ta_ULB/07-JDG.usfm

1078 lines
300 KiB
Plaintext

\id JDG
\ide UTF-8
\h நியாயாதிபதிகள்
\toc1 நியாயாதிபதிகள்
\toc2 நியாயாதிபதிகள்
\toc3 jdg
\mt1 நியாயாதிபதிகள்
\s5
\c 1
\s1 கானானியர்களோடு போரிடுதல்
\p
\v 1 யோசுவா இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி: கானானியர்களை எதிர்த்து யுத்தம்செய்யும்படி, எங்களில் யார் முதலில் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.
\v 2 அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படட்டும்; இதோ, அந்த தேசத்தை அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
\v 3 அப்பொழுது யூதாவின் மனிதர்கள் தங்களுடைய சகோதரர்களாகிய சிமியோனின் மனிதர்களை நோக்கி: நாம் கானானியர்களோடு யுத்தம்செய்ய நீங்கள் என்னுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் எங்களோடு எழுந்துவாருங்கள்; உங்களுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் நாங்களும் உங்களோடு வருவோம் என்றார்கள்; அப்படியே சிமியோன் கோத்திரத்தார்கள் அவர்களோடு போனார்கள்.
\s5
\v 4 யூதா மனிதர்கள் எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியர்களையும், பெரிசியர்களையும் அவர்களுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பத்தாயிரம்பேரை வெட்டினார்கள்.
\v 5 பேசேக்கிலே அதோனிபேசேக்கைப் பார்த்து, அவனோடு யுத்தம்செய்து, கானானியர்களையும், பெரிசியர்களையும் வெட்டினார்கள்.
\s5
\v 6 அதோனிபேசேக் ஓடிப்போகும்போது, அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவனுடைய கை கால்களின் பெருவிரல்களை வெட்டிப்போட்டார்கள்.
\v 7 அப்பொழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கை கால்களின் பெருவிரல்கள் வெட்டப்பட்டவர்களாக என்னுடைய மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிகட்டினார் என்றான். அவனை எருசலேமிற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் இறந்தான்.
\s5
\v 8 யூதாவின் மக்கள் எருசலேமின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, அங்குள்ளவர்களை கூர்மையான பட்டயத்தினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கினார்கள்.
\v 9 பின்பு யூதாவின் மக்கள் மலைத்தேசத்திலும், தெற்கிலும், பள்ளத்தாக்குகளிலும் குடியிருக்கிற கானானியர்களோடு யுத்தம்செய்யப் புறப்பட்டுப்போனார்கள்.
\v 10 அப்படியே யூதா கோத்திரத்தார்கள் எபிரோனிலே குடியிருக்கிற கானானியர்களுக்கு எதிராகப்போய் சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முன்நாட்களில் அந்த எபிரோனுக்கு கீரியாத்அர்பா என்று பெயர்.
\s1 காலேப்பும் அவருடைய மகளும்
\p
\s5
\v 11 அங்கேயிருந்து தெபீரில் குடியிருப்பவர்களுக்கு எதிராகப் போனார்கள்; முன்நாட்களில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பெயர்.
\v 12 அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரை முறியடித்துப் பிடிக்கிறவனுக்கு என்னுடைய மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்றான்.
\v 13 அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; எனவே, தன்னுடைய மகளாகிய அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
\s5
\v 14 அவள் புறப்படும்போது, என்னுடைய தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று ஒத்னியேலினிடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.
\v 15 அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
\s5
\v 16 மோசேயின் மாமனாகிய கேனியனின் மக்களும் யூதாவின் மக்களோடு பேரீச்சை மரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கில் இருக்கிற யூதாவின் வனாந்திரத்திற்கு வந்து, மக்களோடு குடியேறினார்கள்.
\v 17 யூதா தன்னுடைய சகோதரனாகிய சிமியோனோடு போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியர்களை முறியடித்து, அதை அழித்து, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பெயரிட்டார்கள்.
\s5
\v 18 யூதா, காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.
\v 19 கர்த்தர் யூதாவோடு இருந்ததினால், மலைத்தேசத்தார்களைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கில் குடியிருப்பவர்களுக்கு இரும்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தமுடியாமல்போனது.
\s5
\v 20 மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று மகன்களையும் துரத்திவிட்டான்.
\v 21 பென்யமீனின் மகன்கள் எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களையும் துரத்திவிடவில்லை; எனவே, எபூசியர்கள் இந்த நாள்வரை பென்யமீன் மக்களோடு எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
\s5
\v 22 யோசேப்பின் குடும்பத்தினரும் பெத்தேலுக்கு எதிராகப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடு இருந்தார்.
\v 23 யோசேப்பின் குடும்பத்தினர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பெயர்.
\v 24 அந்த வேவுகாரர்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனிதனைக் கண்டு: பட்டணத்திற்குள் நுழையும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.
\s5
\v 25 அப்படியே பட்டணத்திற்குள் நுழையும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்தில் உள்ளவர்களைக் கூர்மையான பட்டயத்தினால் வெட்டி, அந்த மனிதனையும் அவனுடைய குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.
\v 26 அப்பொழுது அந்த மனிதன் ஏத்தியர்களின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பெயரிட்டான்; அதுதான் இந்த நாள்வரை அதினுடைய பெயர்.
\s1 கானானியர்களோடு மற்ற கோத்திரங்கள் போரிடுதல்
\p
\s5
\v 27 மனாசே கோத்திரத்தார்கள் பெத்செயான் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தானாக் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தோரில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், இப்லெயாம் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், மெகிதோவில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும் துரத்திவிடவில்லை; கானானியர்கள் அந்த தேசத்தில்தான் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்.
\v 28 இஸ்ரவேலர்கள் பலத்தபோது, கானானியர்களை முழுவதும் துரத்திவிடாமல் அவர்களை கட்டாயப்படுத்தி கடினமாக வேலை செய்யவைத்தார்கள்.
\s5
\v 29 எப்பிராயீம் கோத்திரத்தார்கள், கேசேரிலே குடியிருந்த கானானியர்களையும் துரத்திவிடவில்லை; ஆகவே, கானானியர்கள் அவர்களோடு குடியிருந்தார்கள்.
\s5
\v 30 செபுலோன் கோத்திரத்தார்கள், கித்ரோனில் குடியிருக்கிறவர்களையும், நாகலோலில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை. ஆகவே, கானானியர்கள், அவர்களோடு குடியிருந்து, கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
\s5
\v 31 ஆசேர் கோத்திரத்தார்கள், அக்கோவில் குடியிருக்கிறவர்களையும், சீதோனில் குடியிருக்கிறவர்களையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை.
\v 32 ஆசேரியர்கள், தேசத்தில் குடியிருக்கிறவர்களாகிய கானானியர்களோடு குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.
\s5
\v 33 நப்தலி கோத்திரத்தார்கள், பெத்ஷிமேசில் குடியிருக்கிறவர்களையும், பெத்தானாத்தில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடாமல், தேசத்தில் குடியிருக்கிறவர்களாகிய கானானியர்களோடு குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களில் குடியிருக்கிறவர்களும் அவர்களுக்கு கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
\s5
\v 34 எமோரியர்கள் தாண் கோத்திரத்தார்களைப் பள்ளத்தாக்கில் இறங்கவிடாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படிக் கட்டாயப்படுத்தினார்கள்.
\v 35 எமோரியர்கள் ஏரேஸ் மலைகளிலும், ஆயலோனிலும், சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தார்களின் பலம் பெருகினபடியால், அவர்களுக்கு கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
\v 36 எமோரியர்களின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடு துவங்கி அதற்கு அப்புறமும் போனது.
\s5
\c 2
\s1 போகீமில் கர்த்தருடைய தூதன்
\p
\v 1 கர்த்தருடைய தூதன் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்து, உங்களுடைய பிதாக்களுக்கு வாக்குக்கொடுத்த தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடு செய்த என்னுடைய உடன்படிக்கையை நான் ஒருபோதும் முறித்துப்போடுவதில்லை என்றும்,
\v 2 நீங்கள் இந்த தேசத்தில் குடியிருக்கிறவர்களோடு உடன்படிக்கைசெய்யாமல், அவர்களுடைய பலிபீடங்களை இடித்துவிடவேண்டும் என்றும் சொன்னேன்; ஆனாலும் என்னுடைய சொல்லைக் கேட்காமல்போனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?
\s5
\v 3 ஆகவே, நான் அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.
\v 4 கர்த்தருடைய தூதன் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் மக்கள் அனைவரிடமும் சொல்லும்போது, மக்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.
\v 5 அந்த இடத்திற்கு போகீம் என்று பெயரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலிசெலுத்தினார்கள்.
\s1 கீழ்ப்படியாமையும், தோல்வியும்
\p
\s5
\v 6 யோசுவா இஸ்ரவேல் மக்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகத்திற்குப் போனார்கள்.
\v 7 யோசுவாவின் எல்லா நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய செயல்களையெல்லாம் பார்த்தவர்களும், யோசுவாவிற்குப் பின்பு உயிரோடு இருந்தவர்களுமாகிய மூப்பர்களின் எல்லா நாட்களிலும் மக்கள் கர்த்தரைத் தொழுது கொண்டார்கள்.
\v 8 நூனின் மகனான யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாக இறந்துபோனான்.
\s5
\v 9 அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கில் இருக்கிற அவனுடைய சுதந்திரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்செய்தார்கள்.
\v 10 அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களோடு சேர்க்கப்பட்டப்பின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த செய்கைகளையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின்பு எழும்பியது.
\s5
\v 11 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் பார்வைக்கு தீமையானதைச் செய்து, பாகால்களை தொழுது,
\v 12 தங்களுடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச் செய்த அவர்களுடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களுடைய தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிப்போய், அவைகளைத் தொழுதுகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்.
\v 13 அவர்கள் கர்த்தரைவிட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுதுகொண்டார்கள்.
\s5
\v 14 அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி, அவர்கள் அதற்குப்பின்பு தங்கள் எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர்களுடைய கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்களுடைய எதிரிகளின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
\v 15 கர்த்தர் அவர்களுக்கு வாக்கு செய்தபடி, அவர்கள் புறப்பட்டுப்போகிற இடங்கலெல்லாம் கர்த்தருடைய கரம் தீமைக்கென்றே அவர்களுக்கு எதிராக இருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
\s5
\v 16 கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பச்செய்தார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றினார்கள்.
\v 17 அவர்கள் தங்களுடைய நியாயாதிபதிகளின் சொல்லைக் கேட்காமல், அந்நிய தெய்வங்களுக்குத் தங்களை விலைமாதர்களைப்போல ஒப்புக்கொடுத்து, அவைகளைத் தொழுதுகொண்டார்கள்; தங்களுடைய பிதாக்கள் கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, பிதாக்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.
\s5
\v 18 கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பச்செய்கிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடு இருந்து அந்த நியாயாதிபதி வாழ்ந்த நாட்களிலெல்லாம் அவர்களுடைய எதிரிகளின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றிவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினால் தவிக்கிறதினாலே, கர்த்தர் துக்கப்படுவார்.
\v 19 நியாயாதிபதி மரித்தவுடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி, பணிவிடை செய்யவும், தொழுதுகொள்ளவும், தங்களுடைய பிதாக்களைவிட இழிவாக நடந்து, தங்களுடைய தீய செய்கைகளையும் தங்களுடைய முரட்டாட்டமான வழிகளையும் விடாதிருப்பார்கள்.
\s5
\v 20 ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி: இந்த மக்கள் தங்களுடைய பிதாக்களுக்கு நான் கற்பித்த என்னுடைய உடன்படிக்கையை மீறி என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனதினால்,
\v 21 யோசுவா இறந்தபின்பு விட்டுப்போன தேசங்களில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன்.
\v 22 அவர்களுடைய பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படி, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலை சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.
\v 23 அதற்காகக் கர்த்தர் அந்த தேசங்களை யோசுவாவுடைய கையில் ஒப்புக்கொடுக்காமலும், அவைகளை சீக்கிரமாகத் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.
\s5
\c 3
\s1 கர்த்தர் இஸ்ரவேலர்களின் போர்த்திறமையை சோதித்தல்
\p
\v 1 கானான் தேசத்தில் நடந்த எல்லா யுத்தங்களையும் அறியாமலிருந்த இஸ்ரவேலர்களாகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும்,
\v 2 இஸ்ரவேலின் புதிய சந்ததியாரும், அதற்குமுன்பு யுத்தம் செய்ய அறியாமலிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும் கர்த்தர் விட்டுவைத்தவர்கள் யாரென்றால்:
\v 3 பெலிஸ்தர்களின் ஐந்து அதிபதிகளும், எல்லா கானானியர்களும், சீதோனியர்களும், பாகால் எர்மோன் துவங்கி ஆமாத்திற்குள் நுழையும்வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியர்களுமே.
\s5
\v 4 கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்களுடைய பிதாக்களுக்கு விதித்த கட்டளைகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலர்கள் அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.
\v 5 இப்படி இஸ்ரவேல் மக்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களாகிய இவர்களின் நடுவே குடியிருந்து,
\v 6 அவர்களுடைய மகள்களை திருமணம்செய்து, தங்களுடைய மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டார்கள்.
\s1 முதல் நியாயாதிபதியாகிய ஒத்னியேல்
\p
\s5
\v 7 இப்படி இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் தொழுதுகொள்கிறபோது,
\v 8 கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபம் கொண்டு அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் மக்கள் கூசான்ரிஷதாயீமை எட்டு வருடங்கள் பணிந்துகொண்டார்கள்.
\s5
\v 9 இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் மக்களை காப்பாற்றும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய மகனான ஒத்னியேல் என்னும் ஒரு இரட்சகனை அவர்களுக்கு எழும்பச்செய்தார்.
\v 10 அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்து அவனை பெலப்படுத்தியதால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்செய்யப் புறப்பட்டான்; கர்த்தர் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவனுடைய கை கூசான்ரிஷதாயீமின்மேல் பெலங்கொண்டது.
\v 11 தேசம் நாற்பது வருடங்கள் அமைதலாக இருந்தது. கேனாசின் மகனான ஒத்னியேல் இறந்துபோனான்.
\s1 நியாயாதிபதியாகிய ஏகூத்
\p
\s5
\v 12 இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலிற்கு எதிராக பெலனடையச் செய்தார்.
\v 13 அவன் அம்மோனிய மக்களையும் அமலேக்கியர்களையும் அழைத்துக்கொண்டுவந்து, இஸ்ரவேலை முறியடித்தான்; பேரீச்சை மரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்.
\v 14 இவ்வாறு இஸ்ரவேல் மக்கள் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருடங்கள் பணிந்துகொண்டார்கள்.
\s5
\v 15 இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பச்செய்தார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாக இருந்தான்; அவனுடைய கையிலே இஸ்ரவேல் மக்கள் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.
\s5
\v 16 ஏகூத், இருபுறமும் கூர்மையான ஒரு முழ நீளமுமான ஒரு பட்டயத்தை உண்டாக்கி, அதைத் தன்னுடைய ஆடைக்குள்ளே தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டிக்கொண்டு,
\v 17 காணிக்கையை மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குச் செலுத்தினான்; எக்லோன் மிகவும் பருமனான மனிதனாக இருந்தான்.
\v 18 அவன் காணிக்கையைச் செலுத்தி முடிந்தபின்பு, காணிக்கையைச் சுமந்து வந்த மக்களை அனுப்பிவிட்டான்.
\s5
\v 19 அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து: ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்ற அனைவரும் அவனை விட்டு வெளியே போய்விட்டார்கள்.
\v 20 ஏகூத் அவன் அருகில் போனான்; அவனோ தனக்குத் தனியாக இருந்த குளிர்ச்சியான மேல் வீட்டு அறையில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடம் சொல்லவேண்டிய தேவ வாக்கு என்னிடம் உண்டு என்றான்; அவன் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தான்.
\s5
\v 21 உடனே ஏகூத் தன்னுடைய இடதுகையை நீட்டி, தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டியிருந்த பட்டயத்தை உருவி, அதை அவனுடைய வயிற்றிற்குள் குத்தினான்.
\v 22 கத்தியோடு கைப்பிடியும் உள்ளே போனது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கமுடியாதபடி, கொழுப்பு கத்தியைச் சுற்றிக் கொண்டது; அது பின்புறமாக வந்தது.
\v 23 ஏகூத் புறப்பட்டு, மேல் வீட்டு அறையின் கதவை மூடிப் பூட்டிவிட்டு, தலைவாசல் வழியாகப் போய்விட்டான்.
\s5
\v 24 அவன் போனபின்பு வேலைக்காரர்கள் வந்து பார்த்தார்கள்; இதோ, மேல் வீட்டு அறையின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான வீட்டிலே கழிவறையில் இருக்கலாம் என்றார்கள்.
\v 25 அவர்கள் சலித்துப்போகும் வரைக்கும் காத்திருந்தார்கள்; அவன் மேல் வீட்டு அறையின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்களுடைய எஜமான் தரையிலே இறந்துக்கிடந்தான்.
\s5
\v 26 அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான்.
\v 27 அங்கே வந்தபோது எப்பிராயீம் மலையில் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் அவனோடு மலையிலிருந்து இறங்கினார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக நடந்து:
\s5
\v 28 என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; கர்த்தர் உங்கள் எதிரிகளாகிய மோவாபியர்களை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைமுகத்தைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவிடாமல்,
\v 29 அக்காலத்திலே மோவாபியர்களில் ஏறக்குறையப் பத்தாயிரம் பேரை வெட்டினார்கள்; அவர்கள் எல்லாரும் திறமையுள்ளவர்களும் பலசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.
\v 30 இப்படியே அந்த நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் எண்பது வருடங்கள் அமைதலாக இருந்தது.
\s1 நியாயாதிபதியாகிய சம்கார்
\p
\s5
\v 31 அவனுக்குப்பின்பு ஆனாத்தின் மகன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தர்களில் அறுநூறு பேரை, கால்நடைகளை நடத்த பயன்படுத்தப்படும் ஒரு கோலால் கொன்றான்; அவனும் இஸ்ரவேலைக் காப்பாற்றினான்.
\s5
\c 4
\s1 பெண் நியாயாதிபதியும் தீர்க்கதரிசியுமாகிய தெபோராள்
\p
\v 1 ஏகூத் இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பக் கர்த்தருடைய பார்வைக்குத் தீமையானதைச் செய்துவந்தார்கள்.
\v 2 ஆகவே, கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியர்களுடைய ராஜாவின் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவனுடைய தளபதிக்கு சிசெரா என்று பெயர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.
\v 3 அவனுக்குத் தொள்ளாயிரம் இரும்பு ரதங்கள் இருந்தன; அவன் இஸ்ரவேல் மக்களை இருபது வருடங்கள் கொடுமையாக ஒடுக்கினான்; இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.
\s5
\v 4 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.
\v 5 அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சை மரத்தின்கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் மக்கள் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள்.
\s5
\v 6 அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் மகன் பாராக்கை வரவழைத்து: நீ நப்தலி மனிதர்களிலும், செபுலோன் மனிதர்களிலும் பத்தாயிரம்பேரை அழைத்துக்கொண்டு, தாபோர் மலைக்குப் போகவேண்டும் என்றும்,
\v 7 நான் யாபீனின் தளபதியாகிய சிசெராவையும், அவனுடைய ரதங்களையும், அவனுடைய படைகளையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புகொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள்.
\s5
\v 8 அதற்குப் பாராக்: நீ என்னோடு வந்தால் போவேன்; என்னோடு வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.
\v 9 அதற்கு அவள்: நான் உன்னோடு நிச்சயமாக வருவேன்; ஆனாலும் நீ போகிற பயணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு பெண்ணின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழுந்து, பாராக்கோடு கேதேசுக்குப் போனாள்.
\s5
\v 10 அப்பொழுது பாராக்: செபுலோன் மனிதர்களையும் நப்தலி மனிதர்களையும் கேதேசுக்கு வரவழைத்து, தனக்குப் பின்செல்லும் பத்தாயிரம்பேர்களோடு போனான்; தெபொராளும் அவனோடு போனாள்.
\s5
\v 11 கேனியனான ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் சந்ததியாக இருக்கிற கேனியர்களை விட்டுப் பிரிந்து, கேதேசின் அருகில் இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலி மரங்களின் அருகே தன்னுடைய கூடாரத்தைப் போட்டிருந்தான்.
\s5
\v 12 அபினோகாமின் மகன் பாராக் தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது,
\v 13 சிசெரா தொள்ளாயிரம் இரும்பு ரதங்களாகிய தன்னுடைய எல்லா ரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா மக்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிற்கு வரவழைத்தான்.
\s5
\v 14 அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னே பத்தாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.
\s5
\v 15 கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் படைகள் அனைத்தையும் பாராக்குக்கு முன்பாகக் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டு இறங்கி கால்நடையாக ஓடிப்போனான்.
\v 16 பாராக் ரதங்களையும் படையையும் யூதர் அல்லாதவர்களுடைய அரோசேத்வரை துரத்தினான்; சிசெராவின் படையெல்லாம் பட்டயக்கூர்மையினால் விழுந்தது; ஒருவனும் மீதியாக இருக்கவில்லை.
\s5
\v 17 சிசெரா கால்நடையாகக் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டிற்கும் சமாதானம் உண்டாயிருந்தது.
\v 18 யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என்னுடைய ஆண்டவனே, என்னிடத்தில் உள்ளே வாரும், பயப்பட வேண்டாம் என்று அவனிடம் சொன்னாள்; அப்படியே அவள் கூடாரத்தின் உள்ளே வந்தபோது, அவனை ஒரு போர்வையினாலே மூடினாள்.
\s5
\v 19 அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு, தாகமாக இருக்கிறேன் என்றான்; அவள் பால் இருக்கும் தோல்பையை திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்.
\v 20 அப்பொழுது அவன்: நீ கூடாரவாசலிலே நின்று, எவராகிலும் ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடம் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.
\s5
\v 21 பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து தன்னுடைய கையிலே சுத்தியைப் பிடித்துக்கொண்டு, மெதுவாக அவனுடைய அருகில் வந்து, அவனுடைய தலையின் பக்கவாட்டில் அந்த ஆணியை அடித்தாள்; அது ஊடுருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அவன் இறந்துப்போனான்.
\v 22 பின்பு சிசெராவை பின்தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்: வாரும், நீ தேடுகிற மனிதனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவனுடைய தலையில் அடித்திருந்தது.
\s5
\v 23 இப்படி தேவன் அந்த நாளிலே கானானியர்களின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தினார்.
\v 24 இஸ்ரவேல் மக்களின் கை கானானியர்களின் ராஜாவாகிய யாபீனை அழிக்கும்வரைக்கும் அவன்மேல் பெலத்துக்கொண்டேயிருந்தது.
\s5
\c 5
\s1 தெபோராளின் பாடல்
\p
\v 1 அந்த நாட்களிலே தெபொராளும் அபினோகாமின் மகன் பாராக்கும் பாடினது:
\v 2 கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டியதற்காகவும், மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை ஒப்புக்கொடுத்ததற்காகவும் அவரை ஸ்தோத்திரியுங்கள்.
\s5
\v 3 ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப் பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்செய்வேன்.
\v 4 கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வரும்போது, பூமி அதிர்ந்தது, வானம் பொழிந்தது, மேகங்களும் தண்ணீராகப் பொழிந்தது.
\s5
\v 5 கர்த்தருக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சீனாய் மலையும் அதிர்ந்தது.
\v 6 ஆனாத்தின் மகனான சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்ப் போனது; வழியில் நடக்கிறவர்கள் பக்கவழியாக நடந்தார்கள்.
\s5
\v 7 தெபொராளாகிய நான் எழும்பும்வரைக்கும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்பும்வரைக்கும், கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போனது.
\v 8 புதிய தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே நாற்பதாயிரம்பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?
\s5
\v 9 மக்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என்னுடைய இருதயம் நாடுகிறது; கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
\v 10 வெள்ளைக் கழுதைகளின் சேணத்தின் விரிப்புகளில் வீற்றிருக்கிறவர்களே, வழியில் நடக்கிறவர்களே, இதைப் பற்றி யோசியுங்கள்.
\s5
\v 11 தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரர்களின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையும் அறிவிப்பார்கள்; அதுமுதல் கர்த்தரின் மக்கள் நகரத்தின் வாசல்களில் போய் இறங்குவார்கள்.
\s5
\v 12 விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ.
\v 13 மீதியாக இருந்தவர்கள் மக்களின் தலைவர்களை ஆளும்படி செய்தார்; கர்த்தர் எனக்குப் பெலசாலிகளின்மேல் ஆளுகை தந்தார்.
\s5
\v 14 அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; உன்னுடைய மக்களுக்குள்ளே பென்யமீன் மனிதர்கள் உனக்குப் பின்சென்றார்கள்; மாகீரிலிருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.
\s5
\v 15 இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்; பாராக்கைப்போல இசக்கார் மனிதர்களும் பள்ளத்தாக்கில் கால்நடையாக அனுப்பப்பட்டார்கள்; ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.
\s5
\v 16 மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டது என்ன? ரூபனின் பிரிவினைகளால் மனதின் வேதனைகள் மிகுதி.
\s5
\v 17 கீலேயாத் மனிதர்கள் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; தாண் மனிதர்கள் கப்பல்களில் தங்கியிருந்தது என்ன? ஆசேர் மனிதர்கள் கடற்கரையிலே தங்கி, மூன்று பக்கமும் தரைசூழ்ந்தகடல் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.
\v 18 செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள்.
\s5
\v 19 ராஜாக்கள் வந்து யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது கானானியர்களின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்செய்தார்கள்; அவர்களுக்கு வெள்ளி கொள்ளைப் பொருளாக கிடைக்கவில்லை.
\v 20 வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் வானமண்டலங்களிலிருந்து சிசெராவோடு யுத்தம் செய்தன.
\s5
\v 21 கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே, அவர்களை அடித்துக்கொண்டு போனது; என்னுடைய ஆத்துமாவே, நீ பெலவான்களை மிதித்தாய்.
\v 22 அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே, பெலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.
\s5
\v 23 மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் நிச்சயமாகவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தரோடு துணை நிற்க வரவில்லை; பலசாலிகளுக்கு எதிராக அவர்கள் கர்த்தரோடு துணைநிற்க வரவில்லையே.
\s5
\v 24 பெண்களுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்; கூடாரத்தில் தங்கியிருக்கிற பெண்களுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே.
\v 25 தண்ணீரைக் கேட்டான், பாலைக் கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணத்திலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
\s5
\v 26 தன்னுடைய கையால் ஆணியையும், தன்னுடைய வலது கையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து, சிசெராவை அடித்தாள்; அவனுடைய தலையில் உருவக்குத்தி, அவனுடைய தலையை உடைத்துப்போட்டாள்.
\v 27 அவன் அவளுடைய காலின் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே இறந்துகிடந்தான்.
\s5
\v 28 சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்து: அவனுடைய இரதம் வராமல் தாமதமானது என்ன? அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறது என்ன என்று புலம்பினாள்.
\s5
\v 29 அவளுடைய பெண்களில் புத்திசாலிகள் அவளுக்கு பதில் சொன்னதுமின்றி, அவள் தனக்குத் தானே மறுமொழியாக:
\v 30 அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவர்ணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவர்ணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திர வேலை செய்யப்பட்டுள்ள பலநிறமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.
\s5
\v 31 கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற அனைவரும் இப்படியே அழியட்டும்; அவரிடம் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடு உதிக்கிற சூரியனைப்போல இருக்கட்டும் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருடங்கள் அமைதலாக இருந்தது.
\s5
\c 6
\s1 மீதியானியர்கள் இஸ்ரவேலரிடம் போரிடுதல்
\p
\v 1 பின்னும் இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
\v 2 மீதியானியர்களின் கை இஸ்ரவேலின்மேல் பெலமாக இருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினால் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் பாதுகாப்பான இடங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.
\s5
\v 3 இஸ்ரவேலர்கள் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்குப்பகுதி மக்களும் அவர்களுக்கு எதிராக எழுந்து வந்து;
\v 4 அவர்களுக்கு எதிரே முகாமிட்டு, காசாவின் எல்லைவரை நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையும், ஆடுமாடுகள் கழுதைகளையும்கூட வைக்காமல் போவார்கள்.
\s5
\v 5 அவர்கள் தங்களுடைய மிருகஜீவன்களோடும், தங்களுடைய கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல திரளாக வருவார்கள்; அவர்களும் அவர்களுடைய ஒட்டகங்களும் எண்ணமுடியாததாக இருக்கும்; இப்படியாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள்.
\v 6 இப்படியாக மீதியானியர்களாலே இஸ்ரவேலர்கள் மிகவும் பெலவீனப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.
\s5
\v 7 இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினாலே கர்த்தரை நோக்கி முறையிட்டபோது,
\v 8 கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமையாக இருந்த வீட்டிலிருந்து புறப்படவும் செய்து,
\s5
\v 9 எகிப்தியர்கள் கைகளிலிருந்தும், உங்களை ஒடுக்கின எல்லோருடைய கைகளிலிருந்தும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து,
\v 10 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியர்களுடைய தெய்வங்களுக்குப் பயப்படாமல் இருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனீர்கள் என்கிறார் என்று சொன்னான்.
\s1 கிதியோனை கர்த்தருடைய தூதன் சந்தித்தல்
\p
\s5
\v 11 அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய மகன் கிதியோன் கோதுமையை மீதியானியர்களின் கைக்குத் தப்புவிக்க, ஆலைக்கு அருகில் அதைப் போரடித்தான்.
\v 12 கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பெலசாலியே கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்றார்.
\s5
\v 13 அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவரே, கர்த்தர் எங்களோடு இருந்தால், இவைகளெல்லாம் எங்களுக்கு ஏன் சம்பவித்தது? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்களுடைய பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர்களின் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.
\s5
\v 14 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பெலத்தோடு போ; நீ இஸ்ரவேலை மீதியானியர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றுவாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.
\v 15 அதற்கு அவன்: ஆ என்னுடைய ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே காப்பாற்றுவேன்; இதோ, மனாசேயில் என்னுடைய குடும்பம் மிகவும் எளியது; என்னுடைய தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன் என்றான்.
\s5
\v 16 அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடு இருப்பேன்; ஒரே மனிதனை முறியடிப்பதுபோல நீ மீதியானியர்களை முறியடிப்பாய் என்றார்.
\v 17 அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும்.
\v 18 நான் உம்மிடத்திற்கு என்னுடைய காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்கும் வரை, இந்த இடத்தை விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பி வரும்வரை நான் இருப்பேன் என்றார்.
\s5
\v 19 உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, குழம்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதை வெளியே கர்வாலி மரத்தின் கீழே இருக்கிற அவரிடம் கொண்டுவந்து வைத்தான்.
\v 20 அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து குழம்பை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான்.
\s5
\v 21 அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எரித்துப்போட்டது; கர்த்தரின் தூதனோ. அவனுடைய கண்களுக்கு மறைந்துபோனார்.
\s5
\v 22 அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று அறிந்து: ஐயோ, கர்த்தராகிய ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாக பார்த்தேனே என்றான்.
\v 23 அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.
\v 24 அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான்; அது இந்த நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.
\s5
\v 25 அன்று இரவிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழுவயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு,
\s1 பாகாலின் பலிபீடத்தை கிதியோன் அழித்தல்
\p
\v 26 இந்தக் கற்பாறையின் உச்சியிலே சரியான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடவேண்டும் என்றார்.
\s5
\v 27 அப்பொழுது கிதியோன், தன்னுடைய வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன்னுடைய தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனிதர்களுக்கும் பயந்ததினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான்.
\s5
\v 28 அந்த ஊர் மனிதர்கள் காலையில் எழுந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டும், அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டு இருக்கிறதையும் அவர்கள் பார்த்து;
\v 29 ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.
\s5
\v 30 அப்பொழுது ஊர்க்காரர்கள் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகே இருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்.
\s5
\v 31 யோவாஸ் தன்னை எதிர்த்து நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வாதாடுவீர்கள்? நீங்களா அதைக் காப்பாற்றுவீர்கள்? அதற்காக வாதாடுகிறவர்கள் இன்று காலையிலே சாகட்டும்; அது தேவனானால் தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால், அதுவே தனக்காக வாதாடட்டும் என்றான்.
\v 32 தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால் பாகால் அவனோடு வாதாடட்டும் என்று சொல்லி, அந்த நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பெயர் சூட்டப்பட்டது.
\s5
\v 33 மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்கு பகுதியை சேர்ந்த மக்கள் எல்லோரும் ஒன்றாக கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் முகாமிட்டார்கள்.
\s5
\v 34 அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,
\v 35 மனாசே நாடெங்கும் தூதுவர்களை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.
\s5
\v 36 அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என்னுடைய கையினாலே இஸ்ரவேலை காப்பாற்றவேண்டுமானால்,
\v 37 இதோ, நான் முடியுள்ள ஒரு தோலை கதிரடிக்கும் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மட்டும் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என்னுடைய கையினால் காப்பாற்றுவீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.
\s5
\v 38 அப்படியே ஆனது. அவன் மறுநாள் காலையில் எழுந்து, தோலைக்கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான்.
\s5
\v 39 அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒரு முறை மட்டும் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் வராமல் இருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரே முறை மட்டும் சோதனைசெய்கிறேன்; தோல் மட்டும் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.
\v 40 அப்படியே தேவன் அன்று இரவு செய்தார்; தோல்மட்டும் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.
\s5
\c 7
\s1 கிதியோன் மீதியானியரை முறியடித்தல்
\p
\v 1 அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீருற்றின் அருகில் முகாமிட்டார்கள்; மீதியானியர்களின் முகாம் அவனுக்கு வடக்கில் மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது.
\s5
\v 2 அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியர்களை உன்னோடிருக்கிற மக்களின் கையில் ஒப்புக்கொடுப்பதற்கு அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்; என்னுடைய கை என்னை காப்பாற்றியது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீண்பெருமைகொள்ள வாய்ப்புண்டாகும்.
\v 3 ஆகையால் பயமும் நடுக்கமும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து வேகமாக ஓடிப்போகட்டும் என்று, நீ மக்களின் காதுகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது மக்களில் இருபத்து இரண்டாயிரம்பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; பத்தாயிரம்பேர் மீதியாக இருந்தார்கள்.
\s5
\v 4 கர்த்தர் கிதியோனை நோக்கி: மக்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரின் அருகே இறங்கிப்போகச்செய்; அங்கே அவர்களை சோதித்துப் பார்ப்பேன்; உன்னோடு வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடு வரட்டும்; உன்னோடு வரக்கூடாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடு வராதிருக்கவேண்டும் என்றார்.
\s5
\v 5 அப்படியே அவன் மக்களைத் தண்ணீரின் அருகே இறங்கிப்போகச்செய்தான்; அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்குவதுபோல அதைத் தன்னுடைய நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியாகவும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக்குனிகிறவன் எவனோ, அவனைத் தனியாகவும் நிறுத்து என்றார்.
\v 6 தங்கள் கைகளால் அள்ளி, தங்கள் வாய்க்கு எடுத்து, நக்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை முந்நூறுபேர்; மற்ற மக்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்.
\s5
\v 7 அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற மக்களெல்லோரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகவேண்டும் என்றார்.
\v 8 அப்பொழுது மக்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலர்கள் எல்லோரையும் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குஅனுப்பிவிட்டு, அந்த முந்நூறுபேரைமட்டும் வைத்துக்கொண்டான்; மீதியானியர்களின் படை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது.
\s5
\v 9 அன்று இராத்திரி கர்த்தர் அவனை நோக்கி: நீ எழுந்து, அந்த படையினிடத்திற்குப் போ; அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்.
\v 10 போகப் பயந்தால், முதலில் நீயும் உன்னுடைய வேலைக்காரனாகிய பூராவும் படையினிடத்திற்குப் போய்,
\v 11 அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்; பின்பு படையினிடத்திற்குப் போக, உன்னுடைய கைகள் பெலப்படும் என்றார்; அப்படியே அவனும் அவனுடைய வேலைக்காரனாகிய பூராவும் படையின் முன்பகுதியிலே இரவுகாவல் காக்கிறவர்களின் இடம்வரைக்கும் போனார்கள்.
\s5
\v 12 மீதியானியர்களும், அமலேக்கியர்களும், எல்லாக் கிழக்குப் பகுதி மக்களும், வெட்டுக்கிளிகளைப்போலத் திரளாகப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாக இருந்தது.
\s5
\v 13 கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு கனவைச் சொன்னான். அதாவது இதோ ஒரு கனவுகண்டேன்; சுடப்பட்ட ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியர்களின் முகாமிற்கு உருண்டுவந்தது, அது கூடாரம்வரை வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.
\v 14 அப்பொழுது மற்றவன்; இது யோவாசின் மகனான கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியர்களையும், இந்த ராணுவம் அனைத்தையும், அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.
\s5
\v 15 கிதியோன் அந்த கனவையும் அதனுடைய விளக்கத்தையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் முகாமிற்கு திரும்பிவந்து: எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியர்களின் படையை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,
\v 16 அந்த முந்நூறுபேரை மூன்று படையாக பிரித்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,
\s5
\v 17 அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் முகாமின் முன்பகுதியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும்.
\v 18 நானும் என்னோடு இருக்கும் அனைவரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் முகாமைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிடுவீர்களாக என்று சொன்னான்.
\s5
\v 19 நடுஇரவின் துவக்கத்தில், இரவுக்காவலர்களை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடு இருந்த நூறுபேரும் அந்த இரவின் துவக்கத்திலே முகாமின் முன்பகுதியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.
\s5
\v 20 மூன்று படைகளின் மனிதர்களும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,
\v 21 முகாமைச் சுற்றிலும் அவரவர் தங்கள் இடத்திலே நின்றார்கள்; அப்பொழுது முகாமில் இருந்தவர்கள் எல்லோரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள்.
\s5
\v 22 முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதும்போது, கர்த்தர் முகாமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு எதிராக ஓங்கச்செய்தார்; ராணுவமானது சேரோத்திலுள்ள பெத்சித்தாவரை, தாபாத்திற்கு அருகிலான ஆபேல்மேகொலாவின் எல்லைவரை ஓடிப்போனது.
\v 23 அப்பொழுது நப்தலி மனிதர்களும், ஆசேர் மனிதர்களும், மனாசேயின் எல்லா மனிதர்களுமாகிய இஸ்ரவேலர்கள் கூடிவந்து, மீதியானியர்களைப் பின்தொடர்ந்து போனார்கள்.
\s5
\v 24 கிதியோன் எப்பிராயீம் மலைகள் எங்கும் ஆட்களை அனுப்பி: மீதியானியர்களுக்கு எதிராக இறங்கி, பெத்தாபரா இருக்கும் யோர்தான்வரை வந்து, அவர்களுக்கு முந்தித் துறைமுகங்களைக் கைப்பற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லச் சொன்னான்; அப்படியே எப்பிராயீமின் மனிதர்கள் எல்லோரும் கூடி, பெத்தாபரா இருக்கும் யோர்தான் வரை வந்து, துறைமுகங்களைக் கைப்பற்றிக்கொண்டு,
\v 25 மீதியானியர்களின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் பிடித்து, ஓரேபை ஓரேப் என்னப்பட்ட கன்மலையிலும், சேபை சேப் என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுபோட்டு, மீதியானியர்களை துரத்தி, ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு இக்கரையிலிருந்த கிதியோனிடம் கொண்டுவந்தார்கள்.
\s5
\c 8
\s1 சேபாவும் சல்முனாவும்
\p
\v 1 அப்பொழுது எப்பிராயீம் மனிதர்கள் அவனை நோக்கி: நீ மீதியானியர்கள்மேல் யுத்தம் செய்யப்போகிறபோது, எங்களை அழைக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று, அவனோடு கடுமையாக வாக்குவாதம்செய்தார்கள்.
\s5
\v 2 அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியர்களின் திராட்சை பழத்தின் முழு அறுவடையை விட, எப்பிராயீமர்களின் மீதியான அறுவடை அதிகம் அல்லவா?
\v 3 தேவன் உங்கள் கையிலே மீதியானியர்களின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன் மேலிருந்த அவர்களுடைய கோபம் நீங்கினது.
\s5
\v 4 கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், களைப்பாக இருந்தும் (எதிரியை) பின்தொடர்ந்தார்கள்.
\v 5 அவன் சுக்கோத்தின் மனிதர்களை நோக்கி: என்னோடிருக்கிற மக்களுக்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் களைப்பாக இருக்கிறார்கள், நான் மீதியானியர்களின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.
\s5
\v 6 அதற்குச் சுக்கோத்தின் பிரபுக்கள்: உன் ராணுவத்திற்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன்னுடைய கைவசம் வந்ததோ என்றார்கள்.
\v 7 அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என்னுடைய கையில் ஒப்புக்கொடுக்கும்போது, உங்கள் சரீரத்தை வனாந்திரத்தின் நெரிஞ்சில்முள்ளுகளால் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,
\s5
\v 8 அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப் போய், அந்த ஊர்க்காரர்களிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனிதர்கள் பதில் சொன்னபடியே பெனூவேலின் மனிதர்களும் அவனுக்குச் சொன்னார்கள்.
\v 9 அப்பொழுது அவன், பெனூவேலின் மனிதர்களைப் பார்த்து: நான் சமாதானத்தோடு திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.
\s5
\v 10 சேபாவும் சல்முனாவும் அவர்களோடு அவர்களுடைய படைகளும் ஏறக்குறைய பதினைந்தாயிரம்பேர் கர்கோரில் இருந்தார்கள்; பட்டயம் உருவத்தக்கவர்கள் ஒரு லட்சத்து இருபதாயிரம்பேர் விழுந்தபடியால், கிழக்குப்பகுதி மக்கள் எல்லா ராணுவத்திலும் இவர்கள் மட்டும் மீதியாக இருந்தார்கள்.
\s5
\v 11 கிதியோன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்கள் வழியாக நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கில் போய், அந்த ராணுவம் பயமில்லை என்று இருந்தபோது, அதை முறியடித்தான்.
\v 12 சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியர்களின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, ராணுவம் முழுவதையும் கலங்கடித்தான்.
\s5
\v 13 யோவாசின் மகனான கிதியோன் யுத்தம்செய்து, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது,
\v 14 சுக்கோத்தின் மனிதர்களில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின் பிரபுக்களும் அதின் மூப்பர்களுமாகிய எழுபத்தேழு மனிதர்களின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான்.
\s5
\v 15 அவன் சுக்கோத்து ஊர்க்காரர்களிடத்தில் வந்து: இதோ, களைத்திருக்கிற உன் மனிதர்களுக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன்னுடைய கைவசம் வந்ததோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும் சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி,
\v 16 பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் நெரிஞ்சில்முள்ளுகளை கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனிதர்களுக்குப் புத்திவரசெய்து,
\v 17 பெனூவேலின் கோபுரத்தை இடித்து, அந்த ஊர் மனிதர்களையும் கொன்றுபோட்டான்.
\s5
\v 18 பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்றுபோட்ட அந்த மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போல் இருந்தான் என்றார்கள்.
\v 19 அப்பொழுது அவன்: அவர்கள் என்னுடைய சகோதரர்களும் என்னுடைய தாயின் பிள்ளைகளுமாக இருந்தார்கள்; அவர்களை உயிரோடே வைத்திருந்தீர்களானால். உங்களைக் கொல்லாதிருப்பேன் என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,
\s5
\v 20 தன்னுடைய மூத்தமகனான யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் தான் இளைஞனானபடியால் பயந்து தன்னுடைய பட்டயத்தை உருவாமல் இருந்தான்.
\v 21 அப்பொழுது சேபாவும் சல்முனாவும்: நீரே எழுந்து எங்களைக் கொல்லும்; மனிதன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த பொன்னால் அலங்கரிக்கப்பட்ட பிறை வடிவமான ஆபரணங்களை எடுத்துக்கொண்டான்.
\s1 கிதியோன் ஓர் ஏபோத்தை செய்தல்
\p
\s5
\v 22 அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர்கள் கைக்கு தப்புவித்தபடியால் நீரும் உம்முடைய மகனும், உம்முடைய மகனின் மகனும், எங்களை ஆண்டுகொள்ளக்கடவீர்கள் என்றார்கள்.
\v 23 அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என்னுடைய மகனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.
\s5
\v 24 பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலர்களாக இருந்தபடியால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.
\v 25 இஸ்ரவேலர்கள்: சந்தோஷமாகக் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு துணியை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.
\s5
\v 26 பிறை வடிவிலான ஆபரணங்களும், ஆரங்களும், மீதியானியர்களின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த விலையுயர்ந்த ஊதா நிற ஆடைகளும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சங்கலிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்தி எழுநூறு பொன் சேக்கலின் நிறையாக இருந்தது.
\s5
\v 27 அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன்னுடைய ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைத் தொழுதுகொண்டதால் விபச்சாரம் செய்தவர்களானார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியானது.
\s1 கிதியோனின் மரணம்
\p
\v 28 இப்படியாக மீதியானியர்கள் திரும்ப தலை தூக்காதபடி, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் நாற்பது வருடங்கள் அமைதியாக இருந்தது.
\s5
\v 29 யோவாசின் மகனான யெருபாகால் போய், தன்னுடைய வீட்டிலே வாழ்ந்து வந்தான்.
\v 30 கிதியோனுக்கு அநேகம் மனைவிகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான மகன்கள் எழுபதுபேர்.
\v 31 சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பெயரிட்டான்.
\s5
\v 32 பின்பு யோவாசின் மகனான கிதியோன் நல்ல முதிர்வயதிலே இறந்து, ஒப்ராவிலே தன்னுடைய தகப்பனான யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம்செய்யப்பட்டான்.
\v 33 கிதியோன் இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பவும் பாகால்களைத் தொழுதுகொண்டதால் விபச்சாரம் செய்தவர்களாகி, பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.
\s5
\v 34 இஸ்ரவேல் மக்கள் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லா எதிரிகளின் கைகளிலிருந்தும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்காமலும்,
\v 35 கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலிற்குச் செய்த எல்லா நன்மைகளுக்குத்தகுந்த தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.
\s5
\c 9
\s1 அபிமலேக்கு ராஜாவாகுதல்
\p
\v 1 யெருபாகாலின் மகன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன்னுடைய தாயினுடைய சகோதரர்களிடம் போய், அவர்களையும் தன்னுடைய தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:
\v 2 யெருபாகாலின் மகன்கள் எழுபதுபேரான எல்லோரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மட்டும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் சரீரமுமானவன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்றான்.
\s5
\v 3 அப்படியே அவன் தாயின் சகோதரர்கள் சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றும்படியாக மாறியது.
\v 4 அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனிதர்களை வேலைக்கு வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.
\s5
\v 5 அவன் ஒப்ராவிலிருக்கிற தன்னுடைய தகப்பன் வீட்டிற்குப் போய், யெருபாகாலின் மகன்களான தன்னுடைய சகோதரர்கள் எழுபது பேர்களையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய மகனான யோதாம் ஒளிந்திருந்தபடியால் அவன் தப்பினான்.
\v 6 பின்பு சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களும், மில்லோவின் குடும்பத்தார்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து போய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தின் அருகில் அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.
\s1 யோதாமின் கதை
\p
\s5
\v 7 இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறி நின்று, உரத்த சத்தமிட்டுக்கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனிதர்களே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.
\v 8 மரங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்செய்யும்படி போய், ஒலிவமரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.
\s5
\v 9 அதற்கு ஒலிவமரம்: தேவனையும் மனிதனையும் கனப்படுத்துகிற என்னிலுள்ள என்னுடைய எண்ணெயை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
\v 10 அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.
\v 11 அதற்கு அத்திமரம்: நான் என்னுடைய இனிமையையும் என்னுடைய நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
\s5
\v 12 அப்பொழுது மரங்கள் திராட்சை செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.
\v 13 அதற்குத் திராட்சை செடி: தெய்வங்களையும் மனிதர்களையும் மகிழச்செய்யும் என்னுடைய ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
\v 14 அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.
\s5
\v 15 அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம் செய்கிறது உண்மையானால், என்னுடைய நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுரு மரங்களை எரிக்கட்டும் என்றது.
\v 16 என்னுடைய தகப்பன் உங்களுக்காக யுத்தம்செய்து, தன்னுடைய ஜீவனை நினைக்காமற்போய், உங்களை மீதியானியர்களின் கையிலிருந்து காப்பாற்றினார்.
\s5
\v 17 நீங்களோ இன்று என்னுடைய தகப்பனுடைய குடும்பத்துக்கு எதிராக எழும்பி, அவருடைய மகன்களான எழுபதுபேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்து, அவருடைய வேலைக்காரியின் மகனான அபிமெலேக்கு உங்கள் சகோதரனானபடியால், அவனைச் சீகேம் பட்டணத்தார்களுக்கு ராஜாவாக்கினீர்கள்.
\v 18 இப்போதும் நீங்கள் அவனை ராஜாவாக்கின செய்கை உண்மையும் உத்தமமுமான செய்கையாக இருந்தால்,
\s5
\v 19 நீங்கள் யெருபாகாலையும் அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி, அவர் கைகளின் செய்கைக்குத் தகுந்ததை அவருக்குச் செய்து, இப்படி இந்த நாளில் அவரையும் அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாக இருக்குமானால், அபிமெலேக்கின்மேல் நீங்களும் சந்தோஷமாக இருங்கள்; உங்கள்மேல் அவனும் சந்தோஷமாக இருக்கட்டும்.
\v 20 இல்லாவிட்டால் அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தார்களையும், மில்லோவின் குடும்பத்தினரையும் எரிக்கவும், சீகேம் பட்டணத்தார்களிலும் மில்லோவின் குடும்பத்தினரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கை எரிப்பதாக என்று யோதாம் சொல்லி,
\v 21 தன்னுடைய சகோதரனான அபிமெலேக்குக்குப் பயந்து, தப்பியோடி, பேயேருக்குப் போய், அங்கே குடியிருந்தான்.
\s1 அபிமெலேக்கு சீகேமை எதிர்த்துப் போரிடுதல்
\p
\s5
\v 22 அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருடங்கள் அரசாண்டபின்பு,
\v 23 அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனிதர்களுக்கும் நடுவே தீங்கை உண்டாக்கும் ஆவியை தேவன் வரச்செய்தார்.
\v 24 யெருபாகாலின் எழுபது மகன்களுக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்தது, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனான அபிமெலேக்கின்மேலும், தன்னுடைய சகோதரர்களைக் கொல்ல அவனுடைய கைகளை பெலப்படுத்தின சீகேம் மனிதர்கள் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனிதர்கள் அபிமெலேக்குக்கு துரோகம் செய்தார்கள்.
\s5
\v 25 சீகேமின் மனிதர்கள் மலைகளின் உச்சியில் அவனுக்கு ஒளிந்திருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழிநடந்துபோகிற எல்லோரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.
\s5
\v 26 ஏபேதின் மகனான காகால் தன்னுடைய சகோதரர்களோடு சீகேமுக்குள் போனான்; சீகேமின் பெரிய மனிதர்கள் அவனை நம்பி,
\v 27 வெளியே புறப்பட்டு, தங்கள் திராட்சை தோட்டங்களின் பழங்களை அறுத்து, ஆலையில் ஆட்டி, ஆடிப்பாடி, தங்கள் தேவனின் வீட்டிற்குள் போய், புசித்துக்குடித்து, அபிமெலேக்கை சபித்தார்கள்.
\s5
\v 28 அப்பொழுது ஏபேதின் மகனான காகால்: அபிமெலேக்கு யார்? சீகேம் யார்? நாம் அவனுக்கு பணியாற்றவேண்டியது என்ன? அவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய காரியதரிசி அல்லவா? சீகேமின் தகப்பனான ஏமோரின் மனிதர்களையே பணிந்துகொள்ளுங்கள்; அவனை நாங்கள் பணிந்துகொள்வானேன்?
\v 29 இந்த மக்கள்மட்டும் என்னுடைய கைக்குள் இருக்கட்டும்; நான் அபிமெலேக்கைத் துரத்திவிடுவேன் என்றான். உன் படையைப் பெருகச்செய்துப் புறப்பட்டுவா என்று, அவன் அபிமெலேக்குக்குச் சொல்லியனுப்பினான்.
\s5
\v 30 பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் மகனான காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமடைந்து,
\v 31 இரகசியமாக அபிமெலேக்கினிடத்திற்கு ஆட்களை அனுப்பி: இதோ, ஏபேதின் மகனான காகாலும் அவனுடைய சகோதரர்களும் சீகேமுக்கு வந்திருக்கிறார்கள்; பட்டணத்தை உமக்கு எதிராக எழுப்புகிறார்கள்.
\s5
\v 32 ஆகையால் நீர் உம்மோடிருக்கும் மக்களோடு இரவில் எழுந்து வந்து வெளியிலே ஒளிந்திருந்து,
\v 33 காலையில் சூரியன் உதிக்கும்போது எழுந்து, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற மக்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, நீர் செய்ய நினைத்ததை அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான்.
\s5
\v 34 அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த எல்லா மக்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு எதிராக நான்கு படைகளாக ஒளிந்திருந்தார்கள்.
\v 35 ஏபேதின் மகன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் நுழைவுவாயிலில் நின்றான்; அப்பொழுது ஒளிந்திருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற மக்களோடு எழும்பி வந்தான்.
\s5
\v 36 காகால் அந்த மக்களைப் பார்த்து: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து மக்கள் இறங்கி வருகிறார்கள் என்று சேபூலோடு சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைப் பார்த்து, மனிதர்கள் என்று நினைக்கிறாய் என்றான்.
\v 37 காகாலோ திரும்பவும்: இதோ, மக்கள் தேசத்தின் மத்தியிலிருந்து இறங்கிவந்து, ஒரு படை மெயொனெனீமின் கர்வாலிமரத்தின் வழியாக வருகிறது என்றான்.
\s5
\v 38 அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் பணிந்துகொள்வதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன்னுடைய வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த மக்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடு யுத்தம்செய் என்றான்.
\v 39 அப்பொழுது காகால் சீகேமின் மனிதர்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடு யுத்தம்செய்தான்.
\v 40 அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல்வரை அநேகர் வெட்டப்பட்டு விழுந்தார்கள்.
\s5
\v 41 அபிமெலேக்கு அருமாவில் இருந்து விட்டான்; சேபூல் காகாலையும் அவனுடைய சகோதரர்களையும் சீகேமிலே குடியிருக்கவிடாதபடி துரத்திவிட்டான்.
\v 42 மறுநாளிலே மக்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
\v 43 அவன் மக்களைக்கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படைகளாக பிரித்து, வெளியிலே ஒளிந்திருந்து, அந்த மக்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிறதைப் பார்த்து, அவர்களைத் தாக்கிக் கொன்றான்.
\s5
\v 44 அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் நுழைவுவாயிலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற அனைவரையும் தாக்கி, அவர்களைக் கொன்றார்கள்.
\v 45 அபிமெலேக்கு அந்த நாள் முழுதும் பட்டணத்தின்மேல் யுத்தம்செய்து, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த மக்களைக்கொன்று, பட்டணத்தை இடித்துவிட்டு, அதில் உப்பு விதைத்தான்.
\s5
\v 46 அதைச் சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் கோட்டைக்குள் நுழைந்தார்கள்.
\v 47 சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் அங்கே கூடியிருக்கிறது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
\s5
\v 48 அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா மக்களோடும் சல்மோன் மலையில் ஏறி, தன்னுடைய கையிலே கோடாரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கிளையை வெட்டி, அதை எடுத்து, தன்னுடைய தோளின்மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த மக்களைப் பார்த்து: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் விரைவாக என்னைப்போலச் செய்யுங்கள் என்றான்.
\v 49 அப்படியே எல்லா மக்களும் அவரவர் ஒவ்வொரு கிளைகளை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று, அவைகளை அந்தக் கோட்டைக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த கோட்டையை எரித்துப்போட்டார்கள்; அதினால் ஆண்களும் பெண்களும் ஏறக்குறைய ஆயிரம்பேரான சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் இறந்தார்கள்.
\s1 அபிமெலேக்கின் மரணம்
\p
\s5
\v 50 பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப் போய், அதற்கு எதிராக முகாமிட்டு, அதைப் பிடித்தான்.
\v 51 அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த கோபுரம் இருந்தது; அங்கே எல்லா ஆண்களும் பெண்களும் பட்டணத்து மனிதர்கள் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, கோபுரத்தின்மேல் ஏறினார்கள்.
\s5
\v 52 அபிமெலேக்கு அந்த கோபுரம்வரை வந்து, அதின்மேல் யுத்தம்செய்து, கோபுரத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படி, வாசலின் அருகே வந்தான்.
\v 53 அப்பொழுது ஒரு பெண் ஒரு மாவரைக்கும் கல்லின் துண்டை அபிமெலேக்குடைய தலையின்மேல் போட்டாள்; அது அவனுடைய மண்டையை உடைத்தது.
\v 54 உடனே அவன் தன்னுடைய ஆயுதம் ஏந்திய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு பெண் என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடி, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு என்று அவனோடு சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை, பட்டயம் மறுபக்கம் துளையிட்டு வெளியேறுமாறு குத்தினான், அவன் இறந்துப்போனான்.
\s5
\v 55 அபிமெலேக்கு இறந்துப்போனதை இஸ்ரவேல் மனிதர்கள் பார்த்தபோது, அவர்கள் தங்கள்தங்கள் இடங்களுக்குப் போய் விட்டார்கள்.
\v 56 இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரர்களைக் கொலை செய்ததால், தன்னுடைய தகப்பனுக்குச் செய்த தீங்கை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.
\v 57 சீகேம் மனிதர்கள் செய்த எல்லா தீமையையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின் மகன் யோதாமின் சாபம் அவர்களுக்குப் பலித்தது.
\s5
\c 10
\s1 நியாயாதிபதியாகிய தோலா
\p
\v 1 அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனான பூவாவின் மகன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை காப்பாற்ற எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.
\v 2 அவன் இஸ்ரவேலை இருபத்துமூன்று வருடங்கள் நியாயம் விசாரித்து, பின்பு இறந்து, சாமீரிலே அடக்கம்செய்யப்பட்டான்.
\s1 நியாயாதிபதியாகிய யாவீர்
\p
\s5
\v 3 அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
\v 4 முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது மகன்கள் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்த நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்கள் என்கிற பெயர் இருக்கிறது.
\v 5 யாவீர் இறந்து, காமோனிலே அடக்கம்செய்யப்பட்டான்.
\s1 அம்மோனியர் இஸ்ரவேலரை எதிர்த்துப் போரிடுதல்
\p
\s5
\v 6 இஸ்ரவேல் மக்கள், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானவைகளைச் செய்து, கர்த்தரை வணங்காமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தெய்வங்களையும், சீதோனின் தெய்வங்களையும், மோவாபின் தெய்வங்களையும், அம்மோன் மக்களின் தெய்வங்களையும், பெலிஸ்தர்களின் தெய்வங்களையும் தொழுதுகொண்டார்கள்.
\v 7 அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமடைந்து, அவர்களைப் பெலிஸ்தர்கள் கையிலும், அம்மோனியர்களின் கையிலும் ஒப்புக்கொடுத்தார்.
\s5
\v 8 அவர்கள் அந்த ஆண்டுமுதல் பதினெட்டு வருடங்களாக யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியர்களின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் மக்களையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.
\v 9 அம்மோனியர்கள் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தினர்மேலும் யுத்தம்செய்ய யோர்தானைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர்கள் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
\s5
\v 10 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்களுடைய தேவனைவிட்டு, பாகால்களைத் தொழுதுகொண்டோம் என்றார்கள்.
\v 11 கர்த்தர் இஸ்ரவேல் மக்களை நோக்கி: எகிப்தியர்களும், எமோரியர்களும், அம்மோனியர்களும், பெலிஸ்தர்களும்,
\v 12 சீதோனியர்களும், அமலேக்கியர்களும், மாகோனியர்களும், உங்களை ஒடுக்கும் நேரங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்களுடைய கைக்கு விலக்கி இரட்சிக்கவில்லையா?
\s5
\v 13 அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தெய்வங்களை ஆராதனை செய்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சிக்கமாட்டேன்.
\v 14 நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தெய்வங்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்களுடைய ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.
\s5
\v 15 இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமட்டும் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,
\v 16 அந்நிய தெய்வங்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் துயரத்தைப் பார்த்து மனதுருகினார்.
\s1 யெப்தா தலைவனாக தேர்ந்தெடுக்கப்படுதல்
\p
\s5
\v 17 அம்மோனியர்கள் கூட்டங்கூடி, கீலேயாத்திலே முகாமிட்டார்கள்; இஸ்ரவேல் மக்களும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே முகாமிட்டார்கள்.
\v 18 அப்பொழுது கீலேயாத்தின் மக்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோனியர்கள்மேல் முதலில் யுத்தம்செய்யப்போகிற மனிதன் யார்? அவனே கீலேயாத்தின் குடியிருப்புகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பான் என்றார்கள்.
\s5
\c 11
\p
\v 1 கீலேயாத்தியனான யெப்தா வல்லமையுள்ள வீரனாக இருந்தான்; அவன் வேசியின் மகன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.
\v 2 கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் மகன்களைப் பெற்றாள்; அவனுடைய மனைவி பெற்ற மகன்கள் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்களுடைய தகப்பன் வீட்டிலே சொத்து இல்லை; நீ அந்நிய பெண்ணின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.
\v 3 அப்பொழுது யெப்தா: தன்னுடைய சகோதரர்களை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனிதர்கள் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடு யுத்தத்திற்குப் போவார்கள்.
\s5
\v 4 சிலநாட்களுக்குப்பின்பு, அம்மோனிய மக்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்.
\v 5 அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்யும்போது கீலேயாத்தின் மூப்பர்கள் யெப்தாவைத் தோப் தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,
\v 6 யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய எங்களுடைய தளபதியாக இருக்கவேண்டும் என்றார்கள்.
\s5
\v 7 அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என்னுடைய தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து சம்பவித்திருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.
\v 8 அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களோடு வந்து, அம்மோன் மக்களோடு யுத்தம்செய்து, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாக இருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடம் வந்தோம் என்றார்கள்.
\s5
\v 9 அதற்கு யெப்தா: அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை எனக்கு முன்பாக ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாக வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.
\v 10 கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன்னுடைய வார்த்தையின்படியே செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுவாக நின்று கேட்பாராக என்றார்கள்.
\s1 அம்மோனிய ஜனங்களின் அரசனுக்கு யெப்தாவின் செய்தி
\p
\v 11 அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பர்களோடு போனான்; மக்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் தளபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன்னுடைய காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான்.
\s5
\v 12 பின்பு யெப்தா அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நீ என்னுடைய தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்செய்ய வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச் சொன்னான்.
\v 13 அம்மோன் மக்களின் ராஜா யெப்தாவின் தூதுவர்களை நோக்கி: இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவங்கி யாபோக், யோர்தான்வரை இருக்கிற என்னுடைய தேசத்தைக் பிடித்துக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாகத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்.
\s5
\v 14 யெப்தா மறுபடியும் அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது:
\v 15 யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் தேசத்தையாகிலும், அம்மோன் மக்களின் தேசத்தையாகிலும் பிடித்துக்கொண்டதில்லையே.
\v 16 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்திரத்தில் சிவந்த சமுத்திரம்வரை நடந்து, பின்பு காதேசுக்கு வந்து,
\s5
\v 17 இஸ்ரவேலர்கள் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாயகக் கடந்துபோகிறோம்என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர்கள் காதேசிலே தங்கியிருந்து,
\v 18 பின்பு வனாந்திரவழியாக நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கேவந்து, மோவாபின் எல்லைக்குள் நுழையாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே முகாமிட்டார்கள்.
\s5
\v 19 அப்பொழுது இஸ்ரவேலர்கள் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியர்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாக எங்களுடைய இடத்திற்கு கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள்.
\v 20 சீகோன் இஸ்ரவேலர்களை நம்பாததால், தன்னுடைய எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன்னுடைய மக்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே முகாமிட்டு, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான்.
\s5
\v 21 அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சீகோனையும் அவனுடைய எல்லா மக்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர்கள் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியர்களின் நாடுகளையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி,
\v 22 யாபோக்வரை, வனாந்திரம் துவக்கி யோர்தான்வரை இருக்கிற எமோரியரின் எல்லைகளையெல்லாம் சொந்தமாக பிடித்துக்கொண்டார்கள்.
\s5
\v 23 இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியர்களை தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலிற்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தை பிடித்துக்கொள்ளமுடியுமா?
\v 24 உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் பிடித்துக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் பிடித்துக்கொள்கிறோம்.
\v 25 மேலும் சிப்போரின் மகனான பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைவிட உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலர்களோடு எப்போதாவது வாதாடினானா? எப்போதாவது அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்தானா?
\s5
\v 26 இஸ்ரவேலர்கள் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியின் அருகே எல்லா ஊர்களிலும், முந்நூறு வருடங்கள் குடியிருக்கும்போது, இவ்வளவு காலமாக நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாமல் போனதென்ன?
\v 27 நான் உமக்கு எதிராகக் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு எதிராக யுத்தம்செய்கிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் மக்களுக்கும் அம்மோன் மக்களுக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.
\v 28 ஆனாலும் அம்மோன் மக்களின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளை கேட்காமற்போனான்.
\s1 யெப்தாவின் பொருத்தனை
\p
\s5
\v 29 அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் மக்களுக்கு எதிராகப் போனான்.
\v 30 அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைச் செய்து: தேவரீர் அம்மோன் மக்களை என் கையில் ஒப்புக்கொடுத்தால்,
\v 31 நான் அம்மோன் மக்களிடத்திலிருந்து சமாதானத்தோடு திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.
\s5
\v 32 யெப்தா அம்மோன் மக்களின்மேல் யுத்தம்செய்ய, அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
\v 33 அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகும்வரை, திராட்சைத் தோட்டத்து நிலங்கள்வரைக்கும், பேரழிவாக முறியடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் மக்கள் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.
\s5
\v 34 யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன்னுடைய வீட்டிற்கு வருகிறபோது, இதோ, அவன் மகள் தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளை; அவளைத்தவிர அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை.
\v 35 அவன் அவளைப் பார்த்தவுடனே தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனவேதனை அடையவும் கலங்கவும் செய்கிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான்.
\s5
\v 36 அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் மக்களாகிய உம்முடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்.
\v 37 பின்னும் அவள் தன்னுடைய தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என்னுடைய தோழிகளும் என்னுடைய கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டு மாதங்கள் தவணைகொடும் என்றாள்.
\s5
\v 38 அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன்னுடைய தோழிகளோடு போய்த் தன்னுடைய கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,
\v 39 இரண்டு மாதம் முடிந்தபின்பு, தன்னுடைய தகப்பனிடம் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் செய்திருந்த தன்னுடைய பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் திருமணம் ஆகாதவளாக இருந்தாள்.
\v 40 இதினிமித்தம் இஸ்ரவேலின் மகள்கள் வருடந்தோறும் போய், நான்கு நாட்கள் கீலேயாத்தியனான யெப்தாவின் மகளைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமானது.
\s5
\c 12
\s1 யெப்தாவும் எப்பிராயீமும்
\p
\v 1 எப்பிராயீம் மனிதர்கள் ஒன்றாகக் கூடி வடக்கே புறப்பட்டுப்போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடு வரும்படி அழைக்காமல் அம்மோனியர்கள்மேல் யுத்தம்செய்யப்போனதென்ன? உன்னுடைய வீட்டையும் உன்னையும் அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள்.
\v 2 அதற்கு யெப்தா: எனக்கும் என்னுடைய மக்களுக்கும் அம்மோனியர்களோடு பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு விலக்கி காப்பாற்றவில்லை.
\s5
\v 3 நீங்கள் என்னை காப்பாற்றவில்லை என்று நான் பார்த்தபோது, நான் என்னுடைய ஜீவனை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் மக்களுக்கு எதிராகப்போனேன்; கர்த்தர் அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்செய்ய, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.
\v 4 பின்பு யெப்தா கீலேயாத் மனிதர்களையெல்லாம் கூட்டி, எப்பிராயீமர்களோடு யுத்தம்செய்தான்; எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியர்களான நீங்கள் எப்பிராயீமைவிட்டு ஓடிப்போனவர்கள் என்று எப்பிராயீமர்கள் சொன்னபடியினால், கீலேயாத் மனிதர்கள் அவர்களை முறியடித்தார்கள்.
\s5
\v 5 கீலேயாத்தியர்கள் எப்பிராயீமர்களை முந்தி யோர்தானின் துறைமுகங்களைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமர்களிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனிதர்கள்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால்,
\v 6 நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்கக்கூடாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறைமுகத்திலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்திரண்டாயிரம்பேர் இறந்தார்கள்.
\s5
\v 7 யெப்தா இஸ்ரவேலை ஆறு வருடங்கள் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா இறந்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம்செய்யப்பட்டான்.
\s1 நியாயாதிபதியாகிய இப்சான்
\p
\s5
\v 8 அவனுக்குப்பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
\v 9 அவனுக்கு முப்பது மகன்களும் முப்பது மகள்களும் இருந்தார்கள்; முப்பது மகள்களையும் வேறு இனத்திலே திருமணம் செய்துகொடுத்து, தன்னுடைய மகன்களுக்கு முப்பது பெண்களை வேறு இனத்திலிருந்து எடுத்தான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
\s5
\v 10 பின்பு இப்சான் இறந்து, பெத்லெகேமிலே அடக்கம்செய்யப்பட்டான்.
\s1 நியாயாதிபதியாகிய ஏலோன்
\p
\v 11 அவனுக்குப் பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
\v 12 பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இறந்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம் செய்யப்பட்டான்.
\s1 நியாயாதிபதியாகிய அப்தோன்
\p
\s5
\v 13 அவனுக்குப்பின்பு இல்லேலின் மகனான பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
\v 14 அவனுக்கு நாற்பது மகன்களும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
\v 15 பின்பு பிரத்தோனியனான இல்லேலின் மகனான அப்தோன் இறந்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம்செய்யப்பட்டான்.
\s5
\c 13
\s1 சிம்சோனின் பிறப்பு
\p
\v 1 இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்கு தீமையானதைச் செய்ததால், கர்த்தர் அவர்களை நாற்பது வருடங்கள் வரை பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
\v 2 அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனிதன் இருந்தான்; அவன் பெயர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.
\s5
\v 3 கர்த்தருடைய தூதன் அந்த பெண்ணுக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.
\v 4 ஆதலால் நீ திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காதபடிக்கும், தீட்டானது ஒன்றும் சாப்பிட்டாதபடிக்கும் எச்சரிக்கையாக இரு.
\v 5 நீ கர்ப்பம் தரித்து, ஒரு மகனைப் பெறுவாய்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படவேண்டாம்; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றத் தொடங்குவான் என்றார்.
\s5
\v 6 அப்பொழுது அந்தப் பெண் தன்னுடைய கணவனிடம் வந்து: தேவனுடைய மனிதன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாக இருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.
\v 7 அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பம் தரித்து, ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; ஆதலால் நீ திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காமலும், தீட்டானது ஒன்றும் சாப்பிடாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன்னுடைய மரணநாள்வரை தேவனுக்கென்று நசரேயனாக இருப்பான் என்று சொன்னார் என்றாள்.
\s5
\v 8 அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்து: ஆ, என்னுடைய ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனிதன் மறுபடியும் ஒருமுறை எங்களிடம் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்.
\v 9 தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்தப் பெண் வயல்வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் கணவனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை.
\s5
\v 10 ஆகையால் அந்தப் பெண் சீக்கிரமாய் ஓடி, இதோ, அன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானார் என்று தன்னுடைய கணவனுக்கு அறிவித்தாள்.
\v 11 அப்பொழுது மனோவா எழுந்து, தன்னுடைய மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்தப் பெண்ணோடு பேசியவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான்தான் என்றார்.
\s5
\v 12 அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.
\v 13 கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் அந்தப் பெண்ணோடே சொன்ன எல்லாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,
\v 14 திராட்சைச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காமலும், தீட்டானதொன்றும் சாப்பிடாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கடைபிடிக்கட்டும் என்றார்.
\s5
\v 15 அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காக சமைத்துக் கொண்டுவரும்வரை தங்கியிரும் என்றான்.
\v 16 கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன்னுடைய உணவை சாப்பிடமாட்டேன்; நீ சர்வாங்க தகனபலி செலுத்தவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.
\s5
\v 17 அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மை மரியாதை செய்யும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.
\v 18 அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.
\s5
\v 19 மனோவா போய், வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவனுடைய மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அதிசயம் வெளிப்பட்டது.
\v 20 அக்கினிஜூவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜூவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் பார்த்து, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.
\s5
\v 21 பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,
\v 22 தன்னுடைய மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், நிச்சயமாக மரிப்போம்என்றான்.
\s5
\v 23 அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்கதகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.
\s5
\v 24 பின்பு அந்தப் பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.
\v 25 அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் முகாமில் இருக்கும்போது கர்த்தருடைய ஆவியானவர் அவனை தூண்டத்தொடங்கினார்.
\s5
\c 14
\s1 சிம்சோனின் திருமணம்
\p
\v 1 சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தர்களின் மகள்களில் ஒரு பெண்ணைப் பார்த்து,
\v 2 திரும்ப வந்து, தன்னுடைய தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தர்களின் மகள்களில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்; அவளை எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான்.
\s5
\v 3 அப்பொழுது அவனுடைய தாயும் அவனுடைய தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தர்களிடத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவேண்டியதென்ன? உன்னுடைய சகோதரர்களின் மகள்களிலும், எங்கள் மக்கள் அனைவரிலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன்னுடைய தகப்பனை நோக்கி: அவள் என்னுடைய கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான்.
\v 4 அவன் பெலிஸ்தர்களிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவனுடைய தாயும் தகப்பனும் அறியாமல் இருந்தார்கள்: அக்காலத்திலே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலை ஆண்டார்கள்.
\s5
\v 5 அப்படியே சிம்சோனும் அவனுடைய தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சைத் தோட்டங்கள் வரை வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற இளம் சிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.
\v 6 அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன்னுடைய கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன்னுடைய தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
\s5
\v 7 அவன் போய் அந்தப் பெண்ணோடு பேசினான்; அவள் சிம்சோனின் கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள்.
\v 8 சில நாட்களுக்குப்பின்பு, அவன் அவளைத் திருமணம் செய்யத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப்போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.
\v 9 அவன் அதைத் தன்னுடைய கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன்னுடைய தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள்; ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.
\s5
\v 10 அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன் அங்கே விருந்துசெய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம்.
\v 11 அவர்கள் அவனைப் பார்த்தபோது, அவனோடு இருக்கும்படி முப்பது நண்பர்களை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
\s5
\v 12 சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்து சாப்பிடுகிற ஏழுநாட்களுக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது மேலாடைகளையும் முப்பது மாற்று உடைகளையும் கொடுப்பேன்.
\v 13 அதை எனக்கு விடுவிக்காமல் போனால், நீங்கள் எனக்கு முப்பது மேலாடைகளையும் முப்பது மாற்று உடைகளையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கிறோம் என்றார்கள்.
\s5
\v 14 அப்பொழுது அவன்: பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்று நாட்கள்வரை விடுவிக்கமுடியாமற்போனது.
\s5
\v 15 ஏழாம்நாளிலே அவர்கள் சிம்சோனின் மனைவியைப் பார்த்து: உன்னுடைய கணவன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படி நீ அவனை வசப்படுத்து; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் அக்கினியால் எரித்துப்போடுவோம்; எங்களுடையவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள்.
\s5
\v 16 அப்பொழுது சிம்சோனின் மனைவி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசிக்காமல் என்னைப் பகைக்கிறாய், என்னுடைய மக்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என்னுடைய தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான்.
\v 17 விருந்து சாப்பிடுகிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம் நாளிலே அவள் அவனை தொல்லை செய்துக்கொண்டிருந்ததினால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன்னுடைய மக்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.
\s5
\v 18 ஆகையால் ஏழாம் நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனிதர்கள் அவனைப் பார்த்து: தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என்னுடைய விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.
\s5
\v 19 கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கியதானால், அவன் அஸ்கலோனுக்குப் போய், அந்த ஊர் மக்களில் முப்பதுபேரைக் கொன்று, அவர்களுடைய ஆடைகளை எடுத்துக்கொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று ஆடைகளைக் கொடுத்து, கோபம் வந்தவனாகப் புறப்பட்டு, தன்னுடைய தகப்பன் வீட்டிற்குப் போய்விட்டான்.
\v 20 சிம்சோனின் மனைவியோ, அவனுடைய நண்பர்களில் அவனோடு சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.
\s5
\c 15
\s1 சிம்சோன் பெலிஸ்தியர்களுக்குத் தொல்லை கொடுத்தல்
\p
\v 1 சிலநாட்கள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன்னுடைய மனைவியைப் பார்க்கப்போய்: நான் என்னுடைய மனைவியின் அறைக்குள் போகவேண்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளேபோகவிடாமல்:
\v 2 நீ அவளை முழுவதும் பகைத்துவிட்டாய் என்று நான் நினைத்து, அவளை உன்னுடைய நண்பனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன்; அவளுடைய தங்கை அவளைவிட அழகானவள் அல்லவா, அவளுக்குப் பதிலாக இவள் உனக்கு இருக்கட்டும் என்று சொன்னான்.
\s5
\v 3 அப்பொழுது சிம்சோன்: நான் பெலிஸ்தர்களுக்குப் பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி,
\v 4 புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடு வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக்கட்டி,
\s5
\v 5 பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தர்களின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சை தோட்டங்களையும் ஒலிவ தோப்புக்களையும் சுட்டெரித்துப்போட்டான்.
\v 6 இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர்கள் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனான சிம்சோன்தான்; அவனுடைய மனைவியை அவனுடைய நண்பனுக்குத் திருமணம் செய்துகொடுத்ததினால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.
\s5
\v 7 அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்காமல் ஓயமாட்டேன் என்று சொல்லி,
\v 8 அவர்களைத் தொடையிலும் இடுப்பிலுமாக துண்டுதுண்டாக வெட்டி, பின்பு போய், ஏத்தாம் ஊர்க் கன்மலைக் குகையில் குடியிருந்தான்.
\s5
\v 9 அப்பொழுது பெலிஸ்தர்கள் போய், யூதாவிலே முகாமிட்டு, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள்.
\v 10 நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனிதர்கள் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள்.
\s5
\v 11 அப்பொழுது யூதாவிலே மூவாயிரம்பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைக் குகைக்குப் போய்: பெலிஸ்தர்கள் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.
\s5
\v 12 அப்பொழுது அவர்கள்: உன்னைக்கட்டி, பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்குச் சிம்சோன்: நீங்கள் என்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள் என்றான்.
\v 13 அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்.
\s5
\v 14 அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர்கள் அவனுக்கு எதிராக ஆரவாரம் செய்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாக இறங்கினதால், அவனுடைய புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவனுடைய கைகளைவிட்டு அறுந்துபோயின.
\s5
\v 15 உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கண்டு, தன்னுடைய கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம்பேரைக் கொன்றுபோட்டான்.
\v 16 அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடை எலும்பினால் குவியல் குவியலாக இறந்துக்கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான்.
\s5
\v 17 அப்படிச் சொல்லிமுடிந்தபின்பு, தன்னுடைய கையில் இருந்த தாடை எலும்பை எறிந்துவிட்டு, அந்த இடத்திற்கு ராமாத்லேகி என்று பெயரிட்டான்.
\v 18 அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருந்தசேதனம் பண்ணப்படாதவர்களின் கைகளினால் சாகவேண்டுமோ என்றான்.
\s5
\v 19 அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கச்செய்தார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவனுடைய உயிர் திரும்ப வந்தது, அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பெயரிட்டான்; அது இந்த நாள்வரையும் லேகியில் இருக்கிறது.
\v 20 அவன் பெலிஸ்தர்களின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
\s5
\c 16
\s1 காசா என்னும் நகருக்கு சிம்சோன் செல்லுதல்
\p
\v 1 பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு விபச்சாரியை கண்டு, அவளிடம் போனான்.
\v 2 அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊர்க்காரர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை சுற்றிவளைத்து இரவுமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் காத்திருந்து இரவு முழுவதும் பேசாமல் இருந்தார்கள்.
\s5
\v 3 சிம்சோன் நடுஇரவுவரை படுத்திருந்து, நடுஇரவில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடுப் பெயர்த்து, தன்னுடைய தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்துகொண்டுபோனான்.
\s1 சிம்சோனும் தெலீலாளும்
\p
\s5
\v 4 அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணோடு அன்பாயிருந்தான்.
\v 5 அவளிடத்திற்கு பெலிஸ்தர்களின் அதிபதிகள் போய்: நீ அவனை வசப்படுத்தி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டி பலவீனப்படுத்துவதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்துநூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்.
\s5
\v 6 அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன்னுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது. உன்னை பலவீனப்படுத்த, உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ என்னிடம் சொல்லவேண்டும் என்றாள்.
\v 7 அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு வில்நார்க் கயிறுகளினாலே என்னைக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான்.
\s5
\v 8 அப்பொழுது பெலிஸ்தர்களின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு வில்நார்க் கயிறுகளை அவளிடம் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள்.
\v 9 மறைந்திருக்கிறவர்கள் உள் அறையிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல்நூலானது நெருப்புப் பட்டவுடனே அறுந்துபோகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவனுடைய பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று அவர்களால் அறிந்துகொள்ளமுடியவில்லை.
\s5
\v 10 அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னை ஏமாற்றி, எனக்கு பொய் சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று என்னிடம் சொல்லவேண்டும் என்றாள்.
\v 11 அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் பயன்படுத்தாமலிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான்.
\v 12 அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக்கட்டி: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்: மறைந்திருக்கிறவர்கள் உள் அறையில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன்னுடைய புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.
\s5
\v 13 பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னை ஏமாற்றி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினால் கட்டலாம் என்று நீ என்னிடம் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன்: நீ என்னுடைய தலைமுடியின் ஏழு ஜடைகளை நெசவுநூல் தறியோடு பின்னிவிட்டால் மற்ற மனிதர்களைப்போல் ஆவேன் என்றான்.
\v 14 அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு எழுந்து, நெசவு ஆணியையும் தறியையும் பிடுங்கிக்கொண்டு போனான்.
\s5
\v 15 அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன்னுடைய இருதயம் என்னோடு இல்லாமலிருக்க, உன்னை நேசிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுமுறைகளும் என்னைப் பரியாசம் செய்தாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று என்னிடம் சொல்லாமல் போனாயே என்று சொல்லி,
\v 16 இப்படி அவனைத் தினம்தினம் தன்னுடைய வார்த்தைகளினாலே நெருக்கி தொந்தரவுசெய்தபடியால், சாகத்தக்கதாக அவனுடைய ஆத்துமா துக்கப்பட்டு,
\s5
\v 17 தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என்னுடைய தலையின்மேல் படவில்லை; நான் என்னுடைய தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என்னுடைய தலைசிரைக்கப்பட்டால், என்னுடைய பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலவீனனாகி, மற்ற எல்லா மனிதர்களைப்போல ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.
\s5
\v 18 அவன் தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதை தெலீலாள் கேட்டபோது, அவள் பெலிஸ்தர்களின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருமுறை வாருங்கள், அவன் தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் என்னிடத்தில் வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தர்களின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் வந்தார்கள்.
\v 19 அவள் அவனைத் தன்னுடைய மடியிலே தூங்கவைத்து, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைத்து, அவனை பலவீனப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கியது.
\s5
\v 20 அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.
\v 21 பெலிஸ்தர்கள் அவனைப் பிடித்து, அவனுடைய கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைக்க வைத்தார்கள்.
\v 22 அவனுடைய தலைமுடி சிரைக்கப்பட்டப்பின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கியது.
\s1 சிம்சோனின் மரணம்
\p
\s5
\v 23 பெலிஸ்தர்களின் பிரபுக்கள்: நம்முடைய எதிரியாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்களுடைய தெய்வமாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடிவந்தார்கள்.
\v 24 மக்கள் அவனைப் பார்த்தவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய எதிரியை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்களுடைய தேவனைப் புகழ்ந்தார்கள்.
\s5
\v 25 இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாக இருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைககாட்டுவதற்கு, சிம்சோனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து அழைத்துக்கொண்டு வந்தார்கள், அவர்களுக்கு முன்பாக வேடிக்கைக் காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.
\v 26 சிம்சோன் தன்னுடையக் கையைப் பிடித்து நடத்துகிற சிறுவனோடு, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கவேண்டும் என்றான்.
\s5
\v 27 அந்த வீடு ஆண்களாலும், பெண்களாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தர்களின் எல்லா பிரபுக்களும், வீட்டின்மேல் ஆண்களும் பெண்களுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
\s5
\v 28 அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என்னுடைய இரண்டு கண்களுக்காக ஒரே முடிவாகப் பெலிஸ்தர்கள் கையிலே பழிவாங்கும்படி, இந்த ஒருமுறைமட்டும் என்னை நினைத்தருளும், தேவனே பெலப்படுத்தும் என்று சொல்லி,
\v 29 சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன்னுடைய வலதுகையினாலும், மற்றொன்றைத் தன்னுடைய இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,
\s5
\v 30 என்னுடைய ஜீவன் பெலிஸ்தர்களோடு மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா மக்கள்மேலும் விழுந்தது; இப்படி அவன் உயிரோடிருக்கும்போது அவனால் கொல்லப்பட்டவர்களைவிட, அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
\v 31 பின்பு அவன் சகோதரர்களும், அவன் தகப்பனுடைய வீட்டார் அனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவனுடைய தகப்பனான மனோவாவின் கல்லறையில் அடக்கம்செய்தார்கள். அவன் இஸ்ரவேலை இருபது வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
\s5
\c 17
\s1 மீகாவின் விக்கிரகங்கள்
\p
\v 1 எப்பீராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பெயருள்ள ஒரு மனிதன் இருந்தான்.
\v 2 அவன் தன்னுடைய தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு திருட்டுபோனதே, அதைக் குறித்து என்னுடைய காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.
\s5
\v 3 அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன்னுடைய தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டாக்க, நான் என்னுடைய கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முழுவதும் கர்த்தருக்கென்று நியமித்தேன்; இப்போதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்.
\v 4 அவன் அந்த வெள்ளியைத் தன்னுடைய தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, கொல்லன் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் செய்தான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.
\s5
\v 5 மீகா, சிலைகளுக்கு ஒரு வீட்டை ஏற்படுத்தி வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும், சிலைகளையும் உண்டாக்கி, தன்னுடைய மகன்களில் ஒருவனை அர்ப்பணம் செய்தான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான்.
\v 6 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானபடி செய்துவந்தான்.
\s5
\v 7 யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊர்க்காரனும் லேவியனுமான ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான்;
\v 8 அந்த மனிதன் எங்கேயாவது போய்த் தங்கும்படி, யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பயணம்போகும்போது, எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான்.
\v 9 எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாவது போய்த் தங்கப்போகிறேன் என்றான்.
\s5
\v 10 அப்பொழுது மீகா: நீ என்னிடத்தில் இரு, நீ எனக்குத் தகப்பனும் ஆசாரியனுமாக இருப்பாய்; நான் உனக்கு வருடத்திலே பத்து வெள்ளிக்காசையும், மாற்று ஆடைகளையும், உனக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுப்பேன் என்று அவனிடத்தில் சொன்னான்; அப்படியே லேவியன் உள்ளே போனான்.
\v 11 அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவனுடைய மகன்களில் ஒருவனைப்போல் இருந்தான்.
\s5
\v 12 மீகா அந்த லேவியனைப் புனிதமான வேலைக்கு அர்ப்பணம் செய்தான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி, மீகாவின் வீட்டில் இருந்தான்.
\v 13 அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மை செய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.
\s5
\c 18
\s1 லாயீசு நகரத்தை தாண் கைப்பற்றுதல்
\p
\v 1 அந்த நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார்கள் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குப் பங்கு தேடினார்கள்; அந்த நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போதிய பங்கு கிடைக்கவில்லை.
\v 2 ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் மக்கள் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனிதர்களாகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலும் இருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுவரை போய், அங்கே இரவு தங்கினார்கள்.
\s5
\v 3 அவர்கள் மீகாவின் வீட்டின் அருகில் இருக்கும்போது லேவியனான வாலிபனுடைய சத்தத்தை அறிந்து, அங்கே அவனிடத்தில் போய்: உன்னை இங்கே அழைத்து வந்தது யார்? இவ்விடத்தில் என்ன செய்கிறாய்? உனக்கு இங்கே என்ன இருக்கிறது என்று அவனிடத்தில் கேட்டார்கள்.
\v 4 அதற்கு அவன்: இன்ன இன்னபடி மீகா எனக்குச் செய்தான்; என்னை சம்பளத்திற்கு பணியமர்த்தினான்; அவனுக்கு ஆசாரியனானேன் என்றான்.
\s5
\v 5 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பயணம் வெற்றியாக முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.
\v 6 அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடு போங்கள்; உங்கள் பயணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான்.
\s5
\v 7 அப்பொழுது அந்த ஐந்து மனிதர்களும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற மக்கள் சீதோனியர்களுடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமைதியாகவும் சுகமாக இருக்கிறதையும், தேசத்திலே அவர்களை அடக்கி ஆள எந்த ஒரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியர்களுக்குத் தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் இல்லை என்பதையும் பார்த்து,
\v 8 சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தங்கள் சகோதரர்களிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்களுடைய சகோதரர்கள்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள்.
\s5
\v 9 அதற்கு அவர்கள்: எழும்புங்கள், அவர்களுக்கு எதிராகப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது, நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த தேசத்தைச் கைப்பற்றிக்கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாக இருக்கவேண்டாம்.
\v 10 நீங்கள் அங்கே சேரும்போது, சுகமாய்க் குடியிருக்கிற மக்களிடம் சேருவீர்கள்; அந்த தேசம் விசாலமாக இருக்கிறது; தேவன் அதை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார்; அது பூமியிலுள்ள எல்லாப் பொருட்களும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றார்கள்.
\s5
\v 11 அப்பொழுது சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தாண் கோத்திரத்தார்களில் அறுநூறுபேர் ஆயுதம் அணிந்தவர்களாக அங்கேயிருந்து புறப்பட்டுப்போய்,
\v 12 யூதாவிலுள்ள கீரியாத்யாரீமிலே முகாமிட்டார்கள்; ஆதலால் மக்கள் அதை இந்நாள்வரைக்கும் மக்னிதான் என்று அழைக்கிறார்கள்; அது கீரியாத்யாரீமின் மேற்குப்பகுதியிலே இருக்கிறது.
\s5
\v 13 பின்பு அவர்கள் அங்கேயிருந்து எப்பிராயீம் மலைக்குப் போய், மீகாவின் வீடுவரை வந்தார்கள்.
\v 14 அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனிதர்கள் தங்கள் சகோதரர்களைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.
\s5
\v 15 அப்பொழுது அந்த இடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிற்கு வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள்.
\v 16 ஆயுதம் அணிந்தவர்களாகிய தாண் கோத்திரத்தார்கள் அறுநூறுபேரும் வாசற்படியிலே நின்றார்கள்.
\s5
\v 17 ஆசாரியனும் ஆயுதம் அணிந்தவர்களாகிய அறுநூறுபேரும் வாசற்படியிலே நிற்க்கும்போது, தேசத்தை உளவுபார்க்கப் போய் வந்த அந்த ஐந்து மனிதர்கள் உள்ளே புகுந்து, செதுக்கப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் உருவங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.
\v 18 அவர்கள் மீகாவின் வீட்டிற்குள் புகுந்து, செதுக்கப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் உருவங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வருகிறபோது, ஆசாரியன் அவர்களைப் பார்த்து: நீங்கள் செய்கிறது என்ன என்று கேட்டான்.
\s5
\v 19 அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன்னுடைய வாயை மூடிக்கொண்டு, எங்களோடு வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒருவனுடைய வீட்டிற்கு மட்டும் ஆசாரியனாக இருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாக இருக்கிறது நல்லதோ? என்றார்கள்.
\v 20 அப்பொழுது ஆசாரியனுடைய மனது மகிழ்ச்சியடைந்து, அவன் ஏபோத்தையும் உருவங்களையும் செதுக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, மக்களிடம் போனான்.
\s5
\v 21 அவர்கள் திரும்பும்படிப் புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், உடைமைகளையும், தங்களுக்கு முன்னே போகச்செய்தார்கள்.
\v 22 அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் கோத்திரத்தார்களை பின்தொடர்ந்துவந்து,
\v 23 அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.
\s5
\v 24 அதற்கு அவன்: நான் உண்டாக்கின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டு போகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்.
\v 25 தாண் மக்கள் அவனைப் பார்த்து: எங்கள் காதுகள் கேட்க சத்தமிடாதே, சத்தமிட்டால் கடுங்கோபக்காரர்கள் உங்களைத் தாக்குவார்கள்; அப்பொழுது நீயும் உன்னுடைய குடும்பத்தினர்களும் கொல்லப்படுவார்கள் என்று சொல்லி,
\v 26 தங்களுடைய வழியிலே நடந்துபோனார்கள்; அவர்கள் தன்னைவிட பலசாலிகள் என்று மீகா பார்த்து, அவன் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினான்.
\s5
\v 27 அவர்களோ மீகா உண்டாக்கினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் மக்களிடத்தில் சேர்த்து, அவர்களைக் கூர்மையான பட்டயத்தால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் எரித்துப்போட்டார்கள்.
\v 28 அது சீதோனுக்குத் தூரமாயிருந்தது; மற்ற மனிதர்களோடு அவர்களுக்குச் சம்பந்தமில்லாமலும் இருந்ததால், அவர்களைக் காப்பாற்ற ஒருவரும் இல்லை; அந்தப் பட்டணம் பெத்ரேகோபுக்கு அருகே பள்ளத்தாக்கில் இருந்தது; அவர்கள் அதைத் திரும்பக் கட்டி, அதிலே குடியிருந்து,
\v 29 முதலில் லாயீஸ் என்னும் பெயர்கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலிற்குப் பிறந்த தங்கள் தகப்பனான தாணுடைய பெயரின்படியே தாண் என்று பெயரிட்டார்கள்.
\s5
\v 30 அப்பொழுது தாண் மக்கள் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு நியமித்துக்கொண்டார்கள்; மனாசேயின் மகனான கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் மகன்களும் அந்தத் தேசம் சிறைப்பட்டுப்போன நாள்வரை, தாண் கோத்திரத்தார்கள் ஆசாரியர்களாக இருந்தார்கள்.
\v 31 தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலம் முழுவதும் அவர்கள் மீகா உண்டாக்கின சிலையை வைத்துக்கொண்டிருந்தார்கள்.
\s5
\c 19
\s1 லேவியனான மனிதனும் அவனது மறுமனையாட்டியும்
\p
\v 1 இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்த நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே தங்கின ஒரு லேவியன் இருந்தான்; அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராளாகிய ஒரு பெண்ணைத் தனக்கு மறுமனையாட்டியாக வைத்திருந்தான்.
\v 2 அவள் அவனுக்குத் துரோகமாக, விபச்சாரம்செய்து, அவனை விட்டு, யூதா தேசத்துப் பெத்லெகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பனுடைய வீட்டிற்குப் போய், அங்கே நான்கு மாதங்கள் வரை இருந்தாள்.
\s5
\v 3 அவளுடைய கணவன் அவளை சம்மதிக்கவும், அவளைத் திரும்ப அழைத்துவரவும், இரண்டு கழுதைகளை ஆயத்தப்படுத்தி, தன்னுடைய வேலைக்காரனைக் கூட்டிக்கொண்டு, அவளிடத்திற்குப் போனான்; அப்பொழுது அவள் அவனைத் தன்னுடைய தகப்பன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனாள்; பெண்ணின் தகப்பன் அவனைப் பார்த்தபோது சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு,
\v 4 பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன் அவனை, மூன்றுநாட்கள் அங்கே தங்கும்படி சம்மதிக்கவைத்ததினால். அவன் அங்கே அவனோடிருந்தான்; அவர்கள் அங்கே சாப்பிட்டுக் குடித்து இரவு தங்கினார்கள்.
\s5
\v 5 நான்காம் நாள் அதிகாலையில் அவர்கள் எழுந்து, அவன் பயணப்படும்போது, பெண்ணின் தகப்பன் தன்னுடைய மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் சாப்பிட்டு, உன்னுடைய மனதைத் தேற்றிக்கொள்; பின்பு நீங்கள் போகலாம் என்றான்.
\v 6 அவர்கள் உட்கார்ந்து, இருவரும் சாப்பிட்டுக் குடித்தார்கள்; பெண்ணின் தகப்பன் அந்த மனிதனைப் பார்த்து: நீ தயவுசெய்து, உன்னுடைய இருதயம் மகிழ்ச்சியடைய இரவும் இரு என்றான்.
\s5
\v 7 அப்படியே போகும்படி அந்த மனிதன் எழுந்தபோது, அவனுடைய மாமன் அவனை வருந்திக்கொண்டதினால், அவன் அன்று இரவும் அங்கே இருந்தான்.
\v 8 ஐந்தாம் நாளிலே அவன் போகும்படி அதிகாலையில் எழுந்தபோது, பெண்ணின் தகப்பன்: இருந்து உன்னுடைய இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே மாலைவரை இருந்து, இருவரும் சாப்பிட்டார்கள்.
\s5
\v 9 பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகும்படி எழுந்தபோது, பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன்: இதோ, பொழுது மறையப்போகிறது, சாயங்காலமுமானது; இரவு இங்கே இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையானது: உன்னுடைய இருதயம் சந்தோஷமாக இருக்கும்படி, இங்கே இரவு தங்கி நாளை அதிகாலையில் எழுந்து, உன்னுடைய வீட்டிற்குப் போகலாம் என்றான்.
\s5
\v 10 அந்த மனிதனோ, இரவு தங்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள்மேலும் சேணம்வைத்து, தன்னுடைய மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான்.
\v 11 அவர்கள் எபூசுக்கு அருகே வரும்போது, இரவு நேரமானது; அப்பொழுது வேலைக்காரன் தன்னுடைய எஜமானை நோக்கி: எபூசியர்கள் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இரவு தங்கலாம் என்றான்.
\s5
\v 12 அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல் மக்களல்லாதவர்கள் இருக்கிற பட்டணத்திற்குப் போகக்கூடாது; அதற்கடுத்த கிபியாவரை போவோம் என்று சொல்லி,
\v 13 தன்னுடைய வேலைக்காரனைப் பார்த்து: நாம் கிபியாவிலாவது ராமாவிலாவது இரவு தங்கும்படி, அவைகளில் ஒரு இடத்திற்குப் போய்ச்சேர நடந்துபோவோம் வா என்றான்.
\s5
\v 14 அப்படியே அதற்கடுத்து நடந்துபோனார்கள்; பென்யமீன் நாட்டைச் சேர்ந்த கிபியாவின் அருகில் வரும்போது, சூரியன் மறைந்துபோனது.
\v 15 ஆகையால் கிபியாவிலே வந்து இரவு தங்கும்படி, வழியைவிட்டு அந்த இடத்திற்குப் போனார்கள்; அவன் பட்டணத்திற்குள் போனபோது, இரவு தங்குவதற்கு அவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்பவர்கள் இல்லாததினால், வீதியில் உட்கார்ந்தான்.
\s5
\v 16 வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு முதியவர் வந்தார்; அந்த மனிதனும் எப்பிராயீம் மலைதேசத்தை சார்ந்தவன், அவன் கிபியாவிலே வாழ வந்தான்; அந்த இடத்தின் மனிதர்களோ பென்யமீனர்கள்.
\v 17 அந்த முதியவர் தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பட்டணத்து வீதியில் அந்த பயணியைப் பார்த்து: எங்கே போகிறாய், எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டான்.
\s5
\v 18 அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் மிகவும் தொலைதூரம்வரைப் போகிறோம்; நான் அந்த இடத்தைச் சேர்ந்தவன்; யூதாவிலுள்ள பெத்லெகேம்வரைப் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்பவர்கள் ஒருவரும் இல்லை.
\v 19 எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீவனமும் உண்டு; எனக்கும் உமது அடியாளுக்கும் உமது அடியானோடிருக்கிற வேலைக்காரனுக்கும் ரொட்டியும் திராட்சை ரசமும் உண்டு; ஒன்றிலும் குறைவில்லை என்றான்.
\s5
\v 20 அப்பொழுது அந்த முதியவர்: உனக்குச் சமாதானம் உண்டாவதாக; உன் குறைவுகளெல்லாம் என்மேல் இருக்கட்டும்; வீதியிலேமட்டும் இரவு தங்கவேண்டாம் என்று சொல்லி,
\v 21 அவனைத் தன்னுடைய வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு, சாப்பிட்டுக் குடித்தார்கள்.
\s5
\v 22 அவர்கள் மனமகிழ்ச்சியாக இருக்கிறபோது, இதோ, அந்த ஊர் துன்மார்க்க மனிதர்களில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனிதனை, நாங்கள் அவனோடு உறவுகொள்ளும்படி, வெளியே கொண்டுவா என்று வீட்டுக்காரனாகிய அந்த முதியவரோடு சொன்னார்கள்.
\v 23 அப்பொழுது வீட்டுக்காரனான அந்த மனிதன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச்செய்யவேண்டாம்; என் சகோதரர்களே, இப்படிப்பட்ட தீமையைச் செய்யவேண்டாம்; அந்த மனிதன் என்னுடைய வீட்டிற்குள் வந்திருக்கும்போது, இப்படிப்பட்ட மதிகேட்டைச் செய்ய வேண்டாம்.
\s5
\v 24 இதோ, கன்னிப்பெண்ணாகிய என்னுடைய மகளும், அந்த மனிதனுடைய மறுமனையாட்டியும் இருக்கிறார்கள்; அவர்களை உங்களிடத்தில் வெளியே கொண்டுவருகிறேன்; அவர்களை அவமானப்படுத்தி, உங்கள் பார்வைக்குச் சரியானபடி அவர்களுக்குச் செய்யுங்கள்; ஆனாலும் இந்த மனிதனுக்கு அப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம் என்றான்.
\v 25 அந்த மனிதர்கள் அவன் சொல்லைக்கேட்கவில்லை; அப்பொழுது அந்த மனிதன் தன்னுடைய மறுமனையாட்டியைப் பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்து விட்டான்; அவர்கள் அவளை பலாத்காரம் செய்து, இரவு முழுவதும் அவளை மோசமாக நடத்தி, அதிகாலையில் அவளைப்போகவிட்டார்கள்.
\v 26 விடிவதற்கு முன்னே அந்தப் பெண் வந்து, வெளிச்சமாகும்வரை அங்கே தன்னுடைய எஜமான் இருந்த வீட்டுவாசற்படியிலே விழுந்துகிடந்தாள்.
\s5
\v 27 அவள் எஜமான் காலையில் எழுந்திருந்து வீட்டின் கதவைத் திறந்து, தன்னுடைய வழியே போகப் புறப்படுகிறபோது, இதோ, அவன் மறுமனையாட்டியாகிய பெண் வீட்டுவாசலுக்கு முன் தன்னுடைய கைகளை வாசற்படியின்மேல் வைத்தவளாகக் கிடந்தாள்.
\v 28 எழுந்திரு போவோம் என்று அவன் அவளோடே சொன்னதற்கு அவள் பதில் சொல்லவில்லை. அப்பொழுது அந்த மனிதன் அவளைக் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு, பயணப்பட்டு, தன்னுடைய இடத்திற்குப் போனான்.
\s5
\v 29 அந்த லேவியன் வீட்டிற்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன்னுடைய மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளோடு பன்னிரண்டு துண்டுகளாக்கி, இஸ்ரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான்.
\v 30 அப்பொழுது அதைப் பார்த்தவர்கள் எல்லோரும், இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாளிலிருந்து இந்த நாள்வரைக்கும் இதைப்போன்ற காரியம் செய்யப்படவும் இல்லை, காணப்படவும் இல்லை; இந்தக் காரியத்தைப்பற்றி யோசித்து, ஆலோசனை செய்து, செய்யவேண்டியது என்னவென்று சொல்லுங்கள் என்றார்கள்.
\s5
\c 20
\s1 இஸ்ரவேலர்கள் பென்யமீனர்களோடு யுத்தம் செய்தல்
\p
\v 1 அப்பொழுது தாண்முதல் பெயெர்செபா வரையுள்ள இஸ்ரவேல் மக்கள் அனைவரும் கீலேயாத் தேசத்தார்களோடு மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஒருமித்து சபையாகக் கூடினார்கள்.
\v 2 எல்லா மக்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்தார்களும் தேவனுடைய மக்கள் சபையாகக் கூடி நின்றார்கள்; அவர்கள் பட்டயத்தினால் சண்டையிட ஆயத்தமாக இருக்கிற நான்கு லட்சம் வீரர்கள்.
\s5
\v 3 இஸ்ரவேல் மக்கள் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் மக்கள் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் மக்கள் கேட்டார்கள்.
\v 4 அப்பொழுது கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனாகிய லேவியன் பதிலாக: நானும் என்னுடைய மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இரவுதங்க வந்தோம்.
\s5
\v 5 அப்பொழுது கிபியாபட்டணத்தார்கள் எனக்கு எதிராக எழும்பி, என்னைக் கொலை செய்ய நினைத்து, நான் இருந்த வீட்டை இரவிலே சுற்றிவளைத்து, என்னுடைய மறுமனையாட்டியைக் கெடுத்தார்கள்; அதினாலே அவள் இறந்துபோனாள்.
\v 6 ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்ததினால், நான் என்னுடைய மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான எல்லா நாடுகளுக்கும் அனுப்பினேன்.
\v 7 நீங்கள் எல்லோரும் இஸ்ரவேலர்கள், இங்கே ஆலோசித்துத் தீர்மானம்செய்யுங்கள் என்றான்.
\s5
\v 8 அப்பொழுது எல்லா மக்களும் ஒருமித்து எழும்பி: நம்மில் ஒருவரும் தன்னுடைய கூடாரத்திற்குப் போகவும்கூடாது, ஒருவனும் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பவும்கூடாது.
\v 9 இப்பொழுது கிபியாவுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: சீட்டுப்போட்டு அதற்கு எதிராகப் போவோம்.
\s5
\v 10 பென்யமீன் கோத்திரமான கிபியா பட்டணத்தார்கள் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தகுந்ததாக மக்கள் வந்து செய்யும்படி, நாம் தானியங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறு பேர்களில் பத்துப்பேர்களையும், ஆயிரம் பேர்களில் நூறுபேர்களையும், பத்தாயிரம் பேர்களில் ஆயிரம்பேர்களையும் தெரிந்தெடுப்போம் என்றார்கள்.
\v 11 இஸ்ரவேலர்கள் எல்லோரும் ஒன்றுபோல ஒருமித்து பட்டணத்திற்கு முன்பாகக் கூட்டங்கூடி,
\s5
\v 12 அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார்கள் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?
\v 13 இப்பொழுது கிபியாவில் இருக்கிற துன்மார்க்க மக்களாகிய அந்த மனிதர்களை நாங்கள் கொன்று, தீமையை இஸ்ரவேலைவிட்டு விலக்கும்படி, அவர்களை ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லச் சொன்னார்கள்; பென்யமீனியர்கள் இஸ்ரவேல் மக்களாகிய தங்கள் சகோதரர்களின் சொல்லைக் கேட்க மனமில்லாமல்,
\v 14 இஸ்ரவேல் மக்களோடு யுத்தம்செய்யப் புறப்படும்படி, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு வந்து கூடினார்கள்.
\s5
\v 15 கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட எழுநூறுபேரைத் தவிர அந்த நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயத்தால் சண்டையிடுவதற்கு பயிற்சி பெற்ற மனிதர்களின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்பேர் என்று கணக்கிடப்பட்டது.
\v 16 அந்த மக்கள் எல்லோரிலும் தெரிந்துகொள்ளப்பட்ட, இடது கை பழக்கமுள்ள எழுநூறுபேர் இருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக் கவண்கல் எறிவார்கள்.
\s5
\v 17 பென்யமீன் கோத்திரத்தைத் தவிர இஸ்ரவேலிலே பட்டயத்தினால் சண்டையிடுவதற்குப் பயிற்சிபெற்ற மனிதர்கள் நான்கு லட்சம்பேர் என்று கணக்கிடப்பட்டது; இவர்கள் எல்லோரும் யுத்தவீரர்களாக இருந்தார்கள்.
\v 18 இஸ்ரவேல் மக்களான அவர்கள் எழுந்து, பெத்தேலுக்குப் போய்: எங்களில் யார் முதலில் போய் பென்யமீனியர்களோடு யுத்தம்செய்யவேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முதலில் போகவேண்டும் என்றார்.
\s5
\v 19 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் காலையில் எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராக முகாமிட்டார்கள்.
\v 20 பின்பு இஸ்ரவேல் போர்வீரர்கள் பென்யமீனியர்களோடு யுத்தம்செய்யப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்.
\v 21 ஆனாலும் பென்யமீன் போர்வீரர்கள் கிபியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலில் இருபத்து இரண்டாயிரம் பேரை அன்றையதினம் கொன்றுபோட்டார்கள்.
\s5
\v 22 இஸ்ரவேல் போர்வீரர்கள் தங்களை பெலப்படுத்திக்கொண்டு, முதல் நாளில் அணிவகுத்து நின்ற இடத்திலே, மறுபடியும் போர் செய்ய அணிவகுத்து நின்றார்கள்.
\v 23 அவர்கள் போய், கர்த்தருக்கு முன்பாக மாலைவரை அழுது, எங்கள் சகோதரர்களாகிய பென்யமீன் மக்களோடு திரும்பவும் யுத்தம் செய்யப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: அவர்களுக்கு எதிராகப் போங்கள் என்றார்.
\s5
\v 24 மறுநாளிலே இஸ்ரவேல் போர்வீரர்கள் பென்யமீன் போர்வீரர்களுக்கு எதிராகப் போனார்கள்.
\v 25 பென்யமீனியர்கள் அந்த நாளிலே கிபியாவிலிருந்து அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுவந்து, பின்னும் இஸ்ரவேல் புத்திரரில் பட்டயத்தினால் சண்டையிடுவதற்குப் பயிற்சிபெற்றவர்கள் பதினெட்டாயிரம்பேரைக் கொன்றுபோட்டார்கள்.
\s5
\v 26 அப்பொழுது இஸ்ரவேல் போர்வீரர்களும் எல்லா மக்களும் புறப்பட்டு, பெத்தேலுக்குப் போய், அங்கே கர்த்தருக்கு முன்பாக அழுது, உட்கார்ந்து, அன்று மாலைவரை உபவாசித்து, கர்த்தருக்கு முன்பாக சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தி,
\s5
\v 27 கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி அந்த நாட்களில் அங்கே இருந்தது.
\v 28 ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் அந்த நாட்களில் பெட்டியின் முன்பாகப் பணிசெய்துகொண்டிருந்தான்; எங்கள் சகோதரர்களாகிய பென்யமீன் மக்களோடு மறுபடியும் யுத்தம்செய்யப் புறப்படலாமா? வேண்டாமா? என்று அவர்கள் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: போங்கள்; நாளைக்கு அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
\s5
\v 29 அப்பொழுது இஸ்ரவேலர்கள் கிபியாவைச்சுற்றிலும் மறைவிடங்களில் ஆட்களை வைத்து,
\v 30 மூன்றாம் நாளிலே இஸ்ரவேல் போர்வீரர்கள், பென்யமீன் போர்வீரர்களுக்கு எதிராகப் போய், முன் இரண்டு முறை செய்ததுபோல, கிபியாவுக்கு அருகில் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.
\s5
\v 31 அப்பொழுது பென்யமீன் மக்கள் இஸ்ரவேல் மக்களுக்கு எதிராகப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, கடந்து வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் மக்களில் ஏறக்குறைய முப்பதுபேரை, முதல் இரண்டுதரம் செய்ததுபோல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.
\s5
\v 32 முன்போல நமக்கு முன்பாக முறியடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீனியர்கள் சொன்னார்கள்; இஸ்ரவேல் போர்வீரர்களோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு வெளியிலே இருக்கிற வழிகளில் வரச்செய்யும்படி, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.
\v 33 அப்பொழுது இஸ்ரவேல் போர்வீரர்கள் எல்லோரும் தங்கள் இடத்திலிருந்து எழுந்து, பாகால்தாமாரிலே யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்; கிபியாவின் பள்ளத்தாக்கிலே மறைந்திருந்தவர்கள் தங்கள் இடத்திலிருந்து புறப்பட்டு,
\s5
\v 34 அவர்களில் இஸ்ரவேல் எல்லோரிலும் தெரிந்துகொள்ளப்பட்ட பத்தாயிரம்பேர் கிபியாவுக்கு எதிராக வந்தார்கள்; யுத்தம் பலத்தது; ஆனாலும் தங்களுக்கு ஆபத்து நேரிட்டது என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
\v 35 கர்த்தர் இஸ்ரவேலிற்கு முன்பாகப் பென்யமீனை முறியடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் மக்கள் பென்யமீனிலே பட்டயத்தினால் சண்டையிடுவதற்குப் பயிற்சிபெற்ற ஆட்களாகிய இருபத்தைந்தாயிரத்து நூறுபேரைக் கொன்றுபோட்டார்கள்.
\s5
\v 36 இஸ்ரவேலர்கள் கிபியாவுக்கு அப்பாலே வைத்த மறைவிடங்களில் இருந்தவர்களை நம்பியிருந்ததினால், பென்யமீனர்களுக்கு இடம் கொடுத்தார்கள்; அதினாலே அவர்கள் முறியடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீனின் போர்வீரர்கள் கண்டார்கள்.
\v 37 அப்பொழுது மறைந்திருந்தவர்கள் துரிதமாக கிபியாவுக்குள் விரைந்து, பட்டணத்தில் இருக்கிறவர்கள் எல்லோரையும் கூர்மையான பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.
\v 38 பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பச்செய்வதே இஸ்ரவேலர்களுக்கும் மறைந்திருக்கிறவர்களுக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாக இருந்தது.
\s5
\v 39 ஆகவே, இஸ்ரவேலின் போர்வீரர்கள் யுத்தத்திலே பின்வாங்கினபோது, பென்யமீனர்கள்: முந்தின யுத்தத்தில் நடந்ததுபோல, அவர்கள் நமக்கு முன்பாக முறியடிக்கப்படுகிறார்களே என்று சொல்லி, இஸ்ரவேலரில் ஏறக்குறைய முப்பதுபேரை வெட்டவும் கொல்லவும் துவங்கினார்கள்.
\s5
\v 40 பட்டணத்திலிருந்து புகையானது தூண் போல உயர எழும்பியபோது, பென்யமீனர்கள் திரும்பிப் பார்த்தார்கள்; இதோ, பட்டணத்தின் அக்கினி ஜூவாலை வானபரியந்தம் எழும்பினது.
\v 41 அப்பொழுது இஸ்ரவேலர்கள் அவர்களுக்கு எதிராகத் திரும்பிக்கொண்டார்கள்; பென்யமீன் மனிதர்களோ, தங்களுக்கு ஆபத்து நேர்ந்ததைக் கண்டு திகைத்து.
\s5
\v 42 இஸ்ரவேல் போர்வீரர்களைவிட்டு, வனாந்திரத்திற்குப் போகிற வழிக்கு நேராகத் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; இஸ்ரவேல் போர்வீரர்கள் நகரங்களில் இருந்து வெளியே வந்து அவர்கள் நின்ற இடங்களிலேயே அவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
\s5
\v 43 இப்படியே பென்யமீனர்களை சுற்றிவளைத்துக்கொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வரும்வரை, அவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
\v 44 இதினால் பென்யமீனரிலே பதினெட்டாயிரம்பேர் இறந்தார்கள்; அவர்கள் எல்லோரும் பெலவான்களாக இருந்தார்கள்.
\s5
\v 45 மற்றவர்கள் விலகி, வனாந்திரத்தில் இருக்கிற ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போனார்கள்; அவர்களில் இன்னும் ஐயாயிரம்பேரை இஸ்ரவேலர்கள் வழிகளில் கொன்று, மற்றவர்களைக் கீதோம்வரைப் பின்தொடர்ந்து, அவர்களில் இரண்டாயிரம்பேரைக் கொன்றுபோட்டார்கள்.
\v 46 இவ்விதமாக பென்யமீனர்களில் அந்த நாளில் பட்டயத்தினால் சண்டையிடுவதற்குப் பயிற்சிபெற்றவர்கள் இருபத்தைந்தாயிரம்பேர் இறந்தார்கள்; அவர்கள் எல்லோரும் யுத்தத்தில் பெலமுள்ளவர்களாக இருந்தார்கள்.
\s5
\v 47 அறுநூறுபேர் திரும்பி தப்பி ஓடி, வனாந்திரத்திலிருக்கிற ரிம்மோன் கன்மலைக்குப் போய், ரிம்மோன் கன்மலையிலே நான்கு மாதங்கள் இருந்தார்கள்.
\v 48 இஸ்ரவேல் போர்வீரர்களோ, பென்யமீன் மக்களுக்கு எதிராக திரும்பி, பட்டணத்தில் மனிதர்கள் தொடங்கி மிருகங்கள்வரை பார்த்தவைகள் எல்லாவற்றையும் கூர்மையான பட்டயத்தால் கொன்று, தாங்கள் பார்த்த பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப்போட்டார்கள்.
\s5
\c 21
\s1 பென்யமீன் மனிதர்களுக்கு மனைவிகளைத் தேர்ந்தெடுத்தல்
\p
\v 1 இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலே இருக்கும்போது: நம்மில் ஒருவனும் தன்னுடைய மகளைப் பென்யமீனர்களுக்கு திருமணம் செய்துகொடுப்பதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள்.
\v 2 ஆகவே, மக்கள் பெத்தேலுக்குப்போய், அங்கே தேவனுக்கு முன்பாக மாலைவரை உட்கார்ந்திருந்து, சத்தமிட்டு மிகவும் அழுது:
\v 3 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகும்படி இஸ்ரவேலில் இந்தக் காரியம் சம்பவித்தது என்ன என்றார்கள்.
\s5
\v 4 மறுநாளிலே, மக்கள் அதிகாலையில் எழுந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
\v 5 கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராமல்போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.
\s5
\v 6 இஸ்ரவேல் மக்கள் தங்கள் சகோதரனாகிய பென்யமீனனை நினைத்து, வேதனையடைந்து: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டு போயிற்றே.
\v 7 மீதியாக இருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்க நாம் அவர்களுக்கு என்ன செய்யலாம்? நம்முடைய மகள்களில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் கர்த்தர்மேல் ஆணையிட்டுக் கொண்டோமே.
\s5
\v 8 இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராமல் போனவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்களில் ஒருவரும் முகாமில் சபைகூடினபோது வரவில்லை.
\v 9 மக்கள் கணக்கு பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடியிருப்புகளில் அங்கே ஒருவரும் இருக்கவில்லை.
\v 10 உடனே சபையார் பெலவான்களில் பன்னிரண்டாயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் கீலேயாத்திலுள்ள யாபேசிற்குப் போய், பெண்களையும் பிள்ளைகளையும்கூட கூர்மையான பட்டயத்தால் கொன்றுபோடுங்கள்.
\s5
\v 11 எல்லா ஆண்பிள்ளைகளையும், திருமணமான எல்லா பெண்பிள்ளைகளையும் கொன்றுபோடவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளைக கொடுத்து அனுப்பினார்கள்.
\v 12 இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடியிருக்கிறவர்களிடத்தில் திருமணமாகாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டுபிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற முகாமிற்கு கொண்டுவந்தார்கள்.
\s5
\v 13 அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் மக்களோடு பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லோரும் செய்தி அனுப்பினார்கள்.
\v 14 எனவே, அக்காலத்தில் பென்யமீனர்கள் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் பெண்களில் உயிரோடு வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் எல்லோருக்கும் பெண்கள் போதாமலிருந்தது.
\v 15 இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிரிவை உண்டாக்கினார் என்று மக்கள் பென்யமீனர்களுக்காக மனவேதனை அடைந்தார்கள்.
\s5
\v 16 பென்யமீன் கோத்திர பெண்கள் இறந்தபடியினாலே, மீதியான மற்றவர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படி என்ன செய்யலாம் என்று சபையின் மூப்பர்கள் கேட்டு,
\v 17 இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அழிந்துபோகாதபடி, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,
\s5
\v 18 நாமோ நம்முடைய மகள்களில் அவர்களுக்கு பெண் கொடுக்கக்கூடாது; பென்யமீனர்களுக்குப் பெண் கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல் மக்கள் ஆணையிட்டார்களே என்றார்கள்.
\v 19 பின்னும், இதோ, பெத்தேலுக்கு வடக்கில் பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதைக்குக் கிழக்காகவும் லிபோனாவுக்குத் தெற்காகவும் இருக்கிற சீலோவிலே ஒவ்வொரு வருடமும் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடப்படுகிறதே என்று சொல்லி,
\s5
\v 20 அவர்கள் பென்யமீன் மனிதர்களை நோக்கி: நீங்கள் போய், திராட்சைத் தோட்டங்களிலே மறைந்திருந்து,
\v 21 சீலோவின் பெண்பிள்ளைகள் கீதவாத்தியத்தோடு நடனம் செய்கிறவர்களாகப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் பார்க்கும்போது, திராட்சைத் தோட்டங்களிலிருந்து விரைந்து, உங்களில் அவரவர் சீலோவின் பெண்பிள்ளைகளில் ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.
\s5
\v 22 அவர்களுடைய தகப்பன்மார்களாகிலும், சகோதரர்களாகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்களுக்காக அவர்களுக்குத் தயவு செய்யுங்கள்; நாங்கள் யுத்தம் செய்து, அவனவனுக்கு மனைவியைப் பிடித்துக்கொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக, இப்போது நீங்கள் அவர்களுக்கு உங்கள் மகள்களைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள்.
\s5
\v 23 பென்யமீன் மக்கள் அப்படியே செய்து, நடனம்செய்கிறவர்களிலே தங்கள் எண்ணிக்கைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.
\v 24 இஸ்ரவேல் மக்களும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.
\s5
\v 25 அந்த நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்னுடைய பார்வைக்குச் சரியானபடி செய்து வந்தான்.