ்ரவேலர்களாகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.
\p
\s5
\v 4 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கொண்டாடித் துதித்துப் புகழுவதற்குக் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பணிவிடை செய்யும்படி லேவியர்களில் சிலரை நியமித்தான்.
\v 5 அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாக இருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களை தட்டவும்,
\v 6 பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர்கள் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள்.
\p
\s5
\v 7 அப்படி ஆரம்பித்த அந்த நாளிலே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடமும் அவனுடைய சகோதரர்களிடமும் கொடுத்த சங்கீதமாவது:
\p
\v 8 கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைத் தெரியப்படுத்துங்கள்; அவருடைய செயல்களை மக்களுக்குள்ளே பிரபலப்படுத்துங்கள்.
\v 9 அவரைப் பாடி, அவரைத் துதித்து, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
\s5
\v 10 அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
\v 11 கர்த்தரையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்; அவருடைய சமுகத்தை அனுதினமும் தேடுங்கள்.
\s5
\v 12 அவருடைய ஊழியனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே!
\v 13 அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவருடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்புகளையும் நினைத்துப்பாருங்கள்.
\v 14 அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
\p
\s5
\v 15 ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும்,
\v 16 அவர் ஈசாக்குக்குக் கொடுத்த ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள்.
\v 17 அதை யாக்கோபுக்குக் கட்டளையாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
\v 18 உங்கள் சுதந்திரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
\s5
\v 19 அந்தக் காலத்தில் அவர்கள் கொஞ்ச எண்ணிகையுள்ள மக்களும் பரதேசிகளுமாக இருந்தார்கள்.
\v 20 அவர்கள் ஒரு மக்களைவிட்டு மற்றொரு மக்களிடத்துக்கும், ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மற்றொரு தேசத்தார்களிடமும் போனார்கள்.
\v 21 அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு:
\v 22 நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.
\p
\s5
\v 23 பூமியின் எல்லா குடிமக்களே, கர்த்தரைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பை சுவிசேஷமாக அறிவியுங்கள்.
\v 24 தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
\s5
\v 25 கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; எல்லா தேவர்களைவிட பயப்படத்தக்கவர் அவரே.
\v 26 அனைத்து மக்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.
\v 27 மகிமையும் கனமும் அவருடைய சமூகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவருடைய ஸ்தலத்தில் இருக்கிறது.
\s5
\v 28 மக்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதை செலுத்துங்கள்.
\v 29 கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் நுழையுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
\s5
\v 30 பூமியிலுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் உலகத்தை அசையாதபடி உறுதிப்படுத்துகிறவர்.
\v 31 வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ஆளுகைசெய்கிறார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லப்படுவதாக.
\s5
\v 32 கடலும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக.
\v 33 அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுமரங்களும் முழக்கமிடும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.
\s5
\v 34 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது.
\v 35 எங்கள் இரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிப்பதால் மேன்மைபாராட்டும்படி, எங்களை இரட்சித்து, எங்களை சேர்த்துக்கொண்டு, மற்ற தேசங்களுக்கு எங்களை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லுங்கள்.
\s5
\v 36 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக; அதற்கு மக்கள் எல்லோரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்.
\p
\s5
\v 37 பின்பு பெட்டிக்கு முன்பாக என்றும் அன்றாட முறையாக பணிவிடை செய்யும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவனுடைய சகோதரர்களையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரர்களாகிய அறுபத்தெட்டுபேர்களையும் வைத்து,
\v 38 எதித்தூனின் மகனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான்.
\v 39 கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற கர்த்தருடைய ஆசாரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்கதகன பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனங்களை எப்பொழுதும், காலையிலும் மாலையிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக,
\s5
\v 40 அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவனுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களையும் வைத்து,
\v 41 இவர்களோடு ஏமானையும், எதித்தூனையும், பெயர்பெயராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்ற சிலரையும்: கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும்,
\s5
\v 42 பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் ஒலிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் மகன்களை வாசல் காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான்.
\v 43 பின்பு மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன்னுடைய வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.
\s5
\c 17
\cl அத்தியாயம்– 17
\s1 தேவன் தாவீதிற்கு வாக்குத்தத்தம் செய்தல்
\p
\v 1 தாவீது தன்னுடைய வீட்டில் தங்கியிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமர வீட்டிலே தங்கியிருக்கிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.
\p
\v 2 அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான்.
\s5
\v 3 அன்று இரவிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
\v 4 நீ போய், என்னுடைய ஊழியக்காரனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாழும்படி நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்.
\v 5 நான் இஸ்ரவேலை வரச்செய்த நாள்முதல் இந்த நாள்வரை நான் ஒரு ஆலயத்திலே வாழாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு தங்குமிடத்திலிருந்து மற்றொரு தங்குமிடத்திற்கும் போனேன்.
\v 6 நான் எல்லா இஸ்ரவேலோடும் உலாவி வந்த எந்த இடத்திலாவது, நான் என்னுடைய மக்களை மேய்க்கக் கற்பித்த இஸ்ரவேலின் நியாயாதிபதிகளில் யாரையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாமலிருக்கிறது என்ன என்று ஏதேனும் ஒரு வார்த்தை சொன்னது உண்டோ?
\s5
\v 7 இப்போதும், நீ என்னுடைய ஊழியக்காரனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக இருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,
\v 8 நீ போன இடமெல்லாம் உன்னோடு இருந்து, உன்னுடைய எதிரிகளையெல்லாம் உனக்கு முன்பாக அழித்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் பெயர்களுக்கு இணையான பெரிய பெயரை உனக்கு உண்டாக்கினேன்.
\s5
\v 9 நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்களுடைய இடத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலவும், நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலவும், துன்மார்க்கமான மக்களால் இனி சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நியமித்தேன்.
\v 10 உன்னுடைய எதிரிகளையெல்லாம் கீழ்ப்படுத்தினேன். இப்போதும் கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்பதை உனக்கு அறிவிக்கிறேன்.
\s5
\v 11 நீ உன்னுடைய பிதாக்களிடத்தில் போக, உன்னுடைய நாட்கள் நிறைவேறும்போது, நான் உனக்குப்பின்பு உன்னுடைய மகன்களில் ஒருவனாகிய உன்னுடைய சந்ததியை எழும்பச்செய்து, அவனுடைய ராஜ்ஜியத்தை நிலைப்படுத்துவேன்.
\v 12 அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவனுடைய சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கச்செய்வேன்.
\s5
\v 13 நான் அவனுக்குப் பிதாவாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்; உனக்கு முன்னிருந்தவனைவிட்டு என்னுடைய கிருபையை நான் விலகச்செய்ததுபோல, அவனைவிட்டு விலகச்செய்யாமல்,
\v 14 அவனை என்னுடைய ஆலயத்திலும் என்னுடைய ராஜ்ஜியத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கச்செய்வேன்; அவனுடைய சிங்காசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல் என்றார்.
\v 15 நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லா தரிசனத்தின்படியும் தாவீதுக்கு சொன்னான்.
\s1 தாவீதின் ஜெபம்
\p
\s5
\v 16 அப்பொழுது தாவீது ராஜா உள்ளே நுழைந்து, கர்த்தருடைய சமூகத்திலிருந்து: தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் யார்? என் குடும்பம் எப்படிப்பட்டது?
\v 17 தேவனே, இது இன்னும் உம்முடைய பார்வைக்கு சிறியதாக இருக்கிறது என்று தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானுடைய வீட்டைக்குறித்து வெகு காலத்திற்கு முன்பு சொன்ன செய்தியையும் சொல்லி, என்னை மகா மேன்மையான சந்ததியின் மனிதனாகப் பார்த்தீர்.
\v 18 உமது அடியானுக்கு உண்டாகும் மேன்மையைப்பற்றி, தாவீது அதன்பின்பு உம்மோடு சொல்வது என்ன? தேவரீர் உமது அடியானை அறிவீர்.
\s5
\v 19 கர்த்தாவே, உமது அடியானுக்காக, உமது இருதயத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் அறியச்செய்யும்படி, இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் செய்தீர்.
\v 20 கர்த்தாவே, நாங்கள் எங்கள் காதுகளால் கேட்ட எல்லாவற்றின்படியும் தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத் தவிர வேறே தேவனும் இல்லை.
\v 21 உமது மக்களாகிய இஸ்ரவேலுக்கு நிகரான மக்களும் உண்டோ? பூலோகத்தில் இந்த ஒரே தேசத்தை தேவனாகிய நீர் உமக்கு மக்களாக மீட்கும்படி, பயங்கரமான பெரிய காரியங்களால் உமக்கு புகழ்ச்சியை உண்டாக்கி, நீர் எகிப்திற்கு நீங்கலாக்கி மீட்ட உமது மக்களுக்கு முன்பாக தேசங்களைத் துரத்தி,
\s5
\v 22 உமது மக்களாகிய இஸ்ரவேலர்கள் என்றைக்கும் உமது மக்களாக இருப்பதற்கு அவர்களை நிலைப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்கு தேவனானீர்.
\v 23 இப்போதும் கர்த்தாவே, தேவரீர் அடியானையும் அவனுடைய வீட்டையும்குறித்து சொன்ன வார்த்தை என்றென்றைக்கும் நிலைத்திருப்பதாக; தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
\v 24 ஆம், அது நிலைத்திருக்கவும், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலுக்கு தேவன் என்றும், உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக உறுதியானதென்றும் சொல்லப்படுவதால், உமது நாமம் என்றைக்கும் மகிமைப்படவுங்கடவது.
\s5
\v 25 உனக்கு வீடு கட்டுவேன் என்று என்னுடைய தேவனாகிய நீர் உமது அடியான் செவிகேட்க வெளிப்படுத்தினீர்; ஆகையால் உமக்கு முன்பாக விண்ணப்பம்செய்ய, உமது அடியானுக்கு மனதைரியம் கிடைத்தது.
\v 26 இப்போதும் கர்த்தாவே, நீரே தேவன்; நீர் உமது அடியானைக்குறித்து இந்த நல்ல விசேஷத்தைச் சொன்னீர்.
\v 27 இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி, அதை ஆசீர்வதித்தீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்தபடியால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.
\s5
\c 18
\cl அத்தியாயம்– 18
\s1 தாவீதின் வெற்றிகள்
\p
\v 1 இதற்குப்பின்பு, தாவீது பெலிஸ்தர்களைத் தாக்கி, அவர்களைத் தோற்கடித்து, காத் பட்டணத்தையும் அதின் கிராமங்களையும் பெலிஸ்தர்களின் கையிலிருந்து பிடித்துக்கொண்டான்.
\v 2 அவன் மோவாபியர்களையும் தோற்கடித்ததால், மோவாபியர்கள் தாவீதிற்கு பணிவிடை செய்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
\s5
\v 3 சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐபிராத் நதி அருகில் தன்னுடைய இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் அருகில் தோற்கடித்தான்.
\v 4 அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரை வீரர்களையும் இருபதாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டித்துப்போட்டான்.
\s5
\v 5 சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்ய தமஸ்கு பட்டணத்தார்களாகிய சீரியர்கள் வந்தார்கள்; தாவீது சீரியர்களில் இருபத்திரெண்டாயிரம்பேர்களை வெட்டிப்போட்டு,
\v 6 தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே படைகளை வைத்தான்; சீரியர்கள் தாவீதுக்கு பணிவிடைசெய்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
\s5
\v 7 ஆதாரேசரின் வேலைக்காரர்களுக்கு இருந்த பொன்கேடகங்களை தாவீது எடுத்து, அவைகளை எருசலேமிற்குக் கொண்டுவந்தான்.
\v 8 ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டு வந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலத் தொட்டியையும் தூண்களையும் வெண்கலப் பொருட்களையும் உண்டாக்கினான்.
\s5
\v 9 தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் தோற்கடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,
\v 10 அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்செய்து, அவனைத் தோற்கடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தன்னுடைய மகனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான எல்லாவித பொருட்களையும், அவனிடத்திற்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம் செய்கிறவனாக இருந்தான்.
\v 11 அந்த பொருட்களையும், தான் ஏதோமியர்கள், மோவாபியர்கள், அம்மோனிய மக்கள், பெலிஸ்தர்கள், அமலேக்கியர்கள் என்னும் எல்லா தேசங்களின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையுங்கூட தாவீது ராஜா கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டான்.
\s5
\v 12 செருயாவின் மகன் அபிசாயி உப்புப் பள்ளத்தாக்கிலே பதினெட்டாயிரம் ஏதோமியர்களைத் தோற்கடித்தான்.
\v 13 ஆகையால் தாவீது ஏதோமிலே படைகளை வைத்தான்; ஏதோமியர்கள் எல்லோரும் அவனுக்குப் பணிவிடை செய்கிறவர்களானார்கள்; தாவீது போன இடங்களிலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
\s1 தாவீதின் அலுவலர்கள்
\p
\s5
\v 14 தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய மக்களுக்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான்.
\v 15 செருயாவின் மகன் யோவாப் இராணுவத்தலைவனாக இருந்தான்; ஆகிலூதின் மகனாகிய யோசபாத் மந்திரியாக இருந்தான்.
\v 16 அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அபிமெலேக்கும் ஆசாரியர்களாக இருந்தார்கள்; சவிஷா எழுத்தாளனாக இருந்தான்.
\v 17 யோய்தாவின் மகன் பெனாயா கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும் தலைவனாக இருந்தான்; தாவீதின் மகன்கள் ராஜாவிடம் முன்னணி ஆலோசகர்களாக இருந்தார்கள்.
\s5
\c 19
\cl அத்தியாயம்– 19
\s1 அம்மோனியர்களுக்கு விரோதமாகப் போர் செய்தல்
\p
\v 1 அதன்பின்பு, அம்மோன் மக்களின் ராஜாவாகிய நாகாஸ் இறந்து, அவனுடைய மகன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\v 2 அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்கு தயவு செய்ததுபோல, நானும் அவனுடைய மகனாகிய இவனுக்கு தயவுசெய்வேன் என்று சொல்லி, அவனுடைய தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல தூதுவர்களை அனுப்பினான்; தாவீதின் வேலைக்காரர்கள் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோனியர்களின் தேசத்திலே வந்தபோது,
\v 3 அம்மோனியர்களின் பிரபுக்கள் ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனுக்கு மரியாதை கொடுப்பதாக உமக்குத் தோன்றுகிறதோ? தேசத்தை ஆராயவும், அதைக் கவிழ்த்துப்போடவும், உளவுபார்க்கவும் அல்லவோ, அவனுடைய வேலைக்காரர்கள் உம்மிடத்தில் வந்தார்கள் என்று சொன்னார்கள்.
\s5
\v 4 அப்பொழுது ஆனூன்: தாவீதின் வேலைக்காரர்களைப் பிடித்து, அவர்கள் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய ஆடைகளை இடுப்புவரை வைத்துவிட்டு, மற்றபாதியைக் கத்தரித்து, அவர்களை அனுப்பிவிட்டான்.
\v 5 அந்த மனிதர்கள் வரும்போது, அவர்களுடைய செய்தி தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அந்த மனிதர்கள் மிகவும் வெட்கப்பட்டதால், அவர்களுக்கு எதிராக ராஜா ஆட்களை அனுப்பி: உங்களுடைய தாடி வளரும்வரை நீங்கள் எரிகோவில் தங்கியிருந்து, பின்பு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 6 அம்மோன் மக்கள் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஆனூனும் அம்மோனியர்கள் மெசொப்பொத்தாமியாவிலும் மாக்காசோபா என்னும் சீரியர்களின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும் குதிரை வீரர்களும் கூலிக்கு வரும்படி ஆயிரம் தாலந்து வெள்ளி அனுப்பி,
\v 7 முப்பத்திரெண்டாயிரம் இரதங்களையும், மாக்காவின் ராஜாவையும், அவனுடைய மக்களையும் கூலிப்படையாக அழைத்தனுப்பினான்; இவர்கள் வந்து, மேதேபாவுக்கு முன்புறத்திலே முகாமிட்டார்கள்; அம்மோனியர்கள் தங்களுடைய பட்டணங்களிலிருந்து கூடிக்கொண்டு யுத்தம்செய்யவந்தார்கள்.
\s5
\v 8 அதைத் தாவீது கேட்டபோது, யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான்.
\v 9 அம்மோனிய மக்கள் புறப்பட்டுவந்து, பட்டணத்து வாசலருகில் அணிவகுத்தார்கள்; வந்த ராஜாக்கள் தனித்து வெளியிலே போருக்கு ஆயத்தமாக நின்றார்கள்.
\s5
\v 10 யுத்த இராணுவங்களின் படை தனக்கு நேராக முன்னும் பின்னும் இருப்பதை யோவாப் கண்டு, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதை சீரியர்களுக்கு எதிராக நிறுத்தி,
\v 11 மற்ற மக்களை அம்மோன் இராணுவத்திற்கு எதிராகப் போருக்கு ஆயத்தப்படுத்தி, தன்னுடைய சகோதரனாகிய அபிசாயிக்கு ஒப்புவித்து, அவனை நோக்கி:
\s5
\v 12 என்னைவிட சீரியர்கள் பலங்கொண்டால் நீ எனக்குத் துணை நில்; உன்னைவிட அம்மோன் இராணுவத்தினர்கள் பலங்கொண்டால் நான் உனக்குத் துணை நிற்பேன்.
\v 13 தைரியமாக இரு; நாம் நம்முடைய மக்களுக்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் நம்முடைய பெலத்தைக் காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
\s5
\v 14 பின்பு யோவாபும் அவனோடிருந்த மக்களும் சீரியர்களோடு யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக தப்பியோடினார்கள்.
\v 15 சீரியர்கள் தப்பியோடுவதை அம்மோன் இராணுவத்தினர்கள் கண்டபோது, அவர்களும் அவனுடைய சகோதரனாகிய அபிசாயிக்கு முன்பாக தப்பியோடிப் பட்டணத்திற்குள் நுழைந்தார்கள்; யோவாப் திரும்ப எருசலேமிற்கு வந்தான்.
\s5
\v 16 தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் நதிக்கு மறுகரையில் சீரியர்களை வரவழைத்தார்கள்; ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்கு முன்னாலே நடந்துபோனான்.
\v 17 அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, அவர்களுக்கு அருகில் வந்தபோது, அவர்களுக்கு எதிராக இராணுவங்களை நிறுத்தினான்; தாவீது சீரியர்களுக்கு எதிராக இராணுவங்களைப் போருக்கு ஆயத்தப்படுத்தினபின்பு அவனோடு யுத்தம்செய்தார்கள்.
\s5
\v 18 சீரியர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தப்பி ஓடினார்கள்; தாவீது சீரியர்களில் ஏழாயிரம் இரதங்களின் மனிதர்களையும், நாற்பதாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான்.
\v 19 தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டதை ஆதாரேசருக்குப் பணிவிடை செய்கிற எல்லா ராஜாக்களும் கண்டபோது, அவர்கள் தாவீதோடு சமாதானம்செய்து, அவனுக்குப் பணிவிடை செய்தார்கள்; அதன்பின்பு அம்மோன் மக்களுக்கு உதவிசெய்ய சீரியர்கள் மனமில்லாதிருந்தார்கள்.
\s5
\c 20
\cl அத்தியாயம்– 20
\s1 ரப்பாவைப் பிடித்தல்
\p
\v 1 அடுத்த வருடம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவ பலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோனியர்களின் தேசத்தை அழித்து ரப்பாவுக்கு வந்து அதை முற்றுகையிட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவைத் தாக்கி அதைத் தோற்கடித்தான்.
\s5
\v 2 தாவீது வந்து, அவர்கள் ராஜாவுடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து எடையுள்ள பொன்னும் ரத்தினங்கள் பதித்ததுமாகவும் இருந்தது; அது தாவீதின் தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளைப் பொருட்களையும் கொண்டுபோனான்.
\v 3 பின்பு அதிலிருந்த மக்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களும், கடப்பாரைகளும், கோடரிகளும் செய்கிற பணியில் பலவந்தமாக உட்படுத்தி; இப்படி அம்மோனிய மக்களின் பட்டணங்களுக்கெல்லாம் தாவீது செய்து, எல்லா மக்களோடு எருசலேமிற்குத் திரும்பினான்.
\s1 பெலிஸ்தர்களோடு யுத்தம்
\p
\s5
\v 4 அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தர்களோடு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது ஊசாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத சந்ததியர்களில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான்; அதினால் அவர்கள் அடக்கப்பட்டார்கள்.
\v 5 திரும்பப் பெலிஸ்தர்களோடு யுத்தம் உண்டாகிறபோது, யாவீரின் மகனாகிய எல்க்கானான் காத்தூரானாகிய கோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்றான்; அவனுடைய ஈட்டித் தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் அளவு பெரிதாக இருந்தது.
\s5
\v 6 மறுபடியும் ஒரு யுத்தம் காத்திலே நடந்தபோது, அங்கே உயரமான ஒரு மனிதன் இருந்தான்; அவனுக்கு ஆறு ஆறு விரலாக இருபத்துநான்கு விரல்கள் இருந்தது, அவனும் இராட்சத சந்ததியாக இருந்து,
\v 7 இஸ்ரவேலை சபித்தான்; தாவீதின் சகோதரனாகிய சிமேயாவின் மகன் யோனத்தான் அவனைக் கொன்றான்.
\v 8 காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவனுடைய வீரர்களின் கையினாலும் இறந்தார்கள்.
\s5
\c 21
\cl அத்தியாயம்– 21
\s1 தாவீது வீரர்களைக் கணக்கெடுத்தல்
\p
\v 1 சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி, இஸ்ரவேலைக் கணக்கெடுக்க தாவீதைத் தூண்டிவிட்டது.
\v 2 அப்படியே தாவீது யோவாபையும், படைத்தளபதிகளையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதுவங்கி தாண்வரை இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்களின் எண்ணிக்கையை நான் அறியும்படி என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான்.
\v 3 அப்பொழுது யோவாப்: கர்த்தருடைய மக்கள் இப்போது இருக்கிறதைவிட நூறு மடங்காக அவர் பெருகச்செய்வாராக; ஆனாலும் ராஜாவாகிய என்னுடைய ஆண்டவனே, அவர்கள் எல்லோரும் என்னுடைய ஆண்டவனுக்கு பணிவிடை செய்வதில்லையா? என்னுடைய ஆண்டவன் இதை ஏன் விசாரிக்கவேண்டும்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது எதற்காக நடக்கவேண்டும் என்றான்.
\s5
\v 4 யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலோங்கியதால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமிற்கு வந்து,
\v 5 போர் வீரர்களைக் கணக்கெடுத்து, எண்ணிக்கையை தாவீதிடம் கொடுத்தான்; இஸ்ரவேலெங்கும் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் பதினொரு லட்சம்பேர்களும், யூதாவில் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் நான்குலட்சத்து எழுபதாயிரம்பேர்களும் இருந்தார்கள்.
\s5
\v 6 ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாக இருந்ததால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய கணக்கெடுப்பிற்குள் வராதபடி எண்ணாமற்போனான்.
\v 7 இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியால் அவர் இஸ்ரவேலைத் தண்டித்தார்.
\v 8 தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; பெரிய முட்டாள்தனமாக செய்தேன் என்றான்.
\s5
\v 9 அப்பொழுது கர்த்தர், தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்துடனே பேசி,
\v 10 நீ தாவீதிடம் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் சொல்கிறார் என்று சொல் என்றார்.
\s5
\v 11 அப்படியே காத் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி:
\v 12 மூன்று வருடத்துப் பஞ்சமோ? அல்லது உன்னுடைய எதிரியின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன்னுடைய எதிரிகளுக்கு முன்பாக ஓடிப்போகச் செய்யும் மூன்றுமாதத் துரத்துதலோ? அல்லது மூன்றுநாட்கள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் அழிவு உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் சொல்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன பதில் கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான்.
\s5
\v 13 அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய பிரச்சனையில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான்.
\v 14 ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரச்செய்தார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதாயிரம்பேர்கள் இறந்தார்கள்.
\v 15 எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கும்போது கர்த்தர் பார்த்து, அந்தத் தீங்குக்கு மனவேதனையடைந்து, அழிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திற்கு அருகில் நின்றான்.
\s5
\v 16 தாவீது தன்னுடைய கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன்னுடைய கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் சாக்கைப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.
\v 17 தாவீது தேவனை நோக்கி: மக்களை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவம் செய்தேன்; தீங்கு நடக்கச்செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? என்னுடைய தேவனாகிய கர்த்தாவே, தண்டிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய மக்களுக்கு விரோதமாக இராமல், எனக்கும் என்னுடைய தகப்பன் வீட்டிற்கும் விரோதமாக இருப்பதாக என்றான்.
\s5
\v 18 அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்.
\v 19 அப்படியே தாவீது கர்த்தரின் நாமத்திலே காத் சொன்ன வார்த்தையின்படி போனான்.
\v 20 ஒர்னான் திரும்பிப் பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நான்கு மகன்களும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளிந்துகொண்டார்கள்; ஒர்னானோ போரடித்துக்கொண்டிருந்தான்.
\s5
\v 21 தாவீது ஒர்னானிடம் வந்தபோது, ஒர்னான் கவனித்து தாவீதைப் பார்த்து, அவனுடைய களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைவரை குனிந்து தாவீதை வணங்கினான்.
\v 22 அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி அதை எனக்குக் கொடு; வாதை மக்களைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதை உரிய விலைக்குக் கொடு என்றான்.
\s5
\v 23 ஒர்னான் தாவீதை நோக்கி: ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் அதை வாங்கிக் கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக; இதோ, சர்வாங்க தகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், உணவுபலிக்குக் கோதுமையும் ஆகிய யாவையும் கொடுக்கிறேன் என்றான்.
\v 24 அதற்கு தாவீது ராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாக வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை உரிய விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி,
\s5
\v 25 தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் எடையுள்ள பொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து,
\v 26 அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்தான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்தரவு கொடுத்ததுமல்லாமல்,
\v 27 தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்.
\p
\s5
\v 28 எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தர் தனக்கு பதில் சொன்னதை தாவீது அந்த காலத்திலே கண்டு அங்கேயே பலியிட்டான்.
\v 29 மோசே வனாந்திரத்தில் உண்டாக்கின கர்த்தர் தங்குமிடமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.
\v 30 தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கமுடியாமலிருந்தது.
\s5
\c 22
\cl அத்தியாயம்– 22
\p
\v 1 அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் இடம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் இடமும் இதுவே என்றான்.
\s1 ஆலயத்திற்கான ஆயத்தம்
\p
\v 2 பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நிய தேசத்தார்களைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான கற்களை வெட்டிப் பயன்படுத்தும் கொத்தனார்களை ஏற்படுத்தினான்.
\s5
\v 3 தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் அதிகமான இரும்பையும், எடைபோட முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,
\v 4 எண்ணமுடியாத அளவு கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியர்களும், தீரியர்களும் தாவீதுக்கு அதிகமான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
\v 5 தாவீது: என்னுடைய மகனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாக இருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் புகழும் மகிமையும் உடையதாக விளங்கும்படி மிகப்பெரியதாயிருக்க வேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதேச் சேமிக்க செய்யவேண்டும் என்று சொல்லி, தாவீது தன்னுடைய மரணத்திற்கு முன்னே அதிகமாக ஆயத்தம் செய்துவைத்தான்.
\s5
\v 6 அவன் தன்னுடைய மகனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுவதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து,
\v 7 சாலொமோனை நோக்கி: என்னுடைய மகனே, நான் என்னுடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என்னுடைய இருதயத்தில் நினைத்திருந்தேன்.
\v 8 ஆனாலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ அதிகமான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைச் செய்தாய்; நீ என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தச்செய்தாய்.
\s5
\v 9 இதோ, உனக்குப் பிறக்கப்போகிற மகன் அமைதியுள்ள ஆண்மகனாக இருப்பான்; சுற்றி இருக்கும் அவனுடைய எதிரிகளையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவனுடைய பெயர் சாலொமோன் என்னப்படும்; அவனுடைய நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமைதியையும் கொடுப்பேன்.
\v 10 அவன் என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்கு மகனாக இருப்பான், நான் அவனுக்கு தகப்பனாக இருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.
\s5
\v 11 இப்போதும் என்னுடைய மகனே, நீ பாக்கியவானாக இருந்து, கர்த்தர் உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன்னுடைய தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனே இருப்பாராக.
\v 12 கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் கொடுத்து, உன்னுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.
\v 13 கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த கட்டளைகளையும் சட்டங்களையும் செய்ய நீ கவனமாக இருந்தால் பாக்கியவானாக இருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாக இரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.
\s5
\v 14 இதோ, நான் என்னுடைய சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்து லட்சம் தாலந்து வெள்ளியையும், எடைபோட முடியாத அதிகமான வெண்கலத்தையும் இரும்பையும் சேமித்தும், மரங்களையும் கற்களையும் சேமித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாக ஆயத்தம் செய்வாய்.
\s5
\v 15 வேலை செய்யத்தக்க திரளான சிற்பிகளும், தச்சர்களும், கொத்தனார்களும், எந்த வேலையிலும் திறமைவாய்ந்தவர்களும் உன்னோடு இருக்கிறார்கள்.
\v 16 பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழுந்து காரியத்தை நடத்து; கர்த்தர் உன்னோடு இருப்பாராக என்றான்.
\s5
\v 17 தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது:
\v 18 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருந்து நான்கு திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார் அல்லவா? தேசத்தின் குடிகளை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; கர்த்தருக்கு முன்பாகவும், அவருடைய மக்களுக்கு முன்பாகவும், தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது.
\v 19 இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமாவையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும், தேவனுடைய பரிசுத்தப் பணிபொருட்களையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படி, நீங்கள் எழுந்து, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள் என்றான்.
\s5
\c 23
\cl அத்தியாயம்– 23
\s1 லேவியர்கள்
\p
\v 1 தாவீது வயது சென்றவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன்னுடைய மகனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.
\v 2 இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் கூடிவரும்படிச் செய்தான்.
\v 3 அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்கள் பெயர்பெயராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய எண்ணிக்கை முப்பத்தெட்டாயிரம்.
\s5
\v 4 அவர்களில் இருபத்துநான்காயிரம்பேர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர்கள் தலைவர்களும் அலுவலர்களும் என்றும்,
\v 5 நான்காயிரம்பேர்கள் வாசல் காக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும், துதி செய்வற்கு தான் செய்த கீதவாத்தியங்களால் நான்காயிரம்பேர்கள் கர்த்தரைத் துதிக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,
\v 6 அவர்களை லேவியின் மகன்களாகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய குழுக்களின்படி பிரித்தான்.
\s5
\v 7 கெர்சோனியர்களில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.
\v 8 லாதானின் மகன்கள் யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்கள்; இவர்களில் முந்தினவன் தலைவனாக இருந்தான்.
\v 9 சிமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்று பேர்கள்; இவர்கள் லாதான் வம்சத்தார்களின் தலைவர்களாக இறந்தார்கள்.
\s5
\v 10 யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நான்குபேர்களும் சிமேயின் மகன்களாக இருந்தார்கள்.
\v 11 யாகாத் தலைவனாக இருந்தான்; சீனா இரண்டாம் மகனாக இருந்தான்; எயூஷூக்கும் பெரீயாவுக்கும் அநேகம் மகன்கள் இல்லாததால், அவர்கள் தகப்பன்மார்களின் குடும்பத்தார்களில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.
\s1 கோகாத்தியர்கள்
\p
\s5
\v 12 கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர்கள்.
\v 13 அம்ராமின் மகன்கள் ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான இடத்தை என்றென்றைக்கும் பரிசுத்தமாகக் காக்கவும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டவும், அவருக்கு ஆராதனை செய்யவும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கவும் பிரித்துவைக்கப்பட்டார்கள்.
\v 14 தேவனுடைய மனிதனாகிய மோசேயின் மகன்களோ, லேவிகோத்திரத்தார்களுக்குள் எண்ணப்பட்டார்கள்.
\s5
\v 15 மோசேயின் மகன்கள் கெர்சோம் எலியேசர் என்பவர்கள்.
\v 16 கெர்சோமின் மகன்களில் செபுவேல் தலைவனாக இருந்தான்.
\v 17 எலியேசருடைய மகன்களில் ரெகபியா என்னும் அவனுடைய மகன் தலைவனாக இருந்தான்; எலியேசருக்கு வேறே மகன்கள் இல்லை; ரெகபியாவின் மகன்கள் அநேகராக இருந்தார்கள்.
\v 18 இத்சாரின் மகன்களில் செலோமித் தலைவனாக இருந்தான்.
\s5
\v 19 எப்ரோனின் மகன்களில் எரியா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நாலாவது எக்காமியாம்.
\v 20 ஊசியேலின் மகன்களில் மீகா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது இஷியா.
\s1 மெராரியர்கள்
\p
\s5
\v 21 மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் மகன்கள் எலெயாசார், கீஸ் என்பவர்கள்.
\v 22 எலெயாசார் மரிக்கிறபோது, அவனுக்கு மகள்களே அன்றி மகன்கள் இல்லை; கீசின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இவர்களைத் திருமணம் செய்தார்கள்.
\v 23 மூசியின் மகன்கள் மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர்கள்.
\s5
\v 24 தங்கள் பிதாகளுடைய குடும்பங்களின்படி, தகப்பன்மார்களில் தலைவனாக இருந்த லேவி சந்ததிகளின்படி பெயர்பெயராக குறிக்கப்பட்டபடி, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள்.
\v 25 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது மக்களை இளைப்பாறியிருக்கச்செய்தார்; அவர் என்றென்றைக்கும் எருசலேமில் தங்குவார் என்றும்,
\v 26 இனி லேவியர்கள் தங்குமிடத்தையாவது அதின் ஊழியத்தில் அதின் பணிபொருட்களில் எதையாவது சுமக்கத் தேவையில்லை என்றும்,
\s5
\v 27 தாவீது அவர்களைக்குறித்துச் சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி மகன்களில் எண்ணிக்கைக்கு உட்பட்டவர்கள் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தார்கள்.
\v 28 அவர்கள் ஆரோனுடைய மகன்களின் கீழ் கர்த்தருடைய ஆலயத்தின் ஊழியமாக நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், எல்லா பரிசுத்த பணிபொருட்களின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனையின் வேலையையும் விசாரிப்பதும்,
\v 29 சமுகத்து அப்பங்களையும், உணவுபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான எல்லா எடையையும் அளவையும் விசாரிப்பதும்,
\s5
\v 30 நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வு நாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற எல்லா வேளைகளிலும்,
\v 31 எண்ணிக்கைக்கு உள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அதின்படி செய்ய, கர்த்தருக்கு முன்பாக நிற்பதும்,
\s5
\v 32 ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த இடத்தின் காவலையும் தங்களுடைய சகோதரர்களாகிய ஆரோனுடைய மகன்களின் காவலையும் காப்பதும், கர்த்தருடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும், அவர்கள் வேலையாக இருந்தது.
\s5
\c 24
\cl அத்தியாயம்– 24
\s1 ஆசாரியர்களின் பிரிவுகள்
\p
\v 1 ஆரோன் சந்ததிகளின் பிரிவுகளாவன: ஆரோனின் மகன்கள் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
\v 2 நாதாபும், அபியூவும் மகன்கள் இல்லாமல் தங்களுடைய தகப்பனுக்கு முன்னே இறந்ததால் எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
\v 3 தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் சந்ததிகளையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் சந்ததிகளையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்திற்கு முறைப்படி அவர்களைப் பிரித்தான்.
\s5
\v 4 அவர்களைப் பிரிக்கிறபோது, இத்தாமாரின் சந்ததிகளைவிட எலெயாசாரின் சந்ததிகளுக்குள்ளே தலைவர்கள் அதிகமானபேர்கள் இருந்ததால், எலெயாசாரின் மகன்களில் பதினாறுபேர்கள் தங்களுடைய பிதாக்களுடைய குடும்பத்திற்கும், இத்தாமாரின் மகன்களில் எட்டுபேர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்திற்கும் தலைவர்களாக வைக்கப்பட்டார்கள்.
\v 5 எலெயாசாரின் சந்ததியாரிலும் இத்தாமாரின் சந்ததியாரிலும், பரிசுத்த இடத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாக இருக்கும்படி, இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்செய்யாமல் சீட்டுப்போட்டு அவர்களைப் பிரித்தார்கள்.
\s5
\v 6 லேவியர்களில் எழுத்தாளனாகிய செமாயா என்னும் நெதனெயேலின் மகன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களும் லேவியர்களுமான குடும்பத்தார்களின் தலைவர்களுக்கு முன்பாக அவர்கள் பெயர்களை எழுதினான்; ஒரு குடும்பத்தின் சீட்டு எலெயாசாரின் சந்ததிக்கு விழுந்தது; பின்பு அப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
\s5
\v 7 முதலாவது சீட்டு யோயாரீபிற்கும், இரண்டாவது யெதாயாவிற்கும்,
\v 8 மூன்றாவது ஆரிமிற்கும், நான்காவது செயோரீமிற்கும்,
\v 9 ஐந்தாவது மல்கியாவிற்கும், ஆறாவது மியாமீனிற்கும்,
\v 10 ஏழாவது அக்கோத்சிற்கும், எட்டாவது அபியாவிற்கும்,
\s5
\v 11 ஒன்பதாவது யெசுவாவிற்கும், பத்தாவது செக்கனியாவிற்கும்,
\v 12 பதினோராவது எலியாசீபிற்கும், பன்னிரெண்டாவது யாக்கீமிற்கும்,
\v 13 பதின்மூன்றாவது உப்பாவிற்கும், பதினான்காவது எசெபெயாபிற்கும்,
\v 14 பதினைந்தாவது பில்காவிற்கும், பதினாறாவது இம்மேரிற்கும்,
\s5
\v 15 பதினேழாவது ஏசீரிற்கும், பதினெட்டாவது அப்சேசிற்கும்,
\v 16 பத்தொன்பதாவது பெத்தகியாவிற்கும், இருபதாவது எகெசெக்கியேலிற்கும்,
\v 17 இருபத்தோராவது யாகினிற்கும், இருபத்திரண்டாவது காமுவேலிற்கும்,
\v 18 இருபத்துமூன்றாவது தெலாயாவிற்கும், இருபத்துநான்காவது மாசியாவிற்கும் விழுந்தது.
\s5
\v 19 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுடைய தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்படி, தங்கள் செயல்முறை வரிசைகளில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையும் அவர்களுடைய ஊழியத்திற்காகச் செய்யப்பட்ட வகுப்புகள் இவைகளே.
\s1 மீதமுள்ள லேவியர்கள்
\p
\s5
\v 20 லேவியின் மற்ற சந்ததிகளுக்குள்ளே இருக்கிற அம்ராமின் சந்ததியில் சூபவேலும், சூபவேலின் சந்ததியில் எகேதியாவும்,
\v 21 ரெகபியாவின் சந்ததியில் மூத்தவனாகிய இஷியாவும்,
\v 22 இத்சாரியர்களில் செலெமோத்தும், செலெமோத்தின் சந்ததியில் யாகாத்தும்,
\s5
\v 23 எப்ரோனின் சந்ததியில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் மகனாகிய அம்ரியாவும், மூன்றாம் மகனாகிய யாகாசியேலும், நான்காம் மகனாகிய எக்காமியாமும்,
\v 24 ஊசியேலின் சந்ததியில் மீகாவும், மீகாவின் சந்ததியில் சாமீரும்,
\v 25 மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின் மகன்களில் சகரியாவும்,
\s5
\v 26 மெராரியின் சந்ததியில் மகேலி, மூசி என்பவர்களும், யாசியாவின் சந்ததியில் பேனோவும்,
\v 27 மெராரியின் சந்ததியில் யாசியாவின் சந்ததியில் பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
\v 28 மகேலியின் சந்ததியில் மகன்களில்லாத எலெயாசாரும்,
\s5
\v 29 கீசின் சந்ததியில் யெராமியேலும்,
\v 30 மூசியின் சந்ததியில் மகேலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் தகப்பன்மார்களுடைய குடும்பங்களின்படியே வரிசைப்படுத்தப்பட்ட லேவியர்கள் இவர்களே.
\v 31 இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் குடும்பத் தலைவர்களாக இருக்கிற தலைவர்களுக்கும் முன்பாக, தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் சந்ததி செய்ததுபோல, தங்களில் இருக்கிற குடும்பத் தலைவர்களான தலைவர்களுக்கும், அவர்களுடைய சிறிய சகோதரர்களுக்கும் சரிசமமாக சீட்டு போட்டுக்கொண்டார்கள்.
\s5
\c 25
\cl அத்தியாயம்– 25
\s1 பாடகர்கள்
\p
\v 1 மேலும் சுரமண்டலங்களாலும், தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை, தாவீதும் தேவாலய சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் செய்கைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையாவது:
\v 2 ராஜாவுடைய கட்டளையின்படித் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பினிடத்திலிருக்கிற, ஆசாப்பின் மகன்களில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,
\v 3 கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனினிடம் சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் மகன்களாகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேர்களும்,
\s5
\v 4 கொம்பைத் தொனிக்கச்செய்ய, தேவனுடைய காரியத்தில் ராஜாவுக்கு தீர்க்கதரிசியான வாலிபனாகிய ஏமானின் மகன்களான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் என்பவர்களுமே.
\v 5 இவர்கள் எல்லோரும் ஏமானின் மகன்களாக இருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினான்கு மகன்களையும் மூன்று மகள்களையும் கொடுத்தார்.
\s5
\v 6 இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்படிக் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மார்களாகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்களிடத்தில் இருந்தார்கள்.
\v 7 கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, திறமைவாய்ந்தவர்கள் தங்களுடைய சகோதரர்களோடு அவர்கள் எண்ணிக்கைக்கு இருநூற்று எண்பத்தெட்டுப்பேர்களாக இருந்தார்கள்.
\v 8 அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும், மாணாக்கனும், சரிசமமாக முறைவரிசைக்காக சீட்டு போட்டுக்கொண்டார்கள்.
\s5
\v 9 முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், இரண்டாவது கெதலியா குடும்பத்தில், அவனுடைய சகோதரர்கள், அவனுடைய மகன்கள் என்றும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 10 மூன்றாவது சக்கூர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 11 நான்காவது இஸ்ரி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 12 ஐந்தாவது நெத்தனியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\s5
\v 13 ஆறாவது புக்கியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 14 ஏழாவது எசரேலா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 15 எட்டாவது எஷாயா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 16 ஒன்பதாவது மத்தனீயா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\s5
\v 17 பத்தாவது சிமேயா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும்பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 18 பதினோராவது அசாரியேல், அவனுடைய மகன்கள் அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 19 பன்னிரண்டாவது அஷாபியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 20 பதின்மூன்றாவது சுபவேல், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\s5
\v 21 பதினான்காவது மத்தித்தியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 22 பதினைந்தாவது எரேமோத், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 23 பதினாறாவது அனனியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 24 பதினேழாவது யோஸ்பேக்காஷா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\s5
\v 25 பதினெட்டாவது ஆனானி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 26 பத்தொன்பதாவது மலோத்தி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 27 இருபதாவது எலியாத்தா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 28 இருபத்தோராவது ஒத்திர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\s5
\v 29 இருபத்திரண்டாவது கிதல்தி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 30 இருபத்துமூன்றாவது மகாசியோத், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
\v 31 இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும் விழுந்தது.
\s5
\c 26
\cl அத்தியாயம்– 26
\s1 காவலர்கள்
\p
\v 1 வாசல்காக்கிறவர்களின் பிரிவுகளாவன: கோராகியர்கள் சந்ததியான ஆசாபின் சந்ததியிலே கோரேயின் மகன் மெஷெலேமியா என்பவன்,
\v 2 மெஷெலேமியாவின் மகன்கள் மூத்தவனாகிய சகரியாவும்,
\v 3 எதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் மகன்களும்,
\s5
\v 4 ஓபேத்ஏதோமின் மகன்கள் மூத்தவனாகிய செமாயாவும்,
\v 5 யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் மகன்களுமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
\v 6 அவனுடைய மகனாகிய செமாயாவுக்கும் மகன்கள் பிறந்து, அவர்கள் பெலசாலிகளாக இருந்து, தங்களுடைய தகப்பன் குடும்பத்தார்களை ஆண்டார்கள்.
\s5
\v 7 செமாயாவுக்கு இருந்த மகன்கள் ஒத்னியும், பெலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத் என்னும் அவனுடைய சகோதரர்களும், எலிகூவும் செமகியாவுமே.
\v 8 ஓபேத்ஏதோமின் சந்ததிகளும் அவர்களுடைய மகன்களும், சகோதரர்களுமாகிய ஊழியத்திற்குப் பலத்த பெலசாலிகளான அவர்களெல்லோரும் அறுபத்திரண்டுபேர்கள்.
\v 9 மெஷெலேமியாவின் மகன்களும், சகோதரர்களுமான பெலசாலிகள் பதினெட்டுபேர்கள்.
\s5
\v 10 மெராரியின் மகன்களில் ஓசா என்பவனுடைய மகன்கள்: சிம்ரி என்னும் தலைவன்; இவன் மூத்தவனாக இல்லாவிட்டாலும் இவனுடைய தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.
\v 11 இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் மகன்களானவர்கள்; ஓசாவின் மகன்களும் சகோதரர்களும் எல்லாம் பதின்மூன்றுபேர்கள்.
\s5
\v 12 காவல்காரர்களான தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரர்களுக்கு ஒத்த முறையாகக் கர்த்தருடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாக பணிவிடை செய்ய இவர்கள் பிரிக்கப்பட்டு,
\v 13 தங்கள் பிதாக்களின் குடும்பத்தார்களாகிய சிறியவர்களும், பெரியவர்களுமாக இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
\v 14 கீழ்ப்புறத்திற்கு செலேமியாவுக்கு சீட்டு விழுந்தது; விவேகமுள்ள யோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவனுடைய மகனுக்கு சீட்டு போட்டபோது, அவனுடைய சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
\s5
\v 15 ஓபேத்ஏதோமுக்குத் தென்புறத்திற்கும், அவனுடைய மகன்களுக்கு அசுப்பீம் வீட்டிற்கும்,
\v 16 சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண்போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.
\s5
\v 17 கிழக்கே லேவியர்களான ஆறுபேர்களும், வடக்கே பகலிலே நான்குபேர்களும், தெற்கே பகலிலே நான்குபேர்களும், அசுப்பீம் வீட்டின் அருகில் இரண்டிரண்டுபேர்களும்,
\v 18 வெளிப்புறமான வாசல் அருகில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நான்குபேர்களும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேர்களும் வைக்கப்பட்டார்கள்.
\v 19 கோராகின் சந்ததிகளுக்குள்ளும், மெராரியின் சந்ததிகளுக்குள்ளும், வாசல் காக்கிறவர்களின் பிரிவுகள் இவைகளே.
\s1 கருவூல அலுவலர்களும் மற்ற அலுவலர்களும்
\p
\s5
\v 20 மற்ற லேவியர்களில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் கவனிக்கிறவனுமாக.
\v 21 லாதானின் மகன்கள் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய மகன்களில் தலைமையான குடும்பத்தலைவர்களாக இருந்த யெகியேலியும்,
\v 22 யெகியேலியின் மகன்களாகிய சேத்தாமும், அவனுடைய சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை கவனிக்கிறவர்களாக இருந்தார்கள்.
\s5
\v 23 அம்ராமீயர்களிலும், இத்சாகாரியர்களிலும், எப்ரோனியர்களிலும், ஊசியேரியர்களிலும், சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாக இருந்தார்கள்.
\v 24 மோசேயின் மகனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷக் கண்காணியாக இருந்தான்.
\v 25 எலியேசர் மூலமாக அவனுக்கு இருந்த சகோதரர்களானவர்கள், இவனுடைய மகன் ரெகபியாவும், இவனுடைய மகன் எஷாயாவும், இவனுடைய மகன் யோராமும், இவனுடைய மகன் சிக்கிரியும், இவனுடைய மகன் செலோமித்துமே.
\s5
\v 26 ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான குடும்பத்தலைவர்களும், தளபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,
\v 27 கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படி பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்த செலோமித்தும் அவனுடைய சகோதரர்களும் கவனித்தார்கள்.
\v 28 தீர்க்கதரிசியாகிய சாமுவேலும், கீசின் மகனாகிய சவுலும், நேரின் மகனாகிய அப்னேரும், செருயாவின் மகனாகிய யோவாபும், அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின்கீழும் அவனுடைய சகோதரர்கள் கையின்கீழும் இருந்தது.
\s5
\v 29 இத்சாகாரியர்களில் கெனானியாவும் அவனுடைய மகன்களும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரர்களும் அலுவலர்களுமாகவும் இருந்தார்கள்.
\v 30 எப்ரோனியர்களில் அசபியாவும் அவனுடைய சகோதரர்களுமாகிய ஆயிரத்து எழுநூறு பெலசாலிகள் யோர்தானுக்கு இந்தப்பக்கம் மேற்கே இருக்கிற இஸ்ரவேலின்மேல் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும் வைக்கப்பட்டார்கள்.
\s5
\v 31 எப்ரோனியர்களில் எரியாவும் இருந்தான்; அவனுடைய குடும்பத்தார்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைவனாக இருந்தவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருடத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து ஏசேரிலே மிகுந்த பலமுள்ள வீரர்கள் காணப்பட்டார்கள்.
\v 32 பெலசாலிகளாகிய அவனுடைய சகோதரர்கள் இரண்டாயிரத்து எழுநூறு முதன்மை தலைவர்களாக இருந்தார்கள்; அவர்களைத் தாவீது ராஜா தேவனுடைய எல்லாக் காரியத்திற்காகவும், ராஜாவின் காரியத்திற்காகவும், ரூபனியர்கள்மேலும், காத்தியர்கள்மேலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்.
\s5
\c 27
\cl அத்தியாயம்– 27
\s1 ராணுவப்பிரிவுகள்
\p
\v 1 தங்கள் எண்ணிக்கையின்படி இருக்கிற இஸ்ரவேலர்களுக்கு வம்சங்களின் தலைவர்களும், ஆயிரம் பேர்களுக்கு தலைவர்களும், நூறு பேர்களுக்கு அதிபதிகளும் தலைவர்களும், இவர்களுடைய தலைவர்களும் வைக்கப்பட்டிருந்தார்கள்; இவர்கள் வருடத்தில் உண்டான மாதங்களிலெல்லாம் மாதத்திற்கு மாதம் ராஜாவிற்குப் பணிவிடை செய்வதற்கு பிரிக்கப்பட்ட வரிசைகளின்படியெல்லாம் மாறிமாறி வருவார்கள்; ஒவ்வொரு வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர்கள் இருந்தார்கள்.
\v 2 முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் மகன் யஷொபெயாம் இருந்தான்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர்கள் இருந்தார்கள்.
\v 3 அவன் பேரேசின் சந்ததியார்களில் சகல தளபதிகளின் தலைவனாக இருந்து முதல் மாதம் விசாரித்தான்.
\s5
\v 4 இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவனுடைய வகுப்பிலே மிக்லோத் தகுதியில் இரண்டாவதாக இருந்தான்; அவனுடைய வகுப்பிலே இருபத்துநான்காயிரம்பேர்கள் இருந்தார்கள்.
\v 5 மூன்றாவது மாதத்தின் மூன்றாம் தளபதி யோய்தாவின் மகனாகிய பெனாயா என்னும் ஆசாரியனும் தலைவனுமானவன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர்கள் இருந்தார்கள்.
\v 6 இந்தப் பெனாயா அந்த முப்பது பலசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாக இருந்தான்; அவனுடைய வகுப்பை அவனுடைய மகனாகிய அமிசபாத் விசாரித்தான்.
\s5
\v 7 நான்காவது மாதத்தின் நான்காம் தளபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவனுடைய மகன் செப்தியாவுமே; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர்கள் இருந்தார்கள்.
\v 8 ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் தளபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர்கள் இருந்தார்கள்.
\v 9 ஆறாவது மாதத்தின் ஆறாம் தளபதி இக்கேசின் மகன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர்கள் இருந்தார்கள்.
\s5
\v 10 ஏழாவது மாதத்தின் ஏழாம் தளபதி எப்பிராயீம் மகன்களில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர்கள் இருந்தார்கள்.
\v 11 எட்டாவது மாதத்தின் எட்டாம் தளபதி சாரியர்களில் ஒருவனாகிய சிபெக்காயி என்னும் ஊஷாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர்கள் இருந்தார்கள்.
\v 12 ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் தளபதி பென்யமீனர்களில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர்கள் இருந்தார்கள்.
\s5
\v 13 பத்தாவது மாதத்தின் பத்தாம் தளபதி சாரியர்களில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர்கள் இருந்தார்கள்.
\v 14 பதினோராவது மாதத்தின் பதினோராம் தளபதி எப்பிராயீம் கோத்திரத்தில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர்கள் இருந்தார்கள்.
\v 15 பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் தளபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்து நான்காயிரம்பேர்கள் இருந்தார்கள்.
\s1 கோத்திரத்தின் அலுவலர்கள்
\p
\s5
\v 16 இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபன் கோத்திரத்திற்குத் தலைவன் சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோன் கோத்திரத்திற்கு மாக்காவின் மகன் செப்பத்தியா.
\v 17 லேவி கோத்திரத்திற்கு கேமுவேலின் மகன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்கு சாதோக்.
\v 18 யூதா கோத்திரத்திற்கு தாவீதின் சகோதரர்களில் ஒருவனாகிய எலிகூ; இசக்காருக்கு மிகாவேலின் மகன் ஒம்ரி.
\s5
\v 19 செபுலோன் கோத்திரத்திற்கு ஒப்தியாவின் மகன் இஸ்மாயா: நப்தலி கோத்திரத்திற்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத்.
\v 20 எப்பிராயீம் கோத்திரத்திற்கு அசசியாவின் மகன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு பெதாயாவின் மகன் யோவேல்.
\v 21 கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு சகரியாவின் மகன் இத்தோ; பென்யமீனுக்கு அப்னேரின் மகன் யாசியேல்.
\v 22 தாண் கோத்திரத்திற்கு எரோகாமின் மகன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்களாக இருந்தார்கள்.
\s5
\v 23 இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள்போல பெருகச்செய்வேன் என்று கர்த்தர் சொல்லியிருந்ததால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவில்லை.
\v 24 செருயாவின் மகன் யோவாப் எண்ணத்துவங்கியும் முடிக்காமற்போனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்த எண்ணிக்கை தாவீது ராஜாவின் நாளாகமக் கணக்கிலே எழுதப்படவில்லை.
\s1 ராஜாக்களுடைய மேற்பார்வையாளர்கள்
\p
\s5
\v 25 ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் மகன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் பாதுகாப்பான கோபுரங்களிலும் நிலத்தின் வருமான கருவூலங்களின்மேல் உசியாவின் மகன் யோனத்தானும்,
\v 26 நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலை செய்கிறவர்களின்மேல் கேலூப்பின் மகன் எஸ்ரியும்,
\v 27 திராட்சத்தோட்டங்களின்மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சத்தோட்டங்களின் பலனாகிய திராட்சரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும்,
\s5
\v 28 பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை மரங்களின்மேலும் கெதேரியனான பால்கானானும், எண்ணெய் கிடங்குகளின்மேல் யோவாசும்,
\v 29 சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் மகன் சாப்பாத்தும்,
\s5
\v 30 ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தியனாகிய எகெதியாவும்,
\v 31 ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்; இவர்கள் எல்லோரும் தாவீது ராஜாவின் பொருள்களுக்கு விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்.
\s5
\v 32 தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனிதன் ஆலோசனைக்காரனாக இருந்தான்; அக்மோனியின் மகன் யெகியேல் ராஜாவின் மகன்களோடு இருந்தான்.
\v 33 அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தான்; அர்கியனான ஊஷாயி ராஜாவின் தோழனாயிருந்தான்.
\v 34 பெனாயாவின் மகன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக்கு உதவியாக இருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாக இருந்தான்.
\s5
\c 28
\cl அத்தியாயம்– 28
\s1 ஆலயத்திற்கான தாவீதின் திட்டங்கள்
\p
\v 1 கோத்திரங்களின் தலைவர்களும், ராஜாவுக்கு பணிவிடை செய்கிற வகுப்புகளின் தலைவர்களும், ஆயிரம்பேர்களுக்கு தலைவர்களும், நூறுபேர்களுக்கு தலைவர்களும், ராஜாவுக்கும் ராஜாவின் மகன்களுக்கும் உண்டான எல்லா சொத்தையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவர்களுமாகிய இஸ்ரவேலின் எல்லா பிரபுக்களையும், முதன்மையானவர்களையும், பெலசாலிகளையும், எல்லா பெலசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
\s5
\v 2 அப்பொழுது ராஜாவாகிய தாவீது எழுந்து காலூன்றி நின்று: என்னுடைய சகோதரர்களே, என்னுடைய மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என்னுடைய மனதிலே நினைத்து, கட்டுவதற்கு ஆயத்தமும் செய்தேன்.
\v 3 ஆனாலும் தேவன்: நீ என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனிதனாக இருந்து, ரத்தத்தை சிந்தினாய் என்றார்.
\s5
\v 4 இப்போதும் இஸ்ரவேல் அனைத்தின்மேலும் என்றைக்கும் ராஜாவாக இருக்க, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னுடைய தகப்பனுடைய வீட்டார்களில் என்னைத் தெரிந்துகொண்டார்; அவர் யூதாவையும் யூதாவின் வம்சத்தில் என்னுடைய தகப்பன் குடும்பத்தையும் தலைமையாகத் தெரிந்துகொண்டு, என்னை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்க, என்னுடைய தகப்பனுடைய மகன்களுக்குள் என்மேல் பிரியம் வைத்தார்.
\v 5 கர்த்தர் எனக்கு அநேக மகன்களைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் கர்த்தருடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருவதற்கு, அவர் என்னுடைய எல்லா மகன்களிலும் என்னுடைய மகனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு,
\s5
\v 6 அவர் என்னை நோக்கி: உன்னுடைய மகனாகிய சாலொமோனே என்னுடைய ஆலயத்தையும் என்னுடைய முற்றங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்கு மகனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்கு பிதாவாயிருப்பேன்.
\v 7 இந்தநாளில் நடக்கிறபடியே அவன் என்னுடைய கற்பனைகளின்படியும் என்னுடைய நியாயங்களின்படியும் செய்ய உறுதியாக இருப்பானானால், அவனுடைய ராஜ்ஜியபாரத்தை என்றென்றைக்கும் உறுதிப்படுத்துவேன் என்றார்.
\s5
\v 8 இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாக அனுபவித்து, உங்களுக்குப் பிறகு அதை உங்களுடைய பிள்ளைகளுக்குச் சுதந்திரமாக வைக்கும்படி, நீங்கள் உங்களுடைய தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று கர்த்தரின் சபையாகிய இஸ்ரவேல் அனைத்தின் கண்களுக்குமுன்பாகவும், நமது தேவனுடைய செவிகேட்கவும் உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
\s5
\v 9 என்னுடைய மகனாகிய சாலொமோனே, நீ உன்னுடைய பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் பணிந்துகொள்; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றென்றைக்கும் கைவிடுவார்.
\v 10 இப்போதும் எச்சரிக்கையாக இரு; பரிசுத்த இடமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கர்த்தர் உன்னைத் தெரிந்து கொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடத்து என்று சொன்னான்.
\s5
\v 11 தாவீது தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன இடம் இருக்கவேண்டிய மாதிரியையும்,
\v 12 ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய கர்த்தருடைய ஆலயமுற்றங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும்,
\s5
\v 13 ஆசாரியர்களையும் லேவியர்களையும் வரிசைகளாக பிரிப்பதற்கும், கர்த்தருடைய ஆலய பணிவிடைவேலை அனைத்திற்கும், கர்த்தருடைய ஆலயத்து வேலையின் பணிபொருட்கள் அனைத்திற்குமுரிய கட்டளையையும் கொடுத்தான்.
\v 14 அவன் பற்பல வேலைக்கு வேண்டிய எல்லாப் பொற்பாத்திரங்களுக்காக எடையின்படி பொன்னையும், பற்பல வேலைக்கு வேண்டிய எல்லா வெள்ளிப்பாத்திரங்களுக்காக எடையின்படி வெள்ளியையும்,
\v 15 பொன் விளக்குத்தண்டுகளுக்கும் அவைகளின் பொன் விளக்குகளுக்கும், ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் எடையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி விளக்குத்தண்டுகளிள் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் எடையின்படி வேண்டிய வெள்ளியையும்,
\s5
\v 16 சமூகத்து அப்பங்களை வைக்கும் ஒவ்வொரு மேஜைக்கும் எடையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி மேஜைகளுக்கு வேண்டிய வெள்ளியையும்,
\v 17 முள்குறடுகளுக்கும் கலங்களுக்கும் தட்டுகளுக்கும் வேண்டிய பசும்பொன்னையும், பொன் கிண்ணங்களில் ஒவ்வொரு கிண்ணத்திற்கும் எடையின்படி வேண்டியதையும், வெள்ளிக் கிண்ணங்களில் ஒவ்வொரு கிண்ணத்திற்கும் எடையின்படி வேண்டியதையும்,
\s5
\v 18 தூபங்காட்டும் பீடத்திற்கு எடையின்படி வேண்டிய புடமிடப்பட்ட பொன்னையும் கொடுத்து, செட்டைகளை விரித்துக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்து,
\v 19 இந்த மாதிரியின்படி எல்லா வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான்.
\s5
\v 20 தாவீது தன்னுடைய மகனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாக இருந்து, இதை நடத்து: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என்னுடைய தேவன் உன்னோடு இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதின் எல்லா செய்கைகளையும் நீ முடிக்கும்வரை, அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.
\v 21 இதோ, தேவனுடைய ஆலயத்து வேலைக்கெல்லாம் ஆசாரியர்கள் லேவியர்களுடைய வகுப்புகள் இருக்கிறது; அந்த எல்லா செய்கைக்கும் சகலவித வேலையிலும் திறமையுள்ளவர்களான மனப்பூர்வமுள்ள சகல மனிதர்களும், உன்னுடைய சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், எல்லா மக்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.
\s5
\c 29
\cl அத்தியாயம்– 29
\s1 ஆலயம் கட்டுவதற்கான பரிசுகள்
\p
\v 1 பின்பு தாவீது ராஜா சபையார்கள் எல்லோரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என்னுடைய மகனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாகவும் இருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனிதனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரண்மனை.
\v 2 நான் என்னாலே முடிந்தவரை என்னுடைய தேவனுடைய ஆலயத்திற்கென்று பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க கோமேதகக் கற்களையும், பலவர்ணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், பளிங்கு கற்கள் முதலிய கற்களையும் ஏராளமாகச் சேமித்தேன்.
\s5
\v 3 இன்னும் என்னுடைய தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சேமித்த அனைத்தையும்தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என்னுடைய தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.
\v 4 அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும். பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாக்கவும், கைவினைக்கலைஞர்கள் செய்யும் வேலை அனைத்திற்காகவும், ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.
\v 5 இப்போதும் உங்களில் இன்றையதினம் கர்த்தருக்குத் தன்னுடைய கைக்காணிக்கைகளைச் செலுத்த மனபூர்வமானவர்கள் யார் என்றான்.
\s5
\v 6 அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களும், நூறுபேர்களுக்குத் தலைவர்களும், ராஜாவின் வேலைக்காரர்களாகிய பிரபுக்களும் மனப்பூர்வமாக,
\v 7 தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பத்தாயிரம் தங்கக்காசையும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியையும், பதிணெட்டாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.
\s5
\v 8 யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.
\v 9 இப்படி மனப்பூர்வமாகக் கொடுத்ததற்காக மக்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடு உற்சாகமாகக் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.
\s1 தாவீதின் ஜெபம்
\p
\s5
\v 10 ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது: எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எல்லாக் காலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
\v 11 கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர்.
\s5
\v 12 ஐசுவரியமும் புகழும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சக்தியும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.
\v 13 இப்போதும் எங்களுடைய தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.
\s5
\v 14 இப்படி மனப்பூர்வமாகக் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் யார்? என்னுடைய மக்கள் யார்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.
\v 15 உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய முன்னோர்கள் எல்லோரைப்போலவும் அந்நியர்களாகவும் வழிப்போக்கர்களாகவும் இருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.
\s5
\v 16 எங்களுடைய தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, நாங்கள் சேமித்திருக்கிற இந்தப் பொருட்களெல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது.
\v 17 என்னுடைய தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடு மனப்பூர்வமாகக் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய மக்களும் உமக்கு மனப்பூர்வமாகக் கொடுப்பதைக் கண்டு சந்தோஷமடைந்தேன்.
\s5
\v 18 ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தாவே, உமது மக்களின் இருதயத்தில் உண்டான இந்த சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும்.
\v 19 என்னுடைய மகனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்செய்த இந்த அரண்மனையைக் கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.
\s5
\v 20 அதின்பின்பு தாவீது சபையார் அனைத்தையும் நோக்கி: இப்போது உங்களுடைய தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார்கள் எல்லோரும் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,
\s1 சாலொமோன் ராஜாவாக அங்கீகரிக்கப்படுதல்
\p
\v 21 கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்குரிய பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.
\s5
\v 22 அவர்கள் அன்றையதினம் மிகுந்த சந்தோஷத்தோடு கர்த்தருக்கு முன்பாக சாப்பிட்டு குடித்து, தாவீதின் மகனாகிய சாலொமோனை இரண்டாம் முறை ராஜாவாக்கி, கர்த்தருக்கு முன்பாக அவனை அதிபராகவும், சாதோக்கை ஆசாரியனாகவும் அபிஷேகம்செய்தார்கள்.
\v 23 அப்படியே சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் இடத்திலே கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாக அமர்ந்திருந்து பாக்கியசாலியாக இருந்தான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.
\s5
\v 24 எல்லா பிரபுக்களும் பெலசாலிகளும் தாவீது ராஜாவினுடைய எல்லா மகன்களோடும் ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள்.
\v 25 இஸ்ரவேலர்கள் எல்லோரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, முன்பே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாமலிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.
\s1 தாவீதின் மரணம்
\p
\s5
\v 26 இவ்விதமாக ஈசாயின் மகனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்துக்கும் ராஜாவாக இருந்தான்.
\v 27 அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருடங்கள்; எப்ரோனிலே ஏழு வருடங்களும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருடங்களும் ராஜாவாக இருந்தான்.
\v 28 அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாக, நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின்பு, அவனுடைய மகனாகிய சாலொமோன் அவனுடைய இடத்திலே அரசாண்டான்.
\s5
\v 29 தாவீது ராஜாவினுடைய ஆரம்பம்முதல் கடைசிவரை செய்த எல்லா செயல்களும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்த தேசங்களின் ராஜ்ஜியங்கள் அனைத்துக்கும் நடந்த காலசம்பவங்களும்,
\v 30 தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் வரலாற்று புத்தகத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் வரலாற்று புத்தகத்திலும், தீர்க்கதரிசியாகிய காத்தின் வரலாற்று புத்தகத்திலும் எழுதியிருக்கிறது.

1426
14-2CH.usfm Normal file
View File

@ -0,0 +1,1426 @@
\id 2CH
\ide UTF-8
\h II நாளாகமம்
\toc1 II நாளாகமம்
\toc2 II நாளாகமம்
\toc3 2ch
\mt1 II நாளாகமம்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 சாலொமோன் தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்டல்
\p
\v 1 தாவீதின் மகனாகிய சாலொமோன் தன் ராஜ்ஜியத்தில் பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடு இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.
\s5
\v 2 சாலொமோன், இஸ்ரவேலில் உள்ள ஆயிரம்பேருக்கு அதிபதிகளோடும், நூறுபேருக்கு அதிபதிகளோடும், நியாயாதிபதிகளோடும், இஸ்ரவேல் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவர்களாகிய அனைத்துப் பிரபுக்களோடும் பேசி,
\v 3 அவனும் அவனோடுகூட சபையார் அனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள்.
\v 4 தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்செய்த இடத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்; கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்திரத்திலே செய்த தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் அங்கே இருந்தது.
\v 5 ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் உண்டாக்கிய வெண்கலப் பலிபீடமும் அங்கே கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள்.
\s5
\v 6 அங்கே சாலொமோன் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கர்த்தரின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி பலியிட்டான்.
\p
\v 7 அன்று இரவிலே தேவன் சாலொமோனுக்குக் காட்சியளித்து: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார்.
\s5
\v 8 சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவனுடைய இடத்திலே ராஜாவாக்கினீர்.
\v 9 இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளைப்போன்ற ஏராளமான மக்களின்மேல் என்னை ராஜாவாக்கினீர்.
\v 10 இப்போதும் நான் இந்த மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய மக்களை நியாயம் விசாரிக்கத் தகுதியுள்ளவன் யார் என்றான்.
\v 11 அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்ததாலும், நீ ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும், உன் எதிரிகளின் உயிரையும், நீடித்த ஆயுளையும் கேட்காமல், நான் உன்னை அரசாளச்செய்த என் மக்களை நியாயம் விசாரிப்பதற்கேற்ற ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டதாலும்,
\s5
\v 12 ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்கு முன்னும் பின்னும் இருந்த ராஜாக்களுக்கு இல்லாத ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.
\v 13 இப்படி சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய், ஆசரிப்புக்கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை ஆட்சிசெய்தான்.
\p
\s5
\v 14 சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரர்களையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தன; பனிரெண்டாயிரம் குதிரைவீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்.
\v 15 ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
\v 16 சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும், புடவைகளும் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டன; ராஜாவின் வியாபாரிகள் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள்.
\v 17 அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுகளுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுகளுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியர்களின் அனைத்து ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டன.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 தேவாலயத்தைக் கட்டுவதற்கான ஆயத்தங்கள்
\p
\v 1 சாலொமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தனது அரசாட்சிக்கு ஒரு அரண்மனையையும் கட்டத் தீர்மானம் செய்து,
\v 2 சுமைசுமக்கிறதற்கு எழுபதாயிரம் ஆண்களையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதாயிரம் ஆண்களையும், இவர்கள்மேல் தலைவர்களாக மூவாயிரத்து அறுநூறு ஆண்களையும் கணக்கிட்டு ஏற்படுத்தினான்.
\v 3 தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்திற்கு ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் குடியிருக்கும் அரண்மனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்கு தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவு செய்யும்.
\s5
\v 4 இதோ, என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம் காட்டுகிறதற்கும், சமுகத்து அப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வு நாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்திய காலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்கதகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டை செய்ய நான் திட்டமிட்டிருக்கிறேன்.
\v 5 எங்கள் தேவன் அனைத்து தெய்வங்களையும்விட பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும்.
\s5
\v 6 வானங்களும், வானாதிவானங்களும், அவருக்குப் போதாமலிருக்கும்போது அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கே அல்லாமல், வேறு காரணத்திற்காக அவருக்கு ஆலயம் கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்?
\v 7 இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணர்களோடு, பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், இரத்தாம்பர நூலிலும், சிவப்பு நூலிலும், இளநீல நூலிலும் வேலைசெய்வதில் நிபுணனும், கொத்துவேலை செய்யத்தெரிந்த ஒரு மனிதனை என்னிடத்திற்கு அனுப்பும்.
\s5
\v 8 லீபனோனிலிருந்து கேதுரு மரங்களையும், தேவதாரி மரங்களையும், வாசனை மரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர்கள் பழகினவர்களென்று எனக்குத் தெரியும்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு இருப்பார்கள்.
\v 9 நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும்.
\v 10 அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரர்களுக்கு இருபதாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதாயிரம் குடம் திராட்சரசத்தையும், இருபதாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.
\p
\s5
\v 11 அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்கு மறுமொழியாக: கர்த்தர் தம்முடைய மக்களை சிநேகித்ததால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.
\v 12 கர்த்தருக்கு ஒரு ஆலயத்தையும், தமது அரசாட்சிக்கு ஒரு அரண்மனையையும் கட்டத்தக்க கூரிய அறிவும், புத்தியுமுடைய ஞானமுள்ள மகனை, தாவீது ராஜாவுக்குக் கொடுத்தவராகிய வானத்தையும் பூமியையும் உண்டாக்கின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
\s5
\v 13 இப்போதும் ஈராம்அபி என்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.
\v 14 அவன் தாணின் மகள்களில் ஒரு பெண்ணின் மகன்; அவனுடைய தகப்பன் தீரு தேசத்தான்; அவன் பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பர நூலிலும், இளநீல நூலிலும் மெல்லிய நூலிலும், சிவப்பு நூலிலும் வேலை செய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணர்களோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணர்களோடும் ஆலோசித்துச் செய்யவும் அறிந்தவன்.
\s5
\v 15 என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் தம்முடைய ஊழியக்காரர்களுக்கு அனுப்புவாராக.
\v 16 நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி கடல் வழியாக யோப்பாவரைக்கும் கொண்டுவருவோம்; பின்பு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.
\v 17 தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருந்த வேறு தேசத்தாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல, சாலொமோனும் அவர்களை எண்ணினான்; அவர்கள் ஒருலட்சத்து ஐம்பத்துமூவாயிரத்து அறுநூறுபேர்களாக இருந்தார்கள்.
\v 18 இவர்களில் அவன் எழுபதாயிரம்பேரை சுமைசுமக்கவும், எண்பதாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறுபேரை மக்களின் வேலையை கவனிக்கும் தலைவர்களாயிருக்கவும் ஏற்படுத்தினான்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 சாலொமோன் தேவாலயத்தைக் கட்டுதல்
\p
\v 1 பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த இடத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான்.
\v 2 அவன் தான் ஆட்சிசெய்த நான்காம் வருடம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.
\v 3 தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.
\s5
\v 4 முன்புற மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபது முழ நீளமும், நூற்றிருபது முழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் மூடினான்.
\v 5 ஆலயத்தின் பெரிய மாளிகையைத் தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் மூடி, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்தரித்து,
\s5
\v 6 அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.
\v 7 அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், சுவர்களையும், கதவுகளையும் பொன்தகட்டால் மூடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான்.
\s5
\v 8 மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபது முழமுமாக இருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் மூடினான்.
\v 9 ஆணிகளின் எடை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் மூடினான்.
\s5
\v 10 அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாக உண்டாக்கினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
\v 11 அந்தக் கேருபீன்களுடைய சிறகுகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு சிறகு ஐந்து முழமாக இருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசிறகு ஐந்து முழமாக இருந்து, மற்றக் கேருபீனின் சிறகைத் தொட்டது.
\v 12 மற்றக் கேருபீனின் ஒரு சிறகும் ஐந்து முழமாக இருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மறுசிறகும் ஐந்து முழமாக இருந்து, மற்றக் கேருபீனின் சிறகைத் தொட்டது.
\s5
\v 13 இப்படியே அந்தக் கேருபீன்களின் சிறகுகள் இருபதுமுழம் விரிந்திருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்தின் உட்புறத்தை நோக்கியிருந்தது.
\v 14 இளநீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவுப்பு நூலாலும் மெல்லிய நூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டாக்கினான்.
\v 15 ஆலயத்திற்கு முன்பாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேல் இருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,
\v 16 சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் செய்து, தூண்களின் முனைகளின் மேல் பற்றவைத்து, நூறு மாதுளம் பழங்களையும் செய்து அந்தச் சங்கிலிகளில் கோர்த்தான்.
\v 17 அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் மற்றொன்றை இடது புறத்திலும் நாட்டி, வலதுபுறத் தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத் தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 தேவாலயத்திற்காகச் செய்யப்பட்ட பொருட்கள்
\p
\v 1 அன்றியும் இருபது முழநீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் செய்தான்.
\v 2 வெண்கலக் கடல்தொட்டியையும் வார்ப்பித்தான்; வட்டவடிவமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறு விளிம்புவரை பத்துமுழ அகலமும், ஐந்துமுழ உயரமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.
\v 3 அதின் கீழ்ப்புறமாக காளைகளின் உருவங்கள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து உருவமாக அந்தக் கடல்தொட்டியின் சக்கரத்தில் இருந்தது; தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்ட அந்தக் காளைகளின் இரண்டு வரிசைகள் இருந்தது.
\s5
\v 4 அது பன்னிரண்டு காளைகளின்மேல் நின்றது; இவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி அவைகளின்மேல் உயரமாக இருந்தது; அவைகளின் பின்பக்கமெல்லாம் உட்புறமாக இருந்தது.
\v 5 அதின் கனம் நான்கு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலவும், லீலிபுஷ்பம்போலவும் இருந்தது; அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது.
\v 6 கழுவுகிறதற்குப் பத்துக் கொப்பரைகளையும் உண்டாக்கி, ஐந்தை வலதுபுறத்திலும், ஐந்தை இடதுபுறத்திலும் வைத்தான்; சர்வாங்க தகனமாகிறவைகளை அவைகளில் அலசுவார்கள்; கடல்தொட்டியோ ஆசாரியர்கள் தங்களைச் சுத்தம்செய்துகொள்ளுகிறதற்காக இருந்தது.
\s5
\v 7 பத்துப் பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளுடைய முறையின்படி செய்வித்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்தான்.
\v 8 பத்து மேஜைகளையும் செய்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்து, நூறு பொன் கலங்களையும் செய்தான்.
\s5
\v 9 மேலும் ஆசாரியர்களின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.
\v 10 கடல்தொட்டியைக் கீழ்த்திசையான வலதுபுறத்திலே தெற்குமுகமாக வைத்தான்.
\s5
\v 11 ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பலெடுக்கிற கரண்டிகளையும், கலங்களையும் செய்தான்; இந்தவிதமாக ஈராம் கர்த்தருடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய வேலையைச் செய்துமுடித்தான்.
\v 12 அவைகள் என்னவெனில், இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேலிருக்கிற கும்பங்களும், குமிழ்களும், தூண்களுடைய முனையின் மேலிருக்கிற குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு இரண்டு வலைப்பின்னல்களும்,
\v 13 தூண்களின்மேலுள்ள குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு, ஒவ்வொரு வலைப்பின்னலின் இரண்டு வரிசை மாதுளம்பழங்களாக, இரண்டு வலைப்பின்னல்களிலும் இருக்கிற நானூறு மாதுளம்பழங்களுமே.
\s5
\v 14 ஆதாரங்களையும், ஆதாரங்களின்மேலிருக்கும் கொப்பரைகளையும்,
\v 15 ஒரு கடல்தொட்டியையும், அதின் கீழிருக்கும் பன்னிரண்டு காளைகளையும்,
\v 16 செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள்துறடுகள் முதலான பணிமுட்டுகளையும், ஈராம்அபி, ராஜாவாகிய சாலொமோனுக்குக் கர்த்தரின் ஆலயத்திற்காக சுத்தமான வெண்கலத்தால் செய்தான்.
\s5
\v 17 யோர்தானுக்கடுத்த சமனான பூமியில் சுக்கோத்திற்கும் சரேத்தாவுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா அவைகளை வார்ப்பித்தான்.
\v 18 இந்தப் பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் வெகு ஏராளமாக உண்டாக்கினான்; வெண்கலத்தின் எடை தொகைக்கு அடங்காததாயிருந்தது.
\s5
\v 19 தேவனுடைய ஆலயத்திற்கு வேண்டிய அனைத்து பணிமுட்டுகளையும்; பொற்பீடத்தையும், சமுகத்து அப்பங்களை வைக்கும் மேஜைகளையும்,
\v 20 முறையின்படியே சந்நிதிக்கு முன்பாக விளக்குக் கொளுத்துகிறதற்குப் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளின் விளக்குகளையும்,
\v 21 சுத்தத் தங்கத்தால் செய்த பூக்களையும், விளக்குகளையும், கத்தரிகளையும்,
\v 22 பசும்பொன் கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் சாலொமோன் செய்தான்; மகா பரிசுத்தஸ்தலத்தின் உட்கதவுகளும், ஆலயமாகிய வீட்டின் கதவுகளும், ஆலயத்தின் வாசல் கதவுகளும் அனைத்தும் பொன்னாயிருந்தது.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\p
\v 1 கர்த்தருடைய ஆலயத்திற்காக சாலொமோன் செய்த வேலைகள் அனைத்தும் முடிந்தபோது, சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம் செய்வதற்காக பொருத்தனை செய்தவைகளைக் கொண்டுவந்து, வெள்ளியையும், பொன்னையும், அனைத்து பணிமுட்டுகளையும், தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.
\s1 உடன்படிக்கைப் பெட்டி ஆலயத்திற்குக் கொண்டுவரப்படுதல்
\p
\s5
\v 2 பின்பு கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவர்கள் எல்லோரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
\v 3 அப்படியே இஸ்ரவேலர்கள் எல்லோரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள்.
\s5
\v 4 இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் வந்தபின்பு லேவியர்கள் பெட்டியை எடுத்து,
\v 5 பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருக்கிற பரிசுத்த பணிமுட்டுகளையும் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கொண்டுவந்தவர்கள் லேவியரான ஆசாரியர்களே.
\v 6 ராஜாவாகிய சாலொமோனும், அவனோடு கூடின இஸ்ரவேல் சபையார் அனைவரும், பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டார்கள்.
\s5
\v 7 அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய செட்டைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.
\v 8 கேருபீன்கள், பெட்டி இருக்கும் இடத்தின்மேல், தங்கள் இரண்டிரண்டு சிறகுகளை விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.
\s5
\v 9 பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாக அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; வெளியே அவைகள் காணப்படவில்லை; அது இந்த நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.
\v 10 இஸ்ரவேல் வம்சத்தினர் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்பு, கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை செய்தபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் அதிலே இருந்ததில்லை.
\s5
\v 11 வகுப்புகளின் முறைகளைப் பாராமல், ஆசாரியர்கள் எல்லோரும் தங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டார்கள்.
\v 12 ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய மகன்களும் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகர்களான லேவியர்கள் அனைவரும் மெல்லிய புடவைகளை அணிந்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்து பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடு பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.
\v 13 அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஒரேசத்தமாக கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படும்போதும், பாடகர்கள் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தை தொனிக்கச்செய்து, கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கும்போதும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தால் நிரப்பப்பட்டது.
\v 14 அந்த மேகத்தால் ஆசாரியர்கள் ஊழியம்செய்து நிற்கமுடியாமற்போனது; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பினது.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\p
\v 1 அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்செய்வேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
\v 2 தேவரீர் வாசம்செய்யத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்குவதற்கு ஏற்ற நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,
\v 3 ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லோரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லோரும் நின்றார்கள்.
\s5
\v 4 அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தால் நிறைவேற்றினார்.
\v 5 அவர்: நான் என் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த நாள்முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்று நான் இஸ்ரவேலுடைய எல்லா கோத்திரங்களிலுமுள்ள வேறே யாதொரு பட்டணத்தைத் தெரிந்துகொள்ளாமலும், என் மக்களாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக இருக்கும்படி வேறே ஒருவரைத் தெரிந்துகொள்ளாமலும்,
\v 6 என் நாமம் விளங்கும் இடமாக எருசலேமையும், என் மக்களாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.
\s5
\v 7 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது.
\v 8 ஆனாலும் கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதை நோக்கி: என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான்.
\v 9 ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய்; உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் மகனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.
\s5
\v 10 இப்போதும் கர்த்தர் சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதுடைய இடத்தில் எழும்பி, இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டி,
\v 11 கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருடன் செய்த உடன்படிக்கை இருக்கிற பெட்டியை அதிலே வைத்தேன் என்று சொல்லி,
\s1 சாலொமோன் செய்த அர்ப்பணிப்பு ஜெபம்
\p
\s5
\v 12 கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையார் எல்லோருக்கும் எதிரே நின்று தன் கைகளை விரித்தான்.
\v 13 சாலொமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான ஒரு வெண்கலப் பிரசங்கபீடத்தை உண்டாக்கி, அதை நடுப்பிராகாரத்திலே வைத்திருந்தான்; அதின்மேல் அவன் நின்று, இஸ்ரவேலின் சபையார் எல்லோருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து:
\s5
\v 14 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும், பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.
\v 15 தேவரீர் நீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தால் அதை இந்நாளில் இருக்கிறபடி நிறைவேற்றினீர்.
\s5
\v 16 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் மகன்களும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் மனிதன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.
\v 17 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியானாகிய தாவீதுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை உண்மையென்று விளங்குவதாக.
\s5
\v 18 தேவன் உண்மையாகவே மனிதர்களோடு பூமியிலே குடியிருப்பாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?
\v 19 என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் உமது மனதில் கொண்டருளும்.
\v 20 உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன இடமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக.
\s5
\v 21 உமது அடியேனும், இந்த இடத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்யும் ஜெபங்களைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே நீர் அதைக் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.
\s5
\v 22 ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கும்போது, இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால்,
\v 23 அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரச்செய்து, அவனுக்கு நீதியை சரிக்கட்டவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாகச் செய்து அவனை நீதிமானாக்கவும், உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக.
\s5
\v 24 உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,
\v 25 பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வீராக.
\s5
\v 26 அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால், வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த இடத்திற்கு நேராக விண்ணப்பம் செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, தேவரீர் தங்களைத் துக்கப்படுத்தும்போது தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால்,
\v 27 பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது மக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக.
\s5
\v 28 தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவு, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய சத்துருக்கள் அவர்கள் வாசஞ்செய்கிற தேசத்திலே அவர்களை முற்றிக்கை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வந்திருக்கிறபோதும்,
\v 29 எந்த மனிதனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய மக்களில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,
\v 30 உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,
\v 31 தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்கு பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுப்புத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே அவனவனுடைய அனைத்து வழிகளுக்கும் ஏற்றபடிச் செய்து பலன் அளிப்பீராக.
\s5
\v 32 உம்முடைய மக்களாகிய இஸ்ரவேல் மக்களல்லாத அந்நிய மக்கள் உம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தமும், உம்முடைய பலத்த கரத்தினிமித்தமும், ஓங்கிய உம்முடைய புயத்தினிமித்தமும், தூரதேசங்களிலிருந்து வந்து, இந்த ஆலயத்திற்கு நேராக நின்று விண்ணப்பம்செய்தால்,
\v 33 உமது வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அதைக்கேட்டு, பூமியின் மக்களெல்லோரும் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலைப்போல, உம்முடைய நாமத்தை அறிந்து உமக்கு பயப்பட்டு, நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கு, அந்த அந்நிய மனிதன் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியே தேவரீர் செய்வீராக.
\s5
\v 34 நீர் உம்முடைய மக்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு போர்செய்யப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம்செய்தால்,
\v 35 பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக.
\s5
\v 36 பாவம் செய்யாத மனிதன் இல்லையே; ஆகையால் அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுக்கிறதால், அவர்களைச் சிறைபிடிக்கிறவர்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குக் கொண்டுபோயிருக்கும்போது,
\v 37 அவர்கள் சிறைபட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவம்செய்து அக்கிரமம்செய்து, துன்மார்க்கமாக நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி,
\v 38 தாங்கள் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்ட தங்கள் சிறையிருப்பான தேசத்திலே, தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்செய்தால்,
\v 39 உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாகப் பாவம்செய்த உம்முடைய மக்களுக்கு மன்னித்தருளும்.
\v 40 இப்போதும் என் தேவனே, இந்த இடத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.
\v 41 தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய தங்கும் ஸ்தலத்திற்கு தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய கர்த்தாவே, உமது ஆசாரியர்கள் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக.
\v 42 தேவனாகிய கர்த்தாவே, நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தைப் புறக்கணிக்காமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்செய்த கிருபைகளை நினைத்தருளும் என்றான்.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 தேவாலயம் பிரதிஷ்டை செய்யப்படுதல்
\p
\v 1 சாலொமோன் ஜெபம்செய்து முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பியது.
\v 2 கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்க முடியாமலிருந்தது.
\v 3 அக்கினி இறங்குகிறதையும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் வம்சத்தார்கள் எல்லோரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்து பணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.
\s5
\v 4 அப்பொழுது ராஜாவும் அனைத்து மக்களும் கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள்.
\v 5 ராஜாவாகிய சாலொமோன் இருபத்திஇரண்டாயிரம் மாடுகளையும், ஒருலட்சத்து இருபதாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இந்தவிதமாக ராஜாவும் அனைத்து மக்களும் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள்.
\v 6 ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீது ராஜா லேவியர்களைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப் பாடுவதற்காகச் செய்யப்பட்ட கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லோரும் நின்றுகொண்டிருந்தார்கள்.
\s5
\v 7 சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் கொழுப்பையும் வைக்க போதுமானதாக இல்லாததால், கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் கொழுப்பையும் செலுத்தினான்.
\s5
\v 8 அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிவரை வந்து, அவனோடுகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாட்கள்வரையும் பண்டிகையை ஆசரித்து,
\v 9 எட்டாம் நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாகக் கொண்டாடினார்கள்; ஏழுநாட்கள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழு நாட்கள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.
\v 10 ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக மக்களுக்கு விடை கொடுத்தான்; கர்த்தர் தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது மக்களாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காக சந்தோஷத்தோடும் மனமகிழ்ச்சியோடும் போனார்கள்.
\s1 கர்த்தர் சாலொமோனுக்குக் காட்சியளித்தல்
\p
\s5
\v 11 இந்தவிதமாக சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜ அரண்மனையையும் கட்டி முடித்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும், தன் அரண்மனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அனுகூலமானது.
\v 12 கர்த்தர் இரவிலே சாலொமோனுக்குக் காட்சியளித்து: நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த இடத்தை எனக்கு பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன்.
\s5
\v 13 நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு அல்லது என் மக்களுக்குள் கொள்ளை நோயை அனுப்பும்போது,
\v 14 என் நாமம் தரிக்கப்பட்ட என் மக்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்செய்து, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்களுடைய பாவத்தை மன்னித்து, அவர்களுடைய தேசத்திற்கு செழிப்பைக் கொடுப்பேன்.
\v 15 இந்த இடத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் காதுகள் கவனிக்கிறவைகளுமாக இருக்கும்.
\s5
\v 16 என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.
\v 17 உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால்,
\v 18 அப்பொழுது இஸ்ரவேலை அரசாளுபவன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடு உடன்படிக்கை செய்தபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கச்செய்வேன்.
\s5
\v 19 நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்கு முன்பாக வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும்விட்டு, வேறே தெய்வங்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களென்றால்,
\v 20 நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்திலிருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளி, அதை அனைத்து மக்களுக்குள்ளும் பழமொழியாகவும் பரியாச சொல்லாகவும் வைப்பேன்.
\v 21 அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து: கர்த்தர் இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன என்று கேட்பான்.
\v 22 அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த தங்கள் தேவனாகிய கர்த்தரைவிட்டு, வேறே தெய்வங்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை வணங்கி, சேவித்ததால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரச்செய்தார் என்று சொல்லுவார்கள் என்றார்.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 சாலொமோனின் மற்ற செயல்பாடுகள்
\p
\v 1 சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தன் அரண்மனையையும் கட்ட இருபது வருடகாலம் சென்றபின்பு,
\v 2 ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களை சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் மக்களைக் குடியேற்றினான்.
\p
\s5
\v 3 பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான்.
\v 4 அவன் வனாந்திரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே பொருட்களை வைக்கும் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான்.
\s5
\v 5 சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்பெத்தொரோனையும், கோட்டைச் சுவர்களும், கதவுகளும், தாழ்ப்பாள்களுமுள்ள பாதுகாப்பான பட்டணங்களாகக் கட்டி,
\v 6 பாலாத்தையும், தனக்கு இருக்கிற, பொருட்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் சகல பட்டணங்களையும், குதிரை வீரர்கள் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும் தான் ஆளும் தேசமெங்கும் தனக்கு விருப்பமானதையெல்லாம் கட்டினான்.
\s5
\v 7 இஸ்ரவேல் மக்கள் அழிக்காமலிருந்த இஸ்ரவேல் அல்லாத ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியரில் மீதியான அனைத்து மக்களிலும்,
\v 8 அவர்களுக்குப்பிறகு தேசத்திலிருந்த அவர்களுடைய பிள்ளைகளை சாலொமோன் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி கட்டாய வேலைக்காரர்களாக ஏற்படுத்தினான்.
\s5
\v 9 இஸ்ரவேல் மக்களில் ஒருவரையும் சாலொமோன் தன் வேலையைச் செய்ய அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்த மனிதர்களும், அவனுடைய படைத்தளபதிகளும், அவனுடைய இரதங்களுக்கும் குதிரைவீரர்களுக்கும் தலைவர்களுமாக இருந்தார்கள்.
\v 10 ராஜாவாகிய சாலொமோனுடைய ஊழியக்காரர்களின் தலைவர்களாகிய இவர்களில் இருநூற்று ஐம்பதுபேர் மக்களை ஆண்டார்கள்.
\s5
\v 11 சாலொமோன்: கர்த்தருடைய பெட்டி வந்த இடங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரண்மனையிலே என் மனைவி குடியிருக்கக்கூடாது என்று சொல்லி, பார்வோனின் மகளைத் தாவீதின் நகரத்திலிருந்து, தான் அவளுக்குக் கட்டின மாளிகைக்குக் குடிவரச்செய்தான்.
\p
\s5
\v 12 அதுமுதற்கொண்டு சாலொமோன், தான் மண்டபத்திற்கு முன்பாகக் கட்டியிருந்த கர்த்தருடைய பலிபீடத்தின்மேல்,
\v 13 அந்தந்த நாளுக்குக் குறிப்பிடப்பட்டிருந்தபடி மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருடத்தில் மூன்றுமுறை ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.
\s5
\v 14 அவன் தன் தகப்பனாகிய தாவீதுடைய பிரமாணத்தின்படியே, ஆசாரியர்கள் தங்கள் தங்கள் ஊழியத்தைச் செய்யும் வகுப்புகளையும், லேவியர்கள் ஒவ்வொரு நாளின் கட்டளையின்படியே துதித்து, வேலை செய்து ஆசாரியர்களுக்கு முன்பாகத் தங்கள் ஊழியத்தைச் செய்யும் முறைகளையும், வாசல் காப்பவர்கள் ஒவ்வொரு வாசலில் காவல்காக்கும் வகுப்புகளையும் நிற்க செய்தான்; தேவனுடைய மனிதனாகிய தாவீது இப்படிக் கட்டளையிட்டிருந்தான்.
\v 15 சகல காரியத்தையும் பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து, ராஜா ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுத்த கட்டளைகளைவிட்டு அவர்கள் விலகாதிருந்தார்கள்.
\s5
\v 16 இப்படியே கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடப்பட்ட நாள்முதல் அதை முடிக்கும் நாள்வரை சாலொமோனின் வேலையெல்லாம் நடந்தேறிக் கர்த்தருடைய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது.
\p
\v 17 பின்பு சாலொமோன் ஏதோம் தேசத்துக் கடலோரத்திலிருக்கும் எசியோன்கேபேருக்கும் ஏலோத்திற்கும் போனான்.
\v 18 அவனுக்கு ஈராம் தன் ஊழியக்காரர்கள் மூலமாகக் கப்பல்களையும், சமுத்திரப் பயணத்தில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான்; அவர்கள் சாலொமோனின் வேலைக்காரர்களோடு ஓப்பீருக்குப் போய், அங்கேயிருந்து நானூற்று ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 சேபாவின் அரசி சாலொமோனை சந்திக்க வருதல்
\p
\v 1 சேபாவின் அரசி, சாலொமோனின் புகழைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனை சோதிக்கிறதற்காக, திரளான கூட்டத்தினரோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்திற்கு வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் உரையாடினாள்.
\v 2 அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளுக்கெல்லாம் பதில் கூறினான்; அவளுக்கு பதில் கூறமுடியாதபடி ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.
\s5
\v 3 சேபாவின் அரசி சாலொமோனுடைய பானபாத்திரக்காரர்களையும், அரண்மனையையும்,
\v 4 பந்தியின் உணவு வகைகளையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் உடைகளையும், அவனுடைய பானபாத்திரக்காரர்களையும், அவர்கள் உடைகளையும், கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமித்து,
\s5
\v 5 ராஜாவை நோக்கி: உம்முடைய செயல்களையும், உம்முடைய ஞானத்தையும்குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி உண்மைதான்.
\v 6 நான் வந்து அதை என் கண்களால் பார்க்கும்வரை அவர்களுடைய வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட புகழ்ச்சியைவிட அதிகம் உண்டாயிருக்கிறது.
\s5
\v 7 உம்முடைய மக்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரர்களும் பாக்கியவான்கள்.
\v 8 உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படிக்கு, உம்மைத் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கச் செய்ய, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்கு சிநேகிக்கிறதாலே, அவர் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார் என்றாள்.
\s5
\v 9 அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் அரசி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருபோதும் வரவில்லை.
\s5
\v 10 ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரர்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள்.
\v 11 அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும் ராஜ அரண்மனைக்கும் படிக்கட்டுகளையும், இசைக்கலைஞர்களுக்குச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்டவைகள் அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை.
\v 12 சேபாவின் அரசி ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைவிட அவள் ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்கு அதிகமாகக் கொடுத்தான்; பின்பு அவள் தன் கூட்டத்தினரோடு தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.
\s1 சாலொமோனின் மகிமை
\p
\s5
\v 13 சிறிய மற்றும் பெரிய வியாபாரிகள் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருடத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து எடையுள்ளதாக இருந்தது.
\v 14 அரபுதேசங்களின் அனைத்து ராஜாக்களும், ஆளுநர்களும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.
\s5
\v 15 ராஜாவாகிய சாலொமோன் இருநூறு கேடகங்களை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு அறுநூறு சேக்கல் எடை பொன் தகட்டைச் செலவழித்தான்.
\v 16 அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கேடகத்திற்கு முந்நூறு சேக்கல் எடை பொன்னைச் செலவழித்தான்; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
\s5
\v 17 ராஜா தந்தத்தால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்.
\v 18 அந்தச் சிங்காசனத்திற்குப் பொன்னினால் செய்யப்பட்ட ஆறு படிகளும், ஒரு பாதபடியும், உட்காரும் இடத்திற்கு இருபுறத்திலும் கை சாய்மானங்களும் இருந்தன; இரண்டு சிங்கங்கள் கை சாய்மானங்கள் அருகே நின்றன.
\s5
\v 19 அந்த ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றன; எந்த ராஜ்ஜியத்திலும் இப்படிச் செய்யப்படவில்லை.
\v 20 ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாகக் கருதப்படவில்லை.
\v 21 ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரர்களுடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
\s5
\v 22 பூமியின் அனைத்து ராஜாக்களையும்விட சாலொமோன் ராஜா ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.
\v 23 சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லோரும் அவனுடைய முகதரிசனத்தைத் தேடினார்கள்.
\v 24 வருடந்தோறும் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
\s5
\v 25 சாலொமோனுக்கு நான்காயிரம் குதிரை லாயங்களும் இரதங்களும் இருந்தன, பனிரெண்டாயிரம் குதிரை வீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் ராஜா வைத்திருந்தான்.
\v 26 நதி துவங்கிப் பெலிஸ்தரின் தேசம்வரை எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற அனைத்து ராஜாக்களையும் அவன் ஆண்டான்.
\s5
\v 27 எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
\v 28 எகிப்திலும் மற்ற தேசங்களிலுமிருந்து சாலொமோனுக்குக் குதிரைகள் கொண்டுவரப்பட்டது.
\s1 சாலொமோனின் மரணம்
\p
\v 29 சாலொமோனுடைய ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள மற்ற செயல்கள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புத்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமைக்குறித்து தரிசனம் காண்கிறவனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது.
\v 30 சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்.
\v 31 பின்பு சாலொமோன் இறந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 இஸ்ரவேலர்கள் ரெகொபெயாமுக்கு விரோதமாகக் கலகம் செய்தல்
\p
\v 1 ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர்கள் எல்லோரும் சீகேமுக்கு வந்திருந்ததால், அவனும் சீகேமுக்குப் போனான்.
\v 2 ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் அதைக் கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான்.
\s5
\v 3 ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; பின்பு யெரொபெயாமும் இஸ்ரவேலர்கள் அனைவரும் வந்து, ரெகொபெயாமை நோக்கி:
\v 4 உம்முடைய தகப்பன் பாரமான சுமையை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான சுமையையும் எளிதாக்கும்; அப்பொழுது உமக்கு சேவை செய்வோம் என்றார்கள்.
\v 5 அதற்கு அவன்: நீங்கள் மூன்று நாட்களுக்குப்பின்பு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள்.
\s5
\v 6 அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கும்போது அவனுக்கு முன்பாகநின்ற முதியோர்களிடம் ஆலோசனைசெய்து, இந்த மக்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
\v 7 அதற்கு அவர்கள்: நீர் இந்த மக்களுக்கு தயவையும் ஆதரவையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரர்களாக இருப்பார்கள் என்றார்கள்.
\s5
\v 8 முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்தவர்களும் தனக்கு முன்பாக நிற்கிறவர்களுமாகிய வாலிபர்களோடு ஆலோசனைசெய்து,
\v 9 அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த சுமையை எளிதாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
\s5
\v 10 அவனோடு வளர்ந்த வாலிபர்கள் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் சுமையை பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு எளிதாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.
\v 11 இப்போதும் என் தகப்பன் பாரமான சுமையை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் சுமையை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொல்லும் என்றார்கள்.
\s5
\v 12 மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் அனைத்து மக்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.
\v 13 ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோரின் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, அவர்களுக்குக் கடினமான பதில் கொடுத்தான்.
\v 14 வாலிபர்களுடைய ஆலோசனையின்படியே அவர்களோடு பேசி, என் தகப்பன் உங்கள் சுமையை பாரமாக்கினார்; நான் அதை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான்.
\s5
\v 15 ராஜா, மக்கள் சொல்வதைக் கேட்காமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்த தேவனாலே இப்படி நடந்தது.
\s5
\v 16 தாங்கள் சொன்னதை ராஜா கேட்கவில்லை என்று இஸ்ரவேலர் எல்லோரும் கண்டபோது, மக்கள் ராஜாவுக்கு மறுமொழியாக: தாவீதோடு எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் மகனிடத்தில் எங்களுக்கு உரிமைப்பங்கு இல்லை; இஸ்ரவேலே உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர்கள் எல்லோரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
\v 17 ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் மக்கள்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.
\v 18 பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் கட்டாய வேலைக்காரர்களின் தலைவனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேல் மக்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் விரைவாக இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான்.
\v 19 அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர்கள் தாவீதின் வம்சத்தைவிட்டுக் கலகம்செய்து பிரிந்துபோயிருக்கிறார்கள்.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\p
\v 1 ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு போர்செய்யவும், ராஜ்ஜியத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட போர்வீரரான ஒருலட்சத்து எண்பதாயிரம்பேரைக் கூட்டினான்.
\s5
\v 2 தேவனுடைய மனிதனாகிய செமாயாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி. அவர் சொன்னது:
\v 3 நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் மகனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அனைத்து இஸ்ரவேலரையும் நோக்கி:
\v 4 நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு போர்செய்யாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாக போர்செய்வதைத் தவிர்த்துத் திரும்பிப் போய்விட்டார்கள்.
\s1 ரெகொபெயாம் யூதாவைப் பாதுகாத்தல்
\p
\s5
\v 5 ரெகொபெயாம் எருசலேமில் குடியிருந்து, யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான்.
\v 6 அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும்,
\v 7 பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும்,
\v 8 காத்தும், மரேஷாவும், சீப்பும்,
\v 9 அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,
\v 10 சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டி,
\s5
\v 11 அந்தப் பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமும் உள்ள சேமிப்பு அறைகளையும்,
\v 12 யூதாவும் பென்யமீனும் அவன் கட்டுப்பாட்டிலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் கேடயங்களையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.
\s5
\v 13 இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள்.
\v 14 லேவியர்கள் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யாமலிருக்க யெரொபெயாமும் அவன் மகன்களும் அவர்களைத் தள்ளிப்போட்டதால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் சொத்துக்களையும்விட்டு, யூதா தேசத்திற்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.
\v 15 அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்.
\s5
\v 16 அந்த லேவியர்களின் பின்னே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடுவதற்காக எருசலேமுக்கு வந்தார்கள்.
\v 17 இப்படி மூன்று வருடங்கள்வரை யூதாவின் ராஜ்ஜியத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருடங்கள்வரை நடந்தார்கள்.
\s1 ரெகொபெயாமின் குடும்பம்
\p
\s5
\v 18 ரெகொபெயாம் தாவீதின் மகனாகிய எரிமோத்தின் மகள் மகலாத்தையும், ஈசாயின் மகனாகிய எலியாபின் மகள் அபியாயேலையும் திருமணம்செய்தான்.
\v 19 இவள் அவனுக்கு ஏயூஸ், சமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள்.
\s5
\v 20 அவளுக்குப்பிறகு அப்சலோமின் மகளாகிய மாகாளை திருமணம்செய்தான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும். செலோமித்தையும் பெற்றாள்.
\v 21 ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லோரிலும், அப்சலோமின் மகளாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் திருமணம்செய்து, இருபத்தெட்டு மகன்களையும் அறுபது மகள்களையும் பெற்றான்.
\s5
\v 22 ரெகொபெயாம் மாகாளின் மகனாகிய அபியாவை அவன் சகோதரர்களுக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.
\v 23 அவன் புத்தியாக நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள பாதுகாப்பான சகல பட்டணங்களிலும் தன் மகன்கள் அனைவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\s1 சீஷாக் எருசலேமைத் தாக்குதல்
\p
\v 1 ரெகொபெயாம் ராஜ்ஜியத்தைத் திடப்படுத்தித் தன்னை பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடு இஸ்ரவேலர்கள் அனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.
\s5
\v 2 அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக துரோகம்செய்ததால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருடத்தில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதாயிரம் குதிரைவீரர்களோடும் எருசலேமுக்கு விரோதமாக வந்தான்;
\v 3 அவனோடுகூட எகிப்திலிருந்து வந்த லூபியர்கள், சூக்கியர்கள், எத்தியோப்பியரான மக்கள் எண்ணமுடியாதவர்களாக இருந்தார்கள்.
\v 4 அவன் யூதாவுக்கு அடுத்த பாதுகாப்பான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம்வரை வந்தான்.
\s5
\v 5 அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்திற்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்திற்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழுவதற்கு விட்டுவிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
\v 6 அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்தி: கர்த்தர் நீதியுள்ளவர் என்றார்கள்.
\s5
\v 7 அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக்கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.
\v 8 ஆனாலும் என்னை சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களை சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனை சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்.
\s5
\v 9 அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாக வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்கேடயங்கள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
\v 10 அவைகளுக்கு பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற பாதுகாவலருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.
\s5
\v 11 ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும்போது, அரண்மனைக் காவலர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
\v 12 அவன் தன்னைத் தாழ்த்தினதால், கர்த்தர் அவனை முழுவதும் அழிக்காமல் அவருடைய கோபம் அவனைவிட்டுத் திரும்பினது; யூதாவிலே இன்னும் சில காரியங்கள் ஒழுங்குள்ளதாயிருந்தது.
\s5
\v 13 அப்படியே ராஜாவாகிய ரெகொபெயாம் எருசலேமிலே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு ஆட்சிசெய்தான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருடங்கள் ஆட்சிசெய்தான்; அம்மோன் வம்சத்தாளான அவனுடைய தாயின் பெயர் நாமாள்.
\v 14 அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான்.
\v 15 ரெகொபெயாமின் ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள அனைத்து செயல்களும் செமாயாவின் புத்தகத்திலும், தரிசனம் காண்கிறவனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் எல்லா நாட்களும் போர் நடந்துகொண்டிருந்தது.
\v 16 ரெகொபெயாம் இறந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் மகனாகிய அபியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 யூதாவின் ராஜாவாகிய அபியா
\p
\v 1 ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருடத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,
\v 2 மூன்று வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மிகாயாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் போர் நடந்தது.
\v 3 அபியா தெரிந்துகொள்ளப்பட்ட நான்குலட்சம்பேராகிய பலசாலிகளான படைவீரர்களைப் போருக்கு ஆயத்தம்செய்தான்; யெரொபெயாம் தெரிந்துகொள்ளப்பட்ட எட்டுலட்சம்பேராகிய மிகவும் பலம்வாய்ந்த படைவீரர்களை அவனுக்கு எதிராக போருக்கு நிறுத்தினான்.
\s5
\v 4 அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயீம் என்னும் மலையின்மேல் ஏறி நின்று: யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.
\v 5 இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும் அரசாட்சியை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கும் அவன் மகன்களுக்கும் மாறாத உடன்படிக்கையாகக் கட்டளையிட்டதை நீங்கள் அறியவில்லையா?
\s5
\v 6 ஆகிலும் தாவீதின் மகனாகிய சாலொமோனின் வேலைக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின் மகன் எழும்பி, தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்செய்தான்.
\v 7 துன்மார்க்க மக்களாகிய வீணர்கள் அவனோடுகூடி, சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாம் அவர்களை எதிர்க்கமுடியாமல் இளவயதும் உறுதியற்ற மனமுள்ளவனாக இருக்கும்போது, அவனுக்கு விரோதமாகத் தங்களைப் பலப்படுத்திக்கொண்டார்கள்.
\s5
\v 8 இப்போதும் தாவீதுடைய மகன் கையிலிருக்கிற கர்த்தருடைய ராஜ்ஜியத்திற்கு விரோதமாக நீங்கள் பெலன் கொள்ளலாமென்று நினைக்கிறீர்கள்; நீங்கள் ஏராளமான கூட்டம்; யெரொபெயாம் உங்களுக்கு தெய்வங்களாக உண்டாக்கின பொன் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் இருக்கிறதே.
\v 9 நீங்கள் ஆரோனின் மகன்களாகிய கர்த்தருடைய ஆசாரியர்களையும், லேவியர்களையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் மக்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை ஏற்படுத்திக்கொள்ளவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டை செய்துகொள்ள வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே.
\s5
\v 10 எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியம்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் மகன்களும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.
\v 11 அவர்கள் தினந்தோறும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்த வாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும், மாலையிலும், பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்து அப்பங்களை அடுக்கிவைத்து, பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளை மாலைதோறும் ஏற்றுகிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரின் நியமங்களைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள்.
\s5
\v 12 இதோ, தேவன் எங்கள் சேனாபதியாக எங்களோடு இருக்கிறார்; உங்களுக்கு விரோதமாகப் பூரிகைகளைப் பெருந்தொனியாக முழக்குகிற ஆசாரியர்களும் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக போர்செய்யாதீர்கள்; செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்காது என்றான்.
\s5
\v 13 யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு இரகசியப் படையை சுற்றிப்போகச் செய்தான்; அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள்; அந்த இரகசியப் படை அவர்களுக்குப்பின் இருந்தது.
\v 14 யூதா மக்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் போர் நடக்கிறதைக் கண்டு, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள்.
\v 15 யூதா மனிதர்கள் ஆர்ப்பரித்தார்கள்; யூதா மனிதர்கள் ஆர்ப்பரிக்கிறபோது. தேவன் யெரொபேயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாகத் தோற்கடித்தார்.
\s5
\v 16 இஸ்ரவேல் மக்கள் யூதாவுக்கு முன்பாகத் தோற்று ஓடினார்கள்; தேவன் அவர்களை யூதாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
\v 17 அபியாவும் அவனுடைய மக்களும் அவர்களில் பெரும்பகுதியை அழித்தார்கள்; தெரிந்துகொள்ளப்பட்ட ஐந்துலட்சம்பேர் இஸ்ரவேலில் வெட்டுண்டு விழுந்தார்கள்.
\v 18 அப்படியே இஸ்ரவேல் மக்கள் அக்காலத்திலே தாழ்த்தப்பட்டார்கள்; யூதா மனிதர்களோ தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொண்டதால் மேற்கொண்டார்கள்.
\v 19 அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான்.
\v 20 பிறகு அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலப்படமுடியாமற்போனது. கர்த்தர் அவனை அடித்ததால் மரணமடைந்தான்.
\v 21 அபியா பலத்துப்போனான்; அவன் பதினான்கு பெண்களைத் திருமணம்செய்து, இருபத்திரண்டு மகன்களையும் பதினாறு மகள்களையும் பெற்றான்.
\v 22 அபியாவின் மற்ற செயல்களும், நடத்தைகளும், வார்த்தைகளும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\s5
\c 14
\cl அத்தியாயம்– 14
\p
\v 1 அபியா இறந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருடங்கள்வரை அமைதலாயிருந்தது.
\s1 யூதாவின் ராஜாவாகிய ஆசா
\p
\v 2 ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.
\v 3 அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,
\v 4 தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்றுக்கொடுத்து,
\s5
\v 5 யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்ஜியம் அமைதலாயிருந்தது.
\v 6 கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதால், அந்த வருடங்களில் அவனுக்கு விரோதமான போர் இல்லாமலிருந்தது; தேசம் அமைதலாயிருந்ததால் யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான்.
\s5
\v 7 அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமைதலாயிருக்கும்போது, நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு கோட்டைச் சுவர்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டாக்கி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.
\v 8 யூதாவிலே கேடகத்தையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேருமான படை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லோரும் பலசாலிகள்.
\s5
\v 9 அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த படையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாவரை வந்தான்.
\v 10 அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேசாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.
\v 11 ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலமில்லாதவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணையாக நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனிதன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
\s5
\v 12 அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியர்களை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாகத் தோற்கடித்ததால் எத்தியோப்பியர்கள் ஓடிப்போனார்கள்.
\v 13 அவர்களை ஆசாவும் அவனோடிருந்த மக்களும் கேரார்வரை துரத்தினார்கள்; எத்தியோப்பியர்கள் திரும்ப பலங்கொள்ளாதபடிக்கு முற்றிலும் அழிக்கப்பட்டார்கள்; கர்த்தருக்கும் அவருடைய படைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளையடித்து,
\v 14 கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் தோற்கடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டானது; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாக அகப்பட்டது.
\v 15 மிருகஜீவன்கள் இருந்த கொட்டகைகளையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
\s5
\c 15
\cl அத்தியாயம்– 15
\s1 ஆசாவின் சீர்திருத்தம்
\p
\v 1 அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் மகனாகிய அசரியாவின்மேல் இறங்கினதால்,
\v 2 அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனிதரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடு இருந்தால், அவர் உங்களோடு இருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை நீங்கள் விட்டுவிட்டால், அவர் உங்களை விட்டுவிடுவார்.
\s5
\v 3 இஸ்ரவேலிலே அநேக நாட்களாக உண்மையான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.
\v 4 தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.
\v 5 அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிமக்கள் எல்லோருக்குள்ளும் பெரும் குழப்பம் உண்டாயிருந்து,
\s5
\v 6 தேசம் தேசத்தையும், பட்டணம் பட்டணத்தையும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித துன்பத்தினாலும் கலங்கச்செய்தார்.
\v 7 நீங்களோ உங்கள் கைகளைத் தளரவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் செயல்களுக்குப் பலன் உண்டு என்றான்.
\s5
\v 8 ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் தைரியம் கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, கர்த்தருடைய மண்டபத்தின் முன்னிருந்த கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்து,
\v 9 அவன் யூதா பென்யமீன் மக்களையும், அவர்களோடுகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலுமிருந்து வந்து அவர்களோடு வசித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடு இருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான மக்கள் அவனுடன் சேர்ந்தார்கள்.
\s5
\v 10 ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருடம் மூன்றாம் மாதத்திலே அவர்கள் எருசலேமிலே கூடி,
\v 11 தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டு வந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்கு பலியிட்டு,
\s5
\v 12 தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்;
\v 13 சிறியோர் பெரியோர் ஆண் பெண் எல்லோரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்ற ஒரு உடன்படிக்கை செய்து,
\s5
\v 14 மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள்.
\v 15 இந்த ஆணைக்காக யூதா மக்கள் அனைவரும் சந்தோஷப்பட்டார்கள்; தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரிடமிருந்து போர் எதுவும் இல்லாமல் அவர்களை இளைப்பாறச்செய்தார்.
\s5
\v 16 தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டாக்கிய ராஜாவாகிய ஆசாவின் தாயான மாகாளையும் ராஜாத்தியாக இராமல் ஆசா விலக்கிப்போட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் முற்றிலும் அழித்து, கீதரோன் ஆற்றினருகில் சுட்டெரித்துப்போட்டான்.
\v 17 மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது.
\v 18 தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்செய்ய பொருத்தனை செய்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.
\v 19 ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருடம்வரை போர் இல்லாதிருந்தது.
\s5
\c 16
\cl அத்தியாயம்– 16
\s1 ஆசாவின் இறுதி வருடங்கள்
\p
\v 1 ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருடத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான்.
\s5
\v 2 அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலும் உள்ள பொக்கிஷங்களிலிருந்து வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வசிக்கிற பென்னாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடம் அனுப்பி:
\v 3 எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பினேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படி நீர் வந்து, அவனோடு செய்த உடன்படிக்கையை முறித்துப்போடும் என்று சொல்லி அனுப்பினான்.
\s5
\v 4 பென்னாதாத், ராஜாவாகிய ஆசாவுக்கு செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும், தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி பட்டணங்களின் அனைத்து சேமிப்புக் கிடங்குகளையும் தாக்கினார்கள்.
\v 5 இதை பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைக் கைவிட்டான்.
\v 6 அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையும் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
\s5
\v 7 அக்காலத்திலே தரிசனம் காண்கிறவனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டதால், சீரியா ராஜாவின் படை உமது கைக்குத் தப்பிப்போனது.
\v 8 மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரை வீரருமுள்ள எத்தியோப்பியரும் லூபியரும் மகா சேனையாயிருந்தார்கள் அல்லவா? நீர் கர்த்தரைச் சார்ந்து கொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே.
\s5
\v 9 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்த, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்தக் காரியத்தில் அறிவில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு போர்கள் ஏற்படும் என்றான்.
\v 10 அதனால் ஆசா தரிசனம் காண்கிறவன்மேல் கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதைத்தவிர அக்காலத்தில் மக்களுக்குள் சிலரைக் கொடூரமாக நடப்பித்தான்.
\s5
\v 11 ஆசாவின் ஆரம்பம்முதல் முடிவுவரையுள்ள செயல்பாடுகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 12 ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருடத்திலே தன் கால்களில் வியாதி ஏற்பட்டு, அந்த வியாதி மிகவும் அதிகரித்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, மருத்துவர்களையே தேடினான்.
\s5
\v 13 ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருடத்தில் இறந்தான்.
\v 14 தைலக்காரர்களால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனைக் கிடத்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்காக வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்செய்தார்கள்.
\s5
\c 17
\cl அத்தியாயம்– 17
\s1 யூதாவின் ராஜாவாகிய யோசபாத்
\p
\v 1 ஆசாவின் இடத்தில் அவன் மகனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாக பெலனடைந்தான்.
\v 2 அவன் யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதா தேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின் பட்டணங்களிலும் படைவீரர்களையும் ஏற்படுத்தினான்.
\s5
\v 3 கர்த்தர் யோசபாத்துடன் இருந்தார்; அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து,
\v 4 தன் தகப்பனுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான்.
\s5
\v 5 ஆகையால் கர்த்தர் அவன் கையில் அரசாட்சியை உறுதிப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லோரும் யோசபாத்திற்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் அதிகமாயிருந்தது.
\v 6 கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகம்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவிலிருந்து அகற்றினான்.
\s5
\v 7 அவன் அரசாண்ட மூன்றாம் வருடத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம்செய்ய, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும், சகரியாவையும் நெதனெயேலையும், மிகாயாவையும்,
\v 8 இவர்களோடுகூட செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியர்களையும், இவர்களோடுகூட ஆசாரியரான எலிஷமாவையும், யோராமையும் அனுப்பினான்.
\v 9 இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேதபுத்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் சென்று மக்களுக்குப் போதித்தார்கள்.
\s5
\v 10 யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்ஜியங்களின் மீது கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததால், யோசபாத்தோடு போர்செய்யாதிருந்தார்கள்.
\v 11 பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்திற்கு வெகுமதிகளோடுகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள்.
\s5
\v 12 இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், பொருட்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான்.
\v 13 யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளைச் செய்தான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள்.
\s5
\v 14 தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய எண்ணிக்கையாவது: யூதாவிலே ஆயிரத்திற்கு அதிபதிகளில் அத்னா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்று லட்சம்பேர் இருந்தார்கள்.
\v 15 அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதி இருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள்.
\v 16 அவனுக்கு உதவியாக கர்த்தருக்குத் தன்னை உற்சாகமாக ஒப்புக்கொடுத்த சிக்ரியின் மகனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டு லட்சம்பேர் இருந்தார்கள்.
\v 17 பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
\v 18 அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே வேலைசெய்வதற்கு ஆயுதமணிந்த ஒருலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள்.
\v 19 ராஜா யூதா எங்குமுள்ள பாதுகாப்பான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவுக்கு வேலைசெய்தவர்கள்.
\s5
\c 18
\cl அத்தியாயம்– 18
\s1 ஆகாபுக்கு எதிராகச் சொல்லப்பட்ட மிகாயாவின் தீர்க்கதரிசனங்கள்
\p
\v 1 யோசபாத்திற்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் இருந்தது; அவன் ஆகாபோடு சம்பந்தம் கலந்து,
\v 2 சில வருடங்கள் சென்றபின்பு, சமாரியாவிலிருக்கிற ஆகாபிடத்திற்குப் போனான்; அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற மக்களுக்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை இணங்கச் செய்தான்.
\v 3 எப்படியெனில், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு என்னோடு வருகிறீரா என்று கேட்டதற்கு அவன்: நான் தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், உம்மோடுகூட போருக்கு வருகிறேன் என்றான்.
\s5
\v 4 மேலும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்துத் தெரிந்துகொள்ளும் என்றான்.
\v 5 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் போர்செய்யப் போகலாமா, போகக்கூடாதா என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள்: போங்கள், தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
\s5
\v 6 பின்பு யோசபாத்: நாம் விசாரித்துத் தெரிந்துகொள்வதற்கு இவர்களைத்தவிர கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்.
\v 7 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்துத் தெரிந்துகொள்வதற்கு இம்லாவின் மகனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.
\v 8 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, மந்திரிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் மகனாகிய மிகாயாவைச் சீக்கிரமாக அழைத்துவா என்றான்.
\s5
\v 9 இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் நுழைவாயிலுக்கு முன்னிருக்கும் விசாலமான இடத்திலே ராஜஉடை அணிந்துகொண்டவர்களாக, அவரவர் தம்தம் சிங்காசனத்திலே உட்கார்ந்திருந்தார்கள்; அனைத்து தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
\v 10 கெனானாவின் மகனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியர்களை முட்டி அழித்துப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
\v 11 அனைத்து தீர்க்கதரிசிகளும் அதற்கு ஏற்றவாறு தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போங்கள், உங்களுக்கு வாய்க்கும், கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
\s5
\v 12 மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடனே பேசி: இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஒன்றுபோலவே ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவருடைய வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான்.
\v 13 அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
\v 14 அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் போர்செய்யப் போகலாமா, போகக்கூடாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போங்கள்; உங்களுக்கு வாய்க்கும்; அவர்கள் உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்றான்.
\s5
\v 15 ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையைத் தவிர வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடி, நான் எத்தனைமுறை உனக்கு ஆணையிடவேண்டும் என்று சொன்னான்.
\v 16 அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லோரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்கு சமாதானத்தோடு திரும்பிப் போகட்டும் என்றார் என்று சொன்னான்.
\s5
\v 17 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடு சொல்லவில்லையா என்றான்.
\v 18 அப்பொழுது மிகாயா சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவருடைய வலதுபக்கத்திலும் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.
\s5
\v 19 அப்பொழுது கர்த்தர்: இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்கு போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.
\s5
\v 20 அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்கு போதனைசெய்வேன் என்றது; எதனால் என்று கர்த்தர் அதைக் கேட்டார்.
\v 21 அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும் பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச் செய்வாய்; போய் அப்படியே செய் என்றார்.
\s5
\v 22 ஆகவே கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.
\s5
\v 23 அப்பொழுது கெனானாவின் மகனாகிய சிதேக்கியா அருகில் வந்து: மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்த வழியாக என்னைவிட்டு உன்னோடு பேசும்படி வந்தது என்றான்.
\v 24 அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
\s5
\v 25 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடமும், இளவரசனாகிய யோவாசிடமும் திரும்பக் கொண்டுபோய்,
\v 26 அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடு திரும்பிவரும்வரை, அவனுக்குக் குறைந்த அளவு அப்பத்தையும், தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.
\v 27 அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடு திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசவில்லை என்று சொல்லி; மக்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள் என்றான்.
\s1 ராமோத் கீலேயாத்தில் ஆகாப் கொல்லப்படுதல்
\p
\s5
\v 28 பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போனார்கள்.
\v 29 இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து: நான் மாறுவேடத்தில் போருக்குப் போவேன்; நீரோ ராஜஉடை அணிந்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா மாறுவேடத்தில் போருக்குப் போனான்.
\v 30 சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் போர்செய்யாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடுமாத்திரம் போர்செய்யுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.
\s5
\v 31 ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் கண்டபோது, இவன் தான் இஸ்ரவேலின் ராஜா என்று நினைத்துப் போர்செய்ய அவனை சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான்; கர்த்தர் அவனுக்கு உதவி செய்தார்; அவர்கள் அவனைவிட்டு விலகும்படி தேவன் செய்தார்.
\v 32 இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர்கள் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள்.
\s5
\v 33 ஒருவன் தற்செயலாக வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலேபட்டது; அப்பொழுது அவன் தன் இரத ஓட்டியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்திற்கு வெளியே கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான்.
\v 34 அன்றையதினம் போர் அதிகரித்தது; இஸ்ரவேலின் ராஜா சீரியர்களுக்கு எதிராக இரதத்தில் மாலைவரை இருந்து, சூரியன் மறையும்போது இறந்துபோனான்.
\s5
\c 19
\cl அத்தியாயம்– 19
\p
\v 1 யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவந்தான்.
\v 2 அப்பொழுது அனானியின் மகனாகிய யெகூ என்னும் தரிசனம் காண்கிறவன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதனால் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.
\v 3 ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளைத் தேசத்தைவிட்டு அகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின காரியத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.
\s1 யோசபாத் நியாதிபதிகளை நியமித்தல்
\p
\s5
\v 4 யோசபாத் எருசலேமிலே குடியிருந்து, திரும்ப பெயர்செபா தொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசம்வரை உள்ள மக்களுக்குள்ளே பிரயாணமாகப் போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தரிடம் திரும்பச்செய்தான்.
\v 5 அவன் யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து,
\s5
\v 6 அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனிதனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற காரியத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.
\v 7 ஆதலால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் பாரபட்சமும் இல்லை, லஞ்சம் வாங்குதலும் அவரிடத்திலே செல்லாது என்றான்.
\s5
\v 8 அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியர்களிலும், ஆசாரியர்களிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் கர்த்தருடைய நியாயங்களைக்குறித்தும் விவாதக் காரியங்களைக்குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து,
\v 9 அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து, செய்யவேண்டியது என்னவென்றால்,
\s5
\v 10 பலவித இரத்தப்பழியைக்குறித்த காரியங்களும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த பலவித வழக்குச்செய்திகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் கர்த்தருக்கு முன்பாகக் குற்றவாளிகள் ஆகாமலிருக்கவும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் கடுங்கோபம் வராமலிருக்கவும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் குற்றவாளிகள் ஆகமாட்டீர்கள்.
\s5
\v 11 இதோ, ஆசாரியனாகிய அமரியா, கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் மகனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியர்களும் உங்களுக்கு முன்பாக அதிகாரிகளாக இருந்து உங்களுக்கு உதவி செய்வார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.
\s5
\c 20
\cl அத்தியாயம்– 20
\s1 யோசபாத் மோவாபியர்களையும் அம்மோனியர்களையும் தோற்கடித்தல்
\p
\v 1 இதற்குப்பின்பு மோவாப் மற்றும் அம்மோன் மக்களும், அவர்களோடு அம்மோனியர்களுக்கு அப்புறத்திலுள்ள மனிதர்களும்கூட யோசபாத்திற்கு விரோதமாக போர்செய்ய வந்தார்கள்.
\v 2 சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாக ஏராளமான மக்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன் தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.
\s5
\v 3 அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஆயத்தப்படுத்த, யூதாமுழுவதும் உபவாசத்தை அறிவித்தான்.
\v 4 அப்படியே யூதா மக்கள் கர்த்தரிடத்தில் உதவிபெறக் கூடினார்கள்; யூதாவிலுள்ள எல்லாப் பட்டணங்களிலுமிருந்து அவர்கள் கர்த்தரைத் தேட வந்தார்கள்.
\s5
\v 5 அப்பொழுது யோசபாத் கர்த்தருடைய ஆலயத்திலே புதுப்பிராகாரத்து முகப்பிலே, யூதா மற்றும் எருசலேம் மக்களும் கூடின சபையிலே நின்று:
\v 6 எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் மக்களுடைய தேசங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கமுடியாது.
\v 7 எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்த தேசத்துக் குடிமக்களைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு நிலையாக இருக்கக் கொடுக்கவில்லையா?
\s5
\v 8 ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள்.
\v 9 எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று, எங்கள் துன்பத்தில் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.
\s5
\v 10 இப்போதும், இதோ, இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோனியர்கள், மோவாபியர்கள், சேயீர் மலைத்தேசத்தாருடைய எல்லைகள் வழியாகப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களைவிட்டு விலகி, அவர்களை அழிக்காமல் இருந்தார்கள்.
\v 11 இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் நீர் எங்களுக்குக் கொடுத்த உம்முடைய தேசத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள்.
\s5
\v 12 எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்கு பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.
\v 13 யூதா மக்கள் அனைவரும், அவர்களுடைய குழந்தைகளும், மனைவிகளும், மகன்களும்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.
\s5
\v 14 அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் மகனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் மகன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் மகன்களில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதால் அவன் சொன்னது:
\v 15 சகல யூதா மக்களே, எருசலேமின் குடிமக்களே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்கு பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்தப் போர் உங்களுடையதல்ல, தேவனுடையது.
\s5
\v 16 நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாகப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாக வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்திரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடைசியிலே கண்டு சந்திப்பீர்கள்.
\v 17 இந்தப் போர் செய்கிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனிதர்களே, எருசலேம் மக்களே, நீங்கள் பொறுத்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள; கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்றான்.
\s5
\v 18 அப்பொழுது யோசபாத் தரைவரை முகங்குனிந்தான்; சகல யூதா மக்களும், எருசலேமின் குடிமக்களும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள்.
\v 19 கோகாத்தியர்கள் மற்றும் கோராகியரின் சந்ததியிலும் இருந்த லேவியர்கள் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடு கெம்பீரமாகத் துதித்தார்கள்.
\s5
\v 20 அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்திரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படும்போது யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது வெற்றிபெறுவீர்கள் என்றான்.
\v 21 பின்பு அவன் மக்களோடு ஆலோசனைசெய்து, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்பாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகர்களை நிறுத்தினான்.
\s5
\v 22 அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாக வந்து மறைந்திருந்த அம்மோனியர்களையும், மோவாபியர்களையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாக ஒருவரைக் கர்த்தர் எழும்பச்செய்ததால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.
\v 23 எப்படியென்றால், அம்மோனியரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசத்தாரைக் கொல்லவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாக எழும்பினார்கள்; சேயீர் குடிமக்களை அழித்த பின்பு, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கதாகக் கைகலந்தார்கள்.
\s5
\v 24 யூதா மனிதர்கள் வனாந்திரத்திலுள்ள மேடான பகுதிக்கு வந்து, அந்த ஏராளமான கூட்டம் இருக்கும் திசையைப் பார்க்கிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை.
\s5
\v 25 யோசபாத்தும் அவனுடைய மக்களும் அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருட்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகமுடியாமலிருந்தது; மூன்று நாட்களாகக் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.
\v 26 நான்காம் நாளில் பெராக்காவிலே கூடினார்கள்; அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெராக்கா என்று பெயரிட்டார்கள்.
\s5
\v 27 பின்பு கர்த்தர் அவர்களை அவர்களுடைய எதிரிகள்பேரில் மகிழச் செய்ததால் யூதா மனிதர்களும் எருசலேம் மக்களும், அவர்களுக்கு முன்னே யோசபாத்தும் மகிழ்ச்சியோடு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
\v 28 அவர்கள் தம்புருக்களோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள்.
\s5
\v 29 கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களோடு போர்செய்தார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரம் வந்தது.
\v 30 இந்தவிதமாக தேவன் சுற்றுப்புறத்தாரால் போர் இல்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதால், யோசபாத்தின் ஆட்சி அமைதலாயிருந்தது.
\s1 யோசபாத்துடைய அரசாட்சியின் முடிவு
\p
\s5
\v 31 யோசபாத் யூதாவை ஆட்சிசெய்தான்; அவன் ராஜாவாகிறபோது, முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; சில்கியின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அசுபாள்.
\v 32 அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழியிலே நடந்து, அதைவிட்டு விலகாதிருந்து, கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
\v 33 ஆனாலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; மக்கள் தங்கள் இருதயத்தைத் தங்கள் பிதாக்களின் தேவனுக்கு இன்னும் நேராக்காதிருந்தார்கள்.
\s5
\v 34 யோசபாத்தின் ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் உள்ளபடி ஆனானியின் மகனாகிய யெகூவின் வசனங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது.
\p
\s5
\v 35 அதற்குப்பின்பு யூதாவின் ராஜாவாகிய யோசபாத் பொல்லாப்புச் செய்கிறவனான அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடு நட்புகொண்டான்.
\v 36 தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்ய அவனோடு கூடிக்கொண்டான்; அப்படியே எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தார்கள்.
\v 37 மரேசா ஊரானாகிய தொதாவாவின் மகனான எலியேசர் யோசபாத்திற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி: நீர் அகசியாவோடு இணைந்துகொண்டதால், கர்த்தர் உம்முடைய செயல்களை முறித்துப்போட்டார் என்றான்; அந்தக் கப்பல்கள் உடைந்துபோனது, அவர்கள் தர்ஷீசுக்குப் போகமுடியாமற்போனது.
\s5
\c 21
\cl அத்தியாயம்– 21
\p
\v 1 யோசபாத் இறந்து, தாவீதின் நகரத்தில் தன் முன்னோர்களின் அருகில் அடக்கம்செய்யப்பட்டான்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய யோராம் ராஜாவானான்.
\v 2 அவனுக்கு யோசபாத்தின் மகன்களாகிய அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா என்னும் சகோதரர்கள் இருந்தார்கள்; இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோசபாத்தின் மகன்கள்.
\v 3 அவர்களுடைய தகப்பன் வெள்ளியும் பொன்னும் விலைமதிப்பான அநேகம் நன்கொடைகளையும், யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் முதற்பிறந்தவனாக இருந்ததால், அவனுக்கு ஆட்சியைக் கொடுத்தான்.
\s1 யூதாவின் ராஜாவாகிய யோராம்
\p
\s5
\v 4 யோராம் தன் தகப்பனுடைய அரசாட்சிக்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர்கள் எல்லோரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்.
\v 5 யோராம் ராஜாவாகிறபோது, முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
\s5
\v 6 அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் மகள் அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
\v 7 கர்த்தர் தாவீதுக்கும் அவன் மகன்களுக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடு செய்த உடன்படிக்கையின் காரணமாக தாவீதின் வம்சத்தை அழிக்க விருப்பமில்லாமல் இருந்தார்.
\s5
\v 8 அவனுடைய நாட்களில் யூதாவின் ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் கலகம்செய்து, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
\v 9 அதனால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இரவில் எழுந்திருந்து, தன்னைச் சூழ்ந்துகொண்ட ஏதோமியர்களையும் இரதங்களின் தலைவரையும் தோற்கடித்தான்.
\v 10 ஆகிலும் யூதாவின் ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம் செய்து பிரிந்தார்கள்; அவன் தன் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டதால், அக்காலத்திலே லீப்னா பட்டணத்தாரும் கலகம்செய்தார்கள்.
\s5
\v 11 அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிமக்களை வழிவிலகச்செய்து, யூதாவையும் அதற்குத் தூண்டிவிட்டான்.
\s5
\v 12 அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு கடிதம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் சொல்வது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடக்காமல்,
\v 13 இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபுடைய குடும்பத்தின் விபசார வழிக்கு ஒப்பாக யூதாவையும் எருசலேமின் குடிமக்களையும் விபசாரம் செய்ய வைத்து, உன்னைப்பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான உன் சகோதரர்களையும் கொன்றுபோட்டதால்,
\v 14 இதோ, கர்த்தர் உன் மக்களையும், பிள்ளைகளையும், மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையினால் வாதிப்பார்.
\v 15 நீயோ உனக்கு உண்டாகும் குடல் நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் அழுகி விழும்வரை கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.
\s5
\v 16 அப்படியே கர்த்தர் பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார்.
\v 17 அவர்கள் யூதாவில் வந்து, வலுக்கட்டாயமாகப் புகுந்து, ராஜாவின் அரண்மனையில் கிடைத்த அனைத்துப் பொருட்களையும், அவனுடைய பிள்ளைகளையும், மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவனுடைய இளைய மகனைத் தவிர வேறொரு மகனையும் அவனுக்கு மீதியாக விடவில்லை.
\s5
\v 18 இவைகள் எல்லாவற்றிற்கும் பிறகு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார்.
\v 19 அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருடங்கள் முடிகிற காலத்தில் அவனுக்கு இருந்த கொடிய நோயினால் அவன் குடல்கள் சரிந்து இறந்துபோனான்; அவனுடைய பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய மக்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை.
\v 20 அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்து, ஒருவராலும் விரும்பப்படாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.
\s5
\c 22
\cl அத்தியாயம்– 22
\s1 யூதாவின் ராஜாவாகிய அகசியா
\p
\v 1 எருசலேமின் குடிமக்கள், அவனுடைய இளையமகனாகிய அகசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள்; அரபியரோடு கூடவந்து முகாமிட்ட படையிலிருந்தவர்கள், மூத்தமகன்கள் அனைவரையும் கொன்றுபோட்டார்கள்; இந்தவிதமாக அகசியா என்னும் யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் ஆட்சிசெய்தான்.
\v 2 அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருடம் எருசலேமில் ஆட்சிசெய்தான்; ஒம்ரியின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள்.
\v 3 அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாக நடக்க, அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாக இருந்தாள்.
\s5
\v 4 அவன் ஆகாபின் குடும்பத்தாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவனுடைய தகப்பன் இறந்தபிறகு, அவர்கள் அவனுடைய அழிவிற்கு ஆலோசனைக்காரர்களாக இருந்தார்கள்.
\v 5 அவர்களுடைய ஆலோசனைக்கு உடன்பட்டு, அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் என்னும் ஆகாபின் மகன்களோடு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக போர்செய்யப்போனான்; அங்கே சீரியர்கள் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
\s5
\v 6 அப்பொழுது, தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு போர்செய்யும்போது, தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான்; அப்பொழுது ஆகாபின் மகனாகிய யோராம் வியாதியாயிருந்ததால் யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கப் போனான்.
\s5
\v 7 அகசியா யோராமிடத்திற்கு வந்தது அவனுக்கு தேவனால் உண்டான கேடாக மாறினது; எப்படியென்றால், அவன் வந்தபோது யோராமுடனேகூட, கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாரை அழிக்க அபிஷேகம்செய்யப்பட்ட நிம்சியின் மகனாகிய யெகூவை நோக்கி வெளியே போனான்.
\v 8 யெகூ, ஆகாபின் குடும்பத்தாருக்கு நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்போது, அவன் அகசியாவுக்கு சேவை செய்கிற யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுடைய சகோதரர்களின் மகன்களையும் கண்டுபிடித்துக் கொன்றுபோட்டான்.
\s5
\v 9 பின்பு, அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளிந்துகொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் மகன் என்று சொல்லி, அவனை அடக்கம்செய்தார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குத் திறமையுள்ள ஒருவரும் அகசியாவின் குடும்பத்திற்கு இல்லாமற்போனது.
\s1 அத்தாலியாளும் யோவாசும்
\p
\s5
\v 10 அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் மகன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சத்தார் அனைவரையும் கொன்றுபோட்டாள்.
\v 11 ராஜாவின் மகளாகிய யோசேபியாத், கொன்று போடப்படுகிற ராஜகுமாரர்களுக்குள் இருக்கிற அகசியாவின் ஆண்பிள்ளையாகிய யோவாசை ஒருவருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு, அவனையும் அவன் வேலைக்காரியையும் படுக்கையறையில் வைத்தாள்; அப்படியே அத்தாலியாள் அவனைக் கொன்றுபோடாமலிருக்க, ராஜாவாகிய யோராமின் மகளும் ஆசாரியனாகிய யோய்தாவின் மனைவியுமாகிய யோசேபியாத் அவனை ஒளித்துவைத்தாள்; அவள் அகசியாவின் சகோதரியாக இருந்தாள்.
\v 12 இவர்களோடு அவன் ஆறுவருடங்களாகக் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ஆட்சிசெய்தாள்.
\s5
\c 23
\cl அத்தியாயம்– 23
\p
\v 1 ஏழாம் வருடத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் மகன் அசரியாவையும், யோகனானின் மகன் இஸ்மவேலையும், ஓபேதின் மகன் அசரியாவையும், ஆதாயாவின் மகன் மாசெயாவையும், சிக்ரியின் மகன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.
\v 2 அவர்கள் யூதாவிலே சுற்றித்திரிந்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியர்களையும், இஸ்ரவேலுடைய முன்னோர்களின் வம்சத்தலைவர்களையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள்.
\v 3 அந்த சபையார் எல்லோரும் தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடு உடன்படிக்கை செய்தார்கள்; யோய்தா அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் தாவீதின் மகன்களைக்குறித்து சொன்னபடியே ராஜாவின் மகன் ராஜாவாக வேண்டும்.
\s5
\v 4 நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், இந்தவாரத்தில், முறைப்படி வருகிற ஆசாரியர்களும் லேவியருமான உங்களில் மூன்றில் ஒருபங்கு நுழைவாயில்களையும்,
\v 5 மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரண்மனையையும், மூன்றில் ஒருபங்கு அஸ்திபாரவாசலையும் காக்கவும், மக்களெல்லாம் கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்.
\s5
\v 6 ஆசாரியர்களும் லேவியர்களில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; மக்களெல்லோரும் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்வார்களாக.
\v 7 லேவியர்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் கையிலே பிடித்துக்கொண்டவர்களாக, ராஜாவைச் சுற்றிலும் வரிசையாக நின்றுகொண்டிருக்கவேண்டும்; ஆலயத்திற்குள் வருகிற எவனும் கொலைசெய்யப்பட வேண்டும்; ராஜா உட்பிரவேசிக்கிறபோதும் வெளியே புறப்படுகிறபோதும் நீங்கள் அவரோடு இருங்கள் என்றான்.
\s5
\v 8 ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியர்களும் யூதா மக்கள் அனைவரும் செய்து, அவரவர் அந்த வாரத்தின் முறைப்படி வருகிறவர்களும், முறை முடிந்து போகிறவர்களுமான தம்தம் மனிதர்களைக் கூட்டிக்கொண்டு போனார்கள்; குழுக்கள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா அனுமதி கொடுக்கவில்லை.
\v 9 தாவீது ராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் சிறிய மற்றும் பெரிய கேடகங்களையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து,
\s5
\v 10 அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாக ஆலயத்தின் வலதுபக்கம்துவங்கி, ஆலயத்தின் இடதுபக்கம்வரை, பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க மக்களையெல்லாம் நிறுத்தினான்.
\v 11 பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் மகன்களும் அவனை அபிஷேகம்செய்து, ராஜா வாழ்க என்றார்கள்.
\s5
\v 12 மக்கள் ஓடிவந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள மக்களிடம் வந்து,
\v 13 இதோ, நுழைவாயிலில் உள்ள தன்னுடைய தூண் அருகில் ராஜா நிற்கிறதையும், ராஜாவின் அருகில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து மக்களெல்லோரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகர்களும் இசைத்தலைவர்களும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று சத்தமிட்டாள்.
\s5
\v 14 ஆசாரியனாகிய யோய்தா படைத்தலைவர்களாகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களை வெளியே அழைத்து, அவர்களை நோக்கி: இவளை வரிசைக்கு வெளியே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தரின் ஆலயத்திலே அவளைக் கொன்றுபோடவேண்டாம் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.
\v 15 அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரண்மனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடம்வரை போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்.
\p
\s5
\v 16 அப்பொழுது யோய்தா தாங்கள் கர்த்தருடைய மக்களாயிருக்க, தானும் அனைத்து மக்களும் ராஜாவும் உடன்படிக்கை செய்துகொள்ளும்படி செய்தான்.
\v 17 அப்பொழுது மக்களெல்லோரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும், அதின் விக்கிரகங்களையும் தகர்த்து, பாகாலின் பூசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள்.
\s5
\v 18 தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும், பாடல்களோடும் கர்த்தரின் சர்வாங்க தகனபலிகளை, மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக, யோய்தா கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் பதவிகளை தாவீது கர்த்தருடைய ஆலயத்துக்கென்று ஏற்படுத்திவைத்த லேவியரான ஆசாரியர்களின் கைகளில் ஒப்படைத்து,
\v 19 யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையாமலிருக்க, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.
\s5
\v 20 நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், மக்களை ஆளுகிறவர்களையும், தேசத்தின் அனைத்து மக்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கச்செய்து, உயர்ந்த வாசல்வழியாக ராஜ அரண்மனைக்குள் அழைத்து வந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரச்செய்தார்கள்.
\v 21 தேசத்து மக்களெல்லோரும் மகிழ்ந்தார்கள்; அத்தாலியாளைப் பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமைதலானது.
\s5
\c 24
\cl அத்தியாயம்– 24
\s1 யோவாஸ் தேவாலயத்தைப் பழுதுபார்த்தல்
\p
\v 1 யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பெயர் சிபியாள்.
\v 2 ஆசாரியனாகிய யோய்தாவின் நாட்களெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்.
\v 3 அவனுக்கு யோய்தா இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொடுத்தான்; அவர்களால் மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
\s5
\v 4 அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பம்கொண்டான்.
\v 5 அவன் ஆசாரியர்களையும் லேவியர்களையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருடந்தோரும் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான்; ஆனாலும் லேவியர்கள் தாமதம்செய்தார்கள்.
\s5
\v 6 அப்பொழுது ராஜா, யோய்தா என்னும் தலைவனை வரவழைத்து: சாட்சியின் கூடாரத்திற்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியர்களை நீர் விசாரிக்காமல் போனதென்ன?
\v 7 அந்தப் பொல்லாத பெண்ணாகிய அத்தாலியாளுடைய மக்கள், தேவனுடைய ஆலயத்தை வலுக்கட்டாயமாகத் திறந்து, கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை செய்யப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காக செலவு செய்துவிட்டார்களே என்றான்.
\s5
\v 8 அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலய வாசலுக்கு வெளியே வைத்து,
\v 9 கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்திரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் அறிவிப்புக் கொடுத்தார்கள்.
\v 10 அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா மக்களும் சந்தோஷமாகக் கொண்டுவந்து பெட்டி நிறைய அதிலே போட்டார்கள்.
\s5
\v 11 அதிக பணம் உண்டென்று கண்டு, லேவியர்கள் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர்கள் அருகில் கொண்டுவரப்படும்போது, ராஜாவின் அதிகாரியும் பிரதான ஆசாரியனுடைய உதவியாளனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் இடத்திலே வைப்பார்கள்; இப்படி ஒவ்வொரு நாளும் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.
\v 12 அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையைச் செய்யும் ஊழியக்காரர்கள் கையிலே கொடுத்தார்கள்; அதனால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி சிற்பிகளையும், தச்சரையும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொல்லர்களையும் கம்மாளர்களையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.
\s5
\v 13 அப்படி வேலையை செய்கிறவர்கள் தங்கள் கைகளினாலே வேலையைச் செய்து, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின நிலைமைக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்.
\v 14 அதை முடித்தபின்பு, மீதமிருந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அந்தப் பணத்தைக் கொண்டு கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் செய்தான்; யோய்தாவின் நாட்களெல்லாம் அனுதினமும் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள்.
\s5
\v 15 யோய்தா நீண்டஆயுள் உள்ளவனாக முதிர்வயதில் இறந்தான்; அவன் இறக்கும்போது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.
\v 16 அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மை செய்ததால், அவனை தாவீதின் நகரத்தில் ராஜாக்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்.
\s1 யோவாசின் துன்மார்க்கம்
\p
\s5
\v 17 யோய்தா இறந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்கள் சொல்வதைக் கவனித்தான்
\v 18 அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் வணங்கினார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினால் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.
\v 19 அவர்களைத் தம்மிடத்திற்குத் திரும்பச்செய்ய கர்த்தர் அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவர்கள் மக்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டார்கள்; ஆனாலும் மக்கள் அவர்களை அசட்டைசெய்தார்கள்.
\s5
\v 20 அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் மகனான சகரியாவின்மேல் இறங்கினதால், அவன் மக்களுக்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதனால் நீங்கள் செழிப்படையமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.
\v 21 அதனால் அவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுசெய்து, கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கட்டளையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
\v 22 அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா, தனக்கு செய்த தயவை ராஜாவாகிய யோவாஸ் நினைக்காமல் அவனுடைய மகனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.
\s5
\v 23 அடுத்த வருடத்திலே சீரியாவின் படைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, மக்களின் பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள்.
\v 24 சீரியாவின் படை சிறுகூட்டமாக வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டதால், கர்த்தர் மகா பெரிய படையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள்.
\s5
\v 25 அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர்கள் ஆசாரியனாகிய யோய்தாவுடைய மகன்களின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுசெய்து, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.
\v 26 அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்தவர்கள், அம்மோனிய பெண்ணான சீமாத்தின் மகனாகிய சாபாத்தும், மோவாபிய பெண்ணான சிம்ரீத்தின் மகனாகிய யோசபாத்துமே.
\s5
\v 27 அவன் மகன்களைக்குறித்தும், அவன்மேல் சுமந்த பெரிய பாரத்தைக்குறித்தும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைக்குறித்தும், ராஜாக்களின் புத்தகமான சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது; அவன் மகனாகிய அமத்சியா அவனுடைய இடத்திலே ராஜாவானான்.
\s5
\c 25
\cl அத்தியாயம்– 25
\s1 யூதாவின் ராஜாவாகிய அமத்சியா
\p
\v 1 அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின் பெயர் யோவதானாள்.
\v 2 அவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடு அப்படி செய்யவில்லை.
\s5
\v 3 ஆட்சி அவனுக்கு நிலைப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய வேலைக்காரர்களைக் கொன்றுபோட்டான்.
\v 4 ஆனாலும் பிள்ளைகளினாலே தகப்பன்களும், தகப்பன்களினாலே பிள்ளைகளும் கொலைசெய்யப்படாமல், அவனவன் செய்த பாவத்தினாலே அவனவன் கொலைசெய்யப்படவேண்டுமென்று மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் கர்த்தர் கட்டளையிட்டபிரகாரம் எழுதியிருக்கிறபடி, அவர்களுடைய பிள்ளைகளை அவன் கொலைசெய்யாதிருந்தான்.
\s5
\v 5 அமத்சியா யூதா மனிதரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா, பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும், நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபதுவயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை எண்ணிப்பார்த்து, போருக்குப் புறப்படவும், ஈட்டியையும் கேடகத்தையும் பிடிக்கத்தகுதியான போர்வீரர்கள் மூன்றுலட்சம்பேர்கள் என்று கண்டான்.
\v 6 இஸ்ரவேலிலும் ஒருலட்சம் பராக்கிரமசாலிகளை நூறு தாலந்து வெள்ளி கொடுத்து கூலிக்கு அமர்த்தினான்.
\s5
\v 7 தேவனுடைய மனிதன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் படை உம்முடனே வரக்கூடாது; கர்த்தர் எப்பிராயீமின் எல்லா மகன்களாகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.
\v 8 போக விரும்பினால் நீர் போகலாம், காரியத்தை நடத்தும்; போருக்குத் தைரியமாக நில்லும்; தேவன் உம்மை எதிரிக்கு முன்பாக விழச்செய்வார்; உதவி செய்யவும் விழச்செய்யவும் தேவனாலே முடியும் என்றான்.
\s5
\v 9 அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் படைக்குக் கொடுத்த நூறு தாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனிதனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனிதன்: அதைப்பார்க்கிலும் அதிகமாகக் கர்த்தர் உமக்குக் கொடுக்கமுடியும் என்றான்.
\v 10 அப்பொழுது அமத்சியா எப்பீராயீமரில் தன்னிடத்திற்கு வந்த படையைத் தங்கள் வீட்டிற்குப் போய்விடப் பிரித்துவிட்டான்; அதனால் அவர்களுக்கு யூதாவின்மேல் மிகுந்த கோபம் உண்டாகி, கடுமையான எரிச்சலோடு தங்களிடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
\s5
\v 11 அமத்சியாவோ தைரியமாக, தன் மக்களைக் கூட்டி, உப்புப் பள்ளத்தாக்குக்குப் போய், சேயீர் புத்திரரில் பத்தாயிரம்பேரை வெட்டினான்.
\v 12 யூதா மக்கள், பத்தாயிரம்பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையின் உச்சியிலே கொண்டுபோய், அவர்களெல்லோரும் நொறுங்கிப்போகத்தக்கதாக அந்தக் கன்மலையின் உச்சியிலிருந்து கீழேத் தள்ளிவிட்டார்கள்.
\s5
\v 13 தன்னோடுகூட போருக்கு வராமலிருக்க, அமத்சியா திருப்பிவிட்ட போர் வீரர்கள், சமாரியாமுதல் பெத்தொரோன்வரை உள்ள யூதா பட்டணங்களைத் தாக்கி, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாகக் கொள்ளையிட்டார்கள்.
\p
\s5
\v 14 அமத்சியா ஏதோமியர்களை முறியடித்து, சேயீர் மக்களின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு. அவன் அவைகளைத் தனக்கு தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்கு தூபம் காட்டினான்.
\v 15 அப்பொழுது, கர்த்தர் அமத்சியாவின்மேல் கோபப்பட்டு, அவனிடத்திற்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் மக்களை உமது கைக்குத் தப்புவிக்காமற்போன மக்களின் தெய்வங்களை நீர் ஏன் நம்பவேண்டும் என்றான்.
\s5
\v 16 தன்னோடு அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதை விட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேட்காமற்போனதால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.
\p
\s5
\v 17 பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைசெய்து, யெகூவின் மகனாக இருந்த யோவாகாசின் மகனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய திறமையைப் பார்ப்போம் வா என்று சொல்லியனுப்பினான்.
\s5
\v 18 அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி: நீ உன் மகளை என் மகனுக்குத் திருமணம் செய்து கொடு என்று கேட்கச்சொன்னது; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழியே போகும்போது ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
\v 19 நீ ஏதோமியர்களை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளச் செய்தது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடு யூதாவும் விழுவதற்காக, பொல்லாப்பை ஏன் தேடிக்கொள்ளவேண்டும் என்று சொல்லச் சொன்னான்.
\s5
\v 20 ஆனாலும் அமத்சியா கேட்காமற்போனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதால் அவர்களை அவர்களுடைய சத்துருக்களின் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக தேவனாலே இப்படி நடந்தது.
\v 21 அப்படியே இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலிருக்கிற பெத்ஷிமேசிலே அவனும், அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள்.
\v 22 யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக தோல்வியடைந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
\s5
\v 23 இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ், அகசியாவின் மகனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்ஷிமேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்து, எருசலேமின் மதிலில் எப்பிராயீம் வாசல்துவங்கி மூலைவாசல்வரை நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு,
\v 24 தேவனுடைய ஆலயத்தில் ஓபேத் ஏதோமிடம் கிடைத்த சகல பொன்னையும், வெள்ளியையும், பணிமுட்டுகளையும், ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷங்களையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.
\p
\s5
\v 25 யோவாகாசின் மகனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் மகனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்தான்.
\v 26 அமத்சியாவின் ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள செயல்பாடுகளான மற்ற காரியங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது.
\s5
\v 27 அமத்சியா கர்த்தரைவிட்டுப் பின்வாங்கின காலமுதற்கொண்டு எருசலேமிலிருந்தவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்துகொண்டார்கள்; அதனால் அவன் லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவன் பின்னே லாகீசுக்கு மனிதர்களை அனுப்பினார்கள்; அவர்கள் அங்கே அவனைக் கொன்றுபோட்டு,
\v 28 குதிரைகள்மேல் அவனை எடுத்து வந்து, யூதாவின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்.
\s5
\c 26
\cl அத்தியாயம்– 26
\s1 யூதாவின் ராஜாவாகிய உசியா
\p
\v 1 அப்பொழுது யூதா மக்கள் எல்லோரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் இடத்திலே ராஜாவாக்கினார்கள்.
\v 2 ராஜா இறந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவுடன் இணைத்துக்கொண்டான்.
\v 3 உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; எருசலேம் நகரத்தாளான அவனுடைய தாயின் பெயர் எக்கோலியாள்.
\s5
\v 4 அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்து,
\v 5 தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதுள்ளவனாக இருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவனுடைய காரியங்களை வாய்க்கச் செய்தார்.
\s5
\v 6 அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு போர்செய்து, காத்தின் மதிலையும், யப்னேயின் மதிலையும், அஸ்தோத்தின் மதிலையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.
\v 7 பெலிஸ்தர்களையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியர்களையும் மெகுனியர்களையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணை நின்றார்.
\v 8 அம்மோனியர்கள் உசியாவுக்கு வரிகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய புகழ் எகிப்தின் எல்லைவரை எட்டியது; அவன் மிகவும் பெலங்கொண்டான்.
\s5
\v 9 உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், மதில்களின் மூலைகளின்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான்.
\v 10 அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும், வயல்வெளியிலேயும், விவசாயிகளும், திராட்சத்தோட்டக்காரர்களும் உண்டாயிருந்ததால், அவன் வனாந்திரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக கிணறுகளை வெட்டினான்; அவன் வேளாண்மைப் பிரியனாயிருந்தான்.
\s5
\v 11 உசியாவுக்கு போர்வீரர்களின் படையும் இருந்தது; அது செயலாளனாகிய ஏயெலினாலும் அதிகாரியாகிய மாசேயாவினாலும் எண்ணிக்கைபார்க்கப்பட்டபடியே, ராஜாவின் பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் அணி அணியாகப் போர்செய்யப் புறப்பட்டது.
\v 12 பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
\v 13 இவர்களுடைய கையின்கீழ் எதிரிகளுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணை நிற்க, மிகத் திறமையோடு போர்செய்கிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான படை இருந்தது.
\s5
\v 14 இந்தப் படையில் உள்ளவர்களுக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைக்கவசங்களையும், மார்புக்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.
\v 15 கோபுரங்கள்மேலும் மதிலின் முனையிலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பயன்படுத்துவதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த இயந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவனுடைய புகழ் வெகுதூரம் பரவியது; அவன் பலப்படும்வரை ஆச்சரியமான விதத்தில் அவனுக்கு அநுகூலமுண்டானது.
\p
\s5
\v 16 அவன் பலப்பட்டபோது, தனக்கு அழிவு ஏற்படும் வரை, அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபம் காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
\v 17 ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடுகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பின்னே உட்பிரவேசித்து,
\v 18 ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்குரியதல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களுக்கே உரியது; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக இருக்காது என்றார்கள்.
\s5
\v 19 அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடு கோபமாகப் பேசுகிறபோது, ஆசாரிருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே தொழுநோய் தோன்றியது.
\v 20 பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் அனைத்து ஆசாரியர்களும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே தொழுநோய் பிடித்தவனென்று கண்டு, அவனை விரைவாக அங்கேயிருந்து வெளியேறச் செய்தார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததால் அவன் தானும் வெளியே போக அவசரப்பட்டான்.
\s5
\v 21 ராஜாவாகிய உசியா தன் மரணநாள்வரை தொழுநோயாளியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்திற்குப் விலக்கி வைக்கப்பட்டு இருந்ததால், ஒரு தனித்த வீட்டிலே தொழுநோயாளியாக குடியிருந்தான்; அவன் மகனாகிய யோதாம், ராஜாவின் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.
\s5
\v 22 உசியாவின் ஆரம்பம் முதல் கடைசி வரையுள்ள செயல்பாடுகளான மற்ற காரியங்களை ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதினான்.
\v 23 உசியா இறந்த பின்பு, மக்கள் அவனைத் தொழுநோயாளியென்று சொல்லி, அவனை அவன் முன்னோர்களுக்கு அருகில், ராஜாக்களை அடக்கம்செய்கிற இடத்திற்கு அருகிலுள்ள நிலத்திலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோதாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\c 27
\cl அத்தியாயம்– 27
\s1 யூதாவின் ராஜாவாகிய யோதாம்
\p
\v 1 யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமிலே ஆட்சிசெய்தான்; சாதோக்கின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் எருசாள்.
\v 2 அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போல கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; மக்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
\s5
\v 3 அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டிடங்களையும் கட்டினான்.
\v 4 யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.
\s5
\v 5 அவன் அம்மோனியருடைய ராஜாவோடு போர்செய்து அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோனியர்கள் அவனுக்கு அந்த வருடத்திலே நூறு தாலந்து வெள்ளியையும், பத்தாயிரம் கலம் கோதுமையையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருடத்திலும் அம்மோனியர்கள் அப்படியே அவனுக்கு செலுத்தினார்கள்.
\s5
\v 6 யோதாம் தன்னுடைய வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக ஒழுங்குபடுத்தியதால் பலப்பட்டான்.
\v 7 யோதாமின் மற்ற காரியங்களும், அவனுடைய அனைத்து போர்களும், அவனுடைய செயல்களும், இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\s5
\v 8 அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
\v 9 யோதாம் இறந்தபின்பு, அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய ஆகாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\c 28
\cl அத்தியாயம்– 28
\s1 யூதாவின் ராஜாவாகிய ஆகாஸ்
\p
\v 1 ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்யாமல்,
\v 2 இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்க்கப்பட்ட சிலைகளைச் செய்தான்.
\s5
\v 3 அவன் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலே தூபங்காட்டி, கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே தன் மகன்களை அக்கினியிலே எரித்துப்போட்டு,
\v 4 மேடைகளிலும், மலைகளிலும், பச்சையான அனைத்து மரங்களின் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான்.
\s5
\v 5 ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனைத் தோற்கடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்து தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை மிகுதியாக தோற்கடித்தான்.
\v 6 எப்படியெனில், யூதா மனிதர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டதால், ரெமலியாவின் மகனாகிய பெக்கா அவர்களில் ஒரே நாளில் ஒருலட்சத்து இருபதாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அவர்கள் எல்லோரும் மிகுந்த ஆற்றல் உள்ளவர்கள்.
\s5
\v 7 அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் மகனாகிய மாசேயாவையும், அரண்மனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாம் நிலையிலிருந்த எல்க்கானாவையும் கொன்றுபோட்டான்.
\v 8 இஸ்ரவேல் மக்கள் தங்கள் சகோதரர்களில் இரண்டு லட்சம்பேராகிய பெண்களையும் மகன்களையும் மகள்களையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்குக் கொண்டுபோனார்கள்.
\p
\s5
\v 9 அங்கே ஓதேத் என்னும் பெயருடைய கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற படைக்கு எதிராகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபம்கொண்டதால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானம்வரை எட்டுகிற கடுங்கோபத்தோடு அவர்களை அழித்தீர்கள்.
\v 10 இப்போதும் யூதாவின்மக்களையும் எருசலேமியர்களையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரர்களாகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ?
\v 11 ஆதலால் நீங்கள் எனக்கு செவிகொடுத்து, நீங்கள் உங்கள் சகோதரர்களிடத்தில் சிறைபிடித்துக் கொண்டுவந்தவர்களைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்; கர்த்தருடைய கடுங்கோபம் உங்கள்மேல் இருக்கிறது என்றான்.
\s5
\v 12 அப்பொழுது எப்பிராயீம் வம்சத்தினரின் தலைவர்களில் சிலராகிய யோகனானின் மகன் அசரியாவும், மெஷிலெமோத்தின் மகன் பெரகியாவும், சல்லூமின் மகன் எகிஸ்கியாவும், அத்லாயின் மகன் அமாசாவும் போரிலிருந்து வந்தவர்களுக்கு விரோதமாக எழும்பி,
\v 13 அவர்களை நோக்கி: நீங்கள் சிறைபிடித்த இவர்களை இங்கே உள்ளே கொண்டுவரவேண்டாம்; நம்மேல் திரளான குற்றமும், இஸ்ரவேலின்மேல் கடுங்கோபமும் இருக்கும்போது, நீங்கள், கர்த்தருக்கு முன்பாக நம்மேல் குற்றம் சுமரச்செய்யத்தக்கதாக, நம்முடைய பாவங்களையும் நம்முடைய குற்றங்களையும் அதிகமாக்க நினைக்கிறீர்கள் என்றார்கள்.
\s5
\v 14 அப்பொழுது ஆயுதம் அணிந்தவர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடைமைகளையும், பிரபுக்களுக்கு முன்பாகவும் அனைத்து சபைக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள்.
\v 15 அப்பொழுது பெயர் குறிக்கப்பட்ட மனிதர்கள் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் ஆடையில்லாத அனைவருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட ஆடைகளைக் கொடுத்து, ஆடைகளையும் காலணிகளையும் அணிவித்து, அவர்களுக்கு சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுடைய காயங்களுக்கு எண்ணெய் பூசி, அவர்களில் பெலவீனமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சை மரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரர்களிடத்திற்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.
\p
\s5
\v 16 அக்காலத்திலே ஆகாஸ் என்னும் ராஜா, அசீரியாவின் ராஜாக்கள் தனக்கு ஒத்தாசைசெய்ய அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பினான்.
\v 17 ஏதோமியரும் கூடவந்து, யூதாவைத் தாக்கி, சிலரை சிறைபிடித்துப்போயிருந்தார்கள்.
\v 18 பெலிஸ்தரும் யூதாவிலே சமபூமியிலும் தெற்கேயும் இருக்கிற பட்டணங்களைத் தாக்கி, பெத்ஷிமேசையும், ஆயலோனையும், கெதெரோத்தையும், சொக்கோவையும் அதின் கிராமங்களையும், திம்னாவையும் அதின் கிராமங்களையும், கிம்சோவையும் அதின் கிராமங்களையும் பிடித்து அங்கே குடியேறினார்கள்.
\s5
\v 19 யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார்; அவன் யூதாவை சீர்குலைத்து, கர்த்தருக்கு விரோதமாக மிகவும் துரோகம் செய்தான்.
\v 20 அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை.
\v 21 ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒருபங்கும், ராஜ அரண்மனையில் ஒருபங்கும், பிரபுக்களின் கையில் ஒருபங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தபோதும், அவனுக்கு உதவி கிடைக்கவில்லை.
\s5
\v 22 தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாக அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்செய்துகொண்டே இருந்தான்.
\v 23 எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணை செய்கிறதால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்கு பலியிடுவேன் என்று சொல்லி, தன்னைத் தோற்கடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் அழிவதற்கு காரணமானது.
\s5
\v 24 ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தின் தட்டுமுட்டுகளைச் சேர்த்து, அவைகளைத் துண்டுதுண்டாக்கி, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டு, எருசலேமில் மூலைக்குமூலை பலிபீடங்களை உண்டாக்கி,
\v 25 அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டுவதற்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டாக்கி; தன் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான்.
\s5
\v 26 அவனுடைய மற்ற காரியங்களும், அவனுடைய ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள அனைத்து செயல்பாடுகளும் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 27 ஆகாஸ் இறந்தபின்பு, அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை அடக்கம் செய்யவில்லை; அவன் மகனாகிய எசேக்கியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\c 29
\cl அத்தியாயம்– 29
\s1 எசேக்கியா தேவாலயத்தைத் தூய்மைப்படுத்துதல்
\p
\v 1 எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; சகரியாவின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அபியாள்.
\v 2 அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்.
\s5
\v 3 அவன் தன் அரசாட்சியின் முதலாம் வருடம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,
\v 4 ஆசாரியர்களையும் லேவியர்களையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,
\v 5 அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்: நீங்கள் இப்போது உங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு, உங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம்செய்து, அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.
\s5
\v 6 நம்முடைய முன்னோர்கள் துரோகம்செய்து, நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவரைவிட்டு விலகி, தங்கள் முகங்களைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தைவிட்டுத் திருப்பி, அதற்கு முதுகைக் காட்டினார்கள்.
\v 7 அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்கு சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள்.
\s5
\v 8 ஆகையால் கர்த்தருடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் பார்க்கிறபடி, துயரத்திற்கும், திகைப்பிற்கும், கேலிக்கும் ஒப்புக்கொடுத்தார்.
\v 9 இதன்காரணமாக நம்முடைய முன்னோர்கள் பட்டயத்தால் விழுந்து, நம்முடைய மகன்களும், மகள்களும், மனைவிகளும் சிறையிருப்பில் பிடிபட்டார்கள்.
\s5
\v 10 இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய கடுங்கோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடு உடன்படிக்கைசெய்ய என் மனதிலே தீர்மானித்துக்கொண்டேன்.
\v 11 என் மகன்களே, இப்பொழுது அசதியாக இருக்கவேண்டாம்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியம்செய்கிறவர்களும் தூபம்காட்டுகிறவர்களுமாக இருக்கவும் உங்களை அவர் தெரிந்து கொண்டார் என்றான்.
\p
\s5
\v 12 அப்பொழுது கோகாத் வம்சத்தாரில் அமாசாயின் மகன் மாகாத்தும், அசரியாவின் மகன் யோவேலும், மெராரியின் வம்சத்தாரில் அப்தியின் மகன் கீசும், எகலேலின் மகன் அசரியாவும், கெர்சோனியரில் சிம்மாவின் மகன் யோவாகும், யோவாகின் மகன் ஏதேனும்,
\v 13 எலிச்சாப்பான் வம்சத்தாரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் வம்சத்தாரில் சகரியாவும், மத்தனியாவும்,
\v 14 ஏமானின் வம்சத்தாரில் எகியேலும், சிமேயியும், எதுத்தூனின் வம்சத்தாரில் செமாயாவும், ஊசியேலும் என்னும் லேவியர்கள் எழும்பி,
\s5
\v 15 தங்கள் சகோதரர்களைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம்செய்துகொண்டு, கர்த்தருடைய வசனங்களுக்கு ஏற்ற ராஜாவினுடைய கற்பனையின்படியே கர்த்தருடைய ஆலயத்தை சுத்திகரிக்க வந்தார்கள்.
\v 16 ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தை சுத்திகரிப்பதற்காக உள்ளே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட அனைத்து அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டு வந்தார்கள்; அப்பொழுது லேவியர்கள் அதை எடுத்து வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டு போனார்கள்.
\v 17 முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம் செய்யத்தொடங்கி, எட்டாம் தேதியிலே கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்செய்து, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள்.
\s5
\v 18 அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவிடம் போய்: நாங்கள் கர்த்தரின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதனுடைய அனைத்து தட்டுமுட்டுகளையும், சமுகத்து அப்பங்களின் மேஜையையும், அதின் அனைத்து தட்டுமுட்டுகளையும் தூய்மைப்படுத்தி,
\v 19 ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதகத்தால் எறிந்துபோட்ட அனைத்து தட்டுமுட்டுகளையும் ஒழுங்குபடுத்திப் பரிசுத்தம்செய்தோம்; இதோ, அவைகள் கர்த்தரின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள்.
\p
\s5
\v 20 அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலையிலேயே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.
\v 21 அப்பொழுது அரசாட்சிக்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் மகன்களுக்குச் சொன்னான்.
\s5
\v 22 அப்படியே ஆசாரியர்கள் காளைகளை அடித்து, அந்த இரத்தத்தைப் பிடித்து பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்கடாக்களை அடித்து, அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்குட்டிகளையும் அடித்து, அவைகளின் இரத்தத்தையும் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்.
\v 23 பிறகு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.
\v 24 இஸ்ரவேல் அனைத்திற்காகவும், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் செலுத்துங்கள் என்று ராஜா சொல்லியிருந்தான்; ஆதலால் ஆசாரியர்கள் அவைகளை அடித்து, இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவநிவிர்த்தி உண்டாக்க, அவைகளின் இரத்தத்தால் பலிபீடத்தின்மேல் பரிகாரம் செய்தார்கள்.
\s5
\v 25 அவன், தாவீதும், ராஜாவின் தரிசனம் காண்கிறவனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படி செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உண்டாயிருந்தது.
\v 26 அப்படியே லேவியர்கள் தாவீதின் கீதவாத்தியங்களையும், ஆசாரியர்கள் பூரிகைகளையும் பிடித்து நின்றார்கள்.
\s5
\v 27 அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அதை செலுத்த ஆரம்பித்த நேரத்தில் கர்த்தரைத் துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத்தொடங்கினது.
\v 28 பாடலைப் பாடி, பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கும்போது, சர்வாங்க தகனபலியைச் செலுத்தி முடியும்வரை சபையார் எல்லோரும் பணிந்துகொண்டிருந்தார்கள்.
\s5
\v 29 பலியிட்டு முடிந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
\v 30 பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியர்களை நோக்கி: நீங்கள் தாவீதும் தரிசனம் காண்கிறவனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளால் கர்த்தரைத் துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடு துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
\s5
\v 31 அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்செய்தீர்கள்; ஆகையால் அருகில்வந்து, கர்த்தருடைய ஆலயத்திற்கு தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவாருங்கள் என்றான்; அப்பொழுது சபையாரில் விருப்பமுள்ளவர்கள் சர்வாங்க தகனபலிகளையும் மற்றவர்கள் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவந்தார்கள்.
\s5
\v 32 சபையார் கொண்டுவந்த சர்வாங்க தகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்கடாக்களும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே; இவைகளெல்லாம் கர்த்தருக்கு சர்வாங்க தகனமாயின.
\v 33 அறுநூறு காளைகளும் மூவாயிரம் ஆடுகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
\s5
\v 34 ஆனாலும் ஆசாரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அவர்களால் அந்த சர்வாங்க தகனமான ஜீவன்களையெல்லாம் அடித்துத் தோலுரிக்க முடியாமலிருந்தது; அதனால் அந்த வேலை முடியும்வரைக்கும், மற்ற ஆசாரியர்கள் தங்களைப் பரிசுத்தம்செய்யும்வரைக்கும், அவர்களுடைய சகோதரர்களாகிய லேவியர்கள் அவர்களுக்கு உதவிசெய்தார்கள்; தங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ள லேவியர்கள் ஆசாரியர்களைவிட மன உற்சாகமுள்ளவர்களாக இருந்தார்கள்.
\s5
\v 35 சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்கதகனங்களுக்கடுத்த பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இந்தவிதமாக கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம் செய்யப்பட்டது.
\v 36 தேவன் மக்களை ஆயத்தப்படுத்தியதைக்குறித்து எசேக்கியாவும் மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்; இந்தக் காரியத்தை செய்வதற்கான யோசனை உடனடியாக உண்டானது.
\s5
\c 30
\cl அத்தியாயம்– 30
\s1 எசேக்கியா பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுதல்
\p
\v 1 அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு பஸ்காவைக் கொண்டாட, எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல், யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதுமட்டுமல்லாமல், எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் கடிதங்களை எழுதியனுப்பினான்.
\v 2 பஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாட, ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் எருசலேமிலுள்ள சபையார் அனைவரும் யோசனை செய்திருந்தார்கள்.
\v 3 ஆசாரியர்கள் போதுமான எண்ணிக்கையில் தங்களைப் பரிசுத்தம்செய்யாமலும், மக்கள் எருசலேமில் இன்னும் கூடிவராமலும் இருந்ததால், அதன் காலத்தில் அதைக் கொண்டாட முடியாமற்போனது.
\s5
\v 4 இந்தக் காரியம் ராஜாவின் பார்வைக்கும் அனைத்து சபையாரின் பார்வைக்கும் நியாயமாகக் காணப்பட்டது.
\v 5 எழுதியிருக்கிறபடி நீண்டகாலமாக அவர்கள் அதைக் கொண்டாடவில்லை; ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு பஸ்காவைக் கொண்டாட எருசலேமுக்கு வாருங்கள் என்று பெயெர்செபாமுதல் தாண் வரையுள்ள இஸ்ரவேல் தேசமெங்கும் அறிவிப்புக் கொடுக்கத் தீர்மானம் செய்தார்கள்.
\s5
\v 6 அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த கடிதங்களை அஞ்சல்காரர்கள் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும் போய்: இஸ்ரவேல் மக்களே, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களிடத்திற்கு அவர் திரும்புவார்.
\s5
\v 7 தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு துரோகம்செய்த உங்கள் பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரர்களைப்போலவும் இருக்காதீர்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் அழிந்துபோகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே.
\v 8 இப்போதும் உங்கள் முன்னோர்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்திற்கும் பரிசுத்தம்செய்த அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; அப்பொழுது அவருடைய கடுங்கோபம் உங்களை விட்டுத் திரும்பும்.
\v 9 நீங்கள் கர்த்தரிடத்திற்குத் திரும்பினால், உங்கள் சகோதரர்களும் உங்கள் பிள்ளைகளும் தங்களை சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுவதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புவதற்கும் அது உதவியாயிருக்கும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமும் உள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.
\s5
\v 10 அப்படி அந்த அஞ்சல்காரர்கள் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன்வரைக்கும் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரியாசம் செய்தார்கள்.
\v 11 ஆகிலும், ஆசேரிலும், மனாசேயிலும், செபுலோனிலும், சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள்.
\v 12 யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும், கட்டளையிட்ட முறையின்படி செய்வதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்தினது.
\s5
\v 13 அப்படியே இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடத் திரளான மக்கள் எருசலேமில் மகாபெரிய சபையாகக் கூடினார்கள்.
\v 14 அவர்கள் எழும்பி, எருசலேமில் இருந்த பலிபீடங்களையும், தூபபீடங்களையும் அகற்றி கீதரோன் ஆற்றிலே போட்டார்கள்.
\v 15 பின்பு இந்த இரண்டாம் மாதம் பதினான்காம் தேதியில் பஸ்காவின் ஆட்டுக் குட்டிகளை அடித்தார்கள்; ஆசாரியர்களும் லேவியர்களும் வெட்கப்பட்டு, தங்களை சுத்தம்செய்து, சர்வாங்க தகனபலிகளைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்து,
\s5
\v 16 தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற தங்கள் முறைமையின்படியே தங்களுக்கு நியமித்த இடத்திலே நின்றார்கள்; ஆசாரியர்கள் லேவியர்களின் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள்.
\v 17 சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளாமல் இருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லாத எல்லோரையும் கர்த்தருக்குப் பரிசுத்தம்செய்ய, லேவியர்கள் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள்.
\s5
\v 18 அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனிதர்களில் அநேகம் மக்கள் தங்களைச் சுத்தம் செய்துகொள்ளாமல் இருந்தும், எழுதப்பட்டிராத முறையில் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.
\v 19 எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்செய்து, தங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேட, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தம் அடையாமலிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லோருக்கும் மன்னிப்பாராக என்றான்.
\v 20 கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக்கேட்டு, மக்களுக்கு உதவி செய்தார்.
\s5
\v 21 அப்படியே எருசலேமிலே காணப்பட்ட இஸ்ரவேல் மக்கள் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாட்களும் மகா ஆனந்தத்தோடு கொண்டாடினார்கள்; லேவியர்களும் ஆசாரியர்களும் அனுதினமும் கர்த்தருக்கென்று பேரோசையாகத் தொனிக்கும் கீதவாத்தியங்களால் கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.
\v 22 கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள அனைத்து லேவியரோடும் எசேக்கியா ஆதரவாகப் பேசினான்; இப்படி அவர்கள் பண்டிகையின் ஏழு நாட்களும் சாப்பிட்டு, ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, தங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.
\s5
\v 23 பின்பு வேறு ஏழுநாட்கள் கொண்டாட சபையார் எல்லோரும் யோசனைசெய்து, அந்த ஏழுநாட்களும் ஆனந்தத்தோடு கொண்டாடினார்கள்.
\v 24 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சபைக்கு ஆயிரம் காளைகளையும், ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்தான்; பிரபுக்களும் சபைக்கு ஆயிரம் காளைகளையும், பத்தாயிரம் ஆடுகளையும் கொடுத்தார்கள்; ஆசாரியர்களில் அநேகம்பேர் தங்களைச் சுத்தம்செய்தார்கள்.
\s5
\v 25 யூதாவின் சபையாரும், ஆசாரியர்களும், லேவியர்களும், இஸ்ரவேலிலிருந்து வந்த சபையாரும், இஸ்ரவேல் தேசத்திலிருந்து வந்த அந்நியரும், யூதாவில் குடியிருந்தவர்களும் மகிழ்ச்சியாயிருந்தார்கள்.
\v 26 அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் மகனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள் முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.
\v 27 லேவியரான ஆசாரியர்கள் எழுந்து நின்று, மக்களை ஆசீர்வதித்தார்கள்; அவர்களுடைய சத்தம் கேட்கப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது.
\s5
\c 31
\cl அத்தியாயம்– 31
\p
\v 1 இவைகளெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர்கள் எல்லோரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலும் இருந்த சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் இடித்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் சொந்த இருப்பிடத்திற்குத் திரும்பினார்கள்.
\s1 ஆராதனைக்காக கொடுக்கப்பட்ட பங்களிப்புகள்
\p
\s5
\v 2 எசேக்கியா, ஆசாரியர்கள் லேவியருடைய குழுக்களை அவர்கள் வரிசைகளின்முறையேயும், ஒவ்வொருவரையும் அவர்கள் ஊழியத்தின்முறையேயும் ஒழுங்குபடுத்தி, ஆசாரியர்களையும் லேவியர்களையும், சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும், கர்த்தருடைய ஆலயத்தின் வாசல்களில் ஊழியம்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குபடுத்தினான்.
\v 3 ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறமுறையில் காலைமாலைகளில் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் சொத்துக்களிலிருந்து எடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான்.
\s5
\v 4 ஆசாரியர்களும் லேவியர்களும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாகக் கைக்கொள்ள, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க மக்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.
\v 5 இந்த வார்த்தை பிரபலமானபோது, இஸ்ரவேல் மக்கள் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரவிலும் முதற்பலன்களைத் திரளாகக் கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாகக் கொடுத்தார்கள்.
\s5
\v 6 யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தம் செய்யப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள்.
\v 7 மூன்றாம் மாதத்தில் குவியல் செய்யத்துவங்கி ஏழாம் மாதத்தில் முடித்தார்கள்.
\v 8 எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைப் பார்க்கும்போது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, அவருடைய மக்களாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள்.
\s5
\v 9 அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா, ஆசாரியர்களையும் லேவியர்களையும் விசாரித்தபோது,
\v 10 சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தோம்; இன்னும் மீதம் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய மக்களை ஆசீர்வதித்ததால் இந்தத் திரளான தானியக் குவியல் மீந்திருக்கிறது என்றான்.
\v 11 அப்பொழுது எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் சேமிப்புக் கிடங்குகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான்.
\v 12 அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்செய்யப்பட்டவைகளையும் உண்மையாக எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான்.
\v 13 ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் செய்த கட்டளையின்படியே, யெகியேலும், அசசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்.
\s5
\v 14 கிழக்குவாசலைக் காக்கிற இம்னாவின் மகனாகிய கோரே என்னும் லேவியன், கர்த்தருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் மகா பரிசுத்தமானவைகளையும் பங்கிட, தேவனுக்கு செலுத்தும் உற்சாகக் காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தான்.
\v 15 அவனுடைய கைக்கு உதவியாக ஆசாரியர்களின் பட்டணங்களில் குழுக்களின் முறையிலிருக்கிற தங்கள் சகோதரர்களிலே பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரிசமமாகக் கொடுப்பதற்கு, உண்மையுள்ளவர்களாக எண்ணப்பட்ட ஏதேனும், மின்யமீனும், யெசுவாவும், செமாயாவும், அமரியாவும், செக்கனியாவும் ஏற்படுத்தப்பட்டார்கள்.
\s5
\v 16 வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத்தவிர, கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் குழுக்களின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாக அநுதின சம்பளம் கொடுக்கப்பட்டது.
\s5
\v 17 தங்கள் முன்னோர்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் குழுக்களின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும்,
\v 18 அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாக விசாரித்தார்கள்.
\v 19 ஆசாரியர்களில் அனைத்து ஆண்பிள்ளைகளுக்கும் லேவியர்களுக்குள்ளே அட்டவணையில் எழுதப்பட்டவர்கள் எல்லோருக்கும் சம்பளம் கொடுக்க, ஆசாரியர்களுடைய ஒவ்வொரு பட்டணத்துக்கடுத்த வெளிநிலங்களிலும் ஆரோன் வம்சத்தாரில் பேர்பேராகக் குறிக்கப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள்.
\s5
\v 20 இந்த முறையில் எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.
\v 21 அவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும், தன் தேவனைத் தேடும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்ன செய்யத் தொடங்கினானோ, அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து வெற்றிபெற்றான்.
\s5
\c 32
\cl அத்தியாயம்– 32
\s1 சனகெரிப் எருசலேமைப் பயமுறுத்துதல்
\p
\v 1 இந்தக்காரியங்கள் நிறைவேறிவரும்போது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, பாதுகாப்பான பட்டணங்களுக்கு எதிராக முகாமிட்டு, அவைகளைத் தன் வசமாக்கிக் கொள்ள நினைத்தான்.
\s5
\v 2 சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் போர்செய்யத் திட்டமிட்டிருப்பதை எசேக்கியா கண்டபோது,
\v 3 நகரத்திற்கு வெளியே இருக்கிற ஊற்றுகளை அடைத்துவிட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைசெய்தான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.
\v 4 அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரை ஏன் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி, அநேகம் மக்கள் கூடி, அனைத்து ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் அடைத்துப்போட்டார்கள்.
\s5
\v 5 அவன் திடன்கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதில்களையும் கோபுரங்கள் வரை உயர்த்தி, தாவீதின் நகரத்தினுடைய கோட்டையைப் பலப்படுத்த, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்செய்து,
\s5
\v 6 மக்களின்மேல் படைத்தலைவரை ஏற்படுத்தி, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னருகில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:
\v 7 நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம்.
\v 8 அவனோடு இருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய போர்களை நடத்த நம்மோடு இருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் மக்கள் நம்பிக்கை வைத்தார்கள்.
\p
\s5
\v 9 இதன்பின்பு அசீரியா ராஜாவாகிய சனகெரிப் தன் முழு படையுடன் லாகீசுக்கு எதிராக முற்றுகை போட்டிருக்கும்போது, யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிடத்திற்கும், எருசலேமிலுள்ள யூதா மக்கள் அனைவரிடத்திற்கும் தன் வேலைக்காரர்களை அனுப்பி:
\v 10 அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றுகை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருப்பதற்கு, நீங்கள் எதன்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்?
\s5
\v 11 நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தாலும் சாகும்படி உங்களுக்குப் போதிக்கிறான் அல்லவா?
\v 12 அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் தள்ளிவிட்டவனும், ஒரே பலிபீடத்திற்கு முன்பாகப் பணிந்து, அதின்மேல் தூபங்காட்டுங்கள் என்று யூதாவுக்கும் எருசலேமியர்களுக்கும் சொன்னவனும் அந்த எசேக்கியாதான் அல்லவா?
\s5
\v 13 நானும் என் முன்னோர்களும் தேசத்து சகல மக்களுக்கும் செய்ததை அறியவில்லையா? அந்த தேசங்களுடைய மக்களின் தெய்வங்கள் அவர்கள் தேசத்தை நம்முடைய கைக்குத் தப்புவிக்க அவர்களுக்குப் பெலன் இருந்ததோ?
\v 14 என் முன்னோர்கள் பாழாக்கின அந்த மக்களுடைய அனைத்து தெய்வங்களிலும் எவன் தன் மக்களை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்? அப்படியிருக்க, உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கமுடியுமா?
\v 15 இப்போதும் எசேக்கியா உங்களை ஏமாற்றவும், இப்படி உங்களுக்கு போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த மக்களின் தெய்வமும், எந்த ராஜ்யத்தின் தெய்வமும் தன் மக்களை என் கைக்கும் என் முன்னோர்களின் கைக்கும் தப்புவிக்க முடியாமல் இருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி,
\s5
\v 16 அவனுடைய வேலைக்காரர்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் இன்னும் அதிகமாகப் பேசினார்கள்.
\v 17 தேசங்களுடைய மக்களின் தெய்வங்கள் தங்கள் மக்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் மக்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அவமதிக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் கடிதங்களையும் எழுதினான்.
\s5
\v 18 அவர்கள் மதிலின்மேலிருக்கிற எருசலேமின் மக்களைப் பயப்படுத்தி, கலங்கச்செய்து, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூத மொழியிலே மகா சத்தமாகக் கூப்பிட்டு,
\v 19 மனிதர்கள் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூமியிலுள்ள மக்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தெய்வங்களைக்குறித்துப் பேசுகிறதுபோல எருசலேமின் தேவனையும்குறித்துப் பேசினார்கள்.
\s5
\v 20 இதனால் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தனை செய்து, வானத்தை நோக்கி முறையிட்டார்கள்.
\v 21 அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் முகாமிலுள்ள அனைத்து பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், தளபதிகளையும் அழித்தான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாகத் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தெய்வத்தின் கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.
\s5
\v 22 இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிமக்களையும் அசீரியருடைய ராஜாவாகிய. சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லோருடைய கைக்கும் விலக்கிக் காப்பாற்றி, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.
\v 23 அநேகம்பேர் கர்த்தருக்கென்று எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு விலையுயர்ந்த பொருட்களையும் கொண்டுவந்தார்கள்; அவன் இதற்குப்பிறகு சகல மக்களின் பார்வைக்கும் மதிக்கப்பட்டவனாயிருந்தான்.
\s1 எசேக்கியாவின் பெருமை மற்றும் அவனுடைய வெற்றியும் மரணமும்
\p
\s5
\v 24 அந்த நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரிக்கும்தருவாயில் இருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்செய்யும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்செய்து, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.
\v 25 எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உதவிக்குத் தகுந்தவாறு நடக்காமல் மனமேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபம் வந்தது.
\v 26 எசேக்கியாவின் மனமேட்டிமையினினால் அவனும் எருசலேமின் மக்களும் தங்களைத் தாழ்த்தினதால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை.
\s5
\v 27 எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும், பொன்னும், இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும், கேடகங்களும், விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்,
\v 28 தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான சேமிப்பு அறைகளையும், அனைத்துவிதமான மிருகஜீவன்களுக்குக் கூடாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.
\v 29 அவன் தனக்குப் பட்டணங்களைக் கட்டி ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு மகாதிரளான செல்வத்தைக் கொடுத்தார்.
\s5
\v 30 இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதன் தண்ணீரை மேற்கேயிருந்து கீழே தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.
\v 31 ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் பிரதிநிதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்திற்கு அனுப்பப்பட்ட காரியத்தில் அவன் இருதயத்தில் இருக்கிற எல்லாவற்றையும் அறிவதற்காக அவனைச் சோதிப்பதற்கு தேவன் அவனைக் கைவிட்டார்.
\s5
\v 32 எசேக்கியாவின் மற்ற காரியங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்திலும் எழுதப்பட்டிருக்கிறது.
\v 33 எசேக்கியா இறந்தபின்பு, அவனை தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் முக்கியமான கல்லறையில் அடக்கம்செய்தார்கள்; யூதா முழுவதும், எருசலேமின் மக்களும் அவன் இறந்தபோது அவனுக்கு மரியாதை செலுத்தினார்கள்; அவன் மகனாகிய மனாசே அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s5
\c 33
\cl அத்தியாயம்– 33
\s1 யூதாவின் ராஜாவாகிய மனாசே
\p
\v 1 மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
\v 2 கர்த்தர், இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
\v 3 அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களைக் கட்டி, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் நட்சத்திரங்களையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளை வணங்கி,
\s5
\v 4 எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று கர்த்தர் சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி,
\v 5 கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் நட்சத்திரங்களுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.
\v 6 அவன் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலே தன் மகன்களைத் தகனபலிகளாக தீயிலே பலியிட்டு, நாள் நட்சத்திரம் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.
\s5
\v 7 இந்த ஆலயத்திலும், இஸ்ரவேல் வம்சங்களிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கச்செய்வேன் என்றும்,
\v 8 நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் ஏற்றபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யக் கவனமாக இருந்தார்களேயானால், நான் இனி அவர்கள் கால்களை அவர்கள் முன்னோர்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகச்செய்வதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் மகனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் செய்த விக்கிரகமாகிய சிலையை நாட்டினான்.
\v 9 அப்படியே கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு முன்பாக அழித்த மக்களைவிட, யூதாவும் எருசலேமின் மக்களும் பொல்லாப்புச் செய்யதக்கதாக, மனாசே அவர்களை வழிவிலகிப் போகச்செய்தான்.
\s5
\v 10 கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய மக்களோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள்.
\v 11 ஆகையால் கர்த்தர்: அசீரியா ராஜாவின் தளபதிகளை அவர்கள்மேல் வரச்செய்தார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டி பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
\s5
\v 12 இப்படி அவன் நெருக்கப்படும்போது, தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் முன்னோர்களின் தேவனுக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தினான்.
\v 13 அவரை நோக்கி, அவன் விண்ணப்பம் செய்துகொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவனுடைய ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய தேசத்திற்கு வரச்செய்தார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.
\p
\s5
\v 14 பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி மதிலைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்கு துவங்கி மீன்வாசல்வரை கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் படைத்தலைவரை ஏற்படுத்தி,
\v 15 கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தெய்வங்களையும் அந்த சிலையையும் அகற்றிவிட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்கு வெளியே போடச் செய்து,
\s5
\v 16 கர்த்தருடைய பலிபீடத்தைப் பழுதுபார்த்து, அதன்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை ஆராதிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.
\v 17 ஆனாலும் மக்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; இருந்தாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள்.
\s5
\v 18 மனாசேயின் மற்ற காரியங்களும், அவன் தன் தேவனை நோக்கிச் செய்த விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடு பேசின தரிசனம் காண்கிறவர்களின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 19 அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்கு முன்னே செய்த அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் நாட்டின இடங்களும், ஓசாயின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 20 மனாசே இறந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய ஆமோன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
\s1 யூதாவின் ராஜாவாகிய ஆமோன்
\p
\s5
\v 21 ஆமோன் ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
\v 22 அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய மனாசே செய்துவைத்த சிலைகளுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளை வணங்கினான்.
\v 23 தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான்.
\s5
\v 24 அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு விரோதமாக சதிசெய்து, அவன் அரண்மனையிலே அவனைக் கொன்று போட்டார்கள்.
\v 25 அப்பொழுது தேசத்து மக்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாக சதிசெய்த அனைவரையும் வெட்டிப்போட்டு, அவன் மகனாகிய யோசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள்.
\s5
\c 34
\cl அத்தியாயம்– 34
\s1 யோசியாவின் சீர்திருத்தங்கள்
\p
\v 1 யோசியா ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
\v 2 அவன் கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்.
\v 3 அவன் தன் அரசாட்சியின் எட்டாம் வருடத்தில், தான் இன்னும் இளவயதாயிருக்கும்போது, தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருடத்தில் மேடைகள், தோப்புகள், உருவங்கள், சிலைகள் ஆகிய இவைகள் இல்லாமல்போகும்படி, யூதாவையும், எருசலேமையும் தூய்மைப்படுத்தத் தொடங்கினான்.
\s5
\v 4 அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின்மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரகத் தோப்புகளையும் வார்ப்பு சிலைகளையும் வெட்டப்பட்ட சிலைகளையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்கு பலியிட்டவர்களுடைய கல்லறைகளின்மேல் தூவி,
\v 5 பூசாரிகளின் எலும்புகளை அவர்களுடைய பலிபீடங்களின்மேல் சுட்டெரித்து, இந்தவிதமாக யூதாவையும் எருசலேமையும் தூய்மைப்படுத்தினான்.
\s5
\v 6 அப்படியே அவன் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டணங்களிலும், நப்தலிவரையும், பாழான அவைகளின் சுற்றுப்புறங்களிலும் செய்தான்.
\v 7 அவன் இஸ்ரவேல் தேசம் எங்குமுள்ள பலிபீடங்களையும் விக்கிரகத் தோப்புகளையும் இடித்து, சிலைகளை நொறுக்கித் தூளாக்கி, எல்லாச் சிலைகளையும் வெட்டிப்போட்டபின்பு எருசலேமுக்குத் திரும்பினான்.
\p
\s5
\v 8 அவன் தேசத்தையும் ஆலயத்தையும் தூய்மைப்படுத்தியபின்பு, அவன் தன் அரசாட்சியின் பதினெட்டாம் வருடத்திலே, அத்சலியாவின் மகனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் மகனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்கு அனுப்பினான்.
\v 9 அவர்கள் பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் வந்து, வாசற்படியைக் காக்கிற லேவியர்கள் மனாசேயிலும் எப்பிராயீமிலும் இஸ்ரவேலில் மீதியானவர்களெல்லாரின் கையிலும் யூதா பென்யமீன் எங்கும் சேர்த்து, எருசலேமுக்குத் திரும்பி தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்த பணத்தை ஒப்புவித்து,
\s5
\v 10 வேலையைச் செய்யவைக்க, கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரரானவர்களின் கையில் அதைக் கொடுத்தார்கள்; இவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்து ஒழுங்குபடுத்துகிறதற்கு ஆலயத்தில் வேலை செய்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள்.
\v 11 அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க, வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பரப்புவதற்குப் பலகைகளையும் வாங்க தச்சர்களுக்கும் சிற்ப ஆசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள்.
\s5
\v 12 இந்த மனிதர்கள் வேலையை உண்மையாகச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் மக்களில் யாகாத், ஒபதியா என்னும் லேவியர்களும், கோகாதியரின் மக்களில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்; இந்த லேவியர்கள் எல்லோரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள்.
\v 13 அவர்கள் சுமைகாரர்களை விசாரிக்கிறவர்களாகவும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லோரையும் கண்காணிக்கிறவர்களாகவும் இருந்தார்கள்; லேவியர்களில் இன்னும் சிலர் செயலாளர்களாகவும், நிர்வாகிகளாகவும், வாசற்காவலாளருமாக இருந்தார்கள்.
\s1 நியாயப்பிரமாண புத்தகத்தைக் கண்டெடுத்தல்
\p
\s5
\v 14 கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்கிறபோது மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புத்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தான்.
\v 15 அப்பொழுது இல்க்கியா, பதிவாளனாகிய சாப்பானை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப் புத்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புத்தகத்தை சாப்பானுடைய கையில் கொடுத்தான்.
\v 16 சாப்பான் அந்த புத்தகத்தை ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய், அவனை நோக்கி: உம்முடைய வேலைக்காரர்களுக்கு கட்டளையிடப்பட்டவைகளையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள்.
\s5
\v 17 கர்த்தருடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர்கள் கையிலும், வேலை செய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்தி சொன்னதும் அல்லாமல்,
\v 18 ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தான் என்பதைப் பதிவாளனாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான்.
\v 19 நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,
\s5
\v 20 இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகனாகிய அகிக்காமுக்கும், மீகாவின் மகனாகிய அப்தோனுக்கும், பதிவாளனாகிய சாப்பானுக்கும், ராஜாவின் வேலைக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது:
\v 21 கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும், இஸ்ரவேலிலும், யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய முன்னோர்கள் கைக்கொள்ளாமல் போனதால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய கடுங்கோபம் பெரியது என்றான்.
\s5
\v 22 அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் மகனாகிய திக்வாதின் மகனான சல்லூம் என்னும் ஆடைகள் வைக்கும் அறைகளின் கண்காணிப்பாளனின் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடம் போனார்கள்; அவள் எருசலேமில் இரண்டாம் பகுதியிலே குடியிருந்தாள்; அவளோடு அதைக்குறித்துப் பேசினார்கள்.
\s5
\v 23 அவள் இவர்களை நோக்கி: உங்களை என்னிடம் அனுப்பினவருக்கு நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறதாவது,
\v 24 இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதியிருக்கிற அனைத்து சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த இடத்தின்மேலும் இதன் மக்களின்மேலும் வரச்செய்வேன்.
\v 25 அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் செயல்கள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தெய்வங்களுக்குத் தூபங்காட்டினதால், என் கடுங்கோபம் தணிந்து போகாமலிருக்க இந்த இடத்தின்மேல் இறங்கும் என்று கர்த்தர் உரைக்கிறார்.
\s5
\v 26 கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
\v 27 இந்த இடத்திற்கும் அதன் மக்களுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கும்போது, உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுததால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
\v 28 இதோ, நான் இந்த இடத்தின்மேலும் இதன் மக்களின்மேலும் வரச்செய்யும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்க்கப்பட நான் உன்னை உன் முன்னோர்களுக்கு அருகில் சேரச்செய்வேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள்.
\p
\s5
\v 29 அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் வரவழைத்துக் கூடிவரச்செய்து,
\v 30 ராஜாவும், அனைத்து யூதா மனிதர்களும், எருசலேமின் மக்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், பெரியோர்முதல் சிறியோர் வரையுள்ள அனைவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.
\s5
\v 31 ராஜா தன் ஸ்தானத்திலே நின்று, அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளின்படியே தன் செயல்கள் மூலமாகக் கர்த்தரைப் பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழு இருதயத்தோடும், தன் முழு ஆத்துமாவோடும், அவருடைய கற்பனைகளையும், அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைசெய்து,
\v 32 எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு இணங்கச்செய்தான்; அப்படியே எருசலேமின் மக்கள் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய அந்த தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள்.
\s5
\v 33 யோசியா இஸ்ரவேல் மக்களுடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி. இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரை ஆராதிக்கச் செய்தான்; அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவர்கள் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரைவிட்டுப் பின்வாங்கினதில்லை.
\s5
\c 35
\cl அத்தியாயம்– 35
\s1 யோசியா பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுதல்
\p
\v 1 அதற்குப்பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்கு பஸ்காவை அனுசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினான்காம் தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.
\v 2 அவன் ஆசாரியர்களை அவர்கள் முறைவரிசைகளில் வைத்து, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதனை செய்ய ஒழுங்குபடுத்தி,
\s5
\v 3 இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியர்களை நோக்கி: பரிசுத்தப்பெட்டியை தாவீதின் மகனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின்மேல் அதை சுமக்கும் பொறுப்பு உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியம்செய்து,
\v 4 இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது எழுதின கட்டளைக்கும், அவன் மகனாகிய சாலொமோன் எழுதின கட்டளைக்கும் ஏற்றபடியே உங்கள் பிதாக்களின் குடும்பத்தாருக்காகக் குறிக்கப்பட்ட வரிசையிலே உங்களை ஆயத்தப்படுத்தி,
\s5
\v 5 மக்களாகிய உங்கள் சகோதரருக்காகப் பரிசுத்த இடத்திலே முன்னோர்களுடைய வம்சப் பிரிவுகளின்படியேயும், லேவியருடைய வம்சத்தார் வகுக்கப்பட்டபடியேயும் நின்று,
\v 6 பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து, உங்களைப் பரிசுத்தம்செய்து, மோசேயைக்கொண்டு கர்த்தர் சொன்னபடியே உங்கள் சகோதரர்கள் செய்வதற்கு, அவர்களுக்கு அவைகளை ஆயத்தப்படுத்துங்கள் என்றான்.
\s5
\v 7 வந்திருந்த மக்கள் எல்லோருக்கும், அவர்கள் எண்ணிக்கையின்படியே, பஸ்கா பலிக்காக முப்பதாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய செல்வத்திலிருந்து கொடுத்தான்.
\v 8 அவனுடைய பிரபுக்களும் மனப்பூர்வமான காணிக்கையாக மக்களுக்கும் ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுத்தார்கள்; தேவனுடைய ஆலய மேற்பார்வையாளர்களாகிய இல்க்கியாவும் சகரியாவும் யெகியேலும் ஆசாரியர்களுக்கு பஸ்கா பலிக்கென்று இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.
\v 9 கொனானியா, செமாயா, நெதனெயேல் என்னும் அவர்கள் சகோதரர்களும், அசபியா, ஏயெல், யோசபாத் என்னும் லேவியர்களின் பிரபுக்களும், லேவியர்களுக்கு பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.
\s5
\v 10 இப்படி ஆராதனை ஆயத்தம் செய்யப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர்கள் தங்களுக்குரிய இடத்திலும், லேவியர்கள் தங்கள் பிரிவுகளின் வரிசையிலும் நின்று,
\v 11 பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள்; லேவியர்கள் தோலுரித்தார்கள்.
\v 12 மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி மக்கள் கர்த்தருக்குப் பலி செலுத்தும்படி, அவர்கள் தகனபலி மிருகங்களை முன்னோர்களுடைய வம்சப்பிரிவுகளின்படியே, இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாக அவைகளைப் பிரித்துவைத்தார்கள்; காளைகளையும் அப்படியே செய்தார்கள்.
\s5
\v 13 அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியில் பொரித்து, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளைப் பானைகளிலும் கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, மக்களுக்கெல்லாம் விரைவாகப் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
\v 14 பின்பு தங்களுக்காகவும் ஆசாரியர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்; ஆரோனின் சந்ததியாராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும் கொழுப்பையும் செலுத்துகிறதில், இரவு வரை வேலையாயிருந்ததால், லேவியர்கள் தங்களுக்காகவும், ஆரோனின் சந்ததியாராகிய ஆசாரியர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்.
\s5
\v 15 தாவீதும், ஆசாபும், ஏமானும், ராஜாவின் தரிசனம் காண்கிறவனாகிய எதுத்தூனும் கற்பித்தபடியே, ஆசாபின் சந்ததியாராகிய பாடகர்கள் தங்களுடைய இடத்திலும், வாசல்காவலாளர்கள் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள்; அவர்கள் தங்கள் வேலையைவிட்டு விலகமுடியாமலிருந்தது; லேவியரான அவர்களுடைய சகோதரர்கள் அவர்களுக்காக ஆயத்தம் செய்தார்கள்.
\s5
\v 16 அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை அனுசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும் அடுத்த கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் முறைப்படி செய்யப்பட்டது.
\v 17 அங்கே வந்திருந்த இஸ்ரவேல் மக்கள் அக்காலத்தில் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழு நாட்களும் அனுசரித்தார்கள்.
\s5
\v 18 தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள் துவங்கி, இஸ்ரவேலிலே அதைப்போல பஸ்கா அனுசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியர்களும், லேவியர்களும், யூதாஅனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் மக்களும் அனுசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் அனுசரித்ததில்லை.
\v 19 யோசியாவுடைய அரசாட்சியின் பதினெட்டாம் வருடத்திலே இந்த பஸ்கா அனுசரிக்கப்பட்டது.
\s1 யோசியாவின் மரணம்
\p
\s5
\v 20 யோசியா தேவாலயத்திற்குரியவைகளை ஒழுங்குபடுத்தின இந்த அனைத்து செயல்பாடுகளுக்கும்பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் போர் செய்யவந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாக போர்செய்யப் புறப்பட்டான்.
\v 21 அவன் இவனிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாக அல்ல, என்னோடு போர்செய்கிற ஒருவனுக்கு விரோதமாகப் போகிறேன்; நான் விரைவாக செயல்படவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காமலிருக்க அவருக்கு எதிராகச் செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 22 ஆனாலும் யோசியா தன் முகத்தை அவனை விட்டுத் திருப்பாமலும், நேகோ சொன்ன தேவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும், அவனோடு போர்செய்ய மாறுவேடமிட்டு, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே போர்செய்கிறதற்கு வந்தான்.
\s5
\v 23 வில்வீரர்கள் யோசியா ராஜாவின்மேல் அம்பு எய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரர்களை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான்.
\v 24 அப்பொழுது அவனுடைய வேலைக்காரர்கள் அந்த இரதத்தின்மேலிருந்த அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம்செய்யப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.
\s5
\v 25 எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகர்களும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவைக்குறித்துப் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழக்கமாக இருக்கிறது; அவைகள் புலம்பலின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\v 26 யோசியாவின் மற்ற செயல்பாடுகளும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கு ஏற்ற அவன் செய்த நன்மைகளும்,
\v 27 அவனுடைய ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள செயல்களும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
\s5
\c 36
\cl அத்தியாயம்– 36
\s1 யூதாவின் ராஜாவாகிய யோவாகாஸ்
\p
\v 1 அப்பொழுது மக்கள் யோசியாவின் மகனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பனுடைய இடத்திலே ராஜாவாக்கினார்கள்.
\v 2 யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
\s5
\v 3 அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான வரியைச் சுமத்தி,
\v 4 அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.
\s1 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம்
\p
\s5
\v 5 யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருடங்கள் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
\v 6 அவனுக்கு விரோதமாக பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலிகளால் அவனைக் கட்டினான்.
\v 7 கர்த்தருடைய ஆலயத்தின் தட்டுமுட்டுகளிலும் சிலவற்றை நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவைகளை பாபிலோனிலுள்ள தன்னுடைய கோவிலிலே வைத்தான்.
\s5
\v 8 யோயாக்கீமுடைய மற்ற செயல்பாடுகளும், அவன் செய்ததும், அவனிடத்திலே கண்டுபிடிக்கப்பட்டதுமான அவனுடைய அருவருப்புகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய யோயாக்கீன் ராஜாவானான்.
\s1 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீன்
\p
\s5
\v 9 யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதங்களும் பத்து நாட்களும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தான்.
\v 10 அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலே நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் விலையுயர்ந்த பொருட்களையும் பாபிலோனுக்குக் கொண்டுவரச்செய்து, அவன் சிறிய தகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.
\s1 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா
\p
\s5
\v 11 சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினோரு வருடங்கள் எருசலேமில் அரசாண்டு,
\v 12 தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் கர்த்தருடைய வார்த்தையைக் கூறிய எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை.
\s5
\v 13 தேவன்மேல் தன்னை ஆணையிடச் செய்த நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்செய்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பாமல், தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.
\v 14 ஆசாரியர்களில் முக்கியமான அனைவரும் மற்றும் மக்களும் கூடி புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்செய்து, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்செய்த அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.
\s1 எருசலேமின் வீழ்ச்சி
\p
\s5
\v 15 அவர்களுடைய முன்னோர்களின் தேவனாகிய கர்த்தர் தமது மக்களையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கு இரக்கமுள்ளவராக இருந்ததால், அவர்களிடத்திற்குத் தம்முடைய பிரதிநிதிகளை ஏற்கெனவே அனுப்பினார்.
\v 16 ஆனாலும் அவர்கள் தேவனுடைய பிரதிநிதிகளைக் கேலிசெய்து, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை அவமதித்ததால், கர்த்தருடைய கடுங்கோபம் அவருடைய மக்களின்மேல் வந்தது; உதவி இல்லாமல் போனது.
\s5
\v 17 ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரச்செய்தார்; அவன் அவர்களுடைய வாலிபர்களை அவர்களின் பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தால் கொன்று, வாலிபர்களையும் கன்னிப்பெண்களையும் முதியோர்களையும் நரைமுடி உள்ளவர்களையும் விட்டுவிடவில்லை; எல்லோரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
\s5
\v 18 அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான தட்டுமுட்டுகள் அனைத்தையும், கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
\v 19 அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் மதிலை இடித்து, அதன் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த அழகான பொருட்களையெல்லாம் அழித்தார்கள்.
\s5
\v 20 பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா அரசாட்சி ஏற்படுத்தப்படும்வரை அங்கே அவர்கள் அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அடிமைகளாக இருந்தார்கள்.
\v 21 கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறுவதற்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருடங்களை மனநிறைவுடன் அனுபவித்து முடியும்வரை, அது பாழாகிக்கிடந்த நாட்களெல்லாம் அதாவது எழுபது வருடங்கள் முடியும்வரை ஓய்ந்திருந்தது.
\p
\s5
\v 22 எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேற, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருடத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியைத் தூண்டியதாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் தேசங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
\v 23 அவருடைய மக்கள் எல்லோரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்செய்தான்.

470
15-EZR.usfm Normal file
View File

@ -0,0 +1,470 @@
\id EZR
\ide UTF-8
\h எஸ்றா
\toc1 எஸ்றா
\toc2 எஸ்றா
\toc3 ezr
\mt1 எஸ்றா
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 சிறையிருப்பிலுள்ள மக்கள் திரும்பிச் செல்ல ராஜாவாகிய கோரேஸ் உதவுதல்
\p
\v 1 எரேமியாவின் வாயினால் கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுவதற்காக, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருடத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியைத் தூண்டியதாலே அவன்:
\v 2 பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் தேசங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்ட எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
\s5
\v 3 அவருடைய மக்கள் எல்லோரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனுடன் அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவானாக; எருசலேமில் வாசம்செய்கிற தேவனே தேவன்.
\v 4 அந்த மக்களில் மீதியாயிருக்கிறவன் எந்த இடத்தில் தங்கியிருக்கிறானோ, அந்த இடத்தின் மக்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாகக் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமல்லாமல், அவனுக்குப் பொன், வெள்ளி முதலிய பொருட்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து உதவி செய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி அறிவிப்பு செய்தான்.
\s5
\v 5 அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்குப் போக யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவர்களும் ஆசாரியர்களும் லேவியர்களும் அல்லாமல், எவர்களுடைய ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லோரும் எழும்பினார்கள்.
\v 6 அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற அனைவரும் மனஉற்சாகமாகக் காணிக்கைக் கொடுத்ததுமல்லாமல், வெள்ளிப் பொருட்களையும், பொன்னையும் மற்ற பொருட்களையும் மிருகஜீவன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் கொடுத்து, அவர்களுடைய கைகளைத் திடப்படுத்தினார்கள்.
\s5
\v 7 நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்து பொருட்களையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.
\v 8 அவைகளைப் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையினால் எடுக்கச்செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுத்தான்.
\s5
\v 9 அவைகளின் தொகையாவது: பொன் தட்டுகள் முப்பது, வெள்ளித்தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது.
\v 10 பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக் கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பொருட்கள் ஆயிரம்.
\v 11 பொன் வெள்ளிப் பொருட்களெல்லாம் ஐயாயிரத்து நானூறு, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகும்போது எடுத்துக் கொண்டுபோனான்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களுடைய அட்டவணை
\p
\v 1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
\v 2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பிவந்த தேசத்து வம்சத்தாராகிய மக்களின் தொகையாவது:
\s5
\v 3 பாரோஷின் வம்சத்தார் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
\v 4 செபத்தியாவின் வம்சத்தார் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
\v 5 ஆராகின் வம்சத்தார் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
\v 6 யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தார் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
\s5
\v 7 ஏலாமின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநான்குபேர்.
\v 8 சத்தூவின் வம்சத்தார் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
\v 9 சக்காயின் வம்சத்தார் எழுநூற்று அறுபதுபேர்.
\v 10 பானியின் வம்சத்தார் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
\s5
\v 11 பெபாயின் வம்சத்தார் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
\v 12 அஸ்காதின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர்.
\v 13 அதொனிகாமின் வம்சத்தார் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
\v 14 பிக்வாயின் வம்சத்தார் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.
\s5
\v 15 ஆதீனின் வம்சத்தார் நானூற்று ஐம்பத்துநான்குபேர்.
\v 16 எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தார் தொண்ணூற்றெட்டுப்பேர்.
\v 17 பேசாயின் வம்சத்தார் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
\v 18 யோராகின் வம்சத்தார் நூற்றுப் பன்னிரண்டுபேர்.
\s5
\v 19 ஆசூமின் வம்சத்தார் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
\v 20 கிபாரின் வம்சத்தார் தொண்ணூற்றைந்துபேர்.
\v 21 பெத்லகேமின் வம்சத்தார் நூற்றிருபத்துமூன்றுபேர்.
\v 22 நெத்தோபாவின் மனிதர்கள் ஐம்பத்தாறுபேர்.
\s5
\v 23 ஆனதோத்தின் மனிதர்கள் நூற்றிருபத்தெட்டுபேர்.
\v 24 அஸ்மாவேத்தின் வம்சத்தார் நாற்பத்திரண்டுபேர்.
\v 25 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் வம்சத்தார் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
\v 26 ராமா, காபா என்பவைகளின் வம்சத்தார் அறுநூற்று இருபத்தொருபேர்.
\s5
\v 27 மிக்மாசின் மனிதர்கள் நூற்றிருபத்திரண்டுபேர்.
\v 28 பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர்கள் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
\v 29 நேபோவின் வம்சத்தார் ஐம்பத்திரண்டுபேர்.
\v 30 மக்பீஷின் வம்சத்தார் நூற்றைம்பத்தாறுபேர்.
\s5
\v 31 மற்ற ஏலாமின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
\v 32 ஆரீமின் வம்சத்தார் முந்நூற்றுஇருபதுபேர்.
\v 33 லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
\s5
\v 34 எரிகோவின் வம்சத்தார் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.
\v 35 சேனாகின் வம்சத்தார் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
\s5
\v 36 ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
\v 37 இம்மேரின் வம்சத்தார் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
\v 38 பஸ்கூரின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
\v 39 ஆரீமின் வம்சத்தார் ஆயிரத்து பதினேழுபேர்.
\s5
\v 40 லேவியரானவர்கள்: ஒதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் வம்சத்தார் எழுபத்து நான்குபேர்.
\v 41 பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
\v 42 வாசல் காவலாளர்களின் வம்சத்தாரானவர்கள்: சல்லூமின் வம்சத்தாரும், அதேரின் வம்சத்தாரும், தல்மோனின் வம்சத்தாரும், அக்கூபின் வம்சத்தாரும், அதிதாவின் வம்சத்தாரும், சோபாயின் வம்சத்தாருமானவர் எல்லோரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.
\s5
\v 43 நிதனீமியரானவர்கள்: சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார்,
\v 44 கேரோசின் வம்சத்தார், சீயாகாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார்,
\v 45 லெபானாகின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், அக்கூபின் வம்சத்தார்,
\v 46 ஆகாபின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், ஆனானின் வம்சத்தார்,
\s5
\v 47 கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், ராயாகின் வம்சத்தார்,
\v 48 ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், காசாமின் வம்சத்தார்,
\v 49 ஊசாவின் வம்சத்தார், பாசெயாகின் வம்சத்தார், பேசாயின் வம்சத்தார்,
\v 50 அஸ்னாவின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபுசீமின் வம்சத்தார்,
\s5
\v 51 பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார்,
\v 52 பஸ்லூதின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார்,
\v 53 பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார்,
\v 54 நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தாருமே.
\s5
\v 55 சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தாரானவர்கள்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார்,
\v 56 யாலாகின் வம்சத்தார், தர்கோனின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார்,
\v 57 செபத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் வம்சத்தார், ஆமியின் வம்சத்தாருமே.
\v 58 நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
\s5
\v 59 தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வீகத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
\v 60 தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
\s5
\v 61 ஆசாரியர்களின் மகன்களில் அபாயாவின் வம்சத்தார், கோசின் வம்சத்தார், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்கள் வம்சப்பெயர் இடப்பட்ட பர்சிலாயின் வம்சத்தாரே.
\v 62 இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
\v 63 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்பும்வரை, இவர்கள் மகா பரிசுத்தமானதிலே சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
\s5
\v 64 சபையார் எல்லோரும் ஏகத்திற்கு நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
\v 65 அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகர்களும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
\s5
\v 66 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து,
\v 67 அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
\s5
\v 68 வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
\v 69 அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசுகளையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
\s5
\v 70 ஆசாரியர்களும், லேவியர்களும், மக்களில் சிலரும், பாடகர்களும், வாசல்காவலாளர்களும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லோரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 பலிபீடத்தைத் திரும்பக்கட்டுதல்
\p
\v 1 இஸ்ரவேல் வம்சத்தார் பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமானபோது, மக்கள் ஒரேமனதுடன் எருசலேமிலே கூடினார்கள்.
\v 2 அப்பொழுது யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும், அவன் சகோதரர்களாகிய ஆசாரியர்களும், செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், அவனுடைய சகோதரர்களும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறமுறையில் சர்வாங்கதகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.
\s5
\v 3 அவர்கள் அந்த தேசத்தின் மக்களுக்கு பயந்ததால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்களுடைய கர்த்தருக்கு காலை மாலை சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.
\v 4 எழுதியிருக்கிறமுறையில் அவர்கள் கூடாரப்பண்டிகையை அனுசரித்து, நித்திய நியமத்தின்முறையிலும் அன்றாடகக் கணக்கு வரிசையில் ஒவ்வொரு நாளிலும் பலியிட்டார்கள்.
\v 5 அதற்குப்பின்பு அனுதினமும், மாதப்பிறப்புகளிலும், கர்த்தருடைய அனைத்து பரிசுத்த பண்டிகைகளிலும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும், கர்த்தருக்கு அவரவர் செலுத்தும் உற்சாகபலியையும் செலுத்தினார்கள்.
\s5
\v 6 ஏழாம் மாதம் முதல் தேதியில் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத் துவங்கினார்கள்; ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை.
\s1 ஆலயத்தைத் திரும்பக்கட்டுதல்
\p
\v 7 அப்பொழுது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் தங்களுக்குப் பிறப்பித்த உத்தரவின்படியே அவர்கள் கல்தச்சர்களுக்கும் தச்சருக்கும் பணத்தையும், லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கடல்வழியாக யோபாவரை கொண்டுவரச் சீதோனியர்களுக்கும் தீரியர்களுக்கும் உணவையும் தண்ணீரையும் எண்ணெயையும் கொடுத்தார்கள்.
\p
\s5
\v 8 அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதத்திலே, செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும், மற்றும் அவர்களுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் லேவியர்களும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பம்செய்து, இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.
\v 9 அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்துவதற்காக யெசுவாவும் அவனுடைய மகன்களும், சகோதரர்களும், கத்மியேலும் அவனுடைய மகன்களும், யூதாவின் மகன்களும், எனாதாத்தின் மகன்களும், அவர்களுடைய சகோதரர்களாகிய லேவியர்களும் ஒருமனப்பட்டு நின்றார்கள்.
\s5
\v 10 சிற்ப ஆசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிப்பதற்கு, ஆடைகளை அணிந்து, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்களையும், தாளங்களைத் தட்டுகிற ஆசாபின் மகனாகிய லேவியர்களையும் நிறுத்தினார்கள்.
\v 11 கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கும்போது, மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கும்போது, மக்கள் எல்லோரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுவதினால் மகா கெம்பீரமாக ஆர்ப்பரித்தார்கள்.
\s5
\v 12 முந்தின ஆலயத்தைப் பார்த்திருந்த முதிர்வயதான ஆசாரியர்களிலும், லேவியர்களிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவர்களிலும் அநேகர் இந்த ஆலயத்திற்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாக ஆர்ப்பரித்தார்கள்.
\v 13 மக்கள் மகா கெம்பீரமாக ஆர்ப்பரிக்கிறதினால் அவர்களுடைய சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், மக்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியமுடியாதிருந்தது.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 திரும்பவும் கட்டப்படுதலுக்கு வந்த எதிர்ப்பு
\p
\v 1 சிறையிருப்பிலிருந்து வந்த மக்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த விரோதிகள் கேள்விப்பட்டபோது,
\v 2 அவர்கள் செருபாபேலிடத்திற்கும் தலைவர்களான பிதாக்களிடத்திற்கும் வந்து: உங்களுடன் நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இந்த இடத்திற்கு எங்களை வரச் செய்த அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோம் என்று அவர்களிடம் சொன்னார்கள்.
\s5
\v 3 அதற்கு செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் உள்ள மற்ற தலைவர்களான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி. நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.
\s5
\v 4 அதனால் அந்த தேசத்து மக்கள் யூதா மக்களின் கைகளைத் தளரச்செய்து, கட்டாமலிருக்க அவர்களை வருத்தப்படுத்தி,
\v 5 பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுவதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்ட காலம்வரை, அவர்கள் யோசனையைப் பொய்யாக்க அவர்களுக்கு விரோதமாக ஆலோசனைக்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்தார்கள்.
\s1 அகாஸ்வேரு மற்றும் அர்தசஷ்டாவின் காலத்தில் உண்டான எதிர்ப்பு
\p
\v 6 அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய அரசாட்சியின் ஆரம்பத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகக் குற்ற மனுவை எழுதினார்கள்.
\p
\s5
\v 7 அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்களோடு உள்ளவர்களும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரிய மொழியிலும் எழுதப்பட்டிருந்தது.
\v 8 ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் பதிவாளனாகிய சிம்சாவும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்:
\s5
\v 9 ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும், பதிவாளனாகிய சிம்சாயும், மற்றும் அவர்களைச் சார்ந்த தீனாவியர்கள், அபற்சாத்தியர்கள், தர்பேலியர்கள், அப்பார்சியர்கள், அற்கேவியர்கள், பாபிலோனியர்கள், சூஷங்கியர்கள், தெகாவியர்கள், ஏலாமியரானவர்களும்,
\v 10 பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார், அந்த இடங்களிலிருந்து அழைத்துக்கொண்டுவந்து சமாரியாவின் பட்டணத்திலே குடியேறச் செய்த மற்ற மக்களும், நதிக்கு இந்தப் புறத்தில் இருக்கிற மற்ற மக்களுமே.
\s5
\v 11 அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இந்தப் புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்,
\p
\v 12 உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர்கள் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்குத் தெரிந்திருப்பதாக.
\s5
\v 13 இப்போதும் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, மதில்கள் கட்டி முடிக்கப்பட்டால், அவர்கள் எந்தவொரு வரியையும் கொடுக்கமாட்டார்கள்; அதனால் ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்குத் தெரிந்திருப்பதாக.
\s5
\v 14 இப்போதும், நாங்கள் அரண்மனை உப்பை சாப்பிடுவதால், ராஜாவுக்குக் குறைவு வருவதைப் பார்க்கிறது எங்களுக்கு முடியாத காரியம்; ஆகையால் நாங்கள் இதை அனுப்பி, ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
\v 15 உம்முடைய பிதாக்களின் நடபடி புத்தகங்களில் சோதித்துப்பார்க்கக் கட்டளையிடவேண்டும்; அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் தேசத்திற்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலகம் உள்ளதாயிருந்ததால் இந்தப் பட்டணம் அழிக்கப்பட்டது என்றும், அந்த நடபடி புத்ததகங்களில் கண்டறியலாம்.
\v 16 ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, இதன் மதில்கள் கட்டி முடிக்கப்பட்டால், நதிக்கு இந்தப்புறத்திலே உமக்கு ஒன்றும் இல்லாமல்போகும் என்பதை ராஜாவுக்கு தெரியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள்.
\s5
\v 17 அப்பொழுது ராஜா ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமுக்கும், பதிவாளனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், நதிக்கு மறுபுறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின மறுமொழியாவது: உங்களுக்கு சமாதானம்,
\v 18 நீங்கள் அனுப்பின மனு நமது சமுகத்தில் தெளிவாக வாசிக்கப்பட்டது.
\v 19 நம்முடைய கட்டளையினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாக எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும்,
\s5
\v 20 எருசலேமில் வல்லமையுள்ள ராஜாக்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் நதிக்கு மறுபுறத்தில் இருக்கிற சகல தேசங்களையும் ஆண்டுவந்தார்கள் என்றும், அனைத்து வரியும் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது என்றும் தெரியவருகிறது.
\v 21 இப்பொழுதும் நம்மிடத்திலிருந்து மறுஉத்தரவு வரும்வரை அந்த மனிதர்கள் அந்தப் பட்டணத்தைக் கட்டாமல் நிறுத்திவிடக் கட்டளையிடுங்கள்.
\v 22 இதிலே நீங்கள் தவறாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; ராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் ஏன் வரவேண்டும் என்று எழுதி அனுப்பினான்.
\s5
\v 23 ராஜாவாகிய அர்தசஷ்டாவுடைய கட்டளையின் நகல் ரெகூமுக்கும், பதிவாளனாகிய சிம்சாயிக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் விரைவாக எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப்போய், நிர்பந்தம் செய்தும் வலுக்கட்டாயமாகவும் அவர்களை வேலைசெய்யவிடாமல் நிறுத்திப்போட்டார்கள்.
\v 24 அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு அரசாட்சி செய்த இரண்டாம் வருடம்வரை நிறுத்தப்பட்டிருந்தது.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 தத்னாய் என்பவன் தரியு ராஜாவுக்குக் கடிதம் எழுதுதல்
\p
\v 1 அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் மகனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேலுடைய தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
\v 2 அப்பொழுது செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும் யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்கு தைரியம் சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.
\s5
\v 3 அக்காலத்திலே நதிக்கு இந்தப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் கூட்டாளிகள் அவர்களிடத்திற்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.
\v 4 அப்பொழுது அதற்கு ஏற்ற பதிலையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதர்களின் பெயர்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.
\v 5 ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடைசெய்யாதபடி, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.
\p
\s5
\v 6 நதிக்கு இந்தப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னும் தேசாதிபதியும், சேத்தார் பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான அவனுடன் இருந்தவர்களும், ராஜாவாகிய தரியுவுக்கு எழுதியனுப்பின கடிதத்தின் நகலாவது:
\v 7 ராஜாவாகிய தரியுவுக்கு முழு சமாதானமும் உண்டாவதாக.
\s5
\v 8 நாங்கள் யூத நாட்டிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்திற்குப் போனோம்; அது பெருங்கற்களால் கட்டப்படுகிறது; மதில்களின்மேல் நீண்ட மரங்கள் வைக்கப்பட்டு, அந்த வேலை ஒழுங்காக நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரிந்திருப்பதாக.
\v 9 அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம்.
\v 10 இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவர்களான மனிதர்கள் யார் என்று உமக்கு எழுதி தெரியப்படுத்த, அவர்களுடைய பெயர்கள் என்னவென்றும் கேட்டோம்.
\s5
\v 11 அவர்கள் எங்களுக்கு மறுமொழியாக: நாங்கள் பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் தேவனாக இருக்கிறவரைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருடங்களுக்குமுன்னே கட்டிமுடித்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.
\s5
\v 12 எங்கள் பிதாக்கள் பரலோகத்தின் தேவனைக் கோபப்படுத்தியதால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை இடித்து, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
\v 13 ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருடத்திலே கோரேஸ் ராஜா தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு கட்டளையிட்டார்.
\s5
\v 14 நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன், வெள்ளித் தட்டுமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து. அவர் தேசத்து ஆளுனராக ஏற்படுத்திய செஸ்பாத்சாரென்னும் பெயருள்ளவனிடத்தில் அவைகளை ஒப்படைத்து,
\v 15 அவனை நோக்கி: நீ இந்தத் தட்டுமுட்டுகளை எடுத்து, எருசலேமில் இருக்கும் தேவாலயத்திற்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் இடத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.
\s5
\v 16 அப்பொழுது அந்த செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டான்; அந்தநாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது; அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.
\s5
\v 17 இப்பொழுதும் ராஜாவுக்கு சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட, ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்து பார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய விருப்பம் என்னவென்று எங்களுக்கு எழுதியனுப்பவும், கட்டளையிடவும்வேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\s1 தரியு ராஜாவின் கட்டளை
\p
\v 1 அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள பத்திர அறையை சோதித்தார்கள்.
\v 2 மேதிய நாட்டிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரண்மனையிலே ஒரு சுருள் கிடைத்தது; அதிலே எழுதியிருந்த விபரமாவது:
\s5
\v 3 ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருடத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக்குறித்து இட்ட கட்டளை என்னவென்றால்: தேவாலயமானது பலிசெலுத்திவந்த இடத்திலே கட்டவேண்டும்; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருக்கவேண்டும்; அது அறுபதுமுழ உயரமும், அறுபதுமுழ அகலமுமாக இருக்கவேண்டும்.
\v 4 அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மாடிவரிசை புது நீண்டகற்களாக கட்டவேண்டும்; அதற்காக ஆகும் செலவு ராஜாவின் அரண்மனையிலிருந்து கொடுக்கப்படவேண்டும்.
\v 5 அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமின் ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்திற்குரிய பொன் வெள்ளிப் பொருட்கள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்களுடைய இடத்திற்குப் போய்சேருவதற்குத் திரும்பக் கொடுக்கவேண்டும்; அவைகளை தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுபோங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
\s5
\v 6 அப்பொழுது தரியு ராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு மறுபுறத்திலிருக்கிற ஆளுனராகிய தத்னாயும் சேத்தார்பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு மறுபுறத்திலிருக்கிற அதிகாரிகளான உங்களுடைய கூட்டாளிகளான அனைவரும் அந்த இடத்தைவிட்டு விலகியிருங்கள்.
\v 7 தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், மூப்பர்களும், தேவனுடைய ஆலயத்தை அதின் இடத்திலே கட்டக்கடவர்கள்.
\s5
\v 8 தேவனுடைய ஆலயத்தை யூத மூப்பர்கள் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்கு செய்யத்தக்கதாக, நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதர்களுக்குத் தடை ஏற்படாமலிருக்க, நதிக்கு மறுபுறத்தில் வாங்கப்படும் வரியை ராஜாவின் பணத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் ஆகும் செலவைக் கொடுக்கவேண்டும்.
\v 9 பரலோகத்தின் தேவனுக்கு சர்வாங்க தகனபலிகளை செலுத்தத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் ஆகியவை அனுதினம் அவர்கள் கேட்கிற விதத்தில் குறையில்லாமல் கொடுக்கவேண்டும்.
\v 10 எருசலேமில் இருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்கு சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவருடைய மகன்களுக்கும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுதல் செய்ய இப்படிச் செய்யவேண்டும்.
\s5
\v 11 பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளை என்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவனுடைய வீட்டிலிருந்து ஒரு நீண்ட கல் பிடுங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினால் அவனுடைய வீடு குப்பைமேடாவதாக.
\v 12 ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும், அனைத்து மக்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கச் செய்த தேவன் அழிப்பாராக; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதன்படி ஜாக்கிரதையாக செய்யவேண்டும் என்று எழுதியனுப்பினான்.
\s1 தேவாலயம் கட்டிமுடிக்கப்படுதலும் அதன் பிரதிஷ்டையும்
\p
\s5
\v 13 அப்பொழுது நதிக்கு இந்தப்புறத்திலிருக்கிற ஆளுனராகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்களின் கூட்டாளிகளும், தரியு ராஜா கட்டளையிட்ட பிரகாரம் ஜாக்கிரதையாக செய்தார்கள்.
\v 14 அப்படியே யூதரின் மூப்பர்கள் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் மகனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளையின்படியும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளையின்படியும் அதைக்கட்டி முடித்தார்கள்.
\v 15 ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருடம் ஆதார் என்னும் மாதத்தின் மூன்றாம் தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.
\s5
\v 16 அப்பொழுது இஸ்ரவேல் மக்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும், தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையை சந்தோஷமாகக் கொண்டாடினார்கள்.
\v 17 தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிகளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு,
\v 18 மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியர்களை அவர்களுடைய பிரிவுகளின்படியும், லேவியர்களை அவர்கள் முறைவரிசைகளின்படியும் நிறுத்தினார்கள்.
\s1 பஸ்கா பண்டிகை
\p
\s5
\v 19 சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினான்காம் தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள்.
\v 20 ஆசாரியர்களும் லேவியர்களும் ஒருமனப்பட்டுத் தங்களை சுத்தம் செய்துகொண்டதால், எல்லோரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லோருக்காகவும், ஆசாரியர்களான தங்களுடைய சகோதரர்களுக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்.
\s5
\v 21 அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் மக்களும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தைவிட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து,
\v 22 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாட்களாக சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்களுடைய கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாக அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்களிடம் சார்ந்திருக்கப்பண்ணினார்.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 எஸ்றா எருசலேமுக்கு வருதல்
\p
\v 1 இந்தக் காரியங்களுக்குப்பின்பு, செராயாவின் மகனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்; இந்தச் செராயா அசரியாவின் மகன், இவன் இல்க்கியாவின் மகன்,
\v 2 இவன் சல்லூமின் மகன், இவன் சாதோக்கின் மகன், இவன் அகிதூபின் மகன்,
\v 3 இவன் அமரியாவின் மகன், இவன் அசரியாவின் மகன், இவன் மெராயோதின் மகன்,
\v 4 இவன் சேராகியாவின் மகன், இவன் ஊசியின் மகன், இவன் புக்கியின் மகன்,
\v 5 இவன் அபிசுவாவின் மகன், இவன் பினெகாசின் மகன், இவன் எலெயாசாரின் மகன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் மகன்.
\s5
\v 6 இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாக இருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.
\v 7 அவனுடன் இஸ்ரவேல் மக்களிலும், ஆசாரியர்களிலும், லேவியர்களிலும், பாடகர்களிலும், வாசல் காவலாளர்களிலும், நிதனீமியரிலும், சிலர் அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருடத்திலே எருசலேமுக்குப் போனார்கள்.
\s5
\v 8 ஐந்தாம் மாதத்தில் அவன் எருசலேமுக்கு வந்தான்; அது அந்த ராஜாவின் ஏழாவது வருடமாக இருந்தது.
\v 9 முதலாம் மாதம் முதல் தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து பயணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல்தேதியிலே தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததால் எருசலேமுக்கு வந்தான்.
\v 10 கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதன்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.
\s1 ராஜாவாகிய அர்தசஷ்டா எஸ்றாவுக்கு எழுதின கடிதம்
\p
\s5
\v 11 கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும், படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த கடிதத்தின் நகலாவது:
\v 12 ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:
\v 13 நம்முடைய ராஜ்ஜியத்தில் இருக்கிற இஸ்ரவேல் மக்களிலும், அதின் ஆசாரியர்களிலும், லேவியர்களிலும், உன்னுடன் எருசலேமுக்குப் போக விருப்பமாயிருக்கிற அனைவரும் போகலாம் என்று நம்மாலே உத்தரவிடப்படுகிறது.
\s5
\v 14 நீ உன் கையிலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி, யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்தவும்,
\v 15 ராஜாவும் அவருடைய மந்திரிகளும் எருசலேமில் குடியிருக்கிற இஸ்ரவேலின் தேவனுக்கு மனவிருப்பத்துடன் கொடுத்த வெள்ளியையும் பொன்னையும்,
\v 16 பாபிலோன் தேசமெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய மக்களும் ஆசாரியர்களும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்திற்கென்று மனஉற்சாகமாகக் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிகளாலும் அனுப்பப்படுகிறாய்.
\s5
\v 17 ஆகையால் அந்தப் பணத்தால் நீ தாமதமின்றி காளைகளையும், ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த போஜனபலிகளையும், பானபலிகளையும் வாங்கி, அவைகளை எருசலேமிலுள்ள உங்கள் தேவனுடைய ஆலயத்து பலிபீடத்தின்மேல் செலுத்துவாயாக.
\v 18 மீதியான வெள்ளியையும் பொன்னையும்கொண்டு செய்யவேண்டியது இன்னதென்று உனக்கும் உன் சகோதரர்களுக்கும் நலமாகத் தோன்றுகிறபடி அதை உங்கள் தேவனுடைய சித்தத்தின்படியே செய்யுங்கள்.
\s5
\v 19 உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பொருட்களையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கவேண்டும்.
\v 20 பின்னும் உன் தேவனுடைய ஆலயத்திற்கு அவசியமாகக் கொடுக்கவேண்டியிருப்பதை, நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக.
\s5
\v 21 நதிக்கு அப்புறத்திலிருக்கிற அனைத்து பொருளாளர்களுக்கும் அர்தசஷ்டா என்னும் ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை என்னவென்றால், பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன், நூறு தாலந்து வெள்ளி, நூறுகலம் கோதுமை, நூறுகலம் திராட்சரசம், நூறுகலம் எண்ணெய்வரை, உங்களிடம் கேட்கிற எல்லாவற்றையும்,
\v 22 வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும்,
\v 23 பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு கவனமாக செலுத்தப்படவும் வேண்டும்; ராஜாவும் அவருடைய மகன்களும் ஆளும் தேசத்தின்மேல் கடுங்கோபம் ஏன் வரவேண்டும்.
\s5
\v 24 பின்னும் ஆசாரியர்களும், லேவியர்களும், பாடகர்களும், வாசல் காவலாளர்களும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் எந்தவொரு வரியையும் சுமத்தக்கூடாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
\s5
\v 25 மேலும் நதிக்கு மறுபுறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த அனைத்து மக்களையும் நியாயம் விசாரிக்கத் தகுதியுள்ள அறிஞர்களையும், நியாயாதிபதிகளையும், எஸ்றாவாகிய நீ உன்னிலுள்ள உன் தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக; அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளைப் போதிக்கவும் வேண்டும்.
\v 26 உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும், ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், நாடு கடத்தப்படுதலுக்காகிலும், அபராதத்துக்காகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவன் என்று எழுதியிருந்தது.
\p
\s5
\v 27 எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிகளுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப்பிரபுக்களுக்கும் முன்பாக எனக்கு தயவு கிடைக்கச் செய்த எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
\v 28 அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவர்களை என்னுடன் வரும்படி சேர்த்துக்கொண்டேன்.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 எஸ்றாவுடன் திரும்பிவந்த வம்சத்தலைவர்களின் அட்டவணை
\p
\v 1 அர்தசஷ்டா ராஜா அரசாளும் காலத்தில் பாபிலோனிலிருந்து என்னுடன் வந்த தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின் தலைவர்களும் அவர்கள் வம்ச அட்டவணைகளுமாவன:
\v 2 பினெகாசின் மகன்களில் கெர்சோம், இத்தாமாரின் மகன்களில் தானியேல், தாவீதின் மகன்களில் அத்தூஸ்,
\v 3 பாரோஷின் மகன்களில் ஒருவனான செக்கனியாவின் மகன்களில் சகரியாவும், அவனுடன் வம்ச அட்டவணையில் எழுதியிருக்கிற நூற்று ஐம்பது ஆண்மக்களும்,
\s5
\v 4 பாகாத்மோவாபின் மகன்களில் செரகியாவின் மகனாகிய எலியோனாயும், அவனுடன் இருநூறு ஆண்மக்களும்,
\v 5 செக்கனியாவின் மகன்களில் யகசியேலின் மகனும், அவனுடன் முந்நூறு ஆண்மக்களும்,
\v 6 ஆதினின் மகன்களில் யோனத்தானின் மகனாகிய ஏபேதும், அவனுடன் ஐம்பது ஆண்மக்களும்,
\v 7 ஏலாமின் மகன்களில் அதலியாவின் மகனாகிய எஷாயாவும், அவனுடன் எழுபது ஆண்மக்களும்,
\s5
\v 8 செப்பதியாவின் மகன்களில் மிகவேலின் மகனாகிய செப்பதியாவும், அவனுடன் எண்பது ஆண்மக்களும்,
\v 9 யோவாபின் மகன்களில் யெகியேலின் மகனாகிய ஒபதியாவும், அவனுடன் இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும்,
\v 10 செலோமித்தின் மகன்களில் யொசிபியாவின் மகனும், அவனுடன் நூற்று அறுபது ஆண்மக்களும்,
\v 11 பெயாயின் மகன்களில் பெயாயின் மகனாகிய சகரியாவும், அவனுடன் இருபத்தெட்டு ஆண்மக்களும்,
\s5
\v 12 அஸ்காதின் மகன்களில் காத்தானின் மகனாகிய யோகனானும், அவனுடன் நூற்றுப்பத்து ஆண்மக்களும்,
\v 13 அதோனிகாமின் கடைசிப் புத்திரரான எலிபேலேத், ஏயெல், செமாயா என்னும் பெயர்களுள்ளவர்களும், அவர்களுடன் அறுபது ஆண்மக்களும்,
\v 14 பிக்வாயின் மகன்களில் ஊத்தாயும், சபூதும், அவர்களுடன் எழுபது ஆண்மக்களுமே.
\s1 எருசலேமுக்குத் திரும்புதல்
\p
\s5
\v 15 இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதிக்கு அருகில் கூட்டிக்கொண்டுபோனேன்; அங்கே மூன்று நாட்கள் தங்கியிருந்தோம்; நான் மக்களையும் ஆசாரியர்களையும் பார்வையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை.
\v 16 ஆகையால் நான் எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மிசுல்லாம் என்னும் தலைவரையும், யோயாரிப், எல்நாத்தான் என்னும் புத்திமான்களையும் அழைப்பித்து,
\s5
\v 17 கசிப்பியா என்னும் இடத்திலிருக்கிற தலைவனாகிய இத்தோவிடத்திற்குச் செய்தி கொண்டுபோக அவர்களுக்குக் கற்பித்து, நமது தேவனுடைய ஆலயத்துப் பணிவிடைக்காரர்களை எங்களிடத்திற்கு அழைத்துவரும்படி, அவர்கள் கசிப்பியா என்னும் இடத்திலிருக்கிற தங்கள் சகோதரனாகிய இத்தோவுக்கும், நிதனீமியர்களுக்கும் சொல்லவேண்டிய வார்த்தைகளைச் சொல்லிக்கொடுத்தேன்.
\s5
\v 18 அவர்கள் எங்கள்மேல் இருந்த எங்கள் தேவனுடைய தயையுள்ள கரத்தின்படியே, இஸ்ரவேலுக்குப் பிறந்த லேவியின் மகனாகிய மகேலியின் மகன்களில் புத்தியுள்ள மனிதனாகிய செரெபியாவும் அவனுடைய மகன்களும் சகோதரர்களுமான பதினெட்டுப்பேரையும்,
\v 19 மெராரியரின் மகன்களில் அஷபியாவும் அவனுடன் எஷாயாவும் அவனுடைய சகோதரர்களும் அவர்கள் மகன்களுமான இருபதுபேரையும்,
\v 20 தாவீதும் பிரபுக்களும் லேவியர்களுக்குப் பணிவிடைக்காரர்களாக வைத்த நிதனீமியரில் இருநூற்று இருபதுபேரையும், எங்களிடத்தில் அழைத்துக்கொண்டு வந்தார்கள்; அவர்கள் எல்லோருடைய பெயர்களும் குறிக்கப்பட்டன.
\s5
\v 21 அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் அனைத்து பொருட்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதிக்கு அருகில் உபவாசத்தை அறிவித்தேன்.
\v 22 வழியிலே சத்துருவை விலக்கி, எங்களுக்குத் துணைசெய்யும்படி, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரர்களையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிற எல்லோர்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லோர்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்.
\v 23 அப்படியே நாங்கள் உபவாசம்செய்து, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
\s5
\v 24 பின்பு நான் ஆசாரியர்களின் தலைவரிலே பன்னிரண்டுபேராகிய செரெபியாவையும், அஷ்பியாவையும், அவர்களுடைய சகோதரர்களிலே பத்துப்பேரையும் பிரித்தெடுத்து,
\v 25 ராஜாவும், அவருடைய ஆலோசனைக்காரர்களும், அவருடைய பிரபுக்களும், அங்கேயிருந்த அனைத்து இஸ்ரவேலரும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும், பொன்னையும், பொருட்களையும் அவர்களிடத்தில் எடைபோட்டுக் கொடுத்தேன்.
\s5
\v 26 அவர்கள் கையிலே நான் அறுநூற்று ஐம்பது தாலந்து வெள்ளியையும், நூறு தாலந்து நிறையான வெள்ளிப் பொருட்களையும், நூறு தாலந்து பொன்னையும்,
\v 27 ஆயிரம் தங்கக்காசு பெறுமான இருபது பொற்கிண்ணங்களையும், பொன்னைப்போல எண்ணப்பட்ட பளபளப்பான இரண்டு நல்ல வெண்கலப் பாத்திரங்களையும் எடைபோட்டுக்கொடுத்து,
\s5
\v 28 அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்கள்; இந்தப் பொருட்களும், உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு மனஉற்சாகமாகச் செலுத்தப்பட்ட இந்த வெள்ளியும், இந்தப் பொன்னும் பரிசுத்தமானவைகள்.
\v 29 நீங்கள் அதை எருசலேமிலிருக்கிற தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் ஆசாரியர்கள் லேவியருடைய பிரபுக்களுக்கும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவர்களுக்கும் முன்பாக எடைபோட்டு ஒப்புவிக்குமட்டும் விழிப்பாயிருந்து, அதைக் காத்துக்கொள்ளுங்கள் என்றேன்.
\v 30 அப்படியே அந்த ஆசாரியர்களும் லேவியர்களும், அந்த வெள்ளியையும் பொன்னையும் பொருட்களையும் எருசலேமிலிருக்கிற எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுபோகும்படிக்கு, எடைபோட்டுகொண்டார்கள்.
\p
\s5
\v 31 நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாம் தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம்; எங்கள் தேவனுடைய கரம் எங்கள்மேலிருந்து, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது.
\v 32 நாங்கள் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாட்கள் இருந்தபின்பு,
\s5
\v 33 நான்காம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பொருட்களும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் மகன் மெரேமோத்தின் கையிலும், பினெகாசின் மகன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படியேயும் எடைபோட்டு, ஒப்புவிக்கப்பட்டது; யெசுவாவின் மகன் யோசபாத்தும், பின்னூயின் மகன் நொவதியாவும் என்கிற லேவியர்களும் அவர்களுடன் இருந்தார்கள்.
\v 34 அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது.
\s5
\v 35 சிறைப்பட்டு மீண்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் பன்னிரண்டு காளைகளையும், தொண்ணூற்றாறு ஆட்டுக்கடாக்களையும், எழுபத்தேழு ஆட்டுக்குட்டிகளையும், பாவநிவாரணத்துக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு, அவையெல்லாம் கர்த்தருக்கு சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள்.
\v 36 பின்பு ராஜாவின் ஆணைகளை நதிக்கு இப்புறத்திலிருக்கிற ராஜாவின் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒப்புவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் மக்களுக்கும் தேவனுடைய ஆலயத்திற்கும் உதவியாக இருந்தார்கள்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 கலப்புத் திருமணத்தைக்குறித்து எஸ்றாவின் ஜெபம்
\p
\v 1 இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடம் வந்து: இஸ்ரவேல் மக்களும், ஆசாரியர்களும் லேவியர்களும் ஆகிய இவர்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்கள், அம்மோனியர்கள், மோவாபியர்கள், எகிப்தியர்கள், அம்மோரியர்கள் என்னும் இந்த தேசங்களின் மக்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.
\v 2 எப்படியென்றால், அவர்களுடைய மகள்களிலே தங்களுக்கும் தங்கள் மகன்களுக்கும் பெண்களைத் திருமணம் செய்துகொண்டார்கள்; இப்படியே பரிசுத்த வித்து தேசங்களின் மக்களோடே கலந்துவிட்டது; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்.
\s5
\v 3 இந்தக் காரியத்தை நான் கேட்டபொழுது, என் ஆடையையும் என் சால்வையையும் நான் கிழித்து, என் தலையிலும் என் தாடியிலுமுள்ள முடியைப் பிடுங்கித் திகைத்தவனாக உட்கார்ந்திருந்தேன்.
\v 4 அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தின் காரணமாக இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற அனைவரும் என்னுடன் கூடிக்கொண்டார்கள்; நானோ மாலை பலி செலுத்தப்படும்வரை திகைத்தவனாக உட்கார்ந்துகொண்டிருந்தேன்.
\s5
\v 5 மாலை பலி செலுத்தப்படும் நேரத்திலே நான் துக்கத்தோடே எழுந்து, கிழித்துக்கொண்ட ஆடையோடும் சால்வையோடும் முழங்காற்படியிட்டு, என் கைகளை என் தேவனாகிய கர்த்தருக்கு நேராக விரித்து:
\v 6 என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கப்பட்டுக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகினது; எங்கள் குற்றம் வானம்வரை உயர்ந்துபோனது.
\s5
\v 7 எங்கள் பிதாக்களின் நாட்கள்முதல் இந்நாள்வரை நாங்கள் பெரிய குற்றத்திற்கு உள்ளாயிருக்கிறோம்; எங்கள் அக்கிரமங்களினாலே நாங்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் ஆசாரியர்களும், இந்நாளிலிருக்கிறதுபோல, அந்நியதேச ராஜாக்களின் கையிலே, பட்டயத்திற்கும், சிறையிருப்புக்கும், கொள்ளைக்கும், வெட்கத்திற்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டோம்.
\s5
\v 8 இப்பொழுதும் எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களிலே தப்பின சிலரை மீதியாக வைக்கவும், தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தில் எங்களுக்கு ஒரு இடத்தைக் கொடுக்கவும், இப்படியே எங்கள் தேவன் எங்கள் கண்களைப் பிரகாசமடையச் செய்து, எங்கள் அடிமைத்தனத்திலே எங்களுக்குக் கொஞ்சம் உயிர் கொடுக்கவும், அவராலே கொஞ்சநேரமாவது கிருபை கிடைத்தது.
\v 9 நாங்கள் அடிமைகளாயிருந்தோம்; ஆனாலும் எங்கள் அடிமைத்தனத்திலே எங்கள் தேவன் எங்களைக் கைவிடாமல், எங்களுக்கு உயிர்கொடுக்கவும்; நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டி, பழுதடைந்த அதைப் புதுப்பிக்கவும் எங்களுக்கு யூதாவிலும் எருசலேமிலும் ஒரு வேலியைக் கட்டளையிடும்படிக்கும், பெர்சியாவின் ராஜாக்களின் சமுகத்தில் எங்களுக்குத் தயைகிடைக்கச் செய்தார்.
\s5
\v 10 இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்னசொல்லுவோம்; தேவரீர் உமது ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு போதித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம்.
\v 11 நீங்கள் குடியேறுகிறதற்கு உட்பிரவேசிக்கும் தேசமானது; தேசாதேசங்களுடைய மக்களின் அசுத்தத்தினாலும், அவர்கள் அதை ஒரு முனைதொடங்கி மறுமுனைவரை நிறையச் செய்த அவர்களுடைய அருவருப்புகளினாலும் அவர்களுடைய அசுத்தத்தாலும், தீட்டுப்பட்டதாயிருக்கிறது.
\v 12 ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைச் சாப்பிட்டு, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு சொத்தாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உங்கள் மகன்களுக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.
\s5
\v 13 இப்பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செயல்களினாலும், எங்கள் பெரிய குற்றத்தாலும், இவைகளெல்லாம் எங்கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்திற்குத்தக்க ஆக்கினையை எங்களுக்கு இடாமல், எங்களை இப்படித் தப்பவிட்டிருக்கும்போது,
\v 14 நாங்கள் உமது கற்பனைகளை வீணாக்கவும், இந்த அருவருப்புகளுள்ள மக்களோடே சம்பந்தம் கலக்கவும் முடியுமோ? அப்படிச் செய்தால், எங்களில் ஒருவரும் மீந்து தப்பாதபடிக்கு, தேவரீர் எங்களை நிர்மூலமாக்கும்வரை எங்கள்மேல் கோபமாயிருப்பீர் அல்லவோ?
\s5
\v 15 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதின் காரணமாக நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று விண்ணப்பம் செய்தேன்.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 மக்களின் பாவ அறிக்கை
\p
\v 1 எஸ்றா இப்படி விண்ணப்பம்செய்து, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்திற்கு முன்பாகத் தாழவிழுந்துகிடக்கும்போது, இஸ்ரவேலில் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடினது; மக்கள் மிகவும் அழுதார்கள்.
\v 2 அப்பொழுது ஏலாமின் மகன்களில் ஒருவனாகிய யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து மக்களிலுள்ள அந்நியப் பெண்களைச் சேர்த்துக்கொண்டதால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.
\s5
\v 3 இப்பொழுதும் அந்தப் பெண்கள் எல்லோரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனுடன் உடன்படிக்கை செய்வோமாக; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக.
\v 4 எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்குரியது; நாங்களும் உம்மோடு இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.
\s5
\v 5 அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் முக்கியமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்ய, அவர்களை ஆணையிடச் சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்.
\v 6 அதன்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்திற்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் மகனாகிய யோகனானின் அறைக்குள் சென்றான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினால் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.
\s5
\v 7 அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும்,
\v 8 மூன்று நாட்களுக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராமல்போனால், அவனுடைய பொருட்களெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபையிலிருந்து அவன் விலக்கப்படுவான் என்றும், யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம் செய்தார்கள்.
\s5
\v 9 அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லோரும் மூன்று நாட்களுக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாம் தேதியாயிருந்தது; மக்கள் எல்லோரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
\v 10 அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேல் இருக்கிற குற்றத்தை அதிகரிக்கச்செய்ய, வேறு இனப் பெண்களைத் திருமணம்செய்ததால் பாவம் செய்தீர்கள்.
\s5
\v 11 இப்பொழுதும் நீங்கள் உங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் மக்களையும், வேறு இனப் பெண்களையும் விட்டுவிலகுங்கள் என்றான்.
\s5
\v 12 அப்பொழுது சபையார் அனைவரும் மகா சத்தத்தோடே மறுமொழியாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.
\v 13 ஆனாலும் மக்கள் திரளாயிருக்கிறார்கள், இது மழைக்காலமுமாக இருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே முடியாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளையை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.
\s5
\v 14 ஆகையால் இதற்கு சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரர்களாக ஏற்படுத்தப்படவேண்டும்; இந்தக் காரியத்தினால் நம்முடைய தேவனுக்கு இருக்கிற கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் வேறு இனமான பெண்களைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரவேண்டும் என்றார்கள்.
\v 15 ஆசகேலின் மகன் யோனத்தானும், திக்காவின் மகன் யக்சியாவும் மாத்திரம் அதை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.
\s5
\v 16 சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாக்களுடைய வம்சங்களின் தலைவர்கள் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல் தேதியிலே, தனித்து உட்கார்ந்து,
\v 17 வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள் எல்லோருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.
\s1 கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள்
\p
\s5
\v 18 ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன்களிலும் அவனுடைய சகோதரர்களிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.
\v 19 இவர்கள் தங்கள் பெண்களைத் தள்ளிவிடுவோம் என்று உறுதிமொழி கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானதால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
\s5
\v 20 இம்மேரின் மகன்களில் அனானியும், செபதியாவும்,
\v 21 ஆரீமின் மகன்களில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;
\v 22 பஸ்கூரின் மகன்களில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;
\s5
\v 23 லேவியர்களில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பெயர்கொண்ட கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்;
\v 24 பாடகர்களில் எலியாசியும், வாசல் காவலாளர்களில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;
\v 25 மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் மகன்களில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
\s5
\v 26 ஏலாமின் மகன்களில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;
\v 27 சத்தூவின் மகன்களில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும்;
\v 28 பெபாயின் மகன்களில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;
\v 29 பானியின் மகன்களில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும்,
\s5
\v 30 பாகாத்மோவாபின் மகன்களில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்;
\v 31 ஆரீமின் மகன்களில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன்,
\v 32 பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்;
\s5
\v 33 ஆசூமின் மகன்களில் மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும்;
\v 34 பானியின் மகன்களில் மாதாயி, அம்ராம், ஊவேல்,
\v 35 பெனாயா, பெதியா, கெல்லூ,
\v 36 வனியா, மெரெமோத், எலெயாசீப்,
\s5
\v 37 மத்தனியா, மதனாய், யாசாய்,
\v 38 பானி, பின்னூயி, சிமெயி,
\v 39 செலேமியா, நாத்தான், அதாயா,
\v 40 மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,
\s5
\v 41 அசரெயேல், செலேமியா, செமரியா,
\v 42 சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;
\v 43 நேபோவின் மகன்களில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.
\v 44 இவர்கள் எல்லோரும் வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள்; இவர்களில் சிலர் திருமணம்செய்த பெண்களிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.

650
16-NEH.usfm Normal file
View File

@ -0,0 +1,650 @@
\id NEH
\ide UTF-8
\h நெகேமியா
\toc1 நெகேமியா
\toc2 நெகேமியா
\toc3 neh
\mt1 நெகேமியா
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 நெகேமியாவின் ஜெபம்
\p
\v 1 அகலியாவின் மகனாகிய நெகேமியாவின் செயல்பாடுகள்: இருபதாம் வருடம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசான் என்னும் அரண்மனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,
\v 2 என்னுடைய சகோதரர்களில் ஒருவனாகிய ஆனானியும், வேறு சில மனிதர்களும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பிலிருந்து தப்பின யூதர்களின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்.
\s5
\v 3 அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீதியாக இருக்கிறவர்கள் அந்த தேசத்திலே கொடிய தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் மதில் இடிக்கப்பட்டும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டும் கிடக்கிறது என்றார்கள்.
\s5
\v 4 இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாட்களாகத் துக்கப்பட்டு, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:
\v 5 பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,
\s5
\v 6 உமது அடியார்களாகிய இஸ்ரவேல் மக்களுக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் மக்களாகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவிகள் கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என்னுடைய தகப்பன் வீட்டார்களும் பாவம் செய்தோம்.
\v 7 நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாக நடந்தோம்; நீர் உம்முடைய ஊழியனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாமற்போனோம்.
\s5
\v 8 நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை தேசங்களுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,
\v 9 நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே சிதறுண்டுபோனவர்கள் வானத்தின் கடைசி முனையில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என்னுடைய நாமம் விளங்குவதற்காக நான் தெரிந்துகொண்ட இடத்திற்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய ஊழியனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.
\s5
\v 10 தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியார்களும் உமது மக்களும் இவர்கள்தானே.
\v 11 ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்திற்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியார்களின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரச்செய்து, இந்த மனிதனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கச்செய்தருளும் என்று ஜெபம் செய்தேன். நான் ராஜாவிற்குப் பானம் பரிமாறுகிறவனாக இருந்தேன்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 அர்தசஷ்டா நெகேமியாவை எருசலேமிற்கு அனுப்புதல்
\p
\v 1 அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருடம் நிசான் மாதத்திலே, திராட்சைரசம் ராஜாவிற்கு முன்பாக வைத்திருக்கும்போது, நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன்பு ஒருபோதும் அவருக்கு முன்பாக துக்கமாக இருந்ததில்லை.
\v 2 அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாக இருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே தவிர வேறொன்றும் இல்லை என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,
\s5
\v 3 ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என்னுடைய தகப்பன்மார்களின் கல்லறைகள் இருக்கும் இடமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டும் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இல்லாமல் இருப்பது எப்படி என்றேன்.
\s5
\v 4 அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்செய்து,
\v 5 ராஜாவைப் பார்த்து: ராஜாவிற்கு விருப்பமாயிருந்து, அடியேனுக்கு உமது முன்னிலையில் தயவு கிடைத்ததானால், என்னுடைய தகப்பன்மார்களின் கல்லறைகள் இருக்கும் பட்டணத்தைக் கட்டுவதற்கு, யூதா தேசத்திற்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.
\v 6 அப்பொழுது ராணியும், பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன்னுடைய பிரயாணத்திற்கு எத்தனை நாட்கள் ஆகும், நீ எப்பொழுது திரும்பி வருவாய் என்று கேட்டார். இவ்வளவுநாட்கள் ஆகுமென்று நான் ராஜாவிற்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்கு விருப்பமானது.
\s5
\v 7 பின்னும் நான் ராஜாவைப் பார்த்து: ராஜாவிற்குச் விருப்பமாயிருந்தால், நான் யூதா தேசத்திற்குப்போய்ச் சேரும்வரை, நதிக்கு மறுபுறத்திலிருக்கிற ஆளுநர்கள் நான் போக அனுமதியளிக்கவும் அவர்களுக்கு நான் கடிதங்கள் கொடுப்பதற்காகவும்,
\v 8 தேவாலயத்தில் இருக்கிற கோட்டையின் கதவு வேலைக்கும், நகரமதிலின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுப்பதற்காகவும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்ததால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.
\s5
\v 9 அப்படியே நான் நதிக்கு மறுபுறத்திலிருக்கிற ஆளுநர்களிடத்திற்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன்; ராஜா என்னோடு இராணுவ அதிகாரிகளையும், குதிரைவீரர்களையும் அனுப்பியிருந்தார்.
\v 10 இதை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் மக்களின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் கோபமாக இருந்தது.
\s1 நெகேமியா எருசலேம் மதில்களைக் கண்காணித்தல்
\p
\s5
\v 11 நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாட்கள் இருந்தபின்பு,
\v 12 நான் சில மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, இரவில் எழுந்து நகரத்தைச் சோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமிற்காகச் செய்யவேண்டிய காரியத்தை என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகத்தைத் தவிர வேறொரு மிருகமும் என்னுடன் இருந்ததில்லை.
\s5
\v 13 நான் அன்று இரவு பள்ளத்தாக்கின் வாசல் வழியாகப் புறப்பட்டு, வலுசர்ப்பக்கிணற்றைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன மதிலையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன்.
\v 14 அந்த இடத்தைவிட்டு ஊற்றுவாசல் அருகிலும், ராஜாவின் குளத்தின் அருகிலும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோவதற்கு வழி இல்லாதிருந்தது.
\s5
\v 15 அன்று இரவிலேயே நான் ஆற்றோரமாகப் போய், மதிலைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாக வந்துவிட்டேன்.
\v 16 நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காவது, ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காவது, வேலைசெய்கிற மற்றவர்களுக்காவது ஒன்றும் தெரிவிக்கவில்லை.
\s5
\v 17 பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருப்பதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடப்பதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி அவமானம் அடையாமலிருக்க, எருசலேமின் மதிலைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,
\v 18 என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருப்பதையும், ராஜா என்னோடு சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு தெரிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளை பலப்படுத்தினார்கள்.
\s5
\v 19 ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களை கேலிசெய்து, எங்களை அவமதித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவிற்கு விரோதமாகக் கலகம் செய்யப்போகிறீர்களோ என்றார்கள்.
\v 20 அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரச்செய்வார்; அவருடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோ எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பெயர்சொல்லப்பட ஒன்றும் இல்லையென்று அவர்களிடம் சொன்னேன்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 மதிலைக் கட்டுபவர்கள்
\p
\v 1 அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவனுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைசெய்து, அதின் கதவுகளை வைத்து, நூறு என்கிற கோபுரம்முதல் அனானெயேலின் கோபுரம்வரைக் கட்டிப் பிரதிஷ்டை செய்தார்கள்.
\v 2 அவன் அருகே எரிகோவின் மனிதர்கள் கட்டினார்கள்; அவர்கள் அருகே இம்ரியின் மகனாகிய சக்கூர் கட்டினான்.
\s5
\v 3 மீன்வாசலை அசெனாவின் மகன்கள் கட்டினார்கள்; அதற்கு உத்தரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுக்களையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
\v 4 அவர்கள் அருகே கோசின் மகனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகில் மெஷேசாபெயேலின் மகனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் மகனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான்.
\v 5 அவர்கள் அருகே தெக்கோவா ஊரைச்சேர்ந்தவர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய தலைவர்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்களுடைய கழுத்தைக் கொடுக்கவில்லை.
\s5
\v 6 பழைய வாசலைப் பசெயாகின் மகனாகிய யோய்தாவும், பேசோதியாவின் மகனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்தரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
\v 7 அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனிதர்களின் மெலதீயா என்னும் கிபியோனியனும், யாதோன் என்னும் மெரொனோத்தியனும், நதிக்கு மறுபுறத்திலிருக்கிற ஆளுநரின் மாகாணம்வரை பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
\s5
\v 8 அவர்கள் அருகே பொற்கொல்லர்களில் ஒருவனாகிய அராயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே வாசனைத்திரவியம் தயாரிக்கிறவனின் மகனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான்; அதுமுதல் அகலமான மதில்வரை எருசலேம் இடிக்காமல் விடப்பட்டிருந்தது.
\v 9 அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதியை ஆட்சி செய்யும் ஊரின் மகன் ரெப்பாயா பழுதுபார்த்துக்கட்டினான்.
\v 10 அவர்கள் அருகே அருமாப்பின் மகன் யெதாயா தன்னுடைய வீட்டுக்கு எதிரில் உள்ளப்பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் மகன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.
\s5
\v 11 மற்றப் பகுதியையும், சூளைகளின் கோபுரத்தையும், ஆரீமின் மகன் மல்கிஜாவும், பாகாத்மோவாபின் மகன் அசூபும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
\v 12 அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதியை ஆட்சி செய்யும் அலோகேசின் மகன் சல்லூமும், அவனுடைய மகள்களும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
\s5
\v 13 பள்ளத்தாக்கின்வாசலை ஆனூனும், சானோவாகின் மக்களும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்வரையும் மதிலில் ஆயிரம் முழம் கட்டினார்கள்.
\s5
\v 14 குப்பைமேட்டுவாசலைப் பெத்கேரேமின் மாகாணத்தை ஆட்சி செய்யும் ரெக்காவின் மகன் மல்கியா பழுதுபார்த்து, அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்.
\v 15 ஊற்றுவாசலை மிஸ்பாவின் மாகாணத்தை ஆட்சி செய்யும் கொல்லோசேயின் மகன் சல்லூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி, கூரையமைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, ராஜாவின் தோட்டத்தின் அருகிலிருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள்வரை இருக்கிறதையும் கட்டினான்.
\s5
\v 16 அவனுக்குப் பின்னாகப் பெத்சூர் மாகாணத்தின் பாதியை ஆட்சி செய்த அஸ்பூகின் மகன் நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடம்வரைக்கும், வெட்டப்பட்ட குளம்வரைக்கும், பலசாலிகளின் வீடுவரைக்கும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
\v 17 அவனுக்குப் பின்னாக லேவியர்களில் பானியின் மகன் ரேகூமும், அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்கை ஆட்சி செய்யும் அசபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
\s5
\v 18 அவனுக்குப் பிறகு அவனுடைய சகோதரர்களில் கேகிலா மாகாணத்து மறுபாதியை ஆட்சி செய்யும் எனாதாதின் மகன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான்.
\v 19 அவன் அருகே மிஸ்பாவை ஆட்சி செய்யும் யெசுவாவின் மகன் ஏசர் என்பவன் மதிலின் கடைசிமுனையிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பகுதியை பழுதுபார்த்துக் கட்டினான்.
\s5
\v 20 அவனுக்குப் பின்னாகச் சாபாயின் மகன் பாரூக் அந்தக் கடைசிமுனையிலிருந்து பிரதான ஆசாரியனாகிய எலியாசீபின் வாசற்படிவரை இருக்கிற பின்னொரு பகுதியை மிக கவனமாக பழுதுபார்த்துக் கட்டினான்.
\v 21 அவனுக்குப் பிறகு கோசின் மகனாகிய உரியாவின் மகன் மெரெமோத் எலியாசீபின் வீட்டு வாசற்படியிலிருந்து அவனுடைய வீட்டின் கடைசிமுனைவரை இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
\s5
\v 22 அவனுக்குப் பிறகு சமபூமியில் தங்கியிருக்கிற ஆசாரியர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
\v 23 அவர்களுக்குப் பிறகு பென்யமீனும், அசூபும் தங்களுடைய வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பிறகு அனனியாவின் மகனாகிய மாசேயாவின் மகன் அசரியா தன்னுடைய வீட்டின் அருகே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
\v 24 அவனுக்குப் பின்னாக எனாதாதின் மகன் பின்னூவி அசரியாவின் வீடுமுதல் மதிலின் கடைசிமுனைவரை வளைவுவரைக்கும் இருக்கிற வேறொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
\s5
\v 25 ஊசாயின் மகன் பாலால் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் வாசலில் ராஜாவின் உயரமான அரண்மனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கோபுரத்திற்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்குப் பிறகு பாரோஷின் மகன் பெதாயாவும்,
\v 26 ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியர்களைச் சேர்ந்த மனிதர்களும் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசலுக்கு வெளிப்புறமான கோபுரத்திற்கு எதிரேயிருக்கிற இடம்வரைக் கட்டினார்கள்.
\v 27 அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரைச்சேர்ந்தவர்கள் வெளிப்புறமான பெரிய கோபுரத்திற்கு எதிரே ஓபேலின் மதில்வரை இருக்கிற மற்றொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
\s5
\v 28 குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்களுடைய வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
\v 29 அவர்களுக்குப் பிறகு இம்மேரின் மகன் சாதோக் தன்னுடைய வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்குப் பிறகு கிழக்குவாசலைக் காக்கிற செக்கனியாவின் மகன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
\v 30 அவனுக்குப் பிறகு செல்மீயாவின் மகன் அனனியாவும், சாலாபின் ஆறாவது மகனாகிய ஆனூனும், வேறொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பிறகு பெரகியாவின் மகன் மெசுல்லாம், தன்னுடைய அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
\s5
\v 31 அவனுக்குப் பிறகு பொற்கொல்லனின் மகன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே ஆலயப் பணியாளர்களும் வியாபாரிகளும் குடியிருக்கிற இடம்முதல் கடைசி முனையின் மேல்வீடுவரைக்கும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
\v 32 கடைசிமுனையின் மேல்வீட்டுக்கும் ஆட்டுவாசலுக்கும் நடுவே இருக்கிறதை பொற்கொல்லர்களும் வியாபாரிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு
\p
\v 1 நாங்கள் மதிலைக் கட்டுகிற செய்தியை சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதர்களை கேலிசெய்து:
\v 2 அந்த அற்பமான யூதர்கள் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன்னுடைய சகோதரர்களுக்கும் சமாரியாவின் படைக்கும் முன்பாகச் சொன்னான்.
\v 3 அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவனுடைய பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.
\s5
\v 4 எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் செய்த இகழ்ச்சியை அவர்களுடைய தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே கொள்ளையிடப்பட ஒப்புக்கொடும்.
\v 5 அவர்களுடைய அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்களுடைய பாவம் உமக்கு முன்பாக அழிக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனவேதனை உண்டாகப் பேசினார்களே.
\v 6 நாங்கள் மதிலைக் கட்டிவந்தோம்; மதில்கள் எல்லாம் பாதிவரை ஒன்றாக இணைந்து உயர்ந்தது; மக்கள் வேலைசெய்வதற்கு ஆவலாக இருந்தார்கள்.
\s5
\v 7 எருசலேமின் மதிலைக் கட்டுகிற வேலை முன்னேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டுவருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியர்களும், அம்மோனியர்களும், அஸ்தோத்தியர்களும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலடைந்து,
\v 8 எருசலேமின்மேல் போர்செய்ய எல்லோரும் ஒன்றாக வரவும், வேலையைத் தடுக்கவும் முடிவு செய்தார்கள்.
\v 9 ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்செய்து, அவர்களுக்காக இரவும்பகலும் காவல் காக்கிறவர்களை வைத்தோம்.
\s5
\v 10 அப்பொழுது யூதா மனிதர்கள்: சுமைகாரர்களின் பெலன் குறைந்துபோகிறது; மண்மேடு மிச்சமாக இருக்கிறது; நாங்கள் மதிலைக் கட்டக்கூடாது என்றார்கள்.
\v 11 எங்களுடைய எதிரிகளோவென்றால்; நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடும்வரை, அவர்கள் அதை அறியாமலும் பார்க்காமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாக அந்த வேலையை நிறுத்துவோம் என்றார்கள்.
\s5
\v 12 அதை அவர்களருகில் குடியிருக்கிற யூதர்களும், பல இடங்களிலுமிருந்து எங்களிடம் வந்து, பத்துமுறை எங்களுக்குச் சொன்னார்கள்.
\v 13 அப்பொழுது நான்: மதிலுக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும், பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற மக்களைக் குடும்பம் குடும்பமாக நிறுத்தினேன்.
\v 14 அதை நான் பார்த்து எழுந்து, பிரபுக்களையும், அதிகாரிகளையும் மற்ற மக்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரர்களுக்காகவும், மகன்களுக்காகவும், மகள்களுக்காகவும், மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்செய்யுங்கள் என்றேன்.
\s5
\v 15 எங்களுக்குச் செய்தி தெரியவந்தது என்றும், தேவன் அவர்களுடைய ஆலோசனையை பொய்யாக்கினார் என்றும், எங்கள் எதிரிகள் கேட்டபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.
\v 16 அன்றுமுதற்கொண்டு என்னுடைய வேலைக்காரர்களில் பாதிஆட்கள் வேலை செய்தார்கள், பாதிஆட்கள் ஈட்டிகளையும் கேடகங்களையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள்; அதிகாரிகள் யூதாவின் மக்கள் எல்லோருக்கும் பின்புறமாக நின்றார்கள்.
\s5
\v 17 மதிலை கட்டுகிறவர்களும், சுமைசுமைக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையிலே வேலைசெய்து, மறுகையிலே ஆயுதம் பிடித்திருந்தார்கள்.
\v 18 கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாக வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என் அருகில் நின்றான்.
\s5
\v 19 நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற மக்களையும் நோக்கி: வேலை பெரிதும் விரிவானதுமாக இருக்கிறது; நாம் மதிலின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாக இருக்கிறோம்.
\v 20 நீங்கள் எந்த இடத்தில் எக்காளச் சத்தத்தைத் கேட்கிறீர்களோ அந்த இடத்தில் வந்து, எங்களோடு கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்செய்வார் என்றேன்.
\s5
\v 21 இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதி ஆட்கள் கிழக்கு வெளுக்கும் நேரம்முதல் நட்சத்திரங்களை காணும்வரை ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.
\v 22 அந்தசமயத்திலே நான் மக்களைப் பார்த்து: இரவில் நமக்குக் காவலுக்கும் பகலில் வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரர்களோடு எருசலேமுக்குள்ளே இரவு தங்கவேண்டும் என்று சொல்லி,
\v 23 நானோ, என்னுடைய சகோதரர்களோ, என்னுடைய வேலைக்காரர்களோ, என்னைப் பின்பற்றி காவல்காக்கிற வீரர்களோ எங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளாதிருந்தோம்; அவர்கள் தண்ணீருக்கு போகும்போது கூட தங்கள் ஆயுதங்களை வைத்திருந்தார்கள்.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 நெகேமியா ஏழைகளுக்கு உதவுதல்
\p
\v 1 மக்களுக்குள் அநேகரும் அவர்களுடைய பெண்களும் யூதர்களாகிய தங்களுடைய சகோதரர்கள்மேல் குற்றம் சாட்டுகிற பெரிய கூக்குரல் உண்டானது.
\v 2 அது என்னவென்றால், அவர்களில் சிலர்: நாங்கள் எங்களுடைய மகன்களோடும், மகள்களோடும் அநேகரானதால், சாப்பிட்டுப் பிழைப்பதற்காக நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள்.
\v 3 வேறு சிலர்: எங்களுடைய நிலங்களையும், திராட்சத்தோட்டங்களையும், வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள்.
\s5
\v 4 இன்னும் சிலர்: ராஜாவிற்கு வரியை செலுத்த, நாங்கள் எங்களுடைய நிலங்கள்மேலும், திராட்சத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்;
\v 5 எங்களுடைய உடலும், சகோதரர்கள் உடலும் சரி; எங்களுடைய பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ, நாங்கள் எங்களுடைய மகன்களையும், மகள்களையும் அடிமையாக்கவேண்டியதாக இருக்கிறது; அப்படியே எங்களுடைய மகள்களில் சிலர் அடிமையாகவும் இருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு வழியில்லை; எங்களுடைய நிலங்களும், திராட்சத்தோட்டங்களும் வேறு மனிதர்கள் கைவசமானது என்றார்கள்.
\s5
\v 6 அவர்கள் கூக்குரலையும், இந்த வார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,
\v 7 என்னுடைய மனதிலே ஆலோசனைசெய்து, பிறகு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்களுடைய சகோதரர்கள்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபை கூடிவரச்செய்து,
\v 8 அவர்களை நோக்கி: யூதரல்லாதவர்களுக்கு விற்கப்பட்ட யூதர்களாகிய எங்கள் சகோதரர்களை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாக மீட்டிருக்கும்போது, நீங்கள் திரும்ப உங்கள் சகோதரர்களை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாக இருந்தார்கள்.
\s5
\v 9 பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய எதிரிகளாகிய யூதரல்லாதவர்கள் அவமதிக்கிறதினாலே நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா?
\v 10 நானும் என்னுடைய சகோதரர்களும் என்னுடைய வேலைக்காரர்களும் இப்படியா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன் கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக.
\v 11 நீங்கள் இன்றைக்கு அவர்களுடைய நிலங்களையும், திராட்சத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சைரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டனையாக வாங்கிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக் கொடுத்துவிடுங்கள் என்றேன்.
\s5
\v 12 அதற்கு அவர்கள்: நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிட வைத்தேன்.
\v 13 நான் என்னுடைய ஆடையை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இப்படியாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாகப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார்கள் எல்லோரும் ஆமென் என்று சொல்லி, கர்த்தரைத் துதித்தார்கள்; பின்பு மக்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்.
\s5
\v 14 நான் யூதா தேசத்திலே ஆளுநராக இருக்க ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்கு நியமித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருடம் முதல் அவருடைய முப்பத்திரண்டாம் வருடம் வரைக்கும் இருந்த பன்னிரண்டு வருட காலங்களாக, நானும் என்னுடைய சகோதரர்களும் ஆளுநர்கள் உணவுக்காக வாங்குகிற பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை.
\v 15 எனக்கு முன்னிருந்த ஆளுநர்கள் மக்களுக்குப் பாரமாக இருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சைரசமும் வாங்கினதும் அன்றி, நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்களுடைய வேலைக்காரர்களும் கூட மக்களின்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததால் இப்படிச் செய்யவில்லை.
\s5
\v 16 ஒரு வயலையாவது நாங்கள் வாங்கவில்லை; நாங்கள் அந்த மதிலின் வேலையிலே மும்முரமாக இருந்தோம்; என்னுடைய வேலைக்காரர்கள் அனைவரும் கூட்டமாக அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள்.
\v 17 யூதர்களும் மூப்பர்களுமான நூற்றைம்பதுபேரும், எங்களைச் சுற்றிலும் இருக்கிற யூதர்கள் அல்லாதவர்களிடமிருந்து எங்களிடத்திற்கு வந்தவர்களும் என்னுடைய பந்தியில் சாப்பிட்டார்கள்.
\s5
\v 18 நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல்தரமான ஆறு ஆடுகளும் சமைக்கப்பட்டது; பறவைகளும் சமைக்கப்பட்டது; பத்துநாளைக்கு ஒருமுறை பலவித திராட்சைரசமும் செலவழிந்தது; இப்படியெல்லாம் இருந்தபோதும், இந்த மக்கள் பட்டபாடு கடினமாக இருந்ததால், ஆளுநர்கள் வாங்குகிற பணத்தை நான் பெற்றுக்கொள்ளவில்லை.
\v 19 என்னுடைய தேவனே, நான் இந்த மக்களுக்காகச் செய்த எல்லாவற்றிற்காகவும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\s1 கட்டுமானப் பணிக்கு மேலும் எதிர்ப்பு
\p
\v 1 நான் மதிலைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்கிருந்த மற்ற எதிரிகளும் கேள்விப்பட்டபோது,
\v 2 நான் வாசல்களுக்கு இன்னும் கதவு போடாமலிருப்பதால், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால் எனக்குத் தீங்குச் செய்ய நினைத்தார்கள்.
\s5
\v 3 அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரமுடியாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருவதால் இந்த வேலை நின்றுவிடும் என்று சொல்லச்சொன்னேன்.
\v 4 அவர்கள் இந்தவிதமாக நான்குமுறை எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்த விதமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன்.
\s5
\v 5 ஐந்தாம் முறையும் சன்பல்லாத்து அந்த விதமாகவே தன்னுடைய வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான்.
\v 6 அதிலே: நீரும் யூதர்களும் கலகம்செய்ய நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் மதிலைக் கட்டுகிறீர் என்றும், இந்த விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும்,
\s5
\v 7 யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் யூதரல்லாதவர்களுக்குள்ளே பிரபலமாக இருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் இந்தச் செய்தி ராஜாவிற்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனை செய்வதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது.
\s5
\v 8 அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனதின் கற்பனையே அல்லாமல் வேறல்ல என்று சொல்லியனுப்பினேன்.
\v 9 அந்த வேலை நடைபெறாமலிருக்க, எங்கள் கைகள் சோர்ந்துபோகும் என்று சொல்லி, அவர்கள் எல்லோரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என்னுடைய கைகளைத் பலப்படுத்தியருளும்.
\s5
\v 10 மெகதாபெயேலின் மகனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன்னுடைய வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாக தேவனுடைய வீடாகிய ஆலயத்திற்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்.
\v 11 அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன்.
\s5
\v 12 தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன்பல்லாத்தும் அவனுக்குக் பணம்கொடுத்ததால், அவன் எனக்கு விரோதமாக அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்றும் அறிந்துகொண்டேன்.
\v 13 நான் பயந்து அவர்கள் சொன்னதைச்செய்து பாவம் செய்வதற்கும், என்னை அவமானப்படுத்த காரணத்தை ஏற்படுத்துவதற்கும் அவனுக்கு பணம் கொடுத்திருந்தார்கள்.
\v 14 என்னுடைய தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தகுந்ததாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்கு பயமுண்டாக்கப்பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும்.
\s5
\v 15 அப்படியே மதிலானது ஐம்பத்திரண்டு நாட்களுக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது.
\s1 கட்டி முடிக்கப்பட்ட மதிலுக்கு எதிர்ப்பு
\p
\v 16 எங்கள் எதிரிகள் எல்லோரும் அதைக் கேட்டபோதும், எங்களை சுற்றிலும் இருக்கிற யூதரல்லாதவர்கள் அனைவரும் கண்டபோதும், மிகவும் நம்பிக்கையற்றுப்போய், இந்த செயல் எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்.
\s5
\v 17 அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதர்களிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது.
\v 18 அவன் ஆராகின் மகனாகிய செகனியாவுக்கு மருமகனாக இருந்ததும் அல்லாமல், அவன் மகனாகிய யோகனான் பெரகியாவின் மகனாகிய மெசுல்லாமின் மகளை திருமணம் செய்திருந்ததாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.
\v 19 அவன் செய்யும் நன்மைகளையும் அவர்கள் எனக்கு முன்பாக விவரித்து, என்னுடைய வார்த்தைகளை அவனுக்குக் கொண்டுபோவார்கள்; தொபியா எனக்குப் பயமுண்டாகக் கடிதங்களை அனுப்புவான்.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\p
\v 1 மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு,
\v 2 நான் என்னுடைய சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
\s5
\v 3 அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
\s1 சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் பட்டியல்
\p
\v 4 பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
\s5
\v 5 அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:
\s5
\v 6 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
\v 7 எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது:
\s5
\v 8 பாரோஷின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்கள்.
\v 9 செபத்தியாவின் வம்சத்தினர்கள் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்கள்.
\v 10 ஆராகின் வம்சத்தினர்கள் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்கள்.
\s5
\v 11 யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுபேர்கள்.
\v 12 ஏலாமின் வம்சத்தினர்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநான்குபேர்கள்.
\v 13 சத்தூவின் வம்சத்தினர்கள் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்கள்.
\v 14 சக்காயின் வம்சத்தினர்கள் எழுநூற்று அறுபதுபேர்கள்.
\s5
\v 15 பின்னூவின் வம்சத்தினர்கள் அறுநூற்று நாற்பத்தெட்டுபேர்கள்.
\v 16 பெபாயின் வம்சத்தினர்கள் அறுநூற்று இருபத்தெட்டுபேர்கள்.
\v 17 அஸ்காதின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்கள்.
\v 18 அதோனிகாமின் வம்சத்தினர்கள் அறுநூற்று அறுபத்தேழுபேர்கள்.
\s5
\v 19 பிக்வாயின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்கள்.
\v 20 ஆதீனின் வம்சத்தினர்கள் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர்கள்.
\v 21 எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் வம்சத்தினர்கள் தொண்ணூற்று எட்டுபேர்கள்.
\v 22 ஆசூமின் வம்சத்தினர்கள் முந்நூற்று இருபத்தெட்டுபேர்கள்.
\s5
\v 23 பேசாயின் வம்சத்தினர்கள் முந்நூற்று இருபத்துநான்குபேர்கள்.
\v 24 ஆரீப்பின் வம்சத்தினர்கள் நூற்றுப்பன்னிரண்டுபேர்கள்.
\v 25 கிபியோனின் வம்சத்தினர்கள் தொண்ணூற்று ஐந்துபேர்கள்.
\v 26 பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் நூற்று எண்பத்தெட்டுபேர்கள்.
\s5
\v 27 ஆனதோத்தூர் மனிதர்கள் நூற்று இருபத்தெட்டுபேர்கள்.
\v 28 பெத்அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் நாற்பத்திரண்டுபேர்கள்.
\v 29 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்கள்.
\v 30 ராமா, காபா ஊர்களின் மனிதர்கள் அறுநூற்று இருபத்தொருபேர்கள்.
\s5
\v 31 மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் நூற்று இருபத்திரண்டுபேர்கள்.
\v 32 பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் நூற்று இருபத்துமூன்றுபேர்கள்.
\v 33 வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் ஐம்பத்திரண்டுபேர்கள்.
\v 34 மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநான்குபேர்கள்.
\s5
\v 35 ஆரீம் வம்சத்தினர்கள் முந்நூற்று இருபதுபேர்கள்.
\v 36 எரிகோ வம்சத்தினர்கள் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்கள்.
\v 37 லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் எழுநூற்று இருபத்தொருபேர்கள்.
\v 38 செனாகா வம்சத்தினர்கள் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்கள்.
\s5
\v 39 ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்கள்.
\v 40 இம்மேரின் வம்சத்தினர்கள் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்கள்.
\v 41 பஸ்கூரின் வம்சத்தினர்கள் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்கள்.
\v 42 ஆரீமின் வம்சத்தினர்கள் ஆயிரத்துப் பதினேழுபேர்கள்.
\s5
\v 43 லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் எழுபத்துநான்குபேர்கள்.
\v 44 பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் நூற்று நாற்பத்தெட்டுபேர்கள்.
\v 45 வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக நூற்று முப்பத்தெட்டுபேர்கள்.
\s5
\v 46 ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள்,
\v 47 கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள்,
\v 48 லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள்,
\v 49 ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள்,
\s5
\v 50 ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள்,
\v 51 காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள்,
\v 52 பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபிஷசீமின் வம்சத்தினர்கள்,
\s5
\v 53 பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள்,
\v 54 பஸ்லீதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள்,
\v 55 பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள்,
\v 56 நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள்,
\s5
\v 57 சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள்,
\v 58 யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள்,
\v 59 செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள்.
\v 60 ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்கள்.
\s5
\v 61 தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
\v 62 தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்கள்.
\v 63 ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கிலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயின் வம்சத்தினர்கள்.
\s5
\v 64 இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
\v 65 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
\s5
\v 66 சபையார்கள் எல்லோரும் சேர்ந்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபதுபேர்களாக இருந்தார்கள்.
\v 67 அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், இருநூற்று நாற்பத்தைந்து பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
\s5
\v 68 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.
\v 69 ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
\s5
\v 70 வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான்.
\v 71 வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு இருபதாயிரம் தங்கக்காசுகளையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
\v 72 மற்ற மக்கள் இருபதாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள்.
\s5
\v 73 ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 எஸ்றா நியாயப்பிரமாணத்தை வாசித்தல்
\p
\v 1 மக்கள் எல்லோரும் தண்ணீர் வாசலுக்கு முன்பாக இருந்த திறந்த வெளியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.
\v 2 அப்படியே ஏழாம் மாதம் முதல் தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தை ஆண்களும் பெண்களும், கேட்டு அறிந்துகொள்ளக்கூடிய அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து,
\v 3 தண்ணீர் வாசலுக்கு முன்பாக இருந்த திறந்தவெளிக்கு எதிரே காலைதுவங்கி மதியம்வரை ஆண்களுக்கும் பெண்களுக்கும், கேட்டு அறிந்துகொள்ளக்கூடிய மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; எல்லா மக்களும் நியாயப்பிரமாண புத்தகம் வாசிக்கப்பட்டதை கவனமாகக் கேட்டார்கள்.
\s5
\v 4 வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனருகில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள்.
\v 5 எஸ்றா எல்லா மக்களுக்கும் உயர நின்று, எல்லா மக்களும் காணப் புத்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத் திறந்தபோது, மக்கள் எல்லோரும் எழுந்துநின்றார்கள்.
\s5
\v 6 அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; மக்களெல்லோரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென், ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புற விழுந்து, கர்த்தரைத்தொழுதுகொண்டார்கள்.
\v 7 யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியர்களும், நியாயப்பிரமாணத்தை மக்களுக்கு விளங்கச்செய்தார்கள்; மக்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.
\v 8 அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புத்தகத்தை விளக்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கச்செய்தார்கள்.
\s5
\v 9 மக்கள் எல்லோரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுததால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், மக்களுக்கு விளக்கிக்காட்டின லேவியர்களும் எல்லா மக்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.
\v 10 பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைசாப்பிட்டு, இனிப்பானதைக்குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்கு அவைகளை கொடுங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், துக்கப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.
\s5
\v 11 லேவியர்களும் மக்கள் அனைவரையும் அமைதிப்படுத்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், துக்கப்படவேண்டாம் என்றார்கள்.
\v 12 அப்பொழுது மக்கள் எல்லோரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்ததால், சாப்பிட்டுக் குடிக்கவும், உணவுகளை கொடுக்கவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.
\s5
\v 13 மறுநாளில் மக்களின் எல்லா வம்சத்தலைவர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவிடம் கூடிவந்தார்கள்.
\v 14 அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் மக்கள் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்றுக்கொடுத்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள்.
\v 15 ஆகையால் எழுதியிருக்கிறமுறையில் கூடாரங்களைப் போட, நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவாருங்கள் என்று தங்களுடைய எல்லா பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரபலப்படுத்தினார்கள்.
\s5
\v 16 அப்படியே மக்கள் வெளியே போய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் வளாகங்களிலும், தேவனுடைய ஆலயவளாகங்களிலும், தண்ணீர்வாசல் வெளியிலும், எப்பிராயீம்வாசல் வெளியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள்.
\v 17 இவ்விதமாகச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் சபையார்கள் எல்லோரும் கூடாரங்களைப் போட்டு, கூடாரங்களில் குடியிருந்தார்கள்; இப்படியே நூனின் மகனாகிய யோசுவாவின் நாட்கள்முதல் அந்த நாள்வரை இஸ்ரவேல் மக்கள் செய்யாமலிருந்து இப்பொழுது செய்ததால், மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது.
\s5
\v 18 முதலாம் நாள்துவங்கிக் கடைசி நாள்வரை, தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புத்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளிலோ, முறையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாக இருந்தது.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 இஸ்ரவேலர்கள் தங்கள் பாவங்களை அறிக்கைசெய்தல்
\p
\v 1 அந்த மாதம் இருபத்துநான்காம் தேதியிலே இஸ்ரவேல் மக்கள் உபவாசம்செய்து, சணல் ஆடை உடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாகக் கூடிவந்தார்கள்.
\v 2 இஸ்ரவேல் சந்ததியார்கள் யூதரல்லாதவர்களை எல்லாம் விட்டுப்பிரிந்து வந்து நின்று, தங்களுடைய பாவங்களையும், தங்கள் முன்னோர்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள்.
\s5
\v 3 அவர்கள் எழுந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது அந்நாளின் காற்பகுதிவரை அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புத்தகம் வாசிக்கப்பட்டது; அடுத்த காற்பகுதிவரை அவர்கள் பாவஅறிக்கைசெய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை குனிந்து வணங்கினார்கள்.
\v 4 யெசுவா, பானி, கத்மியேல், செப்பனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி என்பவர்கள் லேவியர்களுடைய படிகளின்மேல் நின்று, தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாக அலறினார்கள்.
\s5
\v 5 பின்பு லேவியர்களான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் மக்களைப் பார்த்து: நீங்கள் எழுந்து, என்றும் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எல்லா துதி ஸ்தோத்திரத்திற்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்திற்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
\v 6 நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மை பணிந்துகொள்ளுகிறது.
\s5
\v 7 ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயர்களின் பட்டணத்திலிருந்து புறப்படச்செய்து, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பெயரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர்.
\v 8 அவனுடைய இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், எபூசியர்கள், கிர்காசியகளுடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்க, அவனோடு உடன்படிக்கைசெய்து. உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர்; நீர் நீதியுள்ளவர்.
\s5
\v 9 எகிப்திலே எங்கள் முற்பிதாக்கள் அநுபவித்த உபத்திரவத்தை நீர் கண்டு, செங்கடலில் அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டீர்.
\v 10 பார்வோனிடமும், அவனுடைய எல்லா ஊழியக்காரர்களிடமும், அவன் தேசத்தின் எல்லா மக்களிடத்திலும், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தீர்; அவர்கள் உமது மக்களை கர்வத்துடன் நடத்தினார்கள் என்பதை அறிந்திருந்தீர்; இப்படியே இந்த நாள்வரைக்கும் இருக்கிற உமக்கு புகழை உண்டாக்கினீர்.
\s5
\v 11 நீர் அவர்களுக்கு முன்பாக சமுத்திரத்தைப் பிரித்ததால், அதன் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; ஆழமான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.
\s5
\v 12 நீர் பகலிலே மேகமண்டலத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி மண்டலத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.
\v 13 நீர் சீனாய்மலையில் இறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.
\s5
\v 14 உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது ஊழியனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் கற்றுக்கொடுத்தீர்.
\v 15 அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்திற்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்து, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.
\s5
\v 16 எங்கள் முன்னோர்களாகிய அவர்களோ ஆணவமாக நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, உம்முடைய கற்பனைகளைக் கேட்காமல் போனார்கள்.
\v 17 அவர்கள் கற்பனைகளைக் கேட்க மனமில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினைக்காமலும் போய், தங்களுடைய கழுத்தைக் கடினப்படுத்தி, தங்களுடைய அடிமைத்தனத்திற்குத் திரும்ப அவர்கள் கலகம்செய்து, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் முழுவதும் மன்னிக்கிறவரும், இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.
\s5
\v 18 அவர்கள் உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைத் தங்களுக்கு உண்டாக்கி: இது உன்னை எகிப்திலிருந்து கொண்டுவந்த உன்னுடைய தெய்வம் என்று சொல்லி, கோபமடையத்தக்க பெரிய அக்கிரமங்களைச் செய்திருந்தாலும்,
\v 19 நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தாலே, அவர்களை வனாந்திரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகமண்டலத்தாலும் அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிமண்டலத்தாலும் அவர்களை விட்டு விலகவில்லை.
\s5
\v 20 அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர்; அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை தந்து, அவர்கள் தாகத்திற்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.
\v 21 இப்படி நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவில்லாமல், அவர்களைப் பராமரித்துவந்தீர்; அவர்களுடைய உடைகள் பழமையாகப் போகவுமில்லை, அவர்களுடைய கால்கள் வீங்கவுமில்லை.
\s5
\v 22 அவர்களுக்கு ராஜ்ஜியங்களையும் மக்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
\s5
\v 23 அவர்களுடைய பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்து, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் முன்னோர்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்துவந்தீர்.
\v 24 அப்படியே பிள்ளைகள் உள்ளே நுழைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டார்கள்; நீர் அவர்களுக்கு முன்பாக தேசத்தின் மக்களாகிய கானானியர்களைத் தாழ்த்தி, அவர்களையும் அவர்களுடைய ராஜாக்களையும், தேசத்தின் மக்களையும், தாங்கள் விரும்பியதை செய்ய, அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தீர்.
\s5
\v 25 அவர்கள் பாதுகாப்பான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, எல்லாவித உடைமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட கிணறுகளையும், ஏராளமான திராட்சத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் மரங்களையும் சுதந்தரித்துக்கொண்டு, சாப்பிட்டுத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயவினால் செல்வச்செழிப்பாக வாழ்ந்தார்கள்.
\s5
\v 26 ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி, உமக்கு விரோதமாகக் கலகம்செய்து, உம்முடைய நியாயப்பிரமாணத்தைத் தங்களுக்குப் பின்னே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களை மிகவும் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமடையச்செய்கிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.
\v 27 ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்களுடைய எதிரிகளின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர்; அவர்கள் உபத்திரவம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்களுடைய எதிரிகளின் கையிலிருந்து விடுவிக்கிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர்.
\s5
\v 28 அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் தீமை செய்யத் துவங்கினார்கள்; ஆகையால் அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஆள, அவர்களுடைய கையிலே ஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர்.
\v 29 அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்திற்குத் திருப்ப அவர்களைத் அதிகமாகக் கடிந்துகொண்டீர்; ஆனாலும் அவர்கள் ஆணவங்கொண்டு, உம்முடைய கற்பனைகளைக் கேட்காமல், கீழ்ப்படிந்து நடக்கிற மனிதன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரட்டுத்தனமாக விலக்கி, கற்பனைகளைக் கேட்காமல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.
\s5
\v 30 நீர் அநேக வருடங்களாக அவர்கள்மேல் பொறுமையாக இருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை கடினமாக கடிந்துகொண்டாலும், அவர்கள் கேட்காமல்போனதாலே அவர்களை அந்நிய தேசத்துமக்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர்.
\v 31 ஆகிலும் உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்காமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர்; நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன்.
\s5
\v 32 இப்பொழுதும் உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகா தேவனாகிய எங்கள் தேவனே, அசீரியா ராஜாக்களின் நாட்கள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் எங்களுக்கும், எங்களுடைய ராஜாக்களுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், முன்னோர்களுக்கும், உம்முடைய மக்கள் அனைவருக்கும் சம்பவித்த எல்லா வருத்தமும் உமக்கு முன்பாக சிறியதாக காணப்படாதிருப்பதாக.
\v 33 எங்களுக்கு சம்பவிக்கச்செய்த எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடத்தினீர்; நாங்களோ துன்மார்க்கம் செய்தோம்.
\v 34 எங்களுடைய ராஜாக்களும், பிரபுக்களும், ஆசாரியர்களும், முன்னோர்களும், உம்முடைய நியாயப்பிரமாணத்தின் முறையில் செய்யாமலும், உம்முடைய கற்பனைகளையும், நீர் அவர்களைக் கடிந்துகொண்ட உம்முடைய சாட்சிகளையும் கவனியாமலும் போனார்கள்.
\s5
\v 35 அவர்கள் தங்கள் ராஜ்ஜியத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயவிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் தீயசெயல்களைவிட்டுத் திரும்பாமலும் போனார்கள்.
\s5
\v 36 இதோ, இன்றையதினம் நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம். இதோ, பலனையும் நன்மையையும் அனுபவிக்க நீர் எங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த இந்த தேசத்தில்தானே நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம்.
\v 37 அதின் வருமானம் எங்கள் பாவங்களினாலே நீர் எங்கள்மேல் நியமித்த ராஜாக்களுக்கு அதிகமாக போகிறது; அவர்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் எங்களுடைய சரீரங்களையும் மிருக ஜீவன்களையும் ஆளுகிறார்கள்; நாங்கள் கொடிய இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம்.
\s5
\v 38 இவையெல்லாம் இப்படி இருக்கிறதால், நாங்கள் உறுதியான உடன்படிக்கைசெய்து அதை எழுதி வைக்கிறோம்; எங்களுடைய பிரபுக்களும், லேவியர்களும், ஆசாரியர்களும் அதற்கு முத்திரை போடுவார்கள் என்றார்கள்.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 உடன்படிக்கை செய்தவர்களின் பெயர் பட்டியல்
\p
\v 1 முத்திரையிடப்பட்ட பத்திரத்தில் உள்ள பெயர்கள் என்னவென்றால்: அகலியாவின் மகனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
\v 2 செராயா, அசரியா, எரேமியா,
\v 3 பஸ்கூர், அமரியா, மல்கிஜா,
\s5
\v 4 அத்தூஸ், செபனியா, மல்லூக்,
\v 5 ஆரீம், மெரெமோத், ஒபதியா,
\v 6 தானியேல், கிநேதோன், பாருக்,
\v 7 மெசுல்லாம், அபியா, மீயாமின்,
\v 8 மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,
\s5
\v 9 லேவியர்களாகிய அசனியாவின் மகன் யெசுவா, எனாதாதின் மகன்களில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
\v 10 அவர்கள் சகோதரர்களாகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான்,
\v 11 மீகா, ரேகோப், அசபியா,
\v 12 சக்கூர், செரெபியா, செபனியா,
\v 13 ஒதியா, பானி, பெனினு என்பவர்களும்,
\v 14 மக்களின் தலைவர்களாகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
\s5
\v 15 புன்னி, அஸ்காத், பெபாயி,
\v 16 அதோனியா, பிக்வாய், ஆதின்,
\v 17 ஆதேர், இஸ்கியா, அசூர்,
\v 18 ஒதியா, ஆசூம், பெத்சாய்,
\v 19 ஆரீப், ஆனதோத், நெபாய்,
\v 20 மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,
\v 21 மெஷெசாபெயேல், சாதோக், யதுவா,
\s5
\v 22 பெலத்தியா, ஆனான், ஆனாயா,
\v 23 ஓசெயா, அனனியா, அசூப்,
\v 24 அல்லோகேஸ், பிலகா, சோபேக்,
\v 25 ரேகூம், அஷபனா, மாசெயா,
\v 26 அகியா, கானான், ஆனான்,
\v 27 மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே.
\s5
\v 28 மக்களில் மற்றவர்களாகிய ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், ஆலய பணியாளர்களும், தேசங்களின் மக்களைவிட்டுப் பிரிந்து தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குத் திரும்பின அனைவரும், அவர்களுடைய மனைவிகளும், மகன்களும், மகள்களுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லோரும்,
\v 29 தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரர்களோடு கூடிக்கொண்டு: தேவனுடைய ஊழியனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் முறையில் நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,
\s5
\v 30 நாங்கள் எங்களுடைய மகள்களை தேசத்தின் மக்களுக்குக் கொடுக்காமலும், எங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை எடுக்காமலும் இருப்போம் என்றும்,
\v 31 தேசத்தின் மக்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியங்களையும் விற்பதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் வாங்காதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருடத்தை விடுதலை வருடமாக்கி எல்லா கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டு ஒப்பந்தம் செய்தார்கள்.
\s5
\v 32 மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்து அப்பங்களுக்கும், நிரந்தர உணவுபலிக்கும், ஓய்வு நாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நிரந்தர சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், அபிஷேகத்துக்கான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்,
\v 33 எங்கள் தேவனுடைய ஆலயத்தின் எல்லா வேலைக்கும், வருடந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற பொறுப்பை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
\s5
\v 34 நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக குறிக்கப்பட்ட காலங்களில் வருடாவருடம் எங்கள் முன்னோர்களின் குடும்பங்களின்முறையே, எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும், மக்களுக்கும் சீட்டுப்போட்டோம்.
\v 35 நாங்கள் வருடந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்திற்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித மரங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்,
\v 36 நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் மகன்களில் முதற்பிறந்தவர்களையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் முதற்பிறந்தவைகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்திற்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியர்களிடத்திற்கும் கொண்டுவரவும்,
\s5
\v 37 நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், எல்லா மரங்களின் முதற்பலனாகிய திராட்சப்பழரசத்தையும், எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்க ஆசாரியர்களிடத்திற்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியர்களிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியர்களாகிய இவர்கள் எங்கள் வேளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,
\v 38 லேவியர்கள் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் மகனாகிய ஒரு ஆசாரியன் லேவியர்களோடுகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர்கள் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் முடிவுசெய்துகொண்டோம்.
\s5
\v 39 பரிசுத்த இடத்தின் பணிபொருட்களும், ஊழியஞ்செய்கிற ஆசாரியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் மக்களும், லேவிகோத்திரத்தார்களும் தானியம் திராட்சைரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இந்த விதமாக நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரிக்காமல் விடுவதில்லையென்று முடிவுசெய்துகொண்டோம்.
\s5
\c 11
\cl அத்தியாயம்– 11
\s1 எருசலேமில் புதிதாக குடியேறியவர்கள்
\p
\v 1 மக்களின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற மக்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேர்களில் ஒருவனை எருசலேம் என்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கச்செய்ய சீட்டுகளைப் போட்டார்கள்.
\v 2 ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாகச் சம்மதித்த மனிதர்களையெல்லாம் மக்கள் வாழ்த்தினார்கள்.
\s5
\v 3 யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், ஆலயப் பணியாளர்களும், சாலொமோனுடைய வேலைக்காரர்களின் சந்ததிகளும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் சொந்த இடத்திலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர்கள் யாரென்றால்:
\v 4 எருசலேமிலே யூதா சந்ததியர்களில் சிலரும், பென்யமீன் சந்ததியர்களில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா மக்களிலே பேரேசின் சந்ததியில் ஒருவனான மகலாலெயேலின் மகனாகிய செபதியாவின் மகன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்கு மகனான உசியாவின் மகன் அத்தாயாவும்,
\s5
\v 5 சீலோனின் மகன் சகரியாவுக்கு மகனாகிய யோயாரிபுக்கு மகனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் மகன் கொல்லோசே பெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே.
\v 6 எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் மகன்களெல்லாம் நானூற்று அறுபத்தெட்டு பலசாலிகளாக இருந்தார்கள்.
\s5
\v 7 பென்யமீன் சந்ததியர்களில் யாரென்றால், சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேலுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் இதியேலுக்கும், இவன் எசாயாவுக்கும் மகனானவன்.
\v 8 அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுபேர்கள்.
\v 9 அவர்கள்மேல் கண்காணியான சிக்ரியின் மகன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவது கண்காணியான செனூவாவின் மகன் யூதாவுமே.
\s5
\v 10 ஆசாரியர்களில் யோயாரிபின் மகன் யெதாயா, யாகின் என்பவர்களும்,
\v 11 அகிதூபின் மகன் மெராயோத்திற்குப் பிறந்த சாதோக்கின் மகன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளனும்,
\v 12 ஆலயத்திலே வேலைசெய்கிற அவர்கள் சகோதரர்களாகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேர்களும், மல்கியாவின் மகன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் மகன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் மகன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,
\s5
\v 13 குடும்பத்தலைவர்களாகிய அவனுடைய சகோதரர்கள் இருநூற்று நாற்பத்திரண்டுபேர்களும், இம்மேரின் மகன் மெசில்லேமோத்தின் மகனாகிய அகசாய்க்குப் பிறந்த அசரெயேலின் மகன் அமாசாயும்,
\v 14 அவர்களுடைய சகோதரர்களாகிய பலசாலிகள் நூற்று இருபத்தெட்டுபேர்களுமே; இவர்கள்மேல் அகெதோலிமின் மகன் சப்தியேல் கண்காணியாக இருந்தான்.
\s5
\v 15 லேவியர்களிலே புன்னியின் மகன் அசபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் மகனான அசூபின் மகன் செமாயாவும்,
\v 16 தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியர்களின் தலைவர்களிலே சபெதாயும், யோசபாத்தும்,
\s5
\v 17 ஆசாபின் மகன் சப்தியின் மகனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவனுடைய சகோதரர்களில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் மகன் காலாவின் மகனாகிய சமுவாவின் மகன் அப்தாவுமே.
\v 18 பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர்கள் அனைவரும் இருநூற்று எண்பத்துநான்குபேர்கள்.
\s5
\v 19 வாசல் காவலாளர்கள் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்களுடைய சகோதரர்களும் நூற்று எழுபத்திரண்டுபேர்கள்.
\v 20 மற்ற இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், யூதாவின் எல்லா பட்டணங்களிலும் இருந்தார்கள்.
\v 21 ஆலய பணியாளர்கள் ஓபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.
\s5
\v 22 எருசலேமிலிருக்கிற லேவியர்களின் தலைமை அதிகாரி மீகாவின் மகன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் மகன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்திற்கு நிற்கிற பாடகர்களாகிய ஆசாபின் மகன்களில் ஒருவன்.
\v 23 பாடகர்களாகிய அவர்களுக்காக தினக்கூலி கொடுக்க ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது.
\v 24 யூதாவின் மகனாகிய சேராக்கின் சந்ததியர்களில் மெசெசாபெயேலின் மகன் பெத்தகியா மக்களின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் முன்பு நின்றான்.
\s5
\v 25 தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் மக்களில் சிலர் கீரியாத்அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,
\v 26 யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும்,
\v 27 ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும்,
\s5
\v 28 சிக்லாகிலும், மேகோனாகிலும் அதின் கிராமங்களிலும்,
\v 29 என்ரிம்மோனிலும், சாரேயாகிலும், யர்மூத்திலும்,
\v 30 சானோவாகிலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா துவங்கி இன்னோமின் பள்ளத்தாக்குவரை குடியேறினார்கள்.
\v 31 கேபாவின் ஊரைச்சேர்ந்த பென்யமீன் மக்கள், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
\v 32 ஆனதோத், நோப், அனனியா,
\v 33 ஆத்சோர், ராமா, கித்தாயிம்,
\v 34 ஆதீத், செபோயிம், நெபலாத்,
\v 35 லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள்.
\v 36 லேவியர்களிலே சிலர் யூதாவிலும், சிலர் பென்யமீனிலும் இருந்தார்கள்.
\s5
\c 12
\cl அத்தியாயம்– 12
\s1 ஆசாரியர்களும் லேவியர்களும்
\p
\v 1 செயல்தியேலின் மகனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியர்களும் லேவியர்களும் யாரென்றால்: செராயா, எரேமியா, எஸ்றா,
\v 2 அமரியா, மல்லூக், அத்தூஸ்,
\v 3 செகனியா, ரெகூம், மெரெமோத்,
\s5
\v 4 இத்தோ, கிநேதோ, அபியா,
\v 5 மியாமின், மாதியா, பில்கா,
\v 6 செமாயா, யோயாரிப், யெதாயா,
\v 7 சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியர்களுக்கும் தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.
\s5
\v 8 லேவியர்கள் யாரென்றால்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவனுடைய சகோதரர்களும் துதிசெய்தலுக்கு பொறுப்பாக இருந்தார்கள்.
\v 9 பக்புக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர்கள் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.
\s5
\v 10 யெசுவா யொயகீமைப் பெற்றான், யொயகீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.
\v 11 யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாவைப் பெற்றான்.
\s5
\v 12 யொயகீமின் நாட்களிலே தகப்பன்மார்களின் குடும்பத்தார்களுக்கு தலைவர்களான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,
\v 13 எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,
\v 14 மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,
\s5
\v 15 ஆரீமின் சந்ததியில் அத்னா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
\v 16 இத்தோவின் சந்ததியில் சகரியா, கிநெதோனின் சந்ததியில் மெசுல்லாம்,
\v 17 அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன் மொவதியா என்பவர்களின் சந்ததியில் பில்தாய்.
\v 18 பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்,
\v 19 யோயரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் ஊசி,
\v 20 சல்லாயின் சந்ததியில் கல்லாய், ஆமோக்கின் சந்ததியில் ஏபேர்,
\v 21 இல்க்கியாவின் சந்ததியில் அசபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.
\s5
\v 22 எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர்கள் தகப்பன்மார்களின் தலைவர்களாக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ஆட்சி காலம்வரை இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்.
\v 23 லேவியின் சந்ததியர்களாகிய தகப்பன்மார் குடும்பத்தார்களின் தலைவர்கள் எலியாசிபின் மகனாகிய யோகனானின் நாட்கள்வரை நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
\s5
\v 24 லேவியர்களின் தலைவர்களாகிய அசபியாவும், செரெபியாவும், கத்மியேலின் மகன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்களுடைய சகோதரர்களும், தேவனுடைய மனிதனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும் ஸ்தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக பிரிவுகளாக இருந்தார்கள்.
\v 25 மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிற பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவர்களாக இருந்தார்கள்.
\s1 எருசலேமின் மதில்கள் பிரதிஷ்டை செய்யப்படுதல்
\p
\v 26 யோத்சதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன் யொயகீமின் நாட்களிலும், ஆளுநராகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.
\s5
\v 27 எருசலேமின் மதிலை பிரதிஷ்டைசெய்யும்போது, துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியர்களை எருசலேமுக்குக் கூட்டிவரத் தேடினார்கள்.
\v 28 அப்படியே பாடகர்களின் குழுவினர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியர்களின் கிராமங்களிலும்,
\s5
\v 29 பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலுமிருந்து வந்து கூடினார்கள்; பாடகர்கள் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள்.
\v 30 ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைச் சுத்தம்செய்துக்கொண்டு, மக்களையும் பட்டணவாசல்களையும் மதிலையும் சுத்தம்செய்தார்கள்.
\s5
\v 31 அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை மதிலின்மேல் ஏறச்செய்து, துதிசெய்து நடந்துபோவதற்காக இரண்டு பெரிய கூட்டத்தார்களை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் மதிலின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.
\s5
\v 32 அவர்கள் பின்னே ஒசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிபேர்களும்,
\v 33 அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
\v 34 யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும்,
\v 35 பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியர்களின் மகன்களில் ஆசாப்பின் மகன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்கு மகனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் மகன் சகரியாவும்,
\s5
\v 36 தேவனுடைய மனிதனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவனுடைய சகோதரர்களான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான்.
\v 37 அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான தண்ணீர்வாசலுக்கு வந்தபோது, மதிலைவிட உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின் மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசல்வரை போனார்கள்.
\s5
\v 38 துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாக நடந்துபோனார்கள், அவர்கள் பின்னே நான் போனேன்; மக்களில் பாதிபேர்கள் மதிலின்மேல் சூளைகளின் கோபுரத்தைக் கடந்து, அகழ் மதில்வரை நேராகப்போய்,
\v 39 எப்பிராயீம்வாசலையும், பழையவாசலையும், மீன்வாசலையும், அனானெயேலின் கோபுரத்தையும், மேயா என்கிற கோபுரத்தையும் கடந்து, ஆட்டுவாசல்வரை புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.
\s5
\v 40 அதற்குப்பின்பு துதிசெய்கிற இரண்டு கூட்டத்தார்களும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடு இருக்கிற தலைவர்களில் பாதிபேர்களும்,
\v 41 பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும்,
\v 42 மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகர்களும், அவர்களை நடத்துகிறவனாகிய யெஷரகியாவும் சத்தமாகப் பாடினார்கள்.
\s5
\v 43 அந்த நாளிலே அதிகமான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்குப் பெரிய சந்தோஷத்தை உண்டாக்கியதால் மகிழ்ச்சியாக இருந்தார்கள்; பெண்களும் பிள்ளைகளும்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.
\s5
\v 44 அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதற்பழங்களையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்முறையில் வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்ப்பதற்கு, சில மனிதர்கள் பொறுப்பாளர்களாக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்கள்மேலும் லேவியர்கள்மேலும் யூதா மனிதர்கள் சந்தோஷமாக இருந்தார்கள்.
\v 45 பாடகர்களும், வாசல் காவலாளர்களும், தாவீதும் அவன் மகனாகிய சாலொமோனும் கற்பித்தபடி தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.
\s5
\v 46 தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகர்களின் தலைவர்களும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் ஸ்தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
\v 47 ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் பாடகர்களுக்கும் வாசல் காவலாளர்களுக்கும் அனுதின ஒழுங்கின்படி வேலைளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியர்களுக்கென்று பிரதிஷ்டை செய்துகொடுத்தார்கள்; லேவியர்கள் ஆரோனின் சந்ததிக்கென்று அவர்கள் வேலைகளைப் பிரதிஷ்டை செய்துகொடுத்தார்கள்.
\s5
\c 13
\cl அத்தியாயம்– 13
\s1 நெகேமியாவின் இறுதி சீர்திருத்த அறிக்கை
\p
\v 1 அன்றையதினம் மக்கள் கேட்க, மோசேயின் புத்தகத்தை வாசித்தார்கள்; அதிலே அம்மோனியர்களும் மோவாபியர்களும், இஸ்ரவேல் மக்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டுவராமல், அவர்களைச் சபிக்க அவர்களுக்கு விரோதமாகப் பிலேயாமைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டதால்,
\v 2 அவர்கள் என்றைக்கும், அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவனுடைய சபைக்கு வரக்கூடாது என்று எழுதியிருக்கிறதாகக் காணப்பட்டது.
\v 3 ஆகையால் அவர்கள் அந்தக் கட்டளையைக் கேட்டபோது, பற்பல தேசத்தின் மக்களையெல்லாம் இஸ்ரவேலைவிட்டுப் பிரித்துவிட்டார்கள்.
\s5
\v 4 இதற்குமுன்னே எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளுக்குப் பொறுப்பாளனாக வைக்கப்பட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடு இணைந்தவனாயிருந்து,
\v 5 முற்காலத்தில் காணிக்கைகளும், சாம்பிராணியும், ஆலயப் பணிபொருட்களும், லேவியர்களுக்கும், பாடகர்களுக்கும், வாசல் காவலாளர்களுக்கும் ஒதுக்கப்பட்ட தானியம் திராட்சைரசம் எண்ணெய் என்பவைகளிலே தசமபாகமும், ஆசாரியர்களைச் சேருகிற படைப்பான காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு பெரிய அறையை அவனுக்கு ஆயத்தம்செய்திருந்தான்.
\s5
\v 6 இதெல்லாம் நடக்கும்போது நான் எருசலேமில் இல்லை; பாபிலோன் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் முப்பத்திரண்டாம் வருடத்திலே நான் ராஜாவிடத்திற்குபோய், சில நாட்களுக்குப்பின்பு திரும்ப ராஜாவிடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு,
\v 7 எருசலேமுக்கு வந்தேன்; அப்பொழுது எலியாசிப் தொபியாவுக்கு தேவனுடைய ஆலயத்து வளாகங்களில் ஒரு அறையை ஆயத்தம்செய்ததால், செய்த தீங்கை அறிந்துகொண்டேன்.
\s5
\v 8 அதனால் நான் மிகவும் மனம் வருந்தி. தொபியாவின் வீட்டுப்பொருட்களையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன்.
\v 9 பின்பு நான் அறைவீடுகளைச் சுத்தம் செய்யச்சொல்லி, தேவனுடைய ஆலயப்பொருட்களையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்கே திரும்பக் கொண்டுவந்து வைத்தேன்.
\s5
\v 10 பின்னும் லேவியர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகள் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லையென்பதையும், வேலை செய்கிற லேவியர்களும் பாடகர்களும் அவரவர் தங்களுடைய விளைநிலங்களுக்கு ஓடிப்போனார்கள் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.
\v 11 அப்பொழுது நான் தலைமையானவர்களோடு வாதாடி, தேவனுடைய ஆலயம் ஏன் கைவிடப்படவேண்டும் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் பொறுப்பில் அவர்களை வைத்தேன்.
\s5
\v 12 அப்பொழுது யூதர்கள் எல்லோரும் தானியம் திராட்சைரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள்.
\v 13 அப்பொழுது நான் ஆசாரியனாகிய செலேமியாவையும், வேதபாரகனாகிய சாதோக்கையும், லேவியர்களில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் மகன் சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் பொருளாளர்களாக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரர்களுக்கு ஒதுக்கப்படும்வேலை அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
\v 14 என்னுடைய தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்திற்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்செயல்களை அழித்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்.
\s5
\v 15 அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளில் மிதிக்கிறதையும், சிலர் தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும், திராட்சைரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் பார்த்து, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களை மிகவும் கடிந்துகொண்டேன்.
\s5
\v 16 மீனையும், சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா மக்களுக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரு பட்டணத்தார்களும் உள்ளே குடியிருந்தார்கள்.
\v 17 ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செயலைச் செய்கிறதென்ன?
\v 18 உங்கள் பிதாக்கள் இப்படிச் செய்ததினாலல்லவா நமது தேவன் நம்மேலும், இந்த நகரத்தின்மேலும் இந்தத் தீங்கையெல்லாம் வரச்செய்தார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால், இஸ்ரவேலின் மேலிருக்கிற கடுங்கோபத்தை அதிகரிக்கச்செய்கிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.
\s5
\v 19 ஆகையால் ஓய்வுநாளுக்கு முன்னே எருசலேமின் பட்டணவாசலில் மாலைமறையும்போது, கதவுகளைப் பூட்டவும் ஓய்வுநாள் முடியும்வரை அவைகளைத் திறக்காமல் இருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராமல் வாசலருகில் என்னுடைய வேலைக்காரர்களில் சிலரை நிறுத்தினேன்.
\v 20 அதனால் வர்த்தகர்களும், சகலவித சரக்குகளை விற்கிறவர்களும் இரண்டொருமுறை எருசலேமுக்கு வெளியே இரவுதங்கினார்கள்.
\s5
\v 21 அப்பொழுது நான் அவர்களை மிகவும் கடிந்துகொண்டு, நீங்கள் மதில் அருகில் இரவு தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படி செய்தால், உங்கள்மேல் கைவைப்பேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராமலிருந்தார்கள்.
\v 22 ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்க உங்களைச் சுத்தம்செய்துகொண்டு வாசல்களைக் காக்க வாருங்கள் என்று லேவியர்களுக்கும் சொன்னேன். என்னுடைய தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையினால் எனக்கு இரங்குவீராக.
\s5
\v 23 அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான பெண்களைச் சேர்த்துக்கொண்ட சில யூதர்களையும் அந்த நாட்களில் கண்டேன்.
\v 24 அவர்களுடைய பிள்ளைகள் பேசின பேச்சில் பாதி அஸ்தோத் மொழியாக இருந்தது; இவர்கள் அவரவர்களுடைய மொழியைத்தவிர யூதமொழியைத் தெளிவாகப் பேச அறியாதிருந்தார்கள்.
\s5
\v 25 அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களில் ஒருவரையும் உங்கள் மகன்களுக்காவது உங்களுக்காவது எடுக்காமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடச்செய்து, நான் அவர்களை நோக்கி:
\v 26 இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவம்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் தேசங்களுக்குள்ளே இருந்ததில்லை; அவன் தன்னுடைய தேவனால் சிநேகிக்கப்பட்டவனாக இருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக வைத்தார்; அப்படிப்பட்டவனையும் யூதரல்லாத பெண்கள் பாவம் செய்யவைத்தார்களே.
\v 27 நீங்கள் யூதரல்லாத பெண்களைச் சேர்த்துக்கொள்வதால், நம்முடைய தேவனுக்குத் துரோகிகளாகி, இந்தப் பெரிய தீங்கை எல்லாம் செய்ய, உங்களுக்கு இடங்கொடுப்போமோ என்றேன்.
\s5
\v 28 யொயதாவின் மகன்களிலே பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய மகன் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்திற்கு மருமகனானான்; ஆகையால் அவனை என்னைவிட்டுத் துரத்தினேன்.
\v 29 என்னுடைய தேவனே, அவர்கள் ஆசாரிய ஊழியத்தையும், ஆசாரிய ஊழியத்திற்கும் லேவியர்களுக்கும் இருக்கிற உடன்படிக்கையையும் கறைப்படுத்தினார்கள் என்று அவர்களை நினைத்துக்கொள்ளும்.
\s5
\v 30 இப்படியே நான் யூதரல்லாதவர்களையெல்லாம் நீக்கி, ஆசாரியர்களையும் லேவியர்களையும் சுத்திகரித்து, அவரவரை அவர்கள் வேலையின் பொறுப்புகளில் நிறுத்தி,
\v 31 குறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்படவேண்டிய விறகு காணிக்கையையும், முதற்பலன்களையுங்குறித்துத் திட்டமிட்டேன். என்னுடைய தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.

308
17-EST.usfm Normal file
View File

@ -0,0 +1,308 @@
\id EST
\ide UTF-8
\h எஸ்தர்
\toc1 எஸ்தர்
\toc2 எஸ்தர்
\toc3 est
\mt1 எஸ்தர்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 ராணியாகிய வஸ்தி பதவியிழத்தல்
\p
\v 1 இந்திய தேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரையுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாட்சி செய்த அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:
\v 2 ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரண்மனையில் இருக்கிற தன்னுடைய ராஜ்ஜியத்தின் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருந்தான்.
\s5
\v 3 அவனுடைய அரசாட்சியின் மூன்றாம் வருடத்திலே தன்னுடைய அதிகாரிகளுக்கும் வேலைக்காரர்களுக்கும் விருந்தளித்தான்; அப்பொழுது பெர்சியா மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் ஆளுனர்களும், பிரபுக்களும், அவனுடைய சமுகத்தில் வந்திருந்தார்கள்.
\v 4 அவன் தன்னுடைய ராஜ்ஜியத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன்னுடைய மகத்துவத்தின் மகிமையான பெருமைகளையும் நூற்றெண்பது நாட்கள்வரையும் காண்பித்துக்கொண்டிருந்தான்.
\s5
\v 5 அந்த நாட்கள் முடிந்தபோது, ராஜா சூசான் அரண்மனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்வரையுள்ள எல்லா மக்களுக்கும் ராஜ அரண்மனையைச்சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழு நாட்கள் விருந்தளித்தான்.
\v 6 அங்கே வெண்கலத் தூண்களின்மேலே உள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.
\s5
\v 7 பொன்னால் செய்யப்பட்ட பலவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சைரசம் ராஜாவின் கொடைத்தன்மைக்கு ஏற்றவாறு பரிபூரணமாகப் பரிமாறப்பட்டது.
\v 8 அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன்னுடைய அரண்மனையின் பெரிய மனிதர்களுக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியால், முறைப்படி குடித்தார்கள்; ஒருவனும் கட்டாயப்படுத்தவில்லை.
\s5
\v 9 ராணியாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரண்மனையிலே பெண்களுக்கு ஒரு விருந்தளித்தாள்.
\v 10 ஏழாம் நாளிலே ராஜா திராட்சைரசத்தினால் சந்தோஷமாக இருக்கும்போது, பேரழகியாயிருந்த ராணியாகிய வஸ்தியின் அழகை மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் காண்பிப்பதற்காக, ராஜகிரீடம் அணிந்தவளாக, அவளைத் தனக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று,
\v 11 ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் பணிவிடை செய்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் ராஜா கட்டளையிட்டான்.
\s5
\v 12 ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராணியாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே எரிச்சல் அடைந்தான்.
\s5
\v 13 அந்த சமயத்தில் ராஜசமுகத்தில் இருக்கிறவர்களும், ராஜ்ஜியத்தின் முதன்மை ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர்கள் மேதியர்களுடைய ஏழு பிரபுக்களும் அவன் அருகில் இருந்தார்கள்.
\v 14 ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடம் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால செயல்பாடுகளை அறிந்த பண்டிதர்களை நோக்கி:
\v 15 ராஜாவாகிய அகாஸ்வேரு அதிகாரிகளின் மூலமாகச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராணியாகிய வஸ்தி செய்யாமற்போனதினால், தேசத்தின் சட்டப்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான்.
\s5
\v 16 அப்பொழுது மெமுகான் ராஜாவிற்கும் பிரபுக்களுக்கும் முன்னே மறுமொழியாக: ராணியாகிய வஸ்தி ராஜாவிற்கு மட்டும் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய எல்லா நாடுகளிலுமுள்ள எல்லாபிரபுக்களுக்கும் எல்லா மக்களுக்குங்கூட அநியாயம் செய்தாள்.
\v 17 ராஜாவாகிய அகாஸ்வேரு ராணியாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டேன் என்று சொன்ன செய்தி எல்லாப் பெண்களுக்கும் தெரியவந்தால், அவர்களும் தங்களுடைய கணவன்களைத் தங்களுடைய பார்வையில் அற்பமாக நினைப்பார்கள்.
\v 18 இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் பெண்கள் ராணியின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள்; மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும்.
\s5
\v 19 ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைவிட சிறந்த மற்றொரு பெண்ணுக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை அனுப்பி, அது மீறப்படாதபடி, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசத்தின் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்.
\v 20 இப்படி ராஜா முடிவெடுத்த காரியம் தமது ராஜ்ஜியமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்வரையுள்ள எல்லாப் பெண்களும் தங்கள் கணவன்மார்களை மதிப்பார்கள் என்றான்.
\s5
\v 21 இந்த வார்த்தை ராஜாவிற்கும் பிரபுக்களுக்கும் நலமாகத் தோன்றியதால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து,
\v 22 எந்த கணவனும் தன்னுடைய வீட்டிற்குத் தானே அதிகாரியாக இருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த மக்களுடைய மொழியிலே அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற சொந்த எழுத்திலும், அந்தந்த தேசத்தில் பேசுகிற மொழிகளிலும், ராஜாவின் எல்லா நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 எஸ்தர் ராணியாக நியமிக்கப்படுதல்
\p
\v 1 இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் கோபம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.
\v 2 அப்பொழுது ராஜாவிற்குப் பணிவிடை செய்கிற அவனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: அழகாக இருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும்.
\s5
\v 3 அதற்காக ராஜா தம்முடைய ராஜ்ஜியத்தின் நாடுகளிலெல்லாம் பொறுப்பாளர்களை வைக்கவேண்டும்; இவர்கள் அழகாக இருக்கிற எல்லா கன்னிப்பெண்களையும் ஒன்றுகூட்டி, சூசான் அரண்மனையில் இருக்கிற கன்னிமாடத்திற்கு அழைத்துவந்து, பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய யேகாயினிடம் ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.
\v 4 அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி, வஸ்திக்கு பதிலாகப் பட்டத்து ராணியாகவேண்டும் என்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவிற்கு நலமாகத் தோன்றியபடியால் அப்படியே செய்தான்.
\p
\s5
\v 5 அப்பொழுது சூசான் அரண்மனையிலே பென்யமீனியனாகிய கீசின் மகன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் மகன் மொர்தெகாய் என்னும் பெயருள்ள ஒரு யூதன் இருந்தான்.
\v 6 அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடு எருசலேமிலிருந்து பிடித்து கொண்டுபோகப்பட்டவர்களில் ஒருவனாக இருந்தான்.
\s5
\v 7 அவன் தன்னுடைய சிறிய தகப்பனின் மகளாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பன் இல்லை; அந்தப் பெண் அழகும் விரும்பத்தக்கவளுமாக இருந்தாள்; அவளுடைய தகப்பனும், தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன்னுடைய மகளாக எடுத்துக்கொண்டான்.
\s5
\v 8 ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரபலமாகி, அநேக பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரண்மனையிலுள்ள யேகாயினிடத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, பெண்களைக் காவல்காக்கிற யேகாயினிடம் ஒப்புவிக்கப்பட்டாள்.
\v 9 அந்தப் பெண் அவனுடைய பார்வைக்கு நன்றாக இருந்ததால், அவளுக்கு அவனுடைய கண்களிலே தயவு கிடைத்தது; ஆகையால் அவளுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரண்மனையில் இருக்கிற ஏழு பணிப்பெண்களை அவளுக்கு நியமித்து கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவளுடைய பணிப்பெண்களையும் வைத்தான்.
\s5
\v 10 எஸ்தரோ தன்னுடைய மக்களையும், தன்னுடைய உறவினர்களையும் அறிவிக்காமல் இருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான்.
\v 11 எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்கும் காரியத்தையும் அறிய மொர்தெகாய் தினந்தோறும் கன்னிமாடத்து முற்றத்திற்கு முன்பாக உலாவுவான்.
\s5
\v 12 ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதங்கள் வாசனைப்பொருட்களாலும், பெண்களுக்குரிய மற்ற அலங்கரிப்புகளினாலும் அலங்கரிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இப்படியாக பெண்களின் முறையின்படி பன்னிரண்டு மாதங்களாகச் செய்துமுடித்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடம் வர, அவளவளுடைய முறை வருகிறபோது,
\v 13 இப்படி அலங்கரிக்கப்பட்ட பெண் ராஜாவிடம் போவாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடு ராஜ அரண்மனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவைகளை எல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.
\s5
\v 14 மாலையில் அவள் உள்ளே போய், காலையில், பிடித்த பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய சாஸ்காசுடைய பொறுப்பில் இருக்கிற பெண்களின் இரண்டாம் மாடத்திற்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பெயர்சொல்லி அழைக்கும்வரை அவள் ஒருபோதும் ராஜாவிடம் போகக்கூடாது.
\s5
\v 15 மொர்தெகாய் தனக்கு மகளாய் ஏற்றுக்கொண்டவளும், அவனுடைய சிறிய தகப்பனாகிய அபியாயேலின் மகளுமான எஸ்தர் ராஜாவிடம் போவதற்கு முறைவந்தபோது, அவள் பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய யேகாய் நியமித்த காரியத்தைத் தவிர வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லோருடைய கண்களிலும் தயவு கிடைத்தது.
\v 16 அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருடம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே அரண்மனைக்கு ராஜாவிடம் அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.
\s5
\v 17 ராஜா எல்லாப் பெண்களையும்விட எஸ்தர்மேல் அன்புவைத்தான்; எல்லா கன்னிப்பெண்களையும்விட அவளுக்கு ராஜாவிற்கு முன்பாக அதிக தயவும் இரக்கமும் கிடைத்தது; ஆகையால் ராஜா ராஜகிரீடத்தை அவளுடைய தலையின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் இடத்தில் பட்டத்து ராணியாக்கினான்.
\v 18 அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் வேலைக்காரர்களுக்கும், எஸ்தருக்காக ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்கும் கரிசனையோடு வரிவிலக்கு உண்டாக்கி, தன்னுடைய கொடைத்தன்மைக்கு ஏற்றவாறு வெகுமானங்களைக் கொடுத்தான்.
\s1 மொர்தெகாய் சதித்திட்டத்தை அறிதல்
\p
\s5
\v 19 இரண்டாம்முறை கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தான்.
\v 20 எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன்னுடைய உறவினர்களையும் தன்னுடைய மக்களையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர் மொர்தெகாயிடம் வளரும்போது அவனுடைய சொல்லைக்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவனுடைய சொல்லைக்கேட்டு நடந்துவந்தாள்.
\v 21 அந்த நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு அதிகாரிகளாகிய பிக்தானும் தேரேசும் கடுங்கோபத்துடன், ராஜாவாகிய அகாஸ்வேருக்கு தீங்குசெய்ய வாய்ப்பைத் தேடினார்கள்.
\s5
\v 22 இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததால், அவன் அதை ராணியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பெயரால் அதை ராஜாவிற்குச் சொன்னாள்.
\v 23 அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது உண்மையென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புத்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 ஆமான் யூதர்களை அழிக்க சதிசெய்தல்
\p
\v 1 இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற எல்லா பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய அதிகாரத்தின் ஆசனத்தை உயர்த்திவைத்தான்.
\v 2 ஆகையால் ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற ராஜாவின் வேலைக்காரர்கள் எல்லோரும் ஆமானுக்கு முன்பாக முழங்காலிட்டு வணங்கிவந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனுக்கு முன்பாக முழங்காலிடவுமில்லை, வணங்கவுமில்லை.
\s5
\v 3 அப்பொழுது ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற ராஜாவின் வேலைக்காரர்கள் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.
\v 4 இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனிடம் சொல்லியும், அவன் தங்களுடைய வார்த்தையைக் கேட்காதபோது, தான் யூதன் என்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்ப்பதற்கு, அதை ஆமானுக்கு அறிவித்தார்கள்.
\s5
\v 5 ஆமான் மொர்தெகாய் தனக்கு முன்பாக முழங்காலிட்டு வணங்காததைக் கண்டபோது, கடுங்கோபம் நிறைந்தவனானான்.
\v 6 ஆனாலும் மொர்தெகாயை மட்டும் கொல்லுவது அவனுக்கு அற்பமான காரியமாக இருந்தது; மொர்தெகாயின் மக்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்ஜியமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் மக்களாகிய யூதர்களையெல்லாம் அழிக்க அவன் திட்டம் தீட்டினான்.
\s5
\v 7 ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருடம் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் குறித்துப் போடப்பட்டு, ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் விழுந்தது.
\s5
\v 8 அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்ஜியத்தின் எல்லா நாடுகளிலுமுள்ள மக்களுக்குள்ளே ஒருவித மக்கள் சிதறி பரவியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் எல்லா மக்களுடைய வழக்கங்களுக்கும் வித்தியாசமாக இருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுவதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவிற்கு நியாயமல்ல.
\v 9 ராஜாவிற்கு விருப்பமிருந்தால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கருவூலத்தில் கொண்டுவந்து செலுத்த பத்தாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணி ராஜாவின் காரியத்தில் பொறுப்பாய் உள்ளவனுடைய கையில் கொடுப்பேன் என்றான்.
\s5
\v 10 அப்பொழுது ராஜா தன்னுடைய கையிலிருக்கிற தன்னுடைய மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகனும் யூதர்களின் எதிரியுமாகிய ஆமானிடம் கொடுத்து,
\v 11 ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த மக்களுக்கு உன்னுடைய விருப்பப்படி செய்யலாம் என்றான்.
\s5
\v 12 முதலாம் மாதம் பதிமூன்றாந்தேதியிலே, ராஜாவின் எழுத்தர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் ஆளுனர்களுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், எல்லா வகையான மக்களின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் எழுத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் மொழிகளிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின் பெயரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது.
\v 13 ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதிமூன்றாந் தேதியாகிய ஒரேநாளில் சிறியோர் பெரியோர் குழந்தைகள் பெண்கள் ஆகிய எல்லா யூதர்களையும் கொன்று அழிக்கவும், அவர்களை நொறுக்கவும், அஞ்சற்காரர்கள் கையில் ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது.
\s5
\v 14 அந்த நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும் என்று எல்லா மக்களுக்கும் கூறி அறிவிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே, இது ஒவ்வொரு நாட்டிலும் தெரியப்படுத்தப்பட்டது.
\v 15 அந்த அஞ்சற்காரர்கள் ராஜாவின் உத்தரவினால் விரைவாகப் புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரண்மனையில் பிறந்தது. ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்; சூசான் நகரம் கலங்கியது.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 மொர்தெகாய் எஸ்தரை உதவி செய்யும்படி வற்புறுத்துதல்
\p
\v 1 நடந்த எல்லாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, சணலாடை அணிந்து, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள உரத்த சத்தத்துடன் அலறிக்கொண்டு,
\v 2 ராஜாவின் அரண்மனை வாசல்வரை வந்தான்; சணலாடை அணிந்தவனாக ராஜாவின் அரண்மனை வாசலுக்குள் நுழைய ஒருவனுக்கும் அனுமதி இல்லை.
\v 3 ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் யூதர்களுள்ள பகுதிகளில் பெரிய துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாகி, அநேகர் சணலாடை அணிந்து சாம்பலில் கிடந்தார்கள்.
\s5
\v 4 அப்பொழுது எஸ்தரின் இளம்பெண்களும், அவளுடைய பணிவிடைக்காரர்களும் போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராணி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்திருந்த சணலாடையை எடுத்துப்போட்டு, அவனுக்கு அணிந்துகொள்ள ஆடைகளை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தான்.
\v 5 அப்பொழுது எஸ்தர் தன்னுடைய பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய அதிகாரிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைத்து: காரியம் என்ன? அதின் காரணம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடம் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள்.
\s5
\v 6 அப்படியே ஆத்தாகு ராஜாவின் அரண்மனை வாசலுக்கு முன்னான பட்டணத்து வீதியில் இருக்கிற மொர்தெகாயிடம் புறப்பட்டுப்போனான்.
\v 7 அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதர்களை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கருவூலத்திற்கு எண்ணிக்கொடுப்பேன் என்று சொன்ன பணத்தொகையைப் பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அல்லாமல்,
\v 8 யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடம் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் தைரியமாக ராஜாவிடம் போய், அவனிடம் தன்னுடைய மக்களுக்காக விண்ணப்பம்செய்யவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச்சொன்னான்.
\s5
\v 9 ஆத்தாகு வந்து, மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தருக்கு அறிவித்தான்.
\v 10 அப்பொழுது எஸ்தர் ஆத்தாகிடம் மொர்தெகாய்க்குச் சொல்லியனுப்பினது:
\v 11 யாராவது அழைக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவிடம் வந்தால், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படி அவர்களுக்கு நேராக ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு சட்டமுண்டு, இது ராஜாவின் எல்லா வேலைக்காரர்களுக்கும், ராஜாவுடைய நாடுகளிலுள்ள எல்லா மக்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாட்களாக ராஜாவிடம் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.
\v 12 எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள்.
\s5
\v 13 மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரண்மனையில் இருக்கிறதினால், மற்ற யூதர்கள் தப்ப முடியாமல் இருக்கும்போது, நீ தப்புவாயென்று உன்னுடைய மனதிலே நினைவுகொள்ளாதே.
\v 14 நீ இந்தக் காலத்திலே மவுனமாக இருந்தால், யூதருக்கு உதவியும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன்னுடைய தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்திற்கு உதவியாக இருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 15 அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது:
\v 16 நீர் போய், சூசானில் இருக்கிற யூதர்களையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாட்கள் இரவும் பகலும் சாப்பிடாமலும் குடிக்காமலுமிருந்து, எனக்காக உபவாசம் இருங்கள்; நானும் என்னுடைய பணிவிடைப்பெண்களும் உபவாசம் இருப்போம்; இப்படியே சட்டத்தை மீறி, ராஜாவிடம் போவேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
\v 17 அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்தான்.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 ராஜாவிடம் எஸ்தரின் வேண்டுதல்
\p
\v 1 மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜஉடை அணிந்துகொண்டு, ராஜ அரண்மனையின் உள்முற்றத்தில், ராஜா இருக்கும் இடத்திற்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரண்மனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் சிங்காசனத்திலே அமர்ந்திருந்தான்.
\v 2 ராஜா ராணியாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவனுடைய கண்களில் தயவு கிடைத்ததால், ராஜா தன்னுடைய கையிலிருக்கிற பொற் செங்கோலை எஸ்தரிடம் நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் அருகே வந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.
\s5
\v 3 ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராணியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.
\v 4 அப்பொழுது எஸ்தர்: ராஜாவிற்கு விருப்பமானால், நான் தங்களுக்குச் செய்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்றாள்.
\s5
\v 5 அப்பொழுது ராஜா எஸ்தர் சொன்னபடியே செய்ய, ஆமானை விரைவாக வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.
\v 6 விருந்திலே திராட்சைரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரைப் பார்த்து: உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.
\s5
\v 7 அதற்கு எஸ்தர் மறுமொழியாக:
\v 8 ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, என்னுடைய வேண்டுதலைக் கட்டளையிடவும், என்னுடைய விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவிற்குச் விருப்பமாக இருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என்னுடைய வேண்டுதலும் என்னுடைய விண்ணப்பமுமாக இருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.
\s1 மொர்தெகாய்க்கு எதிராக ஆமானின் கடுங்கோபம்
\p
\s5
\v 9 அன்றையதினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுடனும் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற மொர்தெகாய் தனக்கு முன்பு எழுந்திருக்காமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் கடுங்கோபம் அடைந்தவனானான்.
\v 10 ஆனாலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வந்து, தன்னுடைய நண்பர்களையும் தன்னுடைய மனைவியாகிய சிரேஷையும் அழைத்து,
\v 11 தன்னுடைய ஐசுவரியத்தின் மகிமையையும், தன்னுடைய பிள்ளைகளின் எண்ணிக்கையையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் வேலைக்காரர்கள்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.
\s5
\v 12 பின்னும் ஆமான்: ராணியாகிய எஸ்தரும் தான் செய்த விருந்துக்கு ராஜாவுடன் என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடன் நான் விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன்.
\v 13 ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணும்போது அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை என்றான்.
\s5
\v 14 அப்பொழுது அவனுடைய மனைவியாகிய சிரேஷூம் அவனுடைய நண்பர்கள் எல்லோரும் அவனைப் பார்த்து: ஐம்பது முழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயைத் தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவிற்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாக ராஜாவுடன் விருந்துக்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாகத் தெரிந்ததால் தூக்குமரத்தைச் செய்தான்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\s1 மொர்தெகாய் கெளரவிக்கப்படுதல்
\p
\v 1 அந்த இரவில் ராஜாவிற்கு தூக்கம் வராததினால், அவனுடைய ராஜ்ஜியத்தின் நிகழ்வுகள் எழுதியிருக்கிற பதிவு புத்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.
\v 2 அப்பொழுது வாசற் காவலாளர்களில் ராஜாவின் இரண்டு அதிகாரிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு தீங்கு செய்ய நினைத்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.
\v 3 அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவிற்கு பணிவிடை செய்கிற வேலைக்காரர்கள்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.
\s5
\v 4 ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடம் பேசும்படி ராஜஅரண்மனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.
\v 5 ராஜாவின் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.
\v 6 ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனிதனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னைத்தவிர, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன்னுடைய மனதிலே நினைத்து,
\s5
\v 7 ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனிதனுக்கு செய்யவேண்டியது என்னவென்றால்,
\v 8 ராஜா அணிந்துகொள்ளுகிற ராஜஉடையும், ராஜா ஏறுகிற குதிரையும், அவருடைய தலையிலே சூட்டப்படும் ராஜகிரீடமும் கொண்டுவரப்படவேண்டும்.
\v 9 அந்த ஆடையும் குதிரையும் ராஜாவுடைய முக்கிய பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனம்பண்ண விரும்புகிற மனிதனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படிச் செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனிதனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.
\s5
\v 10 அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாக நீ சொன்னபடி ஆடையையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரண்மனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்படியேசெய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.
\v 11 அப்படியே ஆமான் ஆடையையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவரும்படிச்செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனிதனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.
\s5
\v 12 பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலுக்குத் திரும்பி வந்தான்; ஆமானோ துக்கப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு விரைவாகப்போனான்.
\v 13 ஆமான் தனக்கு நேர்ந்த எல்லாவற்றையும் தன்னுடைய மனைவியாகிய சிரேஷூக்கும் தன்னுடைய நண்பர்கள் எல்லோருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரர்களும் அவனுடைய மனைவியாகிய சிரேஷூம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் துவங்கினீர்; அவன் யூத குலமாக இருந்தால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.
\v 14 அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் அதிகாரிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்துக்கு வர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 ஆமான் தூக்கிப்போடப்படுதல்
\p
\v 1 ராணியாகிய எஸ்தருடன் விருந்து உண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது,
\v 2 இரண்டாம் நாள் விருந்தில் திராட்சைரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராணியே, உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.
\s5
\v 3 அப்பொழுது ராணியாகிய எஸ்தர் மறுமொழியாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால் என்னுடைய வேண்டுதலுக்கு என்னுடைய ஜீவனும், என்னுடைய மன்றாட்டுக்கு என்னுடைய மக்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.
\v 4 எங்களை அழித்துக் கொல்லும்படி நானும் என்னுடைய மக்களும் விற்கப்பட்டோம்; ஆண்களும், பெண்களும் அடிமைகளாக விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாக இருப்பேன்; இப்பொழுதோ ராஜாவிற்கு உண்டாகும் நஷ்டத்திற்கு அந்த எதிரி உத்தரவாதம் பண்ணமுடியாது என்றாள்.
\v 5 அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராணியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான்.
\s5
\v 6 அதற்கு எஸ்தர்: எதிரியும் பகைவனுமாகிய அந்த மனிதன் இந்த பொல்லாத ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவிற்கும் ராணிக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.
\v 7 ராஜா கடுங்கோபத்தோடு திராட்சைரசப் பந்தியைவிட்டு எழுந்து, அரண்மனைத் தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்கு ஆபத்து நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராணியாகிய எஸ்தரிடம் தன்னுடைய உயிருக்காக விண்ணப்பம்செய்ய எழுந்து நின்றான்.
\s5
\v 8 ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சைரசம் பரிமாறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வரும்போது, எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரண்மனையில் இருக்கும்போதே என்னுடைய கண்முன்னே இவன் ராணியை பலவந்தம் செய்யவேண்டுமென்று இருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து வந்தவுடனே ஆமானின் முகத்தை மூடினார்கள்.
\s5
\v 9 அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற அதிகாரிகளில் அற்போனா என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானுடைய வீட்டின் அருகில் நடப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான்.
\v 10 அப்படியே ஆமான் மொர்தேகாய்க்கு ஆயத்தம்செய்த தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் கோபம் தணிந்தது.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\s1 யூதர்களுக்கான ராஜாவின் கட்டளை
\p
\v 1 அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதர்களின் விரோதியாக இருந்த ஆமானின் வீட்டை ராணியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜாவிற்கு முன்பாக வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.
\v 2 ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிய தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரண்மனைக்கு அதிகாரியாக வைத்தாள்.
\s5
\v 3 பின்னும் எஸ்தர் ராஜாவிடம் பேசி, அவனுடைய பாதங்களில் விழுந்து அழுது, ஆகாகியனான ஆமானின் தீவினையையும் அவன் யூதர்களுக்கு விரோதம் செய்ய யோசித்த யோசனையையும் மாற்ற அவனிடம் விண்ணப்பம் செய்தாள்.
\v 4 அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்து ராஜாவிற்கு முன்பாக நின்று:
\s5
\v 5 ராஜாவிற்கு விருப்பமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜாவிற்கு முன்பாக நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாக இருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதர்களை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீய எண்ணத்தோடு எழுதின கட்டளைகள் செல்லாமல் போகச்செய்யும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.
\v 6 என்னுடைய மக்களின்மேல் வரும் தீங்கை நான் எப்படிப் பார்க்கமுடியும்? என்னுடைய உறவினர்களுக்கு வரும் அழிவை நான் எப்படி சகிக்கமுடியும்? என்றாள்.
\s5
\v 7 அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராணியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்களை தாக்க துணிந்தபடியால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.
\v 8 இப்போதும் உங்களுக்கு விருப்பமானபடி நீங்கள் ராஜாவின் பெயரால் யூதர்களுக்காக எழுதி ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடுங்கள்; ராஜாவின் பெயரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடப்பட்டதைச் செல்லாமல் போகச்செய்ய ஒருவராலும் முடியாது என்றான்.
\s5
\v 9 சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாம் தேதிலே ராஜாவின் எழுத்தர்கள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதர்களுக்கும் இந்திய தேசம்முதல் எத்தியோப்பியா தேசம் வரையுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த தேசத்தில் பேசுகிற மொழிகளிலும், அந்தந்த ஜாதியார் பேசும் மொழியிலும், யூதர்களுக்கும் அவர்களுடைய தேசத்தில் பேசுகிற மொழிகளிலும் அவர்களுடைய சொந்த மொழிகளிலும் எழுதப்பட்டது.
\s5
\v 10 அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பெயரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடப்பட்டபின்பு, குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர்கள் கையில் அனுப்பப்பட்டது.
\v 11 அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் தேதியாகிய அந்த ஒரே நாளிலே,
\v 12 அந்தந்த நாடுகளில் இருக்கிற யூதர்கள் ஒன்றாகச் சேர்ந்து, தங்களுடைய உயிரைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் எதிரிகளாகிய மக்களும், தேசத்தைச் சேர்ந்தவர்களுமான எல்லோரையும், அவர்களுடைய குழந்தைகளையும், பெண்களையும் கொன்று அழிக்கவும், அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதர்களுக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது.
\s5
\v 13 யூதர்கள் தங்களுடைய பகைவர்களைப் பழிவாங்கும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்று அந்தந்த நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரபலப்படுத்தப்பட்டது.
\v 14 அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர்கள் ராஜாவின் வார்த்தையால் ஏவப்பட்டு, விரைவாக புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரண்மனையில் கொடுக்கப்பட்டது.
\s5
\v 15 அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜஉடையும், பெரிய பொற்கிரீடமும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாக ராஜாவிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது.
\v 16 இவ்விதமாக யூதர்களுக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டானது.
\v 17 ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதர்களுக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாக இருந்தது; யூதர்களுக்குப் பயப்படுகிற பயம் தேசத்து மக்களைப் பிடித்ததால், அவர்களில் அநேகர் யூத மார்க்கத்தில் இணைந்தார்கள்.
\s5
\c 9
\cl அத்தியாயம்– 9
\s1 யூதர்களின் வெற்றி
\p
\v 1 ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, யூதர்களின் பகைவர்கள் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்த நாளிலே, யூதர்களானவர்கள் தங்கள் பகைவர்களை மேற்கொள்ளும்படிக் காரியம் மாறுதலாக முடிந்தது.
\v 2 யூதர்கள் அகாஸ்வேரு ராஜாவின் எல்லா நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்கு தீங்கை கொண்டுவர முயற்சிசெய்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கமுடியாமல் இருந்தது; அவர்களைப்பற்றி எல்லா மக்களுக்கும் பயமுண்டாயிற்று.
\s5
\v 3 நாடுகளின் எல்லா அதிகாரிகளும், ஆளுநர்களும், பிரபுக்களும், ராஜாவின் நிர்வாகிகளும், யூதர்களுக்குத் துணையாக நின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயம் அவர்களைப் பிடித்தது.
\v 4 மொர்தெகாய் ராஜாவின் அரண்மனையில் பெரியவனாக இருந்தான்; அவனுடைய புகழ் எல்லா நாடுகளிலும் பிரபலமானது; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவன் ஆனான்.
\v 5 அப்படியே யூதர்கள் தங்களுடைய விரோதிகளையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று அழித்து, தங்களுக்கு விருப்பமானபடி தங்கள் பகைவர்களுக்குச் செய்தார்கள்.
\s5
\v 6 யூதர்கள் சூசான் அரண்மனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று அழித்துப்போட்டார்கள்.
\v 7 அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் யூதர்களுடைய எதிரியின் மகன்களான பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா,
\v 8 பொராதா, அதலியா, அரிதாத்தா,
\v 9 பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப்பேரையும் கொன்றுபோட்டார்கள்.
\v 10 ஆனாலும் அவர்கள் கொள்ளையிடவில்லை.
\s5
\v 11 அன்றையதினம் சூசான் அரண்மனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் எண்ணிக்கை ராஜாவிற்கு முன்பாக கொண்டுவரப்பட்டது.
\v 12 அப்பொழுது ராஜா, ராணியாகிய எஸ்தரை நோக்கி: யூதர்கள் சூசான் அரண்மனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்து மகன்களையும் கொன்றுபோட்டார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன்னுடைய மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.
\s5
\v 13 அப்பொழுது எஸ்தர்: ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால், இன்றையநாளின் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர்கள் நாளைக்கும் செய்யவும், ஆமானின் பத்து மகன்களின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவிடவேண்டும் என்றாள்.
\v 14 அப்படியே செய்யும்படி ராஜா உத்தரவு கொடுத்தான்; அதற்கு சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்து மகன்களுடைய உடல்களையும் தூக்கிப்போட்டார்கள்.
\s5
\v 15 சூசானில் இருக்கிற யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினான்காம்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையடிக்கத் தங்களுடைய கையை நீட்டவில்லை.
\v 16 ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்களுடைய உயிரைப் பாதுகாக்கவும், தங்கள் பகைவர்களுக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒன்றாகச்சேர்ந்து, தங்களுடைய எதிரிகளில் எழுபத்தையாயிரம்பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையடிக்கத் தங்களுடைய கையை நீட்டவில்லை.
\s5
\v 17 ஆதார் மாதத்தின் பதிமூன்றாம்தேதியிலே இப்படிச் செய்து, பதினான்காம்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.
\s1 பூரிம் கொண்டாடப்படுதல்
\p
\v 18 சூசானிலுள்ள யூதர்களோ, அந்த மாதத்தின் பதிமூன்றாந்தேதியிலும் பதினான்காம்தேதியிலும் ஏகமாகக்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.
\v 19 ஆதலால் மதில்களில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினான்காம்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் பரிசுகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.
\p
\s5
\v 20 மொர்தெகாய் இந்தக் காரியங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா யூதர்களுக்கும் கடிதங்களை அனுப்பி,
\v 21 ஒவ்வொரு வருடமும் ஆதார் மாதத்தின் பதினான்காம் பதினைந்தாந்தேதிகளை, யூதர்கள் தங்களுடைய பகைவர்களுக்கு விலகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்களுடைய சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்களுடைய துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் அநுசரித்து,
\v 22 அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷம்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் பரிசுகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மம் செய்யவும்வேண்டும் என்று திட்டம் செய்தான்.
\s5
\v 23 அப்பொழுது யூதர்கள் தாங்கள் செய்யத்துவங்கியபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
\v 24 அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதர்களுக்கெல்லாம் எதிரியாக இருந்து யூதர்களை அழிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும், ஒடுக்கவும் பூர் என்னப்பட்ட சீட்டைப் போட செய்தான்.
\v 25 ஆனாலும் எஸ்தர், ராஜாவிற்கு முன்பாகபோய், யூதர்களுக்கு விரோதமாக அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளையிட்டதால், அவனையும் அவனுடைய மகன்களையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.
\s5
\v 26 ஆகையால் அந்த நாட்கள் பூர் என்னும் பெயரால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த கடிதத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினாலும், தாங்களே இந்த விஷயத்தில் அனுபவித்தவைகளினாலும், தங்களுக்கு சம்பவித்தவைகளினாலும்,
\v 27 யூதர்கள் அதை ஏற்றுக்கொண்டு, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை ஒவ்வொரு வருடமும், அவைகளின் சரியான காலத்தில் கொண்டாடாமல் இருப்பதில்லை என்பதையும்,
\v 28 இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூறப்பட்டு கொண்டாடப்படவேண்டும் என்பதையும், இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதர்களுக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுகூருதல் தங்களுடைய சந்ததியினர்களுக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்களுடைய சந்ததியினர்கள்மேலும், தங்களுடைய மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற எல்லோர்மேலும் கடனாக நியமித்துக் கொண்டார்கள்.
\s5
\v 29 பூரிமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் கடிதத்தை உறுதிப்படுத்தும்படி, அபியாயேலின் மகளாகிய எஸ்தர் என்னும் ராணியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாக எழுதினார்கள்.
\s5
\v 30 யூதனாகிய மொர்தெகாயும், ராணியாகிய எஸ்தரும் யூதர்களுக்கு உறுதிசெய்ததும், அவர்கள் உபவாசத்தோடும் அலறுதலோடும் அனுசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியினர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் அனுசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க,
\v 31 அவன் அகாஸ்வேருவின் ராஜ்ஜியத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலும் இருக்கிற எல்லா யூதர்களுக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய கடிதங்களை அனுப்பினான்.
\v 32 இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த சம்பவங்களை உறுதிப்படுத்தினது; அது ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டது.
\s5
\c 10
\cl அத்தியாயம்– 10
\s1 மொர்தெகாயின் மேன்மை
\p
\v 1 ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், கடலிலுள்ள தீவுகளின்மேலும், வரியை ஏற்படுத்தினான்.
\v 2 பலமும் வல்லமையுமான அவனுடைய எல்லாசெயல்களும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் மகத்துவமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நாளாகம புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
\s5
\v 3 யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதாக இருந்தவனும், யூதர்களுக்குள் பெரியவனும், தன்னுடைய திரளான சகோதரர்களுக்குப் பிரியமானவனுமாக இருந்ததும் அன்றி தன்னுடைய மக்களுடைய நன்மையைத்தேடி, தன்னுடைய மக்களுக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாக இருந்தான்.

248
22-SNG.usfm Normal file
View File

@ -0,0 +1,248 @@
\id SNG
\ide UTF-8
\h உன்னதப்பாட்டு
\toc1 உன்னதப்பாட்டு
\toc2 உன்னதப்பாட்டு
\toc3 sng
\mt1 உன்னதப்பாட்டு
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 விருந்து
\p
\v 1 சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.
\v 2 அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சைரசத்தைவிட இன்பமானது.
\v 3 உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றப்பட்ட நறுமணமுள்ள தைலமாக இருக்கிறது; ஆகையால் இளம்பெண்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
\v 4 என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சைரசத்தைவிட உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
\s5
\v 5 எருசலேமின் பெண்களே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாக இருந்தாலும், அழகாக இருக்கிறேன்.
\v 6 நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்; வெயில் என்மேல் பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சைத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.
\s5
\v 7 என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே சேர்க்கிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழர்களின் மந்தைகளின் அருகே அலைந்து திரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?
\s5
\v 8 பெண்களில் அழகு மிகுந்தவளே! அதை நீ அறியவில்லையென்றால், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களுக்கு அருகில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
\s5
\v 9 என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூட்டப்பட்டிருக்கிற பெண்குதிரைக் கூட்டத்திற்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
\v 10 அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும், ஆரங்கள் அணிந்த உன் கழுத்தும் அழகாக இருக்கிறது.
\v 11 வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம்.
\s5
\v 12 ராஜா தமது பந்தியிலிருக்கும்வரை என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும்.
\v 13 என் நேசர் எனக்கு என் மார்பகங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.
\v 14 என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சைத்தோட்டங்களில் முளைக்கும் மருதாணிப் பூங்கொத்து.
\s5
\v 15 என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; நீ மிக அழகுள்ளவள்; உன் கண்கள் புறாக்கண்கள்.
\s5
\v 16 நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய படுக்கை பசுமையானது.
\v 17 நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம், நம்முடைய வீட்டின் மேல்தளம் தேவதாரு மரம்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\p
\v 1 நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிமலராக இருக்கிறேன்.
\v 2 முட்களுக்குள்ளே லீலிமலர் எப்படியிருக்கிறதோ, அப்படியே இளம்பெண்களுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.
\s5
\v 3 காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே இளம் ஆண்களுக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே ஆர்வமுடன் உட்காருகிறேன், அதின் பழம் என் வாய்க்கு இனிப்பாக இருக்கிறது.
\v 4 என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.
\s5
\v 5 திராட்சைரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.
\v 6 அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது.
\s5
\v 7 எருசலேமின் இளம்பெண்களே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும், எழுப்பாமலும் இருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
\s1 நேசரின் வேண்டுகோள்
\p
\s5
\v 8 இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகளின்மேல் குதித்தும் மேடுகளின்மேல் துள்ளியும் வருகிறார்.
\v 9 என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாக இருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்கு வெளியே நின்று சன்னல் வழியாகப் பார்த்து, தட்டியின் வழியாகத் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.
\s5
\v 10 என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே! எழுந்துவா.
\v 11 இதோ, மழைக்காலம் சென்றது, மழைபெய்து ஓய்ந்தது.
\s5
\v 12 பூமியிலே மலர்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடும் காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது.
\v 13 அத்திமரம் காய்காய்த்தது; திராட்சைக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் நறுமணத்தையும் கொடுக்கிறது; என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே! நீ எழுந்து வா.
\s5
\v 14 கன்மலையின் வெடிப்புகளிலும், மலையுச்சிகளின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகத்தோற்றத்தை எனக்குக் காட்டு, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகத்தோற்றம் அழகுமாக இருக்கிறது என்றார்.
\s5
\v 15 திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சைத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாக இருக்கிறதே.
\s5
\v 16 என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.
\v 17 என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாக இரும்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 துன்பம் நிறைந்த இரவு
\p
\v 1 இரவுநேரங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
\v 2 நான் எழுந்து, நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் சுற்றி, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
\s5
\v 3 நகரத்திலே உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.
\v 4 நான் அவர்களைவிட்டுக் கொஞ்சதூரம் சென்றவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; நான் அவரை என் தாயின் வீட்டிலும், என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடும்வரைக்கும் அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்.
\s5
\v 5 எருசலேமின் இளம்பெண்களே! எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
\s1 சாலோமொனின் வருகை
\p
\s5
\v 6 வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வியாபாரிகளுடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபமேகத்தைப்போல் வனாந்திரத்திலிருந்து வருகிற இவர் யார்?
\v 7 இதோ, சாலொமோனுடைய படுக்கை; இஸ்ரவேலின் பலசாலிகளில் அறுபது பலசாலிகள் அதைச் சுற்றிலும் நிற்கிறார்கள்.
\s5
\v 8 இவர்களெல்லோரும் பட்டயம் பிடித்து, போருக்குப் பயிற்சிபெற்றவர்களாக இருக்கிறார்கள்; இரவுநேர பயத்தினாலே அவனவனுடைய பட்டயம் அவனவன் இடுப்பிலிருக்கிறது.
\v 9 சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைச் செய்வித்தார்.
\s5
\v 10 அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தளத்தைப் பொன்னினாலும், அதின் இருக்கையை இரத்தாம்பரத்தினாலும் செய்வித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் இளம்பெண்களினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது.
\v 11 சீயோனின் இளம்பெண்களே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் திருமணநாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்கு அணிவித்த கிரீடத்துடன் இருக்கிற அவரைப் பாருங்கள்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\p
\v 1 நீ அழகு மிகுந்தவள், என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களைப்போல் இருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் இலைகளை மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போல் இருக்கிறது.
\s5
\v 2 உன்னுடைய பற்கள், ரோமம் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் அனைத்தும் இரட்டைக்குட்டி ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது.
\s5
\v 3 உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும், உன் வாய் இன்பமுமாக இருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது.
\s5
\v 4 உன்னுடைய கழுத்து, பராக்கிரமசாலிகளின் ஆயிரம் கேடகங்கள் தூக்கியிருக்கிற ஆயுத சாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது.
\v 5 உன் இரண்டு மார்பகங்களும் லீலிமலர்களுக்கு இடையில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.
\s5
\v 6 பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலைக்கும் சாம்பிராணிமலைக்கும் போயிருப்பேன்.
\v 7 என் பிரியமே! நீ பூரண அழகுமிகுந்தவள்; உன்னில் குறையொன்றும் இல்லை.
\s5
\v 8 லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் உச்சியிலிருந்தும், சேனீர் எர்மோனின் உச்சியிலிருந்தும், சிங்கங்களின் குகைகளிலிருந்தும், சிறுத்தைகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்.
\s5
\v 9 என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களில் ஒன்றிலும் உன் கழுத்திலுள்ள ஒரு நகையிலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்.
\s5
\v 10 உன் நேசம் எவ்வளவு இன்பமாக இருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சைரசத்தைவிட உன் நேசம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைவிட உன் நறுமண தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!
\v 11 என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் உடைகளின் வாசனை லீபனோனின் வாசனைக்கு ஒப்பாக இருக்கிறது.
\s5
\v 12 என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், பாதுகாக்கப்பட்ட கிணறுமாக இருக்கிறாய்.
\v 13 உன் தோட்டம் மாதுளம்செடிகளும், அருமையான பழமரங்களும், மருதாணிச் செடிகளும், நளதச்செடிகளும்,
\v 14 நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன மரங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்கார வனமாக இருக்கிறது.
\s5
\v 15 தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் கிணறும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.
\v 16 வாடைக்காற்றே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்திற்கு வந்து, தமது அருமையான பழங்களைச் சாப்பிடுவாராக.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\p
\v 1 என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்திற்கு வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்; என் திராட்சைரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதர்களே! சாப்பிடுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், திருப்தியாகக் குடியுங்கள்.
\s1 சூலமித்தியாளின் இரவு
\p
\s5
\v 2 நான் நித்திரைசெய்தேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
\s5
\v 3 என் உடையைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் அணிவேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.
\v 4 என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.
\s5
\v 5 என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
\s5
\v 6 என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு பதில் கொடுக்கவில்லை.
\s5
\v 7 நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்; மதிலின் காவற்காரர்கள் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.
\s5
\v 8 எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
\s5
\v 9 பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே! மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?
\s5
\v 10 என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பத்தாயிரம்பேர்களில் சிறந்தவர்.
\v 11 அவருடைய தலை தங்கமயமாக இருக்கிறது; அவருடைய தலைமுடி சுருள் சுருளாகவும், காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது.
\s5
\v 12 அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாகப் பதிக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது.
\s5
\v 13 அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது; அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
\s5
\v 14 அவருடைய கைகள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போல் இருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்களால் மூடப்பட்ட பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
\s5
\v 15 அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவருடைய தோற்றம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாக இருக்கிறது.
\s5
\v 16 அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் இளம்பெண்களே! இவரே என் சிநேகிதர்.
\s5
\c 6
\cl அத்தியாயம்– 6
\p
\v 1 உன் நேசர் எங்கே போனார்? பெண்களில் அழகுமிகுந்தவளே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.
\s5
\v 2 தோட்டங்களில் மேயவும், லீலிமலர்களைப் பறிக்கவும், என் நேசர் தமது தோட்டத்திற்கும் கந்தவர்க்கப்பாத்திகளுக்கும் போனார்.
\v 3 நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.
\s1 சூலமித்தியாளின் அழகு
\p
\s5
\v 4 என் பிரியமே! நீ திர்சாவைப்போல் அழகும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் இரகசியமும் நிறைந்தவள்.
\s5
\v 5 உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் கருமையான கூந்தல் கீலேயாத் மலையிலே இலைகள்மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.
\s5
\v 6 உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் இரட்டைக்குட்டிகளை ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது.
\v 7 உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது.
\s5
\v 8 ராணிகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியர்களுக்குத் தொகையில்லை.
\v 9 என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; இளம்பெண்கள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.
\s5
\v 10 சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் இரகசியம் நிறைந்தவளாக, சூரிய உதயம்போல் உதிக்கிற இவள் யார்?
\s5
\v 11 பள்ளத்தாக்கிலே பழுத்த பழங்களைப் பார்க்கவும், திராட்சைச்செடிகள் துளிர்விட்டு, மாதுளம்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.
\v 12 நினைக்காததற்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கினது.
\s5
\v 13 திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா. சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் இரண்டு படையின் கூட்டத்துக்குச் சமானமானவள்.
\s5
\c 7
\cl அத்தியாயம்– 7
\s1 சூலமித்தியாள் புகழப்படுதல்
\p
\v 1 இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள் மிகவும் அழகாக இருக்கிறது; உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது.
\s5
\v 2 உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டக்கலசம்போல் இருக்கிறது; உன் வயிறு லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல்போல் இருக்கிறது.
\s5
\v 3 உன் இரண்டு மார்பகங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாக இருக்கிறது.
\v 4 உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.
\s5
\v 5 உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது; உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது; ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார்.
\v 6 மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு அழகுமிகுந்தவள், நீ எவ்வளவு இன்பமுள்ளவள்.
\s5
\v 7 உன் உயரம் பனைமரத்தைப்போலவும், உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும் இருக்கிறது.
\v 8 நான் பனைமரத்தில் ஏறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.
\s5
\v 9 உன் தொண்டை, என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசச்செய்கிறதுமான, நல்ல திராட்சைரசத்தைப்போல் இருக்கிறது.
\s5
\v 10 நான் என் நேசருடையவள், அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது.
\v 11 வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய், கிராமங்களில் தங்குவோம்.
\s5
\v 12 அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.
\s5
\v 13 தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களின் அருகில் புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான பழங்களும் உண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.
\s5
\c 8
\cl அத்தியாயம்– 8
\p
\v 1 ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போல் இருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.
\s5
\v 2 நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்; நீர் எனக்குப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும், என் மாதுளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.
\v 3 அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கும், அவருடைய வலதுகை என்னை அணைக்கும்.
\s5
\v 4 எருசலேமின் இளம்பெண்களே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
\s1 அன்பு புதுப்பிக்கப்படுதல்
\p
\s5
\v 5 தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.
\s5
\v 6 நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது.
\s5
\v 7 திரளான தண்ணீர்கள் நேசத்தை அணைத்துவிட முடியாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமுடியாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள சொத்துக்களையெல்லாம் நேசத்திற்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைசெய்யப்படும்.
\s5
\v 8 நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு, அவளுக்கு மார்பகங்கள் இல்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?
\s5
\v 9 அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.
\s5
\v 10 நான் மதில்தான், என் மார்பகங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் இரக்கம் பெறலானேன்.
\s5
\v 11 பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சைத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசுகளைக் கொண்டுவரும்படி விட்டார்.
\v 12 என் திராட்சைத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் பழத்தைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.
\s5
\v 13 தோட்டங்களில் குடியிருக்கிறவளே! தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும்.
\s5
\v 14 என் நேசரே! விரைவாக வாரும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.

254
25-LAM.usfm Normal file
View File

@ -0,0 +1,254 @@
\id LAM
\ide UTF-8
\h புலம்பல்
\toc1 புலம்பல்
\toc2 புலம்பல்
\toc3 lam
\mt1 புலம்பல்
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 எருசலேமின் துன்பம்
\p
\v 1 ஐயோ! மக்கள் மிகுந்த நகரம் தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! தேசங்களில் பெரியவளும், அந்தத்தேசங்களில் இளவரசியுமாயிருந்தவள் வரிகட்டுகிறவளானாளே!
\v 2 இரவுநேரத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்; அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுக்குப் பிரியமானவர்களில் அவளைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை; அவளுடைய நண்பர்கள் அனைவரும் அவளுக்குத் துரோகிகளும் விரோதிகளுமானார்கள்.
\s5
\v 3 யூதா மக்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் அந்நிய மக்களுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையமாட்டாள்; அவளைத் துன்பப்படுத்துகிற அனைவரும் அவளை அவளுடைய இக்கட்டான நேரங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.
\s5
\v 4 பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவளுடைய வாசல்கள் எல்லாம் பயனற்றுக்கிடக்கிறது; அவளுடைய ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவளுடைய இளம்பெண்கள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.
\v 5 அவளுடைய விரோதிகள் அவளுக்குத் தலைவர்களானார்கள், அவளுடைய பகைவர்கள் செழித்திருக்கிறார்கள்; அவளுடைய மிகுதியான பாவங்களுக்காக கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.
\s5
\v 6 சீயோனாகிய மகளுடைய அழகெல்லாம் அவளை விட்டுப்போனது; அவளுடைய தலைவர்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி, பின்தொடருகிறவனுக்கு முன்பாக பலமில்லாமல் நடந்துபோனார்கள்.
\s5
\v 7 தனக்குச் சிறுமையும் தவிப்பும் ஏற்பட்ட நாட்களிலே எருசலேம் ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்பவர்கள் இல்லாமல் அவளுடைய மக்கள் விரோதிகளின் கையிலே விழும்போது, பகைவர்கள் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வு நாட்களைக் குறித்து ஏளனம் செய்தார்கள்.
\s5
\v 8 எருசலேம் மிகுதியாகப் பாவம்செய்தாள்; ஆதலால் தீட்டான பெண்ணைப்போலானாள்; அவளைக் கனம்செய்தவர்கள் எல்லோரும் அவளை அசட்டைசெய்கிறார்கள்; அவளுடைய நிர்வாணத்தைக் கண்டார்கள்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.
\v 9 அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினைக்காமல் இருந்தாள்; ஆகையால் அதிசயமாகத் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுபவர்கள் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைவன் பெருமைபாராட்டினானே.
\s5
\v 10 அவளுடைய விலையுயர்ந்த எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரக்கூடாதென்று தேவரீர் விலக்கிய அன்னியர்கள் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் நுழைவதைக் கண்டாள்.
\s5
\v 11 அவளுடைய மக்களெல்லோரும் ஆகாரத்தைத்தேடித் தவிக்கிறார்கள்; தங்களுடைய உயிரைக் காப்பாற்றத் தங்களுக்குப் பிரியமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; கர்த்தாவே, நோக்கிப்பாரும்; நினைக்கப்படாதவளானேன்.
\v 12 வழியில் நடந்துபோகிற அனைத்து மக்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா? கர்த்தர் தாம் மிகவும் கோபப்பட்ட நாளிலே என்னை வருத்தப்படுத்தியதால் எனக்கு ஏற்பட்ட என் துக்கத்திற்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
\s5
\v 13 உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழச்செய்தார்; என்னை வீணனாக்கினார்; தினமும் நான் பெலவீனப்பட்டுப்போகிறேன்.
\v 14 என் மீறுதல்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் இணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை இழக்கச்செய்தார்; நான் எழுந்திருக்க முடியாதபடி ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
\s5
\v 15 என்னிடத்திலுள்ள பலசாலிகளாகிய எனக்குரிய அனைவரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபர்களை நொறுக்குவதற்காக எனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர், மகளாகிய யூதா என்னும் இளம்பெண்ணை மிதித்தார்.
\s5
\v 16 இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே கண்ணீரை சிந்துகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்; பகைவன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் வீணாய்ப்போனார்கள்.
\v 17 சீயோன் தன் கைகளை விரிக்கிறாள்; அவளைத் தேற்றுபவர்கள் ஒருவருமில்லை; கர்த்தர் யாக்கோபைச் சுற்றிலும் உள்ளவர்களை அவனுக்கு விரோதிகளாகக் கட்டளையிட்டார்; அவர்களுக்குள்ளே எருசலேம் தீட்டான பெண்ணுக்கு ஒப்பானாள்.
\s5
\v 18 கர்த்தர் நீதிபரர்; அவருடைய கட்டளைகளுக்கு விரோதமாக நான் எழும்பினேன்; மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் சிறைப்பட்டுப்போனார்கள்.
\v 19 என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தங்களுக்கு ஆகாரம் தேடும்போது நகரத்தில் மூச்சு அடங்கி இறந்துபோனார்கள்.
\s5
\v 20 கர்த்தாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; என் குடல் கொதிக்கிறது; நான் மிகவும் துரோகம் செய்ததினால் என் இருதயம் வேதனைப்படுகிறது; வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கியது, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.
\s5
\v 21 நான் புலம்புகிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை; என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்ததினால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் சொன்ன நாளை வரச்செய்வீர். அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.
\v 22 அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்துக்கு முன்பாக வரட்டும். என்னுடைய சகல பாவங்களுக்காக நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலவீனமாயிருக்கிறது.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 எருசலேமின் மேல் தேவனுடைய கோபம்
\p
\v 1 ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் மகளாகிய சீயோனை மேகமூட்டத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினைக்காமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமியிலே விழச்செய்தார்.
\v 2 ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் குடியிருப்புகளையெல்லாம் விழுங்கினார்; அவர், மகளாகிய யூதாவின் பாதுகாப்புகளையெல்லாம் தமது கோபத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; இராஜ்ஜியத்தையும் அதின் தலைவர்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.
\s5
\v 3 அவர் தமது கடுங்கோபத்திலே இஸ்ரவேலின் கொம்பு முழுவதையும் வெட்டிப்போட்டார்; விரோதிகளுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதை எரித்துப்போடுகிற நெருப்புத்தழலைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார்.
\v 4 பகைவனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; எதிரியைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; மகளாகிய சீயோனின் கூடாரத்திலே தம்முடைய கோபத்தை அக்கினியைப்போல் விழச்செய்தார்.
\s5
\v 5 ஆண்டவர் பகைவனைப் போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் பாதுகாப்பை அழித்து, மகளாகிய யூதாவுக்கு மிகுந்த துக்கத்தையும் சோர்வையும் உண்டாக்கினார்.
\v 6 தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாகப் பிடுங்கிப்போட்டார்; சபைகூடுகிற தம்முடைய இடங்களை அழித்தார்; கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வு நாளையும் மறக்கச்செய்து, தமது கடுங்கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் அகற்றிவிட்டார்.
\s5
\v 7 ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; அதினுடைய அரண்மனைகளின் மதில்களை விரோதியின் கையில் ஒப்புக்கொடுத்தார்; பண்டிகைநாளில் ஆரவாரம் செய்கிறதுபோல் கர்த்தரின் ஆலயத்தில் ஆரவாரம் செய்தார்கள்.
\s5
\v 8 கர்த்தர், மகளாகிய சீயோனின் மதிலை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடி தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; பாதுகாப்பையும் மதிலையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக்கிடக்கிறது.
\v 9 அவளுடைய வாசல்கள் தரையில் புதைந்துகிடக்கிறது; அவளுடைய தாழ்ப்பாள்களை உடைத்துப்போட்டார்; அவளுடைய ராஜாவும் அவளுடைய பிரபுக்களும் அந்நியமக்களுக்குள் இருக்கிறார்கள்; வேதமுமில்லை; அவளுடைய தீர்க்கதரிசிகளுக்குக் கர்த்தரால் தரிசனம் கிடைப்பதில்லை.
\s5
\v 10 மகளாகிய சீயோனின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாக இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; சணலாடை உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் இளம்பெண்கள் தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
\s5
\v 11 என் மகளாகிய எனது மக்களின் பாடுகளினிமித்தம் கண்ணீர் விடுகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் உருகி தரையிலே வடிகிறது; குழந்தைகளும் சிறுபிள்ளைகளும் நகரத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கிறார்கள்.
\v 12 அவர்கள் காயப்பட்டவர்களைப்போல பட்டணத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கும்போதும், தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் உயிரை விடும்போதும், தங்கள் தாய்களை நோக்கி: தானியமும் திராட்சைரசமும் எங்கே என்கிறார்கள்.
\s5
\v 13 மகளாகிய எருசலேமே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகளாகிய சீயோன் என்னும் இளம்பெண்ணே, நான் உன்னைத் தேற்றுவதற்கு உன்னை எதற்கு ஒப்பிட்டுச்சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்?
\v 14 உன் தீர்க்கதரிசிகள் பொய்யும் பயனற்ற தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன்னுடைய சிறையிருப்பு விலகும்படி உன் அக்கிரமத்தை சுட்டிக்காட்டாமல், பொய்யானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள்.
\s5
\v 15 வழிப்போக்கர்கள் அனைவரும் உன்னைப்பார்த்துக் கை கொட்டுகிறார்கள்; மகளாகிய எருசலேமைப்பார்த்து விசிலடித்து, கேலியாக தங்கள் தலைகளை அசைத்து: பூரணவடிவும் உலகத்தின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.
\v 16 உன்னுடைய பகைவர்கள் எல்லோரும் உன்னைப்பார்த்துத் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; பரியாசம் செய்து பல்லைக் கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.
\s5
\v 17 கர்த்தர் தாம் நினைத்ததைச் செய்தார்; ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைவன் மகிழ்ச்சியடையச் செய்தார்; உன் எதிரிகளின் கொம்பை உயர்த்தினார்.
\s5
\v 18 அவர்களுடைய இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; மகளாகிய சீயோனின் மதிலே, இரவும் பகலும் நதியைப்போல கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கருவிழியை சும்மாயிருக்கவிடாதே.
\v 19 எழுந்திரு, இரவிலே முதல் ஜாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மயங்கியிருக்கிற உன் குழந்தைகளின் உயிருக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
\s5
\v 20 கர்த்தாவே, யாருக்கு இந்த விதமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; பெண்கள், கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பத்தின் பிள்ளைகளை சாப்பிடவேண்டுமோ? ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ?
\s5
\v 21 வாலிபனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்; என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் பட்டயத்தால் விழுந்தார்கள்; உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர்.
\v 22 பண்டிகைநாளில் மக்கள் கூட்டத்தை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்கு பயத்தை வரவழைத்தீர்; கர்த்தருடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை; நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைவன் அழித்தான்.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 தீர்க்கதரிசியின் மனவேதனையும் நம்பிக்கையும்
\p
\v 1 ஆண்டவருடைய கோபத்தின் பிரம்பினால் ஏற்பட்ட சிறுமையைக் கண்ட மனிதன் நான்.
\v 2 அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.
\v 3 அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார்.
\v 4 என் சதையையும், என் தோலையும் கடினமாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.
\s5
\v 5 அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டார்.
\v 6 ஆரம்பகாலத்தில் இறந்தவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கச்செய்தார்.
\v 7 நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கை கடினமாக்கினார்.
\v 8 நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.
\s5
\v 9 வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.
\v 10 அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.
\v 11 என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பயனற்றவனாக்கிவிட்டார்.
\s5
\v 12 தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.
\v 13 தம்முடைய அம்புப்பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார்.
\v 14 நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும், தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன்.
\v 15 கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார்.
\s5
\v 16 அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளச்செய்தார்.
\v 17 என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
\v 18 என் பெலனும், நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன்.
\s5
\v 19 எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
\v 20 என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது.
\v 21 இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன்.
\s5
\v 22 நாம் அழிந்துபோகாமலிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
\v 23 அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
\v 24 கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.
\s5
\v 25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.
\v 26 கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
\v 27 தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது.
\v 28 அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருக்கக்கடவன்.
\v 29 நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக.
\s5
\v 30 தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக.
\v 31 ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
\v 32 அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார்.
\v 33 அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை.
\s5
\v 34 ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் அனைவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,
\v 35 உன்னதமானவரின் சமுகத்தில் மனிதர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
\v 36 மனிதனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
\s5
\v 37 ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது, காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
\v 38 உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
\v 39 உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்? அவன் தன்னுடைய பாவத்திற்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
\s5
\v 40 நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
\v 41 நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.
\v 42 நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர்.
\v 43 தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
\s5
\v 44 ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
\v 45 மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
\v 46 எங்கள் பகைவர்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத் திறந்தார்கள்.
\v 47 பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது.
\s5
\v 48 மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து நீர்வடிகிறது.
\v 49 கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை,
\v 50 என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது.
\s5
\v 51 என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம், என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது.
\v 52 காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள்.
\v 53 படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள்.
\v 54 தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன்.
\s5
\v 55 மகா ஆழமான குழியிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்.
\v 56 என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.
\v 57 நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர்.
\s5
\v 58 ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
\v 59 கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும்.
\v 60 அவர்களுடைய எல்லா விரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
\v 61 கர்த்தாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும்,
\s5
\v 62 எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்சொற்களையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
\v 63 அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
\s5
\v 64 கர்த்தாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர்.
\v 65 அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
\v 66 கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து, கர்த்தருடைய வானங்களின் கீழே அவர்கள் இல்லாதபடி அவர்களை அழித்துவிடுவீர்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 சீயோனின் சீரழிவு
\p
\v 1 ஐயோ! தங்கம் மங்கி, சுத்தத் தங்கம் மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டப்பட்டதே.
\v 2 ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற மகன்களாகிய சீயோன், குயவனுடைய கைவேலையான மண்பாத்திரங்களைப்போல நினைக்கப்படுகிறார்களே.
\s5
\v 3 திமிங்கிலங்கள் முதற்கொண்டு மார்பகங்களை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் மகளாகிய மக்களோ வனாந்தரத்திலுள்ள நெருப்புக்கோழியைப்போல் கடின மனமுள்ளவளாக இருக்கிறாளே.
\s5
\v 4 குழந்தைகளின் நாக்கு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் உணவுகேட்கிறார்கள், அவர்களுக்கு கொடுப்பவர்கள் இல்லை.
\v 5 சுவையான உணவுகளைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பயனற்றுக்கிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக்கொள்ளுகிறார்கள்.
\s5
\v 6 உதவி செய்பவர்கள் இல்லாமல், ஒரு நிமிடத்திலே அழிக்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைவிட என் மகளாகிய மக்களின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.
\s5
\v 7 அவளுடைய இளவரசர்கள் உறைந்த மழையைவிட சுத்தமும், பாலைவிட வெண்மையும், பவளத்தைவிட சிவப்பும், இந்திரநீலத்தைவிட பலமுள்ள தோற்றமுமாக இருந்தார்கள்.
\v 8 இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியைக்காட்டிலும் கறுத்துப்போனது; வீதிகளில் அவர்களை அடையாளம் காணமுடியாது; அவர்களுடைய தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பானது.
\s5
\v 9 பசியினால் கொல்லப்பட்டவர்களைவிட பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள் பாக்கியவான்களாக இருக்கிறார்கள்; அவர்கள், வயலில் விளைச்சல் இல்லாததால் பசியினால் கரைந்து போகிறார்கள்.
\v 10 இரக்கமுள்ள பெண்களின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் மகளாகிய மக்களின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.
\s5
\v 11 கர்த்தர் தமது கோபத்தை நிறைவேற்றி, தமது கடுங்கோபத்தை ஊற்றி, சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; அது அதின் அஸ்திபாரங்களை உடைத்துப்போட்டது.
\s5
\v 12 எதிரியும் பகைவனும் எருசலேமின் வாசல்களுக்குள் நுழைவான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் உலகத்தின் சகல குடிமக்களும் நம்பாமல் இருந்தார்கள்.
\v 13 அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.
\s5
\v 14 குருடர்கள்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்களுடைய உடைகளைத் தொடமுடியாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்.
\v 15 தீட்டுப்பட்டவர்களே விலகுங்கள், தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; உண்மையாகவே பறந்தோடி அலைந்து போனார்கள்; இனி தங்கியிருக்கமாட்டார்கள் என்று அந்நிய மக்களுக்குள்ளே சொல்லப்பட்டது.
\s5
\v 16 கர்த்தருடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, அவர்களை இனி அவர் பார்க்கமாட்டார்; ஆசாரியர்களுடைய முகத்தைப் பார்க்காமலும் முதியோரை மதிக்காமலும்போனார்கள்.
\s5
\v 17 இன்னும் எங்களுக்கு உதவி வருமென்று நாங்கள் வீணாக எதிர்பார்த்திருந்ததினாலே எங்களுடைய கண்கள் பூத்துப்போயின; காப்பாற்றமுடியாத மக்களுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
\v 18 நாங்கள் எங்கள் வீதிகளில் நடந்து செல்லாதபடி எங்கள் பாதசுவடுகளை வேட்டையாடினார்கள்; எங்கள் முடிவு நெருங்கியது; எங்கள் நாட்கள் நிறைவேறிவிட்டது; எங்கள் முடிவு வந்துவிட்டது.
\s5
\v 19 எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைவிட வேகமாயிருந்தார்கள்; மலைகள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்; வனாந்திரத்தில் எங்களுக்காகப் பதுங்கியிருந்தார்கள்.
\v 20 கர்த்தரால் அபிஷேகம்செய்யப்பட்டவனும், எங்கள் உயிர்மூச்சுமாக இருந்தவனும், அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே தேசங்களுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.
\s5
\v 21 ஊத்ஸ் தேசத்தைச் சேர்ந்த மகளாகிய ஏதோமே, சந்தோஷப்பட்டு மகிழ்ந்திரு; பாத்திரம் உன்னிடத்திற்கும் வரும், அப்பொழுது நீ வெறித்து, ஆடையில்லாமல் கிடப்பாய்.
\v 22 மகளாகிய சீயோனே, உன் அக்கிரமத்திற்கு வரும் தண்டனை முடிந்தது; அவர் இனி உன்னை சிறைப்பட்டுப்போக விடமாட்டார்; மகளாகிய ஏதோமே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.
\s5
\c 5
\cl அத்தியாயம்– 5
\s1 மீண்டும் செழிப்படைவதற்கான ஜெபம்
\p
\v 1 கர்த்தாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்; எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும்.
\v 2 எங்களுடைய சொத்து அந்நியரின் வசமாகவும், எங்களுடைய வீடுகள் வெளித்தேசத்தாரின் வசமாகவும் மாறியது.
\v 3 திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.
\v 4 எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கிக்குடிக்கிறோம்; எங்களுக்கு விறகு விலைக்கிரயமாக வருகிறது.
\s5
\v 5 பாரம்சுமந்து எங்கள் கழுத்து வலிக்கிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு ஓய்வு இல்லை.
\v 6 உணவினால் திருப்தியடைய எகிப்தியர்களுக்கும் அசீரியர்களுக்கும் எங்களை ஒப்படைத்தோம்.
\v 7 எங்கள் முற்பிதாக்கள் பாவம்செய்து இறந்துபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம்.
\s5
\v 8 அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பவர்கள் இல்லை.
\v 9 வனாந்திரத்தில் இருக்கிறவர்களின் பட்டயத்தினால், எங்களுடைய உயிரைப் பணயம்வைத்து ஆகாரத்தைத் தேடுகிறோம்.
\v 10 பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போனது.
\s5
\v 11 சீயோனில் இருந்த பெண்களையும் யூதா பட்டணங்களில் இருந்த இளம்பெண்களையும் அவமானப்படுத்தினார்கள்.
\v 12 தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்; முதியோர்கள் மதிக்கப்படவில்லை.
\s5
\v 13 வாலிபர்களை இயந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்; இளைஞர்கள் விறகு சுமந்து தடுமாறி விழுகிறார்கள்.
\v 14 முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர்கள் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோனது.
\s5
\v 15 எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்துபோனது; எங்கள் சந்தோஷம் துக்கமாக மாறினது.
\v 16 எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவம்செய்தோமே.
\s5
\v 17 அதினால் எங்கள் இருதயம் பலவீனமானது; அதினால் எங்களுடைய கண்கள் இருண்டுபோயின.
\v 18 பயனற்றுக்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.
\s5
\v 19 கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.
\v 20 தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நீண்ட நாட்களாக எங்களைக் கைவிட்டிருப்பது என்ன?
\v 21 கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; ஆரம்பநாட்களிலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.
\v 22 எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்மேல் கடுங்கோபமாக இருக்கிறீரே!

98
32-JON.usfm Normal file
View File

@ -0,0 +1,98 @@
\id JON
\ide UTF-8
\h யோனா
\toc1 யோனா
\toc2 யோனா
\toc3 jon
\mt1 யோனா
\s5
\c 1
\cl அத்தியாயம்– 1
\s1 யோனா கர்த்தருடைய சந்நிதியிலிருந்து விலகி ஓடுதல்
\p
\v 1 அமித்தாயின் மகனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
\v 2 நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கம் செய்; அவர்களுடைய அக்கிரமம் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது என்றார்.
\v 3 அப்பொழுது யோனா கர்த்தருடைய சந்நிதியிலிருந்து விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப்போகிற ஒரு கப்பலைக்கண்டு, கட்டணம் செலுத்தி, தான் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து விலகும்படி, அவர்களோடு தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
\s5
\v 4 கர்த்தர் கடலின்மேல் பெருங்காற்றை அனுப்பினார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமளவிற்கு பெரிய கொந்தளிப்பு உண்டானது.
\v 5 அப்பொழுது கப்பற்காரர்கள் பயந்து, அவனவன் தன்தன் தெய்வங்களை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தைக் குறைக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைக் கடலில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோ கப்பலின் கீழ்த்தளத்தில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, ஆழ்ந்து தூங்கினான்.
\s5
\v 6 அப்பொழுது கப்பலின் தலைவன் அவனிடம் வந்து: நீ தூங்கிக் கொண்டிருக்கிறது என்ன? எழுந்திருந்து உன்னுடைய தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்கு உன்னுடைய தேவன் ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.
\v 7 அவர்கள் யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நாம் தெரிந்துகொள்ளும்படி சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பெயருக்குச் சீட்டு விழுந்தது.
\s5
\v 8 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழில் என்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.
\v 9 அதற்கு அவன்: நான் எபிரெயன்; கடலையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரிடம் பயபக்தியுள்ளவன் என்றான்.
\v 10 அவன் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனிதர்கள் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.
\s5
\v 11 பின்னும் கடல் அதிகமாகக் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: கடல் நமக்காக அமைதியாகும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
\v 12 அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்து கடலிலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது கடல் அமைதியாக இருக்கும்; என்னால்தான் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.
\v 13 அந்த மனிதர்கள் கரைசேரும்படி வேகமாகத் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் கடல் மிகவும் மும்முரமாகக் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் முடியாமற்போனது.
\s5
\v 14 அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனிதனுடைய ஜீவனுக்காக எங்களை அழித்துப்போடாதிரும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதிரும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாக இருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,
\v 15 யோனாவை எடுத்துக் கடலிலே போட்டுவிட்டார்கள்; கடல் தன்னுடைய மும்முரத்தைவிட்டு அமைதியானது.
\v 16 அப்பொழுது அந்த மனிதர்கள் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைச் செய்தார்கள்.
\s5
\v 17 யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனை கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீனின் வயிற்றிலே யோனா இரவுபகல் மூன்றுநாட்கள் இருந்தான்.
\s5
\c 2
\cl அத்தியாயம்– 2
\s1 யோனாவின் ஜெபம்
\p
\v 1 அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன்னுடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்து:
\v 2 என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.
\s5
\v 3 கடலின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
\v 4 நான் உமது கண்களுக்கு எதிரே இல்லாதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆனாலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.
\s5
\v 5 தண்ணீர்கள் என்னுடைய ஜீவனை எடுக்க என்னை நெருக்கினது; ஆழங்கள் என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.
\v 6 மலைகளின் அடிவாரங்கள்வரைக்கும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாக இருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் ஜீவனை அழிவிலிருந்து தப்புவித்தீர்.
\s5
\v 7 என்னுடைய ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகும்போது கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.
\v 8 பொய்யான தெய்வங்களைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் புறக்கணிக்கிறார்கள்.
\s5
\v 9 நானோ, துதியின் சத்தத்தோடு உமக்குப் பலியிடுவேன்; நான் செய்த பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.
\v 10 கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிப்போட்டது.
\s5
\c 3
\cl அத்தியாயம்– 3
\s1 யோனா நினிவேக்குச் செல்லுதல்
\p
\v 1 இரண்டாவதுமுறை கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:
\v 2 நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு எதிராகப் பிரசங்கம் செய் என்றார்.
\v 3 யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாட்கள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாக இருந்தது.
\s5
\v 4 யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒரு நாள் பிரயாணம்செய்து: இன்னும் நாற்பதுநாட்களில் நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும் என்று கூறினான்.
\v 5 அப்பொழுது நினிவேயிலுள்ள மக்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம் செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் சாக்கு உடையை அணிந்துகொண்டார்கள்.
\s5
\v 6 இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன்னுடைய சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் அணிந்திருந்த ஆடையைக் கழற்றிப்போட்டு, சாக்கு உடையை அணிந்துகொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான்.
\v 7 மேலும் ராஜா, தானும் தன்னுடைய ஆலோசகர்களும் தீர்மானித்த கட்டளையாக, நினிவே எங்கும் மனிதர்களும் மிருகங்களும், மாடுகளும், ஆடுகளும் ஒன்றும் ருசிபார்க்காமலிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருக்கவும்,
\s5
\v 8 மனிதர்களும் மிருகங்களும் சணலினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி அதிக சத்தமாகக் கூப்பிடவும், அவரவர்கள் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும்விட்டுத் திரும்பவும்வேண்டும்.
\v 9 யாருக்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனமிரங்கி, தம்முடைய கடுங்கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று சொல்லச்சொன்னான்.
\s5
\v 10 அவர்கள் தங்களுடைய பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப்பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனமிரங்கி, அதைச் செய்யாமல் இருந்தார்.
\s5
\c 4
\cl அத்தியாயம்– 4
\s1 கர்த்தரின் இரக்கத்தைக் குறித்த யோனாவின் கோபம்
\p
\v 1 யோனாவுக்கு இது மிகவும் வருத்தமாக இருந்தது; அவன் கடுங்கோபம் கொண்டு,
\v 2 கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்து: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினாலேயே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்கிற்கு மனமிரங்குகிறவருமான தேவனென்று அறிவேன்.
\v 3 இப்போதும் கர்த்தாவே, என் ஜீவனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடு இருக்கிறதைவிட சாகிறது நலமாக இருக்கும் என்றான்.
\s5
\v 4 அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாக இருக்கிறது நல்லதோ என்றார்.
\v 5 பின்பு யோனா நகரத்திலிருந்து புறப்பட்டு, நகரத்துக்குக் கிழக்கே போய், அங்கே தனக்கு ஒரு குடிசையைப் போட்டு, நகரத்திற்கு நடக்கப்போகிறதைத் தான் பார்க்கும்வரைக்கும் அதின் கீழே நிழலில் உட்கார்ந்திருந்தான்.
\s5
\v 6 யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனவருத்தத்திற்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரச்செய்தார்; அந்த ஆமணக்குச் செடியினால் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்.
\v 7 மறுநாளிலோ கிழக்கு வெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சிக்குக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்துபோனது.
\s5
\v 8 சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடு இருக்கிறதைவிட சாகிறது நலமாக இருக்கும் என்றான்.
\v 9 அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்குச் செடிக்காக எரிச்சலாக இருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் சாகும்வரைக்கும் எரிச்சலாக இருக்கிறது நல்லதுதான் என்றான்.
\s5
\v 10 அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும் நீ வளர்க்காததும், ஒரு இரவிலே முளைத்ததும், ஒரு இரவிலே அழிந்துபோனதுமான ஆமணக்குச் செடிக்காக மனதுருகுகிறாயே.
\v 11 வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனிதர்களும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற பெரிய நகரமாகிய நினிவேக்காக நான் மனதுருகாமல் இருப்பேனோ என்றார்.

3
README.md Normal file
View File

@ -0,0 +1,3 @@
# ta_OT_ULB
Tamil OT conversion to resource container format. Stage 3 files from https://git.door43.org/BCS-BIBLE/TAMIL-ULB-OT.BCS.

View File

@ -17,23 +17,191 @@ dublin_core:
language: 'Holy Bible in Tamil: 1947'
version: '1'
rights: 'CC BY-SA 4.0'
creator: 'Distant Shores Media'
creator: 'Door43 World Missions Community'
contributor:
- 'R. FRANCIS'
- 'SELLADURAI. P ISRAEL GOPINATH'
- 'D. SAMSON'
- R.FRANCIS
- 'Muralitharan G'
- 'Antoney Raj'
- 'Cdr. Thomas Mathew'
- 'Dr. Bobby Chellappan'
- 'Gopinath Israel'
- 'Hinal Prakash'
- 'Jobby Prasannan'
- 'Merlyn Easa'
- 'Pastor Vijayan Chinnappan'
- 'Shojo John'
relation: []
publisher: unfoldingWord
issued: '2017-03-25'
modified: '2017-03-25T00:00:00.000Z'
version: '2'
publisher: 'unfoldingWord'
issued: '2017-08-16'
modified: '2017-08-16'
version: '3'
checking:
checking_entity:
- 'Dr. VIJAYAN CHINNAPPAN'
checking_level: '3'
projects:
-
title: ' ஆதியாகமம் '
versification: 'ufw'
identifier: 'gen'
sort: 01
path: './01-GEN.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: ' யாத்திராகமம் '
versification: 'ufw'
identifier: 'exo'
sort: 02
path: './02-EXO.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: ' லேவியராகமம் '
versification: 'ufw'
identifier: 'lev'
sort: 03
path: './03-LEV.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: ' எண்ணாகமம் '
versification: 'ufw'
identifier: 'num'
sort: 04
path: './04-NUM.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: ' உபாகமம் '
versification: 'ufw'
identifier: 'deu'
sort: 05
path: './05-DEU.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: ' யோசுவா '
versification: 'ufw'
identifier: 'jos'
sort: 06
path: './06-JOS.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: ' நியாயாதிபதிகள் '
versification: 'ufw'
identifier: 'jdg'
sort: 07
path: './07-JDG.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: 'ரூத் '
versification: 'ufw'
identifier: 'rut'
sort: 08
path: './08-RUT.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: 'I சாமுவேல் '
versification: 'ufw'
identifier: '1sa'
sort: 09
path: './09-1SA.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: 'II சாமுவேல் '
versification: 'ufw'
identifier: '2sa'
sort: 10
path: './10-2SA.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: 'I இராஜாக்கள் '
versification: 'ufw'
identifier: '1ki'
sort: 11
path: './11-1KI.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: 'II இராஜாக்கள் '
versification: 'ufw'
identifier: '2ki'
sort: 12
path: './12-2KI.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: ' I நாளாகமம் '
versification: 'ufw'
identifier: '1ch'
sort: 13
path: './13-1CH.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: ' II நாளாகமம் '
versification: 'ufw'
identifier: '2ch'
sort: 14
path: './14-2CH.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: 'எஸ்றா '
versification: 'ufw'
identifier: 'ezr'
sort: 15
path: './15-EZR.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: 'நெகேமியா '
versification: 'ufw'
identifier: 'neh'
sort: 16
path: './16-NEH.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: 'எஸ்தர் '
versification: 'ufw'
identifier: 'est'
sort: 17
path: './17-EST.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: 'உன்னதப்பாட்டு '
versification: 'ufw'
identifier: 'sng'
sort: 22
path: './22-SNG.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: 'புலம்பல் '
versification: 'ufw'
identifier: 'lam'
sort: 25
path: './25-LAM.usfm'
categories: [ 'bible-ot' ]
-
title: 'யோனா '
versification: 'ufw'
identifier: 'jon'
sort: 32
path: './32-JON.usfm'
categories: [ 'bible-ot' ]
-
categories:
- bible-nt